Thursday, April 03, 2008

பெங்களூரு! பதிவரு! சந்திப்பு! ஆன்மீகம் அல்ல! பெண்மீகம் பேச!

அட சத்தியமா நம்புங்க தல! நம்புங்க!
இந்த வாரயிறுதி பெங்களூர் வாரான் ஒருத்தன்! நிராயுதபாணியா வேற வாரான்! பெண்களூரில் பெண்மீகம் பேச! :-))
நல்ல சான்ஸ்! பல நாள் கணக்கைத் தீர்த்துக்கலாம்!
என்னா சொல்றீங்க? :-))

*இப்போதைக்கு நம்ம பிளாக் யூனியன் டிடி யக்கா தான் தலைமை தாங்குவேன்-ன்னு அடம் புடிக்கறாங்க! தலைமை தாங்குவாங்களா, தலையை வாங்குவாங்களா? கரீட்டாச் சொல்லுங்க பார்ப்போம்!
*பெங்களூரம்பதி ச்ச்ச்சே மதுரையம்பதி அண்ணா தான் சந்திப்பு சாக்ரடீஸ்!
*ராயல் ராம் மீல்ஸூக்கு பிரம்ம கூழு ஊத்தறேன்னு வாக்கு கொடுத்துருக்காரு!

*நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி, அத்தினி பேரையும் பொகைப்படத்துல புகை போடறதா சொல்லி இருக்காரு!
*அம்பி, கணேசன் வில் வித்தைப் போட்டி, நிகழ்ச்சியின் ஸ்பெசல்
*வேதாக்கா மீட்டிங்கை வேதா-ளத்தில் இல்லீன்னா பாதாளத்தில் வச்சிக்கலாம்-னு சொல்லி இருக்காக

*நம்ம கவிதாயினி ஷைலஜா அவர்களின் நான் ஸ்டாப் இன்னிசைக் கச்சேரி தான் போனஸ்!

*சிவமுருகன் காளைக்கு ஒடம்பு சரியில்லைன்னு மயில் மேல் வரதா சொல்லி இருக்காரு!
*மோகன்தாஸ் "சித்திரம் பேசுதடி"-ன்னு பாட்டு வரையப் போறாராம்!
*தலைவர் தேசிகன் சென்னைப் பயணத்தைப் பொறுத்து அருள்வாக்கு கொடுப்பாரு!

***என்றும் போல் இன்றும், தி ஒன்லி தல ஆப் சங்கம், செவ்வாழைச் சித்தப்பு, நம்ம கைப்புள்ள, தேசிய கீதம் பாடி நிகழ்ச்சிய முடிச்சிப் போடுவாரு!

சிவப்பு பாக்கில் (லால் பாக்கில்), வெத்தலை (மொக்கை) போடலாம்னு இப்போதைக்குத் திட்டம்!
நாள்: சனிக்கிழமை ஏப்ரல்-5
நேரம்: மாலை 03:00
நட்சத்திரம்: அதைத் தமிழ்மணம் பாத்துக்குவாங்க!
பொருள்: (அட ஏதாச்சும் ஒரு கருப்பொருள் இல்லாம எப்படிப் பதிவெழுதறதாம்?) 2008-இல் திருமணம் ஆகும் பதிவர்கள்!

சரி,
பல பேரு என் லிஸ்ட்டில் விட்டுப் போச்சு!
பின்னூட்டத்தில் சொல்லி ஜோதியில் சேர்ந்தீங்கன்னா, கும்மி சந்திப்பிலும் களை கட்டும்!
வர்ட்டா :-)))

43 comments:

 1. வழக்கமா இந்த மாதிரி இடுகைகளுக்கு எல்லாம் சொல்லுவாங்களே அதை நானும் இங்கே சொல்லிக்கிறேன்.

  பெண்களூர் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. சூப்பர் சூப்பர்...

  எல்லாரையும் விசாரிச்சதா சொல்லுங்க...

  ReplyDelete
 3. ஏதேது, வரும்முன்னாடியே ஒரு முடிவோட இருக்கீங்க போல?

  ReplyDelete
 4. பெங்களூரா? சீ சீ அந்த ஊர் புளிக்கும்..

  ReplyDelete
 5. Bangalore la than Hogenakkal vivagarathula ragalai seythukittu irukkanga. Poi mattikatheengo!!!:)

  ReplyDelete
 6. நான் வலைப் பதிவுலகில் பொறந்து தவழ்ந்து்...இது வரை போட்ட போஸ்ட்டுலயே....இது தானுங்கோ மீக நீஈஈஈஈஈஈளமான போஸ்ட்டு! :-)

  ReplyDelete
 7. என்சாய் மாடி :)))

  ReplyDelete
 8. லால் பாக் பூங்கா வில் எந்த இடம் என்று சொன்னால் வசதியாக இருக்கும்.

  அன்புடன்
  அரவிந்தன்

  ReplyDelete
 9. //சிவமுருகன் காளைக்கு ஒடம்பு சரியில்லைன்னு மயில் மேல் வரதா சொல்லி இருக்காரு//

  காளையும் சரி அந்த மயிலும் சரி ஒடம்பு சரியில்லனா என்ன பன்றது?


  //2008-இல் திருமணம் ஆகும் பதிவர்கள்!//

  அடடா தலைப்பு வேற நல்லா இருக்கே!

  (என்ன வச்சு காமடி கீமடி பண்ணலையே!, நம்மக்கெல்லாம் அந்த (கொ)கடுப்புன வர கொஞ்சநாளாகும்.)

  ReplyDelete
 10. //பெண்களூர் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்//

  ஐயா ஆன்மீக வின்மீனே! ஏற்கனவே பெங்களுர், பங்களூருவான்னு யோசிக்கும் போது புதுஸ்ஸா பேரு வேற மாத்திராதீங்கய்யா!

  ReplyDelete
 11. //நான் வலைப் பதிவுலகில் பொறந்து தவழ்ந்து்...இது வரை போட்ட போஸ்ட்டுலயே....இது தானுங்கோ மீக நீஈஈஈஈஈஈளமான போஸ்ட்டு! //

  இது வேறயா?

  ReplyDelete
 12. @மெளலி அண்ணா

  அரவிந்தனுக்குக் கொஞ்சம் பதில் சொல்லுங்கண்ணா! லால்-பாக்கில் எந்த பாக்கு-ண்ணா?

  நமக்கு லால்பாக்-மைசூர்பாக் ரெண்டு தான் தெரியும்! :-))

  ReplyDelete
 13. தமிழ்நாட்டிலேர்ந்து இப்பொ வடமேற்கில சூலம்னு சொல்றாங்க. பார்த்து நடந்துகிங்க எல்லாரும்! மே மாசம் தேர்தல அறிவிச்சுட்டாங்க. அதயும் கவனிச்சுக்கிங்க.

  நல்லா நடக்க வாழ்த்துகள்!!

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள். பாத்து, சூதானமா கும்மியடிச்சுட்டு வாங்க. நெலம வேற சரியில்லன்னு சொல்லிகிறாய்ங்க :)

  ReplyDelete
 15. பாத்து கெட்டாள் நாகராஜ் ச்ச வட்டாள் நாகராஜ் ஏரியாவாம் அது
  :))

  ReplyDelete
 16. விண்மீன் என்று போடனும் என்று குமரன் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன்..
  // நட்சத்திரம //

  பெண்மீகம் பேச பெண்மீகப்பதிவரை கூப்பிடவில்லையா... :P

  யாரங்கே, க.ர.சவை, வாட்டாள் நாகராஜிடம் பிடிச்சிக் கொடுங்கய்யா... :))))

  ReplyDelete
 17. என்னமோ வேதிகா'ன்னு ஒன்னு இருக்காமே, விசாரிச்சதா சொல்லுங்க

  ReplyDelete
 18. அஞ்சு லிட்டர் கேன் உண்டா? இருந்தா அக்செப்ட்டு இல்லைண்ணா அப்பீட்டு.

  ReplyDelete
 19. அரவிந்தன், கிளாஸ் ஹவுஸ் பக்கத்தில மீட் பண்ணலாம்...நாளை மாலை நேரம், இடம் முடிவாக இதே பதிவில் பின்னூட்டமிடுவார் நமது சிங்கம் ராயல் ராம். :)

  ReplyDelete
 20. இந்த மாதிரி ஒரு தலைப்பையும் வைத்து அந்த பதிவில் அண்ணன் மோகந்தாஸ் பெயரையும் சேர்த்து அண்ணன் மீது களங்கம் கற்பித்த கேஆர்எஸ்க்கு என் வன்மையான கண்டனங்கள்.

  இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்த மாநாட்டைப் புறக்கணித்து எங்கள் பேட்டையில் பேன்ஸி நம்பர் வாங்கச் செல்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 21. இன்னிசைக் கச்சேரிக்கு நடுவில் தொண்டைக் கரகரப்பைப் போக்க, ஒரு சின்னத்துண்டம் மைசூர் பா(க்)கை அப்பப்ப வாயில் போட்டுக்குங்க (பாட்டை)கேக்கறவங்க:-)))

  அனைவருக்கும் அன்பான விசாரிப்புகள்.

  ReplyDelete
 22. ஷைலஜா இன்னும் மை.பா.வை கன்பர்ம் செய்யலையே!
  மை.பாக்கா? மை.அல்வாவா? :-))

  ReplyDelete
 23. ஹலோ கேஆரெஸ் அண்ணே,

  //டிடி யக்கா தான் தலைமை தாங்குவேன்-ன்னு அடம் புடிக்கறாங்க!//

  அது சரி இந்த மேட்டருக்கு நான் அப்ரமா வர்ரேன், மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க, இந்த தலைவியோட ஒரே ஒரு செகரட்டரி நான், அட என் பேரத் தான் ஞாபகம் வச்சிக்க முடியலையா? இல்ல கூப்பிடத் தான் நேரம் இல்லியா? இதெல்லாம் நல்லாவேவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ யில்ல சொல்லிபுட்டேன் ஆமா....

  ReplyDelete
 24. //Sumathi. said...
  அட என் பேரத் தான் ஞாபகம் வச்சிக்க முடியலையா? இல்ல கூப்பிடத் தான் நேரம் இல்லியா? இதெல்லாம் நல்லாவேவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ யில்ல சொல்லிபுட்டேன் ஆமா....//

  சுமதி யக்கா! கோச்சிக்காதீங்க!
  ஒங்கள மறக்க முடியுமோ?
  நான் மின்னஞ்சல் முகவரியில் இருந்து லிஸ்ட்டு போட்டேன்! அதான்!

  நீங்க தான் வந்து முதல் மைசூர்பாக்கை உடைக்கணும்! இதை அழைப்பாக் கருதி தட்டாம வாங்க! என்னை தட்டாமலும் வாங்க! :-)
  மற்ற நண்பர்களையும் கூட்டியாங்க!

  ReplyDelete
 25. யப்பா...
  பெங்களூர் மாநகரத்துப் பைந்தமிழ்ப் பதிவர்களே! யாரையும் பேர் சொல்லி அழைக்கலை-ன்னு கோச்சிக்காதீங்கப்பு!அனைவரும் வரவேணும் வரவேணும்-னு இங்கேயே அன்பா அழைப்பு வச்சிக்கிறேன்!

  என் செல்பேசி: ௯௮௪0௧-௨௪0௧0
  98401-24010

  இடம் (தற்போது): லால் பாக் கிளாஸ் ஹவுஸ் அருகில்! நாளை மாலை 03:00 மணி

  (ராயலு,
  எதுக்கும் லால்பாக் பக்கம் இன்னிக்கிச் சாயந்தரம் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து நெலவரம் சொல்லுங்க அண்ணாச்சி :-)

  ReplyDelete
 26. ஹலோ கேஆரெஸ் அண்ணே,

  //நீங்க தான் வந்து முதல் மைசூர்பாக்கை உடைக்கணும்! இதை அழைப்பாக் கருதி தட்டாம வாங்க! என்னை தட்டாமலும் வாங்க! :-)//

  அது சரி, நான் வரும்போது ரயிலுஇஞ்சின் மட்டும் கூட கொண்டு வந்தா போதுமா இல்ல எல்லா பொட்டியையும் சேத்து கொண்டு வரனுமா உடைக்க? ஹி ஹி ஹி (சும்மா
  தமாசுக்கு)

  //லால்பாக் பக்கம் இன்னிக்கிச் சாயந்தரம் ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வந்து நெலவரம் சொல்லுங்க..//

  ஹா ஹா ஹா ஹா...நம்ம நாராயணன்(லால்பாக்) கோவிலுக்கு நாலு பக்கமும் வாசல் இருக்கு. அதுல எது ஓடிபோக பக்கமா இருக்கும் னும் பாத்துட்டு வர சொல்லுங்க...

  ReplyDelete
 27. ஐய்யய்யோ... மேட்டர் தெரியாமல் இந்த வாரம் மதுரைக்கு டிக்கட் புக் பண்ணிட்டனே :-(

  ReplyDelete
 28. அச்சச்சோ... April 5 thaa... :-( ... அடடா... மாமியார் ஊரிலிருந்து வறாங்களே

  ReplyDelete
 29. வேர் இஸ் திஸ் ராயல் ராமேஸ்வரம்?

  ReplyDelete
 30. வாழ்த்துகள் ரவி. போட்டோ எல்லாம் போடாணும். அங்கேயும் கடலையா, இல்லையானு சொல்லணும்.
  எல்லாரையும் விசாரித்ததாச் சொல்லுங்க.

  ReplyDelete
 31. இன்று வாழ்மக்களின் உளமறிந்து
  இனிய பதிவுகள் தருபவர்
  ஒன்றினோடொன்று மாறுபட்டிடும்
  உயர்ந்த செய்திகள் சொல்பவர்
  தென்றலாக ஆன்மீகத் தகவல்களை
  தித்திக்கவே தருபவர்
  என்றும் வாழும் இலக்கியம் அறிந்த
  எங்கள் ரவி வருக வருகவே!

  திருவரங்கனின் நல்லருள் பெற்றவர்
  தமிழ்மீதுபெரும் பற்று கொண்டவர்
  கருவிலே திருவுற்றவரோ எனும்படி
  கட்டுரைகள் தீட்டும்திறன் மிக்கவர்
  பெருமைமிக்க நட்புக்கூட்டம்
  பலப்பலவே உடையவர்
  வருகின்றார் எ(பெ)ங்களூரூக்கு
  வாழ்த்தி மகிழ்ந்து வரவேற்கிறேன்!!


  வருக வருக நல்வரவு ரவி!!!!
  இன்று இப்பாமட்டும்!!
  நாளை மைசூர் பாக்கோடு சந்திக்கலாம்::)

  ReplyDelete
 32. பெங்களூர் போறிங்களா ?

  காப்பீடு (இன்ஸ்சூரன்ஸ்) எடுத்தாச்சா ?

  போகும் அதே நலமுடன் திரும்ப வாழ்த்துகள்.

  ReplyDelete
 33. தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக , தமிழர்கள் மீது ஏவப்படும் வன்முறையயைக் கண்டித்து, அண்ணன் க.ர.ச லால் பாக்கில் உண்ணாவிரதம் இருப்பார்.

  அண்ணன் க.ர.ச வாய்க வாய்க..!!

  மற்றவர்கள் எல்லாம் சுற்றி உடகார்ந்து மைசூர் பாக்கு சாப்பிடவும். :P

  ReplyDelete
 34. //அண்ணன் க.ர.ச லால் பாக்கில் உண்ணாவிரதம் இருப்பார்//

  றிபிசிடி அண்ணாச்சி
  நான் வெரதம் இருக்க ரெடி தான்! ஆனா உண்ணும் வெரதம்!
  தமிழன் மைசூரை முழுங்குவதற்கு அடையாளமாக மைசூர் பாக்கை முழுங்கி, வீரத்தை நிலை நாட்டுகிறேன்!

  //அண்ணன் க.ர.ச வாய்க வாய்க..!!//

  பாருங்க...நீங்களே வாய்க சொல்லி வாய்-க்குள் தள்ளச் சொல்லிட்டீங்க!

  //மற்றவர்கள் எல்லாம் சுற்றி உடகார்ந்து மைசூர் பாக்கு சாப்பிடவும். :P//

  அவர்களும் உண்ணும் வெரதம் இருப்பாய்ங்க! :-)
  என்ன இருந்தாலும் குழுப் பதிவர்கள் இல்லீயா? :-))

  ReplyDelete
 35. //கோவி.கண்ணன் said...
  பெங்களூர் போறிங்களா ?
  காப்பீடு (இன்ஸ்சூரன்ஸ்) எடுத்தாச்சா ?//

  இல்லீங்கண்ணா
  கண்ணனீடு தான் எடுத்திருக்கேன்!
  நான் திரும்பி வரும் வரை மாதவிப் பந்தலைக் கோவி கண்ணனிடம் ஒப்படைக்கிறேன்!

  அண்ணா...
  இதுல தில்லைப் பதிவெல்லாம் ஒழுங்காப் போடுங்க! அப்பறம் ஆழ்வார்கள் எல்லாரையும் பத்திரமாப் பாத்துக்குங்க! :-)

  பச்சை மாமலை போல் சாலட்
  பவளவாய் கென்டக்கி சிக்கன்-ன்னு அந்தக் கசமுசா கேஆரெஸ் மாதிரி எல்லாம் பதிவு போடாம, நல்ல பதிவாப் போடுங்க! :-))

  ReplyDelete
 36. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  இல்லீங்கண்ணா
  கண்ணனீடு தான் எடுத்திருக்கேன்!
  நான் திரும்பி வரும் வரை மாதவிப் பந்தலைக் கோவி கண்ணனிடம் ஒப்படைக்கிறேன்!//

  அதிலேருந்து ஆன்மீகப்பதிவுதான் வரனும்!!!
  :)

  //அண்ணா...
  இதுல தில்லைப் பதிவெல்லாம் ஒழுங்காப் போடுங்க! அப்பறம் ஆழ்வார்கள் எல்லாரையும் பத்திரமாப் பாத்துக்குங்க! :-)//

  தில்லைக்கு நீங்க போட்ட பதிவில் ஆறுமுகசாமிக்கு நிதிவுதவியே கிடைத்துவிட்டது ! தில்லை மேட்டர் பழசாகிவிட்டது ! ஆழ்வார்களைப் பார்த்துக் கொள்ளனுமா ? ஆழ்வார்தான் தெரியும் தொலைவில் இருந்து தான் பார்த்துக் கொள்கிறேன்.
  :)

  //பச்சை மாமலை போல் சாலட்
  பவளவாய் கென்டக்கி சிக்கன்-ன்னு அந்தக் கசமுசா கேஆரெஸ் மாதிரி எல்லாம் பதிவு போடாம, நல்ல பதிவாப் போடுங்க! :-))
  //

  பச்சைமிளகாய், சிவப்பு மிளக்காய் சேர்த்து சைவமாக பஜ்ஜி சமோசா,பதிவாக போட்டுடுவோம்.
  :))

  ReplyDelete
 37. Hottttttttt News from Bangalore...
  Surveysan=a+b
  Vovaal=a+b+c

  Bangalore pathivar santhippil kandu pidikki patta unmaigal...viraivil ethirpaarungal...

  If in doubt ask: the one and only one - Jeeves Annachi!!!

  PS:
  Raamin Roomu! - Royal Raam-in Room patriya oru varalaatru puthinam viraivil aarambam!

  ReplyDelete
 38. KRS sollum poygalukkaana ethirppai naan ingE pathikirEn.

  ReplyDelete
 39. அடடா, கடைசி ரெண்டு பின்னூட்டங்களும் ரொம்ப சுவாரசியமா இருக்கே:))

  ReplyDelete
 40. //வல்லிசிம்ஹன் said...
  அடடா, கடைசி ரெண்டு பின்னூட்டங்களும் ரொம்ப சுவாரசியமா இருக்கே:))
  //

  ஆஹா! உண்மைதான் நானும் ரீப்பிட்டிக்கிறேன்!

  வரும் வாரங்களில் வரவிருக்கும் தகவல்களுக்காக வெயிட்டிங்....:))

  ReplyDelete
 41. //
  Raamin Roomu! - Royal Raam-in Room patriya oru varalaatru puthinam viraivil aarambam!//


  ஆஹ்ஹ்ஹ்...... ஏனிந்த கொலைவெறி.... ???? :(

  ReplyDelete
 42. //Jeeves said...
  KRS sollum poygalukkaana ethirppai naan ingE pathikirEn.//

  ஆகா, பொய்களா?
  kandu pidikki patta unmaigal...என்று தான் சொல்லி இருக்கேன்! கண்டுபிடிப்பை எவர் வேண்டுமானாலும் disprove செய்யலாம்! :-))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP