பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?
திருக்கோயிலூரில் அடை மழை! கும்மிருட்டு!அந்தப் பயணி, ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார்!அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்'ஷ்'டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை!"அருளிச் செயல்" (4000 திவ்யப் பிரபந்தம்) தன்னோட வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக்...