Showing posts with label எம். எஸ். Show all posts
Showing posts with label எம். எஸ். Show all posts

Monday, December 11, 2006

குறையொன்றுமுண்டோ? - எம்.எஸ்.நினைவு நாள்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்; Behind every successful man there is a Woman! என்பார்கள்.
ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால், ஆண் பக்க பலமாக இருந்தார். Behind a successful woman, there was a Man!
யார் என்று உங்களுக்கே தெரியாதா என்ன?
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - கல்கி சதாசிவம் தம்பதியரே அவர்கள்!
இன்று பாரத ரத்னா,எம்.எஸ் அம்மாவின் நினைவு நாள் (Dec 12).

தமிழிசைக்கு அவர்கள் இருவரும் புரிந்த தொண்டு மகத்தானது.
முன்னணியில் எம்.எஸ். தமிழிசைப் பாடல்கள் பாடினாலும்,
பின்னணியில் அதைச் சேகரித்து, அதுவும் பக்தி இசைப் பாடல்களாகப் பார்த்து பார்த்துச் சேகரித்து, பிரபலமாக்கியதில் சதாசிவம் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.
தமிழிசை சற்றே தழைக்க ஆரம்பித்த காலத்தில், தயக்கமே இன்றி, துணிவுடன் அதற்கு இசைந்த ஒரு சில கலைஞர்களில் எம்.எஸ். ஒருவர்!

இசையையும் தாண்டி, ஆன்மீகத்திலும், மனித நேயத்திலும் இவர் செய்த பணிகள் தான், நம் தலைவர் அப்துல் கலாம் அவர்களை எம்.எஸ் பால் ஈர்த்தது!
பல கச்சேரியின் சன்மானங்களை எல்லாம் மேடையிலேயே மனித நேய நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும் வழக்கம்! அதுவும் பல பேருக்குத் தெரியாது!

நாம் எல்லாம் ஆபிசில் ஒரு பொன்னாடை போட்டாலோ, மலர்க் கொத்து தந்தாலோ, மறக்காமல் கிப்ட் வ்ராப்பிங்கோடு வீட்டுக்கு எடுத்து வரும் பார்ட்டிகள்!
அதுவும் பெண்கள் இது போன்ற சின்னச்சின்ன சந்தோஷங்களை எல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று வேடிக்கைக்குச் சிலர் சொல்வார்கள்! ஆனால் எம்.எஸ்-ஐப் பாருங்கள்!


சென்னைக் கோட்டூரில் இவர் இல்லத்தைப் பார்த்தால் வாய் அடைத்துப் போவீர்கள்; ஒரு பெரிய பாடகியின் வீடா இவ்வளவு எளிமையானது என்று! வீடு மட்டுமா எளிமை? இன்று சிலரைப் போல, ஆளை அடிக்கும் பட்டோ, நகையோ பிரதானமாகவே தெரியாது;
அலங்காரத்தை விட ஐச்வர்யம் அல்லவா மோலோங்கி இருக்கும்!


கீழே "குறையொன்றுமில்லை" வீடியோ!
பலர் ஏற்கனவே youtube-இல் பார்த்து இருக்கலாம்!
இருப்பினும், இன்று அவர் நினைவு நாளில் மீண்டும் ஒரு முறை லயித்துக் கேட்போம்!
திருமலைவாசன் மேல் எம்.எஸ் உருகி உருகிப் பாடியது!
அது சரி, யார் இந்தப் பாட்டை முதலில் பாடியது தெரியுமா?
சூடிக் கொடுத்த சுடர் கோதை, ஆண்டாள்!

ராஜாஜி எழுதிய எளிமையான தமிழ்ப்பாடல்; அதை எப்படி ஆண்டாள் பாடி இருக்க முடியும் என்கிறீர்களா?
"குறையொன்றுமில்லாத கோவிந்தா,
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!"
என்று அவள் தான், முதன் முதலாக இதற்கு அடி எடுத்துக் கொடுக்கிறாள்! நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் இதை! :-)


வீடியோவின் கடைசிக் கட்டத்தில் தன் இரு கைகளையும் தோளுக்கு அருகே எடுத்துச் சென்று, சங்கு சக்கரம் போல் வைத்து,
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

"ஒன்றும் குறையில்லை, ஒன்றும் குறையில்லை" என்று எம்.எஸ் உருகுவதைக் காணத் தவறாதீர்கள்!



பாடல் வரிகள் வேண்டுமென்றால், இங்கே செல்லவும்!
எம்.எஸ் அவர்களுக்கு, அவர் எம்பெருமான் ஊரான திருப்பதியில், ஆந்திர அரசு சிலை எடுத்துப் போற்றியது!

வாழ்க நீ அம்மா! வாழியே தமிழிசை!
வாழி அவன் மலரடியில், நீங்காது வாழியே!



(கீழே அவர் வாழ்க்கைச் சுருக்கம் படமாக உள்ளது; 00:05:03)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP