Friday, August 22, 2008

மிஸ். பாவனா & பிரபல பதிவர்கள் நடிக்கும் "பதிவுலக ரோமாயணம்"!

தமிழ் கூறும் வலையுலகப் பெருமக்களே!
வலையுலக வரலாற்றில் முதல் முறையாக....
கனவுக் கன்னி பாவனா, கதாநாயகியாகத் தோன்ற...

அடுத்த வாரம், உங்கள் அபிமானத் திரையரங்கு,
மாதவிப் பந்தல் (Dolby Digital-A/C)-இல் காணத் தவறாதீர்கள்...
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ரிலீஸ்...


*** Blogayanam - பதிவுலக ரோமாயணம்! ***


அண்ணன் கானா பிரபாவின் பத்து தலை மாயா ஜாலக் காட்சிகள்!

உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர் உலா வரப் போகும், பதிவுலக ஆதி காவியம்
BLOGAYANAM!
அதுவே பதிவர்கள் ரோமாயணம்!

* கானா பிரபா
* கோவி கண்ணன்
* சீவீயார்
* கேஆரெஸ்
* குசும்பன்

* மங்களூர் சிவா
* துர்கா தேவி
* ரிஷான் ஷெரீப்
* ச்சின்னப் பையன்

* பாஸ்டன் பாலா
* ஜீவ்ஸ் அண்ணாச்சி
* துளசி டீச்சர்
* மதுரையம்பதி

இவர்களுடன் கவுரவ வேடத்தில், கப்பி பய & வெட்டிப்பயல் & இன்னும் உங்கள் அபிமான முன்னணிப் பதிவர்கள்...

* யார் யாருக்கு என்ன ரோல்?
** யார் வேண்டுமானாலும் இப்போதே விவாதிக்கலாம்!


* கதை-திரைக்கதை: KRS
* வசனம்-டைரக்ஷன்: பின்னூட்டப் பதிவர்கள்
* தயாரிப்பு: SPVR சுப்பையா
* இசை: தேன் கிண்ணம்
* ஒளிப்பதிவு: PIT
* ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்
* சிறப்பு மாயாஜால ஸ்டண்ட் காட்சிகள்: மைஃபிரெண்டு

காணத் தவறாதீர்!!!!!!!!!!

(இந்தப் படத்தில், பாவனா பைக்கில் உள்ள ஸ்டிக்கரையும், பக்கத்தில் உள்ள பதிவரையும், நன்றாக நோட் சேஸ்கோண்டி! கதையின் திருப்பு முனை, நெருப்பு முனை புரிந்து விடும்!)

107 comments:

 1. :-))))))


  மனிரத்னத்துடைய ராமாயண கதை பூஜைக்கு முன்னாடியே மாதவிப்பந்தலில் திருட்டு சீடி ரிலீஸ் ஆகுதா? இந்த மாதிரி ஷோ பார்க்கிறதுலதானே ட்ரில்லே. ;-)

  ReplyDelete
 2. ஆஹா.. நம்ம இசைப்புயல் பிரபா ராவணனா?

  சீதாவை கடத்துற அந்த காட்சியை நான் பார்க்கணுமே!!! ;-)

  ReplyDelete
 3. ஸ்டார் இல்லாம ஒரு பதிவுலக ரோமாயணமா?...ஏன் இப்படி?

  ReplyDelete
 4. எல்லாம் சரி.. அந்த கடைசி போட்டோல பாவனாவுக்கு வலது பக்கம் காத்துல குதிரை ஓட்டுறாரே? அவர் யார்? ஓ.. பிரபா ராவணனுடைய குதிரை ஓட்டுனரா? :-P

  ReplyDelete
 5. //* சிறப்பு மாயாஜால ஸ்டண்ட் காட்சிகள்: மைஃபிரெண்டு//

  அட.. என் பேரு என் பேரு. :-P

  ReplyDelete
 6. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  எல்லாம் சரி.. அந்த கடைசி போட்டோல பாவனாவுக்கு வலது பக்கம் காத்துல குதிரை ஓட்டுறாரே? அவர் யார்?
  //

  ஜெய் ஸ்ரீ ராம்!

  பொய் ராயல் ராம்!

  :)

  ReplyDelete
 7. //* ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்//

  ஜீவ்ஸ் அண்ணாச்சியை வச்சி காமேடி கீமடி பண்ணலையே? :-P

  ReplyDelete
 8. ஹலோ கேஆரெஸ்ஸூ

  ஆஹா, ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரு.

  ஆஹா... ஓஹோ !!!!!!

  நடத்துங்கண்ணே....ம்ம்ம்ம்

  அப்படி போடு போடு போடு.

  ReplyDelete
 9. ஏண்ணா

  என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணிலியே ;)

  ReplyDelete
 10. :))))


  போட்டுத் தாக்குங்கண்ணா :))

  ReplyDelete
 11. ஆ... ஆட்டத்திலே என்னோட பேரும் இருக்கா?
  அண்ணா.. பாத்து செய்ங்க... உங்களுக்கு நிறைய பின்னூட்டம் போட்டிருக்கேன்.... அவ்வ்வ்வ்.........:-)))

  ReplyDelete
 12. என்னையும் வச்சுக் காமெடி பண்ண ஆரம்பிச்சாச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  (பாவனா கூட ஒரு ஸ்டில் ஜூப்பராப் போடுங்க அண்ணாச்சி )

  ReplyDelete
 13. க்கிகிகிகி கானாஸ் தான் இரவணனா..:P

  ReplyDelete
 14. /
  ச்சின்னப் பையன் said...

  ஆ... ஆட்டத்திலே என்னோட பேரும் இருக்கா?
  அண்ணா.. பாத்து செய்ங்க... உங்களுக்கு நிறைய பின்னூட்டம் போட்டிருக்கேன்.... அவ்வ்வ்வ்.........:-)))
  /

  ரிப்பீட்டு

  ReplyDelete
 15. பாவனா நடிக்கிதுன்னா நான்தான்பா ஈரோ!!

  ReplyDelete
 16. ரோமாயணம்னா காடுமேடெல்லாம் சுத்தவிட்ருவாய்ங்களோ!?!?

  ReplyDelete
 17. ஜில்லுனு மலேசியால ஒரு டூயட்டு சுவிசர்லாந்துல ஒரு டூயட்டுனு இருக்காதோ!?!?
  :((

  ReplyDelete
 18. அந்த அனுமார் வேஷத்தை மட்டும் நம்ம மங்களூர் சிவாவுக்குத் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டார் பா.
  அதுக்காகவே இவ்ளோ நாளா முதுகுல பேக்கோட அலையுறாராம்..

  ReplyDelete
 19. /
  எம்.ரிஷான் ஷெரீப் said...

  அந்த அனுமார் வேஷத்தை மட்டும் நம்ம மங்களூர் சிவாவுக்குத் தரச் சொல்லிக் கேட்டுக்கிட்டார் பா.
  அதுக்காகவே இவ்ளோ நாளா முதுகுல பேக்கோட அலையுறாராம்..
  /

  ஏன்யா இந்த கொலவெறி

  ReplyDelete
 20. நாந்தான் ஈரோ வேசம் வேணும்னு துண்டுபோட்டு அங்கயே படுத்துகினு இருக்கேன்ல

  :)))

  ReplyDelete
 21. அதெப்படி..ஒரு ஈரோயினுக்கு ரெண்டு ஈரோ?
  சிவா அண்ணாத்த...படத்துல பாவனாவுக்கு ஒண்ணு விட்ட சித்தப்பா கேரக்டர் ஒண்ணு இருக்கு. அதைப் பண்ணுங்க..

  ReplyDelete
 22. எனக்கு எதாவது வேஷம் கிடைக்குமா.?

  ஏக்கத்துடன்
  அரவிந்தன்

  ReplyDelete
 23. மங்களூர் சிவாவுக்கு ஏத்த ரோல்-என்னான்னு? அடுத்த மின்னஞ்சல் கும்மியைத் தொடங்குங்க ஜீவ்ஸ் அண்ணாச்சி!

  ReplyDelete
 24. //ச்சின்னப் பையன் said...
  அண்ணா.. பாத்து செய்ங்க... உங்களுக்கு நிறைய பின்னூட்டம் போட்டிருக்கேன்.... அவ்வ்வ்வ்.........:-)))//

  ச்சின்னப் பையரே
  நெசமாலுமே ரோமாயணத்துல நீரு சின்னப் பையன் தான்! Keep guessing :)

  ReplyDelete
 25. //கப்பி | Kappi said...
  :))))
  போட்டுத் தாக்குங்கண்ணா :))//

  கப்பிக்கு மட்டும் தான் ரோல் முடிவாகலை!
  அசுர ஃபிகர்களும் லுக்குதுங்க! தேவ ஃபிகர்களும் லுக்குதுங்க!

  ஒரே கன்பூசன்ஸ் ஆஃப் காஞ்சிபுரம்! யாராச்சும் தீத்து வைங்க!

  ReplyDelete
 26. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  ஆஹா.. நம்ம இசைப்புயல் பிரபா ராவணனா?
  சீதாவை கடத்துற அந்த காட்சியை நான் பார்க்கணுமே!!! ;-)//

  நல்ல வேளை கஞ்சா கடத்துறதைப் பாக்கணுமே-ன்னு சொல்லாமப் போனீங்களே! பாவம் காபி அண்ணாச்சி!

  ReplyDelete
 27. //மங்களூர் சிவா said...
  ரோமாயணம்னா காடுமேடெல்லாம் சுத்தவிட்ருவாய்ங்களோ!?!?//

  ராமாயணத்துல தான் பதினாலு வருசம் காடு மேடு சுத்தினாங்களே! போதாதா? ஏன் சிவா ஒனக்கு சீதா=பாவனா மேல எப்பமே ஒரு கொலை வெறி? :(((

  ReplyDelete
 28. //அரவிந்தன் said...
  எனக்கு எதாவது வேஷம் கிடைக்குமா.?
  ஏக்கத்துடன்
  அரவிந்தன்
  //

  கேளுங்கள் கொடுக்கப்படும்!
  மங்களூர் சிவாவைத் தட்டுங்கள், திறக்கப்படும்! :)

  ReplyDelete
 29. //மங்களூர் சிவா said...
  நாந்தான் ஈரோ வேசம் வேணும்னு துண்டுபோட்டு அங்கயே படுத்துகினு இருக்கேன்ல//

  ஈரோ வேசம் கட்டுறவங்க ஃபோட்டோவைத் தான் போட்டுருக்கோம்-ல!

  இதுக்கெல்லாம் ஃபோட்டோ கேட்டு PIT போட்டி நடத்த முடியுமா? :)))

  ReplyDelete
 30. //இராம்/Raam said...
  :))//

  அண்ணலும் சிரிச்சிட்டான்!
  அவளும் சிரிச்சிட்டா!
  :))

  ReplyDelete
 31. //மங்களூர் சிவா said...
  பாவனா நடிக்கிதுன்னா நான்தான்பா ஈரோ!!//

  அத நான் சொல்லணும் மங்களூரு...

  ReplyDelete
 32. //கானா பிரபா said...
  ஏண்ணா
  என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணிலியே ;)//

  ஒண்ணு பண்ணல அண்ணாச்சி!
  ரெண்டு, மூனு-ன்னு பலதும் பண்ணப் போறோம்!
  நீங்க தான் எங்க ஊறுகாய்! :)

  ReplyDelete
 33. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  அதெப்படி..ஒரு ஈரோயினுக்கு ரெண்டு ஈரோ?//

  என்ன ஒரு ஆணாதிக்கம்? Too bad Rish!
  தலைவர் ரஜினிக்கு ரெண்டு ஹீரோயினு!
  உலக நாயகன் கமலுக்கு ரெண்டு ஹீரோயினு!
  பதிவர்களின் பாவனாவுக்கு ரெண்டு ஹீரோ கூடாதா?

  //சிவா அண்ணாத்த...படத்துல பாவனாவுக்கு ஒண்ணு விட்ட சித்தப்பா கேரக்டர் ஒண்ணு இருக்கு. அதைப் பண்ணுங்க//

  ஒண்ணு விட்ட சித்தப்பா கேரக்டர் ரெண்டு இருக்கு! இன்னோன்னு யாருக்குக் கொடுக்கலாம்?

  ReplyDelete
 34. முருக பக்தர் கானாவை இராவணாசுரனாக்கியமையிட்டு எனது ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 35. முருக பக்தர் கானாவை இராவணாசுரனாக்கியமையிட்டு எனது ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 36. //ச்சின்னப் பையரே
  நெசமாலுமே ரோமாயணத்துல நீரு சின்னப் பையன் தான்! Keep guessing :)
  //

  ச்சின்ன வயசு ராமர்னா, ஹீரோயின் கிடையாது.... ச்சின்ன வயசு ராவணன்னா சுத்தி அரக்கிங்கல்லாம் நின்னு பாத்துப்பாங்க... ரெண்டுமே கஷ்டம்தாம்பா..... அவ்வ்வ்வ்....

  ReplyDelete
 37. //நாந்தான் ஈரோ வேசம் வேணும்னு துண்டுபோட்டு அங்கயே படுத்துகினு இருக்கேன்ல//

  துண்டு கட்டிண்டுன்னு படிச்சி ஒரு நிமிஷம் டக்குன்னு வெக்கத்திலே கண்ணை மூடிக்கிட்டேன்... :-)))

  ReplyDelete
 38. //ச்சின்னப் பையன் said...
  துண்டு கட்டிண்டுன்னு படிச்சி ஒரு நிமிஷம் டக்குன்னு வெக்கத்திலே கண்ணை மூடிக்கிட்டேன்... :-))) //

  ஹா ஹா ஹா
  :)))

  ReplyDelete
 39. எனக்கொரு ரோலும் இல்லையா?

  அட்லீஸ்ட் ப்ரொட்யூசர் ரோலாவது தாங்கய்யா..

  என்னது? அதுக்கு காசு செலவு பண்ணனுமா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 40. நாந்தானுங்க பாவனாவோட மேக்கப் மேன்..

  ReplyDelete
 41. அனைத்து வேடங்களையும் செய்ய குடுகுடுப்பையார் தயார்.

  ReplyDelete
 42. தல

  சூப்பரு....;))

  ஏற்கனவே பேசியது போல் என் ரோல் எனக்கு வரனும் ஆமா...இல்ல அவ்வளவு தான் ;))

  ReplyDelete
 43. இதுல எங்க முருகன் இல்லையா!!??

  அதான் ஜிரா இல்லையா!!! ;))

  ReplyDelete
 44. //கோபிநாத் said...
  ஏற்கனவே பேசியது போல் என் ரோல் எனக்கு வரனும் ஆமா...இல்ல அவ்வளவு தான் ;))//

  மாப்பி கோப்பி...வாய்யா...
  How wazz oors? ராயபுரம் எல்லாம் ஒரே விழாவாமே!:)

  உனக்கில்லாத ரோலா? கொடுத்திருவோம்! மாயமான் ஓக்கேயா? :)

  ReplyDelete
 45. //இதுல எங்க முருகன் இல்லையா!!??
  அதான் ஜிரா இல்லையா!!! ;))//

  இன்னும் உங்கள் அபிமான முன்னணிப் பதிவர்கள்-ன்னு சொல்லி இருக்கேனே!
  அப்படி இருந்தும் இப்படி கேக்கலாமா? எங்க முன்னணிப் பதிவர் முருகன் மேல ஒனக்கு ஏம்பா கொலவெறி? :)

  சென்ற முறை எங்க ஜிரா பதிவுலகப் பரந்தாமன்-அடியேன் அர்ஜூனன்!
  இந்த தபா, எப்படிச் சந்திச்சிக்கப் போறோமோ? எனக்கே ஜஸ்பென்ஸா இருக்கு! :)

  ReplyDelete
 46. //பரிசல்காரன் said...
  அட்லீஸ்ட் ப்ரொட்யூசர் ரோலாவது தாங்கய்யா..//

  வாங்க பரிசல்காரன்!

  எது என்ன அட்லீஸ்ட்?
  குசேலன் படத்துக்கு நட்ட ஈடு கேட்டு பணக்காரவுங்க ஆகப் போறாங்கள்ள ப்ரொட்யூசர்கள்? :))

  ReplyDelete
 47. //Raghav said...
  நாந்தானுங்க பாவனாவோட மேக்கப் மேன்..//

  தோடா
  பாவனா ஹேஸ் ஒன்லி மேக்கப்-வுமன்! :)

  ReplyDelete
 48. //குடுகுடுப்பை said...
  அனைத்து வேடங்களையும் செய்ய குடுகுடுப்பையார் தயார்.//

  டி ராஜேந்தரை எப்படிங்க ஐயா ராமாயணத்துல நடிக்க வைக்கிறது? :)

  ReplyDelete
 49. //மை ஃபிரண்ட் ::. said...
  மனிரத்னத்துடைய ராமாயண கதை பூஜைக்கு முன்னாடியே மாதவிப்பந்தலில் திருட்டு சீடி ரிலீஸ் ஆகுதா?//

  பின்ன எம்புட்டு நாளு தான் வெண்ணெய் திருடறது! அதான் பார் ஏ சேஞ்ச், சீடி! :)

  //இந்த மாதிரி ஷோ பார்க்கிறதுலதானே ட்ரில்லே. ;-)//

  திரில்லர் ஆப் கானாஸ்! :)

  ReplyDelete
 50. //மதுரையம்பதி said...
  ஸ்டார் இல்லாம ஒரு பதிவுலக ரோமாயணமா?...ஏன் இப்படி?//

  அலோ
  பாவனாவைப் பாத்தா ஸ்டாரா தெரியலையா உங்களுக்கு?
  கைலாசத்தில் இருந்து இறங்கி வாங்க, சினிமா தியேட்டருக்கு :)

  ReplyDelete
 51. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  //* சிறப்பு மாயாஜால ஸ்டண்ட் காட்சிகள்: மைஃபிரெண்டு//

  அட.. என் பேரு என் பேரு. :-P//

  ஆதியும் நீயே! மீதியும் நியே! :p

  ReplyDelete
 52. //மை ஃபிரண்ட் ::. said...
  ஜீவ்ஸ் அண்ணாச்சியை வச்சி காமேடி கீமடி பண்ணலையே? :-P//

  அவர வச்சி ஃபோட்டோ போட்டி தான் நடத்த முடியும்! :)

  ReplyDelete
 53. //ஜெகதீசன் said...
  :)))000//

  ஜெகா
  சிரிப்புக்கு அப்பறம் எதுக்கு பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம்? :)

  ReplyDelete
 54. டைரக்டர் சார்,

  இந்தப்படத்துல நடிக்கிறது பத்தி எனக்கு ஆட்சேபனை எதுவுமில்ல.

  என்னோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கணும் ..அப்புறம் நான் தங்குறதுக்கு 5 ஸ்டார் ஹோட்டல், குளிக்கிறதுக்கு மினரல் வாட்டர் எல்லாம் ஏற்பாடு பண்ணிடுங்க. ஸ்பாட்ல ரெஸ்ட் எடுக்க எல்லா வசதியோடவும் ஒரு கேரவன் வேன் வேணும். அப்புறம் இந்த பாவனா பொண்ணு தினமும் என் காலடிக்கிட்ட வந்து "சார் வணக்கம்"னு சொல்லணும்.

  அப்புறம் என்னோட அம்மா கேரக்டருக்கு நதியா, ரம்யா கிருஷ்ணன், அமலான்னு வயசானதுங்களப் போடாம சிம்ரன், லைலா, ஸ்வாதி மாதிரி யாரையாவது போடுங்க.

  படத்துக்கு சம்பளம் எனக்கு ஒரு ரூபா போதும். அட்வான்ஸ் மட்டும் 4 கோடி கையில கொடுத்துடுங்க.

  அப்புறம் படம் ரிலீஸ் அன்னிக்கு என்னோட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் மட்டும் போதாது. தேனாபிஷேகமும் பண்ணிடுங்க.

  அப்புறம் முக்கியமான மேட்டர். உங்க அடுத்த படத்துக்கு பாவனா மாதிரி வயசுல பெரியவங்களை எனக்கு ஜோடியா போட்டுடாதீங்க. வேணும்னா அந்த அஜித் பொண்ணு,இல்லேன்னா சூர்யா பொண்ணுக்கிட்ட இப்பவே அட்வான்ஸ் கொடுத்துவைங்க ..

  சார்..டைரக்டர் சார்..எங்கே ஓடுறீங்க...நில்லுங்க சார் :P

  ReplyDelete
 55. //Sumathi. said...
  ஹலோ கேஆரெஸ்ஸூ
  ஆஹா, ஆரம்பிச்சுட்டாரய்யா ஆரம்பிச்சுட்டாரு//

  யக்கா நான் எந்த ஆரத்தையும் பிக்கலையே-க்கா!
  அபாண்டமாச் சொல்லுதியளே!

  //அப்படி போடு போடு போடு//
  ஜீவ்ஸைத் தானே! தலையில ஒரே போடா போட்டுடறேன்! :)

  ReplyDelete
 56. //Thooya said...
  க்கிகிகிகி கானாஸ் தான் இரவணனா..:P//

  எஸ்ஸூ!
  தூயா நோட் பண்ணீக்குங்க! உங்களுக்கு மட்டும் சொல்லுறேன்!
  ** ராவணா வித் பாவனா **

  ReplyDelete
 57. //Anonymous said...
  முருக பக்தர் கானாவை இராவணாசுரனாக்கியமையிட்டு எனது ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

  ஆட்சேபணை ரிஜெக்டெட் :)

  இராவணன் சிவ பக்தன்!
  கானா முருக பக்தர்!
  கூட்டிக் கழிச்சிப் பாருங்க! :)

  ReplyDelete
 58. //ச்சின்னப் பையன் said...
  சின்ன வயசு ராமர்னா, ஹீரோயின் கிடையாது....//

  ஆங்...உண்மை வந்திரிச்சி பாருங்க!
  வேணும்னா பப்ளிக்கா கேட்டு வாங்கலாம்-ல?

  ரிசான்-லாம் ஹீரோயினா பாவனா வேணும்னு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம கேட்டு வாங்குறாரு-ல்ல? :)

  ReplyDelete
 59. //
  ச்சின்னப் பையன் said...
  //நாந்தான் ஈரோ வேசம் வேணும்னு துண்டுபோட்டு அங்கயே படுத்துகினு இருக்கேன்ல//

  துண்டு கட்டிண்டுன்னு படிச்சி ஒரு நிமிஷம் டக்குன்னு வெக்கத்திலே கண்ணை மூடிக்கிட்டேன்... :-)))
  //

  இந்த கிளுகிளு சீனை அப்பிடியே கதைல வச்சிடறேன்! :))))
  A++

  ReplyDelete
 60. எலே ரிசானு
  கொஞ்சம் வெயிட் மாடி!! :)

  //அப்புறம் நான் தங்குறதுக்கு 5 ஸ்டார் ஹோட்டல்//

  Cadburys 5 Star-aa?

  //அப்புறம் இந்த பாவனா பொண்ணு தினமும் என் காலடிக்கிட்ட வந்து "சார் வணக்கம்"னு சொல்லணும்//

  fyi-பாவனாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! அவங்க பொண்ணு கால்-ல வுழணும-னா எப்படி?

  //அட்வான்ஸ் மட்டும் 4 கோடி கையில கொடுத்துடுங்க//

  யாரு கையில? பாவனா கையில தான? பாவனா கையிலே என்னையே கொடுத்தாச்சி! :)

  //என்னோட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் மட்டும் போதாது. தேனாபிஷேகமும் பண்ணிடுங்க//

  உங்களைக் கட் பண்ணி அவுட்டே பண்ணிடறோம்! கவலைய விடுங்க ரிஷூ! :)

  ReplyDelete
 61. //எம்.ரிஷான் ஷெரீப் said...

  டைரக்டர் சார்,

  இந்தப்படத்துல நடிக்கிறது பத்தி எனக்கு ஆட்சேபனை எதுவுமில்ல.

  என்னோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கணும் ..அப்புறம் நான் தங்குறதுக்கு 5 ஸ்டார் ஹோட்டல், குளிக்கிறதுக்கு மினரல் வாட்டர் எல்லாம் ஏற்பாடு பண்ணிடுங்க. ஸ்பாட்ல ரெஸ்ட் எடுக்க எல்லா வசதியோடவும் ஒரு கேரவன் வேன் வேணும். அப்புறம் இந்த பாவனா பொண்ணு தினமும் என் காலடிக்கிட்ட வந்து "சார் வணக்கம்"னு சொல்லணும்.

  அப்புறம் என்னோட அம்மா கேரக்டருக்கு நதியா, ரம்யா கிருஷ்ணன், அமலான்னு வயசானதுங்களப் போடாம சிம்ரன், லைலா, ஸ்வாதி மாதிரி யாரையாவது போடுங்க.

  படத்துக்கு சம்பளம் எனக்கு ஒரு ரூபா போதும். அட்வான்ஸ் மட்டும் 4 கோடி கையில கொடுத்துடுங்க.

  அப்புறம் படம் ரிலீஸ் அன்னிக்கு என்னோட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் மட்டும் போதாது. தேனாபிஷேகமும் பண்ணிடுங்க.

  அப்புறம் முக்கியமான மேட்டர். உங்க அடுத்த படத்துக்கு பாவனா மாதிரி வயசுல பெரியவங்களை எனக்கு ஜோடியா போட்டுடாதீங்க. வேணும்னா அந்த அஜித் பொண்ணு,இல்லேன்னா சூர்யா பொண்ணுக்கிட்ட இப்பவே அட்வான்ஸ் கொடுத்துவைங்க ..

  சார்..டைரக்டர் சார்..எங்கே ஓடுறீங்க...நில்லுங்க சார் :P//

  ரிஷான்,
  லவ குசா படத்துல நடிக்க போற தலைவரோட பேரக்குழந்தை என்ன பேசும்னு நான் கற்பனையா எழுதி வெச்சிருந்ததை அனுப்பினா இப்படியா பப்ளிக்ல போடுவீங்க...

  டூ பேட்...

  ReplyDelete
 62. //ரிஷான்,
  லவ குசா படத்துல நடிக்க போற தலைவரோட பேரக்குழந்தை என்ன பேசும்னு நான் கற்பனையா எழுதி வெச்சிருந்ததை அனுப்பினா இப்படியா பப்ளிக்ல போடுவீங்க...//

  வெட்டிப்பயல் சார்,
  இது அபாண்டம்.
  அயோக்கியத்தனம்.
  இது என்னோட ஓவ்ன் கண்டிஷன்ஸாக்கும்.

  டைரக்டர் சார், இவருக்குச் சூர்ப்பனகை கேரக்டர் கொடுத்து நோஸ் கட் பண்ணிடுங்க :P

  ReplyDelete
 63. ட்ரைலரே சும்மா அதிருது. ராவணா வித் பாவனா சூப்பர்

  ReplyDelete
 64. இப்போதைக்கு உள்ளேன் ஐயா :)

  ReplyDelete
 65. நட்சத்திர பதிவருக்கே கௌரவ வேடம் தானா? அநியாயமா இருக்கே! சரி சரி.. சீக்கிரம் படத்தப் போடுங்கப்பா! எம்புட்டு நேரம் ட்ரெயிலரையே பாக்குறது? :)

  ReplyDelete
 66. மனசு கிடந்து தவியா தவிக்குதுங்கண்ணா!

  இந்த மாதிரி விஷயத்தில் நானெல்லாம் மீ தபர்ஸ்டூ சொல்லி கமெண்டலைன்னா என்ன ச்சே?


  லேட்டா வந்ததுக்கு மன்னிக்கோணும்


  எங்க கானா அண்ணன் வாழ்க

  ரோமாயணம் உலக நாடுகள் அனைத்திலும் சக்கை போடு போட வாழ்த்துக்கிறேன்

  இப்படிக்கு
  ஆயில்யன்
  தலைவர்
  ரோமாயண கானா ரசிகர் மன்றம்
  கத்தார்

  ReplyDelete
 67. அது ஆரு ஆஞ்சநேயர் மலைய தூக்க போகும் முன் கொடுக்கும் போஸ் போல போஸ் கொடுப்பது:))))

  ReplyDelete
 68. ரோமாயணத்தை முதல் காட்சியிலேயே பார்க்க மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ரசிகன் (ரசிகன் மட்டுமே)...

  ReplyDelete
 69. சபரி வேசம் கொடுத்துறாதீங்க.


  நல்ல நகை நட்டு முக்கியமாக் கிரீடம் எல்லாம் போட்டுக்கும் 'பாத்திரமா' இருக்கணும்.

  இல்லைன்னா..... டாக்டர் வேடம் கொடுத்தாலும் சரி.ஸ்டெத் வச்சுருக்கேன்:-))))

  ReplyDelete
 70. கே.ஆர்.எஸ். ஸார்..

  படத்துல யார் வேண்ணாலும், என்ன கேரக்டர் வேண்ணாலும் ஆக்ட் குடுத்துக்குங்க..

  யாரை வைச்சு வேணும்னாலும் மியூஸிக் போட்டுக்குங்க..

  யாரை வைச்சு வேணும்னாலும் கதை, திரைக்கதை, வசனம் எழுதிக்குங்க..

  எத்தனை பேரை வைச்சு வேணும்னாலும் டைரக்ஷன் பண்ணிக்குங்க..

  ஆனா.. இந்தப் படத்துக்கான விமர்சனத்தை நான் மட்டும்தான் எழுதுவேன்..

  சொல்லிப்புட்டேன்..

  ReplyDelete
 71. ஆரம்பிங்கோ,ஆரம்பிங்கோ, அதையும் பார்க்கலாம்

  ReplyDelete
 72. இன்னும் ஒரு வருசம் நான் பிளாக் பக்கமே வரல்லை..என்னை விட்டுடுங்க :((
  நான் ரொம்ப பாவம்

  ReplyDelete
 73. //துர்கா said...
  இன்னும் ஒரு வருசம் நான் பிளாக் பக்கமே வரல்லை..//

  மக்களே,
  இது நல்ல நியூஸா? இல்ல கெட்ட நியூஸா? :)

  //என்னை விட்டுடுங்க :((//

  ஹா ஹா ஹா
  துர்கா, ஒனக்கா இந்த நெலமை?

  //நான் ரொம்ப பாவம்//

  யூ மீன் பா+வி? :)

  ReplyDelete
 74. //Boston Bala said...
  இப்போதைக்கு உள்ளேன் ஐயா :)
  //

  பாபா
  அதான் உள்ளீங்களே ரோமாயணத்துல?
  பேரை வேற போட்டிருக்கோமே!
  மீண்டும் அதையே சொன்னா எப்படி? :)

  ReplyDelete
 75. me in friendu veedu...
  ithukku mela naan blog pakkam vantha o/c saapadu kidaikkathu!
  so matha reply ellam..esp for teacher..., veetukku pona piragu! ippo me the esc!

  ReplyDelete
 76. //வெட்டிப்பயல் said...
  ரிஷான்,
  லவ குசா படத்துல நடிக்க போற தலைவரோட பேரக்குழந்தை என்ன பேசும்னு நான் கற்பனையா எழுதி வெச்சிருந்ததை அனுப்பினா இப்படியா பப்ளிக்ல போடுவீங்க...
  டூ பேட்...//

  ஹா ஹா ஹா!
  Thus Spake Vetti!
  கலக்கல்!

  ரிஷூ, நீ அவ்ளோ ச்சின்னப்பையனா?
  நம்ம ச்சின்னப்பையன் தான் சின்னைப்பையன்!
  நீ அவரை விடச் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சின்னப்பையனா என்ன? :)

  ReplyDelete
 77. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  டைரக்டர் சார், இவருக்குச் சூர்ப்பனகை கேரக்டர் கொடுத்து நோஸ் கட் பண்ணிடுங்க :P//

  நோ வே!
  என்ன ஆணவம்?
  டைரக்டரையே டைரக்ட் பண்ணுறீங்களா?

  துர்கா ஜிஸ்டர், கொஞ்சம் இங்க வந்து இவரைக் கவனிச்சிக்கோம்மா!

  ReplyDelete
 78. //சின்ன அம்மிணி said...
  ட்ரைலரே சும்மா அதிருது. ராவணா வித் பாவனா சூப்பர்//

  மொத பகுதி அதிருதா-ன்னு பாத்து சொல்லுங்கக்கா!

  ராவணா வித் பாவனா?
  இல்லை
  ராவனா ஃபார் பாவனா?
  எப்படி வைக்கலாம்? நீங்களே சொல்லுங்க!

  ReplyDelete
 79. //கவிநயா said...
  சரி சரி.. சீக்கிரம் படத்தப் போடுங்கப்பா! எம்புட்டு நேரம் ட்ரெயிலரையே பாக்குறது? :)//

  ஹிஹி!
  சந்திரமுகி, சிவாஜி தி பாஸ்-க்கு எல்லாம் வெயிட் பண்ணீங்கல்ல?
  பொறுத்தார் பதிவு ஆள்வார்! :)

  ReplyDelete
 80. //ஆயில்யன் said...
  லேட்டா வந்ததுக்கு மன்னிக்கோணும்//

  மன்னிச்சாச்சு! தட்டுல பத்து வெள்ளி போடுங்க! :)


  //இப்படிக்கு
  ஆயில்யன்
  தலைவர்
  ரோமாயண கானா ரசிகர் மன்றம்
  கத்தார்//

  ஆகா இராவணனுக்கு இப்படி ஒரு அனுமான் தொண்டரா? கதை-ல ஒங்களையும் சேக்கலாம் போல இருக்கே! :))

  ReplyDelete
 81. //குசும்பன் said...
  அது ஆரு ஆஞ்சநேயர் மலைய தூக்க போகும் முன் கொடுக்கும் போஸ் போல போஸ் கொடுப்பது:))))//

  அது சீதையை மீட்ட சுந்தர பாண்டியன் கேஆரெஸ் ஆக்கும்! :)
  குதிரையில் வாள் சுழற்றும் போஸ் குசும்பனின் ஞானக் கண்ணுக்குத் தெரியலை போல!

  ReplyDelete
 82. // ஜி said...
  ரோமாயணத்தை முதல் காட்சியிலேயே பார்க்க மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ரசிகன் (ரசிகன் மட்டுமே)...
  //

  ரசிகனுக்கு ரசிகாவை ஜோடியாப் போடுவமா ஜியா? :)

  ReplyDelete
 83. //துளசி கோபால் said...
  சபரி வேசம் கொடுத்துறாதீங்க//

  ஏன் டீச்சர்?
  மாம்பழம் ஸ்டாக் இல்லியா? :)

  //நல்ல நகை நட்டு முக்கியமாக் கிரீடம் எல்லாம் போட்டுக்கும் 'பாத்திரமா' இருக்கணும்//

  அப்படி ஒரு பாத்திரம் என்ன இருக்கு?
  மண்டோதரி சரிப்படாது!
  கைகேயி வேண்டாம்! நீங்க நல்ல டீச்சர்!
  அச்சோ...ஒரே கன்பூசன்!
  நீங்களே சொல்லுங்க! என்ன வேணும் உங்களுக்கு?

  //டாக்டர் வேடம் கொடுத்தாலும் சரி.ஸ்டெத் வச்சுருக்கேன்:-))))//

  இராமாயணத்துல ஏது டாக்டர்?
  அனுமன் தான் டாக்டர்! ஜாம்பவான் கூட! ஓக்கேவா? :)

  ReplyDelete
 84. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  ஆனா.. இந்தப் படத்துக்கான விமர்சனத்தை நான் மட்டும்தான் எழுதுவேன்..
  சொல்லிப்புட்டேன்..//

  அண்ணாச்சி
  நீளமான விமர்சனமா? நீலமான விமர்சனமா? ஐ மீன் ராமர் ப்ளூ!
  ஹா ஹா ஹா :))

  ReplyDelete
 85. //சிவமுருகன் said...
  ஆரம்பிங்கோ,ஆரம்பிங்கோ, அதையும் பார்க்கலாம்
  //

  என்ன மிரட்டுறீங்க சிவா? :)

  ReplyDelete
 86. //துர்கா said...
  என்னை விட்டுடுங்க :((
  நான் ரொம்ப பாவம்//

  உனக்கு பாவமான கேரக்டர் தான் ஜிஸ்டர்!
  பாவனாவின் தோழியே நீ தான்! :)

  ReplyDelete
 87. //துர்கா ஜிஸ்டர், கொஞ்சம் இங்க வந்து இவரைக் கவனிச்சிக்கோம்மா! //

  துர்காதான் சூர்ப்பனகைன்னு சொல்லாம சொல்றீங்களா ? :P
  சூப்பர்...!

  ReplyDelete
 88. //உனக்கு பாவமான கேரக்டர் தான் ஜிஸ்டர்!
  பாவனாவின் தோழியே நீ தான்! :) //

  என்னது? பாவனாவுக்குத் தோழி துர்காவா? என்னை லவ்வுறதைத் தவிர வேற என்ன பாவம் பண்ணுச்சு அந்த பாவனா? :P


  துர்கா, 'ஜோடி' த்ரிஷா மாதிரி பெரிதாக ஒரு ரவுண்ட் வர வாழ்த்துக்கள் ! :)

  ReplyDelete
 89. KRS, இப்பதான் தீபாவெங்கட்டுடன் படம் எடுத்து போட்டுவிட்டு, அபிஅப்பாவிடம் கெட்டவார்த்தையால திட்டுவாங்கினேன். அவருக்கு பாருங்க எவ்வளவு பொறாமை :)

  முதல்மரியாதை சிவாஜி ராதாவை காதலிப்பது தப்பா ?

  ReplyDelete
 90. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  //துர்கா ஜிஸ்டர், கொஞ்சம் இங்க வந்து இவரைக் கவனிச்சிக்கோம்மா! //

  துர்காதான் சூர்ப்பனகைன்னு சொல்லாம சொல்றீங்களா ? :P
  சூப்பர்...!

  12:31 AM, August 24, 2008
  //
  துர்காவுக்கு மண்டோதரி என்கிற சிறப்பு பாத்திரம் வழங்கவேண்டும் என்பது எனது கோரிக்கை

  ReplyDelete
 91. \\கோவி.கண்ணன் said...
  //எம்.ரிஷான் ஷெரீப் said...
  //துர்கா ஜிஸ்டர், கொஞ்சம் இங்க வந்து இவரைக் கவனிச்சிக்கோம்மா! //

  துர்காதான் சூர்ப்பனகைன்னு சொல்லாம சொல்றீங்களா ? :P
  சூப்பர்...!

  12:31 AM, August 24, 2008
  //
  துர்காவுக்கு மண்டோதரி என்கிற சிறப்பு பாத்திரம் வழங்கவேண்டும் என்பது எனது கோரிக்கை
  \\

  ஆகா...ஆகா...கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கே...!!!

  எப்படி இருந்த துர்காவை இப்படி ஆக்கிட்டிங்களே...(சூப்பரு)

  இருந்தாலும் இதுதான் சரியான பாத்திரம்...ரீப்பிட்டே ;))

  ReplyDelete
 92. \\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //கோபிநாத் said...
  ஏற்கனவே பேசியது போல் என் ரோல் எனக்கு வரனும் ஆமா...இல்ல அவ்வளவு தான் ;))//

  மாப்பி கோப்பி...வாய்யா...
  How wazz oors? ராயபுரம் எல்லாம் ஒரே விழாவாமே!:)

  உனக்கில்லாத ரோலா? கொடுத்திருவோம்! மாயமான் ஓக்கேயா? :)
  \\

  மான்!!?? வேற பாத்திரம் சொன்னது போல ஞாபகம்!! ;))

  ரைட்டு பார்த்து போடுங்க...ஆனா ஒன்னு என் தல கானாவுக்கு எப்பவும் நான் தொண்டனாக இருக்கானும் ;))

  ReplyDelete
 93. \\ kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //கோபிநாத் said...
  ஏற்கனவே பேசியது போல் என் ரோல் எனக்கு வரனும் ஆமா...இல்ல அவ்வளவு தான் ;))//

  மாப்பி கோப்பி...வாய்யா...
  How wazz oors? ராயபுரம் எல்லாம் ஒரே விழாவாமே!:)

  உனக்கில்லாத ரோலா? கொடுத்திருவோம்! மாயமான் ஓக்கேயா? :)
  \\

  மான்!!?? வேற பாத்திரம் சொன்னது போல ஞாபகம்!! ;))

  ரைட்டு பார்த்து போடுங்க...ஆனா ஒன்னு என் தல கானாவுக்கு எப்பவும் நான் தொண்டனாக இருக்கானும் ;))

  ReplyDelete
 94. ////சிவமுருகன் said...
  ஆரம்பிங்கோ,ஆரம்பிங்கோ, அதையும் பார்க்கலாம்
  //

  என்ன மிரட்டுறீங்க சிவா? :)//

  மிரட்ற வேலை எல்லாம் சிறைச்சாலை படத்துல தாணு பண்ணிட்டார்! நான் வேற தனியா மிரட்டணுமா?

  ReplyDelete
 95. ப்பா...:):) க்ருஷ்ணஜயந்திக்காக சீடைமுறுக்கு மைசூர்பாக்கு எல்லாம் செய்துமுடித்து குறைஒன்றும் இல்லைபாடிவிட்டு இங்க வந்தா 50கும்மியடிச்சி
  செஞ்சுரி போட்டுருக்கீங்க!! நாடகத்தைவிட ரிகர்சல் மறக்கமுடியாம இருக்குமாம் அதுபோல ரோமாயணம்வருமுன்னே இங்க பின்னூட்டசுனாமி அசத்துதே! ரிஷானும் மங்களூர்சிவாவும் ஆல்ரெடிபாவ்னாதாஸா இருக்குற கேஆர் எஸ்ஸுகிட்ட மோதறாங்கபோல்ருக்கே! எனக்கு படத்துல இந்தமான் உந்தன் சொந்தமான்னு பாவ்னா வாயசைக்க நான்பின்னணி பாட ஜான்ஸ் கீன்ஸ் உண்டா கருணைகாட்டுங்கப்பா!!

  ReplyDelete
 96. பாவனாவுக்கு இத்தனை பேர் போட்டியா;) ரோமாயணத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க, விமர்சனம் எழுதணும்!

  ReplyDelete
 97. அட Introduction இப்படி அதிருது..

  Eagerly Waiting for the Rest :))

  ReplyDelete
 98. அடிச்சு ஆடுங்க நான் இப்பவே திருட்டு DVD க்கு ஆர்டர் குடுத்திட்டேன் :-)

  ReplyDelete
 99. //கானா பிரபா said...
  ஏண்ணா

  என்னய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணிலியே ;)
  //

  நல்ல கேக்குரார்யா டீடைலு... :-)

  ReplyDelete
 100. ரோமாயணம் ஆரம்பிச்சாச்சா/

  ஒரே ஒரு பெண் பதிவர் போட்டு 331/3 ஒதுக்க மறந்துட்டீங்க:)

  அப்ப நாங்கள் எல்லாம் சாமரம் வீச வரணுமோ:)

  ஒத்து நைனா ஒத்து.

  எனக்கு,கீதாவுக்கு,ஷைலஜாவுக்கு,கெக்கேபிக்குணிக்கு எல்லோருக்கும் நல்ல வேடம் கொடுக்கலைன்னா....
  பின்னூட்டம் போட்டு கதற வச்சுடுவோம்.:)

  ReplyDelete
 101. //அப்ப நாங்கள் எல்லாம் சாமரம் வீச வரணுமோ:)//

  அட! ஆமாம். இப்படியும் பாத்திரங்கள் இருக்குல்லே!!!!

  என்னைப் போட்டுறாதீங்கப்பா. ஒரே தோள்பட்டை வலி.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP