"வைணவத் திமிர்" அடக்கிய முருகன் பாட்டு! - 1
என்ன மக்களே, எப்படி இருக்கீக? தலைப்பைப் பார்த்து என்னமோ ஏதோ-ன்னு பயந்து போயிறாதீங்க! ஒரு சிலர், மகிழ்ந்தும் போயிறாதீங்க :)))
யாருப்பா அது? யாரு திமிரை யாருப்பா அடக்கினாங்க? அது என்னா பாட்டு-ன்னு கேக்கறீங்களா மக்கா?
* அவர் ஒரு வைணவக் குடும்பத்தைச் சார்ந்தவர்!
* அவர் திமிரை அடக்கியது ஒரு சைவ அறிஞர்!
* அந்தப் பாட்டு ஒரு முருகப் பெருமான் பாட்டு!
ஆகா! சைவ அறிஞரா? வைணவத் திமிரா? கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே! மேல சொல்லு! மேல சொல்லு!
அதை நீயே வேற சொல்றியே கேஆரெஸ்? ஆகா! இப்ப தான் கோடைக்கு குளுமையா இருக்கு! :)
இந்த மாதிரி பதிவைத் தானே, நாங்க ஒரு க்ரூப், உன் கிட்ட இருந்து எதிர்பார்த்தோம்?
எப்பமே ஆழ்வார், வைணவம்-ன்னு பதிவு போட்டு "ஒசத்தியா காட்டினா" எப்படி? ஒன்னு, நீ அடக்கி வாசிக்கணும்! இல்லே எங்களையும் ஒசத்தியாக் காட்டணும்! :))
அதுக்காகத் தானே உன் கூட முன்னாடி சண்டையெல்லாம் போட்டோம்? ஆனா ஒன்னும் முடியலை-ன்னு விட்டுட்டோம்!
ஆகா! கொஞ்சம் லேட்டானாலும் இப்போ "திருந்திட்ட" போல இருக்கே! சொல்லு சொல்லு, சீக்கிரம் கதையைச் சொல்லு! :)))))

ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் உளமறிய ஒப்புக் கொண்டு, அதிலிருந்து நெஞ்சார மீண்டு, அகம் கரைந்த முருக பக்தர் = அருணகிரிநாதர்!
"காமமே" வாழ்க்கை என்று இருந்தவர் தான்,
"முருகன் காதலே" வாழ்க்கை என்றும் மாறினார்!
இன்று அருணகிரியார் குரு பூசை (July-06,2009)!
நினைவு நாள் = ஆனி மூலம்! அதை ஒட்டிய இரண்டு தொடர் பதிவுகள்! ஓக்கேவா? :)
சமயப் பூசல்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரி! ஆனாலும் அதில் முடிந்த அளவு சிக்கிக் கொள்ளாத தமிழ்ப் பெருமுனிவர்! எப்படி அவரால் மட்டும் இது முடிந்தது?
* ஏனென்றால் அவருக்கு நன்றாகத் தெரியும்...."அந்தப் பூசல்கள் எல்லாம் முருகனுக்காக அல்ல! முருகன் பேரைச் சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பாகத் திரிபவர்களுக்காக!"
* இறைவன் தானே நம்மைக் காப்பாற்றுபவன்? ஆனால், ஏதோ தாங்கள் தான் வாதிட்டு, "இறைவனையே காப்பாற்றுவதாக" எண்ணிக் கொள்ளும் போது தான், இத்தனை ஆட்டங்களும்!
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?
இறைவனை விற்று மதத்தைக் காப்பாற்றிய கதைகள் தான் இத்தனையும்!
தரையில் நடப்பவனுக்குத் தான் மேடு பள்ளங்கள்! விமானத்தில் பயணிக்கும் போது அல்லவே! அது போல் உயரப் பயணித்த அருணகிரிக்கு சமய மேடு பள்ளங்கள் தெரியவில்லை!
* அதனால் தான் திருப்புகழ் ஒவ்வொன்றன் முடிவிலும் அருணகிரியார் "பெருமாளே! பெருமாளே!" என்று அனுபவித்து முடித்தார்! - ஆகா! இது என்ன திருப்புகழா? இல்லை திருமால் புகழா?? :)
ஏன் இப்படி முருகனைப் போயி பெருமாளே-ன்னு முடிக்கணும்? முன் பின் கேட்டிராத ஒன்றாக அல்லவா இருக்கிறது? அந்த ரகசியத்தையும் அவர் வாயாலேயே அடுத்த பதிவில் பார்க்கப் போகிறோம்! :)

தென் பெண்ணை ஆறு பாயும் திருமுனைப்பாடி நாடு! அங்கு பிறந்தவர் தான் வில்லிபுத்தூரார் என்ற பெருங் கவிஞர்! வில்லிபாரதம் என்று தமிழில் மகாபாரதம் பாடியவர்!
ஆனால் அவரைத் திருத்தி அப்படி மகாபாரதம் பாட வைத்தவரே நம்ம அருணகிரி தான்! :)
அந்த 14-15 நூற்றாண்டுக் காலத்தில், சிற்றிலக்கியங்கள் பெருத்துப் போன காலம்! சும்மா தமிழும், கொஞ்சம் யாப்பும் கற்றிருந்தால் போதும்! உடனே "புலவர்"!
யாரு வேணும்-ன்னாலும் என்ன வேணும்-ன்னாலும் எழுதலாம்! அட என்னைய போல பைசா பெறாத திடீர் "பதிவர்"-ன்னு வச்சிக்குங்களேன்! திடீர் பதிவர் போல, திடீர் புலவர்! :)
கன்னித் தமிழை, மன்னனின் அந்தப்புர லீலைகளுக்கு எல்லாம் "உலா" எழுதி அடகு வைத்த காலம்-ன்னு கூடச் சொல்லலாம்! :)
இப்பேர்ப்பட்டவர்கள் கையில் சமயமும் தத்துவமும் சிக்கினால் என்ன ஆகும்? குரங்கு கையில் பூமாலை தான்!
ஆழ்வார்களும் நாயன்மார்களும் போற்றி வளர்த்த "தெய்வத் தமிழை", "சண்டைத் தமிழ்" ஆக்கிய பெரும் பெருமை, அந்தச் சிற்றிலக்கியக் காலத்துப் "புலவர்கள்" பலரைச் சாரும்! :(
தங்களுக்குள் ஏற்பட்ட உயர்வு தாழ்வுச் சண்டைகளுக்கு, சமயத்தைச் சூப்பர் கேடயமாகப் பயன்படுத்திய காலம்! சமயமும் தெரியாது, பக்தியும் தெரியாது!
ஆனால் எல்லாம் தெரிந்தது போல, செந்தமிழில் எதுகை மோனையோடு, அடுக்குத் தொடரில் பிச்சி வாங்கிய காலம்! "ஓண்டிக்கு ஒண்டி வரீயா?" என்பதை டீஜென்ட்டான தமிழில் கேட்ட காலம்! :)
வில்லிபுத்தூராரும் நெத்தியில ஒப்புக்கு நாமம் போட்டுக்கிட்டு, அப்படி ஒரு டைப்பாகத் தான் இருந்தாரு! :)
பெருமாள் பக்தியை விட, அவருக்குச் சைவ எதிரிகள் நிறைய! :))

மன்னனிடம் சென்று "காகைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை" ன்னு எல்லாம் தமிழில் விளையாட்டு காட்டுவாரு!
மன்னன் பரிசில் தந்தாலோ அதை மறுத்து, வித்தியாசமான பரிசு ஒன்றைப் பெற்றுக் கொண்டார்! = காது அறுக்கும் குறட்டு (கருவி)! :)
வாதம் செய்ய புலவர்களை அழைப்பார்! கையில் குறடு இருக்கும்! குறட்டைக் காதில் வைத்துக் கொண்டே வாதம் தொடங்கும்!
அவர் காட்டும் தில்லாலங்கடித் தமிழ் வித்தையில், பல பேர் மயங்கி விடுவார்கள்! இல்லை தோற்று விடுவார்கள்! உடனே...."சரக்க்க்க்க்"! ஒரு காது மட்டும்!
"எலே நீ தானே வில்லியிடம் வாதிட்டது?"-ன்னு கேட்டுப் பாருங்கள்! "காது காது" என்பார்கள்! தெலுங்கில் "இல்லை இல்லை"-ன்னு சொல்றாங்க-ன்னு நினைச்சிக்காதீங்க! :)
மெய்யாலுமே "காது காது" என்று தமிழில் தான் சொல்றாங்க! அப்படி ஒரு பீதி அலையைக் கெளப்பி இருந்தாரு நம்ம வில்லி என்கிற வில்லன் :))
ஆழ்வார்களின் சொற்களை அறியாது, சும்மானா தமிழை மட்டுமே நுனிப்புல் கணக்காக் கரைச்சிக் குடிச்சிட்டு, "மதம்" பிடிச்சி இருந்தாரு வில்லி ஐயா!
* "சமைத்து"ப் பக்குவப் படுத்துவது = சமயம்!
* "மதம்" பிடிக்கச் செய்வது = மதம்!
"அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ"-ன்னு அடியார்களைத் தானே முதலில் நிறுத்தி இருக்காங்க-ன்னு யோசிச்சிப் பார்க்க அவருக்கு நேரம் இல்லை!
இதனால் பெருமாளின் திருவுள்ளம் உகக்குமா?-ன்னு நினைச்சிப் பார்த்தா தானே? இவிங்க உவப்பே தான் சரியா இருக்கே இவிங்களுக்கு?!
பொதுவாக அந்தக் காலத்து வாதில் தோற்றவர்களை, கொடுமைப் படுத்துவதோ, கழுவில் ஏற்றுவதோ, கழுவில் ஏற விடுவதோ, வைணவ வரலாற்றில் மட்டும் 99.99% இல்லவே இல்லை என்பது வரலாற்று உண்மை!
பாகவதா-அபசாரம் என்னும் "அடியார் பழித்தல்", பகவானைப் பழித்தலை விடக் கொடிது என்பதே வைணவத்தின் முதன்மைக் கொள்கை! ஆனால் ஒரே ஒரு வில்லியின் காதறுத்த செயல் மட்டுமே விதிவிலக்கான விபரீதம்! தனக்கு அடங்காத வைணவப் புலவர்களையும் காது அறுத்துள்ளார் என்பது தான் இன்னும் வேடிக்கை! :((

திருமுனைப்பாடிக்குச் சென்ற அருணகிரியார், வைணவர் உட்பட பல தமிழ்ப் புலவர்களும் அஞ்சி நடுங்குவதைப் பார்த்தார்! வெறுமனே வாதம்-ன்னா அவரும் கண்டுக்காமல் போயிருப்பார்! ஆனால் இது காதறுக்கும் விபரீதமா-ல்ல இருக்கு? தமிழ் என்ன ஒருவரின் குலச் சொத்தா, ஏக போக உரிமை கொண்டாட?
சீத்தலைச் சாத்தனார் என்பவர் தான், பிறரின் தமிழ்த் தவறுகளுக்கு, தன்னைத் தானே குட்டிக் கொள்வார்-ன்னு சொல்லுவாய்ங்க! இங்கே எதிர்மறையா இல்ல நடக்குது?
வில்லியைத் தேடிச் சென்றார் அருணகிரி! வந்த அந்தக் கந்தவரையும் வாதுக்கு அழைத்தார் வில்லி!
குறட்டு உள்ள துரட்டியை அருணகிரியின் காதில் வைத்தார்! ஐயகோ! முருகனின் காதிலேயே துரட்டியா?
ஆனால் அருணகிரியோ, இது வரை யாருமே கேட்காததைக் கேட்டார்! - "எனக்கும் ஒரு துரட்டி கொடுங்க!" :)
அந்தாதியை வில்லி பாடுவது! அதற்கு அருணகிரி பொருள் சொல்ல வேணும்!
பொருள் சொல்லலீன்னா "சரக்க்க்க்க்" செய்யலாம்!
அதே போல் முறை மாற்றி, அருணகிரி பாட, வில்லி பொருள் சொல்லணும்!
அதான் ஆளுக்கு ஒரு காது தானே! இவரும் "சரக்க்க்க்க்" செய்யலாம்!
வில்லியும் ஒப்புக் கொண்டார். சபாஷ்.....சரியான போட்டி! :)
ஒருவர் காதில் இன்னொருவர் துரட்டி வைத்துக் கொண்டனர்! பல பாடல்கள் பிச்சிக்கிட்டு பறக்குது! எல்லாம் ஒரே எகனை மொகனை சீண்டல் பாடல்கள் தான்!
* தத்துவத்தை வாதம் செய்யுங்கடா-ன்னா, தத்து பித்து-ன்னா வாதம் செய்யறீங்க?
* கருத்தைக் கருத்தாகப் பாருங்கடா-ன்னா, கத்தி முனையா நடத்தறீங்க?
இதற்கு மேலும் வாதத்தை வளர்த்துச் செல்ல அருணகிரி விரும்பவில்லை! ஒரு பாடலைப் பாடிப் பொருளைக் கேட்டாரு!
அந்தப் பாடலில் அனைவருக்கும் செல்லமான எம்பெருமான் கண்ணபிரானையும் நடுவில் வைத்தாரு! அவ்ளோ தான்! ஆல் ஃப்ளாட்! :)
திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
ஹிஹி! என்ன மக்கா! எழுத்துக் கூட்டிச் சத்தமா, வாய் விட்டு ஒருகா படிங்க பார்ப்போம்!
மொதல்ல படிக்க நாக்கு வரணும்! அப்பறம் தானே பொருள் சொல்றது எல்லாம்?
அய்யோ! யாரு காது போச்சு? காது! காது!...(தொடரும்)

cant wait for second post, and plus andha murugan - kannan saayal picture super!
ReplyDeleteHey naandhaan first !!
This comment has been removed by the author.
ReplyDeleteவில்லிபுத்தூராரர் எனும் வைணவரின் திமிரை அடக்கிய முருகன் பாட்டுன்னு இருந்துருந்தா யாரும் பயப்படவும் மாட்டாங்க.. சிலர் மகிழ்ச்சியடையவும் மாட்டாங்க.. :)
ReplyDelete(போன தடவை ஸ்மைலி மிஸ்ஸிங்.. அதேன்.. :)
//இன்று அருணகிரியார் குரு பூசை (July-06,2009)! //
ReplyDeleteஅருணகிரிநாதரின் திருப்புகழில் இருந்தும் சில பாடல்களை கொடுங்கண்ணா..
//கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?
ReplyDeleteஇறைவனை விற்று மதத்தைக் காப்பாற்றிய கதைகள் தான் இத்தனையும்!//
திருப்புகழ் வரிகளா இவை ?
//ஏதோ தாங்கள் தான் வாதிட்டு, "இறைவனையே காப்பாற்றுவதாக" எண்ணிக் கொள்ளும் போது தான், இத்தனை ஆட்டங்களும்!//
ReplyDeleteரொம்ப ரொம்ப சரி..
//எழுத்துக் கூட்டிச் சத்தமா, வாய் விட்டு ஒருகா படிங்க பார்ப்போம்!//
ReplyDeleteபடிச்சேன்.. ஊர்ப்பக்கம் போயிட்டு வந்ததுல எனக்கு என்னமோ ஆயிருச்சு போலன்னு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்கச் சொல்லிட்டாங்க :)
ஓரிரு ஐயங்கள் 'டேய்' இரவி (ஐய்யா. உங்க தங்காச்சி வந்து சொல்றதுக்குள்ள நான் சொல்லிட்டேன். :-) )
ReplyDeleteவில்லிபுத்தூரார் காதறுத்தது வைணவ தத்துவங்களைக் கொண்டு வாதிட்டா இல்லை தமிழில் விளையாடியா? வைணவ தத்துவங்களைக் கொண்டு வாதிட்டார் என்றால் இங்கே வைணவர் என்பதை முதன்மைப்படுத்தலாம்; அவர் தமிழை விளையாட்டு மட்டுமே விளையாடினார் என்றால் இங்கே அவர் நாமம் போட்டதை விட அவருடைய தமிழ்ப்புலமையின் கருவமே முதன்மையாக இருக்கிறது என்று எண்ணுகிறேன். அதனால் தான் வைணவர்களின் காதையும் அறுத்தார். சும்மா பதிவின் தலைப்பிற்காக இப்படி எழுதிவிட்டீர்கள் என்று எண்ணிக் கொள்கிறேன். :-)
99.99% நேரம் வைணவர்கள் வாதத்தில் தோற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தானா? ஏனோ மனத்தில் ஐயமாகவே இருக்கிறது.
//
ReplyDeleteதிதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
//
:) apparently you are the first one to have brought this song to the internet. congrats !:)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஓரிரு ஐயங்கள் 'டேய்' இரவி (ஐய்யா. உங்க தங்காச்சி வந்து சொல்றதுக்குள்ள நான் சொல்லிட்டேன். :-) )//
என்னா ஒரு திட்டம்? என்னா ஒரு சிரிப்பு? :)
//வில்லிபுத்தூரார் காதறுத்தது வைணவ தத்துவங்களைக் கொண்டு வாதிட்டா இல்லை தமிழில் விளையாடியா?//
இரண்டுமே!
வைணவத் தத்துவம்-ன்னு சொல்ல மாட்டேன்!
ஆனால் வைணவ "மேன்மை" பற்றியும் வாதில் பேசுவார்! அதுக்கு மற்றவர்களை எல்லாம் தரை ரேஞ்சுக்கு இகழ்ந்து, தமிழில் அழகாக எகத்தாளமும் செய்வார்! :)
"பிரபந்தம்" என்பதை "பிற-பந்தம்" எல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று இன்று ஒரு சிலர் பேசுவதில்லையா? அதைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்! :))
//சும்மா பதிவின் தலைப்பிற்காக இப்படி எழுதிவிட்டீர்கள் என்று எண்ணிக் கொள்கிறேன். :-)//
ஹிஹி! eki! osi! ennaiya poyi ippdi ninachiteengaleeeyyyyyyy :))
//99.99% நேரம் வைணவர்கள் வாதத்தில் தோற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தானா? ஏனோ மனத்தில் ஐயமாகவே இருக்கிறது//
ஹிஹி!
என்ன ஐயம் குமரன்?
நான் சொல்லவில்லை! வரலாற்று ஆசிரியர்கள் இராசமாணிக்கனார், நாகசாமி போன்ற இன்ன பலரும் பேசுகிறார்கள்!
சமணர்களைக் கூண்டோடு கழுவில் ஏற்றியதோ, பெளத்தர் முழைகளை அழித்ததோ என்பன போன்ற செயல்கள் ஏதும் வைணவ வரலாற்றில் இருப்பதாகத் தெரியவில்லை!
மேலும் அங்கேயே மல்லு கட்டி, ரத்தக் களரிச் சண்டைக்கு நிற்காமல், வேறு ஒரு இடத்தில் ஆலயம் தேடிக் கொண்ட வழக்கம் தான் நிறைய!
//Radha said...
ReplyDelete:) apparently you are the first one to have brought this song to the internet. congrats !:)//
No No! Giridhari! :)
I cant take the credit!
அதான் சொன்னேனே, கந்தர் அந்தாதிப் பாடல்-ன்னு! கண்டிப்பா முருகன் தளங்களில் இருக்கும்!இந்தாங்க!
http://www.kaumaram.com/anthathi/nat_054.html
// Srivats said...
ReplyDeletecant wait for second post, and plus andha murugan - kannan saayal picture super!//
அந்தப் படத்தை வேணும்-ன்னு தான் போட்டேன் ஸ்ரீ! :)
//Hey naandhaan first !!//
ஹிஹி! இது என்ன கொழந்தையாட்டம்? :)
//Comment deleted
ReplyDeleteThis post has been removed by the author.//
நன்றி இராகவ்! :)
// Raghav said...
ReplyDeleteவில்லிபுத்தூராரர் எனும் வைணவரின் திமிரை அடக்கிய முருகன் பாட்டுன்னு இருந்துருந்தா...
யாரும் பயப்படவும் மாட்டாங்க.. சிலர் மகிழ்ச்சியடையவும் மாட்டாங்க.. :)//
ஹா ஹா ஹா! ஆனா அதுக்குன்னு இவ்ளோ பெரிய தலைப்பை வைக்க முடியாதுங்களே ராகவ் ஐயா! :)
//Raghav said...
ReplyDelete//இன்று அருணகிரியார் குரு பூசை (July-06,2009)! //
அருணகிரிநாதரின் திருப்புகழில் இருந்தும் சில பாடல்களை கொடுங்கண்ணா...//
அதான் கந்தர் அந்தாதி பாட்டு கொடுத்து இருக்கேனே ராகவ்!
திருப்புகழ் விருந்து எல்லாம் எங்க இராகவன் வந்து தான் தருவான்! :)
SK ஐயாவும் தருவாரு!
Raghav said...
ReplyDelete//கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?
இறைவனை விற்று மதத்தைக் காப்பாற்றிய கதைகள் தான் இத்தனையும்!//
திருப்புகழ் வரிகளா இவை ?//
என்ன நக்கலா? :))
முதல் வரி - பாரதியார்
ரெண்டாம் வரி - அடியேன்! :)
//Raghav said...
ReplyDeleteபடிச்சேன்.. ஊர்ப்பக்கம் போயிட்டு வந்ததுல எனக்கு என்னமோ ஆயிருச்சு போலன்னு வீட்டுக்கு போய் ஓய்வெடுக்கச் சொல்லிட்டாங்க :)//
ஆனா இதுக்கெல்லாம் எங்க சிங்கம், குமரன் அசர மாட்டாரு!
பதம் பிரிச்சி ஒவ்வொன்னாச் சொல்லுவாரு, பாருங்க! :)
you can still take the credit if i were to add "in tamizh unicode" and "along with its wonderful meaning." :)
ReplyDeletei was going through a lot of your posts...
K.R.S = King of Research in Spirituality.
அட ! என்ன திடீர்னு ஒரே சத்தம் கேக்குது ! பட்டாசு சத்தம், தாரை தப்பட்டைன்னு பட்டய கெளப்பற மாதிரி இருக்கே ! அட ! அதோ ராகவ் மாதிரி இருக்கு ! அவரோட ஒரு கும்பலே வருதே ! ஏதோ பாட்டு கூட பாடிட்டு வர்ற மாதிரி இருக்கே..."கிங் டா ! அண்ணன் கிங் டா !" அப்படின்னு எல்லாம் பாடிட்டு வராங்க. K.R.S ஸ்டைல்-ஆக முன்னாடி நடந்து வர குமரன் எதிர்த்தாற்போல ஒரு பெருமிதத்தோட பார்த்துட்டு நிக்கறார். :)
(சும்மாவாச்சும் யாரையாவது வம்புக்கு இழுத்து ரொம்ப நாள் ஆச்சு ! :))
keep the good work going...waiting for the next post.
~
Radha
//Radha said...
ReplyDeletei was going through a lot of your posts...
K.R.S = King of Research in Spirituality//
என்னைய வச்சி நீங்க காமெடி கீமெடி எதுவும் பண்னலையே? :)
இதுக்கு KRS=Krishna Raja Saagar-ன்னு சொல்லி இருந்தாக் கூட, சரி ஏதோ காவிரி அணையா இருந்துட்டுப் போயிருப்பேன்! அவன் பேரை என்னோடு ஒட்டி வைச்சிக்கிட்டு :))
//அதோ ராகவ் மாதிரி இருக்கு ! அவரோட ஒரு கும்பலே வருதே ! ஏதோ பாட்டு கூட பாடிட்டு வர்ற மாதிரி இருக்கே..."கிங் டா ! அண்ணன் கிங் டா !" அப்படின்னு எல்லாம் பாடிட்டு வராங்க. K.R.S ஸ்டைல்-ஆக முன்னாடி நடந்து வர குமரன் எதிர்த்தாற்போல ஒரு பெருமிதத்தோட பார்த்துட்டு நிக்கறார். :)//
ஹா ஹா ஹா
அபார கற்பனை வளம் உமக்கு கிரிதாரி! ராகவ் இதெல்லாம் வேற பண்ணுறானா? :)
என்னாது? குமரன் எதுத்தாப்பல நிக்குறாரா? நானே அண்ணன் குமரன் காலடியில் இருக்கேன்!
அடியேன் காலடி சங்கரன்! :)
//திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
ReplyDeleteதிதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
//
aww ennake peche varalai anna ithula ithu ellam padikanuma :((
//ஓரிரு ஐயங்கள் 'டேய்' இரவி (ஐய்யா. உங்க தங்காச்சி வந்து சொல்றதுக்குள்ள நான் சொல்லிட்டேன். :-) ) //
ReplyDeletekumarannnnnnnnnn sirrrrrrrrr vendam solliten...
அப்படியே மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள் KRS ஐயா. ஒவ்வோரு பதிவிற்க்காகவும் எவ்வளவு நேரம் துழாவுகின்றீர்(search) செய்கின்றீர்களோ? அருணகிரிநாதர் தபால் தலை அருமை அருமை. வளர்க தங்கள் தொண்டு,
ReplyDelete