Thursday, July 25, 2013

தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள்!

70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்!

அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)
கந்தன் கருணை,  தெய்வம், 
திருவருள்,  துணைவன், 
வருவான் வடிவேலன்,  முருகன் அடிமை, 
கந்தர் அலங்காரம்,  வேலும் மயிலும் துணை etc etc... so many murugan films!

தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்!
சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி. நாகராஜன் & கே. சங்கர் = மற்றொரு காரணம்!

எம்.ஏ. திருமுகம் & ஆர். தியாகராஜன் போன்ற இயக்குநர்களையும் சொல்லி ஆகணும்!
இவர்கள் அனைவரும், ஒரு தலைமுறைக்கே, "முருக அலை" கொண்டு மனம் வருடினார்கள்! சினிமா (எ) மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம்!

இதில் பலவும், "புராணக் கதைகள்" தான் (உண்மை அற்றவை);
தமிழ்க் கடவுளாம் முருகனின், "தமிழ்த் தன்மையை" உணர்த்தாது, சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த "கதைகளே"!

எனினும், காட்சியின் பிரம்மாண்ட விரிவால், சினிமா மூலமாக, முருகனைக் கொண்டு சென்றது!
சினிமா வாகனம், மயில் வாகனத்தை விட வேகம் அல்லவா?:))

இன்னிக்கும் பலருக்கு...
மனத்திலே, முருகன் மாயம் செய்கிறான் என்றால்...
= சிறு வயதில் பார்த்த, இந்தச் சினிமாக்களின் பங்கு மிக மிக உண்டு!



நமக்கு, மெய்யான சங்கத் தமிழ்த் தரவுகள், அதிகம் தெரியாது!

அதியமான் காலத்து ஒளவை, எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
அப்படீன்னா, அதியமானுக்குப் பின்னால் தான் (2nd Century, After Christ) , முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))
இந்த "Logic" எல்லாம் சினிமா முன் = செல்லாது; செல்லாது:)

சங்கத் தமிழ் முருகன் = நடுகல் தொன்மம்! 
பூர்வ குடிகளின் தொன்மம்!
அதுவொரு அரும் பெரும் மரபு; "இயற்கை வழிபாடு"! அவ்வளவே!

இதர "புராணக் கதைகள்" = வடமொழி ஆதிக்கத்தால் வந்தவை;
= வீரபாஹூ!
(பாஹூ = தோள்; சுந்தர பாஹூ = அழகிய தோளன்); கஜபாஹூ (கயவாகு) -ன்னு ஒரு சிங்கள மன்னனைச் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டும்;

ஆனா, வீரபாஹூவை -> வீரபாகு -ன்னு ஆக்கி, அவனைத் "தமிழ் வீரன்" -ன்னு காட்டிக் கொண்டு இருக்கிறோம்!
சம்ஸ்கிருத புராணத்தை வைத்தா, "தமிழ்க் கடவுள்"-ன்னு நிலைநாட்டுவது?:))

ஐயகோ முருகா!:(
-----------

திருவிளையாடல் கதையும் இப்படியே!
"கொங்கு தேர் வாழ்க்கை" எனும் எழிலார் சங்கத் தமிழின் மேல் "ஏற்றப்பட்ட புராணம்"!

பொண்ணு கூந்தலை மோப்பம் புடிச்ச "செண்பகப் பாண்டியன்" வரலாற்றிலேயே இல்லை:)
நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன் (இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்)


“அ முதல் ஹ” = 48 சம்ஸ்கிருத எழுத்து; அவையே 48 சங்கப் புலவர்கள் ஆச்சாம் (கபிலர்/பரணர்...)
அவங்க கூட, சிவபெருமானே 49-வதா, சங்கத்தில் உட்கார்ந்தாராம்! சொல்லுறது: அதே “தருமி-திருவிளையாடல்” தான்!:)

So..., சங்கப் புலவர்களுக்கே 
= சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(

Proof: திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி

சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி,
அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை!
(- சங்கப் பலகை கொடுத்த படலம்; தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்)

அடக் கொடுமையே! ஒரு சைவத் "தமிழ் இலக்கியமே", தனக்கு வடசொல்லு தான் மூலம்-ன்னு சொல்லுதே!:(

இங்கு வந்தமர்ந்து, தமிழில் "பாண்டித்யம்" பெற்று, இங்கேயே மாற்றி எழுதும் சில தமிழ் "வாத்திகள்"!
அதை உணராது... "இழிவையே பெருமை" -ன்னு, நாமும் "இலக்கியம்" பேசிக் கொண்டு வாழ்கிறோம்!

Let mythology be mythology! No issues!
But to mix it on living Tamizh Poets & harming Tamizh = A Big NO!

இதே, ஒரு வடமொழி இலக்கியத்திலாச்சும், தமிழ் போய் "ஏத்தி" இருக்கா?
அ முதல் -ன் வரை 30 எழுத்து; இந்த முப்பது  தான் முப்பது-முக்கோடி தேவர்கள் ஆச்சு!
ஆய்த எழுத்து தான் "ஆயுத மோகினி - விஷ்ணு பகவான்" ஆச்சு -ன்னு நாம ஏத்தி இருக்கோமா?

ஏன், தமிழுக்கு மட்டும் இப்படியொரு நிலைமை?:(
* "மதி மயக்கம்" கூடத் தீர்ந்து விடும்
* "மத மயக்கம்" - தீரவே தீராது!


(குறிப்பு:  மேற்சொன்னவை அவரவர் மனசாட்சிக்கான கேள்விகளே!

நாம, இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது; So called "தமிழ் இலக்கியத்தில்" உள்ளதைத் தானே, படமாக எடுக்கிறார்கள்?
தமிழ் இலக்கியத்தில், "புராணத்தை" நுழைத்தது, அவர்கள் பிழை அல்லவே!)

நாம சினிமாவுக்கு வருவோம்! 
KBS amma = both in Sumangali form & Immaculate form!

முருகன் படங்களில் கோலோச்சிய குரல் = KBS Amma (எ) கே.பி. சுந்தராம்பாள்;
அம்மாவின், காதல் வாழ்வு பற்றிய என் தனிப்பதிவு இங்கே = http://murugan.org

KBS = முருக இசை ஊற்று என்றால்...
மூவர் அணி = TMS, Susheelamma, Seergazhi... முருக இசை அருவிகள்!

இவர்களோடு, வாரியார் சுவாமிகளே, இந்தப் படங்களில் தோன்றி நடித்தார்..
* சில படங்களில் முன்னுரை மட்டும்!
* துணைவன் படத்தில் பலப்பல காட்சிகள்! - அன்றாட வாழ்வில் வருவது போல் வருவாரு;
புராணப் படமாய் இல்லாம, அன்றாட வாழ்வில் "முருக-அன்பு" சொல்லும் படங்கள், எனக்குப் பிடிக்கும்!

பல பின்னாள் முருகன் படங்களில் = AVM Rajan தான் கதை நாயகன்!

அட, MR Radha அவர்களே முருக பக்தனா வேசங் கட்டி இருக்காரு;
வேலும் மயிலும் துணை -எனும் படத்தில், பகுத்தறிவுப் பேச்சாளராத் தோன்றி, முருகனை ஒரு கலக்கு கலக்கி எடுப்பாரு:)

கந்தர் அலங்காரம் -ங்கிற படத்தில், "லொள்ளு கதா காலட்சேபம்" செய்யும் முருக பக்தர்:)

ஆதி தேவனின் மைந்தா நமோ நமோ!
ஆறு வீட்டுக்கு  ராஜா  நமோ நமோ!:)) - Remix of MR Radha!

May be under this inspiration, I wrote in a birthday post: முருகன் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)
கோ= அரசன்; கோக்கோ= அரசர்க்கு அரசன்
வேல் பிடிச்சா= வேலா; ஆண்டிக் கோல் பிடிச்ச = கோலா:)
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா!:) Sorry muruga chellam! Love u honey:)

வாலிப முருகன் -ன்னா = அது எப்பவும், சிவகுமார் மட்டுமே!
குழந்தை முருகன்-கள் = மாஸ்டர் ஸ்ரீதர் (அ) பேபி ஸ்ரீதேவி;

I like Sridevi! Master Sridhar will talk too much:)
I deeply wish, if my dearest "Silk" had acted in a Murugan Role:)
வேல் ஒத்த கண்ணாள்!
ஆனா, முருகனே விரும்பினாலும், ஆச்சார சினிமாக்காரங்க விட்டிருக்க மாட்டாங்க:( 

முருகன் செய்த புண்ணியம் = அவனுக்கு 3 இசை மேதைகள் வாய்த்தார்கள்!
= கேவி. மகாதேவன், எம்.எஸ்.வி, குன்னக்குடி
இவர்கள் இசையில் தான், முருகனின் கொடி, பட்டொளி வீசிப் பறந்தது!

இறுதியாக ஆனால் உறுதியாக...
= கண்ணதாசன் & வாலி!
இவர்களின் முருக வரிகள், மனத்திலே முகவரிகள் போட்ட வரிகள்!

இன்றைய தேதிக்கு, இப்படியொரு முருகச் சினிமா வருமா?
ரொம்பக் கஷ்ட்ட்ட்டம்:) Jai Ho!
அப்படியொரு கூட்டணி அமைய, முருகன் மனசு வச்சாத் தான் உண்டு!



இன்றைய பாடல் = "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே"!

திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
தேவரின் மருதமலையைச் சிறப்பித்தென்றே வந்த படம்!

தேவர் பிலிம்ஸ்! சீர்காழி-குன்னக்குடி இருவருமே தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் படத்தில் தோன்றி, மருதமலை பற்றிப் பேசுமாறு ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! "முருக வெறியர்" -ன்னு கூடச் சொல்லலாம்! :) நல்ல குரல் வளம் அவருக்கு!
அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க...
வெறும் பாடகர் AVM ராஜன் -> பெரும் பாடகர் ஆகி விடுகிறார்! 

* ஒன்று வந்தால் -> இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்!
* ஆனால் "மனத்தால் மெய்யான" அன்பர்கள்??

AVM ராஜன் "காதலை" விடவே இல்லை! பழசை மறக்கவில்லை!
அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்! முன்பு, கோவிலில் பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி!

பூக்காரி -> புதுக்காரி ஆகி விட்டாள்!
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!

முருகன் Vs ஆசை -ன்னு வந்துட்டா...
முருகனா முக்கியம்? தத்தம் "ஆசை" தானே முக்கியம்?:)

* முருகனையே எண்ணிக் கைப் பற்றியவன் *
*  பணத்தின் எண்ணிக்கை பற்றுபவள்
இவர்கள் உறவு முறிந்ததா? = முருகன் "முறிப்பானா"??

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக -ன்னு தயவு செஞ்சி சொல்லாதீங்க; என் முருகன், யார் குடியும் கெடுப்பவனோ/ முறிப்பவனோ அல்லன்!
அவன் மனது வைத்தால்.... நடவாதனவும் நடந்திடாதா?
இசையாதனவும் இசைந்திடாதா? = பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
-ன்னு அத்தனையும் TMS-இன் கணீர்ச் சொத்து!

சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை -ன்னு பாடி இருப்பாங்க!
சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்! இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்...
= உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... 
= ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என்ன?.... நம்மை "அதிகாரம்" செய்யுற Autocratஆ முருகன்?
அல்ல!
இந்த "அதிகாரம்" = திருக்குறளின் "அதிகாரம்" / சிலப்"பதிகாரம்" போல..

ஒவ்வொன்றும் நமக்காக பார்த்துப் பார்த்துச் செய்யும் அதி-காரம் இல்லா அதிகாரம்!
= கதிகாரம்! விதிகாரம்!
= அவனே எனக்குப் பதியான பதிகாரம்!
என் உடம்பு/உள்ளம்; அதிகாரம் = "அவனுக்கே"!

பாடலின் வரிகளை, Murugan (Cinema) Songs வலைப்பூவில் காணுங்கள்! = Here

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... 
தமிழ்ச் சினிமாவிலும் = உந்தன் அரசாங்கமே!
Read more »

Friday, July 19, 2013

எவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!

அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அதென்ன "வாழ்ந்தவர்"? ...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!

அவர் பொன்னுடலுக்கு மட்டும்..நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!
Hey Raam - Vaali


முன்பொரு முறை... ஒரே மாசத்துல... பாடகி சொர்ணலதா மறைந்தார்; இசையமைப்பாளர் சந்திரபோஸ் மறைந்தார்!

அது சமயம், அஞ்சலிப் பதிவு கூட என்னால எழுத முடியல!

அது போன்ற துன்பமே இப்போதும்!
அடுத்தடுத்து... மணிவண்ணன், TMS, வாலி -ன்னு...


iLayaraja - iLaya vaali

வாலியிடம் எனக்குச், சிற்சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டென்றாலும், மாறுபட்ட தமிழ் என்பது கிடையவே கிடையாது!

அவரின் அரசியல் சார்ந்த "துதி நடை" தவிர்த்து..
அவரின் கவிதை ஒவ்வொன்றிலும் தனித்துத் தெறிக்கும் = "சொற்செட்டு"!

பற்செட்டுக் கிழவனும், பக்கோடா தின்ன வல்ல நற்செட்டு!
விற்செட்டாம் தமிழ் வில்லில்...
வீறிட்டுக் கிளம்பும் சொற்செட்டு! = அதுவே வாலி!

** கண்ணதாசன் பாட்டில் = "கருத்தழகு" = தானாக வந்து விழும்
** வாலியின் பாட்டில் = "சொற்செட்டு" = தானாக வந்து விழும்

இரண்டுமே, மனத்தைக் குத்தி நிக்கும்!


எவனோ "வாலியாம்"!  -  பதிவின் தலைப்புக்கான கதை:

அப்போ தான், வாலி புகழ் பெற ஆரம்பிச்சிருக்கும் வேளை...
ஆனா, சென்னையில், இந்த "மூஞ்சி" தான் வாலி-ன்னு, பல பேருக்குத் தெரியாது!

உறவினர் ஒருவரின் வற்புறத்தலால், புதுசா அடைஞ்ச புகழை வச்சி...
சி.எஸ்.ஜெயராமன் என்ற பிரபல பாடகரை அணுகி... (வீணைக் கொடி உடைய வேந்தனே  fame)...
திருச்சியில் ஒரு கச்சேரிக்கு, அழைத்து வருமாறு ஏற்பாடு! வாலி, அவரைக் காரில் அழைச்சிக்கிட்டு வராரு..


பயணத்தில், சி.எஸ்.ஜெயராமன் சில பாடல்கள் பாட... வாலி, அதன் இராகங்களை எல்லாம் கண்டுபுடிக்க... ஒரே கும்மாளம் தான்!

வாலியின் இசை அறிவை வியந்த ஜெயராமன்..
"ஒங்களுக்கு என்ன தம்பி வேலை?" -ன்னு கேட்டு வைக்க...
-எமக்குத் தொழில் கவிதை-
"பாட்டெழுதும் வேலை" -ன்னு வாலியும் சொல்லி வைக்க...

(சினிமா அல்லாத Album Songs எழுதறவங்க பேரு = பரவலாக வெளியில் தெரிவதில்லை!
"உள்ளம் உருகுதய்யா" பாடலை எழுதியது ஒரு பெண்மணி = ஆண்டவன் பிச்சை -ன்னு பேரு; நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?)

"கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" போன்ற Murugan Album Songs எழுதியது இந்தத் தம்பி தான் -ன்னு அறிந்து கொண்டார் ஜெயராமன்;
ஆனால் அதே தம்பி  தான் "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்"   பாட்டையும் எழுதியது -ன்னு தெரியாது ஜெயராமனுக்கு!

"தம்பீ, ஒங்களுக்கு நல்ல தமிழில், நல்லாப் பாட்டெழுத வருதே! நீங்க சினிமாவுக்கு வரலாமே?
ஒன்னுமே தெரியாதவனெல்லாம், கண்ட தமிழில் எழுதித் தள்ளுறானுங்க!...
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" -ன்னு அரசியல் கலந்து எழுதுறானுங்க!

எவனோ வாலியாம்! மட்ட ரகமா எழுதறான்! 
புது ஆளு -ன்னு இந்த MSV, போயும் போயும் அவனைச் சேத்துக்கிட்டு இருக்காரு!..."

இதைக் கேட்ட வாலிக்கு, செம Shock! :)
ஜெயராமனுக்கோ, அவரு தான் வாலி -ன்னே தெரியாது!:)

பயணத்தில், இது பத்தி மூச்சே விடாம,
திட்டு வாங்கிக்கிட்டே வாலி தொடர...

ஊரு வந்து இறங்கிய போது, அனைவரும் "வாலி வாலி" எனக் கொண்டாட...
சி.எஸ்.ஜெயராமன் + வாலி = ரெண்டு பேரு மூஞ்சியும் பாக்கணுமே!:)))

குபுக் -ன்னு சிரிச்சிட்டாங்க, ரெண்டு பேரும்! ஜெயராமன், வாலியின் கையைப் பற்றிக் கொண்டு..
"முன்னாடியே சொல்லி இருக்கலாம்-ல்ல தம்பீ? 
காவிரித் தண்ணிக்கு எப்பமே குசும்பு ஜாஸ்தி" -ன்னு இடிச்சாராம்:)

= இதான் வாலி! 
"ஒரு கருத்து சொல்லிட்டானே" -ன்னு மனசுள் கறுவாத குணம்! = Legends are Legends!


All Young - MSV, Vaali, P Susheela, TMS!
Vaali has that "inquisitive" face, always!:)

வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்";
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;

* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...

(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே: 
சில திருப்புகழ்ப் பாடல்களை விட.. வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்.. ஏனோ என் உள்ளத்தை.. உருக்கி எடுக்கும்!)

அதுவே இன்று...
முருகன் (சினிமா) பாட்டு வலைப்பூவில் = வாலி அஞ்சலி!
கண்ணன் (சினிமா) பாட்டு வலைப்பூவிலும் = வாலி வணக்கம்!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி



எல்லாருக்கும் தெரிந்த தகவல் = குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
அது மட்டுமில்லை! இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி = "குழந்தைக் குரல்" பாட்டுக்கென்றே சொந்தமானவரு தமிழ்ச் சினிமாவில்!

ஆனா, இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;

என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அணைத்த அவன் கையும் கோத்துக்கிட்டு.. அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!

= வாலி (வலி) வரி!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

கருணையே இல்லையாடா முருகா? =  (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும்  நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!

இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP