Thursday, February 15, 2007

விமானத்தில் ஒரு சிவராத்திரி

சிவராத்திரி, சிவனின் ராத்திரி என்று தான் எல்லாருக்கும் தெரியுமே! அப்புறம் சிவராத்திரி அன்று என்ன பதிவு போடுவதாம்?
அதுவும் விமானத்தில் அமர்ந்து எழுதும் போது, ஜன்னல் வழியாக ஒரே மேகக் கூட்டம். அப்படியே திருவிளையாடல் படத்தில் வருமே, திருக்கயிலாய எஃபெக்ட்! புகை மண்டலம்!!

நந்தி தேவரான பைலட் அடிக்கடி அறிவிப்புச் செய்கிறார், ஒழுங்கு முறைகளைப் பற்றி. கந்தர்வ லோக விமானப் பணிப்பெண்கள், தேவ கானம் இசைக்கிறார்கள். (ஆனா யாருமே ரம்பை, மேனகை, ஊர்வசி போல, அப்படி ஒண்ணும் ஓகோன்னு இல்லை என்பது தனிக்கதை :-)

பூத கணங்கள் யாரும் இல்லையா என்று எடக்கு மடக்கா, கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது, சொல்லிட்டேன்!
என் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தான் அப்சரஸ் என்று நினைக்கிறேன்...
ச்சே என்ன இது, புத்தி இன்று இப்படிப் போகிறது! எல்லாம் இந்த வெட்டிபையல் பாலாஜியைச் சொல்லணும்! அவர் தான் பழனியில் தேவயானியைச் சந்தித்தேன்-னு பதிவு போடச் சொன்னார்.

சிவ சிவ....சரி, நாம் பதிவுக்கு வருவோம்!



சிவனாரைப் பூமிக்குக் கொண்டு வந்ததே அவரின் ஆப்தரான திருமால் என்று தெரியுமா? - என்னது, சிவனைப் பூமிக்கு அனுப்பியது விஷ்ணுவா?
இப்படி ஒரு நல்லிணக்கமா நமது தர்மத்தில்!
அப்புறம் ஏனாம் வீணாகச் சண்டை இடுகிறார்கள், அதுவும் மெத்தப் படித்தவர்கள்?

ஹிஹி....மெத்தப் படித்ததனால் தான்! படித்தனர் சரி, ஆனால் பிடித்தனரா?
கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே
!

எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணின் திருமார்பில் கொலு இருப்பவள் மகாலக்ஷ்மி.
ஆனால் அவன் இதயத்துக்கு உள்ளே இருப்பவன் யார் தெரியுமா?
- சாட்சாத் சிவபெருமான் தான்!
ஈசன், பெருமாளின் இதயத்தில் தாண்டவம் புரிகிறான். எப்படி?

பெருமாளின் மூச்சுக் காற்று மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. அதனால் அவனுக்குள் இருக்கும் ஈசனும் ஏறி ஏறி இறங்குகிறான்.
இந்தச் சிவ தாண்டவத்துக்கு "அஜபா நடனம்" என்று பெயர்.
சிவ யோகிகளும், மதங்களைக் கடந்த சித்தர்களும் பெரிதும் காண விழையும் தாண்டவம் இது!

ThiyagarajaMain


கஷ்ட காலத்தில் இருந்த இந்திரனுக்கு மனமிரங்கினார் விஷ்ணு.
தன்னுள் இருந்த இந்தச் சிவானாரின் உருவை, இந்திரனுக்குக் கொடுத்து அருள் புரிந்தார். தியாகராஜ மூர்த்தி என்று அதற்கு நாமமும் சூட்டினார்.
சிவம்=மங்களம்; அதனால் இந்திரன் சங்கடம் தீர்ந்தான்.
தினமும் அஜபா நடனச் சிவனாரை வழிபடத் தவறவில்லை.

ஆனால் அப்படியும் வந்தது ஒரு சோதனை. அசுரர்களின் வாயிலாக.
வழக்கம் போல் பெருமாளிடம் முறையிட்டான். பெருமாளோ பதவிச் சண்டைகளுக்கு எல்லாம் தான் உதவ இயலாது என்றும்,
தர்மத்துக்குத் தீங்கு வரும் போது மட்டுமே தான் தலையிட முடியும் என்று சொல்லிவிட்டார்.
போரில் உதவிக்கு, பூலோக அரசன் முசுகுந்தச் சக்ரவர்த்தியை வேண்டுமானல் நாடிக் கொள்ளவும் என்று ஆலோசனை வழங்கினார்.

முசுகுந்தனின் உதவியால் போரில் பெரும் வெற்றி பெற்றான் இந்திரன். ஆனால் மனதுக்குள் ஒரு ஏக்கம்.
ஒரு மானுடன் உதவியால் தான் வென்றோமா? அஷ்ட திக் பாலகரில் ஒருவனான அமரேந்திரன் மானுடன் உதவியை நாடிப் பெற்றான் என்று வரலாறு பேசாதோ?

ஆகா....பாருங்கள் கதையை, வெற்றியும் வேண்டும் ஆனால் கம்பீரமும் தொலையக் கூடாது! அப்படியே இந்தக் கால மனிதர் பலரின் அலை பாயும் மனம். இந்திரன் பக்தன் தான், ஆனால் பக்திக்கும் ஆசைகளுக்கும் இடையே தடுமாறுகிறவன்.
பார்த்தார் பெருமாள்! முசுகுந்தனின் கனவில் தோன்றி, ஒரு உபாயத்தைச் சொன்னார். மறுநாள் காலை, அரசன் விடைபெற்று பூவுலகம் திரும்ப முனைகிறான்.

worship2


இதோ இந்திரனின் பூஜையறை...
காலையில் வாழி பாடு-வழி பாடு முடிகிறது.
இந்திரன், "நண்பா, தக்க சமயத்தில் உதவினாய்! உனக்கு அன்புடன் ஏதாவது அளிக்க வேண்டும் போல் உள்ளது; விரும்பியதைக் கேட்டுப் பெறுவாயாக", என்று மொழிந்தான்.
முசுகுந்தனோ, முன்பே பெருமாளிடம் பேசி வைத்த படி,
"நண்பா, இந்திரா, எனக்கும் என் குடிமக்களுக்கும் ஆரூரில் யாது குறையுமில்லை. ஆனால் நீயே விரும்பிச் கேட்பதால், இதோ பூசையில் உள்ளதே அஜபா மூர்த்தி, தியாகராஜம் என்ற திருவுருவம்! அதை வேண்டுமானால் கொடுத்தருள்வாய்!"

இந்திரனுக்கோ சப்த நாடியும் ஒடுங்கி விட்டது! அவனும் பக்தன் தானே! சுயநலப் பக்தன்!
தியாகராஜ மூர்த்தியைப் பிரிய மனமில்லை; பூவுலகிற்குக் கொடுக்கவும் மனம் வரவில்லை!
ஆனால் நன்றி மறப்புக்கும், மறுப்புக்கும் அஞ்சினான் அமரர் தலைவன்; எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டே! செய்நன்றி கொண்டவர்க்கும் உண்டோ?
பத்தி விலகி, புத்தி வேலை செய்யத் துவங்கியது...

மனிதர் தேவர் அசுரர் எல்லாரும் போடும் கணக்கு ஒன்று. ஆனால் அதில் யாரும் இறைவன் போடும் கணக்கைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையே!
இந்திரன் போட்ட கணக்குக்கு எண்ணிக்கை ஏழு!
ஏழு விளையாட்டு விளையாடினான்! அடுத்த பதிவில்!!

(அப்பாடி...தாயகம் வந்து சேர்ந்தேன்! தாய் மண்ணே, வணக்கம்!
சொர்க்கமே என்றாலும்...அது நம்மூரு போல வருமா?
இந்தியக் காற்றே, இந்தியக் காற்றே...எனக்கும் சேர்த்தே வீசுகிறாயா?

சரி சரி இரு... அலுவலகம் எட்டிப் பாத்து வருகிறேன்...)

20 comments:

  1. //நந்தி தேவரான பைலட் அடிக்கடி அறிவிப்புச் செய்கிறார், ஒழுங்கு முறைகளைப் பற்றி. கந்தர்வ லோக விமானப் பணிப்பெண்கள், தேவ கானம் இசைக்கிறார்கள். (ஆனா யாருமே ரம்பை, மேனகை, ஊர்வசி போல, அப்படி ஒண்ணும் ஓகோன்னு இல்லை என்பது தனிக்கதை :-)//

    க்க்க்கும்...ஏதோ புரியுது:)
    தாங்கள் பயணித்தது எந்தவிமானமோ?:)
    ஆனாலும் சிறப்பா வழக்கம்போல விவரமா எழுதி இருக்கீங்க ரவி..பாருங்க படிச்சதும் உடனே மடல்!
    ஷைலஜா

    ReplyDelete
  2. வழக்கம் போல் அருமை!!!

    இப்படி கதையை பாதியில் விட்டு சென்றால் என்ன்ன செய்வது???

    ReplyDelete
  3. விமானத்தில் இருக்கீங்களா? மும்பை போயாச்சா? கொஞ்சம் கன்பியூஷனா இருக்கே..

    நல்ல இந்திய பயணம் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //ஷைலஜா said...
    க்க்க்கும்...ஏதோ புரியுது:)
    தாங்கள் பயணித்தது எந்த விமானமோ?:)//

    :-)))
    விமானமா முக்கியம்? விமானத்தில் வரும் அன்பைப் பொழிபவர்கள் தானே முக்கியம்! :-)

    //ஆனாலும் சிறப்பா வழக்கம்போல விவரமா எழுதி இருக்கீங்க ரவி..பாருங்க படிச்சதும் உடனே மடல்!//

    நன்றிங்க ஷைலஜா; ஒலி FM கலக்கல் தொடருமா? முன்னறிவிப்பு கொடுங்கள்!

    ReplyDelete
  5. //வெட்டிப்பயல் said...
    வழக்கம் போல் அருமை!!!
    இப்படி கதையை பாதியில் விட்டு சென்றால் என்ன்ன செய்வது???//

    பாலாஜி அது என்னமோ தெரியலீங்க!
    உங்கள் ஞாபகம் வந்தாலே சஸ்பென்ஸ் வைக்கத் தான் தோணுது! பாவம் ஏழையேன் என் செய்வேன்! :-)

    Snow Storm முடிந்ததா? விமான நிலையம் வந்து சேரவே போதும் போதும் என்றாகி விட்டது!

    ReplyDelete
  6. //இலவசக்கொத்தனார் said...
    விமானத்தில் இருக்கீங்களா? மும்பை போயாச்சா? கொஞ்சம் கன்பியூஷனா இருக்கே..//

    பதிவ விமானத்தில் தான் எழுதினேன் கொத்ஸ்!
    ஆனா ஊர் வந்து சேர்ந்தப்புறம் தான் பதிப்பிச்சேன்.
    நம்ம சிவமுருகன் தொலைபேசினார்.
    அலுவல் எல்லாம் முடிந்து, சென்னை மறுபடியும் வந்து விடுவேன். வந்த பின்னர் நண்பர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள வேண்டும்.

    //நல்ல இந்திய பயணம் அமைய வாழ்த்துக்கள்.//

    நன்றி கொத்ஸ்

    ReplyDelete
  7. பாதியிலே ஆட்டத்தை நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள்.
    நீங்கள் இருக்கும் இடத்திலும் சிவராத்திரி நன்றாகக் கொண்டாடுவார்களே.
    முழுமையாக ஒரு கதையைக் கேட்க முடிகிறது.
    விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.
    சீக்கிரம் தொடருங்கள்.
    பயணம் நல்ல படியாகத் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. //ஆனா யாருமே ரம்பை, மேனகை, ஊர்வசி போல, அப்படி ஒண்ணும் ஓகோன்னு இல்லை என்பது தனிக்கதை //

    ஓ நீங்க ரம்பை, ஊர்வசி, மேனகை எல்லாம் பாத்திருக்கீங்க போல இருக்கே. நீங்க ராஜரிஷியா பிரம்மரிஷியா? அப்படி தவம் செய்றப்பத்தானே அவங்க எல்லாம் வருவாங்க?

    //என் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தான் அப்சரஸ் என்று நினைக்கிறேன்...
    //

    குடும்பத்தோட தானே ஊருக்குப் போனீங்க? அப்ப உங்க பக்கத்துல அமர்ந்திருந்தவங்க தான் உங்களுக்கு அப்சரஸ்.

    ReplyDelete
  9. dear KRS.

    Welcome to India and T.N.
    Sivarathri padivu arumai,eppouthum polave.

    Musukuntha chakravarthi-i Karur PASUPATHEESVAR koillilum sevitha anubhavam samiibathil kidaithathu.

    Sivapiraan Parvathi-in Maduraimpathi -il nadantha thirumanathilum kalanthukondavar enpathu Puaranam.Mudinthal Karur il Eiisanudan Musukuntha chkravarthi-ium sevikkavum.

    adutha pathivai Aavaludan-
    sundaram

    ReplyDelete
  10. // வல்லிசிம்ஹன் said...
    பாதியிலே ஆட்டத்தை நிறுத்தி வைத்து இருக்கிறீர்கள்.
    நீங்கள் இருக்கும் இடத்திலும் சிவராத்திரி நன்றாகக் கொண்டாடுவார்களே//

    ஆமாம் வல்லியம்மா.
    நான் இதை எழுதிய இடம் விமானம்.
    இங்கு சிவராத்திரிக் கொண்டாட்டங்கள் ஒன்றுமே இல்லையே!

    சென்னை, மும்பை - கொண்டாட்டங்கள் மிக விசேடம்!

    //பயணம் நல்ல படியாகத் தொடர வாழ்த்துகள்//

    நன்றி வல்லியம்மா. இன்னும் அலவல் பணி தான்; இந்த வாரம் முடிந்து விடும். அப்புறம் ஒரே ஜாலி தான்! :-))

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    ஓ நீங்க ரம்பை, ஊர்வசி, மேனகை எல்லாம் பாத்திருக்கீங்க போல இருக்கே.//

    எல்லாம் சினிமா மாயை தான் குமரன் :-)

    //நீங்க ராஜரிஷியா பிரம்மரிஷியா? அப்படி தவம் செய்றப்பத்தானே அவங்க எல்லாம் வருவாங்க?//

    அச்சச்சோ, அப்படி எல்லாம் இல்லை.
    அவங்க ரிஷிகளிடமும் வருவார்கள்.
    பசங்க குஷியாய் இருக்கும் போதும் வருவார்களே! :-))

    //குடும்பத்தோட தானே ஊருக்குப் போனீங்க? அப்ப உங்க பக்கத்துல அமர்ந்திருந்தவங்க தான் உங்களுக்கு அப்சரஸ்//

    ஆமாம் இதில் என்ன சந்தேகம்? அடியேனும் அதைத் தான் சொன்னேன். அதைத் தான் சொன்னேன். அதைத் தான் சொன்னேன் ஐயா! :-)))

    ReplyDelete
  12. இப்படிக் கதையை பாதியிலே நிறுத்திட்டீங்களே ?

    // ஆமாம் இதில் என்ன சந்தேகம்? அடியேனும் அதைத் தான் சொன்னேன். அதைத் தான் சொன்னேன். அதைத் தான் சொன்னேன் ஐயா! :-))) //

    -))))))))))))))))))))

    இந்தியப் பயணம் மிக இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஒலிஎஃப் எம் ஞாயிறு மாலைகனடா நேரம் 6மணிக்கு கடைசியா...
    பிரபந்த வகுப்பு எடுக்கப்போவதாக சொன்னீங்களே ரவி, எப்போதிலிருந்து ?
    ஆல் தி பெஸ்ட்!
    ஷைலஜா

    ReplyDelete
  14. இன்றுதான் படிக்க முடிந்தது கே.ஆர்.எஸ்.....அறிந்த கதையானலும் தங்கள் எழுத்துக்களில் சப்தவிடங்கர்களை தரிசிக்க செய்யுங்கள் அது அருமையாக இருக்கும்.

    ஆமாம், சென்னை வந்தாயிற்றா?...தனிமடலில் போன் நம்பர் தாருங்கள்...

    ReplyDelete
  15. சப்த விடங்க ஸ்தலங்கள் பற்றியும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    அது சரி, எந்த விமானப் பணிப்பெண்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி மாதிரி இருக்காங்க? கொஞ்சம் பார்த்துட்டுச் சொல்லுங்க, ப்ளீஸ். :D

    ReplyDelete
  16. //Anonymous said...
    dear KRS.
    Welcome to India and T.N.
    Sivarathri padivu arumai,eppouthum polave.//

    நன்றி சுந்தரம் சார்.

    //Sivapiraan Parvathi-in Maduraimpathi -il nadantha thirumanathilum kalanthukondavar enpathu Puaranam.Mudinthal Karur il Eiisanudan Musukuntha chkravarthi-ium sevikkavum.//

    இது எனக்குப் புதிய தகவல் தான். முசுகுந்தச் சக்ரவர்த்தி கண்ணனுக்கும் உதவியவர் என்று எங்கோ படித்த நினைவு. தேடிப் பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி சுந்தரம் சார்.

    ReplyDelete
  17. //ஜெயஸ்ரீ said...
    இப்படிக் கதையை பாதியிலே நிறுத்திட்டீங்களே ? //

    வாங்க ஜெயஸ்ரீ
    அடுத்த பதிவு போட்டாச்சு.

    //ஆமாம் இதில் என்ன சந்தேகம்? அடியேனும் அதைத் தான் சொன்னேன். அதைத் தான் சொன்னேன். அதைத் தான் சொன்னேன் ஐயா! :-)))
    -))))))))))))))))))))//

    ஆகா ஏன் இந்த பெரும் சிரிப்பு?

    //இந்தியப் பயணம் மிக இனிமையாக அமைய வாழ்த்துக்கள்//

    நன்றி ஜெயஸ்ரீ.

    ReplyDelete
  18. //ஷைலஜா said...
    பிரபந்த வகுப்பு எடுக்கப்போவதாக சொன்னீங்களே ரவி, எப்போதிலிருந்து ?
    ஆல் தி பெஸ்ட்!//

    பிப் 24-இல் இருந்துங்க. Exam prep இப்போதே துவங்கி விட்டது. :-))
    அவனருளாலே அவன் புகழ் விளக்கம்!

    ReplyDelete
  19. //Mathuraiampathi said...
    இன்றுதான் படிக்க முடிந்தது கே.ஆர்.எஸ்.....அறிந்த கதையானலும் தங்கள் எழுத்துக்களில் சப்தவிடங்கர்களை தரிசிக்க செய்யுங்கள் அது அருமையாக இருக்கும்//

    நன்றி மெளலி சார்.

    //ஆமாம், சென்னை வந்தாயிற்றா?...தனிமடலில் போன் நம்பர் தாருங்கள்...//

    வந்து, சென்று, மீண்டும் 21st evening வருகிறேன்! நிச்சயம் தனிமடல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  20. //கீதா சாம்பசிவம் said...
    சப்த விடங்க ஸ்தலங்கள் பற்றியும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்//

    முயல்கிறேன் கீதாம்மா..

    /அது சரி, எந்த விமானப் பணிப்பெண்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி மாதிரி இருக்காங்க? கொஞ்சம் பார்த்துட்டுச் சொல்லுங்க//

    ஆகா...எனக்கும் அதே ஏக்கம் தான் :-))
    ஆனா நான் சொன்னேன் என்று வீட்டில் சொல்லிடாதீங்க :-))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP