Saturday, May 26, 2012

திருப்புகழ் Geographic Atlas!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
இந்த இனிய செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்!

Thirupugazh Geographic Atlas என்ற அடியேனின் சிறு பணியை,
முருகனின் தனிப்பெரும் தளமான, murugan.org இல் பதிப்பித்துள்ளார்கள்!

மேலே வாசிங்க:)

திருப்புகழ் = தமிழ்க் கடவுளாம், காதல் முருகன் மீதுள்ள தமிழ் மாலை!
* "முத்தைத் தரு" ன்னு துவங்கி....
* "ஏறு மயில் ஏறி" ன்னு நிறையும்!

இந்த ரெண்டு பாடலையும் விட்டுட்டுப் பார்த்தால்....
மீதமுள்ள பாடல்கள் பெரும்பாலும், Murugan Atlas or Murugan Map என்றே சொல்லிவிடலாம்!
ஒவ்வொரு ஊராக, அந்தந்த முருகன் மேல் பாடப்பட்டவை!

திருப்புகழ் தோன்றிய இடம்:
* திருவண்ணாமலை (அருணகிரி) = 79
* வயலூர் = 18

அறுபடை:
* திருப்பரங்குன்றம் = 14
* திருச்செந்தூர் = 83
* திரு-ஆவி-நன்-குடி (பழனி) = 97
* திரு-ஏர்-அகம் (சாமிமலை) = 38
* திருத்தணிகை = 64
* பழமுதிர்சோலை = 16

* வள்ளிமலை = 10
* தமிழ் ஈழம் = 15
.....இன்னும் பலப்பலச் சிற்றூர்கள்/ பேரூர்கள்


Hey, அங்கே வா, இங்கே வா ன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, பல ஊர்களைக் காட்டினான்!
அருணகிரியும், அவன் கூப்பிட்ட ஊருக்கெல்லாம் போய், தலம் தலமாகப் பாடியுள்ளார்!

ஒவ்வொரு பாட்டிலும், அந்த ஊரின் கதையோ, வரலாறோ கூட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!
= தமிழக ஊர் ஆய்வாளர்களுக்கு இது ஒரு ஆய்வுச் சுரங்கம்!

பல பதிப்பகங்கள், திருப்புகழைப் பதிப்பித்துள்ளன!
அவை சமய அளவில் மட்டும் இருக்கும்!
ஆனா இன்னும் துழாவினால், தமிழக ஊர்ப் பெயர் ஆய்வுகள், இசைக் குறிப்பு ஆய்வுகள் ன்னு....திருப்புகழ் = ஒரு கருவூலம்! புதையல்!!

அத்தனை திருப்புகழ் ஊர்களையும், ஒரே வரைபடத்தில் (Map), ஒன்னாத் திரட்டி...
* அந்தந்தப் புள்ளிகளின் மீது உலாவினால் = ஊர்ப்பெயரும்
* அந்தந்தப் புள்ளிகளைச் சொடுக்கினால் = அந்தந்தத் திருப்புகழும்
வருமாறு, ஒரு சின்ன பணியை - பலநாள் ஆசையைச் செய்த நிறைவு! இதோ உங்கள் Murugan Atlas:))
------------------------------------------------------------------------------------------------------------

இதை, தோழன் இராகவன் பிறந்தநாளான இன்று (May-27-2012).....
திருமுருகனின் மயில் கழுத்தில்...
மாலையாக அணிவித்துப் பணிகிறேன்!
Happy Birthday Ragava!:)குறிப்பு:
1. காதல் முருகனின் இடுப்பு = Hairpin Bend! Plz drive with caution:)

2. திருப்புகழை வெறுமனே படிச்சாப் பிடிபடாது;
பாடணும் (அ) வாய்விட்டுப் படிக்கணும்! அப்போ தான் அந்தச் சந்தம் கொஞ்சும்!

3. திருப்புகழ், எனக்கு முதல் அறிமுகம், அம்மாவின் தங்கையான சுகுணாச் சித்தியின் வீட்டில்!
May be 4th-5th std! சும்மா பத்தோட பதினொன்னா, ஏதோவொரு சாமிப் புத்தகமா இறைஞ்சிக் கிடந்தது....
ஓவியத்தில் அன்பு மிக ஊறி
ஓம் எழுத்தில் அந்தம் அருள்வாயே!
படித்தவுடன் என்னமோ செய்ய....அவர்கள் வீட்டில் இருந்து திருடிக் கொண்டு வந்தது!:) Lifco பதிப்பக, Blue Color Book is still there, torn & ottufied with tape:))இந்த Murugan Atlas முயற்சிக்கு நன்றி:
1. murugan.org editor, Mr. Patrick Harrigan
2. kaumaram.com, for their pdf links
3. VTS = VT சுப்ரமணியப் பிள்ளை

VTS = திருப்புகழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று சேகரித்தவர்,.... உவேசா வின் சேகரிப்புக்கெல்லாம் முன்னாலேயே...
இன்றும், திருத்தணிக் கோபுரத்தைப் பார்த்தவாறு மண்ணில் உறங்கும் எளிய மனிதர் = VTS!
மொத்தம் 16000 பாடல்கள் என்பார்கள்! கிடைத்தது = 1328 பாடல்களே!பின்னூட்டம் (Feedback):
இந்த Thirupugazh Geographic Atlas இல் வேறேதேனும் Idea, Suggestion, Improvement - உங்களுக்குத் தோன்றினால்....
பின்னூட்டமாகவோ, மின்னஞ்சலிலோ சொல்லவும்! (shravan.ravi@gmail.com)
----------------------

இராகவனுக்கு இனிப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

9 comments:

 1. அழகா ! குகா ! ஷண்முகா ! நீ
  அழைத்திட்ட போதெல்லாம் இடமெல்லாம்
  அருணகிரி நாதர் வந்துன்னைப்

  போற்றிப் புகழ்ந்து பாடி
  புவியிலே மணம் சேர்த்ததில்
  புதுமை என்ன ?

  உன் மணமல்லவோ ,
  உண்மையில் உன் தலங்களில்
  உன் அறுபடை வீடுகளில்
  வேலும் மயிலுமாய்
  சேவலங்கொடியாய்
  உன்னுடனமர்ந்துள்ளது !!

  காவடி எடுத்து வரும்
  கே ஆர் எஸ் அன்பருக்கும்
  கே ஆர் எஸ் நண்பருக்கும்
  காலமெல்லாம் அருள் தந்தது. !!


  மணம் சேர்த்த பெருமாளே !
  மனம் தந்தருளவேணும் .
  தினம் தினம் யான் உனை நினைந்துருக
  திருப்புகழ் ஒன்று பாடவேண்டும்.
  ஒரு
  பூமாலையுடன் வந்துன்
  பொன்மேனியிலிட்டு
  புவி வந்த பயன் பெறவேண்டும்.

  அட்லாஸ் இட்டவரே
  அட் லாஸ்ட் ஒன்று வேண்டும்.
  அருணகிரி சென்ற வழி இதுதானென்
  அம்புக்குறியொன்று போடவேண்டும்.
  அருணகிரி நின்ற இடமெல்லாம்
  அவர் பாடும் புகழொலிக்கும் = திருப்
  புகழ் ஒலிக்கும்
  ஒலி நாடா ஒன்று வேண்டும்.

  ஓரமாய் ஒதுங்கியே நான்
  ஓதியே இன்பம் காண்பேன்.

  சுப்பு ரத்தினம்.
  பி.கு.: சற்று நேரத்தில் யூ ட்யூபில் கேட்கலாம்.
  கந்தனைத்துதி ப்ளாக்ஸ்பாட் காம் லும் கேட்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா சுப்பு ரத்தினம் ... ப்ளாக் கை படித்ததை விட உமது வெண்பாவை வெகு கவனமுடன் படிக்க வேண்டிய கட்டாயமாகி விட்டது..! அருமையான பா.. கோரிக்கையும்..!

   Delete
  2. சூரி சார்
   ராகவனை வாழ்த்தியமைக்கு நன்றி! உங்களைப் போல் பெரியோர் ஆசி அவனுக்குத் தேவை!

   உங்கள் ஆலோசனைகளும் நனி நன்றே!
   * ஒலிச்சுட்டி = Phase 2.0
   * அம்புக்குறி போட முடியாது ன்னு நினைக்கிறேன்! ஏன்னா, அருணகிரி எங்கு முதலில் சென்றார், எந்த வரிசையில் போனார் என்பது தெரியாது!

   மற்றபடி, வேறு ஆலோசனைகளும் நிறைய வந்துள்ளன (மின்னஞ்சலில்)
   அவற்றில் ஒன்று, உங்களைப் போலவே, அந்தந்த தல முருகனின் படத்தை/ஓவியத்தைப் போடச் சொல்லிக் கூறியுள்ளார்கள்!

   கபீரன்பன் ஐயா, மூன்று ஊர்களின் எண்கள் பிழையாக உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்!
   அவருக்கும் என் நன்றி!

   Delete
  3. அருணகிரியார் சென்ற பாதை நமக்கு தெரிய வாய்பில்லை. அவரைப்பற்றி ஆராய் சிசெய்த திரு செங்கல்வராயப்பிள்ளை சொல்வது இங்கு படிக்கலாம்
   http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0400_03.html


   சுந்தர்

   Delete
 2. Listen here

  subbu rathinam
  http://kandhanaithuthi.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சூரி சார்!
   நன்றாக இருந்தது வேண்டற்பா:))

   Delete
 3. ஆகா. நன்றிகள். வாழ்த்துகள். வணக்கங்கள் இரவி.

  ReplyDelete
  Replies
  1. என்ன குமரன் இது?
   பதிவைப் பற்றிப் பேசாம, புதுசா வணக்கம் எல்லாம் வைக்கறீங்க?:))

   Delete
 4. அருமை, அருமை
  திருப்புனவாயில் என்ற இடம் அறங்தாங்கியிலிருந்து 37 கிமீ துரத்தில் பாம்பாற்றைன் கரையில் (திருப்பெருந்துறை அருகில்) என்பதாக வலையப்பட்டி கிருஷ்ணன் அவர்களின் கூற்று. 88ம் தலமாக குறிப்பிட்டிருக்கும் பாபநாசத்திற்கு அருணகிரியார் பாடல் இன்றும் கிடைத்ததாக தெரியவில்லை. அருகில் இருக்கும் திருநல்லூர் ( அப்பர் பெருமானுக்கு தீட்சை பெற்ற தலம், அமர்நீதி நாயானர் ஆட்கொண்ட இடம்) அருணகிரிநாதர் பாடல் இருக்கிறது

  சுந்தர்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP