இராமநவமி: அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 1
காவியத்தில் இராமனைப் பிடிக்குமா, இலக்குவனைப் பிடிக்குமா-ன்னு பல பதிவர்களைக் கேட்டுப் பாருங்க! இலக்குவனைத் தான் பிடிக்கும்-னு சொல்லுவாய்ங்க! ஏன் தெரியுமா?
ஹிஹி...இராமனைச் சுத்தமாப் பிடிக்காது! அவர்களைப் பொறுத்தவரை புனித பிம்பம்! Unrealistic:-)
ஆனா இலக்குவன் அப்படியில்லை! கோவக்காரன்! Straightforward! :-)
சரி இலக்குவனைப் பிடிக்கும்-னு சொல்றீங்களே, இலக்குவன் செய்தது போல் நீங்களும் செய்வீங்களா-ன்னு கேட்டுப் பாருங்க! எல்லாரும் ஓடி விடுவோம்!
உடன் பிறந்த பரதனும் சத்ருக்கனனும், உடன் பிறவாத குகனும் சுக்ரீவனும் வீடணனும் எவருக்கும் இராமானுஜன் என்ற பெயர் இல்லை! இளைய பெருமாள் இலக்குவன் ஒருவனுக்கே உண்டு!
எனக்கும் இலக்குவனைத் தான் ரொம்ப பிடிக்கும்! ஆனா மேற்சொன்ன காரணங்களுக்காக அல்ல! இராமன்+தம்பி = இராம+அனுஜன் = இராமானுசன்!
உலக வழக்கத்தைப் பொறுத்தவரை தாய் என்றால் அது பொம்பளை! தம்பி என்றால் ஆம்பிளை! இப்படிப் பலப்பல உறவுகள்!
ஆனால் உண்மையான உறவு...பாலாலோ, பேராலோ அமைவதில்லை! உள்ளத்தால் அமைவது!
தாய்மையும் தாண்டிய மாறா அன்பு இலக்குவன் கொண்டது! அதைக் கீழ்த்தரப்படுத்தியவர் எவராயினும், அன்னை திருமகளே ஆயினும், அப்பன் பெருமாளே ஆயினும், அவர்களும் அல்லல் உற்றார்கள்!
அண்ணன்-தம்பி உறவு பற்றித் தனியாக ஒரு தொடர் பதிவு வரும்! அப்போ அண்ணன் செஞ்ச தப்பையெல்லாம் ஒவ்வொன்னாப் பட்டியல் போட்டுத் தாக்கலாம்! இன்னிக்கு விட்டுருவோம்! என்ன இருந்தாலும் இன்று பிறந்தநாள் பையன் அல்லவா இராமன்? :-)
இப்ப மேட்டருக்கு வருவோம்! அது என்ன...அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணன் இராமன்? இலக்குவனைக் கொன்றது இராமனா? அடப் பாவி! இராமனைப் புனித பிம்பம்-னு இல்ல எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க! அவனா இந்த அடாத செயலைச் செய்தான்?
இல்லை சேது, இராமர் பாலம்-ன்னு நடக்குற பல விஷயங்களால், இந்த மாதிரி ஒவ்வொன்னா யாராச்சும் கிளப்பி விடுறாங்களா? இப்போ கொலைகாரன் என்ற பட்டம் வேறா இராமனுக்கு? சேது வந்தாலும் வந்தது! சே(த்)து வச்சி வாங்குறாங்களா இராமனை? :-)
இல்லையில்லை! இலக்குவனைக் கொன்றது இராமனே தான்! பாக்கலாம் வாங்க!
ராமாயணத்தின் கடைசிக் கட்டம்! (உத்தர ராமாயணம்) - அவதாரம் முடியப் போகும் கால கட்டம்!
மனிதனாகப் பிறந்த இறைவன், சராசரி மனிதனாகவே வாழ்கிறான்! தான் செய்த பாவங்களின் பழியை எல்லாம் ஒளிக்காது மறைக்காது அடுத்த பிறவிக்கும் சேர்த்தே சுமக்கிறான்! அபார தெய்வ சக்தியை எல்லாம் எதுவும் காட்டவில்லை!
அதான் அவதார நோக்கம் நிறைவேறி விட்டதே! இன்னும் திரும்பி வராமல் இருக்கிறானே! தூக்கம் கலைந்தால் விழிப்பு தன்னால் வரவேண்டுமே! அது தானே உயிரின் இயக்கம்! இன்னும் இராமன் விழித்த பாடில்லையே! தான் இறைவன் என்று அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ? - இப்படி ஒரு சந்தேகம் வானுலகத்தினருக்கு! இராமனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி வருமாறு யமனை அனுப்புகிறார்கள்! அவனும் பழுத்த துறவி போல் வேடம் இட்டுக் கொண்டு அயோத்தி நகருக்குள் வருகிறான்!
அயோத்தியின் அரண்மனைக்குள் நுழைந்ததும், சங்கை முழங்குகிறான்!
அதி முக்கியமான தேவ ரகசியத்தை அரசனிடம் "மட்டும்" தனியாகப் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்! தம்பிமார்கள், அமைச்சர்கள் கூட இருக்கக் கூடாதாம்! சேதி இராமனின் காதுக்கு வருகிறது! புன்முறுவல் பூக்கிறான் இராகவன்.
"இலக்குவா, நீயே சென்று நம் வெளிவாயிலில் காவல் இரு! இந்த அறைக்குள் வேறு எவரும் நுழைய வேண்டாம்! சேவகர்களும் எல்லாரும் வெளியேறி விடுங்கள்!"
இலக்குவனுக்கு எப்பவுமே சந்தேகம் தான்! இராமனை மீதைத் தவிர!
"அண்ணா, அத்தனை பேரும் வெளியேறிவிட்டு, நீங்கள் மட்டும் முன்பின் தெரியாத ஒரு துறவியிடம் உரையாடுவது எனக்குச் சற்று அச்சமாகவே இருக்கிறது! அதான் முன்பே ஒரு முறை பட்டோமே! அது தெரிந்தும் இப்படி வலியச் சென்று முன்பின் தெரியாதவர்களிடம் அன்பு காட்டுகிறீர்களே! இதெல்லாம் தேவையா?
வேண்டுமானால் உள்வாயிலில் காவல் இருக்கிறேன்! நீங்கள் கூப்பிட்ட கணத்தில் ஓடி வரும் தொலைவில் இருப்பது தான் முறை!"
யமன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான்!
("அடேயப்பா! இராமனைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பது இவன் தானோ? இருக்கட்டும் இருக்கட்டும்! இவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்ளலாம்!")
"ஐயா, இது பரம தேவ ரகசியம்! அதனால் தான் சொல்கிறேன். எவரும் அறியாமல் கூட கேட்டுவிடக் கூடாது! எனக்கு ஒரு வாக்குறுதி கொடுங்கள். நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, யாரும் உள்ளே வரக் கூடாது! அரசாங்கம் சார்பாக யாரும் ஒற்றுக் கேட்கவும் கூடாது! அப்படியே காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!"
இராமனுக்குச் சிரிப்பு வருகிறது!
"அடேயப்பா...இவ்வளவு பீடிகையா! என் தம்பிக்குத் தெரியாத ஏதும் எனக்கும் தெரிய வேண்டாம் என்று நான் பொதுவாக இருந்து விடுவேன்! ஆனால் தேவ ரகசியம் என்று சொல்வதால்....
சரி, அப்படியே ஆகட்டும்! லக்ஷ்மணா, காவல் பலமாக இருக்கட்டும்! உள்வாயிலில் உளவாய் நீ!"
அண்ணன் ஆணையைச் சிரமேற் கொண்ட தம்பி, உள்வாயிலில் காவலுக்கு நிற்கிறான்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் இலக்குவப் பெருமாளுக்கு இடக்கண் துடிக்கிறது...இடுக்கண் அழைக்கிறது!
என்னமோ நிகழப் போகிறது! அனைவரும் வெளியேறிவிட, கொலு மண்டபத்தில் பேச்சு மூச்சு இல்லை!
யமன் வந்த வேலையைத் துவக்குகிறான்.
"பெருமாளே! இது என்ன கொடுமை! உம்மை அறியாமல் நீரே இப்படி வாளா இருப்பதா?
அவதார நோக்கம் தான் பூர்த்தியாகி விட்டதே! மீண்டும் வைகுந்தம் ஏகுங்கள்! இதைச் சொல்லத் தான் சிவபெருமானே அடியேனை அனுப்பி உள்ளார்!
மனித உயிர்களைக் கவர்பவன் நான்! தர்மராஜன்! அதே பொறுப்போடு மனிதனாய் இருக்கும் உமக்கும் சொல்கிறேன்! உமது காலம் முடியப் போகிறது! உம்...கிளம்புங்கள்!"
"யமதர்மரே, வணக்கம்!
என் முடிவினை அந்தரங்கமாக அறிவித்து உங்கள் கடமையைச் செய்து விட்டீர்கள்!
எனக்கும் எந்த ஆசையும் பெரிதாக இல்லை! என் சீதையும் என்னை விட்டுப் போய் விட்டாள்! உலகத்துக்காக உத்தமியின் இதயத்தை ஒரு நாள் நோகடித்தேன்! அவளுடன் என் திரு நாள் சென்று விட்டது!
ஏழ் இரண்டு ஆண்டு யான் போய் எரி வனத்து இருக்க என்றேன்
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்
பாழி அம் தடந் தோள் வீர, பார்த்திலை போலும் அன்றே
யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறை இன்பம் என்னோ?
அவள் இல்லாமல் தனியாக எனக்கு இன்பங்கள் எதுவும் தேவை இல்லை! அரச பொறுப்பில் உள்ளவர்கள் மண்மகளையும் பற்றி, குடும்பத்தின் திருமகளையும் பற்றினால் என் போன்ற நிலைக்குத் தான் ஆளாவர்கள் போலும்!
நான் ஒதுக்கினாலும் என்னை ஒதுக்காத அன்புச் செல்வம் சீதை; அவளை மேலுலகிலாவது சந்திக்கிறேன்! புறப்படலாமா?
அதற்கு முன் என்னுயிர்த் தம்பியிடம் மட்டும் ஒரே ஒரு வார்த்தை!......"
அழைக்கவே இல்லை! அதற்குள் "அண்ணா....அண்ணா....." என்று இலக்குவன் காவலை விட்டு ஓடோடி வருகிறான்!
"அண்ணா, துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்துள்ளார்! நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், உங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்! அவரிடம் நீங்கள் அந்தரங்கப் பேச்சு வார்த்தையில் இருப்பதாகச் சொல்லிச் சற்று நேரம் காக்கச் சொன்னேன்! அயோத்தியையே சபித்து விடுவதாக மிரட்டி உள்ளே நுழையப் பார்க்கிறார்!"
"ஆகா, என்ன காரியம் செய்தாய் லக்ஷ்மணா? அயோத்தியின் சீருக்கு ஊறா? அயோத்திக்காக அல்லவா என் அன்னத்தையும் அனைத்தையும் இழந்தேன்! பொதுவுடைமையைப் பற்ற தனியுடைமையை விற்றேன்! இப்போது முனிவர் எங்கே இருக்கிறார், சொல்?"
"நீங்கள் தேவ ரகசியம் பேசும் போது குறுக்கே நுழைவார் முனிவர்! கொடுத்த வாக்கின் படி அவரை உங்களால் கொல்ல முடியுமா? மகரிஷிக்கு மரண தண்டனையா? அதைச் சொல்லத் தான் ஓடோடி வந்தேன் அண்ணா! முனிவர் வந்து கொண்டே இருக்கிறார்! இவரைச் சீக்கிரம் பேசி அனுப்பி விடுங்கள்!!"
யமன்: "அட! என்னை அனுப்புவது இருக்கட்டும் இராமா! தேவ ரகசியம் பேசும் போது அத்து மீறி வந்த இலக்குவன் இவன்! முதலில் இவனை அனுப்பு!
என்ன பார்க்கிறாய்? கொடுத்த வாக்கின் படி முதலில் இவனுக்கு மரண தண்டனையை விதிப்பாய் இராகவா!"
இராமன்: "ஆகா...என்ன சொல்கிறீர்கள்!
இலக்குவன் என் காவலன்! அயோத்தியின் கோவலன்! அவனைக் கொல்வதா? என்ன குற்றம் செய்தான் அவன்? துர்வாசருக்கு முன்னால் வெறும் சேதி அல்லவா கொண்டு வந்தான் இளையவன்?"
யமன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் இன்னும் ரகசியத்தை முழுமையாகச் சொல்லவில்லை! அதற்குள் அத்து மீறி வந்தான் உன் தம்பி!
காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?"
(தொடரும்...)

மீ த பஷ்டு...
ReplyDeleteஸ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராமா!
அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....
//எனக்கும் இலக்குவனைத் தான் ரொம்ப பிடிக்கும்! இராமன்+தம்பி = இராம+அனுஜன் = இராமானுசன்! ஆனா மேற்சொன்ன காரணங்களுக்காக அல்ல! //
ReplyDeleteஅதான் ஊருக்கே தெரியுமே...
//"அண்ணா, துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்துள்ளார்! நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், உங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்! அவரிடம் நீங்கள் அந்தரங்கப் பேச்சு வார்த்தையில் இருப்பதாகச் சொல்லிச் சற்று நேரம் காக்கச் சொன்னேன்! அயோத்தியையே சபித்து விடுவதாக மிரட்டி உள்ளே நுழையப் பார்க்கிறார்!"//
பேசாம அவரை உள்ளேவிட்டு போட்டு தள்ளியிருக்கலாம்...
இவர் உள்ள வந்தா உடனே விடனுமா? இப்ப இவரால ஒருத்தர் உயிர் போக போதா?
ஆனா இராமர் கையால போகறதுக்கும் ஒரு கொடுப்பனை வேண்டும்... இல்லையா?
பொறந்த நாள் அதுவுமா பிள்ளையை வாழ்த்தாம இப்படி அவதாரம் முடியறதை பத்தி எழுதறீங்களே...
ReplyDelete//ஆனா இராமர் கையால போகறதுக்கும் ஒரு கொடுப்பனை வேண்டும்... இல்லையா?//
ReplyDeleteபோவதற்கு என்ன கொடுப்பினை?
இராமன் பல பேரைக் கொல்லும் போதெல்லாம், அதை நியாயப்படுத்த இப்படி எல்லாமா இட்டுக் கட்டுவது?
என்ன கொடுமை வெட்டி? :-))
//பொறந்த நாள் அதுவுமா பிள்ளையை வாழ்த்தாம இப்படி அவதாரம் முடியறதை பத்தி எழுதறீங்களே...//
இதுவும் பிள்ளை வாழ்த்து தான் பாலாஜி!
அடுத்த பாகத்தையும் படிங்க!
ஆதியும் நவமி! அந்தமும் நவமி!
//அதான் ஊருக்கே தெரியுமே...//
ReplyDeleteபாலாஜி, வேண்டாமே!
நான் இலக்குவனை மட்டுமே மனத்திருத்தி எழுதினேன்! இந்த முறை திருமலை சென்ற போது இலக்குவன் உருவைக் கண்டேன்! அப்படி ஒரு பாசம் இலக்குவன் சிலையின் முகக் களையில்!
கிட்டத்தட்ட சன்னிதியில் 45 நிமிடம்!
மிக அபூர்வமான திருப்பாவாடை சேவை! முழுத்திருமேனியும் ஆடை அணியின்றி தரிசனம்! வரவே மனமில்லை! வரும் வழியெல்லாம் நினைவும் அகலவில்லை!
காணாதார் பலரும் பயன்பெறுமாறு கண்டதை அப்படியே எழுதி வைத்து விட்டேன்! பதிக்கிறேன்!
//கிட்டத்தட்ட சன்னிதியில் 45 நிமிடம்!
ReplyDeleteமிக அபூர்வமான திருப்பாவாடை சேவை! முழுத்திருமேனியும் ஆடை அணியின்றி தரிசனம்! வரவே மனமில்லை! வரும் வழியெல்லாம் நினைவும் அகலவில்லை!//
45 நிமிடம்??????????
இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் டைமிங் இருக்கா?
வெட்டி சொன்னதுக்கு அதானேன்னு சொல்ல வந்தேன். நீங்க சொன்ன மாதிரி அடுத்த பகுதி வரை காத்திருக்கிறேன்.
ReplyDelete//அண்ணன்-தம்பி உறவு பற்றித் தனியாக ஒரு தொடர் பதிவு வரும்! அப்போ அண்ணன் செஞ்ச தப்பையெல்லாம் ஒவ்வொன்னாப் பட்டியல் போட்டுத் தாக்கலாம்! //
ReplyDelete// இராமன் பல பேரைக் கொல்லும் போதெல்லாம், அதை நியாயப்படுத்த இப்படி எல்லாமா இட்டுக் கட்டுவது? //
ஆஹா...இராமனை ஒரு வழி பண்றதுன்னு இருக்கீங்க போல!!
பலராமரை கொன்னது கிருஷ்ணர்னு எதாவது கதை இருக்கா? கிருஷ்ண ஜெயந்தி அல்லது தீபாவளி அன்னிக்கு போடுவீங்களா ? :)
அருமையான நடை! அடுத்த பதிவை ஆவலோட எதிர்பார்க்கிறேன்.
Waiting for next part :)
ReplyDelete//பாலாஜி, வேண்டாமே!
ReplyDelete//
உங்களுக்குள்ள இப்படி ஒரு weak spot-ஆ? ஒரே வரியில் சுணங்கிவிடுகிறீர்களே :((
புதிய தகவல்கள். படமும் அருமை. எங்கிருந்துதான் தேடிப் பிடிக்கிறீர்களோ? :-) வாழ்த்துகள்.
இறைவனாகவே தன்னை அடையாளபடுத்தி கொண்ட கிருஷ்னர் மானுடனாகவே இறப்பதாக படித்திருக்கிறேன். அதே போல் இராமர் சரயு நதியில் சங்கு சக்ரதாரியாக (பரத சத்ருக்னர்களோடு) விசுவரூப தரிசனம் கொடுத்து மறைவார் என்றும் படித்திருக்கிறேன்.
இராமானுஜர் எப்படி அவதாரத்தை முடித்து கொண்டார் என்று அறிய ஆவல்.
//என்ன இருந்தாலும் இன்று பிறந்தநாள் பையன் அல்லவா இராமன்? :-)//
ReplyDelete????
இராமன் மட்டுமா? இன்னிக்குத்தானே மற்ற மூவரும் பிறந்தார்கள்?
புதுக்கதை. நல்லா இருக்கு.
/தாய்மையும் தாண்டிய அன்பு இலக்குவன் கொண்டது! அதைக் கீழ்த்தரப்படுத்தியவர் எவராயினும், அன்னை திருமகளே ஆயினும், பெருமாளே ஆயினும், அவர்களும் அல்லல் உற்றார்கள்!/
ReplyDelete:-)
//பாலாஜி, வேண்டாமே!//
ReplyDeleteஉங்களுக்குள்ள இப்படி ஒரு weak spot-ஆ? ஒரே வரியில் சுணங்கிவிடுகிறீர்களே :(( //
ரீப்பீட்டே!!!!
ஆமாம், ராம+அனுஜன் எப்படிங்க இராமானுசன் ஆனாரு?....வேண்டாமே ப்ளிஸ்...:))...ரெண்டு மொழிக்கும் வலிக்குதாம், எங்கிட்ட வந்து சொல்லிட்டுப் போச்சுங்க நேத்துக் கனவுல:))
//துளசி கோபால் said...
ReplyDeleteஇராமன் மட்டுமா? இன்னிக்குத்தானே மற்ற மூவரும் பிறந்தார்கள்?//
வாங்க டீச்சர்!
இராமன்=புனர்பூசம்
பரதன்=பூசம்
இலக்குவன்=ஆயில்யம்
சத்ருக்கனன்=மகம்
//Sridhar Narayanan said...
ReplyDelete//பாலாஜி, வேண்டாமே!//
உங்களுக்குள்ள இப்படி ஒரு weak spot-ஆ? ஒரே வரியில் சுணங்கிவிடுகிறீர்களே :(( //
வாங்க ஸ்ரீதர்!
weak spot-உம் இல்ல! gold spot-உம் இல்ல! :-)
பாலாஜியின் கிண்டல் பொருள் எனக்கு மட்டுமே தெரியும்! அதான் வேணாம்-னு சொன்னேன்! அவர் உடையவரைக் குறிப்பிடவில்லை! :-)
மத்தபடி சுணக்கமாவது! சுண்டைக்காயாவது! கும்மறுதுன்னா என் பேரை வச்சி நல்லாவே கும்மலாம்! என்ன சொல்றீங்க! :-))))
//ச்சின்னப் பையன் said...
ReplyDeleteமீ த பஷ்டு...
ஸ்ரீ ராம ஜெயராம ஜெயஜெய ராமா!//
ஆகா ச்சின்னப் பையன் இப்படிக் கலக்குறாரே! :-)
என்னாது...அடுத்த பாகத்தை "அ"வலுடன் எதிர்பார்க்கறீங்களா? :-)
//45 நிமிடம்??????????
ReplyDeleteஇதுக்கு ஏதாவது ஸ்பெஷல் டைமிங் இருக்கா?//
பெரிய திருமலை ஜீயர், அவர் ஏகாங்கிக்கு உதவியாக பெரிய நெடுந்தாண்டகம், பெரிய திருமொழி பாசுரங்கள் முழுக்கச் சொல்ல வேண்டும்! திருப்பாவாடை சேவைக்கு இப்பாசுரங்கள் ஓதுதல் வழக்கம்!
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteவெட்டி சொன்னதுக்கு அதானேன்னு சொல்ல வந்தேன்//
அதானே! :-)
//நீங்க சொன்ன மாதிரி அடுத்த பகுதி வரை காத்திருக்கிறேன்//
அதே தான்! :-)
எப்படி இருக்கீங்க கொத்ஸ்? பனி எல்லாம் கொட்டி முடிச்சாச்சா?
//வந்தியத்தேவன் said...
ReplyDeleteஆஹா...இராமனை ஒரு வழி பண்றதுன்னு இருக்கீங்க போல!! //
ஹிஹி!
சில பேருக்கு அதுல ரொம்பவும் ஆசைங்க! அதுவும் நான் அதைச் செஞ்சேன்னா பலாப்பழத்தைத் தேனில் முக்கிச் சாப்பிடுவது போல!:-)
இராமன் தவறுகளை மறைக்காமல் வாதப் பிரதிவாதங்களைக் தொடரில் காணலாம்!
//பலராமரை கொன்னது கிருஷ்ணர்னு எதாவது கதை இருக்கா?//
இல்லை! :-)
//அருமையான நடை! அடுத்த பதிவை ஆவலோட எதிர்பார்க்கிறேன்//
போட்டுரலாம்! :-)
//அரை பிளேடு said...
ReplyDeleteWaiting for next part :)//
தெய்வீகச் சிரிப்பய்யா உமது சிரிப்பு! :-)
//இறைவனாகவே தன்னை அடையாளபடுத்தி கொண்ட கிருஷ்னர் மானுடனாகவே இறப்பதாக படித்திருக்கிறேன்//
ReplyDeleteஆமாம்!
கிருஷ்ணரை வாலியே வேடனாய் மறைந்திருந்து கொல்கிறான்! இது இராமனின் கர்ம பலன்! வாலி வதத்துக்கு இறைவன் வகுத்த நெஞ்சுக்கு நீதி!
இறைவனே ஆயினும் மனிதனாய்ப் பிறக்கும் போது தான் செய்யும் வினைகளுக்கு அடுத்த அவதாரங்களில் தானே உவந்து கழுவாய் தேடிக் கொள்கிறான்!
The Lord walks the talk! Justice above all!
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்!
//இராமானுஜர் எப்படி அவதாரத்தை முடித்து கொண்டார் என்று அறிய ஆவல்//
இராமானுசனான இலக்குவனின் அவதார நிறைவு அடுத்த பாகத்தில்!
//பெருமாளே ஆயினும், அவர்களும் அல்லல் உற்றார்கள்!//
ReplyDeleteயாருப்பா இந்த அனானி, மெள்ளமாச் சிரிக்கிறாரு! :-)
//மதுரையம்பதி said...
ReplyDeleteரீப்பீட்டே!!!!//
அச்சோ அண்ணா! எதுக்கெல்லாம் ரிப்பீட்டே-ன்னு ஒரு ரூல்ஸ் இல்லீயா? :-)
ஸ்ரீதருக்கு மேல சொன்ன பதிலைப் பாருங்க! அது உடையவரும் இல்ல! வீக் ஸ்பாட்டும் இல்ல!
//ஆமாம், ராம+அனுஜன் எப்படிங்க இராமானுசன் ஆனாரு?....//
அட, பாட்டுலயே இராமானுசன்-ன்னு தான் இருக்கு! அவரே அப்படித் தான் கூப்பிட்டுக்குவாராம்! அப்படித் தான் கல்வெட்டுலயும் பொறிக்க வேறு சொல்லியுள்ளாராம்!
ஹ்ருஷீகேசன் = இருடீகேசன் என்று தான் ஆழ்வாரும் பல்லாண்டில் பாடுவார்!
விபீஷணண்=வீடணன்
இலக்ஷமணன்=இலக்குவன்
என்று பல பெயர்கள் பக்தி இலக்கியங்களிலேயே "உறுத்தல் இல்லாது" தமிழாகி வரும்!
சரி...உங்க கனவுல மொழி வந்துச்சா? மொழி பட நாயகி வந்தாங்களா? :-))
//ஹ்ருஷீகேசன் = இருடீகேசன் என்று தான் ஆழ்வாரும் பல்லாண்டில் பாடுவார்!
ReplyDeleteவிபீஷணண்=வீடணன்
இலக்ஷமணன்=இலக்குவன்
என்று பல பெயர்கள் பக்தி இலக்கியங்களிலேயே "உறுத்தல் இல்லாது" தமிழாகி வரும்!//
அடடே, 'உறுத்தல் இல்லைன்னு' நீங்க சொன்னாலே போறுமே கே.ஆர்.எஸ் (என் கண்ணால் கண்ட ஆழ்வார் கே.ஆர்.எஸ்)..எதுக்கு பெரியாழ்வார்/ஒரிஜினல் ஆழ்வார் எல்லாம் :-)
/சரி...உங்க கனவுல மொழி வந்துச்சா? மொழி பட நாயகி வந்தாங்களா? :-))//
அது பாருங்க கே.ஆர்.எஸ் முதல்ல ஒரு அம்மணி வந்தாங்க அவங்க பெயர் வடமொழியாம், சொல்லிக்கிட்டாங்க, (நோட் த பாயிண்ட், முதல்ல வருவது வடமொழி, உங்க நண்பர் உங்களிடம் கலாய்ய ஒரு வாய்ப்பு :)) அப்பறமா வந்தவங்க தமிழன்னை, அப்பறமா மூன்றாவதா வந்தது யார்ன்னு நான் சொல்லவும் வேண்டுமோ? :))
இப்படியே வெட்டிப்பதிவு எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete-இராவணன்
////எனக்கும் இலக்குவனைத் தான் ரொம்ப பிடிக்கும்! இராமன்+தம்பி = இராம+அனுஜன் = இராமானுசன்! ஆனா மேற்சொன்ன காரணங்களுக்காக அல்ல! //
ReplyDeleteஅதான் ஊருக்கே தெரியுமே...
//
இதை ஒப்புதல் வாக்குமூலம் என்று சட்டத்தில் சொல்லுவார்கள்.
(என்ன? அதான் நீங்களே கும்மலாம்!னு சொல்லியாச்சே!) :))
ராமர் பிறந்த நாளுக்கு பானகம் குடித்தீர்களா?
ReplyDeleteஉளுந்து வடை (வட இல்ல வடை) சாப்டீங்களா?னு பதிவு போட்டுட்டு இருந்த நீங்க இப்ப எப்படி மாறீட்டீங்க? :P
நடத்துங்க அப்பு! :))
இருங்க, என் தம்பிக்கு போன் போட்டு சொல்றேன், அவனும் வந்து கும்முவான். :))
ReplyDelete////////ஆமாம்!
ReplyDeleteகிருஷ்ணரை வாலியே வேடனாய் மறைந்திருந்து கொல்கிறான்! இது இராமனின் கர்ம பலன்! வாலி வதத்துக்கு இறைவன் வகுத்த நெஞ்சுக்கு நீதி! //////////
என்ன ரவி,இராமாவதாரத்துக்குப் பின்னதான கிருஷ்ணாவதாரம்?
கிருஷ்ணனை வாலி எப்படிக் கொல்ல முடியும்,வாலி'யைத்தான் இராமன் போட்டுத் தள்ளிட்டானே?????
:-(
கிருஷ்ணனின் உள்ளங்காலில் அம்பெய்த வேடன் முற்பிறப்பில் வாலியாக இருந்தவர்.
ReplyDeleteசரியா கேஆர்ரெஸ்?
இப்படி ஒரு பகுதி இருக்கா இராமயணத்தில்.. மீதியும் படிக்க ஆவலாயுள்ளேன்....
ReplyDeleteஅறிவன்...டீச்சர் கரீட்டாச் சொல்லிட்டாங்க பாருங்க!
ReplyDeleteஎங்க டீச்சர்-ன்னா சும்மாவா? :-))
இராமவதாரத்தில் வந்த முனிவர்கள் பலர் கண்ணனின் காலத்தில் ஆயர்களாகவும் கோபிகைகளாகவும் பிறப்பார்கள்!!
அவர்கள் மட்டுமில்லை...தமக்கு இராமனால் அநீதி இழைக்கப் பட்டதாகக் கருதுபவர்களும் கிருஷ்ணாவாதாரத்தில் கண்ணனுக்கு எதிரியாகத் தோன்றுவார்கள்!
அவர்களில் யார் யாருக்கு எல்லாம் உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்டதோ, அவர்கள் எல்லாரும் தத்தம் வினை வலியைத் தீர்த்துக் கொள்ள கண்ணனும் உடன்படுவான்!
இராமவதாரத்தில் வந்த முனிவர்கள் பலர் கண்ணனின் காலத்தில் ஆயர்களாகவும் கோபிகைகளாகவும் பிறப்பார்கள்!!
ReplyDeleteஅவர்கள் மட்டுமில்லை...தமக்கு இராமனால் அநீதி இழைக்கப் பட்டதாகக் கருதுபவர்களும் கிருஷ்ணாவாதாரத்தில் கண்ணனுக்கு எதிரியாகத் தோன்றுவார்கள்!
அவர்களில் யார் யாருக்கு எல்லாம் உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்டதோ, அவர்கள் எல்லாரும் தத்தம் வினை வலியைத் தீர்த்துக் கொள்ள கண்ணனும் உடன்படுவான்!/
ம்ம்புதிய தகவல்.
மொத்தத்தில்...
சிறந்த பதிவு...இராமனை இந்த பிறந்தநாளீல் நான் கோபக்காரன்னு சொன்னேன் நீங்க தம்பியக்கொன்றவன்னு சொல்றிங்க..
லச்சு வந்து தண்டிக்காம இருக்கணும்:)(kidding)
//Anonymous said...
ReplyDeleteஇப்படியே வெட்டிப்பதிவு எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துக்கள்.
-இராவணன்//
வாங்க இராவணரே! இராமநவமி அதுவுமா நீங்க வருவது ஸ்பெசல் தான்!
வெட்டிப் பதிவா? நன்றி! நன்றி!
எல்லாரும் என்னைய சீரியஸ் பதிவாளர்-ன்னு சொல்லுறாங்களே-ன்னு எனக்கு ரொம்ப நாளா ஏக்கம்! நீங்களாச்சும் சொன்னீங்களே! :-)
வெட்டி வேரு வாசம்!
//மதுரையம்பதி said...
ReplyDelete(என் கண்ணால் கண்ட ஆழ்வார் கே.ஆர்.எஸ்)..எதுக்கு பெரியாழ்வார்/ஒரிஜினல் ஆழ்வார் எல்லாம் :-)//
இந்தப் பின்னூட்டம் அம்பியோடது தானே! எங்க மெளலி அண்ணாவுது இல்ல! இல்ல! :-)
//அப்பறமா மூன்றாவதா வந்தது யார்ன்னு நான் சொல்லவும் வேண்டுமோ? :))//
அச்சோ! வேணாம்! வேணாம்! :-))
கிருஷ்ணன் யுத்த முடிவில் யாதவ குல மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாவதைப் பார்த்து துக்கம் பொங்க கடற்கரை நாணலில் திரிகையில்,வேடன் அம்படிக்கிறான்'ங்குது மகாபாரதம்.
ReplyDeleteஎப்படியோ வாலி பிசினெஸ்'ஐயும் வச்சுட்டாங்க போலருக்கு.
சரிதான்.
பொயெட்டிக் ஜஸ்டிஸ்.
ambi said...
ReplyDelete//இதை ஒப்புதல் வாக்குமூலம் என்று சட்டத்தில் சொல்லுவார்கள்.//
அம்பீ, அடாடா...நீ எப்ப ராசா சட்டம் படிக்க ஆரம்பிச்ச?
மாவாட்ட மறுத்தா என்ன இ.பி.கொ? சொல்லு பார்ப்போம் :-)
//ராமர் பிறந்த நாளுக்கு பானகம் குடித்தீர்களா?
உளுந்து வடை (வட இல்ல வடை) சாப்டீங்களா?னு பதிவு போட்டுட்டு இருந்த நீங்க இப்ப எப்படி மாறீட்டீங்க? :P//
அடப் பாவி! அது நானில்லை! தலைவி போர்ட்ஃபோலியோவைத் தூக்கி என் கிட்டத் தர்ர்ர்ர்ர்ர்ர்ரும் உனக்கு இருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
//இருங்க, என் தம்பிக்கு போன் போட்டு சொல்றேன், அவனும் வந்து கும்முவான். :))//
அவன் இலக்குவன் தான்! ஆனால் நீ இராமனா? இல்லை இல்லை நீ..நீ...நீ....யாரு? :-)
@கிருத்திகா..
ReplyDeleteஇரண்டாம் பாகமும் படிங்க! நன்றி!
@அறிவன்
பொயட்டிக் ஜஸ்டிஸா? இங்கே பொயட்டுகளே வேற வேற! :-)
வேடன் கண்ணனின் பாதத்தில் அம்பெய்த பின் வரும் வசனங்கள் கிட்டத்தட்ட வாலி வத ரிப்பீட்டே தான்! வேடனைச் சாந்தப்படுத்தி அவனுக்கு உண்மையை உரைத்து விட்டே கண்ணன் மறைவான்!
//இராமனை இந்த பிறந்தநாளீல் நான் கோபக்காரன்னு சொன்னேன் நீங்க தம்பியக் கொன்றவன்னு சொல்றிங்க..//
ReplyDeleteகுரு எவ்வழி சீடன் அவ்வழி!
தரவு கேட்டா ஃபோட்டோவைக் காட்டிருவம்ல? :-)
//லச்சு வந்து தண்டிக்காம இருக்கணும்:)//
லச்சு வந்தா அவர் பேர்லயும் blog தொடங்கிறலாம்! அப்பறம் தண்டிக்க எல்லாம் டயமே இருக்காது! :-)
நாலு மணிக்கு காலங்க்கார்த்தால எல்லாம் பின்னூட்டம் போடற வழ்க்கமா:) அதாவது பதில் போடறது.
ReplyDeleteஎங்க ராமனை இப்படிச் சொன்னீங்களே ரவி. அடுத்த பதிவையும் பார்த்துட்டு தீர்ப்பை மாத்திக்கிறேன்.:)
எனக்கும் லக்ஷ்மணன் ரொம்பப் பிடிக்கும்.அந்த ஒரு காரணத்துக்காக ராமர் ,சீதை மேல கொஞ்சம் வருத்தம் கூட
உண்டு.ம்ம் சீக்கிரம் பதிவு போடுங்க.:)
நான் முழுவதும் அறியாத கதை இது. அடுத்த பகுதியையும் படிக்கக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteகேஆர்எஸ்,
ReplyDeleteபுனர்பூசத்தில் பிறந்த இன்னொரு இராமன் இருக்கிறான், தெரியுமா ?
:)
அவன் பேரு இராமன் இல்லை கண்ணன்.
Hi KRS, read ur blog. Something which I haven't known all these days.. expecting the next part..
ReplyDeleteஇப்படியெல்லாம் தலைப்பு இருந்த்தா தான் உள்ள வாரங்க. ரொம்ப கஷ்டங்க
ReplyDeleteஅன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
//இலக்குவன்=ஆயில்யம்
ReplyDeleteசத்ருக்கனன்=மகம்//
Both are twins so both are ஆயில்யம் (Me the same).
//அண்ணன்-தம்பி உறவு பற்றித் தனியாக ஒரு தொடர் பதிவு வரும்! அப்போ அண்ணன் செஞ்ச தப்பையெல்லாம் ஒவ்வொன்னாப் பட்டியல் போட்டுத் தாக்கலாம்! இன்னிக்கு விட்டுருவோம்! என்ன இருந்தாலும் இன்று பிறந்தநாள் பையன் அல்லவா இராமன்? :-)//
ReplyDeleteசொல்லுங்க, பதில் சொல்லக் காத்துட்டு இருக்கேன், இந்தக் கதையைக் கடைசியிலே வச்சுக்கலாம்னா, ஒரேயடியா என்னோட ராமாயணத்துக்கு ஆளே வரக் கூடாதுனு முடிவு கட்டி இருக்கீங்க! நடத்துங்க, அடுத்த பகுதி எழுதியாச்சா தெரியலை, இது எழுதினதும் தெரியலை! :( போகட்டும், ராமர் ஒண்ணும் லட்சுமணனைக் கொல்லலையே? அவர் என்ன சொன்னார்னு சொல்லிடட்டுமா? சொன்னால் சஸ்பென்ஸ் கொடுத்திருக்கீங்களே அது போயிடும்னு சொல்லலை. ஆனால் அது கொலைனும் சொல்லலாம், இல்லைனும் சொல்லலாம் இல்லையா? :((((((
ராம, லட்சுமணர்களின் அன்பைப் பொறுத்தவரை அது கொலைனு சொல்லலாம், ஆனால் அனைவரும் இருப்பிடம் சேரவும் வேண்டுமே, அதுக்குக் காரணம் ஒண்ணும் வேண்டும் இல்லையா? அருமைத் தம்பிக்கு ராமன் செய்த பேருதவி அது. இல்லைனால் தம்பி போய்ப் படுக்கை போடாமல் அண்ணன் எங்கே தூங்கறது? :)))))))
அது சரி, விமானப் பணிப்பெண் உபசரிக்கும்போது, உங்க மனைவி பக்கத்தில் இல்லையா? இல்லாட்டி நான் வேணா மெயில் கொடுக்கட்டுமா? :P
ReplyDelete//Anonymous Anonymous said...
ReplyDeleteஇப்படியே வெட்டிப்பதிவு எழுதிக்கொண்டிருங்கள். வாழ்த்துக்கள்.
-இராவணன்//
என்னோட ப்ளாக்ல தான் பதிவே வரதில்லையே. அப்பறம் எப்படி வெட்டி பதிவை இவர் எழுதறாருனு சொல்லறீங்க இராவணரே? ;)
எப்படி சொன்னாலும் மொக்கை போடுவோமில்லை...
அடுத்த பதிவு எப்ப?
ReplyDeleteஎப்ப????
எப்ப?????????
(ஒண்ணு தான் நான் சொன்னேன்.. மீதி ரெண்டும் எக்கோ ;))
//அடுத்த பதிவு எப்ப?
ReplyDeleteஎப்ப????
எப்ப?????????//
இருங்க ஏர் ஹோஸ்டஸைக் கேட்டுச் சொல்லுறேன்! - இது எக்கோ மட்டுமே! என் குரல் அல்ல! :-))
அப்ப எழுதறது நீங்க இல்லீங்களா??????
ReplyDelete