ஆன்மீகப் பதிவுகள் மட்டும் தான் நீங்க எழுதிக் கிழிப்பீங்களா?
மக்கள்ஸ் எல்லாரும் ஆட்டம் ஆடி முடிச்சிட்டாங்க போல! மொக்கைச் சரம், புத்தாண்டு சபதம், எழுதியதில் பிடித்தது-ன்னு சனவரி மாசம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே பட்டாசு தான் போங்க! நான் தான் லேட்டஸ்டோ லேட்டு!
ஆபிசில் ஆணியும் மொக்கையுமாய் இப்பவே அரை மாசம் போயிடுச்சி! அன்னிக்கி அப்படித் தான், டென் பீன் சூப் குடிச்சிட்டு, மதியம் மீட்டீங்கில் லேசாக் கண் அசந்தேன்! இது எப்பவும் பண்றது தான்! ஆனா அன்னிக்கின்னு பார்த்தா பயங்கரமான கனவுகளா எனக்கு வரணும்? பகற் கனவு பலிக்காதுன்னு சொல்லுவாய்ங்க! ஆனா இது மாலைக் கனவாப் போச்சுதே!
பதிவர் ஷைலஜா கையில் மைசூர்பாக் கரண்டியோட என்னைப் பதிவு பதிவா வெரட்டுறாங்க!
எங்கே என் சபதம்? எங்கே என் சபதம்?-ன்னு.....சரஸ்வதி சபதம், மங்கம்மா சபதம், சிவகாமியின் சபதம், பாஞ்சாலி சபதம், ஒரு தாயின் சபதம்-னு எல்லாச் சபதங்களும் ஒன்னாச் சேர்ந்து வெரட்டினா நான் எங்கன ஓடுவேன்? சபதத்தைச் சபதத்தால தானே முறியடிக்கணும்! அதான், புத்தாண்டு சபதம் போட்டுறலாமா?
ஆன்மீகம்/இசை/தமிழ் இலக்கியம் தொடர்பான பதிவுகள் மட்டுமின்றி, இனி வகை வகையா கூறு கட்டலாம்-னு முடிவு பண்ணியாச்சு !
கொஞ்சூண்டு நகைச்சுவை, கொஞ்"சு"ம் கதை, கெஞ்சும் கவிதைன்னு எறங்கிடலாமா? என்னா சொல்றீங்க யக்கோவ்? :-)
அடப்பாவி! உன்னை எவன்டா இந்த மாதிரி டேஞ்சரான சபதம் எல்லாம் எடுக்கச் சொன்னது?
ஹிஹி! நமக்குக் கதை சொல்லுறதும் கேக்கறதும் ரொம்ப பிடிக்குமுங்கோ! அதுவும் பக்தி...ச்சே...காதல் ரசம் சொட்டும் கதைகள்-னா எனக்கு ரொம்பவே உசிரு! அதான் தனிப்பதிவா தொடங்கி, ஒரு காத்தாடி படமும் போட்டாச்சுது! வெகு விரைவில் எதிர்பாருங்கள் ஒரு முழு நீளத் தொடர்-கதை!
ஐயகோ! 2008-இல் வலைப்பதிவுலகத்துக்கு இப்படி ஒரு சோதனையான்னு கேக்குறீங்களா? அதுக்கு என்னக்கா பண்ணறது? வேணும்னா கோயிலுக்குப் போயி வேண்டிக்குங்க! ஆனா உண்டியில்ல காசு மட்டும் போட்டுறாதீங்க! :-))

அப்பாலிக்கா...ஷைலஜா கிட்ட இருந்து தப்பிச்சி, வாயில் மைசூர்பாக்கைத் தள்ளவும் முடியாம, மெள்ளவும் முடியாம ஓடினேன்! ஓடினேன்! அபிஅப்பா பதிவின் பின்னூட்ட எல்லைக்கே ஓடினேன்!
அங்கேயும் வந்து, கொத்தாக் காலரைப் புடிச்சித் தூக்கினாரு நம்ம சீனா சார்!
பதிவனும் நீயோ, பந்தலும் உன்னுதோ?
என்னுது தானுங்கோ! என்னுது தானுங்கோ!
அடி சக்கை! எங்கேயடா நான் கேட்ட மொக்கை? நீ இருப்பதோ மெல்லீசா தக்கை! மொக்கை போடாவிட்டால் அரைத்துக் கொடுப்பேன் சுக்கை!
ஐயோ! சபதம், மொக்கை-ன்னு எல்லாத்தையும் சேர்த்து...ஒரே பதிவாப் போட்டுடறேன் சார்! இப்போ கண்ட கனவு உட்பட எல்லாத்தையும் போட்டுடறேன் சார்! இப்போதைக்கு ஜூட் விட்டுடுங்க சார்!
கண்ட கனவைப் போடுறேன்னு, நீ ஆண்டாள் கண்ட கனவைப் போடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? வாரணமாயிரம்-னு பதிவு போட்டுட்டு, இதெயெல்லாம் மொக்கை லிஸ்ட்டுல எடுத்துக்க மாட்டீங்களா-ன்னு வேறு கேப்பீயில்ல?
ஐயோ! அப்படி எல்லாம் கேக்க மாட்டேன் சார்!
வேணும்னா வாரணாமாயிரம் படம் ரிலீஸ் ஆவுறத்துக்கு முன்னாடியே நம்ம சோதிகா அக்காவைக் கேட்டு ஒரு விமர்சனப் பதிவு போட்டுடறேன்!
2008-இல் இருந்து நான் திருந்தப் போறேன்னு இப்பத் தான் ஷைலஜா கிட்ட சொல்லிட்டு ஓடியாந்தேன்! வேணும்னா அதோ வராங்க! அவங்களையே கேட்டுக்கோங்க!
சீனா சார், ஷைலஜா துரத்தும் திசையைத் திரும்பிப் பார்க்க, கேயாரெஸ்ஸூ எஸ்ஸூ ஆனான்!
டேய்! நீ அவங்க கண்ணுல வேணும்னா மண்ணைத் தூவலாம்! என் கண்ணுல மொளகாப் பொடி கூடத் தூவ முடியாது! ஏன்னா அதை நேத்தே என் தங்கமணி தூவிட்டாங்க! எங்கேடா நான் கேட்ட "2007 - எழுதியதில் பிடித்தது" பதிவு?
அம்பியண்ணோவ்! வணக்கம்! யூ சீ, நமக்கு இந்த வெளம்பரமே புடிக்காதுங்க!
டேய், பள்ளி கொண்ட ஃபோட்டாவை போட்டு விதம்விதமா வெளம்பரம் பண்ணுவீங்களாம்! இவருக்கு வெளம்பரம் புடிக்காதாமா? இந்த வெளம்பரம் பம்பரம் கதையெல்லாம் என் கிட்ட வேணாம்! ஐ வான்ட் பதிவு!
அது இல்லீங்கண்ணா! நீங்க சொன்னீங்களேன்னு நானும் தேடித் தேடிப் பாத்தேனுங்குண்ணா! ஆனா ஒரு பதிவும் சொல்லிக்கிறா மாதிரி தேறல அண்ணாச்சி! 2007-இல் டோட்டலா என் பதிவுலகப் பயணத்தையே வேஸ்ட் பண்ணிட்டனோ-ன்னு ஒரே ஃபீலிங் ஆகிப் போச்சி அண்ணாச்சி!
டேய், வேணாம்! அடங்கு....அடங்கு!
நீ எழுதிக் கிழிச்ச பதிவு, அதுவும் ஆன்மீகப் பதிவுக்கெல்லாம் அவனவன் வந்து எக்கச்சக்கமா பின்னூட்டம் போட்டாங்களே! அப்ப மட்டும் அதை எல்லாம் வாங்கிக்கிட்டல்ல? இப்ப அதுல இருந்து ஒரு நல்ல பதிவை எடுத்துக் கொடுக்க உனக்கு நோகுதா?
மன்னிச்சிக்குங்க அண்ணாச்சி... எனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ! அடியார்களுக்கு...சாரி பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எந்தப் பதிவு புடிச்சிருக்கோ அதையே போட்டுடறேன் அண்ணாச்சி!
உம்...அது! அதுக்காக, "இனிமே கோவிலில் யாரும் புளியோதரை வாங்கித் தின்னாதீங்கோ" பதிவை எல்லாம் இந்த லிஸ்ட்டுல சேர்த்துடாத! இன்னா, புரியுதா? :-)
பெரும்பாலான ஆன்மீக வாசகர் வட்டத்தின் முன், அடியேனின் சில பதிவுகளை வைத்தேன்! (பதிவர் அல்லாதார்). அவர்கள் மின்னஞ்சலில் தொகுத்துத் தந்த பட்டியல் இதோ! அனைவரும் ஒருமனதாகச் சொல்லியதை "**" செய்துள்ளேன்!
இப்போது அடுத்த கட்டமாகப், பதிவர்கள் உங்கள் முன்னர் வைக்கின்றேன்! உங்கள் மனம் கவர்ந்ததை நீங்களே எடுத்துச் சொல்லுங்க!
மாதவிப் பந்தலில் பிடித்த பதிவுகள்:
** துலுக்கா நாச்சியார் கதை - சமய நல்லிணக்கத்தை எப்படி அன்புடன் வளர்த்தார்கள் என்பது பற்றிய கதை - (எனக்கு மிகுந்த நிறைவு தந்ததும் கூட!)
** அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம் - திருமலைக்கு அப்துல் கலாம் சென்ற போது நடந்தது! - (இது தான் எனக்கு மிகவும் பிடித்தது!)
தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை - ஆடிப் பூரத் தொடர்! இதைத் தனிமடலில் பாராட்டி, வில்லிபுத்தூர் ஆலயத்தில் இருந்து அழகான புகைப்படங்களும் அனுப்பி இருந்தார்கள்!
பொய் சொல்க - அரங்கன் அருள்வான்! - ஆலயங்களில் ஆரியமும், வடமொழியும் தான் மேலோங்கி நிக்குது என்று பேசப்பட்ட சூழலில் வந்த ஒரு தொடர்! திருவரங்கத்தில் அமிழ்தினும் இனிய தமிழுக்கென்றே ஒரு திருவிழா! அப்போது வடமொழிக்கு அரங்கனே தடை போடுகிறான்! அதைப் பற்றிய தொடர்!
Aug-15: தேசிய கீதமா? விதேசிய கீதமா? - நம் தேசிய கீதம் பற்றிய சர்ச்சையில், விடை தேடும் பார்வை!
** ராமர் பாலமும் ராமானுசரும் - ராமானுசர் பொது நலனுக்காக, சமய நலனை விட்டுக் கொடுத்த கதை! - இதை இட்டதற்காக என்னைப் பல பேர் திட்டிய பதிவும் கூட! :-)
டேய், நிப்பாட்டு நிப்பாட்டு! நீ பாட்டுக்கு அடுக்கிக்கிட்டே போற? ஏதாச்சும் ஒன்னு தான் சொல்லனும்! இப்படி எல்லாம் அழுகுணி ஆட்டம் ஆடின, சர்வேசன் நெத்திக் கண்ணைத் தொறந்திடுவாரு!
ஐயா சாமீ...பதிவர்களைக் கேக்கறேனுங்க! அவங்களுக்குப் புடிச்சதில் இருந்து ஒன்னே ஒன்னை மட்டும் ஃபைனலாச் சொல்லிடறேன்! போதுமா? ஆளைப் பேச விடுங்கப்பா!
வ.வா.சங்கத்தில்
** நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள் - சிரிப்புத் தொடர் - பலரும், அட நகைச்சுவை கூட எழுதுவீங்களான்னு திரும்பிப் பார்த்த நேரம் (எனக்கு மிகவும் பிடித்த தொடரும் கூட!)
சுப்ரபாதப் பதிவுகளில் பலர் விரும்பி வாசித்தது
** கோயிலில் ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க?
இசை இன்பத்தில் பிடித்தது
** புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை - தமிழில் தியாகராஜ கீர்த்தனைகளை அதே மெட்டில் கொண்டு வரும் சிறு முயற்சி - இதை அடியொற்றி பின்னால் நானும், நண்பர் சீவீஆரும் ஓரிரு கீர்த்தனைகளைத் தொகுத்தோம்! ஜிராவும் அந்த மொழியாக்கத்துக்கு மெருகேற்றினார்! இதை இன்னும் நிறைய செய்ய வேண்டும்! - (எனக்கு மிகவும் பிடித்த தொடரும் கூட!)
நறுமுகையே நறுமுகையே, நளினா நீ கொஞ்சம் நில்லாய்! - நறுமுகையே பாடல் விமர்சனம்!
புதிரா புனிதமா போட்டிகளும் பலருக்குப் பிடித்திருந்தன - ஆன்மிகம் மட்டும் இல்லாது, சிலப்பதிகாரம், பொன்னியின் செல்வன் என்று புதிர்கள் வைத்த போதும் பலர் விரும்பிக் கலந்து கொண்டனர்!
கண்ணன் பாட்டு, முருகனருள், அம்மன் பாட்டு - இவை குழு வலைப்பூக்கள் என்பதால் அதில் இடும் பதிவுகளைத் தனியாக முன் வைக்கவில்லை!
பிள்ளைத் தமிழ் வலைப்பூ - இந்த ஆண்டு வேறு பாணியில் எழுதத் துவங்க வேண்டும்!
பொதுவா ஆன்மீகப் பதிவுகள்-னா அவ்வளவா கூட்டம் சேராது! ஆனால் மிகவும் ரசனையுடன் அனுபவித்து, வாசித்து மகிழ்ந்த நண்பர்கள் இங்கு எத்தனை எத்தனை பேர்!
குறைகளை எடுத்துச் சொல்லி, தக்க விமர்சனங்கள் செய்து, நெடும் பின்னூட்டங்கள் இட்டு, மேலும் மேலும் மெருகேற்றிய ரசனையாளர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்! குழு வலைப்பூக்களில் இருக்கும் சக தோழர்கள் செய்த உதவிகளும் பெரிது!
அவர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்ல இந்தச் சுய விளம்பர விளையாட்டு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது!
எந்தரோ ரசிகானு பாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை ரசிகமணிகள்! அத்தனை பேருக்கும் வணக்கங்கள்!!
முக்கியமா இரண்டு கேள்விகள்!
1. நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகக் கலந்து எழுதுவதால், ஆன்மீகப் பதிவுகளை Dilute செய்கிறேனோ என்று சில நண்பர்கள் தனியாக என்னிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு! நீங்க என்ன நினைக்கிறீங்க? ஆன்மீகத்தைத் தேவையில்லாமல் dilute செய்கிறேனா?
2. அப்படியே மேற்சொன்ன பதிவுகளில் உங்களுக்குப் பிடிச்ச பதிவு என்னன்னும் சொல்லிடுங்க!
மொக்கைச்சரம்-புத்தாண்டு சபதம்-எழுதியதில் பிடிச்சது = ஒரே கல்லுல மூனு மாங்கா! ஆட்டம் க்ளோஸ்! :-)
(updated...)
பல வாசகர்கள் + பதிவர்கள் ஒருமுனைப்பாகச் சொன்னது; எனக்கும் மிகப் பிடித்தமான பதிவாக...இதோ சர்வேசனுக்கு சமர்ப்பணம்! :-)
அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்
Read more »