"மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" என்பது தலைவர் படத்தில் வர்ற பாட்டு இல்லையா? என்ன படம் பேரு? மறந்து போச்சு! சரி அத விடுங்க!
இன்று
கார்த்திகை தீபம்! (Dec 03)
திருவண்ணாமலை தீபம்! எல்லாரும் அறிந்த கதை தான்!
பேசாம நாம எல்லாரும் அண்ணாமலைக்கே போய், தீப தரிசனம் கண்டு வரலாம் வாங்க! கீழே தீபத்தின் கூகுள் ஒலி-ஒளிக் காட்சி; கண்டு மகிழுங்கள்!
(please allow time for video buffering; Runtime 7 mins)
தீப மங்கள ஜோதீ நமோ நம!
அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை!!அண்ணாமலைக்கு அரோகரா!!!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
ReplyDeleteதனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி
தீப மங்கள சோதி நமோ நம
அண்ணாமலையானுக்கு ஹரோஹரா
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
பணிவின் பெருமையைத் தான் அடியேனும் தசாவதாரம் படத்தில் இந்தப் புராணக்கதையைப் பார்க்கும் போது அறிந்தேன் இரவி. நன்கு சொன்னீர்கள்.
சிறு வயதில் கேட்ட கதை. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள் பல!
ReplyDeleteகுமரனின் பின்னூட்டமும் மிக அருமை.
மாதவிப் பந்தலில் மேலும் பல தோரணங்கள் அழகுறச் செய்யட்டும். வாழ்த்துக்கள்!
//மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" என்பது தலைவர் படத்தில் வர்ற பாட்டு இல்லையா? என்ன படம் பேரு? மறந்து போச்சு!//
படம் 'வீரா'. இன்னொரு உபரித்தகவல் - இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் பெயர் 'முத்துவீரா'. இந்தப்பாட்டில் தீபத்தினால் 'முத்து' என்றப் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதற்கென்ன என்கிறீர்களா... இந்தப் பாடல் காட்சியால் கவரப்பட்டு அவருடைய அடுத்த படத்திற்கு 'முத்து' என்று பெயரிட்டார் என்று ஏதோ ஒரு பேட்டியில் கேட்டதாக நினைவு.
வாங்க குமரன். கார்த்திகை தீப முதல் பின்னூட்ட விளக்கு நீங்கள் தான் ஏற்றியுள்ளீர்கள் :-)
ReplyDeleteசிவனாரின் துதியோடு, ஆழ்வார்கள் ஏற்றிய விளக்குகளையும் தந்துள்ளீர்கள்! நன்றி!
பொய்கையார் ஏற்றும் விளக்கு:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக
பூதத்தார் ஏற்றும் விளக்கு:
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச்சுடர் விளக்கு
இந்நாளில் இரண்டும் சுடர் விட்டு நம் இருள் நீக்கட்டும்!
அருமையான தத்துவம் KRS
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteவீடியோ தெரிகிறது அல்லவா?
வீடியோவின் முதல் பகுதியில் காலை உற்சவம் தான் நடைபெறுகிறது! அண்ணாமலையார் ஆடும் தாண்டவக் கோலம், சுவாமியின் தாங்கிகள் விரைந்து ஆடுவது!
இரண்டாம் பகுதியில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது! அவசியம் காணவும்!
அடிமுடி காண தீப்பிழம்பாய் எழுந்து நின்றார் ஈசன்,
ReplyDeleteபிரம்மனின் அகந்தை களைந்து, விஷ்ணுவுக்கு அருளுருவம் காட்டி,
அத்தீப்பிழம்பே அருள் தரும் அண்ணாமலை ஜோதியாய்,
தீபத்தின் நெருப்பாய்,
அருள் தரும் தழலாய்,
கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை தீபமாய்..
தீபத்திருநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்.
படிச்சேன். ஆனால் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துட்டுச் சொல்றேனே.
ReplyDeleteAfter reading this my heart is full,hence my tongue and hand is still.
ReplyDelete//Sridhar Venkat said...
ReplyDeleteமாதவிப் பந்தலில் மேலும் பல தோரணங்கள் அழகுறச் செய்யட்டும். வாழ்த்துக்கள்!//
நன்றி ஸ்ரீதர் வெங்கட்! கார்த்திகை நாள் வாழ்த்துக்கள்!
//படம் 'வீரா'.
அடுத்த படத்திற்கு 'முத்து' என்று பெயரிட்டார்//
ஆகா தலைவர் படம் நான் ஓண்ணைச் சொன்னா, நீங்க ரெண்டா சொல்லியிருக்கீங்க! மிக்க நன்றி!
கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்ன சொல்வது என்றே தெரியவில்லை.
தமிழ்மணம் முழுவதும் தீபங்கள் தான் இன்று.
நன்றி நன்றி.
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஅருமையான தத்துவம் KRS//
நன்றி பாலாஜி!
Lowellஇல் மலை ஏதாச்சும் இருக்கா? தீபம் ஏத்தனீங்களா?
Pittsburgh Penn Hillsஇல் தீபம் உண்டு!
//சாத்வீகன் said...
ReplyDeleteதீபத்தின் நெருப்பாய்,
அருள் தரும் தழலாய்,
கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை தீபமாய்..//
அழகாய்ச் சொன்னீங்க சாத்வீகன்!
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
//துளசி கோபால் said...
ReplyDeleteபடிச்சேன். ஆனால் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துட்டுச் சொல்றேனே.//
பாத்துட்டுச் சொல்லுங்க டீச்சர்! நன்றி!!
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteAfter reading this my heart is full,hence my tongue and hand is still.//
வாங்க திராச ஐயா!
சென்னையில் தீபம் எப்படி? கந்த கோட்டத்தில் கோபுரம் மீது தான் விளக்கீடுதல், இல்லீங்களா?
// வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteகார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் முழுவதும் தீபங்கள் தான் இன்று.நன்றி நன்றி.//
தீப மங்கள் ஜோதீ நமோநம!
நன்றி வல்லியம்மா!
கே.ஆர்.எஸ்,
ReplyDeleteசொன்னா நம்ப மாட்டீங்க. இந்த வாரம்தான் இதே படத்தின் டிவிடி எடுத்து வீட்டில் ஒரு காட்சி ஓட்டினோம். :)
கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன்.
ReplyDeleteதீபமங்கல ஜோதீ நமோ நம என்ற திருப்புகழ் வரிகளை இங்கு நண்பர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிறார்கள். மிகச்சிறப்பு. பழநித் திருப்புகழ் வரி. செஞ்சுருட்டி ராகத்தில் பாடச் சுகமானதும் கூட.
நீங்கள் குறிப்பிட்ட தசாவதாரம் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். படத்தில் பல இடங்களில் கதை மாற்றங்கள் நிறைய. ஆகையால் நிறைவான படமாக எனக்கு அது தோன்றவில்லை. அதை விட ஏ.பி.நாகராஜனின் திருமால் பெருமையும் திருமலைத் தெய்வமும் நன்றாக இருக்கும். பாடல்களும்தான்.
ஜி.ரா.வின் கருத்துகளுடன் நானும் ஒத்துப் போகிறேன், ரவி.
ReplyDeleteஅதற்கு முன்,
அந்த இரு விடியோக்களும், பாடல்களும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது!
அதுவும் அண்ணாமலையானின் அந்த ஆவேச ஆட்டம் அப்படியே மெய் சிலிர்த்தது.
மிக்க நன்றி!
இப்போது,
திருமந்திரம் போன்ற ஆதார நூல்களில் இந்த தாழம்பூ கதை காணப்படவில்லை.
அதில் வருவது இதுதான்!
ஒரு சமயம், பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி வந்து, பலகாலம் சண்டையிட்டனர்.
இதைக்கண்ணுற்ற சிவன் ஒரு பெரிய ஜோதிக்கம்பமாக எழுந்து இருவர் இடையிலும் நின்றார்.
போரை நிறுத்திய இருவரும், தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.
யார் இதன் அடி முடியை முதலில் பார்க்கிறாரோ அவ்ரே பெரியவர் என்று!
பிரமன் அன்னமாக மேல் நோக்கியும், திருமால் வராகமாக கீழ்நோக்கியும் ச்ல்கின்றனர்.
இருவராலும் அடியையோ, முடியையோ பார்க்க முடியாமல் போய், களைத்து நின்று, சிவனின் பெருமையை உணர்ந்து, அவரே பேரியவர் என்று பணிந்தனர்.
பிரமனுக்கு ஞானவாளையும்,[Sword] திருமாலுக்கு சௌபாக்கிய சக்கரத்தையும் [Discus] கொடுத்தார் சிவன்!
இது இலிங்க புரணத்தில் 352[அல்லது அதற்கு பக்கத்தில்] செய்யுளில் காணலாம். காணலாம்
அண்ணாமலையானுக்கு அரோகரா.
ReplyDeleteஅண்ணாமலை ஜோதி தரிசனம்
செய்ய வைத்தமைக்கு
மிக்க மிக்க நன்றி.
உங்கள் சேவை மிகவும் மகாத்தானது.
ஒரு நொடி, இங்கேயும் தசாவதாரமான்னு திகைச்சுப் போயிட்டேன் :) தெரிஞ்ச கதையையே கண்ணன் சொல்லிக் கேட்டா, மருந்தா இருந்தது ஏதோ ஒரு மாயத்தால விருந்தாயிடற மாதிரி இருக்கு :)
ReplyDeleteஆடி மாசம் தீபத் தரிசனம் கிடைச்சதுக்கு எங்க குமரனுக்கும், கண்ணனுக்கும் நன்றிகள் :)