புதிரா? புனிதமா?? - நாயன்மார்கள்!
அஞ்சலிப் பதிவென்பதால் வெற்றியாளர்-ன்னு யாரும் இல்லை!
சின்ன அம்மணி-க்கா தான் முதல் முயற்சியில் அதிகம் சொன்னது!
Followed by லோகன் & முகிலரசி! வாழ்த்துக்கள்!
வென்றார்க்கும், விளையாட்டில் நின்றார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நாயன்மார்களின் நல்லருள் இசையும்-தமிழும்-இறையும் ஓங்கட்டும்!
மக்கள்ஸ்! எப்படி இருக்கீக? புதிரா புனிதமா போட்டு ரொம்ப நாள் ஆச்சுது! மதுரை மீனாட்சி விழாவில் போட்டதோடு சரி! பதிவர் அல்லாத ரெண்டு மூனு பேரு இன்னிக்கி மின்னஞ்சல்-ல மெரட்டவே மெரட்டீட்டாங்க! போடறீங்களா இல்ல, உங்கள பத்தியே நாங்க புதிரா புனிதமா, போடட்டுமா?-ன்னு :)
இந்த அளவுக்கெல்லாம் விட்டா, அப்புறம் என் கதி அதோ கதி தான்! "அதோ" கதி என்று பெருமாள் மட்டுமே எனக்கு இப்பத்திக்குத் தாங்கலா இருக்காரு! அதுனால எந்த மறுபேச்சும் பேசாம, இதோ...புதிரா புனிதமா! இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! = நாயன்மார்கள்!
இன்று.....உள்ள உறுதி அதிகம் கொண்ட நாயன்மார் ஒருவரின் குருபூசை! ஆனி மாதம் ரேவதியில் (Jul-14-2009)!
இறைவனோடான தோழமை ஒருத்தருக்கு! தன் இச்சையான காதலுக்கும் இறைவனையே தூது அனுப்புகிறார்! ஆனால் தோழமையால் செய்தது "அந்த" இன்னொரு தொண்டருக்குப் புரியவே இல்லை.....உம்ம்ம்ம்.....புரிஞ்சிக்க மாட்டேன்-ன்னு அடம் பிடிக்கிறார்!
ச்சீ...ஈசனைத் தாழ்த்திப் பிறழ்த்தி விட்டாயே என்று ஒரு நினைப்பு!
தோழமை புரியவில்லை! எப்பமே இறைவனை உசரமான பீடத்தில் ஏற்றி வைத்தே பழக்கம் அல்லவா!
இதைப் புரிய வைக்க ஈசனும் விளையாடினார்! தீராத நோயைக் கொடுத்து, தோழன் தடவினால் நோய் தீரும் என்று சொன்னார்!
ஆனால் இவருக்கோ, "நோயே தீரலை-ன்னாலும் பரவாயில்ல! ஆனா அவன் மட்டும் வரவே வேணாம்!" :)
ஆனால் தம்பிரான் தோழரோ இந்த வெறுப்பைப் பொருட்படுத்தவில்லை! தன்னை வெறுத்தாலும், அடியவர் என்னும் பாசத்தால் அவர் இடத்துக்குச் செல்கிறார்!
இந்த "மாபாவி" சிவ வேடம் பூண்டு வருகிறானே, அவனை வரவேற்கணுமே என்ற வெறுப்பில், தன் சூலை நோயைத் தானே குத்திக் கொண்டு இறந்து போகிறார்!
தம்பிரான் தோழர் அரண்மனை வந்து, இந்தக் கோரக் காட்சியைக் கண்டு வெதும்பி, தன்னையும் மாய்த்துக் கொள்ள வாளெடுத்த போது,
ஈசன் அருளால், அந்த வெறுப்பாளர் பொறுப்பாளராய் உயிர் பெற்று எழ,
தம்பிரான் தோழரின் மாசில்லா அன்பைப் புரிந்து கொண்டு தழுவிக் கொள்கிறார்!
அந்த வெறுப்பாளரான பொறுப்பாளர் தான் ஏயர் கோன் கலிக்காமர்! அவரின் குரு பூசையே இன்று!
அதான் வாங்க ஆடுவோம், புதிரா புனிதமா! - நாயன்மார்கள்! விடைகள்: நாளை இரவு....நியூயார்க் நேரப் படி!
குறிப்பு: இந்தக் குரு பூசையின் போது.....
அடியேனின் மூத்தவரான, நம் ஆன்மீகச் செம்மல் குமரன்......அவர் தம் திருத் தகப்பனார்,
இறைத் திரு. நடராஜன் மல்லி சுந்தரராமன்
அவர்களின் மறைவுக்கு இந்தக் குருபூஜைப் பதிவைக் காணிக்கையாக்கி அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்!
தொடர்பான பதிவு இங்கே! பத்தாம் நாள் தேறுதல், தனிக் கதைப் பதிவாகவும் இடுகிறேன்! நாராயண நாராயண!
1 | அறுபத்து மூவருள், கால வரிசையால் வந்த முதல் நாயன்மார் யார்? அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்? | 1 |
2 | ஆழ்வார்களின் தலைவராகக் கருதப்படுபவர் வேளாளர் குல முதல்வரான நம்மாழ்வார்! நாயன்மார்களின் தலைவராகக் கருதப்படுபவர் யார்? | 2 |
3 | திருக்கைலாய வாசலில் உள்ளே நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட நாயனார் யார்? பின்னர் எந்த நாயன்மார் பரிந்துரையின் பேரில் உள்ளே நுழைய முடிந்தது? | 3 |
4 | சில பேருக்கு இறைவன் மேல் பிடிப்பு! ஒரு சிலருக்கோ பூஜா புனஸ்காரங்கள் மேல் பிடிப்பு! இறைவன் கண்ணில் ரத்தம் வந்தாலும் சற்றே வேடிக்கை பார்க்கக் கூட முடியும்! உடல் பதறாது! ஆனால் பூசைப் பொருள் களங்கமானால் மட்டும் மனம் பதறும்! - இது தான் கர்மப் பிடிப்பால் வரும் டேஞ்சர்! :)) கண்ணப்பரின் மாமிச பூசையைக் கண்டு கலங்கிய சிவபக்தர் பேர் என்ன? | 4 |
5 | நல்ல சைவக் குடும்பத்தில் பிறந்து, வைணவப் பதிவு போடும் பசங்களும் இருக்கானுங்க! :) | 5 |
6 | பிறவியிலேயே பார்வையற்ற நாயன்மார் யார்? இவர் தொண்டினைத் தடுத்து, இவரின் மண்வெட்டியைப் பிடுங்கிய சமணர்கள் பின்னர் பார்வை இழந்து, திருவாரூர் மன்னனால் ஊரை விட்டு நீக்கப்பட்டார்கள்! | 6 |
7 | "சற்றே விலகி இரும் பிள்ளாய்" - நந்தனாருக்காக நந்தியை விலகி இருக்கச் சொன்ன ஈசன் பெயர் என்ன? எந்தத் தலம்? | 7 |
8 | அறுபத்து மூவர் பட்டியலில் இந்த இரண்டு பேரும் இல்லை! அதிலும் முதலாமவர் இல்லாதது மிகப் பெரும் வியப்பு! ஆனால் இவர்கள் பாடியவை மட்டும் தேவாரத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன! யார் இவர்கள்? | 8 அ) மாணிக்கவாசகர்/ திருமூலர் |
9 | சமணர்/பவுத்தராய் இருந்து பின்னர் நாயன்மார் ஆன இந்த இருவர் யார்? | 9 |
10 | சங்கப் புலவர்கள் சிலரைப் பின்னாளில் "நைசாக" நாயன்மாராக ஆக்கவில்லை என்றாலும், அவர்கள் எழுதியதாகக் "கருதப்படும்" நூல்களை, தேவாரத் திருமுறைக்குள் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்! ஒரு சிலர், இவர்கள் சங்கப் புலவர்களே இல்லை! அதே பேர் கொண்ட வேறு புலவர்கள் என்றும் கூறுவார்கள்! | 10 |
கடைசியா ஒரு கேஆரெஸ் திருவிளையாடல்! பத்துக்கும் சரியான பதில் சொன்னாக் கூட, இந்த போனஸ் கேள்விக்கு மட்டும் நீங்க சரியான பதில் சொல்லலீன்னா, ஆள் மொத்தமாவே அவுட்டு! பரமபத விளையாட்டுக் கடைசீ நேரப் பாம்பு போல! என்ன ஓக்கேவா? :)
11. நந்தனாரை அவர் பேர் சொல்லி வரிசைப்படுத்தாமல், என்ன சிறப்புப் பெயரால், நாயன்மார் வரிசையில் வைத்துள்ளார்கள்? = திருநாளைப் போவார் நாயனார்
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 அ) திருநீலகண்டர்/ காரைக்கால் அம்மை ஆ) ஞானசம்பந்தர்/ திருநீலகண்டர் இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர் ஈ) தில்லை வாழ் அந்தணர்/ ஞான சம்பந்தர் |
2 அ) ஞானசம்பந்தர் ஆ) அப்பர் சுவாமிகள் இ) சுந்தரமூர்த்தி நாயனார் ஈ) மாணிக்கவாசகர் |
3 அ) ஒளவையார்/சுந்தரர் ஆ) மங்கையர்க்கரசி/ சம்பந்தர் இ) நந்தனார்/ தில்லை வாழ் அந்தணர் ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர் |
4 அ) ?/ சிவபாதசேகரர் ஆ) ?/ சிவ கோசரியார் இ) ?/ காளத்தியப்ப குருக்கள் ஈ) ?/ நமிநந்தியடிகள் |
5 அ) ஆனாய நாயனார் ஆ) கணம்புல்ல நாயனார் இ) சேரமான் பெருமாள் நாயனார் ஈ) காரி நாயனார் |
6 அ) முருக நாயனார் ஆ) தண்டியடிகள் இ) சுந்தரர் ஈ) எறிபத்த நாயனார் |
7 அ) நடராஜர்/ தில்லை ஆ) திருமூலநாதர்/ தில்லை இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர் ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர் |
8 அ) மாணிக்கவாசகர்/ திருமூலர் ஆ) சேரமான் பெருமாள்/ நக்கீரர் இ) சேந்தனார்/ இசை ஞானியார் ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார் |
9 அ) குலச்சிறை நாயனார்/ மெய்ப்பொருள் நாயனார் ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார் இ) அப்பர் சுவாமிகள்/ மெய்ப்பொருள் நாயனார் ஈ) திருமூலர்/ பூசலார் |
10 அ) நக்கீரர்/கபிலர் ஆ) கபிலர்/பரணர் இ) பரணர்/ காக்கைப் பாடினியார் ஈ) திருவள்ளுவர்/ நக்கீரர் |
11. நந்தனாரின் சிறப்புப் பெயர் = _____
1. இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர்
ReplyDelete2.ஆ) அப்பர் சுவாமிகள்
3. ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4. ஆ) திண்ணன்/ சிவகோச்சாரியார்
5.அ) 'ஆ'னாய நாயனார்
6. ஆ) தண்டியடிகள்
7.ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர்
8. கேள்வி கொஞ்சம் குழப்புது. .அ.அ) மாணிக்கவாசகர்/ திருமூலர் தான் விடைன்னு நினைக்கிறேன்.
9.ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்
10. அ) நக்கீரர்/கபிலர்
11. திருநாளைப்போவார்
@சின்ன அம்மிணி-க்கா!
ReplyDeleteவாங்க!
paambu question right-ey!
2,7,8,10 thappu!
=6/10 :)
எட்டாம் கேள்வி கொழப்புதா? வொய்?
பத்தாம் கேள்வி, மேற்கோள் குறி-ல்லாம் இருக்கு! ஒழுங்காப் படிக்கணும்! :)
7
ReplyDeleteஅ) நடராஜர்/ தில்லை
1 ஈ) தில்லை வாழ் அந்தணர்/ ஞான சம்பந்தர்
ReplyDelete2 ஆ) அப்பர் சுவாமிகள்
3 ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4 இ) ?/ காளத்தியப்ப குருக்கள்
5 அ) ஆனாய நாயனார்
6 அ) முருக நாயனார்
7 அ) நடராஜர்/ தில்லை ஆ) திருமூலநாதர்/ தில்லை இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர் ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர்
8 ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார்
9 ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்
10 :(
11. நந்தனாரின் சிறப்புப் பெயர் = திரு நாளை போவர்
@ chinna amminni-ka
ReplyDelete7 thappu ka! :)
kelvi format konjam chg panni irukken. see now for 8th & 10th :)
@லோகன்
ReplyDeletePaambu kelvi cheri
3,5,8,9 cheri!
= 4/10 :)
1)அறுபத்து மூவருள், கால வரிசையால் வந்த முதல் நாயன்மார் யார்? காரைக்கால் அம்மை
ReplyDeleteஅறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்? தில்லை வாழ் அந்தணர்
2) நாயன்மார்களின் தலைவராகக் கருதப்படுபவர் யார்? ஞானசம்பந்தர்
3) திருக்கைலாய வாசலில் உள்ளே நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட நாயனார் யார்?பின்னர் எந்த நாயனாரின் பரிந்துரையின் பேரில் உள்ளே நுழைய முடிந்தது? சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4) கண்ணப்ப நாயனாரின் உண்மையான பெயர் என்ன? திண்ணன்
கண்ணப்பரின் மாமிச பூசையைக் கண்டு கலங்கிய சிவபக்தர் பேர் என்ன? சிவகோசரியார்
5) கண்ணனைப் போல் புல்லாங்குழல் வாசித்து வாசித்தே துதித்தவர் - யார் இந்த நாயனார்? ஆனாய நாயனார்
6) பிறவியிலேயே பார்வையற்ற நாயனார் யார்? தண்டியடிகள்
7) நந்தனாருக்காக நந்தியை விலகி இருக்கச் சொன்ன ஈசன் பெயர் என்ன? எந்தத் தலம்? அம்பலவாணர்/ திருப்புன்கூர்
8) அறுபத்து மூவருள் இந்த இரண்டு பேரும் இல்லை! ஆனால் இவர்கள் பாடியவை தேவாரத் திருமுறையில் உள்ளன! யார் இவர்கள்? சேரமான் பெருமாள்/ நக்கீரர்
9) சமணர்/பவுத்தராய் இருந்து பின்னர் நாயன்மார் ஆன இந்த இருவர் யார்?
அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்
10) திருமுறையில் இடம் பெறும் இந்தப் "கருதப்படும்" புலவர்கள் யார்? நக்கீரர்/கபிலர்
நந்தனாரை அவர் பேர் சொல்லி வரிசைப்படுத்தாமல், என்ன சிறப்புப் பெயரால், நாயன்மார் வரிசையில் வைத்துள்ளார்கள்?
திருநாளைப் போவார்
தேவ்
@தேவ் சார்
ReplyDeletePaambu question cheriye
1,2,7,8,10 thappu.
=5/10 :)
ஓம் நமோலயே இருக்கேன் மூச்சு விடவேண்டாமா?:) நாராயணா என்னாச்சு? ஆழ்வார்கள் காத்திருக்கிறார்கள் நாயன்மார்கள் முந்திக்கொண்டார்கள்! சரி நானும் முத தடவையா இதுல கலந்துக்கப்பாக்கறேன்!
ReplyDeleteஉள்ளேன் ஐயா ;))
ReplyDelete1)இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர்
ReplyDelete2)ஈ) மாணிக்கவாசகர்
3)சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4)அ) சிவபாதசேகரர்
5)அ) ஆனாய நாயனார்
6)ஈ) எறிபத்த நாயனார்
7)இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர்
8)இ) சேந்தனார்/ இசை ஞானியார்
9) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்
10)நக்கீரர்/கபிலர்
11)thiru naalai poovaar
@திராச ஐயா
ReplyDeleteநலமா?
2,4,6,8,10 Thappu!
இன்னொருகா ஆடுங்க! :)
சற்றே விலகி இரும் பிள்ளாய் பதில் நீங்க சரியாச் சொல்லாம வேறு யாரு சொல்லுவா? கோபால கிருஷ்ண பாரதி பாட்டாச்சே! :)
மகிழ்ச்சி, மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிகம்.
ReplyDeleteகேள்விகள் சற்றுக் கடினமானவை.
இது போன்ற பரீக்ஷைகள் தேவைதான்.
நாம் எங்கு நிற்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
உங்களை சைவ வில்லிப்புத்தூரார்
என்று கூறலாம்.
தேவ்
தேவ்
//R.DEVARAJAN said...
ReplyDeleteமகிழ்ச்சி, மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிகம்.
கேள்விகள் சற்றுக் கடினமானவை//
ஆகா! தேவ் சாரே இப்படிச் சொன்னால் எப்படி? பந்தலில் பிட் ஈசியா அடிக்கலாமே? :)
http://madhavipanthal.blogspot.com/2008/12/63-or-72.html
//உங்களை சைவ வில்லிப்புத்தூரார்
என்று கூறலாம்//
ஹிஹி!
நான் யார் காதை அறுத்தேன்? ஐயகோ! :)
எம்பெருமான் கண்ணனுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் கண்ணன் கழல் கேஆரெஸ் ஆக இருக்கத் தான் அடியேனுக்கு பிடிச்சிருக்கு தேவ் சார்!
நாயன்மார்கள் "அடியவர்கள்" என்பதால் மிகவும் பிடிக்கும்! :)
//நான் யார் காதை அறுத்தேன்? ஐயகோ!//
ReplyDeleteஅடியேனிடம் இலேசாகத் தலை தூக்கிய செருக்கெனும் செவி அறுபட்டது;
அதனால் கூறினேன்.
தேவ்
//R.DEVARAJAN said...
ReplyDeleteஅடியேனிடம் இலேசாகத் தலை தூக்கிய செருக்கெனும் செவி அறுபட்டது; அதனால் கூறினேன்.//
ஹா ஹா ஹா
இதெல்லாம் ஒரு செருக்காகுமா தேவ் சார்? தங்களைப் போன்ற நல்லடியார்களை அது அண்டவும் அண்டாது!
"செருக்கிளரும்" பொன்னாழி கண்டேன்! புரிசங்கம் கைக் கண்டேன்! - என்னும் அந்தச் செருக்கா இருக்கும்! :)
கேள்விகள் என்னமோ ஈசி தான்! ஆனால் நான் தான் குழப்படியா செட் பண்ணி, வேணும்ன்னே குழப்பும் Options கொடுத்தேன்! :)
//பந்தலில் பிட் ஈசியா அடிக்கலாமே?// என்பதால் இன்னொரு முறை ப்ளீஸ்
ReplyDelete1 ஆ) ஞானசம்பந்தர்/ திருநீலகண்டர்
2 இ) சுந்தரமூர்த்தி நாயனார்
3 ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4 ஆ) திண்ணனார் / சிவகோச்சாரியார்
5 அ) ஆனாய நாயனார்
6 ஆ) தண்டியடிகள்
7 இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர்
8 ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார்
9 ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்
10 இ) பரணர்/ காக்கைப் பாடினியார்
11. நந்தனாரின் சிறப்புப் பெயர் = திரு நாளை போவர்
//Logan has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - நாயன்மார்கள்!":
ReplyDelete//பந்தலில் பிட் ஈசியா அடிக்கலாமே?// என்பதால் இன்னொரு முறை ப்ளீஸ்//
ada paavigala...naan chonnathai enakke-vaa? :)))
லோகன்
ReplyDelete1, 10 தவிர எல்லாமே சரி!
=8/10 :)
Ensoy maadi! :)
1.இ. காரைக்கால் அம்மையார்/திருநீலகண்டர். காரைக்காலம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார்; காலம் கிபி 300-500.
ReplyDelete2.அ. திருஞானசம்பந்தர்.
3.ஈ. சேரமான்பெருமாள்/சுந்தரர்.
4.ஆ. திண்ணனார்/சிவகோச்சாரியார்.
5.அ. ஆனாய நாயனார்.
6.ஆ. தண்டியடிகள்.
7.இ. சிவலோகநாதர்/திருப்புன்கூர்.
8.ஈ. மாணிக்கவாசகர்/சேந்தனார்.
9.ஆ. அப்பர்சுவாமிகள்/சாக்கிய நாயனார்.
10.இந்த கேள்விக்கான விடைதான் என்னை சற்று குழப்புகிறது.
நக்கீரர், கபிலர் மற்றும் பரணர் ஆகிய மூவரும் முறையே பத்து, மூன்று மற்றும் ஒரு நூலும் இயற்றியுள்ளனர். இவை அனைத்தும் பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் எந்த இருவரின் இணை சரியானது எனத் தெரியவில்லை. கேள்வியை சற்று விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்!
11. திருநாளை போவார் நாயனார்.
-முகிலரசிதமிழரசன்
10.ஈ) திருவள்ளுவர்/ நக்கீரர்
ReplyDelete7.இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர்
ReplyDeleteநல்ல வேளை நாலு ஆப்ஷன் தான் இருக்கு.
@முகில்
ReplyDeletepaambu kelvi cheri...
2,10 thavira ella pathilum cheri!
=8/10 :)
Jooperu!
சின்ன அம்மிணி-க்கா ரொம்பவே அழுவாச்சி ஆட்டம் ஆடுறாங்க! :))
ReplyDelete7 cheri, 10 thappu
= 7/10 :)
முகில் பத்தாம் கேள்விக்கு கொஞ்சம் விளக்கம் கேட்டிருக்காங்க!
ReplyDelete//அவர்கள் எழுதியதாகக் "கருதப்படும்" நூல்களை, தேவாரத் திருமுறைக்குள் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்
இந்தப் "கருதப்படும்" புலவர்கள் யார்?//
சங்கப் புலவர்களாகத் திருமுறையில் "காட்டப்படும்" இரண்டு பேர்!
ஆனால் அவர்கள் எழுதியது சங்கத் தமிழே அல்ல! பேர் மட்டும் ஒத்து இருந்து, அது போல் ஒரு எஃபெக்ட்டைத் தருகிறது!
யார் அந்த இருவர் என்பதே கேள்வி!
திருமுறையில் இது போன்ற குழப்பமான ஜோடனைகள் தேவையே இல்லை என்பது அடியேன் கருத்து மட்டுமே! அதை உரக்கச் சொன்னால், இங்கு ஒரு சிலரால் முத்திரை குத்தப்படுவேன்! :)
2.ஆ. அப்பர் சுவாமிகள்
ReplyDelete10.அ. நக்கீரர்/கபிலர்
-முகிலரசி தமிழரசன்
@முகில்
ReplyDeleteமீண்டும் 2,10 thappu! sorry! :))
10. ஆ. கபிலர்/பரணர்
ReplyDelete-முகிலரசி தமிழரசன்
ரிசல்ட் எப்போ?
ReplyDelete2. இ. சுந்தரமூர்த்தி நாயனார்.
ReplyDelete-முகிலரசி தமிழரசன்
சுந்தரமூர்த்தி நாயனார்தான் இரண்டாம் கேள்விக்கான விடை ;)
ReplyDelete-முகிலரசிதமிழரசன்
தமிழ்...சாரி...நேற்று தூங்கப் போயிட்டேன் போல...செம களைப்பு :)
ReplyDeleteஇதோ முடிவுகளைச் சொல்லிடறேன்! ஆனா நீங்க இத்தனை முறை அட்டெம்ப்ட் அடிச்சி அழுகாச்சி ஆட்டம் ஆடலாமா? :)
2,10 Cheriye
=10/10 :))))
10
ReplyDeleteசங்கப் புலவர்கள் சிலரைப் பின்னாளில் "நைசாக" நாயன்மாராக ஆக்கவில்லை என்றாலும், அவர்கள் எழுதியதாகக் "கருதப்படும்" நூல்களை, தேவாரத் திருமுறைக்குள் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்!
திருமுறையில் இடம் பெறும் இந்தப் "கருதப்படும்" புலவர்கள் யார்?
= கபிலர்/பரணர்
கபில தேவ நாயனார், பரண தேவ நாயனார் என்றும் இவர்களைக் குறிப்பிடுவார்கள்! ஆனால் இவர்கள் தான் சங்க காலக் கபிலரா/பரணரா? என்பதில் நிறையவே ஐயப்பாடுகள்!
இவர்கள் பாடியது பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது!
கபிலர் = சிவபெருமான் திரு அந்தாதி, இரட்டை மணி மாலை
பரணர் = சிவபெருமான் திரு அந்தாதி
அந்தாதி என்ற பாடல் வகையே சங்க காலத்தில் இல்லை! மேலும் கபிலர் இப்படியெல்லாம் ஈசனை அந்தாதிகளால் போற்றிப் பாடியது இல்லை! இது பிற்காலக் குழப்பமான சேர்க்கையே!
கேள்விக்கான தெரிவுகளில் நக்கீரரையும் கொடுத்து இருந்தேன்! அவர் பாடியதும் அதே பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது!
நக்கீரர் கயிலைபாதி காளத்திபாதி என்று பாடினாராம்! மும்மணிக்கோவை பாடினாராம்! பிற்காலக் கதையான கண்ணப்பரை எப்படிச் சங்க கால நக்கீரர் பாடுவார்? :)
ஆனால் இத்தனை குழப்பங்களுக்கிடையே "ஒரிஜினல்" நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை..அதையும் கொண்டாந்து பதினோராம் திருமுறையில் சேர்த்துள்ளார்கள்! :)
ஆனால் "ஒரிஜினல்" கபிலர்/பரணர் பாடல்களைச் சேர்க்கவில்லை! :)
அதனால் கேள்விக்கான விடை = கபிலர்/பரணர்
9
ReplyDeleteசமணர்/பவுத்தராய் இருந்து பின்னர் நாயன்மார் ஆன இந்த இருவர் யார்?
= அப்பர் சுவாமிகள்/சாக்கிய நாயனார்
அப்பர் சுவாமிகள் மருள் நீக்கியார் என்று சமணத்தில் இருந்தார். அக்காள் திலகவதியின் வேண்டுதலால், ஈசன் அருளால் மீண்டும் சைவம் சேர்ந்தார்.
சாக்கிய நாயனார் புத்த (சாக்கியம்) மதத்தில் இருந்து சைவம் வந்தார். ஆனாலும் புத்த மதச் சின்னங்களைக் கழற்றவில்லை! இதனால் பல பேர் இவரு கிட்ட கோச்சிக்கிட்டாங்க! இவரைக் கும்மி அடிச்சாங்க! :)
சிவலிங்கம் மேக் கல் எறிந்து வழிப்பட்டவரும் இவரே!
8
ReplyDeleteஅறுபத்து மூவர் பட்டியலில் இந்த இரண்டு பேரும் இல்லை! அதிலும் முதலாமவர் இல்லாதது மிகப் பெரும் வியப்பு! ஆனால் இவர்கள் பாடியவை மட்டும் தேவாரத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன! யார் இவர்கள்?
= மாணிக்க வாசகர்/சேந்தனார்
மற்ற மூவர் இருக்க, மாணிக்க வாசகர் அறுபத்து மூவருள் இல்லாதது பெரும் வியப்பே!
இத்தனைக்கும் பட்டியல் தொகுத்த காலத்துக்கு முந்தியவர்!
இது பற்றிய பதிவு இங்கே!
ஆனால் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8ஆம் திருமுறையில் வைக்கப்பட்டு இருக்கு!
சேந்தனார் நாயன்மார் பட்டியலில் இல்லை! ஆனால் அவர் பாடியது 9ஆம் திருமுறையில் வைக்கப்பட்டு இருக்கு! திருவிசைப்பா/திருப்பல்லாண்டு!
7.
ReplyDelete"சற்றே விலகி இரும் பிள்ளாய்" - நந்தனாருக்காக நந்தியை விலகி இருக்கச் சொன்ன ஈசன் பெயர் என்ன? எந்தத் தலம்?
= திருப்புன்கூர் என்ற தலத்தில் தான் நந்தனுக்காக நந்தி விலகியது!
அது சிதம்பரம் அல்ல!
திருப்புன்கூரில் இறைவன் பேரு சிவலோகநாதர்! அம்பலவாணர் அல்ல!
6
ReplyDeleteபிறவியிலேயே பார்வையற்ற நாயன்மார் யார்?
= தண்டி அடிகள்
திருவாரூர் குளத்தை இவர் தூர் வாரிய போது, ஆதிக்கத்தில் இருந்த சமணர்கள் மண்வெட்டியைப் பிடுங்கிக் கொள்ள, அரசன் தலையிட்டு, தண்டியின் சாபத்தால்(சூளுரையால்) சமணர்கள் கண் இழந்து வெளியேற வேண்டியதாகப் போயிற்று!
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு
ReplyDeleteசெய்து வரும் தவம் உடைய முனிவர் *சிவ கோசரியார்*
சிவகோச்சாரியார் தவறு.
தேவ்
நன்றி ரவி :)
ReplyDeleteதேவ் சொன்னது போல
//அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்? தில்லை வாழ் அந்தணர் //
சரி என்றே நினைக்கின்றேன்
"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்" என்று தானே சுந்தரர் பாடுகிறார்
//R.DEVARAJAN said...
ReplyDeleteமை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் *சிவ கோசரியார்*
சிவகோச்சாரியார் தவறு//
நன்றி தேவ் சார்.
பதிவில் சரி செய்து விடுகிறேன்!
கோபாலாச்சாரியார் போல் கோச்சாரியார்-ன்னு நினைச்சிட்டேன் போல! :)
ஆச்சார்யர் சரியா?
ஆசார்யர் சரியா?
//Logan said...
ReplyDeleteநன்றி ரவி :)//
anytime logan :)
//தேவ் சொன்னது போல
//அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்? தில்லை வாழ் அந்தணர் //
சரி என்றே நினைக்கின்றேன்
"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்" என்று தானே சுந்தரர் பாடுகிறார்//
தில்லை வாழ் அந்தணர் அறுபத்து மூவருள் இல்லை!
ஆனால் 72-இல் உள்ளார்கள்! :)
அதாச்சும் தொகையடியாராக!
நாயன்மார்கள் 63 or 72? என்ற பதிவைப் பாருங்களேன்! சுட்டி கொடுத்திருக்கேன் பாருங்க!
அதான் கேள்வியில் பூடகமா....
"***அறுபத்து மூவர்***" வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்?-ன்னு கேட்டு வைச்சேன்! :)))
Thanks, Just miss :)
ReplyDelete5
ReplyDelete//நல்ல சைவக் குடும்பத்தில் பிறந்து, வைணவப் பதிவு போடும் பசங்களும் இருக்கானுங்க! :)//
இவன் பேரை நீங்களே ஈசியாச் சொல்லீருவீங்க! அதுனால போட்டியில் வைக்கலை! :)
//இவரும் வைணவ ஆயர் குலத்தில் பிறந்து, சிவபிரானைத் துதித்தவர்! அதுவும் கண்ணனைப் போல் புல்லாங்குழல் வாசித்து வாசித்தே துதித்தவர் - யார் இந்த நாயன்மார்??/
ஆனாய நாயனார்!
காற்றில் ஆடும் கொன்றை மரமே ஜடா முடி விரித்தாடும் சிவபெருமானாத் தெரியுமாம் இவருக்கு! இவர் புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கிய உயிரினங்கள் பற்றி பெரிய புராணம் விரிவாகச் சொல்லும்!
4
ReplyDeleteநெற்றிக் கண்ணனுக்கே கண்ணீந்த கண்ணப்ப நாயனாரின் உண்மையான பெயர் என்ன?
= திண்ணன்.
பொதப்பி நாட்டில், உடுப்பூர் என்ற கிராமம் தான் நந்தனாரின் சொந்த ஊர். அப்பா பேரு நாகன். அம்மா பேரு தத்தை! அம்மாவும் நல்ல வில் வீராங்கனை வேட்டுவப் பெண் தான்!
கண்ணப்பரின் மாமிச பூசையைக் கண்டு கலங்கிய சிவபக்தர் பேர் என்ன?= சிவ கோசரியார்
இவர் திண்ணனின் அன்பை உணர்ந்து கொண்டார். சாஸ்திரப்படி பூசை மட்டுமே பக்தி அல்ல! இறைவனுக்கு ஒன்னுன்னா துடிப்பதே பக்தி...இறைவன் திரு உள்ள உகப்பு தான் முதலில்...அப்பறம் தான் மற்ற எல்லாம்...என்பதை சிவ கோசரியார் உணர்ந்து கொண்டார்.
3
ReplyDeleteதிருக்கைலாய வாசலில் உள்ளே நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட நாயனார் யார்?
= சேரமான் பெருமாள் நாயனார்! இவரைக் கழறிற்று அறிவார் நாயனார்-ன்னும் சொல்வார்கள்! ஈசன் சிலம்பொலி இவருக்குக் கேட்கும் என்பதால் கழறிற்று,(ஒலித்திற்று) அறிவார்!
திருவஞ்சிக்களம் என்னும் கேரளத் தலைநகரத்தில் ஆண்டு வந்த மன்னர் இவர்! தம்பிரான் தோழரின் தோழர்! திருக் கைலாய ஞான உலா பாடியவர்!
பின்னர் எந்த நாயன்மார் பரிந்துரையின் பேரில் உள்ளே நுழைய முடிந்தது?
= சுந்தர மூர்த்தி சுவாமிகள்!
என் முதல் பதிவே இந்தக் கதை தான்! :))
http://madhavipanthal.blogspot.com/2006/09/blog-post_115886389873412598.html
2
ReplyDeleteஆழ்வார்களின் தலைவராகக் கருதப்படுபவர் வேளாளர் குல முதல்வரான நம்மாழ்வார்!
நாயன்மார்களின் தலைவராகக் கருதப்படுபவர் யார்?
= சுந்தரர்
இவரே பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவர் (கதாநாயகர்)! :)
இவரை முன்னிட்டே, அனைத்து திருத்தொண்டர்களின் கதையையும் சேக்கிழார் பாடினார்! அதற்கும் இவரின் திருத்தொண்டத் தொகையே மூல நூல்!
* இவரின் அம்மா இசைஞானியார்
* இவரின் அப்பா சடையனார்
* இவரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனை அரையர் என்னும் வைணவ அரசர்...
இப்படி எல்லாருமே நாயன்மார் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்கள்!
1
ReplyDeleteஅறுபத்து மூவருள், கால வரிசையால் வந்த முதல் நாயன்மார் யார்?
= காரைக்கால் அம்மையார்! (புனிதவதி)
இவரைப் பற்றிய காரசாரமான பதிவே அடியேனுக்கு தமிழ்மண விருதினையும் பெற்றுத் தந்தது! :)
புனிதவதியை நினைத்தால், இன்னைக்கும் என் மனம் துடிக்கும்! Sometimes, I see myself in her :)
அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்?
= திருநீலகண்டர் (குயவனார்)
இன்னொரு திருநீலகண்டரும் (யாழ்ப்பாண நாயனார்) உள்ளார்! அதான் குயவனார் என்றும் சொன்னேன்!
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று முதலில் தொடங்கினாலும், தில்லை வாழ் அந்தணர் அறுபத்து மூவருள் இல்லை! ஆனால் 72-இல் உள்ளார்கள்! :) அதாச்சும் தொகையடியாராக!
எனவே அறுபத்து மூவருள் முதலில் சொல்லப்பட்டவர் திருநீலகண்டரே என்பது அடியேன் துணிபு! சரி தானே மக்கா?
आचार्यः - ஆசார்ய: - ஆசார்யர் (வைணவர் ‘ஆசார்யன்’ என்பர்) : ஒருமை
ReplyDeleteआचार्याः - ஆசார்யா: - ஆசார்யர்கள் : பன்மை
தமிழில் தற்போது தோன்றியபடி எழுதி வருகின்றனர்.
தேவ்
//ஆசார்ய: - ஆசார்யர் (வைணவர் ‘ஆசார்யன்’ என்பர்) : ஒருமை//
ReplyDeleteநன்றி தேவ் சார்!
//தமிழில் தற்போது தோன்றியபடி எழுதி வருகின்றனர்//
அடியேனும் "ச்" சேர்த்து ஆச்சார்யன் என்றே இது வரை எழுதி வருகிறேன்! இனி மாற்றிக் கொள்ள வேண்டும்!
ஆஹா ! ஒரு ரெண்டு மூணு நாளா வேலை ஜாஸ்தியா இருந்ததேன்னு லேட்டா வந்தா அதுக்குள்ள கேம் முடிஞ்சி போச்சே. :-(
ReplyDeleteபாம்பு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போறேன். திருநாளைப் போவார், சிதம்பர நடராஜனை தரிசக்க "நாளைக்கு போகலாம் நாளைக்கு போகலாம்" என்று நினைத்தே இப்பெயர் பெற்றார் என்று சொல்வர். தண்டபாணி தேசிகர் பாடல்களுடன் நந்தனார் படம் மிக அருமையாக இருக்கும்.
~
ராதா
//ஆனாய நாயனார் //
ReplyDeleteபடிக்கும் பொழுது ஒரு திருவாய்மொழி பாசுரம் நினைவிற்கு வருகிறது.
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தானானான் என்னில் தானாய சங்கே.
:-)
~
ராதா
"திண்ணன்" வர்ற மாதிரி ஒரு பாசுரம் ஞாபகத்துக்கு வருது. :-)
ReplyDelete// Radha said...
ReplyDelete"திண்ணன்" வர்ற மாதிரி ஒரு பாசுரம் ஞாபகத்துக்கு வருது. :-)//
என் வீக்னஸ் என்னான்னு தெரிஞ்சி வச்சிக்கிட்டு, நல்லா இப்படி கெளப்பிட்டு போயிடுவீங்களே! :)
என் கண்ணன் மொழியான மாறன் மொழியாச்சே! *திண்ணம்* நாரணமே!
*திண்ணன்* வீடு முதல் முழுதுமாய்,
எண்ணின் மீதியன் எம் பெருமான்
...
அப்பறம் சரியா ஞாபகம் இல்லை ராதா! கண்ணனே கண்ணல்ல-ன்னு வரும்ன்னு நினைக்கிறேன்!
//Radha said...
ReplyDelete//ஆனாய நாயனார் //
படிக்கும் பொழுது ஒரு திருவாய்மொழி பாசுரம் நினைவிற்கு வருகிறது.
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்//
ஹா ஹா ஹா
ஆனாயனைப் பாசுரத்தில் கண்ட எங்கள் ஆனாயர் ராதா வாழ்க வாழ்க! :)
//என் வீக்னஸ் என்னான்னு தெரிஞ்சி வச்சிக்கிட்டு, நல்லா இப்படி கெளப்பிட்டு போயிடுவீங்களே! :) //
ReplyDelete:)) முதல்லே "நந்தனார்" அப்படின்னே வரும் ஒரு பாசுரம் நினைவிற்கு வந்தது. :-)
//
என் கண்ணன் மொழியான மாறன் மொழியாச்சே! *திண்ணம்* நாரணமே!
*திண்ணன்* வீடு முதல் முழுதுமாய்,
எண்ணின் மீதியன் எம் பெருமான்
...
அப்பறம் சரியா ஞாபகம் இல்லை ராதா! கண்ணனே கண்ணல்ல-ன்னு வரும்ன்னு நினைக்கிறேன்!//
"அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்" அப்படின்னா சும்மாவா? சும்மா ஜோரா கலக்கிடீங்க. :-)
...
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண்ணல்லது இல்லை ஓர் கண்ணே.
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே !
இந்த பதிவுலயும் பாசுரங்களான்னு என்னை யாரவது வந்து ஒதைக்கரதுக்கு முன்னாடி ஜூட் விடறேன். :-)
~
ராதா
//Radha said...
ReplyDelete:)) முதல்லே "நந்தனார்" அப்படின்னே வரும் ஒரு பாசுரம் நினைவிற்கு வந்தது. :-)//
கோதில் இன் கனியை *நந்தனார்* களிற்றைக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத்
திருவல்லிக்கேணி கண்டேனே
ஹிஹி! நம்மூரு மெட்ராஸ் பாசுரம் நமக்குத் தெரியாதா ராதா? :)
//"அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்" அப்படின்னா சும்மாவா? சும்மா ஜோரா கலக்கிடீங்க. :-)//
அதெல்லாம் ஒரு ஸ்டாரும் இல்ல! சுவாதி ஸ்டார் தான்! :)
இதெல்லாம் இவிங்களா கெளப்பி விட்டது!
//இந்த பதிவுலயும் பாசுரங்களான்னு என்னை யாரவது வந்து ஒதைக்கரதுக்கு முன்னாடி ஜூட் விடறேன். :-)//
சைவப் பதிகங்கள் சிலவற்றைப் "பாசுரம்"-ன்னு சொல்வதும் வழக்கம் தான்! கவலைப்படாதீங்க! கும்மி எல்லாம் என் கிட்ட மட்டுமே அடிப்பாய்ங்க! :)
//ஷைலஜா said...
ReplyDeleteஓம் நமோலயே இருக்கேன் மூச்சு விடவேண்டாமா?:)//
ஓ...நீங்க அந்தப் பதிவிலா இன்னமும் இருக்கீங்க? என்னக்கா இது? நானே பிரேசில்-ல இருந்து திரும்பி வந்தாச்சு! நீங்க இன்னும் அங்கேயே இருக்கீக! :)
//நாராயணா என்னாச்சு?//
நாராயணா!
இப்பிடி எல்லாம் கேள்வி கேட்கச் சொல்லி அந்த ராகவ் பையன் சொன்னானாக்கா? :)
//ஆழ்வார்கள் காத்திருக்கிறார்கள் நாயன்மார்கள் முந்திக்கொண்டார்கள்! சரி நானும் முத தடவையா இதுல கலந்துக்கப்பாக்கறேன்!//
:)
ஆகா! ஆழ்வார்களை அடியேன் காக்க வைப்பேனோ?
அடியார்களில் ஆழ்வார், நாயன்மார் என்ற பேதமே எனக்கு கிடையாதுக்கா!
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ, இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//கோதில் இன் கனியை *நந்தனார்* களிற்றைக்
ReplyDeleteகுவலயத்தோர் தொழுது ஏத்தும்//
இதுக்கப்பறம் மூணு புள்ளி போட்டு மிச்சத்தை தட்டச்சு செஞ்சு இருக்கணும். :-)
//சாக்கிய நாயனார்...சிவலிங்கம் மேக் கல் எறிந்து வழிப்பட்டவரும் இவரே! //
கல்லால அடிச்சாங்க, வில்லால அடிச்சாங்க, காலால் உதைச்சாங்க, பிரம்பால அடிச்சாங்க, எச்சிலும் உமிழ்ந்தாங்க.....ஆஹா! தாய் தந்தை இல்லை ! அனாதையான இந்த அநாதனை கேட்பார் யாருமில்லை !! அதனாலே என்னப்பன் எல்லாருக்கும் ரொம்ப இளக்காரமா போயிட்டான்.
//அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்?
= திருநீலகண்டர் (குயவனார்)
இன்னொரு திருநீலகண்டரும் (யாழ்ப்பாண நாயனார்) உள்ளார்! //
திருத்தொண்டத்தொகை திருநீலகண்டரில் ஆரம்பித்து திருநீலகண்டரில் முடியும்.
அடுத்த முறை புதிர் போடும் பொழுது நேரமே வர பார்க்கறேன். :-)
~
ராதா
//ஆகா! ஆழ்வார்களை அடியேன் காக்க வைப்பேனோ?....
ReplyDeleteஅடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ, இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//
வாழ்க உம்முடைய அடியார் தொண்டு !
அடியார் சேவை அரங்கன் சேவைன்னு சும்மாவா சொன்னாங்க.
அரங்கனுக்கு செஞ்சா அடியார்க்கு போகும்னு சொல்ல முடியாது. ஆனா அடியார்க்கு செஞ்சா அரங்கனுக்கு செஞ்ச மாதிரி தான். :-)
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
~
ராதா
வணக்கம் திரு. கேயாரெஸ் அவர்களே!
ReplyDeleteமன்னிக்கவும்!! நான் இம்முறை விளக்கத்துடன் கூடிய விடைகளைத் தரவே நினைத்திருந்தேன்... ஆனால் நடுநிசியில் புதிர் விளையாடினதால அவசர அவசரமாய்ப் பதிலை மட்டும் எழுதவேண்டியதாயிற்று!! :((
திரு. குமரன் அவர்களின் திருத்தந்தையார் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்! :((
அடுத்த புதிர் விளையாட்டில் கண்டிப்பாக யாமறிந்த விளக்கங்களுடனேயே விடையளிக்க முயற்சிக்கிறோம்!!
தொடர்ந்து மூன்றாவது முறையாக புதிர் விளையாட்டில் அட்டம்ப்ட் அடித்து ;)) பத்துக்குப் பத்து வாங்கியிருக்கிறேன், என்பது குறிப்பிடத்தக்கது ன்னு நினைக்கிறேன்!! அதற்காக ''புதிரறிஞர் அண்ணா''வான
கேயாரெஸ் அவர்களுக்கு எங்களின் நன்றிகள் பல...
-முகிலரசி தமிழரசன்
இந்த இடுகை இட்டதற்கு மிக்க நன்றி இரவிசங்கர். எந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை. நல்ல வேளை நான் ஊரில் இல்லாத நேரமாகப் பார்த்து இதனை இட்டீர்கள். :-)
ReplyDelete//குமரன் (Kumaran) said...//
ReplyDeleteஎன்ன குமரன், அனைத்தும் செவ்வனே நிறைந்ததா?
மதுரைக்குப் போயும் பதிவா?
//இந்த இடுகை இட்டதற்கு மிக்க நன்றி இரவிசங்கர். எந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை.//
நம்பிட்டோம்! :)
//நல்ல வேளை நான் ஊரில் இல்லாத நேரமாகப் பார்த்து இதனை இட்டீர்கள். :-)//
அதனால் மற்றவர்களும் வெற்றிக் கனியைப் பறிக்க முடிந்தது! :)