Monday, June 04, 2012

’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்துக்கள் / வாழ்த்துகள் - எது சரி?

முன்குறிப்பு: வாழ்த்து-"க்கள்" என்பது தவறா?

அப்படீன்னா, அதைத் தொல்காப்பிய உரைஞர் நச்சினார்க்கினியர் போன்ற தமிழ் இலக்கணத் தந்தையர் பயன்படுத்துவாங்களோ?
இது இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்யப்பட்ட "மிகைத் திருத்தம்" என்று அறிக! சரியையும், பிழை என்று திருத்தம் செய்தல்!

* சரியான ஒன்றைத் தவறென்று ஆக்கி..
* இப்படி எழுதியதற்காக, "டுமீல்/ டுமீலன்"-ன்னு, தமிழ் உணர்வாளர்களை இளக்காரம் பேசி..
* "மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்" -ன்னு எள்ளி..
* "ஓ இது தவறோ?" -ன்னு நம்மையே திகைக்க வைத்து..

கவுண்டமணி பாணியில் சொல்லுறதுன்னா: 
"டேய்... ஒங்க சிகைத் திருத்தம் பண்ணுங்கடா! 
ஏன்டா மிகைத் திருத்தம் பண்றீங்க"?:)

ஒரு கதை போல் பார்க்கும் முயற்சி! ஆர-அமரப் படிங்க!:)


* வாழ்த்துக்களா? வாழ்த்துகளா??
* எழுத்துக்களா? எழுத்துகளா??
= எந்தப் பாண்டியன் பறை அறிவிச்சி, எந்த நக்கீரன் வந்து தாடியைத் தடவப் போறானோ?:)

90 நாள் அஞ்ஞாதவாசம்!
இப்போதைக்கு என் நெலமை = கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு!

தமிழின் பால் மாறா ஆர்வமுள்ள நண்பன் பலராமன் (@balaramanl) எப்படியோ #365paa வில் என் அஞ்ஞாதவாசத்தை மோப்பம் பிடிச்சிட்டா(ர்)ன்!:)
அவன் கேட்டுக் கொண்டதால், என் பல்வேறு யோசனைக்கு நடுவே.... Figure இல்லா ஆப்பிரிக்க விமானத்தி்ல்.. இப் பதிவை எழுதிக் கொண்டு வருகிறேன்:)


பொதுவா, இணையத்தில் எது ஒன்னும் பரவும்! அதுவும் Twitter வேகம், சுனாமி வேகம்!

* சில்க் ஸ்மிதாவின் ஆவி, வித்யா பாலனை மன்னிக்குமா? என்ற "அறிவியல்" ஆகட்டும்....
* அன்னக் கிளியா? சின்னச் சின்ன ஆசையா? போன்ற ராஜா/ ரஹ்மான் Debate ஆகட்டும்....
Twitter 140-இல் நடக்குறாப்பல, வேறெங்கும் நடத்த முடியாது!:)

தமிழும்... இதுக்கு விதிவிலக்கு அல்ல!

எழுத்துப் பிழைகளை... ஒரு பள்ளிக் கட்டுரையில் கண்டுபுடிக்கறதை விட, 140இல் கண்டுபுடிப்பது எளிது! பளிச்-ன்னு பல் இளிப்பாள்:) அவளை "Correct" செய்ய சில ட்வீட்டர்களும் ரொம்ப ஆர்வமா முனைவார்கள்!:)


ஆனா... ஆனா...

ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி ன்னு,
வீட்டின் உயர்ந்த பொருட்களையும் உடைத்து விடுகிறார்கள்!
அப்படி ஆனதே....வாழ்த்துக்கள் "தவறு" என்ற பரவல்!

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியானதையும், தவறு-ன்னு அடிச்சித் "திருத்துவது";

பிரபலமானவர்கள் சொல்வதால், இது பரவியும் விடுகிறது!
இழப்பு = தமிழ் மொழி இயலுக்கு :(

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! 
= இனி, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், தரவு (ஆதாரம்) கேளுங்க!

பலரும் "அபிப்ராயம்" சொல்லுறாங்களே தவிர, தரவு காட்டுவதில்லை!
மொழி இயல் = ஒருவரின் நம்பிக்கையோ/ புராணக் கதையோ அல்ல, அப்படியே ஏத்துக்கிட்டு போவதற்கு!
என் ஆளுங்க நான் சொல்லுறதை ஏத்துக்கட்டும், உன் ஆளுங்க நீ சொல்வதை ஏத்துக்கட்டும் -ன்னு "தனிமனித ஜல்லி" அடிக்க முடியாது!

அறிவியலைப் போலவே = மொழியியல்!
அதனால்.. சத்யராஜ் style இல்... தரவு தரவு!:)

Coming to the Matter,
வாழ்த்துக்கள் vs வாழ்த்துகள்; Jollyஆ, கதை போலப் பார்க்கலாமா?

திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" ன்னு தான் இருக்கும்! வாழ்த்து-"கள்/ க்கள்" இருக்காது! => கள்-ளுண்ணாமை! :))
* வாழ்த்து = ஒருமை!
* -கள் (அ) -க்கள், விகுதி சேர்த்தால் வருவது = பன்மை!

சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்கு மட்டுமே பயன்படுத்துறது வழக்கம்;
யானைகள் - பூனைகள் | ஆனா உயர்திணை? தோழியர் - பாவையர்

தோழிகள் -ன்னு அப்பறமாத் தான் வந்துச்சி:) இன்னிக்கி... எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:))

ஒருமையைப் -> பன்மை ஆக்கத், தொல்காப்பியர் ஒரு formula சொல்றாரு! = "விகுதி செய்யவும்"
* ஆட-வன் = ஆட-வர்
* பெண் = பெண்-டிர்
* சான்-றோன் = சான்-றோர்

அர், இர், ஓர் = எல்லாமே பன்மை விகுதி! ஆனா கவனிச்சிப் பாருங்க; எல்லாமே உயர் திணை தான்!
* யானை = யானை-யர் ன்னு சொல்லுறதில்ல!:)
* யானை = யானை-கள்!

So... அஃறிணைப் பன்மை விகுதி = கள்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
கொள்வழி உடைய பல அறி சொற்கே (தொல் - சொல்லதிகாரம்)

கள்ளொடு சிவணும் = சிவன் கள்ளு குடிச்சாரு ன்னு, Type Typeஆ, அர்த்தம் பண்ணப்படாது:)
பாவம் சிவபெருமான்! கருணையே உருவானவரு!  அவரு 'விடம்' தான் குடிச்சாரு! 'கள்' அல்ல!
சிவ"ன்" = அவருக்குக் கண்ணு வேணும் ன்னா மூனா இருக்கலாம், ஆனா சுழி ரெண்டு தான்:)

இங்கே "சிவணும்" ன்னா "சேரும்/ பொருந்தும்" -ன்னு பொருள்!
கள்ளொடு சிவணும் = -"கள்" என்ற விகுதியோடு சேரும்!

இன்னொரு technique-உம் சொல்லிக் குடுக்குறாரு, நம்ம தொல்காப்பியர்!
கலந்தன கண்ணே! கழன்றன வளையே!
கலந்தன கண்களே-ன்னு தானே சொல்லணும்? தேவையில்லை!
கலந்தது -ன்னு சொல்லாம... கலந்தன என்று சொன்னாலே பன்மை தான்!
அதனால் கண்களே-ன்னு explicitஆ சொல்லத் தேவையில்லை;
கலந்தன கண்ணே! (கலந்தன கண்களே என்றாலும் பிழையில்லை); இது "மொழி நெகிழ்வு"!

இப்படி, கலந்தன/ கலந்தது போன்ற வினைமுற்றை வைத்தும், ஒருமையா, பன்மையா ன்னு எளிதாக் கண்டு புடிச்சீறலாம்!
தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (தொல் - சொல்லதிகாரம்)


ஆனா, இந்தக் "-கள்" மூலமா, ஒரு பெரிய பிரச்சனை வந்துருச்சி!
படிச்ச மனுசன், ரொம்ப மரியாதை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டான்!:)
சில "நித்ய" ஆதீனங்கள்..."யாம் அறிவோம்!" ன்னு சொல்றாங்களே;  அது போல வச்சிக்குங்களேன்;
அதென்னடா யாம் அறிவோம்? "நான் அறிவேன்"-ன்னு சொன்னா என்னவாம்?

ஒருமை = ஒரு மாதிரியா இருக்காம்!
பன்மை தான் = மரியாதையா இருக்காம்:)
* அரசன் = மரியாதைக் குறைச்சல்!
* அரசர் = மரியாதையா இருக்கு!

ஆனா, அர் = பன்மை விகுதி ஆச்சே??? | ஆட-வன் = ஆட-வர்;
பன்மையைக் கொண்டு போய், மரியாதைக்கு வச்சிட்டோம்-ன்னா.... அப்பறம் பன்மைக்கு என்ன பண்ணுறதாம்?

=> விகுதியோடு-விகுதி சேர் => அரசு + (அர் + கள்)

-கள் (எ) அஃறிணை விகுதியை,
மரியாதைப் பன்மை காரணமாக,
உயர் திணைக்கும் வைக்கலாம் -ன்னு மாற்று ஏற்பாட்டைச் செஞ்சாரு!

* மன்னன் - மன்னர் = ஒருமை
* மன்னர் - மன்னர்கள் = பன்மை

அரசு-அர்-கள் = This is like double plural:)
ஆங்கிலத்தில், King - Kings! அவ்ளோ தான்; மரியாதைப் பன்மைல்லாம் கிடையாது; மருவாதை தெரியாத பயலுவ!:)

திராவிட மொழிகளில் தான் "மரியாதைப் பன்மை" ன்னு நினைக்கிறேன்!
தெலுங்கில்:
* ஒருமை = கிருஷ்ண தேவ ராஜு, கிருஷ்ண தேவ ராஜூலு!
* பன்மை = ஆந்திர தேச ராஜுலு

நாய் = குக்க; நாய்கள் = குக்கலு! ட்வீட்டர் = ட்வீட்டர்லு :)) மரியாதை குடுக்குறா மாதிரிக் குடுத்து, அஃறிணை ஆக்கீறலாம் போல இருக்கே:)


சரி, நாம Matter க்கு வருவோம்; "-கள்" எப்படி "-க்கள்" ஆச்சு??

தொல்காப்பியத்துல சொன்னதே தான்!.. "கள்/ க்கள்" = ஒற்று இரண்டாகும்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
அளபிற் குற்றுயிர் இரண்டு ஒற்றாகும்

இப்படி இரண்டு ஒற்று மிகுவதைப், பல இடங்களில் காணலாம்!
* ஆ = ஆ-க்கள்
* மா = மா-க்கள்
ஊர்க் குறு மா-க்கள் வெண் கோடு கழாஅலின் (புறநானூறு)

இலக்கண ஆசிரியர்கள், -க்கள் சரளமாகப் பயன்படுத்துவர்;
Ex: "லள -க்கள்   திரிந்த  னண -க்களுக்கு முன்னின்ற மகரம் குறுகும்"

முன் சொன்ன கதை தான்! "மரியாதைப் பன்மைத்" தாக்கத்தால், ரெண்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
= பூ= பூக்கள் & குரு = குருக்கள்

Okடா இரவி... புரிஞ்சிருச்சி! -கள், -க்கள் = ரெண்டுமே பலவின்பால் விகுதி! ஒத்துக்கறோம்;
ஆனா.. என் கேள்வி என்ன-ன்னா: எதை, எங்கே பயன்படுத்தறது? அதை இன்னும் நீ சொல்லலீயே?
குரு=குருக்கள் போல, வீடு=வீடுக்கள் -ன்னு எழுதலாமா?:) ha ha ha!


இங்க தான் "டண்-டணக்கா" இருக்கு!:)
குரு = குருக்கள்! ஆனா...வீடு = வீடுக்கள் அல்ல!
Fan = Fans! ஆனா Man = Mans ன்னு கேட்போமா?:) Man = Men!

இதுக்குப் பேரு தான் = மரபியல்! (சொல்லதிகார - விளி மரபு)

புழுக்கள், பசுக்கள், குருக்கள்
புழு-கள், பசு-கள், குரு-கள்-ன்னு சொல்லிப் பாருங்க! எப்படி இருக்கு? :)

புழு-க்-கள் = புழுவின் கள் = Chinese Soup-ன்னு... சில குசும்பு புடிச்ச இலவச நாத்தனார்கள் அர்த்தம் பண்ணிக்கலாம்!
எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து; டுமீலன்ஸ் & குடிப்பழக்கம் always go together -ன்னுலாம் எள்ளிக் கெக்கலிப்பாய்ங்க!:(

ஆனா...."எழுத்து-க்கள்" ன்னு எழுதற "டுமீலன்ஸ்" யாரு யாரு?
= தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
= இளம்பூரணர்
= மணக்குடவர்
= ஈழத்தின் சைவத் தமிழறிஞர், ஆறுமுக நாவலர்
= All of the Above!

உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ன்னு சொல்லுவாங்க! அவரின் தமிழ் அறிவு, எந்த Tweeter க்கும் இளைச்சது கிடையாது!

நீங்களே கீழே வாசிச்சிப் பாருங்க...
எத்தனை முறை..."எழுத்து-க்கள், "எழுத்து-க்கள்" ன்னு... பயன்படுத்தறாரு?



பாத்தீங்கல்ல? ஆனானப்பட்ட தொல்காப்பிய ஆசிரியர், இலக்கணப் பிழை பண்ணிட்டாரா? இல்லை!
முழு உரையும் இங்கிட்டு போய் படிச்சிக்கோங்க!
http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

இப்போ தெரிகிறதா?
= நச்சினார்க்கினியர் எழுத்துக்கள் -ன்னு தான் எழுதுகிறார்;
= வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள்.. சரியே! பிழை இல்லை!


சரிப்பா... இது ஒரு சாதாரணச் சொல்லு;
இதுல ஏன் இம்புட்டு உறுதி காட்டுற நீயி?


ஏன்னா, இந்த வாழ்த்துக்களை வச்சியே, #TNFisherman இயக்கத்தின் போது, தமிழ் உணர்வாளர்களை, "டுமீல்" ன்னு ட்விட்டரில் இளக்காரம் பேசினார்கள்!
#MullaPeriyar என்ற மலையாள வழக்கை வச்சி, பெரியார் என்ன முல்லா-வா? -ன்னு எள்ளி ஏசினார்கள்:(

மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்"
= இப்படிப் பேசிய "பண்டிதாள்", இப்போ எங்கே போய் மூஞ்சியை வச்சிப்பாங்க?
= நச்சினார்க்கினியர் பேச்சுக்கு, எதிர்ப்பேச்சு பேசச் சொல்லுங்க, பார்ப்போம்!

மத்தபடி... இதை, இம்புட்டு வளர்க்க நான் எண்ணியதே இல்லை; இளக்காரக் கீச்சுகளின் போதும் அமைதி காத்தேன்; இன்றே வெடித்தேன்; மொழியின் மான உணர்ச்சி; அதற்காகவே! 

தமிழ் மொழி, எக்காரணம் கொண்டும், தன்னிடம் உள்ள நல்ல சொற்களை இழந்து விடக் கூடாது!!
இது தொல்காப்பியர் தொட்டு வந்த மரபியல்! மொழியியல் நெகிழ்வு!
அதை over night -இல் tweet போட்டு, அழிச்சீற முடியாது! கூடாது!

மத்தபடி, கற்றது கை மண்ணளவு! திருத்திக் கொள்ள வெட்கப்படவே மாட்டேன்;
அப்படித் தான் அன்னிக்கு, @naanraman என்பவர் செய்வினை/ செயப்பாட்டு வினை -ன்னு கேட்ட கேள்விக்கு, நானும் @nchokkan சாரும் ஆடிப்போனோம்;
@naanraman யாரு-ன்னே தெரியாது! அவர் சுட்டிக் காட்டியதை ஏத்துக்கிட்டு, மன்னிப்பும் கேட்டு, தன்வினை - பிறவினை -ன்னு மாற்றியே இட்டேன்!

“மொழி மரபியலை” நம் Ego -வுக்கு அணுகாமல்....
தமிழைத் தமிழாக அணுகிப் பார்த்தா, இது புலப்படும்!
------------

இன்னோன்னும் சொல்லணும்!
மொதல்ல, எழுத்து-க்கள் இலக்கணப்படியே தவறு -ன்னு சொன்னவங்க..
இப்போ நச்சினார்க்கினியர் தரவு கண்டதும்
Tune ஐ மாத்தி, "அனர்த்தம்" வந்துறப்படாதே -ன்னு கவலைப் படுறாங்களாம்:)

எழுத்து-க்-"கள்" = "போதை" தரும் எழுத்து! 'அனர்த்தம்' வந்துருமாம்!
அப்படீன்னா Fruits = பழங்-கள்? = பழமையான கள்? 10 year Wine ஆ?:)
இனி பழங்-கள் ன்னு யாரும் எழுதாதேள்; "பழம்ஸ்" ன்னு எழுதுங்கோ??:)

* வாழ்த்து + க் + கள் = "குவார்ட்டரோடு" கூடிய வாழ்த்து;
* வாழ்த் + "துகள்"? = வாழ்க்கையே தூள் தூளாப் போவட்டும்?
இப்படி நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம், 'அனர்த்தம்' என்ற பேரில், நாக்கால வெட்டி வெட்டிக் கெக்கலிப்பது = மட்டமான மனப்பான்மை:(

"காய் தொங்குது" = பலான அர்த்தமெல்லாம் சொல்ல முடியும்:)
அதுக்காக, "காய்" என்பதை மொழியில் இருந்தே துரத்திவிடுவோமா என்ன?

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சங்கேத மொழி இருக்கும்!
* கல்லூரி மாணவர்கள் ’பாஷை’
* டீக்கடை ’பாஷை’
* அவாள் ’பாஷை’
* சென்னை”பாஷை’ ன்னு நிறைய...
கல்லூரிப் பசங்க, "காய்" ன்னா... நமுட்டுச் சிரிப்பு, சிரிக்கத் தான் செய்வாங்க:)
அதுக்காக, காய் எ. சொல்லை மொழியை விட்டே துரத்தீற முடியாது!
------------

சிறு, நீர்த் துளி உன் மேல் பட்டது
= இந்தக் காலத்தில் இப்படிச் சேர்த்துச் சொன்னா, எல்லாருக்குமே நெருடும்:))
ஏன்னா சிறு-நீர் universal ஆக ஒன்றைக் குறிக்கத் துவங்கி விட்டது!
கொஞ்சம் நீர்த் துளி உன் மேல் பட்டது -ன்னு மாத்திச் சொல்லலாம்;

ஆனா,காய் என்பதோ / எழுத்துக்கள் என்பதோ, universalஆக ஒன்றைக் குறிக்கவில்லை!  
பொதுப் புழக்கத்தில் இன்னமும் இருக்கு! இப்படிப் பரவலாக இருக்கும் சொல்லை/ தமிழைக் காணாமல் போக.. நாமே வழி செய்யலாமா?:((
------------

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியாக இருக்கும் ஒன்றைத்... தவறு -ன்னு "திருத்துவது"!

யாதும் ஊரே, யாவரும் கே"ளீ"ர் ன்னு எழுதினா...
அப்போ... கே"ளி"ர் = உறவினர் ன்னு திருத்துங்க!
ஆனா, வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் சரியே; மிகையாகத் திருத்தாதீர்

* தொல்காப்பியர் - நச்சினார்க்கினியர் பலுக்கல்,
* ஈழத்து அறிஞர் பலுக்கல்
* இன்றைய இராம.கி ஐயா வரை பயன்படுத்துவது...
* அதை "மிகைத் திருத்தம்" பண்ணித் துரத்திடாதீங்க!
தமிழுக்காக, உங்களிடம் என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!



சரி, எழுத்துக்கள் சரியே = தொல்காப்பிய ஆசிரியர்கள் மூலம் பார்த்து விட்டோம்!

இன்னோன்னும் சொல்லிடறேன்:
வாழ்த்துக்கள் என்று எழுதுவோர், -"க்கள்" என்பதற்கு, குற்றியலுகர விதியை ஆதாரமாக் காட்டுவாங்க! ஆனா அதுவும் தவறே!
நாம தான் எந்தக் கட்சியிலும் நிக்குற சுபாவம் இல்லீயே:) தமிழைத் தமிழாய் அணுகவே பிடிக்கும்!

குற்றியலுகரப் புணர்ச்சி:
பிடித்து + கொள் = பிடித்துக் கொள்! =>ஒற்று மிகும்!
இதே போல வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் ன்னு எடுத்துக்கக் கூடாது!

ஏன்னா இவ்விதி, ரெண்டு "சொற்களுக்கு" இடையே தான்!
* "-கள்" = சொல் அல்ல!
* "-கள்" = விகுதி! அது வரு"மொழி" அன்று!
So, முன்பு சொன்ன விகுதி விதியைத் தான் எடுத்துக்கணும்! குற்றியலுகர விதியை அல்ல!
------------

எங்கே -கள் போடுறது? எங்கே -க்கள் போடுறது?
= சுருக்கமாப் படம் போட்டுச் சொல்லட்டுமா?
= விரிவா, இதோ நூலகத்தில் பாத்துக்கிடலாம்!
Here = http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84

A Ready Reckoner Picture is also following after some examples :)

1) "க்" மிகலாம்...

* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே!
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே!

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

எழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே! போலவே பாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்!
ஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்! தழும்புக்கள் இல்லை!

வல்லின எழுத்து இரட்டிக்கும் போது மட்டுமே.. க்கள் என்று அளபெடுத்து ஒலிக்கலாம்! *இரு"ப்பு" -க்கள்
*வாழ்"த்து" -க்கள்
*எழு"த்து" -க்கள்
*அ"ச்சு" -க்கள்

இந்த நுட்பத்தை/ நெகிழ்வை அறிந்து கொள்வோம்!
*வாழ்த்து= த் வல்லின ஒற்று! => மிகலாம் = வாழ்த்துக்கள்!
*இரும்பு=   ம் வல்லின ஒற்று அல்ல! => மிகாது = இரும்புகள்!
*கொலுசு=  ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

------------

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்

இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை மட்டுமே! கைகள்! கைக்கள் அல்ல!)
------------

3) "க்" மிகவே கூடாது


ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
------------

அவ்ளோ தானுங்க! இதுக்கா இத்தினி வாய்க்கா வரப்புத் தகராறு?:)
Lemme put this as a ready reckoner for the benefit of all...(save this img) 


வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க...
என்னமோ ஏதோ? ன்னு பயந்து போயி, மதம் மாத்திக்கிட்டவங்க,
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்:)
பாவ மன்னிப்பு கேக்க வேணாம்! ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)

Thanks for travelling with me in this long story:)




முடிப்பா, மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

1) Tamizh has a Written Constitution! That too with a version history of 2000+ years!
So, Never “banish” rightful words from “heritage”!
------------------------------------------------

2) அப்போ தவறான சொற்களை எப்படித் தான் அடையாளம் காண்பது?

= யார்.. தவறு-ன்னு சொல்றாரோ, அவரிடம், தரவு கேளுங்கள்!
நானே சொன்னாலும், என். சொக்கன் சொன்னாலும், வேறெவர் சொன்னாலும்... தரவு தரவு:)
------------------------------------------------

3) தொல்காப்பியரை அவ்ளோ லேசுல எடை போட்டுறாதீக!
நீங்களா முடிவு கட்டி.... Tweet போட்டுறாதீக!
தொல்காப்பியம் = தட்டுங்கள்! திறக்கப்படும்:))

ஐயா -> அய்யா
= தந்தை பெரியார் தான் ஐ->அய் ன்னு தேவையில்லாம மாத்தினாரு-ன்னு சில தமிழ்ப் "பண்டிதாள்" கேலி பேசினாங்க-பேசுவாய்ங்க! (#MullaPeriyar)
= தமிழ்ப் போர்வையில் இருந்துக்கிட்டே சம்ஸ்கிருத-பாசமிகு பண்டிதாள்!

ஆனா, பெரியாரைத் திட்டும் இவர்கள், தொல்காப்பியர் மேல் கை வைக்க முடியுமோ?
பெரியாருக்கு 2000+ years back, தொல்காப்பியரே.., எழுத்துச் சீர்திருத்தம் குறிச்சி வச்சிட்டுத் தான் போய் இருக்காரு - வியப்பா இல்ல?

ஐ & அய்!
"அ"-கரத்து இம்பர் ,"ய"-கரப் புள்ளியும்
"ஐ" என நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும் (தொல்-எழுத்ததிகாரம்)

தொல்காப்பியர் = ஆதித் தமிழ்த் தந்தை
அவரை விட, உங்க அரைகுறை tweet பெருசில்ல-ன்னு உணரவும்!


4) "பிக்காலி" ன்னு உங்களைத் திட்டுறவன் கூட Ok, ராசி ஆயீருவீங்க!:)
ஆனா உங்களை எதிர்ப்பாய் ஒன்னுமே பேசாம...
உங்க கருத்துக்கு மாறாக, உண்மைத் தரவு காட்டிட்டா?
ஆதாரமாடா குடுக்குற? நீயே என் எதிரி! என்று ஆகிடறோம் அல்லவா?:)

= கருத்து வேற, மனிதம் வேற!

என் நண்பர்கள்-ன்னா.....
= என் கருத்துக்கு உடன்பட்டே அவிங்களும் இருக்கணும்;
= என் உணர்ச்சிகளையே அவங்களும் பிரதிபலிக்கணும்!
Plz... இது வேண்டாமே:)
------------------------------------------------

5) கருத்து வேறுபட்டாலும், மனம் ஒன்றான குணம்! = தாமே பெற வேலவன் தந்தது!

"டேய் முருகா"-னு.. "Dei" தான் போடுறேன்; கோச்சிக்கவே மாட்டான்:)
உடனே, "டேய் பெருமாள்"-னு சொல்லேன் பார்ப்போம்? -னு, சமயக் கணக்கா வம்பிழுக்கக் கூடாது!
சொல்ல மாட்டேன்! ஏன்னா அவரு = அப்பா! காதலனை டேய் போடலாம்:) அப்பாவை?:)
------------------------------------------------

6) Finally.....
#TNFisherman, 
#EelamTamils, 
#MullaPeriyar 
போன்ற Twitter இயக்க முயற்சிகளில், எழுத்துப் பிழை வரலாம்! அது ஒன்னும் "பஞ்சமா பாதகம்" இல்லை!
ஆனா அதுக்காக...
டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; டுமீலன்ஸ் அப்பறம் கோஷம் போடப் போவலாம் - போன்ற "மட்டமான இளக்காரங்கள்" வேண்டாமே!

இரங்கல் வீட்டிலே சந்திப் பிழை காண்போமா? :(

------------------------------------------------

@iamkarki கிட்ட கடன் பாக்கி இருக்கு; எலே... எத்தியோப்பா ஆப்பிரிக்க குழந்தைங்க முகாமில்,
ஆப்பிரிக்க பசங்க.. விஜய் பாட்டு பாடுதுங்க = "என் உச்சி மண்டைல சுர்-ங்குது" = I had the shock of my life: )

அனைவருக்கும் தமிழ் இனிய...
வாழ்த்துக்கள் & வாழ்த்துகள்! வர்ட்டா?:)

43 comments:

  1. Replies
    1. என்ன ரவி, நலமா? ரொம்ப நாளாச்சுது பாத்து! திருக்கோயிலூர் எப்படி இருக்கு?:)

      Delete
  2. இயன்றவரை தமிழில் தவறின்றி பேசவும் எழுதவும் செய்வதே நாம் நம் தாய்க்கும் தந்தைக்கும் செய்யும் சேவையெனக் கருதுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை!
      இயன்ற வரை இயலுங்கள்!

      மொழி = வெறும் Form of Communication மட்டுமல்ல!
      மொழி = ஒரு பண்பாட்டுக் கூறு!
      அந்த மரபியல் பால் தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு இனிய வாழ்த்துக்கள்!

      Delete
  3. ரவிசங்கர்,

    நீண்ட விளக்கத்துக்கு நன்றி,

    இலக்கணப்படி ‘வாழ்த்துக்கள்’ சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் நான் போக விரும்பவில்லை. நான் தமிழ் இலக்கணத்தை முழுமையாகப் படித்தவன் அல்லன் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்.

    //ஒற்றோடு வந்தா = மிகலாம்(கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")//

    ஆக, வாழ்த்துக்கள், வாழ்த்துகள் இரண்டுமே சரியாக இருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன், அந்தமட்டும் மகிழ்ச்சி,

    ‘வாழ்த்துக்கள்’ என்பதில் (விதண்டாவாதமாகவேனும்) இன்னொரு பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு, ‘வாழ்த்துகள்’ என்பதில் அது இல்லை, ஆகவே நான் ‘வாழ்த்துகள்’மட்டுமே பயன்படுத்த விரும்புகிறேன்,

    இந்தத் தரவு கேட்கும் விஷயத்திலும் நான் உங்களுடன் முரண்படுகிறேன், இதில் என் கட்சி:

    1. நானாகச் சென்று யார் எழுத்திலேனும் ஒரு திருத்தம் சொன்னால், தரவு காட்டவேண்டியது என் கடமை
    2. ஆனால் யாரேனும் என்னிடம் கேள்வி கேட்டால், எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் சொல்வேன், பதிலுக்குத் தரவு கேட்டால் அது நியாயமில்லை, நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம், They can't take my time for granted, If I am wrong, it is their task to prove it, இல்லையா?
    3. ஒருவேளை நானோ நீங்களோ நாளைக்கே ‘இவ்விடம் கட்டணத்தின்பேரில் இலக்கணப் பிழைகள் திருத்தித் தரப்படும்’ என்று போர்ட் போட்டுக்கொண்டு உட்கார்ந்தால், அப்போது நம் திருத்தங்களுக்குத் தரவு காட்டியே தீரவேண்டும், காசு வாங்குகிறோமே

    மேட்டர் அஷ்டே!

    : என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் அண்ணா
      மிக்க நன்றி, பந்தலிற் பாதம் பதித்தமைக்கு:))
      I have always known your stand on this & I respect that! - Bcoz u dont disrespect Tamizh Efforts as "டமீல் & டுமீலன்"

      But "வாழ்த்துக்கள்" என்று பழக்கம் காரணமாக எழுதியவர்கள் - அதிகம் தமிழறியாச் சில கீச்சர்களை,
      "ஒழுங்காத் தமிழ் எழுதுங்கடா, அப்பறம் #Eelam #tnfisherman கோஷம் போடப் போவலாம்" ன்னு எள்ளி நகையாடியவர்களை என்ன சொல்வது?

      - இப்போ வந்து நச்சினார்க்கினியரை மறுக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்! யார் தந்த ஆணவம்? அகந்தை??
      - இப்போ எங்கே போனது "டமீல் & டூமீல்?" :((
      ------------

      //‘வாழ்த்துக்கள்’ என்பதில் (விதண்டாவாதமாகவேனும்) இன்னொரு பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு, ‘வாழ்த்துகள்’ என்பதில் அது இல்லை//

      "விதண்டாவாதம்" என்று நீங்களே ஒப்புக் கொண்டமைக்கு நன்றி!
      ஆனா வாழ்த்துகள் = பரிசுத்தமானது ன்னு முடிவு கட்டிறாதீக!:))

      வாழ்த் + துகள் = வாழ்க்கை என்னும் துகள்!
      * ஒன் வாழ்வே தூள் தூளாப் போவட்டும் ன்னு சொல்லுறது நல்லா இருக்கா?
      * இல்லை வாழ்த்து + க் + கள் -ன்னு சொல்லுறது நல்லா இருக்கா?
      :))))

      நாக்கால் எப்படி வேணுமானாலும் ஒரு சொல்லை வெட்டலாம்! தாங்கள் அறியாதது அல்ல! But you have your own compulsions:))
      ------------

      Delete
    2. //இந்தத் தரவு கேட்கும் விஷயத்திலும் நான் உங்களுடன் முரண்படுகிறேன்//

      தாராளமாக முரண்படுங்கள்!:)
      நான் கூட, முருகனிடம், கன்னா பின்னா-ன்னு முரண்படுவேன்:))
      ----------

      //2. ஆனால் யாரேனும் என்னிடம் கேள்வி கேட்டால், எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் சொல்வேன், பதிலுக்குத் தரவு கேட்டால் அது நியாயமில்லை//

      மறுக்கிறேன்!

      உங்களுக்குச் சரி-ன்னு படுவதைச் சொல்ல....மொழி இயல் = Fiction அல்ல! Non Fiction!:)
      நீங்கள் எழுதிய Bill Gates புத்தகத்தில், "உங்களுக்குச் சரி-ன்னு படுவதை" அப்படியே சொல்லி விடுவீர்களா?

      * ஒன்று - அக்குறிப்பிட்ட நிகழ்வைத் தொடாமல் செல்வீர்கள்
      * இரண்டு - அதை விசாரித்து, பின்னர் இடுவீர்கள்
      * மூன்று - இல்லை...இது என் அனுமானம், இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன ன்னு பதிவு செய்வீர்கள் அல்லவா?

      அது காசு குடுத்து வாங்கும் புத்தகம்
      இது நேரமும் நம்பிக்கையும் குடுத்து வாசிக்கும் எழுத்து - அவ்வளவே:))

      //They can't take my time for granted//

      They also spend their family time & valuable time, reading you...
      Will you take their "trust" for granted?
      - That too when u know that a debate exists on the subject? Will u hide it wantonly?
      ---------------

      //3. ஒருவேளை நானோ நீங்களோ நாளைக்கே ‘இவ்விடம் கட்டணத்தின்பேரில் இலக்கணப் பிழைகள் திருத்தித் தரப்படும்’ என்று போர்ட் போட்டுக்கொண்டு உட்கார்ந்தால், அப்போது நம் திருத்தங்களுக்குத் தரவு காட்டியே தீரவேண்டும், காசு வாங்குகிறோமே//

      * காசு வாங்கினால் மட்டும் தான் தரவுகள் தர வேண்டும் = என்பது பொருள்முதல்வாதம்:))
      * நம்பிக்கையும், வாசகநேரமும் சேர்த்தே நீங்கள் வாங்குவதால் = இயன்றவரை, (I repeat), இயன்றவரை, தரவுகளோடு உரசிப் பார்த்துச் சொல்லுதல் = சான்றாண்மை!

      * தமிழ் நூல் வளம் = காசோடு தொடர்புடையதாக இருப்பினும் (நூல்/புத்தகம் வழியாக)
      * தமிழ் நலம் = சற்றே காசெல்லையும் தாண்டியது! அதனால் தான் #365paa க்கு அயராது உழைக்கிறீர்கள், உழைக்கிறோம்!
      * ஆப்பிரிக்க முகாமில் இணையம் கிடைக்கலைன்னாலும் ஏன் Offlineஇல் சேமித்து இடுகிறேன்? என்ன கிடைத்து விடும் இதனால்?? - பணமா? பேரா?? :)) - அதுவும் இப்பல்லாம் பேரில்லாமல் இடுகிறேன்:))))
      ------------

      "தரவுகள் தா" -ன்னு தங்களை யாரும் கழுத்தைப் பிடிக்கக் கூடாது! = அது தவறு!
      அதே சமயம், இயன்ற வரை, தரவு குடுத்தோ, இல்லை, இது குறித்து மாற்றுச் சிந்தனைகள் இருக்கின்றன என்று சொல்லி இடுவதே....

      கடன்என்ப நல்லவை எல்லாம் - கடன்அறிந்து
      சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு!

      எப்பொருள் எத்தன்மைத் தாயினும் - அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்ப தறிவு
      ------------

      பிழையாக ஏதேனும் சொல்லியிருப்பின், முருகருள் கொண்டு என்னை மன்னிக்க!

      Delete
    3. //அதுவும் இப்பல்லாம் பேரில்லாமல் இடுகிறேன்//

      shucks!
      என் வாயாலேயே Publicஆ உண்மையை ஒத்துக்க வச்சிட்டீங்க-ல்ல?:) Too bad chokkare:))))
      இதுக்குத் தான் உணர்ச்சிவயப்படும் போது, carefulஆ வயப்படணும்-ங்கிறது:) முருகா!

      Delete
  4. அருமையான பதிவு எழுதியதற்கு 'வாழ்த்துக்கள்' :)
    இதை என்னுடைய பதிவில் சேர்க்கிறேன். http://bit.ly/LnFhPh

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதல பலராமா!
      நீ எழுத வச்ச:))

      எல்லாப் புகழும் குறும்படக் கலைஞர், பல-ராமனுக்கே:)

      Delete
  5. வாழ்த்துகள் என்பதுதான் சரி. வாழ்த்துக்கள் என்பது சரி இல்லை. அதே மாதிரிதான் எழுத்துகள், சொத்துகள், முத்துகள் என்று சொல்லறதுதான் சரி By Kothanar

    http://elavasam.blogspot.in/2011/10/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. By Kothanar is NOT valid தரவு!
      By Thol-Kaapiyar is valid தரவு!
      By நச்சினார்க்கினியர் is valid தரவு!

      மேலே காட்டிய நச்சினார்க்கினியர் உரை, இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்....அத்தனையும் மறுத்து...நிறுவுங்களேன் பார்ப்போம்:)

      Delete
  6. @nchokkan அண்ணா

    "மிகலாம்" ன்னு சொல்லி, அதுக்கு கீழே எடுத்துக்காட்டும் குடுத்திருக்கேன்! பாத்தீங்களா?:)

    நான் நினைச்சிருந்தா, அதை மறைத்து விட்டு..."நச்சினார்க்கினியரை" மட்டும் காட்டியிருக்க முடியும்! Strongest Evidence!:)
    ஆனால் அப்படிச் செய்யேன்! என் சுபாவத்தில் இல்ல!:))

    ஒரு கருத்தை எதிர்க்கணும் (அ) எனக்குப் பிடிச்சதை நிலைநாட்டணும் -ங்கிறத்துக்காக...
    பொய்யாகத் தமிழைப் பயன்படுத்த மாட்டேன் - இது காதல் திருமுருகன் மேல் சத்தியம்!
    தமிழைத் தமிழாக அணுகவே பிடிக்கும்!
    அதான் முருகன்-திருமால், சங்கத் தமிழ்த் தொன்மம் என்று சொல்ல முடிந்தது!

    //ஆகவே நான் ‘வாழ்த்துகள்’மட்டுமே பயன்படுத்த விரும்புகிறேன்//

    அது உங்கள் விருப்பம்:)
    ஆனால் நச்சினார்க்கினியரையும், இளம்பூரணரையும் பார்த்தீர்கள் அல்லவா?:))

    ReplyDelete
  7. முதலில், Compulsion காரணமாக அன்றி என்னுடைய சுய விருப்பத்தின்பேரில்தான் நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன்,

    இரண்டாவது,

    //உங்களுக்குச் சரி-ன்னு படுவதைச் சொல்ல....மொழி இயல் = Fiction அல்ல! Non Fiction!:)//

    நீங்கள் என் பின்னூட்டத்தின் அடிப்படையையே புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள், அதற்கு நான் பதில் சொல்கிறேன், ஆக, அவர்கள்தான் என் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், நான் அவர்கள் நேரத்தைப் பிடுங்குவதில்லை. ஒவ்வொரு கேள்விக்கும் தரவுகள் தேடிப் பதில் தந்துகொண்டிருந்தால் கட்டுப்படியாகுமா? நேர்மையான பதில் சொல்லுங்கள்,

    ஆக, நான் என்ன செய்வேன்? நேரத்தை மிச்சப்படுத்த ‘எனக்குத் தெரியாது’ என்று பதில் சொல்வேன், அது பரவாயில்லையா? :) ‘நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள்?’ என்று கேட்பார்கள், நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும் இப்படி யோசித்தா எழுதுகிறோம்? அதான் பிரச்னை.

    என் கட்சி : நான் வாசித்தது / கேட்டது / புரிந்துகொண்டது (பல நேரங்களில் சொல்லிப் பார்த்து ஒலி மூலம் உணர்ந்தது : Common Sense) அடிப்படையில்தான் நான் எழுதுகிறேன். நான் மொழியியல் வல்லுனன் அல்லன், ஆகவே இதில் தவறுகள் நேரிடலாம், சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன்,

    ஆக, ட்விட்டரிலோ வேறெங்கோ ஒரு கேள்வி வந்தால், எனக்குப் படுவதைதான் சொல்வேன், அது ‘Authentic answer' என்றோ ‘அதிகாரப்பூர்வமான, வேறு சாத்தியங்களே இல்லாத’ கருத்து என்றோ நினைத்தால் அது என் பிழை அல்ல, இந்த விஷயத்தில் நாம் தினமும் கற்கிறோம், எல்லாமே Draftதான், திருத்தங்களுக்கு உட்பட்டது,

    உதாரணமாக, இந்தப் பின்னூட்ட வரிசையைப் பார்க்கவும் : http://kushionline.blogspot.com/2012/05/1.html?showComment=1338582399092#c8769088674361797620

    இப்படிதான் நான் எழுதுவேன், தரவுகள் இல்லாமல்தான் யோசிப்பேன், பிடித்தால் அதே கோணத்தில் நீங்களோ / யாரோ என்னுடன் வரலாம், விடை காணலாம், பிடிக்காவிட்டால் ‘இவனுக்கு மொழி முழுசாத் தெரியலை’ என்று என்னிடம் கேள்வி கேட்காமல் இருக்கலாம், அம்மட்டே!

    ReplyDelete
  8. //நீங்கள் எழுதிய Bill Gates புத்தகத்தில், "உங்களுக்குச் சரி-ன்னு படுவதை" அப்படியே சொல்லி விடுவீர்களா?//

    அங்கே நான் எழுதத் தொடங்குமுன்பே சரியானதைத் தேடிக் கண்டுபிடித்து எழுதுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன், ஆகவே தரவுகளைத் தேடிதான் எழுதுவேன், இது சரியான ஒப்பீடு அல்ல,

    //நேரமும் நம்பிக்கையும் குடுத்து வாசிக்கும் எழுத்து... They also spend their family time & valuable time, reading you... Will you take their "trust" for granted?//

    ஆம், இது என் பதிவுகளுக்குப் பொருந்தும், கேள்வி : பதில்களுக்கு அல்ல,

    நான் ஏற்கெனவே சொன்னதுபோல், இந்த வாதம் என்னிடம் (அல்லது உங்களிடம்) கேட்கப்படும் கேள்விகளுக்குமட்டுமே பொருந்தும். இங்கே அவர்கள் நம் நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், not the other way,

    This is like someone trying their hands on share market, going to a party, someone approaching them and asking "What do you think about company X's shares? They may give a tip on the fly, But it is not expert opinion, Just their feel, you can't ask for proof etc., there, if you ask "What is the proof?", he will say "No proof, You asked me and I gave my opinion, Now get lost" :)

    இது முரட்டுத்தனமான பதிலாகத் தோன்றலாம், ஆனால் இதுதான் எதார்த்தம் : Unless and until I claim myself an expert, my answers should be taken with the risk involved that they may be wrong, நீங்களேகூட உங்களிடம் casualலாகக் கேட்கப்படும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இத்தனைத் தரவுகளுடன் பதில் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கமுடியாது, Not practical, Not Scalable,

    அப்படியானால் நாம் ஏன் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும்? நம் மொழி அறிவைக் காட்டித் தம்பட்டம் அடித்துக்கொள்கிற எண்ணமா?

    ம்ஹூம், இல்லை, மொழி சரியாக எழுதப்படவேண்டும் என்கிற அக்கறை. ஆகவே நானாக எதையும் உருவாக்காமல், எனக்குச் சரி என்று பட்டதை, படித்ததை, உணர்ந்ததைச் சொல்கிறேன், அதுதான் நேர்மையான எனது பதில், ஏனெனில் நானும் அப்படிதான் எழுதுகிறேன்,

    Resumeல் ‘மேற்படி தகவல்கள் நான் அறிந்தவரையில் உண்மை’ என்று எழுதுவதுபோல.

    //That too when u know that a debate exists on the subject? Will u hide it//

    Of course not, ஆனால் எல்லா விவாதங்களும் ஒருவருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லையே,

    இன்றைக்கு என்னிடம் யாராவது ‘வாழ்த்துக்கள் தவறா?’ என்று கேட்டால். ‘தெரியவில்லை, ஆனால் வாழ்த்துகள் சரி’ என்றுதான் பதில் சொல்வேன். அது தவறான பதில் அல்லவே,

    //காசு வாங்கினால் மட்டும் தான் தரவுகள் தர வேண்டும் என்பது பொருள்முதல்வாதம்//

    இந்த விஷயத்தில் நான் பொருள்முதல்வாதிதான் :> நானாக எதையேனும் உருவாக்கிச் சொன்னாலொழிய, நான் நம்புவதைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதுதான் என்னுடைய தீர்மானம்,

    //இயன்றவரை, (I repeat), இயன்றவரை, தரவுகளோடு உரசிப் பார்த்துச் சொல்லுதல் = சான்றாண்மை!//

    இருக்கலாம், எனக்கு அதற்கு நேரம் கட்டுப்படியாகாது, இனிமேல் யாராவது கேட்டால் ‘தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போகிறேன் :>

    : என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  9. //நான் நினைச்சிருந்தா, அதை மறைத்து விட்டு... அப்படிச் செய்யேன்! என் சுபாவத்தில் இல்ல!:))//

    இத்தனை பேசியபிறகும் ‘வாழ்த்துகள் என்று எழுதுவதும் சரியே’ என்று நீங்கள் வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறீர்கள், அதற்கு வேறு உதாரணங்களைக் காட்டுகிறீர்கள், இந்தப் பிடிவாதம்தான் ரெண்டு பக்கமும் உள்ளது, அப்புறம் உங்கள் கட்சி எப்படி உத்தமக் கட்சியாகும்? :>

    : என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
    Replies
    1. சொக்கன் அண்ணா

      1. //இத்தனை பேசியபிறகும் ‘வாழ்த்துகள் என்று எழுதுவதும் சரியே’ என்று நீங்கள் வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறீர்கள்//

      வெளிப்படையாகப் பதிவில் இருக்கு! ஆனாலும், Bold Font போட்டுச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் தான் "எதிர்பார்க்கிறீர்கள்":)
      Can I also ask?
      "வாழ்த்து-க்கள் சரியே" என்று Normal Fontஇல் ஆச்சும் சொல்ல முடியுமா?

      #tnfisherman. #tamileelam ஐ, இதற்காக இழித்தல்லவோ பேசினார்கள்?:(

      நான் பல முறை - 'இரண்டும் சரியே' என்று ட்வீட்டி உள்ளேனே!
      ஆனால் அப்போதும், "என்னளவில் வாழ்த்துகள்" என்று சொல்லப்பட்டதே அன்றி, வாழ்த்து-க்கள் சரி என்று ஒரு சொல் சொல்லப்பட்டதா?

      பெருந்தன்மையை, ஒரு பக்கத்தின் மேல் மட்டும் திணித்தல் நலமா?:)
      நான் வெளிப்படையாக இட்டு விட்டேன்; Bold Font தான் இடவில்லை!
      --------------------

      2. அடிபட்ட குழந்தைக்கே முதலுதவி! அடித்த குழந்தையை வெறுக்கவில்லை! ஆனால் அடித்த குழந்தைக்கும் "முதல்" உதவி/Bold Font ன்னு கேட்டால்?:)

      3. சரி, Bold Font-இல் இடுகிறேன்!
      * நச்சினார்க்கினியர் வாழ்த்து-க்கள் என்கிறார்; நீங்களே பார்த்து விட்டீர்கள்!
      * அதே போல் வாழ்த்து-கள் க்கு ஒரே ஒரு இலக்கணத்-தரவு காட்டி விடுங்கள்! உடனே Bold Fontஇல் இடுகிறேன்! - உறுதி கூறுகிறேன்!

      Delete
  10. Replies
    1. attendance noted mrs & mr rajesh:)
      foto nallaa irukku; howz marriage life?:)

      Delete
  11. கே.ஆர்.எஸ்.

    அருமையான ஆக்கம்.

    பல ஆண்டாக இருக்கும் தமிழை இவங்க திருத்தி வளக்க போறதா சொல்லி கொலை பண்ற சாத்தானார்களுக்கு செம சாத்து :-))

    நீங்க சொன்னது போல தான் ,நாம மறுப்பு சொன்னா எதிரியாக பாவிக்கிறாங்க. என்ன கொடுமை இது!

    சிரமமான பணிச்சூழலிலும் , பொறுப்புடன் இப்படி தெளிவாக எழுத தனித்திறன் வேண்டும்,வாழ்த்துக்கள்& பாராட்டுகள்(உ வருது தானே சோ நோ "க்" சரியா?) கே.ஆர்.எஸ்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்...
      ஏதோ வெறும் ரெண்டு சொல்லு-ன்னா, இத்தனை மெனக்கட மாட்டேன், அமைதியாவே போயீருவேன்!
      ஆனா, அதை வச்சிக்கிட்டு, என்னமா போட்டு அடிச்சானுங்க, "டமீல்-டுமீல்" ன்னு; தமிழே தெரியாத "டுமீல்" உணர்வாளர்களாம்! அடிங்கொய்யால!

      இப்ப எங்கே போய் மூஞ்சை வச்சிப்பானுங்க? தொல்காப்பியரையும், நச்சினார்க்கினியரையும் பார்த்த பொறவு?
      ஆனா, இப்பவும் வெட்கம் இல்லாம இளிச்சிக்கிட்டுத் தான் இருக்கானுவ...

      நான் பொதுவில் இப்படிப் பேசி யாரும் பாத்துருக்கவே மாட்டாங்க! நானே பார்த்தது இல்ல:)
      என்னமோ தெரியல.... அப்படியொரு சீற்றம் வந்து விட்டது!

      Delete
  12. அடடே...... அருமையான பதிவு.

    இனிய வாழ்த்து(க்)கள்.

    வேனுமுன்னா வச்சுக்கோ, வேணாமுன்னா கடாசிடுன்னு நான்(நானா) நம்ம ஷ்டைலில் வச்சுக்கிட்டேன்.:-)))))

    ஊரில் இல்லை அதான் கொஞ்சம் லேட்டாகிப்போச்சு!

    ReplyDelete
    Replies
    1. ஆகா...டீச்சரா இது?:)
      வாங்க, வாங்க, நலமா?
      நீங்க வரது இல்லையா? இல்ல நான் பதிவு போடூறது இல்லீயா?:))

      //இனிய வாழ்த்து(க்)கள்.//
      I like it :)
      நீங்க இதை ரொம்ப நாளாக் கடைப்பிடிக்கறீங்க-ன்னு தெரியும் டீச்சர்:)
      தொல்காப்பியரை மீறி டீச்சர் நடந்துப்பாய்ங்களா?:)

      Delete
  13. அருமையான பதிவு... தங்கள் நேரத்திற்கும் அக்கறைக்கும் நன்றி!!!...வாழ்க தமிழ்!!!... :-)

    ReplyDelete
    Replies
    1. தமிழ் போல், நீங்களும் வாழி:)

      Delete
  14. "வாழ்த்துகளுடன்" என்று வரும்பொழுது 'க்' தேவையா?!!... இருக்க வேண்டுமா இல்லை வேண்டாமா?...ஏனனில் இப்பொழுதுதான் ஓரிடத்தில் படித்தேன் அதில் ஆசிரியர் "வாழ்த்துகளுடன்" என்று முடித்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஓரிடத்தில் படித்தேன், ஈரிடத்தில் படித்தேன் என்பதெல்லாம் வேலைக்காவாதுங்க!
      தொல்காப்பியர் என்ன சொல்கிறார்
      நச்சினார்க்கினியர் என்ன எழுதியுள்ளார்-ன்னு தான் நீங்களே பதிவில் பார்த்துட்டீங்களே; அப்புறம் என்ன?:)

      Delete
  15. அடடா...என்ன அற்புதமான வாதம்...சிறந்த தரவுகளுடன்...தங்களைப் போன்றோர் தமிழாசிரியர்களாய் இருந்திருந்தால் தொல்காப்பியரும், நச்சினார்க்கினியரும் ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் உறவாய் இருந்திருப்பர்....!

    பொன்னியின் செல்வனில் சுந்தர சோழர் தமிழமுதம் அருந்தி இருமாந்திருந்த இன்பத்தை நாமும் பெற்றோம்...மிக அருமை...:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரோ;
      தமிழ் ஆசிரியரா? அதெல்லாம் ரொம்ப புனிதமான பணிங்க;

      தரவு = என்பது இலக்கியம், மொழி, ஆய்வுக்குத் தான்!
      நம்பிக்கைக்கு அல்ல!!

      ஆறுமுகக் கடவுள் என் ஆருயிர்க் காதல் = நம்பிக்கை!
      ஆறுமுகக் கடவுள் மட்டுமே தொன்மைத் தமிழ்மரபு ன்னா = அப்போ தரவு:)

      Delete
  16. Adding this here too, from twitter!
    "தமிழ் இளக்கார அரசியல்" அங்கு அதிகம்; தலைமையேற்று நடத்துபவர்: "மாண்புமிகாத" இலவசக் கொத்தனார்!

    இந்தப் பதிவைக் கண்ட அவர், நச்சினார்க்கினியரை மறுக்கத் "திராணி" இல்லாமல், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் க்க்க்க் என்று...
    டைப் டைப்பாக் கிளப்பி இருந்தாரு! அங்கு இட்ட பதிலை இங்கேயும் பதிக்கிறேன்!
    **********************************************

    * கு"ன்"று = குன்றுக்கள் அல்ல! (மெல்லினம்)
    * ஆனா, மு"த்"து = முத்துக்கள் (வல்லினம்)
    வல்லின ஒற்று "மிகலாம்"! (பதிவில் வாசிக்கவும்)

    இதெல்லாம் வல்லினம்: (மிகலாம்)
    = சிறப்புக்கள், தரப்புக்கள், உறுப்புக்கள்

    இதெல்லாம் மெல்லினம்: (மிகாது)
    = இரும்புகள், துரும்புகள், எறும்புகள்

    அப்போ "தரவு-க்கள்"?:)))
    he he! அதுல ஒற்றே இல்ல! அதனால் => தரவுகள்
    ------------------

    வீடு = வீடுக்கள் அல்ல-ன்னு சொன்னேன்! (ஈரெழுத்து நெடில் - மிகாது)
    அப்போ = தேனீ??

    ஈ = ஈக்கள்! (ஓரெழுத்து நெடில் - மிகும்)
    தேன் அப்பறமா வந்து ஒட்டிக்குது ஈக்கு:)
    தேன் + ஈக்கள் = தேனீக்கள்!
    ----------------

    #tnfishermanஇல் "வாழ்த்துக்கள்" என்று எழுதிய அத்தனை தமிழ் ஆர்வலர்களையும்..
    "டுமீலன்களா" என்று இளக்காரம் பேசிய "Pundits"..

    இப்போ, தொல்காப்பியர், நச்சினார்க்கினியரே "எழுத்துக்கள்" ன்னு தான் எழுதியுள்ளார்...
    என்பதைக் கண்கூடாகப் பார்த்து விட்டு...அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் க்க்க்க்க்க் :)))

    Can = Cans, அப்போ Man = Mans தானே?-ன்னு டைப்பா டைப்பா யோசிக்க வேணாம்!:))
    ஒரு சொல்லுல பொருந்துறது, எல்லாச் சொல்லுக்கும் அப்படியே பொருந்தாது!
    அதுக்குப் பேரு = "விளிமரபு" -ன்னு சொல்லியுமா ஏறல?:)

    எப்பிடி ஏறும்?
    இளக்காரத்தை விட்டொழித்தால் ஒழிய ஏறாதே!

    'டுமீலன்' நச்சினார்க்கினியருக்குத் தமிழ் தெரியாதே!
    'Pundits'க்கு மட்டும் தானே தெரியும்?:)

    தமிழ் பால் அன்பில்லாதவர்கள், "டூமீல்-டுமீலன்" என்பவர்கள், தமிழுணர்ச்சியை இளக்காரம் பேசியே அழிப்பவர்கள்...
    அவர்கள் பண்டிதர்களாக இருப்பினும், அவிங்க, தமிழ் குறித்துச் சொல்லும் எந்த ஒன்றுக்கும்: Always Get a 2nd Opinion!

    Harvard Fame சுப்ரமணியம் சாமியிடம் போய், "Sir Plz help in Tamizh Eezham Welfare" ன்னு கேட்போமா? அதே!

    நீயே-குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

    ReplyDelete
    Replies
    1. ஐயா சிறியவனின் சிறு சந்தேகத்தை தயவு செய்து கோபப்படாமல் தெளிவு படுத்தவும்.
      வாழ்த்து என்பது ஒரு பெயர்ச்சொல்லா ?
      அது வினை என்றல்லவா கேள்விப்பட்டேன்

      வாழ்த்து , வாழ்ததி , etc
      வினைக்கும பன்மை உண்டோ?

      Delete
  17. கண்ணபிரான்,
    http://kurumban.blogspot.com/2013/11/11.html என்ற இடுகையில் கவிஞர் மகுடேசுவரன் வலிமிகுதல் பற்றி எழுதியதை பகிர்ந்துள்ளேன். - கள் விகுதிக்கு வலி மிகுமா ? அவர் வாழ்த்துகள் என்றே எழுத வேண்டும். வாழ்த்துக்கள் என்பது பெரும் பிழை என்று கூறியுள்ளார்.
    வாழ்த்துக்கள் பற்றி நீங்கள் எழுதியதை படித்திருந்ததால் இங்கு இப்போ அவரின் நிலைத்தகவலை பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் குறும்பன்:)
      இதில் இத்தனை "மெனக்"கெடத் தேவையே இல்லை - இரண்டு வழக்கும் சரியே! எதற்கு வீணான மிகைத் திருத்தங்கள்?

      கவிஞர் மகுடேஸ்வரனுக்கு வணக்கம்;
      அவர் "சொல்லி" இருக்காரே தவிர "ஆதாரம்" காட்டியுள்ளாரா?:)

      பலரும், சில எடுத்துக் காட்டு தருகிறார்கள்
      Can Cans என்று ஒரு எடுத்துக்காட்டினால், Man Mans ஆகி விடுமா?:) Men அல்லவா?

      இது போன்று ஆதாரம் இன்றிக், "கருத்தாய்"ச் சொல்பவர்கள் அனைவருக்கும் ஒரு கடமை உள்ளது - தொல்காப்பியத்தை மறுத்துக் காட்ட வேண்டும்!:)

      நச்சினார்க்கினியர் "எழுத்துக்கள்" என்று எழுதும் சான்று இதோ: http://3.bp.blogspot.com/-LcjGxbf0nqo/T5YG0yI3mkI/AAAAAAAANBo/h92yo3k1-dU/s640/ezhuthukkal.JPG

      இதற்கு மேல் என்ன சொல்ல?:) நன்றி!

      Delete
  18. வணக்கம் ஐயா,

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_21.html

    நன்றி

    ReplyDelete
  19. இரண்டும் சரியே என்பதை அறிந்து கொண்டேன். ஆரம்பத்தில் வாழ்த்துக்கள் என்றே எழுதி வந்தேன். ஒருமுறை சன் தொலைகாட்சியில் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் வாழ்த்துக்கள் எனப் பயன்படுத்துவது என சொல்லியிருந்தார். அதிலிருந்து வாழ்த்துகள் எனவே பயன்படுத்தி வந்திருக்கிறேன். ஒரு நாட்டுப்புற பாடகர் சொல்வதே கேட்பவன் நச்சினார்க்கினியர் சொல்வதைக் கேட்க மாட்டேனா?

    ReplyDelete
  20. பன்மை குறிக்கும் 'கள்' விகுதிக்கு இத்தனை இத்தனை வி..விவாதமா?

    ReplyDelete

  21. Great post!!

    I have a question!

    http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=83

    The last item in the above link says that

    க்கு,-ச்சு,-ண்பு,-ந்து,-ப்பு,-ம்,-ற்று,-ன்பு ஆகியவற்றில்
    முடியும் பெயர்ச்சொற்களின் பின் ‘-கள்’ விகுதி சேரும்
    போது ஒற்று மிகுவதில்லை

    Some examples given are :

    தேக்கு+கள்=தேக்குகள்
    அச்சு+கள்=அச்சுகள்

    It seems to contradict with your statement in " 1) "க்" மிகலாம்...".

    Could you explain this?

    ReplyDelete
  22. க் வருமா வராதான்னு தேட வந்த எனக்கு எவ்வளவு தகவல்கள்... செம்ம

    ReplyDelete
  23. க் வருமா வராதான்னு தேடி வந்த எனக்கு ஏகப்பட்ட தகவல்கள் கிடைச்சது.. செம்ம...

    ReplyDelete
  24. நாட்கள் அல்லது நாள்கள், பொருட்கள் பொருள்கள் எது சரி? நாட்கள் என்பது நாள்ப்பட்ட பழைய கள் என்று குறிக்குமாயின் முள் என்பதன் பன்மையாக முட்கள்தானே வருகிறது. குழப்பமாக இருக்கிறது?

    ReplyDelete
  25. சிறந்த பதிவு..

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP