தசாவதாரம் படமும், கமலஹாசப் பெருமாளும்!
உலக நாயகன் கமலுக்காக இல்லீன்னாலும், நம்ம உள்ளத்து நாயகி அசினுக்காக-வாச்சும் பாருங்கப்பு பாருங்க!
அசின் கையில் ஒரு பெருமாள் சிலை! அது எப்படி அவிங்க கைக்கு வந்துச்சு? சரி, கமலோட வருங்கால மாமனார் கொடுத்தாருன்னு வச்சுக்குங்களேன்!
(யாருப்பா அது, கமலுக்கே இன்னும் மாமனார் ஆகும் கடமை ஒண்ணு பாக்கியிருக்கு-ன்னு சவுண்ட் வுடறது?)
அந்தச் சிலையை எடுத்துக்கின்னு ஊர் ஊராச் சுத்தறாங்க இந்த ஜோடி!
ஏன்? எதுக்கு? அட போங்கப்பா...எல்லாம் சிலையைக் கொள்ளைக்காரப் பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்த தான்! (பொண்ணுங்க, சிலையைத் துரத்தறாங்களா இல்லை கமலைத் துரத்தறாங்களா என்பது தனிக் கதை)சிலையைப் பாத்து பாத்து அசின் அழுவுறாங்க! அதப் பாத்து பாத்து நம்ம கமல் அழுவுறாரு!
அசின் கண்ணீரில் கமல் பிம்பமாய் ப்ரதிபலிக்க,
கமல் கண்ணீரில் அசின் ப்ரதிபலிக்கறாங்க!
அப்படியே ஒரு ஜூம் ஆங்கிள் ஷாட்! கேமிராவில் காதல் ஆராய்ச்சி செய்யும் கொலையாளிகள்...சாரி...கலையாளிகள் யாராச்சும் வாங்கப்பு!


அசின் செம்பவள வாய் திறந்து அழாதீங்கன்னு சொல்ல வாயெடுக்க,
கமல் அந்த வாயை, வண்ணமாக மூட...கமல் "கமாலு"க்குத் தயாராக...
பூசை வேளையில் கரடியாய் வில்லிகள் துரத்த...அருகில் இருந்த வண்டியில் ஏறிக் குதிக்குது ஜோடி!
ஆனா அது ஒரு காய்கறி வண்டி. அதில் பறந்து பறந்து skiing செய்யுது நம்ம ஜோடி!
அன்னிக்குப் பூரா நம்ம பெருமாளுக்கு Vegetable Skiing Vahanam தான்னு வச்சிக்குங்களேன்! :-)
எனக்கு என்னவோ அந்தச் சிலையைப் பார்த்தா "செல்லா" ஞாபகம் தான் வருது! அட நம்ம மேலக்கோட்டை செல்வப்பிள்ளையைச் சொன்னேங்க! திருநாராயணபுரத்து பெருமாளான செல்வப் பிள்ளையை மீட்டுக் கொண்டு வந்த காதல் கதையைத் தான் துலுக்கா நாச்சியார் இடுகையில் முன்னமேயே படிச்சிருப்பீங்களே!
தசாவதாரம் படம் தீபாளீ ரிலீஸ்-ன்னு சொன்னாய்ங்க!
இப்போ அது புஸ்வாணம் ஆயி, பொங்கல் ரீலீஜு-ன்னு சொல்லுறாய்ங்க!
அது சரி...
அது இன்னா பத்து வேஷம் கட்டுறாரு கமலு? உங்களுக்குத் தெரியுமா?
1 கோயில் அர்ச்சகர்
2 குள்ளன்
3 விஞ்ஞானி
4 சண்டை வீரர்
5 ஆப்பிரிக்கப் பையன்
6 சுற்றுலா கைடு
7 திருடன்
8 மன்னன்
9 வயசான பிகரு
10 இளமையான பிகரு
இது போதாதுன்னு வெள்ளை மாளிகை போல் ஒரு செட் போட்டாங்களாம் சென்னையில்! உடனே ஜார்ஜ் புஷ் போல வேஷம் கட்டப் போறாரு-ன்னு ஒரு வதந்தி பரவிப் போச்சு!
ஈழத் தமிழராகவும், ஜப்பானியராகவும், ஆப்கானிஸ்தான் ஆளைப் போலவும், தலேர் மெகந்தியைப் போலவும்-னு பல வதந்தி உலவுது!

இதுல, மூனு ரோல்-ல கமலை யாருன்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு மேக்கப்பாம்! ஹாலிவுட்டின் மைக்கேல் வெஸ்ட்மூர் தான் இந்த மேக்கப் டகால்டி வேலை எல்லாம் பண்ணறாராம்! கமலே ஹீரோவாகவும், வில்லனாகவும் பின்னிப் பெடல் எடுக்க, அசினுக்கும் டபுள் ரோலாம்!
மல்லிகா ஷெராவத் அக்கா வேற படத்துல ஜோடி போடறாங்களாம். CIA ஏஜென்ட்டாம்!
ஹைய்யா! அப்படின்னா மல்லிக் நியுயார்க் வருவாங்கல்ல?
வெல்கம் டு நியுயார்க், மல்லிக்!
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் மல்லிகா பந்தல்-னு ஒரு புது வலைப்பூ தொடங்கலாம்-னு பேசிக்கிட்டு இருந்தோம்! அதுக்குள்ள நீங்களே வரீங்க! வாவ்! :-)
ஜெயப்ரதா ஆண்ட்டி படத்துல ஒரு ரோல் பண்ணறாங்க-ன்னு பேச்சு!
முதல் ஷாட்டுக்கே மூன்று கோடியாச்சாம்!
பாவம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் என்னன்னல்லாம் பண்ணப் போறாரோ தெரியலை!
சிதம்பரம் கோவிலை recreate பண்ணி ஒரு செட்டு!
சுனாமி காட்சி - உருவாக்கம்
நெப்போலியன் அரண்மனை-ன்னு மெகா பண முழுங்கிக் காட்சிகள் வேறு இருக்காம்!
சரி...படத்துக்கு மீஜிக் யாரு? ஹிமேஷ் ரசம்சாதம்-ன்னு யாரோ ஒருத்தர் பாலிவுட்ல இருந்து வராராமில்ல!
சும்மா அதிரப் போதாமில்ல! நமக்கும் சும்மா ஒதறப் போதாமில்ல!
அட அதாங்க பாப் மீசிக் ஸ்டார், மீசிக் டைரக்டர், Himesh Reshammiya தான் அவரு! கோலிவுட்-ல மொதல் என்ட்ரி கொடுக்கறாரு! அக்ஷர், தில் தியா ஹை படத்துக்கு மீசிக் போட்டு ஹிட்டாச்சுதே, அவரே தான் இவரு!
நடிகர் திலகம் கொடுத்த நவராத்திரி படத்துக்கு இணையாக கமலின் தசாவதாரம்-னு சொல்லிக்கறாங்க!
பார்க்கலாம்...
கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்!
பொங்கலின் போது தசாவதாரம் பொங்கி விளையாடப் போகுதா-ன்னு, ஹைப் கூடிக்கிட்டே இருக்கு!
மேலும் ஹைப்புக்கு, இந்தாங்க orkut-இல் தசாவதாரம்!
(படங்களுக்கு நன்றி: dasavatharam.info)






