Wednesday, April 08, 2009

மாயவரத்தைக் கலாய்த்த ஆழ்வார்! - திருஇந்தளூர்!

மயிலாடுதுறை! வடமொழியில் மயூரம், மாயூரம்-ன்னு தேய்ஞ்சி தேய்ஞ்சி, கடைசீல மாயவரம்-ன்னு ஆகிப் போச்சு! மாய-வரம் = மாய்ஞ்சி போக, யாராச்சும் வரம் கொடுப்பாய்ங்களா என்ன? :)

மக்களே, நேற்று மதுரை மீனாட்சிக்குக் குடமுழுக்கு-ன்னா, இன்னிக்கி மாயவரத்துல குடமுழுக்கு! மாயவரத்துல முடவன் முழுக்கு தானே?
இது என்னா புதுசா குடமுழுக்கு-ன்னு பாக்கறீங்களா? மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட அண்மையில் உள்ள ஒரு சூப்பர் ஆலயம் = திரு இந்தளூர்!

மயிலாடுதுறை பேருந்து நிலையம், காவிரியாற்றைக் கடந்தாக்கா, இரண்டு கிலோ மீட்டர் தொலைவு கூட இருக்காது...திரு இந்தளூர் கோயில்!
108 திவ்ய தேசங்களில் (திருத்தலங்களில்) ஒன்று! ஆழ்வார் மங்களாசாசனம் பெற்றது! திருமங்கையாழ்வார் மிகவும் வம்பு பண்ணி கலாட்டா செய்த கோயில்! அட, மாயவரத்தானுக்கே ஆப்பா? :)

வாசனை மிக்க ரங்கன் = பரிமள ரங்கன்! அவன் ஆலயத்துக் குட முழுக்கு தான் இன்னிக்கி! (Apr-9-2009)! போவோமா? மாயூரம்ம்ம்ம்ம்? :)

எல்லாருக்கும் நம்ம மாயவரம் மைனர், மயிலாடுதுறை மாணிக்கம், அபி அப்பா டிக்கெட் எடுத்துருவாரு! நீங்க வண்டியில் ஏறி குந்துங்க! :)
மொத்தம் 10,599 பேருப்பா! அபி அப்பா, தலைக்கு 15/-ரூ மேனிக்கு மொத்தம் 1,58,985/-ரூ - கவுன்ட்டர்ல கட்டுங்க! :)


* பொதுவா, சிவாலயங்களில் = கும்பாபிஷேகம் (குடமுழுக்கு)! குடத்து நீரை அப்படியே கொட்டி முழுக்காட்டுவாங்க!
* பெருமாள் கோயில்களில் செய்யப்படுவது = சம்ப்ரோக்ஷணம்! (நன்னீர் தெளித்தல்)! இதைக் கும்பாபிஷேகம்-ன்னு சொல்ல மாட்டாங்க! குட முழுக்காக இல்லாமல், நீர்த் தெளிப்பு மட்டுமே இருக்கும்!

திரு இந்தளூர் எம்பெருமானுக்கு சுகந்தன்-ன்னு பேரு! அதாச்சும் பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!
அவன் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்! அதான் பரிமள ரங்க நாதன்! மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!

கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும், கால் மாட்டில் கங்கை அன்னையும் பணிந்து உள்ளார்கள்!
கங்கையிற் புனிதமாய காவிரி என்ற பட்டமும் கொடுத்து, தென்னகத்துக் காவிரிக்கும் சிறப்பு செய்தமையால் இந்தக் கோலம்!

* திருவரங்கத்தில் காவிரி மாலவனுக்கு மாலையாய்ப் பாய்கிறாள்!
* திருச்சேறையில் அரங்கனுக்கே காவிரி அன்னை ஆகிறாள்!
* திரு இந்தளூரில் அவன் திருமுடியைத் தாண்டியே காவிரி ஓடுகிறாள்!

எம்பெருமான் திருவடிவம் கொள்ளை அழகு! திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடியாய், முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!
பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!

பஞ்ச ரங்க தலங்களுள் என்று சொல்வார்கள்!
1. திருவரங்கம் = கஸ்தூரி ரங்கன் = பெரிய பெருமாள்
2. குடந்தை = ஹேம ரங்கன் = ஆராவமுதன்
3. திரு இந்தளூர் = பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன்
4. கோவிலடி = அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான்
5. மைசூர்-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி

* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) - என்பதும் இன்னொரு வழக்கு!

சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்து+ஊர் = இந்தளூர்!

இதெல்லாம் அப்பால பாத்துக்கலாம்! மொதல்ல மாயவரத்தான் ஆப்பு வாங்கின கதையைப் பார்ப்போம் வாங்க! :)



அன்று செம வெயில்! ராபின்ஹூட் ஆழ்வாரான நம்ம திருமங்கை மன்னன், ஆடல்-மா என்னும் குதிரையின் மேலேறி பறந்து வருகிறார்! மாயவரம் ரங்கனைப் பார்க்க அம்புட்டு ஆசை! பரிமள ரங்கன்-ன்னு சொல்றாங்களே! அவ்ளோ வாசனையா அந்த அரங்கன் மேல?

உச்சி கால நேரம் துவங்க இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு! ஆனால் மாயவரம் சுகவாசி பரிமள ரங்கனோ கோயில் கதவை அடைத்து விட்டான்!
முகத்தில் அடித்தாற் போல கதவு சாத்தியதால், ஆழ்வாருக்குப் பெருத்த ஏமாற்றம்! :( குதிரையின் மேல் அறக்க-பறக்க வந்தது இதற்குத் தானா?

"ரங்கா! இது தகுமா? இன்னும் நேரம் இருக்கே உச்சிக் காலத்துக்கு! அதற்குள் கதவடைப்பா? அதுவும் இப்படி முகத்தில் அடித்தாற் போலவா கதவை மூடுவது?"

"ஆழ்வீர்! இது மாயூரம்! இங்கு எல்லாம் சட்ட திட்டப்படி தான் நடக்கும்! உமக்கு கொஞ்சம் பொறுமை தேவை!"

"இது என்ன நியாயம் ரங்கா? சட்ட திட்டப்படி நடக்கணும்-ன்னா, இன்னும் ஒரு நாழிகை கழித்தல்லவோ, ஆலய நடையை அடைக்கணும்?"

"ஓ......நீர் அப்படி வருகிறீரோ? நான் சொன்ன சட்ட திட்டம் என்னவென்றால், இங்கு நாங்கள் சொன்னதே சட்ட திட்டம்! அதைத் தான் சொன்னேன்! நீர் போய் பிறகு வாரும்! மாயூர மைந்தர்கள் யாருக்காகவும் எதையும் தளர்த்திக் கொள்ள மாட்டார்கள்! அறிவீரோ?"

"ஆகா! நீங்கள் எப்போதுமே அறிவு ஈறாகத் தான் அறிவீர் என்று அடியேனும் அறிவேன்!
அறிவோம்! அறிவோம் என்று வந்த அடியேனை, அரி-ஓம் என்று சொல்ல வைத்தாயே!
அறியோம்! அறியோம் என்றாலும் அரி-ஓம் என்றே வரும்! முதலில் அதை நீர் அறிவீரோ?"

"தமிழ்க் கடவுளிடமே தமிழை வைத்து விளையாட்டா? போதும் இந்த அழகுத் தமிழ்ப் பேச்சு! போம்! போய், பிறகு வாரும்!"

"ஆம்! எம் தமிழ் அழகு தான்! அது உம்மை விட அழகு தான்! அதனால் தானே பச்சைத் தமிழ் பின் சென்ற பசுங் கொண்டலே என்று ஒவ்வொரு புறப்பாட்டிலும், தமிழ் ஓதுபவர்கள் பின்னே ஓடுகிறாய் ரங்கா? அப்புறம் எதற்கு இந்த வீண் அலட்டல்? இதுவும் மாயூரம் சட்ட திட்டமோ?"

(மெளனம்)



"மணம் கமழும் அழகன் என்ற ஆணவத்தில் பேசுகிறாய் பரிமள ரங்கா! அடியாரைப் பழித்தான் அரங்கன் என்று நாளை உன்னைத் தான் எல்லாரும் தூற்றப் போகிறார்கள்! ஞாபகம் வைத்துக் கொள்!"

"அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை! அத்தனை பேருக்கும் என் நடையழகும் குடையழகும் காட்டி விடுவேன்! இப்போது தூற்றும் கூட்டம், அப்போது தூபம் காட்டும்! ஹா ஹா ஹா!"

"என்ன??? அடியவர் என்றால் இளக்காரமா? என்ன ஆணவம் உனக்கு?"

"ஆ! நவம் நவமாகப் பாடும் உமக்கும் ஆ-நவம் தான்! எமக்கும் ஆ-நவம் தான்! இவ்வளவு எதிர் வாதம் செய்கிறீரே! அதற்குப் பதில் ஒரு பாசுரம் பாடி என்னைக் குளிர்விக்கலாமே?"

"உன்னைப் பார்க்கக் கூட இல்லையே! கதவடைத்து விட்டாயே! பார்க்காமல் எப்படிப் பாடுவதாம்?"

"ஏன்? நம்மாழ்வார் என்னும் நம் ஆழ்வார்! அவர் இருந்த இடத்தில் இருந்தே நம்மைப் பார்க்காமலேயே பாடவில்லை? அது போல் பாட முடியாதா?
பார்த்தாலே பரவசம்! பார்க்கா விட்டாலும் பரவசம்! முதலில் அதை நினைவிற் கொள்ளும் நீர்!"

நம்மாழ்வார் என்ற பேரைக் கேட்டதுமே திருமங்கை மனம் கரைகிறது! மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார் அடியவர்கள் குல முதல்வன் ஆயிற்றே! சங்கரர் எப்படியோ, அதே போல் தமிழுக்கும் வைணவத்துக்கும் இந்த மாறன் அல்லவா?
அதே போல் முப்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தத்துவக் கரை கட்டிய குழந்தைப் பையன் அல்லவா? மாறன் மொழி திரு-வாய்-மொழி ஆயிற்றே! திருவாய்மொழிக்கு உருகாதார் ஒரு வாய்மொழிக்கும் உருகார்!

சரி, போனால் போகட்டும்! நம்மாழ்வாருக்காக, நாதனைப் பாடத் துவங்குகிறார் ஆழ்வார்! பத்துப் பாசுரங்கள்! இந்தளூர் பரிமள ரங்கன் மீது!
ஆனால் ஒவ்வொரு வரியிலும் உள் குத்து வைத்துப் பாடுகிறார்! மாயவரத்தானுக்கு உன் குத்து, என் குத்து இல்லை! உள் குத்து! தமிழ்க் குத்து! :)


சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில்! நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை!
நல்லார் அறிவீர், தீயார் அறிவீர், நமக்கு இவ்வுலகத்தில்,
எல்லாம் அறிவீர்! ஈதே அறியீர் இந்த ளூரீரே!


இப்ப என்ன? உம்மைப் பாடணும்! அவ்ளோ தானே? நானும் பாடாம போவப் போறதில்லைங்காணும்!
மற்ற அடியார்களைப் போலவே என்னையும் ஏமாத்திடலாம்-ன்னு நினைச்சிட்டீங்க போல!
நல்லவங்க யாரு-ன்னு அறிவீரு! தீயவங்க யாரு-ன்னு அறிவீரு! எல்லாமே அறிவீரு!
எல்லாம் அறிஞ்ச அறிவீரு! திருவாளர். இந்தளூர்! ஆனா, நாஞ் சொல்லுறதை மட்டும் தான் அறிய மாட்டீரு இல்லையா? :))

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, இங்கு இழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர்! இந்த ளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!


உம்ம கிட்ட போயி ஆசை வச்சேனே! அடியார்க்கு ஆதரவா திரிகிற எனக்கு நல்ல மரியாதை கொடுத்தப்பா மாயவரத்தானே!
உம்மை என்னா-ன்னு சொல்லி பாடுறது மிஸ்டர். இந்தளூர்? ஆங்! அதான் சரியான வழி! சில பேரு ரொம்ப நல்லா "வாழ்த்துவாங்க"! எப்படித் தெரியுமா? ="நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க டே!" - அதே போல ரங்கா, உம்மை அடியேனும் வாழ்த்தறேன்!

மிஸ்டர் இந்தளூர்! மிஸ்டர் மாயவரம்! மிஸ்டர் பரிமள ரங்கா!
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ந்தே போம் நீரே! நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க டே! :)))

திருஇந்தளூர் ரங்க நாயகி - பரிமள ரங்கன்
மரு-இனிய-மகள், மரு-இனிய-மைந்தன் திருவடிகளே சரணம்!
ஆலயக் குடமுழுக்கு (நன்னீராட்டுக்கு) வாழ்த்துக்கள்! இதோ அழைப்பிதழ்!

50 comments:

  1. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  2. இந்த விடுமுறையில் திருக்கோவிலுக்கு சென்றிருந்தேன்!

    பல வருடங்களாக அழுக்கேறியிருந்த சிற்பங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அழகாய் காட்சியளிக்கின்றது! அதுவும்

    சன்னிதி முகப்பில் குழலூதும் கண்ணன் சிற்பம் இதுவரையிலும் யாரும் கண்டிருக்க முடியாத ஒரு மறைவாக இருந்தது இப்பொழுது ஜொலித்துக்கொண்டிருக்கிறது!

    ஆண்டவனை இங்கிருந்தபடியே தொழுகின்றேன்!

    :)

    ReplyDelete
  3. //நான் சொன்ன சட்ட திட்டம் என்னவென்றால், இங்கு நாங்கள் சொன்னதே சட்ட திட்டம்!//

    ரைட்டு!

    பின்னே மாயவரம்ல எப்பிடி.....!

    ReplyDelete
  4. எங்க ஊரு கோயிலைப் பற்றி மணக்க மணக்க எழுதிய இணைய ஆழ்வார் .. எங்கள் இனிய அண்ணன்.. அன்புக் கொண்டல்.. ஜெர்ஸி பெற்ற ஜெம்.. அருமைத் தளபதி கேயாரெஸ் வாழ்க.. வளர்க..

    வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்..

    அன்புத் தொண்டன்,
    சீமாச்சு...
    வட்டச்செயலாளர்
    45 வது வட்டம்..

    ReplyDelete
  5. நானும் ஆஜர்!!!

    நான் பிறந்து வளர்ந்த ஊர் திரு இந்தளூர். இன்று பெருமாள் கோவில் கும்பாவிசஷேகம்! நல்ல கூட்டமாம்!

    தங்கள் பதிவிற்கு நன்றி
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  6. இரவிசங்கர் கண்ணபிரான். உங்கள் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். திருவிந்தளூர் பாசுரங்களைப் பாடி அனுபவிக்க ஒரு அருமையான வாய்ப்பைத் தந்ததற்கு மிக்க நன்றி. ரொம்ப நாளா இருந்த ஆசை இன்னைக்கு கொஞ்சம் நிறைவேறிருச்சு. திருமங்கையாழ்வார் எம்புட்டு சூப்பரா பாடியிருக்காரு?!

    திருவிந்தளூர் மகாசம்ப்ரோக்ஷணத்திற்கான இடுகையை இட்டு அதில் இந்த இடுகைக்குத் தொடுப்பும் தந்திருக்கிறேன். அந்தத் தொடுப்பு கீழே தெரிகிறது. அதனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்.

    ReplyDelete
  7. மயிலாடுதுறைக்காரி நானும் உள்ளேன் ஐயா!..:))

    வாழ்ந்தே போம் நல்லா இருக்கு..

    ReplyDelete
  8. நானும் ஆஜர்!!!
    தங்கள் பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  9. //சதுக்க பூதம் said...
    நானும் ஆஜர்!!!
    தங்கள் பதிவிற்கு நன்றி

    12:23 AM, April 09, 2009//


    அட....!

    சொல்லவே இல்ல :))))

    ReplyDelete
  10. திருஇந்தளூர் பரிமளரங்கநாதன் திருவடிகளே சரணம்..

    ReplyDelete
  11. பெருமாள் பழிக்குப் பழி வாங்கி விட்டாரோ :) திருமணங்கொல்லையில் பெருமாளிடம் வாளை நீட்டி மந்திரோபதேசம் பெற்றதற்கு பழி வாங்கும் விதமாக இங்கே கதவை அடைத்து பாடலை வாங்கி விட்டார் போலும்.. :)

    ReplyDelete
  12. உஙகள் இருவர் பதிவுகள் இரட்டை இன்பம்.
    பதி

    ReplyDelete
  13. இருவர் பதிவுகள் இரட்டை இன்பம்.
    பதி

    ReplyDelete
  14. இந்த(ஊர்)ளூர், 'அந்த' நூத்தியெட்டுலே ஒன்னாச்சேப்பா!!!!

    இந்தவூர்க்காரத் தம்பியைப் பத்திச் சொல்லிவைச்சுக்கவா?

    ஆச்சு..... அவர் பெயர் **ச்சு:-))))

    ReplyDelete
  15. / துளசி கோபால் said...
    இந்த(ஊர்)ளூர், 'அந்த' நூத்தியெட்டுலே ஒன்னாச்சேப்பா!!!!

    இந்தவூர்க்காரத் தம்பியைப் பத்திச் சொல்லிவைச்சுக்கவா?

    ஆச்சு..... அவர் பெயர் **ச்சு:-))))
    //


    டீச்சர் அந்த ரெண்டு ஸ்டார்ல ஒரு சினிமா ஸ்டார் பேரு இருக்கும் கரீக்டா...?!
    :))))

    ReplyDelete
  16. தங்களது பதிவு மிக அருமை. நானும் மாயவரத்து மாப்பிள்ளை என்பதால் அனுபவித்து படித்தேன். ஒரு சந்தேகம். ஆதிரங்கம் என்றால் கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தையும் மத்யரங்கம் என்றால் கர்நாடகத்தில் உள்ள சிவசமுத்திரத்தையும் அனந்தரங்கம் என்றால் நமது ஸ்ரீரங்கத்தையும் குறிப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுதான் சரியாகப்படுகிறது. ஏனெனில் இந்த மூன்று இடங்களிலும் காவிரி இரண்டாக பிரிந்து பிறகு கூடுகிறது. இந்த மூன்று இடங்களும் காவிரியால் உண்டாக்கப்பட்ட தீவில் உள்ளவை. தயை செய்து இது சரியா எனக்கூறவும்.

    ReplyDelete
  17. ஆண்டவனை இங்கிருந்தபடியே தொழுகின்றேன்!

    :)

    ReplyDelete
  18. அபிஅப்பா4:03 AM, April 09, 2009

    இதோ பதிவை படித்து கொண்டிருக்கும் நேரம் எம்பெருமாள் சந்நதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஜவ் மிட்டாய்காரன் சங்கு சத்தமும், பலூன் காரன் கிர் கிட் என பலூனை தேய்த்து பசங்களை வசியம் பன்னும் சத்தமும், ஐஸ் வண்டி டப்பா மூடியை படார் படார் என மூடி திறக்கும் சத்தமும், கோவில் மணி சத்தமும், இடுப்பில் நட்டுவும், கையில் அபியுமாக அபிஅம்மாவும், பக்கத்தில் நிற்கும் ஏதோ ஒரு சிறுமி தலையில் இருந்து பூவை இழுக்கும் நட்டுவும், அதற்காக அழும் அந்த சிறுமியும், அதை பார்த்து அபிஅம்மா "அச்சச்சோ பெருமாளே அநியாய பெருமாளே" என நட்டுவை பார்த்து கத்துவதும்...........நான் அப்படியே இந்த பதிவை படிப்பதும் எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கின்றது.. கண்களில் நீர் வருகின்றது.....

    ReplyDelete
  19. அபிஅப்பா4:06 AM, April 09, 2009

    எங்க ஊரு கோயிலைப் பற்றி மணக்க மணக்க எழுதிய இணைய ஆழ்வார் .. எங்கள் இனிய அண்ணன்.. அன்புக் சுண்டல்.. ஜெர்ஸி பெற்ற ஜெம்.. அருமைத் தளபதி கேயாரெஸ் வாழ்க.. வளர்க..

    வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்..

    அன்புத் தொண்டன்,
    அபிஅப்பா...
    வட்டச்செயலாளர்
    32 வது வட்டம்..

    ReplyDelete
  20. அபிஅப்பா4:10 AM, April 09, 2009

    \\ ஆயில்யன் said...
    //நான் சொன்ன சட்ட திட்டம் என்னவென்றால், இங்கு நாங்கள் சொன்னதே சட்ட திட்டம்!//

    ரைட்டு!

    பின்னே மாயவரம்ல எப்பிடி.....!

    இதுக்கு ரிப்பீட்டே போடலைன்னா அந்த பெருமாளே என்னை மன்னிக்க மாட்டார்!

    ReplyDelete
  21. அபிஅப்பா4:15 AM, April 09, 2009

    ஆயில்ஸ் வந்தாச்சு, சிவா வந்தாச்சு, சீமாச்சு அண்ணா வந்தாச்சு, முத்து வந்தாச்சு, நான் வந்தாச்சு, மீதி எல்லாரும் எங்கப்பா??? எல்லேராம் சார், முகமூடி, மாயவரத்தான், உஷா அண்ணி, ராம்கி, மூக்கு சுந்தர் எல்லாம் எங்க போயிட்டீங்க! நம்ம ஊர் திருவிழான்னா எல்லாரும் வர வேண்டாமா??

    ReplyDelete
  22. அபிஅப்பா4:17 AM, April 09, 2009

    \\ துளசி கோபால் said...
    இந்த(ஊர்)ளூர், 'அந்த' நூத்தியெட்டுலே ஒன்னாச்சேப்பா!!!!

    இந்தவூர்க்காரத் தம்பியைப் பத்திச் சொல்லிவைச்சுக்கவா?

    ஆச்சு..... அவர் பெயர் **ச்சு:-))))
    \\

    ரீச்சர் பூமாச்சுவா????:-))

    ReplyDelete
  23. மிக நன்றாக எழுதுகிறீர்கள் , உங்கள் பனி தொடரட்டும்

    ReplyDelete
  24. ஆகா
    தூங்கி எழுந்து வரதுக்குள்ள தனி மாயவரக் கும்மியே நடந்திருக்கு போல! :)

    //ஆச்சு..... அவர் பெயர் **ச்சு:-))))
    \\

    ரீச்சர் பூமாச்சுவா????:-))//

    ஆஆஆஆஅச்சூசூசூ...
    அபி அப்பாச்சூசூசூசூ

    தும்மும் போது கூட இப்படித் தான் தும்மல் வருது! :)

    ReplyDelete
  25. //ஆயில்யன் said...
    மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்!//

    மீ த 25thயேய்ய்ய்ய்ய்! :)
    ஆயில்ஸ் அண்ணாச்சி...மாயூர மண்ணாச்சி! :)

    ReplyDelete
  26. //ஆயில்யன் said...
    பல வருடங்களாக அழுக்கேறியிருந்த சிற்பங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அழகாய் காட்சியளிக்கின்றது! அதுவும்
    சன்னிதி முகப்பில் குழலூதும் கண்ணன் சிற்பம்//

    இந்த புகைப்படத்தை நானும் தேடினேன் அண்ணாச்சி! கெடைக்கலை! நமக்கு கோயில்ல இருந்து தனிப்பட்ட அழைப்பிதழும் அனுப்பி வச்சிருந்தாங்க! :)

    //ஆண்டவனை இங்கிருந்தபடியே தொழுகின்றேன்!//

    அடியேனும் அவ்வண்ணமே தொழுகின்றேன்!

    ReplyDelete
  27. //ஆயில்யன் said...
    //நான் சொன்ன சட்ட திட்டம் என்னவென்றால், இங்கு நாங்கள் சொன்னதே சட்ட திட்டம்!//

    ரைட்டு!
    பின்னே மாயவரம்ல எப்பிடி.....!//

    ஹா ஹா ஹா!
    இதைச் சொல்லும் போது யாரை மனசுல வச்சி சொன்னீங்க ஆயில்ஸ் அண்ணே? :)

    ReplyDelete
  28. //Seemachu said...
    எங்க ஊரு கோயிலைப் பற்றி மணக்க மணக்க எழுதிய இணைய ஆழ்வார் .. எங்கள் இனிய அண்ணன்.. அன்புக் கொண்டல்.. ஜெர்ஸி பெற்ற ஜெம்.. அருமைத் தளபதி கேயாரெஸ் வாழ்க.. வளர்க.//

    ஹிஹி! நன்றி! நன்றி! நன்றி சீமாச்சுண்ணே!
    ஒரு படம் நீங்க கொடுத்த பேராசிரியர் இராமபத்ரன் ஐயா நூலில் இருந்து க்ளிக்கியது!

    ஆனாலும் ஒரு.....கர்ர்ர்ர்ர்! அது என்ன "எங்க ஊரு" கோயில்! எங்களுக்கெல்லாம் அது ஊரு இல்லையா? ஆயிரம் இருந்தாலும் மாயூரம் ஆகுமா?

    //வாழ்த்த வயதில்லையாதலால் வணங்குகிறோம்..//

    இது ரொம்ப ஓவரு! நான் ஒரு அப்பாவிச் சிறுவன்! நீங்க வணங்கக் கூடாது! வாழ்த்தணும்! அதுவும் சும்மா இல்ல! மொய் வச்சி வாழ்த்தணும்! :)

    ReplyDelete
  29. //மயிலாடுதுறை சிவா said...
    நானும் ஆஜர்!!!//

    :)
    சிவபெருமானே ஆஜர்!

    //நான் பிறந்து வளர்ந்த ஊர் திரு இந்தளூர். இன்று பெருமாள் கோவில் கும்பாவிசஷேகம்! நல்ல கூட்டமாம்!//

    இப்போ தான் தொலைபேசினேன்! அவிங்களும் சொன்னாங்க! ஆலயம் ஒரு வீட்டைப் போலத் தான்! பன்னிரெண்டு வருசத்துக்கு ஒரு முறை மராமத்துப் பணி போலத் தான்! ஆடம்பரம் இல்லை! அவசியம்! அதை உணர்ந்து கோயிலுக்கு ஒரு facelift கொடுத்திருக்காக!

    ReplyDelete
  30. //குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர் கண்ணபிரான்//

    இது என்ன இன்னிக்கி இம்புட்டு நீளமா கூப்பிடுறீரு?

    //உங்கள் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்//

    கோயில் கட்டளை மாதிரியா குமரன்? :)

    //திருவிந்தளூர் பாசுரங்களைப் பாடி அனுபவிக்க ஒரு அருமையான வாய்ப்பைத் தந்ததற்கு மிக்க நன்றி. ரொம்ப நாளா இருந்த ஆசை இன்னைக்கு கொஞ்சம் நிறைவேறிருச்சு. திருமங்கையாழ்வார் எம்புட்டு சூப்பரா பாடியிருக்காரு?!//

    திருமங்கை விசிறி ஆயாச்சுல்ல? இனி கூடல்-ல இன்னும் செம களை கட்டப் போகுது! :)

    //அந்தத் தொடுப்பு கீழே தெரிகிறது. அதனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்//

    கூடலுக்கு வர நம்புளுக்கே வழி சொல்லிக் கொடுக்கறீயளா? இது ஓவரோ ஓவர்! :)
    அங்கு வந்து ரங்கனைச் சேவித்த பின்னர் தான் நேற்றிரவு தூங்கவே போனேன்!

    ReplyDelete
  31. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    மயிலாடுதுறைக்காரி நானும் உள்ளேன் ஐயா!..:))//

    சும்மா உள்ளேன் ஐயா போதாது முத்தக்கா! அபி அப்பாவைக் கொஞ்சம் சார்த்துங்க! :)

    //வாழ்ந்தே போம் நல்லா இருக்கு..//

    இறைவனிடம் எம்புட்டு உரிமையும் நகைச்சுவையும் பாருங்க! ஏதோ இவர் பால்ய சினேகிதன் மாதிரி! பதிவுலகத் தோழன்/தோழி மாதிரி!

    ReplyDelete
  32. //சதுக்க பூதம் said...
    நானும் ஆஜர்!!!
    தங்கள் பதிவிற்கு நன்றி//

    The Parade of Mayavarathans! :)

    ReplyDelete
  33. ஆயில்யன் said...
    //சதுக்க பூதம் said...
    நானும் ஆஜர்!!!
    தங்கள் பதிவிற்கு நன்றி

    அட....!
    சொல்லவே இல்ல :))))//

    அதான் சொல்லிட்டாரே சதுக்கபூதம்
    சொல்லவே இல்ல-ன்னு பொய் சொல்றீங்களே ஆயில்ஸ்? அடுக்குமா? :)

    ReplyDelete
  34. //pathykv said...
    உஙகள் இருவர் பதிவுகள் இரட்டை இன்பம்.
    //

    வாங்க பதி! நன்றி!
    இரட்டை மணி மாலை தான்! :)

    ReplyDelete
  35. //துளசி கோபால் said...
    இந்த(ஊர்)ளூர், 'அந்த' நூத்தியெட்டுலே ஒன்னாச்சேப்பா!!!!//

    நூத்தி எட்டா? அப்படீன்னா? நூத்தியெட்டு தேங்கா ஒடைப்பாங்களே! அதுவா டீச்சர்? :)
    அபி அப்பாவுக்காக இதைக் கூட ஒடைக்க மாட்டேனா? :)

    //இந்தவூர்க்காரத் தம்பியைப் பத்திச் சொல்லிவைச்சுக்கவா?
    ஆச்சு..... அவர் பெயர் **ச்சு:-))))//

    ஆஆஆஅச்சூ! :)

    ReplyDelete
  36. //Raghav said...
    திருமணங்கொல்லையில் பெருமாளிடம் வாளை நீட்டி மந்திரோபதேசம் பெற்றதற்கு பழி வாங்கும் விதமாக இங்கே கதவை அடைத்து பாடலை வாங்கி விட்டார் போலும்.. :)//

    யோவ் ராகவ்வு!
    நாங்க வாள் நீட்டினா, அவரு பழி வாங்கிடறதா? எ.கொ.இ! அநியாயம்! நாங்க வாலை, வாளை எல்லாம் நீட்டுவோம் தான்! ஆனா அவரு ஒழுங்கா, பாசமா இருக்கணும்! சொல்லி வைங்க! :))

    ReplyDelete
  37. //ஆயில்யன் said...
    ஆச்சு..... அவர் பெயர் **ச்சு:-))))
    //
    டீச்சர் அந்த ரெண்டு ஸ்டார்ல ஒரு சினிமா ஸ்டார் பேரு இருக்கும் கரீக்டா...?!
    :))))//

    அடப் பாவீங்களா?
    ஐ வான்ட் டு சீ சீமா நெளவ்! :))

    ReplyDelete
  38. //கோபிநாத் said...
    ஆண்டவனை இங்கிருந்தபடியே தொழுகின்றேன்!

    :)//

    தட்சிணையும் அங்கிருந்தபடியே போடுப்பா மாப்பி கோப்பி! :)

    ReplyDelete
  39. //அது ஒரு கனாக் காலம் said...
    மிக நன்றாக எழுதுகிறீர்கள் , உங்கள் பனி தொடரட்டும்//

    நன்றிங்கங்கோ!
    பணி? பனி தொடரட்டும் தான்! இங்கே இன்னும் "பனி" பெய்யுது! ஆனா சம்மர் வரப்போகுது-ன்னு கதை அடிச்சிக்கிட்டு இருக்கானுங்க! நியூயார்க் நல்ல நியூயார்க்! :))

    ReplyDelete
  40. //அபிஅப்பா said...
    இதோ பதிவை படித்து கொண்டிருக்கும் நேரம் எம்பெருமாள் சந்நதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஜவ் மிட்டாய்காரன் சங்கு சத்தமும், பலூன் காரன் கிர் கிட் என பலூனை தேய்த்து பசங்களை வசியம் பன்னும் சத்தமும், ஐஸ் வண்டி டப்பா மூடியை படார் படார் என மூடி திறக்கும் சத்தமும், கோவில் மணி சத்தமும்//

    ஆகா! ஆகா! ஆகா!
    இந்தப் பதிவு அண்ணனின் நேர்முக வர்ணனையால் ஜென்ம சாபல்யம் அடைந்தது!

    //இடுப்பில் நட்டுவும், கையில் அபியுமாக அபிஅம்மாவும், பக்கத்தில் நிற்கும் ஏதோ ஒரு சிறுமி தலையில் இருந்து பூவை இழுக்கும் நட்டுவும், அதற்காக அழும் அந்த சிறுமியும், அதை பார்த்து அபிஅம்மா "அச்சச்சோ பெருமாளே அநியாய பெருமாளே" என நட்டுவை பார்த்து கத்துவதும்...........//

    ஹா ஹா ஹா!
    அந்தப் பொண்ணு பேரு தசாவதார அசினா? :)

    //நான் அப்படியே இந்த பதிவை படிப்பதும் எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கின்றது.. கண்களில் நீர் வருகின்றது.....//

    நீங்களும் ஒரு ஆழ்வார் தான்னே!
    அபியப்பாழ்வார் ஆழ்ந்து விட்டார்!
    தொல்ஸ் அண்ணன் திருவடிகளே வணக்கம்!

    ReplyDelete
  41. //* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) - என்பதும் இன்னொரு வழக்கு!//

    இப்படி ஒரு அந்தரங்கம் இருப்பத இப்பதான் தெரிஞ்சிகிட்டேன் - நன்றி.

    மாயவரத்தானுக்கு உள் குத்தா இல்ல உன் குத்தா? வேணும்னா இலையாராஜாவா பாட்டு பாட சொல்லுவோமா?

    உன் குத்தமா
    என் குத்தமா
    யார நான் குத்தம் சொல்ல...

    ReplyDelete
  42. //எல்லேராம் சார், முகமூடி, மாயவரத்தான், உஷா அண்ணி, ராம்கி, மூக்கு சுந்தர் எல்லாம் எங்க போயிட்டீங்க! நம்ம ஊர் திருவிழான்னா எல்லாரும் வர வேண்டாமா??
    //

    ஆஜர்!!!

    - Ramki

    ReplyDelete
  43. //வே.நடனசபாபதி said...
    தங்களது பதிவு மிக அருமை. நானும் மாயவரத்து மாப்பிள்ளை என்பதால் அனுபவித்து படித்தேன்.//

    ஓ..மாப்பிள்ளைகளும் மாயவரத்துக்கு உரிமை கொண்டாடுறாங்களோ? :)

    //ஒரு சந்தேகம். ஆதிரங்கம் என்றால் கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தையும் மத்யரங்கம் என்றால் கர்நாடகத்தில் உள்ள சிவசமுத்திரத்தையும் அனந்தரங்கம் என்றால் நமது ஸ்ரீரங்கத்தையும் குறிப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுதான் சரியாகப்படுகிறது//

    இவை நயத்துக்காகச் சொல்லப்படுவது தான் நடனசபாபதி ஐயா!
    காவிரி இரண்டாகப் பிரிந்து பிறகு கூடுவதால் நீங்கள் சொன்ன வரிசை சரியே! அது அரங்கத்தை வைத்து உண்டான வரிசை!
    இன்னொன்று அரங்கனை வைத்து உண்டான வரிசை! சோழ நாட்டுத் திருப்பதிகளுக்கு மட்டும்!

    ReplyDelete
  44. //அன்புத் தொண்டன்,
    அபிஅப்பா...
    வட்டச்செயலாளர்
    32 வது வட்டம்..

    அன்புத் தொண்டன்,
    சீமாச்சு...
    வட்டச்செயலாளர்
    45 வது வட்டம்..//

    அது என்ன 32? 45? கணக்கு? :)
    சீமாச்சு அண்ணன் அதிகமான வட்டமோ? :)

    ReplyDelete
  45. //அபிஅப்பா said...
    இதுக்கு ரிப்பீட்டே போடலைன்னா அந்த பெருமாளே என்னை மன்னிக்க மாட்டார்!//

    அந்தப் பெருமாளே ரிப்பீட்டே போட்டாலும் போடுவாரு அபி அப்பாவுக்கு! :)

    ReplyDelete
  46. Anonymous said...
    //எல்லேராம் சார், முகமூடி, மாயவரத்தான், உஷா அண்ணி, ராம்கி, மூக்கு சுந்தர் எல்லாம் எங்க போயிட்டீங்க! நம்ம ஊர் திருவிழான்னா எல்லாரும் வர வேண்டாமா??
    //

    ஆஜர்!!!
    - Ramki//

    ஹா ஹா ஹா
    சுந்தர் வத்தராயிருப்பு இல்லீயோ? அவர் எப்போ மாயவரத்தான் ஆனாரு?

    ReplyDelete
  47. //அரசூரான் said...
    //* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) - என்பதும் இன்னொரு வழக்கு!//

    இப்படி ஒரு அந்தரங்கம் இருப்பத இப்பதான் தெரிஞ்சிகிட்டேன் - நன்றி//

    நடனசபாபதி ஐயா சொன்ன வரிசையும் பாருங்க!

    ஆதி ரங்கம் = பரமபதம்/வைகுண்டம்
    மத்ய ரங்கம் = திருப்பாற்கடல்
    அந்த ரங்கம் = திருவரங்கம்
    என்றும் சொல்லுவார்கள்! :)

    //மாயவரத்தானுக்கு உள் குத்தா இல்ல உன் குத்தா? வேணும்னா இலையாராஜாவா பாட்டு பாட சொல்லுவோமா?//

    :))

    ReplyDelete
  48. ஆஹா மூக்கு சுந்தர் அக்மார்க், ISO மாயூரநாதர் பின்பக்க மேலவீதி நம்ம குரங்கு ராதா வீட்டுக்கு பக்கத்திலே அய்யா:-)))

    ReplyDelete
  49. மூக்கு சுந்தர் வேற, வத்திராயிருப்பு சுந்தர் வேற இரவி.

    ReplyDelete
  50. After a long time, I am reading a super-duper blog on 'Aaanmikam'- courtesy Indalur Perumaan! Thirumangai was just superb. Indha Aazhvaarkalai padithae kaalathai kadathi vidalaam polirukkae, KRS !

    Nammaazhvaarukkum 32 varusha thangal thaana indha poovulakil, Adi sankararaip polavae.Enakku ippodhu thaan theriyum. Oru vaelai, Sankararin avathaaramo, Nammazhvaar? Kabir Das-in avathaaram thaano, Shriddi Baba..enrum thonruvathundu.
    Manasilum aayiram maayai..

    -vjay

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP