Saturday, January 26, 2008

தியாகராஜ ஆராதனை: குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா! - 1

நீங்க ரொம்பத் தொலைவில் இருந்து ஒரு பெரிய ஊருக்கு வந்திருக்கீ்ங்க. மிகவும் களைப்பான பயணம். திரும்பிச் சென்று பயணக் கட்டுரை எல்லாம் வேற போடணும்! அந்த ஊரில் இருப்பதோ மிகவும் பிரபலமான கோயில். உங்களுக்கு மிகவும் புடிச்ச சாமி வேற! மதியம் கோயிலை மூடி நடை சாத்தப் போறாங்க. இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு! சரின்னு, ஓய்வு கூட எடுத்துக்காம நேராக் கோயிலுக்கு ஓடறீங்க!

அங்க போயி அப்படி சன்னிதானத்துக்குள் நுழைஞ்சீங்களோ.....இல்லையோ, அர்ச்சகர் கதவைப் படார்னு சாத்திடறாரு! - எப்படி இருக்கும் உங்களுக்கு?

கைக்கடிகாரத்தைப் பார்க்கறீங்க...மணி 11:10 தான் ஆவுது! பொதுவா 11:30 மணிக்குத் சாத்தறது தான் அங்கிட்டு வழக்கம்! அன்னிக்கி மட்டும் என்ன பிரச்சனையோ! ஐயா சாத்திப்புட்டாரு! உடனே நீங்க என்னவெல்லாம் பேச ஆரம்பிப்பீங்க? அதுவும் நீங்க ஒரு பெரும்புள்ளியாகவோ இல்லை பெரிய பெரிய ஆளுங்களைத் தெரிஞ்சவராகவோ இருந்தீங்கன்னா? அப்படியே கற்பனையில் ஓட்டிக் கொள்ளுங்கள்! :-)

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி நாள் இன்று! அவர் பாட்டுடன் ராகம் போல், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.
இன்னிக்கி தியாகராஜ ஆராதனை! (Jan 27, 2008). மேலே சொன்னது போல் அவர் வாழ்விலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடந்திருக்கு! பார்ப்போம், வாங்க!


சங்கீத மும்மூர்த்திகளில் இன்று முதலாவதாக வைத்துப் போற்றப்படும் தியாகராஜர், அன்றோ பரம ஏழை! அவருக்கோ "நிதியை" விட "சந்-நிதியே" சுகமாய் இருந்தது!

அவருடைய பாடல்கள் கொஞ்ச கொஞ்சமாய் வெளியில் பரவ ஆரம்பித்த போது தான், அவருக்கென்று சில சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனா குருதட்சிணை வாங்கிச் சம்பாதிக்கத் தெரிய மாட்டாமல், நாளொரு இராமன் பொழுதொரு இராமனாகவே இருந்தாரு தியாகராஜர்.

அன்னிக்கு என்னமோ திடீரென்று அவருக்குத் திருப்பதி யாத்திரைக்குப் போகணும் போல ஒரு உணர்வு! இதுவரை போனதே இல்லை!

அவர் இருப்பதோ தென் தமிழ்நாட்டில்! அதுவோ வட வேங்கடம்! தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் திருவையாறு கிராமத்தில் இருந்து, வண்டி கட்டிக்கிட்டுப் போகணும்னாக் கூட குறைஞ்சது ஏழு நாளாச்சும் ஆகும்! கைச்செலவுக்கு காசு வேறு வேணும்! என்ன செய்யலாம்?...தள்ளிப் போடலாம்!
அன்றிரவு புரண்டு புரண்டு படுக்கிறார்! தூக்கமே வரலை! ஏன் திடீர்னு இப்படி ஒரு உந்துதல்? இராமனிடம் மட்டுமே லயித்த தன் மனம், இன்று வேங்கடவனைக் காணத் துடிப்பது ஏனோ? ச்சே...எல்லாம் அந்தச் சிறுவனால் வந்தது!


போன வாரம் திருவையாற்றுக்கு வந்திருந்த அந்தப் பொடிப் பையன் என்னமாப் பேசி விட்டான்! திருவரங்கம் இராமானுச மடத்தில் இருந்து ஊர் ஊராய் போய்த் தொண்டு செய்யறவன் போல! பேச்சு வாக்கில் வேங்கடவன் கோலமும் இராமனின் கோலமும் எப்படி எல்லாம் ஒத்துப் போகுது என்று அவன் சொல்லச் சொல்ல...இப்படி ஒரு ஆவல் தம்மைப் பற்றிக் கொண்டு விட்டதே!



வேங்கடவனுக்கும் இராமனைப் போல் அதே சடைமுடி! இன்றும் சடைமுடியைச் சற்றே தூக்கி விட்டுத் தானே நீராட்டுகிறார்கள்! மூர்த்தியின் தோளிலே காணப்படும் வில் ஏந்திய தழும்பு!

அதே கஸ்தூரி திலகம்! மார்பில் அதே திருமறு மச்சம்!
முழங்கால் வரை அதே போல் நீண்டு தொங்கும் கைகள்! அதே போல் மெல்லிய புன்சிரிப்பு!
இராமனுக்கு ஒரு சபரித் தாய் என்றால் இவனுக்கோ ஒரு வகுளைத் தாய்!
சபரி எச்சில் பழத்தை இராமனுக்குக் கொடுத்தாள்; அவனும் உண்டான்!
இந்த வகுள மாலிகையும் ருசியைச் சோதிக்க பழத்தைக் கடித்துப் பார்த்துக் கொடுக்கிறாள்! அதை இவனும் உண்கிறானே!

அனுமன் அவதரித்த மலை தானே திருமலை! இராமன் இல்லாமல் அங்கு அனுமன் தோன்றுவானா என்ன?
மேலும், மதுரையில் இருந்து வந்த ஒரு இராமனின் உற்சவ மூர்த்தியைத் திருமலைக் கருவறையில் இராமானுசர் நிறுவி இருக்காராமே!....


இப்படி எல்லாம் யோசித்து யோசித்து, உறங்காமலே உறங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜருக்கு, சிற்றஞ்சிறு காலை ஒரு வழியாய்ப் புலர்ந்தது!
சிற்றஞ்சிறு காலை, "வந்துன்னைச் சேவிக்க ஒரு வழியும்" சேர்த்தே புலர்ந்தது!...

சென்னையில் இருந்து தன் பரம ரசிகர், கோவூர் சுந்தரம் முதலியார், கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு ஓலையும் உடன் அனுப்பி இருக்கிறார்!

திருமலை யாத்திரைக்குத் தியாகராஜர் சென்று வரவேண்டும்; அப்படியே வரும் வழியில் சென்னைக் கோவூரில் உள்ள தன் இல்லத்துக்கு வந்து அளவளாவ வேண்டும் என்றும் எழுதியுள்ளார். அந்தக் கோவூரில் உள்ள சிவபெருமான் மேல் தியாகராஜர் வாயால் சில பாடல்கள் பாட வேண்டும் என்று ஓலையில் தனியாக விண்ணப்பம் வேறு வைத்துள்ளார்.

அட, ரெண்டு நாளுக்கு முன்னால் தானே நமக்கே திருப்பதி போகணும்-னு தோனிச்சி? அதுக்குள்ள முதலியாருக்கு யாரு சொல்லி இருப்பா?
சரி, அப்படியே யாராச்சும் சொல்லி இருந்தால் கூட, சென்னையில் இருந்து திருவையாறு வருவதற்கே அஞ்சு நாள் ஆயிடுமே! - ஒன்றுமே புரியவில்லை தியாகராஜருக்கு! சரி.....இறைவன் திருவுள்ளம் வைத்ததால் தான், தரிசன பாக்கியம் அமைகிறது போலும் என்று நினைத்துக் கொண்டார்.

தம் சீடர்கள் சிலருடன் உடனே கிளம்பி விட்டார். திருமலை யாத்திரை கிளம்பும் முன் மறக்காமல் தன் குலதெய்வத்தையும் வழிபட்டுவிட்டு, பின்னரே கிளம்பினார்.
திருவையாறு, கும்பகோணம், கடலூர்,
விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி,
காஞ்சிபுரம், திருத்தணிகை, புத்தூர்,
ரேனிகுண்டா, சந்திரகிரி, நாகலாபுரம் என்று எல்லா ஊர்களையும் தாண்டி இதோ வந்து விட்டார்கள் திருமலையின் அடிவாரம்!



திருச்சுகனூர் குளக்கரையில் அன்னையை - அலர்மேல் மங்கையைக் கண்ணாரக் கண்டாகி விட்டது! இனி அப்பனைக் காண்பதொன்றே கருத்து! அடிவாரத்தில் ஆழ்வார்களை வணங்கி விட்டு, கிடுகிடுவென்று மலை ஏறுகின்றார்கள் குருவும் சீடர்களும்! அச்சோ, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதே!

தியாகராஜருக்கும் சற்றே வயதாகி விட்டதல்லவா? முன்போல் அவ்வளவாக நடக்க முடியவில்லை! ஆனாலும் ஆசை விடவில்லை! ஆசை உந்த உந்த, உலகத்தில் "முடவனுக்கும்" வாழ்க்கை "நடக்கிறது" தானே?
தியாகராஜரையும் ஆசை தான் உந்தி உந்தித் தள்ளியது! எந்த ஆசை? பொன்னாசையா? பணத்தாசையா? புகழாசையா? சரி....இசை ஆசையா? - உம் அது கூட இல்லை! பின் எது?
நோயே பட்டு ஒழிந்தேன், "உன்னைக் காண்பதோர் ஆசையினால்"!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!!
- மெல்லப் பாசுரம் முணுமுணுக்கப்படுகிறது!

இதோ ஏழு மலையும் ஒருவழியாக ஏறி விட்டனர்! இரவும் நன்கு கவிந்து விட்டது! ராத்திரி ஆகி விட்ட படியால், சுவாமி புஷ்கரிணி எனப்படும் கோனேரியில் யாரும் நீராடவில்லை! கை கால்களை மட்டும் சுத்தம் செய்து கொள்கின்றனர்! அது மட்டும் தானா? யாருமே மனதைச் சுத்தம் செய்து கொள்ளவில்லையா என்ன?....அன்று தியாகராஜருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை! அவர் மனத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருக்கு!

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்து மிட்டேன்!
பெரியேன் ஆயின பின் பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!!

கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!
அரியே வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருளே!!


குளத்தின் நன்னீரால் சுத்தமாவதற்கு முன்பே, அந்தப் பாசுரத்தைக் கேட்டு வந்த கண்ணீரால், மனது எப்போதோ சுத்தமாகி விட்டது!
குளத்தின் கரையில் உள்ள வராகப் பெருமாளை முதலில் தரிசனம் செய்து விட்டு, அனைவரும் ஓடோடிச் செல்கின்றனர் கோபுர வாசலுக்கு!

தங்க வாசல் தாண்டி இதோ ஆனந்த நிலையத்துக்குள் வந்தாகி விட்டது! சற்றுக் கண் திரும்பினால் போதும், வைத்த மா நிதி கிடைத்து விடும்! எம்பெருமான் அகப்பட்டு விடுவான்! அதோ தீப ஒளி தெரியுது! பச்சைக் கர்ப்பூர வாசனை துளைக்குது!
இதோ கரியவன், நெடியவன் தெரிகி..... ஐயகோ! இது என்ன கொடுமை?
அர்ச்சகர்கள் வேகம் வேகமாகத் திரையை இழுத்துச் சரேல் சரேல்-ன்னு மூடுறாங்களே?.....முழுக்க மூடியாகி விட்டது! ஒன்னுமே தெரியலை!

அன்று ஏனோ, அர்ச்சகர்கள் கடுகடு என்று உள்ளனர்! கொஞ்சம் கூடச் சிரிப்பு இல்லை!! - உம்...எல்லாரும் வெளியே போங்க! போங்க!! இத்தோட நாளைக்குக் காலையில் தான்!
அடப் போங்கைய்யா! எத்தன வாட்டிய்யாச் உங்களுக்கெல்லாம் சொல்லுறது? கேக்கவே மாட்டீங்களா? ஜருகும்மா ஜருகு! பதண்டி பதண்டி!! எவரய்யா அக்கட? வெள்ளு, வெள்ளு!
ஏம்பா...பெரியவரே...காது என்ன செவிடா? உனக்கு மட்டும் தனியாச் சொல்லனுமா? போ...போ!!

தியாகராஜர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகுது! யாராவது திட்டினால் இந்த மனுசன் திருப்பித் திட்ட வேண்டியது தானே? அதை விட்டுட்டு, ஏன் இப்படிக் கண் கலங்குறார்?

ஆசையாய்ச் சாப்பிட உட்கார்ந்த குழந்தையின் தட்டைத் தட்டி விட்டால் எப்படி இருக்கும்?
காதலனைக் அன்புடன் காண வந்த காதலியை, இழித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
ஆருயிர் நண்பனைக் காணச் சென்ற நண்பனை, முகத்தில் கதவடைத்தால் எப்படி இருக்கும்?
அப்பாவின் மடியில் ஓடோடி உட்காரப் போன பிள்ளையைக் கால் இடறி விட்டால் எப்படி இருக்கும்??

எம்பெருமானுக்கும் தியாகராஜருக்கும்.....இடையே.....அந்தக் கரிய பெரிய திரை!!!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...
குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா!

(திரை விலகுமா?...அடுத்த பாகத்தில்!)



57 comments:

  1. இதுவரை அறியாத நிகழ்ச்சி இது இரவிசங்கர். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பாசுரங்கள் எல்லாம் யார் பாடியவைன்னும் சொல்லுங்க. இன்னும் படித்து அனுபவிக்க வேண்டியவை எத்தனை இருக்கின்றன?! ஹும் எத்தனை பிறவி வந்தாலும் எம்பெருமானே உன் திருவருளைப் போற்றும் பனுவல்களைப் பருகி மகிழும் வரம் வேண்டும்.

    ReplyDelete
  2. படித்துவிட்டேன்......பாடல் தெரியும் அதனால் யார் ப்பாடியதை போட்டுருகீங்கன்னு பாக்க......தொடரும் போட்டுடீங்க.!!
    சரி உங்க எழுத்தோட சேர்ந்து பாட்ட கேக்க வெயிட் பண்ணரேன்...!!பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளோட தியாகராஜ ராமாயணம் கேட்ருகீங்களா??

    ReplyDelete
  3. கிட்ட நெருங்கியும் பார்க்கமுடியவில்லை என்றால்..யாருக்குத்தான் கஷ்டமாக இருக்காது?

    ReplyDelete
  4. எப்படிய்யா எழுதறீர்!!!!

    ஹைய்யோ............

    ஸ்வாமி சந்நிதியில் திரை போட்டுருந்தால், 'எனக்குத்தான் அவனைப் பார்க்கமுடியாதே தவிர, அவன் என்னைப் பார்த்துட்டான்' ன்னு நினைச்சுக்குவேன்.

    சிலசமயம் போறது போன்னு அவனே திரையை ஒரு நுள்ளு திறந்து எட்டிப்பார்ப்பான்:-))))

    அது போதும்.

    நிதி சால சுகமா?

    குறையொன்றுமில்லை.....

    ReplyDelete
  5. //குமரன் (Kumaran) said...
    இதுவரை அறியாத நிகழ்ச்சி இது இரவிசங்கர். அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    ஆகா...இந்தக் கதையை நீங்க கேட்டதில்லையா குமரன்? அப்படின்னா அடுத்த பாகத்தை சீக்கிரம் போடறேன்! பாருங்க தியாகராஜரை அழவுட்ட பெருமாள் கதி என்ன ஆகுதுன்னு! :-)

    //இந்தப் பாசுரங்கள் எல்லாம் யார் பாடியவைன்னும் சொல்லுங்க.//

    ஓ...நடு நடுவுல பாட்டு போட்டிருக்கேனே! அதுக்குப் பேரு தான் பாசுரமா குமரன்? :-)))

    ஹிஹி! நீங்களே சொல்லிடுங்க குமரன்! முடிஞ்சா கொஞ்சம் விளக்கத்தோட!
    பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்-ன்னு வெக்கத்தை விட்டுச் சொல்ல எம்புட்டூ தைரியம் வேணும்?

    //இன்னும் படித்து அனுபவிக்க வேண்டியவை எத்தனை இருக்கின்றன?! ஹும் எத்தனை பிறவி வந்தாலும் எம்பெருமானே உன் திருவருளைப் போற்றும் பனுவல்களைப் பருகி மகிழும் வரம் வேண்டும்//

    அதைத் தான் நரசிம்மதாசனும் கேட்கிறான். நீங்களும் கேட்கறீங்க!:-)

    ReplyDelete
  6. //Radha Sriram said...
    படித்துவிட்டேன்......பாடல் தெரியும் அதனால் யார் ப்பாடியதை போட்டுருகீங்கன்னு பாக்க......தொடரும் போட்டுடீங்க.!!//

    சாரி ராதா! இல்லீன்னா பெரிய பதிவாப் போயிடும், அதான்!
    அடுத்த பதிவில் பாட்டு, ஆராதனை வீடியோன்னு போனஸ் கொடுத்து விடுகிறேன்! போதுமா? ;-))

    //பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகளோட தியாகராஜ ராமாயணம் கேட்ருகீங்களா??//

    கல்லூரி நாட்களில் நண்பன் சுரேஷ் கொடுத்துள்ளான்! அப்பக் கேட்டது தான்! இணையத்தில் TSB சாரின் பேருரைகள் கிடைக்குதான்னு தெரியலை!

    ReplyDelete
  7. அருமையான பதிவு. சரியான நேரத்தில் "தொடரும்" என்று போட்டு விட்டு ஆவலை அதிகரித்துள்ளீர்களே! சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்கள். பெருமாளை நேரில் சந்தித்தது போல உணர்வு கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  8. இதுவும் நந்தனார் கதைய ஒத்தே வருதுல்ல..

    தெரதீயகரதா அருமையான பாடல். பின்புலத்தை சூப்பரா சொல்லிருக்கீங்க.

    TSBயோடது இங்க கிடைக்குதே...

    ReplyDelete
  9. அரியதொரு நிகழ்வை மிக அற்புதமாக பக்திமணம் குறையாமல்[!!] தந்திருக்கிறீர்கள், ரவி!

    நல்லதொரு பாடலுக்கு சிறந்த விளக்கம்!

    ReplyDelete
  10. அருமை! அருமை! ஒரு முறை சுவாமிமலை கோயில் செல்லும்போது இப்படித்தான் கடைசி நேரத்தில் சென்றதால் சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை. உள்ளே நுழையும்பொழுது நடை சாத்தி விட்டார்கள். வெளியில வந்தா அந்த கோயில் அதிகாரி எங்கள் கல்லூரியில் படித்தவராம். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று கூப்பிட்டு பேசி, மொபைல் நம்பர் எல்லாம் வாங்கி கொண்டார். பின்னர் மதுரை வந்து சேர்ந்தவுடன் தகப்பன்சாமியின் அருள் ஒரு குறுஞ்செய்தியில் வந்த்து (அப்படித்தான் அவர் குறிப்பிட்டிருந்தார்). அதுவும் ஒரு அனுபவம்தான். என்ன நம்மால் பாடலாக இந்த அனுபவங்களை பதிய முடியவில்லை. பின்னூட்டம் இட்டு திருப்தி பட்டு கொள்ள வேண்டியத்தான்.

    ReplyDelete
  11. //வடுவூர் குமார் said...
    கிட்ட நெருங்கியும் பார்க்க முடியவில்லை என்றால்..யாருக்குத்தான் கஷ்டமாக இருக்காது?//

    ஆமாம் குமாரண்ணா! நடை சாத்தும் நேரமாப் போனாக் கூட, சரி நாம தான் லேட்டா வந்தோம், அதுனால தான்-னு மனசு ஆறிடும்! ஆனா சில சமயம் நேரத்துக்குப் போனாக் கூட இது மாதிரி ஏதாவது நடக்கும் பாருங்க! அப்ப தான் கொஞ்சம் சங்கடமா இருக்கும்!

    தியாகராஜர் லேட்டாகப் போகவில்லை! முதலிலேயே தடுக்காமல் உள்ளே வரை விட்டுவிட்டு, திடீர் என்று கதவடைத்து விட்டார்கள்!

    ReplyDelete
  12. //துளசி கோபால் said...
    எப்படிய்யா எழுதறீர்!!!!
    ஹைய்யோ............//

    என்ன டீச்சர் இது?
    நீங்க எழுதும் திருவேங்கடம் ஹரியானதை விடவா? :-)

    //ஸ்வாமி சந்நிதியில் திரை போட்டுருந்தால், 'எனக்குத்தான் அவனைப் பார்க்கமுடியாதே தவிர, அவன் என்னைப் பார்த்துட்டான்' ன்னு நினைச்சுக்குவேன்.//

    இது! இது! இது தான் எங்க டீச்சர்!
    பாசிடிவ் துளசி திங்கிங்! :-)
    அவனுக்குத் தான் எக்ஸ்ரே கண்ணாச்சே! அவன் திரையை ஊடுருவி நம்மள பார்த்து விடுவான் தானே?

    //சிலசமயம் போறது போன்னு அவனே திரையை ஒரு நுள்ளு திறந்து எட்டிப்பார்ப்பான்:-))))
    அது போதும்//

    சூப்பர்! திரையைச் சில சமயம் இவங்க தாண்டிப் போகும் போது, சைக்கிள் கேப்பில் தரிசனம் கிடைக்கும்! :-)

    //நிதி சால சுகமா?
    குறையொன்றுமில்லை.....//

    இந்தப் பகுதியில் தான் குறையுண்டு குறையுண்டு பாட்டு! அடுத்த பதிவில் அது குறையொன்றுமில்லை-ன்னு கன்வர்ட் ஆகிடும்! :-)

    ReplyDelete
  13. //Expatguru said...
    அருமையான பதிவு. சரியான நேரத்தில் "தொடரும்" என்று போட்டு விட்டு ஆவலை அதிகரித்துள்ளீர்களே! சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்கள்.//

    நாளைக்குள் இட்டு விடுகிறேன்! உங்க ஆர்வத்துக்குப் பரிசாக! :-)

    //பெருமாளை நேரில் சந்தித்தது போல உணர்வு கிடைத்தது. நன்றி//

    ஆகா...தியாகராஜரே இன்னும் சந்திக்கலையே! நீங்க மட்டும் திரை விலக்கிப் பார்த்தீங்களா Expatguru? :-)

    ReplyDelete
  14. //மதுரையம்பதி said...
    திர(ரை) தியகராதா?//

    பாட்டுப் பாடி கலக்குறீங்களே மெளலி அண்ணா! :-)

    ReplyDelete
  15. //இராமநாதன் said...
    இதுவும் நந்தனார் கதைய ஒத்தே வருதுல்ல..//

    தலைவா, வாங்க! ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க! இந்தாங்க வோட்கா..ச்சே...சென்னைக் காபி, இஸ்ட்ராங்கா ஒரு லோட்டா! :-)

    நந்தனார் கதையை ஒத்து வருதா? ஹூம்...ஆமா...தரிசன விஷயத்தில் மட்டும்! :-)

    //தெரதீயகரதா அருமையான பாடல். பின்புலத்தை சூப்பரா சொல்லிருக்கீங்க//

    அடுத்த பதிவில் பாட்டையும் போட்டு விடுகிறேன்!

    TSB அவர்களின் சுட்டிக்கு நன்றிங்கண்ணா! sangeethapriya.orgஇல் எக்கச்சக்கமா இருக்கும் போல இருக்கே!

    ReplyDelete
  16. //VSK said...
    அரியதொரு நிகழ்வை மிக அற்புதமாக பக்திமணம் குறையாமல்[!!] தந்திருக்கிறீர்கள், ரவி!//

    என்ன SK, பக்திமணம் "குறையாமல்"-ன்னு ரெண்டு ஆச்சர்யக் குறி போட்டிருக்கீங்க? உம்...உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா மகிழ்ச்சி தான்!

    //நல்லதொரு பாடலுக்கு சிறந்த விளக்கம்!//

    அடுத்த பதிவில் பாடலையும் இடுகிறேன் SK!

    ReplyDelete
  17. //Sridhar Narayanan said...
    அருமை! அருமை! ஒரு முறை சுவாமிமலை கோயில் செல்லும்போது இப்படித்தான் கடைசி நேரத்தில் சென்றதால் சரியாக தரிசனம் செய்ய முடியவில்லை. உள்ளே நுழையும்பொழுது நடை சாத்தி விட்டார்கள்//

    வாங்க ஸ்ரீதர்! சில சமயம் இப்படி ஆயிடும்! நம்ம மேலயும் சில நேரங்களில் தவறு இருக்கும்! கடைசி நிமிஷத்தில் தான் போவோம்!

    //பின்னர் மதுரை வந்து சேர்ந்தவுடன் தகப்பன்சாமியின் அருள் ஒரு குறுஞ்செய்தியில் வந்த்து (அப்படித்தான் அவர் குறிப்பிட்டிருந்தார்).//

    சூப்பர்! எஸ்.எம்.எஸ் ஃபிரம் சுவாமிமலை!
    பாருங்க பழைய நண்பரின் தரிசனம் கிடைச்சுது உங்களுக்கு! ஒரு தரிசனக் குறையை இன்னொரு தரிசனம் காட்டி நிறைவு செய்கிறான் முருகன்!

    //என்ன நம்மால் பாடலாக இந்த அனுபவங்களை பதிய முடியவில்லை. பின்னூட்டம் இட்டு திருப்தி பட்டு கொள்ள வேண்டியத்தான்//

    ஹிஹி!
    பாடல் நமது இல்லீங்க! ஆழ்வாரோடையது! நீங்க பின்னூட்டம் வழியாச் சொன்னீங்க! நான் பதிவு வழியாச் சொன்னேன்! அவ்ளோ தான்! :-)

    ReplyDelete
  18. வந்து படிக்கிறேன்... ippothaiku attendance :D

    ReplyDelete
  19. //Dreamzz said...
    வந்து படிக்கிறேன்... ippothaiku attendance :D
    //

    ரெண்டாம் பாகம் போட்டுட்டுச் சொல்லுறேன் தல! மெல்லப் படிங்க! முடிஞ்சா பாடிக்கிட்டே படிங்க! :-)

    ReplyDelete
  20. //பாடல் நமது இல்லீங்க! ஆழ்வாரோடையது! //

    நானும் அதைதான் குறிப்பிட்டேன். சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை அல்லது சொல்ல தெரியவில்லை :-)

    ReplyDelete
  21. Hi,
    உங்க பதிவு நல்லா இருக்கு.

    Do Visit my page when time permits.
    நட்புடன்..
    நிவிஷா

    ReplyDelete
  22. //நிவிஷா..... said...
    Hi,
    உங்க பதிவு நல்லா இருக்கு.//

    நன்றி நிவிஷா!

    //Do Visit my page when time permits//

    Why should time permit me?
    I will permit time! :-)
    எட்டிப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  23. Good Post,New to me. Awaiting part 2
    Shobha

    ReplyDelete
  24. //Shobha said...
    Good Post,New to me. Awaiting part 2//

    வாங்க ஷோபா! நலமா?
    அடுத்த பாகம் நாளை இட்டு விடுகிறேன்!
    பாட்டின் வீடியோ தேடிக்கிட்டு இருக்கேன்! அதிகாலை 3:00 மணி:-))

    ReplyDelete
  25. Good post. Is this incident will trigger the song in gowlibanthu raga? Waiting for next part.
    - Murali

    ReplyDelete
  26. அடடா, சரியான நேரத்துல மெகா சீரியல் தொடரும் மாதிரி போட்டுடீங்களே! சரி, வெயிட் பண்றோம். :))

    ReplyDelete
  27. ஒரு சின்ன சந்தேகம், தியகராஜர் திருத்தணிகையிலேயே முருகனை வழிபட்டு இருக்கலாமே! :p

    பரவாயில்ல, திரை விலகி, தியாகராஜர் முருகனை வழிபட்ட அற்புதமான காட்சிக்கு நானும் அரை பிளேடு அண்ணாவும் காத்திருக்கோம். :))

    ReplyDelete
  28. http://www.youtube.com/watch?v=cKdHPCw3K9c

    KRS,
    Is this what you are looking?

    ReplyDelete
  29. இரவிசங்கர். நீங்கள் இட்டிருக்கும் பாசுரங்கள் எல்லாம் எனக்குப் புதியவைங்கறதால தானே 'இன்னும் படித்து அனுபவிக்க வேண்டியவை எத்தனை இருக்கின்றன'ன்னு போட்டிருக்கேன். என்னையே திருப்பிக் கேட்டால் எப்படி?

    நரசிம்மதாசன் கற்பனை. நான் கனவு. சரி தானா? :-)

    ReplyDelete
  30. அர்ச்சகர்கள் வேகம் வேகமாகத் திரையை இழுத்துச் சரேல் சரேல்-ன்னு மூடுறாங்களே?.....முழுக்க மூடியாகி விட்டது! ஒன்னுமே தெரியலை!


    முதல் பாதி அருமை. என்னுடைய மனதில் மதம், மாத்ச்சர்யம், கர்வம் என்ற திரைகள் மூடபட்டு இருப்பதால் உன்னை பார்க்க முடியவில்லை. அதை நீக்க மாட்டாயா? சீக்கரம் இரண்டாவது பாகத்தை போடுங்கள் கௌளிபந்துவுக்காக காத்திருக்கிறேன்.
    கோவூரில் சிவன் மீது ஒரு பஞ்சரத்னம் பாடியிருக்கிறார் தியகராஜர் தெரியுமா?
    அம்பி பின்னுட்டம் போடுவதனால் முதலில் முழுவதியும் படித்து பின் பின்னுட்டம் போடவும்.கர்பத்தில் இருக்கும் குழந்தைக்கூட தெரியும் வடவேங்கட மலையில் இருப்பவன் வெங்கடாசலபதி என்று முருகனை எப்படி பார்க்க முடியும்.திருத்தனியில்தான் முருகன்.

    ReplyDelete
  31. நேற்றுத் தான் என் கணவர் என்னிடம் தியாகராஜர் திருப்பதிக்குப் போயிருக்கிறாரா? என்று கேட்டார். சரியாத் தெரியலை என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று இந்த அற்புதமான நிகழ்வு. முடிவுக்குக் காத்திருக்கோம்.

    ReplyDelete
  32. இப்போ போனமாதம் ஸ்ரீரங்கம் சென்றபோது இப்படித் தான் ரங்கநாதர் தரிசனம் தரவில்லை. அப்போது இதே மனநிலை எங்களுக்கும், அதுவும் என் பையனுக்கு, இன்னமும் பேசும்போதெல்லாம் சொல்லிச் சொல்லி வருத்தப் பட்டுட்டு இருக்கான். :(

    ReplyDelete
  33. //ஒரு சின்ன சந்தேகம், தியகராஜர் திருத்தணிகையிலேயே முருகனை வழிபட்டு இருக்கலாமே! :p//

    @அம்பி, இதான் நீங்க ஒரிஜினலா எழுதறதுனு எல்லாருக்கும் இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டணும்? ஏன், கணேசன் ரொம்ப பிசியோ? :P :P

    ReplyDelete
  34. @அம்பி, இதான் நீங்க ஒரிஜினலா எழுதறதுனு எல்லாருக்கும் இப்படியா வெளிச்சம் போட்டுக் காட்டணும்? ஏன், கணேசன் ரொம்ப பிசியோ? :P :P
    அப்படி போடுங்க மேடம் அரிவாளே

    ReplyDelete
  35. //கோவூரில் சிவன் மீது ஒரு பஞ்சரத்னம் பாடியிருக்கிறார் //

    திருகேதிஸ்வர மஹாலிங்க...அப்படின்னு ஒரு கிருதி உண்டே அதுவா?

    ReplyDelete
  36. ஆஹா....அருமையாக எழுதியுளீர்கள்!!!!
    2 ஆம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  37. //சந்தோஷ் said...
    http://www.youtube.com/watch?v=cKdHPCw3K9c
    KRS,
    Is this what you are looking?//

    சந்தோஷ்...
    நன்றி தல!
    அது என்னோட youtube பக்கம்! அதை எனக்கே எடுத்து கொடுத்து இருக்கீங்க! :-))

    ஆனாலும் நீங்க உதவ நினைச்சீங்க பாருங்க! அது! அது! I like it!
    அது குறையொன்றுமில்லை பாட்டுங்க சந்தோஷ்! திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா-னு அதுல வருது! அதான் எடுத்துக் கொடுத்தீங்க போல!

    நான் தேடுனுது திரை தீயக ராதா-ன்னு தியாகராஜர் அந்தச் சந்தர்ப்பத்தில் பாடின பாட்டு! But still thanks!

    ReplyDelete
  38. //ambi said...
    ஒரு சின்ன சந்தேகம், தியகராஜர் திருத்தணிகையிலேயே முருகனை வழிபட்டு இருக்கலாமே!//

    கேட்டீங்களே ஒரு கேள்வி!
    திருத்தணியில முருகன் சொல்லிட்டானாம்...
    இங்க வந்தா ஒங்க கோபம் "தணிஞ்சு" தணிகையாப் போயிடும்! அதுனால நேராத் திருப்பதிக்கு மாமா கிட்ட போங்க! அங்க உங்க கோபம் தேவைப்படுதுன்னு சொல்லி அனுப்பிட்டான் போல! :-)

    ஏன் கோபம் தேவைப்படுது? 2nd part போட்டாச்சே! அதுல பாருங்க!

    //பரவாயில்ல, திரை விலகி, தியாகராஜர் முருகனை வழிபட்ட அற்புதமான காட்சிக்கு நானும் அரை பிளேடு அண்ணாவும் காத்திருக்கோம். :))//

    திரை விலகுச்சா? இல்லை வேறு ஏதாச்சும் ஆச்சா-ன்னு போயி பாருங்க அண்ணாச்சி! அப்பறம் பயந்து போயிடூவீங்க! இப்படி எல்லாம் பேஸ் மாட்டீங்க! :-))

    ReplyDelete
  39. ஆழ்வார் பாசுரத்தையும் போட்டு,

    தஞ்சையிலிருந்து தியாகராஜரோடயே பயணமும் செய்ய வைத்து விட்டீர்கள்.

    திரை விலகாதா பாட்டையும் போட்டுவிடுங்கள். எங்கள் எல்லோருடைய அஞ்ஞானத்திரையும்
    குறைவில்லாமல் விலகிவிடும்.
    நன்றீ ரவி.

    ReplyDelete
  40. கண்ணபிரான்,
    சிறப்பான பதிவு, in your unimitable style :)

    //தெரியேன் பாவியனாய் பல தீமைகள் செய்து விட்டேன்!
    பெரியேன் ஆயின பின் பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!!

    கரிசேர் மாபொழில் சூழ் கமலச் சுனை வேங்கடவா!
    அரியே வந்தடைந்தேன், அணைத்து என்னை ஆட்கொண்டு அருளே!!
    //
    திருமங்கையாரின் பாசுரத்தையே மாற்றுகிறீர்களே ஐயா :)
    தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*
    பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*
    கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*
    அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.

    இன்னும் சில பாசுரங்கள், உங்கள் வாசகர்களுக்காக, முக்கியமாக 'ஜூனியர்' குமரனுக்காக !!!
    ****************************
    வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*
    நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*
    சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*
    இனியான் உன்னை* என்றும் விடேனே.

    பதவுரை:
    எனக்கு நம்பியாக விளங்கும் நீ, என் உள்ளத்தில் புகுந்ததோடு, என்னுள் முழுதும் வியாபித்தும் இருக்கிறாய்! அணையாப் பெருஞ்சுடர் போன்றவனும், சிந்தாமணி போல் பிரகாசம் கொண்டவனும் ஆகிய திருவேங்கடப் பெம்மானே, உனை விட்டு இனி என்றும் விலக மாட்டேன்!

    திருவாய்மொழி

    வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
    வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
    செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
    செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.

    பதவுரை:
    வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த பொல்லாதவனே! வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் பற்றிக் கொள்வாயாக!

    வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
    செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
    சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
    அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.

    பதவுரை:
    வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசனே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!

    எ.அ.பாலா

    ReplyDelete
  41. பாலா சீனியர். எனக்காக திருவாய்மொழி பாசுரங்களைத் தெளித்ததற்கு நன்றி. பன்னீர்க்குளியல் அருமையாக இருந்தது. திருவாய்மொழி அடியேன் அடிக்கடி படிப்பது என்பதால் இந்தப் பாசுரங்களைப் படித்திருக்கிறேன். இந்த இடுகையில் இருக்கும் பாசுரங்களைத் தான் படித்ததில்லை.

    நீங்கள் கொடுத்த மூன்று திருவாய்மொழி பாசுரங்களிலும் அந்தக் கடைசி பாசுரம் மிக அருமையானது. அடிக்கடி அனுசந்தானம் செய்வது.

    ReplyDelete
  42. //Anonymous said...
    Good post. Is this incident will trigger the song in gowlibanthu raga? Waiting for next part.
    - Murali //

    ஆமாம் முரளி! கெளளிபந்து ராகத்தில் தான் பாட்டு உதிக்கும் - தெர தீயக ராதா என்னும் பாடல். அடுத்த பதிவு போட்டாச்சு! பாருங்க! :-)

    //ambi said...
    அடடா, சரியான நேரத்துல மெகா சீரியல் தொடரும் மாதிரி போட்டுடீங்களே! சரி, வெயிட் பண்றோம். :))//

    வூட்ல சமைக்கிறது வுட்டுட்டு, இப்படிச் சீரியல் பாத்து கெட்டு போறீங்களே அம்பி! இன்னிக்கி என்ன ஐட்டம் ஸ்பெசலாச் செய்யப் போறீங்க? :-)

    ReplyDelete
  43. // தி. ரா. ச.(T.R.C.) said...
    முதல் பாதி அருமை. என்னுடைய மனதில் மதம், மாத்ச்சர்யம், கர்வம் என்ற திரைகள் மூடபட்டு இருப்பதால் உன்னை பார்க்க முடியவில்லை. அதை நீக்க மாட்டாயா?//

    சூப்பர் திராச ஐயா! பேசாம இனிமேல் உங்களையே மொழியாக்கிடச் சொல்லப் போறேன்! மாச்சர்யம் என்னும் திரை விலகாதா-ன்னு தான் கேட்கிறார்.

    //சீக்கரம் இரண்டாவது பாகத்தை போடுங்கள் கௌளிபந்துவுக்காக காத்திருக்கிறேன்//

    போட்டாச்சே!

    //கோவூரில் சிவன் மீது ஒரு பஞ்சரத்னம் பாடியிருக்கிறார் தியகராஜர் தெரியுமா?//

    கோவூர் பஞ்சரத்னம் தானே திராச? பாடல்கள் தனித்தனியா தெரியாது. நீங்க இசை இன்பத்தில் ஒரு இன்ட்ரோ கொடுங்களேன் திராச.

    //கர்பத்தில் இருக்கும் குழந்தைக்கூட தெரியும் வடவேங்கட மலையில் இருப்பவன் வெங்கடாசலபதி என்று முருகனை எப்படி பார்க்க முடியும்.திருத்தனியில்தான் முருகன்//

    அம்பி...
    என்ன இன்னிக்கி உங்களுக்கு இம்புட்டு குட்டு! சரி எல்லாரும் உங்களுக்குச் சடாரி வைக்கறாங்கன்னு நினைச்சிகுங்க! :-)

    ReplyDelete
  44. //கீதா சாம்பசிவம் said...
    நேற்றுத் தான் என் கணவர் என்னிடம் தியாகராஜர் திருப்பதிக்குப் போயிருக்கிறாரா? என்று கேட்டார். சரியாத் தெரியலை என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று இந்த அற்புதமான நிகழ்வு. முடிவுக்குக் காத்திருக்கோம்//

    Super Coincidence கீதாம்மா! Uncle கிட்ட மீதிக் கதையைச் சொல்லுங்க.

    //கீதா சாம்பசிவம் said...
    இப்போ போனமாதம் ஸ்ரீரங்கம் சென்றபோது இப்படித் தான் ரங்கநாதர் தரிசனம் தரவில்லை//

    ஹும்! என்னவாம் அரங்கனுக்கு?
    ரொம்ப பிசியாமா? :-)
    திருவிழா நேரம் வேற போன மாதம்! அரங்கத்தில் எப்பமே ஏதாச்சும் ஒரு விழா! பேசாம திருமலை போல் அவங்களும் முன்பதிவு வைத்திடலாம்!

    //அதுவும் என் பையனுக்கு, இன்னமும் பேசும்போதெல்லாம் சொல்லிச் சொல்லி வருத்தப் பட்டுட்டு இருக்கான். :(//

    அச்சோ!
    வருத்தப்பட வேணாம்னு சொல்லுங்க! உங்க பையன் அரங்கனைப் பார்க்கவில்லை என்றாலும் அரங்கன் அவரைப் பார்த்திருப்பான்! ஸோ, நோ பிராப்ளம்!

    ReplyDelete
  45. //கீதா சாம்பசிவம் said...
    ஏன், கணேசன் ரொம்ப பிசியோ?//

    //தி. ரா. ச.(T.R.C.) said...
    அப்படி போடுங்க மேடம் அரிவாளே//

    அம்பி...போர்டிங் கால் ஃபார் தம்பி கணேசன்! :-)
    ப்ளீஸ், க்ளியர் த வே! :-))

    ReplyDelete
  46. //மதுரையம்பதி said...
    திருகேதிஸ்வர மஹாலிங்க...அப்படின்னு ஒரு கிருதி உண்டே அதுவா?//

    மெளலி அண்ணா...
    கூகிளார் கிட்ட இருந்து c&p செஞ்சேன் :-)

    Eevasudha in Sahana (Adi talam), Sundareswara in Sankarabaranam (Adi talam),
    Sambo Mahadeva in Pantuvarali, Kori Sevimparare in Karaharapriya (Rupaka talam),
    Nammi Vachina in Kalyani (Rupaka talam) .

    ReplyDelete
  47. //Kamal said...
    ஆஹா....அருமையாக எழுதியுளீர்கள்!!!!
    2 ஆம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்//

    நன்றி கமல்! ரெண்டாம் பாகம் போட்டாச்சு!

    ReplyDelete
  48. //வல்லிசிம்ஹன் said...
    ஆழ்வார் பாசுரத்தையும் போட்டு,
    தஞ்சையிலிருந்து தியாகராஜரோடயே பயணமும் செய்ய வைத்து விட்டீர்கள்.//

    ஹிஹி! பயணத்திலும் நீங்களும் வந்துட்டீங்களா வல்லியம்மா? சூப்பர்! எங்களுக்கெல்லாம் பாட்டுத் துணைக்காச்சு! :-)

    //திரை விலகாதா பாட்டையும் போட்டுவிடுங்கள். எங்கள் எல்லோருடைய அஞ்ஞானத்திரையும்
    குறைவில்லாமல் விலகிவிடும்//

    கண்டிப்பாக! பாட்டின் தமிழாக்கமும் போட்டாச்சுது! பார்த்துச் சொல்லுங்க வல்லீம்மா!

    ReplyDelete
  49. //enRenRum-anbudan.BALA said...
    கண்ணபிரான்,
    சிறப்பான பதிவு, in your unimitable style :)//

    சீனியர் பாலா, வாங்க வாங்க! என்ன இஷ்டைலைச் சொல்லுறீங்க, தெரியலையே! :-)

    //திருமங்கையாரின் பாசுரத்தையே மாற்றுகிறீர்களே ஐயா :)//

    அச்சோ...
    நான் பெரிய திருமொழியை நினைவில் இருந்து அப்படியே எழுதிட்டேன்! மன்னிக்கவும்!
    சொற்கள் சில மாறி மாறி வந்து விட்டன!

    பாருங்க, பாலா வந்து அடிச்சி ஆடணும்-னு இருக்கு! நீங்க இட்ட பாசுரங்களும் பொருளும் கலக்கல்!
    அது என்ன ஸ்பெசலா ஜூனியர் குமரனுக்கு மட்டும் தான் கொடுப்பீங்களா? எங்களை எல்லாம் பார்த்தா, ஜூனியோ ஜூனியர்களா தெரியலையா? :-)

    //செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
    செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே//

    ஜூனியர் குமரன்...
    செய்குந்தா - விளக்கம் ப்ளீஸ்! :-))

    ReplyDelete
  50. //குமரன் (Kumaran) said...
    நரசிம்மதாசன் கற்பனை. நான் கனவு. சரி தானா? :-)//

    சரி தான், சரி தான்!
    Two opposites, make one +ve! :-)

    //இரவிசங்கர். என்னையே திருப்பிக் கேட்டால் எப்படி//

    சரி சரி! நானும் நினைவில் வைத்து தான் எழுதினேன்! பாருங்க பாலா வந்து திருத்திச் சரியான சொற்களைக் கொடுத்திருக்காரு!

    இதோ பொருள்!
    //தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*//

    இளமையில் பல தீமைகள் செய்து விட்டேன் என்பது மேலோட்டமான பொருள்.
    ஆனால் "தெரியேன்", "பாலகனாய்" என்று குறிப்பிட்டுச் சொல்வதால் - தன்னையும் அறியாமல் செய்த தவறுகள் என்பது புலன்படும்! குழந்தை - பாலகன் செய்யும் சிறு தவறுகள் எல்லாம் பாவங்கள் ஆகுமா? ஆகாது என்று எடுத்த எடுப்பிலேயே ஆழ்வார் பெருமாளுக்குச் சொல்லி விடுகிறார்! தாயார் பெருமாளிடம் பரிந்து பேசும் போது, இந்தப் "பாலகனாய்" என்பது முன்னே வந்து நிற்கும்! பெருமாள் ஏற்றுக் கொண்டே ஆகணும்!

    //பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*//

    தாயே தந்தையென்றும் கிளை தாரமே மக்கள் என்றும் இன்னொரு பாசுரத்திலும் சொல்கிறார்! ஆனால் இவர்கள் மட்டும் "பிறர்கள்" ஆகி விட மாட்டார்கள்!

    உற்றார், உறவினர், நண்பர், சமூகம் என்று பிறந்ததில் இருந்தே அடுத்தவரை வைத்துத் தான் நம் பெயரையும் (அப்பா, சித்தப்பா, மாமா, மைத்துனன், நெருங்கிய நண்பன், வெறும் நண்பன், பிடிக்காதவன், எதிரி), அதனால் நம் செயல்களையும் வரையறுத்துக் கொள்கிறோம்!

    பிறர்க்கே என்பது இங்கு உடலையும் குறிக்கும்! உடலுக்கு மட்டுமே உழைத்து உழைத்து, ஆன்மாவைக் கண்டு கொள்ளாததால், மெய்ப் பொருளை இழந்து, ஏழை ஆனேன் என்று சொல்கிறார்!

    //கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*//

    யானைகள் விளையாடும் பூஞ்சோலை சூழந்த பெரிய வேங்கட மலையானே!

    //அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.//

    ஹரி பரந்தாமா, தலைவா, உன்னை வந்து அடைந்தேன்! உன்னிடம் வந்தேன் என்று சொல்லவில்லை! வந்து அடைந்தேன் என்று சொல்லி விடுகிறார் பாருங்கள்! - அதுவே சரணாகதி! நீ தான் இறுதியான இடம் என்று "அடைந்தேன்" என்று சொல்லி விட்டார்! அடியேனை ஆட்கொண்டு அருளே என்று விண்ணப்பிக்கிறார்!

    இதை "அணைத்து என்னை ஆட்கொண்டு அருளே" என்று மாற்றி எழுதி விட்டேன்! மன்னிக்கவும்! பதிவில் திருத்தி விடுகிறேன்!

    ReplyDelete
  51. ரவி சங்கர்!
    காசில்லாதவன் கடவுளானாலும், சன்நிதானக் கதவை சாத்தி விட்டார்கள்
    போலும்,
    தினம் அவனைப்பாடும் தியாகையருக்குமா??இக்கதி
    மிகுதியைப் பார்ப்போம்.

    ReplyDelete
  52. ஆசையாய்ச் சாப்பிட உட்கார்ந்த குழந்தையின் தட்டைத் தட்டி விட்டால் எப்படி இருக்கும்?
    காதலனைக் அன்புடன் காண வந்த காதலியை, இழித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
    ஆருயிர் நண்பனைக் காணச் சென்ற நண்பனை, முகத்தில் கதவடைத்தால் எப்படி இருக்கும்?
    அப்பாவின் மடியில் ஓடோடி உட்காரப் போன பிள்ளையைக் கால் இடறி விட்டால் எப்படி இருக்கும்?? //

    இப்படித்தான் இருந்தது ஒவ்வொருமுறை இந்தப்பதிவினை அனுபவித்து முழுமையாய் படிக்க இயலாம்ல் வீட்டில் ஏதாவது தொல்லை வந்தபோது..இப்போதுதான் ஆழ்ந்து படித்தேன்...என்ன சொல்ல ரவி வழக்கம்போல அருமை என்றால் அது சாதாரண வார்த்தை..இறைசெய்திகளை நீங்கள் அளிக்க நாங்கள் படிக்க அது இருவருக்கும் புண்ணியம் அவ்வளவே இப்பதிவிற்கான சிறு பதில்!

    ReplyDelete
  53. wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EUwow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!fanfan980110

    wow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
    vggv

    ReplyDelete
  54. To be a good benign being is to have a kind of openness to the mankind, an gift to trust unsure things beyond your own restrain, that can front you to be shattered in unequivocally exceptional circumstances pro which you were not to blame. That says something uncommonly impressive thither the fettle of the righteous passion: that it is based on a conviction in the up in the air and on a willingness to be exposed; it's based on being more like a plant than like a treasure, something fairly tenuous, but whose mere item attraction is inseparable from that fragility.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP