புதிரா? புனிதமா?? - பாகம் 3
விடைகள் பதிப்பிக்கப்பட்டன! சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்! முடிவுகள் இதோ! (தாமதத்திற்கு மன்னிக்கவும்; பணி மிகுதியால், மாலையில் இப்பக்கம் வரவே முடியவில்லை.)
ஜெயஸ்ரீ, கொத்ஸ்
குமரன், SK, இராமநாதன்
ஜிரா
ஆகியோர் சிறப்பான விடைகளைச் சொல்லி இருக்காங்க!
இம்முறை 2&10 கேள்விகள் சற்று subjectiveஆக உள்ளதால், வரிசைப்படுத்தவில்லை. ஜிராவின் விளக்கங்களையும் பதிவின் இறுதியில் காணவும்!
பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வென்றவர்க்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!!
அடுத்தது?
கள்ளச் சிரிப்புக் குழந்தை கண்ணன்!!
தலங்கள் பற்றிய கேள்விகள் வேண்டுமா இல்லை பாத்திரப் படைப்புகள் மட்டும் வேண்டுமா? இல்லை எப்போதும் போல் இரண்டும் கலந்தா?
----------------------------------------------------------------------------------------------
இந்நேரம் இந்தத் தலைப்பு நம் எல்லாருக்கும் பழகி விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்! இன்றைய கேள்விகள் ஒரு உலக மகா அழகனைப் பற்றி!
வேறு யார்? எல்லாம் நம் குமரன் தான்! தமிழ்மணம் என்றுமே கமழாதா என்ன குமரனிடம்!
முருகப்பெருமானைச் சொன்னேன் ஐயா! :-)
வழக்கமான விளையாட்டு விதிகள் தான் இப்போதும்! கூகுளைக் கூடக் கலந்து பேசலாம்;
ஆனா நம்ம ஜிரா கிட்ட மட்டும் யாரும் பிட் அடிக்க அனுமதி இல்லை! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி)
1 | திருச்செந்தூர் முருகனை வேண்டிப், பன்னீர் இலை விபூதியால் தன் வயிற்று வலி தீர்ந்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலைப் பாடிய அடியவர் யார்? | 1 அ) அருணகிரிநாதர் |
2 | முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது? | 2 அ) கிருத்திகை |
3 | முருகனின் ஐந்தாம் படை வீடாக நக்கீரர் குறிப்பிடுவது எது? | 3 அ) குன்றுதோறாடல் |
4 | இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்? | 4 அ) நல்லூர் |
5 | பொதுவாக அம்மன் கோவில்களில் புற்று இருக்கும். ஆனால் இங்கு முருகன் கோவிலில் புற்று, அதுவும் கருவறைக்கு உள்ளேயே உள்ளது. அந்த மண்ணையே நீறு போல் பிரசாதமாகவும் தருகின்றனர். எங்கு? | 5 அ) வள்ளிமலை |
6 | இன்று மிகப் பிரபலமாகப் பாடப்படும் கந்த சஷ்டிக் கவசத்தை எழுதியது யார்? | 6 அ) நக்கீரர் |
7 | தாயிடம் வேல் வாங்கிச் சூரனை அழித்தான் முருகன். கந்த சஷ்டி விழாவில், இந்த வேல் வாங்கும் போது, சக்தி வேலின் வீரியத்தால், முருகனின் திருமேனி வியர்த்து தெப்பமாய் நனைந்து விடும்! அர்ச்சகர்களும் துணியால் துடைத்துப் பிழிவர்! எந்தத் தலம்? | 7 அ) திருச்செந்தூர் |
8 | இராமாயணத்தில் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை அதே போல் முருகனின் கதையில் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், _____? (இந்தக் கேள்விக்கு நோ சாய்ஸ்) | 8 |
9 | முருகனே வந்து நூல் ஆதாரம் காட்டி, அரங்கேற்றத்துக்கு உதவி செய்த நூல் எது? | 9 அ) திருமுருகாற்றுப்படை ஆ) கந்தபுராணம் |
10 | ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்? | 10 அ) கார்த்திகைப் பெண்கள் |
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!
1 அ) அருணகிரிநாதர் ஆ) ஆதி சங்கரர் இ) குமரகுருபரர் ஈ) முத்துசுவாமி தீட்சிதர் |
2 அ) கிருத்திகை ஆ) பூசம் இ) விசாகம் ஈ) திருவோணம் |
3 அ) குன்றுதோறாடல் ஆ) திருவேரகம் (சுவாமிமலை) இ) திருத்தணிகை ஈ) பழமுதிர்சோலை |
4 அ) நல்லூர் ஆ) மண்டூர் இ) கதிர்காமம் ஈ) தந்தமலை |
5 அ) வள்ளிமலைஆ) திருநாகேஸ்வரம்இ) விராலிமலை ஈ) சுப்ரமண்யா |
6 அ) நக்கீரர் ஆ) கச்சியப்ப சிவாச்சாரியார் இ) தேவராய சுவாமிகள் ஈ) அருணகிரிநாதர் |
7 அ) திருச்செந்தூர் ஆ) திருப்பரங்குன்றம் இ) சிக்கல் ஈ) மருதமலை |
8 |
9 அ) திருமுருகாற்றுப்படைஆ) கந்தபுராணம் இ) காவடிச்சிந்து ஈ) திருப்புகழ் |
10 அ) கார்த்திகைப் பெண்கள் ஆ) அக்னி இ) வாயு ஈ) வீரபாகு |
----------------------------------------------------------------------------------------------
விடைகள் இதோ:
1 | திருச்செந்தூர் முருகனை வேண்டிப், பன்னீர் இலை விபூதியால் தன் வயிற்று வலி தீர்ந்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலைப் பாடிய அடியவர் யார்? | ஆ) ஆதி சங்கரர் திருச்செந்தூரில் பன்னீர் இலையில் வைத்து மடித்து, திருநீறு தருவது மரபு. வாசம் மிக்க விபூதியை நாள் எல்லாம் மேனியில் தரிக்கலாம் |
2 | முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது? | இ) விசாகம் |
3 | முருகனின் ஐந்தாம் படை வீடாக நக்கீரர் குறிப்பிடுவது எது? | அ) குன்றுதோறாடல் இன்றைய கால கட்டத்தில் திருத்தணிகை ஐந்தாம் படை வீடாகக் கொள்ளப்பட்டாலும், நக்கீரர் குறிப்பது குன்றுதோறாடல் தான். |
4 | இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்? | இ) கதிர்காமம் இன்றும் இந்த மூன்று மதத்தினரும் வழிபடும் தலம் இது. பெளத்தர்கள் மகாசேனா, போதிசத்துவர் ரூபமாகவும், இஸ்லாமியர்கள் அல் கதிர் என்ற இறைத்தூதர் நினைவாகவும் வழிபடும் தலம்; முருக வழிபாடும் உருவமாய் இல்லாது, திரையுடன் கூடிய அறுகோண யந்திரமாக உள்ளது. கதிர்காமப் பாத யாத்திரையும், ஈசால விழாவும் அனைவரும் கொண்டாடுகிறார்கள். |
5 | பொதுவாக அம்மன் கோவில்களில் புற்று இருக்கும். ஆனால் இங்கு முருகன் கோவிலில் புற்று, அதுவும் கருவறைக்கு உள்ளேயே உள்ளது. அந்த மண்ணையே நீறு போல் பிரசாதமாகவும் தருகின்றனர். எங்கு? | ஈ) சுப்ரமண்யா முருகனை நாக உருவத்தில் வழிபடுவதும் இங்கே தான்; ஆதி தலத்தில் இப்படியும், குக்கே என்னும் ஊரில் மயில் மீது அமர்ந்த நிலையிலும் வழிபடுகிறார்கள். |
6 | இன்று மிகப் பிரபலமாகப் பாடப்படும் கந்த சஷ்டிக் கவசத்தை எழுதியது யார்? | இ) தேவராய சுவாமிகள் "பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக், காலையில் மாலையில் கருத்துடன் நாளும், ஓதியே ஜெபித்து" என்று கவசத்திலேயே அவர் பெயர் வருமே! |
7 | தாயிடம் வேல் வாங்கிச் சூரனை அழித்தான் முருகன். கந்த சஷ்டி விழாவில், இந்த வேல் வாங்கும் போது, சக்தி வேலின் வீரியத்தால், முருகனின் திருமேனி வியர்த்து தெப்பமாய் நனைந்து விடும்! அர்ச்சகர்களும் துணியால் துடைத்துப் பிழிவர்! எந்தத் தலம்? | இ) சிக்கல் |
8 | இராமாயணத்தில் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை அதே போல் முருகனின் கதையில் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், _____? (இந்தக் கேள்விக்கு நோ சாய்ஸ்) | 8 அசமுகி (அஜமுகி) சூரனின் தங்கை; இந்திராணியைக் கவர்ந்து, அவள் அண்ணனுக்குக் கொடுக்க எண்ணுகிறாள். அப்போது இந்திராணியின் காவல் பூத கணங்களால் கை அறு படுகிறாள்; ஆட்டுத் தலை இவளுக்கு உண்டு. |
9 | முருகனே வந்து நூல் ஆதாரம் காட்டி, அரங்கேற்றத்துக்கு உதவி செய்த நூல் எது? | ஆ) கந்தபுராணம் முருகன் எடுத்துக் கொடுத்த அடியில் பிழையா என்று ஆசிரியர் கச்சியப்பர் கலங்குகிறார். முருகனே சான்றோர் உருவில் வந்து, வீர சோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி, மறைகிறார். அரங்கேற்றம் தடையின்றிச் செல்கிறது. |
10 | ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்? | இ) வாயு |
1. ஆ) ஆதி சங்கரர்
ReplyDelete2. இ) விசாகம்
3. அ) குன்றுதோறாடல்
4. ஆ) மண்டூர் (யூகம்)
5. ஈ) சுப்ரமண்யா (யூகம் - இங்கே தான் முருகன் பாம்பின் உருவில் வழிபடப்படுகிறார்)
6. இ) தேவராயசுவாமிகள்
7. இ) சிக்கல்
8. அசமுகி
9. ஆ) கந்தபுராணம் (யூகம்)
10. இ) வாயு
இந்த முறை கூகிளாண்டவர் உதவியை நாடினேன்.
ReplyDeleteகுமரனைப் பற்றிய பதிவில் ராகவன் அல்லவா முதல் வருகை?
ReplyDeleteஎப்படி குமரன் வந்தார்? :-)))
குமரனின் ஒன்பது விடைகளுமே சரி!
நான் பத்து விடைகள் சொன்னேனே. ஒன்பது தான் சரியா? எது சரியில்லை என்று சொல்லுங்கள்.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஎது சரியில்லை என்று சொல்லுங்கள்//
அதைச் சொன்னால் இன்னொரு முறை சரியான விடை சொல்லி விடுவீர்களே! :-)))
4 தவிர மற்ற அனைத்தும் சரியே!
4வதா. தவறாக இருக்கலாம். நான் சொன்னது போல் அது யூகத்தில் சொன்ன விடை. சரியான விடையை அறிய ஆவலுடன் இருக்கிறேன். காத்திருப்பேன்.
ReplyDelete1 ஆ) ஆதி சங்கரர்
ReplyDelete2 இ) விசாகம்
3 இ) திருத்தணிகை (நக்கீரர் கூறியபடி அப்படின்னு பொடி வெச்சுட்டீங்களே. அதுல வில்லங்கம் ஒண்ணும் இல்லையே?)
4 இ) கதிர்காமம்
5 இது தெரியவில்லையே. கொஞ்சம் டயம் ப்ளீஸ்
6 இ) தேவராய சுவாமிகள் ( அதா தேவராயன் பகன்ற அப்படின்னு அதுலயே வருமே)
7 இ) சிக்கல் (நீங்க அந்த கட் பேஸ்ட் கட்டத்துல தப்பா குடுத்துட்டீங்க)
8 சூரபத்மன்
9 ஆ) கந்தபுராணம் (திகடசக்கரம்)
10 ஆ) அக்னி இ) வாயு (இவர்களில் யார் எனத் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் சொல்கிறேன்.)
கொத்ஸ்
ReplyDeleteமிக்க நன்றி! தவறைச் சுட்டிக்காட்டினீர்கள்! திருத்தி விட்டேன்!
கட் & பேஸ்ட் கட்டத்தில் மட்டும், 7ஆம் கேள்விக்கு, வேறு ஒரு கேள்வியின் சாய்ஸ் வந்துவிட்டது!
மன்னிக்கவும்!!
நம்ம கணக்கில் எவ்வளவு சரி தவறுன்னு சொல்லவே இல்லையே. என் 4 சரி என்றால் குமரனோடு ஒரு டீல் போட முடியுமல்லவா? சீக்கிரம் சொல்லுங்கள். :D
ReplyDelete1 ஆ) ஆதி சங்கரர்
ReplyDelete2 அ) கிருத்திகை
3 அ) குன்றுதோறாடல்
4 இ) கதிர்காமம்
5 ஈ) சுப்ரமண்யா
6 இ) தேவராய சுவாமிகள்
7 இ) சிக்கல்
8 அஜமுகி
9 ஆ) கந்தபுராணம்
10 ஆ) அக்னி
அமெரிக்க பொழுதுல போட்டா மொதல்ல குமரந்தான் சொல்வாரு. இந்திய பொழுதுல போட்டா நான் சொல்வேன்.
என் தனி மடல் வந்ததா?
ReplyDeleteகொத்ஸ்
ReplyDelete3. பொடி வைத்த கேள்வியே! உங்கள் விடை - sorry!
5. நீங்க பதில் பிறகு சொல்வதாக சொல்லிட்டீங்க
8. தவறு (நீங்கள் சொன்ன பதிலை நான் தான் கேள்வியிலேயே சொல்லி விட்டேனே)
10. இரண்டு வடைகள் வரவேற்கிறோம்!
ஆனால் இரண்டு விடைகள் - sorry :-)))) ஆனா அதில் ஒன்று சரி!
ஆக கொத்ஸ் 7 "வடை" சரியாச் சொல்லிட்டார்!
கொத்ஸ்
ReplyDeleteதனி மடல் கிடைச்சுதுங்க; நன்றி! பதில் போடுகிறேன்!
ஜிரா வருக!
ReplyDeleteநீங்கள் இட்ட விடைகள்
உங்களுடையதா?
மயிலாருடையதா?? :-)))
//அமெரிக்கப் பொழுதில் போட்டா குமரன் சொல்வாரு. இந்தியப் பொழுதில் போட்டா நான் சொல்வேன்//
அட அதாங்க இந்தியப் பொழுதில், நீங்க விழிச்சதும் பாக்கறா மாதிரி போட்டேன்.
நீங்க இன்னிக்கி லேட்டா எழுந்திருச்சீங்கன்னு சொல்லுங்க! :-)
நாஸ்டா ஆச்சா???
ஜிரா
ReplyDelete2,10 தவிர அனைத்துமே சரி!
1. ஆதி சங்கரர்
ReplyDelete2. விசாகம்
3. திருத்தணிகை
4. கதிர்காமம் (அ) நல்லூர்
5. சுப்ரமண்யா
6. தேவராய ச்வாமிகள்
7. சிக்கல்
8. அஜமுகி
9. கந்தபுராணம்
10. வாயு
விடைகள் சரியோ?
ReplyDelete1. ஆதி சங்கரர்
2. விசாகம்
3. திருத்தணிகை
4. கதிர்காமம்
5. திருநாகேஸ்வரம்
6. தேவராயசுவாமிகள்
7. திருசெந்தூர்
8. அசுமுகி
9. கந்தபுராணம்
10. வாயு
1. ஆ 2. இ 3.அ 4.அ 5.ஈ 6 இ 7.இ 8. அஜமுகி 9. ஆ 10. ஆ&இ [அப்படித்தான் கந்தபுராணத்தில் இருக்கிறது.]
ReplyDeleteஅக்கினி வாங்க, வாயு தள்ளிக் கொண்டு சென்றதாகவும் கொள்ளாலாம். ஆனால் இருவரையும் அழைத்தே சிவனார் கொடுத்ததாகப் புராணம் சொல்கிறது.
ஜெயஸ்ரீ வந்து கலக்கியிருக்காங்க!
ReplyDelete4 ஆம் கேள்விக்கு இரண்டு விடை கொடுத்திருக்கீங்க! ஆனா முதலில் கொடுத்த விடையே சரியானது!
பத்தும் சரியான விடைகள்!
ஜீவா வாங்க!
ReplyDelete3,5,7 தவிர அனைத்தும் சரி! வாழ்த்துக்கள்!
1) ஆ. ஆதிசங்கரர்
ReplyDelete2) அ. விசாகம்
3) இ. திருத்தணிகை
4) இ. கதிர்காமம்
5)
6) இ. தேவராய சுவாமிகள்
7) இ. சிக்கல்
8) அஜமுகி
9) ஆ. கந்தபுராணம்
10) அக்னி
SK ஐயா வாங்க!
ReplyDelete4 தவிர மற்ற அனைத்துமே சரி!
10 ஆம் கேள்விக்குப் புராணச் சான்றும் கொடுத்திருக்கீங்க! மிக்க நன்றி!
மருத்துவர் ஐயா, இராமநாதன் வாங்க!
ReplyDelete3,5,10 தவிர மற்ற எல்லாம் சரியே!
5ஐ ஏன் காலியாக விட்டுவிட்டீர்கள்? 3இல் கொத்ஸ் சொன்னது போல பொடி உள்ளது!
4 ஒரு ஊகம்தான்
ReplyDeleteவிடைக்குக் காத்திருக்கிறேன்
தந்தமலையோ!
3. பிட் அடித்துவிட்டேன் - அ) குன்றுதோறாடல்
ReplyDelete5. சுப்பிரமணியா
8. அஜமுகி
10. அக்னியும் வாயுவும் சேர்ந்துதானாமே...
இந்த விடைகளுக்கு கூகிளாண்டவரிடம் போகவில்லை. செந்திலாண்டவரின் லோக்கல் ஏஜெண்டை கேட்டுப் பார்த்தேன்.
SK ஐயா
ReplyDelete4க்கு விடை அதுவும் இல்லை! மன்னிக்கவும்! நாளை மாலை 4:00 மணி வாக்கில் விடைகளைப் பதிப்பித்து விடுகிறேன்!
மேலும் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா ஐயா? நீங்கள் குறிப்பிட்ட புராணச் சான்றின் படி பார்த்தால் இரு பதில் தந்தவர்களுக்கும் மதிப்பெண் தந்தாக வேண்டும்; மூல நூலில் சென்று பார்க்கிறேன்; நீங்களும் பார்த்து உறுதி செய்கிறீர்களா? மிக்க நன்றி!
விக்கியின் செல்வர் கொத்ஸ் 2nd inningsஇல் 10/10!
ReplyDeleteகலக்கிட்டீரு!
அது சரி
யார் ஐயா அந்த செந்திலாண்டவரின் லோக்கல் ஏஜெண்ட்? சொன்னால் நாங்களும் அவரிடம் போய் நின்று அருள் பெறுவோமே!!!
அட கே.ஆர்.எஸ்,
ReplyDeleteபொடி ரொம்ப பொடியா இருக்கவே கண்லயே படலை :))
3) அ. குன்றுதோறாடல் (நல்லாவே விளையாட்டு காட்டறீங்க)
5) குக்கே சுப்ரமண்யாவை நினைத்தவன் ஆதிசுப்ரமண்யரை மறந்தேவிட்டேன். கூளிளாண்டவர் உதவியினால் 5. சுப்ரமண்யா
10) அக்னி - என்று சென்றமுறை சொன்ன மாதிரிதான் நினைவு.
சிவனிலிருந்து உருவான தீப்பொறிகளை அக்னிதேவன் தாங்கமுடியாமல்தானே கங்கையில் இடுகிறான்? இல்லை என் கதை ட்ராக் மாறிவிட்டதா?
ராமநாதன் ஐயா
ReplyDeleteநான் விளையாட்டு காட்ட முடியுமா? அப்பன் முருகன் அல்லவா அந்த குன்று, இந்த மலை என்று விளையாட்டு காட்டுகிறான்!
சரி...அது என்ன பொடி ரொம்ப பொடியா இருக்கு? font size சொல்லறீங்களா? பதிவா? பின்னூட்ட fontஆ? சொன்னீங்கனா மாத்திப்புடலாம்!
கொத்ஸ் மட்டும் தான் இது போன்று ஒரே ஒரு முறை சொன்னார் என்று உடனே மாற்றினேன்! இங்கு எனக்கு பெரிய font ஆகத் தான் தெரிகிறது!
font size சொல்லலை கே.ஆர்.எஸ்,
ReplyDeleteநீங்க வச்ச பொடி ரொம்ப பொடிசா இருந்ததால முததடவை தோணவேயில்லேன்னு சொன்னேன். :)
ராமநாதன் ஐயா
ReplyDelete10ஆம் கேள்வி தவிர அனைத்தும் சரியாச் சொன்னீங்க 2nd inningsஇல்!
10ஆம் கேள்விக்கு நான் அறிந்த விடையில் இப்போது ஒரு சிறிய confusion ஏற்பட்டுள்ளது!
நான், குமரன், ஜெயஸ்ரீ எல்லாம் ஒரு விடையை எண்ணியுள்ளோம்;
SK ஐயா வேறு ஒரு குறிப்பு கொடுத்துள்ளார்; நான் போய் கந்த புராண மூலத்தைப் பார்த்து விட்டு வருகிறேன்!
உற்பத்திக்காண்டம் செய்யுள் 81 முதல் 90 வரை பார்க்கவும்.
ReplyDeleteவாயு, அக்கினி இருவரையும் அழைத்து, கங்கையில் சேர்க்க சிவனார் சொல்லவும், முதலில் அஞ்சிய இருவரும் பின்னர் சிவன் அருளிய வரத்தால் தைரியம் அடைந்து, வாயுவும், அக்கினியும் மாறி மாறிச் சுமந்து, அதனைக் கங்கையில் சேர்க்கிறார்கள்.
ஓக்கே! முதலில் சுமந்தவன் வாயுவே!
ஆனால், இது இருவருக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட பணி
இவ்வாறு கந்தபுராணம் கூறுகிறது.
SK ஐயா
ReplyDeleteஅடியேன் பொருட்டு சிரமம் பார்க்காது பார்த்துச் சொன்னீர்களே! மிக்க நன்றி!
இப்ப தான் ஜிரா விடமும் அரட்டை செய்து விட்டு வருகிறேன்!
கந்த புராணம் மூலமும் படித்துப் பார்த்தேன்! நீங்கள் சொல்வது சரியே!
விடைகளை நாளை மாலை பதிப்பிக்கலாம்!
நீங்க இன்னும் தூங்கப் போகலையா? மணி 1:15 ஆகுதே! அது சரி நண்பர் GK ஐயாவைப் போலவே நீங்களுமா? :-))
எல்லாரும் வந்து சொல்லிட்டாங்க போல் இருக்கு. கொஞ்சம் தாமதமா வந்துட்டேன். பரவாயில்லை. அடுத்த முறை பார்க்கலாம், தினமும் உட்கார முடியறதில்லை. அதான் தவறிடுச்சு.
ReplyDeleteஎல்லாரும் வந்து சொல்லிட்டாங்க போல் இருக்கு. கொஞ்சம் தாமதமா வந்துட்டேன். பரவாயில்லை. அடுத்த முறை பார்க்கலாம், தினமும் உட்கார முடியறதில்லை. அதான் தவறிடுச்சு.
ReplyDelete1 ஆதி சங்கரர்
ReplyDelete2 கிருத்திகை
3 திருத்தணிகை
4 கதிர்காமம்
5 சுப்ரமண்யா
6 கச்சியப்ப சிவாச்சாரியார்
7 திருச்செந்தூர்
8 theryala sir
9 திருமுருகாற்றுப்படை
10 வாயு
Mouli
மெளலி வாங்க.
ReplyDeleteஉங்க 1,4,5,10 சரி.
1 திருச்செந்தூர் முருகனை வேண்டிப், பன்னீர் இலை விபூதியால் தன் வயிற்று வலி தீர்ந்து, சுப்ரமண்ய புஜங்கம் என்ற நூலைப் பாடிய அடியவர் யார்?
ReplyDeleteஆ) ஆதி சங்கரர்
திருச்செந்தூர் என்றாலே குமரகுருபரரும் அருணகிரிநாதரும் நினைவிற்கு வராமல் இரார். ஊமைக்குழந்தையாய் இருந்த் கந்தன் அருளால் தமிழ்வாய் பெற்றார் குமரகுருபரர். பூவைக்காட்டிக் குழந்தை ஒன்று இதென்ன என்று கேட்க ஊமைக்குருபரன் "பூமேவு செங்கமலப் புத்தேளும்" என்று பா ஒலித்தார். அருணகிரியோ முருகனின் திருநடனக் காட்சியைக் கண்டு குளிர்ந்த இடம் திருச்செந்தூர். "தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்" என்று திருப்புகழ் பொழிய முருகனின் திருநடனம் நடைபெற்ற இடம் திருச்செந்தில். அங்கு சங்கரர் சென்றிருந்த பொழுது கப்பெனப் பற்றியது வயிறு. அந்தச் சூடு தணித்துப் பாடு பெற்றான் முருகன். இதே நிகழ்வு பகழிக்கூத்தருக்கும் நடந்தது. அவரும் முருகன் மேல் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பொழிந்தார். ஆனால் கேள்வியில் சுப்ரமணிய புஜங்கம் என்றிருப்பதால் அது சங்கரரைக் குறிக்கும்.
2 முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது?
இந்தக் கேள்வி எவ்வளவு ஏற்றுக் கொள்ள முடியுமென்று தெரியவில்லை. சைவ சித்தாந்தத்தின் படி விலக்கப்பட வேண்டிய கேள்வி. பிறவா இறவாப் பெம்மாம் முருகன். அவதாரம் என்றும் சொல்ல முடியாது. "ஒரு திரு முருகன் உதித்தனன் உலகம் உய்ய" இதுதான் கச்சியப்பர் வாக்கு. ஏற்கனவே இருந்த சூரியன் அடுத்த நாள் மீண்டும் உதிப்பது போல ஏற்கனவே சிவமாய் இருந்தது முருகனாய் உதித்தது. வைகாசி விசாகம் என்பது பின்னாளைய வழக்கு என்று கொண்டால், "அறுவர் பயந்த அருந்தவச் செல்வ" என்ற நக்கீரன் எழுத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி அறுவர் பயந்த செல்வராயின் வைகாசி விசாகம் அவதாரமீனாவது எங்ஙனம்! ஈசன் திருவாக்கிலும் கார்த்திகைப் பெண்டிரே முதல் மதிப்பிற்கு உரியவர்.
3 முருகனின் ஐந்தாம் படை வீடாக நக்கீரர் குறிப்பிடுவது எது?
குன்று தோன்றுமிடமெல்லாம் குமரன் திருநடம் புரியுமிடம் என்பதே தமிழ் வழக்கு. அப்படிக் குன்றெழுந்த இடமெல்லாம் குமரனெழுந்த இடமாகக் கருதிச் செய்ததுதான் குன்றுதோறாடல். அதில் தணிகையும் ஒன்று. அறுபடை வீட்டை முருகன் தங்கியிருந்த படைவீடுகள் என்று சொல்வது பெரும் பிழை. ஆற்றுப்படை வீடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்வு சிறக்க முருகனிடத்தில் நம்மை ஆற்றுப்படுத்தும் இந்த அறுபடைவீடுகள்.
4 இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்?
கதிர்காமம். இது இன்று தன்னியல்பு சிதைந்து தமிழர் வணங்க அஞ்சுவதாய் ஆனதாக அறிகிறோம். வருத்தம் தரும் செய்திதான். தேயோ என்ற பெயரில் முருகனை பௌத்தக் கடவுளாக்கி வணங்குகிறார்கள்.
5
பொதுவாக அம்மன் கோவில்களில் புற்று இருக்கும். ஆனால் இங்கு முருகன் கோவிலில் புற்று, அதுவும் கருவறைக்கு உள்ளேயே உள்ளது. அந்த மண்ணையே நீறு போல் பிரசாதமாகவும் தருகின்றனர். எங்கு?
இதற்குச் சரியான விடை காட்டி சுப்பிரமணியா என்பதே. பெங்களூரிலிருந்து அறுவது கிலோ மீட்டர் தொலைவில் மலைகளுக்கு நடுவில் எழில் கொஞ்ச இருக்கும் தலம். இங்கு புற்று மண் பிரசாதம் உண்டு. பெங்களூரிலிருந்து பலமுறை பைக்கில் நான் சென்று வரும் கோயில்களில் இதுவும் ஒன்று. இயற்கை எழில் மிகுந்த பகுதி.
6 இன்று மிகப் பிரபலமாகப் பாடப்படும் கந்த சஷ்டிக் கவசத்தை எழுதியது யார்? 6
தேவராயசுவாமிகள். ஆறு படை வீடுகளுக்கும் எழுதியிருக்கிறார். இன்றைக்கும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இசைக்கோர்வைக்கு மாற்று கிடையாது.
7 தாயிடம் வேல் வாங்கிச் சூரனை அழித்தான் முருகன். கந்த சஷ்டி விழாவில், இந்த வேல் வாங்கும் போது, சக்தி வேலின் வீரியத்தால், முருகனின் திருமேனி வியர்த்து தெப்பமாய் நனைந்து விடும்! அர்ச்சகர்களும் துணியால் துடைத்துப் பிழிவர்! எந்தத் தலம்?
சிக்கல் அனைத்தும் தீர்க்கும் சிக்கல்தான் அந்த ஊர்.
8 இராமாயணத்தில் இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனக
அதே போல் முருகனின் கதையில் சூரபத்மன், சிங்கமுகன், தாருகன், _____? (இந்தக் கேள்விக்கு நோ சாய்ஸ்)
அஜமுகி. அஜம் என்றால் ஆடு. சூர்ப்பனகையின் மூக்கு அறுபட்டதில் பிரச்சனை எழுந்ததென்றால் இங்கு அஜமுகியின் கை.
9 முருகனே வந்து நூல் ஆதாரம் காட்டி, அரங்கேற்றத்துக்கு உதவி செய்த நூல் எது?
கந்தபுராணம். திகழ் தசக்கரம் என்பது திகட சக்கரமாக எப்படி வரும் என்பதற்கு வீரசோழியம் என்ற இலக்கண நூலிலிருந்து மேற்கோள் காட்டி அரங்கேற்றம் செய்ய உதவினார் முருகன் என்று வரலாறு.
10 ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்?
இதில் அக்கினியையும் சொல்லலாம். வாயுவையும் சொல்லலாம். இருவரும் பெற்றதாகவே சொல்கிறது கந்தபுராணம்.
ஜிரா விடைகளை publish செய்யும் முன்னரே, வெகு அழகாக ஒவ்வொரு கேள்விக்கும் சிறப்பான விளக்கங்கள் கொடுத்து உள்ளார்!...
ReplyDeleteமாலையில் பதிக்கிறேன்; அனைவரும் சுவைக்கலாம்!
முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் கருதப்படுவது எது?
ReplyDeleteஇ) விசாகம்
வைகாசி விசாகம் தான் அவதார தினம் என்பது பரவலான கருத்து. அதுவே பொறிகள் ஆறும் தோன்றிய தினம்;
கார்த்திகைப் பெண்டிரால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகை நட்சத்திரம் அவனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம்.
பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்ற பாடலும் உண்டு. முருக ஜெயந்தி என்பது தனியாகக் கிடையாது.
ஸ்ரீநிவாச ஜெயந்தி என்ற ஒன்றும் கிடையாது; ஆனால் அவன் தானே உகந்து மலை மேல் ஆவிர்ப்பித்த நாள் திருவோணம்.
அது போல் தான் இதுவும்.
இலங்கையில் முருக பக்தி அதிகம். அங்கு உள்ள ஒரு முருகன் திருத்தலத்தில் இந்துக்கள், பெளத்தர்கள், மற்றும் இஸ்லாமியர் ஆகியோர் தம் தம் கடவுளாகவே கருதி வழிபடுகின்றனர். எந்தத் தலம்?
ReplyDeleteஇ) கதிர்காமம்
இன்றும் இந்த மூன்று மதத்தினரும் வழிபடும் தலம் இது.
பெளத்தர்கள் மகாசேனா, போதிசத்துவர் ரூபமாகவும்,
இஸ்லாமியர்கள் அல் கதிர் என்ற இறைத்தூதர் நினைவாகவும் வழிபடும் தலம்;
முருக வழிபாடும் உருவமாய் இல்லாது, திரையுடன் கூடிய அறுகோண யந்திரமாக உள்ளது.
கதிர்காமப் பாத யாத்திரையும், ஈசால விழாவும் அனைவரும் கொண்டாடுகிறார்கள்
ஈசனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறையும் தாங்கிய முதல் அன்பர் யார்?
ReplyDeleteஇ) வாயு
வாயு, அக்னி இருவரையும் பொறிகளைக் கங்கையில் சேர்க்க ஈசன் பணிக்கிறான்;
ஆனால் வாயு தான் முதலில் தாங்குகிறான்;
வெப்பம் தாளாது வழியில் அக்னியிடம் கொடுக்க, வெப்ப நாயகன் அக்னிக்கே வெப்பம் தாங்காமல் இறுதியில் பொய்கையில் சேர்க்கிறார்கள்.
SK ஐயா, இதை நேற்று இரவு நூலைக் கண்டு, விடையையும் சொல்லித் தெளிவு செய்தார்! மிக்க நன்றி SK!
இதோ கந்தபுராணப் பாடல்கள்:
முன்னுற மாருதன் முதல்வன் தாள்களை
வன்னியந் தேவொடு வணங்கி யேயெழீஇ
அன்னவன் அருளினாற் சுடர்கள் ஆறையுஞ்
சென்னியின் மேறகொடு சேறல் மேயினான்
இறத்தலுங் கன்னலொன் றெரியின் தீஞ்சுடர்
பொறுத்திடல் அரிதெனப் புலம்பிக் காலினோன்
மறுத்தவிர் பிறைமுடி வரதன் ஆணையால்
திறற்படு வன்னிதன் சென்னி செர்த்தினான்
1)ஆ) ஆதி சங்கரர் 10)அக்னி
ReplyDelete2)விசாகம்
3) திருத்தணிகை
4)கதிர்காமம்
5)சுப்ரமண்யா
6)தேவராயசுவாமிகள்
7)திருச்செந்தூர்
8)சிங்கமுகி
9திருமுருகாற்றுப்படை
தலைப்பை பார்த்து பொறுமையாய் படிக்கலாம் என்று இருந்தேன். முருகன் பற்றியது என்று அறிந்திருந்தால் பணிகளை புறம் தள்ளி முதலில் படித்திருப்பேன்.
ReplyDeleteதாமதமாக வந்து வினாக்களை படித்து கூகளாண்வரை நாடாமல் சுயமதிப்பீட்டில் 8 சரி.
முருகா உன்னை முற்றும் அறிய முழு பிறவியும் போதாதே...
நன்றியுடன்
சாத்வீகன்
இராகவன் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார் என்று சொன்னீர்கள் இல்லையா? அதனால் காத்திருந்து படித்தேன். வழக்கம் போல் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteஇரவிசங்கர். இந்த மாதிரி புதிரா புனிதமா நடத்துவதற்கு மிக்க நன்றி. இந்த முறை கொஞ்சம் கடினமாக இருந்தது என்று எண்ணுகிறேன். பல புதிய செய்திகள் பலருக்குத் தெரிந்திருக்கும். 4வது வினாவிற்கு கூகிளாண்டவரின் துணையை நாடினேன். முதலில் தோன்றிய விடையையே சொல்லியிருக்கலாம். ஆனால் யோகன் ஐயாவும் வெற்றியும் எஸ்.கே.யின் 'திருமகள் உலாவும்' திருப்புகழ் பதிவில் கதிர்காமத்தைப் பற்றிச் சொல்லிய போது மற்ற மதத்தினரும் வழிபடுகிறார்கள் என்று சொல்லவில்லையே என்று ஐயம் கொண்டு கூகிளில் தேடினேன். அறுதியாகச் சொல்லும் படி எதுவும் கிடைக்கவில்லை. விடை தவறு என்றவுடன் மீண்டும் வந்து கதிர்காமம் என்று சொல்ல மனம் வரவில்லை. :-)
ஐந்திற்கும் ஒன்பதிற்கும் யூகத்தின் அடிப்படையில் சொன்ன விடைகள் சரியாக அமைந்தது முருகனருள்.
இந்த முறை பரிசெதுவும் சொல்லவில்லையே. ஏன்?
ஆகா
ReplyDeleteதிராச ஐயா, வாங்க! ஜஸ்ட் மிஸ்!!!
இப்ப தான் விடைகளை publish செய்தேன்!
ஆனாலும் உங்க ஸ்கோரை நீங்களே பாருங்கள்! நீங்க நிறையவே சரியாத் தான் சொல்லி இருப்பீங்க!!
//சாத்வீகன் said:
ReplyDeleteதலைப்பை பார்த்து பொறுமையாய் படிக்கலாம் என்று இருந்தேன். முருகன் பற்றியது என்று அறிந்திருந்தால் பணிகளை புறம் தள்ளி முதலில் படித்திருப்பேன்.//
இனி தலைப்பில் ஒரு "-" கொடுத்து, "முருகன்" என்று போட்டு விடுகிறேன்!
//முருகா உன்னை முற்றும் அறிய முழு பிறவியும் போதாதே...//
இதுவல்லவோ உண்மை!
அறிதொறும் அறியாமை கண்டற்றால்!!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇரவிசங்கர். இந்த மாதிரி புதிரா புனிதமா நடத்துவதற்கு மிக்க நன்றி. இந்த முறை கொஞ்சம் கடினமாக இருந்தது என்று எண்ணுகிறேன்//
சற்று உண்மை தான் குமரன்!
பொதுவாக கேள்விகளை அடியேன் எனக்குத் தெரிந்த வரையில் எழுதி விடுவேன்; ஆனால் இம்முறை சேகரித்து தான் எழுதினேன்.
கதைகளில் இருந்து மட்டும் இல்லாது, தலங்கள் பற்றிக் கேள்வியும், பல புதிய செய்திகளை நண்பர்கள் அறியக் கொடுக்க வேண்டும் என்ற ஆவல் தான்!
அங்கு போகும் போது அவர்களும் அதை மனிதில் நிறுத்திப் பார்ப்பார்கள் அல்லவா?
அடுத்த முறை கேள்விகளை இன்னும் எளிமை ஆக்குகிறேன்:-)
//இந்த முறை பரிசெதுவும் சொல்லவில்லையே. ஏன்?//
ReplyDeleteஇம்முறை 2&10 கேள்விகள் சற்று subjectiveஆக உள்ளதால், யாரையும் வரிசைப்படுத்தவில்லை, குமரன்!
அதனால் தான் பரிசைப் பற்றியும் சொல்லவில்லை!
பாடும் "பரிசே" "பரிசாய்" அருள்வாய் என்று பாடி விடலாமா?:-))
விசாகம் என்று எழுதும் போதே நினைத்தேன், இதை ஜிரா மறுப்பார் என்று!:-)) அதனால் தான் "கருதப்படுவது" என்று போட்டேன்; நம் ஸ்ரீநிவாசன் திருவோணம் போல் என்றும் விடையில் எழுதினேன்.
வாயு/அக்னி இருவருமே செய்த பணி. முதலில் வாயு சுமந்தான் என்று பரவலாகத் தெரியாததும் ஒரு காரணம்; பின்பு SK ஐயா நூலாதாரம் காட்டினார்!
நியூ யார்க்கில் இருக்கும் சுதந்திர தேவி சிலையையும் கண்ணகி சிலையாகப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டமே சிறந்த கண்ணோட்டம், அங்கு சென்று பார்த்த வேறு எந்தத் தமிழருக்கும் இந்த சிநதனை வந்திருக்குமா என்றால் நிச்சயம் வந்திருக்காது.
ReplyDeleteஉங்கள் பதிவைப் படித்தவர்களுகு வேண்டுமென்றால் இனிமேல் அபப்படித்தொன்றலாம்
வாழக் நீவிர்! வாழ்க பல்லாண்டு!
SP.VR. சுப்பையா
// 8 அசமுகி (அஜமுகி)சூரனின் தங்கை; இந்திராணியைக் கவர்ந்து, அவள் அண்ணனுக்குக் கொடுக்க எண்ணுகிறாள். அப்போது இந்திராணியின் காவல் பூத கணங்களால் கை அறு படுகிறாள்; ஆட்டுத் தலை இவளுக்கு உண்டு. //
ReplyDeleteகாவல் பூதகணங்களால் அல்ல. மகாகாளர் அவரது கையை வெட்டுகிறார். அத்தோடு ஆட்டுத்தலை என்று வெளிப்படையாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சிங்கமுகாசுரன் என்பதால் சிங்கம் போன்ற முகம் என்று சொல்வதும் தவறு என்றே தோன்றுகிறது. சிங்கமுகன் மாபெரும் அறிவாளி. முதலும் முடிவும் தெரிந்துதான் போருக்குப் போகிறான்.
//SP.VR.SUBBIAH said:
ReplyDeleteநியூ யார்க்கில் இருக்கும் சுதந்திர தேவி சிலையையும் கண்ணகி சிலையாகப் பார்க்கும் உங்கள் கண்ணோட்டமே//
சும்மா அப்படித் தோணிச்சு வாத்தியார் ஐயா! :-)
தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் அடியேனின் நன்றி!
Mr.Sankar, how you find time for doing this job apart from doing your own work - it's great - i heard song `Alaipayuthe' sung by Harini & troops - very nice.
ReplyDeletethank you for giving such a song.
your quize like qn.ans. also fine.
yaaro