இயேசுநாதர் & நம்மாழ்வார் - ஏலி ஏலி லாமா சபக்தானி?
அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!
* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!
என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று.....
நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?
பள்ளிக் காலத்திலே.....என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnaraj அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!
என்னை முதல்வெள்ளிப் பூசையில் (First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார்? என்றும் அவரிடம் அப்பவே விவாதம்:) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை:)
சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்...
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன், வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!
மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,
30. அவர் மேல் துப்பி...
40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.
46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)
9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.
கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!
என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!
* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகேயன் (Kurugoor, a town in Nellai)
இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!
இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்! = மக்களிடையே கலந்து போதித்தார்!
அதனால் "மேலாதிக்க" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி நேரடியாக இறங்காததால் தப்பித்தார் போலும்:)
* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)
இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"
* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!
ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?
* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை!
இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!
* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!
** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதித் தான் ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))
** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரை......சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((
சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?
* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப் பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பது = திருவாய்மொழி!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!
மலைப்பொழிவிலும், திருவாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!
பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம,
புரியும் படி பத்தி பிரித்து,
அதே வண்ணத்தில் கொடுத்திருக்கேன்!
பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க:)
மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!
மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------
மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------
மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1 - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....
மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன், எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------
மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = * ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!
கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?
ஹா ஹா ஹா! அப்படியில்லை! அன்பு அதீதமாக மிகுந்துவிடும் போது, அவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், அவள், என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!
இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, இவர்கள் என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"
நம்மாழ்வாரும் அப்படியே!
"முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!
எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"
எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural?
இதுல என்னமோ இருக்கு டோய்!
Bridal Mysticism (அ) நாயகி பாவம் என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் - நண்பர்கள் உட்பட :))
ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு!
ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......
இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!
என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று.....
நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?
(பிரேசில் சென்ற போது கண்ட Jesus Christ - Redemeer on the Mount)
(அவர் அழகே அழகு!)
பள்ளிக் காலத்திலே.....என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnaraj அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!
என்னை முதல்வெள்ளிப் பூசையில் (First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார்? என்றும் அவரிடம் அப்பவே விவாதம்:) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை:)
சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்...
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன், வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!
மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,
29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,
30. அவர் மேல் துப்பி...
40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.
46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)
9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.
கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!
என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!
* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகேயன் (Kurugoor, a town in Nellai)
இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!
இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்! = மக்களிடையே கலந்து போதித்தார்!
அதனால் "மேலாதிக்க" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி நேரடியாக இறங்காததால் தப்பித்தார் போலும்:)
* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)
இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"
* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
எய்தற்கு அரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபன்!
* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!
ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?
* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை!
இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!
* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!
** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதித் தான் ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))
** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரை......சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((
சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?
* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப் பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பது = திருவாய்மொழி!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!
மலைப்பொழிவிலும், திருவாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!
பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம,
புரியும் படி பத்தி பிரித்து,
அதே வண்ணத்தில் கொடுத்திருக்கேன்!
பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க:)
மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!
மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------
மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.
திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------
மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1 - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....
மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன், எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------
மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = * ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!
பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!
கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?
ஹா ஹா ஹா! அப்படியில்லை! அன்பு அதீதமாக மிகுந்துவிடும் போது, அவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், அவள், என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!
இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, இவர்கள் என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"
நம்மாழ்வாரும் அப்படியே!
"முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!
உம்பர் அந்தண் பாழேயோ? அதனுள் மிசை நீயேயோ?
எம்பரம் சாதிக்கல் உற்று, என்னைப் போர விட்டிட்டாயே??
தீர இரும்பு உண்ட நீர் - அது போல எந்தன் ஆருயிரை
ஆரப் பருக, எனக்கு என்றும் ஆரா அமுது ஆனாயே!!!
நல்லாச் சுடச் சுடக் காய்ச்சிய இரும்பு; தகதக-ன்னு மின்னுது! அந்த இரும்பு தண்ணி குடிச்சா எப்படி இருக்கும்?:) = இரும்பு உண்ட நீர்!
உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போல என் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!
என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போல என் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!
எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"
எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural?
இதுல என்னமோ இருக்கு டோய்!
Bridal Mysticism (அ) நாயகி பாவம் என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் - நண்பர்கள் உட்பட :))
ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு!
ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......
இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
Interesting!
ReplyDeleteEnchanting..! அருமையாய் ஒப்பிலக்கியம் பண்ணி விட்டீர்கள்..!
ReplyDeleteமறுபடியும் உயிர்த்தெழுந்தார்.. ! யாருக்கு சொல்லலாம்..!
உமக்கா..!! ஹாஹா.. வருக வருக அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்..!
நலமா ஆனந்த்ராஜ் சார்?
Deleteஎன்னது...நான் உயிர்த்து எழுந்தேனா?:)
உம்ம்ம்ம்...அப்படியும் சொல்லலாம்! ஆனா, இன்னும் முழுக்க இல்லை!
படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது.
ReplyDeleteநன்றி @Robin, @Baleno
Deleteநல்ல பதிவு. "நான்காம் வருண" நம்மாழ்வாரின் முதன்மை சீடர், குருகூர் நகர் நம்பியைத் தவிர தேவு மற்றறியேன் எனப் பேசிய மதுரகவிகள் "பார்ப்பனர்". ஆஹா, என்ன பொருத்தம். நிற்க. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நாலாயிரம் பாடும் கோஷ்டியில் பார்ப்பனரைத் தவிர மற்றோரை சேர்ப்பதில்லை. இந்தக் கொடுமைக்கு யாராவது முற்றுப்புள்ளி வைத்தால் நலமாய் இருக்கும்.
ReplyDelete:))
Deleteநன்றி வேங்கடேசன்!
இது இன்னொரு கோணம்! தமிழை அவர்களே ஓதுகிறார்கள், ஆனால் உங்களை விடுவதில்லை! = இதுவும் தவறே!
அது சைவமோ,வைணவமோ...எதுவாயினும் தவறு தவறு தான்!
------
காஞ்சிபுரம் ஆலயம் = வடகலை ஐயங்கார்கள் கோட்டை!
என்ன தான் தமிழ் ஓதினாலும், சடங்கு-சாத்திரம்-அனுஷ்டானம் என்று சற்றுக் கடுமையானவர்கள்!
நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு காஞ்சி சென்றிருந்தேன்; உடன் நண்பர்கள்; அதில் சிலர் பார்ப்பனர்கள்
காஞ்சி வரதன் கருவறைச் சன்னிதியில், "எங்ஙனையோ அன்னைமீர்காள்" என்ற பாசுரத்தை உரக்கவே பாடினேன்!
வென்றி வில்லும், வாளும், தண்டும், சங்கோடு, சக்கரமும்
இன்று வந்து என் கண்ணுள் நீங்காது, நெஞ்சுள்ளும் நீங்காதே!
அங்கிருந்த அர்ச்சகரும், உடன் வந்த நண்பர்களும் அருகே வந்து,
அருமை, அதிர்வு கண்டு புல்லரித்துப் போனதாகச் சொன்னார்கள்:) நன்றி என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்!
-------
//இந்தக் கொடுமைக்கு யாராவது முற்றுப்புள்ளி வைத்தால் நலமாய் இருக்கும்//
அடங்க மறுக்கும் வரை, சிலர் அடக்கத் தான் செய்வார்கள்!
அடங்க மறுங்கள்!
சாற்றுமறையின் போது, இருந்த இடத்தில் இருந்தே, யாரும் கூடவே அருளிச்செயல் சொல்லலாம்! இது இராமானுசர் ஆணை!
யாரேனும் அடக்கினால், அவர்கள் இராமானுசர் ஆணையை எதிர்த்தவர்கள் ஆகிறார்கள்! - ராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம், அபி வர்த்ததாம்!
திருக்கோயிலூர் ஜீயர் முன்னிலையில், அனைவரும் அருளிச் செயல் ஓதுவதைக், கண்கூடாகக் காணலாம்!
// காஞ்சி வரதன் கருவறைச் சன்னிதியில், "எங்ஙனையோ அன்னைமீர்காள்" என்ற பாசுரத்தை உரக்கவே பாடினேன்!
Deleteமிக்க மகிழ்ச்சி. எனக்கும் இப்படி உரக்கப் பாட ஆசை. ஆனால் ஏதோ கூச்சம், தயக்கம். இதையும் மீறி திருநறையூர் கோவிலில் சந்நிதியில் "கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டே.." என ஆரம்பித்தேன். இரண்டாம் வரியிலேயே கூட இருந்த என் மாமா "ம்ம். போதும். போதும்." என்று சொல்லி நிறுத்தி விட்டார் :-(
அன்புள்ள சைவக் காவலர் அனானி,
ReplyDeleteஉங்கள் பின்னூட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்; இவ்வளவு பெரிய கிறிஸ்து-ஆழ்வார் பதிவில், அந்த ஒருவரி தானா உங்கள் பார்வை?:(
பதிவு இப்போது திசை திரும்ப வேணாம்; பிறகு வெளியிட்டு, தரவுகளோடு பதிலும் அளிக்கிறேன்! நன்றி
நல்ல பதிவு. வழக்கம் போல உங்கள் படிப்பும், உழைப்பும், அறிவும், ஆக்கமும் பளிச்சிடுகின்றது. ஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸரும் கீதையையும் பைபிள் வாசகங்களையும் ஒப்பிட்டு நிறைய எழுதி இருக்கிறார். இதைப் படிக்கையில் அது நினைவு வந்தது.
ReplyDeleteபி.கு.: ஆனந்த்ராஜ் சொன்னதே எனக்கும் தோன்றியது :) நலம்தானே கண்ணா? Take care.
திரு கண்ணபிரான்!
ReplyDelete//* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!//
பின்பு இயேசு கலிலியோ எங்கும் சுற்றித் நடந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்.
-மத்தேயு 4;23
காலம் நிறைவேறிற்று தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
-மாற்கு 1:15
தேவனால் அருளப்பட்டதும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர் பெற்றதுமான வேதப் புத்தகத்தை மக்களுக்கு ஏசு போதித்து இருக்கிறார். பின்னால் வந்தவர்கள் என்ன காரணத்தினாலோ அதனை மறைத்து விட்டனர்.
மேலதிக விபரத்திற்காக இந்த தகவல். மற்றபடி பதிவு அருமை.
படித்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது!
ReplyDeleteநீங்கள் எழுதி கொண்டே இருங்கள்!
மகா அபத்தமான பதிவு. வைணவ சித்தாந்தத்தையும் தத்துவங்களையும் கொஞ்சமாவது ஆழமாகக் கற்றவர்கள் யாரும் இது போன்று ஒப்பீடுகள் செய்ய மாட்டார்கள் (வேண்டுமானால் பாவத்தின் பாதையிலிருந்து தர்மத்தின் பாதைக்குத் திரும்பிய வைணவச் சுடராழி ஜோசப் ராமானுஜதாசன் அவர்களையே கேட்டுப் பாருங்கள்).
ReplyDeleteஇத்தகைய ஒப்பீடுகளை செய்பவர்கள் ஒரே ஒருவகை ஆட்கள் தான். இந்து மதத்தின் ஆன்மீக, சமய செல்வங்களை கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டி, திருடி அதற்கு கிறிஸ்துவ முத்திரை குத்தி தங்கள் மதமாற்ற பிரசாரத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ள திட்டமிட்டு வேலை செய்யும் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள். குறுக்கும் நெடுக்குமாக ஏதாவது நின்றால் உடனே அது சிலுவை தான் என்பார்கள் (திரிசூலம், சிவலிங்கம், நடராஜ வடிவம் இத்யாதி..) பிதா,சுதன், ஆவி என்பதைத் தான் சைவர்கள் பசு, பதி, பாசம் என்று தப்பாக சொல்வதாக கதை கட்டுவார்கள். Bridal mysticism தான் நாயகி பாவம் என்று அடிப்படையில் சம்பந்தமே இல்லாத இரண்டு விஷயங்களை தொடர்பு படுத்தி திரிபு செய்வார்கள். தோமா திராவிட கிறிஸ்தவம் என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த மோசடி கும்பல்களைப் பற்றி ஜெயமோகன் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு வரை இணையத்தில் தோலுரித்து விட்டார்கள். ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் ஏன் அதே பொய்ப் பிரசாரங்களை இங்கு நீட்டி முழக்கி எழுதுகிறீர்கள்? புரியவி்ல்லை.
அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள 'உடையும் இந்தியா' புத்தகத்தில் (கிழக்கு பதிப்பக வெளியீடு) விரிவாகவே இந்த கிறிஸ்தவ திரிபு/திருட்டுகளை அலசியிருக்கிறார் - 7வது அத்தியாயம்: 'ஹிந்து மதத்தை திராவிட கிறீஸ்தவத்துக்குள்' செரித்தல். Bridal Mysticism சமாசாரம் பற்றியும் அதில் உள்ளது.. 'தமிழ் நாயக நாயகி பாவ ஆன்மீக இலக்கியத்தை கிறிஸ்தவ மயமாக்கல் (பக்கம் 185 - 187).
அதை தயவு செய்து படியுங்கள். இத்தகைய அசட்டுத் தனமான ஒப்பீடுகள் எவ்வளவு பிழையானவை, நம் சமய பாரம்பரியத்திற்கே விரோதமானவை என்று புரியும்.
அன்புடன்,
சக்திவேல்
சக்திவேல்....
Deleteமகா அபத்தமான "இந்துவெறிப்" பின்னூட்டம்!
இருப்பினும் அதை அனுமதிக்கிறேன்...உங்கள் முகத்தான் சிலது சொல்ல முடியும் என்பதால்!
//பாவத்தின் பாதையிலிருந்து தர்மத்தின் பாதைக்குத் திரும்பிய வைணவச் சுடராழி ஜோசப் ராமானுஜதாசன்//
எது பாவத்தின் பாதை?
மாற்று நெறிகளைச் சற்று மரியாதையோடு பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!
ஒப்பீடு செஞ்சா ஏன் பதறுது?
ஒப்பீடு தானே? இந்தியப் பண்பாடும் - ஜப்பானியப் பண்பாடும் ன்னு ஒப்பீடு செய்வதில்லையா? இங்கேயும் விருந்தோம்பல் எப்படி, அங்கேயும் விருந்தோம்பல் எப்படி ன்னு பார்ப்பதால், விருந்தோம்புவதே ஜப்பானியப் பண்பாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தது-ன்னா எடுத்துப்பாங்க?
இங்கே யாரும் விவிலியத்தில் இருந்து தான் ஆழ்வார் பாசுரங்கள் தோன்றின ன்னு எல்லாம் சொல்லல! இது வாசகர்களுக்கும் தெரியும்! உமக்குத் தான் தெரியவில்லை! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
இது ஒப்பீடு மட்டுமே!
அதில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்க!
ஆனா ஒப்பீடே கூடாது, கிறிஸ்தவ மிஷனரிக்கு சாதகமாப் போயிடும் ங்கிற ஒங்க இந்து வெறித் துடிப்பெல்லாம் வேறெங்கன்னா வச்சிக்கோங்க!
என் பதிவின் வாசகர்களை இழித்துப் பேசி இன்னொரு அனானி பின்னூட்டி உள்ளது! அதை அழித்து விட்டேன்!
வாசகர்களை இழித்துப் பேச உரிமை இல்லை!
கருத்தை, கருத்தாக மட்டுமே வைத்து உரையாடுங்கள்!
------------
உங்களை விட எனக்கு ஸ்ரீவைஷ்ணவம் நன்கு தெரியும்! ஆணவமாகச் சொல்லவில்லை! அறிந்தே சொல்கிறேன்!
ஜோசப் அவர்களையும் தெரியும், ஜடாயு சாரையும் தெரியும்! அது அது அவரவர் கருத்துக்கள்! நிலைப்பாடுகள்!
ஆனால் ஒப்பீடே செய்யக் கூடாது என்று வாலாட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!
இராமானுசர் ஸ்ரீ பாஷ்யத்தில் செய்யாத மாற்று நெறி ஒப்பீடுகளா?
இராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம்!
இனியொரு முறை, என் பதிவில் இப்படியான பின்னூட்டங்கள் அனுமதியேன், என்று உங்கள் முகத்தான் சொல்லிக் கொள்கிறேன்!
இப்பதிவில் Bridal Mysticism பற்றி இன்னும் சொல்லவில்லை! அப்படிச் சொல்லும் போது, அப்போது மாற்றுக் கருத்தை வையுங்கள்!
உங்கள் நெறியை வையுங்கள், வெறியை அல்ல!
//வைணவச் சுடராழி ஜோசப்//
Deleteதிரு. ஜோசப் அவர்கள் தன் சொந்த விருப்பத்தின் பேரில் வைணவத்தின் மேல் காதல் கொண்டவர்!
அவரை, வானமாமலை ஜீயர், ஸ்ரீபெரும்பூதூர் எதிராச ஜீயர் முதற்கொண்டு பலரும் ஏற்று ஆதரவு அளிக்கின்றனர்!
இன்றும் அவர் பெயர் = ஜோசப் தான்!
அதை மாற்ற அவர்களும் சொல்லவில்லை! அவரும் மாற்றவில்லை!
இப்படி ஒரு ஜோசப் என்றால்...
அப்படி ஒரு ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப் பிள்ளை - தமிழில் இரட்சணிய யாத்திரிகம் தந்தவர்!
அவரவர் நிலைப்பாடுகள், அவ்வளவே!
வணங்கும் துறைகள் பலப் பலவாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலப் பலவாக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப் பலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே (திருவாய்மொழி)
-----------
அவரவர் தமதம அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
- என்று வேதம் தமிழ்ச் செய்த மாறன் சடகோபன்! ஆழ்வார் வாக்குக்கு எதிராக இந்தப் பதிவில் எந்த வெறித்தனமும் எடுபடாது என்பதை நினைவிற் கொள்க!
கருத்தை கருத்தாக மட்டுமே அணுகக் கற்றுக் கொள்ளுங்கள்!
உங்கள் நெறியை வையுங்கள், வெறியை அல்ல!
This comment has been removed by the author.
ReplyDeleteதுரதிர்ஷ்டவசமாக ஒப்பீடு செய்தவருக்கு கிறிஸ்தவ இறையியல் குறித்தோ கிறிஸ்தவ மரபு குறித்தோ கிஞ்சித்தும் தெரியவில்லை. இல்லாவிட்டால் யூதராக ஏசு பிறந்தார் என்பதை எப்படி நம்மாழ்வார் நாலாம் வர்ணத்தவர் என்பதுடன் ஒப்பிட முடியும்? ஏசு யூத சமுதாயத்தில் தாவீது அரச வம்சத்தில் பிறந்தவர் என நிரூபிக்க மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலேயும் லூக்கா மூன்றாம் அதிகாரத்திலேயும் வம்சாவழிகளையே பொய்யாக கதை கட்டியிருக்கிறார்கள். சமாரிய பெண்ணுடன் பேசும் போது கூட ஏசு தன்னுடைய யூத மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்காமலே பேசுகிறார். பின்னர் சீடர்களிடம் ‘சமாரியர் தெருக்களுக்குள் கூட போகாதே’ என தீண்டாமையை போதிக்கிறார். ஏசுவின் ரத்த பழியை யூத சமுதாயம் தலைமுறை தலைமுறையாக சுமக்க வேண்டுமென்று சொல்லி என்றென்றைக்கும் யூத வெறுப்புக்கு வழி வகுத்தது ஏசுவின் ‘சுவிசேசம்’ குதிரை குண்டில் தள்ளியது போல தன்னை மேல்சாதி மெசையா என அறிவித்ததுடன் நில்லாமல் ஏசு யூத வெறுப்புக்கும் வழிவகை செய்துவிட்டு போனார்.ஏசு முதல் ஹிட்லர் வரை அது ஒரு தொடர்ச்சி. வேண்டுமானால் ஏசுவை ஹிட்லருடன் ஒப்பீடு செய்யலாம். அல்லது மனுவுடன். சர்வ நிச்சயமாக நம்மாழ்வாருடன் அல்ல. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருமுறை சொன்னார் “ஏசு என்று ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் உலகம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.” ஒப்பிடுகையில் “ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;” என்பதை “ உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே.” என்பதுடன் ஒப்பிடுவது ஒப்பீட்டின் உச்சகட்ட அபத்தம். உடலையும் ஜீவனையும் வேறுபடுத்தி ஒன்றைவிட ஒன்று பெரியது, ஒன்றை குறித்து கவலையே படாதே என சொல்லும் ஏசுவின் அபத்தத்தையும், அன்னமய கோசத்தை வளர்க்கும் அன்னமும் கண்ணனே என்னும் ஆழ்வாரின் பார்வையையும் ஒப்பிடுவதற்கு ஒரு அசாத்திய அறியாமை வேண்டும். வாழ்க வளமுடன்.
ReplyDeleteஅரவிந்தன் நீலகண்டன் சார்
Deleteவணக்கம்!
தங்கள் பொது நிலைப்பாட்டை அடியேன் அறிந்தவன்; அதனால் உங்களின் இக்கருத்துக்கள் எனக்கு வியப்பூட்டவில்லை!
நான் இப்பதிவில் ஒப்பிட்டுப் பார்த்தது = இரண்டு நூல்களின் வாசகங்களையே!
அந்த வாசகங்களுக்குப் பின்னால், இயேசு தனிப்பட்ட அளவில் என்ன செய்தார்? போன்ற ஆராய்ச்சிகள் இப்பதிவிற்குத் தேவையில்லை!
இரண்டு நூல்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் எக்கச்சக்கமாக உள! அதை அனைவரும் அறிவர்!
இப்பதிவு இருபெரும் நூல்களில் உள்ள ஒரு சில ஒத்த கருத்துகளின் ஒப்பீடு! அவ்வளவே!
இதில் தனிமனிதத் தோண்டல்கள், அவர் ஹிட்லரா, இவர் ஹிட்லரா என்ற குண நிர்ணயத் தராசு இங்கு இல்லை!
//உடலையும் ஜீவனையும் வேறுபடுத்தி ஒன்றைவிட ஒன்று பெரியது, ஒன்றை குறித்து கவலையே படாதே என சொல்லும் ஏசுவின் அபத்தத்தையும்//
Deleteஉங்கள் சரீரத்துக்காக "கவலைப்படாதிருங்கள்" என்று தான் சொல்கிறாரே தவிர, சரீரத்தையே ஒழித்து விடு, தேவையில்லை என்றெல்லாம் அந்த வாசகத்தில் இயேசுநாதப் பெருமானும் சொல்லவில்லை!
கவலைப்படாது இரு = மா சுசஹ!
ஆழ்வாரும், அவ்வண்ணமே, கண்ணனையே உணவாகக் காண்கிறார்!
உடல் வளத்தை விட உள்ள வளம்! அதனால் அவர் சோற்றுக்குக் கவலைப்படவில்லை!
இப்பாசுரத்துக்கு உரை அருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளை - இருபத்துநாலாயிரப் படியில்....
-------------
நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன் என்றிருப்பார்க்கும் என்றது
"அநுபவிக்கிறவன்” என்று இருப்பார்க்கும் அவ்வருகு போகவேணுமோ?
சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பதுபோன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில், வேட்ட பொழுதின் அவையவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;
இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி. இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம்.
தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ?
ஒருவன் பகவத் குணங்களிலே ஈடுபட்டவனாய்க் கண்ணும் கண்ண நீருமாயிருக்க, அவனைக் கண்டுகொண்டிருக்க
அப்படியே, இவைதாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே; அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொருபடியிருக்கும் அப்படியேயாயிற்று
இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.
-----
இதுவே வியாக்யானம்!
//விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே// = உணவுக்கென்று தனியாகக் கவலைப்படாது இருங்கள்
//இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காக// = ஒன்றில் இறைவனே உணவு என்று இருக்கிறார், இன்னொன்றில் இறைவன் மேலுள்ள நம்பிக்கை, உணவை விடப் பெரிதாக இருக்கிறது! அவ்வளவு தான்!
//துரதிர்ஷ்டவசமாக ஒப்பீடு செய்தவருக்கு கிறிஸ்தவ இறையியல் குறித்தோ கிறிஸ்தவ மரபு குறித்தோ கிஞ்சித்தும் தெரியவில்லை//
:)))
கிறிஸ்தவ மரபில் இண்டு இடுக்கில் என்னவெல்லாம் இருக்கு ன்னு ஆழங்கால்பட்டவர் தாங்களே!:))
வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக!
//ஒரு அசாத்திய அறியாமை வேண்டும். வாழ்க வளமுடன்//
"அறியாத" பெரியவாச்சான் பிள்ளை சார்பாக, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அடியேன் நன்றி!:)
// மகா அபத்தமான "இந்துவெறிப்" பின்னூட்டம்! //
ReplyDeleteஐயா, நீங்கள் செய்த பெரும்பிழையை சுட்டிக் காட்டினால் அது "இந்துவெறி"யா? பேஷ். நடக்கட்டும். நான் அதிகபட்சம் உங்களைக் கண்டிக்க பயன்படுத்திய சொல் "மகா அபத்தம்" - இதில் தனிமனித தாக்குதலோ, கண்ணியக் குறைச்சலோ ஏதாவது இருக்கிறதா? பின் ஏன் இப்படி குதிக்கிறீர்கள்? இதோ அரவிந்தன் நீலகண்டன் அவர்களே வந்து "அசாத்திய அறியாமை" என்று சொல்லி விட்டார்.
// எது பாவத்தின் பாதை?
மாற்று நெறிகளைச் சற்று மரியாதையோடு பேசக் கற்றுக் கொள்ளுங்கள்! //
பாவம் பாவி பாவ-மன்னிப்பு என்று எப்போதும் அதையே பேசும் பாதையை வேறு எப்படி அழைப்பதாம்? "மனிதனுக்குள் உறையும் தெய்விகத்தை வெளிக்கொணர்வதே ஆன்மிகத்தின் உண்மையான நோக்கம். பாவிகளே பாவிகளே? மனிதனை அப்படி அழைப்பது தான் உண்மையில் பாவங்களில் பெரும் பாவம்" என்று சொன்ன விவேகானந்தர் எந்த மரியாதையை அளித்தாரோ, அதே மரியாதையைத் தான் நான் அளிக்கிறேன்.
// இன்றும் அவர் பெயர் = ஜோசப் தான்!
அதை மாற்ற அவர்களும் சொல்லவில்லை! அவரும் மாற்றவில்லை! //
இது பற்றி அவரே எழுதியிருக்கிறார், தெளிவாக. அவர் ஜோசப் என்ற பெயரை மாற்றிக் கொண்டு முழு வைணவ "தாஸ்ய நாமம்" கொள்ளவே விரும்பினார். ஜீயர் சுவாமிகள் தான் அதைத் தடுத்து நீ இந்தப் பெயரிலேயே இறைநெறியைப் பரப்பிடு. அதனாலேயே கவரப் பட்டு பலர் வந்து கேட்பார்கள் என்று அறிவுறுத்தினார். ஜோசப்கள் ராமானுஜதாசர்களாவது இயல்பாக நடக்கக் கூடியது, அப்படி ஆகவிரும்புபவர்கள் அனைவருக்கும் அவ்வழி திறந்தே உள்ளது என்று எல்லாருக்கும் உணர்த்துவதற்காகவே ஜீயர் சுவாமிகள் அப்படி செய்திருக்கிறார்.
நீங்கள் இங்கு செய்யும் அசட்டுத்தனத்திற்கு நேர் எதிரானது அவர்களின் நிலைப்பாடு என்பதையாவது உணருங்கள் ஐயா.
அன்புடன்,
சக்திவேல்.
திரு. சக்திவேல்
Delete//பின் ஏன் இப்படி குதிக்கிறீர்கள்?//
யாரும் இங்கே குதிக்கவில்லை!
You have no right to call me a "liar"! - //நீங்கள் ஏன் அதே பொய்ப் பிரசாரங்களை இங்கு நீட்டி முழக்கி எழுதுகிறீர்கள்?//
//பாவம் பாவி பாவ-மன்னிப்பு என்று எப்போதும் அதையே பேசும் பாதையை வேறு எப்படி அழைப்பதாம்?//
பாவிகாள், மதியிலீர் என்றெல்லாம் வரும் பதிகங்களும் உண்டு! அதற்காக அருளிற் சிறந்த நாயன்மார்கள், மானுடத்தை இழிவுபடுத்தியதாக ஆகாது!
உங்களுக்கு ஒரு சாரார் சொல்வது பிடிக்கவில்லை என்றால், அவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்! இங்கு அல்ல!
--------------
Only "subject matter discussion" is entertained here!
I reserve the right as an author! You have no right to question me "why I post this?"
You can only pin point subject related matters & specifics, as Thiru Aravinthan Neelakantan did!
This post is NOT a media for your propoganda! Pl find an alternate spot! I will disallow your comments henceforth - Sorry!
நீங்கள் எழுதியிருப்பதை ஒவ்வொன்றாக மறுக்க முடியும். நேரமின்மை. மத்தேயு 6:7 இங்கு உண்மையில் கண்டிக்கப்படுவது நாம சங்கீர்த்தனம் போன்ற ஒரு யூத வழிபாட்டு முறை. ஏசு தன்னை ஒரு மேல்சாதி யூதராக நிலை நிறுத்தியவர். பிறப்படிப்படையிலான பூசனை உரிமைகளை ஆதரித்தவர். பிறப்புரிமை அடிப்படையிலான பூசனை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கிய பரிசேயர் எனப்படும் கிளர்ச்சியாளர்களை வெறுத்தவர். மத்தேயு 6:7 கூறுவது ஒரு குறிப்பிட்ட யூத வழிபாட்டு முறையை எதிர்ப்பதையே. இங்கு அஞ்ஞானிகளை போல என்பது உண்மையில் அது ஒரு வசை சொல். //But when ye pray, use not vain repetitions, as the heathen do...// பிற மதத்தவரை வசை பாட வேண்டாம் என்றவர் அதே வசைபாடும் ஏசு மொழியை இங்கே திருவாய்மொழியுடன் ஒப்பிடல் அருமை. ஹீத்தன் என்றால் என்ன என்பதை சிந்திக்கலாம். இதற்கு இணையாக ஆழ்வார் பாசுரங்க்ளை தேடி பௌத்தர்களை ஆழ்வார்கள் பழிக்கவில்லையா என மறுப்பு அளிப்பதற்கு முன்னால் இதனுடன் ‘அடங்குக உள்ளே’ என சொல்லும் திருவாய்மொழி எப்படி ஒப்பிடப்பட முடியும்? பிறரது வழிபாட்டு முறை மீதான வெறுப்பு பிறர் மீதான வெறுப்பு இவற்றை அள்ளித் தெளித்த ஏசு வாய் மொழியை திருவாய்மொழியுடன் ஒப்பிட்டாயிற்று இனி எப்படியாவது அதை நியாயப்படுத்தியே ஆகவேண்டுமென்றால் தொடர்க உங்கள் ஒப்பீடுகளை.
ReplyDeleteபெரியவாச்சான் பிள்ளை சொன்னதைத்தான் ஏசு சொன்னார் என நீங்கள் நினைப்பீர்களென்றால் நான் சொல்ல எதுவுமில்லை. வைணவ ஆச்சாரியர்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.
இறுதியாக என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்கிற ஏசுவின் வார்த்தைகள் அக்கதையில் நுழைக்கப்பட்டதன் காரணம் அவர் சிலுவையில் யூத விவிலிய வார்த்தைகளை சொல்லுவார் எனும் தீர்க்கதரிசனம் இருப்பதாக நம்பப்பட்டதை நிறைவேற்றவே. இதற்கும் நம்மாழ்வார் வார்த்தைகளுக்குமான ஒப்பீட்டில் நீங்கள் சொல்லாமல் விட்டவையே உண்மையான ஒப்பீடாக இருக்கும். // எனக்கு என்றும் ஆரா அமுது ஆனாயே!!!// என்கிறார் நம்மாழ்வார். It is a definite rejection of physical helplessness and an assertion of immortality Thirumal gives something that is absent in that particular version of Jesus narrative. மத்தேயு 27:46 மட்டுமல்ல லூக்கா 23:46 மற்றும் யோவான் 19:30 இத்தனையையும் நீங்கள் இணைத்தால் கூட நம்மாழ்வார் செய்யும் positive assertion கிடைக்காது. ஏசுவோ இறுதிவரை அலறி துடித்து பிறகு எல்லாம் முடிந்தது என அடங்குகிறார். அவரது உயிர்த்தெழுதல் மத்திய ஆசியாவெங்கும் பரந்து கிடந்த புதைந்து மீண்டெழும் தேவன் குறித்த தொன்மத்தின் மறு ஆக்கம் மட்டுமே.
இறுதியாக ஏன் யூதர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என கேட்டுள்ளீர்கள். அதற்கான வலுவான காரணங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் யூத சமுதாயத்துக்கு உள்ளன. அவற்றுக்காக நீங்கள் விசனப்படுவது கண்டனத்துக்குரியது. அதிலிருக்கும் யூத வெறுப்பு, நம்மாழ்வாரை நாலாம் வர்ணத்தவர் என சொல்லி மகிழும் ஆதிக்கசாதி மனநிலைக்கு சற்றும் குறைந்ததல்ல.
பொதுவான ஒரு வியாதி இது. கிறிஸ்தவ இறையியல் குறித்து எவ்வித அறிதலோ புரிதலோ இல்லாமல் ஆபிரகாமிய நோக்கிலிருந்து சொல்லப்பட்டதை இவ்விதம் கோர்த்துவிடுவது கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சாரத்துக்கு துணையாகுமே தவிர உண்மையை உணரவோ உள்ளபடியே வைணவத்தையோ கிறிஸ்தவத்தையோ அவை முன்வைக்கும் உலகப்பார்வைகளை அறியவோ வழி வகுக்காது. மதமாற்ற நோய்க்கு ஆட்பட்ட பெருவியாதிக்காரன் புண்ணை சொறிந்து சுகம் காண்பது போல புளிச்ச ஏப்ப இந்துக்கள் செய்யும் இந்த ஒப்பீடுகள் உள்ளன. தங்கள் வலைப்பதிவில் வந்து கருத்து சொல்ல விருப்பமில்லை. //என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)// என்று நீங்கள் கேட்டமையால் இதை சொல்ல வேண்டி உள்ளது.
//நீங்கள் எழுதியிருப்பதை ஒவ்வொன்றாக மறுக்க முடியும்//
Deleteதாராளமாக மறுக்கவும்!
//என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)// என்று நீங்கள் கேட்டமையால் இதை சொல்ல வேண்டி உள்ளது.//
மிக்க நன்றி! அடியேன் கேட்ட Feedbackக்கு, உங்கள் நேரம் ஒதுக்கிப் பேசியமைக்கு!
//பெரியவாச்சான் பிள்ளை சொன்னதைத்தான் ஏசு சொன்னார் என நீங்கள் நினைப்பீர்களென்றால் நான் சொல்ல எதுவுமில்லை. வைணவ ஆச்சாரியர்களிடம் கேட்டுக்கொள்ளலாம்//
நீங்களும் கேட்டுக் கொள்ளலாம்:)
துலக்கா நாச்சியாரை எல்லாம் ஏன் எம்பெருமான் சன்னிதியில், திருவடியில் வைத்திருக்கிறீர்கள் என்று அவர்களிடமே கேள்வி எழுப்பலாம்:)))
பெரியவாச்சான் பிள்ளை சொன்னதை = இயேசுபிரான் சொல்லவுமில்லை
இயேசுபிரான் சொன்னதை = பெரியவாச்சான் பிள்ளை சொல்லவுமில்லை
வீணாகத் திரிக்காதீர்கள்!
இவர் சொன்ன கருத்தில், அவர் சொன்ன கருத்தின் தொனி உள்ளது! அவ்வளவே!
----------------
//அவர் சிலுவையில் யூத விவிலிய வார்த்தைகளை சொல்லுவார் எனும் தீர்க்கதரிசனம் இருப்பதாக நம்பப்பட்டதை நிறைவேற்றவே. இதற்கும் நம்மாழ்வார் வார்த்தைகளுக்குமான ஒப்பீட்டில் நீங்கள் சொல்லாமல் விட்டவையே//
உங்களுக்கு முன்பே சொன்னது போல், இரு நூல்களின் அக ஒப்பீடு மட்டுமே இப்பதிவு!
இயேசு சொன்னதன் பின்னால், நீங்கள் சொல்லும் தீர்க்கதரிசனம்-வசனம்-கதைகள் அதெல்லாம் இப்பதிவுக்குத் தொடர்பில்லை!
வள்ளுவர் திருக்குறளும் - கம்ப ராமாயணமும் ஒப்பீடு எப்படியோ, அப்படியே!
வள்ளுவருக்கும் இராம காதைக்கும் தொடர்பில்லை!
ஆனால், கம்பர், வள்ளுவத்தின் கருத்துகளை, சொல்லாட்சியை எங்கெல்லாம் கையாண்டுள்ளார் என்ற பார்வை மட்டுமே!
------------
//and an assertion of immortality Thirumal gives something that is absent in that particular version of Jesus narrative.
இத்தனையையும் நீங்கள் இணைத்தால் கூட நம்மாழ்வார் செய்யும் positive assertion கிடைக்காது//
உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று சொல்லுங்கள்!
தேடியவர்க்கு கிடைக்கும் - அவரவர் தமதம அறிவறி வகைவகை!
//இறுதியாக ஏன் யூதர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என கேட்டுள்ளீர்கள். அதற்கான வலுவான காரணங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் யூத சமுதாயத்துக்கு உள்ளன. அவற்றுக்காக நீங்கள் விசனப்படுவது கண்டனத்துக்குரியது//
உங்கள் கண்டனத்துக்கு என் வந்தனங்கள்!
நீங்கள் இது குறித்து இங்கே வைத்த "யூத-கிறிஸ்தவ - மதமாற்ற - விளம்பரச் சுட்டி" - பதிவுக்குத் தொடர்பில்லாததால், பதிப்பிக்க இயலவில்லை! மன்னிக்க!
ஏன் யூதர்கள் ஏசுவை நிராகரிக்கிறார்கள் என விசனப்படும் ஆதிக்கசாதி இந்துக்கள் இங்குள்ள நூல்களை தரவிறக்கலாம். ஒருவேளை நாளைக்கு அவர்கள் குழந்தைகள் கிறிஸ்தவ மதமாற்ற நோய்க்கு ஆளாகாமல் தடுக்கவும் அவை பயன்படலாம்: http://www.jewsforjudaism.ca/publications/books-booklets
ReplyDeleteஇறுதியாக Bridal mysticism அங்குமுண்டு இங்குமுண்டு என நீங்கள் அடுத்த ஜல்லி அடிப்பதற்கு முன்னால் ஒன்றை சொல்லிவிடுகிறேன். யூதேய-கிறிஸ்தவ மரபில் உள்ள நாயகி-நாயக பாவம் உண்மையில் ஒரு social contract. இஸ்ராயீல் தேசமே யஹீவா தேவனுடைய மணவாட்டி. பின்னர் அது கிறிஸ்தவ இறையியலில் கிறிஸ்தவ சபை என்பதால் நிரப்பப்படுகிறது - புதிய இஸ்ராயீல் என்று. ஆனால் வைணவத்தில் பிற்காலத்தில் சமூக உறவாகவும் நாயகி-நாயக பாவத்தை வளர்த்தெடுத்தனர் எனினும் அதனுடைய core என்பது இன்னும் சொன்னால் மீண்டும் மீண்டும் resurface செய்யும் ஒரு மறை நிகழ்வாக இருப்பது individual union with the divine in bridal mysticism. கிறிஸ்தவ வரலாற்றில் புனித தெரசா (கல்கத்தா மதமாற்ற தெரசா அல்ல)விடம் இதை காணமுடியும் அல்லது John of Cross இடம் இதை காணமுடியும். ஆனால் இங்கே எப்படி social bridal sacrament என்பது ஒரு ஓரத்து நிகழ்வோ அதே போல அங்கே bridal mysticism என்பது ஓரத்து நிகழ்வு. Not that you are going to accept all these...but ....
ReplyDeleteSir,
DeleteYour view is always clouded from an "institutionalization" perspective!
So you see this bridal mysticsm, as a "contract", "Church Filling" etc etc!
I do NOT view from an institutionalization & branding!
I view it only as an individual's expression of innate desire - divinity!
//அங்கே bridal mysticism என்பது ஓரத்து நிகழ்வு//
Agreed!
ஓரத்து நிகழ்வு தான்! நாயகி பாவனை மிகச் சொற்பமே!
ஆனால் ஓரமோ, முழுமையோ....நிகழ்வு நிகழ்வு தான்! அதையே பதிக்க விழைகிறேன்!
இன்னும் பதிக்கவேயில்லை! அதற்குள் உங்கள் "நிறுவனப்படுத்தல்" உள்ளம் துடிக்கிறது!:)) பரவாயில்லை! அருமையான பார்வையை முன் வைத்துச் சென்றுள்ளீர்கள்! நன்றி!
\\Only "subject matter discussion" is entertained here!
ReplyDeleteI reserve the right as an author! You have no right to question me "why I post this?"\\
நீங்கள் உங்கள் குடும்பத்தை பற்றி எழுதி இருந்தால் அதை யாரும் அதை பற்றி கேட்டு இருக்கமாட்டார்கள்.
நீங்கள் எழுதுவது ஹிந்து மத அவமதிப்பை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது. அதை எதிர்க்க எந்த ஒரு ஹிந்து உணர்வு உள்ளவருக்கும் உரிமை உண்டு. பொது விசயத்தை எழுதும் பொழுது அதற்கான எல்லாவிதமான பின்னூங்களும் வரும்.
இது எனது தளம் எனது இஷ்டத்திற்கு எழுதுவேன். நீ யார் அதை கேட்க என்பது
தங்கள் வாதம் செய்யும் இயலாமையை காட்டுகிறது
திரு/திருமதி கோமதி!
Deleteபந்தலில் ஆத்திக/நாத்திக எந்தக் கேள்விக்கும் தடை இட்டது இல்லை! இங்கே பலரும் பல கேள்வி-பதில்களை எழுப்பியுள்ளார்கள்!
அது கேள்வியே வேள்வி - கூடியிருந்து குளிர்ந்தேலோ என்னும் குணானுபவத்தின் பாற்பட்டது!
ஆனால் இப்படியான பதிவை ஏன் எழுதுகிறாய்? என்று சக்திவேல் கேட்டார்! அதையே என்னுரிமை என்றேன்!
திரு அரவிந்தன் நீலகண்டன் போல, அவரும் பதிவு சார்ந்த விவாதத்தில் ஈடுபட்டால் மறுப்பில்லை!
இது சனநாயக வலைத்தளம்! ஒன்றை ஆதரித்தும் மறுத்தும் புள்ளிகளை அடுக்கலாம்!
ஆனால், "பொய்யர்கள்-பாவிகளின் மதம்" போன்ற தனிநெறிச் சாடலில் மட்டுமே அவர் இறங்கினார்! அதை அனுமதியேன், அனுமதியேன்....யாராக இருப்பினும்!
//நீங்கள் எழுதுவது ஹிந்து மத அவமதிப்பை ஏற்படுத்த கூடிய வகையில் உள்ளது//
ஒன்றை ஒப்பீடு செய்தாலே அவமதிப்பு ஆகிடாது!
இன்ன இழி சொல்லால் இந்து மதத்தை அவமதித்தேன் என்று ஆதாரம் காட்டுங்கள்!
இல்லை......இந்து மத அவமதிப்புக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்!
இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் நடவாது!
இனி உங்கள் பின்னூட்டமும் மட்டுறுத்தப்படும்! - Only discussion to the subject, not your whims & fancies & propoganda!
மாற்று நம்பிக்கை எல்லாம் பாவிகள் பாதை என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் கண்ணன் அவர்களே, அதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
ReplyDeleteஎங்கு இருந்தோ இரண்டு வாசகங்களை எடுத்து இரண்டும் ஓன்று என்று சொல்லுவது சரியா என்பதே இங்கே கேள்வி. பன்முகத் தன்மை கொண்ட ஒரு நெறியை, ஓன்று மட்டுமே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் உள்ளது என்று கூறும் நெறியோடு ஒப்பிட்டு கூறுவது முறை அல்ல
திரு. இராமச்சந்திரன்
Delete//மாற்று நம்பிக்கை எல்லாம் பாவிகள் பாதை என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் கண்ணன் அவர்களே, அதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை//
இது பதிவுக்குத் தொடர்பில்லாத ஒன்று!
நான் ஏற்றுக் கொண்டேனா என்ற கவலை உங்களுக்கு வேண்டாம்!
//எங்கு இருந்தோ இரண்டு வாசகங்களை எடுத்து இரண்டும் ஓன்று என்று சொல்லுவது சரியா என்பதே இங்கே கேள்வி//
இரு வாசகங்களுக்குள் உள்ள ஒற்றுமை, அதன் சொற்களிலேயே தெரிகிறது!
சொல்லுல தெரிஞ்சாப் போதாது, அதன் "ஆத்மாவில்" தெரியுதா? என்று கேள்வி எழுப்புவோர்கள், அதே ஆத்மார்த்தமாக உரையாடனும்! அடங்காப் பிடாரித்தனத்தோடு அல்ல! (திரு/திருமதி கோமதியைப் போல்)
இரு வாசக வேற்றுமைகளை கருத்தால் மறுக்க வேணும்!
சும்மா...அய்யோ compare பண்ணிட்டியே பண்ணிட்டியே ன்னு கூப்பாடு போட்டு அல்ல!
//பன்முகத் தன்மை கொண்ட ஒரு நெறியை, ஓன்று மட்டுமே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் உள்ளது என்று கூறும் நெறியோடு ஒப்பிட்டு கூறுவது முறை அல்ல//
யாருக்கு முறை அல்ல? உமக்கா? ஆழ்வாருக்கா?
சமயங் கடந்த பெருவெளியில், வெவ்வேறு தத்துவங்கள், எப்படி ஒன்று போல் தெரியும் ஒற்றுமை வாசகங்களைக் கொண்டுள்ளன என்பதை ஆய்ந்து பார்த்தல் பாவமும் இல்லை! தீட்டும் இல்லை!
ஆழ்வார், விவிலியத்தில் இருந்து தான் இக்கருத்துக்களைச் சொன்னார் ன்னு எழுதினா, அப்போ சண்டைக்கு வாங்க!
ஆனா, வாசக ஒற்றுமைகளைக் கூடக் காட்டாதே! அடங்கு...போன்ற அடக்குமுறைகளைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்!
பல காலம் பதிவுலகில் உள்ளேன்! என் மென்மையைப் பலரும் அறிவார்கள்! ஆனால் அந்த மென்மைக்குள், அசைக்க முடியாத உறுதி இருப்பதைச் சிலரே அறிவார்கள் - நாமார்க்கும் குடி அல்லோம்!
அன்பின் கண்ணபிரான், எனக்கு நிறுவனப்படுத்தல் மனது இல்லை. தங்கள் முத்திரை குத்தலுக்கு நன்றி. இவை எனக்கு சகஜமானவையே. நிற்க... ஏன் யூதர்கள் ஏசுவை மெசையாவென ஏற்கவில்லை என்பதற்கு நான் கொடுத்த சுட்டியை விளம்பரம் என நீக்கியதாலும் இருப்பினும் அக்கேள்வி இப்பதிவில் இருப்பதாலும், அதற்கான பதிலை அளிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் யூத வெறுப்பு எப்போதுமே ஆதிக்க சக்திகளால் பரப்பப்படுவது, அந்த யூதவெறுப்பின் அடிப்படைகளில் ஒன்று ஏன் யூதர்கள் ஏசுவை ஏற்கவில்லை என்பது. ஏனென்றால் ஏசு மதத்தினர் யூத புனிதநூலை கபளீகரம் செய்தார்கள். அதனை பழைய ஏற்பாடு என்றார்கள். இப்போது தங்கள் பணியை இன்னும் சிறப்பாகவும் விரிவாகவும் செய்துவரும் தேவகலா-தெய்வநாயகம் கோஷ்டியினர் எப்படி வைணவம் என்பது திரிந்த கிறிஸ்தவம் என தாங்கள் செய்திருக்கும் ‘ஒப்பீட்டு’ முறையில் செய்துவிட்டு சொல்கிறார்களோ அதே போல யூத ஞான மரபையும் சமுதாய வரலாற்று மரபுகளையும் அரைகுறையாக அறிந்து கொண்டு ஏசு மதத்தார்கள் ஏசுதான் யூத மரபு எதிர்நோக்கும் மெசையா என்றும் எனவே ஏசு மூலமாக யூத ஞானமரபே மறுக்கடிக்கப்பட்டு பழைய ஏற்பாடு ஆயிற்று என்றும் பிரச்சாரம் செய்தார்கள். இதனை யூத ஞானிகள் எதிர்த்தனர். யூத மறையில் சொல்லப்பட்டிருக்கும் மெசையாவின் எவ்வித நற்குணங்களும் ஏசுவுக்கு இல்லை என்பதை வாதங்கள் மூலமும் பக்கம் பக்கமாக தங்கள் மறைநூலுக்கு வியாக்கியானம் அளித்தும் சுட்டினர். மேலும் வாக்களிக்கப்பட்ட மெசையா யூதர்களுக்கு ரத்தப்பழியை உருவாக்க மாட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினர். எனவே யூதர்கள் ஏசுவை நிராகரித்தது மிகவும் சரியான ஒரு விசயமாகும்.
ReplyDeleteதிரு. அரவிந்தன் நீலகண்டன்
Deleteஉங்களை யாரும் முத்திரை குத்திடவில்லை!
உங்கள் பின்னூட்டம், நாயகி பாவத்தை = "Contract", "Church Filling" என்று சொன்னதால், அதை நிறுவனப் பார்வை என்று சொன்னேன்! அதைத் தவறு என்று சொல்லவில்லை! அது உங்கள் "பார்வை"! அவ்வளவே!
ஆனால் நாயகி பாவத்தை, "இயக்கம்/ நிறுவனமாக" பார்க்காமல்...
தனிமனித உள்ளத்தின் உறுபொருள், இறைப்பொருளின் மேல் ஆராக் காதல் என்று பார்க்கும் மரபும் உளது!
அது தனிப்பட்டர்வர்களின் பார்வை! ஆழ்வார்களின் பார்வை! அப்பர் சுவாமிகளின் பார்வை! இன்னும் வேறு எவரின் பார்வையாகவும் இருக்கலாம்!
//எப்படி வைணவம் என்பது திரிந்த கிறிஸ்தவம் என தாங்கள் செய்திருக்கும் ‘ஒப்பீட்டு’ முறையில்//
நான் வைணவத்தை = திரிந்த கிறிஸ்தவம் என்றும் சொல்லவில்லை!
கிறிஸ்தவத்தை = திரிந்த வைணவம் என்றும் சொல்லவில்லை!
வீணில் திரிக்க வேண்டாம்! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பதிவை வாசிக்கவும்!
உம்மால் முடியாது! ஏனெனில் கிறிஸ்தவம் என்ற பேரைப் பார்த்த மாத்திரத்திலேயே, உங்கள் புலன்கள் வேறு திசையில் எழும்பி, அதையே சுழன்று, உழன்று கொண்டிருக்கும்! மீண்டும் மீண்டும், உங்கள் பின்னூட்டங்களில், அதிலேயே நீங்கள் உழல்வதைக் காண முடிகிறது!
உங்களுக்கு மதமாற்றங்களின் மேல் வெறுப்பு என்றால், அதை நீங்கள் தக்க தளத்தில் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்! இப்பதிவு, அதற்கான தளம் அன்று! முருகா!
தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற மரணப் புலம்பலுக்கும் எனக்கு என்றும் ஆரா அமுது ஆனாயே என்ற ஆனந்த்தத்துக்கும் ஒப்பீடு செய்து அவை இரண்டும் ஒன்று போல என்று சொல்கிறீர்கள்.
ReplyDeleteபடித்தவ்ர் பலருக்கும் வலித்திருக்கும். உங்கள் நோக்கமும் நிறைவேறியிருக்கும்.
ஓகை ஐயா
Deleteவணக்கம், நலமா?
எனக்கு இங்கு நோக்கமேதும் இல்லை!
தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் = என்னைப் போர விட்டிட்டாயே க்கு தான் ஒப்பீடு! அதான் பதிவில் இருக்கு!
அதை நீங்களா மாற்றி, எடுத்துக் கொள்கிறீர்கள்:) வெகு நாள் கழித்துச் சந்தித்தமைக்கு நன்றி!:)
innate desire is not divinity... it is libido...
ReplyDeleteinnate nature is divinity
Thatz "your" definition!
DeleteDont "enforce" your definition as an universal definition! Divinity is not your toy alone!
ஆழ்வார் அருளிச்செயலில் ஆழங்கால்பட்டார்க்கு, "innate desire is also divinity" என்பதறிவார்கள்!
சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும்
"கண்ணனுக்கே ஆமது காமம்"
அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்!
Itz ok if you have your own definitions; I respect that!
But dont try to cheap out other definitions out as "libido"
Letz stop right here...as you are invading the sacred space of aazhwars, by calling them "libido"
அரவிந்தன் நீலகண்டன் பொருள் சார்ந்து உரையாடுகிறாரே?
ReplyDeleteஅது போல் உரையாடுபவர்கள் உரையாடலாம்!
மற்றக் கூச்சலாளர்களுக்கே, இப்பதிவில் இடம் அளிக்க மறுத்தேன்!
இது சாதாரண வாசகர்கள் போல் தெரியவில்லை!
எங்கிருந்தோ, யாரோ சொல்லி, பறந்து வந்த ஈசல் கூட்டங்கள்!
- "இப்படி எழுதாதே, பொய் சொல்லிகளுக்கு நீயுமா உடந்தை? பாவிகள் மதத்தோடு உனக்கென்ன பேச்சு? = இப்படியான திமிர்ப் பேச்சுக்கள்!
கருத்தே இல்லாத வெற்றுக் கூக்குரல் பின்னூட்டங்களை வெளியிடலீன்னா....வாதம் செய்யப் பயப்படும் கோழையாம்! சூப்பரு:)))) ங்கொய்யால!
அரவிந்தன் போல் கருத்தைக் கருத்தா வாதாடும் பக்குவம் இல்லீன்னாலும், வீண் ஜம்பம் மட்டும் முழ நீளத்துக்கு இருக்குது!
இது போலப் பின்னூட்டங்கள், வெளியிடப்படாமல் நிலுவையில் உள்ளவை = 11; அத்தனையும் வெத்துக் கூக்குரல்!
பந்தல் வாசகர்கள், இது போன்று கூட்டமாய்த் திரியும் ஈசல்களின் போக்கைத் தானே கண்டுணர்ந்து கொள்வர்!
"மதமான பேய்" பிடியாது இருக்க வேண்டும்!
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்!
தண்முகத் துய்ய மணி, உள்முகச் சைவமணி, சண்முகத் தெய்வமணியே!
* துலுக்கா நாச்சியார் இன்றும் திருநாரணன் காலடியில் திகழ்கிறார்!
ReplyDelete* திருவரங்கத்து நம்பெருமாளுக்கு, அவள் பொருட்டு ரொட்டி நிவேதனம் நடக்கின்றது!
* ஸ்ரீ முஷ்ணத்தில் மாற்று மதத்தவர்கள், பெருமாள் புறப்பாட்டில், பச்சை சார்த்தி மரியாதை செய்கின்றனர்! அவ்வமயம் இஸ்லாமிய வாழ்த்தொலியும் கேட்கிறது! பெருமாள் காதைப் போய்ப் பஞ்சால் அடைத்திட முடியுமா இவர்கள்?
* வாசகத்தை வாசகத்தோடு ஒப்பிட்டால், பிண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்பிடலாமா ன்னு கேக்குது இக்கூட்டம்! ஆழ்வார் பாசுர வாசகங்களைப் "பிண்டம்" என்று கூறும் இந்தச் சழக்கர்களா, மரபைக் காப்பாற்றப் போகிறார்கள்?:(
ச்சீ...உயரிய இந்து ஞான மரபின் மீது, இவர்களே வெறுப்பு வரச் செய்து விடுவார்கள் போலும்!
ஆழ்வார் கொலுவிருக்கும் பதிவில், சொல்லும் தரமன்று சில பின்னூட்டங்கள்! ஆபாசச் சொற்கள்! வெட்கம்!!:((
//சீரியநற் காமமும்// is not INNATE desire. It is channelized desired. In Freudian terms (with which of course I have my own points of difference and convergence) libido acted upon by elements from conscious layers of psyche. It is something similar to Kama - within the bounds of Dharma -taken as social norms or individual conscience. But one's innate nature can be nothing but Divine. In fact Visistadvaitic epistemology never attributes desire either to essential nature of consciousness as Atman qualified by attributive consciousness or to the self-realized substantive consciousness. Substantive consciousness (pratyak) is self-aware and attributive consciousness (parak) is not. The attributive consciousness as Dharmabhuta jnanam is both an attribute and a substance. As such it is 'jnanam' and not 'kamam'. Hence you can understand I hope, that the innate nature is not 'desire' but consciousness. So when dealing with certain words a bit more caution is needed as you are read widely. Errors can lead to confusion and there are many who wait in the wings to fish on confusion of minds...like the evangelicals. As an atheist Hindu it does not matter to me what you personally believe in for all beliefs are nonsense to me. But it does matter to me that no damage is done to Hindu Dharma in its widest and highest sense which has given us this freedom and which is today battling for its survival.
ReplyDelete//Visistadvaitic epistemology never attributes desire either to essential nature of consciousness as Atman qualified by attributive consciousness or to the self-realized substantive consciousness//
Delete"ஆசை" உடையோர்க்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தார் பின்
கண்ணனுக்கே ஆமது "காமம்"
எம்பெருமானுடைய உள்ள உகப்புக்கே இருக்கும் "உகப்பு" = சேஷத்வம்
All these are enshrined in the Core of Vishistadvaita!
This "desire" to devote oneself to the desire of the Lord is attributed as the Essential Nature of atman!
ஜீவாத்மாவுக்குரிய விசேஷணங்கள் எவை எவை என்று ஸ்ரீபாஷ்யத்தில் பட்டியலிடும் இராமானுசர், ஆத்ம ஸ்வலக்ஷணங்களுக்கு எல்லாம் அடிநாதமாகத் திகழ்வது = சேஷத்வமே! என்றும் பகர்கின்றார்
திராவிட வேதமான திருவாய்மொழியில் வரும் "அடியேன் உள்ளான்" என்ற பிரமாணமும், திருக்கோட்டியூர் நம்பியால், இராமனுசருக்கு உணர்த்தப்படுகிறது!
இப்படி "Innate Desire" meaning "Inherent Desire" of the atman to surrender to the desire of the lord...விசிஷ்டாத்வைதத்தின் அடிநாதம்!
நீங்கள் சொல்லும் "ஞானம்" அல்ல!
//As such it is 'jnanam' and not 'kamam'//
இந்த எம்பெருமான் காமமே = ஞானம்!
இதுவல்லாத எந்த ஞானமும், ஞானமல்ல!
//Hence you can understand I hope, that the innate nature is not 'desire' but consciousness//
This is diametrically opposite to Vishistadvaita!
Consciousness leads to aatma saakshaathkaaram!
Desire leads to paramaatma saakshaathkaaram!
In Vishistadvaita, paramaatma saakshaathkaaram is the key!
நீங்கள் இதை ஏதோ ஆங்கில ரீதியில் சொல்வதாக நினைத்து, மாற்றிச் சொல்கிறீர்கள்! தென்னாச்சார்யர்களிடம் கேட்டறியவும்!
-----------------
//So when dealing with certain words a bit more caution is needed as you are read widely//
ஹா ஹா ஹா
அடியேன் படித்தவன் அல்லன்! அவனைப் பிடித்தவன்!
//Errors can lead to confusion and there are many who wait in the wings to fish on confusion of minds...like the evangelicals//
Delete:))))
கம்சன் சதா சர்வ காலமும் கண்ணனையே நினைத்துக் கொண்டிருந்தானாம்!
அது போல், தாங்கள், தத்துவ தரிசனத்திலும், "evangelicals"யே நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்!:))
பூஜ்ய விஷயஹ விசாரயே = மீமாம்சா!
நான் இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை! தாங்கள் தான் "உணர" வேணும்! - உங்க ஒவ்வொரு வரியிலும் evangelicals வந்து விடுவதை!:))
இங்கு என் பெயர் அடிபடுகிறதே என்று பார்க்க வந்தேன்.
ReplyDeleteரவிசங்கர் அவர்களே, இது போன்ற ஒப்பீடுகளை ஒரு "மத நல்லிணக்க" விழைவு கொண்டு நீங்கள் செய்கிறீர்கள் போலத் தோன்றுகிறது. ஆனால் ஒன்று போல சொற்கள் இருப்பதனாலேயே, தத்துவங்களும் சமயக் கொள்கைகளும் ஒத்ததாகவும் இசைவுடையதாகவும் ஆகி விடாது. "சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாவால்" என்ற கம்பன் கூற்றை மறக்க வேண்டாம். மானுடம் தழைக்க அவதரித்த நம்மாழ்வாரையும், ஆக்கிரமிப்பையே குறிக்கோளாக கொண்ட ஆபிரமாகிய மதக் கருத்தாக்கங்களையும் ஒப்பிடுவது உண்மையில் ஆழ்வாரை அவமதிக்கும் செயலாகும். காந்தியை விட பெரிய மதநல்லிணக்கவாதி ஒருவர் உண்டா? அவர் கீதையையும் இந்து தத்துவங்களையும் சமயங்களையும் குறித்து எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஓர் இடத்தில் கூட இப்படி முறையற்ற ஒப்பீடுகளை செய்ததில்லை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
// "மதமான பேய்" பிடியாது இருக்க வேண்டும்!
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்! //
இந்தப் பாடலில் வள்ளலார் கூறுவது காமம்,குரோதம்,லோபம் என்ற பட்டியலில் வரும் மதம் (madham). சமயத்தைக் குறிக்கப் பயன்படும் மதம் (matham) அல்ல. இந்த அடிப்படை சொல் வேறுபாட்டைக் கூட அறியாமல் பல பத்தாண்டுகளாக இந்தப் பாடலுக்கு அபத்தமான ஒரு "முற்போக்கு" பொருளைக் கூறி வந்துள்ளார்கள். அதையே நீங்களும் சொல்கிறீர்கள். இனியாவது திருத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகிறேன். இது குறித்த எனது கட்டுரை: மதமெனும் பேய் - http://www.tamilhindu.com/2010/11/madham-enum-pey/
அன்புடன்,
ஜடாயு
வணக்கம் ஜடாயு சார்,
Delete//இது போன்ற ஒப்பீடுகளை ஒரு "மத நல்லிணக்க" விழைவு கொண்டு நீங்கள் செய்கிறீர்கள் போலத் தோன்றுகிறது//
:))
//ஆனால் ஒன்று போல சொற்கள் இருப்பதனாலேயே, தத்துவங்களும் சமயக் கொள்கைகளும் ஒத்ததாகவும் இசைவுடையதாகவும் ஆகி விடாது//
நான் இரு சமயக் கொள்கைகளும் ஒன்றே ன்னு பதிவில் எங்கும் சொல்லவில்லையே!
சமயம் கடந்து, இரு நபர்கள் - மாறன் & இயேசுபிரான், எப்படி ஒன்று போல் சொற்களைப் பொழிந்துள்ளார்கள் என்று தானே காட்டியுள்ளேன்?
//மானுடம் தழைக்க அவதரித்த நம்மாழ்வாரையும், ஆக்கிரமிப்பையே குறிக்கோளாக கொண்ட ஆபிரமாகிய மதக் கருத்தாக்கங்களையும்//
:))
//ஆக்ரமிப்பு// - அது தங்கள் நிலைப்பாடு!
இந்தப் பதிவுக்கும் அதற்கும் தொடர்பில்லை!
//காந்தியை விட பெரிய மதநல்லிணக்கவாதி ஒருவர் உண்டா? அவர் கீதையையும் இந்து தத்துவங்களையும் சமயங்களையும் குறித்து எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஓர் இடத்தில் கூட இப்படி முறையற்ற ஒப்பீடுகளை செய்ததில்லை//
ஈஸ்வர அல்லா தேரே நாம்!
பக்கத்து பக்கத்திலேயே வைத்து விட்டாரே!:))
சில நாட்கள் பயணத்தில் இருந்தமையால் இங்கு வர இயலவில்லை. வரும் விருப்பமும் இல்லை. உரையாடலை தாண்டிய முத்திரை குத்தல்கள். மதமாற்ற வியாபாரிகளை கண்ணனோடும் மதமாற்றத்தை விமர்சிப்பவர்களை கம்சனோடும் ஒப்பிடும் மனநிலையில் உள்ள ஒருவரின் ஈகோவுடன் மட்டுமே உரையாடுவது அத்தனை உவப்பான விசயமும் இல்லை. தாங்கள் கூறியது, // individual's expression of innate desire - divinity!// ஆழ்வார்கள் பேசுவது இறைவனிடத்து காமத்தை மடை மாற்றம் செய்வது. இரண்டையும் பின்னர் குழப்பி வார்த்தைகளால் செப்படி வித்தை செய்வதும் தாங்கள். விசிஷ்டாத்வைத ஆச்சாரியர்களின் வார்த்தைகளையே நான் சொல்லியிருக்கிறேன். என் வார்த்தைகளை அல்ல. அதை சொன்னவர் யார் என்பதை நீங்களே கண்டு பிடித்திருக்கலாம். பிறகு அவனை பிடித்தவர்கள் அவனை பிடித்ததை ஒரு வாதத்திரியில் வார்த்தையடைக்க பயன்படுத்த மாட்டார்கள். அவனை பிடித்தீரோ அகங்காரத்தால் பீடிக்கப்பட்டீரோ எதுவாயினும் நன்று. இத்தனை திரியில் ஓரிடத்தில் evangelicals குறித்து பேசினால் அது வரிக்கு வரிக்கு அவர்களை குறித்து பேசியதாக தங்களுக்கு தோன்றுகிறது. அதுவும் நன்று. ஆன்மிக போர்வையில் தங்கள் அரசியல் திறமை சாதுரியம் தெரிகிறது. தங்கள் மறுமொழி எதுவாயினும் இம்மறுமொழியை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் இத்துடன் என் மறுமொழிகள் இவ்வலைப்பதிவில் முடிவடைகின்றன. தங்கள் அன்புக்கும் பொறுமைக்கும் வந்தனங்கள்.
ReplyDelete//மதமாற்ற வியாபாரிகளை கண்ணனோடும் மதமாற்றத்தை விமர்சிப்பவர்களை கம்சனோடும்//
Delete:)
உங்களைக் கம்சன் ன்னு சொல்லவில்லை ஐயா!
அதே சிந்தனை = அது மட்டுமே உவமையாகக் கொள்ள வேண்டுகிறேன்!
நீங்களே உங்கள் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பாருங்கள்! இந்து ஞான மரபைப் பேசும் போதெல்லாம் கூட, கூடவே ஒரு வரி, "சர்ச், மத வியாபாரிகள், இவாஞ்செலிக்கல்" ன்னு அவர்களைச் சுற்றியே இருக்கும்:))))
//ஆழ்வார்கள் பேசுவது இறைவனிடத்து காமத்தை மடை மாற்றம் செய்வது. இரண்டையும் பின்னர் குழப்பி வார்த்தைகளால் செப்படி வித்தை செய்வதும்//
:))
மடை மாற்றமோ இல்லீயோ...consciousness மட்டுமில்லை, divinity = இறைக் காமம் = desire என்று இம்மட்டிலாவது ஒப்புக் கொண்டீரே! நன்றி!
//தாங்கள். விசிஷ்டாத்வைத ஆச்சாரியர்களின் வார்த்தைகளையே நான் சொல்லியிருக்கிறேன்//
பெரியவாச்சான் பிள்ளை சொன்னதையே அப்படியே மேசையில் வைத்து விட்டேன்!
//அவனை பிடித்தீரோ அகங்காரத்தால் பீடிக்கப்பட்டீரோ எதுவாயினும் நன்று//
:)
அகம்-காரமாக இருந்தாலும், அதிலும் அவன்-காரமே இருக்கும்!:)
மற்றவர்களைப் போல் கூச்சல் போடாமல், பதிவை ஒட்டியே உரையாடியமைக்கு மிக்க நன்றி, அரவிந்தன் நீலகண்டன் ஐயா!
Dear KRS
ReplyDeleteI dont know how to type in tamil. Sorry for typing in English
I have seen some of your articles and now I had the chance of going through the controversies expressed in the replies for this particular article.
First let me tell you that I enjoy your style of writing, especially writing religious matters in a lighter vain.
As a matter of fact I have many difference of opinion with your views but so far I didnot venture into passing comments because, one thing Im not a serious writer and two Im not a serious reader also.
But in these latest posts, I see some ugly faces showing up. I would like to pass on these simple comments.
1. Views may vary , but we should have a broader base in our mind to accept that other people have the right to think in their own way even if we dont agree.
2. While expressing our displeasure it is better to be more polite, because afterall we are here for exchange of view and not blows.
3. While we are putting our coments in a public domain, we should be prepared to listen to replies. The replies need not be posted, but declaring that Ill debar your views henceforth doesnot taste good though legally nothing wrong in your staement.
4. Why not look at people for their face values. When you are labeling Aravindan, does it not indirectly imply that your reply is biased.
Think about it. I like your style of writing. I dont object to your views, I dont want to, I dont have to and I dont intend to.
But writing should have a broader purpose. We need not tell everything in the open because we are "open minded". Our words carry meaning for the future generation. If our words acn damage pur culture which is for the future generation why can't we practice 'idakkaradakkal'.
My only request is write whatever you think will benefit the future generation. Medicine can be bitter, if it is going to benefit the patient. But ven sweet is dangerous if it is going to kill a patient. Give bitter medicines with sweet coating, but let the goal be welfare of the Mankind.
If my comments are irritating, sorry for the same. You need not publish it in your site. But dont declare that, 'Im blocking your views henceforth'. Though you are expressing your true feeling without a mask, in the long run it will only harm your image. You can say I dont bother about my image. But in fact all of live live fo our image, other wise we need bother about our dress and makeup. All of need masks at some time or other. Why not put a pleasant mask, Paropakaram idam sariram.
Think about it.
Srinivasa kannan srinivasakannan@yahoo.com
Thank you, Srinivasa Kannan
DeleteAny feedback & views - theistic & atheistic - are always very welcome in panthal! Therez a history to this & readers know this!
You got irritated by the words "Im blocking your comments henceforth"
But you are not aware of the language of those persons/comments that are unpublished?
Do u want to see it? I can release now! - இந்து ஞான மரபு ன்னு பேசும் கூட்டம், பேசும் "ஞானப் பேச்சினைக்" காண்கிறீர்களா?
------------
If u read unbiasedly, you will come to know
I openly said that I am entertaining Aravinthan Neelakandan's views & style throughout, bcoz he is mature & talks only abt subject!
அவர் இயேசுநாதரை, ஹிட்லர் இடத்தில் வைத்த போது கூட, நான் அவரை முத்திரை குத்தவில்லையே! அது அவர் ஒப்புமை!
ஆனால் அவர் இழிசொற்களைப் பயன்படுத்தி இருப்பாரேயானால், அதை அனுமதித்து இருக்க மாட்டேன்!
When you advise me so much, Why cant u tell a few words to Aravinthan also?
"அசாத்திய அறியாமை" ன்னு "labeling" உங்கள் கண்ணுக்குத் தெரியாதது ஏனோ?
-------------
The other ppl whom I blocked said words like "அவங்கெல்லாம் வேசிகள், அவங்களோடு புத்தகத்தை இந்து மதப் புத்தகத்தோடு கம்பேர் பண்ணுவதுக்கு வெட்கமாய் இல்ல? பொது இடத்தில் எந்தக் கேள்வியும் எதிர்கொள்ளு!"
Now what do u want me to do?
Be "chamathu payyan" and tell "adiyen adiyen" to them???
I used to be very polite here in blogs, readers know this, but not any more!
-----------
I RESPECT everyone's views as long as they are expressed in a dignified manner & not villifying other faiths!
பரோபகாரம் இதம் சரீரம்! = அது பர உபகாரங்களுக்கு மட்டுமே! அபகாரங்களுக்கு அல்ல!
Your comments are NOT at all irritating to me!
I have handled many opposite views, with smile & pleasure!
கருத்து வேற, மனிதம் வேற!
மனிதத்தில் விளையாடினால், அவர்களைப் போல், அதே வார்த்தைகளை நானும் சொல்ல மாட்டேன்! ஆனால் அக்கீழ்மைச் சொற்களை ஒதுக்க, எனக்கு உரிமையுண்டு!
தங்கள் அக்கறையான சொற்களுக்கு மிக்க நன்றி!
Certain corrections in my post
ReplyDeleteIf our words can damage our culture which is for the future generation why can't we practice 'idakkaradakkal'
even sweet is dangerous
But in fact all of us live for our image,
All of us need masks
kannan
Thank you for the reply
ReplyDeleteMy reply is for you and you only. That is why I did not venture into anyone else's letters.
I can understand your feelings when you see such derogatory words. Unparliamentary words have no place in a decent society.
Mine is only a comment and not an advice.
Paropakaram doesnot point towards the subject matter odf discussion.
It is for your future posts.
Kannan
இயேசு தாம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீட்பராக மட்டுமே இறைவனால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.விவிலியத்தில்
ReplyDeleteஉள்ளதுதான். இதைச் சுட்டிக்காட்டியதற்காக மதவெறி எனும் சாயம்
பூசினாலும் பரவாயில்லை
மதவெறி எனும் சாயம், யாருக்கும் பூசப்பட மாட்டாது!
Deleteஇன்னொரு நெறியை இழிசொல் பேசவில்லையே தாங்கள்? கருத்தளவில் தான் சுட்டிக் காட்டுகிறீர்கள்? கருத்து வேறு! மனிதம் வேறு!
[கடவுளால் கைவிடப்படாமல்]அவாவற்று வீடு பெற்ற வகுளாபரணர் பாடியது -
ReplyDeleteபோரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ, எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக்கு ஆராவமுதானாயே !
நன்றி தேவ் ஐயா!
Delete//கடவுளால் கைவிடப்படாமல்//
அப்படியா?:) இதன் பொருள் என்ன?
"போர விட்டிட்டு என்னை
நீ புறம் போக்கல் உற்றால்"
நீங்க குடுத்த பாட்டே தான்; பதம் பிரிச்சிக் குடுத்திருக்கேன்:)
ஆண்டவரே, என்னைக் கை விட்டீரே -ன்னு சொல்வது, "கை கழுவிட்டாங்க" என்ற பொருளில் அல்ல!
எல்லாக் காதலிலும் சொல்வது தான்! அதுவொரு துன்பத்தில் அன்புரிமை!
இல்லை ரவி சங்கர்,
ReplyDeleteநீங்கள் வைணவத்தின் அடிநாதம் புரிந்துகொண்டு
எழுதுகிறீர்கள்; ‘அடியேன் உள்ளான், உடலுள்ளான்’
ஒன்று போதும்.ஆழ்வார் உரிமையோடு மாதவனை
மடிபிடித்துக் கேட்கும் இடங்கள், நொந்துகொள்ளும்
இடங்கள் உள்ளன. உங்களுக்கு நிறையவே தெரியும்.
அவற்றோடு இயேசுபிரான் சொன்னதை ஒப்பிடுங்கள்.
உங்கள் மனம் ஒப்பினால் சரி.விவாதிக்க விரும்பவில்லை
//நீங்கள் வைணவத்தின் அடிநாதம் புரிந்துகொண்டு எழுதுகிறீர்கள்//
Deleteநன்றி!
ஆழ்வார்களின் ஈரத் தமிழில், என் கண்கள் இன்றும் ஈரமாகும்!
Magic/ மந்திரங்கள் = அவர்களிடம் இல்லை!
என்றோ செத்தவரை அதே வயதில் மீட்டல்,
தண்ணீரில் தங்கம் எடுத்தல்
- போன்ற பிரசாரக் "கதைகள்", ஆழ்வார்களிடம் இல்லை! சமணர்களிடமும் இல்லை! "இறப்பே இல்லாத வீடு-கடுகு-புத்தர்" கதை அனைவரும் அறிந்ததே!
மாற்றுச் சமயத்தவரை, ஒவ்வாரு பத்தாம் பாட்டிலும் வைத்து நையப் புடைக்கும் போக்கு, ஆழ்வார்களிடத்தே இல்லை!
அந்த ஒன்றுக்காகவே, அவர்களிடத்தில் ஈரங் கால் பட்டு நிற்கிறேன், பிறவிச் சைவனாகிய அடியேன்!
எனக்கு முருகக் காதல்/ காமம் அடி மனசிலே ஒளிஞ்சிருக்கும் என்றாலும்...
ஆழ்வார்களின் ஈரத் தமிழுக்கு, சமயம் கடந்து நிற்கவே எனக்கு விருப்பம்!!!
--------
ஆழ்வார் அன்பிலே ஊறியவன் என்ற முறையில்,
இயேசு நாதப் பெருமான் அன்புச் சொற்களையும் ஒப்பு நோக்கி, எழுதியதே இப்பதிவு!
ஆனால், "ஒப்பே நோக்கக் கூடாது! கண்ணை மூடு! இங்கு மட்டுமே பார்! அங்கே பார்க்காதே!"
- என்று அடிக்கப்பட்ட கும்மியைக் கண் கூடாகக் கண்டீர்கள் அல்லவா?
எனக்கும், இதற்கு மேல், விவாதிக்க விருப்பமில்லை!
ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
//...மாற்றுச் சமயத்தவரை, ஒவ்வாரு பத்தாம் பாட்டிலும் வைத்து நையப்
Deleteயாரை சொன்னீங்கன்னு catched it. ஆன்மீகம் என்பதன் அடிப்படை புரிதலே இல்லாம பெரும்பாலானோர் இருக்கிறோம் என்பதே உண்மை. தெய்வம் தான் நம்மள காப்பத்தனும், பாவம் கலி காலத்தில நாம தெய்வத்தை காப்பத்த வேண்டியாதா இருக்கு. :)