Wednesday, April 11, 2012

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!:)

Crux of this Post:
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகவே, "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் = தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!

Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...

* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!

This is NOT claimed as vaLLuvar's exact day of birth etc etc; 
Itz only a "notation" for tamizh related standards; 
For General life = Common Era (2012 CE) applies for all, world over!

You can still celebrate ருத்ரோத்காரி வரு'ஷ'ம் & do poojas at home!

But pl DONT brand it as a "Tamizh" Year!
You are free to call it Hindu New Year, Sanskrit New Year, Nandana Year or whatever! Dot!

.....Now, the full post, with literary evidences & some logical reasoning



பந்தல் வாசகர்களுக்கு இனிய (Sanskrit/ பிராமணப்) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு? போய்ப் பார்த்தா.....
"தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே?:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?
ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன! தமிழக அரசியலில் ஜெ.அரசாணைகளும் மாறி விட்டன! ஜெ.வே மாறீட்டார்!

இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி!
"சித்திரையில் நித்திரை"   -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:)
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு 2 புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:) கழகத் தொலைக்காட்சி - நிகழ்ச்சி வரும்படி - அதை நிறுத்திடுவாங்களா என்ன?:)

இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது -ன்னு சிலர் நினைத்துக் கொண்டு, அதற்காகவே எதிர்க்கிறார்கள், விவரம் புரியாமல்:(

ஆனா,  கருணாநிதிக்கும் முன்னமேயே...
* மென்மையே உருவான திரு.வி.க போன்ற அப்பழுக்கில்லாத் தமிழறிஞர்கள் துவக்கி வைத்தது;
* ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்திலே, இது வே.பிரபாகரனால் நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அறிஞர் அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல், இந்தப் புத்தாண்டு மாற்றமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ என்னமோ?:)

எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு கேக்குறீங்களா?
= அதே விழிப்புணர்வுக்குத் தான்!
அரசியலை ஒதுக்கிட்டு, "உண்மை" ஆவல்! பதிவின் நீளம் அதனால் தான்!

சற்று, உன்னிப்பா நோக்குங்க:
* தை என்பவர்கள் = தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் ஹிந்து மதப் பற்று கொண்டவர்கள் (அ) வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மடாதிபதிகள்

ஆக, 2 கட்சிகள்!
எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும்,
தங்களுக்குச் சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...
அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று வெட்டிப் பேச்சுக்கள்!

ஆனால்...
தமிழ் இலக்கியம் = அது என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால்??? = அதுவே இந்தக் கட்டுரை!




குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

*நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
*"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!
சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!

ஆனா.....நம் "விருப்பத்துக்கு" மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவும், இந்த எண்ணத்தில் தான்!)

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை! விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்!
அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! அனைவருக்கும் பொதுவான தமிழில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" பற்றிப் பேச்சில்லை:))

தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?



முன் குறிப்பு:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடினார்கள்...
வள்ளுவரின் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!

யார் யார் இந்த முயற்சியில்?
*மறைமலை அடிகள்,
*உ.வே. சாமிநாத (ஐயர்),
*திரு.வி. க,
*நாவலர். ந.மு. வேங்கடசாமி நாட்டார்,
*நாவலர். சோம. சுந்தர பாரதியார்,
*தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
*பாவேந்தர் பாரதிதாசன்
*பெரியார் ஈ.வெ.ரா
*கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர், உமா மகேசுவரனார்
*முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் 
*மற்றும் பலர்!

ஆனா, அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? = இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே "தமிழ் ஆண்டு" என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் ~ கி.மு. 31 = எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:
வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா? -ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
தரவு: (Scanned Copy) பச்சையப்பன் கல்லூரி அறிக்கை: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் https://goo.gl/ebjTBV
------------
  

ஆனால், பின்னாளில்... மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார்,
வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் - எனவும் வகுத்து அளித்தார்!

அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவு: (Scanned Copies) : நாவலர் சோமசுந்தர பாரதியார் : தை-02 குறிப்பு https://goo.gl/SSy5fV
------------

திருக்குறளுக்கு, இன்று பலரும் பின்பற்றும் உரை எழுதிய தமிழறிஞர். டாக்டர். மு.வ.. என்ன நவில்கிறார் பாருங்கள்: இதோ, 1971 பொங்கல் விழா மலர்;

“இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? 
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான், நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால் அவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். 
இன்னொரு காரணமும் உண்டு. முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை! தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்!
அந்த நாள் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை; புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். இப்படிப் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்”

(இதற்கான தரவு: 1988 கோலாலம்பூர் பொங்கல் மலரில், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு)

முது பெரும் தமிழ் அறிஞர்கள், ஏன் இப்படிச் செஞ்சாங்க? அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள். பிருஹஸ்பதி சம்வத்ஸரச் சுழற்சி முறை.

அவற்றுக்கு நாரத-கிருஷ்ண ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோத்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி (எ) பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ இந்தப்பொய்க் கதைகளை உறுதி செய்கிறது!

இந்த Sanskrit/ ஆபாசக் கதைகளால், எல்லாரும் கேக்கறாங்களே?-ன்னு கூச்சப்பட்டாங்களோ என்னவோ
60 சம்ஸ்கிருத வருஷங்களையும்.. "வலிந்து" தமிழில் மொழிபெயர்த்து, முழிபெயர்த்து, திருட்டுத்தனமாப் பரப்பி விட்டிருக்காங்க, அண்மைக் காலங்களில்:) இது சத்தியவேல் முருகனார் என்பவர், அண்மைக் காலத்தில் வலிந்து செய்த தமிழாக்கம் மட்டுமே! இவை, தமிழ் மரபிலே இல்லை!

விகாரி ஆண்டு (விகாரமான) என்ற சம்ஸ்கிருதப் பதத்தை, ’எழில் மாறல்’ என்று கொஞ்சும் ழகரத் தமிழில் பேர் மாற்றி விட்டால் மட்டும், அசிங்கம் -> அழகு ஆகி விடுமா என்ன? மதச் சடங்குகளுக்காக, இப்படியெல்லாம் வலிந்து மொழியாக்கம் செய்வது, நற்பலன் தராது; கெடுதியே செய்யும்:( மதப் பாசம் விட முடியாத தமிழ்ப் பண்டிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

*புள்ளை= Sanskrit Parasiteக்குப் பொறந்தது
*Initial= தமிழில் போட்டா, தமிழுக்குப் பிறந்ததா ஆயீருமா?
வெட்கமாய் இல்லை?:(
எந்தவொரு தமிழ் இலக்கியத்திலும், இப்பிடி "முழிபெயர்த்த" பெயர்கள் இருக்காது:) இது திருட்டு வேலை!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்! = டேய், இதெல்லாம் தமிழா?:))
(ஆமாம்....தமிழே! தோஷம், கோஷம்லாம் = "பரிசுத்தமான" தமிழே-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு! அவர்கள் பற்றி இங்கு பேச்சில்லை!:)

Please Note:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், 
அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! They are just "add-ons"

=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> போலவே: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! அவை ஹிந்து/ சம்ஸ்கிருத ஆண்டுகள்!

இதே 60 பெயர்கள் தான்.. தெலுங்கு/ கன்னடத்திலும்! ஏன்னா, அங்கும் சம்ஸ்கிருதக் கலப்பு! 
இந்தச் சம்ஸ்கிருதத் "திணிப்பு" செய்தது யார்? குஜராத்திகளா? பீகாரிகளா? அல்ல! நம்மோடு வாழும் தென்னாட்டுப் பிராமணர்களே!

மதத்தின் துணைகொண்டு, அந்தந்த ஊர்களில், அந்தந்த மொழிகளில் Sanskrit Parasite புகுத்தினார்கள்! குஜராத்தி/ வங்காளி எளிய மக்களைக் கேளுங்கள்; எவனும் இந்த 60 ஆண்டுப் பெயர்களைச் சொல்ல மாட்டான்:)

Hindu Calendar! or Sanskrit Calendar or Brahmin Calendar!
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
https://en.wikipedia.org/wiki/Samvatsara
Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years" | Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! 
அதை மொழி அமைப்பில் புகுத்தி, திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவ/விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்படுகிறார்கள்!:)

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை! எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்! ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)
"வசந்த காலத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, கூறப்படுகிறது..
படுகிறது, படுகிறது-ன்னு இவங்களா அடிச்சி விட ஆரம்பிச்சிருவாங்க!:) ஆனா தரவு? ஆதாரம்??:))

Aries/ மேஷத்தில் தான், உலகெங்கும் புத்தாண்டு துவங்குதா? 

Aries = கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் -ன்னு பல பண்பாடுகளில் இருக்கே! அங்கெல்லாம் Aries/ Mar-Apr தான் புத்தாண்டா? இல்லையே?
Zodiac / ராசிச் சக்கரத்தில் தான் ஒரு புத்தாண்டு துவங்கணும் என்பதற்கு, உலகெங்கும் எந்த ஆதாரமும் இல்லை! அறுவடை ஒட்டியோ, அவரவர் பண்பாடு ஒட்டியோ தான், புத்தாண்டு நிறுவிக் கொண்டுள்ளார்கள்!


சொல்லப் போனால், Old New Year என்ற ஒன்று கூட உலகெங்கும் உண்டு! அது Jan-14 ஒட்டி வரும்/ தை-01 கூடப் பொருந்திப் போகும்:)
*Greece
*Rome
*Macedonia
*Russia
*Scotland
*Georgia
*Bulgaria/ Serbia/ Ukraine
இன்னும் பல Orthodox பண்பாடுகளில்= தை-01 தான் என்று சொல்வோமா?:)))

Orthodox New Year பற்றி மேலும் அறிய= https://en.wikipedia.org/wiki/Old_New_Year
விக்கிப்பீடியா தரவு ஆகாது; அது மேலோட்டமான அறிதலே!
அதனால், இங்கு சென்று காண்க= https://goo.gl/OBmUE0 | உலகில் இன்றும் கொண்டாடப்படும் Orthodox/ Old New Year; Julian Calendar:)

சம்ஸ்கிருத பாசம் மிக உடைய பிராமணீயர்காள்,
உங்கள் சாலிவாஹன/ விக்ரம சகம் உங்களோடு; வாழ்த்துக்கள்:)
ஆனா, அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலையிலும் திணிக்காதீர்கள்!


சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய, காடு உறை உலகமும்,
சேயோன் மேய, மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை   
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே"
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே!
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!
ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்...
கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)




உரையாசிரியர், நச்சினார்க்கினியர் சொல்வது போலவே, இன்றும் மலையாளப் புத்தாண்டு அமைந்துள்ளது, அறிவீர்களா?
சிங்க மாதமே (ஆவணி) = மலையாள முதல் மாதம்!
மலையாளப் புத்தாண்டு/ கொல்லம் ஆண்டு= சித்திரை மாத விஷூக் கணி (கனி) அல்ல! ஆவணிச் சிங்க மாதத்தில் வரும் ஓணமே! அறுவடை நாள்!

*சித்திரை விஷூக் கணி= மற்றுமொரு விழாவே
*ஆவணிச் சிங்க மாதமே= புத்தாண்டு;
*அம் மாதத்தில் வரும் ஓணமே= பெருவிழா; விஷூ அல்ல

முன்பே சொன்னது போல், கார் காலம்= மழை வரும் காலமே, மங்கலம் கருதி.. முதற் காலமாக அமைந்தது! மலையாளத்தில் மட்டுமல்ல! நம் ஆதித் தமிழ்த் தொல்காப்பியத்திலேயே!
------------

2. சங்க காலம்: எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன! அதையே பல தமிழ் அன்பர்களும், "தைஇத் திங்கள், தைஇத் திங்கள்" -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா?
= இல்லை!
= தமிழ் என்பதற்காக, நான் Raw Data-வை மறைக்க/ மாற்ற மாட்டேன்:)

*நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

*குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

*புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

*ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

*கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = "ஆண்டின் துவக்கம்" -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

*தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து 
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!
------------

3. அடுத்து... ஜெயலலிதா-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் அடிமை "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:

"ஆடு தலை" = நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுத் தலைக்கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:)) | தலை = தலையாய/ முதன்மையான!
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு!
எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:)) Wait Wait Wait.....

மேஷம் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!:) இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு... அடேய்களா!

அடேய், பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆயிடாதுடா! மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, அப்பறம் பொய் சொல்லுங்க:)
பாவம் நக்கீரர்! திருவிளையாடல் பொய்ப் புராணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :)

சித்திரை = இதர "ஆதார"ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர....
"புத்தாண்டு"-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?அப்படியெல்லாம் பயப்பட, சிலம்பின் வரிகள் ஒன்னும் "சகஸ்ரநாம" வரிகள் அல்ல:)

2) பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!

இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் Comedyக்குப் பஞ்சமே இல்ல:) 23ஆம் புலிகேசி தனக்குத் தானே வெட்டிக்கொண்ட கல்வெட்டு ஞாபகம் வருதா? - வரலாறு முக்கியம் அமைச்சரே!:)

நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும், விவாதத்துக்கு உட்பட்டே! சோழர் கல்வெட்டில் இருந்தாலும், அவை = மிகவும் "பிற்காலம்" தான்! சங்க காலம் அல்ல!

சோழர் கல்வெட்டு பலவும், கிரந்த எழுத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
ஒடனே, "பாத்தீங்களா? பாத்தீங்களா? அப்பவே எல்லாப் பொது மக்களும் Grantha Alphabet தான் எழுதினாங்க; அம்மா வை= "சம்மா" -ன்னு எழுதினாங்களா?:) | அ = சd in grantham notation!

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன! சோழ அரசாங்கத்தில் வேலை பார்த்த "உயர்சாதிப் பண்டிதாள்", வருஷ - சம்வத்ஸரங்களின் பேரை, அவா Style-இல், "ஸ்வஸ்திஸ்ரீ" -ன்னு பொறிக்கச் செய்தார்கள்! அவ்வளவே!

3) புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது!
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :) இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடி தான்!
பலருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு!

இவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் புராணம் எழுதி வச்சிருக்காய்ங்க?:)

அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு:)
நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக... அது உண்மையாகி விடுமா என்ன?:))
வள்ளுவரே = தலைமகன்; பின்பே = ஆண்டாள்!

அறிவியல்:

இன்னொன்றும் சொல்கிறேன், குறிச்சிக்கோங்க; 
இது ஜோதிடம் (Astrology) அல்ல! விண்-வெளி அறிவியல் (Astronomy); 

சித்திரையே = "மேஷம் புகும் மாதம், மேஷம் புகும் மாதம்".. என்று குதிக்கும் பல பேர், அறிந்து கொள்க! முதற்கண், உங்கள் சித்திரை = மேஷம் புகும் மாதமே அல்ல! மீனம் புகும் மாதம் :)   



பூமியின் Precessional Wobbling (உருட்டு) என்ற ஒன்றுண்டு; 73 ஆண்டுகளுக்கு 1 degree மாறும் சூரியப் பாதை; 120 BCEஇல், சித்திரை = 'மேஷம்' புகும் மாதமாக (Aries) இருந்தது; அது எப்பவோ மாறிப் போய், இன்று சித்திரை = 'மீனம்' புகும் மாதமாக (Pisces) மாறியாச்! Apr 14 = மீனம் தான்; மேஷம் அல்ல!

இன்னும் 600 ஆண்டு கழிச்சி, 2597 CEஇல், இதே சித்திரை = 'கும்பம்' புகும் மாதமாக (Aquarius) மாறி விடும்; அப்போ என்ன செய்வீங்க? எந்த மேஷத்தில் புகுவீங்க? :)


12 ராசிக் கட்டங்கள், உலகெங்கும் உண்டு; ஆதி மனிதன், இரவில் வானத்தின் தோற்றம் கண்டு, அதில் மாதாமாதம் நட்சத்திரக் கூட்டங்களின் கும்பலான தொகுப்பைக் கொண்டு, ஆடு / மாடு / நண்டு என்று.. பல கற்பனை வடிவங்கள் செய்து கொண்டான்; அதான் மேஷம் / Aries, ரிஷபம் / Taurus எனும் Constellation (ராசி).
 
ஆண்டின் Calendar (நாட்காட்டி) அறியும் பொருட்டு அவன் செய்து கொண்ட Approximationஐ, இன்றும் 'ஜோதிடம்' என்ற பேரில் புனைவுகள் பல பேசித் தொங்கிக்கிட்டு இருக்கீங்க :) ஆனால் அதெல்லாம் எப்பவோ மாறிப் போய், பூமி வேறு ராசி மண்டலத்துக்குள் வந்தாச்! 

ஒவ்வொரு 2,665 ஆண்டுக்கும், உங்கள் சித்திரை = மேஷம், மீனம், கும்பம், மகரம், துலாம்-ன்னு Reverse-இல் மாறிக்கிட்டே இருக்கப் போவுது; நவகிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணாலும், உங்களால் அதை மாற்ற முடியாது :) பேசாம, அறிவியலுக்கு மாறிடுங்க! அதான் உங்களுக்கு நல்லது! தலைமுறைக்கே நல்லது!



முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த படியால்... பய+பக்தியோடு, பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனா, மழை துவங்கும் "கார் காலம்" எனும் ஆவணி (அல்லது) "பனி முடங்கல்" எனும் தை
= முதன்மைக் காலம்/ சிறப்பு மாதமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கலை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:)

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கம் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி/ மன்னன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆண்டையொட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்பு எழுந்ததே!

அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது-ன்னு முடிவு கட்டிறாதீங்கோ...
உலகெங்கும், பல பண்பாடுகளில்.. ஆண்டுகளுக்குப் பெயர்கள் இல்லை; எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்னாள் பழக்கம்!

* Tamil Season Measurements/ பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months each*6 = 12 months!
* Tamil Daily Measurements/ சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs each*6 = 24 hours!

*ஆண்டுப் பெயர் தான் தமிழில் இல்லை!
(கிரேக்கம் / வேறு பல பண்பாடுகளிலும் இப்படியே ஆண்டுப் பெயரில்லை)


3. தமிழ் மரபில் & இலக்கியங்களில், மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை!
"தைஇத் திங்கள்" பாடல்களைப் பார்த்தோம்; புத்தாண்டு -ன்னு அல்ல! சிறப்பான மாதமாய்!

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்/ மேஷம் புகும் போதே துவங்கணும் = இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!
------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு மட்டும் வேணாம்பா; 
ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே, என்பவர்களுக்கு...

சித்திரை-ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!
*This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி
*இதே போல் Islamic Calendar கூட உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
*சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!

ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும்,
* தமிழ் ஆண்டின் முதல் நாளா, ஹிஜ்ரி நாளை வைங்கோ, நாங்களும் தமிழர்கள் தானே? -ன்னு கேக்குறாங்களா?:) இல்லையே?

நாம மட்டும் ஏன், மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :)

இது இன்று நேற்றல்ல! பல காலங்களாய்!
இல்லீன்னா, சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு பின்னாளில் எழுதிச் சொருகி வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி -ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டும்!
மொழி அமைப்பில் திணிக்க வேண்டாம்!

= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது -ன்னே கருதுகிறேன்!
------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது 
= Tamil Year Standardization மட்டுமே; 
= புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறைக்கும் (Continuous Numbering Scheme) வித்திட்டது;

நிச்சயமா.....இது "புதிய" முறை தான்!
ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

This is only a "notation" for Tamizh related Standards;
But Common Era (2012 CE) applies for all of us!


கிமு/ கிபி அல்ல; அதிலும் மதம் கடந்தாகி விட்டது!
BCE= Before Common Era | CE= Common Era
BC/ AD என்று எழுதாதீர்கள்; BCE/ CE என்றே புழங்கவும்!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு!
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லு = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை;
சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா...

* சித்திரை = வேண்டாம்!
* சித்திரை-ன்னாலே, மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் சிறப்பு மாதம்!
* தை -ன்னாலே.... மதம் கலவாமல்.... தமிழ் மட்டும் தனித்துத் தெரியும்!

தமிழ் குறித்த ஒன்றில், தமிழ் தானே அடையாளம் தெரிய வேண்டும்?
When it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point; NOT religion!
For that......Thai would be the best choice!
* Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
* Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!
இத்துணை நாள், மத மாயை..

இனியாச்சும், மானம் கொள்வோம்!

உங்க ஆத்துல.... பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட அக்ரஹார பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு -ன்னு, தமிழக மக்களுக்கே ஒட்டுமொத்தம் ஆக்காதீக! Please...
------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....
சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு பிடிவாதம் பிடிச்சா?.....

Okay, நானே இறங்கி வரட்டுமா?
சித்திரை-க்கே ஒத்துக்கட்டுமா? .... but two small conditions!

a) "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; ஆண்டுப் பிறப்பு ன்னு சொல்லுங்கோ:))
b) ருத்ரோத்காரி -ன்னு அசிங்கம் புடிச்ச புராணக் கதை |  60 சம்ஸ்கிருதப் பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள்; 
தினத்தாள், Calendar, Marriage Invitations.. எல்லாக் குறிப்பில் இருந்தும் Sanskrit Parasite நீக்குவீங்களா?

அதெல்லாம் நீக்க மாட்டேன்; 
அதான் "தமிழ்" வருஷப் பிறப்பு!
சம்ஸ்கிருதம் தான் டா, தமிழ்! -ன்னு நீங்க சொன்னா..
இதுக்குப் பேரு தான் போங்கு! போங்கடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "ஹிந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) பிராமணப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
(அ) Sanskrit Parasite ஆண்டு வாழ்த்துக்கள்
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!


உசாத் துணை: (References)


1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
5. தெய்வங்களும் சமூக மரபுகளும் = பேரா. தொ. பரமசிவன்

6. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see her line //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html





109 comments:

  1. Replies
    1. நலமா-ண்ணா?
      ஒன்னுமே பேசக் காணோம்?:)

      Delete
  2. தமிழ் புத்தாண்டை மாற்றுவதற்கு ஒரே காரணம்; தமிழை அழிக்க வேண்டும் என்ற வெறி தான்; அதை மதம் மூலம் கொண்டு சென்றால் தமிழன் கம்முன்னு இருப்பான். தமிழ் புத்தாண்டு இருக்கிறதோ இல்லையோ, ஆனால், சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு இல்லை.

    திருவள்ளுவர் நாளன்று பஞ்சாங்கம் படிக்க ஒப்புக் கொண்டால், ஒரு வேளை புத்தாண்டை மாற்ற சம்மதிப்பார்கள் என்று நினைக்கிறன்!

    ReplyDelete
    Replies
    1. //திருவள்ளுவர் நாளன்று பஞ்சாங்கம் படிக்க ஒப்புக் கொண்டால்//

      ha ha ha

      //தமிழ் புத்தாண்டு இருக்கிறதோ இல்லையோ, ஆனால், சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு இல்லை.//

      very true!
      the practice of new years day is a latter one! thats why we dont have a specific mention in tamizh classics!
      anyways chithirai is too engulfed in religion to be observed as "tamizh"

      Delete
  3. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல ;-))

    ReplyDelete
    Replies
    1. :)
      இந்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி; நலமா? அதே சென்னை தானே?

      Delete
  4. நண்பர்களுக்கு வணக்கம்!

    சில தனிப்பட்ட துன்பங்களின் பொருட்டும், சிறார் மீட்புத் தன்னார்வப் பணி நிமித்தமாகவும், வேறு ஊரில் பல நாள் வாசம்!
    இங்கு இணையம் அதிகம் கிடைப்பத்தில்லை! எனவே ட்விட்டர்/ பதிவுகள் பக்கம் வரவே இயலவில்லை!

    This being for "Tamizh", wrote it offline & published a day before!
    Didn't want to publish on Apr 13th - for some ppl sentiments!

    Anyways, this is a logical analysis!
    Sorry, If I am not able to respond to questions immediately; Net availability!
    But will try as much as I can! Thanks!

    ReplyDelete
  5. மறைமலையடிகள் போன்றோருக்கு முன்னாலேயே ”திருவள்ளுவர் தினம்” கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக வ.வே.சு.ஐயர், பாரதி போன்றோர் அதை பெரும் விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொண்டாடியது ”தை” மாதத்தில் அல்ல. சித்திரை மாதத்தில். (யதுகிரி அம்மாள் தனது “பாரதி நினைவுகள்” நூலில் இது பற்றி எழுதியிருக்கிறார்) அப்படியானால் வள்ளுவர் பிறந்தது சித்திரையிலா? அல்லது அவரது நினைவு தினத்தை சித்திரையில் கொண்டாடினார்களா?

    எதுக்குமே சரியா ஆதாரம் இல்லையெனும் போது அவரவர்களுக்கு விருப்பமான மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட வேண்டியதுதான்.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் :-)

    ReplyDelete
    Replies
    1. //திருவள்ளுவர் தினம் = ஆனால் அவர்கள் கொண்டாடியது ”தை” மாதத்தில் அல்ல. சித்திரை மாதத்தில்//

      :)
      வள்ளுவர் திருநட்சத்திரம் = வைகாசி அனுஷம் ன்னு சொல்வோர் உண்டு!
      இது வள்ளுவருக்குப் பட்டை போட்ட சில சைவப் "பெருமக்கள்" சொல்வது:)
      -------

      Pl note:
      ஆனா, இங்கே தமிழ்ப் புத்தாண்டு-ன்னு தமிழறிஞர்கள் வகுத்துக் குடுப்பது = திருவள்ளுவர் தினத்தையோ/ வள்ளுவர் பிறந்தநாளையோ அல்ல!
      * ஆண்டின் எண்ணுக்கு = திருவள்ளுவர் காலம்
      * ஆண்டின் முதல் நாள் = தை நாள்
      Thatz it! Itz only a convention/notation that tamizh aRignars recommend!

      Delete
  6. KRS,

    வணக்கம், நலமா, நீண்ட நாட்களாயிற்று பதிவில் சந்தித்து.

    வரும் போதே பத்த வைக்குறிங்களே, :-))

    சித்திரை தமிழ்ப்புத்தாண்டு அல்லனு சொல்வதோடு நிக்காமல் தமிழுக்கு புத்தாண்டே இல்லைனு கூட ஒரு சேர்ப்பு ஏன்?

    மேலும்,
    //சித்திரை = இதர தரவுகளாகச் சொல்லப்படுபவை:

    * சிலப்பதிகாரம் - இந்திர விழா
    இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!//

    சித்திரை முது வேனில் காலத்தில் வரும்.(பங்குனி-சித்திரை)

    இளவேனில் தை மாதமே.(தை-மாசி)

    கார்காலம் -வைகாசி-ஆணி
    கூதிர்காலம்-ஆடி-ஆவணி
    முன்பனி -புரட்டாசி-ஐப்பசி

    பின்பனி-கார்த்திகை -மார்கழி

    ஆண்டு துவக்கம் தையில் வரும் என்பது பருவத்தின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.

    திருவள்ளுவர் ஆண்டு என காலண்டர் கொண்டு வந்தப்போதே அந்நாளையே ஆண்டின் துவக்கமாக வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்னு படித்த நினைவு.

    உங்களுக்கும் முழுசாக என்ன சொன்னார்கள் என தெரியாத நிலையில் தையில் புத்தாண்டு என சொல்லவில்லை என அழுத்தமாக எப்படி சொல்கிறீர்கள்.

    ம.பொ.சி ,பெரியார் எல்லாம் தையில் தமிழ்ப்புத்தாண்டு வர வேண்டும் என்று சொன்னதாகவும் நினைவு. அவர்கள் பெயரை தவிர்த்து மற்றவர்கள் சொன்னார்கள் சரிய தெரியவில்லை, எனவே சொல்லவில்லை, தையில் புத்தாண்டு இல்லை என்று சொல்வது.சித்திரையில் இல்லை என்று சொல்லி விட்டு கூடவே ஒன்றுமே இல்லைனு சொல்வதும் இடிக்கிறது.

    2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகத்தின் அனைத்து கூறுகளையும் பயன்ப்படுத்திய தமிழினம் நாட்காட்டி,ஆண்டுக்கணக்கு இல்லாமலா இருந்திருக்கும். சரியான ஆவணப்படுத்துதல் இல்லாமையால் அழிந்து போயிருக்க வாய்ப்புண்டு.

    // இதே போல் Islamic Calendar உம் உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
    ஆனா, இஸ்லாமிய சமூகத்தினர் யாரும், ஹிஜ்ரி கணக்குப் படி, தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளா வைங்கோ -ன்னு சொல்லுறாங்களா என்ன?:))
    நாம மட்டும் ஏன்.....இப்படி மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :))/?

    ஹிஜிரி காலண்டர் என்றால் என்ன ,எப்படி வந்தது என்று தெரியாமலே பேசுவதாக படுகிறது.

    மொழி, காலண்டர் என மதத்தின் அடிப்படையில் வகுத்துக்கொண்டு செயல்படுபவர்களை எப்படி இது போல ஒப்பிட்டு கூறுகிறீர்கள்.

    தமிழ் புத்தாண்டுடன் சம்பந்தப்படுத்தினால் சூரியனை ஏற்க வேண்டி இருக்கும்,ஆனால் அவர்களோ சந்திர நாட்காட்டியினர் பேச்சுக்கு கூட அப்படி சொல்ல மாட்டார்கள் :-))

    தைப்புத்தாண்டு துவக்கம் என்பது மதச்சார்பற்ற ஒன்று,ஆனால் இஸ்லாமிய காலண்டர் மதம் சார்ந்த ஒன்று என்பதையே மறந்துவிட்டீர்கள் .

    ஹிஜிரி 622 க்கு முன்னர் அரபிய மக்கள் நாட்காட்டியில்லாமல் வாழ்ந்தார்களா?இல்லையே எனவே மதத்துக்காக உருவான நாட்காட்டி, ஆண்டுப்பிறப்பு அவை அதனை தமிழ்ப்புத்தாண்டுடன் ஒப்பிட்டு குழப்ப வேண்டாம்.

    சித்திரையில் தமிழ் ஆண்டுப்பிறப்பு இல்லை , தையில் உண்டென கொண்டால் நன்று!

    ReplyDelete
    Replies
    1. @வவ்வால்
      நலமா?
      யப்பா, எம்புட்டு நாளாச்சு நாம உரையாடி:)
      நீங்க ட்விட்டர்-ல்ல இருக்கீயளா?

      //சித்திரை தமிழ்ப்புத்தாண்டு அல்லனு சொல்வதோடு நிக்காமல் தமிழுக்கு புத்தாண்டே இல்லைனு கூட ஒரு சேர்ப்பு ஏன்?//

      :)
      புத்தாண்டு தினம் என்பது = relatively new
      தமிழ் இலக்கியங்களில் "இந்நாளே புத்தாண்டு"-ன்னு explicitஆ குறிக்கப்படவில்லை என்றே சொல்ல வந்தேன்!

      தமிழுக்கான updated standards வகுக்கும் போது, தமிழறிஞர்கள் வகுத்த தை-01 என்பதே என் கருத்தும்!
      எக்காரணம் கொண்டும் ஜோதிட ரீதியான, சித்திரை-01 அல்ல!

      Delete
    2. @வவ்வால்
      //சித்திரை முது வேனில் காலத்தில் வரும்.(பங்குனி-சித்திரை)
      இளவேனில் தை மாதமே.(தை-மாசி)//

      அல்ல!
      கொஞ்சம் சரி பாருங்கள்!

      சிலப்பதிகாரம் காட்டும் இளவேனில் & சித்திரை
      இந்திர விழவு ஊரெடுத்த காதை
      http://tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=7

      சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென
      ....
      இளி வாய் வண்டினொடு, இன் இளவேனிலொடு

      So, கண்டிப்பா தை=இளவேனில் அல்ல!
      --------

      இன்றைய காலக் கணக்குப் படி...

      கார் = ஆவணி / புரட்டாசி
      கூதிர் = ஐப்பசி / கார்த்திகை
      முன் பனி = மார்கழி / தை
      பின் பனி = மாசி / பங்குனி
      இள வேனில் = சித்திரை/ வைகாசி
      முது வேனில் = ஆனி / ஆடி

      சங்க காலத்துக்கு, approx we may have to offset 24 days!
      Pl take a look at Raama.Ki ayya's notes too!
      -- இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும் --
      http://valavu.blogspot.com/2007/01/blog-post.html

      Delete
    3. //ஹிஜிரி காலண்டர் என்றால் என்ன ,எப்படி வந்தது என்று தெரியாமலே பேசுவதாக படுகிறது.
      தைப்புத்தாண்டு துவக்கம் என்பது மதச்சார்பற்ற ஒன்று,ஆனால் இஸ்லாமிய காலண்டர் மதம் சார்ந்த ஒன்று என்பதையே மறந்துவிட்டீர்கள்//

      ஆகா....
      நானும் இதையே தான் சொல்கிறேன்; ஒரு வேளை நான் சரியான சொற்களால் சொல்லலையோ?:)

      என்ன சொல்ல வந்தேன்-ன்னா...
      * ஹிஜ்ரி = இஸ்லாமிய சமய முறை
      * பிரபவாதி = செளரமானம் = இந்து சமய முறை

      எப்படி இஸ்லாமிய சமூகத்தினர், ஹிஜ்ரியை தமிழ்ப் புத்தாண்டாக வை என்று கோரலையோ...
      அதே போல், இந்துக்களும் பிரபவாதியைத் தமிழ்ப் புத்தாண்டாக வை என்று கோரக் கூடாது! (அடாவடி அடிக்கக் கூடாது -ன்னு சொல்லி இருந்தேனே)
      => தமிழ்ப் புத்தாண்டு முறை = சமயச் சார்பற்றது!

      Hope itz clear now! Shd I chg the lines of the post?

      Delete
    4. KRS,

      உடனே கவனிக்கவில்லை, நீங்கள் சொன்னது குழப்படியான ஒன்றாக இருக்கு.
      //So, கண்டிப்பா தை=இளவேனில் அல்ல!
      --------

      இன்றைய காலக் கணக்குப் படி...

      கார் = ஆவணி / புரட்டாசி
      கூதிர் = ஐப்பசி / கார்த்திகை
      முன் பனி = மார்கழி / தை
      பின் பனி = மாசி / பங்குனி
      இள வேனில் = சித்திரை/ வைகாசி
      முது வேனில் = ஆனி / ஆடி//

      சித்திரையில் கத்திரி வெயில் என்பார்கள் அது எப்படி இளவேனில் ஆகும்?

      மேலும் ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் சொல்வார்கள் , ஏன் எனில் தென் மேற்கு பருவக்காற்று மூலம் மழை ஜூன் - செப்டெம்பர் காலத்தில் கிடைக்கும். ஜூன் -2 இல் மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும். எனவே வைகாசி-ஆணி(மே-ஜூலை) நல்ல மழை அதுவும் முதல் மழை கிடைக்கும் எனவே அதுவே கார்காலம் ஆக இருக்க வாய்ப்பு.

      நீங்கள் சொல்லும் கார்- ஆவணி-புரட்டாசி என்பது ஆகஸ்ட் நடுவில் இருந்து செப்டெம்பர் நடுப்பகுதி வரைக்கும் போகிறது அது மழைக்காலமே அல்ல.தென் மேற்கு பருவ மழைக்கும் , வட கிழக்கு பருவ மழைக்கும் இடையே உள்ள ஒரு காலம்.

      வடக்கிழக்கு பருவ மழையும் அக்டோபர்-நவம்பர் அதாவது அய்ப்பசி-கார்த்திகை காலம் அதனை நீங்கள் கார்காலம் என்று சொல்லி இருந்தாலாவது ஏற்றிருக்கலாம்,. அய்ப்பசியில் அடை மழைனு சொலவடையே உண்டு :-))

      எனவே நீங்கள் வரையறுத்த பருவக்காலங்கள் தவறாகவே இருக்கு.

      நான் சுட்டியது போல பார்த்தால் மாதங்களுக்கும் ,பருவங்களுக்கும் சரியான தொடர்புவருகிறது.
      ஜனவரி.பிப்ரவரி மாதங்களீல் வெப்பம் மிதமாக இருக்கும் , மார்ச் ஏப்ரலில் தான் கடுமை அடையும் , பின் எப்படி சித்திரையை இளவேனில் என்கிறீர்கள்?
      மார்கழி மாதத்தினை பீடை மாதம் என்பார்கள், மார்கழியின் கடைசி நாளில் பழையனவற்றை எரித்து போகி கொண்டாடி தை முதல்நாளில் சூரியனை வரவேற்பது ,நல்வாழ்வினை துவக்க ஒரு ஆரம்பம் எனலாமே. அப்படிப்பார்த்தால் அதுவே புதிய ஆண்டின் துவக்கம் எனலாம்.
      ----
      துவித்தர் பக்கம் வரும் அளவுக்கு பொறுமை இல்லை ,நீங்க அங்கே தான் கீச்சுறிங்களா?
      *******

      வெங்கடேசன்,
      // சித்திரை முதல் நாள் "தமிழ்" புத்தாண்டு அல்ல. ஆனால் இந்துப் புத்தாண்டு என்றும் சொல்ல முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் இதை புத்தாண்டாக ஏற்றுக் கொள்வதில்லை.//

      இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள இந்துக்கள் சித்திரை ஒன்றை ஒட்டியே புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் , விவரம் தெரியாமல் பேசக்கூடாதுங்க.

      எனதுப்பதிவைப்பார்க்கவும்.
      புத்தாண்டு குறித்த எனது பதிவுகள் இரண்டு:
      சித்திரை-1 புத்தாண்டு யாருக்கு?

      தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,(2007 இல் போட்டதன் மீள்பதிவு)
      தை-1 தமிழ் புத்தாண்டு

      Delete
    5. @வவ்வால்
      நன்றி; ஆமா...இப்பல்லாம் ரொம்ப பதிவு போடுறது இல்ல! முக்கியமான பதிவுகள் மட்டும் எப்பவாச்சும்! மத்தபடி ட்விட்டர்-ல்ல தான்! Just 140 letters :)
      -----------

      //சித்திரையில் கத்திரி வெயில் என்பார்கள் அது எப்படி இளவேனில் ஆகும்?//

      ஹா ஹா ஹா
      சூப்பராப் புடிச்சீங்க பாயின்ட்டை; ஆனா இளங்கோ அடிகளைத் தான் கேக்கணும்! நான் சொல்லலை! அவரு தான் சொல்றாரு:)

      சரீ, அப்போ நீங்க சொன்ன கால அளவை: கூதிர்காலம்-ஆடி-ஆவணி!
      ஆடி மாசம் எப்படிக் குளிர் காலம் ஆகும்? அதையும் கொஞ்சம் விளக்குங்களேன்!

      //அது மழைக்காலமே அல்ல.தென் மேற்கு பருவ மழைக்கும் , வட கிழக்கு பருவ மழைக்கும் இடையே உள்ள ஒரு காலம்//

      பருவ மழை, இப்போ இப்படி!
      ஆனா, இளங்கோ காலத்தில் எப்படியோ?
      அதை ஒட்டி, அப்போதைய காலங்கள் அமைந்திருக்கலாமோ என்னவோ!

      இவை நான் சொல்லும் காலங்கள் அல்ல!
      இலக்கியங்களில் உள்ள இளவேனில்/முதுவேனில் குறித்து தமிழறிஞர்கள் சொல்லியுள்ளவை!
      இராம.கி ஐயாவின் பதிவையும் ஒரு வாசிப்பு வாசித்து விடுங்கள்!

      இது தான் = "கால மாற்றம்" என்பதா?:))

      Delete
    6. krs,

      முடியலை... என்ன கொடுமை சார் இது... நான் எதாவது எழுதினா ஆதாரம் இருக்கா , சுட்டி இருக்கா என கேட்கும் "பிரகஸ்பதிகள்" வளவு .இராம.கி எழுதினதுக்கு என்ன ஆதாரம்னு கேட்கவே இல்லையே ஏன்? அவரிடம் லைசென்ஸ் வாங்கின கன் இருக்கா :-))
      (இனிமே என் கிட்டே சுட்டிக்கொடு சட்டிக்கொடுனு கேட்கட்டும் பேசிக்கிறேன்)

      இராம.கி எழுதியதில் ஏற்புடையது பொங்கல் கொண்டாட தக்கது என்பதை குறிப்பிட்டதே , மற்றபடி அவர் எழுதியது எல்லாமே " நான் சொல்றேன் நீ கேட்டுக்கோ" என்பதான கருத்துக்களே , அதை நம்புவதற்கு ஏற்ப பெரிதாக ஏதும் விளக்கங்களும், தரவுகளும் இல்லை அப்பதிவில்.

      மற்றபடி அவர் சொன்னார் என்பதற்காக ஜூன் =2 இல் மேட்டூர் அணை திறக்காமல் போவதில்லை, மே மாத இறுதியில் மழை பொழிவு துவங்காமல் போவதில்லை.

      வானியல் அச்சினை பொறுத்து ஏற்படும் பிரிசிசன் ( precession) அடிப்படையிலேயே அந்த நட்சத்திரம் அங்கே போகுது , இங்கே போகுதுனு சொல்லுகிறார்கள். மற்றபடி பருவ மாற்றம் குறித்து அதனை வைத்து சொல்ல முடியாது. அதாவது வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் இட மாற்றம் மட்டுமே, பூமியில் வீசும் காற்றின் காலம் மாறாது.

      அப்படி மாற்றம் வர வேண்டும் எனில் 25,700 ஆண்டுகள் ஆகனும்
      //The celestial poles do not remain permanently fixed against the background of the stars. Because of a phenomenon known as the precession of the equinoxes, the poles trace out circles on the celestial sphere, with a period of about 25,700 years. //

      http://en.wikipedia.org/wiki/Celestial_pole

      எனவே அவர் சொன்னபடி தமிழின் 6 கால நிலைகளும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டதா ,

      இப்போது என்ன வகையான பருவ கால நிலை நிலவுகிறது ?

      இளங்கோவடிகள் சித்திரை மாத காலத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டதுனு சொன்னார் சொன்னீங்க, ஆனால் அவர் சங்க காலத்தவர் எனில் மாதவியின் மகள் மணிமேகலையின் புராணம் 5 ஆம் நூற்றாண்டு என சொல்கிறார்கள், அது சங்க காலமா?

      மேலும் அப்போது கொண்டாடப்பட்ட இந்திர விழா சித்திரையில் கொண்டாடப்பட்டது எனில் அது வசந்த விழா ஆகுமா? இளவேனில் வீசியது போல காற்று வீசியது என்பதாகவே அப்பாடலை கொள்ளவேண்டும்.

      இந்த விக்கி சுட்டியைப்பார்க்கவும்,
      மழை விழா-இந்திர விழா

      மழை வர வேண்டும் என கொண்டாடப்படும் விழா இந்திர விழா அது வசந்த விழா அல்ல, கோடையின் முடிவில் இப்போதும் மழை பொழியும் கோடை மழை என்போம் அது தொடர்ந்து பருவ மழை பொழிகிறது. எனவே பருவம் சிலப்பதிகார காலத்தில் இருந்து மாறிவிடவில்லை :-))

      Delete
    7. KRS,

      ஆடி மாசம் குளிருமானு கேட்கறிங்க ,அப்போ இரவில் குளிரும், நம்பிக்கை இல்லைனா சூப்பர் ஸ்டார கேளுங்க, அவரே ஆடி மாசம் காத்தடிக்க வாடிப்புள்ளை சேத்தணைக்க னு பாயும் புலி படத்தில பாடி இருக்கார்(எலக்கிய உதாரணம்னா இப்படி கொடுக்கணும்) குளிராம அப்படி பாடுவாரா :-))

      ஆடியில் அடிக்கும் காற்று குளீராக இருக்கும் , மேலும் ஈரப்பதம் இல்லாமல் வறண்டும் இருக்கும்னு சொல்வாங்க, எல்லாம் ஒரு அனுபவ கேள்வி ஞானம் தான் . விரைவில் ஆடியின் வெப்ப,தட்ப நிலை அறிக்கையை தேடிப்போடுறேன். :-))

      Delete
    8. //ஆடி மாசம் காத்தடிக்க வாடிப்புள்ளை சேத்தணைக்க
      எலக்கிய உதாரணம்னா இப்படி கொடுக்கணும்//

      தெய்வமே! இதுவே தரவு...நீரே புலவர்!
      நான்? நானில்லை, நானில்லை...நீரே புலவர்:))))))))))

      ஒரு வரியில் என்னைய டோட்டலாச் சாய்ச்சுட்டேளே:))

      Delete
    9. //இராம.கி எழுதினதுக்கு என்ன ஆதாரம்னு கேட்கவே இல்லையே ஏன்? அவரிடம் லைசென்ஸ் வாங்கின கன் இருக்கா :-))//

      ஹா ஹா ஹா
      அவரிடமே கேளுங்கள், what barrel, what pistol ன்னு:))

      //வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களின் இட மாற்றம் மட்டுமே, பூமியில் வீசும் காற்றின் காலம் மாறாது//

      மிக்க நன்றி, இத் தகவலுக்கு!
      பதிவின் மையம் திசை திரும்பி விடும் என்று நீங்கள் கருதினால், இந்தக் காலங்கள் குறித்து இன்னொரு நாள் உரையாடுவோம்!
      But this பரிபாடல் may be of interest to u; This tells abt many seasons in vaigai river; (Lines 74-88)
      Therein it mentions முன்பனி in maargazhi/thai (அம்பா ஆடல்-மார்கழி நீராடல்); Maybe it might help to fix the current day months for seasons mentioned in literature!
      --------

      btw
      சிலப்பதிகாரம் = சங்கம் மருவிய காலம் (கடைச் சங்க காலத்துக்கும் பிந்தி)

      Delete
    10. கே.ஆர்.எஸ்,
      நான் திசை திருப்பலாக நினைக்கப்போவதில்லை, பழம் தமிழ் கலாச்சாரத்தினை அறிய ஒரு வாய்ப்பு என்றே எடுத்துக்கொள்வேன், மற்றவர்கள் தான் சாபம் விட்டாலும் விடலாம் :-))
      பரிப்பாடல் சுட்டிப்படித்தேன்,

      அதில் மார்கழி முன் பனினு இருக்கு,அப்புறம் நீங்களும் இன்றைய காலக்கட்டத்தில் என்று மார்கழியை முன்பனி என்றே சொல்லி இருக்கிங்க சரியா?

      இராம.கி அவர்களின் பதிவின் படி பருவம் மாறுது இதான் கால மாற்றம் என்பதா என்றும் சொல்லி இருக்கிங்க, சரியா?

      அப்போ மாறுது என்று சொல்கிறீர்களா, மாறவில்லைனு சொல்ல வருகிறீர்களா?

      முன் பனி என்றால் மாலையில் ,முன்னிரவில் பனி வரும் ,

      பின் பனி என்றால் அதிகாலையில் பனி வரும்,

      எனக்கு தெரிந்து மார்கழியில் காலையிலே பனி வரும். அப்போ பின் பனி என்பது சரியாக தான் இருக்கு, நானும் அப்படி தான் முன்னர் சொல்லி இருக்கேன்.

      ஹி..ஹி எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் நிறைய புக் மார்க் போட்டுவிடுவேன் ,அப்புறம் எங்கேனு தேட வைக்கும், இப்போ நான் சொன்னது போல திருவள்ளுவம் என்கிற இணையத்தளத்திலும் சொல்லி இருக்கு, பாருங்க.
      திருவள்ளூவம்

      சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு இல்லைனு சொல்லிட்டு தைக்கு மட்டும் வழி விட மாட்டேன்கிறீரே ,பேசாமல் இதுக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் பாட்டு இருக்கானு தேடிப்பார்க்கணும் :-))

      Delete
    11. @வவ்வால், இப்போ தான் கொஞ்சம் net கிடைச்சுது!

      நீங்க சொல்லும் கால வரிசை: தை=இளவேனில்!
      இது என்னமோ, ஒரு ஆண்டின் துவக்கம் இளவேனிலாத் தான் இருக்க வேணும் என்பதற்காக வலிந்து சொல்லப்படுதோ ன்னு ஒரு feeling:)

      Just feeling! அவ்ளோ தான்! But, நீங்க சொல்லும் கார்காலம் = வைகாசி-ஆனி "இன்றைய" மழைக் காலத்தோடு (தென்மேற்குப் பருவமழை) ஓரளவு ஒத்துப் போகுது என்பதும் சரியே!
      ஆனா நீங்க சொன்ன கூதிர் காலம் (குளிர் காலம்) = ஆடி/ஆவணி என்பது அவ்வளவாக ஒத்துப் போகவில்லை!

      மேலும் புரட்டாசி = முன்பனி என்பதும் லேசா இடிக்கிறது! புரட்டாசி மாசம் பனி பெய்யுதா என்ன?
      தை = வேனில் என்றால் Spring! தை மாதம் எத்தனை புதுப் பூக்கள் பூக்குது?
      பங்குனி/சித்திரை = முதுவேனில் என்றால், சித்திரையோடு கோடை முடிந்து விடுகிறதா என்ன? அக்னி நட்சத்திரம் (கத்திரி) வைகாசியிலும் நீள்கிறதே!

      மேலும் ஆடிப்பட்டம் தேடி விதை-ன்னு சொன்னீங்க! ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்-ன்னும் இன்னொரு பழமொழி இருக்கு!
      மழைக்காலம் முடிஞ்ச பின் குளிர் இருக்குமே அன்றி, இப்படிக் காத்து அடிக்குமா? காற்று தள்ளிக் கொண்டு வந்ததால் தானே மழை?

      ஆடிப்பட்டம் = மழை முடிஞ்ச பிறகு விதை! சரியே! ஆனா...இந்தப் பட்டம் ஊரூருக்கு மாறுபடும்! தைப் பட்டம், சித்திரைப் பட்டம், புரட்டாசிப் பட்டம் கூட உண்டு!
      இதோ: தமிழ்நாடு வேளாண்மை நிறுவனச் சுட்டி
      ------

      தமிழகத்துக்கு இரண்டு பருவ மழை!
      * தென்மேற்குப் பருவமழை = இன்றைய Jun/Jul = வைகாசி/ஆனி என்பது நீங்கள் சொல்வதோடு எனக்கு ஒத்திசைவு
      * வடகிழக்குப் பருவமழை = இன்றைய Oct/Nov = ஐப்பசி/கார்த்திகை; இதை 24 நாட்கள் முன்னே தள்ளினால், புரட்டாசியில் கார் காலம் என இலக்கியங்கள் காட்டுவதும் ஒத்திசைவே! அப்போதைய மழைப் பருவமோ?

      பூமியின் அடிப்படைப் பருவங்கள் = கோடை/குளிர் மாறாது என்று நீங்கள் சொல்வதும் எனக்கு இசைவே!!
      ஆனால் மழைப் பருவங்கள் (monsoon) மாறுகின்றனவே! பருவம் மாறி மழை பொழிவதை இன்றும் பார்க்கிறோமே! சங்க கால மழைப் பருவங்கள் எப்படியோ?

      Also, Tamilnadu receives its major rain in North East Monsoon only!
      It is also pointed as the whole process start in September! Here
      அப்படிப் பார்த்தால், இலக்கியங்கள் காட்டும் கார் காலம் ஒத்துப் போகின்றதே!
      மேலும், நீங்கள் காட்டிய இதர காலங்களின் குழப்பம் ஏதுமின்றி, எல்லாம் ஒரு சேர ஒத்திசைவு ஆகின்றதே!
      (ஆடியில் குளிர் என்னாமல், மார்கழியில் பனி)
      ----------

      ஏன், இத்துணை வாதிடுகின்றேன் என்றால்.....
      இதான் = தொல்காப்பியம் - இளம்பூரணர், மற்றும் இதர ஆசிரியர்கள்

      இவர்கள் அனைவரும், சங்க காலத்தில், காலங்களாகச் சொல்பவை:
      கார் = ஆவணி / புரட்டாசி
      கூதிர் = ஐப்பசி / கார்த்திகை
      முன் பனி = மார்கழி / தை
      பின் பனி = மாசி / பங்குனி
      இள வேனில் = சித்திரை/ வைகாசி
      முது வேனில் = ஆனி / ஆடி/

      பரிபாடல், சிலப்பதிகாரம் என்ற சங்க காலம்/ சங்கம் மருவிய காலம் தொட்டு...இப்படியே இலக்கியங்கள் காட்ட...
      சிறந்த உரையாசிரியர்களான இளம்பூரணர், மணக்குடவர், நச்சினார்க்கினியர் போன்றவர்களும் இப்படியே தத்தம் உரைகளில் காட்ட....

      கருத்தில் வேணும்-ன்னா அவரவர் ஏற்றிச் சொல்லலாம்! ஆனால் காலத்தில் அப்படிச் செய்வார்களா என்பது சந்தேகமே!
      அதனால், தை-01 என்பதற்காக, மொத்த இலக்கியத்தையும் புறந்தள்ள என்னால் முடியவில்லை:)
      ----------

      எனவே தை=இளவேனில் என்பது....
      இளவேனிலில் தான் ஒரு ஆண்டு துவங்க வேண்டும்; அதனால் தை=இளவேனில் என்று "வலிந்து" சொல்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!:))

      ஆண்டு எந்தப் பருவத்தில் வேணுமானாலும் தொடங்கட்டுமே....
      தை முதலே = தமிழ்ப் புத்தாண்டு!
      * தமிழ் ஆண்டின் எண் = வள்ளுவர் ஆண்டு
      * தமிழ் ஆண்டின் மாதம் = தை-01

      நன்றி!:))

      Delete
    12. @வவ்வால், one more....

      The northeast monsoon, which begins in "***September***",
      lasts through the post-monsoon seasons, and only ends in March.
      Tamil Nadu receives most of its annual precipitation in the northeast monsoon season
      http://en.wikipedia.org/wiki/Climate_of_India

      However, the large indentation made by the Bay of Bengal into India's eastern coast means that the flows are humidified before reaching Cape Comorin and rest of Tamil Nadu,
      meaning that the state, and also some parts of Kerala, "experience significant precipitation in the ***post-monsoon*** and winter periods"
      -----------

      Also, "Monsoon Changes" over time & famines...Why sometimes monsoon fails or shifts?
      Indian Ocean Dipole Effect
      http://www.sciencedaily.com/releases/2012/03/120316145802.htm

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. KRS,

      பருவ மழை பொய்ப்பது எல்லாம் நடக்கும், ஆனால் சொல்ல வந்தது நட்சத்திர நகர்வுகள், அது ஒட்டி பருவம் மாறாது என்று சொல்லவே. இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு பருவ மழையே ஏற்படாது என்று கூட சொல்கிறார்கள் அதற்கெல்லாம் காரணம் ,வளிமண்டல மாற்றம்,புவி வெப்பமடைதல், சுற்று சூழல் மாசுப்போன்றவையே அன்றி நட்சத்திரம்,கிரகம் இடம்பெயர்தல் போன்ற பஞ்சாங்க சமாச்சாரம் காரணமில்லைனு சொன்னேன்.

      காற்று வீசுவது ,பருவங்கள் ஏற்பட எல்லாம் காரணம் 23.5 பாகை சாய்ந்து பூமியாது தன்னைத்தானே சுழல்வதால் மட்டுமே.பூமத்திய ரேகைப்பகுதியில் காற்று திசை மாறி வீசும் ,அதுவே பருவக்காற்றாக நம்மை அடைகிறது, காற்றின் திசையில் பூமத்திய ரேகையில் ஏற்படும் மாற்றத்திற்கு கொரியாலிஸ் எபெக்ட் என்று சொல்வார்கள். மேலும் doldrum எனப்படும் நிகழ்வும் பருவக்காற்றுக்கு காரணம்.

      -----
      சித்திரையில் ஆண்டு துவங்குவதும் காலப்பிழையே:

      இங்கே பாருங்க,
      //Year numbering

      The epoch (starting point or first day of the zeroth year) of the current era of Hindu calendar (both solar and lunisolar) is February 18, 3102 BCE in the proleptic Julian calendar or January 23, 3102 BCE in the proleptic Gregorian calendar. According to the Puranas this was the moment when Krishna returned to his eternal abode.[5][6] Both the solar and lunisolar calendars started on this date. After that, each year is labeled by the number of years elapsed since the epoch.//

      http://en.wikipedia.org/wiki/Hindu_calendar

      உங்க ஃபேவரைட் கண்ணபிரானே சாட்சியா வந்து இந்த கலியுக கண்ணபிரான் ரவிஷங்கருக்கு உண்மைய எடுத்து சொல்ல எனக்கு ஹெல்ப்பிட்டார் :-))

      "0" நாள்."0" ஆண்டு என நாட்காட்டி ஆரம்பிக்கும் நாளாக கண்ணன் வைகுந்தம் போன நாளை ஜனவரி 23 இல் வச்சு இருக்காங்க ,அப்போ அடுத்து ஒரு ஆண்டு அடுத்த ஜனவரி 23 இல் முழுமை அடையும், அப்போ ஆண்டு துவக்கம் ஜனவரி 23 இல் தானே இருந்து இருக்க வேண்டும்?

      எனவே கொஞ்சம் காலக்கணக்கீட்டுல பக்கமா வரும் ஜனவரி -14 ,தை ஒன்றை வைத்துக்கொள்ளலாமே.

      இந்து காலண்டர் ஆதி எங்கே துவங்குது என, லூனார், சோலார்,லுனி சொலார்னு நாட்கணிப்பு செய்து கொஞ்சம் கொஞ்சமாக நாட்கள் தள்ளிபோய் சித்திரைக்கு இந்து புத்தாண்டு வந்துவிட்டது, பஞ்சாங்கம் படி ஒரு மாதத்திற்கு 29 அ 30 நாட்களே, எனவே அப்போ அப்போ அதி மாதம் ,குறை மாதம்னு நாட்களை சேர்த்து குறைத்து "அட்ஜஸ்ட்" செய்து பஞ்சாங்கம் பார்த்ததால் ஏற்பட்ட விளைவே. சித்திரைக்கு புத்தாண்டு போனது.

      சித்திரை=01 ஆண்டின் துவக்கம் என்பதே ஒரு பிழை தான்.

      //எனவே தை=இளவேனில் என்பது....
      இளவேனிலில் தான் ஒரு ஆண்டு துவங்க வேண்டும்; அதனால் தை=இளவேனில் என்று "வலிந்து" சொல்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!:))//

      சித்திரையில் வசந்தம் என்று சொல்வதை விடவா வலிந்து சொல்லிவிட்டேன்.

      இன்னொரு எலக்கிய உதாரணம்,

      "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை காஞ்சு போச்சுடா ,இது ஜூன் ஜூலையா பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது..."

      இதயம் படத்திலே இளைய ராஜாவே "ஏப்ரல்..மே எல்லாம் வறண்ட மாதம்னு பாடி இருக்கார், அப்படி இருக்கும் போது சித்திரையில் வசந்தம் வருமா?

      ----

      நெட் தட்டுப்பாட்டில் நானும் சிக்கியதால் தான் கொஞ்ச காலமாக இணையமே வரவில்லை. இப்போ கைப்பேசி வழியா உலாத்துறேன்.நீங்களும் ஜி.பி.ஆர்.எஸ் உள்ள கைப்பேசி அல்ல 3ஜி இருந்தால், மடிக்கணியுடன் இணைத்து இணையம் வர முயற்சிக்கலாம்.

      Delete
  7. 1) 60 வருடச் சுழற்சி தமிழ் நாட்டில் கணியர்களால் (வள்ளுவர்கள்) தோற்றுவிக்கப்பட்டதென்றும், பின்னர் வைதீக அடாவடியால் 60 கற்பிதங்கள் தோன்றி தமிழ் அகத்தினைக் கெடுத்து விட்டன என்று ஆசீவக அறிஞர் பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் கூறுவர்.

    2) ஆசீவகக் கணியர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் தொடங்கிய ஊழிகளைப் பட்டியலிட்டிருக்கின்றனர். (அறிஞர் குணாவின் வள்ளுவத்தின் வீழ்ச்சி படிக்க வேண்டிய நூல்)

    3) தைப் புத்தாண்டில், இரண்டு விதயங்கள் கவனிக்க வேண்டும். தைமுதல்நாள் புத்தாண்டு என்பது வேறு, திருவள்ளுவர் ஆண்டாக அதைக் கணக்கிடுவது வேறு.
    பிந்தியதில் துல்லியம் இல்லையோ என்று அறிஞர்களின் கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. இராம.கி ஐயாவின் சிலம்பின் கால ஆராய்ச்சியைப் பார்க்கும் போதும், தமிழண்ணலின் தொல்காப்பிய காலம் ஆய்வினைப் பார்க்கும்போதும் குணாவின் தொல்காப்பிய கால ஆய்வைப் பார்க்கும்போதும், திருவள்ளுவரின் பிறப்பு மறைமலையடிகளார் குறித்த காலத்தையும் சற்று முந்திச் செல்லக் கூடுமோ என்ற ஐயம் வருகிறது.

    ஆகையால் தமிழ்ப் புத்தாண்டு என்பது தோன்றி நிலைக்கவேண்டுமானால், நீங்கள் கூறுவது போல "//நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முன்னீடுகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும். //.

    நம்மிடம் நல்ல தலைவர்கள் இல்லை. தை ஆக இருப்பினும், சித்திரை ஆக இருப்பினும், அது திராவிடச் சகதிகளால் தோற்றப்படவேண்டாம். திராவிடம் செய்யும் எதுவும் ஒருப்படாது. ஆகையால் தமிழ் ஆர்வலர்கள் நல்ல தமிழியத்தை உருவாக்க உழைப்பது மட்டுமே, திராவிடத்தில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா...இளங்கோவன் ஐயா, வணக்கம்! நலமா இருக்கீயளா?
      இராம கி ஐயா, புத்தக விழாவில் பார்த்தது....

      //ஆசீவக அறிஞர் பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் கூறுவர்//

      விழாவில் பார்த்தோமே, பேராசிரியர், அவரு தானே?

      அந்த ஆண்டு=ஆசிவக ஆண்டுகளா? 60 ஆண்டுப் பெயர்கள் - அறியத் தருவீர்களா?

      //தைமுதல்நாள் புத்தாண்டு என்பது வேறு, திருவள்ளுவர் ஆண்டாக அதைக் கணக்கிடுவது வேறு//

      உண்மையே! நானும் இதைப் பதிவில் சொல்லியுள்ளேன்!
      திருவள்ளுவர் ஆண்டு - ஆண்டின் எண்ணுக்கு மட்டுமே!

      //நம்மிடம் நல்ல தலைவர்கள் இல்லை. தை ஆக இருப்பினும், சித்திரை ஆக இருப்பினும்,.... தமிழ் ஆர்வலர்கள் நல்ல தமிழியத்தை உருவாக்க உழைப்பது மட்டுமே,//

      மிகவும் சரி!

      Delete
  8. ரொம்ப நாளா (தமிழ் புத்தாண்டு தினம் அரசியலாகாத வரை) தை மாதத்தில் தான் தமிழ் புது வருடம் பிறக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... :-) பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என்று நானா ஒரு கற்பனையில் இருந்து இருக்கேன்... :-)
    hmmm...agreeing with the opinion that tamizh new year can be secular...

    ReplyDelete
    Replies
    1. //hmmm...agreeing with the opinion that tamizh new year can be secular//

      dank u radha!
      I know u r a good boy!:)

      Delete
  9. //நலமா-ண்ணா?
    ஒன்னுமே பேசக் காணோம்?:)//

    ஹை அது ஐபேசி வழியாகப் போட்ட பின்னூட்டம், அதனால் தான் ஆங்கிலம்.

    தவிர நறுக்குத் தெறித்தார் போல் எழுதி இருக்கியள் அதுக்கும் மேல என்னச் சொல்றது.
    வட்டத்தில் முனை இருக்கும் என்று நானும் நம்புவதில்லை :)

    ReplyDelete
  10. சரி ஒப்புக்கொள்வோம். சித்திரை முதல் நாள் "தமிழ்" புத்தாண்டு அல்ல. ஆனால் இந்துப் புத்தாண்டு என்றும் சொல்ல முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும் இதை புத்தாண்டாக ஏற்றுக் கொள்வதில்லை. "தமிழ் இந்துப் புத்தாண்டு" என்று கூறலாம். இன்னும் குறிப்பாக "தமிழ் இந்துக்களில் சிலர் கொண்டாடும் புத்தாண்டு" என்று சொல்லலாம். எப்படியாயினும், ஒரு மதம் சார்ந்த விழாவை ஒரு அரசாணை மூலம் ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி மாற்றலாம்? வேண்டுமானால் கலைஞர் "இனிமேல் சித்திரை முதல் நாள் தமிழ் இந்துப் புத்தாண்டு என அழைக்கப்படும். தை முதல் நாள் அனைத்து தமிழர் மதச்சார்பற்ற புத்தாண்டு நாள்" என சொல்லி இருக்கலாம்.

    சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடும் அனைவருக்கும் "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" மற்றவர்களுக்கு "இனிய லீவு நாள் வாழ்த்துக்கள்".

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேங்கடேசன் - ஒப்புக் கொண்டமைக்கு & மொழியில் மதம் சாராமைக்கு:)

      //தமிழ் இந்துப் புத்தாண்டு" என்று கூறலாம்//

      மொழிப் பெயரை - மதப் பண்டிகையோடு இணைக்க வேணாம்!:)

      யுகாதி-ன்னா = ஆந்திரம், கன்னடம் ரெண்டுத்தலயும் உண்டு!
      கன்னட யுகாதி, தெலுங்கு யுகாதி-ன்னா சொல்லுறாங்க?:))

      யுகாதி ஹப்பட சுபஷ்யகலு ன்னு சொன்னா = கன்னட யுகாதி
      நூதன சம்வத்சர சுபகன்க்ஷாலு ன்னு சொன்னா = தெலுங்கு யுகாதி
      அஷ்டே:)

      Delete
    2. "தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்துக்கள்" என்ற குழுவை "தமிழ் இந்து" என அழைப்பதில் என்ன தவறு? Syrian christian , Russian orthodox church எனபது போல. அப்படியாயின் "தமிழக மீனவர்கள்", "தமிழக விஞ்ஞானிகள்" என்றெல்லாம் எழுதினால் தமிழை ஒரு தொழிலோடு இணைக்கக் கூடாது என்பீர்களா? இது உங்களுக்கே ஓவரா தெரியல?

      Delete
    3. ஓவராத் தெரியலீங்க!:)))

      -------

      தமிழ் இந்துக்கள் ன்னு சொல்லலாம், தப்பே இல்லை!
      தமிழ் இந்துக்களின் பழக்க வழக்கங்கள் ன்னும் எழுதலாம், தப்பே இல்லை!

      ஆனா...பண்பாட்டு அடையாளப் பெயர்களில் மட்டும் கொஞ்சம் விழிப்பா இருக்கணும்!
      Indian Christians is ok!
      But can we write Indian Christian Army? - meaning all christians in indian army! Nopes!

      Same here!
      தமிழ் இந்துக்கள் ஓக்கே! = தமிழகத்தில் வாழும் இந்துக்கள்!
      ஆனா தமிழ்-இந்துப் புத்தாண்டு ன்னு எழுதினால், அந்த ருத்ரோத்காரிப் புத்தாண்டில் தமிழ்-ங்கிற அடைமொழி வந்து ஒட்டிக்கும்! மரபியல் கூறுகளின் பெயர்களில் சற்று விழிப்பு தேவை!

      Delete
  11. இந்து என்று ஒரு மதமே இல்லை எந்த சமஸ்கிருத புத்தகத்திலும், வேதத்திலும், வேதத்தின் அந்தத்திலும், புராணத்திலும் என்ற கருத்தை நீங்கள் சொல்லியிருந்தால் . . . நன்றாகவே இருந்திருக்கும் ! அப்புறம் எப்படி இந்து புத்தாண்டு சாத்தியம் என்று நானும் கேட்டிருப்பேனாக்கும் ! ;-)

    ReplyDelete
  12. நாட்களின் தொடக்கம் என்பது ஒரு வசதிப்புள்ளி மட்டுமே ! வட்ட(ப்பாதையில்)த்தில் ஏது தொடக்கப்புள்ளி ? லூசுல வுடுங்க . . . லீவு நாள் மாறாம இருந்தா சரி !! சம்பள நாள் தாண்டா மாதத்தின் முதல்நாள் .. அதனால் வருடமும் சனவரி, பிப்புரவரி.. மார்ச்சுவரி . . . அடச்சே ... மார்ச்சு என்கிறான் இங்கிலீசு விரும்பும் டமிள் நண்பன் !

    ReplyDelete
    Replies
    1. நலமா அண்ணாச்சி?
      ரொம்ப நாள் கழிச்சி, இது போல பதிவு போட்டா ஒரு வசதி = பழைய நண்பர்களை எல்லாம் பாக்க முடியுது:))

      Delete
  13. கே.ஆர்.எஸ்.. சரித்திர பூர்வ ஆதாரமாகப் பார்க்கையில் இந்த ஆண்டுத் தொடக்கம் எல்லாம் சமீபகாலத்தியதுதான். வேண்டுமானால் ஒரு 200 வருடத்துக்கு முன்னால் தொடங்கப்பட்டிருக்கலாம். இது கூட என் யூகம்தான். நம் பல்லவர்களும் சோழர்களும், பாண்டியர்களும் அவரவர்கள் ஆட்சிக்கு வந்த ஆண்டைத்தான் முதலாண்டுத் தொடக்கமாக கல்வெட்டில் காட்டியிருக்கிறார்கள். சக ஆண்டு முறையை கிருஷ்ணா நதியைத் தாண்டி ஆண்ட மன்னர்கள் கடைபிடித்தார்கள். சோழ பாண்டியர்கள் போன பிறகு விஜயநகர ராஜாக்கள் மறுபடியும் சக ஆண்டு நடைமுறைப்படுத்தினார்கள். அது இன்றும் மத்திய அரசு பிரகாரம் நீடிக்கிறது.. அது சரி, முந்தைய நந்தன வருடம் ஒன்றில் நடந்த ’இண்ட்ரெஸ்ட் மேட்டர்’ ஒன்று நாளை வல்லமையில் பதிவாக இருக்கிறது. கட்டாயம் படிக்கவும்.. உங்களுக்குப் பிடித்தமானதுதான். ‘புது’வருட வாச்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. //வேண்டுமானால் ஒரு 200 வருடத்துக்கு முன்னால் தொடங்கப்பட்டிருக்கலாம். நம் பல்லவர்களும் சோழர்களும், பாண்டியர்களும் அவரவர்கள் ஆட்சிக்கு வந்த ஆண்டைத்தான் முதலாண்டுத் தொடக்கமாக கல்வெட்டில் காட்டியிருக்கிறார்கள்//

      நன்றி திவாகர் சார், நீங்க சமயத் துறையில் அறிஞராக இருப்பினும், சமயம் கடந்து பேசுவதற்கு!
      Thanks for the positive approach & feedback!

      //வல்லமையில் பதிவாக இருக்கிறது///

      Sure:)

      Delete
    2. சங்கதப் பெயர்கொண்ட ஆண்டு ஒவ்வொன்றுக்கும் பலனைக் கூறும் பாடலைச் செய்த இடைக்காடர் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவரா ?

      Delete
    3. //சங்கதப் பெயர்கொண்ட ஆண்டு ஒவ்வொன்றுக்கும் பலனைக் கூறும்//

      இது இடைக்காடரா?
      இடையில் வந்து காடரா?
      :))

      சித்தர்கள் பெயரில், பல பின்னாள் பாடல்கள் எல்லாம் சுத்திக்கிட்டு இருக்கு!
      சங்கத் தமிழ் ஒளவையே, "விக்னேஸ்வரப் பெருமான்" மீது வெண்பா பாடினாள் -ன்னு சொல்றவங்களாச்சே நாம தான்!:)
      ஒளவையார் படம் பாருங்க; திருக்குறளையே அரங்கேற்றிய விநாயக ஒளவை:) சிரிப்புச் சிரிப்பா வரும்!!

      Delete
  14. ஆங்கில புத்தாண்டின் அடிப்படை, நாம் சம்பளம் வாங்கும் நாள் எல்லாத்துக்கும் அடிப்படை ஏசுகிறிஸ்துவின் பிறப்பு. நல்லவேளை ஆங்கிலத்தில் செக்யூலர் வருடபிறப்பு வேண்டும் என யாரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் கிமு, கிபி (இதன் விரிவாக்கம் என்ன?) மாத்தலை.அங்கே எல்லாம் இந்துக்களும், முஸ்லிம்களும் உங்க காலண்டரில் எங்களுக்கும் பங்கு குடு என ஏனோ கேட்பதில்லை:-). காரணம் அது பாரம்பரியத்தை மதிக்கும் நாடு:-).

    நாம் தான் செக்யூலர் வாதிகள் ஆச்சே?அதனால் இந்த விஷயத்தில் நாம் தான் உலகுக்கு வழிகாட்டி. நம் இஷ்டத்துக்கு காலண்டரை மாற்றிக்கொள்வோம். தமிழ் வருட பிறப்பு, வருஷ பிறப்பு, இந்து புத்தாண்டு என மாற்றி, மாற்றி அழைத்து மகிழ்வோம்:-).

    ReplyDelete
    Replies
    1. //நாம் தான் செக்யூலர் வாதிகள் ஆச்சே?//

      செல்வன் அண்ணா...
      "நாம்" ன்னு நைசா ஒங்களையும் சேர்க்கப் பார்க்கறீங்களா? We all know u r not secular :))

      //ஆங்கில புத்தாண்டின் அடிப்படை, நாம் சம்பளம் வாங்கும் நாள் எல்லாத்துக்கும் அடிப்படை ஏசுகிறிஸ்துவின் பிறப்பு//
      //கிமு, கிபி (இதன் விரிவாக்கம் என்ன?) மாத்தலை//

      தோடா...
      It is totally now Secular
      CE - Common Era
      BCE - Before Common Era
      BC/AD எல்லாம் எப்பவோ போய் விட்டது!

      மேலும்...
      Jan-01 is NOT Christ's Bday!
      Itz only a convention!

      Same thing applies here too!
      Tamizh aRignars are not saying Thai-01 is Valluvar's Bday!
      They just notate Thai-01 as starting date
      & Valluvar's approx year as starting year! Itz just Notation!

      As simple as that:)

      Delete
  15. மிகவும் உழைத்து கட்டுரையை எழுதியிருக்கீங்க ரவி. ஆனல், இதென்னமோ இந்த சீசன்ல வழக்கமா வர்ற... வந்துபோற... ஒரு கட்டுரையாத்தான் எனக்குப் படுது. அவரவர் நம்பிக்கைப்படி அவரவர் கொண்டாடுகின்றனர். இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. மேலும், எப்படியும் இரு நாட்களுமே லீவு தினங்கள் தான்! அதிலும் பிரச்சினையில்லை.

    இதனாலெல்லாம் மாதம் மும்மாரி பெய்துவிடப் போவதில்லை என்பது என் கருத்து. மற்றபடி 2000 பிறந்தபோது தலாய்லாமா சொன்னதுபோல, 'இது இன்னும் ஒரு நாளே! இன்றும் சூரியன் எப்பவும் போலத்தான் உதிப்பான். பெரிதாய்க் கருத இதில் ஏதுமில்லை' என்பதே என் கருத்தும்.

    வாழ்க உங்கள் பணி!

    ReplyDelete
    Replies
    1. //ஆனல், இதென்னமோ இந்த சீசன்ல வழக்கமா வர்ற... வந்துபோற... ஒரு கட்டுரையாத்தான் எனக்குப் படுது//

      நன்றி SK ஐயா!
      சீசனுக்கு சீசன், இப்படிப் போட்டாத் தான், மக்கள் கொஞ்சமாச்சும் உணர்வாங்க!:)

      //இதனாலெல்லாம் மாதம் மும்மாரி பெய்துவிடப் போவதில்லை என்பது என் கருத்து//
      //இது இன்னும் ஒரு நாளே! இன்றும் சூரியன் எப்பவும் போலத்தான் உதிப்பான்//

      கந்த சஷ்டி அன்னிக்கி பூசை பண்ணலீன்னா மட்டும் மாதம் மும்மாரி நின்னுடப் போகுதா என்ன:)
      ஆனா அது ஒரு "உணர்வு"! முருக "உணர்வு"
      அதே போல் இது = தமிழ் "உணர்வு"!

      Yes, Same Sun in the morning! But itz a Tamizh Heritage Day! Thatz it!
      இந்திய சுதந்திர தினத்தை ஆகஸ்ட்-31 இல் வச்சாக் கூட, சூரியன் உதிப்பான்! ஆனா வைப்போமா? அதே அதே!:)

      Delete
  16. அன்பின் கேயாரெஸ் -நீண்டதொரு கட்டுரை - என்று புத்தாண்டு எனவினவினால் - தமிழ்ப் புத்தாண்டே இல்லை என முடித்திருப்பது .......ம்ம்ம்ம்ம்ம் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. சீனா சார், நலமா?
      புத்தாண்டே இல்லை-ன்னு சொல்லலை!:)
      புத்தாண்டுக்கான இலக்கியக் குறிப்பே இல்லை-ன்னு தான் சொன்னேன்!

      மத்தபடி, இது ஒரு பின்னாள் நடைமுறை! Std Notation!
      தமிழ்ப் புத்தாண்டு-ன்னா = தமிழ் முறையை ஒட்டியே அமையணும்! மதத்தை ஒட்டி அல்ல!
      தையே = தமிழ்ப் புத்தாண்டு நாள்!

      உங்களுக்கும் இந்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!:)

      Delete
  17. thamizhargalukku vandha sodhanai, oru inaththai eppadiyellam sidhaikkindranar, oru inaththirkku puththaandaga irukkindradha, illayaa enbadhai oru inaththai saarndhavargal kooravendume ozhiva arasiyal moodargalum muttaalgalum edukkum mudivaaga irukka koodadhu soranai ulla thamzhan sindhippaan nandri

    ReplyDelete
    Replies
    1. இதைக் கொஞ்சமாச்சும் யோசிச்சிப் பார்க்கணும்-ங்கிறத்துக்கு தான் இந்தக் கட்டுரை:)
      இந்தக் கட்டுரையாலெல்லாம் Over Nightஇல் தமிழ்ப் புத்தாண்டு மாறி விடாது!:)
      ஆனா ரெண்டாயிரம் பேரு ஒரே ராத்திரியில் படிச்சி இருக்காக!:) யோசிப்பாய்ங்க!:)
      ஒரு மொழியில், நாம மட்டும் மதத்தைப் புகுத்தலாமா?-ன்னு யோசிப்பாய்ங்க:))

      Delete
  18. நபநர.(நல்ல பதிவு,நன்றி ரவி.)

    வவ்வால் சரியான விலகிப் போனவற்றைச் சுட்டியிருக்கிறார்...

    பார்க்க..

    ReplyDelete
    Replies
    1. அறிவன்,

      நன்றி, கேஆர் எஸ் உம் சித்திரை தமிழ் புத்தாண்டு அல்லனு தான் சொல்லுகிறார், அவரும் நம்ம பக்கமே, ஆனால் தமிழுக்கு புத்தாண்டு இல்லையோனு ஒரு கேள்விக்குறிய போடுறார்ல அதுக்கு தான் நான் தம்முக்கட்டி பதில சொல்லிக்கிட்டு இருக்கேன். மற்றபடி அவரு நம்மளை விட தமிழ் புலி, நான் அப்போ அப்போ தமிழ் பெருங்குடிமகனா அவதாரம் எடுப்பேன் :-))

      Delete
  19. அப்புறம் தமிழ்ப் புத்தாண்டு என்ற ஒண்ணே கிடையாதுன்னு தலைப்பை சுட்டிக் குழப்பத்துடன் வச்சுருக்கீங்க...மாத்துங்க தயவு செய்து..

    இன்றைய தினமணி பழ.கருப்பையா கட்டுரையையும் பாருங்க..பாவம் அவருக்கென்ன பயமோ தெரியல..
    :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அறிவன் சார், நலமா?
      ஆமாம்! வவ்வால் இன்னும் சில நல்ல கோணங்களை எடுத்துக் காட்டியுள்ளார்!

      //தமிழ்ப் புத்தாண்டு என்ற ஒண்ணே கிடையாது ன்னு தலைப்பு//

      :))))
      அப்படி வச்சாத் தான், என்னமோ ஏதோ-ன்னு பதறி அடிச்சிக்கிட்டுப் படிப்பாய்ங்க!:)

      "தையே தமிழ்ப் புத்தாண்டு" -ன்னு தலைப்பு வச்சா...ஹூம் வழக்கமான கேசு ன்னு போயிக்கிட்டே இருப்பாங்க-ல்ல? அதான்!:))

      Delete
  20. தெளிவான பதிவு.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. சித்திரை திருநாள் வாழ்த்துகள் ! ட்விட்டருக்கு ஏன் வருவதில்லை ?! ... பதிவையாவது ட்விட்டரில் பகிரலாமே :-)

    ReplyDelete
  22. தெளிவான பதிவு ,பதில்கள் .மிக சிறப்பான பணி .நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. @nandha_ra, @sudharshan - நன்றி!
      @தமிழ் திரு - very sorry! முந்தைய பின்னூட்டத்தில் ஏன் காணாமப் போனேன் ன்னு சொல்லியிருக்கேன் பாருங்க:)

      Delete
  23. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு இப்போ. அப்புறமா மறுபடியும் படித்துவிட்டு சொல்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்! நலமா?
      குழப்பம் எல்லாம் ஒன்னும் இல்ல! உங்களுக்காகச் சுருக்கமா...


      பதிவின் சாரம்:
      --------------
      1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
      2. சித்திரை / ருத்ரோத்காரி = என்பது மதம் மூலமாகத் தமிழில் புகுத்திப் பரவியது!
      3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!


      They devised a Notation for Tamizh, in this context...
      * Year = Use வள்ளுவர் ஆண்டு as Tamizh Numbering Sequence!
      * Month = Use தை, which is the most famous month in tamizh literature!

      You can still celebrate ருத்ரோத்காரி etc & do poojas at home!
      But pl DONT call it as a "Tamizh" Year!
      You are free to call it Hindu Year or whatever!


      இப்போ விளங்கும்-ன்னு நினைக்கிறேன்! நன்றி!:)

      Delete
  24. எனக்கென்னமோ வைகாசி முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுன்னு தோணுது! ;)

    ReplyDelete
    Replies
    1. பலராமா...
      வைகாசி அனுஷம் = வள்ளுவர் Birthday ன்னு கூட சிலரு கிளப்பி விட்டுருக்காங்கப்பா:))

      ஆனா உண்மையில், வைகாசி அனுஷம் = ஸ்ரீ காஞ்சிப் பெரியவாள் (பழைய பெரியவாள்) Birthday:))

      Delete
  25. மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க,
    நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!//

    இவர்கள் எல்லாரும் ஆத்திகர்கள், இவர்களே சொல்லிவிட்டார்கள் பாருங்கள் என்றொரு வாதம் வருகிறது. இதில் ஒரு உள்குத்து இருக்கிறது. இதை தெரிந்த திராவிட நாத்திகர்களும் மறைத்தே பேசுகிறார்கள்.

    இவர்கள் சைவ சமயத்தினர். அப்போது சைவமும் வைணவமும் முட்டிக் கொண்டு இருந்த காலம்.இந்த அறுபது வருஷ பேரு விஷ்ணு கதையை ஒட்டி வருவதால் அதை மாற்றிவிடணும் என்று கிளம்பிய சைவர்கள் இவர்கள். நாத்திகர்களுக்கு இந்த பேச்சு வசதியாய் இருப்பதால் பாருங்க ஆத்திகர்களே சொல்லிவிட்டார்கள் என்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    எல்லா வரலாற்றையும் மாற்றணும் என்றால் அநேகமாக எவ்வளவு காலம் பின்னோக்கி போகணும் என்பதை தனிமனிதர்கள் தனித் தனியாக முடிவு செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கு முடிவே கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. :))
      இதுக்கு இப்படி ஒரு கோணமா? பெருமாளே!:)

      //இவர்கள் சைவ சமயத்தினர்//

      தமிழ் என்ற போர்வை போர்த்திக் கொண்டு, சைவ அறிஞர்கள் சிலரின் ஓரவஞ்சனை....சில இலக்கிய இடங்களில் இருக்குத் தான்! மறுக்கலை! சைவத் தமிழ் அறிஞர்கள் சமணத்தைத் தாழ்த்தாத தாழ்வா?:((

      ஆனால்....

      மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார்,
      - இவர்களையெல்லாம் "சைவ" வளையத்துக்குள் அடைத்து விட முடியாது நண்பரே! மன்னிக்க!

      அதுவும் மென்மையே உருவான திரு.வி.க! பழுத்த சைவர் என்றாலும், சமணம் தமிழுக்கு செய்த தொண்டை விரிவாக எழுதியவர்!
      திருமாலும், முருகனைப் போலப் பண்டைத் தமிழ்க் கடவுளே என்று துணிந்து சொன்னவர்!

      எனவே மன்னிக்க!

      Delete
  26. எல்லே இளங்கிளியே, internet கிடைக்கிலயோ?

    அருமையான பதிவு சொல்லமாட்டேன்,ஏன்னா உம்ம பழைய benchmark அளவுக்கு இந்த கட்டுரைக்கு நீர் உழைக்கவில்லை,ஆனா எளிமையான பதிவு.எல்லாந்தெரிஞ்ச கொத்தனார்களுக்கு இந்த பதிவு பத்தாது,ஆனா அரைகுறை 'அறிவாளிகளுக்கு' இது பதில் சொல்லும்.

    உம்ம 'தனிபட்ட துன்பத்தையும்,நீர் இப்போது ஏற்றிருக்கும் பணியையும்' ஒட்டஞ்சத்திரத்துக்கும் உடுமலைப்பேட்டைக்கும் நடுவுல இருக்கிறவன் பாத்துக்கனும்.

    சொல்லிக்காம இப்படி காணாம போய்ட்டீர்.உம்ம குரல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கு.

    மதனகாமராசன் கதை படித்தாகிவிட்டதா? உம்ம,ட்விட்டர் முகப்பை எட்டிப்பார்த்து பலமுறை ஏமாந்துபோறேன்.அடிக்கடி வாருமைய்யா!

    அன்புடன்

    ரகு

    ReplyDelete
    Replies
    1. //உம்ம,ட்விட்டர் முகப்பை எட்டிப்பார்த்து பலமுறை ஏமாந்துபோறேன்//

      I am very sorry Ragu, for having disappointed u!
      Once I complete here, will come back to US & then twitter also!

      //உம்ம 'தனிபட்ட துன்பத்தையும்,நீர் இப்போது ஏற்றிருக்கும் பணியையும்' ஒட்டஞ்சத்திரத்துக்கும் உடுமலைப்பேட்டைக்கும் நடுவுல இருக்கிறவன் பாத்துக்கனும்//

      :)
      பழனிப் பதிவாழ் பாலகுமாரா!
      முருகா! மிக்க நன்றி!

      Delete
  27. //கந்த சஷ்டி அன்னிக்கி பூசை பண்ணலீன்னா மட்டும் மாதம் மும்மாரி நின்னுடப் போகுதா என்ன:)//

    ரொம்பச் சரியாச் சொன்னீங்க!
    மும்மாரி பெய்யுதோ பெய்யலியோ, மனசுல ஒரு நிம்மதி பெய்யுது!

    அதே போலத்தான் இதுவும்!

    அவரவர் நம்பிக்கையின்படி விட்டுடலாம்!

    அப்புறம் இன்னொண்ணு!

    தமிழ்ப் புத்தாண்டு என்பதை மொழிவாரியாகப் புரிந்து கொள்ளமல், தமிழகம் என்னும் ஒரு நாட்டில் இருப்பவர் கொண்டாடும் ஒரு நாள் எனப் புரிந்தால், இந்தக் குழப்பம் இராது.

    ஒன்றுபட்ட பாரத தேசத்தில், பல்வேறு மாநிலங்களில் ஏறக்குறைய இதே சித்திரையைத்தான் புத்தாண்டு எனச் சொல்லி, அவரவர் பெயரில் அதை வரவேற்கிறார்கள், பைசாகி, யுகாதி, விஷு என. இங்கே அதன் பெயர் தமிழ்ப் புத்தாண்டு அல்ல! சித்திரைத் திருநாள்!

    இதனை ஒரு மத சம்பந்தப்பட்ட விழாவாகத் திரிக்காமல், கலாச்சாரத் திருவிழாவாகக் கொண்டால், வசந்தத்தை வரவேற்பதில் எந்தத் தடையும் இராது.

    இன்று எனக்கு ஒரு இஸ்லாமிய அன்பரிடமிருந்து வாழ்த்து வந்தது.
    இன்று மாலை பாபா ஆலயத்தில் நிகழும் ஒரு நிகழ்ச்சியில், சீக்கியர், இஸ்லாமியர் இந்துக்கள் என அனைவருமே கலந்து கொள்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //இங்கே அதன் பெயர் தமிழ்ப் புத்தாண்டு அல்ல! சித்திரைத் திருநாள்//

      நன்றி SK ஐயா. இதைச் சொன்னமைக்கு!

      //இன்று மாலை பாபா ஆலயத்தில் நிகழும் ஒரு நிகழ்ச்சியில், சீக்கியர், இஸ்லாமியர் இந்துக்கள் என அனைவருமே கலந்து கொள்கிறார்கள்//

      நானும் கூடக் கலந்து கொள்வேன்:)
      கலந்து கொள்வதில் எந்தத் தப்புமில்லை!
      இதே சீக்கியர்களிடம் போய், தை-01 = சீக்கியப் புத்தாண்டு ன்னு சொல்லிப் பாருங்க; அப்பறம் தெரியும்:)

      பஞ்சாப் மாநிலத்தில் வாழம் தமிழர்கள், தை-01 க்கு எங்கள் புத்தாண்டு-ன்னு சொன்னா, உடனே சீக்கியர்கள் வாழ்த்து தெரிவிப்பாங்க!
      ஆனா, நாங்க சீக்கிய மாநிலத்தில் ரொம்ப நாள் வாழ்வதால், தை-01, சீக்கியப் புத்தாண்டு-ன்னு சொல்லவே எங்களுக்குப் புடிச்சிருக்கு-ன்னு சொன்னா...அப்பறம் தெரியும்:))

      //அவரவர் நம்பிக்கையின்படி விட்டுடலாம்!//

      அவரவர் நம்பிக்கை அவரவர் அளவில் இருக்கும் வரை பிரச்சனையில்லை! அடுத்தவர் மேலும் ஏற்றும் போது தான் பிரச்சனை!

      இந்துக்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்!
      இந்துப் புத்தாண்டு-ன்னு சொல்லிக்கட்டும்! ஆனா "எல்லாச் சமயத்துக்கும் பொதுவான தமிழின்" மேல், இந்து நம்பிக்கையை மட்டும் ஏற்றி,
      ருத்ரோத்காரி ஆண்டு = "தமிழ்ப் புது வருஷம்" ன்னு பொதுமைப்படுத்துவது தவறு அல்லவா!

      This issue is very simple! But Common Sense is not that Common!

      Delete
  28. புத்தாண்டு3:41 PM, April 13, 2012

    சங்ககாலத்திலிருந்தே புத்தாண்டு என்ற ஒரு கான்சப்ட் இல்லாத பட்சத்தில், இப்போது திடீரென தையில் எதற்கு? ஏற்கனவே "தமிழ்ப்புத்தாண்டு" என்று கொண்டாடப்பட்டுவரும் ஒன்றின் பெயரைக் கவர்வதை விட, தையில் கொண்டாடப்போகும் இந்த புதுப்புத்தாண்டை, "அறிவியல் தமிழ்ப்புத்தாண்டு" என்று சொல்வதே சாலச்சிறந்ததாகும்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பரு அனானி! நீங்க யாரு-ன்னும் லேசாத் தெரியுது ஓய்:)

      //சங்ககாலத்திலிருந்தே புத்தாண்டு என்ற ஒரு கான்சப்ட் இல்லாத பட்சத்தில், இப்போது திடீரென தையில் எதற்கு?//

      * சங்க காலத்திலிருந்தே இட்லி குக்குர் இல்லாத பட்சத்தில், இப்போது திடீரென இட்லி குக்கர் எதற்கு? அவிக்கும் பானையே பயன்படுத்துலாமே:)
      * சங்ககாலத்திலிருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒரு கான்சப்ட் இல்லாத பட்சத்தில், இப்போது அந்த வாழ்த்து எதற்கு?:)))
      * சங்க காலத்திலிருந்தே விருத்தம் என்னும் பா இல்லாத பட்சத்தில், திருத்தக்கதேவர்/ கம்பனின் விருத்தப்பா எதற்கு? :)

      //ஏற்கனவே "தமிழ்ப்புத்தாண்டு" என்று கொண்டாடப்பட்டுவரும் ஒன்றின் பெயரைக் கவர்வதை விட//

      இப்போ புரியுது ஓய் உம்ம கேள்வியும், எள்ளலும்:)

      Delete
    2. அனானி ஐயா
      சங்க காலத்தில் இருந்து இன்று வரைக்கும் பல மாற்றங்கள் நடந்துக்கிட்டுத் தான் இருக்கு! யாரும் சங்க காலத்திலேயே இருக்கச் சொல்லல:)
      ஆனா, மாற்றங்கள், அடிப்படையையே கெடுக்காம இருந்தாத் தேவலை!

      "லை"-ன்னு இன்னிக்கி எழுதறோம்! முன்பு, ல்-க்கு மேலே கொம்பு போட்டுக்கிட்டு இருந்தோம்! ஆக, மாற்றங்கள் okay தான்!
      ஆனா, "லை"-ன்னு எதுக்கு புதுசா எழுதறேள்? அதான் लै இருக்கே! அதையே பயன்படுத்துங்கோ ன்னா பயன்படுத்தீற முடியாது!

      மாற்றங்கள் - வெளியில் இருந்து திணிக்க முடியாது!
      தமிழில்,ஆண்டுப் பெயர் சங்க காலத்தில் இல்லை!அதுக்காக, "ருத்ரோத்காரி/ ரக்தாக்ஷீ" ன்னு நடுவுல திணிச்ச பேரையே ஆயுசுக்கும் சுமந்துக்கிட்டு திரியுங்களேன்-ன்னு நீங்க சொல்றீக! அது முடியாது ஓய்!:)
      --------

      For all people, Common Era (CE) is the universal standard!
      But to notate tamizh related stuff, there is a new std! Year= Valluvar Era! Month = Thai-01! Thatz all!

      //தையில் கொண்டாடப்போகும் இந்த புதுப்புத்தாண்டை, "அறிவியல் தமிழ்ப்புத்தாண்டு" என்று சொல்வதே சாலச்சிறந்ததாகும்//

      இதுக்குப் பேரு தான் "பா**** குசும்பு" :))
      Sorry to say that, but thatz what it is!

      தமிழ்ப் புத்தாண்டு = தமிழர்களுடையது! அதுக்குப் புதுப்பேரு தேவையில்லை! தமிழ்ப்பேரே போதும்!
      நீங்க, "ருத்ரோத்காரி"-ன்னு திணிச்ச பேரைக் காலி பண்ணுங்க! அது போதும்:)

      "நாங்க ஒங்க சொத்தை ஏற்கனவே அபகரிச்சிட்டோம்! ஸோ வாட்? நீங்க வேற இடம் காசு குடுத்து வாங்கிக்கோங்களேன் ன்னு சொல்றாரு-ப்பா அனானி! என்னா பெரிய மனசு!:))

      Delete
  29. மொழியும் சமயமும் ஒரு சமுகத்தின் ஒரு கூறாக இருக்கும் போது அவற்றை எப்படி பிரிக்கமுடியும்? மொழி என்பது வெறும் சமயசார்பற்றவர்களைக் கொண்டு உருவாக வில்லை என்ற உண்மையை அறிந்துகொள்ளுங்கள். அதனால் சமயத்திடமிருந்து பிரிப்பதற்குப் பதில் அவரவர் நம்பிக்கையை மொழியினுள் புகுத்த வேண்டும். சித்திரையை இந்து முறைப்படியல்லாமல் அவரவர் முறைப்படி கொண்டாட வேண்டியதுதானே. தையில் வைத்தால் மட்டும் கிருத்தவர்களும் இசுலாமியரும் கொண்டாடுவார்களா யோசிக்க வேண்டும்? தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாடும் இம்மதத்தினரை பட்டியலிடமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. //மொழியும் சமயமும் ஒரு சமுகத்தின் ஒரு கூறாக இருக்கும் போது அவற்றை எப்படி பிரிக்கமுடியும்?//

      சமயம் = மொழியின் ஒரு "கூறு" தான்!
      "கூறே" மொழியாகி விடாது!
      "ஒரு கூறின் பெயரே" மொத்த மொழிக்கும் வழங்கவும் முடியாது!

      12 கை உள்ளவன் முருகன் ன்னு ஒரு புராணக் கதை இருப்பதால், 12 உயிரெழுத்தை, 12 முருக எழுத்து ன்னு சொல்லீருவீங்களா? நல்லாவா இருக்கும்? :(

      //தையில் வைத்தால் மட்டும் கிருத்தவர்களும் இசுலாமியரும் கொண்டாடுவார்களா யோசிக்க வேண்டும்?//

      உம்ம்ம்ம்....இவ்ளோ தானா உங்க டக்கு?:)
      எல்லாரும் "கொண்டாட" வேண்டும் என்பது நோக்கமன்று!
      ஒரு சாரார் பழக்க வழக்கமே, ஒட்டுமொத்தக் பழக்க வழக்கம் ன்னு தீர்ப்பாகி விடக்கூடாது என்பதே நோக்கம்!

      //தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாடும் இம்மதத்தினரை பட்டியலிட முடியுமா?//

      உம்...அப்பறம்? டைப் டைப்பா கேக்குறீய:) பட்டியலிட்டா என்ன பண்ணுவீங்களாம்?
      நீங்க நகர வாசியா என்ன? கிராமத்தில் கிறிஸ்துவர், பாய்-ன்னு பல சாராரும் பொங்கல் கொண்டாடுவதைப் பார்த்து இருக்கீங்களா?

      பொங்கலுக்கென்று எந்த "புராணக் கதை"யும் கிடையாது! இஸ்லாமியர் வீட்டிலும் கர்ப்பூரம் காட்டாமல், பொங்கல் பொங்குவதைப் பார்த்துள்ளேன்!
      தூத்துக்குடித் திருச்சபை பொங்கல் கொண்டாட்டமும் ஸ்தோத்திரப் பாடல்களும் இதோ = http://www.arulvakku.com/publish/index.php?id=29

      நகரங்களில் சூரிய பூஜையும், பொங்கல் அன்னிக்கி கூட கோயிலில் போய் பொங்கல் சிறப்பு அலங்காரம், கஜகர்ணிகாய நமஹ, லம்போதராய நமஹ-ன்னு செய்வதால், பிற மதத்தினரைக் கொஞ்சம் அந்நியபடுத்தி விட்டது! அவ்ளோ தான்!

      இவ்ளோ "கேள்வி" கேக்குறீங்களே! பதிவில் ஒன்னுத்துக்காச்சும் "பதில்" சொல்லுங்க பார்ப்போம்!
      பொங்கல் திருநாள் என்பதால், தை-01 க்கு மாத்தலை! read the post again!
      Year = continuous numbering sequence = Valluvar Era
      Month = thai-01 (as thai is a spl month in tamil literature); nothing to do with pongal or maattu pongal or sankaranthi or whtever..

      Delete
    2. ஸ்மார்ட்,

      நீங்க ரொம்ப சுமாராவே பேசுறிங்க :-))

      சமயமும்,மொழியும் சமூகத்தின் கூறு என்று ஒரே அடியாக மொழிக்கு இணையான இடத்தில் சமயத்தினை வைத்திட முடியாது.

      காரணம் சமயம் என்பதே இல்லைனு நம்பாத பகுத்தறிவாளர்களும் சமூகத்தில் இருக்காங்க அவங்க என்ன புது மொழியா பேசுறாங்க, தமிழ் நாடெனில் தமிழ் பேசுவாங்க,அப்போ அவர்களுக்கு சமயம் என்ற கூறு இல்லை ஆனால் மொழி இருக்கு.

      மேலும் சமயமே இல்லாமல் மொழி தனித்து இயங்கும் ,ஜீவிக்கும் ,ஆனால் மொழி இல்லாமல் சமயம் இயங்காது.

      கிருத்துவத்தின் மொழி என்னவாக இருக்கும், எந்த நாடு, மொழிக்கு பேசும் மக்களை கவுக்கணுமோ அந்த மொழிக்கு பைபிளை மொழி பெயர்த்தே பரப்பினார்கள்.எனவே சமயத்துக்கு மொழி தேவை ஆனால் மொழிக்கு சமயமே தேவை இல்லை.

      அப்படி சமயத்துக்காகவே உருவாக்கின மொழி என்றால் தேவ பாஷை தான் அதனால் தான் செத்துப்போச்சு, மக்கள் பேசாத மொழி மொழியே அல்ல.

      ஒரே மதத்தினரே சமயத்தின் அடிப்படையில் கலாச்சாரத்தினை பின்ப்பற்றுவதில்லை, மொழியின் அடிப்படையில்,அவர்கள் வாழும் மண்ணின் அடிப்படையிலேயே கலாச்சாரம் இருக்கும்.

      தமிழ் நாட்டு கிருத்துவ ஆண்கள் முழு கோட்டும், பெண்கள் குட்டைப்பாவடையும் அணிவதில்லை, வேட்டி, சேலை தானே அப்போ சமயம் என்பது சமூகத்தின் கடைசியில் வர வேண்டிய கூறு அதைக்கொண்டு வந்து ஒரு சமூகத்தின் ஆதார சுருதியான மொழியுடன் ஒப்பிடுவதே முட்டாள் தனம்.

      எனவே தமிழ்ப்புத்தாண்டு என்பது ஒரு மொழிப்பேசும் மக்களுக்கானது , அது எந்த சமயத்திற்கும் சொந்தமல்ல. ஆனால் சித்திரை அன்று கொண்டாடப்பட்டால் மதம் சார்ந்த நிகழ்வாக ஆகிவிடும்.

      சித்திரைப்போன்ற வட மொழி பிரயோகம் எல்லாம் களப்பிறர் காலத்திற்கு பின்னரே உள்ளே வந்தது. அதற்கு முன்னர் எல்லாம் இலக்கியத்திலோ எங்குமோ குறிப்பிடப்பட்டதில்லை. பல வரலாற்று ஆவணங்கள்,இலக்கிய மூல ஏடுகள் அழிக்கப்பட்டதால் பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்ததையே பின்ப்பற்றும் சூழல் அதற்காக அதையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதில்லை.

      Delete
    3. chithirai vaikaasi aakiya mathakkankeedukaL kLappirar kaalathirkkupin vanthathaakave vaithukkolvOm. kadikaaraththai nammaal thiruppa mudiyaathu. saivam vainavam samanam kirithuvam Islaam aakiya indru kadaippidiakkappadum aththanai mathangalum kalappirar kaalthiRku pin thaan tamilnaattil vanthana.AAkave avattrai ellaam othukkivida mudiyumaa. "Chithirai vishu" enbathu 12 maathangalin thodakka maathamaaka anusarikkappaduvatharkku ovvoru kaalathilum ovvoru kaaranam irunthtirukkalaam.Anal tharpothaya kaalathil elaam vypaaram enbathaithhtavira vEru enna kaaranam irukkirathu.

      Delete
  30. அல்லோ, இங்க இரவின்னு ஒருத்தர் இருந்தாப்டி.. கெடைப்பாரா? ;)

    ReplyDelete
    Replies
    1. :)))
      நலமா மயிலு?:)
      இரவியா? பெரிய இவனா அவன்? கெடைப்பான் கெடைப்பான்:)

      Delete
  31. அருமையான பதிவு

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
    இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
    தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ் போஸ்ட்

    To get vote button


    தமிழ் போஸ்ட் Vote Button

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் போஸ்ட்

    ReplyDelete
  32. நேத்து மறுபடியும் கடல்.. இதோ வந்தாயிற்று...!!

    மதத்தை மொழியோடு கலந்தால் மொழிக்கு மதம் பிடிக்குமோ இல்லையோ.. ஆனால் மனிதனுக்கு கட்டாயம் மதம் பிடித்து விடும்.

    நீங்களும் ஒவ்வொரு பதிவிலும் மறக்காமல் இதைக்கூறிகொண்டுதான் இருக்கிறீர்கள். நல்லது.

    //சித்திரையில் கத்திரி வெயில் என்பார்கள் அது எப்படி இளவேனில் ஆகும்?//

    //ஆனா இளங்கோ அடிகளைத் தான் கேக்கணும்! நான் சொல்லலை! அவரு தான் சொல்றாரு//.............

    ஒருவேளை இளங்கோவின் காலநிலை அப்படி இருந்திருக்குமோ என்னாமோ..!!
    இப்போதும் தென் தமிழக பருவநிலை சிறிதே மாறுபட்டிருக்கிறது.
    சென்னை வெயில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருப்பதில்லை.

    மேலும் இதேபோல் பிறந்த நாள் விழாக்களும். முதன் முதலில் ராஜா ராஜா சோழன் தான் பிறந்த நாள் கொண்டாடிய தமிழன் என நினைக்கிறேன். (ஐப்பசி மாதத்தில் சதைய நட்சத்திரம் தோன்றும் தினத்தை சதைய விழாவாக).

    அதுபோல.., நீங்கள் சொன்னது போலும் "தமிழ் வருஷ பிறப்பை" கொண்டாடுபவர்கள் கொண்டாடட்டும்.
    just....விழாக்கால வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
    Replies
    1. ho ho! welcome twitter captain:)

      //மதத்தை மொழியோடு கலந்தால்........நீங்களும் ஒவ்வொரு பதிவிலும் மறக்காமல் இதைக்கூறிகொண்டுதான் இருக்கிறீர்கள். நல்லது//

      ha ha ha!
      I love murugan! but will never say 12 hands = 12 uyir ezuthu etc etc:) a language does not form like this:)
      I like aandaL! but will never say shez the best female poet in tamizh! shez bold & brought some new forms of common folk poetry, thatz it!

      ஒரு அணியில் மட்டுமே நின்னு, அணிச் சார்பாகவே பேசும் பழக்கம், எனக்குச் சுட்டுப் போட்டாலும் வர மாட்டேங்குது...என்ன செய்ய:)))
      தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி என்னும் ஜானகியின் பாட்டைச் சிலாகிச்சுப் பேச, சுசீலாம்மா ரசிகனான என் உயிர்த்தோழன்....என்னை "XXX" type, முருகனின் எதிரி-ன்னே பலர் முன்னிலையில், பதிவில் திட்டி விட்டான்:))

      இப்பிடிப் போகுது வாழ்க்கை:))

      Delete
  33. Tamizh is not only Hindu; It is Much More!

    தமிழனின் தாய் மதம் இந்து மதமே! ஆகவே உங்க இவ்வரியை ஏற்க்க முடியவில்லை.

    Tamizh is not only language; it is much more! என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. சிவா......
      நீ என் நண்பன் தான்!

      என்னையும் அறிவாய்! நான் ஆன்மீகப் பதிவுகள் இடுகிறவன் என்பதையும் அறிவாய்!
      முருகா என்று உருகுவோனும் நானே! ஆழ்வார் அருளிச் செயல்கள் இசைப்பதும் அடியேன் தான்!

      இருந்தும், அப்படிப்பட்ட நானே மறுக்கிறேன்!
      //தமிழனின் தாய் மதம் இந்து மதமே!// = அல்ல! அல்ல! அல்ல!

      செந்தமிழில் இறைமையின் வேர் = தொல்காப்பியர் காட்டும் பூர்வகுடிகளின் இயற்கையான வழிபாடு!
      அது "இந்து மதம்" அல்ல! அதன் கூறுகளைக் கொண்டும் இயங்கவில்லை! Dot!

      Delete
  34. //* முதற் காலம் = மழைக் காலம்!//

    மாதம் மும்மாரின்னு சொன்னதெல்லாம் பொய்யா?

    ---

    //கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months*6=12//

    மாறி மாறி உலகில் வரும் பருவ காலம் ஆறு, மாறாமல் நடந்து வரும் பூஜைகாலம் ஆறு!

    ---

    பல விஷயங்களை சொல்லியுள்ளீர்கள். கடைசியாக நீங்களும் புதுமைக்கே வாக்களித்துள்ளீர்கள்!

    There is something called beginning, it is not at all discovered we are assuming our self. A 80 year old man may know his first day of his life, only if his mother convey to him, if you he starts to question nobody can answer to such stupidity.

    Even சித்திரை, வைகாசி, & மேஷம், ரிஷபம் are not even Tamizh, so are we going to check new set of zodiac? If you say this is hindu new year, for your kind information it is not 13.04.2012, hindu new year was already celebrated on 23.03.2012, so 13.04.2012 is Tamil new year only.

    2000 ஆண்டுகள் அடிமைப்பட்டு நாம் இழந்தவைகள் ஏராளம், இனியாவது விழித்துக்கொள்வோம்.

    Festivals are made to become closer not to differentiate or not criticize so "அசிங்கம் பிடிச்ச” need to remove from the dictionary.

    அதிக பிரசங்கி மாதிரி பேசிட்டேனோன்னு தோணுது. என்னுள் பேசியதை இங்கே பதித்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும் அறிவிக்க!

    ReplyDelete
    Replies
    1. சிவா...
      //மாதம் மும்மாரின்னு சொன்னதெல்லாம் பொய்யா?//

      //உலகில் வரும் பருவ காலம் ஆறு,
      மாறாமல் நடந்து வரும் பூஜைகாலம் ஆறு!//

      :))))))))
      இந்த பஞ்ச் டயலாக் எல்லாம் செல்லாது செல்லாது:)))
      இது ஆய்வுப் பதிவு!
      ஆய்வு மனப்பான்மையும், தரவுகள் மட்டுமே செல்லும் என்பதை நினைவிற் கொள்க!

      //Even சித்திரை, வைகாசி, & மேஷம், ரிஷபம் are not even Tamizh, so are we going to check new set of zodiac?//

      We are not talking abt creating NEW zodiac! Thatz for believers!
      All we are talking abt is a Common Tamizh Standardization - Common for all Tamizh People; not only hindus!

      Who said chithirai, vaikaasi is not tamizh? Do u have proof?
      கதிர் வழி மாதங்கள்
      = மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம்

      மதி வழி மாதங்கள்
      = தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி (வைகும் ஆசி=வைகாசி), ஆனி, ஆடி, ஆவணி(ஆகும் அணி=ஆவணி), புரட்டாசி (புறத்தோயை), ஐப்பசி, கார்த்திகை, மார்கழி

      சும்மா….
      பால்குனி தான் பங்குனி ஆச்சு
      உத்திர-ஆடம் தான் ஆடி ஆச்சு…..
      ன்னு சம்பந்தமே இல்லாத ஒலிப்புகளை, சிலர் வலிந்து திணிப்பார்கள்!

      ஆகஸ்ட் தான் ஆடி ஆச்சு-ன்னு கூடச் சொல்லலாம் போல இருக்கே!:))) அடக் கொடுமையே! இதுவா ஆய்வு?:(
      ---------

      //for your kind information it is not 13.04.2012, hindu new year was already celebrated on 23.03.2012//

      Gimme proof that 23.03.2012 = Hindu New Year!
      Vedas, Upanishads - any quote is ok!
      All over the world is that date Hindu New Year???

      //Festivals are made to become closer not to differentiate or not criticize so "அசிங்கம் பிடிச்ச” need to remove from the dictionary//

      Sorry Siva, I will not remove that word from the post!
      I do agree festivals are for closeness!
      But dont "thrust" your festival as a common festival for all tamils!!!

      //அதிக பிரசங்கி மாதிரி பேசிட்டேனோன்னு தோணுது. என்னுள் பேசியதை இங்கே பதித்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும் அறிவிக்க!//

      :))
      I know you; You know me too!
      Meenakshi Amman, Naayagi Swamigal - all I bow in reverence! But Thatz only at a personal level;
      That cannot be "generalized on a language" or civilization as a whole!

      இப்பதிவில் சொன்ன ஆய்வு முடிவுகளுக்கு, எதிர்த் தரவுகள் நீங்கள் குடுத்தால் என்னைக் கட்டாயம் திருத்திக் கொள்வேன்!
      அதே சமயம், நட்பின் காரணமாக, உங்கள் "உணர்ச்சிகளையே" நானும் பதிவில் பிரதிபலிக்க வேண்டும், "ஆய்வு" தேவையில்லை - என்று எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன்:)
      ---------

      இந்த விஷயத்தில் நான் ரொம்பவே பட்டுட்டேன்! அதான் மேற்கண்டவாறு சொன்னேன்!
      எனினும் என்னை மன்னிக்க சிவா! இனிய விழாக்கால வாழ்த்துக்கள்:))

      Delete
  35. அன்பில் ரவி,

    விருந்தாய் இருந்தது பதிவு. சுவை "தூக்கள்" - இனிப்பும் காரமுமாய் வாதங்களும் விவாதங்களும். எனினும் பெரும்பான்மை தமிழக மக்கள், வழக்கத்தில் -சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் ஆண்டு முதல் நாளாக போற்றி கொண்டாடுவதை மாற்றுவது ஏற்புடையதல்ல என்பது என் தனிபட்ட கருத்து. தை முதல் நாளோ சித்திரை முதல் நாளோ, அறுதியிட்டு சொல்லக்கூடிய ஆவனச் சான்றுகள் இல்லாத போது வழக்கத்தை மாற்றுவது வீண் வேலை! விளம்பரத்தேடல் !.
    ஆட்சியாளர்களுக்கு ஆக்கப் பூர்வ நோக்கம் இருப்பின் தமிழ் மாதங்களை, ஆண்டுகளை - தூய தமிழ் பெயரிட்டு வழக்கத்திற்கு கொண்டு வரலாம்
    தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது அற்ப அரசியல்.

    ReplyDelete
    Replies
    1. பிரசாத் - நலமா?
      அன்பில் ரவி ன்னு கூப்புடாதீக; அன்பு-இல் = அன்பு-இல்லாத-ரவி ன்னு ஆயீரும்:))

      உங்கள் தனிப்பட்ட கருத்தைச் சொன்னமைக்கு நன்றி!
      பெரும்பான்மை மக்களின் வழக்கத்தை இங்கே யாரும் மாற்றலையே! சித்திரை பூஜை எல்லாம் பண்ணிக்கத் தானே சொல்றாங்க! புத்தாண்டு ன்னு சொல்லிக்கத் தானே சொல்றாங்க!
      அதை, "தமிழ்"-ன்னு குறிக்காதீங்க என்பது மட்டும் தான் வேண்டுகோள்! ஏன்-ன்னா அது தமிழ் அல்ல!

      என் பேரை "இரவிசங்கர (சைவ) வேளாளர்" ன்னு காலம் காலமா எழுதிக்கிட்டு வராங்க ன்னு வச்சிப்போம்! பெரும்பான்மை அப்படி எழுதினாங்க என்பதற்காக மாத்தாம இருக்கிறோமா? மாத்துறோம்-ல்ல?
      ஏன்னா என்னைச் சாதிப் பெயர் சொல்லிக் குறிக்க பெரும்பான்மைக்கு உரிமை இல்லை, எவ்வளவு தான் பெரும்பான்மை இருந்தாலும்!

      அதே போல, ஒரு மதப் பண்டிகையை, "தமிழ்" ன்னு குறிக்க, எந்தப் பெரும்பான்மைக்கோ, சிறுபான்மைக்கோ உரிமை இல்லை!

      //தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது அற்ப அரசியல்//

      ஒரு மதப் பண்டிகையை, "தமிழ்" ன்னு ஒட்டுமொத்த சமூகத்தின் மேலத் திணிப்பது தான் அற்ப அரசியல்! மன்னிக்க!

      Delete
  36. //சமயமும்,மொழியும் சமூகத்தின் கூறு என்று ஒரே அடியாக மொழிக்கு இணையான இடத்தில் சமயத்தினை வைத்திட முடியாது.//

    சிவன் உடுக்கு அடிச்சதும் இடது பக்கம் தமிழும் வலது பக்கம் சமஸ்கிரதமும் கொட்டுச்சாம். - இந்தக் 'கதை'யை நம்புறவங்க மொழியும் சமயமும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்று நம்புவதைவிட சமயம் தான் மொழியை சமைச்சதுன்னு நம்புவாங்க.

    ஆனால் மொழிகள் சமயங்களுக்கு முன்பே பிறந்தவை, சமயமும்,மொழியும் சமூகத்தின் கூறு போன்றக் கருத்துகள் புறக்கணிக்கக் கூடியவை

    ReplyDelete
    Replies
    1. :)))

      சிவபெருமான் உடுக்கை அடிச்சி, தமிழ் பொறந்துச்சி!
      முருகன் 12 கை தான் = தமிழ் 12 உயிரெழுத்து!
      முருகன் 18 கண் தான் = தமிழ் 18 மெய்யெழுத்து!
      இன்னும் நிறைய இருக்கு கோவி அண்ணா! :))

      இப்படியெல்லாமா ஒரு மொழி உருவாகும்? ன்னு கேட்டுறாதீக!
      "தீமை" என்ற சொல்லில் உயிரும் இருக்கு, மெய்யும் இருக்கு! அப்படின்னா முருகனின் சில கரங்கள் தான் தீமையா?:((

      என்னவா...முருகா...நினைச்சப் பாக்கவே பயமா இருக்கு! இப்படியான "மதம்" பிடிச்சவங்க சங்காத்தமே நமக்கு வேணாம் முருகா, வா நாம போயீறலாம்:)

      Delete
  37. அப்பாடா.. முழுசும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு..!

    அன்பின் மாப்ளை கே.ஆர்.எஸ்..

    மிக சிரத்தையுடன் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள்.. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.. இதில் வாதிடும் அளவுக்கு எனக்கு அறிவில்லை என்பதால் படித்தேன் என்பதை இங்கே பதிவு செய்துவிட்டு அப்பீட்டு ஆகிக் கொள்கிறேன்..!

    நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. //முழுசும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு..!//

      உங்களுக்கேவா அண்ணாச்சி?:)))
      வெற்றி வெற்றி! நீள்பெரும் பதிவரையே அசரடிச்சிட்டேனோ?:)

      //மிக சிரத்தையுடன் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள்.. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்//

      நாம் எல்லாரும் கூட்டாக அறிவதற்கே எழுதியது!
      எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பது அறிவு!

      Delete
  38. உங்களின் பதிவுகள் அனைத்தம் என் மனதோடு நான் பேசுவது போலவே இருக்கும்! ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம்!இந்த வருடங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஏன் பஞ்சாங்கத்தில் வருடத்தின் வெண்பா போட்டு இருக்கிறது? சாதாரணமாக பேசும் தமிழிலி இல்லாமல் சங்கத்தமிழில் தானே உள்ளது! எல்லாம் அறிந்த பெரியோர்கள் கதை கட்டினார்கள் என்ற எடுத்துக்கொள்ளமுடியும்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாரதி
      பதிவில் இத்தணை விரிவாய்ச் சொன்ன போதிலும், இன்னும் விளக்கமா? முருகா! மனசுக்குப் பிடித்து விட்டால், அவ்வளவு தான் போல் இருக்கிறதே:))

      //இந்த வருடங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஏன் பஞ்சாங்கத்தில் வருடத்தின் வெண்பா போட்டு இருக்கிறது//

      வெண்பா யாரும் எழுதலாம் பாரதி; எங்கள் நண்பர் இலவசக் கொத்தனார் இங்கு ஜிம்முக்கு போவதுக்கெல்லாம் வெண்பா எழுதுவார்!:)

      ஜிம்மிலே ஓடிபின் ஜம்மென்று கண்டதையும்
      சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
      உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
      தப்பான வாழ்வைத் தவிர்

      வெண்பா மெட்டில் இருப்பதால், சங்க காலத்தில் ஜிம் இருந்தது ன்னு எடுத்துப்போமா?:))
      அதே போல, பின்னாளில் ஆட்கள் எழுதிச் சேர்த்த வெண்பாக்கள் அவை! கடின நடையில் எழுதி விட்டால் எல்லாம் சங்கத் தமிழ் ஆகி விடாது:))

      பாரில் விஷு வருடம் பாலர்க்கு பீடையுண்டாம்
      கார் பொழிவதில்லை காலத்தில் - ஏரி
      பெருகாது பிற்காலம் பெய்யுமே மாரி
      இருகாலமுஞ் சமனென்று எண்
      :)))

      இப்படியெல்லாம் எழுதினானுங்க பண்டிதனுங்க!:((
      ஒரு வெண்பாவில் கிரந்த எழுத்து வந்ததாய்ச் சரித்திரமே இல்லை! புகழேந்தியின் நள வெண்பாவில் தேடிப் பார்த்தாலும் கிரந்தம் கிடைக்காது!
      ஆனா....பாரில் விஷூவருடம் - பா வுக்கு ரைமிங்கா - பாலர்க்குப் பிடையுண்டாம்...

      இந்தக் காமெடியை நீங்க சீரியசாக் கேள்வி கேக்குறீக!:) உங்க அப்பாவித்தனம் கண்டு புன்னகை:)

      Delete
  39. கீச்சுலகை நீர் புறக்கணித்ததில் தவறே இல்லை முருகா ..!
    அங்கு மீண்டும் உயிர்த்தெழுந்தால் உமது பிற பதிவுகள் நிச்சயமாய் பாதிக்கப்படும்.. வேறென்ன நேரமே கிடைக்காமல் அல்லாடுவீர்..!
    வலைபூவிலே இரும்.
    தமிழுண்ணும் வண்டுகள் தாமே தேடி வரும்..! என்னைப்போல..!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. கேள்விப்பட்டேன்.. புலவர்களுக்குள் சச்சரவு அரவாகி சுற்றிக்கொண்டதே என என் போன்றோருக்கு கவலை. ஆனாலும் இசைபிரியன் இன்னுமும் கடுங்கோபத்தில் தான் இருக்கிறார்..!
    எல்லாம் சுபமாகும்.
    இதுவும் வாழ்க்கைதானே..!

    ReplyDelete
  41. hope you are doing well and wish you all the best for the work your are doing.
    Can i say something, I know i ain't good at arguments, and i ain't following up this comment's reply. Right. You said, the tamil new year celebrated in சித்திரை is "latter day practice". Was it 500 years or 700 or 1000 years old. When the homo sapiens first came to this world, do they started celebrating festivals immediately, no it evolved, By the same way, சித்திரை as start of tamil new year oops, (you don't like it). If there is no mention on பண்டைய தமிழ் இலக்கியங்கள் + தமிழ் புத்தாண்டு means people didn't celebrate tamil new year aa ? I didn't read any of those old classical literatures and my argument is vague, I know I know. There must be several understanding to those poems you are referring, just i am asking. If you understood in such away means, some other person can understood in a different way. "We all just looking this world through a key hole" (taken from before sunset movie). It is no way to demean your article, I just put what i thought, just anxious first when you first quit twitter, good to see you in some blog's comment section. Sorry for taking so much space on the comments section. I know you will put superb (argument)comment to demystify this comment. You win and I lose. All the best

    ReplyDelete
    Replies
    1. thanks for your caring words; dunno who u r on twitter; but why worry, if i leave?:)

      coming to your comment, yes, civilization evolves!
      thatz why we didnt have a new year's day before; i frankly admitted this.
      didnt claim like some ideological ppl as if tamizh literature codified thai as new year! nopes! I frankly said that in the post!

      but, as a part of the evolution, when civilizations expand, u shd stop codifying a religious practice on all, under the common name=tamizh
      why u r not extending the evolution that u r talking abt?:)

      even i aint good at arguments!:)
      but this is a discussion, not argument; ideas flow from all sides; we just evaluate them, & course correct ourselves! so no win or lose:)
      thanks, for your heartful comments!:)

      Delete
    2. btw, i am a big fan of "Before Sunset" movie! Been to those places in Paris with my dearest thozhan:)

      Delete
  42. // but why worry, if i leave?:)//
    https://twitter.com/#!/kryes/status/156815741302222848

    ReplyDelete
  43. அட, எங்கடா ஆளை அங்கே காணோமே என்று பார்த்தா, இங்கேயா "ஒளிஞ்சிட்டு" இருக்கீக!

    If it is not too late, நானும் இந்த விடயத்தில் ஒரு கேள்வி கேட்கலாமா?
    மாயோன், சேயோன் எனப்படுபவர்கள் "இய்ற்கை வழிபாட்டுத் தெய்வங்கள்" என்கிறீர்கள். இத்தெய்வங்கள்தானே தற்போது திருமாலாகவும் முருகனாகவும் வழிபடப் படுகின்றன? எனவே, இந்து மதம் (அல்லது சைவ சமயம்) தமிழர்களின் ஆதி மதம் என்று எடுத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது?

    காலப்போக்கில் தமிழர்களில் (சிறுபான்மையோர்) சமண, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைப் பின்பற்றத் தொடங்கினர். அதனால், இப்போது மதச்சார்பற்ற, தமிழரைத் தமிழால் ஒருங்கிணைக்கும் புத்தாண்டு ஒன்று இருந்தால் நல்லது என்று ஒருசாரார் நினைப்பது புரிகிறது. ஆனால், அதை உங்களைப்போல் நேர்மையாகவும் தெளிவாகவும் "இது முன்பு இல்லாத ஒரு புதிய விழா; சித்திரையில் இந்துப் புத்தாண்டைக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் தாராளமாகக் கொண்டாடுங்கள்; எல்லாச் சமயத் தமிழரும் சேர்ந்து தையிலும் ஒரு புத்தாண்டைக் கொண்டாடுவோம்" என்று ஒருவரும் சொல்வதில்லை.

    அவரவர் தமக்குப் பிடித்தது மட்டுமே சரியென்று வாதிடுவதிலும் அடுத்தவர் ந்ம்பிக்கைகளைச் சிதைத்து அடக்குவதிலுமே ஆர்வம் காட்டுகிறார்கள்.

    மேலே, உங்கள் 8 வது point இல் ஒரு typo இருகிறதென்று நினைக்கிறேன்:
    //a) தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; தமிழ்ப் புத்தாண்டு ன்னு சொல்லுங்கோ please// நீங்கள் கூறவந்தது "இந்துப் புத்தாண்டு ன்னு சொல்லுங்கோ அல்லவா?

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. தலையே சுத்துது ஆள விடுங்க சாமி
    எனக்கு தமிழ் புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு மேலல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது :)

    ReplyDelete
  46. திடீர்னு பந்தல்ல எதுக்கு visible after approvel வருது .
    இதல்லாம் ரொம்ப over:)

    ReplyDelete
  47. athellaam sari neththu-nnu onnu kidayaathu.....naalai enrum onrum kidaiyaathu....INRU mattume unmai...nijam...ellaam.....oru kanakkirkaaka aarambiththathu thaan naal,vaaram,maatham,varudam ellaam......

    ReplyDelete
  48. நேற்று, நாளை இரண்டுமே இல்லை.(பொய்) இன்று மட்டுமே காணமுடியும்....மெய்....உண்மை.....ஒரு கணக்குக்காக அவரவர்க்கு தெரிந்ததை வைத்தார்கள்.

    ReplyDelete
  49. புத்தாண்டு என்ற ஒன்றே கிடையாது. ஆங்கிலத்திலும் சரி. தமிழிலும் சரி . நாமாகவே ஏற்படுத்தி கொண்டது.
    அவர் அவர்களுக்கு எது விருப்பமோ கொண்டாடிக்கலாம் :))

    ReplyDelete
  50. புத்தாண்டு என்ற ஒன்றே கிடையாது. ஆங்கிலத்திலும் சரி. தமிழிலும் சரி . நாமாகவே ஏற்படுத்தி கொண்டது.
    அவர் அவர்களுக்கு எது விருப்பமோ கொண்டாடிக்கலாம் :))

    ReplyDelete
  51. இந்தப் பதிவைப் படிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பிருந்தே என் சிந்தனையில் ஓரு கேள்வி. நம் பண்டைய தமிழ் இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்ற இன்னும் பலவற்றில் எங்கேனும் இந்து என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்பதே.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP