Monday, January 21, 2008

ஆன்மீகப் பதிவுகள் மட்டும் தான் நீங்க எழுதிக் கிழிப்பீங்களா?

மக்கள்ஸ் எல்லாரும் ஆட்டம் ஆடி முடிச்சிட்டாங்க போல! மொக்கைச் சரம், புத்தாண்டு சபதம், எழுதியதில் பிடித்தது-ன்னு சனவரி மாசம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே பட்டாசு தான் போங்க! நான் தான் லேட்டஸ்டோ லேட்டு!

ஆபிசில் ஆணியும் மொக்கையுமாய் இப்பவே அரை மாசம் போயிடுச்சி! அன்னிக்கி அப்படித் தான், டென் பீன் சூப் குடிச்சிட்டு, மதியம் மீட்டீங்கில் லேசாக் கண் அசந்தேன்! இது எப்பவும் பண்றது தான்! ஆனா அன்னிக்கின்னு பார்த்தா பயங்கரமான கனவுகளா எனக்கு வரணும்? பகற் கனவு பலிக்காதுன்னு சொல்லுவாய்ங்க! ஆனா இது மாலைக் கனவாப் போச்சுதே!

பதிவர் ஷைலஜா கையில் மைசூர்பாக் கரண்டியோட என்னைப் பதிவு பதிவா வெரட்டுறாங்க!
எங்கே என் சபதம்? எங்கே என் சபதம்?-ன்னு.....சரஸ்வதி சபதம், மங்கம்மா சபதம், சிவகாமியின் சபதம், பாஞ்சாலி சபதம், ஒரு தாயின் சபதம்-னு எல்லாச் சபதங்களும் ஒன்னாச் சேர்ந்து வெரட்டினா நான் எங்கன ஓடுவேன்? சபதத்தைச் சபதத்தால தானே முறியடிக்கணும்! அதான், புத்தாண்டு சபதம் போட்டுறலாமா?

ஆன்மீகம்/இசை/தமிழ் இலக்கியம் தொடர்பான பதிவுகள் மட்டுமின்றி, இனி வகை வகையா கூறு கட்டலாம்-னு முடிவு பண்ணியாச்சு !
கொஞ்சூண்டு நகைச்சுவை, கொஞ்"சு"ம் கதை, கெஞ்சும் கவிதைன்னு எறங்கிடலாமா? என்னா சொல்றீங்க யக்கோவ்? :-)

அடப்பாவி! உன்னை எவன்டா இந்த மாதிரி டேஞ்சரான சபதம் எல்லாம் எடுக்கச் சொன்னது?

ஹிஹி! நமக்குக் கதை சொல்லுறதும் கேக்கறதும் ரொம்ப பிடிக்குமுங்கோ! அதுவும் பக்தி...ச்சே...காதல் ரசம் சொட்டும் கதைகள்-னா எனக்கு ரொம்பவே உசிரு! அதான் தனிப்பதிவா தொடங்கி, ஒரு காத்தாடி படமும் போட்டாச்சுது! வெகு விரைவில் எதிர்பாருங்கள் ஒரு முழு நீளத் தொடர்-கதை!

ஐயகோ! 2008-இல் வலைப்பதிவுலகத்துக்கு இப்படி ஒரு சோதனையான்னு கேக்குறீங்களா? அதுக்கு என்னக்கா பண்ணறது? வேணும்னா கோயிலுக்குப் போயி வேண்டிக்குங்க! ஆனா உண்டியில்ல காசு மட்டும் போட்டுறாதீங்க! :-))



அப்பாலிக்கா...ஷைலஜா கிட்ட இருந்து தப்பிச்சி, வாயில் மைசூர்பாக்கைத் தள்ளவும் முடியாம, மெள்ளவும் முடியாம ஓடினேன்! ஓடினேன்! அபிஅப்பா பதிவின் பின்னூட்ட எல்லைக்கே ஓடினேன்!
அங்கேயும் வந்து, கொத்தாக் காலரைப் புடிச்சித் தூக்கினாரு நம்ம சீனா சார்!

பதிவனும் நீயோ, பந்தலும் உன்னுதோ?

என்னுது தானுங்கோ! என்னுது தானுங்கோ!

அடி சக்கை! எங்கேயடா நான் கேட்ட மொக்கை? நீ இருப்பதோ மெல்லீசா தக்கை! மொக்கை போடாவிட்டால் அரைத்துக் கொடுப்பேன் சுக்கை!

ஐயோ! சபதம், மொக்கை-ன்னு எல்லாத்தையும் சேர்த்து...ஒரே பதிவாப் போட்டுடறேன் சார்! இப்போ கண்ட கனவு உட்பட எல்லாத்தையும் போட்டுடறேன் சார்! இப்போதைக்கு ஜூட் விட்டுடுங்க சார்!

கண்ட கனவைப் போடுறேன்னு, நீ ஆண்டாள் கண்ட கனவைப் போடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? வாரணமாயிரம்-னு பதிவு போட்டுட்டு, இதெயெல்லாம் மொக்கை லிஸ்ட்டுல எடுத்துக்க மாட்டீங்களா-ன்னு வேறு கேப்பீயில்ல?

ஐயோ! அப்படி எல்லாம் கேக்க மாட்டேன் சார்!
வேணும்னா வாரணாமாயிரம் படம் ரிலீஸ் ஆவுறத்துக்கு முன்னாடியே நம்ம சோதிகா அக்காவைக் கேட்டு ஒரு விமர்சனப் பதிவு போட்டுடறேன்!
2008-இல் இருந்து நான் திருந்தப் போறேன்னு இப்பத் தான் ஷைலஜா கிட்ட சொல்லிட்டு ஓடியாந்தேன்! வேணும்னா அதோ வராங்க! அவங்களையே கேட்டுக்கோங்க!
சீனா சார், ஷைலஜா துரத்தும் திசையைத் திரும்பிப் பார்க்க, கேயாரெஸ்ஸூ எஸ்ஸூ ஆனான்!


டேய்! நீ அவங்க கண்ணுல வேணும்னா மண்ணைத் தூவலாம்! என் கண்ணுல மொளகாப் பொடி கூடத் தூவ முடியாது! ஏன்னா அதை நேத்தே என் தங்கமணி தூவிட்டாங்க! எங்கேடா நான் கேட்ட "2007 - எழுதியதில் பிடித்தது" பதிவு?

அம்பியண்ணோவ்! வணக்கம்! யூ சீ, நமக்கு இந்த வெளம்பரமே புடிக்காதுங்க!

டேய், பள்ளி கொண்ட ஃபோட்டாவை போட்டு விதம்விதமா வெளம்பரம் பண்ணுவீங்களாம்! இவருக்கு வெளம்பரம் புடிக்காதாமா? இந்த வெளம்பரம் பம்பரம் கதையெல்லாம் என் கிட்ட வேணாம்! ஐ வான்ட் பதிவு!

அது இல்லீங்கண்ணா! நீங்க சொன்னீங்களேன்னு நானும் தேடித் தேடிப் பாத்தேனுங்குண்ணா! ஆனா ஒரு பதிவும் சொல்லிக்கிறா மாதிரி தேறல அண்ணாச்சி! 2007-இல் டோட்டலா என் பதிவுலகப் பயணத்தையே வேஸ்ட் பண்ணிட்டனோ-ன்னு ஒரே ஃபீலிங் ஆகிப் போச்சி அண்ணாச்சி!

டேய், வேணாம்! அடங்கு....அடங்கு!
நீ எழுதிக் கிழிச்ச பதிவு, அதுவும் ஆன்மீகப் பதிவுக்கெல்லாம் அவனவன் வந்து எக்கச்சக்கமா பின்னூட்டம் போட்டாங்களே! அப்ப மட்டும் அதை எல்லாம் வாங்கிக்கிட்டல்ல? இப்ப அதுல இருந்து ஒரு நல்ல பதிவை எடுத்துக் கொடுக்க உனக்கு நோகுதா?

மன்னிச்சிக்குங்க அண்ணாச்சி... எனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ! அடியார்களுக்கு...சாரி பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எந்தப் பதிவு புடிச்சிருக்கோ அதையே போட்டுடறேன் அண்ணாச்சி!

உம்...அது! அதுக்காக, "இனிமே கோவிலில் யாரும் புளியோதரை வாங்கித் தின்னாதீங்கோ" பதிவை எல்லாம் இந்த லிஸ்ட்டுல சேர்த்துடாத! இன்னா, புரியுதா? :-)


பெரும்பாலான ஆன்மீக வாசகர் வட்டத்தின் முன், அடியேனின் சில பதிவுகளை வைத்தேன்! (பதிவர் அல்லாதார்). அவர்கள் மின்னஞ்சலில் தொகுத்துத் தந்த பட்டியல் இதோ! அனைவரும் ஒருமனதாகச் சொல்லியதை "**" செய்துள்ளேன்!

இப்போது அடுத்த கட்டமாகப், பதிவர்கள் உங்கள் முன்னர் வைக்கின்றேன்! உங்கள் மனம் கவர்ந்ததை நீங்களே எடுத்துச் சொல்லுங்க!

மாதவிப் பந்தலில் பிடித்த பதிவுகள்:
** துலுக்கா நாச்சியார் கதை - சமய நல்லிணக்கத்தை எப்படி அன்புடன் வளர்த்தார்கள் என்பது பற்றிய கதை - (எனக்கு மிகுந்த நிறைவு தந்ததும் கூட!)

** அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம் - திருமலைக்கு அப்துல் கலாம் சென்ற போது நடந்தது! - (இது தான் எனக்கு மிகவும் பிடித்தது!)

தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை - ஆடிப் பூரத் தொடர்! இதைத் தனிமடலில் பாராட்டி, வில்லிபுத்தூர் ஆலயத்தில் இருந்து அழகான புகைப்படங்களும் அனுப்பி இருந்தார்கள்!

பொய் சொல்க - அரங்கன் அருள்வான்! - ஆலயங்களில் ஆரியமும், வடமொழியும் தான் மேலோங்கி நிக்குது என்று பேசப்பட்ட சூழலில் வந்த ஒரு தொடர்! திருவரங்கத்தில் அமிழ்தினும் இனிய தமிழுக்கென்றே ஒரு திருவிழா! அப்போது வடமொழிக்கு அரங்கனே தடை போடுகிறான்! அதைப் பற்றிய தொடர்!

Aug-15: தேசிய கீதமா? விதேசிய கீதமா? - நம் தேசிய கீதம் பற்றிய சர்ச்சையில், விடை தேடும் பார்வை!

** ராமர் பாலமும் ராமானுசரும் - ராமானுசர் பொது நலனுக்காக, சமய நலனை விட்டுக் கொடுத்த கதை! - இதை இட்டதற்காக என்னைப் பல பேர் திட்டிய பதிவும் கூட! :-)

டேய், நிப்பாட்டு நிப்பாட்டு! நீ பாட்டுக்கு அடுக்கிக்கிட்டே போற? ஏதாச்சும் ஒன்னு தான் சொல்லனும்! இப்படி எல்லாம் அழுகுணி ஆட்டம் ஆடின, சர்வேசன் நெத்திக் கண்ணைத் தொறந்திடுவாரு!

ஐயா சாமீ...பதிவர்களைக் கேக்கறேனுங்க! அவங்களுக்குப் புடிச்சதில் இருந்து ஒன்னே ஒன்னை மட்டும் ஃபைனலாச் சொல்லிடறேன்! போதுமா? ஆளைப் பேச விடுங்கப்பா!


வ.வா.சங்கத்தில்
** நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள் - சிரிப்புத் தொடர் - பலரும், அட நகைச்சுவை கூட எழுதுவீங்களான்னு திரும்பிப் பார்த்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த தொடரும் கூட!)

சுப்ரபாதப் பதிவுகளில் பலர் விரும்பி வாசித்தது
**
கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?

இசை இன்பத்தில் பிடித்தது
**
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை - தமிழில் தியாகராஜ கீர்த்தனைகளை அதே மெட்டில் கொண்டு வரும் சிறு முயற்சி - இதை அடியொற்றி பின்னால் நானும், நண்பர் சீவீஆரும் ஓரிரு கீர்த்தனைகளைத் தொகுத்தோம்! ஜிராவும் அந்த மொழியாக்கத்துக்கு மெருகேற்றினார்! இதை இன்னும் நிறைய செய்ய வேண்டும்! - (எனக்கு மிகவும் பிடித்த தொடரும் கூட!)

நறுமுகையே நறுமுகையே, நளினா நீ கொஞ்சம் நில்லாய்! - நறுமுகையே பாடல் விமர்சனம்!

புதிரா புனிதமா போட்டிகளும் பலருக்குப் பிடித்திருந்தன - ஆன்மிகம் மட்டும் இல்லாது, சிலப்பதிகாரம், பொன்னியின் செல்வன் என்று புதிர்கள் வைத்த போதும் பலர் விரும்பிக் கலந்து கொண்டனர்!
கண்ணன் பாட்டு, முருகனருள், அம்மன் பாட்டு - இவை குழு வலைப்பூக்கள் என்பதால் அதில் இடும் பதிவுகளைத் தனியாக முன் வைக்கவில்லை!
பிள்ளைத் தமிழ் வலைப்பூ - இந்த ஆண்டு வேறு பாணியில் எழுதத் துவங்க வேண்டும்!


பொதுவா ஆன்மீகப் பதிவுகள்-னா அவ்வளவா கூட்டம் சேராது! ஆனால் மிகவும் ரசனையுடன் அனுபவித்து, வாசித்து மகிழ்ந்த நண்பர்கள் இங்கு எத்தனை எத்தனை பேர்!
குறைகளை எடுத்துச் சொல்லி, தக்க விமர்சனங்கள் செய்து, நெடும் பின்னூட்டங்கள் இட்டு, மேலும் மேலும் மெருகேற்றிய ரசனையாளர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்! குழு வலைப்பூக்களில் இருக்கும் சக தோழர்கள் செய்த உதவிகளும் பெரிது!

அவர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்ல இந்தச் சுய விளம்பர விளையாட்டு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது!
எந்தரோ ரசிகானு பாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை ரசிகமணிகள்! அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!!

முக்கியமா இரண்டு கேள்விகள்!
1. நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகக் கலந்து எழுதுவதால், ஆன்மீகப் பதிவுகளை Dilute செய்கிறேனோ என்று சில நண்பர்கள் தனியாக என்னிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு! நீங்க என்ன நினைக்கிறீங்க? ஆன்மீகத்தைத் தேவையில்லாமல் dilute செய்கிறேனா?

2. அப்படியே மேற்சொன்ன பதிவுகளில் உங்களுக்குப் பிடிச்ச பதிவு என்னன்னும் சொல்லிடுங்க!

மொக்கைச்சரம்-புத்தாண்டு சபதம்-எழுதியதில் பிடிச்சது = ஒரே கல்லுல மூனு மாங்கா! ஆட்டம் க்ளோஸ்! :-)


(updated...)
பல வாசகர்கள் + பதிவர்கள் ஒருமுனைப்பாகச் சொன்னது; எனக்கும் மிகப் பிடித்தமான பதிவாக...இதோ சர்வேசனுக்கு சமர்ப்பணம்! :-)
அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்

69 comments:

  1. //இனிமே கோவிலில் யாரும் புளியோதரை வாங்கித் தின்னாதீங்கோ//

    நான் எந்த காலத்திலும் கோவில் உண்டியலில் காசு போட்டதில்லை. ஆனா எந்த கோவிலுக்கு போனாலும் புளியோதரை வாங்கி சாப்பிடுவேன். (சில சமயம் புளியோதரை சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு போவேன்.) அதுவும் கூடாதா :))

    ReplyDelete
  2. //மொக்கைச்சரம்-புத்தாண்டு சபதம்-எழுதியதில் பிடிச்சது = ஒரே கல்லுல மூனு மாங்கா! ஆட்டம் க்ளோஸ்! :-) //

    ஓஹோ.....உமக்கு(மட்டும்) மூணு மாங்கா.
    எங்களுடைய ஆட்டம் க்ளோஸ்.
    அப்படித்தானே? :-))))

    ReplyDelete
  3. //அரை பிளேடு said...
    நான் எந்த காலத்திலும் கோவில் உண்டியலில் காசு போட்டதில்லை. ஆனா எந்த கோவிலுக்கு போனாலும் புளியோதரை வாங்கி சாப்பிடுவேன்//

    தலைவா, வாங்க! நீங்க தான் இன்னிக்கி மொத போணியா?

    //(சில சமயம் புளியோதரை சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு போவேன்.) அதுவும் கூடாதா :))//

    ஆகா! நானும் உங்க கட்சி தான்!பயப்படாதீங்க! அப்படி எல்லாம் பதிவு போடவே மாட்டேன்!
    உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    புளியோதரை லட்டு இன்றிக் கோயில் என்பதில்லையே!
    :-))))

    ReplyDelete
  4. //துளசி கோபால் said...
    ஓஹோ.....உமக்கு(மட்டும்) மூணு மாங்கா.
    எங்களுடைய ஆட்டம் க்ளோஸ்.
    அப்படித்தானே? :-))))//

    ஆகா...வாங்க டீச்சர்!
    நான் ஆடின ஆட்டம் தான் க்ளோஸ்-னு சொன்னேன்! நீங்க தான் எப்பமே அடிச்சி ஆடுவீங்களே! :-)

    சரி...புடிச்ச பதிவைச் சொல்லவே இல்லியே! எல்லாமே மொக்கை! இதுக்கு ஒரு சர்வே வேறயா-ன்னு பேசாம விட்டுட்டீங்களா? :-)

    ReplyDelete
  5. //சொல்லத் தான் நினைக்கிறேன்! பின்னூட்டம் போடத் தான் துடிக்கிறேன்! வலைப்பூவிருந்தும் சொல்வதற்கு வார்த்தையுடன் தவிக்கிறேன் //

    அடடா நான் சொல்லவந்ததை நீங்களே எனக்காக எழுதி வைச்சு இருக்கீங்க ;)

    ////மொக்கைச்சரம்-புத்தாண்டு சபதம்-எழுதியதில் பிடிச்சது = ஒரே கல்லுல மூனு மாங்கா! ஆட்டம் க்ளோஸ்! :-) ////

    எங்க அண்ணா என்னை மாதிரியே இவ்வளவு பெரிய்ய்ய் அறிவாளியா?எங்கள் அண்ணன் krs வாழ்க ;)


    //2. அப்படியே மேற்சொன்ன பதிவுகளில் உங்களுக்குப் பிடிச்ச பதிவு என்னன்னும் சொல்லிடுங்க!//
    அண்ணா நீங்க எழுதியது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது.ரெண்டு கண்ணுல எந்த கண்ணு பிடிக்கும்ன்னு கேட்டகுற மாதிரி இருக்கு.ஹிஹி

    //முக்கியமா இரண்டு கேள்விகள்!
    1. நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகக் கலந்து எழுதுவதால், ஆன்மீகப் பதிவுகளை Dilute செய்கிறேனோ என்று சில நண்பர்கள் தனியாக என்னிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு! நீங்க என்ன நினைக்கிறீங்க? ஆன்மீகத்தைத் தேவையில்லாமல் dilute செய்கிறேனா//

    ஹிஹி.இதைப் பத்தி கருத்து சொல்ல எனக்கு வயசு பத்தாது.ஆனா நீங்க இப்படி எழுதுறதுனாலதான் நான் கொஞ்சம்வாது ஆன்மீக பதிவு எல்லாம் படிக்கின்றேன்.ரொம்ப concentrated ஆக இருந்தால் என் மண்டையில ஏறாது அண்ணா :))

    ReplyDelete
  6. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //(சில சமயம் புளியோதரை சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு போவேன்.) அதுவும் கூடாதா :))//

    ஆகா! நானும் உங்க கட்சி தான்!பயப்படாதீங்க! அப்படி எல்லாம் பதிவு போடவே மாட்டேன்!
    உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    புளியோதரை லட்டு இன்றிக் கோயில் என்பதில்லையே!
    :-)))) //

    புரியுது புரியுது நீங்க எந்தக் கோயில்களை முன் வைக்கிறீங்கன்னு. அப்ப பஞ்சாமிர்தம் இன்றிக் கோயில்கள் உண்டு. அதாவது பஞ்சாமிர்தம் தராத கோயில்களுக்குப் போகலாம்னு சொல்றீங்க. சரிங்க. நீங்க சொன்னாச் சரிதான் :)))))

    ReplyDelete
  7. பதிவர் ஷைலஜா கையில் மைசூர்பாக் கரண்டியோட என்னைப் பதிவு பதிவா வெரட்டுறாங்க//

    ஓவர் இது..உரக்கவே பேசதயங்குவேன் என்னைப்போயி விரட்டறேன்னு சொன்ன உங்கள இப்போ நெஜமா விரட்டணும்:):)

    மைசூர்பாக் படம் கண்ணுல் நிறைஞ்சி நாக்குல நீர் ஊற வைக்குதே எங்க நான் செஞ்சதையா எனக்குத் தெரியாம போட்டோ எடுத்துப்போட்டீங்க ரவி?:)(இருக்கு இதுக்கு எனக்குன்னு நினைக்றேன்:))

    ஒரேகல்லுல அடிச்சமூணு மாங்கால எனக்கு ரொம்ப பிடிச்சது ஆன்மீக மாங்காய்தான்...அதுல நவரசமும் இருப்பதால்...கலக்குங்க ரவி...உங்க பந்தல்...என்ன சாப்பாடு போட்டாலும் வந்துடமாட்டோமா என்ன?!

    ReplyDelete
  8. //1. நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகக் கலந்து எழுதுவதால், ஆன்மீகப் பதிவுகளை Dilute செய்கிறேனோ என்று சில நண்பர்கள் தனியாக என்னிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு! நீங்க என்ன நினைக்கிறீங்க? ஆன்மீகத்தைத் தேவையில்லாமல் dilute செய்கிறேனா//

    ஹிஹி.இதைப் பத்தி கருத்து சொல்ல எனக்கு வயசு பத்தாது.ஆனா நீங்க இப்படி எழுதுறதுனாலதான் நான் கொஞ்சம்வாது ஆன்மீக பதிவு எல்லாம் படிக்கின்றேன்.ரொம்ப concentrated ஆக இருந்தால் என் மண்டையில ஏறாது அண்ணா :))//

    துர்கா சொல்வதை நானும் வழிமொழிகிறேன், உங்கள் பதிவுகள் பத்திக் கருத்துச் சொல்ல எனக்கு அவ்வளவு தகுதி இல்லை! மொத்தத்தில் ஆன்மீகமா, நகைச்சுவையா, தேசீயமா, சமூக வளர்ச்சிப்பணியா எதுவாய் இருந்தாலும் உங்கள் பதிவுகளின் பாணி தனியாய் இருப்பதோடு அல்லாமல் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் அலசுவதோடு அல்லாமல் மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து ஒரு அழகிய விவாதமேடை சத்தமின்றி உருவாகிறது. இதன் மூலம் பலருக்குப் பல விஷயங்களில் தெளிவு பிறந்திருக்கும். இரு கண்களில் எது நல்லதுனு துர்கா கேட்டால், மொத்த உடம்பிலுமே எந்தப் பாகம் பிடிச்சது கேட்கிறப்பலே இருக்கிறதுனு எனக்குத் தோணுது! :))))

    அது சரி, ஷைலஜாவுக்கும், மை.பா.வுக்கும் உள்ள உறவை எப்படி தெரிஞ்சிக்கிட்டீங்க? :)))))))

    ReplyDelete
  9. // G.Ragavan said...
    // kannabiran, RAVI SHANKAR (KRS) உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    புளியோதரை லட்டு இன்றிக் கோயில் என்பதில்லையே!
    :-)))) //
    //
    புரியுது புரியுது நீங்க எந்தக் கோயில்களை முன் வைக்கிறீங்கன்னு. அப்ப பஞ்சாமிர்தம் இன்றிக் கோயில்கள் உண்டு//

    யப்பா, எதைச் சொன்னாலும் அடிக்கறதுக்குன்னே கெளம்பி வராங்களே! :-)
    வேணும்னா ஒரு முழுப் பாட்டும் பாடிடுறேன் ஜிரா!

    பஞ்சாமிர்தம், பாயசமின்றிக் கோயில் என்ப தில்லையே! போதுங்களா? :-)
    இன்னும் வேற என்ன என்னல்லாம் இருக்குப்பா?

    சக்கரைப் பொங்கல்
    அதிரசம்
    அழகர் கோயில் தோசை
    காஞ்சிபுரம் இட்லி
    பால் பாயசம்
    மிளகு வடை
    .....

    ReplyDelete
  10. //உங்கள் பதிவுகளின் பாணி தனியாய் இருப்பதோடு அல்லாமல் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் அலசுவதோடு அல்லாமல் மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து ஒரு அழகிய விவாதமேடை சத்தமின்றி உருவாகிறது.//

    ரீப்பீட்டே..

    //இதன் மூலம் பலருக்குப் பல விஷயங்களில் தெளிவு பிறந்திருக்கும்.//

    எனக்கு என்னமோ சந்தேகமாத்தான் இருக்கு. :-)

    உங்கள் பதிவுகளால் இனிய வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது ரவி. அதற்காக இங்கே என்னோட நன்றியச் சொல்லிக்கறேன்.

    என்னோட சாய்ஸ், சுப்ரபாதமும், வா.வா பதிவுகளும்தான். :)

    ReplyDelete
  11. //சக்கரைப் பொங்கல்
    அதிரசம்
    அழகர் கோயில் தோசை
    காஞ்சிபுரம் இட்லி
    பால் பாயசம்
    மிளகு வடை//

    என்னப்பா, இராத்திரி கனவுல இதெல்லாம் வந்துதா?....ஆனா அதுல கூட பாருங்க வெண் பொங்கல், சாம்பா சாதம், தயிர் சாதம்ன்னு சிவன் கோயில் பிரசாதங்கள் வரல்லையே?

    ReplyDelete
  12. //மொக்கைச் சரம், புத்தாண்டு சபதம், எழுதியதில் பிடித்தது-ன்னு சனவரி மாசம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே பட்டாசு தான் போங்க! நான் தான் லேட்டஸ்டோ லேட்டு!
    //

    நான் இந்தப் பட்டியல்ல இன்னும் எதையுமே போடலைங்கறதை மறந்துட்டீங்களே? நான் போற வேகத்தைப் பாத்தா 2009 ஜனவரியில தான் போடுவேன் போலிருக்கு. :-)

    என் கூட அதிகமா சேராதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா? பாருங்க பதிவு பதிவா தொடங்கித் தள்றீங்க. இராகவனோடயும் பேசிக்கிட்டுத் தானே இருக்கீங்க. உங்களுக்கு இன்னும் அவர் கட்டளை எதுவும் போடலியா? :-)

    சில நேரம் உங்கள் இடுகைகளைப் படிக்கும் போது எனக்கும் அப்படி தோன்றுவதுண்டு இரவிசங்கர். ஜனரஞ்சகமாக எழுதுவதாகச் சொல்லி மிகையாக நகைச்சுவையைப் போட்டு மையக் கருத்து மனத்தில் நிற்காமல் போய்விடுகிறதோ என்று. ஆனால் நகைச்சுவையாக இல்லாமல் எழுதினாலும் மையக்கருத்து மனத்தில் நிற்கும் என்பதில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. அதனால் நகைச்சுவையாக எழுதி அதனைப் பலரும் படிப்பதால் இது சரி தான் என்று எண்ணிக் கொள்வேன்.

    எனக்குப் பிடித்த இடுகைகள் பல உண்டு. நீங்கள் போட்ட பட்டியலில் இருந்து எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால் துலுக்க நாச்சியாரின் கதையைச் சொன்ன இடுகை ரொம்ப பிடித்தது.

    ReplyDelete
  13. இரவிசங்கர். உங்களை சைவ, கௌமார வெறுப்பாளர்ன்னு முத்திரை குத்தாம இந்த பெங்களூருவாசிங்க விடமாட்டாங்க போலிருக்கு. கொஞ்சம் விழிப்பா இருந்துக்கோங்க.

    ReplyDelete
  14. எதை எடுக்க, எதை விடுக்க, எல்லாமுமே தான் kRS.

    ReplyDelete
  15. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ!!!!!!!!!


    கவுஜ எழுதப் போறீங்களா? அந்த அதிர்ச்சிக்கு அப்புறமா மேல படிக்க முடியலை!! :(

    ReplyDelete
  16. உங்க முதல் கேள்விக்கான பதில்... அடுத்த்வங்க சொல்லறது விட்டுட்டு, உங்களுக்கு தோணுவதை எழுதுங்க... அது தான் நிஜம்:)

    ReplyDelete
  17. இரெண்டாவது கேள்விக்கு பதில்.. உங்க பதிவுகள்ல நிறைய பீடிக்கும் எனக்கு :) ஹிஹி

    ReplyDelete
  18. //இலவசக்கொத்தனார் said...
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ!!!!!!!!!//

    என்ன் கொத்ஸ்! இம்புட்டு பெரீய்ய்ய்ய்ய்ய் "ஆ" போடுறீங்க! நான் "ஓ" போடுவீங்க-ன்னுல்ல நெனச்சேன்! :-)

    //கவுஜ எழுதப் போறீங்களா? அந்த அதிர்ச்சிக்கு அப்புறமா மேல படிக்க முடியலை!! :( //

    சரி...ஒரு க்ளாஸ் தண்ணி குடிச்சிட்டு...மேலே படிச்சி சொல்லுங்க! எந்தப் பதிவு புடிச்சிச்சின்னு!

    ReplyDelete
  19. //துர்கா said...
    எங்க அண்ணா என்னை மாதிரியே இவ்வளவு பெரிய்ய்ய் அறிவாளியா?எங்கள் அண்ணன் krs வாழ்க ;)//

    தங்கச்சி...
    இன்னிக்கி உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :-)

    //அண்ணா நீங்க எழுதியது எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சது.ரெண்டு கண்ணுல எந்த கண்ணு பிடிக்கும்ன்னு கேட்டகுற மாதிரி இருக்கு.ஹிஹி//

    ஆகா...எனக்கு கண்ணே புடிக்காது. ஏன்னா அதுல தங்கம், பளாட்டினம்-னு ஒன்னுமே மாட்டிக்க முடியாதுன்னு சொல்லப் போறீயோன்னு நினைச்சேன்! :-)

    //ஹிஹி.இதைப் பத்தி கருத்து சொல்ல எனக்கு வயசு பத்தாது//

    அட, இதுக்கெல்லாம் வயசு பார்த்தா முடியுமா துர்கா! என்னையே எடுத்துக்குங்க! எவ்ளோ குட்டிப் பையன் நான்...ஆன்மீகத்தை எழுதலையா? அது மாதிரி தான்! :-)

    //ஆனா நீங்க இப்படி எழுதுறதுனாலதான் நான் கொஞ்சம்வாது ஆன்மீக பதிவு எல்லாம் படிக்கின்றேன்.ரொம்ப concentrated ஆக இருந்தால் என் மண்டையில ஏறாது அண்ணா :))//

    என் மண்டையிலும் தான்! நல்ல அண்ணன் நல்ல தங்கச்சி போ! :-)

    ReplyDelete
  20. //ஷைலஜா said...
    ஓவர் இது..உரக்கவே பேசதயங்குவேன் என்னைப்போயி விரட்டறேன்னு சொன்ன உங்கள இப்போ நெஜமா விரட்டணும்:):)//

    ஹிஹி!
    சரி வெரட்டுங்க! ஆனா மை.பா-வை ஒன்னாச்சும் கண்ணுல காட்டிட்டு அப்புறம் வெரட்டுங்க! :-)

    //நான் செஞ்சதையா எனக்குத் தெரியாம போட்டோ எடுத்துப்போட்டீங்க ரவி?//

    ஐயகோ! இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லியா? SK ஐயா, எங்கே போனீங்க? நியுஜெர்சி பதிவர் மாநாட்டு மை.பா.வே இன்னும் வந்து சேரலை!

    //ஒரேகல்லுல அடிச்சமூணு மாங்கால எனக்கு ரொம்ப பிடிச்சது ஆன்மீக மாங்காய்தான்...அதுல நவரசமும் இருப்பதால்...கலக்குங்க ரவி...உங்க பந்தல்...என்ன சாப்பாடு போட்டாலும் வந்துடமாட்டோமா என்ன?!//

    நல்ல காலம் ஆன்மீக மாம்பழம்-னு சொல்லாமப் போனீங்க! இல்லீன்னா பழத்தை வச்சி இன்னொரு பிரச்சனை வரும்! :-)

    பந்தல்-ல சாப்பாடு என்னிக்குமே உண்டு ஷைலஜா! எப்ப வேனும்னாலும் வாங்க!

    ReplyDelete
  21. //கீதா சாம்பசிவம் said...
    துர்கா சொல்வதை நானும் வழிமொழிகிறேன், உங்கள் பதிவுகள் பத்திக் கருத்துச் சொல்ல எனக்கு அவ்வளவு தகுதி இல்லை!//

    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
    கீதாம்மா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?
    என்ன வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலை தானே? :-)

    //ஒளிவு மறைவின்றி அனைத்தையும் அலசுவதோடு அல்லாமல் மாற்றுக்கருத்துக்களுக்கும் இடம் கொடுத்து ஒரு அழகிய விவாதமேடை சத்தமின்றி உருவாகிறது.//

    சத்தத்தை விட சத்து தான் முக்கியம் கீதாம்மா! அதான் நம்ம உயர்ந்த ஆன்மீகக் கருத்துக்களை நாம் எந்த அளவு கைக்கொள்கிறோம்ன்னு நாமே ஒரு சுய பரிசோதனை!

    //இரு கண்களில் எது நல்லதுனு துர்கா கேட்டால், மொத்த உடம்பிலுமே எந்தப் பாகம் பிடிச்சது கேட்கிறப்பலே இருக்கிறதுனு எனக்குத் தோணுது! :))))//

    ஒட்டு மொத்தமா எல்லா இடங்களிலும் போட்டு அடிக்கிறது-ன்னு முடிவு பண்ணீட்டீங்க போல! :-)

    //அது சரி, ஷைலஜாவுக்கும், மை.பா.வுக்கும் உள்ள உறவை எப்படி தெரிஞ்சிக்கிட்டீங்க? :)))))))//

    அது ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய்ய கதை!
    அந்த மை.பா வருது வருது...வந்துக்கிட்டே இருக்குது! :-)

    ReplyDelete
  22. ரவி,
    எதையும் தள்ள மனசில்லை.
    அதனால எல்லாப் பதிவும் பெஸ்ட்.

    சிலசமயம் சிலவே சில சமயம் கொஞ்சம் நகைச்சுவை குறையலாமோனு தோணும்.
    ஆனால் சுவை கூடுமாறு நீங்க எழுதுவதால் அதையும் சொல்லாமல் விடுகிறேன்:)

    ReplyDelete
  23. //மதுரையம்பதி said...
    ஆனா அதுல கூட பாருங்க வெண் பொங்கல், சாம்பா சாதம், தயிர் சாதம்ன்னு சிவன் கோயில் பிரசாதங்கள் வரல்லையே?//

    இன்னிக்கி என்னை பஞ்சாமிர்தம் ஊத்தி டின்னு கட்டறதுன்னு ஏதாச்சும் வேண்டுதலா மெளலி அண்ணா? :-)

    என்ன கொடுமை ராகவன்! புளியோதரை ன்னு அரைபிளேடு விரும்பிச் சொன்னாரே-ன்னு ஒரு பாட்ட எடுத்து வுட்டா..."பஞ்ச்"-ஆமிர்தமாப் போச்சுப்பா!

    இப்போ மெளலி சம்பா சாதம்-னு வம்பா பண்ணுறாரு! :-)
    ஒவ்வொரு பிரசாதத்துக்கும் பாட்டு எடுத்து வுட நான் எங்கிட்டு போவேன்? சிவ சிவ!

    உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
    பொங்கல் சம்பா சாதம் இன்றிக் கோயில் என்பதில்லையே!
    போதுமா மெளலி அண்ணா?

    சரி......
    புளியோதரை பெருமாக் கோயில் பிரசாதம்-னு யாரு சொன்னது?
    கபாலி கோயில் கூட புளியோதரை கொடுக்கறாங்களே! சிவன் கோயில்ல, பிள்ளையார்/முருகன் கோயில்ல, அம்பாள் சன்னிதியில் யாரு யாரெல்லாம் புளியோதரை சாப்பீட்டு இருக்கீங்க! கை தூக்குங்கப்பா! :-)

    ReplyDelete
  24. aakaa - மூன்று பதிவுகளையும் சேர்த்து ஒரே பதிவாக இட்டு விட்டீர்கள். நன்றாகத் தான் இருக்கிறது. முக்கனியின் சுவையும் ஒருங்கே அமைந்துள்ளது. நன்றி - அழைப்பினை ஏற்று எழுதியதற்கு நன்றி.

    ReplyDelete
  25. //மதுரையம்பதி said...
    //இதன் மூலம் பலருக்குப் பல விஷயங்களில் தெளிவு பிறந்திருக்கும்.//
    எனக்கு என்னமோ சந்தேகமாத்தான் இருக்கு. :-)//

    தெளிவாச் சொல்லிட்டாருப்பா! :-)

    //உங்கள் பதிவுகளால் இனிய வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது ரவி. அதற்காக இங்கே என்னோட நன்றியச் சொல்லிக்கறேன்.//

    நன்றியை நான் தான் சொல்லணுங்கண்ணா! ஒவ்வொரு பதிவிலும் சுவையான பின்னூட்டங்கள், கருத்தாழம் மிக்க கேள்விகளையும் கேட்கறீங்க! தேடலை நீங்க தான் ஆரம்பிச்சு வைக்கறீங்க!

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர். உங்களை சைவ, கௌமார வெறுப்பாளர்ன்னு முத்திரை குத்தாம இந்த பெங்களூருவாசிங்க விடமாட்டாங்க போலிருக்கு. கொஞ்சம் விழிப்பா இருந்துக்கோங்க//

    சைவக் குடும்பம், முருகன் தான் குல தெய்வம்-னு நீங்க அறியாததா குமரன்? பெங்களூர் வாசிங்க வாசி வாசின்னு வாசிச்சாலும் நான் சிவா சிவான்னே எடுத்துக்கறேன்! :-)

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் முருகனுக்கே!

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    நான் இந்தப் பட்டியல்ல இன்னும் எதையுமே போடலைங்கறதை மறந்துட்டீங்களே? நான் போற வேகத்தைப் பாத்தா 2009 ஜனவரியில தான் போடுவேன் போலிருக்கு. :-)//

    அச்சோ...பாத்துங்க குமரன்! பின்நவீனத்துவம் மாதிரி பின் ஆண்டுத்துவம்-ன்னு கொத்தனார் கொதிச்சறப் போறாரு! சீக்கிரம் இட்டுடுங்க!

    //என் கூட அதிகமா சேராதீங்கன்னு சொன்னா கேட்டீங்களா? பாருங்க பதிவு பதிவா தொடங்கித் தள்றீங்க//

    பூவோடு சேர்ந்து நாரும் மணக்கிறேன்! :-)

    //இராகவனோடயும் பேசிக்கிட்டுத் தானே இருக்கீங்க. உங்களுக்கு இன்னும் அவர் கட்டளை எதுவும் போடலியா? :-)//

    ஒன்னா ரெண்டா! இராகவன் கோதண்டத்தில் இருந்து சரமழை பொழியறாரு!

    //அதனால் நகைச்சுவையாக எழுதி அதனைப் பலரும் படிப்பதால் இது சரி தான் என்று எண்ணிக் கொள்வேன்//

    நானும் முதலில் சற்றுத் தயங்கினேன் குமரன்! ஆனா ஆற அமர யோசிச்சிப் பார்த்ததில், ஆன்மீக அறிஞர்களுக்கு நான் சொல்லித் தெரியப் போவது பெருசா ஒன்னுமில்லை! அவங்க எல்லாம் ஞானக் கடல்!

    நாம இராமானுசர் வழியிலேயே செல்வோம்! அறியாதார்க்கும் அறியத் துடிப்பவர்க்கும் நாம் அறிந்த கொஞ்சத்தையாவது அறியத் தருவோம்-னு தான் இப்படித் தொடங்கி விட்டேன்! வாரியார் சுவாமிகளைப் போல் ஒரு நகைச்சுவை ரசனையாளர் உண்டா? அவர் எளிமையே அடியேனுக்கு வழிகாட்டி!

    //நீங்கள் போட்ட பட்டியலில் இருந்து எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால் துலுக்க நாச்சியாரின் கதையைச் சொன்ன இடுகை ரொம்ப பிடித்தது//

    இது பதிவர் அல்லாத வாசகர் வட்டம் தொகுத்துக் கொடுத்தது குமரன்!

    //எனக்குப் பிடித்த இடுகைகள் பல உண்டு//

    ஆகா..என்னன்னு சொல்லுங்க! பட்டியலில் இருந்து தான் சொல்லணும்னு இல்லை!
    எது அ.உ.ஆ.சூ. குமரனை மிகவும் கவர்ந்த இடுகை?

    ReplyDelete
  28. //ஒவ்வொரு பதிவிலும் சுவையான பின்னூட்டங்கள், கருத்தாழம் மிக்க கேள்விகளையும் கேட்கறீங்க! தேடலை நீங்க தான் ஆரம்பிச்சு வைக்கறீங்க! //

    எதுங்க சம்பாசாதமா?, புளியோதரைன்னு பேசறத சொல்லுறீங்களா?... :)

    ReplyDelete
  29. //மதுரையம்பதி said...
    //ஒவ்வொரு பதிவிலும் சுவையான பின்னூட்டங்கள், கருத்தாழம் மிக்க கேள்விகளையும் கேட்கறீங்க! தேடலை நீங்க தான் ஆரம்பிச்சு வைக்கறீங்க! //

    எதுங்க சம்பாசாதமா?, புளியோதரைன்னு பேசறத சொல்லுறீங்களா?... :)//

    குறும்பு பண்றீங்களாண்ணா?
    சுப்ரபாதப் பதிவில் பஞ்சபாத்திரங்கள் பற்றியும், திருமலையில் கருடக் கொடி ஏற்றத்தைப் பற்றியு்ம், மாதவிப் பந்தலில் பரம் வியூகம்-னு ஐந்து நிலைகள் பற்றியும்...
    இன்னும் என்னன்னெமோ, எத்தனை ஆராய்ச்சிக் கேள்வி எல்லாம் கேட்டிருக்கீங்க!

    ஒரு கட்டத்தில், மெளலி அண்ணா பதிவை வாசிப்பாரே-ன்னு பயந்து பயந்து சுய திருத்தம் எல்லாம் பண்ணியிருக்கேன்! :-)

    ReplyDelete
  30. //சரி......
    புளியோதரை பெருமாக் கோயில் பிரசாதம்-னு யாரு சொன்னது?
    கபாலி கோயில் கூட புளியோதரை கொடுக்கறாங்களே! சிவன் கோயில்ல, பிள்ளையார்/முருகன் கோயில்ல, அம்பாள் சன்னிதியில் யாரு யாரெல்லாம் புளியோதரை சாப்பீட்டு இருக்கீங்க! கை தூக்குங்கப்பா! :-) //


    எனக்கு பிடித்த புளியோதரை கிடைக்குமிடங்கள்..

    1. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்.
    2. வடபழனி முருகன் கோவில்.

    கோவிலுக்கு போனோமா. ஒரு மூணு பார்சல் புளியோதரை வாங்கினமா. இரவு சாப்பாடே முடிஞ்சு போகும். அது ஒரு பேச்சிலர் லைஃப் காலம்.

    ஆமா. பெருமாள் கோவில்லயும் புளியோதரை கிடைக்குமா. தெரியாம போச்சே. :)

    ReplyDelete
  31. //குறும்பு பண்றீங்களாண்ணா?....ஒரு கட்டத்தில், மெளலி அண்ணா பதிவை வாசிப்பாரே-ன்னு பயந்து பயந்து சுய திருத்தம் எல்லாம் பண்ணியிருக்கேன்! :-) //

    யாரு?, யாரு குறும்பு பண்ணறதுங்கறேன்?.... நீங்க நான் கேட்கற கேள்விக்கு பயந்தீங்கன்னு சொல்லறதுதான் குறும்பு. :)

    ஆமாம், கடப்பாறையெல்லாம் முடிஞ்சுதா?....இப்படி ஒடனே, ஒடனே பப்ளிஷ் பண்ணி, பதிலும் தருகிறீர்?.

    இன்னும் ஒரு விஷயம், ஏன் இத்தனை அண்ணா?,
    மெளலின்னு சொல்லுங்க போதும்...இனிமேலும் அண்ணான்னா அப்பறம் நான், "தம்பி நீ- வாடா/போடான்னு சொல்லிடுவேன்" பாத்துக்கங்க...:)

    ReplyDelete
  32. வாரியாரின் நகைச்சுவையில் ஆன்மிகம் செழித்ததுபோல் உங்கள் பதிவுகளும் வெல்லுகின்றன மனங்களை என்று சொல்லுகிறேன். (வாழ்த்தினால் வயது பற்றி ஒரு தப்பெண்ணம் வைத்திருக்கிறார்களே!)

    ReplyDelete
  33. ரொம்ப போராடிக்குது. புதிர் போடுங்களேன் ...

    ReplyDelete
  34. // மதுரையம்பதி said...
    என்னப்பா, இராத்திரி கனவுல இதெல்லாம் வந்துதா?....ஆனா அதுல கூட பாருங்க வெண் பொங்கல், சாம்பா சாதம், தயிர் சாதம்ன்னு சிவன் கோயில் பிரசாதங்கள் வரல்லையே? //

    மதுரையம்பதின்னு பேரு வெச்சிக்கிட்டு.. பேருக்கேத்த கேள்விய நச்சுன்னு கேட்டீங்க :)

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    யப்பா, எதைச் சொன்னாலும் அடிக்கறதுக்குன்னே கெளம்பி வராங்களே! :-)
    வேணும்னா ஒரு முழுப் பாட்டும் பாடிடுறேன் ஜிரா!

    பஞ்சாமிர்தம், பாயசமின்றிக் கோயில் என்ப தில்லையே! போதுங்களா? :-)
    இன்னும் வேற என்ன என்னல்லாம் இருக்குப்பா?

    சக்கரைப் பொங்கல்
    அதிரசம்
    அழகர் கோயில் தோசை
    காஞ்சிபுரம் இட்லி
    பால் பாயசம்
    மிளகு வடை //

    இதை ஒத்துக்க முடியாதுங்க. நானும் மதுரையம்பதியும் கேட்டப்புறமா லிஸ்ட் விடுறீங்க. ஆகையால பிற்சேர்க்கைகளை விலக்கீருவோம்.

    முருகன் கோயில்ல புளியோதரை கெடைக்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. சரவணவ பவன், சங்கீதால கூடதான் கெடைக்குது.

    புளியோதரைன்னா திருவரங்கம்
    லட்டுன்னா திருப்பதி
    தோசைன்னா திருமாலிருஞ்சோலை
    உப்பில்லாதது ஒப்பிலியப்பர்

    இதெல்லாம் ஒங்க ஐட்டங்கள்.

    எங்கப்பன் முருகனுக்குப் பஞ்சாமிர்தம்தான் பிரதானம். எந்தப் பெருமாள் கோயில்ல பஞ்சாமிர்தம் குடுக்குறாங்க? பெருமாள் கோயில்ல பஞ்சாமிர்தம் வாங்கிச் சாப்பிட்டவங்கள்ளாம் கையத் தூக்குங்கப்பா. :)

    அப்புறம்...எங்க குலதெய்வக் கோயில்ல கெடா வெட்டுவாங்க. அந்தக் கறியைச் சமைச்சுத்தான் எங்களுக்குப் பிரசாதம். அதை நீங்க விட்டது நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கு எதிரான செய்கைதானே :))))))))

    (அப்பாடி கொளுத்திப் போட்டாச்சு. வரட்டுமா... முருகா முருகா)

    ReplyDelete
  35. ஆன்மீகம்னா...அரை கிலோ பார்சல்ன்னு சொல்ற நானே அப்பப்போ உங்க பந்தல் பக்கம் ஒதுங்குறேன். அதனாலே, ஓவரா அடர்த்தியக் கூட்டி பந்தலப் பிரிச்சுப் போட்றாதீங்க சாமி.. எந்தப் பதிவு சிறந்ததுன்னு சொல்ற அளவுக்கு நான் இன்னும் அத்தனை படிக்கலே...அதனாலே சீனியர்களுக்கு வழி விட்டுட்டு (சீனா, அடிக்க வறாதீங்க!! நான் உங்களச் சொல்லலே!!) நான் எஸ்ஸாயிக்கிறேன் ;)

    ReplyDelete
  36. //SK ஐயா, எங்கே போனீங்க? நியுஜெர்சி பதிவர் மாநாட்டு மை.பா.வே இன்னும் வந்து சேரலை!//

    இந்த அலறலுக்கு அப்புறமா வரலாம்னுதான் காத்திருந்தேன், ரவி! இந்த மை.பா.வை வைச்சுகிட்டு நம்ம ஷைலுக்கா பண்ற லூட்டி இருக்கே... சொல்லி மாளலடா சாமி!:))

    சரி, அத்த விடுங்க! ஒண்ணுக்கு மூணா ஒரே பதிவுல போட்டுத் தாக்கிட்டீங்க!

    எனக்கு இன்றும் அன்றும் என்றும் பிடிச்ச உங்க ஒருபதிவு அந்தக் குட்டிப்பையன் ஒருத்தன் மிருதங்கம் வாசிச்சானே அதான்! இன்னமும் கண்ணுல நிக்குது! எத்தனை பேருக்கு அதை அனுப்பி இருப்பேன்னு எனகிட்ட கணக்கே இல்லை! சூப்பர்!

    முதல்ல, ரொம்ப கோர்வையா ஆன்மீகப் பதிவுகளை எழுதிகிட்டு வந்த நீங்க நகைச்சுவையை லேசாத் தெளிக்க ஆரம்பிச்சு, இப்பல்லாம் கொஞ்சம் ஓவர்டோஸாவே வருதுன்றது என் கருத்து. இது என்சொந்தக் கருத்து மட்டுமே! மத்தவங்களுக்கு இதான் பிடிச்சிருக்குன்னா எனக்கு அதுல ஆட்சேபணையே இல்லை! அன்னப்பட்சி மாதிரி எது வேணுமோ அதை எடுத்துக்க நான் தயார்!

    தொடர்ந்து கலக்குங்க!

    ReplyDelete
  37. கண்ணபிரான்

    ரம்பா,மேனகா,திலோத்தமா,ஊர்வசி ஆகியோரிடையே யார் அழகி என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்?அந்த மாதிரி உங்கள் எல்லா பதிவும் சிறப்பானவையே.அதில் ஒன்றை தேர்ந்தெடு என்றால் எதை தேர்ந்தெடுப்பது?:)

    இருந்தாலும் அர்ச்சகரை திருத்திய அப்துல்கலாம் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

    ReplyDelete
  38. //தங்கச்சி...
    இன்னிக்கி உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :-)//

    எங்கே போனாலும் நம்ப மாதவி பந்தல் மாதிரி வருமா?ஹிஹி.



    //ஆகா...எனக்கு கண்ணே புடிக்காது. ஏன்னா அதுல தங்கம், பளாட்டினம்-னு ஒன்னுமே மாட்டிக்க முடியாதுன்னு சொல்லப் போறீயோன்னு நினைச்சேன்! :-)//

    ஹிஹி.அதுக்குதான் காது இருக்கு.



    //அட, இதுக்கெல்லாம் வயசு பார்த்தா முடியுமா துர்கா! என்னையே எடுத்துக்குங்க! எவ்ளோ குட்டிப் பையன் நான்...ஆன்மீகத்தை எழுதலையா? அது மாதிரி தான்! :-)//

    உங்கள் பெயரை புழுகு மூட்டை ரவி சங்கர் என்று மாற்றி கொள்ளவும்.அதுதான் பொருத்தமாக இருக்கும்



    //என் மண்டையிலும் தான்! நல்ல அண்ணன் நல்ல தங்கச்சி போ! :-)//

    என்ன ஒரு தன்னடக்கம்.தன்னடக்க புயல் ரவி சங்கர் வாழ்க :D

    ReplyDelete
  39. ரவா கேசரி, பைனாப்பிள் கேசரி, சேமியா கேசரி இதில் உனக்கு பிடிச்சது எதாவது ஒன்று மட்டும் ஜொள்ளு?னு சொன்னா எப்படியண்ணா? :)))

    கருடன் பத்திய பதிவும் எனக்கும் பிடிச்ச ஒன்னு! :)

    இந்த வருடம் பிளாக் உலக சேவைக்காக உங்களுக்கு கலைமாமணி பட்டம் குடுத்து அந்த பட்டத்தை சிறப்பிக்க வேணும்!னு நான் சொல்ரேன். நீங்க இதை பத்தி என்ன நினைக்கறீங்க..? :p

    சரி, சைடு கேப்புல என்னை நீங்க அண்ணா!னு கூப்பிட்டா உங்க வயசு கீதா பாட்டி வயசு மாதிரி குறைஞ்சுடுமா என்ன? :p

    ReplyDelete
  40. போட்டாச்சு.

    http://surveysan.blogspot.com/2008/01/2007.html

    ReplyDelete
  41. sorry konjam late agidichi..
    enkite edu pudikumnu ketengana ellame pudikum

    ReplyDelete
  42. aanmeega padivugalil en nagaichuvai vara koodathu??/
    munnadi ellarum vaazhai ilaila thaan sapiduvaanga.. ana ippa ellarum melamine/ceramic plate la thaan sapidaranga.. adu nala adu thappunu agiduma... antha mathiri thaanga aanmeengathula nagaichuvai kalakalam aanmeengathaiye nagaichuvai(naiyandi) seiya koodathu avalavu thanunga

    ReplyDelete
  43. இந்த வருடம் பிளாக் உலக சேவைக்காக உங்களுக்கு கலைமாமணி பட்டம் குடுத்து அந்த பட்டத்தை சிறப்பிக்க வேணும்!னு நான் சொல்ரேன். நீங்க இதை பத்தி என்ன நினைக்கறீங்க..? :p///
    enna innum ninaichite irukeenga..vaazhga kalaimamani kannabiran ravishankar.. valarga ungal pani :D

    ReplyDelete
  44. மன்னிக்கவும் - ஏதோ ஒறு காரணத்திறக்காக, ஹோட்டல்கள் 2 நாட்கள் மூடியபோது, எங்களுக்கு பசியை போக்கியது கோவில் புளியோதரையும், தயிர்சாதமும் தான்.

    பி.ரா

    ReplyDelete
  45. ஆன்மீகத்தில், விரசமில்லா நகச்சுவை,
    அந்த எழுத்தின் சுவையை கூட்டும்.

    பி.ரா

    ReplyDelete
  46. //"2007 - எழுதியதில் பிடித்தது" பதிவு?//

    எல்லாமே அருமையான பதிவுகள், இதில் குறிப்பிட்டு சொல்ல உங்களுக்கு இவ்வளவு இருக்கா ?

    எனக்கொன்றும் இல்லை. எல்லாமே அருமை தான்.

    ReplyDelete
  47. மாதவிப்பந்தலில் எல்லாப்பதிவுகளும் பிடிக்கும். உங்கள் லிஸ்ட்டில் இல்லாதது ஆனால் எனக்குப் பிடித்தது பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய பதிவே.
    ஷோபா

    ReplyDelete
  48. //Shobha said...
    மாதவிப்பந்தலில் எல்லாப்பதிவுகளும் பிடிக்கும். உங்கள் லிஸ்ட்டில் இல்லாதது ஆனால் எனக்குப் பிடித்தது பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய பதிவே. //

    நன்றி ஷோபா!
    நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா? - பதிவைத் தானே சொல்லுறீங்க! எனக்கும் பிடிக்கும்! வலைச்சரத்திலும், பூங்காவிலும் கூட அதை யாரோ சொல்லி இருந்தார்கள்-னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  49. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    எதை எடுக்க, எதை விடுக்க, எல்லாமுமே தான் kRS//

    நன்றி ஜீவா!
    சரி...உங்க ஆத்ம போதம் blogspot, wordpress ரெண்டிலும் வருகிறதா என்ன?

    ReplyDelete
  50. //வெட்டிப்பயல் said...
    My Choice - சுப்ரபாதம்//

    தெரியுமே! "பாலாஜிக்கு" சுப்ரபாதம் தான் புடிக்கும்! சுப்ரபாதம் பாடி சீக்கிரம் எழுந்திரிச்சா தானே உண்டியல் வசூல் ஆகும்! :-))

    உங்க உத்தரவை (சுப்ரபாதப் பதிவுகளை 2007க்குள் முடிக்கணும்) எப்படியோ நிறைவேத்தியாச்சு தல!

    ReplyDelete
  51. //Dreamzz said...
    உங்க முதல் கேள்விக்கான பதில்... அடுத்த்வங்க சொல்லறது விட்டுட்டு, உங்களுக்கு தோணுவதை எழுதுங்க... அது தான் நிஜம்:)//

    நச்-னு சொன்னீங்க ட்ரீம்ஸ் தல! மனத்தில் இயற்கையாத் தோன்றுவதைத் தடைபடுத்தினா செயறகையாத் தான் போய் முடியும்!

    ஆனா ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன்னா, சில பேரு ரொம்ப பண்ணாங்க! ஆன்மீகத் தரத்தைக் குறைக்கிறேன்-னு! அதுனால தான்! கண்டுக்காதீங்க! :-)

    //ரெண்டாவது கேள்விக்கு பதில்.. உங்க பதிவுகள்ல நிறைய பீடிக்கும் எனக்கு :) ஹிஹி//

    பிடிக்குமா? பீடிக்குமா??
    ரெண்டாவது addiction ஆச்சே! பாத்து பாத்து! :-))

    ReplyDelete
  52. //வல்லிசிம்ஹன் said...
    ரவி,
    எதையும் தள்ள மனசில்லை.
    அதனால எல்லாப் பதிவும் பெஸ்ட்//

    நன்றி வல்லியம்மா!

    //சிலசமயம் சிலவே சில சமயம் கொஞ்சம் நகைச்சுவை குறையலாமோனு தோணும்//

    ஆகா அப்படியா! சரி...இனிமேலும் பார்த்துச் சொல்லுங்க!

    //ஆனால் சுவை கூடுமாறு நீங்க எழுதுவதால் அதையும் சொல்லாமல் விடுகிறேன்:)//

    :-)))))

    ReplyDelete
  53. //cheena (சீனா) said...
    aakaa - மூன்று பதிவுகளையும் சேர்த்து ஒரே பதிவாக இட்டு விட்டீர்கள்.//

    நான் தான் சொன்னேனே சீனா சார்! உலகத்திலேயே நான் தான் முழுமுதல் சோம்பேறி! :-)
    அதான் 3-in-1 பதிவு!

    //அழைப்பினை ஏற்று எழுதியதற்கு நன்றி//

    என் மகிழ்ச்சியே! (Pleasure is mine :-)

    ReplyDelete
  54. //அரை பிளேடு said...
    எனக்கு பிடித்த புளியோதரை கிடைக்குமிடங்கள்..
    1. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்.
    2. வடபழனி முருகன் கோவில்.//

    தக்க சமயத்தில் வந்து நண்பனைக் காப்பாற்றிய நண்பா! நன்றி! இல்லீன்னா இந்த வீர சைவர்கள் கிட்டி மாட்டிக்கிட்டு எனக்குப் புளிக்-காய்ச்சல் வந்திருக்கும்! :-)

    //கோவிலுக்கு போனோமா. ஒரு மூணு பார்சல் புளியோதரை வாங்கினமா. இரவு சாப்பாடே முடிஞ்சு போகும். அது ஒரு பேச்சிலர் லைஃப் காலம்//

    ஆமாங்க தல! ஓட்டல் பார்சலை விட கோயில் பார்சல் கொஞ்சம் ஒடம்புக்கும் நல்லது! பேச்சிலர் வாழ்க்கையின் சுவையே சுவை! எப்ப நினைச்சாலும்! :-))

    //ஆமா. பெருமாள் கோவில்லயும் புளியோதரை கிடைக்குமா. தெரியாம போச்சே. :)//

    கேட்டீங்களே ஒரு கேள்வி!
    பெருமாக் கோயில்ல பஞ்சாமிர்தமே கிடைக்குங்க! :-)

    ReplyDelete
  55. //மதுரையம்பதி said...
    நீங்க நான் கேட்கற கேள்விக்கு பயந்தீங்கன்னு சொல்லறதுதான் குறும்பு. :)//

    உண்மையச் சொன்னாக்கா மருதக்காரரு நம்ப மாட்டாரே!:-)

    //ஆமாம், கடப்பாறையெல்லாம் முடிஞ்சுதா?....இப்படி ஒடனே, ஒடனே பப்ளிஷ் பண்ணி, பதிலும் தருகிறீர்?//

    இப்போதைக்கு போயே போச்சு! சோலேகாச்சு!

    //இனிமேலும் அண்ணான்னா அப்பறம் நான், "தம்பி நீ- வாடா/போடான்னு சொல்லிடுவேன்" பாத்துக்கங்க...:)//

    ஹை! இது நல்லா இருக்கே! பொதுவா என் தங்கச்சி தான் மரியாதையா வாடா/போடா-ன்னு சொல்லுவா! தங்கச்சியே சொல்லும் போது அண்ணன் கூப்பிடக் கூடாதா என்ன! மனம் போல் ஜமாய்! :-)

    ReplyDelete
  56. //ஓகை said...
    வாரியாரின் நகைச்சுவையில் ஆன்மிகம் செழித்ததுபோல் உங்கள் பதிவுகளும் வெல்லுகின்றன மனங்களை என்று சொல்லுகிறேன்//

    ஆகா! நன்றி ஓகை ஐயா!
    வாரியார் செஞ்சொற் கொண்டல்! நகை மட்டுமா அவர் சுவை! அறு சுவையும் அவர் சுவை!
    அதைச் சுவை, இதைச் சுவை என்னாது எதைச் சுவை, எதைச் சுவை என்று அறு சுவையும் போட்டிக்கு வரும் அருஞ்சுவை அவர் சுவை!

    //(வாழ்த்தினால் வயது பற்றி ஒரு தப்பெண்ணம் வைத்திருக்கிறார்களே!)//

    ஹிஹி! அதுக்கெல்லாம் பயந்தா முடியுங்களா! வாழ்த்த வயதில்லை! அதனால் வாயார வாழ்த்துகிறேன்னு சொல்லிட்டாப் போச்சு! :-)

    ReplyDelete
  57. //அகில் பூங்குன்றன் said...
    ரொம்ப போராடிக்குது. புதிர் போடுங்களேன் ...//

    ஹிஹி!
    மனதில் பட்டதைச் சொன்னீங்களே, நன்றி அகில்! புதிர் தானே! போட்டுடறேன்! ஆன்மீக ரீபஸ் விளையாட்டு விளையாடி இருக்கீங்களா? :-)

    ReplyDelete
  58. //G.Ragavan said...
    மதுரையம்பதின்னு பேரு வெச்சிக்கிட்டு.. பேருக்கேத்த கேள்விய நச்சுன்னு கேட்டீங்க :)//

    வாங்க தல!
    நல்லா ஏத்தி வுடறீங்களா? நீங்க முருக பக்தரா இல்லை நாரத பக்தரா? :-))

    //சரவணவ பவன், சங்கீதால கூடதான் கெடைக்குது//

    என்னாது சரவணபவன்-ல சங்கீதா-ல கெடைக்குதா? வுட்டா அதே மாதிரி கோயில்லயும் காபி கொடுக்கணும்-னு சொல்லுவீங்க போல இருக்கே! :-)

    //புளியோதரைன்னா திருவரங்கம்
    லட்டுன்னா திருப்பதி
    தோசைன்னா திருமாலிருஞ்சோலை
    உப்பில்லாதது ஒப்பிலியப்பர்
    இதெல்லாம் ஒங்க ஐட்டங்கள்//

    அது என்னா என் ஐட்டம்?
    உங்க முன்னாடி வச்சா, சாப்பிடவே மாட்டீங்களா? பாத்துக்கிட்ட இருப்பீங்களா? இல்லை உங்க பங்கையும் எனக்கே கொடுத்துருவீங்களா? :-)

    //பெருமாள் கோயில்ல பஞ்சாமிர்தம் வாங்கிச் சாப்பிட்டவங்கள்ளாம் கையத் தூக்குங்கப்பா. :)//

    தூக்கிட்டேன்!
    பழம்+பால்+நெய்+தேன்+சர்க்கரை தானே பஞ்சாமிர்தம். பெருமாக் கோயில்ல பஞ்சாமிர்த அபிசேகம் உண்டு! அப்ப கொடுப்பாங்களே! முருகா முருகா!!

    //அப்புறம்...எங்க குலதெய்வக் கோயில்ல கெடா வெட்டுவாங்க. அந்தக் கறியைச் சமைச்சுத்தான் எங்களுக்குப் பிரசாதம். அதை நீங்க விட்டது நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கு எதிரான செய்கைதானே :))))))))//

    என்னாடா. இன்னும் வரலையேன்னு பார்த்தேன்! வந்திடுச்சி! ஐ ஆம் தி எஸ்கேப்பு! :-)

    எங்கூரு வாழைப்பந்தல் வாமுனி செம்முனிக்கு கோழி அடிச்சி, சாராயம், சுருட்டு படைப்பாங்க!
    அது தான் பிரசாதம்! வேணுமா? சுருட்டைத் தருகிறேன்! பயபக்தியா ஊதணும்! ஓக்கேவா? :-))

    ReplyDelete
  59. //தஞ்சாவூரான் said...
    ஆன்மீகம்னா...அரை கிலோ பார்சல்ன்னு சொல்ற நானே அப்பப்போ உங்க பந்தல் பக்கம் ஒதுங்குறேன்.//

    வாங்க தஞ்சாவூரான்!
    நீங்கனாச்சும் அரை கிலோன்னு கிலோ கணக்குல பேசறீங்க!
    நான் வெறும் மில்லி கிராம் கணக்கு தான்! :-)
    கோயிலுக்குப் போயே ரொம்ப நாளாச்சு!

    //அதனாலே, ஓவரா அடர்த்தியக் கூட்டி பந்தலப் பிரிச்சுப் போட்றாதீங்க சாமி..//

    ஹிஹி! பயப்படாதீங்க! அப்படி எல்லாம் செஞ்சிற மாட்டேன்! :-)

    ReplyDelete
  60. //VSK said...
    நம்ம ஷைலுக்கா பண்ற லூட்டி இருக்கே... சொல்லி மாளலடா சாமி!:))//

    அதே! அதே! :-)

    //எனக்கு இன்றும் அன்றும் என்றும் பிடிச்ச உங்க ஒருபதிவு அந்தக் குட்டிப்பையன் ஒருத்தன் மிருதங்கம் வாசிச்சானே அதான்!//

    சூப்பர்! அது பிள்ளைத் தமிழ் வலைப்பூ! அதுல சென்ற ஆண்டு நிறைய பதிவு போடலை! இந்த ஆண்டு ஈடு கட்டிடறேன்!

    //முதல்ல, ரொம்ப கோர்வையா ஆன்மீகப் பதிவுகளை எழுதிகிட்டு வந்த நீங்க நகைச்சுவையை லேசாத் தெளிக்க ஆரம்பிச்சு, இப்பல்லாம் கொஞ்சம் ஓவர்டோஸாவே வருதுன்றது என் கருத்து.//

    நீங்க தனியாகவும் சொன்னீங்களே SK! மிகுதிக் கண் மேற் சென்று இடித்தற் பொருட்டு நீங்க சொன்னதையும் உள்வாங்கிக் கொண்டேன்!

    காலேஜ் பசங்க, வாலிபக் குருத்துக்கள் எல்லாம் கூட வந்து மாதவிப் பந்தலில் பல்கால் குயில் இனங்களா கூவுதுங்க! அவர்களுக்கும் ஆன்மீக முதுசொத்து போய்ச் சேரணுமே என்பதால் தான் இப்படி!

    இருப்பினும் உங்கள் அறிவுரையும் ஏற்றுக் கொண்டு, Balanced ஆகச் செய்கிறேன்!

    இங்கே community center-இல் அனுமன் கதையைக் குழந்தைகளுக்குச் சொல்லக் கூப்பிட்டாங்க! முதல் சந்திப்பில் அதுங்க ரொம்ப ஆர்வம் காட்டலை! அனுமன் கதையை ஸ்பைடர்மேன் கதை போல் எஃபெக்டோட வர்ட்டா ஸ்டைல்ல சொல்லத் துவங்கினேன்! இப்பல்லாம் ஒரு வாரம் போலைன்னாக் கூட ஒரே ஃபோன் கால் போட்டுத் தாக்குதுங்க! :-)

    //அன்னப்பட்சி மாதிரி எது வேணுமோ அதை எடுத்துக்க நான் தயார்!//

    இது தான் எங்க SK! மிகை நாடி மிக்க கொள்ளும் மன்னாரு நண்பராச்சே! :-)

    //தொடர்ந்து கலக்குங்க!//

    ஆசிக்கு நன்றி SK!

    ReplyDelete
  61. //செல்வன் said...
    கண்ணபிரான்
    ரம்பா,மேனகா,திலோத்தமா,ஊர்வசி ஆகியோரிடையே யார் அழகி என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்?//

    புதிய கடவுளே வாங்க!
    ஹிஹி!
    அவங்க ஒவ்வொருத்தர் கிட்டயும், நாலு பேர்ல நீ தான் அழகு-ன்னு சொன்னீங்களாமே! சேதி வந்துச்சு! :-)

    //இருந்தாலும் அர்ச்சகரை திருத்திய அப்துல்கலாம் பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று//

    சூப்பர்! அது தாங்க எனக்கும்! அதைத் தான் சர்வேசன் tag பண்ணியிருக்காரு!

    அது எப்படி நீங்க மட்டும் ஜெயிக்கிற கட்சியாப் பார்த்து கரீட்டாச் சேரறீங்க? :-)

    ReplyDelete
  62. //துர்கா said...
    //எவ்ளோ குட்டிப் பையன் நான்...ஆன்மீகத்தை எழுதலையா? அது மாதிரி தான்! :-)//

    உங்கள் பெயரை புழுகு மூட்டை ரவி சங்கர் என்று மாற்றி கொள்ளவும். அதுதான் பொருத்தமாக இருக்கும்//

    யப்பா...இது ஒரு புளுகா? இப்ப கூட நான் காலேஜ் பக்கம் போனா, என்னை first yearன்னு தான் நினைச்சிப்பாங்க! அப்படி ஒரு ராசி! சினிமாவில் முரளின்னு ஒரு ஹீரோ இருந்தாரே! தெரியாதா? :-)

    //என்ன ஒரு தன்னடக்கம்.தன்னடக்க புயல் ரவி சங்கர் வாழ்க :D//

    பாசச் சுறா சாரி...பாசச் சூறாவளி துர்கா வாள்க! வாள்க!

    ReplyDelete
  63. //ambi said...
    ரவா கேசரி, பைனாப்பிள் கேசரி, சேமியா கேசரி இதில் உனக்கு பிடிச்சது எதாவது ஒன்று மட்டும் ஜொள்ளு?னு சொன்னா எப்படியண்ணா? :)))//

    சரியான தின்னிப்.....ப்பா இந்தத் தம்பி! :-)
    சரி வூட்டுல இன்னிக்கி பைனாப்பிள் கேசரி போலக் கீதே! மார்க்கெட்-ல நீ அரை டஜன் பைனாப்பிள் வாங்குன போதே நெனைச்சேன்! :-)

    //கருடன் பத்திய பதிவும் எனக்கும் பிடிச்ச ஒன்னு! :)//

    நன்றிங்கண்ணா! அது திருவில்லிபுத்தூர் தொடர்-லயே சேர்ந்துடும்! கோயில்ல இருந்து கருடன் க்ளோசப் படமெல்லாம் அனுப்பிச்சி இருந்தாங்க!

    //இந்த வருடம் பிளாக் உலக சேவைக்காக உங்களுக்கு கலைமாமணி பட்டம் குடுத்து//

    ஏன்யா, நான் பந்தல் போடுறது உனக்குப் புடிக்கலையா? உனக்குப் போட்டியாக் கூடப் போடறது இல்லியேப்பா! பின்ன ஏனிந்தக் கொலை வெறி! கொலைமாமணி!

    இப்படிப் பட்டம் கொடுத்தாக்கா, அப்பறம் அந்தக் கலைஞர்கள் எல்லாம் அவ்வளவா மேடை ஏறுவது இல்லியாமே! அதுனாலத் தான் இப்படி உள்நாட்டுச் சதி பண்றீரா? :-)

    //சரி, சைடு கேப்புல என்னை நீங்க அண்ணா!னு கூப்பிட்டா உங்க வயசு கீதா பாட்டி வயசு மாதிரி குறைஞ்சுடுமா என்ன? :p//

    சரி...இனி சைடு கேப்புல கூப்பிடலை! ஸ்ட்ரெயிட்டு கேப்புலயே கூப்புடறேங்கண்ணோவ்!:-)

    சரி...கீதாப் பாட்டி வயசு மாதிரி குறைஞ்சுடுமான்னு சொல்றியே...
    அப்படீன்னா அவங்க வயசு குறைஞ்சு போச்சுதா? மெய்யாலுமா? ;-))

    ReplyDelete
  64. // SurveySan said...
    போட்டாச்சு.
    http://surveysan.blogspot.com/2008/01/2007.html//

    நன்றி அண்ணாச்சி!

    ReplyDelete
  65. //dubukudisciple said...
    aanmeega padivugalil en nagaichuvai vara koodathu??//

    அதானே! டிடி அக்கா சொல்வதே சரி! :-)

    //aanmeengathula nagaichuvai kalakalam aanmeengathaiye nagaichuvai(naiyandi) seiya koodathu avalavu thanunga//

    சூப்பர்! பஞ்ச் டயலாக் எல்லாம் பின்னிப் பெடல் எடுக்கறீங்க யக்கோவ்! கலக்குங்க!

    //enna innum ninaichite irukeenga..vaazhga kalaimamani kannabiran ravishankar.. valarga ungal pani :D//

    அம்பி உடையான் படைக்கு அஞ்சுவான்!
    அக்கா உடையான் தான் படைக்கு அஞ்ச மாட்டான்!
    பாருங்க அம்பி தரட்டுமா தரட்டுமா-ன்னு டபாய்ச்சிக்கிட்டே இருந்தாரு! அக்கா வந்தாங்க! அள்ளிக் கொடுத்துட்டாங்க!

    நன்றி டிடி! நன்றி!!

    ReplyDelete
  66. //Anonymous said...
    மன்னிக்கவும் - ஏதோ ஒறு காரணத்திறக்காக, ஹோட்டல்கள் 2 நாட்கள் மூடிய போது, எங்களுக்கு பசியை போக்கியது கோவில் புளியோதரையும், தயிர்சாதமும் தான்//

    ஓகோ! இதுல இவ்ளோ advantage இருக்குதுங்களா! சூப்பர்!

    //ஆன்மீகத்தில், விரசமில்லா நகச்சுவை,
    அந்த எழுத்தின் சுவையை கூட்டும்//

    கரெக்டாச் சொன்னீங்க பி.ரா! நன்றி!

    சரி...நீங்க பி.ராமச்சந்தர் சார் தானே?

    ReplyDelete
  67. //கோவி.கண்ணன் said...
    எல்லாமே அருமையான பதிவுகள், இதில் குறிப்பிட்டு சொல்ல உங்களுக்கு இவ்வளவு இருக்கா ?//

    நன்றி கோவி அண்ணா!
    என் கிட்ட ஒன்னுமே இல்லை! பதிவைப் போட்டதுக்கு அப்புறம் என் பதிவுகள் வாசகர்களுக்குச் சொந்தமாகி விடுகின்றன! :-)

    எதைப் பதிவு போட்டாய், நீ உரிமை கொண்டாட?
    எதைப் பதிவிட்டாயோ, அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!
    .....

    பாருங்க...(கோவி)கண்ணன் கிட்ட பேசினாலே, கீதாசாரமாக் கொட்டுது! :-))

    //எனக்கொன்றும் இல்லை//

    என்னங்கண்ணா இப்பிடிச் சொல்லிப்புட்டீங்க! நான் வந்து ஒவ்வொன்னா எடுத்தேன்னு வைங்க, உங்க பதிவை எல்லாம் புக்கு போட்டு வித்துருவேன்! பின்னூட்டமும் சேர்த்தே புக்கில் போடுவேன்! உடனே மொத்தமும் வித்துடும்! ;-)

    ReplyDelete
  68. //சரி, சைடு கேப்புல என்னை நீங்க அண்ணா!னு கூப்பிட்டா உங்க வயசு கீதா பாட்டி வயசு மாதிரி குறைஞ்சுடுமா என்ன? :p//

    அம்பித் தாத்தா, கண்ணபிரான் சரியான பதில் கொடுத்திருக்கார் உங்களுக்கு! :P

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP