Tuesday, December 19, 2006

அனுமனுக்கு மூல நட்சத்திரம்!

இன்று ஹனுமத் ஜெயந்தி (Dec 20); மார்கழி மாதம், மூல நட்சத்திரம் அனுமனின் (மறு) பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது!
"ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் உளறுவதைக் கேட்டிருப்பீர்கள் :-)
இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!
அடக்கமான அன்புத் தொண்டனாகத் தானே இருந்தான்!


எகனை மொகனையா யாரோ சொல்லப் போய், இந்த மூல நட்சத்திரப் பெண்கள் (நடுத்தர வர்க்கப் பெண்கள்) பலர் படும் பாடு, பாவம் சொல்லி மாளாது!
சரியா எதுவும் புரிஞ்சுக்காம சில பெரியவங்களும் இதுக்கு உடந்தையா இருக்காங்க! இது மாறனும்...நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படுத்தனும்.
அட்சய திருதியை-ன்னா என்னான்னே தெரியாம இருந்த பலர், பணம் நகை என்றவுடனே இப்பத் தெரிஞ்சிக்கலையா?
அது தெரியும் போது இதையும் தெரிஞ்சுக்க வைக்கலாமே. :-)))


சரி, ஹனுமத் ஜெயந்திக்கு வருவோம்!
ஆண்டவன் பெருமையைச் சொல்வது எளிது! ஆனால் அடியவர் பெருமையைச் சொல்வது அரிதிலும் அரிது!!
"பெரியது எது என்று கேட்கும் வேலவா.....தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே", என்று திருவிளையாடல் படத்தில் ஒளவையார் பாட்டில் வருமே! கேட்டு இருக்கிறீர்களா?

இராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், இராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை!
ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு பாகம் உள்ளது!
சுந்தர காண்டம்!
இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!

அனுமனை விரும்பாதார் தான் யார்?
வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை - இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன?
சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு?
ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா?

படங்களுக்கு நன்றி: BG Sharma

சீ்தையின் உயிரைக் காத்தான் - விரக்தி/தற்கொலையில் இருந்து!
இலக்குவன் உயிரைக் காத்தான் - கொடிய நாக பாசத்தில் இருந்து!
பரதன் உயிரைக் காத்தான் - தீ மூட்டி மாய்த்துக் கொள்வதில் இருந்து!
இப்படி எல்லோரையும் காத்து, ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல!
மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது தெரியுமா? 'மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார்.
அதனால் தான் இராமாநுஜர், 'தோற்றத்தை வைத்து அடியவரை எடை போடக் கூடாது' என்பதை மிக உறுதியாக விதித்தார்.
இப்பேர்பட்ட அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரியில்!அனுமனைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தால், யோசனை நீண்டு கொண்டே தான் போகிறது!
அதனால் கவிச் சக்ரவர்த்தி கம்பரின் அழகுத் தமிழ்ப் பாடல் ஒன்றினால் அனுமனைத் துதி செய்யலாம் இன்று! வாருங்கள்!!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
, அவன் எம்மை அளித்துக் காப்பான்!


இது என்ன அஞ்சு அஞ்சாகப் பாடுகிறாரே கம்பர் என்று பார்க்கிறீர்களா?
(தலைவர் படத்தில் எட்டு எட்டாகப் பாடியதை நினைவில் வையுங்கள்...
தமிழ் மணத்தில் ஆறு விளையாட்டு விளையாடும் போது, கம்பர் அஞ்சு விளையாட்டு விளையாடக் கூடாதா என்ன?:-)

இது பஞ்ச பூதப் பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று அன்னையைச் சேவித்தவன் அனுமன்.

அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தான்! யாருக்காக?
ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!
கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.
அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!

அது எப்படி என்னையே எனக்கு அளிப்பான்?
அந்தராத்மா என்கிற நான்; அங்கு இதய கமல வாசம் செய்பவன் இறைவன்;
அனுமனின் இதய கமலத்தில் இராமன்.
இப்படி ஆழ் மனதில் புதைந்துள்ள இறைவனையே நமக்குக் கொண்டு வந்து அளிப்பவன் தான் அனுமன்.
என்னை எனக்கு அளிப்பான்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஞ்சநேயா!
பிறந்த நாள் வணக்கங்கள் ஆஞ்சநேயா!


திருநெல்வேலி சஞ்சீவி ஆஞ்சநேயர்

71 comments:

 1. மூலமும் அமாவாசையும் மார்கழியும்
  !!
  அனுமன் வந்து விட்டானா?
  எத்தனை விதங்களில் எல்லொரையும் காத்துத் தன் பெருமை சொல்லாமல் நின்ற சுந்தரனைச் சேவிப்போம்.
  அவனது குணங்களில் ஒன்றிரண்டாவது நமக்கு அவன் அளிக்க மாட்டானா?

  பிறந்த நாள் வாழ்த்துகள் அனுமான் ஜி.

  ReplyDelete
 2. ஹனுமத் ஜெயந்தி அன்று அருமையான பதிவு. அனுமன் பிறந்ததும் திருமலையிலா ? ))

  அஞ்சொடு ஒன்று கூடி ஆறாக (குகனோடு ஐவரானவர் சுக்ரீவனோடு அறுவராக) அஞ்சிலே ஒன்றான ஆகாய வழியாகப் பறந்து அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டவனல்லவா ?

  பதிவுக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 3. very good,god bless u ravi.

  ReplyDelete
 4. ஹாப்பி பர்த்டே ஆஞ்சனேயா!!

  அஞ்சிலே பாட்டுக்கு அருமையான விளக்கம். முதலில் இருக்கும் படம் அருமை

  ReplyDelete
 5. கண்ணபிரான்:

  நீங்க எங்கேயோ பதிவு உலகை இட்டுச் செல்கிறீர்கள்! வாழ்க வளர்க! தமிழ் பிள்ளைகளுக்குத்தான் எத்தனை ஆதர்ச புருஷர்கள்! அநுமன், கண்ணன், வேலன், பிள்ளையார் இப்படி!

  ஜே! பஜ்ஜிரங்கபலி!!

  ReplyDelete
 6. மூலத்தின் பொய்மை ஜாதகங்கள் பெருமாளின் பாதம் பணிந்தால் பின்னங்கால் பிடறி பட ஓடாதா.

  மூலத்தில் பிறந்து அனைத்திற்கும் மூலமானவனின் அருளை பெற்றபின் அடைவதும் எதுவும் உண்டோ.

  அனுமன் பெற்றது அரசர்களும் அடைய முடியாத பேறுஅல்லவா.

  ReplyDelete
 7. ரவிசங்கர் அவர்களே,

  இந்த அனுமத் ஜெயந்தி இங்கு பெங்களூருவில் (ஆமாங்க பெயர் மாத்தியாச்சுல்ல) மிக விமரிசியையாக கொண்டாடப்படும். ராகிகுடா (Ragigudda) என்று அழைக்கப்படும் கோவிலில் (jayanagar 9th block-ல் இருக்கிறது) கோலாகலமான திருவிழாவாக அனுமத் ஜெயந்தி.

  மிக அருமையான கோவில். அனுமன் பிரகாரத்தில் எப்பொழுதும் ஒலிக்கும் அனுமன் காயத்ரியுடன் சிறு குன்றின் மேல் மிக நன்றாக இருக்கும். அனுமன் சன்னிதானம் தவிர ராமர், சிவன், வலம்புரி விநாயகர், துர்கை மற்றும் நவகிரஹ சன்னிதானங்களும் உண்டு.

  குன்றினை தாங்கியவாறு கருடாழ்வார் வேறு.

  அருமையான நாளில் ஒரு அருமையான பதிவு.

  ReplyDelete
 8. கண்ணபிரான்
  தலைப்பைதான் பார்த்தேன்,சரி இதுக்கு பின்னூட்டம்
  "அஞ்சிலே.. " போடலாம் என்று பார்த்தால்,அதையே போட்டு(விளக்கமாக) என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்.
  இதை தான் நான் நாகையில் இருந்த போது ஆஞ்சநேயர் கோவிலை பிரதட்சனம் செய்யும் போது சொல்வேன்.அந்த நாள் ஞாபகம் வந்தது.
  நன்றி

  ReplyDelete
 9. அருமை! அருமை!!!
  அனுமனின் புகழ் படிக்க, படிக்க ஆனந்தமே!!!

  இன்னும் நிறைய எழுதுங்கள்!!!

  ReplyDelete
 10. சூரிய பகவான் ஆதிக்கமாக இருக்கும் பகல் நேரத்தில், மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை ஆண் மூலம் ஆகும்

  அதுவே சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சந்திரன் ஆதிக்கம் பெற்ற பிறகு பிறந்தால் பெண் மூலமாகும்

  இதுதான் ஜோதிட உண்மை - பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

  நட்சத்திரத்தால் மட்டுமே ஒருவர் அரசாள முடியாது.

  ஒருவருக்கு அவருடைய ஜாதகத்தில் 1, 5, 9, 11ம் வீடுகள் நன்றாக இருந்தால் மட்டுமே அரசாள முடியும்.

  1ம் வீடு (First House – House of appearance, character, influence)- லக்னம்

  5ம் வீடு (Fifth House – House of keen intelligence and poorva punya)- பூர்வ புண்ணீயம்

  9ம் வீடு (Ninth House - House of Gains)- பாக்கிய ஸ்தானம்.

  11ம் வீடு (11h House - House of Profit )
  லாப ஸ்தானம்.

  அன்புடன்
  SP.VR.சுப்பையா

  ReplyDelete
 11. அன்பு இரவி,
  நெஞ்சிலே இராமனைத் தாங்கி, சிரத்திலே வாழும்(வாழ்ந்த அல்ல) சிரஞ்சீவியின் பெருமை பாடல் யார்க்கும் எளிதே.

  அவன் மயங்கும் முனுத்தம், "இராம ராம ராம". இந்நாமத்தின் மகிமையை சிவவாக்கியர் கூறுகிறார்:
  http://kuravanji.com/?p=567

  நன்று! நன்று!!

  ReplyDelete
 12. ஸ்ரீராமதூத மகாதீர ருத்ர வீர்ய சமுத்பவ,
  அஞசனா கர்ப சம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே...

  மெளலி....

  ReplyDelete
 13. படங்கள் அருமை ரவி....நன்றி.

  ReplyDelete
 14. படங்கள் அருமை ரவி.

  //மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது தெரியுமா? 'மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார்.//

  ரவி ஒரு சந்தேகம். நாரதரிடம் தானே இசை கற்றார், எப்படி அவரிடமே போட்டி போட்டார். ஒரு வேளை வேறுயாரிடமாவது போட்டியிட்டாரோ?

  //என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு?//

  பகவானுக்கே இல்லாத விஸ்வரூபம் இராமயணத்தில் இவருக்கு மட்டும் தான் உண்டு.

  ReplyDelete
 15. பெரும்பாலோர் உளறுகிறபடி பெண்மூலம் நிர்மூலம் இல்லை.
  பெண்மூலம் நிர்மலம் என்பதுதான் சரி.

  கல்விக்கடவுள் சரஸ்வதியும் மூல நட்சத்திரம்தான்.

  அனுமன் ஜெயந்திக்கு நல்ல பதிவு.

  ReplyDelete
 16. Romba nalla pathivu.keep it up.

  ReplyDelete
 17. அனுமனை பற்றி நிறைய விவரங்கள், மூல நம்பிக்கையை நிர்மூலமாக்கும் முழக்கம்... கலக்குறீங்க !
  அஞ்சிலே ஒன்று... இது கம்பனுடையதில்லை, பின்சேர்க்கை என்றும் சொல்வதுண்டு.

  ReplyDelete
 18. அழகானதொரு பதிவுக்கு நன்றி, கண்ணபிரான் !

  அனுமன் பலசாலி, வீரன் மட்டுமல்ல, மகா பண்டிதனும் கூட. தொண்டன் என்றதும் அனுமன் தான் நம் நினைவுக்கு வருவான் !!!

  ஸர்வ கல்யாண தாதாரம்
  ஸர்வ வாபாத்கன வாரகம்
  அபார கருணா மூர்த்திம்
  ஆஞ்சனேயம் நமாம்யஹம்

  ReplyDelete
 19. @ravi, அனுமன் பிறந்ததும் திருமலையிலா ? good info!

  nice post ravi! i'm soooo happy to read/write abt hanumaan! thanks alot. :)

  @sp.subbiah sir, Dear sir, also few yogams like Gaja kesari yogam etc will also decide who will rule.

  ReplyDelete
 20. நிறைய விஷயங்களுடன் அருமையான கட்டுரைங்க, ரவி.. அனுமார் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ரவி

  ReplyDelete
 21. //SP.VR.சுப்பையா said:
  சூரிய பகவான் ஆதிக்கமாக இருக்கும் பகல் நேரத்தில், மூல நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை ஆண் மூலம் ஆகும்

  அதுவே சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சந்திரன் ஆதிக்கம் பெற்ற பிறகு பிறந்தால் பெண் மூலமாகும்.

  இதுதான் ஜோதிட உண்மை - பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்//

  உண்மை தான் சுப்பையா சார்! அப்படிப் பார்த்தால் ஆண் மூலம், பெண் மூலம் என்பது ஆண்களுக்கும் உண்டு அல்லவா?

  உங்களைப் போன்று தேர்ந்து தெளிந்து உரைத்தால் எவ்வளவு நன்மை!

  அதை விடுத்து குருட்டாம் போக்காக சொல்லிக் கொண்டு பலரின் வாழ்வைத் தொல்லைப்படுத்தும் மூட நம்பிக்கையைத் தான் சாடினேன்! மற்றபடி ஜோதிடக் கலை என்பது அடியேன் பெரிதும் மதிக்கும் ஒன்று!

  நீங்கள் ஜோதிடத்தில் உள்ள உண்மையான தத்துவங்களும், சேர்ந்து போன சில மூட நம்பிக்கைகளும் பற்றி சிறு பதிவுகள் இடலாமே வாத்தியார் ஐயா? என்னைப் போன்ற அறிவிலிகளுக்கு ஒரு விழிப்புப் பாடமாக இருக்கும்!

  ReplyDelete
 22. //வல்லிசிம்ஹன் said...
  மூலமும் அமாவாசையும் மார்கழியும்
  !!அனுமன் வந்து விட்டானா??//

  வந்து விட்டான் வல்லியம்மா! உங்களோடு நானும் இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன்,
  பிறந்த நாள் வாழ்த்துகள் அனுமான் ஜி!

  ReplyDelete
 23. என்னென்றிதைச் சொல்லுவேன் எனக்கு
  இன்பத் தமிழ்த்தாயும் சொல்லொன்று தரவில்லை.

  பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்த பின் மனத்தில் தோன்றுவது இது தான் இரவி.

  வட மொழி சுலோகங்கள் சில பின்னூட்டங்களில் இருக்கின்றன. அவற்றிற்கு தமிழ் விளக்கம் தருவீர்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 24. //ஜெயஸ்ரீ said...
  அனுமன் பிறந்ததும் திருமலையிலா ? ))//

  ஆமாம் ஜெயஸ்ரீ! அஞ்சனாத்ரி மலையும் உண்டே!

  //அஞ்சொடு ஒன்று கூடி ஆறாக (குகனோடு ஐவரானவர் சுக்ரீவனோடு அறுவராக) //

  அருமையான ஆறு விளையாட்டு, உங்களிடம் இருந்து! நன்றி

  ReplyDelete
 25. //Anonymous said...
  very good,god bless u ravi.//

  நன்றி அனானிமஸ் அவர்களே!
  அனைவருக்கும் அவன் அருள் வேண்டி நிற்போம்!

  ReplyDelete
 26. //அனுமனை பற்றி நிறைய விவரங்கள், மூல நம்பிக்கையை நிர்மூலமாக்கும் முழக்கம்... கலக்குறீங்க !//
  மணியன் சொல்லி இருப்பதை அப்படியே ஆமோதிக்கிறேன் :)

  அனுமனுக்கு ஹாப்பி பர்த்டே... :)

  அனுமன் என்றவுடன் ஆந்திராவில் பார்த்த அனுமன் கோயில்கள் தான் நினைவுக்கு வருகின்றன. நம்மூர் முச்சந்தி பிள்ளையார்கள் மாதிரி ஹைதராபாத்தில் தெருவுக்குத் தெரு ஒரு அனுமன் கோயில். வெறும் கல்லைக் கூட வைத்து அனுமன் வடிவம் கொடுத்துக் கொள்கிறார்கள், நம்ம கணபதி போலவே :)

  ReplyDelete
 27. //இலவசக்கொத்தனார் said...
  ஹாப்பி பர்த்டே ஆஞ்சனேயா!!//

  கொத்ஸ், கேக் எங்கே? :-)
  Candlesஉம் வேண்டும்! எத்தனை என்பதை நீங்க எண்ணிக் கொண்டே இருங்க!

  //அஞ்சிலே பாட்டுக்கு அருமையான விளக்கம். முதலில் இருக்கும் படம் அருமை//

  நன்றி கொத்ஸ். முதல் படம் ஓவியம். திருமலைத் தல வரலாற்றுப் புகைப்படங்கள் என்னும் நூலில் இருந்து.

  ReplyDelete
 28. // அப்படிப் பார்த்தால் ஆண் மூலம், பெண் மூலம் என்பது ஆண்களுக்கும் உண்டு அல்லவா? //

  ஆமாம் இருபாலருக்கும் உண்டு

  சில வீடுகளில் வரன் பார்க்கும் போது மூலம், ஆயிலயம் ந்ட்சத்திரப் பெண்கள் என்றால் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

  நட்சத்திரங்களினால் மட்டுமே பாதகங்கள் வந்து விடாது. ஜாதக அமைப்பிணால் மட்டுமே தோஷங்கள் ஏற்படும்

  அது போல மூல நட்சத்திரம் வேண்டாம் என்று சொன்ன ஒருவரிடம் நான் கேட்டேன், வேறு நட்சத்திரமாக இருந்து களத்திர ஸ்தானத்தில் சனி இருந்தால் என்ன செய்வீர்கள் என்று?

  அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

  பலர் ஜோதிடத்தில் பாதி அறிவோடுதான்/ அல்லது அறிந்ததோடுதான் முடிவெடுகிறார்கள்.

  வலையில் இருப்பவர்கள் எல்லாம் இளைஞர்கள். ஜோதிடம் அவர்களிடம் எடுபடாது.
  அதனால் எழுதும் எண்ணம் எனக்கில்லை!

  பொதுவாக மனிதர்களுக்கு 45 வயதிற்கு மேல் தான் ஜோதிடத்தில் ஒரு நம்பிக்கை வரும்.
  ஆனால் எனக்கு சிறு வயதிலேயே நம்பிக்கை வந்து முறையாகப் படிக்தேன் - அதைத தெரிந்து கொள்ளும் நோக்குடன்
  SP.VR.SUBBIAH

  ReplyDelete
 29. Humble, Self COnfidence, Brave, Smart, friendship, Respect...etc == Anjeneya

  SriRama pottri....Anjeneya Pottri...

  ReplyDelete
 30. //நாராயணன் கண்ணன் said...
  கண்ணபிரான்:
  நீங்க எங்கேயோ பதிவு உலகை இட்டுச் செல்கிறீர்கள்! வாழ்க வளர்க!
  ஜே! பஜ்ஜிரங்கபலி!!//

  நன்றி கண்ணன் சார்.
  ஜே! பஜ்ஜிரங்கபலி!
  தோள் வலிமை வீரனுக்கு வெற்றி!!

  ReplyDelete
 31. //சாத்வீகன் said...
  மூலத்தின் பொய்மை ஜாதகங்கள் பெருமாளின் பாதம் பணிந்தால் பின்னங்கால் பிடறி பட ஓடாதா.//

  கவிதையாச் சொன்னீங்க சாத்வீகன். மிக்க உண்மை! மெய்யான கோள் என்ன செய்யும் என்றே சொல்லும் போது பொய்யான நம்பிக்கைகள் என்ன செய்யும்? "பெருமாளின் பாதம் பணிந்தால் பின்னங்கால் பிடறி பட ஓடாதா" - அருமை! நன்றி!

  ReplyDelete
 32. //Sridhar Venkat said...
  ராகிகுடா (Ragigudda) என்று அழைக்கப்படும் கோவிலில் (jayanagar 9th block-ல் இருக்கிறது) கோலாகலமான திருவிழாவாக அனுமத் ஜெயந்தி.//

  தகவலுக்கு நன்றிங்க ஸ்ரீதர்.
  பசவங்குடி ஆலயம் தெரியும்; ராகிகுடா இன்று தெரிந்து கொண்டேன்!
  அடுத்த முறை வரும் போது தரிசனம் செய்ய வேண்டும்! ஜிரா, நம்மளை இங்கும் அழைச்சுப் போங்க!

  //குன்றினை தாங்கியவாறு கருடாழ்வார் வேறு//

  கருடன் குன்று தாங்குகிறாரா? இதன் கதையைச் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 33. //வடுவூர் குமார் said...
  கண்ணபிரான்
  தலைப்பைதான் பார்த்தேன்,சரி இதுக்கு பின்னூட்டம்
  "அஞ்சிலே.. " போடலாம் என்று பார்த்தால்//

  வாங்க குமார் சார்!
  ஆர்வமுள்ள மனங்கள் ஒன்றே சிந்திக்கும்ன்னு சொல்லுவாங்க! :-)

  நாகை ஆஞ்சநேயர் - நாகை அழகியார் கோவிலுக்கு உள்ளேயா??

  ReplyDelete
 34. //வெட்டிப்பயல் said...
  அருமை! அருமை!!!
  அனுமனின் புகழ் படிக்க, படிக்க ஆனந்தமே!!!//

  அடடா, நம்ம பதிவு இன்னிக்கு கொஞ்சம் பிரகாசித்து ஜொலிக்கிறதே!
  ஓ, தமிழ்மண விண்மீன் வந்திருக்காரு!

  வாங்க ஐயா, வாங்க! சூப்பரா போகுது விண்மீன் வாரம்!
  வாராது வந்த மாமணி, இங்கு வர என்ன புண்ணியம் செய்தோமோ :-))

  //இன்னும் நிறைய எழுதுங்கள்!!!//
  தங்கள் உத்தரவு ஐயா.

  ReplyDelete
 35. //ஞானவெட்டியான் said...
  நெஞ்சிலே இராமனைத் தாங்கி, சிரத்திலே வாழும்(வாழ்ந்த அல்ல) சிரஞ்சீவியின் பெருமை பாடல் யார்க்கும் எளிதே//

  வாங்க ஞானம் ஐயா!
  தங்கள் அனுமன் துதியும் போற்றியும் அழகுத் தமிழில் அல்லவா நெஞ்சை அள்ளுகிறது!

  நண்பர்களே, ஐயாவின் அனுமன் போற்றிப் பாடலுக்கு இங்கே செல்லவும்!

  http://anumanthuthi.blogspot.com/2005/12/5.html

  ReplyDelete
 36. //Mathuraiampathi said...
  ஸ்ரீராமதூத மகாதீர ருத்ர வீர்ய சமுத்பவ,
  அஞசனா கர்ப சம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே...//

  வாங்க மெளலி சார்! நல்ல சுலோகம்! நன்றி!

  ஸ்ரீராமதூத = ராமனின் தூதன்
  மகாதீர = பெரும் வீர தீரன்
  ருத்ர வீர்ய சமுத்பவ = ருத்ரனின் அம்சமாக அவதரித்தவன்

  அஞசனா கர்ப சம்பூத = அஞ்சனையின் கர்ப்பத்தில் உதித்தவன்
  வாயுபுத்ர = வாயுவின் மானச மைந்தன்
  நமோஸ்துதே = வணங்குகிறோம்!

  ReplyDelete
 37. //சிவமுருகன் said...
  ரவி ஒரு சந்தேகம். நாரதரிடம் தானே இசை கற்றார், எப்படி அவரிடமே போட்டி போட்டார். ஒரு வேளை வேறு யாரிடமாவது போட்டியிட்டாரோ?//

  இல்லை சிவமுருகன்; சற்றே தலைக்கனம் எழும் போதெல்லாம் பெருமாள் சிரித்து திருத்துவது வழக்கம் தானே! அது போல தான் நாரதரை, அனுமனிடம் அனுப்பிக் கந்தமாதான பர்வதத்தில் இசைப் போட்டி நடைபெறுவதாகக் கதை. பின்னொரு பதிவில் கதையை இடுகிறேன்!

  சுருக்கமாக, அனுமனின் சிறு வயதில், இசை வல்லுநனாக ஆசி தந்தவர் தான் நாரதர். (ஒவ்வொரு தெய்வமும் ஒரு ஆசி தந்தது போல்). ஆனால் பின்னாளில் நாரதரின் வீணை, அனுமனின் கானத்தில் தரையோடு ஒட்டிக் கொள்ள, அவரின் கர்வமும் கரைந்தது!

  //பகவானுக்கே இல்லாத விஸ்வரூபம் இராமயணத்தில் இவருக்கு மட்டும் தான் உண்டு.//

  ஆகா, அழகாக எடுத்துக் கொடுத்தீர்கள்! மிக்க நன்றி! விஸ்வரூபம் மட்டுமா? மாயை என்ற பணியும் நம் அனுமனி்டம் தானே தரப்பட்டது அவதாரத்தில்!

  ReplyDelete
 38. //Hariharan # 26491540 said...
  பெரும்பாலோர் உளறுகிறபடி பெண்மூலம் நிர்மூலம் இல்லை.
  பெண்மூலம் நிர்மலம் என்பதுதான் சரி.//

  வாங்க ஹரிஹரன் சார்! உங்க profile படமும் கூட ஐயன் தானே உள்ளார்!
  //பெண்மூலம் நிர் மலம்//
  இது வரை அறியாத செய்தி! மிக்க நன்றி!

  //கல்விக்கடவுள் சரஸ்வதியும் மூல நட்சத்திரம்தான்//

  இதுவும் அடியேனுக்குப் புதிய செய்தியே! நிர்மல ரூபியான அவள் நிர்மல வெண்தாமரை நாயகி ஆயிற்றே! அதனால் தானோ என்னவோ //பெண்மூலம் நிர்மலம்// என்ற கருத்து?

  ReplyDelete
 39. //Anonymous said...
  Romba nalla pathivu.keep it up.//

  நன்றிங்க அனானிமஸ்!

  ReplyDelete
 40. //மணியன் said...
  அனுமனை பற்றி நிறைய விவரங்கள், மூல நம்பிக்கையை நிர்மூலமாக்கும் முழக்கம்... கலக்குறீங்க !//

  நன்றி மணியன் சார்.
  //மூல நம்பிக்கையை// = வார்த்தை விளையாட்டு சூப்பர்!

  //அஞ்சிலே ஒன்று... இது கம்பனுடையதில்லை, பின்சேர்க்கை என்றும் சொல்வதுண்டு//

  ஆமாம் சார்; சிலர் அப்படிச் சொல்கிறார்கள்!

  ReplyDelete
 41. ரவி,
  /* "ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் உளறுவதைக் கேட்டிருப்பீர்கள் :-) */

  எனக்கும் மூல நட்சத்திரம்தான்.
  "உனக்கென்ன,நீ மூல ராசிக்காரன், ஆண்மூலம் அரசாளும்" அப்பிடி இப்பிடி என்று உறவினர்கள் பல தடவைகள் சொல்லியிருக்கிறார்கள். நல்ல வேளை எனக்குச் சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை. நீங்கள் சொன்னது போல், "இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!"
  அதுதானே என் நிலமையும்:))

  ReplyDelete
 42. //enRenRum-anbudan.BALA said...
  அழகானதொரு பதிவுக்கு நன்றி, கண்ணபிரான் !//

  நல்லவொரு சுலோகத்துக்கு நன்றி பாலா!:-)

  ஸர்வ கல்யாண தாதாரம்
  =எல்லா மங்களங்களுக்கும் ஆதாரமானவனே!

  ஸர்வ வாபாத்கன வாரகம்
  = எல்லா விதமான எதிரிகளிடம் இருந்தும் காப்பவனே!

  அபார கருணா மூர்த்திம்
  =மிகுந்த கருணை உடைய தலைவனே!

  ஆஞ்சனேயம் நமாம்யஹம்
  =ஆஞ்சநேயா, உன்னை வணங்குகிறேன்!

  ReplyDelete
 43. //ambi said...
  @ravi, அனுமன் பிறந்ததும் திருமலையிலா ? good info! //

  நன்றி அம்பி!

  //@sp.subbiah sir, Dear sir, also few yogams like Gaja kesari yogam etc will also decide who will rule.//

  ஹூம்...கஜ கேசரி யோகம்!
  சீக்கிரமா இது பற்றி ஒரு பதிவு போடலாமா? :-)

  ReplyDelete
 44. //மு.கார்த்திகேயன் said...
  நிறைய விஷயங்களுடன் அருமையான கட்டுரைங்க, ரவி.. அனுமார் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்//

  நன்றி கார்த்தி! அடிக்கடி வாங்க!

  ReplyDelete
 45. //குமரன் (Kumaran) said...
  என்னென்றிதைச் சொல்லுவேன் எனக்கு
  இன்பத் தமிழ்த்தாயும் சொல்லொன்று தரவில்லை//

  குமரனுக்கே சொல் ஒரு சொல் தரவில்லையா? ஆகா!:-)

  //வட மொழி சுலோகங்கள் சில பின்னூட்டங்களில் இருக்கின்றன. அவற்றிற்கு தமிழ் விளக்கம் தருவீர்கள் என்று நினைக்கிறேன்//

  அடியேன் தந்து விட்டேன்!
  சரியா என்று சொல்லுங்க குமரன்!

  ReplyDelete
 46. //பொன்ஸ் said...
  //மூல நம்பிக்கையை நிர்மூலமாக்கும் முழக்கம்... கலக்குறீங்க !//

  நன்றி பொன்ஸ்!

  //அனுமன் என்றவுடன் ஆந்திராவில் பார்த்த அனுமன் கோயில்கள் தான் நினைவுக்கு வருகின்றன. வெறும் கல்லைக் கூட வைத்து அனுமன் வடிவம் கொடுத்துக் கொள்கிறார்கள், நம்ம கணபதி போலவே :)//

  உண்மை தாங்க பொன்ஸ்!
  நம்மூரில் தூணில் இருந்தால், ஆந்திராவில் துரும்பிலும் காண்கிறார்கள்!

  கர்நாடகத்திலும் இப்படித் தான்; கவனித்துள்ளீர்களா? முக்கியப் பிராணன் என்று சிறப்புப் பெயரும் கூட! சைவ, வைணவ, சாக்த எல்லா கோவில்களிலும் அனுமன் இருப்பான்!

  முதலில் பிள்ளையார் பிடித்து
  முடிவில் குரங்கான (அனுமன் ஆன) வழிபாட்டுக் கதை தானே!

  ReplyDelete
 47. //SP.VR.சுப்பையா said...
  அது போல மூல நட்சத்திரம் வேண்டாம் என்று சொன்ன ஒருவரிடம் நான் கேட்டேன், வேறு நட்சத்திரமாக இருந்து களத்திர ஸ்தானத்தில் சனி இருந்தால் என்ன செய்வீர்கள் என்று?
  அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.//

  அமாம் சுப்பையா சார்,
  இது தான் நம் கலைகளுக்குப் பெரிய துரதிருஷ்டம்! பலர் ஜோதிடத்தில் முழுதும் தெரியாமலே முடிவெடுக்கிறார்கள் :-(

  ReplyDelete
 48. //Anonymous said...
  Humble, Self COnfidence, Brave, Smart, friendship, Respect...etc == Anjeneya//

  வாங்க அனானிமஸ்!
  பணிவு, துணிவு,
  வீரம், தீரம்,
  எல்லாம் அனுமனின் உறைவிடம் தானே! நன்றி!

  ReplyDelete
 49. //வெற்றி said...
  நல்ல வேளை எனக்குச் சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை//

  அவர்கள் ஏதோ எதுகை மோனையுடன் சொல்லி விட்டார்கள் வெற்றி! சாத்திரம் அதுவன்று! இறைவன் பால் நீங்கா அன்பும் நிறைந்த அருளும் தான் சாத்திரம்; மற்ற பிறவெல்லாம் சழக்கு தானே!

  //"இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!"
  அதுதானே என் நிலமையும்:))//

  அனுமன் மூலம்; நீங்களும் மூலம்;
  அனுமன் நம் இதயங்களை எல்லாம் ஆள்கிறான்!
  அது சரி...நீங்க யார் இதயத்தை ஆளுகிறீர்கள்? :-) எனக்கு மட்டும் ரகசியமாச் சொல்லுங்க! :-)

  ReplyDelete
 50. 50 நானா???

  ஸ்ரீ ராம ஜெயம்...

  ReplyDelete
 51. //வெட்டிப்பயல் said...
  50 நானா???//
  சாட்சாத் லிட்டில் சூப்பர் "ஸ்டார்" ஆன, நீங்க தான்! :-)
  ஸ்ரீ ராம ஜெயம்

  ReplyDelete
 52. உங்கள் பதிவு போலவே, நீங்கள் எல்லோரின் பின்னூட்டங்களுக்கு அளிக்கும் பதிலும் மிக அழகு!

  நீங்கள் மென்மேலும் பல பதிவுகள் இட்டு எங்கள் எல்லோரையும் சந்தோஷப் படுத்த வேண்டும்.

  ReplyDelete
 53. Miga Nalla Padhivu..

  Saraswathiyin Nakshathram Sadhayam endru ninaivu..

  Ravi

  ReplyDelete
 54. ரவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சிலே பாடலை எனக்கும் கம்பராமாயணத்தில் பார்த்த நினைவுள்ளது. ஆனால் தொடக்கத்திலா இடையிலா என்று தெரியவில்லை. இது இடைச்செருகல். கம்பர் எழுதியதேயில்லை என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கிறார்.

  யார் எழுதியதோ...நல்லதொரு தமிழ்ப் பாடல். அனுமனை வணங்குகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அருமையான துதி.

  ReplyDelete
 55. பெண் மூலம் நிர்மலம் என்பதுதான் ஜோசிய வாக்கு. திரு ஹரிஹரனும் எழுதி இருக்கார். இந்த ஆஞ்சநேயன் குழந்தையாக இருக்கையில் தாய் அஞ்சனா தேவி பால் ஊட்டும் காட்சியில் ஹரித்வாரில் உள்ள சண்டிகா தேவி கோவிலுக்கு எதிரில் உள்ள குன்றில் காட்சி அளிக்கிறார். வேறு எங்கும் காண முடியாத காட்சி அது. ரொம்பப் பேருக்கு அங்கே அனுமன் கோவில் இருப்பதே தெரிவதில்லை. மிக அழகான வடிவமைப்புடன் கூடிய சிற்பம். மற்றபடி அனுமன் சிறப்பு எல்லாரும் எழுதி இருக்காங்க. நான் வேறே என்ன சொல்வது? வழக்கம்போல் மிகச் சிறப்பான பதிவு.

  ReplyDelete
 56. இன்னுமொரு தகவல்....

  ஆந்திரா, கர்னாடகா ஆகிய இடங்களில் அனுமன் பக்தி மிக அதிகம், குறிப்பாக அதிக அளவிலான பழைமை வாய்ந்த கோவில்கள் அனுமனுக்கென்றே....காரணம் மாத்வம்...மாத்வத்தில் ஹரிக்கும், வாயுவிற்க்கும் அதிமுக்கியத்துவம் உண்டு.

  //ஸ்ரீராமதூத = ராமனின் தூதன்
  மகாதீர = பெரும் வீர தீரன்
  ருத்ர வீர்ய சமுத்பவ = ருத்ரனின் அம்சமாக அவதரித்தவன்

  அஞசனா கர்ப சம்பூத = அஞ்சனையின் கர்ப்பத்தில் உதித்தவன்
  வாயுபுத்ர = வாயுவின் மானச மைந்தன்
  நமோஸ்துதே = வணங்குகிறோம்! //

  எனக்கு தெரிந்தவரையில் சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க....அன்பர் குமரன் சர்டிபிகேட் இருந்தால் இன்னும் நலம்....

  கே ஆர் எஸ் மற்றும் வெங்கட்,

  எப்போ ராகிகுடா (Ragigudda) வந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்...நான் அந்த கோவிலுக்கு அருகிலேயே வசிக்கிறேன்.

  மெளலி..

  ReplyDelete
 57. //Sridhar Venkat said:
  உங்கள் பதிவு போலவே, நீங்கள் எல்லோரின் பின்னூட்டங்களுக்கு அளிக்கும் பதிலும் மிக அழகு!
  நீங்கள் மென்மேலும் பல பதிவுகள் இட்டு எங்கள் எல்லோரையும் சந்தோஷப் படுத்த வேண்டும்.//

  எம்பெருமான் அருள் ஸ்ரீதர் சார்!

  ReplyDelete
 58. //Anonymous said...
  Miga Nalla Padhivu..
  Saraswathiyin Nakshathram Sadhayam endru ninaivu..//

  ஆகா
  மூலம் என்று ஹரிஹரன் சொன்னார்.
  நீங்கள் சதயம் என்று சொல்கிறீர்கள்!
  மேல் விளக்கம் கிடைக்குமா?
  நன்றி.

  ReplyDelete
 59. //G.Ragavan said...
  யார் எழுதியதோ...நல்லதொரு தமிழ்ப் பாடல். //

  ஆமாம் ஜிரா
  நதி மூலம் பார்த்துக் கொண்டே போனால் சுவைக்க மறந்து விடுவோம்!
  பெரும் குற்றம் ஏற்படாத வரை, நாம் சற்று சர்ச்சையை மறந்து சுவைத்துத் தான் பார்ப்போமே! :-)

  ReplyDelete
 60. //கீதா சாம்பசிவம் said...
  பெண் மூலம் நிர்மலம் என்பதுதான் ஜோசிய வாக்கு. திரு ஹரிஹரனும் எழுதி இருக்கார்.//

  நன்றி கீதாம்மா!

  //இந்த ஆஞ்சநேயன் குழந்தையாக இருக்கையில் தாய் அஞ்சனா தேவி பால் ஊட்டும் காட்சியில் ஹரித்வாரில் உள்ள சண்டிகா தேவி கோவிலுக்கு எதிரில் உள்ள குன்றில் காட்சி அளிக்கிறார். வேறு எங்கும் காண முடியாத காட்சி அது.//

  செல்லும் போது நினைவில் இறுத்தி தரிசனம் செய்கிறேன் கீதாம்மா. நல்ல தகவல்! நன்றிம்மா!

  ReplyDelete
 61. //Mathuraiampathi said...
  மாத்வம்...மாத்வத்தில் ஹரிக்கும், வாயுவிற்க்கும் அதிமுக்கியத்துவம் உண்டு.//

  நல்ல தகவல் சார்! நன்றி!

  //எப்போ ராகிகுடா (Ragigudda) வந்தாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள்...நான் அந்த கோவிலுக்கு அருகிலேயே வசிக்கிறேன்.//

  மிக்க நன்றி மெளலி சார், அழைப்புக்கு! அவசியம் தொடர்பு கொள்கிறேன்!
  அனுமனுக்கு வெகு அருகில் இருக்கீங்க! கொடுத்து வைத்தவர்! :-)

  ReplyDelete
 62. ஒரு பெண்மூலமாகத்தான் (தாயோ, மனைவியோ) வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும் தடைகளையும் நிர்மூலமாக்க முடியும் என்றும் கொள்ளலாமே.நானும் இந்த பழமொழியை ஏற்காமல் மணம் புரிந்து கொண்டவன்.ஒரு குறையும் இல்லை.

  ReplyDelete
 63. இங்கு இவ்வளவு ஆஞ்சனேய பக்தர்கள்
  கூடி நிற்கும் போது எனது தாழ்மையாயா
  விண்ணப்பத்தை இங்கு வைத்தால் விரைவில்
  பலன் கிட்டும் என விழைகிறேன்.  ஆஞ்சனேயா வாருங்கள் ராம் அனுமந்தயா வாருங்கள்
  ஆஞ்சனேயா வாருங்கள் ராம் அனுமந்தயா வாருங்கள்
  அராஜகம் ஒழித்திட லங்காபுரிக்கு விரைந்து வாருங்கள்
  அறமதி தழைத்திட லங்காபுரிக்கு மீண்டும் வாருங்கள்  நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது அல்லலுறும் ஈழமக்களுக்காக
  இந்த விண்ணப்பத்தை ஆஞ்சனேயரிம் விண்ணப்பிக்கும் படி சிரம் தாழ்த்தி
  அன்புடன் வேண்டுகிறேன். நானும் எப்பொழுதும் ஆஞ்சனேயரிடம்
  இதைத்தான் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 64. சுந்தரி4:31 PM, December 23, 2006

  உங்கள் ஒவ்வொரு பதிவும்மிகவும் அருமை.பாராட்டாமல் இருக்கம்டியாது.
  தவிர, ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும்
  பதிலளிக்கும் பாங்கு மிகவும் மெச்சத்தக்கது.
  ஒரு சின்ன வேண்டுகோள். font size சைக் கொஞ்சம் கூட்டினால் பெரும் உதவியாகவிருக்கும்
  நன்றி

  ReplyDelete
 65. //தி. ரா. ச.(T.R.C.) said...
  ஒரு பெண்மூலமாகத்தான் (தாயோ, மனைவியோ) வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களையும் தடைகளையும் நிர்மூலமாக்க முடியும் என்றும் கொள்ளலாமே.//

  ஆகா, இப்படியும் நோக்கலாமே! அருமையான சிந்தனை திராச ஐயா!
  இதற்குத் தான் முழுதுணர்ந்த பெரியோர் வேண்டும் என்பது!

  //நானும் இந்த பழமொழியை ஏற்காமல் மணம் புரிந்து கொண்டவன்.ஒரு குறையும் இல்லை//

  ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
  என்றும் இருந்திட ஏது குறை நமக்கு
  ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா!

  ReplyDelete
 66. //Anonymous said...
  இங்கு இவ்வளவு ஆஞ்சனேய பக்தர்கள்
  கூடி நிற்கும் போது எனது தாழ்மையாயா
  விண்ணப்பத்தை இங்கு வைத்தால் விரைவில்
  பலன் கிட்டும் என விழைகிறேன்.//

  அடியேனும் அஃதே வேண்டுகிறேன் ஐயா! உண்மையைச் சொல்லணும்னா நானும் இது போல் அடிக்கடி சிந்திப்பதுண்டு! அனுமன் லங்கா நகரத்துக்கு மட்டுமே தீயிட்டான்! அதுவும் பெருஞ்சேதம் எல்லாம் இல்லை! அன்று இட்ட தீ பின்னர் சாத்வீகமான நல்லாட்சி பிறக்கவும் வழி கோலியது!

  //அறமதி தழைத்திட லங்காபுரிக்கு மீண்டும் வாருங்கள்//

  ஈழ மக்களுக்காக இரங்கி வரவேணும்!

  //நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது அல்லலுறும் ஈழமக்களுக்காக
  இந்த விண்ணப்பத்தை ஆஞ்சனேயரிம் விண்ணப்பிக்கும் படி சிரம் தாழ்த்தி
  அன்புடன் வேண்டுகிறேன்.//

  நல்லன்பர்கள் இதை நிச்சயம் செய்வார்கள்! உங்கள் தன்னலமில்லா வேண்டுதல் கைகூட, காலமும் நேரமும் கனிய, இறை அருள் கைகூட எங்கள் எல்லோரின் பிரார்த்தனைகள்!

  சாந்தி நிலவ வேண்டும்!

  ReplyDelete
 67. //சுந்தரி said...
  உங்கள் ஒவ்வொரு பதிவும்மிகவும் அருமை.பாராட்டாமல் இருக்கம்டியாது.
  தவிர, ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும்
  பதிலளிக்கும் பாங்கு மிகவும் மெச்சத்தக்கது.//

  நன்றிங்க சுந்தரி!

  //ஒரு சின்ன வேண்டுகோள். font size சைக் கொஞ்சம் கூட்டினால் பெரும் உதவியாகவிருக்கும்
  நன்றி//

  நிச்சயம் செய்கிறேன்!
  இது template problem; IEஇல் நன்றாகத் தெரிகிறது! ஆனால் firefox இல் பிரச்னை என்று நண்பர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்! ஓரிரு நாட்களில் மாற்றி விடுகிறேன்! நன்றி!

  ReplyDelete
 68. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 69. கட்டபொம்மன்
  மன்னிக்கவும்; தங்கள் பின்னூட்டத்தினை அனுமதிக்கவில்லை.

  உள், வெளி இரண்டும் கடந்த உயர் விழுப்பொருள் பற்றி வார்த்தை விளையாட்டு என்று நினைத்துக் கொண்டுக் கேலி தொனிப்பதால் மறுக்க வேண்டிய நிலை! தாங்கள் புரிந்து கொள்விற்கள் என்று நம்புகிறேன்!

  ReplyDelete
 70. anjile onRu peRRan - not by kambar.. for sure it is not by kambar. check with hariyanna.. he can explain

  ReplyDelete
 71. walla pathivu anumanukku jai

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP