ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?
என்ன அப்பிடிப் பாக்கறீங்க?...."நாரதரே, அம்மை அப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?" என்று கேள்வி கேட்பார் பிள்ளையார்! - அதுக்குப் பதில் என்ன சொல்லப்படும்?.....ஞாபகம் வருகிறதா?
அம்மை அப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மை அப்பன்!
அதே போல,
புதினாத் தொகையல் தான் புதினாச் சட்னி!
புதினாச் சட்னி தான் புதினாத் தொகையல்!
என்று சொல்லலாமா....கூடாதா?
- இது தான் இப்போது பேண்டேஜ் பாண்டியனுக்கு எழுந்துள்ள பெருத்த சந்தேகம்!
ஐயோ இவனக்கு என்ன ஆச்சு, திடீர்-னு என்று பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க....
ஒரு வாரமா பாக்டீரியாக் காய்ச்சல் காய்ச்சி எடுக்க, படுத்த பாம்புப் படுக்கையா நானும் கெடக்க,
வெறும் பிரட்டும், சூப்பும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது!
எண்ணெய் வாசமே கூடாது என்று மருத்துவர் உத்தரவு வேறு! (அவர் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டது தனிக் கதை...அதை பாஸ்டன் பதிவர்கள் வந்து எழுதுவார்கள் :-)
அப்போது தான் காரமா, உறைப்பாச் சாப்பிட ஆசை வந்தது! அம்மா செய்யும் புதினாச் சட்னி, புதினாத் தொகையல் நினைவுக்கு வந்தது!
புதினா மருத்துவக் குணங்கள் கொண்டது எனறு அமெரிக்க நாசா விண்வெளிக் கழகமே சொல்லி இருக்காமே! அதான் அதையே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்! - ஆனா, அங்கு தான் வந்தது வினை!
தாளிக்கலாமா? கூடாதா?? - எண்ணெய்ப் பிரச்சனை! - ச்சே இந்த அமெரிக்காவில் எப்பமே இப்பிடித் தான்....அடுத்தவன் வீட்டு/நாட்டு எண்ணெய்ப் பிரச்சனைக்கும் அமெரிக்கவுக்கும் அப்படி ஒரு ராசி போல! :-)
சரி...என்ன செய்வது என்று தெரியாமல் நம் ஆருயிர் நண்பர் CVR இடம் விஷயத்தைச் சொன்னேன்! சர்வ வல்லமை படைத்த பாலாஜி இருந்திருந்தால் அவரைக் கேட்டிருக்கலாம்! ஆனால் அவரோ ஊரில் இல்லை! சரியென்று CVR-இடம் சொன்னால், அவர் பதறிப் போய் விட்டார்! நான் உங்களுக்கு ஆவியில் சுட்ட இட்லி கொண்டு வருகிறேன் என்று ஆறுதலாகச் சொன்னார். ஆகா என்ன பாசம்! என்ன பாசம்!
சற்று நேரத்துக்கு எல்லாம் ஒடோடி வந்தார் மனுசன்!.......Frozen Idli பாக்கெட்டோடு!
"நல்லாப் பாத்துக்குங்க" என்று மேலும் கீழும் இட்லிப் பாக்கெட்டைக் காட்டி விட்டு, மீண்டும் அவர் பைக்குள்ளேயே போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்!
எனக்கு ஒரே அழுகையா வந்து விட்டது! உடம்பு சரியில்லீன்னா, ஆப்பிள் பழங்களோடு வந்து பார்ப்பார்கள்! ஆனா இவரு ஒரு கூடை ஆப்பிளைக் கூட வாங்கி வராம,
'ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்' ன்னு பாட்டு பாடிட்டு கிளம்பிட்டாரு!
எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது! சரி நாமே புதினாவைச் செய்து விட வேண்டியது தான் என்று களத்தில் இறங்கி விட்டேன்! இதோ செய்முறை! சாரி, நான் செஞ்ச முறை!
தேவையானவை:
புதினா | 2 கொத்ஸ் (கொத்துவின் pluralஐச் சொன்னங்க! கொத்ஸ் நீங்க கோச்சிக்க மாட்டீங்கன்னு, தெரியும்) |
கொத்தமல்லி | 1 கொத்து (இலைகளைக் லேசாத் தண்ணீரில் கழுவிக் கொள்ள மறக்காதீங்க) |
தக்காளி | 1 |
சின்ன வெங்காயம் | 3 |
புளி காய்ச்சல் | 1/4 கப் |
உ.பருப்பு/க.பருப்பு | 2 தேக்கரண்டி |
நல்லெண்ணெய் | 3 தேக்கரண்டி |
காய்ஞ்ச மிளகாய் | 3 |
உப்பு | அவங்க அவங்க சூடு சொரணையைப் பொறுத்த அளவு :-) |
கொஞ்சம் வித்தியாசமாப் பண்ணனும்-னா...... மாங்காய் | அரை மாங்காய், "வெட்டி" வைத்துக் கொள்ளவும்! வெட்டியையும் சமைக்கும் போது கூட வைத்துக் கொள்ளலாம்! :-) |
மேலே CTRL+A- எல்லாம் பண்ணிப் பார்த்து, எதுவும் தேடி ஏமாந்து போகாதீங்க! இது கொத்தனார் கிண்டிய உப்புமா பதிவு போல இல்ல! :-)
சரி, மேட்டருக்கு வாங்க!
1. Frying Pan-இல் எண்ணெய் விட்டு, உ/க பருப்புகளைப் பொன்னிறமாக வறுத்துக்கோங்க.
2. கூடவே வெங்காயம், மிளகாயும் வறுத்து வைச்சுக்கோங்க.
3. புதினா,கொத்தமல்லி இலைகளைக் கொட்டி, நீர் எல்லாம் போகுமாறு, கொஞ்சமா இலைகள் சுருங்குமாறு வறுத்துக்கோங்க. தண்ணி எல்லாம் சேர்க்கத் தேவையே இல்லை! (தாகத்துக்கு குடிக்கிற தண்ணியைச் சொன்னேன்-பா)
அய்யோ....வாசனை இப்பவே தூக்குதே! நாலு இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்! :-)
4. இப்ப தனியாக, இன்னொரு Panஇல் தக்காளி வதக்கிங்கப்பு!
5. மாங்கா பத்தைகளை சும்மா அரை நிமிடம் அப்படி லைட்டா வதக்கிங்க!
6. எல்லாம் கூல் ஆவட்டும்! சிவாஜி ஸ்டைலில் கூல் பேபி கூல்!
7. எல்லாத்தையும் மிக்சியில் கொட்டி, புளிக் காய்ச்ச்ல், உப்பு சேர்த்து அரைச்சிக்கங்க!
8. வேணும்னா, இன்னொரு வாட்டி, உ/க பருப்பு வறுத்து, தாளிச்சி கொட்டிக்கங்க!
9. ஐட்டம் ரெடி...பத்தே நிமிஷம் தான்!
வாழ்க்கையில சந்தோசமான விஷயம் எல்லாம் சீக்கிரமாவே நடந்து முடிஞ்சிடுது பாத்தீங்களா?! (ஆன்மீகப் பதிவு எஃபெக்டு நடு நடுல வந்துடுது, நான் என்ன செய்ய!:-)
10. சரி...இனிமே தான் மேட்டரே! இப்ப நாம செஞ்சதுக்குப் பேரு என்னா? தொகையலா? சட்னியா??.....அதைக் கரீட்டாச் சொல்லிட்டு அப்புறம் வாங்க...
தட்டுல துண்டு இலை பரப்பி, அதுல நெய் தடவி....
அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு,
இந்தப் புதினா மேட்டரையும் சேர்த்து வச்சித் தாரேன்!
ஒளவையே! - புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?
பின் குறிப்பு:
மொக்கை நன்றே மொக்கை நன்றே
பிச்சை புகினும் மொக்கை நன்றே
என்று தமிழ் மூதாட்டி சொன்ன வழியில் என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்! மறந்து விடாதீர்கள் - தொகையலுக்கும், சட்னிக்கும், மொத்தம் ஆறு வித்தியாசங்கள் சொல்லணும்!
பின் பின் குறிப்பு:
மாதவிப் பந்தலில் மொக்கைப் பதிவு ஒன்று கூட போடாத உன்னை எல்லாம் Blogger என்று ஒப்புக் கொள்ளவே முடியாது என்று நண்பர் சபித்து விட, அதனால் மிகவும் பயந்து போய், தொகையலும் சட்னியும் அரைத்துச் சாப்பிட்டு எழுதியதே இந்தப் பதிவு!:-)
படங்களுக்கு நன்றி: SeeC
சபாஷ் சரியான கேள்வி...
ReplyDeleteஅப்படியே என் கேள்விக்கும் பதில் சொல்லுங்க...
வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...
அப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???
இந்த கேள்விக்கு முதலில் விடை சொல்லுங்க...
ஜி.ரா வந்து இந்த நடுவர் நாற்காலில உட்காருங்க ;)
அண்ணாஆஆஆஆ!!!
ReplyDeleteநல்லா ஓய்வெடுக்க சொன்னேன்ல!!!
இப்போ பாருங்க ஜுரம் முத்தி போய் மொக்கை பதிவு எல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க!!
மாதவிப் பந்தல்ல மொக்கை பதிவா??
என்ன கொடுமை சரவணன் இது?? :-(
இத்தனை மொக்கை நடுவுலையும் என் பேர டேமேஜ் பண்ண மறக்கல!!!
க்ர்ர்ர்ர்ர்
இதுக்கு அர்த்தம் என்ன?
ReplyDeleteLabels: CVR , புதினாச் சட்னி , புதினாத் தொகையல் , மொக்கை , வெட்டிப்பையல்
மாதவிப் பந்தல் எப்போ சாப்பாட்டுப் பந்தல் ஆச்சு?:) ஏங்க ரவி.சமையல் ஒண்ணுதான் எங்க பலம் அதையும் வந்து பரிட்சை செஞ்சி பாக்றீங்களா?:)புதினா துகையல் வாசனை எட்டூருக்குக் தூக்கி அடிக்குதே!!
ReplyDeleteதுகையலுக்கும் சட்னிக்கும் இருக்கும் 6 வித்தியாசங்கள்.
1 துகையல் நைஸா இருக்கும் சட்னி கொஞ்சம் கொரகொரன்னு இருக்கலாம்
2 துகையலுக்கு நோ தாளிப்பு சட்னிக்கோ கடுகோடு கருவேப்பிலை உ பருப்பும் வாசனைக்கு
3 துகையலில் பெருங்காயம் சேரும்
சட்னிக்கு சிறுகாயமும் கூடாது!!
4துகையலுக்கு புளீ அல்லது மாங்காய் புளிப்புக்கு .... சட்னிக்கோ லெமென் எனும் எலுமிச்சப்பழச்சாறுதான்
5 துகையலை சாதமுடன் பிசைந்து உண்ணலாம் சட்னி சாதமுடன் சேராது
6துகையலில் வெரைட்டீஸ் அதிகம்
சட்னி 12க்கு மேல் தாண்டாது!
ஆறு வித்தியாசம் சொல்லிட்டேன் ரவி என்ன பரிசு ? மல்லிகா பத்ரிநாத்சமையல் குறிப்பு புக்கா?:)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteசபாஷ் சரியான கேள்வி...
அப்படியே என் கேள்விக்கும் பதில் சொல்லுங்க...//
வந்துட்டாருப்பா கேள்வியின் நாயகன்!
கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் ஏதையா? - ஸ்ரீவித்யா பாடினாங்க பாலாஜி! அதான் நினைவுக்கு வருது!
//ஜி.ரா வந்து இந்த நடுவர் நாற்காலில உட்காருங்க ;)//
நடுவர் ஐயா! வாங்க ஐயா!
உக்காந்திட்டீங்களா ஐயா?
பாத்து ஐயா! இந்த வெட்டி, உங்கள வெட்டத் தான் இந்தக் கேள்விய கேக்குறாரு ஐயா!:-)
வில்லு வைச்சி இருக்கிறவர் ராமன்,
வில்லு வைச்சதால் வில்லன்
அவர் இன்னொரு பெயர் ராகவன்!
புரியுதுங்களா ஐயா! வெட்டி எங்க வராருன்னு! :-)
////வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே//
ReplyDeleteஆமாய்யா...
வேல் வைச்சவர் வேலன்
வில் வைச்சவர் வில்லன்
பால் வைச்சி இருப்பவர் பாலன்
கால் வைச்சி இருப்பவர் காலன்
மால் வெட்டினா மாலன்
தூள் கிளப்பினா தூளன்!
நல்ல ஆளய்யா நீங்க! பதிவுலகில் தூள் கிளப்பறவரு நீங்க தான்! உங்களைத் தூளன்-ன்னு கூப்பிட ஏற்பாடு பண்ணலாமா? :-)
வேல் உடையவர் வேலவன்!
வில் உடையவர் வில்லவன்!
அப்படிப் பாருங்கைய்யா பாலாஜி! நடுவரே...இதுக்கு மேல நீங்க தான் வந்து சொல்லாடணும்!
//CVR said...
ReplyDeleteமாதவிப் பந்தல்ல மொக்கை பதிவா??
என்ன கொடுமை சரவணன் இது?? :-(//
சமையலை மொக்கை என்று சொல்லும் CVR!
தாய்க்குலமே....இதைக் கேட்டுமா CVR மேல் பொங்கி எழாமல் இருக்கீங்க?
//இத்தனை மொக்கை நடுவுலையும் என் பேர டேமேஜ் பண்ண மறக்கல!!!
க்ர்ர்ர்ர்ர்//
என் கடன் பணி செய்து கிடப்பதே!
CVR இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! (எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கா, CVR? :-)
அய்யோ.இதென்ன புதினாத் தொகையலில் வெங்காயம்? ச்சீச்சீ......... உவ்வே(-:
ReplyDeleteபேசாம நான் நேத்து செஞ்சமாதிரி ரெட் வெங்காயம் வச்சு வெங்காயச்சட்டினி
செஞ்சுருங்க. இட்லிக்கு ரொம்ப நல்லா இருக்குன்னு கோபால் 5 இட்லி தின்னுட்டார்:-)
ரவி,
ReplyDelete/* ஐயோ இவனக்கு என்ன ஆச்சு, திடீர்-னு என்று பாக்கறீங்களா? */
உண்மையில் முதலில் நான் அப்படித்தான் நினைத்தேன். :-)
/* ஒரு வாரமா பாக்டீரியாக் காய்ச்சல் காய்ச்சி எடுக்க, படுத்த பாம்புப் படுக்கையா நானும் கெடக்க,*/
அட, எங்கே ஒரு கிழமையாய் ஆளைக் காணேல்லை எண்டு நினைச்சேன்... இதுதான் காரணமா?!
விரைவில் பூரண குணமெய்த முருகன் துணை புரிவானாக.
அதுசரி ரவி, புதினா என்றால் என்ன?
இச் சொல்லை நான் இதுவரை ஈழத்திலோ அன்றி வேறு இடங்களிலோ கேள்விப்படவில்லையே?
துளசி கோபால் said...
ReplyDeleteஅய்யோ.இதென்ன புதினாத் தொகையலில் வெங்காயம்? ச்சீச்சீ......... உவ்வே(-://
அதானே நான் இந்த வெங்காயத்தை கவனிக்கவே இல்ல...புதினாவுக்கு வெங்காயமா ஐயோ பாதாம் அல்வாவுல பச்சைமிளகாய் மாதிரி ...
இதனால்தான் சிவி ஆர் மொக்கை பதிவுன்னு சொல்றாரோ?:)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஇதுக்கு அர்த்தம் என்ன?
Labels: CVR , புதினாச் சட்னி , புதினாத் தொகையல் , மொக்கை , வெட்டிப்பையல்//
ஹிஹி...
மொக்கை, வெட்டிப்பையல்-ன்னு ஒன்னோடு ஒண்ணு கோத்துக்கிட்டு வருதேன்னு பாக்கறீங்களா, பாலாஜி! எல்லாம் அப்படித் தானா அமையுது பாருங்க! :-)
ஐயோ ஐயோ...நீங்க கீழ்க்கொண்டு பாக்கறீங்க பாலாஜி! வேணாம்!
மேல் கொண்டு பாருங்க!
மேலே உள்ள
Labels:
CVR (1)
Floralia 2007 (1)
VettiPaiyal (1)
அப்துல் கலாம் (1)
பாருங்க, அப்துல் கலாமே உங்களுக்கு அடுத்து, உங்க பக்கமாத் வரா மாதிரி தான் போட்டிருக்கேன்! இதுக்காகவே எனக்கு நீங்க கடன்பட்டிருக்கீங்க! :-)
//ஷைலஜா said...
ReplyDeleteமாதவிப் பந்தல் எப்போ சாப்பாட்டுப் பந்தல் ஆச்சு?:)//
எப்போ சிவி ராமன், சாப்பாட்டு ராமன் ஆனாரோ, அப்பவே மாதவிப் பந்தல் சாப்பாட்டுப் பந்தல் ஆகிப் போச்சு ஷைலஜா! :-))
//1 துகையல் நைஸா இருக்கும் சட்னி கொஞ்சம் கொரகொரன்னு இருக்கலாம்//
முற்றிலும் உண்மை!
//2 துகையலுக்கு நோ தாளிப்பு சட்னிக்கோ கடுகோடு கருவேப்பிலை//
ஓ...அப்படியா...சும்மா அரைச்சு வைச்சா தொகையலா?
//3 துகையலில் பெருங்காயம் சேரும்
சட்னிக்கு சிறுகாயமும் கூடாது!!//
ஆகா...சிறு காயம் கூடப் படக்கூடாதா சட்னிக்கு!
சட்னியா? இல்லை கிட்னியா?? :-))
//4 துகையலுக்கு புளீ அல்லது மாங்காய் புளிப்புக்கு .... சட்னிக்கோ லெமென் எனும் எலுமிச்சப்பழச்சாறுதான்//
ஹை..இது நல்லாக் கீது!
//5 துகையலை சாதமுடன் பிசைந்து உண்ணலாம் சட்னி சாதமுடன் சேராது//
மனவாடு...எவராச்சும் ஒச்சி செப்பண்டி, நாயனா! :-)
//6 துகையலில் வெரைட்டீஸ் அதிகம்
சட்னி 12க்கு மேல் தாண்டாது!//
ஹூம்...இப்படி ஓண்ணு இருக்கா...
So பெரிது பெரிது தொகையலே பெரியது!
//ஆறு வித்தியாசம் சொல்லிட்டேன் ரவி என்ன பரிசு ?மல்லிகா பத்ரிநாத்சமையல் குறிப்பு புக்கா?:)//
பேண்டேஜ் பாண்டியன் சந்தேகத்தைத் தனி ஒரு புலவராக வந்து தீர்த்து வைத்த அரங்கப்ரியா...இதோ பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
....
மன்னா சற்றுப் பொறும்! புலவரே இப்படி வருகிறீரா!
அழைப்பது நக்கீரர் ஜிரா! அவர் தான் நடுவர்!
ஷைலஜா - ஒரு எட்டு நக்கீரர் கிட்ட போயி வந்துருங்க! :-)))))
//துளசி கோபால் said...
ReplyDeleteஅய்யோ.இதென்ன புதினாத் தொகையலில் வெங்காயம்? ச்சீச்சீ......... உவ்வே(-://
வாங்க டீச்சர்...இதை நீங்க சொல்லப் போறீங்கன்னு நல்லாத் தெரியும்!:-)
இங்க தான் டிரிக்! அதான் சின்ன வெங்காயம், அதுவும் மூனே மூனுன்னு சொன்னேன்!
வெங்காயம் சேர்த்தா சட்னியாகுமா, தொகையல் ஆகுமா-ன்னு ஒரு டிஸ்கஸன் வேணும்ல...அதுக்குத் தான்!
//பேசாம நான் நேத்து செஞ்சமாதிரி ரெட் வெங்காயம் வச்சு வெங்காயச் சட்டினி செஞ்சுருங்க. இட்லிக்கு ரொம்ப நல்லா இருக்குன்னு கோபால் 5 இட்லி தின்னுட்டார்:-) //
Only 5 Idlis?
டீச்சர்...நீங்க ரொம்ப மோசம் போங்க! எதுக்கு எங்க கோபால் சாரை இப்படிப் பட்டினி போடறீங்க!:-)
வெங்காயச் சட்னி கூட இருந்தா 5 இட்லி மட்டுமா போகும்! ஆகா....Pack the bags...over to Christchurch!
//வெற்றி said...
ReplyDeleteரவி,
உண்மையில் முதலில் நான் அப்படித்தான் நினைத்தேன். :-)//
அச்சச்சோ...வெற்றி...என்னையப் போயி இப்படி நினைச்சுட்டீங்களே! அய்யகோ!....நல்ல காலம் டிஸ்கி நானாப் போட்டுக்கிட்டேன்! :-))
//அட, எங்கே ஒரு கிழமையாய் ஆளைக் காணேல்லை எண்டு நினைச்சேன்... இதுதான் காரணமா?!
விரைவில் பூரண குணமெய்த முருகன் துணை புரிவானாக//
அரங்கன் அருளும் அழகன் அருளும் அருகிருக்க, ஒரே வாரத்தில் இறங்கி விட்டது வெற்றி! 107 இருந்தது!
//அது சரி ரவி, புதினா என்றால் என்ன? இச் சொல்லை நான் இதுவரை ஈழத்திலோ அன்றி வேறு இடங்களிலோ கேள்விப் படவில்லையே?//
ஆகா...புதினா என்றால் Mint வெற்றி!
Mint Chutney...Toronto சரவண பவனில் கிடைக்குமே!
ஈழத்தில் Mint-க்கு வேறு பெயரா வெற்றி?
புதினாவின் வாசனை ஒன்றே போதும்! ஊரையே கூட்டி விடும்!
ஒரு வைரஸ்/பாக்டீரியா காய்ச்சல் எப்படி ஒருத்தனை தலைகீழா மாற்றும்ன்னு நல்லாத்தெரிந்தது....
ReplyDeleteஆமாம், அரைத்ததை எண்ணையிலிட்டு கிளரினால் துவையல், அதுவல்லாது, வெறுமனே தாளித்தால் சட்னி....
துவையல் என்பது துவைப்பதால் மட்டுமே வரும்..நீங்க பண்ணியதில் அரைத்ததை துவைக்கவில்லை....ஹிஹிஹி.....
(குமரன் - ஜீரா - மேலே இருப்பதை சொல் ஒரு சொல்லுக்கு ஹிண்டா வைத்துக்கொள்ளுங்க ...ஹிஹிஹி)
//அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு,
ReplyDelete//
காஞ்சிபுரம் இட்லி சாப்ட்ருக்கீங்களா? அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய தட்டா என்ன? :-))
//காஞ்சிபுரம் இட்லி சாப்ட்ருக்கீங்களா? அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய தட்டா என்ன? :-)) //
ReplyDeleteஅப்படின்னா அது தட்டு இல்லீங்க, தாம்பாளம்.... :-)
வந்துவிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..........................
ReplyDelete//மாதவிப் பந்தல்ல மொக்கை பதிவா??
ReplyDeleteஎன்ன கொடுமை சரவணன் இது?? :-(//
எடு அந்த அருவாளை :p
சிவிஆர் அண்ணா இப்படி எல்லாம் மொக்கையைப் பற்றி கேவலமாக பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.உங்களைப் போல ஆராய்ச்சி பதிவு எல்லாம் உங்க மண்டையில் இருந்து வரும்.ஆனால் மொக்கைதான் ஆழ்மனதிலிருந்து வெளிப்படும்.நம்ப ரவி அண்ணாவே கஷ்டப்பட்டு 2மணி நேரம் செலவு பண்ணி அவர் வலையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக மொக்கை எழுதி இருக்கார்.இனிமேல் மொக்கையைப் பற்றி ஏதாவது சொல்லுங்க...damage ஆகிடுவீங்க சொல்லிட்டேன்.ரவி அண்ணா இது மாதிரி பல மொக்கைகள் எழுத வாழ்த்துக்கள்.
//நல்லாப் பாத்துக்குங்க" என்று மேலும் கீழும் இட்லிப் பாக்கெட்டைக் காட்டி விட்டு, மீண்டும் அவர் பைக்குள்ளேயே போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்!//
ReplyDeleteஅண்ணா ஒரு உண்மை சொல்லுறேன் கேளுங்க.அன்று உங்களை காணவில்லை என்று சிவிஆர் அண்ணாவிடம் உங்களை call பண்ண சொன்னேன்.மனுசன் என்ன பண்ணினார் தெரியுமா?
"இப்போ நான் படம் பார்த்துகிட்டு இருக்கேன்.அப்புறம் நேரம் இருந்தால் கூப்பிட்டு நலம் விசாரிக்கின்றேன்" என்று சொல்லிவிட்டார்.தங்கை மனம் கஷ்டப்பட்டது :(
சிவிஆர் அண்ணாவிற்கு உங்க மேல உள்ள பாசத்தை பாருங்கள்.
இதிலிருந்து தங்கையின் பாசத்தைவிட தம்பியின் பாசம் எந்த level இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ளவும்.
"
நாரயணா நாரயணா"
/ (அவர் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டது தனிக் கதை...அதை பாஸ்டன் பதிவர்கள் வந்து எழுதுவார்கள் :-)
ReplyDelete//
இந்த பஜ்ஜி சொஜ்ஜி கதை எல்லாம் ஏன் பாஸ்டனில் உள்ள பதிவர்கள் வந்து எழுத வேண்டும்.அதற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.சில மாதங்களுக்கு முன்பு ஆன் ஆர்பர் பஜ்ஜி கதை கேள்விப்பட்டேன்.இது என்ன பாஸ்டன் கதை?அண்ணா இது என்ன மர்மம்.பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா?
//ஷைலஜா said...
ReplyDeleteஅதானே நான் இந்த வெங்காயத்தை கவனிக்கவே இல்ல...புதினாவுக்கு வெங்காயமா ஐயோ பாதாம் அல்வாவுல பச்சைமிளகாய் மாதிரி ...//
ஹிஹி! அப்ப வலைப் பதிவர் மாநாட்டில் மைசூர்பாக் கொடுத்தீங்க ஷைலஜா! இப்ப அல்வா-வா? :-)
சரி சரி...நடத்துங்க!
//இதனால்தான் சிவி ஆர் மொக்கை பதிவுன்னு சொல்றாரோ?:)//
இருக்கும் இருக்கும்!
வெங்காயமே அவருக்குப் புடிக்காதாம்! கேட்டா அதை உரிக்கும் போது அன்புக் காதலியின் கண்ணில் இருந்து கண்ணீர் வருமாம்! அது காதலுக்கு ஏற்றதல்ல என்று இலக்கணம் வகுத்துள்ளார் நம்ம Love Scientist!
//மதுரையம்பதி said...
ReplyDeleteஒரு வைரஸ்/பாக்டீரியா காய்ச்சல் எப்படி ஒருத்தனை தலைகீழா மாற்றும்ன்னு நல்லாத்தெரிந்தது...//
ஆமாங்க மெளலி சார்.
கண்ணுக்குத் தெரியாத கிருமி
கண்ணு மண்ணு தெரியாம என்னவெல்லாம் பண்ண வைக்குது பாத்தீங்களா? :-)
//ஆமாம், அரைத்ததை எண்ணையிலிட்டு கிளரினால் துவையல், அதுவல்லாது, வெறுமனே தாளித்தால் சட்னி....//
சூப்பர்! இது ஷைலஜா கட்சி!
//துவையல் என்பது துவைப்பதால் மட்டுமே வரும்..நீங்க பண்ணியதில் அரைத்ததை வைக்கவில்லை....ஹிஹிஹி.....//
நல்லா அரைச்சித் துவைச்சிட்டீங்க போங்க! சரி....துவைச்சதை எப்படிக் காயப் போடுவது!? :-)
// Sridhar Venkat said...
ReplyDelete//அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு//
காஞ்சிபுரம் இட்லி சாப்ட்ருக்கீங்களா? அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைக்கிற அளவுக்கு அவ்ளோ பெரிய தட்டா என்ன? :-))//
பாருங்க...கீழே மதுரையம்பதி புடிச்சாரு! தாம்பாளமே தான்! :-)
நான் கொஞ்சம் டீஜண்டா சொல்லிட்டேன்! :-)
ஸ்ரீதர்...இப்பல்லாம் மினி காஞ்சிபுரம் இட்லி கிடைக்குது...சாப்பிட்டீங்களா!
எங்க வீட்டில் காஞ்சிபுரம் இட்லியைச் சிறு சிறு டம்ப்ளர்களில் மாவு ஊத்தி விதம் விதமான ஷேப்பில் எல்லாம் ஜாலியாச் செய்வாங்க!
குட்டீஸ்-க்கு இந்த ஷேப் இட்லி ரொம்ப பிடிக்கும்!
//மதுரையம்பதி said...
ReplyDeleteஅப்படின்னா அது தட்டு இல்லீங்க, தாம்பாளம்.... :-) //
மதுரையம்பதி சார்
மதுரையில் குண்டோதரனுக்குப் படையல் போடுவாங்களே! அப்பிடி-ன்னு என்னைய நினைச்சிட்டீங்களா?
நான் ரொம்ப ஒல்லிங்க! :-)
//†hµrgåh said...
ReplyDeleteவந்துவிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்//
நல்ல சமயத்தில் வந்தீங்க துர்கா!
இதோ அன்பைத் தந்துவிட்டேன் ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-)
//†hµrgåh said...
ReplyDeleteஉங்களைப் போல ஆராய்ச்சி பதிவு எல்லாம் உங்க மண்டையில் இருந்து வரும்.ஆனால் மொக்கைதான் ஆழ்மனதிலிருந்து வெளிப்படும்//
சத்தியமான வார்த்தை அத்தனையும்!
//ரவி அண்ணா இது மாதிரி பல மொக்கைகள் எழுத வாழ்த்துக்கள்.//
தாங்க்யூ சிஸ்டர்!
எல்லாம் உங்க ஆசிர்வாதம்!
அது கூடவே இருக்கும் போது CVR சாபங்கள் நம்மை என்ன செய்து விட முடியும்! :-)
LOL! nalla sollaraangaiya detailu!
ReplyDelete//வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...
ReplyDeleteஅப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???//
nalla ketkaraangppa kelviu!
//†hµrgåh said...
ReplyDelete"இப்போ நான் படம் பார்த்துகிட்டு இருக்கேன்.அப்புறம் நேரம் இருந்தால் கூப்பிட்டு நலம் விசாரிக்கின்றேன்" என்று சொல்லிவிட்டார்//
ஐயகோ...இது உண்மையா CVR?
என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கே!
உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு-ன்னு சொல்லுவாங்க!
நீங்க உடுக்கையே பிடுங்கினா எப்படி?
படம் முக்கியமா? பாசம் முக்கியமா??
அது சரி...என்னா படம் பாத்துக்கினு இருந்தீங்க...Singing in The Rain? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
Love Scientists never reciprocate Love...They are all heads but not hearts என்பது நிரூபணம் ஆகி விட்டது!
//இதிலிருந்து தங்கையின் பாசத்தைவிட தம்பியின் பாசம் எந்த level இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ளவும்//
நன்றி துர்கா. என் அறிவுக் கண்ணைத் திறந்தீங்க!
அண்ணன் என்னடா தம்பி என்னடா-ன்னு தான் பாட்டு இருக்கே தவிர
அண்ணன் என்னடா தங்கை என்னடா-ன்னு இருக்கா பாருங்க?
Sorry CVR....Bye CVR! :-)
வெங்காயம் + பொதினா நன்றாகத்தான் இருக்கும்.அவுங்க சொல்கிற கேட்காதீங்க..
ReplyDeleteமொக்கை நன்றே மொக்கை நன்றே
ReplyDeleteபிச்சை புகினும் மொக்கை நன்றே
எங்க கீதாபாட்டி கேடிருக்க வேண்டும் இதை"எனக்கும் எதிரியா" என்று சீறீ இருப்பார்கள். உடம்பு ஜாக்கிரதை.மிள்காய் வேண்டாம்.
//
ReplyDeleteகுட்டீஸ்-க்கு இந்த ஷேப் இட்லி ரொம்ப பிடிக்கும்!//
ஏந்த குட்டீஸ்க்கு?
//பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா?//
ReplyDeleteநான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...
//மாதவிப் பந்தல்ல மொக்கை பதிவா??
ReplyDeleteஎன்ன கொடுமை சரவணன் இது?? :-(//
என்னது மொக்கை பதிவு போட்டா தப்பா?
இப்ப தான் மாதவி பந்தலுக்கு ஒரு கலையே வந்திருக்கு...
முதற்கண் உங்கள் பதிவில் பிழையுள்ளது. சொல்லில் குற்றமிருந்தாலும் மன்னிக்கப்படலாம். ஆனால் பொருளில் குற்றமுள்ளது.
ReplyDeleteமுதற்கண் தலைப்பிலேயே தவறு கண்டோம். உண்டோம் என்று நீங்கள் சொல்ல விரும்பும் பதிவில் குற்றம் கண்டோம் என்று சொல்லவைத்தமை கொடுமை. கொடுமை.
நாரதரிடம்தானே அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன என்றுதானே கேள்வி கேட்கப்பட்டது. உங்களது பதிவும் சொல்கிறது. அப்படியிருக்க தலைப்பில் கிழவியை வைத்த காரணம்? இது மாபெருங்குற்றமென்பதால் முத்தமிழ்ச் சங்கத்துத் தலைமைப் புலவரான நக்கீரரும்....வயதேகி ஊரேகி நாடேகித் தமிழ் வளர்த்த ஔவையும் உங்கள் மீது மிகவும் ஆத்திரமாக இருப்பதாக மயிலார் வழியாகச் சொல்லியனுப்பியிருக்கின்றார்கள். ஆகையால் தலைப்பை மாற்றவிட்டால் உங்களது அடுத்த பதிவிற்குத் தமிழ்க் குழாய் மூடப்படுமாம்.
// என்ன?"
ReplyDelete35 Comments - Show Original Post
Collapse comments
வெட்டிப்பயல் said...
சபாஷ் சரியான கேள்வி...
அப்படியே என் கேள்விக்கும் பதில் சொல்லுங்க...
வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...
அப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???
இந்த கேள்விக்கு முதலில் விடை சொல்லுங்க...
ஜி.ரா வந்து இந்த நடுவர் நாற்காலில உட்காருங்க ;) //
வேலனும் அகத்தியரும் கபிலரும் நக்கீரரும் மருதரும் கட்டிக்காத்த இந்த நடுவர் பதிவை எனக்குக் கொடுத்தது பாண்டி நாட்டான் (சோற்று நாட்டான் அல்ல ;) ) என்ற வகையில் மிகப் பொருத்தம்.
சரியானதொரு கேள்வி. மிகச் சரியானதொரு பொழுதில்...மிகமிகச் சரியானதொரு நபரிடமிருந்து மிகமிகமிகச் சரியான முறையில் வந்திருக்கிறது.
வேலைப் பிடித்தவன் வேலனென்றால் வில்லைப் பிடித்தவன் வில்லன் என்பதே தமிழ் இலக்கணம். அதை ஏற்காதவர்க்கு தலைக்கனம். இனியும் ஏன் பாட வேண்டும் பிலாக்கனம். (இங்க நிறுத்திக்கிறேன். அடுத்த கனம் எதுவும் தெரியல)
புணர்ச்சி விதிகளின் படி ஆண்பால் விகுதி...முருகா...சரி...இலக்கண விதிகளின் படி ஆண்பால் விகுதியோடு வில்லன் என்ற பெயர்ச்சொல் வில்லலப் பிடித்தவன் என்றே பொருள் சொல்கிறது.
வேலவன் வில்லவன் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். ஒப்புக்கொள்கிறோம். ராகத்தில் வன்மையானவன் ராகவன் என்று அழைக்கப்படுவது போல வேலெறிவதில் வல்லவன் வேலன். வில்லிடுவதில் சிறந்தவன் வில்லவன் என்று சொல்வதே பொருந்தும்.
ஆனால் முருகனும் வேலும் பிரிக்க முடியாதவை. ஆகையால்தான் வேலவன் என்றதொரு பெயர் இருந்தும் வேலன் என்ற பெயரையும் தமிழ் வழங்கிற்று.
வில்லவன் என்று மட்டும் சொல்ல வேண்டுமாயின் வில்லில் வல்லவன் மட்டுமே ராமனும் அருச்சுனனும் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்கின்றீர்களா? அத்தோடு வில்லும் அவர்களும் ஒன்றல்ல. பிரித்துப் பார்க்கப்படக் கூடியதே என்று எதிர்கட்ச்சிக்காரர்கள் கூறுவார்களேயானால் வில்லன் என்ற பெயர் தவறு என்று தீர்ப்பளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.
//நான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்... //
ReplyDeleteநல்லது!!!
ஆட்டோ அனுப்ப விரும்புவவர்கள் கவனிக்க!!
///இந்த பஜ்ஜி சொஜ்ஜி கதை எல்லாம் ஏன் பாஸ்டனில் உள்ள பதிவர்கள் வந்து எழுத வேண்டும்.அதற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்.///
ReplyDeleteஅறிவுபூர்வமான கேள்வி!!
இதற்கு சம்வந்தப்பட்டவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்!!!!
//சில மாதங்களுக்கு முன்பு ஆன் ஆர்பர் பஜ்ஜி கதை கேள்விப்பட்டேன்.///
அது பொய்யென சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்ததே!!!
//இது என்ன பாஸ்டன் கதை?அண்ணா இது என்ன மர்மம்.பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா? ///
விடையையும் அளித்து விட்டு கேள்வியையும் கேட்டு வைக்கும் எங்கள் அக்காவின் ஆழ்ந்த அறிவை இங்கு பாராட்டியே ஆக வேண்டும்.
பாலாஜி - பஜ்ஜி சொஜ்ஜி
இப்படி மொழிகளே சங்கேத வார்த்தையில் உண்மையை உறைக்கும் போது, உணராதவர் உலகத்தில் உளரோ?? :-P
என் மேல் சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை உடைத்தெறிந்து நான் எழுதிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்தை வெளியிடாமல் கயமைத்தனம் செய்யும் கே.ஆர்.எஸ்............
ReplyDeleteநல்லாஆஆஆஆவே இருக்க வாழ்த்துகிறேன்!!!
என்னுடைய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டம் தன்னிடம் வந்து சேரவில்லை என்று அண்ணன் தொலைப்பேசியில் தெரிவித்தமையால் அவர் பின்னூட்ட கயமைத்தனம் செய்வதாக நான் குறிப்பிட்ட முந்தைய பின்னூட்டத்தை திரும்பப்பெறுகிறேன்!!
ReplyDeleteஎல்லாரும் வந்து துகைச்சுட்டுச் சட்னி பண்ணிட்டுப் போயாச்சு, இனிமேல் நமக்கு என்ன வேலை? வரேன், வழக்கம்போல் தாமதமாக! :P
ReplyDeleteநீங்கள் செய்தது சந்தேகமில்லாமல் புதினா துவையல் தான். இன்னும் இதில் கொஞ்சம் பெருங்காயமும், மிளகும் செர்த்திருந்தால் பிர்பெக்ட் ஆகியிருக்கும்.இப்பொழுது உடம்பு தேவலையா? frozen இட்லி எதுக்கு எங்க வீட்டுக்கு வாங்க நிஜ இட்டியே செஞ்சி கொடுக்கறேன்.
ReplyDeleteஎங்கு பார்த்தாலும் சமையலாக உள்ளது. வி எஸ் கே அய்யாவும் சமையல் போட்டிருக்கிறார். பார்க்க பார்க்க பசி அதிகமாகிறது திரு KRS.
//Dreamzz said...
ReplyDeleteLOL! nalla sollaraangaiya detailu!//
வாங்க Dreamzz
//வேல் வெச்சிருக்கவர் வேலன்னா வில் வித்தையில் சிறந்தவர் வில்லன் தானே...
அப்படினா ராமரும் அர்ச்சுனனும் வில்லன் தானே???//
nalla ketkaraangppa kelviu!//
ஆமாமா...
கேள்வியை நீங்க கேட்காதீங்க! நானே கேட்கிறேன்! ஏன்னா எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும்! - வசனம் ஞாபகம் வருதுங்களா? :-)
//வடுவூர் குமார் said...
ReplyDeleteவெங்காயம் + பொதினா நன்றாகத்தான் இருக்கும்.அவுங்க சொல்கிற கேட்காதீங்க..//
கரெக்டு குமார் சார்.
வெங்காயம் மூணு தான். ரொம்ப வைச்சு அரைச்சா தான் புதினா வாசம் போய் விடும்! இது காரம், மணம், சுவை!
டீச்சர், ஷைலஜா - ட்ரை சேஸாவா? :-)
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteமொக்கை நன்றே மொக்கை நன்றே
பிச்சை புகினும் மொக்கை நன்றே
எங்க கீதாபாட்டி கேடிருக்க வேண்டும் இதை "எனக்கும் எதிரியா" என்று சீறீ இருப்பார்கள்//
ஹி ஹி...கீதாம்மா தானே! உங்களுக்கு எப்ப கீதாப் பாட்டி ஆனாங்க? அம்பிக்கு மட்டும் தான் கீதாப்பாட்டி! :-)
//உடம்பு ஜாக்கிரதை.மிள்காய் வேண்டாம்//
சரிங்க திராச. நாக்கைக் கண்ட்ரோல் செஞ்சிக்கறேன்!
யாகாவாராயினும் நா காக்க - ஆச்சே! :-)
//வெட்டிப்பயல் said...
ReplyDelete//குட்டீஸ்-க்கு இந்த ஷேப் இட்லி ரொம்ப பிடிக்கும்!//
ஏந்த குட்டீஸ்க்கு?//
ஷூ...இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது, பாலாஜி! கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாருங்க! :-)
நான் சொன்னது Kutty குழந்தைகள்!
//பாஸ்டனில் இருப்பது பாபாவும் வெட்டி அண்ணாவும்தான்.கீழே labelலில் வெட்டி அண்ணாவின் பெயர்.சிவிஆர் உங்களுக்கு புரிகின்றதா?//
நான் லோவல்னு ஒரு ஊர்ல இருக்கேன் என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...//
You mean LowHell, பாலாஜி? :-)
அதான் Lowவாகத் தாழ்மையுடன் தெரிவிச்ச்சீங்களா? சாரி...Sivaji - The Boss வந்ததில் இருந்து,அதை "பாஸ்"டனுடன் இணைத்து விட்டார்கள்! வேணும்னா பாபா-வைக் கேட்டுக்கோங்க! :-)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஎன்னது மொக்கை பதிவு போட்டா தப்பா?
இப்ப தான் மாதவி பந்தலுக்கு ஒரு கலையே வந்திருக்கு..//
Dank u Balaji, Dank u!
அது கலையா, களையா? :-)
// G.Ragavan said...
ReplyDeleteமுதற்கண் உங்கள் பதிவில் பிழையுள்ளது. சொல்லில் குற்றமிருந்தாலும் மன்னிக்கப்படலாம். ஆனால் பொருளில் குற்றமுள்ளது.//
ஆகா..வந்தாருய்யா Nakkeraru from Nederlands! :-)
//உண்டோம் என்று நீங்கள் சொல்ல விரும்பும் பதிவில் குற்றம் கண்டோம் என்று சொல்ல//
உண்பதில் எல்லாம் குற்றம் காணலாமா ஜிரா? குற்றமே இல்லாத ஒரே செயல் உண்பது தானே! :-)
//நாரதரிடம் தானே அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. அப்படியிருக்க தலைப்பில் கிழவியை வைத்த காரணம்?//
விநாயகர் நாரதரிடம் கேட்டார்!
ஆனால் புதினா தனித் தமிழ் உணவு அல்லவா? அதனால் தான் முருகன் தமிழ் மூதாட்டி ஒளவையிடம் இதைக் கேட்கிறான்!
நாரதர், விநாயகர் எல்லாம் வேறு ஜிரா! உங்களுக்குத் தெரியாததா என்ன? :-)
//நக்கீரரும்....ஔவையும் உங்கள் மீது மிகவும் ஆத்திரமாக இருப்பதாக மயிலார் வழியாகச் சொல்லி//
மயிலார் சொன்னது ஆத்திரம் அன்று! ஆத்திறம்! ஆ..என்ன திறம் என்று என் ஐயன் கீரனும், ஆயி ஒளவையும் வியந்தனர்! அதை நீங்க சரியாப் புரிஞ்சுக்காம...சேச்சே என்ன கொடுமை ராகவன்! :-)
மயிலாரே...கருணை கூர்ந்து எங்கள் ஜிராவுக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுங்க!
// CVR said...
ReplyDeleteநான் எழுதிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்தை வெளியிடாமல் கயமைத்தனம் செய்யும் கே.ஆர்.எஸ்............//
CVR
என்னையா இப்படிச் சொல்லி விட்டீர்கள்! நானா கயவன்?
...ஹூம்....கற்பூரப் பொம்மை ஒன்று...கண்ணோரம் ...ஈரம்
//வேலைப் பிடித்தவன் வேலனென்றால் வில்லைப் பிடித்தவன் வில்லன் என்பதே தமிழ் இலக்கணம். அதை ஏற்காதவர்க்கு தலைக்கனம். இனியும் ஏன் பாட வேண்டும் பிலாக்கனம். (இங்க நிறுத்திக்கிறேன். அடுத்த கனம் எதுவும் தெரியல)//
ReplyDeleteஅடுத்த கனம் மகாகனம் தான்!
"மகாகனம்" பொருந்திய ராகவனார் கனம் தெரியல என்று சொல்லுதல் கனமாமோ? :-)))
//ராகத்தில் வன்மையானவன் ராகவன் என்று அழைக்கப்படுவது போல வேலெறிவதில் வல்லவன் வேலன். வில்லிடுவதில் சிறந்தவன் வில்லவன்//
சந்தடி சாக்குல ஒரே கல்லுல மூணு மாங்கா அடிக்கப் பாக்குறார்ரா நம்ம ஜிரா! :-)
ராகம் தமிழ்ச் சொல்லா? இராகம் தமிழ்ச் சொல்லா? வன்மையான ராகங்கள் பாடும் ராகவன்-ன்னு தான் பேரு வைச்சாங்களான்னு நானு தூத்துக்குடிக்கு வந்து கேக்கப் போறேன்! என்னைய கூட்டிப் போங்க ஜிரா!
//வில்லன் என்ற பெயர் தவறு என்று தீர்ப்பளிக்க ஆயத்தமாக இருக்கிறேன்//
ஆகா...தீர்ப்பு கிடைத்து விட்டது!
நீதி வென்று விட்டது! வாழ்க ஜிரா! விதுர நீதி மாதிரி ஜிரா நீதி! வாழ்க வாழ்க! :-))))
வெட்டி - அப்படியே இனி மேல் தூள் கிளப்பும் உங்களையும் தூளன்-ன்னு கூப்பிடலாம்னு நீதிபதி உத்திரவு கொடுத்து விட்டார்! CVR இதை லபக்குன்னு பிடிச்சிகோங்க!
//CVR said...
ReplyDeleteஅவர் பின்னூட்ட கயமைத்தனம் செய்வதாக நான் குறிப்பிட்ட முந்தைய பின்னூட்டத்தை திரும்பப்பெறுகிறேன்!! //
மிக்க நன்றி குருவே!
//சில மாதங்களுக்கு முன்பு ஆன் ஆர்பர் பஜ்ஜி கதை கேள்விப் பட்டேன்./// அது பொய்யென சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பது தெரிந்ததே!!!//
ReplyDeleteஅதெல்லாம் ஒண்ணும் நிரூபிக்கப் படலை! சும்மா கப்ஸா விடாதீங்க CVR! சொஜ்ஜி உண்மை தான்! பஜ்ஜி மட்டும் தான் பொய்!
//அன்புத்தோழி said...
ReplyDeleteநீங்கள் செய்தது சந்தேகமில்லாமல் புதினா துவையல் தான். இன்னும் இதில் கொஞ்சம் பெருங்காயமும், மிளகும் செர்த்திருந்தால் பிர்பெக்ட் ஆகியிருக்கும்//
ஆகா...பெருங்காயம் எப்படி மறந்து போனேன்?
//இப்பொழுது உடம்பு தேவலையா? frozen இட்லி எதுக்கு எங்க வீட்டுக்கு வாங்க நிஜ இட்டியே செஞ்சி கொடுக்கறேன்//
நன்றி அன்புத்தோழி! அடுத்த முறை அந்தப் பக்கம் வரும் போது, கண்டிப்பா ஒரு விசிட் அடிக்கிறோம்!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஎல்லாரும் வந்து துகைச்சுட்டுச் சட்னி பண்ணிட்டுப் போயாச்சு, இனிமேல் நமக்கு என்ன வேலை?//
என்ன அப்பிடி சொல்லிட்டீங்க கீதாம்மா? உங்களுக்கு வேலை உண்டே! அடுத்த முறை அம்பத்தூர் வரும் போது, புதினாத் தொகையல் வேணும்! :-)
//
ReplyDeleteஷூ...இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது, பாலாஜி! கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாருங்க! :-)
நான் சொன்னது Kutty குழந்தைகள்!//
நானும் அதை தான் சொன்னேன்.. இந்தியால இருக்கற Kutty குழந்தைங்களுக்கா? இல்லை அமெரிக்க Kutty குழந்தைங்களுக்கா? இல்லை அமெரிக்காவில் வளரும் இந்திய Kutty குழந்தைங்களுக்கா???
வர வர CVR கூட சேர்ந்து தப்பு தப்பா யோசிக்கறீங்க. அது மட்டுமில்லாம எங்க மேல வேற பழியை போடறீங்க...
ரவி நீ செய்ததைப் பார்க்கும் போது அது
ReplyDeleteபுதிதாக ஏதோ ஒன்று போல் தெரிகின்றதே....
இதுக்கு புதிய பெயர் வைத்துவிடலாம்..
(வெங்காயத்தினால்)
அருமையான பதிவு
ReplyDelete