Thursday, November 13, 2008

புதிரா? புனிதமா? இந்தக் குழந்தைப் பதிவர்கள் யார்? யார்?

விடைகளைச் சொல்லிறலாமா? அதான் சந்திராயன் சந்தோஷத்துல இருக்கேன்! ஸோ, என்ன பரிசு வேணும்னாலும் கேளுங்க! என் தங்கச்சி துர்காவைக் கொடுக்கச் சொல்லுறேன்! :)

விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
மிக அதிகமான சரியான வடைகளைச் சுட்டவர் என்ற பெருமையைச் சின்ன அம்மிணி அக்கா, மற்றும் ரிஷான் அங்க்கிள் தட்டிச் செல்கின்றார்கள்! வாழ்த்துக்கள்-க்கா! வாழ்த்துக்கள் ரிஷான்! :)

போட்டியின் ஹைலட்டான ஐந்தாம் கேள்வி - சந்திரிகா சோப் - நம்ம தங்கத் தாரகை துளசி டீச்சர்! அவங்களின் அந்தப் படத்துக்காகவே, அவங்களுக்கு பதிவுலக நாட்டியப் பேரொளி-ன்னு பட்டம் கொடுத்துறலாம்! ஏற்கனவே அந்த ரெட்டை வால் குருவியோ ஏதோ சொன்னாங்களே - அந்த மை வைக்கும் இஷ்டைல்! அதுக்கு நிறைய பேரு ஃபேன்ஸ் வேற ஆயிட்டாங்க! வாழ்த்துக்கள் டீச்சர்! :)

ஷைலஜா அக்கா...இந்த மை பத்தி, எனி கமெண்ட்ஸ்? :)
இது மை.பா இல்லை! இது வெறும் மை! :)


மக்கா, இன்னிக்கி (நவ-14) குழந்தைகள் தினமாம்! சரி கொண்டாடிறலாம்-னு எங்க பேபி கிளப் தலைவி சிங்கையில் இருந்து ஒரு தீர்மானம் போட்டுட்டாங்க!
இப்போதைக்கு இந்த பேபி கிளப்பில் மூனே பேரு தான் உறுப்பினர்கள் - சிங்கை, நியூயார்க், ஆம்ஸ்டர்டாம்! மூனே மூனு குழந்தைப் பதிவர்களை மட்டும் வச்சிக்கிட்டு என்ன குழந்தைகள் தினம் கொண்டாடுறது? அதான் இப்படி ஒரு புதிரா புனிதமா!

இவிங்க எல்லாம் பிர-"பலமான" பதிவர்கள்!
விளையும் பயிர் முளையிலேயே பின்னூட்டுதா-ன்னு பாத்து சொல்லுங்க பார்ப்போம்

இதுல மொத்தம் ஐந்து பதிவர்கள்! ஐந்து பெரும்புள்ளிகள்!
இப்படியெல்லாம் கலந்தாத் தான் கரும்புள்ளி எல்லாம் பெரும்புள்ளி ஆகும்! :)

யார் யார் யார் இவர் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ??

(க்ளூ தனியாக் கொடுக்கப்பட்டிருக்கு; விடைகள் நாலை மாலை, நியூயார்க் நேரப்படி)

இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்! :)
குழந்தை போல சிரிக்கப் பழகுவோம்! சிரிக்கச் சிரிக்கவும் பழகுவோம்!


1 ஆடி வரும் நாயகி! பம்பை உடுக்கைத் தலைவி! பதிவுலக ஏஞ்செல் (அப்படிச் சொல்லலீன்னா, என் கதி அதோ கதி தான் :)

1

அ) மைஃபிரெண்ட்

ஆ) G3

இ) இம்சை அரசி

ஈ) துர்கா தேவி

2அப்பாவி லுக்கு! அடிப்பதோ பெக்கு!

2

அ) E-Tamil - பாஸ்டன் பாலா

ஆ) இனியது கேட்கின் - ஜி.ராகவன்

இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்

ஈ) றேடியோஸ்பதி - கானா பிரபா

3
அப்பவே என்னா ஒரு மொறைப்பு? என்னா ஒரு வில்லத்தனம்? :)

3

அ) கப்பி பய - கப்பி பய

ஆ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்

இ) மகரந்தம் - ஜி.ராகவன்

ஈ) வெயிலில் மழை - ஜி

4கொழு கொழு மொழு மொழு பொம்மை - ஆனா நமீதாவுக்கு உறவு அல்ல! (நமீதாவைச் சொல்லிவிட்டதால் கோவி கண்ணனையும் சொன்னதாகவே அர்த்தம்! :)))

4

அ) மைஃபிரெண்ட்

ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா

இ) ஷைலஜா (எப்படிக்கா இப்பிடி ஒரு அப்பாவி லுக்கு? அதான் பின்னலே இல்லைல? வெறும் கிரப்பு! அதுல எம்புட்டு பெரிய பூ! :))

ஈ) ஜோதிகா

5

சந்திரிகா சோப்பின் குளுமை வெளம்பரம் பாத்து இருக்கீங்களா? :) அதுல கலக்கும் ஒரு ஐட்டம் தான் இவிங்க தனி முத்திரை! ஜகன் மோகினி மாதிரி ஜகத்துக்கே பதிவி!

5

அ) கீதா சாம்பசிவம்

ஆ) வல்லியம்மா

இ) புதுகைத் தென்றல்

ஈ) தங்கத் தாரகை, துளசி கோபால்

6பறவை மருத்துவ நிபுணர்!

6

குருவி புகழ் - டாக்டர் விஜய்

7கண்ணனும் இவரே! வடி-வேலனும் இவரே! ஆனால் உலக நாயகி அல்ல!

7

கனவுக் கன்னி ஸ்ரீதேவி

8 அசைக்க முடியாத நாற்காலிக்குச் சொந்தக்காரர்8

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

9 பார்ட்டி நடத்தும் காசைக் கையில் கொடுக்கச் சொன்னார்!

9

அன்னை தெரேசா

(நோபெல் பரிசு வாங்கிய பின், கொண்டாட்டப் பார்ட்டிக்கான காசைக் கையில் கொடுத்தால், ஒராண்டுக்கு 150 தொழு நோயாளிகளுக்கு, நிர்மல் ஹருதய் காப்பகத்தில், சிகிச்சை செய்ய முடியும், என்று கேட்டு வாங்கினார்!)

10அப்பவே அகில இந்திய "முதல்"வர் கலைஞருக்கு முன்னோடி!

10

குழந்தைகள் தினச் சொந்தக்காரர், ஜவஹர்லால் நேரு!
இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மைஃபிரெண்ட் ஆ) G3 இ) இம்சை அரசி ஈ) ________

2 அ) E-Tamil - பாஸ்டன் பாலா ஆ) இனியது கேட்கின் - ஜி.ராகவன் இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ் ஈ) றேடியோஸ்பதி - கானா பிரபா

3 அ) கப்பி பய - கப்பி பய ஆ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ் இ) மகரந்தம் - ஜி.ராகவன் ஈ) வெயிலில் மழை - ஜி
4 அ) மைஃபிரெண்ட் ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா இ) ஷைலஜா ஈ) ஜோதிகா
5 அ) கீதா சாம்பசிவம் ஆ) வல்லியம்மா இ) புதுகைத் தென்றல் ஈ) ________________
6
7
8
9
10

110 comments:

 1. அண்ணே.. வழக்கம் போல உள்ளேன் சாமி பட்டும் சொல்லிக்கிறேன்.. நானே ஒரு குழந்தைப் பதிவர் தான்.. அதனால விடை தெரிந்திருந்தும்..:) மீ தி எஸ்கேப்..

  ReplyDelete
 2. இதுக்குத்தான் என்னோட latest போட்டாவை கேட்டீங்களா?

  ReplyDelete
 3. மொதோ தபாவா என் பேரும் ஒரு புதிரில் கொண்டுவந்திருக்கீங்க.

  அதுக்கு ஒரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. 6. இளைய தளபதி விஜய்

  7. ஸ்ரீதேவி

  எனக்குத் தெரிஞ்சது இம்புட்டுதான்.

  மேலே கொடுத்திருக்கும் சில பதிவ்கர்களின் முகங்கள் கூடத் தெரியாது. இதில் எப்படி யார்னு குழந்தைப் பருவத்து போட்டோவை வெச்சு சொல்வது.


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. 1. க்ளூ பாத்தா மலேசியா மாரியாத்தா மாதிரி இருக்கு
  2. கண்ணன் மாதிரி வேடந்தரித்த கேஆரெஸ் தானே
  3. வில்லத்தனம் பண்ணறதுன்னா ஜிரா
  4. ஷைலஜா அக்கா
  5. நானானி அம்மா(கவிதாயினி காயத்திரிக்கு நானானி அம்மா வயசில பாதி கூட இருக்காதே)
  6. விஜய் மாதிரி இருக்கு
  7. சிரி தேவி
  8. எம் ஜி ஆர்
  9.----
  10. கருணாநிதின்னு குழப்பாதீங்க.

  ReplyDelete
 6. 1) malaysia mariyathaa #1
  2) ethukku intha vilamparam?
  3) UK madhavan
  4) Oli FM Rj
  5)thalaivali thaane?
  6) ilayathalapathi
  7) Sridevi
  8) ..
  9) ..
  10) ..

  ReplyDelete
 7. இந்த அழுகுணி ஆட்டத்துக்கு நான் வரலை. அதுக்குள்ள நானானி அம்மா பேர் எடுத்துட்டு கீதாம்மா பேர் போட்டா எப்படி. இந்தக்கேள்விக்கு எனக்கு ட்ரிப்பிள் மார்க் தந்தாகணும் ஆமா

  ReplyDelete
 8. எலே ராமு! பதில் கொடுக்காம எனக்கே க்ளு கொடுத்தா எப்படி?

  மலேசியாவில் பல பேர் சாமியாடுவாங்க! அந்தப் பட்டப் பேரு ஒருத்தருக்கு மட்டுமா சொந்தம்? :)

  UK-vaa? avaru angiyaa irukaaru?

  6,7 seri!

  ReplyDelete
 9. சின்ன அம்மிணி அக்கோவ்!
  1. be more specific
  2,3,4,6,7,8 cheri
  5th kku choice maathiyaachu; (neenga chutti kaatiya athe vayasu difference thaan). so attempt again! :)

  =6/10

  ReplyDelete
 10. புதுகைத் தென்றல் யக்கா
  6,7 cheri
  =2/10

  என்னக்கா நீங்க! நம்ம பதிவர்-ங்க தானே! சும்மா அடிச்சி ஆடுங்க! :)

  ReplyDelete
 11. சரி, கேள்வி 5க்கு விடை கீதாம்மா

  ReplyDelete
 12. 1. துர்கா??

  ReplyDelete
 13. ஆஹா நானும் இருக்கேனா?!

  ReplyDelete
 14. grrr...

  malaysia mariyatha #1'nu thaane potturuthen... :)

  1)MM1 nna ungalukku theriyaatha, namma appavi sirumi thargha'nu..

  2) KRS'nu oru imsai

  3) G.Ragavan'nu oru nallavar... ??

  4) Shylasha

  5) Geetha

  ReplyDelete
 15. 1 இ) இம்சை அரசி
  2 இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்
  3 இ) மகரந்தம் - ஜி.ராகவன்
  4 ஈ) ஜோதிகா
  5 ஈ) ________________
  6 NOT KNOWN
  7 VSK
  8 NOT KNOWN
  9 therasa
  10 மு. கருணாநிதி (you have given the answer too HEE HEE)

  ReplyDelete
 16. // ILA said...
  இதுக்குத்தான் என்னோட latest போட்டாவை கேட்டீங்களா?
  //

  ithukkellam yaarum sirikka maattanga... :)

  ReplyDelete
 17. 1. மை ஃப்ரெண்ட்

  2. கே. ஆர்.எஸ்

  3. ராகவன்

  4. ஷைலஜா

  5. தெரியலை

  6.
  7. ஸ்ரீதேவி

  ReplyDelete
 18. சின்ன அம்மிணிக்கா
  1 cheri, 5 thavaRu
  =7/10

  எப்படிக்கா நீங்க மட்டும் எல்லாப் போட்டியிலும் முதலா வரீங்க? :)

  ReplyDelete
 19. 1. மாரியாத்தான்னு தெரியாது. ஆனா யாருன்னு தெரியலையே? :-)

  ReplyDelete
 20. ராமு...
  கிர்ர்ர் உனக்கும் தொத்திக்கிடுச்சா? :)

  1,2,3,4,6,7 cheri
  =6/10
  8 unga ooru! athula neeney thappu panna eppdi?

  சரி....
  அது என்ன நல்லவர்ன்னு போட்டு அப்பறம் ஒரு ???! நம்பு-ப்பா, என் நண்பன் நல்லவன் தேன்! :)
  சரி, &&&ன்னு ஒரு இம்சையா? இதுக்கு மட்டும் ??? எல்லாம் கிடையாதா? :)

  ReplyDelete
 21. சிவமுருகன்
  2,3,9 சரி!

  அது எப்படி இவிங்கள மட்டும் எல்லாரும் கரீட்டா கண்டு புடிக்கிறீங்க! மூஞ்சில எழுதி ஒட்டியிருக்கா என்ன? :)

  = 3/10

  ReplyDelete
 22. கண்டு புடிங்க டீச்சர், கண்டு புடிங்க! சந்திரிகா சோப் வெளம்பரம் வேணும்னா இன்னொரு முறை டிவி-ல பாத்துட்டு வாங்க! :)

  2,3,4,7 cheri
  =4/10

  ReplyDelete
 23. 5. சாய்சில இனி இருக்கறது வல்லியம்மாதான். புதுகைத்தென்றல் வயசில கொஞ்சம் சின்னவங்கன்னு நினைக்கறேன்.

  ReplyDelete
 24. //அப்பவே என்னா ஒரு மொறைப்பு? என்னா ஒரு வில்லத்தனம்?//

  எனக்கு அப்படி தெரியல்லையே..ஏதோ அப்பாவி பய புள்ளை பயந்து பார்க்குற மாதிரியே இருக்கு ;)

  ReplyDelete
 25. ///அப்பாவி லுக்கு! அடிப்பதோ பெக்கு!//
  clue தப்பு ;)
  இவருக்கு பால்தான் அந்த வயசுல இருந்து இந்த வயசு வரைக்கும் பெக்கா அடிப்பாராம் ;)

  ReplyDelete
 26. ராம் அண்ணாகிட்ட answer sheet கேட்டேன்.கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார்.காபி அடிக்க முடியாத புதிரில் நான் பதில் சொல்ல முடியாது :D

  ReplyDelete
 27. சரி....
  அது என்ன நல்லவர்ன்னு போட்டு அப்பறம் ஒரு ???! நம்பு-ப்பா, என் நண்பன் நல்லவன் தேன்! :)
  சரி, &&&ன்னு ஒரு இம்சையா? இதுக்கு மட்டும் ??? எல்லாம் கிடையாதா? :)//

  question mark's illenna confirmed'nu solla vanthen...

  5 thappa??

  ReplyDelete
 28. 1.துர்கா (பாட்டி)
  2.கேயாரெஸ் (அங்கிள்)
  3.ஜி.ராகவன்
  4.ஷைலஜா (அக்கா)
  5.துளசி (டீச்சர்)
  6.விஜய் (அண்ணா)
  7.ஸ்ரீதேவி (ஆன்ட்டி)

  அப்புறம் தெரில அங்கிள்..10 நாள் குழந்தைக்கு என்ன தெரியும்? :(

  ReplyDelete
 29. //இராம்/Raam said...
  question mark's illenna confirmed'nu solla vanthen...//

  அடப்பாவி! இதுக்கு என் பாசமிகு தங்கை, குட்டித் தேவதை, துர்கா-க்கே சப்போர்ட் பண்ணி இருப்பேனே! கவுத்திட்டியே தம்பி! :(

  //5 thappa??//

  yessu!
  athu romba kashtam! :)

  மக்களே,
  ஐந்தாம் கேள்வியில் உள்ள பதிவருக்கு அந்தக் கால Miss Blogன்னு பட்டம் கொடுக்கலாமா? என்னா சொல்றீங்க?

  ReplyDelete
 30. சின்னம்மிணிக்கோவ்!

  5thக்கு சாய்சில் ஒரு கோடிட்ட இடமும் இருக்கு! சந்திரிகா சோப் வாங்கி நிரப்புங்க! :)

  நீங்க அறிந்த பதிவர் தான்!
  விடை தெரிஞ்சா...வாட் எ சர்ப்ரைஸ்! பதிவுலகமே வாயைப் பொளக்கும்! :)))

  ReplyDelete
 31. வாங்க ரிஷான் அங்க்கிள்!

  அடங்கொக்க மக்கா!
  5thக்கு கரெக்டாப் பதில் சொல்லிப்புட்டியே! OMG! கொஸ்டின் பேப்பர் லீக்? :)

  1,2,3,4,5,6,7 cheri
  =7/10

  நீ பத்து நாள் குழந்தையா ரிஷான்?
  சரி சபைல சொல்லிட்டேன்! மக்கள் உன்னைய என்ன பண்றாங்களோ பண்ணட்டும்! பத்து நாள் கொழந்தைக்கு என்னென்ன ஊசி குத்தனம் மக்கா? :)

  ReplyDelete
 32. 1 ஆ) G3
  2 இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்
  3 இ) மகரந்தம் - ஜி.ராகவன்
  4 இ) ஷைலஜா
  5 அ) கீதா சாம்பசிவம்
  6
  7
  8 எம்.ஜி.ஆர்
  9
  10 நேரு

  ReplyDelete
 33. // துர்கா said...
  //அப்பவே என்னா ஒரு மொறைப்பு? என்னா ஒரு வில்லத்தனம்?//

  எனக்கு அப்படி தெரியல்லையே..ஏதோ அப்பாவி பய புள்ளை பயந்து பார்க்குற மாதிரியே இருக்கு ;)//

  புள்ள புடிக்கிற உனக்கு அப்படித் தாம்மா தெரியும்!
  தாய்மார்களே, அண்ணிகளே, அக்காக்களே! துர்கா-உஷார்! :))

  ReplyDelete
 34. 1- நான் கண்பார்மா இல்லங்கிற தைரியத்துல துர்கான்னு சொல்றேன். ஆனா, அந்த மாரியாத்தா க்ளூ மட்டும் கொடுக்கலைன்னா கண்டிப்பா என்னாலேயே பதில் சொல்ல்லியிருக்க முடியாது. :-)

  2- இது ஜி.ரா.. கண்ணை பார்த்தா அப்படித்தான் தெரியுது. ;-)

  3- கப்பியா?

  4- ஜோதிகா என்பது தப்புங்கிறதுனால ஷைலஜான்னு சொல்லிப்பார்க்கிறேன். ;-)

  5- கீதா சாம்பசிவம்

  6- க்ளூ வேணுமே?

  7- ஹாஹாஹா.. கேஆரெஸ்! நீங்களே!

  8- என்னமோ அரசியல் கேள்வி மாதிரி இருக்கு. பாஸ்.... :-)

  9- தெரியலையே

  10- தெரியலையே..

  ReplyDelete
 35. //துர்கா said...
  ///அப்பாவி லுக்கு! அடிப்பதோ பெக்கு!//
  clue தப்பு ;)
  இவருக்கு பால்தான் அந்த வயசுல இருந்து இந்த வயசு வரைக்கும் பெக்கா அடிப்பாராம் ;)//

  அடிப்பாவி! என்னமோ காபி-ல இவிங்க தான் பால் மிக்ஸ் பண்ணித் தந்தாப் போலச் சொல்லுறாங்க!

  ஆமா பால் தான்!
  கள்ளியிலும் பால்! :)
  கள்ளி மே தூத்! :))

  ReplyDelete
 36. என்னை நானே கரீக்ட்டா சொல்ல்லிட்டேன். :-))))

  ReplyDelete
 37. //துர்கா said...
  ராம் அண்ணாகிட்ட answer sheet கேட்டேன்.கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார்.//

  எங்க ராமு நல்லவன்! நியாயஸ்தன்! நேர்மையாளன்!

  //காபி அடிக்க முடியாத புதிரில் நான் பதில் சொல்ல முடியாது :D//

  நீ எதுக்கு ராசாத்தி காபி எல்லாம் அடிக்கற?
  வழக்கமா பீர் தானே அடிப்பே? :))

  ReplyDelete
 38. அறிவன் சார், நலமா?

  2,3,4 cheri
  8 & 10 = wowwwww! cheri! sooper!

  = 5/10

  ReplyDelete
 39. வல்லியம்மா ஐந்தாம் கேள்விக்குச் சரியான விடை சொல்லிட்டாங்கோஓஓஓஓஓஓஓ! :)

  ReplyDelete
 40. மைஃபிரெண்டு அக்கா
  ரெண்டாம் கேள்விக்கு என்னமா குசும்பு உங்களுக்கு? கண்ணைப் பாத்தா அவரை மாதிரியா இருக்கு? ஐயகோ! :)

  1&4 cheri! = 2/10

  6-kandu pudikka mudiaylaiyaa? omg! kannai nalla paarungoooo! sidduvai paatha kannu veru ethuvum paakatho? :))

  ReplyDelete
 41. மைஃபிரெண்டு அக்காஸ் பண்ணுற இந்தக் கொடுமையை நான் எங்கே போய் சொல்லி அழுவ? :(((

  7th-kku answer KRS nu cholluraanga!
  ithai thatti kekka en thangachi varuvaa irunga! :)

  ReplyDelete
 42. 2- இந்த அப்பாவி சிறுவன் நீங்கன்னு என்னால எப்படி சொல்ல் முடியும்? ஐயஹோ!!!!

  3- பிரபாவா? OMG!

  5-

  6- சிங்கப்பூர் சிங்கம்

  7- ரெண்டாவது பதில் தூக்கி இங்கே போடுறேன். நாங்கல்லாம் பரிட்சையில கூட இப்படி மாத்தி மாத்தி போட்டு மார்க் வாங்கினவங்க. ஜி.ரா..

  8- ஒபாமா

  9- க்ளூ?

  10- விவசாயி

  ReplyDelete
 43. 5- எண்ணங்கள் ப்ளாக் நடத்துறாங்களே.. அவங்கதானே?

  ReplyDelete
 44. அதென்ன சந்திரிகா சோப்?

  ReplyDelete
 45. //7th-kku answer KRS nu cholluraanga!
  ithai thatti kekka en thangachi varuvaa irunga! :) //


  நாங்க அப்படித்தான் சொல்லுவோம். நீங்கதான் கொஸ்டீன் பேப்பரை சரியா திருத்தணும். மனசுல ஆயி? ;-)

  ReplyDelete
 46. 5- சந்திரிக்க சோப்ப்புதான் க்ளூவா?
  சந்திரவதனா.. இவங்களா?

  ReplyDelete
 47. ரவி,சம்பந்தப்பட்ட முதல் மூன்று பேரையும் நான் நேரில் பார்க்காமலேயே சரியாக் கண்டுபிடிச்சுட்டேன்னு ரொம்ப அடக்கமா(!) சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 48. இடைவேளை BREEEEAAAAAAAAAAKKKK....

  ராமாயணா கதை என்னாச்சு? :-)

  ReplyDelete
 49. //1.சின்ன அம்மிணி//

  ஆஹா நானெப்ப மாரியாத்தா ஆனேன்

  ReplyDelete
 50. 5......யானைவரிசைக்கு சொந்தக்காரங்கமாதிரி இருக்கே பேர் ஆனா லிஸ்ட்ல இல்லையே!


  4..தெரியும்!!


  2..சாட்சாத் குழலூதும் பெருமானின் பெயரை அப்பா பெயர்ல கொண்டவர்

  ReplyDelete
 51. வணக்கம் மாம்ஸ்

  என் மொய்யை எழுதிடுறேன்

  1. G3 மொபைல்
  2. கண்ணபிரான் அடிகளார்
  3. ராகவேந்தன் ராகவன்
  4. அட சைலஜா அக்கா
  5. வல்லியம்மா
  6. யாருப்பா அசப்பில் விஜய் மாதிரி
  7. இவங்களை மாதிரி சிறீதேவின்னு ஒரு நடிகை இருந்தாங்க
  8. இவர் தளபாடக் கடை வச்சிருக்காரா? சாரி தெரியல
  9. ஆகா
  10. அண்ணான்னு அழைக்கட்டுமா

  ;-)

  ReplyDelete
 52. //நீ எதுக்கு ராசாத்தி காபி எல்லாம் அடிக்கற?
  வழக்கமா பீர் தானே அடிப்பே? :))//

  தோ பாருங்க இப்படி மொட்டையா சொல்லபிடாது..root beet,ginger beer இப்படி முழுசா சொல்லனும்.ஒரு கொழந்தை பீர் அடிக்கிதுன்னு சொல்லி டெமெஜ் பண்ணபிடாது..

  ReplyDelete
 53. //புள்ள புடிக்கிற உனக்கு அப்படித் தாம்மா தெரியும்!
  தாய்மார்களே, அண்ணிகளே, அக்காக்களே! துர்கா-உஷார்! :))//

  உங்களுக்கு பொறமை.அதான் அந்த படத்துல இருக்குற நிஜமான அப்பாவி சிறுவனை பார்த்து இப்படி எல்லாம் சொல்லுறீங்கன்னு சொல்ல வந்தேன் :)
  உண்மையை சொல்ல வந்த என்னை புள்ளை பிடிக்கிறவன்னு கதை கட்டி விட்டாச்சு.நல்லா இருங்கோ

  ReplyDelete
 54. //மை ஃபிரண்ட் ::. said...
  இடைவேளை BREEEEAAAAAAAAAAKKKK....//

  தூங்க வேணாமா ஜிஸ்டர்? :)

  //ராமாயணா கதை என்னாச்சு? :-)//

  துர்காவின் கொலை மிரட்டலுக்குப் பயந்து எழுதி வச்சதை வெளியிடாம இருக்கேன்! :(

  ReplyDelete
 55. @மைஃபிரண்ட் யக்கோவ்
  2 cheri; appavi chiruvan enpathu cheriyo cheri! =10/10:)

  6,7,8,9,10 = not bloggers! thalaivargal!

  5thkku ரொம்பவே கஷ்டப்படறீங்க! ஆனா அவிங்க ஒங்கூருக்குப் பக்கம் தான் எங்களை விட! :)

  ReplyDelete
 56. வாங்க காபி அண்ணாச்சி.
  உங்க மொய்யைக் கலெக்ட் பண்ணியாச்சே!

  Pathivargal 2,3,4 correetu!
  5th-la neenga thappu pannalaama?

  Thalaivargal-la 6,7 cheri
  =5/10

  8 theriyalai-yaa? nakeera, ennai nandraaga paar! :)

  ReplyDelete
 57. //இதுக்குத்தான் என்னோட latest போட்டாவை கேட்டீங்களா?//

  தெரிஞ்சி போச்சே! தெரிஞ்சி போச்சே! தெரிஞ்சி போச்சே!

  4 வது ஃபோட்டொ இளா!

  :)))))))))))))))))))))))))

  ReplyDelete
 58. 1 அ) மைஃபிரெண்ட்
  2 இ) மாதவிப் பந்தல் - கேஆரெஸ்
  3 இ) மகரந்தம் - ஜி.ராகவன்
  4 ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா
  5 அ) கீதா சாம்பசிவம்? ஒயில் என்ன பாருங்க? இந்த குருவி வால் மை இட்டதைப் பத்தி சொல்லிடணும்னு போட்டில கலந்துகிட்டேன்.
  6 கவிஜய்
  7 Sridevi
  8
  9. யாருன்னு படிச்சுருக்கேன், நினைவுக்கு வரலை....
  10

  ReplyDelete
 59. //Thalaivargal-la 6,7...// அளப்பறைக்கு அளவில்ல???????????????

  ReplyDelete
 60. ஐந்தாம் படத்துக்கு...
  கெ.பி அக்கா இன்னா சொல்றாங்கன்னா....

  ஒயில் என்ன பாருங்க?
  இந்த குருவி வால் மை இட்டதைப் பத்தி சொல்லிடணும்னு போட்டில கலந்துகிட்டேன்.

  ReplyDelete
 61. சிபி அண்ணே!
  மொதலே தப்பு!
  #1 - athukkaa wrong answer cholreenga? no way!
  =0/10
  :))

  ReplyDelete
 62. கெபி யக்கா
  pathivar la 2,3 correct
  thalaivar la 6,7 correct :)

  கீதாம்மா மேல உங்களுக்குக் கோவமா? குருவி வால் மை-ன்னு எல்லாம் சொல்றீங்க? :)))

  ReplyDelete
 63. ////1.சின்ன அம்மிணி//

  ஆஹா நானெப்ப மாரியாத்தா ஆனேன் //

  அது ரங்கமணிகளின் தீர்ப்பு:-))))))

  வீட்டுக்கு வீடு மாரியாத்தாக்கள்தானாம்:-)


  கெக்கேபிக்குணி.


  இந்த குருவி வாலில் 'வால்' மட்டும் ரைட்.

  மலையாளக் கரையோரம்......

  'வால் கண் எழுதி' ன்னு சொல்வாங்க:-)))))

  ReplyDelete
 64. பறவை மருத்துவர்= விஜய் (நடிகர்)

  ReplyDelete
 65. 10. மோதிலால் நேரு

  ReplyDelete
 66. 5. துளசி டீச்சரா இருக்குமோ.. ஆனா திருமண்ணுக்கு பதில் திருநீறு - குழப்புதே

  ReplyDelete
 67. @சின்ன அம்மிணி அக்கோவ்!
  கலக்கல்! கண்டு புடிச்சிட்டீங்க!

  //ஆனா திருமண்ணுக்கு பதில் திருநீறு - குழப்புதே//

  ஹா ஹா ஹா! அவிங்க என்னைய மாதிரி! நெத்தியில நாமம் இல்ல! ஆனாப் புத்தியில் இருக்கு! - இப்படித் தான் என்னை என் நண்பன் கேலி செய்வான்! :)

  ReplyDelete
 68. சின்ன அம்மணிக்கா!
  பத்தாம் விடை தப்பு! ஆனா லாஸ்ட் நேம் கரீட்டூ! :)

  ReplyDelete
 69. டீச்சர்,
  பறவை மருத்துவர் விடை சரி! அதுக்கா இம்புட்டு நேரம்? :))
  கொழந்த மூஞ்சிய பாருங்க! அது இன்னும் மாறவே இல்ல! :)

  ReplyDelete
 70. 1. இ) இம்சை அரசி
  4. ஆ) மனசுக்குள் மத்தாப்பு - திவ்யா
  5. ஆ) வல்லியம்மா

  ReplyDelete
 71. கெபி அக்கா
  1,4,5 மூனுமே தப்பு!
  பின்னூட்டம் படிச்சாலே அஞ்சு யாரு-ன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்! அவங்க வாசம் வேற பின்னூட்டம் ஃபுல்லா வீசுது! :)

  ReplyDelete
 72. துளசி டீச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்......... -5

  ReplyDelete
 73. இது வரை எதெல்லாம் நான் ரைட்டா சொல்லியிருக்கேன்னு ஒரு கணக்கு சொல்லுங்கண்ணோ..


  அப்புறம் பத்தாவது ஓபாமா இல்லையா? :-P

  ReplyDelete
 74. 9- அந்த பழைய காலத்து பாடகர்தானே?
  பேரெல்லாம் தெரியாது

  ReplyDelete
 75. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  இது வரை எதெல்லாம் நான் ரைட்டா சொல்லியிருக்கேன்னு ஒரு கணக்கு சொல்லுங்கண்ணோ..//

  அச்சோ...எல்லாருக்கும் சொன்னேனே! உனக்கு மட்டும் மிஸ்-ஆம்மா? இதோ: 1,2,5 cheri...
  =3/10 :))

  //அப்புறம் பத்தாவது ஓபாமா இல்லையா? :-P//

  ReplyDelete
 76. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //.:: மை ஃபிரண்ட் ::. said...
  இது வரை எதெல்லாம் நான் ரைட்டா சொல்லியிருக்கேன்னு ஒரு கணக்கு சொல்லுங்கண்ணோ..//

  அச்சோ...எல்லாருக்கும் சொன்னேனே! உனக்கு மட்டும் மிஸ்-ஆம்மா? இதோ: 1,2,5 cheri...
  =3/10 :))

  //அப்புறம் பத்தாவது ஓபாமா இல்லையா? :-P//

  நல்ல வேளை! அது ஜிரா-வா?-ன்னு கேக்காம இருந்தியே! என் நண்பனைக் காப்பாத்திய சந்தோசம்! :))

  ReplyDelete
 77. 10. ஜவஹர்லால் நேரு

  துளசி டீச்சர் நான் நேர்ல பாத்தப்ப திருமண் இட்டு , தசாவதாரம் அசினுக்கு போட்டியா பெருமாளே, பெருமாளேன்னு சொல்லிட்டிருந்தாங்க. அதில கொஞ்சம் ஏமாந்துட்டன்

  ReplyDelete
 78. This comment has been removed by the author.

  ReplyDelete
 79. துளசி டீச்சர் பதிவுல அவங்க ஆஸ்திரேலியா/நியூஸி திருமணமாகி போன புதிதுல எடுத்த ஃபோட்டோ போட்டுருந்தாங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைல்லைல்லைல்லைல்லைலைலைலைலை:-)

  கொடுக்கற போஸ், கண்மை எல்லாம் என் அம்மாவை நினைவுபடுத்தியது (அவுங்க கல்யாணம் ஆன புதிசுல எடுத்த ஃபோட்டோ, இப்பவும் அது வெளில வந்தா...:-)

  ReplyDelete
 80. விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
  மிக அதிகமான சரியான வடைகளைச் சுட்டவர் என்ற பெருமையைச் சின்ன அம்மிணி அக்கா, மற்றும் ரிஷான் அங்க்கிள் தட்டிச் செல்கின்றார்கள்! வாழ்த்துக்கள்-க்கா! வாழ்த்துக்கள் ரிஷான்! >>>>>>>>>>>>>>

  ரிஷுக்கு சி .அம்மிணிக்கும் மசால்வடைகள் சுட்டுத்தரப்படும் விடைகளை சொன்னதற்கு!!

  //(எப்படிக்கா இப்பிடி ஒரு அப்பாவி லுக்கு? அதான் பின்னலே இல்லைல? வெறும் கிரப்பு! அதுல எம்புட்டு பெரிய பூ! :))//

  ஹ்ஹா!! காதுல பூ தான தப்பு க்ராப்புல பூக்கு என்னப்பு?:)

  என்ன எப்டிக்கா அப்பாவி லுக்கா? அதுக்குப்பேரு கள்ளங்கபடம் அற்ற நிலை... மேலும் இதுபற்றி சொல்ல
  பெங்களூர் நாயகன் ராகவ் வருவாரு!!!!

  //ஷைலஜா அக்கா...இந்த மை பத்தி, எனி கமெண்ட்ஸ்? :)
  இது மை.பா இல்லை! இது வெறும் மை! :)

  //

  கண்ணுக்கு மை அழகு
  கண்ணபிரான் ரவிசங்கர் பதிவுக்கு கும்மி அழகு!!!!!


  இப்படிக்கு
  சந்திராய(ன்) சந்தோஷலஜா!

  ReplyDelete
 81. அஞ்சாவது கெஞ்சுனாலும் கிடைக்காது.

  தன்னிலை விளக்கம் ஒன்னு கொடுக்கலாமுன்னு.

  தோழி வீட்டுக்குப்போயிருந்தப்ப, அவுங்க வீட்டுக் கீழ்தளத்துலெ ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ புதுசா வந்துருந்துச்சு. ஓசியில் எடுக்கறோமுன்னு சொன்னதால் நானும் தோழியும் படம் எடுத்துக்கிட்டோம். தோழியோட அம்மாதான் விபூதி வச்சுவிட்டாங்க ரெண்டு பேருக்கும்.

  ரொம்பநாள் கழிச்சுத் தோழியுடன் சண்டை. எப்படிக் கோவத்தைக் காமிச்சேன்? 'ப்ளேடு' போட்டுத்தான்:-)

  ரெண்டுங்கெட்டான் வயசு. தாவணி புதுசு.


  தங்கத்தாரகை பட்டமெல்லாம் வேணாம். காசாக் கொடுத்துருங்க.
  ஹோப் ஃபவுண்டேஷனுக்கு:-)

  (ஜூனியர் மதர் தெரேசா)

  ReplyDelete
 82. துளசி கோபால் said...
  அஞ்சாவது கெஞ்சுனாலும் கிடைக்காது.

  தன்னிலை விளக்கம் ஒன்னு கொடுக்கலாமுன்னு.

  தோழி வீட்டுக்குப்போயிருந்தப்ப, அவுங்க வீட்டுக் கீழ்தளத்துலெ ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோ புதுசா வந்துருந்துச்சு. ஓசியில் எடுக்கறோமுன்னு சொன்னதால் நானும் தோழியும் படம் எடுத்துக்கிட்டோம். தோழியோட அம்மாதான் விபூதி வச்சுவிட்டாங்க ரெண்டு பேருக்கும்.

  ரொம்பநாள் கழிச்சுத் தோழியுடன் சண்டை. எப்படிக் கோவத்தைக் காமிச்சேன்? 'ப்ளேடு' போட்டுத்தான்:-)

  ரெண்டுங்கெட்டான் வயசு. தாவணி புதுசு.


  தங்கத்தாரகை பட்டமெல்லாம் வேணாம். காசாக் கொடுத்துருங்க.
  ஹோப் ஃபவுண்டேஷனுக்கு:-)

  (ஜூனியர் மதர் தெரேசா)

  3:19 AM, November 15, 2008

  >>>>>>>>>>>>>>>>>>>>கண்ணுபடப்போகுதுங்க,துளசிமேடம்..சுத்திப்
  போடணும் உங்களுக்கு....என்ன அழகு எத்தனை அழகு! கண்லகோபம் தெரிஞ்சாலும் கே ஆர் விஜயா மாதிரியே இருக்கீங்க!

  ReplyDelete
 83. பரிசு எல்லாம் ராம் அண்ணாகிட்ட கேட்டு வாங்கிக்கோங்க மக்கா ;)
  ராம் அண்ணா கொடுத்தா நானே கொடுத்த மாதிரி :))

  ReplyDelete
 84. //ஆடி வரும் நாயகி! பம்பை உடுக்கைத் தலைவி! பதிவுலக ஏஞ்செல் (அப்படிச் சொல்லலீன்னா, என் கதி அதோ கதி தான் :)//

  இது சொன்னதுக்கு உங்களை தனியா "பாசமாக" கவனிச்சுகுறேன் அண்ணா ;)

  ReplyDelete
 85. ரிஷான் மாதிரி கிழவன் எல்லாம் 10 வயசு குழந்தையா?இவரு எல்லாம் என்னை பாட்டின்னு சொல்லுறது கொடுமையா இருக்கு சாமீ

  ReplyDelete
 86. துர்கா said...
  ரிஷான் மாதிரி கிழவன் எல்லாம் 10 வயசு குழந்தையா?இவரு எல்லாம் என்னை பாட்டின்னு சொல்லுறது கொடுமையா இருக்கு சாமீ

  6:47 AM, November
  >>>>>>யாரும்மா இங்க ரிஷுக்குழந்தையை திட்றது?:)பாவம் தேமேன்னு பாலவனத்துல கிடக்குது அது...அந்த வெய்யில்லயும் கஷ்டப்பட்டு உங்கள(என்னை) கண்டுபிடிச்சி குழந்தை சொல்லி இருக்கென்னு சந்தோஷப்படாம....?:):):)

  ReplyDelete
 87. //>>>>>>யாரும்மா இங்க ரிஷுக்குழந்தையை திட்றது?:)பாவம் தேமேன்னு பாலவனத்துல கிடக்குது அது...அந்த வெய்யில்லயும் கஷ்டப்பட்டு உங்கள(என்னை) கண்டுபிடிச்சி குழந்தை சொல்லி இருக்கென்னு சந்தோஷப்படாம....?:):):)//

  அதானே ஷை அக்கா..
  இந்த கே.ஆர்.எஸ் அங்கிள் கூட பரிசு தர்றதாச் சொல்லிட்டு நைஸா எஸ்கேப் ஆகிட்டார்.

  அக்கா, அப்புறம் இந்த துர்கா பாட்டி சொன்னதை மனசுல வச்சுக்காதேள். அவாளுக்கு ஏற்கெனவே வயசாயிடுச்சோல்லியோ..? இப்ப கண்ணு தெரியல..காதும் கேட்கல. அதான் இப்படி பிராணன் வாங்குறது..:P

  ReplyDelete
 88. //தோழியோட அம்மாதான் விபூதி வச்சுவிட்டாங்க ரெண்டு பேருக்கும்.// கண்டதையும் கண்டு பயப்படாம இருக்க விபூதி பூசுவாங்க. உங்களுக்கு....? ஹிஹி!!

  இப்ப எங்கம்மா கிட்ட ஃபோன் பேசணும் போலிருக்கே!!!! இத்தனை தூரத்தில இருக்கேனே:-( அவ்வ்வ்வ்:-(

  ReplyDelete
 89. டீச்சர், உங்க போட்டோவுக்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
  நான் ஏதோ நீங்க இதை கோபால் சாருக்கு பொண்ணு பார்க்கக் கொடுத்த போட்டோன்னு நெனச்சிட்டேன்.. :)

  ஏன் டீச்சர், சினிமாவுல நடிக்க முயற்சிக்கல? :(

  ReplyDelete
 90. ரிஷான், துளசி டீச்சர் சினிமாவுக்கு நடிக்கப் போயிருந்தாங்கன்னா, அவங்க/நம்ம வாழ்க்கை போரடிச்சிருக்கும். இல்லியா?

  ReplyDelete
 91. வாங்க கெக்கேபிக்குணி,

  நீங்க சொல்றதும் சரிதான்.. ஆனா நடிச்சு முடிச்சு ஓய்ஞ்சு வயசான காலத்துல இப்ப எழுதுற மாதிரி நிறைய பதிவு எழுதிட்டுத்தான் இருப்பாங்க..
  என்ன ஒண்ணு..பதிவுகள்ல அநேகமா சினிமா பற்றியதா இருக்கும் ல..? :)

  ReplyDelete
 92. //// இதுக்குத்தான் என்னோட latest போட்டாவை கேட்டீங்களா?//
  கொஞ்சம் லேட்டா பதில் போட்டுக்கிறேன்:
  1. இளா

  ReplyDelete
 93. அது சரி, ரிஷான், கோபால் சாருக்கு யாரு ஆறுதல் சொல்லிருக்க முடியும்?

  ReplyDelete
 94. //அது சரி, ரிஷான், கோபால் சாருக்கு யாரு ஆறுதல் சொல்லிருக்க முடியும்?//

  அவரும் கூட ஹீரோ ஆகியிருக்கலாம் ல கெக்கேபிக்குணி? :)

  ReplyDelete
 95. // சின்ன அம்மிணி said...
  3. வில்லத்தனம் பண்ணறதுன்னா ஜிரா //

  சின்ன அம்மிணி.... இந்தப் பின்னூட்டத்த நீங்க போட்டீங்களா? இல்ல... உங்க ஐடியை யாராச்சும் திருடி.. ஒங்க பேர்ல பின்னூட்டம் போட்டாங்களா? ;)

  ReplyDelete
 96. இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் துர்காவைப் பாட்டி என்று அழைக்க.. பதிவினை இட்ட கே.ஆர்.எஸ் ஒப்புதல் கொடுத்துள்ளாரா? அப்படித் துர்கா அழைக்கப்பட அவருக்குச் சம்மதமா? சம்மதமில்லையெனில்... அதை ஏன் கண்டிக்கவில்லை. இந்தப் பதிவை இட்ட கே.ஆர்.எஸ் அதைத் தட்டிக் கேட்காததை நான் கண்டபடி கண்டிக்கிறேன். இதைக் காரணம் காட்டி... நானும் அன்புத் தங்கை துர்க்காவும் வெளிநடப்புச் செய்கிறோம்.

  ReplyDelete
 97. //G.Ragavan said...
  சின்ன அம்மிணி.... இந்தப் பின்னூட்டத்த நீங்க போட்டீங்களா? இல்ல... உங்க ஐடியை யாராச்சும் திருடி.. ஒங்க பேர்ல பின்னூட்டம் போட்டாங்களா? ;)//

  வெற்றி பெற்றவரை மிரட்டும் போக்காகவே இச்செயல் பார்க்கப்படுகிறது!
  Intimidating Voters & Winners will amount to severe prosecution - President Elect - Obama says! :)

  ReplyDelete
 98. //G.Ragavan said...
  இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் துர்காவைப் பாட்டி என்று அழைக்க.. பதிவினை இட்ட கே.ஆர்.எஸ் ஒப்புதல் கொடுத்துள்ளாரா?//

  All rights are reserved with the author not publisher! :)

  //நான் கண்டபடி கண்டிக்கிறேன்//

  மொதல்ல எல்லாம் கண்டபடி பேசுவீங்க!
  இப்போ கண்டபடி கண்டிக்கிறீங்களா?
  போச்சு! அந்தக் "கண்டபடியை" இன்னும் நீங்க விடலையா ராகவா? :)

  //நானும் அன்புத் தங்கை துர்க்காவும் வெளிநடப்புச் செய்கிறோம்//

  பயந்து ஓடிப் போறோம் அப்படிங்கறதை இப்படி எல்லாம் கூடச் சொல்லலாமா? வாவ்! இது தெரியாமப் போச்ச்சே! :)

  ReplyDelete
 99. //சின்ன அம்மிணி.... இந்தப் பின்னூட்டத்த நீங்க போட்டீங்களா? இல்ல... உங்க ஐடியை யாராச்சும் திருடி.. ஒங்க பேர்ல பின்னூட்டம் போட்டாங்களா? ;)// கோவிச்சுக்காதீங்க ஜிரா, கிருஷ்ணா முகுந்தா முராரே வரிகள கந்தா கடம்பா குமாரான்னு பாடும் பரம்பரைல வந்த நான் உங்கள அப்படி சொல்வேனா. இது கேஆர் எஸ் பண்ணின சதி.

  ஹையா , நானும் புதிர்ல பாஸு, பரவாயில்லையே, துளசி டீச்சரை தவிர யாரையும் நேர்ல பாத்ததில்லை.

  ReplyDelete
 100. இடுகையைப் போட்டவுடனே வந்து பாத்தப்ப ரெண்டு பதிவரை மட்டும் தான் தெரிஞ்சது. கிருஷ்ணையும் யார் என்று தெரிந்தது. இப்ப பதிலெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். :-)

  ReplyDelete
 101. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  2- இது ஜி.ரா.. கண்ணை பார்த்தா அப்படித்தான் தெரியுது. ;-)//

  ஐயகோ!
  மை ஃபிரண்ட் அக்கா இப்பிடிச் சொல்லிட்டாங்களே!
  என் கண்ணைப் பாத்தா ஜிரா கண்ணு மாதிரியா தெரியுது? அவ்வ்வ்வ்!

  ஒரு வேளை ஜிரா என் கண்ணுக்குள்ள வந்து கோபத்துல நோண்டுறாரா இருக்கும்! :)

  ReplyDelete
 102. //குமரன் (Kumaran) said...
  இடுகையைப் போட்டவுடனே வந்து பாத்தப்ப ரெண்டு பதிவரை மட்டும் தான் தெரிஞ்சது//

  யார் அந்த ரெண்டு பேரு குமரன்?

  //கிருஷ்ணையும் யார் என்று தெரிந்தது//

  கிருஷ்ணன் தான் ராகவனாம்! இப்படியும் ஒருத்தவுங்க சொல்லி இருக்காங்க! :)

  //இப்ப பதிலெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். :-)//

  இப்பல்லாம் புதிரா புனிதமா நீங்க ஆடுறதே இல்ல! பரிசு மேல பற்று போயிடிச்சி போல! :)

  ReplyDelete
 103. //சின்ன அம்மிணி said...
  கோவிச்சுக்காதீங்க ஜிரா, கிருஷ்ணா முகுந்தா முராரே வரிகள கந்தா கடம்பா குமாரான்னு பாடும் பரம்பரைல வந்த நான்//

  இது வரைக்கும் சரி!

  //உங்கள அப்படி சொல்வேனா. இது கேஆர் எஸ் பண்ணின சதி//

  அட ராமா! அட ராகவா!
  இதுக்கும் கேஆரெஸ் தலை தானா? யக்கா, நீங்களா உங்க தம்பியை இப்படிச் சொல்லுறது? :(

  //ஹையா , நானும் புதிர்ல பாஸு//

  பாஸூ இல்லை! முதலு! வெற்றிலு! :)

  //பரவாயில்லையே, துளசி டீச்சரை தவிர யாரையும் நேர்ல பாத்ததில்லை//

  டீச்சரை நேரில் பார்த்தும் கண்டுபுடிக்க அம்புட்டு நேரமா?
  திருமண், திருநீறு-ன்னு கன்ப்யூஷன் வேற! இது ஜிரா பண்ணிய சதி-ன்னு சொல்வீங்களே? :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP