புதிரா? புனிதமா?? - காதல்! (காதலர் தின ஸ்பெஷல்)
அடச்சே....லவ்வையா சொல்லப்போற? போட்டி முடிவைத் தானே சொல்லப்போற! அதுக்கு எதுக்கு பில்டப்பு? :-)
கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! தனியான விளக்கம்ஸ் பின்னூட்டத்தில்! நெறைய விளக்கத்தைக் கெக்கேபிக்குணி அக்காவே கொடுத்துட்டாங்க! என் வேலை மிச்சம்! நன்றிக்கோவ்! :-)
இதோ காதல் வெற்றியாளர்கள்: அட, அது என்னாங்க அது? காதல்-ல தான் பெரும்பாலும் பெண்களே ஜெயிக்கறாங்க! காதல் போட்டில கூடவா, அவங்களே ஜெயிப்பாங்க? ஹூம்ம்ம்ம்ம்ம்!
கெக்கேபிக்குணி = 10/10 = காதல் போட்டிப் பேரரசி (இனி வரலாற்றில் நீங்கள் கா.போ.பே என்றே வழங்கப்படுவீர்களாக! - 23ஆம் புலிகேசி இஷ்டைலில் படிக்கவும்)
அரைபிளேடு, அறிவன், நித்யா பாலாஜி, திராச, குமரன் = 9/10
தமிழ்ப் ப்ரியன், கப்பி பய, கீதா சாம்பசிவம் = 8/10
(இதுல Eligible Bachelor-ன்னு பார்த்தாக்கா, கப்பி பய மட்டும் தான்-னு நினைக்கிறேன்!
போட்டியில் வென்றது போலவே, காதல் உள்ளத்தையும் கவர்ந்து வெற்றி வாகை சூட, அவருக்கு ஸ்பெசலா வாழ்த்துச் சொல்லிடுங்க மக்களே!:-)
வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும், எல்லாருக்குமே காதல் தின வாழ்த்துக்கள்!
என்னாது பரிசா?
காதலை விட உயர்ந்த பரிசு வேற என்ன இருக்க முடியும்? இப்படிக் காதலி கிட்ட சொல்லிப் பாருங்களேன்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்! :-)
சரி இந்த முறை புத்தகமாக் கொடுத்திடலாமா? காதலர்களுக்குப் புத்தகம் படிக்கவா நேரம் இருக்கும்?-அப்பிடின்னு கேட்கறீங்களா? அதுவுஞ் சரி தான்! Lord of The Rings - 3 பாகங்களும், படத்துடன் உள்ளடக்கிய இ-புத்தகம், இந்தாங்க! (13mb மக்கா, பொறுமை! பொறுமை!!)
காதலர் தினத்துக்கு என்னென்னமோ பதிவு போடத் திட்டம் போட்டு வச்சிருந்தேன்! நான்சென்ஸ்! ஆபீஸ்-ல இந்த நேரம் பார்த்தா இப்படி ஆணி, கடப்பாரை எல்லாம் ஒன்னாச் சேர்ந்து வரும்?
ஆனா எங்க அலுவலகத்தில் இன்னிக்கி காலையில் நடந்த ஒரு நல்ல விசயத்தைத் தமிழ் கூறும் பதிவுலகத்துக்குச் சொல்லியே ஆகணும்!....
காலையில் வழமை போல் ஆபீசுகுள்ள நொழைஞ்சி என் அறைக்குள் போகிறேன்! ஒரு பெண்ணரசி ஓடியே வந்து என்னைக் கட்டி அணைச்சுக்குறா(ங்க)!
திடுக்கிடும் (தித்திப்பான) இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.....
Hey Honey, Watz the matter-ன்னு கேட்கறேன்!
Dude, It's Valentines! It's the Day of Hugs!!-ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னா(ங்க)!
அய்யோ...சிரிக்கறாடா-ன்னு ஒரு படத்துல கவுண்டர் சொல்லுவாரே! ஹிஹி...வெளியே வந்து என் டீம் இருக்கும் இடத்தை எட்டிப் பாக்குறேன்...
குட்டிக் குட்டி ஹார்ட்ஸ் போட்ட தோரணங்களைக் க்யூபிக்கள் புல்லா ஒட்டி வச்சிருக்குதுங்க! ஆங்காங்கே கொஞ்சம் பெரிய ஹார்ட்ஸ்! பலூன்! கருடப் பொம்மை...ச்சே பழக்கம் போகுதாப் பாருங்க! கரடிப் பொம்மை! :-)
கேக் வெட்டச் சொன்னாங்க டீம் மக்கள்! எப்பவுமே மேலாளர் தானே வெட்டிக்கிட்டே இருப்பான்! வெட்டியோட ஃபிரெண்டு வேற! அவன் வெட்டாம இருப்பானா?
So for a change, let the youngest girl in the team cut the cake-ன்னு சொன்னேன்!
யாரிந்த தேவதை? யாரிந்த தேவதை?? - வந்தாங்கப்பா ஒரு தேவதை!
(வவாச காதல் மாதச் சிங்கம், பதிவர் ட்ரீம்ஸ்...எனக்கு வழிவிட்டுக் கொஞ்சம் தள்ளி நில்லுங்க ப்ளீஸ் :-)
தேவதை வந்தாங்க! கேக்கைக் கட்-டினாங்க! ஒரே கைத்தட்டல்! இன்னொரு தேவதை திடீர்-னு பாட்டுப் பாட ஆரம்பிச்சிட்டாங்க!
ஏதோ Bryan Adams - Look into my eyes! காதலர் தினப் பாட்டாம்!
அப்போ ஆரம்பிச்சுதுங்க இந்தக் கட்டிப் புடி வைத்தியம்!
ஆல் டீம் மெம்பர்ஸ் ஹக் எவிரிபடி! அப்படியே ஒரு ரவுண்டு வந்து, என் அறைக்குள் வந்து சேர அரை மணி நேரம் ஆயிடுச்சி! :-)
அந்தப் பொண்ணு சுமாராவே பாடுச்சி! இன்னும் சில மக்களும் அது கூட சேர்ந்துக்க, கச்சேரி களை கட்டிருச்சி! எனக்கு அந்தப் பாட்டின் வரிகள் ரொம்பப் பிடிச்சிப் போயி அப்படியே நின்னுட்டேன்! நீங்களும் கேளுங்க! பாருங்க, கிறங்குங்க மக்கா! :-)
Look into my eyes - you will see
What you mean to me
Search your heart - search your soul
And when you find me there you'll search no more
Don't tell me it's not worth tryin' for
You can't tell me it's not worth dyin' for
You know it's true
Everything I do - I do it for you
சரி....திட்டம் போட்டபடி வேற சில முக்கியமான பதிவுகள் தான் போட முடியலை! அதான் இருக்கவே இருக்குதே, புதிரா புனிதமா!
ஒரு காதல் - புதிரா புனிதமா போட்டா என்ன-ன்னு தோனிச்சி! இதோ போட்டுட்டேன்!
மக்களே, ஆதலினால் காதல் செய்வீர்!
முடிவுகள் வழக்கம் போல் நாளை மாலை நியூயார்க் நேரப்படி! பார்க்கலாம் எத்தினி பேரு காதல்-ல ஜெயிக்கறாங்க-ன்னு! :-)))
காதல் வாழ்க! அனைவருக்கும் காதல் தின வாழ்த்துக்கள்!!
1 | கிரேக்க பண்பாட்டின் காதல் கடவுள் யார்? | 1 அ) ஆப்ரோடைட் ஆ) ஈராஸ் இ) ஜீயஸ் ஈ) க்யூபிட் |
2 | அம்பிகாபதி அமராவதி கதை பல பேருக்குத் தெரியும்-னு நினைக்கிறேன்! பிரபலமான தமிழ்நாட்டுக் காதலர்கள்! இவர்களின் காதலுக்குப் பல பேரு வில்லன்கள்! அதுல ஒருவரின் தந்தை கூட வில்லனாய்க் கிளம்பினாரு! அம்பிகாபதி-அமராவதி ஜோடியின் தந்தையர் பெயர் என்ன? | 2 அ) கம்பர்-ஒட்டக்கூத்தர் ஆ) ஒட்டக்கூத்தர்-கம்பர் இ) கம்பர்-குலோத்துங்கன் ஈ) புகழேந்திப் புலவர்-குலோத்துங்கன் |
3 | காதலுக்காகத் தூது சென்ற கடவுள் நம் தென்னாடுடைய சிவபெருமான்! யார் காதலுக்காக இவ்வாறு தூது சென்றார்? | 3 அ) சுந்தரர்-சங்கிலி நாச்சியார் ஆ) முருகன்-வள்ளி இ) கண்ணன்-ருக்மினி ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர் |
4 | லைலா மஜ்னு காதல் கதை ஒரு சோகமான காதல் கதை. இது பின்னாளில் பெர்சியா, லத்தீன் என்று பல மொழிகளில் விதம் விதமாகப் பரவியது! ஆனால் முதல் முதல், எந்த நாட்டில் இந்தக் காதல் கதை தோன்றியது? | 4 அ) இந்தியா ஆ) அரேபியா இ) துருக்கி ஈ) பெர்சியா |
5 | காதல் காதல் காதல்! காதல் போயின் காதல் போயின்...சாதல், சாதல், சாதல்! - இதைப் பாடிய கவிஞன் யார்? கவிதை எது? | 5 அ) பாரதிதாசன்-அழகின் சிரிப்பு ஆ) பாரதி-கண்ணன் பாட்டு இ) கண்ணதாசன்-அனார்கலி ஈ) பாரதி-குயில் பாட்டு |
6 | தன் காதலை தோல்வியுறச் செய்த ஒரு மாவீரரைப் பழிவாங்குவதற்கு என்றே இன்னொரு பிறவி எடுத்து வந்தாள் இவள்! அடுத்த பிறவியிலும் பெண்ணாகப் பிறந்து, பின்னர் ஆணாக மாறிப், பழி வாங்கினாள்! இவள் முற்பிறவி/இப்பிறவிப் பெயர்கள் என்ன? | 6 அ) அம்பாலிகா-சிகண்டி ஆ) அம்பா-சிகண்டி இ) அம்பா-அஸ்வத்தாமா ஈ) அம்பிகா-துருபதன் |
7 | லார்டு ஆப் தி ரிங்கஸ் நாவலில், ஒரு தீவிரமான காதல்! ஆர்வென் (Arwen) என்ற பெண், தன் மரணமில்லா நாட்டுக்குத் திரும்பிப் போகக் கூட நினைக்க மாட்டாள்; அழியும் மனிதப் பிறவியாகவே இருந்து விட முடிவு செய்துவிடுவாள். இவன் மேல் கொண்ட தீவிரமான காதலினால்! - யார் இவன்? | 7 அ) எல்ராண்டு ஆ) போரோமிர் இ) ஆரகார்ன் ஈ) ஃப்ரோடோ |
8 | பொன்னியின் செல்வனில் தான் எத்தனை காதல் கொட்டிக் கிடக்கு? பொன்னியின் செல்வன் அருண்மொழியை முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்? | 8 அ) பூங்குழலி ஆ) வானதி இ) நந்தினி ஈ) மணிமேகலை |
9 | ரோமியோ-ஜூலியட் கதை முழுக்கத் தெரியுமா? இல்லாக்காட்டி மாதவிப் பந்தலில் நான் சொல்லட்டுமா? :-) ஜூலியட் போலி விஷம் குடிச்சிட்டு சவப்பெட்டியில் உயிரோடு இருப்பதை அறியாமல், ரோமியோ நிஜ விஷம் குடிச்சி இறந்து விடுவான். இவர்களைச் சேர்த்து வைக்க இந்த டூப்ளிக்கேட் விஷம் - ஐடியா கொடுத்த நண்பன் பெயர் என்ன? | 9 அ) ஃப்ரையார் ஆ) பாரீஸ் இ) டைபால்ட் ஈ) ஷேக்ஸ்ப்பியர் |
10 | அண்மையில் தமிழ் சினிமா நடிகர் ஒருவர், வெளியில் தெரியாம ஆறு ஆண்டுகளாத் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் காதலித்து வந்ததாகவும்...இருவரும் பொறுத்திருந்து, இன்னும் சில மாதங்களில் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி வந்தது! யார் இந்த நடிகர்? | 10 அ) பரத் ஆ) சிம்பு இ) ஜீவா ஈ) விஷால் |
காதலில் எல்லாரும் ஜெயிக்கணும்-னு நல்ல எண்ணத்துல, கேள்வி எல்லாம் சிம்பிளாத் தான் கேட்டிருக்கேன் மக்கா! ஓக்கேவா? காதலே ஜெயம்! :-)
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!
1 அ) ஆப்ரோடைட் ஆ) ஈராஸ் இ) ஜீயஸ் ஈ) க்யூபிட் |
2. அ) கம்பர்-ஒட்டக்கூத்தர் ஆ) ஒட்டக்கூத்தர்-கம்பர் இ) கம்பர்-குலோத்துங்கன் ஈ) புகழேந்திப் புலவர்-குலோத்துங்கன் |
3 அ) சுந்தரர்-சங்கிலி நாச்சியார் ஆ) முருகன்-வள்ளி இ) கண்ணன்-ருக்மினி ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர் |
4 அ) இந்தியா ஆ) அரேபியா இ) துருக்கி ஈ) பெர்சியா |
5 அ) பாரதிதாசன்-அழகின் சிரிப்பு ஆ) பாரதி-கண்ணன் பாட்டு இ) கண்ணதாசன்-அனார்கலி ஈ) பாரதி-குயில் பாட்டு |
6 அ) அம்பாலிகா-சிகண்டி ஆ) அம்பா-சிகண்டி இ) அம்பா-அஸ்வத்தாமா ஈ) அம்பிகா-துருபதன் |
7 அ) எல்ராண்டு ஆ) போரோமிர் இ) ஆரகார்ன் ஈ) ஃப்ரோடோ |
8 அ) பூங்குழலி ஆ) வானதி இ) நந்தினி ஈ) மணிமேகலை |
9 அ) ஃப்ரையார் ஆ) பாரீஸ் இ) டைபால்ட் ஈ) ஷேக்ஸ்ப்பியர் |
10 அ) பரத் ஆ) சிம்பு இ) ஜீவா ஈ) விஷால் |
//வவாச காதல் மாதச் சிங்கம், பதிவர் ட்ரீம்ஸ்...எனக்கு வழிவிட்டுக் கொஞ்சம் தள்ளி நில்லுங்க ப்ளீஸ் :-)//
ReplyDeleteஇதுல உள்குத்து வேறயா :P
கல் என்பவர்க்கு கல். கடவுள் என்பவர்க்கு கடவுள். காதலும் அப்படி தான். புனிதம் என்பவர்க்கு புனிதமான புதிர். புதிர் என்பவர்க்க்கு புதிர் ஹிஹி
ReplyDeleteதத்த்துவம் சொல்லிட்டு மீ த அப்பீட்டு!
கேஆரெஸ்,
ReplyDelete//காலையில் வழமை போல் ஆபீசுகுள்ள நொழைஞ்சி என் அறைக்குள் போகிறேன்! ஒரு பெண்ணரசி ஓடியே வந்து என்னைக் கட்டி அணைச்சுக்குறா(ங்க)! திடுக்கிடும் (தித்திப்பான) இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.....//
மனசுக்குள்ள எம்.எஸ்.வி இசைல இனபமே உந்தன் பேர் பெண்மையோ ... அப்படினு சாங்க் ஓடி இருக்குமே :-))
விடைகள்:
1)ஆ) ஈராஸ்
2)கம்பர்-குலோத்துங்கன்(மூன்றாம் குலோத்துங்கன் தானே)
3)ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
4 அ) இந்தியா
5 அ) பாரதிதாசன்-அழகின் சிரிப்பு
6)அம்பா-சிகண்டி
7)இ) ஆரகார்ன்
8) அ) பூங்குழலி (ஓடக்காரப்பெண் தானே)
9 அ) ஃப்ரையார்
10 அ) பரத
I think you wont tell the answer until tomorrow morning. kaalaiyila vanthu paakkuREn.
ReplyDelete1. ஆ) ஈராஸ்
ReplyDelete2. இ) கம்பர்-குலோத்துங்கன்
3 ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
4 ஆ) அரேபியா
5 ஈ) பாரதி-குயில் பாட்டு
6 ஆ) அம்பா-சிகண்டி
7 இ) ஆரகார்ன்
8 ஆ) வானதி
9 அ) ஃப்ரையார்
10 இ) ஜீவா
1 ஆ) ஈராஸ் ('அ'உடைய மகன் !)
ReplyDelete2. இ) கம்பர்-குலோத்துங்கன்
3 ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
4 ஆ) அரேபியா
5 ஈ) பாரதி-குயில் பாட்டு
6 ஆ) அம்பா-சிகண்டி
7 இ) ஆரகார்ன்
8 அ) பூங்குழலி
9 அ) ப்ரையர் லாரன்ஸ்
10 அ) பரத்? -process of elimination method !!!
வவ்வால் தான் முதல் போட்டியாளர்!
ReplyDeleteவாங்க காதல் நாயகரே வாங்க! :-)
4,5,10 தவிர எல்லாமே சரிங்க வவ்ஸ்!
-7/10
காதல் முக்கால் கிணறு தாண்டிட்டீங்க! :-)
தல அரைபிளேடு...
ReplyDeleteகாதல் மேட்டர்-ல இம்புட்டு ஷார்ப்பா கீறியேப்பா! 8ஆம் விடை தவிர எல்லாமே சரி!
- 9/10
காதல் கிணற்றைக் கிட்டத்தட்ட கடந்த முதல் காளை, அரை பிளேடு வாழ்க வாழ்க!
குமரன், உங்க பின்னூட்டத்தை விட...வேற ஏதோ ஒன்னு இப்படிக் கண்ணை உறுத்துதே!
ReplyDeleteவேணாம் சாமீ வேணாம்! மாத்திருங்க குருநாதா மாத்திருங்க!
வடைகள் நாளை மாலையில் தான்!
அதுனால பைய வாங்க!
வேலன்டின் டின்னர் எல்லாம் முடிச்சிட்டு! :-)
அறிவன்...வாங்க!
ReplyDeleteபரமபத வெளயாட்டு கணக்கா கடைசிக் கேள்வில, பாம்பு கிட்ட மாட்டிக்கிட்டிங்க! :-)
மத்த எல்லாம் சரி!
- 9/10
காதல் கிணற்றைக் கிட்டத்தட்ட கடந்த அறிவன் வாழ்க வாழ்க! :-)
என்ன பன்றது கேஆரெஸ்,தமிழ்ப் படங்கள் பற்றிய செய்திகள் டொமைனில் எப்போதும் update ஆக இருக்க முடிவதில்லை...
ReplyDeleteஎங்க ரங்கமணிக்கிட்ட சொல்றேன் இன்னைக்கு,காதல் ராஜா நாந்தான்னு !!!!!!
1.ஆ) ஈராஸ்
ReplyDelete2.இ) கம்பர்-குலோத்துங்கன்
3.ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
4.ஆ) அரேபியா
5.ஈ) பாரதி-குயில் பாட்டு
6.ஆ) அம்பா-சிகண்டி
7.இ) ஆரகார்ன்
8.ஆ) வானதி
9.அ) ஃப்ரையார்
10.ஈ) விஷால்
1-ஆ
ReplyDelete2-இ
3-ஈ??
4-ஆ
5-ஈ
6-ஆ?
7-இ
8-அ
9-ஆ?
10-ஈ
தமிழ்ப் பிரியன் வாங்க!
ReplyDelete8,10 தவிர எல்லாமே சரி!
-8/10
கிட்டத்தட்ட வந்துட்டீங்க! வுட்டுராதீங்க! கமான்! :-)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said... தமிழ்ப் பிரியன் வாங்க!
ReplyDelete8,10 தவிர எல்லாமே சரி!//
8 எப்படி தவறானது என்று தெரியவில்லை. வானதி என்று சொன்னதாக நின்னைக்கிறேன். பூங்குழலி, நந்தினி, மணிமேகலை இவர்கள் அனைவரும், அருண்மொழி இலங்கைக்கு சென்ற பிறகு தான் அறிமுகம். (சிறு வயதில் பழக்கம் இருந்தாலும் நந்தினி கரிகாலனுக்கு இணை. மேலும் பழவூரில் இருந்தாலும் அவளை அருண்மொழி பார்க்கவில்லை). வானதி மட்டுமே இலங்கைக்கு செல்வதற்கு முன் அரண்மணையில் குந்தவையின் உதவியால் பார்த்து காதலை வளர்த்துக் கொண்டவள்.
10. பரத்தாக இருக்கலாம். ( திரைப்படங்களில் ஆர்வம் இல்லை)
\\கருடப் பொம்மை...ச்சே பழக்கம் போகுதாப் பாருங்க! கரடிப் பொம்மை! :-)\\
ReplyDeleteROTFL:))
Divya.
@கப்பி
ReplyDeleteயப்பா ராசா...இப்படி ஆ, ஈ, இ, அ-ன்னு மொட்டையாப் பதிலைப் போட்டா என்ன நெனைக்கறது, நீயே சொல்லு?
ஆர்க்குட் ஆணழகன் கப்பி, காதலர் தினத்தன்று காதல் சண்டையில், ஆ, ஈ என்று கத்திக் கொண்டே, கன்னியரிடம் இருந்து தப்பியோடி வரா மாதிரில்ல இருக்கு!
தப்பியோடி வரும் கப்பி-ன்னு போஸ்ட்டு போட்டுற வேண்டியது தான்! :-)
கப்பி, 9,10 தப்பு!
ReplyDeleteரோமியோ கேள்வியில் ரோமியோ கப்பியே தப்பு செய்யலாமா? மன்னிக்க
முடியாத குற்றம்! :-(
- 8/10
முக்கா காதல் கெணறு தாண்டிட்ட மா! :-)
தமிழ்ப் ப்ரியன்
ReplyDeleteநீங்க சொன்ன விடையில் 8 கொஞ்சம் கன்பூசன் ஆனது! காதல்-னா கன்பூசன் இல்லாமியா? :-))
சரி...கேள்வி என்னன்னா,
முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்?
ஒரு வாசகர் பார்வையில் இருந்து பார்த்துச் சொலுங்க, யார் முதலில் அறிமுகம் ஆகிறாங்க-ன்னு!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said... தமிழ்ப் ப்ரியன்
ReplyDeleteஒரு வாசகர் பார்வையில் இருந்து பார்த்துச் சொலுங்க, யார் முதலில் அறிமுகம் ஆகிறாங்க-ன்னு!//
அப்படியானால் அது படகோட்டி (அ) மகாராணி (?) பூங்குழலி
ஆ) ஈராஸ்
ReplyDeleteஇ) கம்பர்-குலோத்துங்கன்
ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
ஆ) அரேபியா
ஈ) பாரதி-குயில் பாட்டு
ஆ) அம்பா-சிகண்டி
இ) ஆரகார்ன்
ஆ) வானதி
அ) ஃப்ரையார்
இ) ஜீவா
முதலில் சந்திக்கும் பெண் பூங்குழலி என்றாலும் காதலிக்கும் பெண் வான்தி தான்.
:-)
நன்றி
நித்யா பாலாஜி
1 அ) ஆப்ரோடைட் ஆ) ஈராஸ் இ) ஜீயஸ் ஈ) க்யூபிட்
ReplyDelete2. அ) கம்பர்-ஒட்டக்கூத்தர் ஆ) ஒட்டக்கூத்தர்-கம்பர் இ) கம்பர்-குலோத்துங்கன் ஈ) புகழேந்திப் புலவர்-குலோத்துங்கன்
3 அ) சுந்தரர்-சங்கிலி நாச்சியார் ஆ) முருகன்-வள்ளி இ) கண்ணன்-ருக்மினி ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
4 அ) இந்தியா ஆ) அரேபியா இ) துருக்கி ஈ) பெர்சியா
5 அ) பாரதிதாசன்-அழகின் சிரிப்பு ஆ) பாரதி-கண்ணன் பாட்டு இ) கண்ணதாசன்-அனார்கலி ஈ) பாரதி-குயில் பாட்டு
6 அ) அம்பாலிகா-சிகண்டி ஆ) அம்பா-சிகண்டி இ) அம்பா-அஸ்வத்தாமா ஈ) அம்பிகா-துருபதன்
7 அ) எல்ராண்டு ஆ) போரோமிர் இ) ஆரகார்ன் ஈ) ஃப்ரோடோ
8 அ) பூங்குழலி ஆ) வானதி இ) நந்தினி ஈ) மணிமேகலை
9 அ) ஃப்ரையார் ஆ) பாரீஸ் இ) டைபால்ட் ஈ) ஷேக்ஸ்ப்பியர்
10 அ) பரத் ஆ) சிம்பு இ) ஜீவா ஈ) விஷால்
1.ஆப்ரோடைட்
2.கம்பர்-குலோத்துங்கன்
3.பரவை நாச்சியார்-சுந்தரர்
4.அரேபியா
5.குயிலின்பாட்டு(பாரதி)2-ம் பாட்டின் ஆரம்பம்?
6.அம்பா-சிகண்டி
7. படிச்சதில்லை, அதனால் சொல்ல முடியாதே? :(((((((
8.வானதி தான் முதல் பாகத்திலேயே காதலிக்க நினைப்பாள் இல்லை? ம்ம்ம்ம்?
9.mmmmm? Friar Lawrence னு படிச்ச நினைவு? கூகிளாண்டவரைக் கேட்கலாமா?ஹிஹிஹி?
10.பரத்தோ, சிம்புவோ நிச்சயமா இல்லை, ம்ம்ம்ம்ம்., ஜீவா?
மேலாளரா நல்லா அனுபவிக்கிறீங்கன்னு சொல்லுங்க. அண்ணி ஒன்னும் சொல்லலியா?
ReplyDeleteதேவதைங்களைப் பத்தி சொல்லியிருக்கீங்க. ஆனா அவங்க பேரெல்லாம் சொல்லலையே?
இந்த லுக் இன் டு மை ஐஸ் நீங்க நேத்து சொன்னவுடனேயே யூ ட்யூப்ல போயி பாத்து கேட்டுட்டேன். நல்ல பாட்டு தான்.
1. ஆ) ஈராஸ்
ReplyDelete2. இ) கம்பர்-குலோத்துங்கன்
3. அ) சுந்தரர்-சங்கிலி நாச்சியார்
4. ஆ) அரேபியா
5. ஈ) பாரதி-குயில் பாட்டு
6. ஆ) அம்பா-சிகண்டி
7. இ) ஆரகார்ன்
8. அ) பூங்குழலி
9. அ) Friar (ஃப்ரையார்)
10. ஈ) விஷால்
பத்தாவதற்கு மட்டும் கூகிளார் துணை கிடைக்கவில்லை. இந்த நால்வரைப் பற்றி எனக்குத் தெரிந்த வரையின் இவர்களில் ஒருவரை ஊகித்துப் பதில் சொல்லியிருக்கிறேன்.
மற்ற கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவரே துணை இருந்தார்.
தல
ReplyDelete1. ஆ
2. இ
3. ?
4. ஆ
5. அ
6. ஆ
7. ?
8. அ
9. ஆ
10. அ
பாருங்கள் தல சரியான்னு ;))
\\அப்போ ஆரம்பிச்சுதுங்க இந்தக் கட்டிப் புடி வைத்தியம்!
ReplyDeleteஆல் டீம் மெம்பர்ஸ் ஹக் எவிரிபடி! அப்படியே ஒரு ரவுண்டு வந்து, என் அறைக்குள் வந்து சேர அரை மணி நேரம் ஆயிடுச்சி! :-)\\
எல்லாம் எழுதியிருக்கானும்...ம்ம்ம்ம் ;)
\\ரோமியோ-ஜூலியட் கதை முழுக்கத் தெரியுமா? இல்லாக்காட்டி மாதவிப் பந்தலில் நான் சொல்லட்டுமா? :-)\\
கண்டிப்பாக சொல்லுங்கள் தல ;))
நித்யா பாலாஜி
ReplyDeleteவாங்க! அங்க மகாபாரதம்! இங்கே காதல் பாரதமா?:-)
எல்லாம் சரி...8 மட்டும் தப்பு! அதுக்குக் கூட நீங்க விளக்கம் சொல்லி இருக்கீங்க! கேள்வியை இன்னொரு கா படிச்சிருங்க! //முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்?//
அது வரை - 9/10
வேலன்-டைன் வாழ்த்துக்கள்!
கண்ணன்-டைன் வாழ்த்துக்கள்!!
வாங்க கீதாம்மா! நீங்க இல்லாம வாலன்டைன் தினமா?
ReplyDeleteகாதலர்களை ஆசிர்வாதம் பண்ணி ஆளுக்கு அஞ்சு சவரன் கொடுத்துருங்க! :-)
1,7,8 தப்பு
10th guess அடிச்சி கரீட்டாச் சொல்லிட்டீங்க!
- 7/10
கூகுளாண்டவரைக் கேக்கலாமாவா? இது என்ன கொடுமை கணேசா? இப்படியும் ஒரு கேள்வியா?
குமரனா மூனாம் கேள்விக்கு தப்பா பதில் சொல்வது! மயக்கமே வந்துருச்சி! :-)
ReplyDelete3,10 தவிர எல்லாஞ் சரி.
-8/10
//கோபிநாத் said...
ReplyDelete\\அப்போ ஆரம்பிச்சுதுங்க இந்தக் கட்டிப் புடி வைத்தியம்!
\\
எல்லாம் எழுதியிருக்கானும்...ம்ம்ம்ம் ;)//
கோபி அண்ணாச்சி!
எழுதித் தெரிவதில்லை dashdashdash கலை! :-) மேற்கொண்டு எழுதணும்னா வெட்கம் அல்லது அவை அடக்கம்! ஆளை வுடுங்க சாமீ...:-))))
3,5,7,9,10 தவறு!
இன்னொரு தபா ஆடுங்க!
LOTR-க்கு கூகுள்/ஜிரா/சீவியாரப் புடிங்க!
-5/10
குருவே இரவிசங்கர். எனக்கு எப்பவுமே பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் குழப்பம் உண்டு. அதனால் கூகிளாரைக் கேட்க அவர் சைவம் வலைப்பக்கத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாரு. அங்கே சொன்னதைத் தான் நான் பதிலா சொன்னேன்.
ReplyDeleteThe Lord went on behalf of him to chaN^giliyAr asking that girl who completely involved only in His service to marry the sweet servant saint sun^dharar
http://www.shaivam.org/nachund4.html
அதனால என்னோட மூன்றாம் கேள்விக்கான பதிலை மாத்தப்போறதில்லை. :-)
10. அ) பரத். இரண்டாவது தடவையாவது சரியான பதில் சொல்றேனான்னு பாக்கலாம்.
குமரன் (Kumaran) has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - காதல்! (காதலர் தின ஸ்பெஷல்)":
ReplyDeleteகுருவே இரவிசங்கர். எனக்கு எப்பவுமே பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் குழப்பம் உண்டு. அதனால் கூகிளாரைக் கேட்க அவர் சைவம் வலைப்பக்கத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாரு. அங்கே சொன்னதைத் தான் நான் பதிலா சொன்னேன்.
The Lord went on behalf of him to @@@@@ asking that girl who completely involved only in His service to marry the sweet servant saint sun^dharar
அதனால என்னோட மூன்றாம் கேள்விக்கான பதிலை மாத்தப்போறதில்லை. :-)
// எல்லாம் சரி...8 மட்டும் தப்பு! அதுக்குக் கூட நீங்க விளக்கம் சொல்லி இருக்கீங்க! கேள்வியை இன்னொரு கா படிச்சிருங்க! //முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்?// //
ReplyDeleteநாட்டாம தீர்ப்ப மாத்து
:-)
நித்யா பாலாஜி
//குமரன் (Kumaran)
ReplyDeleteகூகிளாரைக் கேட்க அவர் சைவம் வலைப்பக்கத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாரு. அங்கே சொன்னதைத் தான் நான் பதிலா சொன்னேன்.//
குமர குரு, குமர தல எல்லாம் நீங்க தான் சாமீ! அடியேன் பொடியேன்! :-)
முதற்கண் நன்றி! ஃப்ரொபைலை மாத்தினதுக்கு!
இப்போ கேள்விக்கு வருவோம்!
நீங்க சொன்ன @@@ நாச்சியாரிடம் தான் முதலில் இறைவன் செல்கிறார்! எதுக்கு? மணம் பேச! - மணம் பேசச் செல்வது "தூது" ஆகுமா?
பின்னர் இந்த மணம் அறிந்து மனம் உடைந்த @@@ நாச்சியாரிடம் இறைவன் "தூதுவராய்" செல்கிறார்! எதுக்கு? தலைவனைப் பற்றிச் சொல்லி, அவள் ஊடலை நீக்க!
அகப்பொருள் தூது இலக்கணம் என்னன்னா
"தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகின்றது"
அடக் கடவுளே! இப்பல்லாம் புதிரா புனிதமா கேள்விங்களுக்கு டபுள் டபுள் பதிலா வருதே! :-)
சரி...மக்கள் சொன்னாங்கன்னா குமரனுக்கு மார்க்கு கொடுத்துரலாம்!
ஜிரா சொன்னா கண்ணை மூடிக்கிட்டு கொடுத்துருவேன்! :-)
//பின்னர் இந்த மணம் அறிந்து மனம் உடைந்த @@@ நாச்சியாரிடம் இறைவன் "தூதுவராய்" செல்கிறார்! எதுக்கு? தலைவனைப் பற்றிச் சொல்லி, அவள் ஊடலை நீக்க!//
ReplyDeleteபுரிஞ்சிடுச்சுங்க! :)))))))
1 ஆ) ஈராஸ்
ReplyDelete2. இ) கம்பர்-குலோத்துங்கன்
3 அ) சுந்தரர்-பரவை நாச்சியார
4 ஆ) அரேபியா "the legend of Laila Majnun has its origin in Nizami's Khamsa, the twelth century epic of this Persian poet" அ அப்ப்டின்னும் சொல்றாங்க, விக்கிபீடியாவில், "It is based on the real story of a young man called Qays ibn al-Mullawah (Arabic : قيس بن الملوح ) from the northern Arabian Peninsula,[1] in the Umayyad era during the 7th cenடுர்ய்" அப்படின்னும் சொல்றாங்க. காதல் கதை என்றால், பெர்சியன்; உண்மை என்றால் அரேபியா? (கன்"ஃப்யூஸ்" பல்பா?)
5 ஈ) பாரதி-குயில் பாட்டு
6 அ) அம்பாலிகா-சிகண்டி (ஹிஹி, செல்வன் "அஞ்சேல்.." காரக்டர் மறந்துட்டீங்களேன்னு வந்துடப் போகிறார்!)
7 இ) ஆரகார்ன்
8 அ) பூங்குழலி (எனக்குப் பிடித்தது இவள் தான். வானதி ஸாரி).
9 அ) ஃப்ரையார் (A member of a usually mendicant Roman Catholic order.. ) ( ஃப்ரையர் லாரன்ஸ்.
10 அ) பரத் (ஐயோ, வேறு களம் இல்லியா, என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் ரெண்டாவது தடவை ட்ரை பண்ண வைக்கணும்னு இந்த கேள்வி என்று இதோ என் கண்டனம்! பதில் சரின்னா கண்டனம் வாபஸ்;)
7 தான் கதையே படிச்சதில்லைனு ஜகா வாங்கிட்டேனே?
ReplyDelete1 சரினு கூகிளாண்டவர் சொல்றார் போலிருக்கே? நான் தப்பாக் கொடுத்துட்டேனோ?
அப்ரிடிட் அல்லது ஆப்ரோடைட் தானே முதல் கேள்விக்குப் பதில்? அப்புறம் 8? இருங்க வரேன்.
மறுபடியும் "பொன்னியின் செல்வன்" கதையிலேயே மாட்டிக்கிறேனா? கடவுளே! ம்ம்ம்ம்ம்??????? பூங்குழலி? அவள்தான் வந்தியத் தேவனிடம் சொல்லுவாள், இல்லையா?
ReplyDelete1)க்யூபிட்
ReplyDelete2)இ) கம்பர்-குலோத்துங்கன்
3) பரவை நாச்சியார்-சுந்தரர்
4) அரேபியா
5) பாரதி-குயில் பாட்டு
6)அ) அம்பாலிகா-சிகண்டி
7)போரோமிர்
8பூங்குழலி
9)டைபால்ட்
10)விஷால்
கெ.பி.அக்கா
ReplyDeleteவேலன்டைன்-கண்ணன்டைன் வாழ்த்துக்கள்! :-)
6,10 தப்பு! மத்த எல்லாம் சரி!
-8/10
//ஹிஹி, செல்வன் "அஞ்சேல்.." காரக்டர் மறந்துட்டீங்களேன்னு வந்துடப் போகிறார்//
வரட்டும் பாத்துக்கலாம்! :-)
ஆனா நீங்க கொஞ்சம் பாத்து ஆடுங்க! காப்பி பேஸ்ட் மிஷ்டேக்கு பண்ணீட்டீங்களா என்ன?
//ஐயோ, வேறு களம் இல்லியா, என்ன மாதிரி ஆளுங்க எல்லாம் ரெண்டாவது தடவை ட்ரை பண்ண வைக்கணும்னு இந்த கேள்வி என்று இதோ என் கண்டனம்! பதில் சரின்னா கண்டனம் வாபஸ்;)//
என்னாது?
இவன் சினிமா ஓலக இளங் கதா நாயகன்! சர்ச்சையில் சிக்காத நல்ல பையன்! ஆனாலும் நம்ம பதிவர் கப்பியை விட ஒரு படி கம்மி தான் இவன்! :-)
ரெண்டாம் ஆட்டம் ஆடிக் கண்டுபுடிங்க!
கீதாம்மா
ReplyDeleteநீங்க கேட்டது போலி கூகுளார் போல! :-)
ஒன்னாம் நம்பர் தப்பு!
பொன்னியின் செல்வன்-லயே எப்பவும் மாட்டிக்குறீங்க! ஆனா ரெண்டாம் ஆட்டத்துல சொன்ன பதில் சரி! அம்பி கிட்ட பிட் அடிச்சீங்களா என்ன? :-)
-8/10
ஆகா
ReplyDeleteதிராச ஐயாவும் காதல் ஜோதியில் கலந்துட்டாரா! சூப்பர்! அவர் முருகன் பண்ணாத காதலா? :-)
1,6,7,9,10 தவறு! ரெண்டாம் ஆட்டம் ஆடுங்க ஐயா! புல் தட் அம்பி ஃபெல்லோ ஃபார் ஹெல்ப்பு!:-)
- 5/10
1) ஈராஸ்
ReplyDelete6) அம்பா-சிகண்டி
7)ஆரகார்ன்
9)ஃப்ரையார்
10)பரத்
திராச ஐயா ரெண்டாம் ஆட்டத்துல அடிச்சி ஆடி all but one சொல்லிட்டாரேய்ய்ய்ய்ய்! பத்தாம் பதில் மட்டும் தான் தப்பு!
ReplyDelete- 9/10
10-- சிம்பு
ReplyDelete10முடிவாக---விஷால்
ReplyDeleteகுருநாதர் இவ்வளவு விளக்கமா சொன்ன பிறகு கேக்காட்டி எப்படி? கேட்டுக்குறேன்.
ReplyDelete3. ஈ) பரவை நாச்சியார்-சுந்தரர்
திராச - இப்படி எல்லாமா அழுகுணி ஆட்டம் ஆடுவாய்ங்க? ஆனா நாலு ஆப்ஷனையும் மாத்தி மாத்திச் சொன்னவரு...அதுல ஒன்னை மட்டும் ரிப்பீட்டாச் சொல்லிட்டீரு! அதுல கரெக்ட் ஆன்சர் விட்டுப் போச்சு! :-)
ReplyDeleteஹிஹி!...காதல் வலியது!
@குமரன்...
ReplyDeleteகுருநாதர் இன்னும் இங்கிட்டு வரவே இல்லியே! அவரு வெளக்கமாச் சொன்னாரு; அதுனால கேட்டுக்கறேன்னு இப்படி நீங்க பொய் சொல்லலாமா? :-)
உங்க முதல் பதிலுக்கே கூட மார்க்கு கொடுத்து விடுவதாய் இருந்தேன், குமரன்! அகப்பொருள் தூது, புறப்பொருள் தூது-ன்னு இருக்கு! மணம் பேசப் போறது புறப்பொருள் தூது-ல வருமா தெரியலை!
கூடலுக்குத் தூது விடுகிறேன்! கபிலரோட கையோட கையா, ஒரு பதிவு போட்டுருங்களேன்!
- 9/10
6 ஆ) அம்பா-சிகண்டி
ReplyDelete10 இ) ஜீவா
இந்த பத்தாம் கேள்விக்கு பைத்தியம் மாதிரி கூகிள் செய்ய விட்டதற்கு தண்டனையாக, அடுத்த புதிரா புனிதமாவில் ஒரு கேள்வி கூட சினிமா பற்றி கூடாது (ப்ளீஸ்:-))))))
I answered twice to 10th question. Whether both are wrong? :-(
ReplyDelete@குமரன்
ReplyDeleteநீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்களுமே இல்லை! :-)
-9/10
@கெ.பி.அக்கா
ReplyDelete-10/10 ஏஏஏஏஏஏஏஏஏ!
காதல் வின்னர் கெக்கேபிக்குணி வாழ்க வாழ்க!!
எங்கிருந்து புடிச்ச்சீங்கக்கா கடைசிப் பதிலை?
பாவம்! சினிமாக் கேள்வி கேட்டு ரொம்ப அலைய வுட்டுட்டனோ? செய்தித்தாள் ஓப்பன் பண்ணா மொதல்ல கிசுகிசு படிக்கற நல்ல பழக்கம் எல்லாம் ஒங்க கிட்ட கெடையாதா? :-))
//நீங்க சொன்ன ரெண்டு ஹீரோக்களுமே இல்லை! :-)
ReplyDelete//
அப்படியா? வியப்பா இருக்கு. அடுக்குமொழியார் மைந்தன் கோவலனோட காதலைப் பத்தி ஊருக்கெல்லாம் தெரியும். அதனால அவர் இல்லை. உயிரானவர் மலேசியாவுல நடந்த நடிகர் சங்க கலைவிழாவுக்கு மனைவியோட வந்திருந்தாரு. அதனால அவரும் இல்லை. அவரைவிட்டா பரந்தவரும் இராமன் தம்பியும் தான் உண்டு. அவங்க ரெண்டு பேர் பேரும் சொல்லியாச்சு. நீங்க இல்லைன்னு சொல்றீங்க. :-(
புதிரை விடுங்க...............ஆஃபீஸ்லே கொண்டாட்டம் ஜோரா இருந்துருக்கு போல.
ReplyDeleteஇங்கே பாவம். கோபால் படிச்சுட்டுப் புலம்பிக்கிட்டு இருக்கார்:-)
நாந்தான் போனாப்போகட்டும் வேலண்டைன் டே ஸ்பெஷலா இருக்கட்டுமுன்னு நேத்துவச்சப் பழைய கொழம்பையே அன்னிக்கும் பரிமாறிட்டேன்:-)
//துளசி கோபால் said...
ReplyDeleteஇங்கே பாவம். கோபால் படிச்சுட்டுப் புலம்பிக்கிட்டு இருக்கார்:-)//
ஹிஹி!
என்ன டீச்சர்...கொண்டாட்டத்துக்கு நீங்க தடா போட்டுட்டீங்களா என்ன? பாவம் கோபால் சார்! எங்க ஆபிசுக்கு வேணும்னா அனுப்பி வைங்களேன்! :-)
//நாந்தான் போனாப்போகட்டும் வேலண்டைன் டே ஸ்பெஷலா இருக்கட்டுமுன்னு நேத்துவச்சப் பழைய கொழம்பையே//
அடக் கொடுமையே!
கோபால் சார்! மனம் தளராதீங்க! டீச்சர் வச்ச பழைய கொழம்பை ஆகா ஓகோ-ன்னு கண்டமேனிக்குப் புகழ்ந்து சொல்லுங்க!
தேவாமிர்தம், பஞ்சாமிர்தம், பக்கத்து வீட்டு அமிர்தமா இருக்கு-ன்னு சொல்லுங்க!
இதுக்காகவே ஒங்களுக்குப் புதுக் கொழம்பு கிடைச்சிரும்! :-))
ஏற்கனவே பெத்த பேரு கெக்கே பிக்கே. இதுல கா போபே ந்னு சொன்னாக்க, அடிக்க வந்துடுவாங்க. இருந்தாலும், நன்னி.... கொஞ்சம் அடுத்த தடவை சினிமா கேள்விகள் இல்லாமலிருக்க மறுபடி விண்ணப்பம்;-)
ReplyDelete1 கிரேக்க பண்பாட்டின் காதல் கடவுள் யார்?
ReplyDeleteஈராஸ் தான் காதல் தெய்வம் - நம்ம மன்மதன் போல.
அவனுக்குத் துணை அழகின் தெய்வம், ஆப்ரோடைட் - நம்ம ரதி போல! இவளுக்கு ரெண்டு உருவம் வேற!
ஜீயஸ் = இவரு கடவுளுக்கு எல்லாம் தலைவரு! மழைக் கடவுளும் கூட
க்யூபிட் = இவரு கிரேக்கக் கடவுள் இல்லை! ரோமானியக் காதல் கடவுள்
2. அம்பிகாபதி-அமராவதி ஜோடியின் தந்தையர் பெயர் என்ன?
அம்பிகாபதியின் தந்தை = கம்பர்
அமராவதியின் தந்தை = இரண்டாம் குலோத்துங்கன்
ஒட்டக்கூத்தர் தான் காதலைக் கண்டுபிடித்து, மன்னனிடம் போட்டுக் கொடுப்பது! ஆனால் இது கற்பனைக் கதை என்றும் சொல்கிறார்கள்.
3. காதலுக்காகத் தூது சென்ற கடவுள் நம் தென்னாடுடைய சிவபெருமான்!
யார் காதலுக்காக இவ்வாறு தூது சென்றார்?
சங்கிலி நாச்சியார் (அநிந்ததையார்) இரண்டாம் மனைவி! இவரிடம் சென்றது சுந்தரருக்கு மணம் பேச.
பரவை நாச்சியாரே (கமலினியார்) முதல் மனைவி! இவரிடம் தான் "தூது" சென்று, இரண்டாம் திருமணத்தால் ஏற்பட்ட சினம் தணிவித்தார்!
கேஆரெஸ்,
ReplyDelete//அடக் கொடுமையே!
கோபால் சார்! மனம் தளராதீங்க! டீச்சர் வச்ச பழைய கொழம்பை ஆகா ஓகோ-ன்னு கண்டமேனிக்குப் புகழ்ந்து சொல்லுங்க!
தேவாமிர்தம், பஞ்சாமிர்தம், பக்கத்து வீட்டு அமிர்தமா இருக்கு-ன்னு சொல்லுங்க!
இதுக்காகவே ஒங்களுக்குப் புதுக் கொழம்பு கிடைச்சிரும்! :-))//
என்ன விவரம் புரியாதவரா இருக்கிங்க,
அப்படி ஒருக்கா சொல்லப்போய் தான் இப்போ அடிக்கடி ...நீங்க தானே பழைய கொழம்பு நல்லா இருக்குனு சொன்னிங்கனு நேத்து வச்ச குழம்பையே ஊத்துராங்களாம் , அதுவும் சில சமயம் 2-3 நாள் ஆனக்குழம்புலாம் ஊத்துறாங்களாம் :-))
--------------------
ஆனா நீங்க கேட்டு இருக்க கேள்வில பிழை இருக்கு என நினைக்கிறேன்,குமரன் சொல்வதிலிருந்து ஊகமாக சொல்கிறேன், ஜீவா என்று விடை இருக்குமெனில் , அது பழைய கிசு..கிசு அவர் கல்யாணம் செய்துக்கொண்டார், அப்பெண்ணும் பக்கத்து வீடு , ஆனால் சொந்தக்காரப்பெண்!
4. லைலா மஜ்னு காதல் கதை....முதல் முதல், எந்த நாட்டில் இந்தக் காதல் கதை தோன்றியது?
ReplyDeleteஅரேபியா என்பதே சரி!
இந்தியா இல்லை! மேலும் இது ஒரு தலைக் காதலும் கூட! பின்னர் தான் பாரசீகம், ஆப்கான், இந்தியா என்று பல நாடுகளுக்கு இந்தக் கதை பரவியது!
5. காதல் காதல் காதல்! காதல் போயின் காதல் போயின்...சாதல், சாதல், சாதல்!
- இதைப் பாடிய கவிஞன் யார்? கவிதை எது?
பாரதியார், குயில் பாட்டு!
குயில் தன் காதலைப் பாரதியாருக்குச் சொல்வது போல் ஒரு கனவு - குயில் பல பேரைக் காதலிக்கும் - பாரதிக்குக் கோபம் வரும் - நல்ல வீச்சுள்ள வசனங்கள்! அந்தச் சிறந்த கவிதைத் தொகுப்பு குயில் பாட்டு!
6. அடுத்த பிறவியிலும் பெண்ணாகப் பிறந்து, பின்னர் ஆணாக மாறிப், பழி வாங்கினாள்!
இவள் முற்பிறவி/இப்பிறவிப் பெயர்கள் என்ன?
அம்பா முற்பிறவியில்! சிகண்டி இப்பிறவியில்!
பீஷ்மரால் சுயம்வரத்தில் வெல்லப்பட்டு விசித்ரவீரியனை மணக்கும் சமயத்தில், தான் ஏற்கனவே சால்வனைக் காதலித்தைச் சொல்ல...அவனும் விட்டு விடுவான்!
சால்வனோ அவளை இப்போது ஏற்க மறுக்க, இரண்டு பக்கமும் வாழ்க்கை இல்லாமல் போய் விடும்! பரசுராமர் கூட அவளுக்கு உதவ முடியாமல் போய் விட, வெகுண்டு எழுந்து, முருகக் கடவுளை வணங்கி, அவரிடம் ஒரு வீர மாலையைப் பெற்றுக் கொள்வாள்!
அந்த மாலையைப் போட்டுக் கொண்டு பீஷ்மரிடம் சண்டை போட எவரும் முன் வராததால், துருபதன் வீட்டு வாசலில் மாலையைத் தொங்க விட்டூ, உயிரை விட்டு விடுவாள்!
அடுத்த பிறவியில் அதே வீட்டில் பிறந்து, மாலையைத் தன் கழுத்தில் தானே போட்டுக் கொள்வாள்! பயந்து போய் அவளை அனைவரும் ஒதுக்கி வைக்க, கானகத்தில் ஆண்மை பெறுகிறாள்! சிகண்டியாகிறாள்(ன்)! போரில் இவனை (இவளை) முன்னிறுத்தி பீஷ்மர் கொல்லப்படுகிறார்!
அய்யொ இந்த கட்டிப்பிடி தினமெல்லாம் இங்கே இல்லியே !! குசொத்து வைச்ச ஆளுங்கப்பா நீங்க - அரை மணி நேரம் ஆச்சா - புகை வருது. ஆமா வீடீயோ எடுக்கலியா
ReplyDeleteஅதென்ன துளசி வூட்லே உள்நாட்டுக் குழப்பத்தே உண்டு பண்றீங்க கேயாரெஸ் ( அது யாரு பக்கத்து வூட்டு அமிர்தம் - உங்களுக்குத் தெரிஞ்சவங்களா ?)
நான் மொதல்லேயே பாக்கலே - போட்டியே - ஒரு 3/4 மார்க்காவது வாங்கி இருப்பேன்.
ReplyDelete7. லார்டு ஆப் தி ரிங்கஸ் நாவலில், ஒரு தீவிரமான காதல்!
ReplyDeleteஆர்வென் (Arwen) என்ற பெண், தன் மரணமில்லா நாட்டுக்குத் திரும்பிப் போகக் கூட நினைக்க மாட்டாள்; அழியும் மனிதப் பிறவியாகவே இருந்து விட முடிவு செய்துவிடுவாள். இவன் மேல் கொண்ட தீவிரமான காதலினால்! - யார் இவன்?
இவன் பெயர் ஆரகார்ன்! கதையில் வரும் அழகான ஹீரோ! Gondor அரியாசனத்துக்கு இவனே வாரிசு!
எல்ராண்டு = இவர் ஆர்வெனின் அப்பா! ஆரகார்னை எடுத்து வளர்ப்பவர்! ஆர்வென்-ஆரகார்ன் காதல் உன்னதக் காதல்
போரோமிர் = Gondorஇன் தளபதி! ஆரகார்ன் பற்றித் தெரியாததால் அரசுப் பொறுப்பை இவனே நடத்துகிறான். மாய மோதிரத்தால் மதி மயங்கினாலும் இறுதியில் நண்பர்களைக் காப்பாற்றத் தன் உயிரைக் கொடுக்கிறான். சாகும் தருவாயில் ஆரகார்னை மன்னன் என்று அறிந்து கொண்டு இறக்கிறான்.
ஃப்ரோடா தான் ஹீரோ...மோதிரத்தை அழிக்கும் பொறுப்பாளர்
8. பொன்னியின் செல்வன் அருண்மொழியை முதன்முதலில் காதலிக்க "எண்ணும்" பெண் யார்?
கதை நகரும் வரிசைப்படிப் பார்த்தால்...பூங்குழலிக்குத் தான் முதன் முதலில் காதல் எண்ணம் தோன்றும்! ஆனால் அவளுக்கே அதில் குழப்பம்!
வானதி, குந்தவையின் தோழி...பின்னர் தான் அறிமுகம் ஆகிறாள் கதையில்! அவரின் தீவிரக் காதலி!
நந்தினி மேடம் காதல் - கரிகாலன், வீரபாண்டியன்....வேணாம்பா...வந்தியே இவங்க கிட்ட ஒரு கட்டத்தில் மயங்கி நின்றான்!
மணிமேகலை - இவள் காதலித்தது வந்தியை! அருண்மொழியை அல்ல! கந்த மாறனின் தங்கை!
9. ரோமியோ-ஜீலியட் இவர்களைச் சேர்த்து வைக்க இந்த டூப்ளிக்கேட் விஷம் - ஐடியா கொடுத்த நண்பன் பெயர் என்ன?
Friar Lawrence என்பதே சரி!
பாரீஸ் தனவான். ஜூலியட்டை இவனுக்குத் தான் மணம் பேசுகிறார்கள்! ஆனால் இறுதியில் ரோமியோ பாரிஸைக் கொன்று விடுவான்...ஜூலியட்டின் ஸோ கால்டு கல்லறை முன்பாக!
ஆனா அவத் தான் சாகவே இல்லியே! எழுந்து வந்து பார்த்தா, ரோமியோ உண்மையான விஷம் குடிச்சி செத்துக் கிடப்பான்!
டைபால்டு என்பவன் ஜூலியட்டின் கசின் பிரதர்! பார்ட்டியில் ரோமியோவை வம்புக்கு இழுப்பான். ரோமியோவின் நண்பன் மெர்குட்டீயோவைக் கொன்று விடுவான். ஆத்திரம் அடைந்து, ரோமியோவும் டைபால்ட்டைப் போட்டுத் தள்ளீடுவான்.
ஷேக்ஸ்ப்பியர் = கதை ஆசிரியரு. அம்புட்டுத் தான்!
10. ஜீவா தான் அந்த ஹீரோ...
இவர் ஆறு வருடக் காதலி சுப்ரியா...பக்கத்த்து வீட்டுப் பெண்! பள்ளித் தோழியும் கூட! திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தது!
//நீங்க கேட்டது போலி கூகுளார் போல! :-)
ReplyDeleteஒன்னாம் நம்பர் தப்பு!//
காதல் தேவதைனு கூகிளார் சரியாத் தான் சொன்னார். நீங்க காதல் தேவனைக் கேட்டிருக்கீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போச்சு, ஒரு மார்க் போச்சு! :P
//திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தது!
ReplyDelete//
இது என்ன கொடுமை இரவிசங்கர்? கேள்வியைத் தப்பா கேட்டுட்டு இப்படி பண்ணலாமா? நான் தான் தெளிவா சொன்னேனே ஜீவா தன்னோட மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்திருந்தாருன்னு. நாட்டாமை தீர்ப்ப மாத்து. போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
//சொல்லிடலாமா? வேணாமா?
ReplyDeleteஅடச்சே....லவ்வையா சொல்லப்போற? போட்டி முடிவைத் தானே சொல்லப்போற! அதுக்கு எதுக்கு பில்டப்பு? :-)//
அவ்வ்வ்வ்வ்.......ரவி மாம்ஸ்.. இதெல்லாம் அநியாயம்..
அதிலும் எங்க தனிப்பெரும் தலைவிக்கு 10/8 க்கு பதிலா, 8/10 மார்க் குடுத்ததற்க்கு கடுமையாக எனது கண்டனங்களை பதிவு செய்துக்கொள்கிறேன்.. :)))
ReplyDelete\\குமரன் (Kumaran) said...
ReplyDelete//திருமணம் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நடந்தது!
//
இது என்ன கொடுமை இரவிசங்கர்? கேள்வியைத் தப்பா கேட்டுட்டு இப்படி பண்ணலாமா? நான் தான் தெளிவா சொன்னேனே ஜீவா தன்னோட மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்திருந்தாருன்னு. நாட்டாமை தீர்ப்ப மாத்து. போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
\\
வழிமொழிகிறேன்...:))
ஆமாம் ரவி 10வது கேள்விதப்பு. எனக்கு10//10 கொடுக்கனும்
ReplyDelete@ குமரன், கோபி, திராச....மக்கள்ஸ்
ReplyDeleteகேள்விய நல்லாப் பாருங்க! (நக்கீரா என்னை நன்றாகப் பார் - இஷ்டைலில் படிக்கவும்)
//"அண்மையில்" தமிழ் சினிமா நடிகர் ஒருவர்,..."செய்தி வந்தது"//
அண்மைன்னா = ஒரு நாலு மாசம் முன்னாடிங்க! செய்தி வந்தது-ன்னு தான் சொல்லி இருக்கேன்! சேதி வந்துச்சா இல்லியா? அதான் கேள்வி!
ஹிஹி! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதுங்க! :-)))
சரி சரி கும்மிறாதீங்க!
அதான் பரிசெல்லாம் கொடுத்தோம்ல! பொறவு என்ன? சிரிச்சிக்கிட்டே வாங்கிக்கிட்டுப் போயிடணும்! ஆமா! :-))