Monday, December 15, 2008

மார்கழி-00: ஆண்டாள் in New York!

மக்களே! அடுத்த முப்பது நாளுக்கு, தினம் ஒரு பதிவு!
பதிவு போடப் போறது நான் இல்லை! ஆண்டாள்!
நீங்க இடப் போகும் பின்னூட்டம் வாழைப்பந்தலுக்கு அல்ல! ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு! :)
கோதையை என்னென்ன கேள்வி கேக்கணும் நினைச்சீங்களோ, அதை எல்லாம் கேக்கலாம்! அதுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு அவளுக்கும் அவ லவ்வருக்கும் தான்! எனக்கில்லை! :)

இந்த மார்கழி முப்பது நாளும், வேற மாதிரி கெட்டப்புல பந்தல் போடப்படும்!
* திருப்பாவை குறுக்கெழுத்து,
* புதிரா புனிதமா,
* வீடியோ பதிவு,
* பதிவர்கள் பாடும் ஒலிப் பதிவு,
இது மாதிரி வேற வேற கெட்டப்பு!

*** Also...மார்கழி மாதத்தின் சிறந்த பின்னூட்டத்துக்கு தனியான பரிசு ஒன்னும் வழங்கப்படும்!

அட, என்னாச்சு இவனுக்கு-ன்னு பாக்கறீங்களா? ஹிஹி!
கனாக் கண்டேன் தோழா நான்! கதையைக் கேளுங்க!"யார் யாரோ வலைப்பூ தொடங்கிட்டாங்க! பூமாலைச் சூடிக் கொடுத்த நான்?
ஒரு வலைப்-பூ-மாலை சூடிக் கொடுக்க மாட்டேனா?
எனக்குன்னு சொந்தமா ஒரு வலைப்பூ கூட இல்லியே! நீ இருந்துமா எனக்கு இந்த கதி கேஆரெஸ்?"

"ஹே...என் செல்லத் தோழீ...கோதை? How you doing dee? நீ எப்போ நியூயார்க் வந்தே? அதுவும், மார்கழி துவங்கற இந்த நேரம், இந்தியாவுல இருக்குறத விட்டுப்போட்டு, உனக்கு இங்கென்ன வேலை?"

"அது இல்லடா...உன்னைய பாத்து ஒரு விஷயம் சொல்லிட்டுப் போவலாம்-ன்னு தான் அவசரம் அவசரமா வந்தேன்! அது புத்தூர், இது புது-யார்க்! அவ்ளோ தானே வித்தியாசம்?"

"இந்த இனிப்புப் பேச்சுக்கெல்லாம் ஒரு கொறைச்சலும் இல்ல! சரி, எவன் ஒனக்கு விசா கொடுத்தான்? H-1ல வந்திருக்கியா? இல்ல அவரோட H-4ல வந்திருக்கியா?" :)

"டேய்...வந்தவளை உட்காரக் கூடச் சொல்லாம, கேள்வி மேல கேள்வியாக் கேட்டுக்கிட்டே இருக்கியே?"

"சரி, சரி, வராதவ வந்திருக்க! வா...’வாரணம் ஆயிரம்’ படம் ஓடிக்கிட்டு இருக்கு ஹோம் தியேட்டர்ல! எல்லாம் உன்னோட தலைப்பு தான்! பாத்துக்கிட்டே இரு!
அப்படியே முடிஞ்சா, ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு வை! நான் அதுக்குள்ள எங்க ஆபீஸ் பொண்ணு கிட்ட ஒரு மொக்கையைப் போட்டுட்டு வந்துடறேன்!"

"யாரு? அந்தச் சிவலிங்கம் கேள்வி கேட்டாளே? அந்தப் பொண்ணா?"

"அவளே தான்! அவ பேரு நி**லேட்டு! ஆனா நான் சுருக்கமா சாக்லேட்டு-ன்னு தான் கூப்பிடுவேன்!"

"அடப் பாவீ, அடி படப் போற! போயும் போயும் உன் கிட்ட பேசணும்-னு வந்தேன் பாரு! பேசாம குமரன் வீட்டுக்கோ, ஜிரா வீட்டுக்கோ போயிருக்கலாம்"

"குமரன் வீட்டுல அண்ணி உனக்குத் தண்ணி கூட காட்ட மாட்டாங்க! பதிவு-ன்னு வீட்டில் பேச்சை எடுத்தாலே அண்ணி கையில பூரிக்கட்டை பறக்கும்! சக்கரத்தை விட அது powerful ஆயுதம் தெரியும்-ல?" :)

"சரி, நான், உன் தோழன் ஜிரா வீட்டுக்குப் போறேன்!"

"ராகவன் வீட்டுக்கு போனீன்னா உன் கதை கந்தலாயிரும்! சிக்கனைத் தீர்த்து சிக்கேலோ ரெம்பாவாய்-ன்னு chicken பாட்டு பாட வேண்டியிருக்கும்! சொல்லுறத சொல்லிட்டேன்....அப்பறம் உன் இஷ்டம்!"

"அய்யய்யோ! அப்படியா! சரி, சரி! கோச்சிக்காதே-டா! நீ முன்ன இருந்த கேஆரெஸ்ஸே இல்ல! இப்பல்லாம் உனக்குப் பொசுக் பொசுக்-ன்னு கோவம் வருது!"

"ஹா ஹா ஹா! நீ ஒரு பதிவைப் போடு கோதை! அப்பறம் கெளம்பி வருவாங்க பாரு ஒரு கும்மி கும்பலு! அப்போ தெரியும் உனக்கு!
But dont worry! I will be there to protect you, ok? சொல்லுடீ ஏதோ சொல்ல வந்தியே!"


பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


"நான் பாடின திருப்பாவைக்கு பல மகான்கள் வியாக்யானம் எழுதி இருக்காங்க! பல கவிஞர்கள் உரை எல்லாம் எழுதி இருக்காங்க!
டிவி-ல அறிஞர்கள் பல பேரு விளக்கிப் பேசுறாங்க! பாடகிகள்/பாடகர்கள் வெவ்வேறு மெட்டுல சினிமாப் பாட்டாக் கூடப் பாடி இருக்காங்க!

ஆனா...ஆனா...
இது வரைக்கும் லோக்கலா, ஜாலியா, கிண்டலா, ஒருத்தர் கூட பிரிச்சி மேயலையே-ன்னு தான் எனக்கு சின்ன வருத்தம்!
அதான் உன் கிட்ட சொல்லிட்டுப் போவலாம்-ன்னு வந்தேன்!"

"ஹா ஹா ஹா! அது எப்படி, கரெக்டா என்னைத் தேடிப் பிடிச்சி வந்திருக்க?"

"அதான் ஊரே பேசுதே உன்னைய பத்தி! பச்சை மாமலை போல் சாலட், பவள வாய் கென்டக்கி சிக்கன்-னு மாத்திப் பாடின தில்லாலங்கடியாமே நீ?"

"சரி, சரி! உரக்கப் பேசாதே! Crowd பாக்குது! டீலிங் நமக்குள்ள தான்! உன் ஆசையை நான் நிறைவேத்தி வைக்கிறேன் தோழீ!"

"நன்றி-டா கேஆரெஸ்"

"ஆனா, பதிலுக்கு நீ என்ன தருவே எனக்கு?"

"ஆகா! மற்றை நம் காமங்கள்(விருப்பங்கள்) மாற்று-ன்னு சொல்லி இருக்கேனே! சரி சொல்லு! என்ன வேணும் உனக்கு?"

"ஐ-ஐந்தும்-ஐந்தும் எழுதிய உன் தமிழ்ப் பிஞ்சு விரல்களுக்கு ஒரு தோழமை முத்தம் கொடுக்க ஆசை! இந்தத் தோழனுக்காக உன் காதலன் கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டு வரீயா?"

"மொதல்ல மார்கழி முப்பதும் முடி! பொங்கல் அன்னிக்கிப் பாக்கலாம்! ஹேய்! நேரமாச்சு! நான் வரேன்டா!"

"ஏய்...வந்ததும் தெரியலை...போறதும் தெரியலை...எங்க ஓடுற நீயி?"

"டேய், திருமலைக் கோயில்ல இன்னில இருந்து சுப்ரபாதம் கட்! ஒன்லி தமிழ்ப் பாசுரம் தான்! வடமொழிக்கு ஒரு மாசம் முழுக்க கல்தா கொடுத்துருவாங்க!
அதோ பாட ஆரம்பிச்சிட்டாங்க! மீ தி பர்ஸ்ட்டா, அங்கே டயத்துக்கு இருக்கணும்! வர்ட்டா...கேட்ச் யூ லேட்டர் கேஆரெஸ்! பை! :)))ஸ்ரீ: ஹரி ஓம்!
மார்கழி-00: திருப்பாவைத் தனியன்கள்

தனியன்-ன்னா என்ன? தனியாப் போட்டுக்கற பனியனுக்குப் பேரு தனியனா? ஹிஹி!
முன்னாளில் வந்த ஒரு நூலைப் போற்றி, பின்னாளில் செய்யப்படும் அணிந்துரைக்குத் தனியன்-ன்னு பேரு!
ஒரு தனியனில் அந்த நூலின் சாராம்சம், எழுதியவர் சிறப்பு-ன்னு எல்லாம் ரத்தினச் சுருக்கமாச் சொல்லப்பட வேண்டும்!

என்னாது? ஆண்டாளின் பாட்டுக்குத் தனியன் எழுதனுமா?
ஒரே போட்டா போட்டி தான்! அன்னை தெரேசாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நீ-நான்-ன்னு போட்டி போடுறாப்போலே!
ஆனால் தேறினது இரண்டே பேரு தான்! அதுல இராமானுசர் கூட இல்லைன்னா பாதுக்குங்களேன்! பின்னே? தங்கையைப் பாராட்டி அண்ணனே தனியன் பாடினா, அது குடும்ப முனைப்பாகப் பார்க்கப்படும் அல்லவா? :)

* பராசர பட்டர் = கூரத்தாழ்வானின் புதல்வர்!
* உய்யக் கொண்டார் = நாதமுனிகளின் சீடர்!

(வடமொழித் தனியன் ரொம்ப பார்க்க வேணாம்! but இதன் வர்ணனையில் அவ்ளோ காதல்-கட்டில் சுவை!:) அதனால் சுருக்கமா பார்ப்போம்)

பராசர பட்டர் அருளியது:
நீளா துங்க ஸ்தந கிரி, தடீ சுப்தம், உத்போத்ய க்ருஷ்ணம்!
பாரார் த்யம், ஸ்வம் ச்ருதி, சத சிரஸ் சித்தம், அத்யாப யந்தீ!
ஸ்வோ சிஷ்டாயாம், சரஜி நிகளி தம், யா பலாத், க்ருத்ய புங்க்தே!
கோதா தஸ்யை நம!! இதம் இதம்!! பூய ஏவாஸ்து பூயா!


நப்பின்னைப் பிராட்டியைத் தான் கண்ணன், தமிழ் முறைப்படி, ஏறு தழுவி மணந்து கொண்டான்!
* திருமகள், மண்மகள் - இருவரும் அவனை அடைந்தார்கள்!
* நப்பின்னையை - இவன் அடைந்தான்!
வலியச் சென்று, கஷ்டப்பட்டு அடைந்தான்! அனைவரிலும் இளையவள்! இளமையானவள்!

ஆண்டாளுக்கு இவள் மேல் ஒரு தனி பாசம்!
மூன்று தேவியரும் அன்னை மகாலட்சுமி தான் என்றாலும், அறம்-பொருள்-இன்பம் என்று தனித் தனியாகத் தோற்றம் காட்டுகிறார்கள்!
இதில் நப்பின்னை = இன்பம்!
நீளா என்று வடமொழியில் சொல்லப்படுவாள்! அவள் செய்ததையே ஆண்டாளும் செய்கிறாள் என்று பாடுகிறது இந்தத் தனியன்! அப்படி என்ன செய்து விட்டாள் நப்பின்னை?

* நப்பின்னையின் பெரிய திரு முலைகளில், கண்ணன் என்னும் காதலன், குழந்தை போலத் தூங்குறான்!
* பண்ணுறதையெல்லாம் பண்ணிட்டு, குழந்தை போல மூஞ்சிய வச்சிக்கிட்டுத் தூங்கினா? அவன் மாயம், இவளுக்குத் தெரியாதா என்ன?

* இரவில் நிகழ்ந்த இன்ப விளையாட்டில், கூந்தல் கலைந்து போய் இருக்கு!
* கசங்கிப் போய் இருக்கும் பூச்சரங்களையும் பூமாலைகளையும் கழற்றி, அந்தச் சரத்தாலேயே, கண்ணனைக் கட்டிலோடு கட்டுகிறாள்!
* அடேய், என் கள்ளக் குழந்தைப் புருஷா! இப்போ ஓடிப் போயேன் பார்ப்போம்? :)

* அன்று யசோதை கட்டியதைக் கட்டு அறுத்தாயே! இப்போ இதைக் கட்டு அறேன் பார்ப்போம்? தாயா, தாரமா? ஹா ஹா ஹா!
நாங்கள் எல்லாருமே நப்பின்னை தான்! இனிமேல் உன்னை நாங்கள் இப்படித் தான் கட்டப் போறோம்!

= இப்படி நம் அத்தனை பேரையும் நப்பின்னையாக்கி, நமக்கு இன்பமும் ஆக்கினாள் கோதை!
கோதா தஸ்யை இதம் இதம் நம!! = இப்பேர்ப்பட்ட கோதையை விதம் விதமாக வணங்குகிறேன்!
பூய ஏவாஸ்து பூயா = வணங்கி வணங்கி, மீண்டும் வணங்குகிறேன்!
என்று அதான் இத்தனை வணக்கங்கள் வைக்கிறார் கோதைக்கு! அப்படி என்ன பெரிய இவளா இவள்? :)


தட்டொளி-கண்ணாடி சேவை


அப்பாடா! தமிழ்த் தனியனுக்கு வந்தாச்சே! :)
உய்யக்கொண்டார் அருளியது:

அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!


வயல் புதுவை என்றால் பாண்டிச்சேரியா?
இல்லையில்லை! இந்தப் புதுவை வேற! தென்பாண்டிச் சீமையிலே, தேரோடும் வீதியிலே, மான் போல வந்த மங்கையின் புதுவை! புத்தூர்! வில்லி-புத்தூர்!
அங்கே அன்ன வயல்கள் = அன்னங்கள் விளையாடும்! அன்னமும்(நெல்) விளைந்து ஆடும்!

அந்த ஊருக்குப் பெருமை யாரால்? ஆண்டாள் = ஆண்டவனையே ஆண்டவள்!
ஆண்ட"வன்" என்றே சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்ட ஒரு ஆணாதிக்கச் சமூகத்தை, ஆண்ட"வள்" என்று மாற்றிப் பேச வைத்தவள்!
அந்தத் தென்பாண்டி நாட்டாள், சோழ நாட்டானை (அரங்கனை), அப்பவே சாதி விட்டுச் சாதி, நாடு விட்டு நாடு, காதலித்தாள்! :)

அவனுக்காகத் திருப்பாவை என்னும் பல் பதியம் பண்ணினாள்!
பல் பதியமா? அப்படின்னா? பல் பதியிறாப் போலே முத்தமா? யாருக்குத் தெரியும்? கோதையைத் தான் கேட்கணும்! :)

"என்னலே பதியம் பாடுற?"-ன்னு கேப்பம்-ல! பதியம்=பதிகம்! நாட்டுப்புற வழக்காப் பேசுறது!
திருப்பாவைப் பதியம் = திருப்பாவைப் பதிகம்! பாசுரங்கள்! ஆண்டாள் கண்ணாலம் என்று கூட நாட்டுப்புறச் சொற்களைக் கவிதையில் எடுத்து ஆளுவாள்!

கிராமத்தில் பயிர் வைக்கும் போது, "ஒழுங்காப் பதியம் போடுப்பா"-ன்னு சொல்லுவாங்க!
அதாச்சும் நெல்லு ஒரு இடத்தில் வளர்த்து, இன்னொரு இடத்தில் நாற்று நடும் போது, பதியம் வைப்பாங்க! Transplanted Organs-ஐ பதியம் செய்யப்பட்ட உறுப்புகள்-ன்னு தான் இப்பவும் சொல்லுறோம்!

அதே போல, ஆண்டாள், நம்மை உலக இன்பத்தில் முதலில் வளர்த்து, சரியான வேளை வரும் போது, எம்பெருமானிடத்தே பதியம் (Transplant) பண்ணி வைக்கிறாள்!

இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் = அப்பவே ட்யூன் போட்டுத் தான் பாடிக் கொடுத்திருக்காள் போல!
நற் பாமாலை, பூமாலை, சூடிக் கொடுத்தாளைச் சொல்லு = மாலை எப்படிக் கட்டலாம்? பாக்களால் கட்டலாம்! பூக்களால் கட்டலாம்!

* வாடும் பூமாலை = தான் சூடி, அவனுக்குக் கொடுத்தாள்!
* வாடாத பாமாலை = "எம் பாவாய்" என்று தனக்கே முதலில் பாடிக் கொண்டு, அப்புறம் தான் அவனுக்குக் கொடுத்தாள்! :)சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய் - நாடி நீ
"வேங்கடவற்கு என்னை விதி" என்ற இம் மாற்றம்
நாங் கடவா வண்ணமே நல்கு.


வேங்கடவா நாங்கடவா என்று தமிழில் கொஞ்சுகிறார்! அதாச்சும் வேங்கடவனை நாம் கடவாம இருக்கணுமாம்!
வேங்கடவற்கு என்னை விதி = என்னைய அவன் பேருக்கு எழுதி வச்சுடு! இனி அவன் சொத்து ஆகி விட்டேன்! அவன் சொத்தைக் காப்பாத்திக்கறது, அவன் கவலை! அவன் சாமர்த்தியம்! (முருகவனுக்கு என்னை விதி-ன்னு நான் சொல்லுறாப் போல...this kothai is copying from me:)))

இம் மாற்றம் நாங் கடவா வண்ணமே நல்கு = இப்படி அவனுக்கு நம்மளயே உயில் எழுதி வச்சிட்டாப் பொறவு, மனசு மாறக் கூடாது! வேங்கடவனை நாங் கடவா வண்ணமே நல்கு!

இப்படி இரு வித மாலையால், மாலையே கட்டிப் போட்டாள் சுடர்க் கொடி! அவள் கையில் கல்-கல் என்று பல வளையல்கள்!
அவள் பாவை ஏதோ சும்மாங்காட்டியும் பாவை அல்ல! தொல் பாவை! மிக மிகப் பழமையான பாவை! அப்படி என்ன பெருசா தொன்மை-ன்னு பாக்கறீங்களா?

ஸ்ருதிகளிலே...
வேதம் = பூர்வ பாகம்; உபநிடதம் = உத்தர பாகம்
வேதத்தை அப்படியே தமிழாக்கம் செய்தார் நம்மாழ்வார்! எனவே தான் திருவாய்மொழி=தமிழ் வேதம்!
ஆனால் கோதை, வேதத்தை, வரிக்கு வரி தமிழாக்கம் செய்யவில்லை! அதை விடச் சூப்பரா ஒன்னு செஞ்சா! என்ன?

அந்த வேதத்துக்கு விதை உருவாக்கினாள்! ஒரு விதையை உண்டாக்கிட்டா, அதில் இருந்தே பயிரை, மீண்டும் மீண்டும் விளைச்சல் பாக்கலாம்-ல?
அதனால் தான் வேதம் அனைத்துக்கு "வித்து" ஆகும் = கோதைத் தமிழ்!

வேத பாராயணத்தை ஓம்-இல் துவங்கி, ஓம்-இல் நிறைப்போம்!
அதே போல் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணத்தை, திருப்பாவையில் தொடங்கி, திருப்பாவையில் தான் நிறைவு செய்கிறார்கள்!
அதனால், திருப்பாவை = வேதத்தின் வித்து = ப்ரணவம் = ஓம்!


* மார்கழி முப்பது நாளும் பந்தலுக்கு வந்திருந்து,
* ஆண்டாள் என்னும் அற்புதத் தோழியோடு விளையாடி மகிழ வேணுமாய்,
* அனைத்து நண்ப, நண்பிகளையும் கேட்டுக் கொள்கிறேன்!

உங்களுக்குத் தோன்றும் திருப்பாவைப் பொருளையும் பேசி மகிழுங்கள்! நாளைக்கி முதல் பாட்டு! அதில் உங்களுக்குப் படு பயங்கரமான கேள்வி காத்துக்கிட்டு இருக்கு! அது வரை வர்ட்டா ஷ்டைலில் வர்ட்டா? :)

47 comments:

 1. கோதை ஆண்டாள்
  தமிழை ஆண்டாள்
  கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்

  கவியரசர் வரிகள். தமிழ்காதலிக்குத் தமிழாலே காட்டிய பரிசு.

  மாலவன் மார்களிக்க மார்கழியில் தாரளித்து வென்றவள் கோதை. காதலர்களுக்கு அவள் அன்று காட்டியதே வெற்றிப் பாதை. அதை விடவா இனிக்கும் கண்ணனின் கீதை! அச்சுவைப் பாவைப் படிக்காதவர் பெயரே பேதை.

  ReplyDelete
 2. இந்த தமிழ்மண கருவிப்பட்டையை எப்படி வலைப்பூவில் சேர்ப்பது? ஏதாவது லிங்க் கொடுத்து உதவ முடியுமா?
  என்னுடைய பதிவில் மிகவும் பெரிதாக தெரிகிறது. எனக்கு இது போல் சிறிதாக இருக்கும்படி மற்ற வேண்டும்.

  ReplyDelete
 3. ஹைய்யோ.............

  ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. பந்தக் காலில் நிற்கின்றேன்.

  ReplyDelete
 4. ஏய்ய்..அப்பா! ஒரு ரேஞ்சுக்குத்தான் எழுதறீரு. முன்னர் ஒரு முறை இரா முருகன் இராயர் காப்பி கிளப்புல எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருது. அசத்துங்க.

  ReplyDelete
 5. சிற்றஞ்சிறுகாலை எழுந்து பதிவை படித்தாயிற்று‍ ‍நன்று!
  சற்றே பானம்(காபி):) அருந்தியபின் வருவேன் மீண்டு(ம்)!!!!

  ReplyDelete
 6. G.Ragavan said...
  .

  >>>>மாலவன் மார்களிக்க மார்கழியில் தாரளித்து வென்றவள் கோதை. காதலர்களுக்கு அவள் அன்று காட்டியதே வெற்றிப் பாதை. அதை விடவா இனிக்கும் கண்ணனின் கீதை! அச்சுவைப் பாவைப் படிக்காதவர் பெயரே பேதை.

  5:20 PM, December 15, 2008

  <<<>>>>>>>>>>>மார்கழிவந்திடவும் மளமளவென்று

  யார்முதலில்வந்தார்களென்று

  ஆர்வமுடன் பந்தலில் நுழையுங்கால்

  கார்மேனிராகவ்னைக்கண்டேன் தமிழ்த்

  தேராய் கவிதைநடப்ப‌தையும் ரசித்தேன்!

  ReplyDelete
 7. மக்களே! அடுத்த முப்பது நாளுக்கு, தினம் ஒரு பதிவு! பதிவு போடப் போறது நான் இல்லை! ஆண்டாள்! நீங்க இடப் போகும் பின்னூட்டம் வாழைப்பந்தலுக்கு அல்ல! ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு! :) கோதையை என்னென்ன கேள்வி கேக்கணும் நினைச்சீங்களோ, அதை எல்லாம் கேக்கலாம்! அதுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு அவளுக்கும் அவ லவ்வருக்கும் தான்! எனக்கில்லை>>>>>>>>


  கேள்வி கேட்பது என்பது பிடிச்சவிஷயமாயிற்றே
  அதுவும் அனுமதிவேறு வழங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம்(அதாவது கேள்விகேட்கவேண்டாம் என்றில்லை! மகிழ்ச்சிக்குக்கேட்கவே வேண்டாம் என்று பொருள்!!) ஆமா ஆன்மீக சந்தேகக்கேள்வி என்ன வேன்டுமானாலும் கேட்கலாமில்லையா , கேள்வியின்(நியூயார்க்) நாயகனே!(கேஆரெஸ்) என் கேள்விக்கு பதில் ஏதய்யா!:):)

  ReplyDelete
 8. இந்த மார்கழி முப்பது நாளும், வேற மாதிரி கெட்டப்புல பந்தல் போடப்படும்!
  * திருப்பாவை குறுக்கெழுத்து,
  * புதிரா புனிதமா, பாட்டுக்குப் பாட்டு,
  * வீடியோ பதிவு,
  * பதிவர்கள் பாடும் ஒலிப் பதிவு,
  * பதிவர்களுக்குள் நீயா-நானா போட்டி...
  இது மாதிரி வேற வேற கெட்டப்பு!
  >>>>>>பிலடப் பார்த்தா ஆண்டாளுக்கு திருமாளிகை ஒண்ணு பந்தல்ல கட்டறமாதிரில்ல இருக்கு !!! கரும்புதின்னக்கூலியா என்ன!

  அனுமன் சேவை இல்லாட்டாலும் அணில் சேவை(சேமியா இல்ல):) செய்ய நான் ரெடி!!!

  ReplyDelete
 9. *** ஆல்சோ...மார்கழி மாதத்தின் சிறந்த பின்னூட்டத்துக்கு தனியான பரிசு ஒன்னும் வழங்கப்படும்<<<>>>


  என்னபரிசென்று
  எண்ணப்பறவை
  சிறகடித்து
  விண்ணில் பறக்கின்றதே!
  பட்டுப்புடவையா
  பாரதம் டு கொலம்பஸ் கண்டுபிடிச்ச தீவுக்கு
  ஃப்ரீயா ப்ளேன் டிக்கட்டா:)

  ReplyDelete
 10. ஹே...என் செல்லத் தோழீ...கோதை?>>>>  ஆ!!! பாவனாக்கு ஒருமாசத்துக்கு விடுதலையா மார்கழித்தோழி ஆண்டாளாயிட்டாளா குட்பாய் கேஆர் எஸ்ஸூ!!!  >>>> How you doing dee?>>>>

  what dee!!! ஓ தெலுங்கு டீ யா அப்போ சரியண்டி!

  ReplyDelete
 11. அவளே தான்! அவ பேரு நி**லேட்டு! ஆனா நான் சுருக்கமா சாக்லேட்டு-ன்னு தான் கூப்பிடுவேன்

  >>>>>>>>>>>>>வைக்கிறோம் வீட்ல வேட்டு
  போடணும் உங்க வாய்க்குப்பூட்டு:):)

  ReplyDelete
 12. ஆகா! மற்றை நம் காமங்கள்(விருப்பங்கள்) மாற்று-ன்னு சொல்லி இருக்கேனே! சரி சொல்லு! என்ன வேணும் உனக்கு?"

  "ஐ-ஐந்தும்-ஐந்தும் எழுதிய உன் தமிழ்ப் பிஞ்சு விரல்களுக்கு ஒரு முத்தம் கொடுக்க ஆசை! இந்தத் தோழனுக்காக உன் காதலன் கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டு வரீயா?">>>>>>>>

  ஹலோ திஸ் ஈஸ் டூ மச் யா!

  ReplyDelete
 13. தனியன்-ன்னா என்ன? தனியாப் போட்டுக்கற பனியனுக்குப் பேரு தனியனா?<<<>>


  தாயே !!! உன் சேயின் கடியை எப்படிம்மா பொறுத்துட்டு இருக்கே!!!:)

  ReplyDelete
 14. ஆண்டாளுக்கு இவள் மேல் ஒரு தனி பாசம்! மூன்று தேவியரும் அன்னை மகாலட்சுமியின் அம்சம் தான் என்றாலும், அறம்-பொருள்-இன்பம் என்று தனித் தனியாகத் தோற்றம் காட்டுகிறார்கள்!
  இதில் நப்பின்னை = இன்பம்!
  நீளா என்று வடமொழியில் சொல்லப்படுவாள்! >>>>

  விளக்கமும் இந்தக்கோணத்தில் சிந்தித்ததும் அருமை!


  !

  ReplyDelete
 15. அன்று யசோதை கட்டியதைக் கட்டு அறுத்தாயே! இப்போ இதைக் கட்டு அறேன் பார்ப்போம்? தாயா, தாரமா? ஹா ஹா ஹா!
  நாங்கள் எல்லாருமே நப்பின்னை தான்! நாங்கள் உன்னை இனி மேல் இப்படித் தான் கட்டப் போறோம்! பார்க்கலாம், நீயா நாங்களா என்று!

  = இப்படி நம் அத்தனை பேரையும் நப்பின்னையாக்கி, நமக்கு இன்பமும் ஆக்கினாள் கோதை>>>>>>>


  கூடி இருந்து எல்லாரையும் குளிரச்செய்வதே கோதையின் தொழில்!

  ReplyDelete
 16. கிராமத்தில் பயிர் வைக்கும் போது, "ஒழுங்கா பதியம் போடுங்கப்பா"-ம்பாங்க!
  அதாச்சும் நெல்லு ஒரு இடத்தில் வளர்த்து, இன்னொரு இடத்தில் நாற்று நடும் போது, பதியம் வைப்பாங்க! Transplanted Organs-ஐ பதியம் செய்யப்பட்ட உறுப்புகள்-ன்னு தான் இப்பவும் சொல்லுறோம்! அது போல ஆண்டாள் நம்மை உலக இன்பத்தில் வளர்த்து, சரியான வேளை வரும் போது, எம்பெருமானிடத்தே பதியம் பண்ணி வைக்கிறாள்!
  <<<>>>>>>>

  excellent !

  ReplyDelete
 17. அந்த வேதத்துக்கு விதை உருவாக்கினாள்! ஒரு விதையை உண்டாக்கிட்டா, அதில் இருந்தே பயிரை, மீண்டும் மீண்டும் விளைச்சல் பாக்கலாம்-ல?
  அதான் வேதம் அனைத்துக்கு "வித்து" ஆகும் கோதை தமிழ்! அந்த ஐ-ஐந்தும்-ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு!
  >>>>>>>


  இனியும் நாங்க எழுத எதுவுமே இல்லாமல் கோதையை கொண்டாடிவிட்டீர்கள் ரவி!


  என்ன சொல்வதென்று எண்ணி
  எண்ணிநானும் திகைக்கிறேன் இந்த
  சின்ன வயதில் எண்ணற்கரிய
  ஆன்மிக விஷயங்களை
  எடுத்து இங்கே வாரி இறைக்கும் தங்கள்
  வள்ளல்தனமை என்றும் வாழ்க வாழ்க

  என்று வாழ்த்தமட்டும் இப்போது செய்கிறேன்!

  நன்றி!

  ReplyDelete
 18. @ஷைலுக்கா...என்னா இது? இப்படிப் பிரிச்சி மேயறீங்க பந்தலை? :)

  ஹா ஹா ஹா! கலக்கல்ஸ்!
  ஆபீஸ்-ல இருந்து இப்போ தான் வீடு வந்து சேர்ந்தேன்! தோ வாரேன் இருங்க!

  ReplyDelete
 19. ஆய்மகளைக் கொண்டாடுவதற்காக பூமகளைக் குறைக்க வேண்டுமா? மானமிலாப் பன்றியை மறந்தீர் போலும். திருமகளையும் குறைக்க வேண்டுமா? மனத்துக்கினியானை மறந்தீர் போலும்.

  ஆய்மகளை மணக்க ஏழு ஏறு தான் தழுவினான். பூமகளைத் தேடி மானமிலாப் பன்றியாய் மாறினான்; திருமகளாம் குளிர்ந்தவளைத் தேடி மனத்துக்கினியானாய் காடு மேடெல்லாம் திரிந்து மரமேழ் எய்து வல்லசுரர் கூட்டமெல்லாம் நீறுபட செய்தான். மறக்க வேண்டாம். :-)

  ReplyDelete
 20. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்று பாடிக் கொண்டு பந்தலுக்கு வந்துவிட்டாளா பைங்கொடி? :-(

  சுடரை வணங்கும் அடியேன் சுடர்க்கொடியைக் காக்க வைத்தேன். என்ன தண்டனையோ? 'பாவம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று மூத்தவள் சொல்ல 'எதற்கு மன்னிக்கவேண்டும்? என் செய்தார்கள் இவர்கள்?' என்பவள் அல்லவோ இவள். அந்தத் துணிவு தான் இவளைக் காக்க வைத்தாலும் பரவாயில்லை என்று எண்ண வைக்கிறது போலும்.

  ReplyDelete
 21. அரங்கனை மட்டுமல்லால் அகில உலகத்தையும் ஆண்டவளான கோதை நாச்சியாரை வணங்கி பந்தலுக்கு உறவினர் என்கிற முறையில் நானும் வணங்கி வரவேற்கிறேன்..

  ReplyDelete
 22. கோதை, ஒரு சந்தேகம்..
  கையில ஒரு கிளி தானே இருக்கும், படத்துல ரெண்டு கிளி இருக்கே எப்புடி ?? அந்த ரெண்டாவது கிளி யாரு ??

  ஹைய்யா ஆண்டாளுக்கு முதல் கேள்வி அவளுக்கு பிரியமான வில்லிபுத்தூர்க்காரனிடம் இருந்து..

  ReplyDelete
 23. //"குமரன் வீட்டுல அண்ணி உனக்குத் தண்ணி கூட காட்ட மாட்டாங்க! பதிவு-ன்னாலே அண்ணி கையில பூரிக்கட்டை பறக்கும்! சக்கரத்தை விட அது பவர்ஃபுல் ஆயுதம் தெரியும்-ல //

  ஆண்டாளுக்கு தவறான தகவலை கொடுத்ததற்கு என் கண்டனங்கள் :)

  தமிழ் கோதை தமிழாகிய குமரன் வீட்டுக்கு போகாம இருப்பாளா..?? அதுலயும் தன் மனத்துக்கினியானின் ஊர்க்காரராச்சே.. :)

  ReplyDelete
 24. //இது வரைக்கும் லோக்கலா, ஜாலியாவோ ஒருத்தர் கூட பிரிச்சி மேயலையே- //

  ஆஹா... கிளம்பிட்டாருய்யா.. கிளம்பிட்டாரு.. :)

  ReplyDelete
 25. //என்னபரிசென்று
  எண்ணப்பறவை
  சிறகடித்து
  விண்ணில் பறக்கின்றதே!
  பட்டுப்புடவையா
  பாரதம் டு கொலம்பஸ் கண்டுபிடிச்ச தீவுக்கு
  ஃப்ரீயா ப்ளேன் டிக்கட்டா:) //

  ஷைலூ,

  ஆன்மீகம் பேசாம இப்படி லௌகீகமாப் பேசுனா எப்படி?
  கவனமா இருக்கணும், அவர் பாட்டுக்கு ஆண்டாளைப் பார்க்க 'டிக்கெட்' கொடுத்துறப்போறாரு!!!!

  ReplyDelete
 26. இராகவ். அந்த இன்னொரு கிளி அருணகிரிநாதக் கிளின்னு சொன்னாரு ஒரு நண்பர்.

  ReplyDelete
 27. //அவர் பாட்டுக்கு ஆண்டாளைப் பார்க்க 'டிக்கெட்' கொடுத்துறப்போறாரு//

  பெங்களூருவிலிருந்து திருவரங்கத்திற்குத் தானே?! அங்கே தானே சின்ன ஆண்டாள் சன்னிதி, பெரிய ஆண்டாள் சன்னிதியெல்லாம் இருக்கிறது? இல்லாட்டி நாச்சியார் திருமாளிகையான தென்புதுவைக்கா? எதுன்னாலும் ஓகே தானே திருவரங்கப்ரியா அக்கா. :-)

  ReplyDelete
 28. //"மொதல்ல மார்கழி முப்பதும் முடி! பொங்கல் அன்னிக்கிப் பாக்கலாம்! அச்சோ! நேரமாச்சு! நான் வரேன்டா!"
  //

  ஆஹா.. சூப்பர் ஆண்டாளுக்கு தெரியாதா ட்ரிக்கா?? 107 திவ்யதேச எம்பெருமான்களையும் சமாளித்து அரங்கனை அணைத்தவள் ஆயிற்றே..

  ReplyDelete
 29. அப்பாவிக் குமரன். ஹூம்:-))))

  ReplyDelete
 30. //துளசி கோபால் said...
  அப்பாவிக் குமரன். ஹூம்:-))))//

  டீச்சர் கலக்கிங்கஸ்! :)

  ReplyDelete
 31. //துளசி கோபால் said...
  ஷைலூ,
  ஆன்மீகம் பேசாம இப்படி லௌகீகமாப் பேசுனா எப்படி?//

  அதானே நல்லாக் கேளுங்க டீச்சர்...ஷைலு அக்காவை மட்டும்! என்னை இல்ல! :)

  //கவனமா இருக்கணும், அவர் பாட்டுக்கு ஆண்டாளைப் பார்க்க 'டிக்கெட்' கொடுத்துறப்போறாரு!!!!//

  ஹிஹி!
  டிக்கெட் ஆச்சும் பரவாயில்லை டீச்சர்! அல்வா-ல்ல கொடுக்கறாங்க தென்பாண்டிக் காரவுக? :)

  பால்கோவா விக்குது கோயில் ஃபுல்லா! இன்னும் கொஞ்ச நாள்-ல திருப்பதி லட்டு மாதிரி, புத்தூர் பால்கோவா ஆனாலும் ஆயிடும் போல! :)

  ReplyDelete
 32. அதி காலையில் தனுர் மாத பூஜையில் திருப்பாவை சாற்றிவிட்டு வீடு வந்து கணினியைத் திறந்தால் மாதவிப்பந்தலில் ஆண்டாள். மார்கழி நன்றாகத் துவங்கிவிட்டது. நன்றி ரவி, இனி முப்பது நாளும் உங்கள் பதிவு நன்று மலர வாழ்த்துக்கள்.
  ஷோபா

  ReplyDelete
 33. //G.Ragavan said...
  கோதை ஆண்டாள்
  தமிழை ஆண்டாள்//

  எம்மையும் ஆண்டாள்
  உம்மையும் ஆண்டாள்
  மும்மையும் ஆண்டாள்! :)

  //மாலவன் மார்களிக்க மார்கழியில் தாரளித்து வென்றவள் கோதை//

  மார்கழியில் மட்டுமில்லை ராகவா! நாள்தோறும் தாரளித்து நாயகனைக் கட்டுபவள்! நாரணனை முட்டுபவள்! :)

  //காதலர்களுக்கு அவள் அன்று காட்டியதே வெற்றிப் பாதை. அதை விடவா இனிக்கும் கண்ணனின் கீதை!//

  ஹா ஹா ஹா
  கண்ணன் சொன்னது கீதோபநிஷத் என்றால் எங்கள் கோதை சொன்னதோ கோதோபநிஷத்! :)

  கோதைக்கு முதல் பின்னூட்டம் ராகவன் என்பது எனக்கு அகமும் செகமும் மிகவும் மகிழ்வே!

  ReplyDelete
 34. //Nilofer Anbarasu said...
  இந்த தமிழ்மண கருவிப்பட்டையை எப்படி வலைப்பூவில் சேர்ப்பது? ஏதாவது லிங்க் கொடுத்து உதவ முடியுமா?//

  http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

  //என்னுடைய பதிவில் மிகவும் பெரிதாக தெரிகிறது. எனக்கு இது போல் சிறிதாக இருக்கும்படி மற்ற வேண்டும்//

  இல்லையே, ஒரே அளவாகத் தான் தமிழ்மணப் பட்டை தெரியும்!
  இங்கே சொல்லி உள்ள படி செய்து பாருங்களேன் அன்பரசு...
  http://blog.thamizmanam.com/archives/51

  ReplyDelete
 35. //துளசி கோபால் said...
  ஹைய்யோ.............
  ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. பந்தக் காலில் நிற்கின்றேன்//

  சொந்தக் காலில் நின்று வெற்றி நடை போடும் டீச்சர்
  பந்தக் காலில் நிற்பதும் அடியேனுக்குப் பெருமையே!

  மார்கழி முப்பதும் வந்திருந்து, கோதை கல்யாண வைபோகத்தை நீங்க தான் டீச்சர் நடத்திக் கொடுக்கணும்!

  ReplyDelete
 36. //Sridhar Narayanan said...
  ஏய்ய்..அப்பா! ஒரு ரேஞ்சுக்குத்தான் எழுதறீரு//

  அண்ணாச்சி! சினிமாவும், ஸ்லேங்கும் கலந்து புனிதமான ஆன்மீகத்தை டைல்யூட் செய்யறேன்னு நீங்க திட்டலை தானே? :)

  //முன்னர் ஒரு முறை இரா முருகன் இராயர் காப்பி கிளப்புல எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருது. அசத்துங்க//

  எல்லாம் ஒங்க ஆசிர்வாதம்! கொத்ஸ் சொல்வது போல வேணும் வேங்கடவன் சகாயம்! :)

  ReplyDelete
 37. //ஷைலஜா said...
  ஆர்வமுடன் பந்தலில் நுழையுங்கால்
  கார்மேனிராகவ்னைக்கண்டேன்//

  யக்கா எங்க ராகவன் கார் மேனியா? நல்லா சேப்பு மேனி! சேயோன் நாட் மாயோன்! :)

  //தமிழ்த் தேராய் கவிதை நடப்ப‌தையும் ரசித்தேன்!//

  அது கவிதை நடக்கலை-க்கா! ராகவன் நடந்தது!

  நடைக் கவிதை நடக்க,
  நயக் கவிதை நயக்க,
  கண்ணபிரான் பதிவில்
  ராமபிரான் ராகவன்
  நடந்தானோ இல்லை நயந்தானோ,
  நற்றமிழ் பயந்தானோ இல்லை கோதைக்குப் பயந்தானோ? :)

  ReplyDelete
 38. //ஷைலஜா said...
  //அதாவது கேள்விகேட்கவேண்டாம் என்றில்லை! மகிழ்ச்சிக்குக்கேட்கவே வேண்டாம் என்று பொருள்!!//

  அதானே பார்த்தேன்! நீங்க சும்மா இருந்தாலும் எமனேஸ்வரத்தாரு வந்து ஏத்தி விடுவாரே! :)

  //ஆமா ஆன்மீக சந்தேகக்கேள்வி என்ன வேன்டுமானாலும் கேட்கலாமில்லையா , கேள்வியின்(நியூயார்க்) நாயகனே!(கேஆரெஸ்) என் கேள்விக்கு பதில் ஏதய்யா!:)//

  நாவில் கேட்கப் போவது நீர்!
  செவியில் கேட்கப் போவது அவள்!
  நடுவில் நானென்ன அக்கா?
  அவளிடம் அடி வாங்க அவன் இருக்கான்! :)

  அடியேன் அவனை அடியேன்!
  அவன் அடியைப் பிடியேன், என
  அவள் காட்ட நொடியேன்!

  ReplyDelete
 39. Mikavum rasithu padithen! Cheers!

  ReplyDelete
 40. //OSAI Chella said...
  Mikavum rasithu padithen!//

  ஆகா...ஓசை செல்லா ஓசை படாம வந்திருக்காரு! :)

  //Cheers!//

  Cheers அண்ணாச்சி! :)

  ReplyDelete
 41. //கோதை, ஒரு சந்தேகம்..
  கையில ஒரு கிளி தானே இருக்கும், படத்துல ரெண்டு கிளி இருக்கே எப்புடி ??//

  //குமரன் (Kumaran) said...
  இராகவ். அந்த இன்னொரு கிளி அருணகிரிநாதக் கிளின்னு சொன்னாரு ஒரு நண்பர்//

  யாருங்க அந்த நட்புக் கிளி நண்பரு? :)

  படத்தில் இருப்பது ஜோடிக்கிளி மாதிரி இருக்கு! ஸோ, அருணகிரியும் இல்லை! சுக முனிவரும் இல்லை! :)

  ReplyDelete
 42. //குமரன் (Kumaran) said...
  ஆய்மகளைக் கொண்டாடுவதற்காக பூமகளைக் குறைக்க வேண்டுமா?//

  அச்சோ...நான் எங்கே குறைச்சேன்?

  //திருமகளையும் குறைக்க வேண்டுமா?//

  அச்சோ...நான் எங்கே குறைச்சேன்?

  அறம் = மண்மகள், பூமிப்பிராட்டி
  பொருள் = திருமகள்
  இன்பம் = ஆய்மகள், நப்பின்னை

  இப்படித் தானே சொன்னேன்! என்னைய அன்னையரிடம் இப்படி மாட்டி விடறீங்களே குமரன்? வேணும்னா அவனிடம் மாட்டி விடுங்க! கண்டுக்க மாட்டேன்! :)

  ReplyDelete
 43. //குமரன் (Kumaran) said...
  காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்று பாடிக் கொண்டு பந்தலுக்கு வந்துவிட்டாளா பைங்கொடி? :-(//

  ஆகா! அவள் பந்தலில் இருந்து பாடியவள் தானே! பந்தல் அவளுக்குப் புதிதா என்ன? :)

  நீங்க காக்கவெல்லாம் வைக்கலை குமரன்! நீங்கள் சொல்வது கதை! அடியேன் சொல்வது பாசுரம்! எனது முப்பது நாளில் முடிந்து விடும்! தங்களுடையதோ...என்றும் கதைக்கப்படும்!

  மார்கழியில் அடியேன் முடித்த பின்னர், தையொரு திங்களாய், கோதைத் தமிழ் வலைப்பூவினை மீள்-துவங்குங்கள்! திங்களுக்கொரு பதிவு போடும்! எங்களுக்கொரு பதிவு போதும்! :)

  ReplyDelete
 44. //Raghav said...
  //"குமரன் வீட்டுல அண்ணி உனக்குத் தண்ணி கூட காட்ட மாட்டாங்க! பதிவு-ன்னாலே அண்ணி கையில பூரிக்கட்டை பறக்கும்! சக்கரத்தை விட அது பவர்ஃபுல் ஆயுதம் தெரியும்-ல //

  ஆண்டாளுக்கு தவறான தகவலை கொடுத்ததற்கு என் கண்டனங்கள் :)//

  உங்கள் கண்டனங்களுக்கு எங்கள் வந்தனங்கள்! :)

  ஆண்டாளுக்குத் தவறான தகவலும் கொடுக்கப் போமா? அவளும் அதை எடுக்கப் போமோ? எடுத்துத் தொடுக்கப் போமோ? தொடுத்து முடிக்கப் போமோ?

  அவள் அறிவுக் கொழுந்து! அவளுக்கு தகவல் கொடுக்க வேண்டியதே இல்லை! :)))

  //தமிழ் கோதை தமிழாகிய குமரன் வீட்டுக்கு போகாம இருப்பாளா..?? அதுலயும் தன் மனத்துக்கினியானின் ஊர்க்காரராச்சே.. :)//

  தாராளமாப் போவா! போகனும்! குமரனின் கோதைத் தமிழில் பதிவுகள் வரலையேன்னு போகாம இருந்தா, அவ நடு மண்டையில் நச்-ன்னு கொட்டுவேன்! :)

  ஆனா அங்கே போயி, குமரனைப் பதிவு போடு-ன்னு பிரெஷ்ஷர் கொடுக்கக்கூடாது! பாவம் அவரு! பாவம் அண்ணி! அதான் சொன்னேன்!

  கோதையின் துடுக்கை நான் அடக்கவும், என் துடுக்கை அவள் அடக்கவும் எங்களுக்குள் எந்தை தநதை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிக் கால ஐ.நா. ஒப்பந்தம் இருக்கு! தெரிஞ்சிக்கோங்க :)

  ReplyDelete
 45. //* திருமகள், மண்மகள் - இருவரும் அவனை அடைந்தார்கள்!
  * நப்பின்னையை - இவன் அடைந்தான்!
  வலியச் சென்று, கஷ்டப்பட்டு அடைந்தான்! அனைவரிலும் இளையவள்! இளமையானவள்!//

  இங்க தான் குறைச்சீங்க. அதனால தான் திருமகளையும் மண்மகளையும் அவன் எப்படி தேடி அடைந்தான் என்று காட்டும் அவன் செயல்களைச் சொன்னேன். :-)

  ReplyDelete
 46. குமரன் (Kumaran) said...
  //* திருமகள், மண்மகள் - இருவரும் அவனை அடைந்தார்கள்!
  * நப்பின்னையை - இவன் அடைந்தான்!//

  இங்க தான் குறைச்சீங்க.//

  ஓ...அப்படிப் பொதுவாச் சொன்னா அது கொறைச்சலா?

  அவனைத் தேடி அடைந்தால் அது குறைச்சல்!
  அவனே நம்மைத் தேடி அடைந்தால் அது உயர்த்தியோ?

  குரங்குக்குட்டி குறைச்சல்!
  பூனைக்குட்டி உசத்தி!
  அதானே சொல்ல வரீங்க குமரன்?
  உங்க "பூனைக்குட்டி" வெளியே வந்து விட்டது! ஹா ஹா ஹா! :))

  ReplyDelete
 47. ஆஆ என்று ஆராய்ந்து அருள் - இதுக்கு பொருள் சொல்றப்ப சொல்லுங்க அவனை தேட் நாம் அடைந்தால் அது உயர்வா அவனே நம்மைத் தேடி அடைந்தால் அது உயர்வா என்று. :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP