Monday, January 01, 2007

2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து! - 4

நண்பர்கள் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2006 கழிந்து, 2007 புகுந்து,
வளம் பல சிறக்க, உளமுடன் வாழ்த்து!
2006-இன் சிறந்த பதிவர் - வெட்டிப்பையல் பாலாஜி அவர்களுக்கு நன்றி! ஏன்?
இந்தப் பதிவை ஏகாதசியின் பின்னிரவில் கண்விழித்து எழுதிய போது, தொலைபேசியில் விடிய விடிய கம்பெனி கொடுத்தாரே! சும்மாவா!!!


இதற்கு முந்தைய பதிவு இங்கே!

பகல்பத்து, ராப்பத்து = இவை தமிழ்ச்சொத்து!
சிவராத்திரி ஒரு ராத்திரி, அன்னை அவளுக்கு நவராத்திரி - தெரிந்த விடயம் தான்! ஆனால் அது என்ன பத்து பகல், பத்து ராத்திரி?
மொத்தம் பத்து நாளா இல்லை இருபது நாளா?
மொத்தம் 21 நாட்கள்! பார்ப்போம் வாரீகளா? முத்தங்கி சேவையில் முத்து குளிக்க வாரீகளா?

renganatha_festival

அரங்கன் வேட்டைக்குச் செல்லும் வேடு பறி விழா

இந்த விழாவை முதலில் துவக்கி வைத்தது திருமங்கை மன்னன் (கலியன்)!
அதற்கு முன்னரே தமிழ் ஓதப்பட்டு தான் இருந்தது! ஆனால் பெரும் விழாவாக கொண்டாட்டம் எல்லாம் கிடையாது!
திருவாய் மொழியும், நம்மாழ்வார் வழியும்,
கலியனுக்குத் தெரிந்தது! கடையனுக்கும் தெரிய வேண்டாமா?
அரங்கன் அனுமதி பெற்று, திருமங்கை மன்னன் தான், இவ்விழாவை ஒரு நாடகம் போல் நடத்திக் காட்டினார்!

இதை உடையவர் ராமானுஜர் இன்னும் முறைப்படுத்தி வைத்தார்! வெறுமனே பாசுரம் ஓதுவதோடு மட்டும் இல்லாமல், குப்பன், சுப்பன் இன்னும் எளியோரும் எல்லாரும் இதில் மனமொப்பி ஈடுபடுமாறு வழி வகை செய்தார்! பாக்கலாம் வாங்க!

சென்ற பதிவின் இறுதியில் பார்த்தோமே
அருள்பாடி ஸ்ரீபாதம் தூக்குவோஓஓஓர் எங்கே?
அடியோம் இந்தோஓஓஓம்!

இதற்குச் செந்தமிழில் கட்டியங் கூறுதல் என்று பெயர்! கவிதையாகக் கூடப் படிப்பார்கள்! பாட்டோலை வாசிப்பார்கள்! இவர்கள் சொல்லச் சொல்ல, இவர்கள் கூப்பிடும் குரலுக்குத் தான், ஆழ்வார் விக்ரகங்களும் வந்து நிற்கும்!

இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ப் பண்டிதர்கள்? கோவில் அர்ச்சகர்கள்? அந்தணர்கள்? அரசு அலுவலர்கள்? ஹூஹூம்! இல்லவே இல்லை! சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! சாதாரணக் குப்பனும் சுப்பனும் தான்!
இவர்களுக்கு இப்படிப் பயிற்றுவித்து, விழாவோடும், தமிழோடும் ஒன்றச் செய்தவர் தான் நம் ராமானுஜர்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றுப் பெரிதாகக் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! ஆனால் ஒரு துரும்பும் கிள்ளிப் போட மாட்டார்கள்!
தமிழின் பேரைச் சொல்லித் தான் மட்டும் வாழ்வார்கள் மத்தியில்,
தமிழுக்காக வாழ்ந்தவர்கள் நம் ராமானுசரும், நம் மாமுனிகளும்!
இன்றும் விழாவில், இதை நேரில் சென்று அனுபவித்துப் பார்த்தால், கண்கள் பனிக்கும்!

Aalwars

வேதம் தமிழ் செய்த பன்னிரு ஆழ்வார்கள்

கார்த்திகை மாதக் கார்த்திகை நாள் அன்று (திருமங்கையாழ்வார் நட்சத்திரம்) அரங்கன், நம்மாழ்வாருக்குப் பாட்டோலை அனுப்புவான். அதை எடுத்துக் கொண்டு போய் நம்மாழ்வார் சன்னிதியில் அரசாங்க ஆணை போல உரக்க வாசிப்பார்கள்!

அத்யயனம் என்றால் படித்தல். அ+அத்யயனம் =அனத்யயனம், அதாவது படிக்காது இருத்தல். தமிழ் மறைகளைத் தவிர வேறு எதுவும் படிக்காது இருத்தல். (அந்தக் காலத்தில் வடமொழியில் சொன்னால் தானே, சிலர் வடமொழியையும் கொஞ்ச காலத்துக்கு நிறுத்தி வைப்பார்கள்! :-) அதனால் இப்படி ஒரு பெயர் கொடுத்தார்கள்!)

அந்தப் "படிக்காத" காலம் இப்போதிலிருந்து தொடங்குகிறது! மீண்டும் நம்மாழ்வார் ஊருக்கு வந்து சேரும் வரை அந்த அரசாணை அமுலில் இருக்கும்! (கார்த்திகை மாதக் கார்த்திகை தொடங்கி, தை மாத ஹஸ்தம் வரை)
ரங்கராஜனின் ஆணைப்படி இந்த இடைப்பட்ட காலத்தில் யாரும் மற்ற மறைகளைச் சாற்றக் கூடாது! தமிழ் மறையை மட்டுமே சாற்ற வேண்டும்; அதுவும் கூட்டாக ஆலயங்களில் சாற்ற வேண்டும்! அறியாதாரும் அறியும் வண்ணம் தமிழ் சாற்ற வேண்டும்! (கோதைத்தமிழ் மட்டுமே இதற்கு விதிவிலக்கு! யாரும் எங்கு வேண்டுமானாலும் சாற்றலாம்!)

ஆணை கேட்டு நம் ஆழ்வாரும் சகல மரியாதைகளுடன் திருவரங்கம் கிளம்பி வருவார்! பெருமாளும் பக்தனும் எதிர் எதிர் நிற்பார்கள் (எதிர்ச் சேவை); நாம் எதிர் விருந்து என்று சில திருமணங்களில் சொல்கிறோமே, அது போல!

முதல் நாள் திருமங்கை மன்னன் நினைவாக, அவருடைய திருநெடுந்தாண்டகம் ஓதப்படும்!
அதன் பின்னர், பகல்பத்து திருவிழா = வைகுந்த ஏகாதசிக்கு முன்னுள்ள பத்து நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆழ்வார் பாசுரங்கள்! பகல் வேளையில் கோலாகலங்கள் கொண்டாடப்படும்!
மொத்தம் 4000 திவ்யப் பிரபந்தங்கள் அல்லவா! நம்மாழ்வார் நீங்கலாக ஏனைய பதினோரு ஆழ்வார்களின் பாசுரங்களைப், பகல்பத்தில் பண்ணோடு இசைத்து ஓதுகிறார்கள்!
பேரரசன் அரங்கன், ஆஸ்தானத்தில் கொலுவிருக்க, நாமும் அவனுடைய குடிமக்களாய் இருந்து, செவி குளிரக் கேட்கலாம்!


607%20SRGM%20SESHRAYA%20YALI

சேஷராய மண்டபம்


614%20SRGM%20TPM%20PEETHAM
அரங்கன் கொலு மண்டபம்


பகல்பத்தின் கடைசி நாளன்று, நம்பெருமாளின் மோகினித் திருக்கோலம்!
(அதான் ஏற்கனவே தமிழைக் கேட்டு மயங்கிப் போய் உள்ளோமே! அது போதாதா? மோகினிக் கோலம் காட்டி மேலும் மயக்க வேண்டுமா என்ன? :-) )
அதன் பின்னர் தான், சென்ற பதிவில் பார்த்த சொர்க்க வாசல் சேவை! ஏகாதசி அன்று விடியற்காலையில்!

அன்றே ராப்பத்து திருவிழாவும் தொடங்குகிறது! = வைகுந்த ஏகாதசியும் சேர்த்து மொத்தம் பத்து நாட்கள்!
இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது!


ஏழாம் நாள் இரவு ஒரு உலக மகா அதிசயம்! எப்போதும் அரங்கன் தானே மாயம் செய்து, எல்லாரையும் மயக்கி, விளையாட்டு காட்டுவான்?
ஆனால் இன்று அரங்கனே கதி கலங்கி, மதி மயங்கி, கிடக்கிறான்!
ஓர் அழகுத் திருமுகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறான்!

ஹூஹூம், சரியாகவே தெரிய மாட்டேன்கிறதே!
அட, என்னை இன்னும் கொஞ்சம் உயரத் தூக்குங்ளேன்! சரியாகவே தெரியவில்லையே! இன்னும் உயர, இன்னும் உயர என்று பாவம், கெஞ்சுகிறான்!
அடுத்த பதிவில்! ஏகாதசி இறுதிப் பதிவில் பார்ப்போம்!

srirangam_chakra_deepam

srirangam_sangu_deepam

51 comments:

  1. ரவி,

    சென்ற ஆண்டில் கண்டுகொண்ட மற்றொமொரு சிறந்த ஆன்மிக பதிவர் நீங்கள்.

    சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2007) சர்சைகள் எதற்குள் செல்லாமல் சிறந்த பதிவுகளை தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    உங்கள் பதிவும் பண்பும் சிறப்பு !
    வாழ்க! வளர்க !!

    அன்புடன் கோவி.கண்ணன்

    ReplyDelete
  2. ரவி,
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கருத்துகள் எல்லோருக்கும் இருக்கும். அந்த கருத்துகளைச் சொல்லாமல் இருக்கும் வரை சர்ச்சை இல்லை. கருத்துகள் சொன்னதாலேயே சர்ச்சைகளுக்குள் இழுத்து பெயர் கெடுத்து ஊரைவிட்டு விரட்டும் அளவிற்குச் செல்லுபவர் இருக்கும் வரை கருத்துகள் சொல்லாமல் இருப்பதே நல்லது. ஆதலால் நண்பரே! கருத்துகளைச் சொல்லாதீர்கள். 2006ம் வருடம் போல் 2007லும் கருத்துகளைச் சொல்லி சர்ச்சைக்குள் இழுக்கப்படாமல் இருப்பீராக.

    ReplyDelete
  4. ரவி!

    மிக அருமையான பதிவு. இரண்டு மூன்று வருடங்களின் முன் ஒரு பகல்பத்து கண்டு பரவசமடைந்தேன். உண்மையிலேயே மகிழ்வாக இருந்தது. அது குறித்த என் எண்ணப்பதிவினை
    இங்கே பாருங்கள்.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  5. ரவி!

    மிக அருமையான பதிவு. இரண்டு மூன்று வருடங்களின் முன் ஒரு பகல்பத்து கண்டு பரவசமடைந்தேன். உண்மையிலேயே மகிழ்வாக இருந்தது. அது குறித்த என் எண்ணப்பதிவினை
    இங்கே பாருங்கள்.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ரவி சங்கர்!
    மிக நன்று! படங்கள் மிக மனநிறைவைத் தந்தது.என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  7. ரவி,

    கண்ணன் சொல்வதையே நானும் வழி மொழிகிறேன்.
    இத்தனை விளக்கமாக எடுத்துரைக்கும் அழகு எளிதில் கிடைக்காது.
    அன்புடன்.

    ReplyDelete
  8. எளிமை+இனிமை=இரவி.
    சரிதானே!

    ReplyDelete
  9. ரவி தொடரட்டம் இலக்கிய்ப்பணி.நான் அளித்த பட்டத்தை இப்பொழுது எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்."ஷண்முகச்செல்வர்"ராப்பத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசை. அது நிறைவேறுவதில் மகிழ்ச்சி. உங்கள் குடும்பமும் நீடுழி வாழக.ஆசிகள்

    ReplyDelete
  10. உலகின் துயரங்கள் பல! ஈராக் மற்றும் இஸ்ரேல் பிரச்னை, தாய்லாந்து மக்கள் துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் ஏழை நாடுகளையே மீண்டும் தாக்கல் என்று பல நிகழ்வுகள் வருத்தம் அளித்தாலும்,

    நம் சக தமிழ் மக்கள் அண்டை நாடுகளில் குறிப்பாக ஈழத்தில் படும் துன்பங்கள், மனதை இன்னும் கனமாக்குகின்றன! தீர்வு வந்திடாதோ என்று ஏங்கும் நேரத்தில் இழுபறியாகவே போகும் அமைதி!

    2007இல் ஆவது அமைதி திரும்ப இறையருள் இறைஞ்சுவோம்! இன்பம் கூடக் கேட்கவில்லை! அமைதி மட்டுமே வேண்டுவது! அரங்கன் அருள வேண்டும்!

    அடியேன் அனுமத் ஜெயந்தி பதிவில் ஒரு அன்பர், இலங்கையில் மீண்டும் அனுமன் வந்து தீமையைக் களையமாட்டாரா என்றே கேட்டிருந்தார்! அப்போதே மனம் ஒரு மாதிரி ஆகி விட்டது!

    கனவு மெய்ப்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்
    இறைவா இதையே அருள்வாய், 2007 புத்தாண்டில்!

    ReplyDelete
  11. திருவரங்கத்தில் நடக்கும் உற்சவங்களை நேரில் காணாத குறையத் தீர்த்துவைத்துவிட்டீர்கள்.

    பதிவும் படங்களும் அருமையிலும் அருமை.

    வைகுண்ட ஏகாதசி அன்று புராணக் கதைகளோ பக்தி நூல்களோ படித்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். நான் உங்கள் வைகுண்ட ஏகாதசிப் பதிவுகளையும் குமரனின் கோதைத்தமிழையும் படித்து கொஞ்சம் புண்ணியம் தேடிக்கொண்டேன்.)))


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துகள!

    அழகாக எழுதிவருகின்றீர்கள்....
    இதில் ஏன் இடைச்செருகல்கள்?

    குருவியின் கழுத்து மட்டுமே உங்கள்
    குறி; மரமோ,கிளையோ,இலையோ,காம்போ
    அல்லவென்று நம்புகிறேன்!

    ReplyDelete
  13. அட ஆமாம். சிவராத்திரி ஒரே இரவு தான். நவராத்திரி ஒன்பது இரவுகள் என்று அன்னையின் புகழைப் பாடும் போது கேட்டிருக்கிறேன். ஆனால் மாலவனுக்கு இருபத்தியோரு இரவுகள் தமிழில் கொண்டாட்டம் என்பது தோன்றவே இல்லை. நன்கு சொன்னீர்கள். :-)

    ReplyDelete
  14. ஆழ்வார்களில் காலத்தால் கடைசி ஆழ்வாராகிய திருமங்கையாழ்வாரால் திருவரங்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா பின்னர் உடையவர் இராமானுஜர் காலத்தில் இன்னும் விரிவு படுத்தப் பட்டு இன்று எல்லா வைணவத் திருத்தலங்களிலும் நடைபெற்று வரும் தமிழ்ப் பெருவிழா. ஆழ்வார்களின் அருளிச்செயல் (பாடல்கள்) பெற்ற நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் மட்டுமின்றி இன்று அபிமானத் திருத்தலங்கள் எனப்படும் மற்ற வைணவ ஆலயங்களிலும் இப்பெருவிழா கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலிருந்து அமெரிக்கா வரும் வரை எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் நடக்கும் இத்திருவிழாவில் தினந்தோறும் கலந்து கொண்டது நினைவிற்கு வருகிறது. அந்த நாளும் வந்திடாதோ? வைகுண்டப் பெருவாசல் இராப்பத்து நாட்கள் பத்து நாட்களிலும் திறக்கப்பட்டு, இறுதி நாளில் சாற்றுமுறை செய்யப்பட்டு ஆழ்வார் மோக்ஷம் என்று சிறிய நம்மாழ்வார் திருவுருவத்தை இறைவனின் திருவடிகளில் வைத்துத் திருத்துழாயால் நம்மாழ்வார் திருவுருவம் முழுவதும் அமிழ்ந்து போகும் படி மூடும் போது என்னவோ அடியேனுக்கே இறைவன் திருவடி நிழல் கிடைத்துவிட்டது போல் கண்பனி சோருமே. அந்த நாளும் வந்திடாதோ?

    ReplyDelete
  15. அடியவர்களை அரங்கன் ஆட்கொள்ளூம் அழகே தனி. திருவரங்கநகரில் அவன் கோயிலை அடையும்போது முதலில் அவனது பிரியத்திற்கு உகந்த ஆழ்வார்களளயும் அடியவர்களளயும் தரிசித்துவிட்டுச் செல்ல வசதியாக அமமக்கப்படிருக்கும். அரங்கனின் அன்புக்கு
    பாத்திரமான உடையவரின் சீடர் கூரத்தாழ்வார் சந்நிதி
    முதலில் தென்படும்.கூரத்தாழ்வார் ராமனுஜரின் தலைமைசீடர்.அவரது குருபக்திக்கு அடையாளம், ஒருநாள் அரங்கப்பெருமாள் வீதி உலா வரும்போது இவர் மடப்பள்ளியில் சமையல் வேலையில் இருக்க யாரோ ஒருவர்" நம் பெருமாள் வருகிறார் சேவிக்கவாருமய்யா?" என்று அழைக்க கூரரோ"யான் எம் பெருமானுக்கு அமுது தயாரிக்கிறேன்.பிறகு வருகிறேன்" என்றாராம்.குருவிற்காக தனது விழிகளையே பறிகொடுத்தவர்.பகவானிடம் ராமானுஜருக்கு முன்பாய் தனக்கு வைகுந்தப்பதவிகேட்டு நின்றார்.திதைத்த பகவானிடம்,"பெருமாளே! எம் குருவை எதிர்கொண்டழைக்க யான் முன்னே செல்லவேண்டும்" என்றாராம்.குருபக்தியில் சிறந்தகூரத்தாழ்வாருக்கு முதல் சந்நிதி. அடுத்து தொண்டரப்பொடி ஆழ்வார் , திருப்பாணாழ்வார் என்று அரங்கன் தன் அடியார்களுக்கு தகுந்த இடம்கொடுத்து முதலில் அவர்களை சேவித்துப்பிறகு கடைசியாய் தன்னைக்காணவருவதையே விரும்புவதுபோல
    கோயிலின் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
    பகல்பத்து ராப்பத்து விவரங்கள் அருமை ரவி.
    சேஷராயமண்டபத்தில் சிற்பங்கள் கண்ணைக்கவரும்.எதிரே ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளி வெள்ளைக்கோபுரம்! இச்சுவைதவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்று சும்மாவா சொன்னார் தொண்டரடிப்பொடி?
    குதிரைவாகனத்தில் அரங்கனின் குறுநகைதவழ்க்கோலம் மனதை நிறைக்கிறது.
    அளித்த உங்களுக்கு நன்றி.
    திருவரங்கப்ரியா

    ReplyDelete
  16. //ஓர் அழகுத் திருமுகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறான்!
    ஹூஹூம், சரியாகவே தெரிய மாட்டேன்கிறதே!
    அட என்னை இன்னும் கொஞ்சம் உசரத் தூக்குங்ளேன்ப்பா! சரியாகத் தெரியமாட்டங்குது என்று கெஞ்சுகிறான்!
    அடுத்த பதிவில்! ஏகாதசி இறுதிப் பதிவில் பார்ப்போம்!//

    என்ன ஸ்வாமி!
    ஆன்மிகப் பதிவை ஆல்பிரெட்
    ஹிட்ச்ஹாக் கதைமாதிரி சஸ்பென்ஸில்
    நிறுத்தி வைத்துவிட்டீர்கள்?

    அரங்கன் பார்க்க நினைத்த அந்த அழகுத்திருமுகம் கொ்ண்ட தேவி யார்?
    இல்லை அரங்கனின் அடியார்களில்
    ஒருவரா?

    ReplyDelete
  17. Respected KRS,

    WISING U AND UR FAMILY along with UR ADIYAR KUZHAM A VERY HAPPY,PROSPEROUS,ARANGAN-ARUL NIRAINTHA 2007.

    Thanks for ur new post again.Wishing all the best for more&more Bagavanai-i patriya Thagavalgal. sundaram

    ReplyDelete
  18. திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்பட்டு நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இராமானுஜர் காலத்தில் காலத்தின் கோலத்தால் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியிலிருந்து வர சில நேரம் தாமதம் ஆனபடியால் அந்த வழக்கத்தை மாற்றி திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்து அவரும் அரங்கனுமாய் அமர்ந்து இத்திருவிழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

    முதல் பத்து நாட்கள் பகல்பத்து. தினமும் 200 பாசுரங்களாக மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் எல்லாம் ஓதப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி தொடங்கி திருவாய்மொழி நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன. 21ம் நாள் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுஜ நூற்றந்தாதியும் அடங்கிய 1000 பாசுரங்கள் ஓதப்படுகின்றன. இப்படியாக இந்த 21 நாட்களும் தமிழ் வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதப்படுகின்றன.

    ReplyDelete
  19. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவைக் காணாத குறையை உங்கள் பதிவுகளின் மூலம் தீர்த்து வைக்கிறான் அரங்கநகரப்பன்.

    ReplyDelete
  20. //குமரன் (Kumaran) said: in Suprabatham Valaipoo
    வைகுண்ட ஏகாதசியைத் தொட்டு அநத்யயன காலம் என்று தெரியும். ஆனால் என்று தொடங்கி என்று முடியும் என்று தெரியாது.//

    குமரன்
    அடியேனை மன்னிக்கவும்; நீங்க அங்கு கேட்ட கேள்வி பாஸ்டன் மாநாட்டு நேரத்தில் அப்படியே ஓடி விட்டது!

    அதற்கு இங்கு இப்போது தான் பதில் சொல்ல முடிந்தது; பார்த்தீர்களா?

    கார்த்திகையில் கார்த்திகை தொடங்கி
    தை ஹஸ்தம் வரை!

    ReplyDelete
  21. // கோவி.கண்ணன் [GK] said...
    ரவி,
    சென்ற ஆண்டில் கண்டுகொண்ட மற்றொமொரு சிறந்த ஆன்மிக பதிவர் நீங்கள்.//

    நன்றி GK ஐயா!

    //உங்கள் பதிவும் பண்பும் சிறப்பு !
    வாழ்க! வளர்க !!//

    என்றும் வேண்டும் தங்கள் இன்ப அன்பு!

    ReplyDelete
  22. //வெற்றி said...
    ரவி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    நன்றி வெற்றி!
    நல்ல அமைதி கொண்டு வரும் புத்தாண்டாய் மலர, அரங்கன் அருள் வேண்டுவோம்!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. //Anonymous said...
    ஆதலால் நண்பரே! கருத்துகளைச் சொல்லாதீர்கள். 2006ம் வருடம் போல் 2007லும் கருத்துகளைச் சொல்லி சர்ச்சைக்குள் இழுக்கப்படாமல் இருப்பீராக//

    :-)
    அடியேன் கருத்துகளை என்னால் இயன்ற வண்ணம் சொல்லிக் கொண்டு தான் வந்துள்ளேன்! பூட்டி வைப்பதில்லை! ஆனால் கருத்துக்களை sensationalise செய்யும் எண்ணம் இல்லை! உள்ளங்களை உடைக்காது, உள்ளதை உரைக்க இறைவன் அருள வேண்டும்!

    கருத்தாக்கம் என்பதில் கருத்தை விட ஆக்கம் மிக முக்கியமான சொல்! இதுவே அடியேன் கருத்து!

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  24. //மலைநாடான் said...
    ரவி!
    மிக அருமையான பதிவு. இரண்டு மூன்று வருடங்களின் முன் ஒரு பகல்பத்து கண்டு பரவசமடைந்தேன். உண்மையிலேயே மகிழ்வாக இருந்தது. அது குறித்த என் எண்ணப்பதிவினை
    இங்கே பாருங்கள்.//

    நன்றி மலைநாடன் ஐயா! தமிழ்மணப் புதியவன் அடியேன்; மூன்று மாதங்களாகத் தான் இங்கு உள்ளேன்! அதனால் உங்கள் திருவரங்கப் பதிவு காணும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது! இதோ சென்று பார்த்து வருகிறேன்!

    உங்கள் நடையில் அரங்கன் விழா என்றால் கேட்கவா வேண்டும்!

    ReplyDelete
  25. //Johan-Paris said...
    ரவி சங்கர்!
    மிக நன்று! படங்கள் மிக மனநிறைவைத் தந்தது.என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    யோகன் பாரிஸ் //

    நன்றி யோகன் ஐயா! படங்கள் மன நிறைவு தந்ததில் மிக்க மகிழ்ச்சி!
    அரங்கனைக் கண்டு நிறையாதார் யார்?
    அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. இரவு புனிதம் அடைந்து கண்ணபிரான் அருளால்!

    சென்ற ஆண்டு இந்நேரம் ஸ்ரீரங்கத்தில் இருந்து இதனைக் கண்டுகளித்தேன்!

    அது நினைவுக்கு வந்து, ஒருகனம் மனது ஆடிவிட்டது!

    மிக்க நன்றி, ரவி!

    அந்த கடைசி வரி எ.பி...?

    சரிசெய்து விடுவீர்கள் உடனே!
    :))

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. //இந்தப் பதிவை ஏகாதசியின் பின்னிரவில் கண்விழித்து எழுதிய போது, தொலைபேசியில் விடிய விடிய கம்பெனி கொடுத்தாரே! சும்மாவா!!!//

    நான் விழித்திருப்பது தினமும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம்... விடிய விடிய அரங்கனின் கதை சொல்லி இந்த ஏகாதசி நாளன்று நாராயணனை நீனைக்க வைத்த தங்களுக்கல்லவா அடியேன் நன்றி சொல்ல வேண்டும்!!!


    பதிவு வழக்கம் போல் அருமை!!!

    ReplyDelete
  28. ரவி,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்......தங்களுக்கு இறைவன் எல்லா நலமும், வளமும் தர பிரார்த்திக்கிறேன்.

    பதிவு சூப்பரய்யா, ஆம் அந்த கண் கொள்ளா காட்சியினை நேரே கண்டேன்....

    மெளலி...

    ReplyDelete
  29. மிக மிகத் தெளிவாக உங்கள் கருத்துக்களைத் தேன் கலந்த பால் போல் கொடுக்கிறீர்கள்,. உங்கள் பதிவிற்கு வரவே முடியவில்லை. தமிழ்மணம் 24 மணி நேர இடுகையில் தேடி எடுத்து வந்தேன். அரங்கனின் திருவுருவம் சொர்க்க வாசல் வழி வெளி வரும் கண்கொள்ளாக் காட்சி வைகுண்ட ஏகாதசி அன்று காலை தொலைக்காட்சி மூலம் காணப் பெற்றேன். இப்போ உங்க பதிவிலேயும், அரங்கன் அழகுக்குச் சொல்ல வார்த்தைகள் ஏது? உள்ளார்ந்த அன்புடனும், பக்தியுடனும் எழுதுவதால் வார்த்தைகள் பிரவாகமாய்க் கொட்டுகிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள்.sivamgss

    ReplyDelete
  30. ரவி,ஆழ்வாரின் அற்புதங்களைத் தாங்களும் குமரனும் அருமையாகப் பதிப்பது புது ஆனந்த அனுபவமாக இருக்கிறது.

    குமரன் ஆழ்வார்திருநகரியில்
    குருகூர் எம்பிரானைத் துழாயினால்
    துயில் படுத்தும்போது அனைவர் கண்ணிலும் தாரை தாரையாக கண்ணீர் பெருகுமாம்.
    அத்தனை பக்தியும் பேரன்பும் அவர்களுக்கு நம்மாழ்வார் மேல்.
    அதைச் சொல்லி என் தந்தையும் தாயும் கலங்குவதைப் பார்த்து இப்படி ஒரு ஆழ்ந்த இணைப்பை உண்டுபண்ணும் பிரபந்த மகிமையை எண்ணி அதிசயப் படுவேன்.அதே பிரமிப்பு
    உங்கள் எழுத்துக்களைக் காணும்போது ஏற்படுகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  31. // வல்லிசிம்ஹன் said...
    ரவி,
    கண்ணன் சொல்வதையே நானும் வழி மொழிகிறேன்.
    இத்தனை விளக்கமாக எடுத்துரைக்கும் அழகு எளிதில் கிடைக்காது.
    //

    நன்றி வல்லியம்மா! உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி!
    பேசாப் பொருளையும் பேச வைக்கும் அன்னை அலைமகள் கருணையும், எம்பெருமான் திருக் கருணையும், நல்ல மனங்களின் வாழ்த்தும் மனத்திற்கு என்றும் இன்பமே!

    நாம் எல்லாரும் 2006 இல் அடைந்த நட்பு 2007 இல் செழித்து என்றும் வளர அவன் அருளே வேண்டுவோம்!

    ReplyDelete
  32. //ஞானவெட்டியான் said...
    எளிமை+இனிமை=இரவி.
    சரிதானே! //

    ஞானம் ஐயா, உங்கள் அன்பை என்னென்று சொல்வது! மிக்க நன்றி!

    ReplyDelete
  33. //தி. ரா. ச.(T.R.C.) said...
    ரவி தொடரட்டம் இலக்கிய்ப்பணி.நான் அளித்த பட்டத்தை இப்பொழுது எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்//

    திராச ஐயா! அடியேனை முதலில் கண்டு கொண்டு வலைப்பதிவு உலகில் வரவேற்றவர் நீங்க தான்! அதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு மகிழ்ச்சி!

    தாங்கள் அருளிய "ஷண்மதச் செல்வன்" என்ற பெயரை அடியேனால் முடிந்த வரை காப்பாற்றுவேன்! எல்லாம் மலையப்பன் அருள்!

    //உங்கள் குடும்பமும் நீடுழி வாழக.ஆசிகள்//

    நன்றி ஐயா!

    ReplyDelete
  34. //ஜெயஸ்ரீ said...
    திருவரங்கத்தில் நடக்கும் உற்சவங்களை நேரில் காணாத குறையத் தீர்த்துவைத்துவிட்டீர்கள்.
    பதிவும் படங்களும் அருமையிலும் அருமை.//

    நன்றி ஜெயஸ்ரீ! நானும் நேரில் காணாத குறையத் தீர்த்துக் கொண்டேன்! :-)

    //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்//

    புத்தாண்டு வாழ்த்துகள் ஜெயஸ்ரீ! 2007 இனிதாக மலரட்டும்!

    ReplyDelete
  35. //sivagnanamji(#16342789) said...
    அழகாக எழுதிவருகின்றீர்கள்....
    இதில் ஏன் இடைச்செருகல்கள்?//

    புரியவில்லையே சிஜி ஐயா!
    இடைச்செருகல்களா?

    சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்! அரங்கனின் கதையில் தவறாக ஏதும் சொல்லி விட்டேனா?

    திருமலை போல் திருவரங்கம் எனக்கு நேரடிப் பழக்கம் அதிகமாக இல்லை என்பதால் ஒரு முறைக்கு இரு முறை பார்த்து பார்த்து தான் எழுதுகிறேன்! 5-6 மணி நேரம் கூட ஆகிறது ஒரு பதிவுக்கு! படங்களும் நிறைய ஸ்கேன் செய்தவை!

    எப்படி இருப்பினும் முதலில் மன்னியுங்கள்!
    பின்னூட்டத்திலோ தனிமடலிலோ சொன்னால் திருத்திக் கொள்வேன்!

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் சிஜி சார்!

    ReplyDelete
  36. // குமரன் (Kumaran) said...
    மாலவனுக்கு இருபத்தியோரு இரவுகள் தமிழில் கொண்டாட்டம் என்பது தோன்றவே இல்லை. நன்கு சொன்னீர்கள். :-) //

    எனக்கும் திடீர் என்று தான் தோன்றியது குமரன் :-) உடனே எழுதி விட்டேன்!

    ReplyDelete
  37. // குமரன் (Kumaran) said...
    அமெரிக்கா வரும் வரை எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவிலில் நடக்கும் இத்திருவிழாவில் தினந்தோறும் கலந்து கொண்டது நினைவிற்கு வருகிறது.//

    அடியேனும் ஒருமுறை மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் விழாவைப் பார்த்து மகிழ்ந்தேன் குமரன்! சிறு வயது! தல்லாகுளம் பற்றி அவ்வளவாகத் தெரியாது! மதுரையில் தெரிந்தவர்கள் கூட்டிப் போனார்கள்!

    //இறுதி நாளில் சாற்றுமுறை செய்யப்பட்டு ஆழ்வார் மோக்ஷம் என்று சிறிய நம்மாழ்வார் திருவுருவத்தை இறைவனின் திருவடிகளில் வைத்துத் திருத்துழாயால் நம்மாழ்வார் திருவுருவம் முழுவதும்....//

    இறுதிப் பதிவில் படமும் தருகிறேன் குமரன்! காட்சி என்றால் அதுவன்றோ காட்சி!

    ReplyDelete
  38. //ஷைலஜா said: அடியார்களுக்கு தகுந்த இடம்கொடுத்து முதலில் அவர்களை சேவித்துப்பிறகு கடைசியாய் தன்னைக்காணவருவதையே விரும்புவதுபோல
    கோயிலின் சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
    பகல்பத்து ராப்பத்து விவரங்கள் அருமை ரவி//

    நன்றி ஷைலஜா!
    உண்மை தான்; அடியவர் கண்டு பின்னரே அரங்கனைக் காண முடியும்!
    நாம் என்ன தான் நேரே அரங்கனிடம் ஓடினாலும், அடியவர் சன்னிதி தானாக வந்து நம் கண் முன்னர் படும் மாதிரி தான் அமைப்பு உள்ளது!

    //குதிரைவாகனத்தில் அரங்கனின் குறுநகைதவழ்க்கோலம் மனதை நிறைக்கிறது.அளித்த உங்களுக்கு நன்றி.
    திருவரங்கப்ரியா//

    திருவரங்கப்ரியாவுக்குப் ப்ரியமான அரங்கன், ப்ரியமான பரி மேல் அழகனாய், வேட்டைக்குப் போவதே, நம் மனங்களைக் கொள்ளையடிக்கத் தானே! :-)

    ReplyDelete
  39. SP.VR.சுப்பையா said...
    //ஓர் அழகுத் திருமுகத்தை எட்டி என்ன ஸ்வாமி!
    ஆன்மிகப் பதிவை ஆல்பிரெட்
    ஹிட்ச்ஹாக் கதைமாதிரி சஸ்பென்ஸில்
    நிறுத்தி வைத்துவிட்டீர்கள்?//

    ஆகா! :-)) ஆல்பிரெட்
    ஹிட்ச்ஹாக்கை ஆன்மிகப் பதிவுகள் போடச் சொல்லி இருப்பார்களோ அந்தக் காலத்தில்! :-))

    //அரங்கன் பார்க்க நினைத்த அந்த அழகுத்திருமுகம் கொ்ண்ட தேவி யார்?
    இல்லை அரங்கனின் அடியார்களில்
    ஒருவரா? //

    தேவியின் திருமுகம்
    தரிசனம் தந்தது! :-)

    ReplyDelete
  40. //Anonymous said...
    Respected KRS,
    WISING U AND UR FAMILY along with UR ADIYAR KUZHAM A VERY HAPPY,PROSPEROUS,ARANGAN-ARUL NIRAINTHA 2007.//

    சுந்தரம் சார்! நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும்!!

    ReplyDelete
  41. //குமரன் (Kumaran) said...
    அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது//

    திருவரங்கத்தில் நம்மாழ்வார் சன்னிதி அமைக்கப்பட்டு அவர் முன்பு தான் இப்போதெல்லாம் பாட்டோலை படிக்கப்படுகிறது குமரன்! ஆழ்வாரும் திருவரங்கத்தில் இருந்தே வருகிறார்!

    இருப்பினும் இன்னொரு பாட்டோலையும் மாலை மரியாதைகளும் இன்றும் திருக்குருகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் சமர்பிக்கப்படுகிறது! வழி வழி வந்ததை மாற்றி அமைக்கும் போது, முந்தைய வழக்கத்துக்கு ராமானுஜர் அளிக்கும் மரியாதையைப் பாருங்கள்!

    பழையன மதித்துப் புதியன புகுகிறார்!


    //முதல் பத்து நாட்கள் பகல்பத்து. தினமும் 200 பாசுரங்களாக மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள்

    வைகுண்ட ஏகாதசி தொடங்கி திருவாய்மொழி நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

    21ம் நாள் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுஜ நூற்றந்தாதியும் அடங்கிய 1000 பாசுரங்கள் ஓதப்படுகின்றன. //

    உண்மை, குமரன்!
    அழகாகப் பட்டியல் இட்டுத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  42. //குமரன் (Kumaran) said...
    திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவைக் காணாத குறையை உங்கள் பதிவுகளின் மூலம் தீர்த்து வைக்கிறான் அரங்கநகரப்பன்.//

    நன்றி குமரன்!
    அடியேனுக்கும் அப்படியே! காணாத குறையை எழுதித் தீர்த்துக் கொள் என்று சொல்கிறார்கள் போலும் அரங்கநகர் அம்மையும்,அப்பனும்! :-)

    ReplyDelete
  43. /SK said...
    இரவு புனிதம் அடைந்து கண்ணபிரான் அருளால்!
    சென்ற ஆண்டு இந்நேரம் ஸ்ரீரங்கத்தில் இருந்து இதனைக் கண்டுகளித்தேன்!//

    ஹைய்யோ! சென்ற ஆண்டு அரங்கத்தில் இருந்தீர்களா SK? அருமையாக அரங்கனை அனுபவித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்!

    //அது நினைவுக்கு வந்து, ஒருகனம் மனது ஆடிவிட்டது! மிக்க நன்றி, ரவி!//

    நன்றி ஐயா!
    ஆடாத மனமும் உண்டோ
    நடை அலங்காரமும், அரங்கன் சிங்காரமும் கண்டு,
    ஆடாத மனமும் உண்டோ! :-))

    //அந்த கடைசி வரி எ.பி...?//
    சரியாகத் தெரியமாட்டங்குது என்று கெஞ்சுகிறான் - ??
    இதுவா SK? - புரியவில்லையே!
    பேச்சுத் தமிழில் எழுதினாற் போல் எழுதினேன்!

    //புத்தாண்டு வாழ்த்துகள்!//
    புத்தாண்டு + தேன் கூடு வெற்றி = வாழ்த்துக்கள் sk ஐயா!

    ReplyDelete
  44. //வெட்டிப்பயல் said...
    நான் விழித்திருப்பது தினமும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம்... விடிய விடிய அரங்கனின் கதை சொல்லி இந்த ஏகாதசி நாளன்று நாராயணனை நீனைக்க வைத்த தங்களுக்கல்லவா அடியேன் நன்றி சொல்ல வேண்டும்//

    ஆகா! சரி! நன்றி பாலாஜி!

    //பதிவு வழக்கம் போல் அருமை!!!//

    :-)

    ReplyDelete
  45. //Mathuraiampathi said...
    ரவி,புத்தாண்டு வாழ்த்துக்கள்......தங்களுக்கு இறைவன் எல்லா நலமும், வளமும் தர பிரார்த்திக்கிறேன்.//

    நாடலும் அதுவே மெளலி ஐயா!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    //பதிவு சூப்பரய்யா, ஆம் அந்த கண் கொள்ளா காட்சியினை நேரே கண்டேன்....//

    உண்மை! அரங்கனின் பரி மேல் அழகே அழகு!!

    ReplyDelete
  46. //கீதா சாம்பசிவம் said...
    மிக மிகத் தெளிவாக உங்கள் கருத்துக்களைத் தேன் கலந்த பால் போல் கொடுக்கிறீர்கள்,. உங்கள் பதிவிற்கு வரவே முடியவில்லை. தமிழ்மணம் 24 மணி நேர இடுகையில் தேடி எடுத்து வந்தேன்.//

    ஆகா, அரங்கனின் குறும்பா இது? :-)
    தனி மடல் சுட்டி இனி அனுப்புகிறேன் கீதாம்மா!

    //அரங்கன் அழகுக்குச் சொல்ல வார்த்தைகள் ஏது? உள்ளார்ந்த அன்புடனும், பக்தியுடனும் எழுதுவதால் வார்த்தைகள் பிரவாகமாய்க் கொட்டுகிறது.//

    நன்றி கீதாம்மா!
    பேசாப் பொருளையும் பேச வைப்பான் அல்லவா?
    புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதாம்மா!

    ReplyDelete
  47. // வல்லிசிம்ஹன் said...
    ரவி,ஆழ்வாரின் அற்புதங்களைத் தாங்களும் குமரனும் அருமையாகப் பதிப்பது புது ஆனந்த அனுபவமாக இருக்கிறது.//

    நன்றி வல்லியம்மா!

    //ஆழ்வார்திருநகரியில்
    குருகூர் எம்பிரானைத் துழாயினால்
    துயில் படுத்தும்போது ...
    அதைச் சொல்லி என் தந்தையும் தாயும் கலங்குவதைப் பார்த்து//

    கல் நெஞ்சும் கரையும் வல்லியம்மா, அந்த இறுதி நாள் வைபவத்தின் போது! துள்சியால் பார்த்து பார்த்து பொத்துவார்கள்! ஒரு குழந்தையைப் போல! காணக் கண் கோடி வேண்டும்!

    //அதே பிரமிப்பு உங்கள் எழுத்துக்களைக் காணும்போது ஏற்படுகிறது.//

    நன்றி வல்லியம்மா!

    ReplyDelete
  48. பகல் பத்து ராப்பத்துக்குள் இவ்வள்வு விசயங்கள் இருக்கின்றனவா?. மிகவும் அருமையான தகவல்கள்.
    நன்றி ரவி.
    உங்கள் குடும்பத்தாருக்கும் எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. //செல்லி said...
    பகல் பத்து ராப்பத்துக்குள் இவ்வள்வு விசயங்கள் இருக்கின்றனவா?. மிகவும் அருமையான தகவல்கள்.
    நன்றி ரவி.
    உங்கள் குடும்பத்தாருக்கும் எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    நன்றி செல்லி! புத்தாண்டு வாழ்த்துக்கள்! இறுதிப் பகுதிக்கும் வாங்க!

    ReplyDelete
  50. Now I can understand what is pagal pathu and rapathu is all about. thanks for the essay and when is the last part coming?
    -Sridhar

    ReplyDelete
  51. tirukural miga arumai adhanai recorded vadivil koduthal kuzhandhaigaluku udaviyaga irukume seiveergala.. nandri

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP