Thursday, April 03, 2008

வடபழனி சென்றேன்! ஜிராவிடம் தோற்றேன்!

அதாச்சும் சில பேருக்கு "வட"-ன்னு சொன்னாலே கோவம் பொத்துக்கிட்டு வரும்! ஆனா அதை மாற்றி அருள நினைத்தான் போலும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான்!
"வட" பழனிக்கு வா-ன்னு உத்தரவு போட்டான்! வடபழனி சென்றேன்! ராகவனிடம் தோற்றேன்! :))
திருமலைக்குச் செல்லும் போதெல்லாம்..
திருவேங்கடமுடையானை ஒரு முறை பார்த்தால் மட்டும் என் ஏக்கம் தீராது! குறைஞ்சது ரெண்டு மூனு தரிசனம்; அப்பத் தான் ஏக்கம் ஓரளவுக்காச்சும் தீரும்!
அது போல என் இனிய நண்பன் ராகவனை இந்த முறை சென்னையில் நாலைஞ்சு முறை தரிசனம் பண்ணியாச்! :-)

போதும் போதும் என்று ஓதும் வரை,
காதும் காதும் வைத்தாற் போலே,
தீதும் தீதும் தீர்ந்தே போக,
சேர்தும் சேர்தும் என்று அடியேனைச்
சேயோன் சேவடியில் சேர்த்திட்டான் ஜிரா!

வடபழனி போகலாம் வாரீங்களா,
அம்மா அப்பாவும் கூட வாராங்க-ன்னு ஜிரா கேட்க,
ஜீரா பேச்சை மீறா வண்ணம், தீரா நின்றேன்!

டின்னர் வித் பாவனா என்றால் எந்தப் பதிவன் மறுப்பான்?
முருகன் வித் ஜிரா என்றால் எந்தக் கேஆரெஸ் மறுப்பான்?
பஞ்சாமிர்த சுவையானைச் சுவைக்க ஓடினேன் வடபழனி!
வாயிலோ திருப்புகழ் தென்பழனி!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
முதலில் ஜிரா பெற்றோர் தரிசனம்! அவர்களின் அன்புக் கரிசனம்!

அதன் பின்னர் கரிசனத் தலைவன் கரிமுகன் பிள்ளையாரப்பன் தரிசனம்! தலையில் குட்டிக் கொண்டேன்!
ரவிக்கு "வைணவ மாயை" நீக்கி நல்ல புத்தி கொடுப்பா-ன்னு வேண்டிக்கிட்டு ஜிரா நடையைக் கட்டினாரு! தொடையைத் தட்டினாரு! :-)

ஆலய வரிசைக்குள் நுழையும் முன்னர் ஒரு சிறு நெருடல்! (சிறப்புத் தரிசன வழி...பிறகு சொல்கிறேன்)!
ஆனால் அது பட்டென்று மறைந்து உடனே அன்பின் வருடல்! உள்ளம் திருடல்!

என்ன தான் எந்தை-திருமால், அப்பாவின் பொண்ணு-ன்னாலும், அப்பா திருமால் பெருமையே பேசிக்கிட்டாலும்,
முன்னாலே அத்தான் முருகன் நிக்கும் போது என்ன நடக்கும்???:)
பிறந்த மேனியாய் நிற்கும் உலக ஆணழகனைக் கண்டால்???:))
ஆமாம்!
அந்த முருகு ஆண், பிறந்த திருமேனியாய், திறந்த கோலத்தில்,
ஒற்றைக் கோவணம், ஒய்யார இடுப்பு,
அதில் ஓங்கிக் கை வைத்து,
கள்ளச் சிரிப்பழகாய்ப் பழிப்பழகு காட்டி...

என் பெம்மான் என் முன்னே!
= "வெவ்வவ் வெவ்வே"

அவனைப் பார்த்தவுடன் கும்பிட மாட்டேன்; இதான் எனக்கு வரும்:)
இதை மோப்பம் பிடித்து விட்ட ஜிரா..
என்னைப் பார்த்து, "ஏய், வக்கணம் காட்டுறதை முதலில் நிறுத்து"-ன்னாரு:)


உச்சி கால வேளை அல்லவா? திருமுழுக்கு (அபிஷேகம்) நடைபெறப் போகுது போல! அதான் அத்தனை உடையும் களைந்துள்ளான்!

இன்று பார்த்து எங்களுக்காகவே கூட்டமும் அதிகம் இல்லை! ஒண்டியாய்க் கண்டோம் ஆண்டியை!

விண்மீன் வாரத்தில் "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்று அடியேன் இட்ட பதிவுக்கு, 
மற்ற பதிவர்களைப் போலவே ஒண்டிக்கு ஒண்டி ஆட நினைத்தானோ என்னவோ அந்த ஆண்டி? :-)

ராகவனார், அன்பராயும் வன்பராயும் மாறி மாறி மாறினாரு! 
பதிவுச் சீண்டலைச் செல்லமாய்ச் சீண்டியபடி வந்தாரு! அதனால் எனக்குச் சற்றே தயக்கம்! மெல்ல மெல்லத் தான் கால் பதித்தேன்!

கந்தனைக் கண்ட மாத்திரத்தில், எப்போதும் எனக்கு முருகாஆஆஆ என்று வாயும் மூச்சும் சேர்ந்தே முணுமுணுக்கும்! 
அந்த முணுமுணுப்பைக் கண்டான். முறுவல் பூ பூத்தான்!
வாடும் என் முகம் கண்டு, 
"வாடா" என்றழைத்தான் 
அந்த வாடாப் பழனியான்! வட பழனியான்!
அவ்வளவு தான்! இனி என்ன தயக்கம்? கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலே, உடனே ஒட்டிக் கொண்டேன் அவனிடம்!

எனக்கு முன்னால் இருந்தவர் சற்று உயரம் போல! 
(ஜிரா அல்ல! ஜிரா என்னைய விடக் குள்ளக் கத்திரிக்கா:-)))) 
மேலும் ஜிரா நண்பர் ஆகையால் எனக்கு மிக நெருக்கமாக நின்றார்)

முன்னிருந்த பக்தரின் உயரத்தால் அவனின் திருவுருவை, பாதாதி கேசம், முழுசாய்க் காண முடியவில்லை!
* எக்கி எக்கி நின்றேன்!
= "என்ன ஆணவம்? முருகனை விட நீ உயரம் காட்டுகிறாயா ரவி?" என்றார் ஜிரா!
* சொக்கிச் சொக்கி நின்றேன்!
= "சொக்கன் மகனைச் சொந்தம் கொண்டாடிக்கப் பாக்குறியா கேஆரெஸ்?" என்றார் ஜிரா!

ஜிராவைப் பார்த்து நான் சிரிக்க, அவர் என்னைப் பார்த்துச் சிரிக்க, செங்கோடன் எங்கள் இருவரையும் பார்த்துச் சிரியோ சிரியெனச் சிரித்தான்! 
இந்தச் சிரிப்பலையில் பிரிப்பலை சிறிதும் இல்லை என்று உரைத்தான்!


அர்ச்சகர் திருக்குடம் (பூர்ண கும்பம்) ஏந்தி வர..
தொடங்கியது திருமுழுக்கு!

எண்ணெய்க் காப்பு! உடனே தீப ஆராதனை! ஏனோ அவசரம் அவசரமாகச் செய்தார்கள்! ஆனால் அழகில் லயிக்கும் போது அழுக்கா தெரியும்? 
"எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்" என்பதல்லவா ஐயன் வள்ளுவன் வாக்கு?

வடபழனி ஆண்டவர், பழனி மூலவர் போலவே அப்படி ஒரு அமைப்பு!
(நவபாஷாணம் மட்டும் தான் இல்லை)! 
வேல் கைகளில் இல்லை! தோளில் சார்த்தப்பட்டு இருக்கு! 
வலக்கையில் யோக தண்டம்! இடக்கையோ இடுப்படியில்!
* இடுப்போ அதி பயங்கர வளைவு = அத்தனை கவர்ச்சி நடிகைகளும் பிச்சை வாங்க வேண்டும் இந்த ஆண்டியின் இடுப்பு பெற!
* திண் புயத்து மார்பு = அத்தனை ஆர்க்குட் நடிகர்களும் பிச்சை வாங்க வேண்டும் இந்த மாரனின் மார்பு பெற!

அய்யன் முருகன் பேசினான்:
"இதே போல் எக்கி எக்கிப் பார்த்து தானே பதிவிலும் உண்மையை உரைத்தாய்! தான் தோன்றித் தனமாய் நீ ஏதும் சொல்லவில்லையே!
தொல்காப்பியம் தமிழின் நல்காப்பியம் அல்லவா? அதிலிருந்து சொன்ன உனக்கு இப்போ சன்னிதியில் மட்டும் வீண் தயக்கம் ஏன்?

எனக்கு மலை என்றால், மாமனுக்குக் காடு! = காடில்லாமல் ஒரு மலையுண்டோ? 
மலை இறங்கி வந்தல்லவா மாமனிடம் பெண் கேட்டேன்! தாய் மாமன் = தாயும் மாமனும் ஒன்றாய் அமைந்த இது தோழமை உறவல்லவா? "


எண்ணெய்க் காப்பு முடிந்த உடனே சந்தன முழுக்கு! 
நெற்றிக்குப் பொட்டிட்டு..
நேத்ரானந்த தீப சேவை (கண்ணழகுச் சுடரொளிச் சேவை)! 
மந்திர உபாசனை!
"முல்லையின் மணம் குறிஞ்சியில் வீசக்கூடாதுன்னு யார் தடை போட முடியும்? முல்லையின் ஆயர்கள் கறந்த பால் அல்லவா எனக்குத் திருமுழுக்கு! அந்த அன்-பால் முழுகுகின்றவன் தானே நான்?

எங்கள் உறவுக்கு வட கதை இல்லை! 
ஆனால் தமிழ் விதை உண்டு தானே ரவி?

வடபுலத்தில் எங்கள் உறவு தெரியவில்லை! 
அதனால் இங்கவர்க்கும் எங்கள் உறவு புரியவில்லை! 
ஆனால் இயற்கை வழிபாடு அதுவல்லவே!
* காடும் மலையும் தமிழ் நிலங்கள்!
* நானும் மாலும் தமிழ் இறைகள்!

அதைத் தானே சொன்னாய்? 
தயங்காமல் சொன்ன உனக்குத் தருவேன் நூறு முத்தம்" 
-என்று முத்தைத் தரு பத்தித் திரு நகையால் என் முருகன் புன்னகை பூத்தான்!

களைந்து பஞ்சாமிர்த முழுக்கு! 
தேனுடம்பில் தேன் வழிந்து ஓடியதே! 
பொட்டிட்டு இந்த முறை..
புஜங்க தீப சேவை (தோளழகுச் சுடரொளிச் சேவை)!


மற்றவர் என் பிளாக்கர் பதிவை மட்டுமே கண்டார்! உற்றவன் என் உள்ளப் பதிவைக் கண்டான்!
மற்றவர் கோள் கண்டார் கோளே கண்டார்! நண்பர்கள் தோள் கண்டோம் தோளே கண்டோம்!

தங்கள் ஆயுதங்களுக்கு முதலில் நெய் பூசி விட்டு, பின்னரே தமக்கு எண்ணெய் பூசிக் கொள்வது மறவர் வழக்கம்!
அதே போல், வேலுக்கு தான் முதலில் முழுக்காட்டப்படுகிறது! பின்பு தான் முருகனுக்கு!
திருமலையில் சக்கரப் படைக்கும் இவ்வாறே செய்து விட்டு, பின்னரே இறைவனுக்கு முழுக்காட்டுகிறார்கள்!

ஆவின் பால் முழுக்கு!
உடனே ஆவின் தயிர் முழுக்கு!
உடனே பன்னீர் முழுக்கு!

உடனே திரை!

நிமிடங்களில் அந்த அழகை மின்னலாய்த் தோன்றி மறைத்து விட்டார்களோ?


திரையிட்ட பின் என் நண்பனும் நானும் பேசிய சென்சார் பேச்சுகளை, அவரே வந்து சொல்லுவார்! :-)
திரை விலகல் ஆகாதா? தெர தீயக ராதா?
இதோ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, திரை விலகியது! கரை விளங்கியது!
அடுக்கு தீபம் சுற்றிச் சுற்றி ஆடுகிறது!

சந்தனக் காப்பில் சரவணன் ஜொலிக்கிறான்!
ராஜ அலங்காரம்!
திருமுடி மாலை, தோள் மாலை, இடைமாலை சூடி நிற்கிறான் அழகன்!

கண் மை வரையப்பட்டுக், 
கன்னத்தில் கருஞ்சாந்துப் பொட்டிட்டுக்,
காலடிகள் சதங்கையிட்டு, 
தீபத் தட்டு திருமேனியெங்கும் சுழலச் சுழலக்....

கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!


"அரோகரா" என்ற கோஷம் அடியவர்கள் ஒலிக்க, 
ஓதுவா மூர்த்தி ஒரு ஓரத்தில் இருந்து...
"விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்" என்று பாட...
ராகவனும் நானும் கரைந்தோம்! கந்தனில் உறைந்தோம்!

உட்பிரகாரம் வலம் வந்து, அபிஷேகத் தொட்டித் தீர்த்தம் எடுத்து ஜிராவின் கையில் கொடுத்தேன். 
வீரபாகு சந்நிதி கடந்து, நால்வரையும், அப்பன் சொக்கனையும், அன்னை மீனாட்சியையும் கண்டோம்!

உற்சவ மூர்த்தியின் கண்ணாடி அறையில் வள்ளி-தேவயானையுடன் சண்முகப் பெருமான் ஜொலிக்க, 
அங்கு (எனக்காகவே போலும்) முருகன் சன்னிதியில் தீர்த்தம் கூடத் தருகிறார்கள்! :-)

வெளி வலத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் முருகனைப் பார்த்தவாறு சந்நிதி கொண்டுள்ளார்! 
ஆனா ஜிரா வராததால், நானும் செல்லவில்லை:)
ஆனா "நைசா" மனத்தில் இருந்தே அவரைச் சேவித்தேன்!:) "மனசால போன தானே?" -ன்னு அதையும் துல்லியமாக் கண்டுபுடிச்சிக் கேட்டாரு தோழரு:))

வெளி வலத்தில் சித்தர் சன்னிதியும், அதை ஒட்டிய தியான மண்டபமும் உள்ளது.
சுமார் நூறு ஆண்டுக்கு முன்னால் அண்ணாசாமித் தம்பிரான், அவர் நண்பர் ரத்னசாமித் தம்பிரான் அவர்களின் முயற்சியாலும் அருள்வாக்காலும் வடபழனி ஆலயம் தோற்றம் பெற்றது.

ஆனால் முழுமை பெறும் முன்பே அவர்கள் மறைந்து விட..
வாரியார் சுவாமிகள் திருப்பணிகளை முன்னின்று முடித்து வைத்தார். இவர்களின் சன்னதியே இந்தச் சித்தர் சன்னிதி!

அருணகிரி சன்னிதியை ஒட்டி பிரசாதம் சுடச்சுடத் தரப்பட, அனைவரும் இலையில் உண்டு, அமைதியாகக் கிளம்பினோம்!
பின்னர் வடபழனி சரவண பவனில் எங்க எல்லாருக்கு மதிய உணவை ஜிரா வாங்கித் தந்தாரு!

கேசரி அவர் மட்டும் ஒரு பிளேட்டு எக்ஸ்ட்ரா சாப்பிட்டாரு! எனக்குத் தரவே இல்லை! :-)


புகைப்பட வைபவம் எல்லாம் முடிந்து,
சரவண பவ என்னும் திருவாறெழுத்தின் (சடாட்சரம்) பொருள் என்ன ராகவா? என்று கேட்டேன்!

மாதவச் சிரிப்பே பதிலாய் வந்தது! பாசமும் தந்தது!


விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! - மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்! - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், - பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
!

65 comments:

 1. //உள்ளேன் ஐயா!//

  ரிப்பீட்டேய்!!

  ReplyDelete
 2. // இலவசக்கொத்தனார் said...

  //உள்ளேன் ஐயா!//

  ரிப்பீட்டேய்!! //

  - dito -

  ReplyDelete
 3. //G.Ragavan said...
  - dito -//

  எலே ராகவா! இன்னும் தூங்கலையா? தூங்காம அப்படி என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்கீக?

  ReplyDelete
 4. மக்கா
  இந்த வடபழனி வைபவம் இன்று காலை ஏப்ரல்-3 11:30 மணி அளவில் நடைபெற்றது! பதிவு சுடச்சுட நம்ம ஜிராவைப் போலவே! :-))

  ReplyDelete
 5. உள்ளேன் ஐயா! (EOM)

  :)))

  ReplyDelete
 6. கோவிந்தா கோவிந்தா!!!

  ReplyDelete
 7. //Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //G.Ragavan said...
  - dito -//

  எலே ராகவா! இன்னும் தூங்கலையா? தூங்காம அப்படி என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்கீக?//

  அதானே. அவருக்கு தான் வயசாயிடுச்சு. தூக்கம் வரலை. நீங்க ஒழுங்கா தூங்க வேண்டியது தானே ;)

  ReplyDelete
 8. //ஒண்டியாய்க் கண்டோம் ஆண்டியை!//

  ஒரு சந்தேகம்...

  நீங்க, ஜீரா & ஃபேமிலி, உங்களுக்கு முன்னாடி இருந்த நெட்டை ஆளு. இதுவே 5 பேர் ஆச்சு. அப்பறம் எப்படி ஒண்டியாய்???

  ReplyDelete
 9. //திருவேங்கடமுடை"யானை" //

  இந்த யானை எங்க இருக்கு?

  ReplyDelete
 10. //போதும் போதும் என்று ஓதும் வரை, காதும் காதும் வைத்தாற் போலே, தீதும் தீதும் தீர்ந்தே போக, சேர்தும் சேர்தும் என்று அடியேனைச் சேயோன் சேவடியில் சேர்த்திட்டான் ஜிரா//

  இதுவே போதும் நீங்க ஜி.ராவை பார்த்ததுக்கு சாட்சியா...

  ReplyDelete
 11. //வெட்டிப்பயல் said...
  நீங்க, ஜீரா & ஃபேமிலி, உங்களுக்கு முன்னாடி இருந்த நெட்டை ஆளு. இதுவே 5 பேர் ஆச்சு. அப்பறம் எப்படி ஒண்டியாய்???//

  தோடா, வந்துட்டாருய்யா பாஸ்டன் நக்கீரரு! பாலாஜி...
  இத்தினி பேரும் முருகனை ஈசியா சேவிக்கப் போயிட்டாங்க!
  ஆனா நான் மட்டும் அண்ணாச்சி அடிச்ச வேப்பலையில் தயங்கித் தயங்கித் தனியா நிக்குறது போல ஒரு உணர்வு. அதான் ஒண்டிக்கு ஒண்டி!

  உள்ளுறை உவமம்-ல்லாம் படிக்காம இப்படிக் கேள்வி கேட்டா எப்பிடி! படிக்கணும்னு ஆசை இருந்தாச் சொல்லுங்க! அண்ணனை அமேரிக்கா இஸ்துக்கினு வரேன்! ஒங்களுக்குச் சொல்லிக் கொடுப்பாரு! :-)

  ReplyDelete
 12. //இத்தினி பேரும் முருகனை ஈசியா சேவிக்கப் போயிட்டாங்க!//

  அப்ப நீங்க மட்டும் கஷ்டமா சேவிக்க போயிருக்கீங்க...

  //டின்னர் வித் பாவனா என்றால் எந்தப் பதிவன் மறுப்பான்? முருகன் வித் ஜிரா என்றால் எந்தக் கேஆரெஸ் மறுப்பான்?//

  இதுலயே பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சி... பாவனாக்கு முன்னாடி டின்னர் ஒன்னுமே இல்லைங்கற மாதிரி ...

  நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க நக்கீரர் கூட்டம் தான் (QAல தான் இருக்கோம் ;))

  ReplyDelete
 13. //இதுலயே பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சி//

  வேனாம் வெட்டி!
  வேணும்னா மயில்குட்டி, யானைக்குட்டி, ஆட்டுக்குட்டி இந்த மூனுத்துல ஏதாச்சும் ஒன்னு சொல்லு! :-)

  ReplyDelete
 14. //
  //டின்னர் வித் பாவனா என்றால் எந்தப் பதிவன் மறுப்பான்? முருகன் வித் ஜிரா என்றால் எந்தக் கேஆரெஸ் மறுப்பான்?//

  பாவனாக்கு முன்னாடி டின்னர் ஒன்னுமே இல்லைங்கற மாதிரி ...
  //

  என்ன நான் சொல்றது உண்மை தானே? இதுக்கும் ஏதாவது இலக்கண குறிப்பு சொல்லி உனக்கு தெரியாது. தமிழ் படினு சொல்லுவீங்களே. நீங்க ஜி.ராவை பார்த்தீங்கனு இதுலயே தெரியுது :-)

  ReplyDelete
 15. தமிழ்க்கடவுள்ன்னு சொன்னதும் பதிவில் தமிழ் துள்ளி விளையாடுது!!!!

  அங்கே ஒரு இடத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வச்சு, ஆறுமுகன் விக்கிரகம் இருக்குமே அது இன்னும் இருக்கா?

  எனக்குப் பிடிச்சது இதுதான்.

  வடபழனி போய் ரொம்ப வருசமாச்சு. கூட்டிக்கிட்டுப் போனதுக்கு நன்றி.

  ReplyDelete
 16. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,
  வடபழனியில் சுற்றித் திரிவது இன்னொரு விஜய், அஜித், சூர்யாவாக வர வேண்டும் என்பதற்காகவா?

  ReplyDelete
 17. வடபழனி முருகனைப்பார்த்து நாளாச்சு
  உங்க பதிவை படிச்சதுல அந்த முருகனை நேர்ல பார்த்த மாதிரி இருக்கு,

  ஆமா கோவிலில் புளியோதரை சாப்பிட்டீங்களா :)

  ReplyDelete
 18. ////விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! - மெய்மை குன்றா
  மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்! - முன்பு செய்த
  பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், - பயந்த தனி
  வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!////

  மெய்யாலுலே செம டக்கரான ஆளுதான்ய்யா சாமி நீங்க!
  அம்மாவுக்குன்னு பாடின பாட்டை, மகனோட சந்நதிலே கொண்டாந்து
  கச்சிதமா சேர்த்துட்டீகளே சாமீ

  நல்லாயிருங்க சாமி! உங்க தோஸ்த்தும் நல்லா இருக்கட்டும் சாமி!

  ஆமா, ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு வாட்டியாவது ‘அரோஹரா''
  சொன்னீங்களா இல்லியா?

  ReplyDelete
 19. அழகு தமிழ் கொஞ்சுகிறது போங்கள் :-)

  பெங்களூருவும் போனீங்க போல? அங்க கோயில் எதுவும் போகலயா?

  ReplyDelete
 20. பதிவுல நெறைய சொல்லீருக்காரு ரவி. ஆனா அதுல பலது நடந்த நினைவே இல்லை. அவரு அறிவுசால் பெருந்தகை. ஆற்றல் மிகு இருகை. ஆகையால அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம். கோயிலுக்குப் போனோம். சாமி கும்பிட்டோம். பிரசாதம் வாங்கித் தின்னோம். சரவணபவன் போனோம். இதான் நடந்தது.

  ஆனா என்ன... அங்கயும் வந்து பெருமாளுக்குப் பண்ற மாதிரி பண்றாங்க.... எங்கம்மா லட்சுமிதா மேல உக்காந்துக்கிட்டு முருகனைப் பாத்துக்கிறா.... ஆஞ்சநேயரு இங்கயும் இருக்காரு... தமிழ் இங்க ஓரத்துல ஒலிக்குது.. முடுக்குல ஒலிக்குது.. அங்க வந்திருந்தா தமிழ் உள்ளயே ஒலிச்சிருக்கும்னு வைணவப் புகழ் பாடிக்கிட்டிருந்தாரு. ஒன்னு புரிஞ்சது.... அடுத்த வாட்டி நாங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் ஒரு கோயிலுக்குப் போனா... ரெண்டு பேர்ல ஒருத்தர் கொலைகாரர் ஆகுறதுக்கான வாய்ப்பு எச்சகச்சமா இருக்கு.

  ReplyDelete
 21. // "வடபழனி சென்றேன்! ஜிராவை வென்றேன்!" //

  ரவி கிட்ட பேசுனதுல மெயில் அனுப்புனதுல சாட்டுனதுல ஒன்னு புரிஞ்சது. நான் தோத்து அவரு வெல்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்காரு. என் கூட போட்டி போடுறதா நெனச்சிக்கிட்டு வெற்றிக் கனியைப் பறிக்கப் படாத பாடு படுறாரு. நாந்தான் ஒதுங்கிட்டேன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாரு. :D

  ReplyDelete
 22. ராகவன் & ரவி

  உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?

  யார் யாரைக் கொல்லப்போறாங்கன்னு தெளிவாச் சொல்லுங்கப்பா.

  என்ன நடக்குது இங்கே?

  புதசெவி:-))))

  ReplyDelete
 23. //G.Ragavan said...
  நான் தோத்து அவரு வெல்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்காரு//

  ஆகா...இது வேறயா!
  குஞ்சு மிதித்து கோழிக்கு அடிபடுமா?
  ஜிராவை வென்றேன்-ன்னா...
  மனத்தை வென்றேன், உள்ளத்தைக் கவர்ந்தேன்-ன்னு எல்லாம் சொல்லுறதில்லியா...
  தம்மிற் தம் மக்கள்-ன்னு எல்லாம் சொல்லுறதில்லையா...

  ஜிரா இஷ்டைல் என்னன்னா எப்பமே என்னைச் சீண்டிச் சீண்டி அன்பு காட்டுறது தான்!

  @டீச்சர்...
  புதசெசொ? :-)))
  (புரிந்ததா? தயவு செய்து சொல்லவும்)

  ReplyDelete
 24. //ஒன்னு புரிஞ்சது.... அடுத்த வாட்டி நாங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் ஒரு கோயிலுக்குப் போனா... ரெண்டு பேர்ல ஒருத்தர் கொலைகாரர் ஆகுறதுக்கான வாய்ப்பு எச்சகச்சமா இருக்கு//

  ஆமா...
  கோயிலில் நடக்கும் பல அல்லவைகளைக் கொலை செய்து, நல்லவைகளை நிலை செய்து...
  அதைச் சொல்லுறாரு எங்க ஜிரா!

  //ஆனா என்ன... அங்கயும் வந்து பெருமாளுக்குப் பண்ற மாதிரி பண்றாங்க....//

  அதாச்சும் என் ஜிரா கிட்ட ஒரு விசேசம் என்னான்னா இரு பொருட்களின் தொடர்பைப் பேசினாக் கோச்சிக்கிறது போல ஒரு ஆக்ட் கொடுப்பாரு!
  ஒரே பொருள் மட்டும் தான் பேசணும்! பால்-னா பால் மட்டும் தான்! அதுல சர்க்கரை கலக்காதே! குங்குமப்பூ கலக்காதே-ன்னு கலக்குவாரு! :-)

  முருகப் பெருமானின் திருக்கை வேலுக்கு நடந்த திருமுழுக்கைக் கண்டு..ஆகா இது மறவர் மரபு-ன்னு மட்டும் மொட்டையா சொல்லிட்டு நான் நிறுத்தி இருக்கணும்!

  ஆனா...
  மறவர் மரபு, சக்கரத்துக்கும் இவ்வாறே செய்யறாங்க, என்ன ஒரு ஒற்றுமை-ன்னு சொன்னேன் பாருங்க!
  ஜிரா செவந்து போய் என் காதைத் திருக, லேது லேது, காது காது என்று என் காதும் சிவந்தது! :-)

  ReplyDelete
 25. //அரை பிளேடு said...
  ஆமா கோவிலில் புளியோதரை சாப்பிட்டீங்களா :)//

  ஜிரா வாங்கித் தர மாட்டேன்னுட்டாரு! :-)

  புளியோ-தரைன்னா தரைல உக்காந்து அறை விழும்-ன்னு சொல்லிட்டாரா...அதான் நான் ஒன்னும் பேசாம அவர் பின்னாடியே கொய்ட்டாப் போயிட்டேன்! :-)

  ReplyDelete
 26. //சந்தனக் காப்பில் சரவணன் ஜொலிக்கிறான்! ராஜ அலங்காரம்!
  திருமுடி மாலை, தோள் மாலை, இடைமாலை சூடி நிற்கிறான் அழகன்!
  கண் மை வரையப்பட்டுக், கன்னத்தில் கருஞ்சாந்துப் பொட்டிட்டுக், காலடிகள் சதங்கையிட்டு, தீபத் தட்டு திருமேனியெங்கும் சுழலச் சுழலக்....
  கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
  கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!//

  அப்படியே நம்ம "மலைமந்திர்"
  "உத்தர சுவாமிநாதரை" கண்முன்னால கொண்டாந்து விட்டுடீங்க!

  //"வடபழனி சென்றேன்! ஜிராவை வென்றேன்!"//

  அடியவர் வென்றால் ஆண்டவனும் வெல்கிறான்!
  ஆண்டவன் வென்றால் அடியவனும் வெல்கிறான்.

  ஆகவே இங்கே வெற்றி தோல்வி முக்கியமல்ல. எது, எதை வென்றது என்பதே முக்கியம்.

  ReplyDelete
 27. //குமரன் (Kumaran) said...
  நல்லா இருங்க//

  ஆசிக்கு நன்றி அ.உ.ஆ.சூ!

  சரி இந்த ஒத்தை வரில என்ன சொல்ல வரீங்க? புதசெவி! :-))

  ReplyDelete
 28. // துளசி கோபால் said...

  தமிழ்க்கடவுள்ன்னு சொன்னதும் பதிவில் தமிழ் துள்ளி விளையாடுது!!!! //

  ஹி ஹி ஆமா டீச்சர். அதான் தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானின் தமிழருள். :)

  // அங்கே ஒரு இடத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வச்சு, ஆறுமுகன் விக்கிரகம் இருக்குமே அது இன்னும் இருக்கா? //

  இருக்குது டீச்சர். ஆனா முந்தி மாதிரி சுத்தி வர முடியாது. வெளிய இருந்தே கும்பிட்டுட்டுப் போயிறனும். ஆனா கோயில் குடமுழுக்கு ஆகி இப்ப நல்லா வெச்சிருக்காங்க. உள்ள நுழையும் போதே தானா கால் கழுவத் தண்ணி ஓடுது. சொவத்துல கறைகள் இல்லை. எங்க விழுந்து கும்பிடனும்னு தெளிவாப் படம் போட்டு வெச்சிருக்காங்க.

  ReplyDelete
 29. //குமரன் (Kumaran) said...
  நல்லா இருங்க//

  ஆசிக்கு நன்றி அ.உ.ஆ.சூ!

  சரி இந்த ஒத்தை வரில என்ன சொல்ல வரீங்க?
  புதசெவி! :-))

  ReplyDelete
 30. // SP.VR. SUBBIAH said...
  ஆமா, ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு வாட்டியாவது ‘அரோஹரா''
  சொன்னீங்களா இல்லியா? //

  நான் சொன்னேன். அவருதான் கோவிந்தா கோவிந்தான்னு சொன்னாரு :)

  // கானா பிரபா said...

  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,
  வடபழனியில் சுற்றித் திரிவது இன்னொரு விஜய், அஜித், சூர்யாவாக வர வேண்டும் என்பதற்காகவா? //

  என்ன பிரபா.. கே.ஆர்.எஸ் பத்தித் தெரியாமப் பேசீட்டீங்களே.. இந்தப் பதிவைப் பாருங்க. அவரு எந்த ரேஞ்சுக்குப் போறாருன்னு ஒங்களுக்குப் புரியும்.
  http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post.html

  // Blogger அரை பிளேடு said...
  ஆமா கோவிலில் புளியோதரை சாப்பிட்டீங்களா :) //

  அதையேன் கேக்குறீங்க.... வடபழநி புளியோதரையெல்லாம் கட்டாந்தரை. திருவரங்கத்து வைணவப் புளியோதரையே புளியோதரைன்னு சொல்லி வேண்டாம்னு கே.ஆர்.எஸ் மறுத்துட்டாரு. தான் வாங்குன பிரசாதத்தையே வேண்டாம்னு குடுத்துட்டாரு. அப்புறமா நாந்தான் வற்புறுத்தி அவருக்கும் கொஞ்சம் பிரசாதம் குடுத்து திங்க வெச்சேன்.

  ReplyDelete
 31. //ஆனா என்ன... அங்கயும் வந்து பெருமாளுக்குப் பண்ற மாதிரி பண்றாங்க.... எங்கம்மா லட்சுமிதா மேல உக்காந்துக்கிட்டு முருகனைப் பாத்துக்கிறா.... ஆஞ்சநேயரு இங்கயும் இருக்காரு... தமிழ் இங்க ஓரத்துல ஒலிக்குது.. முடுக்குல ஒலிக்குது.. அங்க வந்திருந்தா தமிழ் உள்ளயே ஒலிச்சிருக்கும்னு வைணவப் புகழ் பாடிக்கிட்டிருந்தாரு. ஒன்னு புரிஞ்சது//

  நன்றி ஜிரா. எதிர்பார்த்தேன் இதெல்லாம் நடந்திருக்குமுன்னு. :))

  நாளைக்கு மறுநாள் நானும் இதயெல்லாம் எதிர்பார்க்கலாம்

  ReplyDelete
 32. முருகன் கோயில்ல புளியோதரை கேட்டாரா?....இல்லைன்னா அக்காரவடிசல் பத்தியாவது ஏதாவது சொல்லியிருப்பாரே?

  ReplyDelete
 33. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //G.Ragavan said...
  நான் தோத்து அவரு வெல்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்காரு//

  ஆகா...இது வேறயா!
  குஞ்சு மிதித்து கோழிக்கு அடிபடுமா? //

  ஆக மொத்தத்துல மிதிப்பீங்கன்னு ஒத்துக்கிறீங்க. நீங்க குஞ்சாக்கும். நான் கோழியாக்கும். கோழிக் கொழம்பு வேணும்னு வீட்டுல கேட்டீங்களா என்ன? ;)

  // ஜிராவை வென்றேன்-ன்னா...
  மனத்தை வென்றேன், உள்ளத்தைக் கவர்ந்தேன்-ன்னு எல்லாம் சொல்லுறதில்லியா...//

  என்னோட உள்ளத்தையெல்லாம் நீங்க கவரலை. அதுக்கு ஸ்பெசிவிகேஷனே வேற. :D

  // தம்மிற் தம் மக்கள்-ன்னு எல்லாம் சொல்லுறதில்லையா... //

  நான் சொல்றதில்ல. உங்களைப் போல ஆன்ற சான்றோர்களும் பெருந்தகைச் செம்மல்களும் சொல்லுவாங்களோ என்னவோ!

  ReplyDelete
 34. //அங்கே ஒரு இடத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வச்சு, ஆறுமுகன் விக்கிரகம் இருக்குமே அது இன்னும் இருக்கா?//

  இருக்கு டீச்சர். பதிவிலும் சொல்லி இருக்கேன் பாருங்க.
  ஜிரா சொல்லாம விட்ட மேலதிக தகவல்: அங்க தான் தீர்த்தமும் கொடுக்கறாங்க :-))

  கோயில் குடமுழுக்குக்குப் பிறகு தூய்மை நிறையவே தவழ்கிறது! காலணிப் பாதுகாப்பு இலவசம். கொடிமரம் புதுசாக் கவசமிட்டு இருக்காக. தூண்களில் விபூதி அவ்வளவா இல்லை! ஏன்னா திரும்பின இடமெல்லாம் விபூதிக் கிண்ணம் வச்சிருக்காங்க! ஜிரா சொன்னது போல் கொடிமரத்தின் கீழ் படம் வரைந்து அடிக்கீழ் வணங்கும் திசை மார்க் பண்ணி இருக்காங்க!

  சரவணப் பொய்கை ஒன்னு இருக்கும்! அங்கன போகலை! அதுவும் நல்லாத் தான் இருக்கும்!

  ReplyDelete
 35. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //ஒன்னு புரிஞ்சது.... அடுத்த வாட்டி நாங்க ரெண்டு பேரும் ஏதாச்சும் ஒரு கோயிலுக்குப் போனா... ரெண்டு பேர்ல ஒருத்தர் கொலைகாரர் ஆகுறதுக்கான வாய்ப்பு எச்சகச்சமா இருக்கு//

  ஆமா...
  கோயிலில் நடக்கும் பல அல்லவைகளைக் கொலை செய்து, நல்லவைகளை நிலை செய்து...
  அதைச் சொல்லுறாரு எங்க ஜிரா! //

  நல்லாவே பூசி மெழுகுறீங்க ;) இந்த டெக்னாலஜி ஆப்பு கே.ஆர்.எஸ்சை எப்பிடியாச்சும் கத்துக்கிறனுமப்போய்! :D

  // //ஆனா என்ன... அங்கயும் வந்து பெருமாளுக்குப் பண்ற மாதிரி பண்றாங்க....//

  அதாச்சும் என் ஜிரா கிட்ட ஒரு விசேசம் என்னான்னா இரு பொருட்களின் தொடர்பைப் பேசினாக் கோச்சிக்கிறது போல ஒரு ஆக்ட் கொடுப்பாரு! //

  நோ ஆக்டிங். :) தொடர்பை நீங்க பேசலை ;)

  // ஒரே பொருள் மட்டும் தான் பேசணும்! பால்-னா பால் மட்டும் தான்! அதுல சர்க்கரை கலக்காதே! குங்குமப்பூ கலக்காதே-ன்னு கலக்குவாரு! :-) //

  ஆமா பால் வெச்சிருந்தா அதுல குங்குமப் பூவைக் கலக்கீட்டு இது குங்குமப் பூ பால். ஆதியிலிருந்தே இது குங்குமப் பூ பாலாவே இருந்துச்சுன்னு சொல்லி குங்குமப் பூப்பாலை சங்கத்தமிழ் மகளிர் குடிச்சிருக்காங்க. அதுல இருந்தே பால் தனியா குடிக்கப்படலைன்னு புரிஞ்சிக்கோங்க. குங்குமப் பூ இருந்தாதான் பாலுன்னு சொல்வீங்க. அதையும் நாங்க கேக்கனும். :)

  // முருகப் பெருமானின் திருக்கை வேலுக்கு நடந்த திருமுழுக்கைக் கண்டு..ஆகா இது மறவர் மரபு-ன்னு மட்டும் மொட்டையா சொல்லிட்டு நான் நிறுத்தி இருக்கணும்!

  ஆனா...
  மறவர் மரபு, சக்கரத்துக்கும் இவ்வாறே செய்யறாங்க, என்ன ஒரு ஒற்றுமை-ன்னு சொன்னேன் பாருங்க!
  ஜிரா செவந்து போய் என் காதைத் திருக, லேது லேது, காது காது என்று என் காதும் சிவந்தது! :-) //

  எச்சூஸ்மீ. நோ பொய் சொல்லிங். வேலுக்கு நீராட்டு நடந்தப்போ "பெருமாள் கோயில்ல சக்கரத்துக்குப் பண்ற மாதிரியே பண்றாங்க"ன்னு சொன்னீங்க.

  அதையாரு கேட்டா...இங்க வந்து ஏன் அதையெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டேன்.

  ஒடனே ஒரு வக்கனம் காமிச்சிட்டு அமைதியாயிட்டீங்க. அஞ்சு நிமிசங் கழிச்சி.... மறவன் குறவன்னு விளக்கத்தை எடுத்தீங்க. இப்ப என்னடான்னா எடுத்ததுமே வீரர் வழக்கம்னு சொன்னதாகவும்.. அதோட நிறுத்தாம ஒப்பிட்டதால நான் கோவிச்சிக்கிட்டதாகவும் சொல்றீங்க. டூ மச் கே.ஆர்.எஸ்.

  சில்க் ஸ்மிதா மாதிரி முருகன் இடுப்பு இருக்குன்னு பதிவுல எழுதுவேன்னு சொன்னீங்களே... அதை ஏன் எழுதலை? ;)

  ReplyDelete
 36. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //அங்கே ஒரு இடத்தில் சுற்றிலும் கண்ணாடிகள் வச்சு, ஆறுமுகன் விக்கிரகம் இருக்குமே அது இன்னும் இருக்கா?//

  இருக்கு டீச்சர். பதிவிலும் சொல்லி இருக்கேன் பாருங்க.
  ஜிரா சொல்லாம விட்ட மேலதிக தகவல்: அங்க தான் தீர்த்தமும் கொடுக்கறாங்க :-)) //

  இத நேர்ல எங்கிட்ட சொல்றப்போ "பெருமாள் கோயில் மாதிரி"ன்னும் சேத்துச் சொன்னீங்க. :)

  ReplyDelete
 37. //கேசரி அவர் மட்டும் ஒரு பிளேட்டு எக்ஸ்ட்ரா சாப்பிட்டாரு! //

  அவ்வ்வ்வ்வ். :))

  ஜிரா அடித்து விளையாடியதில் பல உண்மைகள் வெளி வந்துள்ளது. :D

  மீதியை இங்க பெங்க்ளூரில் நாங்க பாத்துக்கறோம். :p

  ReplyDelete
 38. @கானா அண்ணாச்சி
  //எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்,
  வடபழனியில் சுற்றித் திரிவது இன்னொரு விஜய், அஜித், சூர்யாவாக வர வேண்டும் என்பதற்காகவா?//

  இல்லை பாவனாவைக் கடத்திக்கிட்டு வருமாறு ஒரு தம்பி (தம்பி தம்பி அல்ல) உத்தரவு போட்டிருக்காரு! :-))

  @வெட்டி
  //திருவேங்கடமுடை"யானை" //
  இந்த யானை எங்க இருக்கு?

  தூணிலும் இருக்கு துரும்பிலும் இருக்கு!
  கோட்டூர்புரத்திலும் இருக்கு! புரசைவாக்கத்திலும் இருக்கு!
  :-)))

  //பாவனாக்கு முன்னாடி டின்னர் ஒன்னுமே இல்லைங்கற மாதிரி ...
  //

  இல்லைங்கற மாதிரி...
  அப்பறம்...அப்பறம்....
  அதைச் சொல்லுங்க வெட்டி!

  ReplyDelete
 39. //ஏதாவது இலக்கண குறிப்பு சொல்லி உனக்கு தெரியாது. தமிழ் படினு சொல்லுவீங்களே. நீங்க ஜி.ராவை பார்த்தீங்கனு இதுலயே தெரியுது :-)
  //

  :-)))
  சத்தமாச் சிரிச்சேன்!
  ஜிரா ஒதுங்கிட்டேன் ஒதுங்கிட்டேன்-னு இப்பல்லாம் சொல்றாரு! அது உங்களால தானா பாலாஜி?

  ச்சே...டூ மச்!
  நான் இருக்கேன் எங்க ஜிராவுக்கு சப்போர்ட்டு!
  இனி அந்த லோவல் பதிவனுக்கு நாக்-அவுட்டு! :-)

  ReplyDelete
 40. //SP.VR. SUBBIAH said...
  அம்மாவுக்குன்னு பாடின பாட்டை//

  வாங்க வாத்தியார் ஐயா!
  அம்மாவுக்குப் பாடின பாட்டா?
  அது அருணகிரியின் கந்தர் அலங்காரம் இல்லியா? ஜிரா வருகவே! சீராய்த் தருகவே!

  //நல்லாயிருங்க சாமி! உங்க தோஸ்த்தும் நல்லா இருக்கட்டும் சாமி!//

  ஆசிக்கு நன்றி வாத்தியார் ஐயா!

  //ஆமா, ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு வாட்டியாவது ‘அரோஹரா''
  சொன்னீங்களா இல்லியா?//

  தோஸ்த்து அரோகரா-ன்னு கை தலைமேல் தூக்கிச் சொன்னாரு!
  அடியேன் அரகரோகரா-ன்னு கையும் மெய்யும் தூக்கியே சொன்னேன்!

  ReplyDelete
 41. //Sridhar Narayanan said...
  அழகு தமிழ் கொஞ்சுகிறது போங்கள் :-)//

  Dankees, Dankees :-))

  //பெங்களூருவும் போனீங்க போல? அங்க கோயில் எதுவும் போகலயா?//

  பெங்களூரூ நாளைக்குத் தான் ஸ்ரீதர். என்னாது கோயிலா?
  அலோ...மீ கம்மிங் ஆன் வெக்கேசன். மீ கோயிங் டு த பாரு! :-))

  ReplyDelete
 42. @சிவா
  //அப்படியே நம்ம "மலைமந்திர்"
  "உத்தர சுவாமிநாதரை" கண்முன்னால கொண்டாந்து விட்டுடீங்க!//

  ஓ..தில்லி ஞாபகம் வந்திருச்சோ! :-)

  //"வடபழனி சென்றேன்! ஜிராவை வென்றேன்!"//

  சென்றேன்-க்கு ரைமிங்கா வென்றேன்-பா! வேற ஒன்னும் இல்லீங்கப்பா! :-)

  //அடியவர் வென்றால் ஆண்டவனும் வெல்கிறான்!
  ஆண்டவன் வென்றால் அடியவனும் வெல்கிறான்//

  அதே அதே!

  //ஆகவே இங்கே வெற்றி தோல்வி முக்கியமல்ல. எது, எதை வென்றது என்பதே முக்கியம்.//

  எது எதைத் தின்றது என்பதும் முக்கியம்! :-)))

  ReplyDelete
 43. //துளசி கோபால் said...
  ராகவன் & ரவி
  உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?//

  சண்டையா? அப்படீன்னா?
  நானும் ஜிராவும் ஒன்னுக்குள்ள ஒன்னு! கண்ணுக்குள்ள கண்ணு! தெரிஞ்சிக்கோங்க!

  //யார் யாரைக் கொல்லப்போறாங்கன்னு தெளிவாச் சொல்லுங்கப்பா//

  என்ன ஒரு ஆசை டீச்சருக்கு! வுட்டா சமையல் ரூம் கத்தியைக் கையில எடுத்துக் கொடுப்பீங்க போல இருக்கே! :-))

  //என்ன நடக்குது இங்கே?
  புதசெவி:-))))//

  வீடியோவை வலை ஏத்துறேன்! :-)

  ReplyDelete
 44. // துளசி கோபால் said...
  தமிழ்க்கடவுள்ன்னு சொன்னதும் பதிவில் தமிழ் துள்ளி விளையாடுது!!!! //
  ஹி ஹி ஆமா டீச்சர். அதான் தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானின் தமிழருள். :)//

  அதைக் கேஆரெஸ்சுக்கு தந்த கந்தனின் கனிவருள்!

  //நான் சொன்னேன். அவருதான் கோவிந்தா கோவிந்தான்னு சொன்னாரு :)//

  அடப்பாவி!
  நான் கோ.விந்தா-ன்னா சொன்னேன்?
  கோ.ராகவா-ன்னுல்ல சொன்னேன்! :-)

  ReplyDelete
 45. //வடபழநி புளியோதரையெல்லாம் கட்டாந்தரை. திருவரங்கத்து வைணவப் புளியோதரையே புளியோதரைன்னு //

  அடப்பாவி! :-)

  //தான் வாங்குன பிரசாதத்தையே வேண்டாம்னு குடுத்துட்டாரு. அப்புறமா நாந்தான் வற்புறுத்தி //

  பொய்! பொய்!
  வாங்குன பிரசாதத்தை நான் அம்மா கையில் கொடுத்தேன்! அம்மா எனக்குக் கையில் கொடுத்தாங்க!
  இந்த ஜிராப் பையன் கிட்டயும் கொஞ்சம் கொடுங்க-ன்னு கையை நீட்டினேன்! அவரு போடா ஒனக்கெல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு!
  இதப் பார்த்து விட்டு அம்மா தான் நான் தரேன்பா-ன்னு இன்னொரு முறை கொடுத்தாங்க!

  //கோழிக் கொழம்பு வேணும்னு வீட்டுல கேட்டீங்களா என்ன? ;)//

  இல்ல...கத்திரிக்கா சுண்டைக் கொழம்பு தான் கேட்டேன்!

  //என்னோட உள்ளத்தையெல்லாம் நீங்க கவரலை. அதுக்கு ஸ்பெசிவிகேஷனே வேற. :D//

  ஆமாமா! அதான் பார்த்தேனே உங்க கேசரி அன்பை! :-)

  //நல்லாவே பூசி மெழுகுறீங்க ;) இந்த டெக்னாலஜி ஆப்பு கே.ஆர்.எஸ்சை எப்பிடியாச்சும் கத்துக்கிறனுமப்போய்! :D//

  அப்பவே சொல்லிக் குடுத்தேனே! கவனம் பாடத்தில் இருந்தாத் தானே! நீங்க தான் கோலிவுட்-ல பராக்கு பாத்துக்கிட்டு இருந்தீயளே:-)

  ReplyDelete
 46. //அதுல இருந்தே பால் தனியா குடிக்கப்படலைன்னு புரிஞ்சிக்கோங்க. குங்குமப் பூ இருந்தாதான் பாலுன்னு சொல்வீங்க//

  இது வேறயா?
  பாலும் தனி தான்! சர்க்கரையும் தனி தான்! ரெண்டுமே ஆதியில் இருந்தே இருக்கு தான்! பசுவிருந்தா பாலிருக்கும்! கரும்பிருந்தா சர்க்கரை இருக்கும்! ஆனா இரண்டும் சேரும் போது பாலும் இனிக்கு! சர்க்கரையும் இனிக்கு!

  அதை விட்டுப்போட்டு பால் மட்டும் தான் தமிழ் இனிப்பு! சர்க்கரை தமிழ்த் திணிப்பு-ன்னு ஜல்லி அடிப்பீங்க பாருங்க! அங்க தான் காமெடியே! :-)

  இரண்டுமே தனித் தனியே இனிப்பென்றாலும், இரண்டும் சேர்த்துக் குடிப்பதே தமிழ் வழக்கம்! அதில் ஏன் உமக்கு வீண் தயக்கம்?


  (ஆனா அபிசேகம் பண்ண பாலை கையில் ஊத்தும் போது மட்டும், அட இதுல கொஞ்சம் சக்கரை போட்டுக் குடுத்தாக் கொறைஞ்சாப் போயிருவீங்க-ன்னு எங்க ஜிரா கேப்பாராம்! :-))

  ReplyDelete
 47. //சில்க் ஸ்மிதா மாதிரி முருகன் இடுப்பு இருக்குன்னு பதிவுல எழுதுவேன்னு சொன்னீங்களே... அதை ஏன் எழுதலை? ;)//

  அ(ட)ப்பாவி!
  சில்க் ஸ்மிதா-ன்னு யாரு சொல்லி இருப்பாய்ங்க-ன்னு டோட்டல் பதிவுலகத்துக்கே தெரியும்!
  சீவீயார் முதற்கொண்டு, கானா பிரபா இடைக்கொண்டு, வெட்டி கடைக்கொண்டு அத்தனை பேரும் சாட்சி சொல்ல வாங்கப்பு!

  ReplyDelete
 48. //ambi said...
  ஜிரா அடித்து விளையாடியதில் பல உண்மைகள் வெளி வந்துள்ளது. :D//

  அப்போ நடித்து விளையாடினா பல நாடகங்கள் வெளி வருமா? :-)

  //மீதியை இங்க பெங்க்ளூரில் நாங்க பாத்துக்கறோம். :p//

  பாத்துக்கலாம்! பாத்துக்கலாம்! :-)

  Anonymous said...
  //மறுநாள் நானும் இதயெல்லாம் எதிர்பார்க்கலாம்//

  எலே அம்பி! அனானி ஆட்டம் வேறயா?

  //முருகன் கோயில்ல புளியோதரை கேட்டாரா?....//

  எந்த ஊர்ல இருக்கீரு? மயிலை கபாலி கோயில் புளியோதரை டேஸ்ட்டு தெரியுமா நைனா உனக்கு? வேணும்னா அரைபிளேடு அண்ணாச்சிய கேட்டுப்பாரு!

  //அக்காரவடிசல் பத்தியாவது ஏதாவது சொல்லியிருப்பாரே//

  வடிசலும் இல்ல! பாட்டெரி செல்லும் இல்ல! அதுக்குப் பேரு சர்க்கரைப் பொங்கல்! அம்புட்டு தான்! :-)

  ReplyDelete
 49. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //துளசி கோபால் said...
  ராகவன் & ரவி
  உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை?//

  சண்டையா? அப்படீன்னா?
  நானும் ஜிராவும் ஒன்னுக்குள்ள ஒன்னு! கண்ணுக்குள்ள கண்ணு! தெரிஞ்சிக்கோங்க! //

  ஆகா! அப்படியா! இது எனக்குத் தெரியாதே. மொதல்லயே சொல்லீருக்கக் கூடாது!!!!!

  // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //நான் சொன்னேன். அவருதான் கோவிந்தா கோவிந்தான்னு சொன்னாரு :)//

  அடப்பாவி!
  நான் கோ.விந்தா-ன்னா சொன்னேன்?
  கோ.ராகவா-ன்னுல்ல சொன்னேன்! :-)//

  அப்படி வாங்க வழிக்கு. கோ.ராகவான்னு சொன்னீங்களா! அரோகரான்னு சொன்னேன்னு நீங்க பொய் சொன்னத நீங்களே ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. இப்பிடியே மத்த உண்மைகளையும் வெளிப்படையா ஒத்துக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  //வடபழநி புளியோதரையெல்லாம் கட்டாந்தரை. திருவரங்கத்து வைணவப் புளியோதரையே புளியோதரைன்னு //

  அடப்பாவி! :-)//

  உண்மையச் சொல்லீட்டேன்னு சிரிக்கிறீங்க. வெக்கப்படாதீங்க :) இன்னும் பலப்பல உண்மைகள் இருக்கு. எல்லாம் வெளிய வரும்.

  // //தான் வாங்குன பிரசாதத்தையே வேண்டாம்னு குடுத்துட்டாரு. அப்புறமா நாந்தான் வற்புறுத்தி //

  பொய்! பொய்!
  வாங்குன பிரசாதத்தை நான் அம்மா கையில் கொடுத்தேன்! அம்மா எனக்குக் கையில் கொடுத்தாங்க!//

  அப்படிச் சொல்லுங்க. ஆகா வாங்குன பிரசாதத்தை கையில வெச்சுக்கக் கூடப் பிடிக்காம யார் கிட்ட குடுக்கலாம்னு யோசிச்சீங்க. அப்ப நான் அம்மா கைல குடுக்கப் போறப்ப தடுத்து நீங்க குடுத்தீங்க. ;) அதையும் சொல்லுங்களேன். அதை மட்டும் ஏன் விடுறீங்க? :D

  // இந்த ஜிராப் பையன் கிட்டயும் கொஞ்சம் கொடுங்க-ன்னு கையை நீட்டினேன்! அவரு போடா ஒனக்கெல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு!
  இதப் பார்த்து விட்டு அம்மா தான் நான் தரேன்பா-ன்னு இன்னொரு முறை கொடுத்தாங்க! //

  பிரசாதம்னு வாங்குன எல்லாருக்கும் நான் குடுத்தேன். ;)

  ReplyDelete
 50. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //அதுல இருந்தே பால் தனியா குடிக்கப்படலைன்னு புரிஞ்சிக்கோங்க. குங்குமப் பூ இருந்தாதான் பாலுன்னு சொல்வீங்க//

  இது வேறயா?
  பாலும் தனி தான்! சர்க்கரையும் தனி தான்! ரெண்டுமே ஆதியில் இருந்தே இருக்கு தான்! பசுவிருந்தா பாலிருக்கும்! கரும்பிருந்தா சர்க்கரை இருக்கும்! ஆனா இரண்டும் சேரும் போது பாலும் இனிக்கு! சர்க்கரையும் இனிக்கு!

  அதை விட்டுப்போட்டு பால் மட்டும் தான் தமிழ் இனிப்பு! சர்க்கரை தமிழ்த் திணிப்பு-ன்னு ஜல்லி அடிப்பீங்க பாருங்க! அங்க தான் காமெடியே! :-) //

  எச்சூஸ்மீ. யூ ஆர் ராங்கு. வெல்லம் போட்டாத்தான் தமிழ்ப் பாலு. ஜீனி போட்டா இங்கிலீசு பாலுன்னு சொல்றோம்யா.

  ஆனா உங்க காமெடி பெருங்காமெடி. நாங்கள்ளாம் பால்ல குங்குமப்பூ போட்டிருக்குன்னா.. நீங்க குங்குமப்பூவுல பாலக் கலந்திருக்குன்னு சொல்றவங்களாச்சே.

  // இரண்டுமே தனித் தனியே இனிப்பென்றாலும், இரண்டும் சேர்த்துக் குடிப்பதே தமிழ் வழக்கம்! அதில் ஏன் உமக்கு வீண் தயக்கம்? //

  நான் எதை விரும்பிக் குடிக்கிறேன் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல.

  அது மட்டுமின்றி கலப்பது அல்ல உங்கள் எண்ணம். கலந்த பிறகு உங்களதை முன் வைப்பது. ஆகையால்தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது.

  // (ஆனா அபிசேகம் பண்ண பாலை கையில் ஊத்தும் போது மட்டும், அட இதுல கொஞ்சம் சக்கரை போட்டுக் குடுத்தாக் கொறைஞ்சாப் போயிருவீங்க-ன்னு எங்க ஜிரா கேப்பாராம்! :-)) //

  அதென்ன ஒங்க ஜிரா? ஜிரான்னு சொல்லுங்க போதும்.

  // //சில்க் ஸ்மிதா மாதிரி முருகன் இடுப்பு இருக்குன்னு பதிவுல எழுதுவேன்னு சொன்னீங்களே... அதை ஏன் எழுதலை? ;)//

  அ(ட)ப்பாவி!
  சில்க் ஸ்மிதா-ன்னு யாரு சொல்லி இருப்பாய்ங்க-ன்னு டோட்டல் பதிவுலகத்துக்கே தெரியும்!//

  ஹே... இங்க பாருங்கப்பா புனிதபிம்பம். சில்க் சுமிதான்னா ஒங்களுக்கு இளப்பமாயிருச்சுல்ல.....

  // சீவீயார் முதற்கொண்டு, கானா பிரபா இடைக்கொண்டு, வெட்டி கடைக்கொண்டு அத்தனை பேரும் சாட்சி சொல்ல வாங்கப்பு!//

  வாங்க வாங்க.... நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. ஜிரா முருகன் கோயில்ல இருந்தாலும் சில்க் சுமிதான்னு சொல்ல யோசிச்சிருக்க மாட்டான். சொன்னாலும் சொன்னேன்னு சொல்லவும் தயங்கீருக்க மாட்டான். ஆனா... ஆன்மீகச் சூறாவளியாகிய கே.ஆர்.எஸ் எப்படி?

  ReplyDelete
 51. //எச்சூஸ்மீ. யூ ஆர் ராங்கு. வெல்லம் போட்டாத்தான் தமிழ்ப் பாலு. ஜீனி போட்டா இங்கிலீசு பாலுன்னு//

  ஓ...
  சர்க்கரை தமிழன் சொத்து இல்ல-ன்னு நாடு கடத்திட்டீங்களா? நாட்டுச் சர்க்கரை தெரியும்-ல!

  போதாக்கொறைக்கு தமிழன் விளைவித்து எடுத்த சர்க்கரைக்கு நைசா "ஜீனி"-ன்னு வடப்பெயரைச் சூட்டி அவப்பெயர் தேடித் தரப் பாக்குறீங்க! யப்பா சாமீ! என்னாமா ஒரு அரசியலு!
  (ஜீனி-ஜீரா காம்பினேசன் இப்ப தாண்டீ புரியுது:-)

  சர்க்கரை தமிழன் கண்டுபிடிப்பு இல்லை-ன்னு உணவாராய்ச்சி வல்லுனர்கள் தரவு கொடுங்கப்பா :-)

  சொல்-ஒரு-சொல் மக்கா: உங்க அடுத்த சொல் = சர்க்கரை! :-)

  //நீங்க குங்குமப்பூவுல பாலக் கலந்திருக்குன்னு சொல்றவங்களாச்சே.
  //

  நாங்க அப்பிடி எல்லாம் இல்ல! நாங்க பாலும் குடிப்போம்! பாலுக்கு குங்குமப்பூ போட்டும் குடிப்போம்! ஆனா குங்குமப்பூ பிசைஞ்சி வச்சி, பாலை ஒரே ஒரு சொட்டு விட்டு, பூவுல பால் கலந்திருக்குன்னு அடாவடி பண்ண மாட்டோம்! :-)

  ReplyDelete
 52. //இரண்டுமே தனித் தனியே இனிப்பென்றாலும், இரண்டும் சேர்த்துக் குடிப்பதே தமிழ் வழக்கம்! அதில் ஏன் உமக்கு வீண் தயக்கம்?//

  நான் எதை விரும்பிக் குடிக்கிறேன் என்பதை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அல்ல//

  நாங்க உங்க சார்பா முடிவு செய்யலை சாமீ! நீங்களும் எங்க சார்பா முடிவு செய்யாதீங்க-ன்னு தான் சொல்றோம்! இது அதில் சேர்த்தி இல்லை-னு நீங்க தீர்ப்பு சொல்லாதீங்க-ன்னு தான் கேட்டுக்கறோம்!

  தரவுகளை முன் வைத்த பின் தீர்ப்பைத் தமிழ்ச் சமுதாயம் முடிவு செய்யும்!

  //இரண்டும் சேர்த்துக் குடிப்பதே தமிழ் வழக்கம்!// - தொன்று தொட்டு இன்று வரை தமிழ்ச் சமுதாயம் வெறுமனே பாலை மட்டூம் தனியாக் குடிச்சதில்லை! உங்களுக்கும் தெரியும்! நீங்களும் அப்படித் தான் குடிக்கறீங்க! ஆனா பேச்சு மட்டும் வீம்பு! :-)

  //ஹே... இங்க பாருங்கப்பா புனிதபிம்பம். சில்க் சுமிதான்னா ஒங்களுக்கு இளப்பமாயிருச்சுல்ல.....//

  சிலுக்கு எங்களுக்கு இளப்பம் அல்ல! நல்ல தள தள தளப்பம்! அதான் சிலுக்குப் பீதாம்பரம் உடுத்திக்கிட்டூ இருக்காரு! :-)

  நாங்க புனித பிம்பம் இல்ல! மனித பிம்பம்!
  மனிதம், சமுதாயம் இரண்டையும் பிரதிபலிப்பவங்க! தெரிஞ்சிக்கோங்க!

  //அதென்ன ஒங்க ஜிரா? ஜிரான்னு சொல்லுங்க போதும்//

  ஏன்..உங்களுக்கு என்னா வந்திச்சி? எங்க ஜிரா எங்க ஜிரா தான்! நல்லவரு! ஒங்கள மாதிரி இல்ல!

  //சில்க் சுமிதான்னு சொல்ல யோசிச்சிருக்க மாட்டான். சொன்னாலும் சொன்னேன்னு சொல்லவும் தயங்கீருக்க மாட்டான்//

  அப்ப ஏன் இப்ப தயங்கறீங்களாம்?

  //ஆன்மீகச் சூறாவளியாகிய கே.ஆர்.எஸ் எப்படி?//

  அவரு சில்க் ஸ்மிதா முதற்கொண்டு பாவனா வரை பெருமாள் பதிவிலும் எழுதறவரு! கண்ணன் பாட்டில் ரொமான்ஸ் பாட்டு எல்லாம் போடறவரு! பெருமாள் கோயில்ல தப்பு செஞ்சி தமிழைத் தள்ளி வச்சா, அங்கனயே அர்ச்சகர்களை லெப்டு ரைட்டு வாங்குறவரு! எங்க ஜிராவைக் கேளுங்க! அவர் சொல்லுவாரு!

  ReplyDelete
 53. ஊருல இருக்கும் போது அப்பா கூட்டிக்கிட்டு போகும் முக்கிய கோவில்களில் வடபழனி முருகனும் ஒன்று ;)

  அருமையாக எழுதியிருக்கிங்க தல ;)

  ReplyDelete
 54. தல & ஜீரா

  நீங்க ரெண்டு பேரும் நல்லா என்ஜாய் பண்ணுறிங்க..! ;))

  ReplyDelete
 55. இதென்னப்பா டிராமா!!!
  சரியான ஜோடி சேர்ந்திருக்கு.

  கோவிலுக்குப் போனீங்க.சரி பிரகாரம் வலம் வந்திங்க சரி.
  அபிஷேகம் சரி. புளீயோதரை சரி.
  நாலு வரி கதையை இப்படிக்கூட எழுத முடியுமா:)))

  சாமி சரணம் சரணம் பொன்னய்யப்பா:)

  ஹரிஹரசுதன் பதம் பணி மனமே!!

  ReplyDelete
 56. அறுபதும் நானே போட்டுடறேனே!!

  ஜிராவும் ரவியும் ஒண்ணு.
  தமிழ் அறிந்தவர்களுக்குக் கண்ணு.

  ReplyDelete
 57. //வல்லிசிம்ஹன் said...
  அறுபதும் நானே போட்டுடறேனே!!//

  :-))
  வல்லியம்மா அறுபது போடுவது சாலவும் பொருத்தம்! :-))

  ReplyDelete
 58. கே.ஆர்.எஸ்,ஜிரா ரெண்டு பேரும் சேர்ந்தாப்புல ஒரு போட்டோ எடுத்தும் போட்டிருக்கலாம் ல.
  ரெண்டு ஹீரோ தரிசனமும் நமக்கும் கிடைச்சிருக்கும் :)

  பாவனா பார்க்க நேர்ந்தாக் கூட டின்னர்க்கு கூப்டிருப்பாங்க. :P

  ReplyDelete
 59. ஒரு வருஷத்துக்கு முன்னால் இதே மாதிரி தான் கந்தக்கோட்டத்துக்கு ஒரு பிளாக் நண்பருடன் போயிருந்தேன். போட்டோவும் எடுத்தார். இன்னும் பதிவும் பொட்டோவும் வரப்போகிறது. ஆனால் அந்தப்பதிவாளர் வாழ்க்கையிலும் LIFO method(Last In First Out) கடை பிடிக்கிறார் போலும்.ஒன்று புரிகிறது கந்தக்கோட்ட முருகனை வட வடபழனி முருகன் சக்தி வாய்ந்தவன்.

  ReplyDelete
 60. //டின்னர் வித் பாவனா என்றால் எந்தப் பதிவன் மறுப்பான்? முருகன் வித் ஜிரா என்றால் எந்தக் கேஆரெஸ் மறுப்பான்?//

  அட, அட, அட!

  //கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலே//

  சூப்பர்! :)

  //மற்றவர் என் பிளாக்கர் பதிவை மட்டுமே கண்டார்! உற்றவன் என் உள்ளப் பதிவைக் கண்டான்!//

  அப்போ நான் உள்ளப்பதிவு பற்றிச் சொன்னது உண்மைதானே கண்ணா?

  வடபழனி அழகனைக் கண் முன்னால் நிறுத்திய கண்ணபிரானே, நீ வாழி!

  ReplyDelete
 61. ரொம்பவும் இயல்பாக அருமையாகச் சொல்லி இருக்கீங்க சார். தமிழ் கொஞ்சுகிறது முழுப் பதிவிலும். நான் வடபழனியில் தான் இருக்கின்றேன். வாரம் ஒரு முறை போவேன். ஆனால் சாதாரண ஆலய தரிசனத்தையும் அபிஷேகத்தையும் இப்படிக் கூட அனுபவித்து அனுபவித்துப் பார்க்க முடியுமா என்ன? உங்களோடு வந்தால் முடியும் போல.அடுத்த முறை சென்னை வந்தால் உங்களோடு நாங்களும் வடபழனி ஆலயம் வரலாமா?

  - கிஷோர், வடபழனி

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP