Sunday, October 16, 2011

"அல்குல்" என்றால் என்ன?

தலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:)

"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*" ன்னு என்னிடம் உரிமை கொண்டாடுபவர்கள் & தூய்மைவாதிகள் & தீவிர சைவர்கள்...இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு வேண்டுகிறேன்!


இன்னிக்கி, அல்குல்=புருவம்-ன்னு ஒரு பதிவை பார்த்தேன்! அதிர்ந்தேன்!
http://www.tamilauthors.com/01/90.html

தமிழிலே, மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சொல் = "அல்குல்" என்பதாகத் தான் இருக்கும்!
இந்த ஒரு சொல்லை வைத்துக் கொண்டு, பாவம்.. நம்ம கம்பனை அடி அடி-ன்னு அடித்த, அரசியல் தலைவர்களும் உண்டு:))

அல்குல் என்றால் என்ன? = பெண் உறுப்பு (அ) இடுப்பு

இடத்துக்குத் தக்கவாறு பொருள் கொள்ள வேண்டும்! என் முருகனுக்கும் அல்குல் உண்டு:))
* குழந்தைக் கண்ணனை, "பாலுண்ண என் அல்குல் ஏறாயே", என்று ஆழ்வார் பாடினால், அப்போ அல்குல்=இடை
* "திதலை அல்குல் என் மாமைக் கவினே" என்ற சங்கப் பாடலில் பெண் கவிஞர் பாடுவது = பெண் உறுப்பே!

பெண் உறுப்பு என்பதாலேயே, ஒரு "stigma" (கறையுணர்ச்சி) நம்மிடம் ஒட்டிக் கொள்கிறது! = எதிர்பார்க்கக் கூடியதே! தவறில்லை!
அச்சொல்லைத் தவிர்த்தோ, அல்லது, வேகமாகக் கடந்தோ சென்று விடலாம்! = அதுவும் தவறில்லை!

ஆனால் அதற்காக, இலக்கியத்தைத் "தூய்மைப் படுத்துகிறேன்" பேர்வழி-ன்னு இறங்கும் முயற்சி தான், மிகவும் தவறானது! அதை நாம் இனம் கண்டு கொள்ள வேணும்!
Tamilauthors.com-இல் உள்ள அந்தக் கட்டுரையும் இப்படியே! பிரபல தளங்களில் இப்படியான கட்டுரைகள் வந்து விடுவதால், அது காலப் போக்கில் தமிழுக்குத் தான் கேடாக முடிகிறது!

அதன் வழியாகத் தானே பிறக்கிறோம்? ஏன் இத்தனை "Stigma" (கறையுணர்ச்சி)?

* ஒரு சிலர், இலக்கியங்களில் "அல்குல்"-ன்னு வந்தாலே, "கில்மா"-வாக எண்ணிப் புளகாங்கிதப் படுவாய்ங்க! :)
* ஒரு சிலர், இதை மறுக்க-மறைக்க எண்ணி, அல்குல் என்பதற்கு, வேறு பொருளை ஒட்ட வைக்கப் பார்ப்பர்!
முருகா.....ஏன் இப்படியான எதிர்மறை எண்ணங்கள்?

சரீ...அது என்ன அல்குல்? = ரா-குல், ரச-குல் மாதிரியா?:) பார்ப்போமா?


அல்கு-தல் = குறுகு-தல் என்று பொருள்!

தமிழில், வினையால் ஏற்படும் காரணப் பெயர்கள் பற்றி முன்பே சொல்லியுள்ளேன்!
தோய்ப்பதால்=தோசை, வடுப்பதால்=வடை
செல்வதால்=செல்வம், கொள்வதால்=கோள்...etc etc
அதே போல அல்கு-வதால் (குறுகு) = அல்குல்!!

இதையொட்டிப் பலப்பல காரணப் பெயர்கள், தமிழில் பிறக்கும்!
* அல்கு = இருள்/ இரவு! (ஒரு நாளின் "கீழ்ப்" பகுதி)
* அல்கு = சேர்தல் ("கீழான" பகுதியில் அல்லவா நீர் சேரும்)

ஆக, அல்கு-தல் = குறுகு-தல்/ கீழே!
பெண்ணின் உடம்பிலே, கீழான, அல்கிய (குறுகிய) இடம் = அல்கு-ல்!

* இடையாகவும் இருக்கும்!
* அதற்கும் கீழே, பெண்குறி/ பெண் உறுப்பாகவும் பயின்று வரும்!

இந்த அல்கு-தல் = அஃகு-தல் என்று கூட குறளில் வரும்!
"அஃகி" அகன்ற அறிவு என்னாம், யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

வள்ளுவர் சொல்வது: "அஃகி அகன்ற அறிவு"- அதாச்சும் நுட்பமாக் "குறுகி", அகன்ற அறிவு!

இப்போதைக்கு நினைவில் வையுங்கள்!
அல்குல் = இடை (அ) அதற்கும் கீழே, பெண் உறுப்பு!
சத்தியமா "புருவம்" அல்ல! :)


Hip = இடுப்பு; Waist = அல்குல்
Therez a difference between Hip & Waist! See Picture!
The Curve between her Hip & Waist is so sexy:) Like the Head of Cobra!
So கோதை coins a Beautiful Comparison = புற்று அரவு "அல்குல்" - புனமயிலே!

Tamilauthors.com க்கு வருவோம்!
பொருளே சொல்லாம, எக்கச்சக்கமாப் பாட்டைக் குடுத்துட்டாப் பயந்துருவோம்-ன்னு நினைச்சிட்டாரு போல திரு. பொன். சரவணன்! இது போல எத்தனை மேட்டரைப் பாத்துருக்கோம்? :))

* மேல் நோக்கிய வளைவை உடைய அல்குல் = அதனால் புருவமா? அடங்கொப்புரானே!
மேல் நோக்கிய வளைவு, இடை/பெண் உறுப்புக்கும் பொருந்தும்! மேலே எழும்பினாப் போல வளைவாத் தானே இருக்கு!

* வரிகளை உடைய அல்குல் = ஒருமாசப் பெண் குழந்தையை, அம்மா குளிப்பாட்டும் போது, கண்ணில் பட்டதில்லையா?:) வரிகள் இருக்கும்!

* பாம்பு போன்ற அல்குல் = புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் என்பது தோழி கோதையின் திருப்பாவை! பாம்பு போல வளைவை உடையது அவள் இடுப்பு! Itz all about Curves :)

* பொற்காசு, மணிகளைக் கோர்த்துக் கட்டிய அல்குல் = எத்தனை குழந்தைகளுக்கு, "அது" மறைப்பா, இடுப்புக் கயிறில் கட்டுவாங்க! நாம தான் பார்த்திருக்கோமே!:)
அதே போல், அன்றைய செழிப்பான பெண்களும், இடுப்பிலே ஒயிலாகப் பொன் மணி (மேகலை) கட்டிக் கொண்டு இருந்தனர்! Herez a kamasutra video, dont click it :)))

* ஆனா, ஒன்னே ஒன்னு இடிக்குது! = "அகல் அல்குல்"!

கம்பனில் அகன்ற அல்குல்-ன்னும் வருது! நாம அல்குல் = "குறுகிய"-ன்னுல்ல பார்த்தோம்? அப்பறம் எப்படி "அகன்ற"?
வாம மேகலை இற, வளர்ந்தது அல்குலே! - இது கம்பனின் சித்திரம்!

இடுப்பில் Belt-ஐ Tightஆ கட்டுங்க! ஒரு நாள் முழுக்க அப்படியே இருங்க!
வீட்டுக்கு வந்ததும், கண்ணாடி முன்னாடி நின்று, Belt-ஐ, திடுமென்று தளர்த்திப் பாருங்க!
அப்போ, இடுப்பு கீழே விரிவது தெரியும்! = "வளர்ந்தது அல்குலே!"
கம்பனும் இதையே காட்டுகிறான்! அவள் இடுப்பில் மேகலை (ஒட்டியாணம்) இறுக்க..... அவள் அல்குல் அகலமானதே!

Tamilauthors.com கட்டுரை ஆசிரியரே! இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?:)


* இலக்கியங்களில் "அல்குல்" என்று வந்தாலே, "கில்மா" என்பதைத் தடுக்கப் போய்....
* ஒரு சிலர், இதை மறுக்க/ மறைக்க எண்ணி, அல்குல்-க்கு வேறு வேறு பொருளை ஒட்ட வைக்கப் பார்க்கின்றனர்!! = இது ஏன்?

(இனி வரும் பத்திகளைத் தீவிர சைவர்கள் தவிர்த்து விடுங்கள் - புரிதலுக்கு நன்றி)
---------------

19ஆம் நூற்றாண்டிலே, தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் செயலில் இறங்கியவை சில ஆதீனங்கள்! சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் போன்றன!
அவை, அந்தச் சமயத்தை ஒட்டியே, தமிழைப் பார்க்கத் தலைப்பட்டன!

அதனால், அங்கிருந்து எழுந்த உரைகளும், பதிப்புகளும், இது போன்ற "சுத்திகரிப்பு" செய்தே பதிப்பிக்கப்பட்டன!
அல்லது, அந்தப் பகுதிகள் வரும் போதெல்லாம், பூசி மெழுகிச் சென்றன!

சிறந்த சைவப் பெருமக்களான அபிராமி பட்டர் பாடாத அல்குலா? அருணகிரிப் பெருமான் பாடாத பலான பலான சொற்களா? அப்பறம் ஏன் இப்படி?
= சமயத்தை முன்னிறுத்தி, தமிழைப் பின்னிறுத்தியதால் வந்த வினை இது!
---------------

பதிப்புத் துறை, தங்கள் கைக்குள் இருப்பதால், அவர்கள் எழுதியதே உரைகள் ஆயிற்று! (அன்றைய சன் டிவி-ன்னு வச்சிக்கோங்களேன் :)


யோவ், அகநானூறுக்கு எதுக்குய்யா கடவுள் வாழ்த்து??
சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, சிவபெருமான் மேல் கடவுள் வாழ்த்துக்களை எழுதி, முன்பே சிலரால் சேர்க்கப்பட்டன! அதே வழியில் இந்தப் பதிப்பகங்களும் சென்றன!

இல்லீன்னா...
சமணம் ஓங்கிய களப்பிரர் காலத்தை, நீதி நூல்கள் தழைத்த காலத்தை,
சமணம் என்ற ஒரே காரணத்துக்காக...
"இருண்ட காலம்", "இருண்ட காலம்"-ன்னே எழுதி எழுதி, பாடநூல்களிலும் பரப்பி வைப்பார்களா?

காலங்காலமாக, இவர்கள் எழுதியதே வரலாறு! :(
இதை நான் சொல்லவில்லை! எழுத்தாளர் ஜெயமோகன் இது குறித்து வெளியிட்ட பதிவுகளைப் பார்க்கவும்!

பண்டைத் தமிழ்க் கடவுள் என்றால், சேயோன் (முருகன்) மட்டுமே, மாயோன்(திருமால்) அல்ல! - என்றும் இப்படியே மறுத்தும், ஒளித்தும் வந்தார்கள்!
ஒன்றையே பரக்கப் பரக்கப் பேசி, "உண்மையாக்கி" வந்தது இப்படித் தான்!

பிற்பாடு...திரு.வி.க, டாக்டர் மு.வ, ஈழத்து அறிஞர் கா.சிவத்தம்பி, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் போன்றவர்கள் தான், திருமாலும் தமிழ்க்கடவுளே, என்று ஆராய்ச்சியுரை செய்து, நிலைநாட்டிச் சென்றார்கள்!
---------------

இப்படி, சிறுபான்மைக் குழுவினங்களான வைணவம்/ சமணம்/ பெளத்தம் போன்றவை, இது போன்ற பதிப்பகங்களால், சீர் இழந்தன!

வைணவம், "இந்து" மதத்துக்குள் அடங்கி விட்டதால், அதைக் கொஞ்சமாப் பேச அனுமதித்தவர்கள்...
சமணம்/ பெளத்தம்-ன்னு வரும் போது, இன்னிக்கும் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பதைக் காணலாம்!

பார்ப்பனீயம் என்று ஒரு பக்கம் பேசினாலும்...
19ஆம் நூற்றாண்டில் இன்னொரு பக்கம் தலையெடுத்த, "சைவ மே(வே)ளாளப் போக்கால் இது போன்ற கருத்து எதேச்சாதிகாரங்கள்!:(

"வேளாள" -ன்னு நானே எழுதினேன்-ன்னு தெரிஞ்சா, எங்கம்மா என்னை வசை பாடீருவாங்க:)
ஆனாலும்.....நான் சார்ந்ததே ஆனாலும்.....உண்மையைச் சொல்லித் தானே ஆகணும்!

சமயப் "பெரும்பான்மைத்தனம்", சாதிப் "பெரும்பான்மைத்தனம்" தந்த அதிகாரத்தால்...
* சிறுபான்மைச் சமூகங்கள் தமக்கு அடங்கியே மரபைப் பேச வேணும்,
* மரபுச் சிறப்பிலே, சிறுபான்மைச் சமூகங்கள், தம்மை ஒரு போதும் முந்தி விடக் கூடாது...
- ஏனோ இப்படி ஒரு ஆழ்மனப் போக்கு! - இப்படியான சமய நிறுவல்களால், மெய்யான தமிழ்ப் போக்கு, பின் வாங்கியது!
---------------

இதனால்.... எல்லாச் சைவப் பெருமக்களையும் நான் குறையாகச் சொல்வதாக எண்ணி விட வேண்டாம்!
அதிகார மையத்தைப் பற்றி மட்டுமே சொல்வது! மற்றபடி, பலப்பல சைவப் பெருமக்கள், தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது!

என்ன.... அவர்கள் தொண்டு வெளியே மட்டும் நின்று விட்டது!
அவர்களை (வேளாளர்) விடவும் அதிகாரத்தில் உள்ளவர்களால் (தீட்சிதர்கள்), நம் ஈசனின் தில்லை அம்பலத்தில், தமிழ் நுழையவும் கூத்தாடிய காட்சிகளைத் தான் பார்த்தோமே!:(

அதனால் தான் அடிக்கடிச் சொல்வது...
1) "மூல நூல்களுக்கே" சென்று படித்தால், இது போன்ற பதிப்பக உரைகள் அம்பலமாகி விடும்!

2) தமிழ் இலக்கியம் வாசிக்கும் போது, சமயத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழையே முன்னுக்குத் தள்ளிப் படிக்க வேணும்!

3) இன்று இணையம் வந்து, தமிழ் அனைவரின் கையிலும் எளிதான பிறகு தானே, "களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல!" என்பதை உணர்ந்து கொண்டோம்?


எங்கோ சென்று விட்டது....அல்குல்-க்கு வருவோம்!:)

அல்குல் பெண்களுக்கு மட்டும் தானா என்றால், அதுவும் இல்லை!
என் ஆசை முருகனுக்கும் அல்குல் உண்டு! :)
யாராச்சும் பழனியாண்டியின் குளியலைப் (திருமுழுக்கை) பார்த்து இருக்கீங்களா?
ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, என் முருகனோட இடுப்பு!
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் = எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் அவன் இடுப்பு அழகுக்கு:)

அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும்...
எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))
ஆனா, இலக்கியத்தில் ஆணின் இடுப்பை, அல்குல்-ன்னு யாரும் எழுதி வைக்கவில்லை!:)

முடிப்பாக...
* அல்கு-தல் = குறுகு-தல்/ கீழே
* அல்குல் = இடை (Waist)/ அதுக்கும் கீழே பெண்ணுறுப்பு!

அதில் இருந்து தானே பிறக்கிறோம்? இத்தனை "Stigma" (கறையுணர்ச்சி) வேண்டாம்!
தமிழ் இலக்கியத்தை, இலக்கியமாகவே பயில்வோம்! "சுத்திகரிப்பு" வேண்டாம்!
தமிழ் இலக்கியம் வாசிக்கும் போது, சமயத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழையே முன்னிறுத்துவோம்!

அல்குல் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! 
இனி, பாவம்...கம்பனை அடிஅடி என்று அடிக்காதீர்கள்!:)

23 comments:

  1. ஏன் இந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டீர்கள். கம்பன் சீதையை வர்ணித்த வரிகளை போட்டு விளக்க அளித்தால் இன்னும் ரசித்திருப்போம்

    கண்ணதாசன் சொல்லி கேட்டோம் கம்பனின் ரசனையை, தாங்கள் ஒரு வார்த்தையோடு நிறுத்தாமல் தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. comment page s accessible now :) :)

    அவசியமான பதிவு

    ReplyDelete
  3. தலைவரே இடுப்புல பொன்மணி அணிஞ்சு இருந்தாங்க சொன்னா பத்தாதா. அதுக்கு போட்டோ வேறயா, அதுக்கு லிங்க் வேற, லிங்க் work ஆகல அப்படிங்கறதுனால இந்த கமெண்ட் போடல, இடுப்புல மணின்னா எல்லாரலையும் கற்பனை பண்ண முடியும். அவ்ளோ தான்

    ReplyDelete
  4. அல்குதலால் அல்குல் என்ற வாதம், மிக நன்று. தமிழ் ஆய்வுக்கு வலுச் சேர்க்கும் சிறந்த கட்டுரை.

    ReplyDelete
  5. அன்பின் கேயாரெஸ் - எனக்குத் தெரிந்த வரை கண் புருவம் என்பது கேள்விப்படாத பொருள். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் தான் சரியானது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. //19ஆம் நூற்றாண்டிலே, தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் செயலில் இறங்கியவை சில ஆதீனங்கள்! சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் போன்றன!
    அவை, அந்தச் சமயத்தை ஒட்டியே, தமிழைப் பார்க்கத் தலைப்பட்டன!

    அதனால், அங்கிருந்து எழுந்த உரைகளும், பதிப்புகளும், இது போன்ற "சுத்திகரிப்பு" செய்தே பதிப்பிக்கப்பட்டன!
    அல்லது, அந்தப் பகுதிகள் வரும் போதெல்லாம், பூசி மெழுகிச் சென்றன!
    //

    சுத்திகரிப்பு செய்யப்பட்டது என்பதை விட அதனை/அச்சொல்லைக் கண்டு கொள்ளாமல் விட்டார்கள் என்று சொல்வது மேலும் பொருந்தும் என்று கருதுகிறேன்.

    அப்பொழுதிருந்த படிப்பு/வாசகர் தளத்தினையும் கருத்தில் கொன்டிருக்கலாம்.

    நன்கு படித்த திராவிட மேடைகளுக்கே அல்குல், முலை போன்ற சொற்கள் கிளுகிளுப்பாகவோ/முகச்சுளிப்பாகவோ இருந்ததையே காணமுடிகிறது.

    ஆதலால், முக்கிய விதயங்களுக்காக இச்சொற்களைக் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம் என்று படுகிறது.

    நல்ல கட்டுரை.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  7. நா. மால்முருகன்7:19 AM, February 28, 2012

    \\வேளாள-ன்னு நானே எழுதினேன்-ன்னு தெரிஞ்சா, எங்கம்மா என்னை வசை பாடீருவாங்க:) ஆனாலும்.....நான் சார்ந்ததே ஆனாலும்.....உண்மையைச் சொல்லித் தானே ஆகணும்!\\

    உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் .. நானும் வேளாளனாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து இது..

    ReplyDelete
  8. அல்குல் - அறிந்துக்கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  9. தெளிவு! விளக்கங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. கம்பன் அனுமனிடம் சீதையை வர்ணித்த வரிகளை வைத்துக் கொண்டு மதத்தைச் சாடுகிறார்கள். இலக்கியத்தை அதன் context ல் இருந்து விலகி படிக்க வேண்டும் என்பது என் கருத்து. அப்போதான் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியும்

    ReplyDelete
  11. சார்..வீடியோ லிங்க் வேலை செய்யல... :-(
    புதியப் பாதை-ல பெண் குழந்தைக்கு சீதா இடுப்புல ஒன்ன கட்டி விடுவாங்களே அது மாதிரி தான் மேகலையுமா?

    ReplyDelete
  12. சார்..காமசூத்ரா லிங்க வேலை செய்யல..புதியப்பாதை படத்துல சீதா தன்னோட குழந்தைக்கு இடுப்புல ஒன்ன கட்டிவிடுவாங்க...அது தான் மேகலையின் மாதிரியா?

    ReplyDelete
    Replies
    1. ஆகா, என்ன வருத்தம் video link வேலை செய்யலை-ன்னு:)
      Actually I didn't give a valid link; that was "chumma":)

      அதே. சீதா கட்டி விடுவதும், மேகலை போன்ற ஒன்றே; இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை, இடையினில் மேகலை இறுக்கவில்லை -ன்னு வைரமுத்துவும் பாடுவாரு;

      Delete
    2. KRS Sir,

      Thank you so much for the clarification. இந்த “அல்குல்”-அ பத்தி அறிஞர் அண்ணா எழுதிய கம்ப ரசம் மூலமா தான் (கம்ப ரச உந்துதலால் தான் கம்பராமாயணம் படிக்கவே ஆரம்பிச்சேன் :-)) தெரிந்து கொண்டேன்..மேகலாபரணம்மும் “virginity belt" மாதிரி-னு நினைச்சிட்டு இருந்தேன்..அதனால தான் தரவு குறித்தப் புகாரப் பதிவு செய்தேன் (நம்புங்க நம்புங்க :-))..நம்ம முன்னோர் அவ்வளவு கொடுங்கோலர் இல்லப் போலிருக்கு...

      Thanks,
      Arun

      Delete
  13. ஒரு பெண்ணின் இடையை விட, அம்புட்டு வளைவு, அம்புட்டு Curves, என் முருகனோட இடுப்பு!
    கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் = எல்லா வுட்டும் பிச்சை வாங்கணும் அவன் இடுப்பு அழகுக்கு:)

    அவன் முதல்-இடை-கடை என்னும் முச்சங்கத்துக்கும் உரியவன் என்றாலும்...
    எனக்குப் பிடித்தது முருகனின் "இடைச்" சங்கம் மட்டுமே! :))

    இது செம :)))))))

    ReplyDelete
  14. இயல்வுறு செலவி னாவா யிருகையு மெயினர் தூண்டத்
    துயல்வன துடுப்பு வீசுந் துவலைகண் மகளிர் மென்றூசு
    உயல்வுறு பரவை யல்கு லொஈபுறத் தளிப்ப வுள்ளத்து
    அயர்வுறு மதுகை மைந்தர்க்க் கயாவுயிர்ப் பளித்த தம்மா.
    ( கம்ப இராமாயணம்-குகப் படலம் (பாடல் 1066), ப. 745)

    பாடலின் பொருள்:எயினர் நாவாயின் இருபக்தத்தும் உந்தும் துடுப்புக்கள் நீர்த் திவலைகளை வீசி மடவாரின் ஆடைகளை நனைக்க, அப்போது அம்மடவாரின் அல்குல் வெளியே புலப்பட்டு வீரர்க்குக் காணப்பட்டு மனக்களிப்பை விளைவித்தது.
    உங்களுடைய கூற்று முற்றிலும் சரியே.'அல்குல்' என்பது பெண்ணின் மறைவிடத்தையே குறிக்கும். கம்பனையும் விஞ்சும் சில மேதாவிகள் அல்குலுக்கு பொருள் புருவம் என்றும் அதுவென்றும் இதுவென்றும் வீணில் விவாதம் செய்து எல்லோர் நேரத்தையும் வீணாக்குகின்றனர்.

    ReplyDelete
  15. மிகவும் பயனுள்ள பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா...siss

      Delete
  16. அல்குல் என்றால் , இடுப்புக்கு கீழே , இரு தொடைகளுக்கு நடுவே உள்ள பகுதி. இது ஆணுக்கும் உண்டு. பெண்ண்ணுக்கும் உண்டு. அது ஆண்களுக்கு சிறுத்து இருந்தால் அழகு. பெண்களுக்கோ அகல்மாக இருந்தால் அழகு. பெண்ணின் அல்குலுக்கு சாதாரணமாக பாம்பின் படத்தை உவமையாக்குவர். இதுவே சாமுத்ரிகா லட்சணப்படி பார்த்தால், பெண்ணின் அல்குல் நன்கு அகண்று தேரின் தட்டு போல் காணப்பட வேண்டும் ( இது viewing angle change செய்து பார்க்கும் போது விளங்க்கும் :) விளங்கவில்லை என்றால் , வலைதலாங்க்களில் கொட்டி கிடக்கும் படங்க்கள் விளக்கும். நீங்க்கள் குறிப்பிட்ட ஆழ்வார் பாசுரத்தில், அந்த தாய் நின்ற கோலத்தில் இல்லை. படுத்த வாக்கில் இருகின்றார். அப்போது, அந்த குழந்தை தன் தாயின் கால்கள் மீது ஊர்ந்து(ஏறி) , அல்குல் மீதும் ஏறிச் சென்று முலையை பருகுகின்றான்.

    ReplyDelete
  17. நான் எழுதியது ஏன் பதிவாகவில்லை என்று தெரியவில்லை. ஏதாவது பெர்மிஶன் இல்லாத காரணமா?

    ReplyDelete
  18. அருமையான பதிவு ஏற்றுக்கொள்ளக்கூடுயது

    ReplyDelete
  19. மிகச்சிறப்பான நேர்மையான நடுநிலையான விளக்கம் நன்றி!

    ReplyDelete
  20. மிக்க நன்றி புரிய வைத்தமைக்கு

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP