Sunday, February 03, 2008

புதிரா? புனிதமா?? - திருக்குறள்!

அட, என்னாங்க! கேள்வி எல்லாம் ரொம்பக் கடினமா என்ன? தொலை பேசறவுங்க எல்லாம் திட்டறாங்களே! :-)
ஆனால் இங்கிட்டு இத்தனி பேரும் அடிச்சி ஆடியிருக்கீங்க! பாராட்டுக்கள்!!

முடிவுகள் அறிவிச்சிடலாமா?
கீழே விடைகளை Bold செய்துள்ளேன்! ஒவ்வொரு கேள்விக்கும் தனியான விளக்கத்தைப் பின்னூட்டத்தில் சொல்லி விடுகிறேன்! பல குறள்களைக் குமரனே கொடுத்துட்டாரு! அனந்த லோகநாதனும் குறள்களை எடுத்துக் காட்டியிருக்காரு! இதோ வெற்றியாளர்கள்:

ஜெயஸ்ரீ, குமரன், அனந்த லோகநாதன் = 10/10
SK, வெட்டிப்பயல், வவ்வால் = 9/10
பெனாத்தல் சுரேஷ், கப்பி பய = 8/10

வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும் வாழ்த்துக்கள்! ஆர்வத்தோட பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

என்னாது பரிசா?
சரி இந்த முறை காசாக் கொடுத்திடலாமா? இந்தாங்க! :-)
பரிசேலோர் எம்பாவாய்!
2005இல் வாஷிங்டனில் நடந்த பன்னாட்டு திருக்குறள் மாநாட்டுக்கு, அப்துல் கலாம் வழங்கிய செய்தியின் அசைபடம் இதோ! அதில் தன் பணி வாழ்வில் இடம் வகித்த ஒரு குறள் பற்றிச் சொல்கிறார்!



மக்கள்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? புதிரா புனிதமா போட்டு நாளாச்சே-ன்னு சில நண்பர்கள் ஒரு வாரமா நோண்டி எடுத்துட்டாங்க!
"ஒரே சர்ச்சையும் சண்டையுமா இருக்கு! போர் அடிக்குது! சீக்கிரம் ஒரு புதிர் போடுங்க" - அப்படின்னு ஒரு நண்பர் பின்னூட்டமே போட்டு விட்டார்!

சரி...போன தபா குறுக்கெழுத்து போட்டேன்! நிறைய பேரு கலந்துகிட்டாலும், வழக்கமாக் கலந்துக்குறவங்க ஏனோ கல்தா கொடுத்துட்டாங்க!
நமக்கு எப்பவுமே "ஒரு கேள்வி-நாலு சாய்ஸ்" தான் சரிப்பட்டு வரும்-னு வேற சொல்லிட்டாய்ங்க! "ஒரு இட்லி-நாலு சட்னி"-ன்னு முருகன் இட்லிக் கடை கணக்காச் சொன்னா, நான் என்னப்பா பண்ணறது? :-)

சரி...ஒரு ஓட்டெடுப்பு வச்சிடலாம்-ன்னு வச்சாக்கா, பழைய "இஷ்டைல்" புதிரா புனிதமா தான் ஏகோபித்த வாக்குகள் பெற்று முன்னணியில் நிக்குது!

நான் தான் எப்பமே சனநாயகத்தை மதிக்கற சின்னப் புள்ளையாச்சே! குறுக்கெழுத்து போட்டு செருக்கெழுத்து புடிச்சவன்-னு எதுக்கு வீணாப் பேரு வாங்கிக்கனும்? :-)
இதோ, அதே பழைய பொலிவுடன், புதிரா புனிதமா! இன்றைய தலைப்பு - உலகப் பொது மறையாம், திருக்குறள்!


இறைவன் மனிதனுக்குத் தந்தது கீதை!
மனிதன் இறைவனுக்குத் தந்தது வாசகமும், பாசுரமும்!
ஆனால், மனிதன், மனிதனுக்குத் தந்தது திருக்குறள்!

திருக்குறள் பற்றி எவ்வளவுன்னு தான் சொல்ல முடியும்? அதான் சுருக்கமாச் சொல்லிட்டாங்க: "எல்லாப் பொருளும் இதன் பால் உள! இதன் பால் இலாத எப்பொருளும் இல்லை!"

வாத்சயாயனர் கூட, காம சாஸ்திரத்தில் உடல் இன்பத்தைப் பற்றி மட்டுமே பேச முடிந்தது! ஆனால் அதற்கு அடிப்படையாக அமைவது அன்பு! காதலுடன் கூடிய காமம் பற்றி அவரால் அதில் சொல்ல முடியவில்லை! ஐயன் வள்ளுவனே அதை முன்னிறுத்தினான்.
அறத்தால் பொருளும், பொருளால் இன்பமும் எய்தினாலே...வீடு என்னும் பேறுதல் அடையப் பெறலாம் என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி!

அதனால் தானோ என்னவோ, ஆழ்வார்களும் திருக்குறள் சொற்களைப் பாசுரங்களில் அப்படியே எடுத்தாளுகிறார்கள்.
ஊரவர் கெளவை எரு விட்டு அன்னைசொல் நீர்மடுத்து - நம்மாழ்வார்
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.


* திருவடிகளின் சிறப்பா? - கடவுள் வாழ்த்தில் பாதியே அது தான்! - ஆலயங்களில் சடாரி (திருவடி) சார்த்தும் வழக்கத்தை முன்னொரு பதிவில் பொருத்திப் பார்த்தோம் - நினைவிருக்கா?

** இல்வாழ்க்கை, மழலை இன்பமா? அடுத்தவன் மனைவி மேல் மையல் கொள்ளாமையா? Vegetarianism-ஆ? - சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் முதற்கொண்டு ஒவ்வொரு இலக்கியமும், திருக்குறளுக்கு வேர் பிடிக்க முடியும்!

*** அரசியல் உத்திகளா? போருக்குத் தயாராதலா? Tax போடுவது பற்றியா? Organic Farmingஆ? - இன்றைய காலத்துக்கும் அதில் கருத்தெடுக்க முடியும்!




எத்தனை உரைகள்? எத்தனை மொழியாக்கங்கள்?
உலகில் அதிகம் மொழியாக்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது திருக்குறள்!

அகர முதல எழுத்தெல்லாம்...என்று தமிழ் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து,
ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின் - என்று தமிழின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடிக்கிறார் ஐயன்!

பதிவர்கள் (அடியேன் உட்பட), திருக்குறள் முயற்சிகளில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும்!
"அதான் இத்தனை உரைகள் இருக்கே, போதாதா?" - என்றால் "போதாது!"
உரைகள் எல்லாம் ஏட்டில் தான்! உள்ளத்தில் கிடையாது!
தனித்தமிழ் ஆர்வலர்கள் கூட, அரசியல் குறள் அதிகாரத்தில் ஐயன் சொன்ன வண்ணமா அரசியல் செய்கிறார்கள்? :-)

அதனால் தான் குறள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!
அதற்குப் புதிது புதிதாய், காலத்துக்கு ஏற்றவாறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்! - ஓவியம், இசை, புகைப்படம், பாடல், ஆன்மீகம், புதிர் என்று பல முனைகளிலும் குறள் தொனிக்க வேண்டும்!

இந்தச் சமயத்தில் PIT குழுவினருக்கும், அண்ணன் ஓசை செல்லா மற்றும் ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கும் ஒரு வேண்டுகோள் முன்வைக்கிறேன்! முன்பே பின்னூட்டத்திலும் சொல்லி உள்ளேன்!
PIT போட்டிகளில் குறள் தலைப்புகளும் அவ்வப்போது கொடுங்கள்!
Thirukural Themes will definitely add value to your contests!

சரி வாங்க, குறள் விளையாட்டுக்குப் போவோம்! நமக்கு நம் பாட்டஞ் சொத்து எந்த அளவுக்குத் தெரிஞ்சிருக்கு-ன்னு பார்க்கலாமா? :-)
பின்னூட்டங்களில் விடையை மட்டும் சொல்லாது, அதற்குண்டான குறளையும் சேர்த்தே சொல்ல முயலுங்கள் - ஓக்கேவா? :-)
விடைகள், நாளை மாலையில் (நியூயார்க் நேரப்படி) ! ஓவர் டு வள்ளுவர்+வள்ளுவம்!


1

திருக்குறள், தமிழ் நூல்களில் எந்தப் பிரிவைச் சேர்ந்த நூல்?

1

அ) பத்துப்பாட்டு

ஆ) எட்டுத்தொகை

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) கலித்தொகை

2

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் - இது "உதடு ஒட்டாத குறள்"-ன்னு தெரியும்! ஏன்? ஒரு பொருளின் மேல் பற்று "ஒட்டிக் கொள்ளக் கூடாது" என்று சொல்ல வந்த குறள்!

அதே போல் ஒவ்வொரு சொல்லுக்கும் "உதடு ஒட்டும் குறள்" என்ன தெரியுமா? ஏன்?

2

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

இறைவன் திருவடிகளை ஒவ்வொரு நிலையிலும் விடாது பற்ற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சொல்லும் உதடு ஒட்டுமாறு செய்தார் தெய்வப் புலவர்!

3

திருக்குறளில் மொத்தம் 3 பால்கள் இருப்பது தெரியும்! - அறம், பொருள், இன்பம்.

அதே போல 133 அதிகாரங்கள்; 1330 குறட்பாக்கள் என்பதும் தெரியும்!

ஆனால் மொத்தம் எத்தனை "இயல்கள்" இருக்கின்றன? - தெரியுமா?

3

அ) 13 ஆ) 7 இ) 4 ஈ) 2

4விருந்தோம்பலுக்கு எந்தப் பூவை ஐயன் உவமை காட்டுகிறார்?

4

அ) தாமரை

ஆ) காந்தள்

இ) அனிச்சம்

ஈ) ஆம்பல்

5

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான்....

மனுதர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்து வைக்கும் முதல் தமிழ் இலக்கிய வரி இது! இந்தக் குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது?

5

அ) கொடுங்கோன்மை

ஆ) பெருமை

இ) வினைத் தூய்மை

ஈ) சான்றாண்மை

6இக்காலத்தில் நாம் குறிப்பிடும் "பாலியல் தொழிலாளர்கள்" என்னும் சொல்லை வள்ளுவர் எந்தச் சொல் கொண்டு "அதிகாரத்தில்" குறிப்பிடுகிறார்?

6

அ) மாய மகளிர்

ஆ) பொருட் பெண்டிர்

இ) இருமனப் பெண்டிர்

ஈ) வரைவின் மகளிர்

7

திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட, எத்தனை ஆண்டுகளை, ஒரு ஆங்கில ஆண்டுடன் கூட்ட வேண்டும்?

7

அ) 31 ஆ) 30 இ) 38 ஈ) 39
8

திருக்குறளில் சொல்லப்படாத விலங்கு எது?

8

அ) முதலை

ஆ) யானை

இ) நாய்

ஈ) நரி

உ)கவரிமா

9காதலில் எக்காரணம் கொண்டும் பெண்கள் செய்ய மாட்டாத செயல் என்று வள்ளுவர் எதைக் கூறுகிறார்?

9

அ) தகை அணங்கு உறுத்தல்

ஆ) அலர் அறிவுறுத்தல்

இ) பசப்புறுபருவரல்

ஈ) மடலூர்தல்

10கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - என்று திருவள்ளுவ மாலையில் சிறப்பித்துப் பாடியவர் யார்?

10

அ) ஒளவையார்

ஆ) அரிசில் கிழார்

இ) இடைக்காட்டுச் சித்தர்

ஈ) மதுரைத் தமிழ் நாகனார்


கொஞ்சம் கடினமாக் கேள்வி கேட்கலையோ-ன்னு ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கு! :-) அதுனால, இதுக்குத் தெரிஞ்சவங்க மட்டும் விடை சொல்லுங்க! போதும்! ஆட்டத்துக்கு இதைச் சேர்த்துக்கலை!

திருக்குறளில் இசைக்கருவிகள் - குழல், யாழ் - இவை இரண்டு பற்றியும் குறிப்புகள் வருகின்றன! குழல் இனிது, யாழ் இனிது என்பர் தம் மக்கள், மழலை சொல் கேளாதவர் - இது தெரிஞ்சது தான்!

அதே மாதிரி இன்னொரு குறளில், குழலூதி அந்த அழகன் என்னைக் கொல்லுறானே என்பது போல் ஒரு குறிப்பு வருகிறது! என்ன குறள்-னு சொல்லுங்க பார்ப்போம்? (உடனே, அவன் கண்ணன் தான்! வள்ளுவர் கண்ணனைப் பற்றித் தான் சொல்லி இருக்காரு-ன்னு கண்ணன் பாட்டு நண்பர்கள் எல்லாம் வம்புக்கு கெளம்பிறாதீங்கப்பா! :-))

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) பத்துப்பாட்டு ஆ) எட்டுத்தொகை இ) பதினெண்கீழ்க்கணக்கு ஈ) கலித்தொகை

2.

3 அ) 13 ஆ) 7 இ) 4 ஈ) 2
4 அ) தாமரை ஆ) காந்தள் இ) அனிச்சம் ஈ) ஆம்பல்
5 அ) கொடுங்கோன்மை ஆ) பெருமை இ) வினைத் தூய்மை ஈ) சான்றாண்மை
6 அ) மாய மகளிர் ஆ) பொருட் பெண்டிர் இ) இருமனப் பெண்டிர் ஈ) வரைவின் மகளிர்
7 அ) 31 ஆ) 30 இ) 38 ஈ) 39
8 அ) முதலை ஆ) யானை இ) நாய் ஈ) நரி உ)கவரிமா
9 அ) தகை அணங்கு உறுத்தல் ஆ) அலர் அறிவுறுத்தல் இ) பசப்புறுபருவரல் ஈ) மடலூர்தல்
10 அ) ஒளவையார் ஆ) அரிசில் கிழார் இ) இடைக்காட்டுச் சித்தர் ஈ) மதுரைத் தமிழ் நாகனார்

89 comments:

  1. 1. இ
    2.60 மங்கலம் என்ப
    3. இதன்படி 12 தான் !!
    1--4 பாயிரம்

    5--24 இல்லறவியல்

    25--37 துறவியல்

    38 ஊழியல்



    39--63 அரசியல்

    64--73 அமைச்சியல்

    74--75 அரணியல்

    76 கூழியல்

    77--78 படையியல்

    79--95 ந்நட்பியல்

    96--108 குடியியல்



    109--115 களவியல்

    116--133 கற்பியல்
    4. அனிஒச்சம் மோஓபக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து
    5.பெருமை அ. 98
    6.ஈ
    7.ஆ
    8.இ
    9. ஈ [1137]
    10.இ
    11. 1228அழல் போலும்

    ReplyDelete
  2. திருக்குறளை எழுதியவர் யார் என்பது போன்ற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டுருக்கலாம்....

    ரொம்ப ஈஸியா இருக்கு.:-)
    நான் அப்புறமா வர்றேன்.

    ReplyDelete
  3. SK தான் மொத போணியா?
    1,4,5,6,8,9,10 சரி!
    3ஆம் கேள்விக்கு விரிவான விடை சொன்ன நீங்க சரியா countஐலையா? :-) பரவாயில்லை! மார்க் போட்டாச்சு!

    11ஆம் விடையும் சரியாச் சொல்லி, கண்ணபிரான் அருளுக்குப் பாத்திரம் ஆனீர்கள்!

    SK - 8/10

    ReplyDelete
  4. 1. பதினெண்கீழ்க்கணக்கு
    2.
    3. 7 இயல்கள்
    4. பெருமை
    5. மாய மகளிர்
    7. 31
    8. நாய்
    9. மடலூர்தல்
    10. ஔவையார்

    இரண்டுக்கு மட்டும் நான் திரும்ப வருவேன்.

    ReplyDelete
  5. 2. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.

    வந்துட்டேன்

    ReplyDelete
  6. மோகன்தாஸ் அண்ணாச்சி!
    வாங்க...
    3,5,10 தவிர எல்லாமே சரி! ஆறாம் கேள்விக்குப் பதில் சொல்லலையே!

    - 6/10

    ReplyDelete
  7. //வாத்சயாயனர் கூட, காம சாஸ்திரத்தில் உடல் இன்பத்தைப் பற்றி மட்டுமே பேச முடிந்தது! ஆனால் அதற்கு அடிப்படையாக அமைவது அன்பு! காதலுடன் கூடிய காமம் பற்றி அவரால் சொல்ல முடியவில்லை! ஐயன் வள்ளுவனே அதை முன்னிறுத்தினான்.//

    தப்பு தப்பு தப்பு,

    ஒன்றை உயர்த்தி பேச மற்றொன்றை தாழ்த்தி பேசியாக வேண்டுமா ? திருக்குறள் உயர்வு என்று சொல்லுங்கள். அது சரி. ஒப்பீடு ?
    சரியில்லை.

    மற்ற நூல்களை பழிப்பதால் திருக்குறள் சிறப்படையாது. திருக்குறளை போற்றினால் மட்டுமே திருக்குறள் சிறப்படையும்.

    :)))))

    பிகு : இது சீரியஸ் பின்னூட்டம் இல்லை.

    ReplyDelete
  8. பெனாத்தலாரு தனி மடலில் வடைகள் அனுப்பிச்சி இருக்காரு!
    3,9 தவிர மற்ற எல்லாமே சரிதாங்கண்ணா!

    - 8/10

    ReplyDelete
  9. // கோவி.கண்ணன் said...
    பிகு : இது சீரியஸ் பின்னூட்டம் இல்லை.//

    ததாஸ்து! ஆமென்! அப்படியே ஆகட்டும்! :-)))

    //தப்பு தப்பு தப்பு//

    சரி சரி சரி! :-))

    //ஒன்றை உயர்த்தி பேச மற்றொன்றை தாழ்த்தி பேசியாக வேண்டுமா ?//

    காம சாஸ்திரத்தைத் தாழ்த்தவில்லையே கோவி அண்ணா!
    அவரால் உடல் இன்பத்தைப் பற்றி மட்டுமே பேச முடிந்தது!
    காதலுடன் கூடிய காமம் பற்றி ஐயன் வள்ளுவனே முதலில் முன்னிறுத்தினான் என்று தானே சொன்னேன்!

    பொதுவா
    அறம் = தர்ம சாஸ்திரம்
    பொருள் = அர்த்த சாஸ்திரம்
    இன்பம் = காம சாஸ்திரம்
    என்று தனித் தனி நூல்களாகத் தான் பல மொழிகளில் இருக்கு!

    அனைத்தும் ஒருங்கிணைந்த நூல் என்றால் அது குறள் தான் என்பதே சொல்ல வந்தது!

    ReplyDelete
  10. //திருக்குறளை எழுதியவர் யார் என்பது போன்ற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டுருக்கலாம்....

    ரொம்ப ஈஸியா இருக்கு.:-)
    நான் அப்புறமா வர்றேன்.//

    அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய் ..
    நானும் அப்பாலிக்கா வரேன் ... :)

    ReplyDelete
  11. 1 இ) பதினெண்கீழ்க்கணக்கு
    2.
    3 ஆ) 7
    4 இ) அனிச்சம்
    5 ஆ) பெருமை
    6
    7 அ) 31
    8 ஆ) யானை
    9 ஈ) மடலூர்தல்
    10

    இதுக்குமேலே தெரியலை.

    அதெல்லாம் மயிலை மன்னார் சொல்லி இருப்பார். அதுக்கு ரிப்பீட்டு போட்டுக்குங்க:-))))

    ReplyDelete
  12. கண்ணபிரான் மொத்தம் 7 இயல்கள் தானே இருக்கின்றன அதைத்தானே சொன்னதாக ஞாபகம் தவறாக சொல்லியிருந்தேனா?

    இல்லறவியல், துறவறவியல், அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல், களவியல், கற்பியல்.

    3. 7 இயல்கள்
    5. 2. பொருட்பால் - 2.4 ஒழிபியல் அதிகாரம்(அதிகாரமா கேட்டீங்க!)
    10. மதுரைத் தமிழ் நாகனார்.

    முடிந்துவிட்டதா?

    ReplyDelete
  13. ச்ச, திரும்பவும் 6ஐ விட்டுட்டேன்.

    ஹிஹி

    6. அ) மாய மகளிர்

    ReplyDelete
  14. 1. இ) பதினெண்கீழ்க்கணக்கு
    2. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு
    3. ஆ 7 இயல்கள்
    4. இ) அனிச்சம்
    5. ஆ) பெருமை
    6. ஈ) வரைவின் மகளிர்
    7. அ) 31
    8. இ)நாய்
    9. ஈ) மடலூர்தல
    10. இடைக்காடனார்

    ReplyDelete
  15. டீச்சருக்கே மார்க்கா?
    திருநெல்வேலிக்கே அல்வா-வா?
    திருப்பதிக்கே லட்டா?
    சூரியனுக்கே டார்ச் லைட்டா?
    என்ன கொடுமை கே.ஆர்.எஸ்! :-)

    1,4,5,7,9 சரிங்க டீச்சர்!
    -5/10

    யானையா? உங்க ஃபேவரிட்-டை வள்ளுவர் விட்டுடுவாரா என்ன?

    ReplyDelete
  16. // //திருக்குறளை எழுதியவர் யார் என்பது போன்ற கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டுருக்கலாம்....

    ரொம்ப ஈஸியா இருக்கு.:-)
    நான் அப்புறமா வர்றேன்.//

    அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய் ..
    நானும் அப்பாலிக்கா வரேன் ... :) //

    ரிரிரிரிரிப்பீட்டு :)

    ReplyDelete
  17. மோகன்தாஸ் அண்ணே
    அறத்துப் பாலில் ரெண்டே இயல் தானா? இல்லையே! பொருட்பாலில் இன்னும் நிறைய இயல் உள்ளனவே!

    திருவள்ளுவ மாலையில் நான் கேட்டது கடுகு! அணு இல்லை! :-)

    மகளிர் பற்றிய விடை தவறு!

    ஓ...5ஆம் கேள்விக்கான விடையை, 4. என்று எடுத்து எழுதிட்டீங்க! ஆனால் விடை சரி தான்!

    அப்படின்னா, நீங்க சொல்லாமல் விட்ட கேள்வி - 4. என்ன பூ?

    ReplyDelete
  18. ஜெயஸ்ரீ...
    கலக்கிட்டீங்க! - 9/10

    மேலோட்டமாப் பார்த்தா எத்தனை இயல்களுக்கான விடையை எல்லாரும் ஒரே மாதிரியாச் சொல்லுறீங்க! ஆனால் இன்னும் இயல்கள் இருக்கு! SK மட்டுமே சரியான பதில் சொல்லி உள்ளாரு!

    அறத்துப் பாலில் மட்டுமே ரெண்டுக்கும் மேற்பட்ட இயல்கள் இருக்கே!

    ReplyDelete
  19. முக்கிய அறிவிப்பு:
    (தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கணும்-னு ரொம்ப நாளா ஆசை! :-)

    பொருட்பாலில் பழைய நூல்களில் (பரிமேலழகர்) மூன்று இயல்கள் மட்டுமே காணப்படுகின்றன!

    மணக்குடவர், பின்னால் வந்த மு.வ, கலைஞர் உரைகளில் எல்லாம் இன்னும் அதிக இயல்கள் காணப்படுகின்றன!

    எனவே இதற்கு இரண்டு சரியான விடைகள் இருப்பதால், இரண்டிற்குமே மதிப்பெண் வழங்கி விடலாம்! அப்படிப் பார்த்தால்...
    இதுவரை
    sk - 8/10
    penathalar - 9/10
    mohandoss - 7/10
    tulasi teacher - 6/10
    Jeyashree - 10/10

    இரண்டில் ஏதாச்சும் ஒன்னு சரியாச் சொல்லி இருக்கனும்! கருணை மதிப்பெண்கள் எல்லாம் கிடையாது! :-)

    ReplyDelete
  20. குழல் பற்றிய குறளை SK தவிர யாருமே சொல்லலையேப்பா!

    மலர், விலங்குக்குப் பதில் சொன்னவங்க எல்லாம் அந்தந்த விலங்கு பற்றிய குறளை உடனே எடுத்து விடுங்க! இல்லாக்காட்டி அந்த விலங்குகளை உங்க மேல் ஏவி விட்டுடுவேன் என்று பயமுறுத்திக் கொள்கிறேன்! :-)))

    ReplyDelete
  21. கண்ணபிரான் ரவிசங்கர்,
    எனக்கு தெரிந்தவரைக்கும் பதில்கள் சொல்லியுள்ளேன், ஆனால் சில ஆங்காங்கே மாறியும் சொல்லி இருக்காங்க,
    எனவே எதை சரி என்று எடுத்துக்கிறதுனு தெரியலை, உ.ம். திருவள்ளுவர் ஆண்டுக்கு சில இடத்தில் 30 சேர்க்க வேண்டும் என்கிறார்கள், ஆனால் நான் 31 ஐ தான் கணக்கில் வைப்பேன்.


    1)இ) பதினெண்கீழ்க்கணக்கு
    2)பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு
    3)அ) 13
    4)இ) அனிச்சம்
    5)ஆ) பெருமை
    6)அ) மாய மகளிர்

    ஆ) பொருட் பெண்டிர்

    இ) இருமனப் பெண்டிர்

    7)அ) 31
    8)இ) நாய்
    9)ஆ) அலர் அறிவுறுத்தல்(இது கொஞ்சம் சந்தேகம் தான் )
    10)இ) இடைக்காட்டுச் சித்தர்(இடைக்காடர் என்றாலும் இவர் தானே?))

    ReplyDelete
  22. ஏற்கனவே இரண்டு தடவை முயற்சி செய்துட்டதாலே நான் ஆட்டத்திலிருந்து அபேஸ் ஆகிறேன்.

    :)

    ReplyDelete
  23. வாங்க வவ்வால்
    கே.ஆர்.எஸ் ன்னு நண்பர்கள் எல்லாரும் சொல்லுறாங்க! ரவி-ன்னு கூப்பிட்டுக்கலாம்! நீங்க முழுப்பெயரையும் மூச்சு விடாமச் சொல்லுறத பார்த்தா எனக்கே பாவமா இருக்கு! :-)))

    அடிச்சி ஆடி இருக்கீங்க!
    6,9 தவிர எல்லாமே சரி!
    ஆறாம் கேள்விக்கு மூனு சாய்சும் கொடுத்திருக்கீங்களே! காபி&பேஸ்ட் பிழையா?

    - 8/10

    ReplyDelete
  24. ரவி,

    3.பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று.
    8.ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப
    மாய மகளிர் முயக்கு.
    10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு.

    வரைவின் மகளிர் என்று அதிகார தலைப்பு, ஆனால் அந்த அதிகாரத்தில் இந்த மூன்று சொற்களையும் பயன்படுத்தி இருக்கார்.

    நீங்க கேட்டக்கேள்வியை சரியாக புரிந்துக்கொள்ளாமல் சொல்லிவிட்டேன் போல, அதிகார தலைப்பு எனில் வரைவின் மகளிர் தான்!

    தனியாக கேட்ட குழல் ஊதிக்கொள்ளும் ... குறல் இது தானா

    "அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை."

    ReplyDelete
  25. மன்னிக்கவும்
    வவ்வால் - ஆட்டத்தில் சேர்க்கப்படாத பதினோராம் கேள்விக்கும் சரியான விடையைத் தந்து விட்டார்! அதனால் 10/10 என்று சொல்லி விட்டேன்!

    உண்மையில் 9/10!
    (ஒன்பதாம் விடை தவறு!)

    ReplyDelete
  26. aaha aaha :) thirukural pathi kalakalaana post !

    ReplyDelete
  27. ரவி,
    //அனைத்தும் ஒருங்கிணைந்த நூல் என்றால் அது குறள் தான் என்பதே சொல்ல வந்தது!//

    நாலடியார்னு ஒரு நாலுவரி நீதி நூல் இருக்கு , திருக்குறள் என்ன சொல்லுதோ அதையே , அதே போல அறம்,பொருள்,இன்பம் என்று கொண்டுள்ளது. தற்செயலாக முந்தா நாள் நாலடியாரை எடுத்துப்புரட்ட நேரிட்டதால் நினைவுக்கு வந்தது(நாலு பக்கம் மட்டுமே படித்தேன் அதுக்குள்ள தூக்கம் வந்திடுச்சு!).

    ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,
    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பதில் வரும் நாலு ,நாலடியார், இரண்டு, குறள்!

    உங்களுக்கே தெரிந்திருக்கும் சும்மா நினைவுப்படுத்தினேன்!

    நாலடியார் எழுதியதும் சமண முனிவர்கள் என்று போட்டு இருக்கு, ஆனால் தனித்து ஒரு ஆசிரியர் யாரும் இல்லைப்போல.

    //உண்மையில் 9/10!
    (ஒன்பதாம் விடை தவறு!)//

    எத்தனை சரியா சொன்னோம் முக்கியமில்லை, முயற்சி செய்தோம் என்பது தான் முக்கியம் :-))

    ReplyDelete
  28. 1. இ) பதினெண்கீழ்க்கணக்கு

    2. பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    3. ஆ) 7. அறத்துப்பாலில் இல்லறவியல், துறவறவியல் என்று இரண்டு இயல்கள். பொருட்பாலில் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்று மூன்று. இன்பத்துப்பாலில் களவியல், கற்பியல் என இரண்டு. அறத்துப்பாலில் பாயிரம் என்று ஒரு பகுதியில் நான்கு அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவை இயலில் கணக்கெடுக்கப்படுவதில்லை. (நன்றி: விக்கிபீடியா)

    4. இ) அனிச்சம்.
    மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.

    5. ஆ) பெருமை. பொருட்பாலில் ஒழிபியலில் பெருமை என்னும் அதிகாரத்தில் வரும் குறள்.

    6. ஈ) வரைவின் மகளிர்

    7. அ) 31

    8. அ) முதலை

    9. ஈ) மடலூர்தல்

    10. இ) இடைக்காட்டுச் சித்தர். இடைக்காடர் என்று தெரியும். அவரும் இடைக்காட்டுச் சித்தரும் ஒருவரோ?

    ReplyDelete
  29. //அதனால் தானோ என்னவோ, ஆழ்வார்களும் திருக்குறள் சொற்களைப் பாசுரங்களில் அப்படியே எடுத்தாளுகிறார்கள்.
    //

    ஆழ்வார்கள் மட்டுமில்லை இரவிசங்கர். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரை (வியாக்கியானம்) எழுதியவர்களும் திருக்குறளைப் பல இடங்களில் எடுத்துக்காட்டுகளாய்த் தந்திருக்கிறார்கள் என்பது தான் உங்களுக்கும் தெரியுமே. :-)

    ReplyDelete
  30. எத்தனை இயல்ன்னு கேட்டதற்கு ஏழுன்னு நான் பதில் சொல்லியிருக்கேன் - விக்கிபீடியா சொன்ன மாதிரி. இன்னொரு இடத்துல பத்துன்னு பிரிச்சிருக்காங்க. மதுரைத் திட்டத்துல சொன்னவை - அறத்துப்பால்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்; பொருட்பால்: அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல்; இன்பத்துப்பால்: களவியல், கற்பியல்.

    ReplyDelete
  31. நீங்க சொல்ற குழலூதி மனமெல்லாம் கொள்ளைக் கொள்ளும் குறள் இது தானே?!

    அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.

    ReplyDelete
  32. திருத்தம்.

    8. இ) நாய்

    ReplyDelete
  33. ஒன்பத்ம் கேள்விக்குரிய குறள்

    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.

    ReplyDelete
  34. குமரன்

    விலங்கு விடையைத் தவிர அனைத்துமே சரி தான்!
    பதினோராம் கேள்விக்கு உண்டான விடையும் சரியே!!

    - 9/10

    விடைகளைக் குறளோடு தந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  35. எட்டாம் கேள்விக்கான குறட்பாக்கள்:

    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.

    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெருஉம் புலிதாக் குறின்.

    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

    காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு.

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.

    ReplyDelete
  36. குறட்பாக்களைத் தேடிய போது முதலில் சொன்ன விடைக்குக் குறள் கிடைத்தது. அதனால் பதிலைத் திருத்தித் தந்திருக்கிறேன். இரண்டாவது முறை முயலலாம் என்றால் அந்த விடையை ஏற்றுக் கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  37. எப்பவுமே கூகுளாரோ/விக்கியோ உதவிக்கு வர மாட்டாங்க என்பதற்கு இந்த "எத்தனை இயல்கள்" கேள்வி தான் சான்று! :-)

    அறத்துப்பால் = பாயிரம்...சிலர் கணக்குல சேர்த்துக் கொள்வதில்லை!
    ஆனால் பழம்பெரும் உரையாசிரியர் மணக்குடவர் சேர்த்துக் கொள்கிறார்!
    மு.வ./கலைஞர் உரையிலும் சேர்த்துக் கொள்கிறார்கள்!

    அதே போல் பொருட்பால்! - படை, குடி, நட்பு என்றும் விரித்துக் கொள்கிறார்கள்!

    இன்பத்துப் பால் தான் பிரச்சனையே இல்லை! :-)

    ReplyDelete
  38. குமரன் பத்துக்குப் பத்தே!
    வாழ்த்துக்கள்!

    ரவுண்டு கட்டி அடிக்கிறாரு! விலங்குகள் மேல் உள்ள குறள் எல்லாம் சொல்லிப்புட்டாரு!

    அடுத்து அவர் கிட்ட திருக்குறளில் வரும் பூவெல்லாம் கேட்கலாம்-னு இருக்கேன்! :-)

    ReplyDelete
  39. ஏற்கனவே இரண்டு பேர் 10/10 வாங்கி விட்டதால், நான் ஆட்டத்திலிருந்து அபேஸ். ஹிஹி வேற ஒண்ணும் இல்ல, ஆணி நிறைய:-( ஆட்டத்தில் இருக்கும், சேரப் போகும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  40. Phone Interview கேள்விப்பட்டிருக்கேன்!
    ஆனால் Phone Puthira Punithama இப்ப தான் கேள்விப்படுறேன் :-)

    வெட்டிப்பயல் பாலாஜி - 7/10
    6,9,10 தவிர மற்ற எல்லாமே சரி தான்!

    ReplyDelete
  41. 1. பதினெண் கீழ்கணக்கு
    2. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு
    3. ஏழு (இல்லறவியல், துறவியல், அரசியல், அமைச்சு இயல், ஒழிபு இயல், களவியல், கற்பியல்)
    4. அனிச்சம்
    5. பெருமை
    6. பொருட்பெண்டிர்
    7. (out of syllabus - இதற்கு விடை திருக்குறளில் இருக்காது) - இருந்தாலும் 30
    8. நாய்
    9. ???
    10. இடைக்காட்டுச் சித்தர்

    ReplyDelete
  42. வாங்க ஜீவா
    6,7,9 தவிர எல்லாமே சரி!
    ஏழாம் கேள்விக்கு விடை காலண்டரில் இருக்கே! ஈசியா கண்டுபுடிச்சிடலாம்! :-)

    - 7/10

    ReplyDelete
  43. சொல்லத் தான் நினைக்கிறேன்!

    பின்னூட்டம் போடத் தான் துடிக்கிறேன்!

    வலைப்பூவிருந்தும் விடை தெரியமால் முழிக்கிறேன்..:-)

    இதுவும் காப்பி பேஸ்ட் தான் தல :))

    ஏதே எனக்கு தெரிந்த பதில்

    1. இ
    3. அ
    4. இ
    5. ஈ
    10. ஈ

    ReplyDelete
  44. கோபி அண்ணே
    வாங்க வாங்க...என்ன லிமிடெட் மீல்ஸா? 5 தான் ட்ரை பண்ணி இருக்கீங்க!
    5&10 தப்பு.
    1,3,4 சரி தான்!
    -3/10

    ReplyDelete
  45. 1. பதினெண்கீழ்க்கணக்கு
    2. 'பற்றுக பற்றற்றான்'ன்னு ஆரம்பிக்கும் குறள்..(முழுசா சொல்ல கேட்டுடாதீங்க :D)
    3.13
    4.அனிச்சம் (மோப்பக்குழையும்..)
    5.
    6.வரைவின் மகளிர்
    7.30
    8. நாய்??
    9.
    10. இடைக்காட்டு சித்தர்

    ReplyDelete
  46. தெய்வமே கப்பி! ஆன்மீகப் பந்தல் பக்கம் வந்திருக்கீங்களா! சூப்பரோ சூப்பர்!
    யாரங்கே! செவத்த கோழி அடிச்சி சூப்பு வைங்கடே! குறும்பாட்டைப் புடிச்சி குருமா வைங்கடே! :-)))

    நீங்க சொன்னதுல 7ஆம் கேள்வி தவிர எல்லாமே சரி தான் தல! அதுவும் ஜஸ்டு மிஸ்! 5&9-Blank!

    so, 7/10

    ReplyDelete
  47. //செவத்த கோழி அடிச்சி சூப்பு வைங்கடே! குறும்பாட்டைப் புடிச்சி குருமா வைங்கடே! :-)))
    //

    தெய்வமே..யாருக்கு இதெல்லாம்??? இப்பிடி ஒரேயடியா ரத்தக்களரியா ஆர்டர் பண்ணா எப்படி??? இலை தழைல எதுனா சொல்லு நைனா :))))

    7 தப்பா?? 31 இல்லியா? :S

    ReplyDelete
  48. 6 ஈ) வரைவின் மகளிர் (கேள்வியை சரியா படிக்காம விட்டுட்டேன்)
    9.ஈ) மடலூர்தல்
    10. ஈ) மதுரைத் தமிழ் நாகனார்

    ReplyDelete
  49. கேள்வியெல்லாம் ரொம்பப் பிரமாதமா இருக்கு. கேள்வின்னா இப்பிடித்தான் இருக்குனங்குற மாதிரிக் கேள்விகளை நீங்க கேட்டுருக்கீங்க. கேள்வி கேக்குறதுக்கு உங்களுடைய கேள்விகள் சிறந்த எடுத்துக்காட்டுகளா அமையும். :)

    // இறைவன் மனிதனுக்குத் தந்தது கீதை!//

    அப்படீங்குறீங்க? சரி. :)

    // மனிதன் இறைவனுக்குத் தந்தது வாசகமும், பாசுரமும்! //

    அப்ப திருப்புகழு, தேவாரமெல்லாம் என்னங்க? :)

    // திருவடிகளின் சிறப்பா? - கடவுள் வாழ்த்தில் பாதியே அது தான்! - ஆலயங்களில் சடாரி (திருவடி) சார்த்தும் வழக்கத்தை முன்னொரு பதிவில் பொருத்திப் பார்த்தோம் - நினைவிருக்கா? //

    இருக்கு இருக்கு. :)

    // குழலூதி அந்த அழகன் என்னைக் கொல்லுறானே என்பது போல் ஒரு குறிப்பு வருகிறது! என்ன குறள்-னு சொல்லுங்க பார்ப்போம்? (உடனே, அவன் கண்ணன் தான்! வள்ளுவர் கண்ணனைப் பற்றித் தான் சொல்லி இருக்காரு-ன்னு கண்ணன் பாட்டு நண்பர்கள் எல்லாம் வம்புக்கு கெளம்பிறாதீங்கப்பா! :-))//

    எனக்கென்னவோ அப்படித்தான் இருக்கும்னு தோணுது ;)

    என்னது கேள்விகளுக்கு விடையா? விடையேறும் பெம்மான் குமரந்தான் இதெல்லாம் சொல்ல முடியும். நான் ஜூட்................ :)

    ReplyDelete
  50. 1) C)பதினெண்கீழ்க்கணக்கு
    2) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு


    பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்பதால், ஒவ்வொரு வார்த்தையும் உதடு ஒட்டும் வகையில் அமைக்கப்பட்டது

    3) ஆ)13
    இல்லறவியல்,பாயிரவியல் , துறவறவயல்,ஊழியல்,அரசியல் , அமைப்ப்யில் , ஒழிபுயியல் , களவியல் , கற்புயியல்,படையில், நட்பியல், கூழியல்,குடியியல்

    4) இ) அனிச்சம்

    மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.

    (விடை இது இல்லாமல் வேறு ஏதாவது உள்ளதா. கேள்வி எனக்கு புரியலையா ? :)

    5) ஆ)பெருமை
    6) ஆ) பொருட்பென்டிர்
    7) அ) 31
    8) இ) நாய்
    9) மடலூர்தல்
    10) ஒவையார்

    ReplyDelete
  51. கப்பி, ஏழாம் கேள்விக்கு இப்போ கரீட்டாச் சொல்லிட்டப்பா!
    -8/10

    ReplyDelete
  52. வெட்டி
    6,9 ஜரி! 10 மறுபடியும் மிஸ்! - 9/10

    ReplyDelete
  53. அனந்த லோகநாதன், சும்மா அடிச்சி ஆடி இருக்கீங்க!
    எல்லாக் கேள்விக்கும் குறளையும் கொடுத்து இருக்கீங்க!
    இரண்டாவதுக்கு விளக்கமும் சொல்லி இருக்கீங்க!

    6&10 மட்டும் தான் மிஸ்!
    - 8/10

    ReplyDelete
  54. எதுக்குங்க எனக்கு தப்பு எல்லாம் போடுறீங்க. விடை சரியான தானெ சொன்னேன் (அப்பாவி ஆனந்த லோ. )

    6) அதிகாரம் - வரைவின் மகளிர்
    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று.

    அப்போ கேள்வி எந்த அதிகாரத்தில் என்று இருக்க வேண்டும் ஆனால் எந்தச் சொல் கொண்டு "அதிகாரத்தில்" ந்னு இருக்கு.

    10) ஒளவையார் தானெ சொன்னேன் , ஏன் ,எதுக்கு தப்பு.

    பள்ளியில் தான் மார்க் வாங்க முடியலை நம்மால இங்கயுமா.

    ReplyDelete
  55. //பழைய "இஷ்டைல்" புதிரா புனிதமா தான் ஏகோபித்த வாக்குகள் பெற்று முன்னணியில் நிக்குது!//

    குறுக்கெழுத்து பிடிக்கும்ன்னு சொல்றவங்களுக்குக் கள்ள வாக்கு போடத் தெரியாது போலிருக்கு.

    ReplyDelete
  56. மன்னிக்கவும்

    10 க்கு வடை இடைகாடார்.

    ReplyDelete
  57. அனந்த்
    அப்படிப் பாடினது ஒளவையார் இல்லீங்க!
    ஓ...இன்னொரு அட்டெம்ப்டா..சரி..6,10 ஆம் கேள்விக்கு இப்போ சரியாச் சொல்லிட்டீங்க!

    - பத்துக்குப் பத்தே! :-)

    ReplyDelete
  58. 1. திருக்குறள், தமிழ் நூல்களில் எந்தப் பிரிவைச் சேர்ந்த நூல்?

    பதினெண் கீழ்க் கணக்கு என்பதே சரி!
    மொத்தம் பதினெட்டு நூல்கள்!
    நீதி நூல்கள்:
    1 திருக்குறள்
    2 நாலடியார்
    3 நான்மணிக்கடிகை
    4 இன்னா நாற்பது
    5 இனியவை நாற்பது
    6 திரிகடுகம்
    7 ஆசாரக்கோவை
    8 பழமொழி நானூறு
    9 சிறுபஞ்சமூலம்
    10 ஏலாதி
    11 முதுமொழிக்காஞ்சி

    அகத்திணை நூல்கள்:
    12 ஐந்திணை ஐம்பது
    13 திணைமொழி ஐம்பது
    14 ஐந்திணை எழுபது
    15 திணைமாலை நூற்றைம்பது
    16 கைந்நிலை
    17 கார் நாற்பது

    புறத்திணை நூல்:
    18 களவழி நாற்பது

    மற்ற சாய்ஸ்களில் தரப்பட்ட
    கலித்தொகை = இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று

    எட்டுத்தொகை
    நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
    கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
    இத்திறத்த எட்டுத் தொகை

    பத்துப்பாட்டு:
    திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு

    இதில் பல நூல்களைச் சுவடிகளில் இருந்து அச்சுக்குக் கொண்டு வந்த பெருமை உவேசா அவர்களையே சாரும்! அத்தனை தமிழரும் இவருக்குக் கடன்பட்டுள்ளார்கள்! அன்னாரின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் என்று தான் நினைக்கிறேன்!

    ReplyDelete
  59. 1 இ) பதினெண்கீழ்க்கணக்கு
    2.
    3 ஆ) 7
    4 இ) அனிச்சம்
    5 ஆ) பெருமை
    6 ஈ) வரைவின் மகளிர்
    7 அ) 31
    8 இ) நாய்
    9 ஈ) மடலூர்தல்
    (கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.)
    10 இ) இடைக்காட்டுச் சித்தர்

    11. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.

    ReplyDelete
  60. //அன்னாரின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் என்று தான் நினைக்கிறேன்! //

    பெரியவர்கள் பிறக்கும் மாதம் பிப்ரவரிதான். அதில் சந்தேகம் என்ன?

    ReplyDelete
  61. 2
    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    இறைவன் திருவடிகளை ஒவ்வொரு நிலையிலும் விடாது பற்ற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு சொல்லும் உதடு ஒட்டுமாறு செய்தார் தெய்வப் புலவர்!
    -------------------------------

    3. இயல்கள்
    பரிமேலழகர் கணக்குப்படி மொத்தம் ஏழு!
    அறத்துப்பால்:
    1. இல்லறவியல்
    2. துறவியல்
    பொருட்பால்:
    3. அரசியல்
    4. அங்கவியல் (உறுப்பியல்)
    5. ஒழிபியல்
    இன்பத்துப்பால்
    6. களவியல்
    7. கற்பியல்

    அந்நாளைய மணக்குடவர், இந்நாளைய முவ, கலைஞர், மற்றும் எல்லா உரையாசிரியர் கணக்குப்படி 13
    அறம்:
    1. பாயிரவியல்
    2. இல்லறவியல்
    3. துறவறவியல்
    4. ஊழியல்
    பொருள்:
    5. அரசியல்
    6. அமைச்சு இயல்
    7. அரண் இயல்
    8. கூழ் இயல்
    9. படை இயல்
    10. நட்பு இயல்
    11. குடி இயல்
    இன்பம்:
    12. களவியல்
    13. கற்பியல்

    இதில் இன்னொரு வசதியும் உண்டு
    13 இயல்,
    133 அதிகாரம்
    1330 குறள்
    என்று எல்லாமே 13-ஆக வந்து விடும்!
    ------------------------

    4.
    விருந்தோம்பலுக்கு எந்தப் பூவை ஐயன் உவமை காட்டுகிறார்?

    அனிச்சம் பூ! இதுக்கு ஆங்கிலத்தில் என்னன்னு யாராக்காச்சும் தெரியுமா? படம், சுட்டி இருந்தால் கொடுங்களேன்!

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

    அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

    ReplyDelete
  62. இரண்டு பரிசுகளையும் பெற்று கொண்டேன் இரவிசங்கர். நன்றிகள். முதல் பரிசினை கூடலில் இட்டு வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  63. //குமரன் (Kumaran) said...
    இரண்டு பரிசுகளையும் பெற்று கொண்டேன் இரவிசங்கர். நன்றிகள். முதல் பரிசினை கூடலில் இட்டு வைத்திருக்கிறேன்//

    குமரன், பார்த்தேன்! காசைக் கரெக்டான இடத்தில் தான் சேமிச்சி வச்சிருக்கீங்க!:-)

    உடுக்கை இழந்தவன் கை - பார்ட் 3 எங்கே?

    ReplyDelete
  64. 5.
    பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு ஒவ்வா செய் தொழில் வேற்றுமையான்....

    மனுதர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்து வைக்கும் முதல் தமிழ் இலக்கிய வரி இது! இந்தக் குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது?

    பெருமை என்ற அதிகாரத்தில் தான் வருகிறது! இதை "பெருமை" என்ற அதிகாரத்தில் ஏன் வைத்தார் என்று ஊகிக்க முடிகிறதா? "சான்றாண்மை"-இல் கூட வைத்திருக்கலாமே?
    -------------------------------
    6.
    இக்காலத்தில் நாம் குறிப்பிடும் "பாலியல் தொழிலாளர்கள்" என்னும் சொல்லை வள்ளுவர் எந்தச் சொல் கொண்டு "அதிகாரத்தில்" குறிப்பிடுகிறார்?

    வரைவின் மகளிர் என்னும் அதிகாரத்தில் தான் சொல்லி உள்ளார்.
    மற்ற பெயர்களான பொருட் பெண்டிர், மாய மகளிர் எல்லாம் குறட்பாக்களில் வந்தாலும், அதிகாரத்தின் பெயர் "வரைவின் மகளிர்" தான்!

    வரைவு=திருமணம்
    வரைவு+இல்லாத மகளிர்=வரைவின் மகளிர்
    அந்தக் காலத்துல குடிப் பெண்கள் எல்லாரும் திருமணம் செஞ்சிக்காம பேச்சிலரட்டாக எல்லாம் இருக்க மாட்டாங்க போல! அதான் இப்படி ஒரு சொல்லைக் கையாண்டுள்ளார்.

    ---------------------------------
    7.
    திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட, எத்தனை ஆண்டுகளை, ஒரு ஆங்கில ஆண்டுடன் கூட்ட வேண்டும்?

    31 என்பதே சரி!
    2008 என்றால் 2039ன்னு காலண்டர்-ல போட்டிருக்கே! பார்க்கலையா? :-)

    வள்ளுவர் இயேசு பிறப்பதற்கு முப்பது ஆண்டுகள் முன்னர் பிறந்தார் என்பது மறைமலை அடிகள் கணக்கீடு!

    ReplyDelete
  65. 8.
    திருக்குறளில் சொல்லப்படாத விலங்கு எது?

    நாய் தானுங்க! நன்றி அதிகாரத்தில் ஐயன் இதை எப்படி விட்டுட்டாரு-ன்னு தெரியலை! :-)

    மத்த விலங்குகளின் குறட்பாக்கள்!

    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.

    பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெருஉம் புலி தாக்குறின்.

    வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.

    காலாழ் களரில் நரி அடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு.

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.
    ------------------------------

    9.
    காதலில் எக்காரணம் கொண்டும் பெண்கள் செய்ய மாட்டாத செயல் என்று வள்ளுவர் எதைக் கூறுகிறார்?

    மடல் ஏறுதல் என்பதே சரியான விடை.
    அந்தக் காலத்தில் தன் காதலியைத் தனக்கு கட்டி வைக்க பெற்றோரோ/உற்றோரோ மறுத்தால் காதலன் மடல் ஏறுவான்.

    மடல்-ன்னா பொம்மைக் குதிரை. அதில் ஏறி ஊருலா வரும் காதலனை ஊர் மக்கள் பழித்துப் பேசினாலும், பின்னர் அவன் நிலை கண்டு இரங்கிக் கட்டி வைப்பார்கள்! (கண்ணாலம் தான் ஓடிப் போயிக் கட்டிக்கலாமா-ன்னு அப்ப யாரும் பாட்டெழுதல போல இருக்கு :-)

    இதைப் பெண்கள் செய்யவே கூடாது என்பது அக்கால ஒழுக்கக் கொள்கைகளுள் ஒன்று! ஆண்கள் கூட இறுதியாகத் தான் இதைச் செய்வார்கள் (last option)!

    ஆனால் ஐயன் சொன்ன இந்தக் கற்புக் கொள்கையை முதலில் உடைச்சி எறிஞ்சவர் யாரு தெரியுங்களா? நம்ம புரட்சித் தலைவர் - திருமங்கை ஆழ்வார் தானுங்கோ! அவர் பாசுரத்தில் தான் பொண்ணு முதலில் மடல் ஏறுவாள்!

    -----------------------------------

    10
    கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - என்று திருவள்ளுவ மாலையில் சிறப்பித்துப் பாடியவர் யார்?

    கடுகைத் துளைத்து-ன்னு பாடியது இடைக்காடர்/இடைக்காட்டுச் சித்தர்-இருவரும் ஒருவர் தான்!

    அணுவைத் துளைத்து-ன்னு பாடியது ஓளவை.

    மதுரைத் தமிழ் நாகனார் பாடியது "எல்லாப் பொருளும் இதன் பால் உள"

    ReplyDelete
  66. //குழலூதி அந்த அழகன் என்னைக் கொல்லுறானே என்பது போல் ஒரு குறிப்பு வருகிறது! என்ன குறள்-னு சொல்லுங்க பார்ப்போம்?//

    அழல்போலும் மாலைக்குத் தூதாகி "ஆயன்"
    குழல்போலும் கொல்லும் படை!

    ஆயனின் குழல் போல் கொல்லுதாம் மாலைப் பொழுது!
    அந்தக் காலத்தில் மாடு மேய்க்கும் ஆயனர்கள் எல்லாம் "கண்ணனைப் போலவே" குழல் வாசிப்பாங்களா என்ன? ஜிரா - ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா? :-))

    ReplyDelete
  67. //வவ்வால் said...
    திருவள்ளுவர் ஆண்டுக்கு சில இடத்தில் 30 சேர்க்க வேண்டும் என்கிறார்கள், ஆனால் நான் 31 ஐ தான் கணக்கில் வைப்பேன்//

    வவ்வால்,
    விளக்கம் கொடுத்தாச்சி! பாருங்க!
    30 = இயேசு பிறப்பதற்கு முப்பது ஆண்டுக்கு முன் வள்ளுவர் பிறப்பு!
    அதனால் கூட்டும் போது
    31 ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்!

    ////உண்மையில் 9/10!
    (ஒன்பதாம் விடை தவறு!)//

    //எத்தனை சரியா சொன்னோம் முக்கியமில்லை, முயற்சி செய்தோம் என்பது தான் முக்கியம் :-))//

    முயல்வாருள் எல்லாம் தலை! :-)
    கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  68. //வவ்வால் said...
    (நாலு பக்கம் மட்டுமே படித்தேன் அதுக்குள்ள தூக்கம் வந்திடுச்சு!).//

    நாலடியார்-ன்னா நாலு நாலு பக்கமாத் தான் படிப்பீங்களா? :-)

    //ஆலும் வேலும் பல்லுக்குறுதி ,
    நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி//

    ஆமாங்க! திருக்குறள் போல் இது ஏனோ, அவ்வளவு பிரபலம் ஆகவில்லை! ஒருவரா எழுதாம, பல சமண முனிவர்கள் எழுதிப் பின்னால் தொகுத்து இருக்கலாம்.

    வள்ளுவர் சமணரா என்பது இன்னும் உறுதியா நிலைநாட்டப் படவில்லை!
    குறளைப் படிக்கப் படிக்க தத்தம் சமயத்தோடு அவரவர் தொடர்பு படுத்தி பார்க்க வைப்பதே, குறளின் பெரும் பெருமை! பொதுப் பெருமை!!

    //அனைத்தும் ஒருங்கிணைந்த நூல் என்றால் அது குறள் தான் என்பதே சொல்ல வந்தது!//

    இதை ஏன் சொன்னேன் என்றால், நாலடியாரில் கூட இன்பத்துப் பாலில் அவ்வளவா காதல் இருக்காது!
    பொது மகளிர், கற்புடை மகளிர், காமநுதல் இயல்-ன்னு மூன்றே பிரிவுகள் தான்! முனிவர்கள் எழுதியதால் ரொம்பச் சொல்லாம விட்டிருப்பாங்க போல! :-)

    ReplyDelete
  69. //Dreamzz said...
    aaha aaha :) thirukural pathi kalakalaana post
    me the S//

    தல! ஒங்கள புடிச்சி திருக்குறள் படிக்க உக்கார வைக்கணும் இருங்க! :-)
    காதல் கவுஜ போடறீங்கல்ல பதிவுல! மூன்றாவது பால் ரொம்ப உபயோகமா இருக்கும் தல உங்களுக்கு! :-)

    ReplyDelete
  70. //குமரன் (Kumaran) said...
    ஆழ்வார்கள் மட்டுமில்லை இரவிசங்கர். ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரை (வியாக்கியானம்) எழுதியவர்களும் திருக்குறளைப் பல இடங்களில் எடுத்துக்காட்டுகளாய்த் தந்திருக்கிறார்கள் என்பது தான் உங்களுக்கும் தெரியுமே. :-)//

    ஆகா...அப்படியா குமரன்!
    எனக்குத் தெரியாதே! நீங்க தான் இந்த பாசுர விளக்கங்களைப் பதிவுலகில் தொடங்கி வைக்கணும்! மாறனில் தொடங்கினா பாலாவும் வருவாரு! ஜிராவும் வருவாரு! :-)

    ReplyDelete
  71. // கப்பி பய said...
    தெய்வமே..யாருக்கு இதெல்லாம்??? இப்பிடி ஒரேயடியா ரத்தக்களரியா ஆர்டர் பண்ணா எப்படி??? இலை தழைல எதுனா சொல்லு நைனா :))))//

    ஆகா...
    நீங்களும் நம்ம செட்டா? சூப்பரு!
    வூட்ல தான் திட்டுவாய்ங்க, இதெல்லாம் சாப்பட மாட்டங்கறேன்னு!

    இலை தழைல உனக்கு என்ன சொல்லலாம் கப்பி?
    சரி போனாப் போகுது, புதினாத் துவையல், அவரக்கா கூட்டு, தக்காளி குருமா, மொச்சைக் கொழம்பு, பூசணிப் பொரியல்...போதுமா? :-)

    இதுக்கு நடுவுல ஜிரா வந்து நெத்திலி, சுத்திலி-ன்னு கொழப்படி பண்ணாம கொழம்பு வைக்கணும்! :-)

    ReplyDelete
  72. கெபி அக்கா, தஞ்சாவூரான்...
    அடுத்த தபா ஆட்டத்துல சேர்ந்துக்கோங்க!

    ReplyDelete
  73. /G.Ragavan said...
    கேள்வின்னா இப்பிடித்தான் இருக்குனங்குற மாதிரிக் கேள்விகளை நீங்க கேட்டுருக்கீங்க. கேள்வி கேக்குறதுக்கு உங்களுடைய கேள்விகள் சிறந்த எடுத்துக்காட்டுகளா அமையும். :)//

    ஜிரா..ரொம்ப பயமா இருக்கு அண்ணாச்சி!
    இப்படி எல்லாம் பேசனீங்கனா, ஏதோ ஆப்பு ரெடியாகுதுன்னு தானே அர்த்தம்! :-)

    //// இறைவன் மனிதனுக்குத் தந்தது கீதை!//
    அப்படீங்குறீங்க? சரி. :)//

    ஏங்க! அதுல என்ன ஜந்தேகம்? :-))

    //// மனிதன் இறைவனுக்குத் தந்தது வாசகமும், பாசுரமும்! //
    அப்ப திருப்புகழு, தேவாரமெல்லாம் என்னங்க? :)//

    அலோ...அப்ப இரட்சணிய யாத்திரிகம், சீறாப் புராணம் எல்லாம் என்னங்க? :-) அதாங்க தல பொதுவா வாசகம், பாசுரம் ன்னு சொன்னேன்! நாயன்மார்கள் பதிகங்களைப் பாசுரம்-னு சொல்ற வழக்கமும் இருக்குங்களே!

    திருப்புகழ் மனிதன் இறைவனுக்குச் சொன்னதா? நான் இறைவன் மனிதனுக்குச் சொல்லி, அதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது-ன்னுல நெனச்சிக்கிட்டு இருக்கேன்! :-))

    //என்னது கேள்விகளுக்கு விடையா? விடையேறும் பெம்மான் குமரந்தான் இதெல்லாம் சொல்ல முடியும். நான் ஜூட்................ :)//

    இது பதிவுலக அராஜகம்! ஆமாம், சொல்லிட்டேன்!
    திருப்புகழ் பாடும் ஜிரா, திருக்குறள் பாட மாட்டாரா-ன்னு பதிவு போட்டுருவோம்! ஆமா! :-)

    ReplyDelete
  74. ரவி, நல்லதொரு புதிர் - புனிதமான புதிர். குறளைப் பற்றி அறிந்த அறிஞர்கள் கலந்து கொண்ட புதிர். நல்வாழ்த்துகள். வாழ்த்துகள் தான் சரி என்றும் வாழ்த்துக்கள் தான் சரி என்றும் பலர் வாதிடுகின்றனரே! ரவியும் வாழ்த்துக்கள் என்றே எழுதுகிறார். நான் வாழ்த்துகள் என்று தான் எழுதுவேன். ஒரு புதிர் போட்டு விடை கண்டு பிடிக்கலாமா ?? ரவி - கருத்துக் கணிப்பு நடத்தலாமே. நண்பர் விஎஸ்கே "க்" கூடாது எனச் சொல்லி விட்டார். துளசி "க்" அடைப்புக் குறிக்குள் பயன்படுத்துகிறார். வாழ்த்துகள்

    ReplyDelete
  75. //குமரன் (Kumaran) said...
    குறுக்கெழுத்து பிடிக்கும்ன்னு சொல்றவங்களுக்குக் கள்ள வாக்கு போடத் தெரியாது போலிருக்கு//

    ஆகா....
    இது தான் உங்க வெற்றியின் ரகசியமா? பூனைக்குட்டி வெளியில் வருது டோய்! :-)

    ReplyDelete
  76. //அரை பிளேடு said... //

    தல, அல்லாமே கரீட்டாச் சொல்லிட்டீயேப்பா! ரெண்டாம் கேள்வியைத் தவிர!
    - 9/10

    ஆனா முடிவு சொல்லி முடிச்ச அடுத்த நொடி ஒங்க பின்னூட்டம் வருது! சைக்கிள் கேப்பு தான் தல! ஜஸ்டு மிஸ்ஸூ! :-)

    ReplyDelete
  77. //துளசி கோபால் said...
    //அன்னாரின் பிறந்த நாள் பிப்ரவரி மாதம் என்று தான் நினைக்கிறேன்! //
    பெரியவர்கள் பிறக்கும் மாதம் பிப்ரவரிதான். அதில் சந்தேகம் என்ன?//

    ஹிஹி!
    இங்கேயும் ஒரு வாழ்த்து வச்சிக்கறேன் டீச்சர்!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    தனிப் பதிவு வவாச/சுவரொட்டி! :-)

    ReplyDelete
  78. தல

    விடை எல்லாம் நல்ல விளக்கமாக கொடுத்திட்டிங்க...நன்றியோ நன்றி ;))

    ReplyDelete
  79. அட, தெரியாமப் போச்சே? :((((((( தெரிஞ்சால் மட்டும் என்ன? அதுவும் சரி! :P

    ReplyDelete
  80. ஹிஹி.. நான் இதுபோல கடைசியா வந்து விடைய பாத்துப்பேன்.ஏன்னா பதில் சொல்லற அளவு, நமக்கு அம்புட்டு ஞானம் இல்லைங்க மாம்ஸ்..

    ReplyDelete
  81. மக்களே!
    SK கொடுத்த மங்கலம் என்ப மனைமாட்சி குறளும் சொல்லுக்குச் சொல் உதடு ஒட்டுதாம்! சொல்லிப் பார்த்தேன்! ஒட்டுது!
    So, SK ஐயா=9/10 (and not 8/10)

    நாட்டாமை! தீர்ப்பை மாத்தி எழுதியாச்சுங்கோ! :-)

    ReplyDelete
  82. மிக அருமையான பதிவு.

    எனக்கு மிகவும் பிடித்த குறட்பாக்களில் ஒன்று:

    கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

    என்ன ஒரு சிந்தனை! காட்சியினைக் கண்ணுக்குள் தள்ளி காணவைக்கும் கவி மாட்சியினை என்ன சொல்வேன்!

    முயலும் யானையும் வரும் இக்குறளை விலங்குகள் பற்றிய குறள்களோடு சேர்த்துவிடுங்கள்.

    ReplyDelete
  83. மாதவிப் பந்தலா இது ?
    மண் உள்ளவரை
    மானுடம் நினைத்துருகும்
    மா தவத்தோரின் நினைவகமல்லவா இது?

    எண்ணிலடங்கா பதிவுகள் மத்தியில்
    கண்ணபிரானது ஓர் தங்கச் சுரங்கம்.
    தங்க வருவோர் தாகம் தீர்க்கும்
    தென் நீர் ஓடை.

    மனங்கனிந்த வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்க‌
    நீடூழி வாழ்க ..

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    பி.கு.: கண்ணனைப் பாடிய பாடல் பல‌
    கண்ணபிரானுக்காக காத்து இருக்கின்றன
    http://movieraghas.blogspot.com
    http://vazhvuneri.blogspsot.com

    ReplyDelete
  84. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு. என்னும் குறளின் இறுதி அசையில் உதடுகள் ஒட்டுவதாக எனக்குத் தெரியவில்லை.

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.
    இக்குறளே தங்களின் புதிருக்கு புனிதம் சேர்க்கும் சரியான விடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்...

    பதினென்கீழ்க்கணக்கு நூல்கள்:

    'நாலடி நாண்மணி நானாற்ப தைந்திணைமுப்
    பால் கடுகங் கோவை பழமொழி - மாமூலம்
    இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி யென்பவே
    கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு'


    ஆயனின் குழல் போல் கொல்லுதாம் மாலைப் பொழுது!
    அந்தக் காலத்தில் மாடு மேய்க்கும் ஆயனர்கள் எல்லாம் "கண்ணனைப் போலவே" குழல் வாசிப்பாங்களா என்ன?

    அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும், எந்தக் காலத்திலும் ஆயர்கள் வாசிக்கும் குழலைத்தான் ஆயர்க் குலத்தில் தோன்றிய மாயக்கண்ணனும் வாசிக்கிறான்...

    எத்தனையோ இனத்தவர், எத்தனையோ வித்தியாசமான வாத்தியங்களைப் பொழுதுபோக்கிற்கு வாசிக்கின்றனர்..... ஆயர்கள் வாசிப்பது புல்லாங்குழல் என்பது மாயக்கண்ணணால் மறக்க முடியாமல் (மறையாமல்) இருக்கின்றது.

    தமிழ்

    ReplyDelete
  85. //தமிழரசன் said...
    பற்றுக பற்று விடற்கு. என்னும் குறளின் இறுதி அசையில் உதடுகள் ஒட்டுவதாக எனக்குத் தெரியவில்லை//

    விடற்கு-என்னும் சொல்லில் "கு" வில் உதடு குவியும், "வி"-இல் உதடு ஒட்டித் தான் ஆரம்பிக்கும்!

    //மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு//

    நன்றி தமிழ்! நீங்க சொன்ன இந்தக் குறளை SK ஐயாவும் சொன்னாரு! இதுவும் உதடு ஒட்டும் குறள் தான்!

    //கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு//

    கலக்குறீங்களே! லோவெல் வரட்டுமா, தமிழ்ப் பாடம் படிக்க? :-) (வெட்டியிடம் இல்லை! :-)))))

    //அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும், எந்தக் காலத்திலும் ஆயர்கள் வாசிக்கும் குழலைத்தான் ஆயர்க் குலத்தில் தோன்றிய மாயக்கண்ணனும் வாசிக்கிறான்...//

    உண்மை தான்!
    ஆனால் கண்ணன் கைபட்டு தான் குழல் புகழ்பட வேண்டும்-ன்னு இருக்கு போலும்! :-)

    ReplyDelete
  86. //விடற்கு-என்னும் சொல்லில் "கு" வில் உதடு குவியும், "வி"-இல் உதடு ஒட்டித் தான் ஆரம்பிக்கும்!//

    விடற்கு ல உதடு ஒட்டுதா? யார் யாரோட உதடு ஒட்டுது? எங்க சொல்லுங்க பாப்போம்...

    விடற்கு ல என்னா, பிடற்கு ன்னு உதடு ஒட்டுதா? இல்லாட்டி மிடற்கா?

    வ - உதடு மற்றும் பல் சேரக் கூடிய எழுத்து.

    கு - இது 'உ'ன்னு முடிஞ்சா வேண்ணா நீங்க சொன்னத ஒத்துக்கலாம். விடற்கு- இந்த வார்த்தையை நீங்க ஒரு தடவை சொல்லிப் பாத்துட்டு சொல்லுங்க... அப்போ விடற்கூஊஊஊஊஊ ன்னு கூவினா நான் ஒத்துக்கறேன். :-)

    உ தனியா வரும் போதுதான் உதடுகள் குவியும். இந்த வார்த்தையிலல்லாம் குவியல... :-)

    வாங்க, வாங்க... உங்க வருகையை மனமகிழ்வோடு எதிர் நோக்குகிறோம்.

    இப்ப என்ன சொல்ல வர்ரீங்க....

    \\உண்மை தான்!
    ஆனால் கண்ணன் கைபட்டு தான் குழல் புகழ்பட வேண்டும்-ன்னு இருக்கு போலும்! :-)//
    கண்ணனுக்கு, குழல் லாம் வாசிக்கத் தெரியாது.. சும்மா கைல தான் வெச்சு சீன் போடறாரு ன்னு சொல்றீங்களா... :-)

    ReplyDelete
  87. உங்க புதிரா? புனிதமா? மூலம் எங்கள் வலைப்பூவிற்கு ஒரு எக்ஸ்ட்ரா பதிவு போட வாய்ப்பு கிடைத்தது. நன்றி!

    jcet.blogspot.com

    ReplyDelete
  88. மிகவும் அருமையான செயல்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP