Thursday, December 11, 2008

புதிரா? புனிதமா?? - அம்மன் பாட்டு 100!

விடைகள் போட்டாச்சே! (Dec-12, 11:40 pm)

கெபி அக்காவின் வேண்டுகோளைச் சிரம் மேல் கொண்டு, ஒரு நாள் நீட்டிப்புக்குப் பின், இதோ விடைகள்! கீழே போல்ட் செய்யப்பட்டுள்ளன!

வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும்.....அம்மன் பாட்டு குழுப்பதிவின் சார்பாக வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! விடைகளுக்கான விளக்கங்கள், அம்மன் அன்பர்கள் ஆரேனும் வந்து தர வேணுமாய் கேட்டுக்கறேன்!

வின்னர்களா?
1. கெக்கேபிக்குணி = 7/10
2. குமரன், மணிபாண்டி = 6/10

வாழ்த்துக்கள் வின்னர்களே! அம்மன் பாட்டு மன்னர்களே! :)


மக்கள்ஸ்! இன்று அம்மன் பாட்டு வலைப்பூவின் 100வது பதிவை முன்னிட்டு ஒரு "சிறப்புப்" புதிரா? புனிதமா?? அம்மன் கேள்விகள் + கோலிவுட் கேள்விகள்! கேஆர் விஜயா, ரம்யா கிருஷ்ணன், இன்னும் யாரெல்லாம் அம்மன் வேசம் கட்டுனாங்க? யோஜிங்க மக்கா யோஜிங்க!

அப்படியே அம்மன் பாட்டு-100 பதிவுக்குப் போய் ஒரு எட்டு எட்டிப் பாருங்க!
ஜனனி ஜனனி இஷ்டைலில் இளையராஜா போல ஒரு இளையராஜியும் SKவும் பாடுறாங்க!
பாட்டைக் கேட்டுக்கிட்டே குவிஜ் ஆடுங்க மக்கா! புதிரா புனிதமா ஆடுவமா? விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!
Happy Birthday ராபின்ஹூட் ஆழ்வார்!!


1

பண்டைத் தமிழ் இலக்கியங்களில், அம்மன், கொற்றவை என்று பேசப்படுகிறாள்! கொற்றம்=வெற்றி; எனினும் கொற்றவை என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் சேயோன்/மாயோன் போல அவ்வளவு அதிகம் இல்லை! தொல்காப்பியரும் நிலம்/திணைகளில் அவளை வைக்காது, உட்பிரிவான துறை ஒன்றில் மட்டும் கொற்றவை நிலை என்று வைக்கிறார்!

ஆனால் சிலப்பதிகார கால கட்டத்தில் தான் கொற்றவை வழிபாடு பற்றி அதிக தகவல்கள் கிடைக்கின்றன. சிலம்பில், கொற்றவை பூசை பற்றிய பாடல் எது?

1

அ) கொற்றவை வரி

ஆ) குரவை வரி

இ) வேட்டுவ வரி

ஈ) கானல் வரி

2

தட்சன் செய்த யாகத்தில், அவமதிப்புக்கு உள்ளான அன்னை தாட்சாயிணி உயிரை நீத்தாள். பின்னர் இமவான் மகளான பார்வதியாய்ப் பிறந்து ஈசனைச் சேர்ந்தாள்.

கோபம் கொண்ட ஈசன் தன் தலை மயிரைப் பிளந்து இருவரை உண்டாக்க, அவர்கள் தட்ச யாகத்தை அழித்தார்கள்! அவர்கள் யார்?

2

அ) சண்டிகேஸ்வரன்/ பத்ரகாளி

ஆ) வீரபத்ரன்/பத்ரகாளி

இ) ருத்ரகாளி/வீரபத்ரன்

ஈ) வீரபாகு/வீரபத்ரன்

3

தாய் மூகாம்பிகை படத்தில், இளையராஜா உருகி உருகிப் பாடும் ஜனனி ஜனனி பாடலை எழுதியது யார்? பாடல் எந்தத் தலத்தைக் குறிக்கிறது?

3

அ) வாலி-கொல்லூர்

ஆ) இளையராஜா-சிருங்கேரி

இ) வாலி-சிருங்கேரி

ஈ) இளையராஜா-கொல்லூர்

4

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்! - இந்தப் பாடல் எல்லாருக்கும் தெரியும்!

இதை எழுதிய இசை மேதை யார்? யாருக்காகப் பாடிக் காட்டி எழுதினார்?

4

அ) பாபநாசம் சிவன்/தியாகராஜ பாகவதர்

ஆ) கண்ண தாசன்/குன்னக்குடி வைத்தியநாதம்

இ) யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்/ பாபநாசம் சிவன்

ஈ) பாபநாசம் சிவன்/பெ.தூரன்

5

கேஆர் விஜயா அம்மனா நடிச்ச படம் எது-ன்னு கேட்டா, அடிக்க வருவீங்க! :) அது என்னமோ, அவிங்க மட்டும் அப்போ அம்மன் வேடத்துக்கு ஈசியா செட் ஆயிட்டாங்க!

நாகேஷ் பூசாரியாய் நடிக்க, மனைவியைக் கொலை செய்த கணவனின் மனைவியாவே அம்மன் வருவாங்க! நாகேஷும் அந்தப் பொண்ணுக்கே அபிஷேகமும் செஞ்சி வைப்பாரு!

என்ன படம்? (நோ சாய்ஸ்! :)

5 நம்ம வீட்டு தெய்வம்

6

51 (52) சக்தி பீடங்கள்! தட்ச யாக அழிவுக்குப் பின், அன்னையின் உயிரற்ற உடலின் துண்டுகள் விழுந்த இடங்களாகச் சொல்லப்படுபவை! இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ட்பெட், வங்காளம் என்று வெவ்வேறு இடங்கள்!

இதில் தமிழ்நாட்டுச் சக்தி பீடங்கள் எவை?

6

அ) காஞ்சி/மதுரை

ஆ) மதுரை/சமயபுரம்

இ) படவேடு/திருமயிலை

ஈ) கன்னியா குமரி/காஞ்சி

7

மாரியம்மனுக்கு ஆடி மாசம் தான் விசேடம்! ஆனால் வைகாசி மாதத்தில் முதல் நாள் அன்று, இந்த ஊர் வைணவர்களும் அந்தணர்களும் ஒன்று சேர்ந்து மாரியம்மனைப் பூசிக்கிறார்கள்.

பின்னர் இந்த ஊர் அம்மனுக்குத் தங்கள் சார்பாகப் பட்டுச் சீலையும், பொருளும், மலர் மாலைகளும் வரிசையாக அனுப்பி வைக்கிறார்கள்?

எந்த ஊர்கள்?

7

அ) நாகை அழகியார்-நாகை நெல்லுக்கடை அம்மன்

ஆ) திருவல்லிக்கேணி-திருமயிலை முண்டகக் கண்ணி

இ) அழகர்கோயில்-மதுரை

ஈ) திருவரங்கம்-சமயபுரம்

8

ஆதி சங்கரர் தம்முடன் வாதம் புரிந்தவரின் மனைவியான இந்தப் பெண்ணின் நினைவாகவே ஒரு அத்வைத பீடம் எழுப்பினார்; அங்கு அன்னையையும் பிரதிட்டை (திருநிலைக்காப்பு) செய்வித்தார். அதுவே சங்கரரின் முதல் மடமாகவும் கருதப்படுகிறது!

யார் இந்தப் பெண்?

8

அ) சரசவாணி

ஆ) சாரதாம்பாள்

இ) மூகாம்பாள்

ஈ) கனகதுர்க்கா

9

கொற்றவை ஆறலைக் கள்வர்களான எயினர்களின் காவல் தெய்வமாய்த் தான் முதலில் காட்டப்படுகிறாள். கிட்டத்தட்ட காளியின் உருவம்! அவளுக்குரிய பூக்கள் எவை?

9

அ) உழிஞை/நொச்சி

ஆ) வெட்சி/காந்தள்

இ) வஞ்சி/காஞ்சி

ஈ) குராப்பூ/மராப்பூ

10கட்டபொம்மனின் காவல் தெய்வமான இவள், நாயக்கர் குல மக்களின் தெய்வமும் ஆவாள்? யார் இவள்? (நோ சாய்ஸ்!)

10

ஜக்கம்மா தேவி




இது காப்பி பேஸ்ட் செய்யும் கழகக் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) கொற்றவை வரி ஆ) குரவை வரி இ) வேட்டுவ வரி ஈ) கானல் வரி

2 அ) சண்டிகேஸ்வரன்/ பத்ரகாளி ஆ) வீரபத்ரன்/பத்ரகாளி இ) ருத்ரகாளி/வீரபத்ரன் ஈ) வீரபாகு/வீரபத்ரன்

3 அ) வாலி-கொல்லூர் ஆ) இளையராஜா-சிருங்கேரி இ) வாலி-சிருங்கேரி ஈ) இளையராஜா-கொல்லூர்
4 அ) பாபநாசம் சிவன்/தியாகராஜ பாகவதர் ஆ) கண்ண தாசன்/குன்னக்குடி வைத்தியநாதம் இ) யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்/ பாபநாசம் சிவன் ஈ) பாபநாசம் சிவன்/பெ.தூரன்
5
6 அ) காஞ்சி/மதுரை ஆ) மதுரை/சமயபுரம் இ) படவேடு/திருமயிலை ஈ) கன்னியா குமரி/காஞ்சி
7 அ) நாகை அழகியார்-நாகை நெல்லுக்கடை அம்மன் ஆ) திருவல்லிக்கேணி-திருமயிலை முண்டகக் கண்ணி இ) அழகர்கோயில்-மதுரை ஈ) திருவரங்கம்-சமயபுரம்
8 அ) சரசவாணி ஆ) சாரதாம்பாள் இ) மூகாம்பாள் ஈ) கனகதுர்க்கா
9 அ) உழிஞை/நொச்சி ஆ) வெட்சி/காந்தள் இ) வஞ்சி/காஞ்சி ஈ) குராப்பூ/மராப்பூ
10

38 comments:

  1. ம்.. நானும் ஒரு புதிரா.. புனிதமாவது கலந்துக்கணும்னு நினைக்கிறேன்.. எல்லா கேள்வியும் சாய்ஸ்ல விட வேண்டியதா இருக்கு.. கொஞ்சம் ஜிம்பிளா கேட்டா தான் என்னவாம்..

    இருந்தாலும் உள்ளேன் அண்ணே சொல்லிக்கிறேன்..

    ReplyDelete
  2. \\ விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!\\

    ரைட்டு...அப்போ நாளைக்கு வருகிறேன் ;)

    ReplyDelete
  3. மறுபடியும் நான் சொல்லுறேன்.எனக்கு கேள்வியும் பிடிக்காது,கேள்வி கேட்குறவங்களையும் பிடிக்காது :D
    ஆனா நீங்க அண்ணா என்ற தெய்வம்..உங்களைப் பிடிக்கமா போகாது..ஆகவே தெய்வமே விடை எல்லாம் எனக்கும் மட்டும் கொடுங்க :D
    அது பார்த்து காபி அடிச்சு நான் பாஸ் பண்ணிடுறேன்

    ReplyDelete
  4. ஆகா...
    என்னைக்கும் இல்லாத ஆச்சரியமா இருக்கே!
    எவருமே ஆட்டத்துக்கு வரலீயே! கேள்வி எல்லாம் அம்புட்டு கஷ்டமா? :(

    ReplyDelete
  5. 1) இ) வேட்டுவ வரி
    2) ஆ) வீரபத்ரன்/பத்ரகாளி பலவிதமான கதைகள் இருக்கின்றன...?
    3) அ) வாலி-கொல்லூர்
    4) இ) யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்/ பாபநாசம் சிவன்
    5) அழுகுணி. சினிமாலேருந்து கேள்வி கேட்டால் சாய்ஸ் கொடுத்தே தீர வேண்டும்.
    6) அ) காஞ்சி/மதுரை ???கன்யாகுமரி காஞ்சி, மதுரைன்னு 9 இடங்களை மதுரையம்பதி சொல்கிறார்: http://maduraiyampathi.blogspot.com/2008/06/3.html??
    7) இதுல உ.கு. ஏதாவது? //வைணவர்களும் அந்தணர்களும் ஒன்று சேர்ந்து// :-)
    8) அ) சரசவாணி
    9) ஈ) குராப்பூ/மராப்பூ
    10) காளி

    ReplyDelete
  6. //கேள்வி எல்லாம் அம்புட்டு கஷ்டமா// கெடுவை ஒரு நாளாவது நீட்டிக்கணும். (பொரி உருண்டை சாப்பிடணுமே இன்னிக்கு!) :-)

    ReplyDelete
  7. கெபி அக்கா தான் மொத போணியா? :)

    2 thappu
    5 not answered
    6 thappu
    7 no ulkuthu, bayapadaama pathil cheppandi
    10 thappu

    = 5/10

    ReplyDelete
  8. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    கெடுவை ஒரு நாளாவது நீட்டிக்கணும்.//

    அக்கா செப்தாவு!
    தம்பி சேஸ்தாவு!

    //(பொரி உருண்டை சாப்பிடணுமே இன்னிக்கு!) :-)//

    டீச்சர் வூட்டுக்குப் போயி மீ தி ஈட்டிங்! அம்மன் பாட்டு பதிவில் டீச்சர் எனக்குப் பலகாரம் கொடுத்துட்டாங்களே! :)

    ReplyDelete
  9. @கெபி அக்கா
    //#2 பலவிதமான கதைகள் இருக்கின்றன...?//

    ஆமா, ஆனா சூஸ் தி "பெஸ்ட்" ஆன்சர்!
    சாய்ஸில் மற்றதை ஈசியா தள்ளிரலாம்! :)

    //சினிமாலேருந்து கேள்வி கேட்டால் சாய்ஸ் கொடுத்தே தீர வேண்டும்//

    ஓ..சினிமாவுக்கு உங்களுக்கும் அலர்ஜி-ல்ல? சாரிக்கா!

    //9 இடங்களை மதுரையம்பதி சொல்கிறார்//

    அவர் சொல்றாரு! ஆனா தரவு இருக்கா? :)

    அவர் மதுரைக் காரு! மதுரையைப் பட்டியலில் சேத்துக்கிட்டாரு!
    வைணவருங்க போடற பதிவை மட்டும் கும்மி அடிப்பீங்களாம், இதை அடிக்க மாட்டீங்களா? :))

    ஹிஹி! கேள்வியைப் படிங்க, 51(52)இல் எது எது-ன்னு தான் கேள்வி! நாங்க உஷாக்கா வழியில் "உஷ"ரு-ல்ல? :)
    பாகங்கள் என்னென்ன?

    # பத்தாம் கேள்வி ரொம்ப ஈசி! கட்டபொம்மன் சிவாஜி ஞாபகம் வந்தா டக்குன்னு வந்துரும்! :)

    ReplyDelete
  10. எல்லாமே எனக்கு அவுட் ஆப் சிலபஸ்.
    ஆனாலும் கொஞ்சம் முயற்சி செய்யறேன்.

    ReplyDelete
  11. 1. அ) கொற்றவை வரி
    2. இ) ருத்ரகாளி/வீரபத்ரன்
    3.ஈ) இளையராஜா-கொல்லூர்
    4. ) பாபநாசம் சிவன்/பெ.தூரன்
    8.இ) மூகாம்பாள்

    ReplyDelete
  12. அதென்ன நீங்களும் யோஜிங்கன்னு சொல்லத் தொடங்கிட்டீங்க? சேர்க்கை அப்படியாகிப் போச்சோ? :-)

    ReplyDelete
  13. கார்த்திகையில் கார்த்திகை நாள் செழிக்க வந்தோன் வாழியே!

    எங்கே உங்க ராபின் ஹுட் ஆழ்வார் இடுகை?

    ReplyDelete
  14. 1. இ) வேட்டுவ வரி
    2. ஆ) வீரபத்ரன் / பத்ரகாளி
    3. அ) வாலி - கொல்லூர் (கொல்லூர் தான்னு தெரியும். வாலி என்பது ஊகம்)
    4. இ) யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் / பாபநாசம் சிவன் (எங்கேயோ படிச்சிருக்கேனே - மலைநாடர் சொன்னாரா? காபி சொன்னாரா? யோகன் ஐயா சொன்னாரா? நினைவில்லை)
    5. இதெல்லாம் எனக்கு நினைவிருப்பதில்லை. :-)
    6. அ) காஞ்சி / மதுரை. காஞ்சியை ஒட்யாண பீடம்/காமகோடி பீடம் என்பதாலும் மதுரையை சியாமளா பீடம் என்பதாலும் இது தான் சரியான விடை என்று நினைக்கிறேன். ஈ கூட சரியோ என்று நினைக்க வைக்கிறது. இறுதியான விடையா 'அ'. :-)
    7. ஈ) திருவரங்கம் - சமயபுரம்.
    8. அ) சரசவாணி (சிருங்கேரி சாரதா பீடம்)
    9. ஆ) வெட்சி / காந்தள்
    10. ஜக்கம்மா. ஜெய் ஜக்கம்மா.

    ReplyDelete
  15. //அ) நாகை அழகியார்-நாகை நெல்லுக்கடை அம்மன்//

    அட எங்கூரு அம்மன். அது ஒரு தனியார் கோவில். ஆனால் சிறப்பானது சித்திரையில் விழா நடக்கும், செடில் மரம் மட்டுமே இரண்டு நாட்கள் சுற்றுவார்கள், அன்று மட்டும் 5,000 குழந்தைகள் வரை (ஒரு குழந்தைக்கு 30 செகண்ட் கணக்கில்) செடில் மரத்தில் ஏற்றி சுற்றிவருவார்கள். 10 வயது சிறுவன் கூட காத்தவராயனுக்கு அருகில் நின்று சுற்றுவான்.

    1000 காவடிகளுக்கு மேல் வரும்.
    எங்கப்பாவுக்கு பிறகு என் தம்பி அலகு காவடி ஆண்டு தோறும் எடுத்துவருகிறான்.

    மூன்றுவாரம் திருவிழா நடக்கும்.

    ReplyDelete
  16. @சின்ன அம்மிணி யக்கா
    1 thappu
    2 cheri
    3,4 thappu
    8 thappu

    =1/10
    google aandavar koopdunga kaa! eajjy thaan :)

    ReplyDelete
  17. kumaran kalakkings :)

    2 thappu
    5 no attempt
    6 thappu :)
    9 thappu

    = 6/10

    ReplyDelete
  18. @குமரன்
    கற்பகவல்லி பாட்டை மலைநாடன், யோகண் ஐயா, காபி அண்ணாச்சி, இவர்களோடு கேஆரெஸ் என்பவனும் சொல்லி இருக்கான், அம்மன் பாட்டுல! :))

    பதில் சொல்லும் போது சொந்த ஊரு பாசம் செல்லாது செல்லாது! :)

    ReplyDelete
  19. மேல்மருத்துவர் ஆதிபராசக்தியும், பங்காரு அடிகளார் புகழும் அம்மன் பாடல்கள் பதிவில் வருமா ?
    :)

    ReplyDelete
  20. //கோவி.கண்ணன் said...
    மேல்மருத்துவர் ஆதிபராசக்தியும், பங்காரு அடிகளார் புகழும் அம்மன் பாடல்கள் பதிவில் வருமா ?
    :)//

    அம்மன் பாட்டில் அம்மன் பாட்டு வரும்!
    அடியார்கள் பற்றி வரும்!
    அடிகள் பற்றி வரும்!
    தனித்த மனிதர்கள் புகழ் வராது!

    ReplyDelete
  21. // கோவி.கண்ணன் said...
    மேல்மருத்துவர் ஆதிபராசக்தியும்
    :)//

    எதுக்கு இந்தச் சிரிப்பான்? அம்மன் பாட்டில் தான் கிராம தேவதை அம்மா பாட்டெல்லாம் வந்திருக்கே!
    மேல்மருவத்தூர் நாயகி ஆதி-பரா-சக்தியானவள்! சப்த மாதாக்களுக்கும் மாதா! அவள் புகழ் பாட என்ன தயக்கம்!

    எந்த ஊரானாலும் அன்னை அன்னையே!
    உங்கள் இல்லத்து அன்னையும் இங்கே கொலுவிருப்பாள்!

    ReplyDelete
  22. 6)ஈ) கன்னியா குமரி/காஞ்சி
    10) ஜக்கம்மா!

    மற்றவை எல்லாம் அழுகுணி என்று மட்டும் சொல்லி 'அப்பாலிகா வரேன்'.

    ReplyDelete
  23. கெபி அக்கா ரெண்டாம் ஆட்டம் ஆடி, 6 & 10 சரி!

    = 7/10

    ReplyDelete
  24. 1 ஆ) குரவை வரி

    2 ஆ) வீரபத்ரன்/பத்ரகாளி
    3 அ) வாலி-கொல்லூர்
    4 அ) பாபநாசம் சிவன்/தியாகராஜ பாகவதர்
    5 Enga veettu theivam
    6 ஈ) கன்னியா குமரி/காஞ்சி
    7 ஈ) திருவரங்கம்-சமயபுரம்
    8 அ) சரசவாணி
    9 அ) வெட்சி/காந்தள்
    10 Jakkammal

    ReplyDelete
  25. //Raghav said...
    ம்.. நானும் ஒரு புதிரா.. புனிதமாவது கலந்துக்கணும்னு நினைக்கிறேன்.. எல்லா கேள்வியும் சாய்ஸ்ல விட வேண்டியதா இருக்கு.. கொஞ்சம் ஜிம்பிளா கேட்டா தான் என்னவாம்..//

    ஹிஹி! சரி கேட்டுட்டாப் போச்சி!
    * அம்மன் கையில் இருக்கும் திரிசூலத்தில் எத்தனை முனை இருக்கும்?
    * சிங்க வாகினியின் வாகனம் என்ன?

    :))

    யோவ்! கூகுளாண்டவரைக் கூப்புடுய்யா!
    இப்பல்லாம் அவர் தான் முழு முதல் பூசையாம்! அப்பறம் தான் பிள்ளையாருக்கேவாம்!

    ReplyDelete
  26. //கோபிநாத் said...
    \\ விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!\\

    ரைட்டு...அப்போ நாளைக்கு வருகிறேன் ;)//

    மாப்பி கோபி - தேதி மாத்தியாச்சே! :)

    ReplyDelete
  27. //(unknown blogger) said...
    மறுபடியும் நான் சொல்லுறேன்.எனக்கு கேள்வியும் பிடிக்காது,கேள்வி கேட்குறவங்களையும் பிடிக்காது :D//

    ஹா ஹா
    அப்போ உன்னையும் உனக்குப் பிடிக்காதா ஜிஸ்டர்? :)

    //ஆனா நீங்க அண்ணா என்ற தெய்வம்..உங்களைப் பிடிக்கமா போகாது..//

    ஹைய்யோ! ஹைய்யோ! இதை ராகவன் பாக்கணுமே!

    //விடை எல்லாம் எனக்கும் மட்டும் கொடுங்க :D
    அது பார்த்து காபி அடிச்சு நான் பாஸ் பண்ணிடுறேன்//

    விடை எல்லாம் தான் கொடுத்து இருக்கேனே சைடு-ல! அப்புறம் என்ன! அதை எடுத்து எழுது ஜிஸ்டர்! அதான் உன் வேலை!

    காப்பி அடிக்கலாம்!
    ஆனா ஈ அடிச்சான் காப்பி அடிக்கக் கூடாது! :)

    ReplyDelete
  28. //குமரன் (Kumaran) said...
    அதென்ன நீங்களும் யோஜிங்கன்னு சொல்லத் தொடங்கிட்டீங்க? சேர்க்கை அப்படியாகிப் போச்சோ? :-)
    //

    யாரோட சேர்க்கை குமரன்? :))

    ReplyDelete
  29. //சின்ன அம்மிணி said...
    எல்லாமே எனக்கு அவுட் ஆப் சிலபஸ்.
    ஆனாலும் கொஞ்சம் முயற்சி செய்யறேன்//

    சிலபஸ்-ல இல்லீன்னா என்னாக்கா?
    பலபஸ்-ஸைப் புடிங்க! :)
    கூகுளாண்டவரே துணை!

    ReplyDelete
  30. //குமரன் (Kumaran) said...
    கார்த்திகையில் கார்த்திகை நாள் செழிக்க வந்தோன் வாழியே!//

    திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்!

    //எங்கே உங்க ராபின் ஹுட் ஆழ்வார் இடுகை?//

    இடுகையும் போட்டாச்சி! நீங்க அதுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சி!

    ReplyDelete
  31. கோவி.கண்ணன் said...
    //அ) நாகை அழகியார்-நாகை நெல்லுக்கடை அம்மன்//

    அட எங்கூரு அம்மன்//

    எது? நாகை அழகியாரா?
    அவரும் மோகினி தானே! அம்மன்-ன்னு சொல்லிக்கிறலாம்! எப்படி கோவி டைப் ஆப் திங்கிங்? :))

    //செடில் மரம் மட்டுமே இரண்டு நாட்கள் சுற்றுவார்கள், அன்று மட்டும் 5,000 குழந்தைகள் வரை (ஒரு குழந்தைக்கு 30 செகண்ட் கணக்கில்) செடில் மரத்தில் ஏற்றி சுற்றிவருவார்கள். 10 வயது சிறுவன் கூட காத்தவராயனுக்கு அருகில் நின்று சுற்றுவான்//

    ஹூம்! பாத்திருக்கேன்-ண்ணா நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழாவை! தனியார் கோயில் வேற! வேலை எல்லாம் டாண்-டாண்-னு நடக்கும்!

    //எங்கப்பாவுக்கு பிறகு என் தம்பி அலகு காவடி ஆண்டு தோறும் எடுத்துவருகிறான்//

    நீங்க வழக்கம் போல கும்மி மட்டும் தானா? :)

    ReplyDelete
  32. நான் தான் லீடிங்குனு பாத்துட்டு, பெரிய தலைங்க யாரும் வந்து வின் - னிட போறாங்கன்னு ஓரமா வெயிட்டு பண்ணிட்டு இருந்தேன். (ஸ்கூல் நாட்களிலேர்ந்து மினிமம்ல ஃபர்ஸ்டு ராங்க்கு வாங்கி பழக்கம்).

    பெருமையில தொண்டை அடைக்குதுப்பா. ஒரு ஜோடா!

    ReplyDelete
  33. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    நான் தான் லீடிங்குனு பாத்துட்டு, பெரிய தலைங்க யாரும் வந்து வின் - னிட போறாங்கன்னு ஓரமா வெயிட்டு பண்ணிட்டு இருந்தேன்//

    ஹிஹி!
    நீங்களே ஒரு பெரிய தலை தான்-க்கா!

    //(ஸ்கூல் நாட்களிலேர்ந்து மினிமம்ல ஃபர்ஸ்டு ராங்க்கு வாங்கி பழக்கம்)//

    வாவ்! வாழ்த்துக்கள்! பரிசுகள் எங்கே இருக்கு இப்போ? தங்க மெடல்ஸ்?

    //பெருமையில தொண்டை அடைக்குதுப்பா. ஒரு ஜோடா!//

    காளி மார்க்? ஆர் லைம் ஜோடா? :)

    ReplyDelete
  34. சாமி மிச்சத்தையும் முடிச்சுறு ஐயா தாங்க முடியல

    ReplyDelete
  35. //ani Pandi said...
    சாமி மிச்சத்தையும் முடிச்சுறு ஐயா தாங்க முடியல//

    மிச்சத்தை முடிக்கணுமா?
    என்னா சொல்றீங்க மணிபாண்டியண்ணே? அதான் எல்லாப் பதிலும் போட்டாச்சே! நீங்க தானே வின்னர்! :)

    ReplyDelete
  36. akka ennaku ruthra kali amman pathi theriyanum ka
    tamilnaduu la enga koil i

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP