அழகிகள் ஆறு பேர்!
ஆழகுகள் ஆறு பற்றித் தான் எழுத வேண்டுமா? அழகிகள் ஆறு பேர் பற்றி எழுதினால் என்ன?
ஆகா - இப்படின்னு தெரிஞ்சிருந்தா அழைத்திருக்கவே மாட்டேனே என்று நண்பர் குமரன் சொல்லி விடுவாரா என்ன? :-))
நன்றி குமரன்!
"அழகுன்னு இன்னாப்பா?", என்று யாரையாச்சும் கேட்டுப் பாருங்கள்! உடனே பதில் வருவது சற்றுக் கடினம் தான்.
ஆனா ஒரு ஃபோட்டோவைக் காட்டி, இவங்க அழகா இருக்காங்களான்னு கேளுங்க. - உடனே பதில் வரும்!
(ஃபோட்டோவில் உள்ளவர் அப்போது உடன் இருக்கக் கூடாது என்பதை நான் சொல்லவும் வேணுமா என்ன? :-)
ஃபோட்டோவில் உள்ளவர் பெரிய தலைவராகவோ, பிரபலமானவராகவோ இருக்கலாம். இல்லை சும்மானாச்சும் எங்கோ புடிச்ச ஃபோட்டாவாகவோ கூட இருக்கலாம்.
புற அழகோ, அக அழகோ, ஏதோ ஒன்று - இது அழகுன்னு கண்டிப்பா சொல்ல முடியும்!
கன்னடத்துப் பைங்கிளி ஐஸ்வர்யா ராய் கண்களை அழகு என்று ரசிப்பவரும் உண்டு!
கல்கத்தா அன்னை, தெரேசாவின் முகத்தைப் பேரழகு என்று ரசிப்பவரும் உண்டு!!
என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!
1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
"விநயம்" என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
பணிவே அழகு! - எம்.எஸ்.சுப்புலட்சுமி
2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! - அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
நடனம் அழகு! - ருக்மிணி தேவி அருண்டேல்
3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
மிடுக்கு அழகு! - இந்திரா நூயி
4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு - அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?
காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
நற்பணி அழகு! - அருணா ராய்
5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
கருணையே அழகு! - அன்னை வேளாங்கண்ணி
6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்...இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்....
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!
இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், - இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை - இவள் புற அழகு தான் என்ன!!
தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!
ஆண்டாள் - தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! - ஆண்டாள் அழகு!!
(பின் குறிப்பு:திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன், பழனியில் தேவயானியைக் கண்டேன், என்றெல்லாம் பதிவைப் படித்து விட்டு, ஸ்ரீதேவி தான் அழகு என்று சொல்வேனோ என்று யாராச்சும் எண்ணியிருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல :-)
ஆனா அவங்களும் ஒரு அழகு தானேப்பா! என்ன வெட்டிப்பையலாரே - சரி தானே :-)
நண்பர்கள்,
சிவமுருகன், யோகன் அண்ணா, கீதா சாம்பசிவம் (கீதாம்மா)
அவர்களை, அழகு விளையாட, அன்பாக அழைக்கிறேன்!
துளசி டீச்சர் அழைப்பு - அப்படியே இருக்கட்டும்! கொத்ஸ் ஏற்கனவே அழைத்து விட்டாராம்! ஆனாலும் அழைத்தவர்களை வாபஸ் வாங்குவதெல்லாம் நம்மளால முடியாதுப்பா!
பின்னே என்னவாம், டீச்சரின் வகுப்பில், வீட்டுப்பாடம் பண்ணாம வரலாம்னு ஒரு ஐடியா யோசிச்சா...விடமாட்டாங்க போல இருக்கே! :-)))

கண்ணபிரான்,
ReplyDeleteஅழகிகள் ஆறுபேர் என்றதும் ஓடிவந்தேன்.
இப்படி செய்துவிட்டீர்களே? நியாயமா?:)))
//இப்படி செய்துவிட்டீர்களே? நியாயமா?:))) //
ReplyDeleteசரியா சொன்னீங்க செல்வன், அழகிகள் என்று சொல்லி விட்ட பேரழகிகள் படத்தை போட்டு உள்ளார் நம்ம கண்ணபிரான்
செல்வன், சீக்கிரம் ரெடியா இருங்க, நாளைக்கு வரேன்....
நான் போட இருக்கும் லிஸ்ட்ல உள்ள முதல் முகம் எம்.எஸ். அதையே தாங்களும் போட்டு உள்ளீர்கள். :-)
ReplyDeleteஎன் அன்னை வேளாங்கண்ணியும் இடம் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
என் அழகிய திருநாகையாரை விட்டு வீட்டீர்களே கண்ணா!
கொத்தனார், வருவதற்கு முன்பு நானே சொல்லி விடுகிறேன். துளசி டீச்சரை கூப்பிட்டாச்சு. வேற மாத்துங்க...
ReplyDeleteகொத்துஸ்... ஒகேவா...
அருமையான ஆறு! டீச்சரை நான் ஏற்கனவே கூப்பிட்டாச்சு,இன்னும் பலரும் கூட.
ReplyDeletearumaiyaana thervu. I will try.
ReplyDeleteஏமாத்தலை ரவி.
ReplyDeleteநல்லாச் சொல்லிவிட்டீர்கள்
இவர்களைவிட அழகானவர்கள் யாரும் இருக்க முடியாது.
அற்புதமான பதிவு.
இது ஆறு அல்ல அஞ்சு என நினைவு!
ReplyDeleteஅழகில் ஆறென்ன அஞ்சென்ன!
அஞ்சாமல் சொல்லிக் கொண்டே போகலாம்!
அத்தனையும் பெண்கள்
100% இட ஒதுக்கீடு கொடுத்து விட்டீர்கள்!
அழகாக வந்திருக்கிறது ரவி!
நல்ல அழகு தொகுப்பு, ரவி
ReplyDelete//செல்வன் said...
ReplyDeleteகண்ணபிரான்,
அழகிகள் ஆறுபேர் என்றதும் ஓடிவந்தேன்.
இப்படி செய்துவிட்டீர்களே? நியாயமா?:)))//
செல்வன்,
நல்ல காலம் வெறுமனே கேட்டு விட்டு விட்டீர்கள்!
அடிக்க வருவீங்கன்னு அல்லவா நினைச்சேன்! :-))
//நாகை சிவா said...
ReplyDeleteசெல்வன், சீக்கிரம் ரெடியா இருங்க, நாளைக்கு வரேன்....//
ஆகா, எதுக்குங்க சிவா?
புலி பதுங்குகிறதே :-))
//நாகை சிவா said...
ReplyDeleteநான் போட இருக்கும் லிஸ்ட்ல உள்ள முதல் முகம் எம்.எஸ். அதையே தாங்களும் போட்டு உள்ளீர்கள். :-)//
ஹை...Great men think alike? :-))
//என் அன்னை வேளாங்கண்ணியும் இடம் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
என் அழகிய திருநாகையாரை விட்டு வீட்டீர்களே கண்ணா!//
பெண்கள் அறுவர் என்பதால் நாகை அழகியார் ஆன பெருமாள் விட்டுப் போனார் சிவா.
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஅருமையான ஆறு! டீச்சரை நான் ஏற்கனவே கூப்பிட்டாச்சு,இன்னும் பலரும் கூட//
மாத்தியாச்சு, தல!
வகுப்புக்கு வீட்டுப் பாடம் பண்ணாம வரத்துக்கு ஒரு வழி பண்ணலாம்னு பாத்தா விட மாட்டீங்களே? :-))
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeletearumaiyaana thervu. I will try.//
நன்றி கீதாம்மா.
// வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஏமாத்தலை ரவி.
நல்லாச் சொல்லிவிட்டீர்கள்
இவர்களைவிட அழகானவர்கள் யாரும் இருக்க முடியாது.//
நீங்க ஏமாத்தலைன்னு சொல்றீங்க.
ஆனா செல்வன் பாருங்க ஏமாத்திப்புட்டேன்னு சொல்லிட்டாரு! :-))
நன்றி வல்லியம்மா.
// VSK said...
ReplyDeleteஇது ஆறு அல்ல அஞ்சு என நினைவு!
அழகில் ஆறென்ன அஞ்சென்ன!//
ஓ..அப்படிங்களா SK!
ரூல்ஸ் மாத்திட்டாங்களா?:-)
வெட்டி அவர் பதிவில் அழகுகள் ஆறுன்னு சொல்லி அவர் தென் பெண்ணை ஆறு பற்றிச் சொன்னாரா...அந்த ஆறு நமக்கும் ஒட்டிக்கிச்சு!
//அத்தனையும் பெண்கள்
100% இட ஒதுக்கீடு கொடுத்து விட்டீர்கள்!//
வீட்டில் தொடர்ந்து பதிவு எழுதணுமா வேண்டாமான்னு அன்பா கேட்டாங்க! :-)))
அதான் sk ஐயா!
அமைதியான ஆரவாரமில்லாத அழகுன்னா அது M.S உம் ருக்மிணி அருண்டேல்லும் தான் K.R.S!! எனக்கும் இவங்க இரண்டு பேர் முகத்திலயும் கர்வம் இல்லாத பணிவு தெரிவது போல தோணும்!
ReplyDeleteஉங்க அழகு பதிவுல அழகு கொட்டி கிடக்கு!! எல்லாருமே பேரழகிகள்தான்!!
உண்மையான அழகு இதான் இதான்..அருமை ரவி!
ReplyDeleteஷைலஜா
அன்னை தெரசா இருப்பாங்கனு ஆசையா பார்த்தேன்... அவுங்க அன்னை வேளாங்கன்னி மாதவையே போட்டுட்டீங்க...
ReplyDeleteபரபரப்பான தலைப்பு பதிவை எட்டிப்பார்க்க வைத்தது.:))
ReplyDeleteநல்ல வித்தியாசமான அழகுப் பதிவு.
//இது ஆறு அல்ல அஞ்சு என நினைவு!/
ReplyDeleteஅழகுகள் ஆறுதாங்க!
ஆஹா......... அத்தனையும் பெண்கள்.
ReplyDeleteஅழகுக்கும் பெண்களுக்கும்தான் உண்மையான சம்பந்தம்
இருக்குன்னு புரிஞ்சுபோச்சு :-))))))
போட்டும் இதுலேயாவது 100% ஒதுக்கீடு கிடைச்சுதே!
இப்படி எல்லாரும் எழுத எழுத, அப்புறம் எனக்கு எழுத ஒரு
அழகும் மிச்சம் இருக்காது போல(-:
// மு.கார்த்திகேயன் said...
ReplyDeleteநல்ல அழகு தொகுப்பு, ரவி//
நன்றி கார்த்தி!
// ஷைலஜா said...
உண்மையான அழகு இதான் இதான்..அருமை ரவி!//
ந்ன்றி ஷைலஜா
//Radha Sriram said...
ReplyDeleteஎனக்கும் இவங்க இரண்டு பேர் முகத்திலயும் கர்வம் இல்லாத பணிவு தெரிவது போல தோணும்!//
உண்மை தாங்க ராதா.
கண்களில் ஒரு கர்வமோ ஒன்றுமே தெரியாது. ஒவ்வொரு அசைவிலும் ஒரு விநயம் இருக்கும்!
// வெட்டிப்பயல் said...
ReplyDeleteஅன்னை தெரசா இருப்பாங்கனு ஆசையா பார்த்தேன்...//
எனக்கும் அவங்களை இங்கு இட ஆசையாத் தான் இருந்தது பாலாஜி.
ஆனாப் பாருங்க தமிழ் அழகிகள்-ன்னு சொல்லியாச்சு. அதான்!:-)
//வெற்றி said...
ReplyDeleteபரபரப்பான தலைப்பு பதிவை எட்டிப்பார்க்க வைத்தது.:))//
ஹி ஹி!
நன்றி வெற்றி
//துளசி கோபால் said...
ReplyDeleteஅழகுக்கும் பெண்களுக்கும்தான் உண்மையான சம்பந்தம்
இருக்குன்னு புரிஞ்சுபோச்சு :-))))//
ஆகா...
கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க!
//போட்டும் இதுலேயாவது 100% ஒதுக்கீடு கிடைச்சுதே!//
டீச்சர், உங்க பொன்னான வாக்குகளை எனக்கே போடுங்க - சக்கரம் சின்னம் மறந்துடாதீங்க! :-)
அதென்னாய்யா 'சக்கரம்'ச்சின்னம்?
ReplyDeleteநான் 'சங்கு'ன்னு நினைச்சேனே:-)))))
அழகியர் அறுவரும் நல்ல உள்ளம் அழகியார்கள் இரவி. இந்திரா நூயியின் நடுவிரல் கருத்தைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். அருணா ராய் பற்றி இனி மேல் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
ReplyDelete//துளசி கோபால் said...
ReplyDeleteஅதென்னாய்யா 'சக்கரம்'ச்சின்னம்?
நான் 'சங்கு'ன்னு நினைச்சேனே:-)))))//
ஹிஹி...நாம எப்பமே சக்கரம் கட்சி தான் டீச்சர்!
தீபாளி பட்டாசு கூடச் சக்கரம் தான் சுத்துவேன்.:-)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇந்திரா நூயியின் நடுவிரல் கருத்தைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். அருணா ராய் பற்றி இனி மேல் தான் அறிந்து கொள்ள வேண்டும்//
அருணா ராய் பற்றிப் படித்துப் பாருங்க குமரன். முதலில் வந்த பெண் IAS அலுவலர்களில் ஒருவர்.
சமூக சேவகரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதால் வேலையை விட்டுச் சமூகத் தொண்டில் இவரும் இறங்கி விட்டார்.
இதை எழுத அழைச்சதே நீங்க தான்!
உங்களுக்குத் தான் முதல் நன்றி!
உங்க அழகு தேர்வுகள் ரொம்ப அழகு
ReplyDelete//யாழினி அத்தன் said...
ReplyDeleteஉங்க அழகு தேர்வுகள் ரொம்ப அழகு//
நன்றி யாழினி!
யாழ் இசையும் அழகு. அதனால் உங்கள் பெயரிலும் அழகு உள்ளதே! :-)
மாட்டிவுட்டீங்களே சார்!
ReplyDeleteநானே படமும் நினைவும்ன்னு இருக்கேன் இப்படி பண்ணிட்டீங்களே!
சரி சரி ஒரு யோசனை சொல்லுங்க எல்லாத்தையும் அழவச்சு ஒரு அழகு பதிவு போடவா? இல்ல ஒரு எழுச்சியானதொரு அழகு பதிவு போடவா? நீங்களே சொல்லுங்க!. (இந்த செல்லாத ஓட்டு எல்லாம் போடக்கூடாது.)
//சிவமுருகன் said...
ReplyDeleteமாட்டிவுட்டீங்களே சார்!
நானே படமும் நினைவும்ன்னு இருக்கேன் இப்படி பண்ணிட்டீங்களே!//
ஹிஹி
சிவா, சித்திரைத் திருவிழா வரப்போகுது. இந்த சமயத்தில் நீங்க இல்லாம அழகுகள் ஆறா?
//சரி சரி ஒரு யோசனை சொல்லுங்க இல்ல ஒரு எழுச்சியானதொரு அழகு பதிவு போடவா?//
எழுச்சிக்கே ஓட்டு!
அழ வைப்பதை டீவி சீரியல்கள் பார்த்துக் கொள்ளட்டும்! :-)
ஆஹா, கலக்கியிருக்கீங்க, நெஜமாகவே அற்புதம், KRS
ReplyDeleteஅழகா தொகுத்திருக்கிறீங்க ரவி!
ReplyDeleteஅக அழகே அழகு என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கேயாரெஸ். நல்ல பதிவு.
ReplyDeleteபடிக்க ஆரம்பித்தவுடன் எங்கே ஆண்டாள் என்று தேடினேன். கடைசியாக சொல்லிவிட்டீர்கள். அருமை. "குழலழகர் கண்ணழகர் வாயழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்" என்று கண்ணனின் அழகையெல்லாம் சுவீகரித்துக் கொண்ட பிராட்டி அல்லவா!
உலகனைத்தும் கடைக்கண் கருணையால் புரக்கும் அங்கயற்கண்ணி நிச்சயம் இருப்பாள் என்று எண்ணினேன். முத்தமிழ் வளர்த்த முதல்வி அல்லவா?
வேளாங்கண்ணியைப் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்கள். ஒருவிதமான இமேஜை நிலைநிறுத்த வேண்டும் என்று உங்களுக்கு நீங்களாவே கொடுத்துக் கொண்டிருக்கும் அழுத்தம் புரிகிறது :))
//காட்டாறு said...
ReplyDeleteஅழகா தொகுத்திருக்கிறீங்க ரவி!//
நன்றிங்க.
//அன்புத்தோழி said...
ஆஹா, கலக்கியிருக்கீங்க, நெஜமாகவே அற்புதம், KRS//
நன்றி அன்புத்தோழியே!
//ஜடாயு said...
ReplyDeleteபடிக்க ஆரம்பித்தவுடன் எங்கே ஆண்டாள் என்று தேடினேன். கடைசியாக சொல்லிவிட்டீர்கள்//
பாத்தீங்களா ஜடாயு சார், உங்கள் நினைப்பு அடியேன் பதிவில் நிஜமாகி விட்டது! :-)
//உலகனைத்தும் கடைக்கண் கருணையால் புரக்கும் அங்கயற்கண்ணி//
அன்னை மீனாட்சிக்குச் சித்திரையை ஒட்டித் தனிப்பதிவு உண்டு. பிள்ளைத் தமிழாக! மீனாளை மறந்து வாணாள் போகுமோ?
//வேளாங்கண்ணியைப் பட்டியலில் சேர்த்திருக்கிறீர்கள். ஒருவிதமான இமேஜை நிலைநிறுத்த வேண்டும் என்று உங்களுக்கு நீங்களாவே கொடுத்துக் கொண்டிருக்கும் அழுத்தம் புரிகிறது :))//
ஹிஹி
இமேஜா? எனக்கா? அப்பிடி ஓண்ணு இருக்கா என்ன? :-)
அப்பிடி எல்லாம் இல்லீங்க! என் சிறு வயது முதல் அன்னை மரியாளும் கூடவே வருவாள், பொம்மையாக!
ஒரு ஈர்ப்பு எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
எங்க ஊரில் சன்னிதி தெருவில் வேளாங்கண்ணி ஆலயம் உண்டு.
கஜேந்திர வரதராஜப் பெருமாள் கருடசேவைக்கும், மற்ற உற்சவங்களுக்கும், பெருமாள் அவள் வாசல் அருகில் வருவார்.
அப்போது, வண்ணப் பட்டாடையும், மலர்களும், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தூபமும்
அவள் சார்பாக சுவாமிக்கு அர்ப்பணிப்பார்கள். சிறு வயதில் என்னை நெகிழ வைத்த சம்பவம் இது!
இன்றளவும் நடக்கிறது!
பிறகு ஒரு பதிவில் எழுதுகிறேன்!
//படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ReplyDeleteஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்//
அருமை!அருமை!
அடடா! உங்களை இழுக்கலாம்!னு நினைத்தேனே!என்ன அழகான பதிவு. தேர்ந்தெடுத்த விதம், சொற்கள், நயம் எல்லாம் அழகு.
இருந்தாலும் எம்.ஜி ரோடில் உள்ள அழகையும் நீங்கள் சொல்லி இருக்கலாம். :p
//ambi said...
ReplyDeleteஇருந்தாலும் எம்.ஜி ரோடில் உள்ள அழகையும் நீங்கள் சொல்லி இருக்கலாம். //
வாங்க மாப்பிள்ளை, வாங்க
எம்.ஜி ரோட் அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியுமா?
கண்ணால் கண்டால் தானே சொர்க்கம்? :-)
சரி...இனி மேல் நீங்க சென்னைக்குத் தான் சப்போர்ட் பண்ணனுமாமே. எம்.ஜி ரோட் எல்லாம் மறந்துடுங்க...ஆமாம்!
மிக அழகான பதிவு.
ReplyDeleteஅழகிகள் ஆறு என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஆண்டாளும், எம்.எஸ். அம்மாவும் அதில் இருப்பார்கள் என்று பதிவைப் படிக்கும் முன்னரே நினைத்தேன்.
கேஆர்எஸ்
ReplyDeleteஎழுதிய விதம் அழகு
தேர்ந்தெடுத்த ஆறும் அழகு
பதிப்பித்த படங்கள் அழகு
பின்னூட்டங்கள் தனி அழகு
எங்களூர் கோதை தந்த தமிழ்தான் அழகின் அழகு என்று சொல்லாமல் சொன்ன விதம் அழகு.
மொத்தத்தில் இந்தப் பதிவு முருகோ முருகு :)
//ஜெயஸ்ரீ said...
ReplyDeleteஅழகிகள் ஆறு என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஆண்டாளும், எம்.எஸ். அம்மாவும் அதில் இருப்பார்கள் என்று பதிவைப் படிக்கும் முன்னரே நினைத்தேன்.//
ஆகா...ஆறில் இரண்டு அழகிகளின் பெயர்கள் முன்னமே வெளியில் பரவி விட்டதா? :-)
நன்றி ஜெயஸ்ரீ!
//ச.சங்கர் said...
ReplyDeleteகேஆர்எஸ்
எங்களூர் கோதை தந்த தமிழ்தான் அழகின் அழகு என்று சொல்லாமல் சொன்ன விதம் அழகு.
மொத்தத்தில் இந்தப் பதிவு முருகோ முருகு :)//
அதானே
"உங்களூர் கோதை"யின் அழகே முருகு! அவள் பாட்டில் நாங்கள் எல்லாம் உருகு!:-)
நன்றி சங்கர்!