ஒரே இலையில் சாப்பிட்ட அனுமன்-இராமன்!
"இது என்னாது புதுக்கதை? ஒரே இலைச் சாப்பாடா? அதுவும் அனுமனும் இராமனும்? என்னய்யா சொல்றீக? பொதுவா புருசன்-பெண்டாட்டி தானே ஒரே இலையில் சாப்பிடுவாக?"
"நானும், என் தோழனும் ஒரே தட்டில் சாப்பிடறது இல்லையா? தட்டில் இருந்து தட்டுக்கு....படக் படக்-ன்னு டிரான்ஸ்பர் ஆகுமே?":)
"டாய்! அது வேற இது வேற!"
"சரி! இப்போ என்னாங்குற?"
"டாய் கேஆரெஸ்! என்னமோ நீ தான் அனுமனுக்குப் பந்தி பரிமாறினாப் போல பேசுற? அனுமனும் இராமனும் ஒரே இலையில் சாப்பிட்டாங்க-ன்னு சும்மா அடிச்சித் தானே விடுற?":)
"ஹிஹி! அடிச்சி விடும் பழக்கம் எனக்கு இல்லையப்பா!"
"உக்கும்...இவரு பெரிய திருவிளையாடல் சிவாஜி கணேசன், தருமி கிட்ட பேசறாரு! ஒழுங்கா சொல்லுறா வெண்ணெய்":)
"ஹா ஹா ஹா! முடிஞ்ச வரை, தரவோடு பொருத்திப் பார்த்து விட்டு, பதிவில் சொல்லுறது தான் வழக்கம்! Data based and NOT opinion based!
எனக்கும் இது நாள் வரை இந்த விஷயம் தெரியாதுடா! திடீர்-ன்னு ஓவியர் வினு வரைஞ்ச ஒரு ஓவியத்தைப் பார்த்தேனா? Stun ஆயிட்டேன்! நீயே பாரேன்!"
"ஆகா...............! ஆமாம் போலத் தான் இருக்கு"!
"என்னா...இருக்கு, முறுக்கு-ங்குற? நான் சொல்லும் போது மட்டும் ரொம்பவே குதிச்ச?":)
"கோச்சிக்காத ரவி! எழுத்தாளர் ஜெயமோகன் பதிவுல போய் இப்படிக் குதிக்க முடியுமா? உன் கூடத் தானே சீண்ட முடியும்! அதான்!":)
கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது,
மனைவி உண்ட இலையில் கணவன் உண்பது
- இதெல்லாம் ஒரு அது! ஒரு இது! ஆசை!:)
ஆனா சினிமாவில் பார்த்துப் பார்த்து, அப்படிச் சாப்பிட்டாலே அது மனைவி தான் என்று முடிவு கட்டி விட்டோம்!
முத்தம்-ன்னாலே காதலர்கள் குடுப்பது தானா? என் காதல் முருகனுக்கு சதா முத்தம் குடுக்கும் நான், அதே சமயம் தோழி கோதையின் கைகளிலும் முத்தம் கொடுத்து இருக்கேனே! :)
அது போல ஒரே இலைச் சாப்பாடு என்பது ஒரு நெருக்கம்! அதன் நோக்கத்தைத் தான் பார்க்கணும்! தாறு மாறா யோசிக்கப்பிடாது!:)
சின்ன வயசு இராமானுசர், மூத்த குருவான திருக்கச்சி நம்பிகள் உண்ட இலையில் உண்ண ஆசைப்பட்டார்!
ஏன்? = ஏன்-னா சடங்கு சாஸ்திரம்-ன்னே இருந்த அவருக்குள், ஆழ்வாரின் ஈரத் தமிழை முதலில் விதைத்தது நம்பிகளே!
ஆனால் நம்பியோ so called தாழ்ந்த குலத்தவர்!
தமிழ்ப் பாட்டு பாடித் திரிபவர்! கன்னங் கரேல்!
'அந்தாளு' உண்ட இலையில் நம்ம புருஷன் இராமானுசரா? சீச்சீ! எங்கும் கேட்டிராத புதுப் பழக்கமான்னா இருக்கு? என்ன காரியம்-ண்ணா பண்றேள்?
இராமானுசரின் மனைவிக்கு இது பிடிக்காமல் போய்...எதை எதையோ செய்ய..., அவர்களின் மண முறிவுக்கான வித்து இங்கு தான் ஆரம்பம்!
பின்னர் கிணற்றடியில், பெண் என்ற தன்மையும் மீறி, தகாத வார்த்தைகளைக் கொட்டி, மொத்தமாய் முறிந்து போனது!
நாம மேட்டருக்கு வருவோம்! ஒரே-இலை உணவு என்பது குழந்தை உணவை அம்மா/அப்பா எடுத்து உண்பதும் கூட உண்டு!
இங்கே இராகவனுடன் ஒரே இலை உணவு!
சொல்வது ஆழ்வார் பாசுரம்!
அதைத் தான் ஓவியமா வரைஞ்சி இருக்கார் வினு!
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு, என்று
கோதில் வாய்மையினா லொடும், "உடனே உண்பன் நான்" என்ற ஓண்பொருள், எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன், அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
- திருமங்கை ஆழ்வார்! பெரிய திருமொழி! (1419)
இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஜெட் வேகத்தில் திரும்புகிறது விமானம்!
இராகவன்-சீதையொடு, இலக்குவன், சுக்ரீவன், வீடணன், அனுமன் முதலானோர்! வழியில் பரத்துவாச முனிவரின் குடில்!
அவரோ நிலைமை புரியாமல், இராமனைக் குடிலுக்கு விருந்துண்ண அழைக்கிறார்! முணுக் எனக் கோபிக்கும் முனிவரிடம் விளக்கி மாளுமோ?
அங்கே பரதன் குறித்த காலத்தில் வராவிட்டால் தற்கொலை என்று இருக்கிறான்! என்ன செய்வது? யார் உதவிக்கு? = எப்போதும்! முப்போதும்!
ஆவி காத்து இருப்பது ஒரேயொரு அடியவன் தான்! எப்போதும், முப்போதும்!
* தற்கொலையில் சீதையின் ஆவி காத்தான்!
* போரிலே இலக்குவன் ஆவி காத்தான்!
* மாயத்தில், இராமனின் ஆவி காத்தான்!
* இதோ, பரதனின் ஆவியும் காத்தான்!
ஆவி காப்பான் எம் ஆஞ்சநேயன்!
சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
அன்று, அவள் ஆவி காத்தது போல்,
அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீரில்,
என்னையும் காத்தருள்!
'அவனுக்கு என்னை விதி' என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!
பரதனின் உயிர் காக்கப் பறந்து சென்ற அனுமன், வழியில் குகனுக்கும் தேறுதல் சொல்லி, பரதனைக் காத்து மீள்கிறான்!
அதற்குள், முனிவரின் குடிலில், உணவு! எல்லாரும் அமர்ந்து உண்ணத் துவங்கி விட்டார்கள்! வந்து நிற்கிறான் ஆஞ்சநேயன்! இடம்?
இதயத்திலே இடம் கொடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் கோமகன்கள் இருக்கின்ற காலத்திலே, அனுமனுக்கு எங்கு இடம் கொடுப்பது?
ஆ! இவன் நம்ம ஊழியன் போலத் தானே உழைக்கிறான்? இவனை எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் அன்பு மாறப் போறதில்ல!
So, நாங்கல்லாம் சாப்பிட்டு முடிச்சாப் பொறவு சாப்பிட்டுக்கோ ஆஞ்சநேயா-ன்னு சொல்லி இருக்கலாம்! எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் இவன் தானே!
ஆனால் வாழ்விற்கு ஒரே ஒரு இராகவன்! அவன் மனமும் துணியுமோ?
இடமில்லை ஆஞ்சநேயா!
ஆனால்....
என் முன்னே இடமுளது!
வா, என் முன்னே வந்து அமர்ந்து விடு!
ஓர் இலையில்...இப்பக்கம் நான், அப்பக்கம் நீ!
என்ன கூச்சம்? வா!
எச்சிற் பட்ட உணவு என்ற கூச்சமோ?
மாருதி ஓடியே சென்று அமர்ந்து விட்டான்!
தீரச் செயல்கள் செய்யும் அனுமன் திடுக்கிட்டு நிற்கிறான்!
என்ன பேச?
அன்னை சீதை கூட, பக்கத்தில் தனி இலையில் தான் உண்கிறாள்!
ஆனால் இப்படி ஊரறிய உலகறிய...
அண்ணலின் சரி சமானத்தில்...ஓர் இலையில்...
அன்னமிட்ட அண்ணல், தன் உணவையும் கறியும் அப்பக்கம் தள்ள,
போதும் போதும் என்று இவனும் இப்பக்கம் தள்ள...
ஞான, கர்ம யோகிகள் அத்தனை பேரும், நமக்கு இப்படியொரு பேறில்லையா என ஏங்க...
தன் ஞானம், தன் கர்மம், தன் பக்தி என்று இல்லாது.....
உன் 'சரணம்' என்றே இருக்கும் சிறிய திருவடிக்கு அமுது படையல்!
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு = வாயுவின் மகன், குரங்கெனும் விலங்கு
மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து = இது வானர சாதி என்று மனத்தளவும் எண்ணாது, உகப்பாக...
காதல் ஆதரம் கடலினும் பெருக = அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று கடல் போல் பொங்க
செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று = ஆவி காத்தவனுக்கு ஆவியே கைம்மாறோ என்னுமாப் போலே
கோதில் வாய்மையினா லொடும் = வெறும் பேச்சுக்கு மட்டும் உறவு பாராட்டாது, வாய்மையினால்...
"உடனே உண்பன் நான்" = உன் கூடவே நானும் சாப்பிடுகிறேன்
என்ற ஓண்பொருள், எனக்கும் ஆதல் வேண்டும் = இப்பேர்ப்பட்ட அன்பு எனக்கும் வாய்க்க வேண்டும் பெருமாளே!
என்று அடியிணை அடைந்தேன் = என்று உன் சிறிய திருவடிகளை அடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்து அம்மானே! = அரங்கத்து அம்மானே! என் மீது அன்பு காட்டு!
..........என்று திருமங்கை ஆழ்வார், அனுமனை முன்னிட்டுக் கொண்டு, அரங்கனை வேண்டும் பாசுரம்!
இன்றும் திருவரங்கத்தில், இந்தக் காட்சி நடத்தப்படுவதாக, இப்போதே அறிந்தேன்!
ஓரிலைச் சோறுண்டு...
இன்னமும் தனக்கென மோட்சமும் போகாது...
இங்கேயே, அடியவர்களோடு, குணானுபவத்தில்...
மாதவிப் பந்தலிலும் வந்து அமர்ந்து கொள்ளும் இந்தச் சிறிய்ய்ய்ய்ய்ய திருவடியான எம் ஆஞ்சநேயனை,
பந்தல் வாசகர்கள், அன்பர்கள் எல்லாரும் தொட்டுத் தொட்டுக் கை குலுக்கிக் கொள்ளுங்கள்!
அவனோடு ஓரிலையில் உண்ட....சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!

இதனால்தான் வாழையிலையில் நடுவே உள்ள பெரிய கோட்டுக்கு மேல் பகுதியில் (அனுமனுக்குப் பிடித்த) பலகாரங்கள், பட்சணங்கள் ஆகியவற்றைப் பறிமாறுகிறார்கள் சென்று சொல்லக் கேட்டிருகின்றேன்.
ReplyDelete- சிமுலேஷன்
ஆஹா..... நான் சொல்லவந்தேன்..... சிமுலேஷன் சொல்லிட்டார்:-)
ReplyDeleteவடை அந்தப் பக்கம்தான் இருக்கு:-)
இங்கே சண்டிகர் கோவில் அனுமனை அப்படியே எடுத்து இடுப்பில் வச்சுக்கிட்டு நாமே ஊட்டிவிட்டுடலாமான்னு தோணும். அத்தனை சின்னக் குழந்தை!
வினுவின் படங்கள் போட்டதுக்கு ஒரு நன்றி. சுட்டுக்கவா?
@சிமுலேஷன்
ReplyDeleteஎப்படி இருக்கீங்க அண்ணே?
உண்மை தான்! அனுமனுக்கு பரிமாறராப் போல, நமக்கு பரிமாறிக்கிறது:)
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்யளறும் அடங்க
பொட்டத் துற்று மாரிப்பகை புணர்த்த
பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை
-ன்னு பாசுரமே இருக்கு!:)
அருமையான விளக்கம். வாழ்க! படம் இன்னும் அருமை.
ReplyDeleteஇராம.கி.
வந்தேன் ஐயா!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் கேயாரெஸ்
ReplyDeleteபல புதிய தகவல்கள் - ஒஅகிர்ந்தமைக்கு நன்றி - படமும் அதனைப் பற்றிய விபரமும் தர்வுடன் த்நதமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து//
ReplyDeleteநீங்கள் என்ன சமாதானம் கூறினாலும் இவ்வரிகளில் அனுமனை - அவன் குலத்தினை (மனித குல மூதாதையர் according to அறிவியல் திராவிடர் according to கழகக் கோட்பாடு) இழித்துரைப்பதாகவே படுகிறது. அனுமன் குலம் (எதுவாயினும்) இறைவனால் வெறுத்து ஒதுக்கப் படுவது இயல்பு. அந்த இயல்பினில் திரிந்து இராமன் அனுமனை மனமுவந்து, கருணையுடன் (watever) ஏற்றுக்கொண்டான் எனும் பொருள் தொனிக்கிறதே. (இத்தனைக்கும் அவன் வாயு மைந்தன்!!! எனில் மற்ற குரங்குகளின்/திராவிடரின் நிலை???)
கூறுவது ஆழ்வாரே ஆயினும் குற்றம் குற்றமே! இதுதானே எங்கள் மதுரையூர்ச்சங்கம் காட்டிய வழி. நீங்கள் மதுரை வழியா? மங்கை வழியா?
கலக்கிட்டீங்க!'
ReplyDeleteஅன்னமிட்ட அண்ணல், தன் உணவையும் கறியும் அப்பக்கம் தள்ள,
ReplyDeleteபோதும் போதும் என்று இவனும் இப்பக்கம் தள்ள...
ஞான, கர்ம யோகிகள் அத்தனை பேரும், நமக்கு இப்படியொரு பேறில்லையா என ஏங்க...
தன் ஞானம், தன் கர்மம், தன் பக்தி என்று இல்லாது.....
உன் 'சரணம்' என்றே இருக்கும் சிறிய திருவடிக்கு அமுது படையல்!
:)
இந்திரன் சார்!
ReplyDeleteதிருமங்கை ஆழ்வார் நீங்கள் நினைப்பது போலெல்லாம் நினைக்க மாட்டார் . அவர் வழியே தனி வழி!
நீங்களும் அவர் வழியை Follow பண்ணலாம்
:)
nice post thanks:)
ReplyDeleteOne among your execellents.
ReplyDeleteEspecially AAVI KAAPPAAN SONG.
Give us more such KRS
Anbudan
Dhivakar
@இந்திரன்
ReplyDeleteWelcome Back :)
ஊர் எப்படி இருந்துச்சி? எல்லாரும் நலமா?
நீங்கள் எழுப்பிய கூற்று சரியே! திருமங்கை ஆழ்வாரின் அவ்வரிகளில், 'உயர்வு மனப்பான்மை' தொனிக்கத் தான் செய்கிறது!
மீனாகவும்,ஆமையாகவும்,ஏன் பன்றியாகக்கூட தானே அவதரித்த தெய்வத்தைப்பற்றிக் கூறும் ஆழ்வார் நீங்களெல்லாம் சொல்வதுபோலா நினைத்திருப்பார் ?ஊஹும்!
ReplyDeleteஎங்கேடா படத்தை மட்டும் பார்த்துட்டு இவரும் கதை சொல்ல வந்துட்டாரோன்னு நினைச்சேன் இரவி. சொல்லிக்கிட்டு வந்தது அப்படி ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்தது. எல்லாம் காலத்தின் செல்வாக்கு. :-)
ReplyDeleteஅப்படியே 'ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி'ன்னு தொடங்கும் பாசுரத்துலயும் 'உயர்வு மனப்பான்மை' தொனிக்கிறதான்னு சொல்லுங்க. ஒவ்வொரு தடவை அந்தப் பாசுரத்தைப் படிக்கிறப்பவும் கேக்கிறப்பவும் இந்த பாசுரத்தில் 'மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதி'ங்கிறதைப் படிக்கிறப்ப தோணுற மாதிரியே தோணுது.
அருமை
ReplyDeleteஅருமை
அருமை
இந்திரன் கூற்று, இங்கே சிலருக்கு வித்தியாசமாகப் பட்டது! ஆனால் எனக்கு அப்படிப் படவில்லை!
ReplyDeleteஅவர் உள்ளத்தில் ஒரு ஐயம்! அதை வெளிப்படுத்தினார்! அதை உடனே நிராகரிக்க எனக்கும் தோனவில்லை!
ஆழ்வார் முதற்கொண்டு எம்பெருமான் வரையிலும்...யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பது என் பணிவான கருத்து!
விமர்சனங்கள் = புரிதலை மேம்படுத்தும் விளக்காகக் கொண்டால் பிரச்சனையே இல்லை!
ஆழ்வார் என்னும் பக்தி நிலையில் இருந்து மட்டுமே விமர்சனங்களுக்கு பதில் சொல்லிவிட முடியாது! You need Empathy to understand the opposite view point! After that itz collective understanding - whether for or against!
@இந்திரன்
ReplyDeleteஒரு எடுத்துக்காட்டுக்கு, இதைக் கற்பனை செய்து பாருங்கள்...
இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு! தில்லியில் நடக்கிறது! உண்ணா விரதம்! மேடையில் இந்தி எதிர்ப்பு வாசகம்! - 'ஹிந்தி ஹதாஓ'
உடனே, நீங்கள்..."டேய் எதிர்க்கிறது இந்தி, அதையே இந்தியில் எழுதி வைக்கறீங்களே, நல்லாவா இருக்கு?உங்க முயற்சியே களங்கம், நான் நம்ப மாட்டேன்"-ன்னா சொல்வீங்க?
கொஞ்சம் புரிதல் இருந்தால்...
இது நடப்பது தில்லியில், எனவே அங்குள்ள மக்களுக்கு, நமது நோக்கத்தைப் புரிய வைக்க வேண்டி, இது போன்ற காட்சிகள் என்பது புரிந்து விடும் அல்லவா?
ஆழ்வார் காலத்தில், ஆலயத்தில் தமிழ் இல்லை! சாதி வேற்றுமைகளும் நிறைய! திருமங்கையே கள்ளர் குலம் தான்! அப்படி இருக்க ஏன் அவ்வாறு பாடுகிறார்?
டேய், கீழ்ச் சாதி, விலங்கு-ன்னு எல்லாம் ஒதுக்கி வைக்கறீங்களே, ஆனா அவங்க கூடத் தான் இறைவன் உறவு பாராட்டுகிறான், ஒங்க கூட உக்காந்து தின்னானா? ஒங்க ஒருத்தரையாச்சும் கட்டி அணைத்துக் கொண்டானா?-ன்னு உணர்த்த விரும்புகிறார்! அதனால் அந்தச் "சொல்லை" அப்படியே போடுகிறார்! தில்லியில் இந்திச் சொல்லை, இந்தி எதிர்ப்புக்கு போட்டாற் போலே!
இப்படிச் சொல்லைப் போடுவதால், அவர் நோக்கம் என்ன என்பதைப் பார்த்துத் தான் இழிவா/உயர்வா என்று முடிவு கட்ட முடியும்!
இல்லையென்றால்...இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் இப்படிப் பாடுவாரா?
அமர ஓர் அங்கம் ஆறும்
வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய
சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பார் ஆகில்
நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்
அரங்க மா நகருளானே!
அடியவர்களைப் பழித்தால், அந்தணர்கள் தான் புலையர்-ன்னு பப்ளிக்காச் சொல்லும் வீறு, அதுவும் அந்தக் காலத்தில், யாருக்கு வரும்?...
'புலையர்'-ன்னு சாதிச் சொல்லைப் பயன்படுத்தும் ஆழ்வார் ஒழிக-ன்னு சொல்லுவோமா?:) அதுக்கு முன்னாடி இருக்கும் வரியையும் படித்து, ஓ இப்படிச் சொல்றாரா-ன்னு புரிந்து கொள்வதில்லையா? அதே போல் தான் இங்கும்!
அனுமனை, 'மற்றோர் சாதி என்று ஒழிந்திலை' என்று காட்டுவது, ஒரு சிலரை இடித்துக் காட்டத் தான்! அவர்கள் hypocrisy-ஐ இடித்துக் காட்ட, 'பார்த்தீங்களா, கடைசிலே யாரு கூட உறவு பாராட்டினான்' என்று காட்டுகிறார்!
இதை நான் சமாதானமாகச் சொல்லவில்லை! என் கூற்றில் உண்மை இருப்பதாகப் பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்! இல்லை உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாகவே நிற்கலாம்! எதுவாயினும் எனக்குச் சரியே!:)
இன்னொரு விஷயம்! இந்தத் திருமங்கை தான்...தன் சூரத்தனத்தைப் பயன்படுத்தி, திருவரங்கத்தில், முதன்முதலாக, தமிழ் வேதமான திருவாய்மொழியை ஒலிக்க வைத்தவர்! தமிழுக்கென்று ஒரு திருவிழா - திருவாய்மொழித் திருநாள் - இவர் செய்த 'அடாவடியால்' தான் முதன்முதலாக திருவரங்கத்தில் நடைபெற்றது :)
ReplyDelete@லலிதாம்மா...
ReplyDeleteஇப்போது விளக்கங்களைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்!:)
ஆழ்வார் மேல் உள்ள அதீத பக்தியால், எப்போதுமே அவர் சரியாகத் தான் செய்வார் என்று சொல்லி விட முடியாதல்லவா! விமர்சனங்களை உரசிப் பார்த்துக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தான்! புரிதல் இன்னும் கெட்டிப்படும்:)
@குமரன்
ReplyDelete//எங்கேடா படத்தை மட்டும் பார்த்துட்டு இவரும் கதை சொல்ல வந்துட்டாரோன்னு நினைச்சேன் இரவி//
பாரதியார் 63 நாயன்மார்களில் ஒருவர்-ன்னு ஒருவர் சொன்னாப் போலவா?:)
//எல்லாம் காலத்தின் செல்வாக்கு. :-)//
எந்தக் "காலம்"?:)
//அப்படியே 'ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி'ன்னு தொடங்கும் பாசுரத்துலயும் 'உயர்வு மனப்பான்மை' தொனிக்கிறதான்னு சொல்லுங்க//
சொல்லியாச்சே!
@டீச்சர்
ReplyDelete//வடை அந்தப் பக்கம்தான் இருக்கு:-)//
அதானே! கரெக்ட்டா கண்ணில் படுமே உங்களுக்குன்னு:)
//வினுவின் படங்கள் போட்டதுக்கு ஒரு நன்றி. சுட்டுக்கவா?//
Yep! But pl mention "Vinu" wherever you use it:)
@இராம.கி ஐயா
ReplyDeleteபந்தல் பக்கம் ரொம்ப நாளாச்சு உங்களைக் கண்டு! நல்வரவு! நன்றி:)
@சீனா ஐயா
ReplyDeleteதரவு-ன்னா அது குமரன் தான்! நான் சும்மா ஏதோ எடுத்துப் போட்டேன்!:)
@ராஜேஷ்
ReplyDeleteநன்றி! திருமங்கைக்கு நீங்க தான் Lawyer-ஆ? :)
இந்திரனைக் கண்ணை மூடிக்கிட்டு திருமங்கையை follow பண்ணச் சொல்றீங்களே! நியாயமா?:)
//DHIVAKAR said...
ReplyDeleteOne among your execellents.
Especially AAVI KAAPPAAN SONG.
Give us more such KRS//
நன்றி திவாகர் சார்!
அப்பப்போ இப்படித் தானா வரும்! இப்போ ஓவியர் வினுவால் வந்தது!:)
@Narasimmarin Naalaayiram
ReplyDelete//இந்திரன் சார்!
திருமங்கை ஆழ்வார் நீங்கள் நினைப்பது போலெல்லாம் நினைக்க மாட்டார் . அவர் வழியே தனி வழி!
நீங்களும் அவர் வழியை Follow பண்ணலாம்
:)//
தனி வழின்னா எந்த வழி சார்... புரியலையே... ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாரே அந்த வழியா? அவரும் மொட்டையா தனி வழின்னு தான் சொல்லுறாரு. நீங்களாவது கொஞ்சம் விளக்கமா எந்த வழின்னு கைடு பண்ணுங்க சார்... அப்புறம் நான் ஓட்டல்லாம் இல்ல சார். நெஜமாவே தான் கேட்குறேன். வழி தெளிவா சரியா இருந்துச்சுன்னா கண்ணைத் திறந்துட்டு follow பண்ணுறேன் சார் .
அப்புறம் நான் சாரெல்லாம் இல்ல சார். ரொம்ப சின்னப் பையன் தான்... தம்பின்னே கூப்பிடலாம் சார்.
@kannabiran, RAVI SHANKAR (KRS)
ReplyDelete//@இந்திரன்
Welcome Back :)
ஊர் எப்படி இருந்துச்சி?//
ஊரு தானே .... முல்லையில் நீராடி வைகையில் கபடியாடி ம்ம்ம் முழுத்திருப்தி
அப்புறம் 'யாவரும் நலம்'
//அன்னமிட்ட அண்ணல், தன் உணவையும் கறியும் அப்பக்கம் தள்ள,
ReplyDeleteபோதும் போதும் என்று இவனும் இப்பக்கம் தள்ள...//
நல்ல சொல்லாடல்
//மீனாகவும்,ஆமையாகவும்,ஏன் பன்றியாகக்கூட தானே அவதரித்த தெய்வத்தைப்பற்றிக் கூறும் ஆழ்வார் நீங்களெல்லாம் சொல்வதுபோலா நினைத்திருப்பார் ?ஊஹும்!//
ReplyDeleteநீங்களும் நான் சொல்லுவதை தட்டையாகப் பார்த்து 'ஊகூம்' என்று ஒற்றை வார்த்தையில் மறுக்கிறீர்களே லலிதாம்மா....
இப்போது உங்கள் கூற்றையே எடுத்தக் கொள்ளுங்களேன் 'பன்றியாகக்கூட தானே அவதரித்த'. அந்த 'கூட' தான் பிரச்சினை. நீங்கள் பன்றியை இழிவாக என்பது தெளிவாகத் தெரிகிறது. இதைத் தான் நான் கூறுகிறேன்.
ஒரு உதாரணம். ''தமிழில் அர்ச்சனை செய்யப்படும்'' ''தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்''
இவ்விரு சொற்றொடர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறதா? இல்லை 'உம்' விகுதி மட்டும் தான் மிகுதி. வேறொரு வித்தியாசமும் இல்லை என்று தர்க்கம் செய்யப்போகிறீர்களா??
(மேலும் நீங்கள் கூறும் 'நீங்களெல்லாம் கூறுவது போல' வாக்கியம் இவ்வகையைச் சேர்ந்ததாக இருக்காது என நம்புகிறேன்)
//நீங்கள் எழுப்பிய கூற்று சரியே! திருமங்கை ஆழ்வாரின் அவ்வரிகளில், 'உயர்வு மனப்பான்மை' தொனிக்கத் தான் செய்கிறது!//
ReplyDeleteஆகா. நீங்களும் மதுரை வழி தான் எனக்கு நல்லாவே தெரியும் அண்ணா
//டேய், கீழ்ச் சாதி, விலங்கு-ன்னு எல்லாம் ஒதுக்கி வைக்கறீங்களே, ஆனா அவங்க கூடத் தான் இறைவன் உறவு பாராட்டுகிறான், ஒங்க கூட உக்காந்து தின்னானா? ஒங்க ஒருத்தரையாச்சும் கட்டி அணைத்துக் கொண்டானா?-ன்னு உணர்த்த விரும்புகிறார்! அதனால் அந்தச் "சொல்லை" அப்படியே போடுகிறார்! தில்லியில் இந்திச் சொல்லை, இந்தி எதிர்ப்புக்கு போட்டாற் போலே!//
ReplyDeleteஆழமாக consider பண்ணவேண்டிய கூற்று. சிந்தனைக்குத் தீனி போட்டீர்கள்
//அனுமனை, 'மற்றோர் சாதி என்று ஒழிந்திலை' என்று காட்டுவது, ஒரு சிலரை இடித்துக் காட்டத் தான்! அவர்கள் hypocrisy-ஐ இடித்துக் காட்ட, 'பார்த்தீங்களா, கடைசிலே யாரு கூட உறவு பாராட்டினான்' என்று காட்டுகிறார்!//
ReplyDeleteமெய்யாகத்தான் படுகிறது. ஏற்றுக்கொண்டேன் ஐயா...
உதாரணமும் அருமை.
எப்படி கேஆர்எஸ் அண்ணா...உங்களால் மட்டும் முடிகிறது. (இது முகத்துதி இல்லை)
//தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்//
ReplyDeleteஇங்கே 'உம்' என்பது நிச்சயம் தவறு! ஒருகால் ஆழ்வாரே இப்படிச் சொல்லி இருந்தாலும் தவறு தவறு தான்! (ஆழ்வார் அப்படிச் சொல்லவில்லை என்பது வேறு விஷயம்)
சமஸ்கிருதம் தான் பிரதான அர்ச்சனை! தமிழி'லும்' வேணும்-ன்னா செய்யலாம் என்பது தமிழ்நாட்டில் நிச்சயம் தவறு! இரண்டாந்தரம்!
ஆழ்வார் சொல்லும் 'புலையர்' என்பதையும் ஒப்பு நோக்குங்கள்! தமிழி'லும்' என்பது போல், 'புலையர்'-ன்னு ஒரே வரியாச் சொல்லியிருந்தா அப்போ நிச்சயம் தவறு தான்!
ஆனால் அதற்கு முந்தைய வரி-ன்னும் ஒன்னும் இருக்கு!
'நீங்க என்ன தான் அந்தணர்கள் ஆனாலும், அடியார்களைப் பழித்தால்...?' என்பதே அந்த முதல் வரி!
அதற்கு அப்புறம் தான்...'அப்படிப் பழித்தால், நீங்கள் தான் புலையர், அவர்கள் இல்லை!' என்பது வருகிறது! இதை முதல் வரியோடு கூட்டிப் படிக்கும் போது, நோக்கம் தெளிவாகிறது! நோக்கம் தெளிவாகி விட்டால், ஆக்கமும் தெளிவாகி விடும் :)
கேஆர்எஸ் அண்ணா... //வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து// விசயத்தில் உங்களுடைய தர்க்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டேன். இப்போது இவ்விசயத்தில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை. 'தமிழிலும்' உதாரணம் கூறியது lalitha mittal பின்னூட்டத்துக்கே ....
ReplyDelete\\//அப்படியே 'ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி'ன்னு தொடங்கும் பாசுரத்துலயும் 'உயர்வு மனப்பான்மை' தொனிக்கிறதான்னு சொல்லுங்க//
ReplyDeleteசொல்லியாச்சே!
\\
அப்படியா? இந்திரனுக்குச் சொன்ன மாதிரி எனக்கும் விளக்கமா சொல்லலாம்ல? நானும் அதே ஊரு தான்; அதே நக்கீரர் வழி தான்; இன்னும் நிறைய ஒத்துமை இருக்கே?! ஏன் எனக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்யுறீங்க? இப்படி ஒத்தைச் சொல்லா 'சொல்லியாச்சே'ன்னு முடிச்சா எப்படி?
@குமரன் அண்ணா
ReplyDeleteஆரம்பிச்சிட்டீங்களா ஒங்க மதுரை ரவுசை?:) ராகவா, அபயம்!:)
//நானும் அதே ஊரு தான்; அதே நக்கீரர் வழி தான்;//
தி.க வாசம் உண்டா?:)
//ஏன் எனக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்யுறீங்க?//
ஓர வஞ்சனை, நடு வஞ்சனை, குறுக்கு வஞ்சனை...இன்னும் டைப் டைப்பாச் சொல்லுங்க!:)
//இப்படி ஒத்தைச் சொல்லா 'சொல்லியாச்சே'ன்னு முடிச்சா எப்படி?//
அதான், 'உயர்வு மனப்பான்மை' இல்ல-ன்னு சொல்லி விளக்கியாச்சே! அதான், 'சொல்லியாச்சே'-ன்னு சொன்னேன்! நீங்க குடுத்த குகப் பாசுரத்துக்கு விளக்கம் தான் உங்களுக்கே தெரியுமே!:)
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி = குகனுக்கு இரங்கி!
ReplyDeleteகுகனை.....ஏழை, ஏதலன், கீழ்மகன்-ன்னு உலகம் தான் சொல்லிச்சி! ஆனா இராகவன் சொல்லலை!
ஏழை = பணம் இல்லாதவன்
ஏதலன்=ஏது+அலன்=ஏதும் இல்லாதவன்! (அரசனுக்கு-அவனுக்கும் ஒரு தொடர்பும் இல்லாதவன்)
கீழ் மகன் = வேட்டையாடி உயிர்களைக் கொல்லுபவன்!
இப்படியெல்லாம் அவன் தொழிலை வைத்து உலகம் சொல்லுவது வாடிக்கை தான்!
ஆனால் இப்படியெல்லாம் சொல்லாது (என்னாது), அரசன் என்ற கெத்தைக் காட்டாது....
உலக வழக்குக்கு மாறாக, அவனோடு உறவு பாராட்டினான் இராகவன்!
மற்றவற்கு இன்னருள் சுரந்து = குகனுக்கு இன்னருளைத் தந்து...
மாழை மான்மட நோக்கி, உன் தோழி = தன் மனைவியைப் பார்த்து, குகா, இந்தச் சீதை இனி உனக்குத் தோழி!
உம்பி எம்பி = எம்பி, என் தம்பி (இலக்குவன்), இனி உம்பி உன் தம்பியும் கூட...
என்று ஒழிந்திலை உகந்து = என்று சொல்லி, அதுவும் முடியாமல்...
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி = எனக்கும் ஆருயிர்த் தோழன் என்று ஒழியாது நின்றிடுவாயாக!
என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட = இப்படி இராகவன் சொன்ன சொல்லெல்லாம் என் மனத்தில் தங்குதே!
ஆழி வண்ண நின் அடியிணை அடைந்தேன் = குகனை நீ உறவு கொண்டதை நினைத்துக் கொண்டே, உன்னிடம் வந்திருக்கேன்!
அணி பொழில், திருவரங்கத்து அம்மானே = அரங்கா...என்னையும் குகனாகக் கொண்டுவிடு!
ஆவி காப்பான் எம் ஆஞ்சநேயன்!
ReplyDeleteசிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
கண்முன் காட்சியாக நிறுத்திய தங்களின் படங்களும், எழுத்துவன்மையும் பாராட்டுக்குரியன. வாழ்த்துக்கள்.
தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.
ReplyDeleteநன்றி இரவி. என்ன தான் அருத்தம் தெரிந்திருந்தாலும் நீங்கள் சொல்லிப் படிப்பதில் தனி மகிழ்ச்சி தானே!
ReplyDelete@ராஜேஸ்வரி
ReplyDeleteகண்முன் காட்சியா? கண்முன் சாப்பாடு-ன்னு சொல்லுங்க!:)
நன்றி வலைச்சரத்தில் தொடுத்தமைக்கு!
Nice post :)
ReplyDeleteRaamar hanumaarai thambi-yaaga ethukitaaru right?
Adhai "substantiate" panna dhaan hanumaarukku ippadi oru "fortune" koduthaara irukkum :))
குகனொடு ஐவரானோம்; சுக்ரீவனொடு அறுவரானோம்; வீடணனொடு எழுவரானோம்....
ReplyDeleteso, அனுமன் தம்பி அல்ல! அதுக்கும் மேலே :)
நாம சொல்லிக்கலாம் நான் முருக பக்தன், பெருமாள் பக்தன்-ன்னு! ஆனா இறைவன் சொல்வானா இவன் என் பக்தன்னு?:) அல்லது அப்படிச் சொல்லுறாப் போல நாம தான் நடந்து கொள்கிறோமா?:)
இறைவன், "என் பக்தன்" என்று சொன்னது ரெண்டே பேரைத் தான்! அவங்க ரெண்டு பேருமே மனுசங்க இல்லை, ஒருவன் அசுரன், இன்னொருவன் விலங்கு :)
இரவி,
ReplyDeleteஅந்த அசுரன் ஆழ்வான் ஆனான்; ஆனால் ஏன் விலங்கு ஆழ்வான் ஆகவில்லை? ஏதேனும் காரணம் உண்டா? தெரியாமல் தான் கேட்கிறேன்.
Dear Ravi :- Super super super.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇரவி,
அந்த அசுரன் ஆழ்வான் ஆனான்; ஆனால் ஏன் விலங்கு ஆழ்வான் ஆகவில்லை?//
போச்சுறா! கேள்விக் கணைகள்!
கொமரன் கேள்விக்கெல்லாம் நான் மணவாள மாமுனிகளைத் தான் போய்க் கேக்கோணும்:)
அசுரன் = பிரகலாதன்
விலங்கு = அனுமன்
இவர்கள் இருவரையே "என் அடியவர்கள்" என்று இறைவனே மகிழ்ந்து சொன்னது!
இவர்களைத் தவிர இன்னொருவரை, "நம் ஆழ்வார்" என்று சொன்னான்! ஆனால் அவரையும் "என் அடியவர்' என்று சொல்லவில்லை!:) ஏன்?
ஆழ்வார்-ன்னா என்ன? அடியவர்-ன்னா என்ன?
எல்லா ஆழ்வார்களும் அடியவர்களா?
எல்லா அடியவர்களும் ஆழ்வார்களா?
ஒரு நல்ல பதிலாச் சொல்லுங்க குமரன்:)
@பிரசாத்
ReplyDeleteநலமா? என்ன ஆளையே காணோம்?
//
ReplyDeleteஇவர்கள் இருவரையே "என் அடியவர்கள்" என்று இறைவனே மகிழ்ந்து சொன்னது!
இவர்களைத் தவிர இன்னொருவரை, "நம் ஆழ்வார்" என்று சொன்னான்! ஆனால் அவரையும் "என் அடியவர்' என்று சொல்லவில்லை!:) ஏன்?//
@ KRS: i can understand your question to a little extent..but it gave way to another question...
"Adiyaen" word invention Nammazhwar dhaane?
ஆழ்வார்=எம்பெருமானிடத்திலே மட்டும் 'ஆழ்ந்து' இருப்பவர்!
ReplyDeleteஅதனால் தான் மதுரகவியை/ ஆண்டாளை, 'ஆழ்வார்' என்ற நேரடி வரிசையில் வைக்காமல், அதனினும் உயர்ந்த வரிசையில் வைத்தார்கள்!
எம்பெருமானிடத்து மட்டும் ஆழாமல், சக அடியவர்களிடத்தும் ஆழ்ந்து இருப்பது ரொம்பவே கஷ்டம்!
அட, அவனும் நம்மைப் போல மனுசன் தானே, நம்மள விட நாலு பாட்டு கூடத் தெரிஞ்சி வச்சிருக்கான்! அதுக்காக அவன் கிட்ட போய் ஆழ்ந்துற முடியுமா? போங்கடா! Me and Perumal - Direct Connection, No Brokers :)))
இப்படித் தான் பலருக்கும் பேசத் தோனும்! அவரவர் ஈகோ-ன்னு ஒன்னு இருக்குல்ல?:)
ஆனால் அனுமன் அப்படியல்ல!
இறைவனைப் பற்றிக் கொண்டாலும், அடியவர்களை விட்டு வர மனமில்லை! எல்லா அடியவர்களும் எம்பெருமானிடத்திலே சேர்ந்த பின், கடைசியாகத் தான் வந்து சேர்ந்து கொள்கிறேன்! அது வரை அடியவர்களுக்கு ஊக்கமாக அவங்க கூடவே இருக்கேன்-ன்னு சொல்லி, மோட்சத்தையும் மறுத்தவன்!
* அடியவர் = அடியைப் பற்றிக் கொள்ள 'நினைப்பவர்கள்'
* ஆழ்வார் = அடியைப் உறுதியாகப் பற்றிக் கொண்டு 'ஆழ்ந்தவர்கள்'
# 'என் அடியவர்' = பிரகலாதன்! பிரகலாத ஆழ்வானும் ஆனான்!
# 'என் அடியவர்' = ஆஞ்சநேயன், ஆழ்வான் என்ற சொல்லையும் தாண்டி, அடியவர்க்கு எல்லாம் அடியவன் ஆனான்!
இந்த தன்மைக்கு என்ன பெயர் வைப்பது?
இறைவனே இராமகாதையில் பேர் வைக்கத் திணறுகிறான்...
கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறான்! "தத்தஸ்ய மகாத்மனே"
என் மற்ற குழந்தைகளை எல்லாம் என்னிடம் சேர்த்து விட்டுக் கடைசியாக வருகிறேன் என்று சொன்ன ஆஞ்சநேயா...நீ "தத்தஸ்ய மகாத்மனே"! ஆத்மாக்களுள் மகாத்மனே!
உன் திருவடியை என் நெற்றியில் தரித்துக் கொள்கிறேன்!
நேயத்தே நின்ற ஆஞ்ச-நேயன் அடி போற்றி!
அருமையான விளக்கம் இரவி! கேட்டதும் கொடுப்பவனே கண்ணா கண்ணா! பந்தலின் நாயகனே கண்ணா கண்ணா! ரொம்ப நன்றி இரவி!
ReplyDeleteஇப்ப ILWK என்ன சொல்றாங்கன்னு கேக்கணும். அடியேன் என்ற சொல்லை முதலில் சொன்னவர் நம்மாழ்வாரா என்று தெரியவில்லை. ஆனால் ஜீவனின் முதன்மைக் குணம், ஜீவனின் நிரூபகத்தன்மை என்று சொல்லும் இடத்தில் 'நான்' என்று சொல்லாமல் 'அடியேன் உள்ளான்' என்று அவர் சொன்னதாக ஆசாரியர்கள் விளக்கி படித்திருக்கிறேன். நீங்கள் சொல்ல வரும் விளக்கம் என்ன?
//அடியவர் = அடியைப் பற்றிக் கொள்ள 'நினைப்பவர்கள்'
ReplyDelete* ஆழ்வார் = அடியைப் உறுதியாகப் பற்றிக் கொண்டு 'ஆழ்ந்தவர்கள்'//
:)
KRS sonnadhai dhaan vera vidhamaaga solla vandhen...but kRS azhagaa pottu udaichitaaru... :)
and regarding nammzhwar, even i am nt clear...i have read somewhere that he started it...but really, even i don't know...
ReplyDelete//எல்லா ஆழ்வார்களும் அடியவர்களா?
ReplyDeleteஎல்லா அடியவர்களும் ஆழ்வார்களா?
//
@KRS: Ungalidam pesuravanga ellorum ore madhiri pesinaal ungalukku bore adikaathu?
Ovutharum vera vera manobhaavangaludan vera vera paadhaigal kondu perumal adaiyuraanga...atleast nokki poguraanga...so, centre point is Krishna...
one person says Perumal is His son, another says brother, another says friend, another says master...innum sila paithiyangal avanai kaadhalanaaga kooda paarkkum...so..basically, how u will feel if u had the same food for breakfast, lunch and supper? Life-la oru spics, oru variation vendaama? Appadi dhaan avarukku namma bhaktiyum...namma manobhaavathukku ethamaadhiri nammai anaichikiraaaru...
so, the answer to ur question is no answer at all....
//கேட்டதும் கொடுப்பவனே கண்ணா கண்ணா! பந்தலின் நாயகனே கண்ணா கண்ணா! ரொம்ப நன்றி இரவி!//
ReplyDeleteஎன்ன, பாட்டெல்லாம் பலமா இருக்கு-ண்ணா?:)
பந்தலின் நாயகன்= கண்ணன், என் நாயகன் = முருகன்:)
//அடியேன் என்ற சொல்லை முதலில் சொன்னவர் நம்மாழ்வாரா என்று தெரியவில்லை//
'அடியேன்' என்று முதலில் சொன்னது மாறன் நம்மாழ்வாரே! = அடியேன் உள்ளான்!
பின்னாளில்...
'அடியோம்' என்று பெரியாழ்வாரும் பாடுகிறார்!
'அடியேன்' என்று சுந்தரரும் தேவாரத்தில் வரிசையாக அடுக்குகிறார்!
ஆனால், 'அடியார்' என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே வருகிறது, பரிபாடலில்..
@KK
ReplyDelete//Ungalidam pesuravanga ellorum ore madhiri pesinaal ungalukku bore adikaathu?
Ovutharum vera vera manobhaavangaludan vera vera paadhaigal kondu perumal adaiyuraanga...//
:)
அதான் எல்லாரும் அடியவர்களே-ன்னு சொன்னேன்!
கேட்க வந்த கேள்வி என்ன-ன்னா..
//எல்லா ஆழ்வார்களும் அடியவர்களா?
எல்லா அடியவர்களும் ஆழ்வார்களா?
//
எல்லா அடியவர்களும் "ஆழ்வார்" ஆகி விடுவதில்லை!
ஆனால் எல்லா ஆழ்வார்களும் அடியவர்களே!
1st step: அடியவர்கள் = அடியைப் பற்றிக் கொள்ள "நினைப்பவர்கள்"! ஆனா எப்பமே பற்றிக் கொண்டிருப்பார்களா, தெரியாது!
2nd step: ஆழ்வார்கள் = எப்பமே பற்றிக் கொண்டு "ஆழ்ந்து" இருப்பவர்கள்!
3rd step: அவனில் ஆழ்வதையும் தாண்டி, அவன் அடியவர்க்கு எல்லாம் அடியவராய் 'இருப்பவர்கள்' = அனுமன்!
So,
* அனுமன், ஆழ்வார்கள் எல்லாரும் முதலில் அடியவர்கள் தான்!
* பின்பு ஆழ்வார்கள் ஆகி,
* ஆஞ்சநேய-ஆழ்வான் என்பதையும் கடந்து, அடியார் அடியோங்களே என்று 'இருந்து' விடுகிறான்!
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே!
@KRS: Beautiful words...kalakkiteenga...
ReplyDeletePSP KoiL-il Aandal sannathikku munnadi oru thoon-il Aanjaneyar irupaar theriyuma?
Avarukku eppodhum pola pradarshanam vaikkum podhu i was thinking of ur words only :)
BTW, U know in Thenthiruperai temple...Aanjaneyar actually grew...enga pattiyellam paarthappa chinna kuzhandhai maadhiri irundhaaram...ippa nalla perusa vazhandhutaaru.. real fact :)
ReplyDeletewhere is this PSP Kovil?
ReplyDelete@டீச்சர்
ReplyDelete//where is this PSP Kovil?//
தேடினாலும் கிடைக்காது! Code Word! சிபிஐ விசாரிச்சா தான் தெரியும்:)
இது நம்ம ilwk பொண்ணு இருக்கே, அது வச்ச பேரு! PSP=Partha Sarathy Perumal! திருவல்லிக்கேணி DSP-ன்னு நினைச்சிக்காதீங்க!
இவ கூடச் சேர்ந்து சேர்ந்து, நானும் என் முருகனை KS Koyil ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்!=Kanda Samy Koil :))
@KRS: :)))
ReplyDeleteko. paa. sa vaa neenga "PSP-kku? :)))
அழகான படம்! பார்த்துக்கொண்டே இருக்கலாம்! பகிர்தலுக்கு நன்றி!
ReplyDelete@தக்குடு
ReplyDeleteபார்த்துக் கொண்டே இருங்க! நன்றி:)
@KK
கொ.ப.செ-வா? சேச்சே! PSP=எந்தை எந்தை, My dear daddy!:) பொண்ணா பொறந்தா அவருக்குப் பொறக்கணும்! அப்படியே கையில் தாங்குவாரு!:)
>>> அந்த அசுரன் ஆழ்வான் ஆனான்; ஆனால் ஏன் விலங்கு ஆழ்வான் ஆகவில்லை? ஏதேனும் காரணம் உண்டா? தெரியாமல் தான் கேட்கிறேன் <<<
ReplyDeleteகுமரன் அவர்களின் வினா இது.
அனுமன் ஆழ்வான் ஆகவில்லை; இராமபிரானின் அங்கமாக - அடியாகவே ஆகிவிட்டான்.
வைணவ மரபு ‘சிறிய திருவடி’ என்னும் சிறப்புத் திருநாமத்தை அளித்து விட்டது.
கைங்கர்யத்தில் இன்னுயிரையும் துறந்த ஜடாயு ‘பெரிய உடையார்’ ஆனார்
தேவ்