Thursday, July 10, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 2

"நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே? அட இராமா! ச்சே...இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?" - முந்தைய பதிவு இங்கே!

"ஓ! இது தான் உன் கவலையா சீடனே? உன் பெயருக்கு ஏற்றாற் போலவே நீயும் உறங்கா வில்லி தான்! உபன்யாசம் கேட்டுக் கொண்டே உறங்காத வில்லியாகத் தான் இருக்கிறாய்!" :-)

"குருவே! மறைக்காமல் சொல்லுங்க! என்னைக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, கேள்வியால் துளைத்து, அடியேன் சரணாகதியை அளந்து அளந்து தானே பார்க்கப் போறாங்க? விபீஷணனைக் கூட இப்படி எல்லாம் அளந்து பார்த்து தானே முடிவெடுத்தாங்க?"

"ஹா ஹா ஹா....கதையில் இப்படி ஒன்றி விட்டாயே வில்லி! வீண் கவலை வேண்டாம்! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்!
நீ என்னுடைய சீடன், என்னைப் பற்றியவன்!
அது இராமன் கோஷ்டி! இது இராமானுசன் கோஷ்டி!
அங்கு விசாரணை இருக்கலாம்! இங்கு விசாரணை கிடையாது!
"
முதலில் உட்கார்!

"உடையவரே! மனம் உடைந்து போய் கேட்கிறேன்! சொல்லுங்களேன்! சரணாகதி செய்தால் எனக்கு மோட்சம் கிட்டி விடுமா?"

"ஹூம்...ஆக....ஏதோ ஒன்றை வேண்டித் தான் நீ சரணாகதி செய்வாய்? அப்படித் தானே? இல்லையென்றால் சரணாகதி செய்ய மாட்டாய்! சரியா?"

(மெளனம்)

"அப்புறம் எதுக்கு சர்வ தர்மங்களையும் விட்டு விட்டு, உன் ஒருவனையே சரணம் அடைகிறேன் என்று உதட்டளவில் சொல்லித் திரிகிறாய்?
சர்வ தர்மங்களையும் விட்டேன் என்று சொல்லும் நீ, மோட்ச தர்மத்தை விட்டா மாதிரி தெரியலையே? உன் கண் அங்கே அல்லவா இருக்கிறது?"

(மெளனம்)

"ஏன் வில்லி?...பல பிறவிகள் எடுத்தால் மிகவும் கஷ்டப்படுவோம் என்று பயமா உனக்கு?
கடைத்தேற இன்னும் பல கோடி மக்கள் இருக்கிறார்களே! பல சாதிகளில் பிறந்து, உழன்று, மறை பொருளை அறியாமல் இருக்கிறார்களே! அவர்கள் கதியெல்லாம் என்ன?
அவர்களுக்கு மறையை மறைத்து வைக்காது, எடுத்துச் செல்லும் பெரும்பணி இருக்கிறதே! அதில் எனக்கு ஒத்தாசையாக வர மாட்டாயா?"

(வில்லி தலை கவிழ்கிறான்)

"இதற்காக இன்னொரு பிறவி எடுத்து, இராமானுசனுக்கு உதவி செய்ய வா என்று கூப்பிட்டால், நீ மறுத்து விடுவாய் தானே?
அப்பாடா, நான் சரணாகதி செய்தாகி விட்டது! மோட்சம் உறுதியாகி விட்டது!
இனி அவரவர் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க என்று சொல்லி விடுவாய் தானே?"

(மீண்டும் மெளனம்)

"தனக்கு வேலை ஆனால் போதும்! தனக்கு மோட்சம் கிட்டினால் போதும்! நான் ஒரு காரியமாக உன்னைச் சரணாகதி அடைகிறேன்! அதைக் கொடுத்து விடு! = இது தானே உன் எண்ணம்?

சற்றுமுன் கருணை வள்ளலான இராமபிரானை ஏதேதோ கேள்வி கேட்டாயே!
ச்சே...இதுவா சரணாகதி?
இதுவா உன் பரங்கருணை?
இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?

......அதே போல் நான் உன்னைக் கேட்கட்டுமா?
ச்சே...இதுவா உன் சரணாகதி?
இதுவா உன் இறையன்பு?
இதுவா உன் நிபந்தனையற்ற சரணம்?
"


(வில்லி தேம்பித் தேம்பி அழுகிறான்...)

"உடையவரே! அடியேனை மன்னித்து விடுங்கள்! இறைவனிடத்தில் சுயநலத்தைக் காட்டிப் பொதுநலத்தை மறந்தேன்! எனக்கு வேண்டியதை மட்டும் எதிர்பார்த்து அதற்கு மட்டும் சரணாகதி என்று துணிந்தேன்! என் தவறைத் திருத்தி ஆட்கொள்ளுங்கள்!"

"தவறல்ல வில்லி! முதலில் அப்படித் தான் இருக்கும்! ஆனால் மனதால் உணர்ந்த பின் சரியாகி விடும்!
அதற்காக அருளாளன் அருள் உனக்கு இல்லை என்றாகி விடாது! கவலைப்படாதே!

ஒன்றை வேண்டிச் செய்த சரணாகதி - பாஞ்சாலி - இது காம்யார்த்த சரணாகதி!
அவனையே வேண்டிச் செய்த சரணாகதி - கஜேந்திரன் - இது பரிபூர்ண சரணாகதி!

ஆனைக்கும் அருள் உண்டு! ஆயிழைக்கும் அருள் உண்டு! ஆனால் யார் செய்த சரணாகதிக்கு, இறைவன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்? தெரியுமல்லவா?..."

"தெரியும் குருவே! ஆனைக்குத் தான் அலறி அடித்துக்கொண்டு, ஓடி வந்தான்"

"உம்...ஐந்தறிவுச் சரணாகதி உசத்தியாகி விட்டது! ஆறறிவுச் சரணாகதி சற்று தாமதமாகி விட்டது, பார்த்தாயா? ஹா ஹா ஹா!"

"ஆமாம் குருவே! இத்தனைக்கும் யானைக்குத் தான் செய்வது சரணாகதி என்பது கூடத் தெரியாது தானே?""அருமையாகப் பிடித்துக் கொண்டாய்! சரணாகதி செய்கிறோம் என்று கூடத் தெரியாமல், செய்த சரணாகதி தான் கஜேந்திர சரணாகதி!

யானை எவ்வளவோ போராடிப் பார்த்தது! ஒன்றும் முடியவில்லை! இறக்கும் தறுவாயில் ஒருவருக்கு இப்படியா சிந்தனை போகும்? ஆனைக்கு இப்படிப் போனது...”அச்சோ...நம்மால் இயலாமற் போனதே! இந்தத் தாமரை மலரை எம்பெருமானுக்குச் சூட்டினால் எவ்வளவு மங்களகரமாக இருக்கும்?”

மேலே...அலைமகள், அப்பனுடன் தத்துவ சாரத்தைப் பேசிக் கொண்டு இருக்கிறாள்!
அவன் மேல்துண்டில், தன் சேலையை முடித்துக் கொண்டு, ”என்னை விட்டு ஓடிப் போக முடியுமா” என்று ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கிறாள்!

ஆதிமூலமே......!

அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்! அன்னை முடிச்சு போட்டதையும் மறந்தான்!
விறுவிறு என்று ஓடுகிறான் அப்பன்! குறுகுறு என்று கீழே விழுகிறாள் அன்னை!
அவன் மிரண்டான்! இவள் புரண்டாள்! - ஹூஹூம்! சட்டை செய்யவில்லை!
கருடன் குறிப்பறிந்து ஓடோடி வருகிறான்!
அன்னையின் நிலை கண்டு கருடன் கண்ணில் நீர்! ஆனால் அப்பனுக்கோ எதுவும் பொருட்டில்லை! கஜேந்திரா...இதோ வந்தேன்!

அவன் நமக்கு அது கொடுப்பான், இது கொடுப்பான், மோட்சம் கொடுப்பான் என்றெல்லாம் கணக்குப் போடாத நிலை!
நாம் அவனுக்கு அது கொடுப்போம், இது கொடுப்போம், அவன் உள்ளத்துக்கு உகப்பைக் கொடுப்போம் என்று நாம் அவனுக்குத் தரும் நிலை!

தன் விருப்பம் என்னவென்று ஆனைக்குத் தெரியவில்லை! எம்பெருமானின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தாம் இருப்போம் என்றே அது இருந்தது!
- இதுவே கஜேந்திர சரணாகதி!
- இதுவே பிரகலாத சரணாகதி!
- இதுவே ஆஞ்சநேய சரணாகதி!
- இதுவே பரிபூர்ண சரணாகதி!

வாழைப்பந்தல் கிராமத்து, ஆலயக் கருவறையில் அதே காட்சி! ஆனையும் இருக்க, அதனுடன் அப்பனும் இருக்க......ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் (வடமொழியில்: கஜேந்திர வரதராஜப் பெருமாள்) திருவடிகளே சரணம்!"பாஞ்சாலிக்கு வருவோம்!
அவள் ஒன்றை வேண்டிச் செய்தாள் - அது தவறில்லை - தன்னால் இயன்ற மட்டும் போராடிப் பார்த்தாள்! ஒன்றும் முடியாது என்று தெரிந்து போகவே, இறுதியில் வேண்டிக் கொண்டாள்!
என்னவென்று வேண்டிக் கொண்டாள்? அது அவளுக்கே தெரியாது! அது தான் வேடிக்கை!:-)

”கடவுளே, என்னை வீமன் காப்பாற்றுவானா? விசயன் வில்லெடுப்பானா? பீஷ்மர் எழுந்து ஆணையிடுவாரா? விதுரர் விடாமல் போராடுவாரா? அது நடக்குமா? இது நடக்குமா??” என்றெல்லாம் நினைத்தாளே தவிர "இறைவா, என் மானம் காப்பாற்று" என்று மட்டும் நினைக்கத் தோன்றவே இல்லை!

இன்னின்ன இப்படியிப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கும் மனித மனம்,
கடினமான நேரத்திலும் காரியத்தைத் தான் கவனிக்கறது! காரணத்தை மறந்து போகிறது!

இறைவனுக்கும் அவள் கேட்டதை உடனே கொடுத்து விட ஆசை தான்!
ஆனால் அவரா? இவரா? அதுவா? இதுவா? என்று வினாடிக்கு வினாடி அவள் விருப்பம் மாறிக் கொண்டே இருக்கிறதே! எதை விரும்புகிறாள்? எதைக் கொடுப்பது???

இறுதியில் தன் விருப்பம் எதுவும் சரி வரவில்லை என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! எல்லாம் முடிந்தது! ”ஏழு தலைமுறைக்கும் என் குலத்தைக் காப்பாற்று!” என்று தன்னையும் அறியாமல் அவள் நா முணுமுணுக்கிறது! அதற்கு மேல் எதுவும் கேட்கக் கூடத் தோன்றவில்லை!
உட்சோ தியிற் கலந்தாள்; - அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்றாள்!
ஹரி, ஹரி, ஹரி என்றாள்; - கண்ணா,
அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள்


கோவிந்தா........!
சரணாகதி முடிந்தது! அருள் மழை பொழிந்தது!
நாயகன் செய்யாததை, அவன் நாமம் செய்தது!
தன் விருப்பம் எதுவென்று தெரியாது, இறைவனிடமே ஒப்புவித்தாள்! அவள் எதை விரும்பியதாக நினைத்தாளோ, அதுவே அவளுக்குக் கிட்டியது!

சரணாகதி செய்ததை பின்னர் அவளே மறந்து போய் விட்டாள்! ஆனால் அவன் மறக்கவில்லை!
ஏழு குலத்துக்கும் கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் சேர்த்தே காப்பாற்றினான்!
= இது காம்யார்த்த சரணாகதி! நொடிப்பொழுது சரணாகதி!
இதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்!
ஒரு பொருள் மேல் பற்று போய், இன்னொரு பொருள் மேல் பற்று வரும் போதெல்லாம், அதை வேண்டிச் செய்ய வேண்டும்!

பரிபூர்ண சரணாகதியில், அப்படி இல்லை!
ஒரு முறை ஒப்புவித்தது ஒப்புவித்தது தான்!
இனி எல்லாம் அவன் திருவுள்ள உகப்பே! இனி எல்லாம் சுகமே!
உனது ஆளாக என்றென்றும் பார்த்திருப்பேன் அடியேனே!
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!"சரி வில்லி........ரொம்ப தத்துவம் எல்லாம் வேண்டாம்!
உன் மனதை அரித்தெடுக்கும் கேள்வி! அதை நீயும் கேட்டு விட்டாய்...
அதற்கு விளக்கேற்றி வைக்கிறேன். விடை தெரிகிறதா பார்!

என்ன கேட்டாய்? சரணாகதி செய்தால் உனக்கு மோட்சம் கிடைக்குமா என்று தானே கேட்டாய்?
எங்கே சொல் பார்ப்போம்...இராமானுசன் என்னும் எனக்கு மோட்சம் கிடைக்குமா?"

"குருவே என்ன கேள்வி இது? அய்யகோ! அய்யகோ!"

"பதறாதே! பயப்படாமல் சொல்!"

"அரங்கத்து ஆலயத்தைத் திருத்தி வைத்தீர்! "நம்மை உடையவர்" என்று அந்த அரங்கனே சொன்ன உடையவர் நீங்கள்! திருமலை அப்பனுக்கே சங்காழி அளித்த அண்ணல்!
மாறனின் தமிழ் வேதத்தை மாநிலம் முழுதும் தழைக்கச் செய்தவர்!
குலத்தால் தள்ளாது அனைவரையும் நலத்தால் நல்கும் கருணை கொண்டவர்!
- உங்களுக்கு மோட்சம் கிட்டாது என்றால் வேறு யாருக்குத் தான் கிட்டும்?"

"இல்லையப்பா! எனக்குக் கிட்டாது!
இராமானுசன் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!"

(தொடரும்...)

70 comments:

 1. நன்றாக சஸ்பென்ஸ் வைக்கிறீங்க கே.ஆர்.எஸ். :))

  //இன்னின்ன நடக்க வேண்டும் என்று நினைக்கும் மனம், கடினமான நேரத்திலும் காரியத்தைத் தான் கவனிக்கறது! காரணத்தை மறந்து போகிறது!//

  சத்யமான வார்த்தைகள்...


  முந்தைய பதிவினைவிட இது அருமையாக இருக்குன்னும் சொல்லிக்கறேன்.
  ஏனென்று உங்களுக்கே தெரிந்திருக்கும் :)

  மீண்டும் வருகிறேன்..

  ReplyDelete
 2. //தனக்கு வேலை ஆனால் போதும்! தனக்கு மோட்சம் கிட்டினால் போதும்! நான் ஒரு காரியமாக உன்னைச் சரணாகதி அடைகிறேன்! அதைக் கொடுத்து விடு! = இது தானே உன் எண்ணம்?//

  உறங்காவில்லி மட்டுமா?, இன்றும் என்னைப் போன்றோர் அப்படித்தான் இருக்கிறோம்..சரிதானே கே.ஆர்.எஸ்? :)

  ReplyDelete
 3. //மதுரையம்பதி said...
  நன்றாக சஸ்பென்ஸ் வைக்கிறீங்க கே.ஆர்.எஸ். :))//

  சஸ்பென்ஸா? நான் எங்கே வச்சேன்? அபாண்டமாச் சொல்றீங்களே மெளலி அண்ணா? :-)

  //முந்தைய பதிவினைவிட இது அருமையாக இருக்குன்னும் சொல்லிக்கறேன். ஏனென்று உங்களுக்கே தெரிந்திருக்கும் :)//

  ஆகா! நிஜமாத் தெரியலை! ஏன்? ஏன்? சொல்லுங்க!
  (இத்தனைக்கும் போன பதிவில் தான் கதை! இந்தப் பதிவில் ஒரே தத்துவம்! ஐ லைக் பார்ட்-ஒன் :-)

  //மீண்டும் வருகிறேன்..//

  வாங்க, வாங்க!
  ஆசார்ய ஹிருதயம் வலைப்பூ தானே இத்தனைக்கும் காரணம்! உங்க நண்பன் சேஷசாயி சொன்ன பாட்டு அடுத்த பதிவில்! :-)

  ReplyDelete
 4. மதுரையம்பதி said...
  //தனக்கு வேலை ஆனால் போதும்! தனக்கு மோட்சம் கிட்டினால் போதும்! நான் ஒரு காரியமாக உன்னைச் சரணாகதி அடைகிறேன்! அதைக் கொடுத்து விடு! = இது தானே உன் எண்ணம்?//

  உறங்காவில்லி மட்டுமா?, இன்றும் என்னைப் போன்றோர் அப்படித்தான் இருக்கிறோம்..சரிதானே கே.ஆர்.எஸ்? :)
  //

  அது என்ன என்னைத் தனியா வுடற கெட்ட பழக்கம் உங்க கிட்ட?

  இன்றும் நம்மைப் போன்றோர் அப்படித்தான் இருக்கிறோம்..
  அப்படின்னு சொல்லுங்க! :-)

  ReplyDelete
 5. //அங்கு விசாரணை இருக்கலாம்! இங்கு விசாரணை கிடையாது!"//

  எங்கு?

  இந்த பகுதி ரொம்ப நல்லா வந்ருக்கு. ஐ லைக் திஸ் பார்ட். :))

  ReplyDelete
 6. கஜேந்திர மோட்சம் ரொம்ப அருமை. ஒரு சின்ன பிட்டை நானும் போட்டுக்கறேன்:

  ஆதிமூலமே!னு கூப்பிட்டதால் அந்த யானை பாகவதனாகி விட்டதாம். அப்படிபட்ட பாகவதனின் காலை தெரிந்தோ தெரியாமலோ அந்த முதலை பிடித்ததால், முதலைக்கு தான் முதலில் மோட்சம் கிட்டியதாம். இது எப்படி இருக்கு?

  இதை நாகை முகுந்தன் விஜய் டிவியில் சொன்ன போது கேட்டது.

  சும்மாவா சொல்லி இருக்காங்க அடியார்க்கு அடியேன்னு.

  சரி, சரி, KRS அண்ணே! சீக்ரம் காலை காட்டுங்க, பிடிச்சு இழுக்கனும். :p

  ReplyDelete
 7. ஹாய் கே ஆர் எஸ்,

  ரொம்ம்ம்ம்ப அருமையா இருக்கு.

  ஆக சரணாகதிக்கு கூட இவ்ளோ அர்த்தம் இருக்கா? இதுல நீங்க போட்ட படங்கள் வெகு
  அருமை.அழகா இருக்கு.
  அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்.

  ReplyDelete
 8. //தன் விருப்பம் என்னவென்றே ஆனைக்குத் தெரியவில்லை! எம்பெருமானின் திருவுள்ள உகப்பிற்கு மட்டுமே தாம் இருப்போம் என்ற நிலை!
  - இதுவே கஜேந்திர சரணாகதி!
  - இதுவே பிரகலாத சரணாகதி!
  - இதுவே ஆஞ்சநேய சரணாகதி!
  - இதுவே பரிபூர்ண சரணாகதி!//

  செய்யாமல் செய்த நன்றியா? நல்லா இருக்கு.


  //
  "இல்லையப்பா! எனக்குக் கிட்டாது! இராமனுசன் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!"
  //

  கண்டிப்பா கிட்டாது தான், இல்லா ஒன்றை கிட்ட கொண்டுவந்து கிட்டவைக்கலாம் இருப்பதை அதுவும் எப்போதும் இருப்பதை எப்படி கிட்ட வரும், கிட்ட வைப்பது.

  துளசி தாசர் தன்னையே ஒரு பெண்ணாக பாவித்து வாக்கு சொல்வார்.

  அதன் தமிழாக்காம்

  (இறைவா உன்னை தொடர்பு கொள்ள எண்ணுகிறேன்,) வெளியூரில் நீ இருந்திருந்தால் உனக்கு ஒரு ஓலை எழுதியிருப்பேன்! அருகில் நீ இருந்திரிந்தால் உன்னோடு உரையாடியாயிருப்பேன்! நீயோ! என்னெஞ்சில் பள்ளிகொண்டு என்கண்ணோடு உறவாடி, என் உடலோடு வாழ்கிறாய், எங்கனம் ஐயா உன்னோடு தொடர்பு கொள்வது?

  ---ஆக, எப்போது கிடைத்த முக்தி மீண்டும் எப்படி கிட்டும் அது தான் என்னிடம் உள்ள ஒரு கேள்வி?---

  ReplyDelete
 9. //முந்தைய பதிவினைவிட இது அருமையாக இருக்குன்னும் சொல்லிக்கறேன்.//

  ரிப்பீட்டேய்...! (அப்பாடா, மௌலிக்கு ரிப்பீட்டியாச்சு :)

  கஜேந்திரனுடைய சரணகாதியை அற்புதமா சொல்லியிருக்கீங்க. சீடருடைய மனநிலை மூலமா நீங்க சொல்லியிருக்கும் கருத்துக்கள் என்னைப் போல் நிறைய பேருக்கு பொருந்தும். ஆறறிவு இருக்கதாலதான் ரொம்ப யோசிக்கிறோம் போல. கேள்வி கேட்காம அம்மாவை நம்புகிற குழந்தை மனசோட அவனை நம்பணும்.

  //இனி எல்லாம் அவன் திருவுள்ள உகப்பே!//

  இப்படி இருந்துட்டா எல்லாம் சுகம்தான்.

  மிக்க நன்றி கண்ணா!

  ReplyDelete
 10. ambi said...
  //அங்கு விசாரணை இருக்கலாம்! இங்கு விசாரணை கிடையாது!"//

  எங்கு?//

  இராமானுசன் கோஷ்டியில்!

  //இந்த பகுதி ரொம்ப நல்லா வந்ருக்கு. ஐ லைக் திஸ் பார்ட். :))//

  மெளலி அண்ணாவுக்கு ரிப்பிட்டே-வா? :-))

  ReplyDelete
 11. //ambi said...
  கஜேந்திர மோட்சம் ரொம்ப அருமை. ஒரு சின்ன பிட்டை நானும் போட்டுக்கறேன்://

  பிட்டுக்குப் பின்னூட்டம் சுமந்த அம்பி-யா? :-)

  //ஆதிமூலமே!னு கூப்பிட்டதால் அந்த யானை பாகவதனாகி விட்டதாம். அப்படிபட்ட பாகவதனின் காலை தெரிந்தோ தெரியாமலோ அந்த முதலை பிடித்ததால், முதலைக்கு தான் முதலில் மோட்சம் கிட்டியதாம். இது எப்படி இருக்கு?//

  ஜூப்பரு!

  முதலை உருவில் வந்தவன் சாபம் பெற்ற கந்தருவன் என்பது வழக்கு!
  சரணாகதி செய்பவன், தன்னை மற்றும் கடைத்தேற்றிக் கொள்ளாது, தன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் (உடன்படுவோர்/எதிர்ப்போர் உட்பட), கடைத்தேற்றி விடுகிறான் என்பதே தாத்பர்யம்!

  //இதை நாகை முகுந்தன் விஜய் டிவியில் சொன்ன போது கேட்டது//

  நாகையார் சொன்னால் நயத்துக்குக் குறைவுண்டோ?

  //சரி, சரி, KRS அண்ணே! சீக்ரம் காலை காட்டுங்க, பிடிச்சு இழுக்கனும். :p//

  :-)
  ஏதேது? முதலைப் பசி போல?
  பிடிச்சி இழுக்க நல்ல காலா பாருப்பா அம்பி!
  அடியேனே ஒரு முதலை தான்!

  ReplyDelete
 12. தல

  இப்போதைக்கு உங்க பதிவுகளில் நான் சரணாகதி ;)

  \\அலைமகள், அப்பனுடன் தத்துவ சாரத்தைப் பேசிக் கொண்டு இருக்கிறாள்!
  அவன் மேல்துண்டில், தன் சேலையை முடித்துக் கொண்டு, ”என்னை விட்டு ஓடிப் போக முடியுமா” என்று ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கிறாள்!

  ”ஆதிமூலமே......!”

  அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்! அன்னை முடிச்சு போட்டதையும் மறந்தான்!
  விறுவிறு என்று ஓடுகிறான் அப்பன்! குறுகுறு என்று கீழே விழுகிறாள் அன்னை!
  அவன் மிரண்டான்! இவள் புரண்டாள்! - ஹூஹூம்! சட்டை செய்யவில்லை!
  கருடன் குறிப்பறிந்து ஓடோடி வருகிறான்!
  அன்னையின் நிலை கண்டு கருடன் கண்ணில் நீர்! ஆனால் அப்பனுக்கோ எதுவும் பொருட்டில்லை! கஜேந்திரா...இதோ வந்தேன்!\\

  அசத்தல்...தல ;)))

  ReplyDelete
 13. //Sumathi. said...
  ஆக சரணாகதிக்கு கூட இவ்ளோ அர்த்தம் இருக்கா?//

  அர்த்தம் ஒன்னு தான் சுமதியக்கா!
  நான் தான் பல்வேறு நிலைகளில் இருந்து நீட்டி முழக்கினேன்! :-)

  //இதுல நீங்க போட்ட படங்கள் வெகு
  அருமை.அழகா இருக்கு.
  அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்//

  one pic is worth 1000 words! :-)
  next part-uuu is gonna be galatta! :-)

  ReplyDelete
 14. //சிவமுருகன் said...
  செய்யாமல் செய்த நன்றியா? நல்லா இருக்கு//

  வாங்க சிவா!
  செய்யாமல் செய்த நன்றி, அதையும் சொல்லாமல் செய்த நன்றி!

  //கண்டிப்பா கிட்டாது தான், இல்லா ஒன்றை கிட்ட கொண்டுவந்து கிட்டவைக்கலாம் இருப்பதை அதுவும் எப்போதும் இருப்பதை எப்படி கிட்ட வரும், கிட்ட வைப்பது//

  :-)
  கிட்டே இருப்பதனாலேயே
  கிட்டி விடும்!

  //துளசி தாசர் தன்னையே ஒரு பெண்ணாக பாவித்து வாக்கு சொல்வார்.//

  நாயகி பாவமா? நாயகி ஸ்வாமிகளை ஞாபகம் வந்திருச்சி!

  //என் உடலோடு வாழ்கிறாய், எங்கனம் ஐயா உன்னோடு தொடர்பு கொள்வது?//

  :-)

  //---ஆக, எப்போது கிடைத்த முக்தி மீண்டும் எப்படி கிட்டும் அது தான் என்னிடம் உள்ள ஒரு கேள்வி?---//

  சரணாகதியிலேயே இதற்குப் பதிலும் இருக்கே! மீண்டும் ஒரு கால் பதிவைப் படியுங்கள்!

  வேறு யாராச்சும் உங்க கேள்விக்கு விடை சொல்கிறார்களா பார்ப்போம்! :-)

  ReplyDelete
 15. அடியேன் இது வரை அறியாத உரையாடல் இது இரவிசங்கர். கடைசியில் நிறுத்திய இடமும் நன்றாக இருக்கிறது. பார்ப்போம் உடையவர் என்ன சொல்கிறார் என்று.

  ReplyDelete
 16. விபீஷணனை அந்தரத்தில் நிற்க வைத்தது ஏன்? அதுக்கு பதில் சொல்லியாச்சா? எனக்குத்தான் புரியலையா?

  அம்பி, இந்தாளு காலைப் புடிக்காதீங்க. அப்புறம் கல்லிடைக்குறிச்சிக்காரங்க காலைப் புடிச்சா அது காலை வாரத்தான்னு கதை கட்டி விட்டுடுவாங்க.

  ReplyDelete
 17. //இலவசக்கொத்தனார் said...
  விபீஷணனை அந்தரத்தில் நிற்க வைத்தது ஏன்? அதுக்கு பதில் சொல்லியாச்சா? எனக்குத்தான் புரியலையா?//

  கொத்தனாருக்குப் புரியாத ஒரு விசயம் உண்டா?
  அதுக்கு இன்னும் பதில் சொல்லாம, உங்களை எல்லாம் அந்தரத்தில் தான் நிறுத்தி இருக்கேன்! :-)

  ஆனா, இந்தப் பத்விலேயே அதுக்கு ஒரு க்ளூ இருக்கு! கண்டுபுடிங்க பார்க்கலாம்!

  ReplyDelete
 18. //அம்பி, இந்தாளு காலைப் புடிக்காதீங்க. அப்புறம் கல்லிடைக்குறிச்சிக்காரங்க காலைப் புடிச்சா அது காலை வாரத்தான்னு கதை கட்டி விட்டுடுவாங்க//

  இன்று முதல் கல்லிடைக்குறிச்சி, கால் வாங்கி, கால்லிடைக்குறிச்சி ஆகுவதாகுக! -ன்னு சொல்லாம இருந்தாச் சரி!

  அது சரி, காலை வாரத்தான்-ன்னா என்ன பொருள் கொத்ஸ்?
  சோமவாரம் பொறந்தா சோமவாரத்தான்!
  காலையில் பொறந்தா காலைவாரத்தானா? :-)

  அப்போ மாயவாரத்தான்? :-))))))

  ReplyDelete
 19. //குமரன் (Kumaran) said...
  அடியேன் இது வரை அறியாத உரையாடல் இது இரவிசங்கர்.//

  அடியேன் சிறுவயதில், ஊரில் கேட்ட உரையாடல் இது குமரன்!

  //கடைசியில் நிறுத்திய இடமும் நன்றாக இருக்கிறது. பார்ப்போம் உடையவர் என்ன சொல்கிறார் என்று//

  :-)
  உடையவர், ஒரே அடியாக உடைக்கப் போகிறார்!

  ReplyDelete
 20. @குமரன்

  * சிவா கேட்ட கேள்விக்கும்,
  * கொத்ஸ் கேட்ட அந்தரத்தில் வீடணன் கேள்விக்கும்
  கொஞ்சம் விளக்கம் சொல்லி உதவுங்களேன் ப்ளீஸ்!

  ReplyDelete
 21. //கவிநயா said...
  ரிப்பீட்டேய்...! (அப்பாடா, மௌலிக்கு ரிப்பீட்டியாச்சு :)//

  தவறு அக்கா தவறு!
  மௌலிக்கு ரிப்பீட்டியாச்சு என்று சொல்லலாமா?
  மௌலிக்கே ரிப்பீட்டியாச்சு என்றல்லவா சொல்லோணும்? :-)

  //சீடருடைய மனநிலை மூலமா நீங்க சொல்லியிருக்கும் கருத்துக்கள்//

  பதிவு எழுதும் போது கொஞ்ச நேரத்துக்கு நான் தான் அந்தச் சீடன்! :-)

  //ஆறறிவு இருக்கதாலதான் ரொம்ப யோசிக்கிறோம் போல. கேள்வி கேட்காம அம்மாவை நம்புகிற குழந்தை மனசோட அவனை நம்பணும்//

  அசத்தல்!
  குழந்தை அம்மாவை நம்புற மாதிரி!
  குரங்குக்குட்டி, பூனைக்குட்டி அம்மாவை நம்புறா மாதிரி!

  //இனி எல்லாம் அவன் திருவுள்ள உகப்பே!//
  இப்படி இருந்துட்டா எல்லாம் சுகம்தான்.
  மிக்க நன்றி கண்ணா!//

  நான் தான்-கா நன்றி சொல்லணும்! அருமையான சத் சங்க உரையாடலுக்கு!

  ReplyDelete
 22. //கோபிநாத் said...
  தல
  இப்போதைக்கு உங்க பதிவுகளில் நான் சரணாகதி ;)//

  வா கோபி...
  ஆகா...யாரந்த சரணா? அவ கிட்ட எதுக்கு கதி? :-)

  //அன்னையின் நிலை கண்டு கருடன் கண்ணில் நீர்! ஆனால் அப்பனுக்கோ எதுவும் பொருட்டில்லை! கஜேந்திரா...இதோ வந்தேன்!//

  அசத்தல்...தல ;)))//

  கஜேந்திர சரணாகதியின் பெருமை அது தான் கோபி!
  ஆனையின் அன்புக்கு முன் அடியேன் கால் தூசு!
  பிராணிகளுக்கு இருக்கும் பாசம் பிராணன்களுக்கு இருப்பதில்லை!

  ReplyDelete
 23. அடேங்கப்பா.. என்ன ஒரு வேகம். முதல் வார்த்தையிலிருந்து கடைசி வரை தொய்வில்லாமல், சுவை, பொருள், அழகு குறையாமல் சொல்ல
  "நீயே உனக்கு என்றும் நிகரானவன்"

  இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் தெளிவாகுது.

  //அது இராமன் கோஷ்டி! இது இராமானுசன் கோஷ்டி! //

  நான் கண்ணபிரான் கோஷ்டி..

  ReplyDelete
 24. //சரணாகதி செய்தால் எனக்கு மோட்சம் கிட்டி விடுமா?"
  //

  மோட்சம் அடைய மட்டும் தான் சரணாகதியா? இல்லை துன்பம் நேரும்போதெல்லாம் சரணாகதி அடைய சொல்கிறீர்களா?

  நாம் செய்த நல்லவை கெட்டவைகளை அளந்து பார்த்து செய்வது நாராயணன் செயல் அல்லவே !நாடி வந்த பக்தனை நல்வழிப்படுத்தி, அதனை உலகோர் அனைவருக்கும் அருளிக்க செய்வது தானே முறை.

  நாராயணன் மட்டும் இருந்து என்ன பயன், அவனது சிறப்புகளை, கல்யாண குணங்களை எடுத்தியம்ப, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் மற்றும் கண்ணபிரான், குமரன் ஆகிய பதிவர்கள் இருந்தால் தானே சிறப்பு. இறுதியில் மோட்சமோ இல்லை மறுபிறப்போ அது நாரணன் செயலாக இருக்குமே அன்றி நம் விருப்பமாக இருக்க இயலாது.

  ReplyDelete
 25. //* சிவா கேட்ட கேள்விக்கும்,
  * கொத்ஸ் கேட்ட அந்தரத்தில் வீடணன் கேள்விக்கும்
  கொஞ்சம் விளக்கம் சொல்லி உதவுங்களேன் ப்ளீஸ்!//

  நீங்க சொல்றதைக் கேக்க/படிக்க கை கட்டி வாய் பொத்தி நிக்கிறேனே. தெரியலையா? :-)

  ReplyDelete
 26. Excellent!!! Excellent...

  No more words to describe...

  ReplyDelete
 27. //(இத்தனைக்கும் போன பதிவில் தான் கதை! இந்தப் பதிவில் ஒரே தத்துவம்! ஐ லைக் பார்ட்-ஒன் :-)//

  Me too :-)

  Part - 1ல அனுமன் இருக்காரே...

  ReplyDelete
 28. //- இதுவே கஜேந்திர சரணாகதி!
  - இதுவே பிரகலாத சரணாகதி!
  - இதுவே ஆஞ்சநேய சரணாகதி!
  - இதுவே பரிபூர்ண சரணாகதி!//

  இந்த நூற்றாண்டுல யாராவது எடுத்துக்காட்டு தர முடியுமா?

  எதுக்கு கேட்கிறேனா, ஒரு நூற்றாண்டுக்கு ஒருத்தறாவது நமக்கு தெரிஞ்சி இதை பின்பற்றுகிறார்களானு தெரிஞ்சிக்க தான்.

  ReplyDelete
 29. //வெட்டிப்பயல் said...
  I have few questions... will come back soon...//

  அச்சோ...அச்சமா இருக்கே!
  ஆதிமூலமே!.......

  :-)))))

  ReplyDelete
 30. ஆசார்ய ஹிருதயம் வலைப்பூ தானே இத்தனைக்கும் காரணம்! ?????????????????????/ எந்தப் பதிவு???????

  ReplyDelete
 31. //Raghavan said...
  அடேங்கப்பா.. என்ன ஒரு வேகம்//

  அப்பன் ஆனைக்கு வந்த வேகம் தான் பதிவிலும்! அது என் வேகம் அல்ல!

  //இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் தெளிவாகுது//

  :-)
  அப்படியே ஆகட்டும்!
  ஆமென்! ததாஸ்து!

  //அது இராமன் கோஷ்டி! இது இராமானுசன் கோஷ்டி! //
  நான் கண்ணபிரான் கோஷ்டி..//

  என்ன கிண்டலா?:-)
  நாம் எல்லாருமே குருவருள் கோஷ்டி தான்!

  ReplyDelete
 32. ராமாயணத்துல தான் அதிகமா பரிபூர்ண சரணாகதி இருக்கு. மகாபாரதத்துல எனக்கு தெரிந்து குறைவு தான். அது ஏன்?

  கிருஷ்ணன் குறும்புக்காரன் என்பதாலா?

  ReplyDelete
 33. ஒருவன் ஒருமுறை பரிபூர்ண சரணாகதி அடைந்த பின் மறுபிறவியில் (சரணாகதிக்கும் மோட்சத்திற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன். எல்லாம் நாராயணன் செயல் தானே) கடவுளே இல்லை என்று நிந்தித்தாலும் அவனுடைய முன் ஜென்ம சரணாகதி தான் கணக்கில் கொள்ளப்படுமா?

  ReplyDelete
 34. //Raghavan said...
  மோட்சம் அடைய மட்டும் தான் சரணாகதியா? இல்லை துன்பம் நேரும் போதெல்லாம் சரணாகதி அடைய சொல்கிறீர்களா?//


  இப்படிக் கடினமான கேள்வியைத் தற்குறிப்பேற்றும் ஒரு தற்குறியைப் பாத்துக் கேக்கறீங்களே? நான் என்னத்த சொல்லுறது ராகவன்? :-)

  மொதல்ல உங்களுக்கு ஒரு ஷார்ட் & ஸ்வீட் நேம் வைக்கணும்!

  என் ப்ரிய நண்பன் ராகவனை, ராகவன்-ன்னே கூப்ட்டு கூப்ட்டு, இப்போ நீங்க கேக்குற கேள்வி எல்லாம் அவர் கேக்குறா மாதிரியே இருக்கு! :)

  நீங்களே ஒரு நல்ல பேராச் சொல்லுங்க!

  ReplyDelete
 35. //ஆதிமூலமே!னு கூப்பிட்டதால் அந்த யானை பாகவதனாகி விட்டதாம். அப்படிபட்ட பாகவதனின் காலை தெரிந்தோ தெரியாமலோ அந்த முதலை பிடித்ததால், முதலைக்கு தான் முதலில் மோட்சம் கிட்டியதாம். இது எப்படி இருக்கு?//

  அம்பி,
  காலை வாரிவிட பிடிச்சாக்கூட இதே தானா? :-P

  ReplyDelete
 36. மார்கண்டேயன் கூட பரிபூர்ண சரணாகதி தானே?

  ReplyDelete
 37. @Raghavan
  //நாம் செய்த நல்லவை கெட்டவைகளை அளந்து பார்த்து செய்வது நாராயணன் செயல் அல்லவே!//

  ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
  நாரணன் "ஆராயந்து" தான் அருள் செய்வான்!

  இதுவா இறைவனின் குணம்?

  சிவபெருமான் பக்தப் ப்ரியன்! சோதித்தாலும், பின்னர் கேட்டதைக் கொடுத்து விடுவான்!
  முருகப்பெருமான் சோதிக்கவும் கூட மாட்டான்! உடனே கொடுத்து விடுவான்!

  ஆனால் இந்த நாராயணன்...
  சேச்சே!
  ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
  :-)))))

  ReplyDelete
 38. //குமரன் (Kumaran) said...
  நீங்க சொல்றதைக் கேக்க/படிக்க கை கட்டி வாய் பொத்தி நிக்கிறேனே. தெரியலையா? :-)//

  நல்லாத் தெரியுது!
  ஆபத்தில் உதவிக்கு வரப் போறதில்லை-ன்னு நல்லாத் தெரியுது! :-))

  இப்போ வெட்டி வேற வெட்டுறா மாதிரி கேள்வி கேட்டிருக்காரு!
  இந்தச் சமயமாப் பார்த்து, என்னையத் தனியா விட்டுட்டு எஸ்ஸாவுறீங்க! ஹூம்! :-)

  ReplyDelete
 39. //முருகப்பெருமான் சோதிக்கவும் கூட மாட்டான்! உடனே கொடுத்து விடுவான்!//

  அப்ப ஒளவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமானு கலாய்ச்சது?????? ;)

  ReplyDelete
 40. //நீங்களே ஒரு நல்ல பேராச் சொல்லுங்க!//

  சொல்லிட்டாப் போச்சு.. "ராகவ்" ஓகேவா ?

  //ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
  நாரணன் "ஆராயந்து" தான் அருள் செய்வான்!//

  "ஆராய்ந்து" மேல் விளக்கம் ப்ளீஸ்..

  ReplyDelete
 41. //GnanaRaja said...
  Nice pics..//

  நன்றி ஞானராஜா!
  Pic Courtesy: Iskcon.com

  ReplyDelete
 42. //வெட்டிப்பயல் said...
  எதுக்கு கேட்கிறேனா, ஒரு நூற்றாண்டுக்கு ஒருத்தறாவது நமக்கு தெரிஞ்சி இதை பின்பற்றுகிறார்களானு தெரிஞ்சிக்க தான்//

  வலையுலக ஆன்மீகச் செக்கிங் இன்ஸ்பெக்டர், எங்க வெட்டி பாலாஜி வாழ்க! வாழ்க!!

  ReplyDelete
 43. //இந்த நூற்றாண்டுல யாராவது எடுத்துக்காட்டு தர முடியுமா?//

  அஸ்மத் ஆசார்ய பர்யந்தம்
  வந்தே குரு பரம்பரா!

  பத்தொன்பதாம் நூற்றாண்டில் தியாகராஜர்!

  இருபதாம் நூற்றாண்டில் மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர்!

  அண்மையில்
  மறைந்த காஞ்சிப் பெரியவர்!
  வாரியார் சுவாமிகள்!
  அன்னை தெரேசா!

  முகம் தெரியாத
  எத்தனை எத்தனையோ பேர்....
  எத்தனை எத்தனையோ பிராணிகள்....
  எந்தரோ மகானுபாவுலு
  அந்தரிகி வந்தனமுலு!

  ReplyDelete
 44. //கீதா சாம்பசிவம் said...
  ஆசார்ய ஹிருதயம் வலைப்பூ தானே இத்தனைக்கும் காரணம்! ?????????????????????/ எந்தப் பதிவு???????//

  யப்பா...
  அதுக்குள்ளாற எம்புட்டுக் கேள்விக்குறி!

  கண்டிப்பா உங்க பதிவு இல்லை! :-)
  அது எங்க சாக்த சிரோன்மணியோட பதிவு! சேஷசாயி நண்பனோட பதிவு! :-)

  ReplyDelete
 45. //வெட்டிப்பயல் said...
  Excellent!!! Excellent...
  No more words to describe...//

  :-)
  என் இன்னோரு தம்பிக்குத் தான் இப்படி படக் படக்-ன்னு இங்கிலீஷ் வரும்! நீங்களுமா? லட்சுமணா! லட்சுமணா!

  //Me too :-)
  Part - 1ல அனுமன் இருக்காரே...//

  இங்கேயும் இருக்காரே!
  //இதுவே ஆஞ்சநேய சரணாகதி//

  ReplyDelete
 46. வெட்டி,

  கஜேந்திரன், பிரகலாதன், ஆஞ்சநேயர் - பதிவில் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் லிஸ்ட்

  மார்க்கண்டேயன் - அவரு சொல்லாமல் விட்டது. ஏன்னு உமக்குத் தெரியலை?!

  எல்லாம் அசைவம் செய்யும் வேலை!! :))

  ReplyDelete
 47. வெட்டிப்பயல் said...
  //கிருஷ்ணன் குறும்புக்காரன் என்பதாலா?//

  கண்ணன் குறும்புக்கும் சரணாகதிக்கும் என்ன சம்பந்தம்? புதசெவி!

  //ராமாயணத்துல தான் அதிகமா பரிபூர்ண சரணாகதி இருக்கு. மகாபாரதத்துல எனக்கு தெரிந்து குறைவு தான். அது ஏன்?///

  மகாபாரதத்தில் அல்லவா அதிகம் பேர் சரணாகதி செய்கிறார்கள்?
  இராமாயணத்தில் ஒரு காண்டத்துக்கு ஒன்னு தானே? :-)

  ReplyDelete
 48. //வெட்டிப்பயல் said...
  மார்கண்டேயன் கூட பரிபூர்ண சரணாகதி தானே?//

  இல்லை!
  காம்யார்த்த சரணாகதி!

  பரிபூர்ண சரணாகதி செய்த சைவச் செம்மல்கள் யார்? யார்??

  ReplyDelete
 49. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  வெட்டிப்பயல் said...
  //கிருஷ்ணன் குறும்புக்காரன் என்பதாலா?//

  கண்ணன் குறும்புக்கும் சரணாகதிக்கும் என்ன சம்பந்தம்? புதசெவி!
  //

  அங்க fraudனு தான் சொல்லனும்னு நினைச்சேன் :-)

  //
  //ராமாயணத்துல தான் அதிகமா பரிபூர்ண சரணாகதி இருக்கு. மகாபாரதத்துல எனக்கு தெரிந்து குறைவு தான். அது ஏன்?///

  மகாபாரதத்தில் அல்லவா அதிகம் பேர் சரணாகதி செய்கிறார்கள்?
  இராமாயணத்தில் ஒரு காண்டத்துக்கு ஒன்னு தானே? :-)//

  பொண்ணுங்களை சொல்றீங்களா? :-)

  ReplyDelete
 50. //என் இன்னோரு தம்பிக்குத் தான் இப்படி படக் படக்-ன்னு இங்கிலீஷ் வரும்! நீங்களுமா? லட்சுமணா! லட்சுமணா!//

  பாபாக்கு கூட வரும் :-)

  ReplyDelete
 51. //வெட்டிப்பயல் said...
  அப்ப ஒளவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமானு கலாய்ச்சது?????? ;)//

  எங்கள் முருகப் பெருமான் ஒளவையைச் சோதிக்கவில்லை!
  ஒளவை தான் பழத்தைச் சோதித்தாள்!
  சரி தானே, ராகவா? :-)

  ReplyDelete
 52. //வெட்டிப்பயல் said...
  ஒருவன் ஒருமுறை பரிபூர்ண சரணாகதி அடைந்த பின் மறுபிறவியில் கடவுளே இல்லை என்று நிந்தித்தாலும் அவனுடைய முன் ஜென்ம சரணாகதி தான் கணக்கில் கொள்ளப்படுமா?//

  ரூம் போட்டு யோசிப்பாங்க தெரியும்!
  நீங்க பங்களா போட்டு யோசிப்பீங்களா? :-)

  //கடவுளே இல்லை என்று நிந்தித்தாலும்//

  அது நான் தான்!

  //அவனுடைய முன் ஜென்ம சரணாகதி தான் கணக்கில் கொள்ளப்படுமா?//

  எனக்கு ஏதாச்சும் கொள்ளப்படுமா பாலாஜி?
  சொல்லி உதவுங்களேன்!
  இருள் நீ்க்கி அருள் காட்டுங்களேன்!

  ReplyDelete
 53. //எனக்கு ஏதாச்சும் கொள்ளப்படுமா பாலாஜி?
  சொல்லி உதவுங்களேன்!
  இருள் நீ்க்கி அருள் காட்டுங்களேன்! //

  கண்டிப்பா கிட்டாது தான், இல்லா ஒன்றை கிட்ட கொண்டுவந்து கிட்டவைக்கலாம் இருப்பதை அதுவும் எப்போதும் இருப்பதை எப்படி கிட்ட வரும், கிட்ட வைப்பது.
  (நன்றி சிவமுருகன்)

  ReplyDelete
 54. //இலவசக்கொத்தனார் said... எல்லாம் அசைவம் செய்யும் வேலை!! :)) //

  இதோ உங்களுக்கு பதில்..

  //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  இராமகிருஷ்ண பரமஹம்சர்!

  அண்மையில்
  மறைந்த காஞ்சிப் பெரியவர்!
  வாரியார் சுவாமிகள்!

  கொத்தனார் அண்ணா, தம்பியுடையான் பதிவுப் பின்னோட்டத்துக்கு அஞ்சான் !!

  ReplyDelete
 55. //இலவசக்கொத்தனார் said...
  கஜேந்திரன், பிரகலாதன், ஆஞ்சநேயர் - பதிவில் கே ஆர் எஸ் சொல்லி இருக்கும் லிஸ்ட்

  மார்க்கண்டேயன் - அவரு சொல்லாமல் விட்டது. ஏன்னு உமக்குத் தெரியலை?!//

  ஆகா, வலையுலக விக்கி கொத்தனாருக்கா இப்படி ஒரு ஜந்தேகம்?

  நான் சொல்லி இருக்கும் லிஸ்ட்டுல பல பேரு சைவர்கள் - பிரகலாதன் உட்பட!
  ஆஞ்சநேயர் = சைவருக்கு எல்லாம் தலைவர்! சாட்சாத் சிவ சொரூபம்!

  மார்க்கண்டேயர் = வைணவர், பெருமாளுக்குப் பொண்ணு கொடுத்தவர்! அவரைப் போல வைணவர்களை எல்லாம் லிஸ்ட்டுல வுட்டுட்டேன்! :-)

  //எல்லாம் அசைவம் செய்யும் வேலை!! :))//

  யூ மீ சிக்கன் டெரியாக்கி? :-)

  ReplyDelete
 56. வெட்டிப்பயல் said...
  //அங்க fraudனு தான் சொல்லனும்னு நினைச்சேன் :-)//

  அதனால் என்ன? சொல்ல வேண்டியது தானே?
  ஹரி ஓம் Fraudஆய நமஹ!
  அதுவும் உகந்த நாமமே! :-)

  நம்பி வரும் பக்தனுக்காக Fraud பட்டத்தையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு, வேறெந்த தெய்வத்துக்கு வரும்!

  விகரம் சொல்றது தான்! - பொல்லாதார்க்கு நான் போலீஸ் இல்ல! பொறு** :-))))

  //பொண்ணுங்களை சொல்றீங்களா? :-)//

  ஓ...பெண்கள் செய்யும் பரிபூர்ண சரணாகதியை ஏத்துக்க மாட்டீங்களோ? கொத்தனார் கட்சிப் பித்தளையா நீங்க? :-)

  ReplyDelete
 57. //Raghav said...
  அண்மையில்
  மறைந்த காஞ்சிப் பெரியவர்!
  வாரியார் சுவாமிகள்!

  கொத்தனார் அண்ணா, தம்பியுடையான் பதிவுப் பின்னோட்டத்துக்கு அஞ்சான் !!//

  ஆகா! பாத்துக்கிட்டீங்களா கொத்தனாரே?

  ராகவன் என்ற பேர் இருந்தாலே கேஆரெஸ் கிட்ட இப்படி ஒரு பாசமா?
  வேர் ஆர் யூ மை டியர் ராகவா?

  பை தி வே
  Dankees Ragav :-)

  ReplyDelete
 58. All fun apart!

  //வெட்டிப்பயல் said...
  ஒருவன் ஒருமுறை பரிபூர்ண சரணாகதி அடைந்த பின் மறுபிறவியில் கடவுளே இல்லை என்று நிந்தித்தாலும் அவனுடைய முன் ஜென்ம சரணாகதி தான்***கணக்கில்***கொள்ளப்படுமா?//


  பரிபூர்ண சரணாகதியில்
  கணக்கு-வழக்குகள் அண்டாது!
  பாவ-புண்ணியம் அண்டாது!
  பிறவி-மோட்ச நிலைகள் கூட சரணாகத ஆத்மாவை அண்டாது!

  பரிபூர்ண சரணாகதி செய்தவன் இறைவன் திருவுள்ளத்தின் படி மீண்டும் பிறவி எடுக்கலாம்! அவன் தீயவனைப் போல் குணங்களையும் காட்ட வாய்ப்புண்டு!

  ஆனால் இவை யாவும், அந்த ஆத்மாவுடைய ஹரி நாம வாசனையை அகற்றி விடாது! அறிந்தோ அறியாமலோ அது அவனுள்ளேயே தங்கி விடும்!

  சரணாகதி செய்த நித்ய முக்தர்கள் தான் ஜய விஜயர்கள்! ஆனால் உலக பாடத்துக்காக, இறைவன் திருவுள்ளத்தால், மீண்டும் பிறந்தார்கள்! மிகவும் தீயவர்களாகவும் இருந்தார்கள்!

  ஆனால் ஹரி நாம ஸ்மரணம், ஹரி நாம வாசனை என்பது இரண்யகசிபுவின் ஆத்மாவில் ஓடிக்கொண்டே தான் இருந்தது! பிரகலாதனின் ஹரி ஜபம் ஒரு முறை என்றால் இரண்யணின் ஹரி ஜபம் பத்து முறை! :-)

  இறுதியில், ஹரி நாமமே வந்திருந்து, தீய பிறவியும் முடித்து, முன்பிருந்த மோட்ச நிலைக்கே அழைத்துச் சென்றது!

  இதுவே சரணாகதியின் மகத்துவம்!
  இதுவே சரணாகதியின் தாத்பர்யம்!

  பிறவி இன்மையோ, பிறவியோ
  நல்லவனோ, கெட்டவனோ
  சைவனோ, வைணவனோ
  எதுவாகிலும்....

  ஒரு முறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி, ஜென்ம ஜென்மத்துக்கும், பக்கத் துணையிருந்து, ஹரி நாம ஸ்மரணத்தை அளிக்கும்!

  ஒரு முறை செய்திட்ட பரிபூர்ண சரணாகதி....
  ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
  எழுமையும் ஏமாப் புடைத்து


  சங்க சக்ர கதா பாணே
  துவாரக நிலைய அச்சுதா
  கோவிந்த புண்டரீகாக்ஷா
  ரக்ஷமாம் ***சரணாகதம்***
  ப்ரபோ,
  ரக்ஷமாம் ***சரணாகதம்***

  ஹரி ஓம்!

  (unable to explain more than this...silent mode for the next few hours and then will be back for the rest of the questions..)

  ReplyDelete
 59. அற்புதம் ரவி அண்ணா.
  ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே! ஸ்ரீமதே நாராயணாய நம: !

  கல்லிலே கலை வண்ணம் காண்பது போல் உங்கள் சொல்லிலே பெருமானின் சரணார விந்தம் காண்கிறேன்.

  ReplyDelete
 60. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  உடையவர், ஒரே அடியாக உடைக்கப் போகிறார்! //

  ரவி அண்ணா, பாலாஜிக்கு உங்களோட பதிலயும், மேல நீங்க சொல்லியிருக்குறதயும் பார்த்தா ஏதோ ஒரு ஒற்றுமை தெரியுதே!!

  ReplyDelete
 61. I will also follow Raghav.

  Sriman NArAyana Charanau Saranam PrabhathyE
  SrimathE NArAyaNAya nama:

  ReplyDelete
 62. அடியேனும் ராகவ், குமரனைத் தொடர்ந்து மும் மந்திரங்களும் சொல்லிக் கொள்கிறேன்!

  திரு எட்டெழுத்து:
  ஓம் நமோ நாராயணாய!
  *ஓம்! எனதில்லை! (அனைத்தும்) நாராயணனுடையதே!*

  த்வய மந்திரம்:
  ஸ்ரீமந் நாராயணாய சரணெள சரணம் ப்ரபத்யே!
  ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

  *எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளில் சரணம் அடைகின்றேன்!
  ஸ்ரீமந் நாராயணனே போற்றி!*

  சரம சுலோகம்:
  சர்வ தர்மான் பரித்யஜ்ய
  மாம் ஏகம் சரணம் வ்ரஜ
  அகம் த்வாம் சர்வ பாபேப்யோ
  மோக்ஷ இஸ்யாமி மா சுச!

  *சர்வ தர்மங்களையும் விட்டுவிட்டு
  என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
  நான் உன் சர்வ பாவங்களையும் நீக்கி
  மோக்ஷம் அளிக்கிறேன்! கவலையை விடு!*

  ReplyDelete
 63. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
  நான் உன் சர்வ பாவங்களையும் நீக்கி
  மோக்ஷம் அளிக்கிறேன்! கவலையை விடு!*//

  சரணம் சரணம் (ரவி)சங்கரா சரணம்..

  ReplyDelete
 64. //*சர்வ தர்மங்களையும் விட்டுவிட்டு
  என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
  நான் உன் சர்வ பாவங்களையும் நீக்கி
  மோக்ஷம் அளிக்கிறேன்! கவலையை விடு!*//

  நானே வழியும் சத்ய ஜீவனுமாய் இருக்கிறேன் அப்படிங்கற பைபிள் வாக்கியம் மாதிரி இருக்கு :)

  ReplyDelete
 65. Rama who was truly mighty looked round all of them , smiled a little and spoke the following words to Lakshmana, of virtuous characteristics:
  Without studying scriptures and without serving elders, it is not possible to speak such words as Sugriva spoke.”
  It appears to my mind that there is however something peculiar in these circumstances which are clearly to be seen in all lives of kings and even occurring in ordinary life.”
  “It is told that persons of the same family and rulers belonging to adjoining territories become enemies and strike in times of adversities. For this reason, he came here.”

  Even if belonging to the same family, persons who are virtuous do respect their own well wishers in that family. Generally among kings, even a virtuous person is apprehended.”
  With regard to the draw back you told me in the matter of accepting a person coming from the side of an adversary, hear from me what the scriptures say.”
  We do not belong to the same family. Further, Vibhishana the demon is desirous of acquiring the kingdom. A few of the demons also may be rather learned ones. That is why, Vibhishana is acceptable.”
  “Kinsfolk do not live together in a fearless mode and in a delightful manner. Hence, they get a split among themselves. For this reason, a fear has come to him. This loud appeal is also major cause. That is why, Vibhishana can be accepted.”

  “My dear one! Neither all brothers are like Bharata, nor all sons of a father like me nor all friends are like you.”


  Rama, Lord Rama, Save me from KRS!!! :P :P :P :P

  ReplyDelete
 66. //இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா?"//

  கெடச்சாலும் கெடைக்கும் :-)

  ReplyDelete
 67. @கீதாம்மா
  //Rama, Lord Rama, Save me from KRS!!! :P :P :P :P//

  என்னம்மா இப்படி வேஸ்ட் பண்ணிட்டீங்க? ஒரு நல்ல வரமா வாங்கி இருக்கக் கூடாது இராமன் கிட்ட?
  அம்பியைத் தும்பி விரட்டனும், மெளலியை பெளலிங் பண்ணனும்...இப்படி எவ்ளோ நல்ல வரமெல்லாம் இருக்கு? :-))

  நீங்க எழுப்பும் விசயத்துக்கு வாரேன்!
  வீடணன் இலங்கை ராஜ்ஜியத்துக்காக இராமனிடம் வரவில்லை என்பது கண்கூடு.

  நீங்கள் சொன்னவை, சபையில் ஒவ்வொருவரின் மறுப்புக்கும் எதிர் மறுப்பு சொல்ல இராமனால் வைக்கப்பட்ட வாதமாக இருக்கலாம்! ஆனால் இங்கே நாம் பேசுவது வீடணன் எதை எதிர்பார்த்து இராமனிடம் வந்தான் என்பது தான்!

  உங்களை ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறேன்!
  'இராமா, இராஜ்ஜியத்தை அவனிடம் இருந்து பற்றி எனக்குத் தாருங்கள்', என்று வீடணன் டீல் பேசும் வடமொழி சுலோகமோ இல்லை தமிழ் விருத்தமோ தங்களால் தர முடியுமா?


  இராஜ்ஜியம் என்று பேச்சு கூட வராது வீடணன் வாயில் இருந்து!
  சரணாகதி என்ற மூச்சு மட்டுமே வரும்!

  ஆனால் இராவணனைக் கொல்லும் முன்பே வலிய வந்து வீடணனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைப்பது இராமன் தான்! ஏன் அப்படிச் செய்தான் என்பது தனிக்கதை!

  ஆனால் உண்மையான அடியவனான வீடணன் பேரில் தூற்றல் இல்லை!
  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இராமனுக்கே!

  வீடணன் துரோகியா என்பதைத் தனிப்பதிவில் வைத்துக் கொள்ளலாமா? :-))

  முரண் புகு தீவினை முடித்த முன்னவன்
  கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்
  அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்
  சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான்!

  ReplyDelete
 68. Eagerly awaiting for the next part.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP