குடமாடும் கூத்தன்
கண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை! அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும்! வா!' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில்.
இதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.
***
மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
ஆநிரை 2-7-7
குடங்களை எறிந்து கொண்டு கூத்தாடும் திறமை உள்ள எம் தலைவனே! சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே! மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே! திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே! குருக்கத்திப் பூவை
உனக்குச் சூட வேண்டும்! வா!
எம்பெருமான் கூத்தாடுவானா? இது என்ன கூத்து?
***
கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான்! அவன் பின்னே அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கு வந்து சேர்கின்றனர். மற்ற தேவர்களும் இவர்கள் பின்னே வந்துவிட்டனர்! ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது! பின்னாலேயே கர்வமும்!இப்படி வருகின்ற செல்வச் செருக்கு நீங்குவதற்காக, ஆயர்கள் ஆடுவதுவே குடக்
கூத்து!
ஆயர்களுக்குச் செருக்கு ஏற்படலாம். எம்பெருமானுக்கு ஏது?
இங்கு, 'எம் தலைவனே' என்றதனால், ஆயர்கள் எல்லோரும் குடமாடுவர் என்றும், அவர்கள் தலைவன் கண்ணன் என்றும் யசோதை கூறுகிறாளோ?
ஒரு வேளை எம்பெருமானும் அவர்களுடன் சேர்ந்து குடமாடினானோ?
திருநாங்கூர். 11 திவ்ய தேசங்கள் இருக்குமிடம்! இதில், (திரு) அரிமேய விண்ணகரமும் (#29) ஒன்று. 'அரிமேய விண்ணகரத்திற்கு' வழி கேட்டால் அநேகமாகக் கிடைக்காது. 'குடமாடு கூத்தர் கோயில்' என்று கேட்க வேண்டும்!
***
எம்பெருமானின் திருநாமமே 'குடமாடு கூத்தர்'. எனவே, எம்பெருமான் குடமாடியிருக்க வேண்டும்!
சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள்,
'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்'
என்கின்றார் (கடலாடு காதை 54-55)
'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்'
என்கின்றார் (கடலாடு காதை 54-55)
மங்கையார் மங்களாசாசனம் செய்யும்போது, 'குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் ... ' என்கின்றார் (பெரிய திருமொழி 3-10-8).
இதைத் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'குன்று குடையாய் எடுத்தாய் ...' என்று அருளிச் செய்தாள்?
கண்ணன் குடமாடினானா? குடையாடினானா?
***
நம்மாழ்வார், அர்ச்சாவதாரப் பாசுரங்களில், 'பரஞ்சோதியை, குரவை கோத்த குழகனை, மணிவண்ணனை, குடக் கூத்தனை ...' என்றே குறிப்பிடுகிறார்.மலையாள திவ்ய தேசங்களில், திருக்கடித்தானமும் (#70) ஒன்று. இங்கு, எம்பெருமானுக்கு நடை பெற்ற விழாக்களில், பெண்கள் குடை பிடித்து நடனமாடும் நிகழ்ச்சியும் இருந்ததாம்! காலப் போக்கில் இந்த நடனம் கைவிடப் பட்டது என்றும் கோயில் கர்ண பரம்பரைச் செய்தி.
நம்மாழ்வாரும் இச் செய்தியை,
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை*
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்*
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.
என்கின்றார். மேலும் சில ஆழ்வார் பாசுரங்களில், எம்பெருமான் குன்று குடையாக எடுத்த நிகழ்ச்சியே ’குடக் கூத்தன்’ என்பதற்குப் பொருளாக விவரிக்கப் பட்டுள்ளது.
உங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா? குடத்துக்கா? இல்லை செல்லாத ஓட்டா (இரண்டிற்கும் போட்டால் செல்லாத ஓட்டு ... ஹி ... ஹி ... )
***
பாசுரத்தின் முதல் வரியில், ஆயர்களுக்குத் தலைவன் என்ற யசோதை, பெருமையுடன், இவன் தன் மகன் என்கின்றாள்! தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை! பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ?)!இரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை!
இரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன?
இடம்: வைகுந்த வாசல்
***
இடம்: வைகுந்த வாசல்
காலம்: சபிக்கும் காலம்
பரந்தாமன் (பாம்புப் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து): என்ன இது சத்தம்! இது என்ன வைகுந்தமா, சந்தைக் கடையா?
(அங்கு, நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள், இடையிலே உடையின்றி, ஏழாவது வாயில் காவலர்களான ஜய, விஜயர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கின்றனர்)
பரந்தாமன் (குழந்தைகளைப் பர்த்து): அடேடே! சனகரே! சனந்தனரே! சனாதனரே! சனத் குமாரரே! வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்கு என்ன கஷ்டம்! தங்கள் கோபத்திற்குக் காரணம் என்ன?
சனகர்: தங்களை தரிசனம் செய்ய வந்த எங்களை தங்கள் வாயிற்காவலர்கள் உள்ளே விடவில்லை! அவமானப் படுத்திவிட்டனர்!
விஜயன்: நாராயணா! வழி தவறி வந்துவிட்டனர் என்று நினைத்துவிட்டோம்!
ஜயன்: அச்சுதா! சிறுவர்கள் என்று நினைத்து விட்டோம்!
சனந்தனர்: எம்பெருமானே! எல்லோரையும் சமமாக நினைக்கும் வைகுந்தத்தில், இவர்கள் 'பெரியவர், சிறியவர்' என வித்தியாசப் படுத்திப் பார்த்ததால், வித்தியாசம் நிறைந்த பூலோகத்திற்கே செல்லும்படி சபித்தோம்! அப்போது தான் நீங்கள் வந்தீர்கள்!
நாராயணன்: ஜய விஜயரே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்!
(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)
நாராயணன்: ஜய விஜயரே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்!
(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)
ஜயன்: பிரபோ! மன்னித்து விடுங்கள்!
நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?
விஜயன்: என்ன?
நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?
நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?
விஜயன்: என்ன?
நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?
ஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா?
சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?
விஜயன்: ஐயோ! மூன்று பிறவியே போதும்! நாராயணா! உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்!
(தொபுகடீர்! டமால்! என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)
விழுந்த அந்த இருவர்!
க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!
த்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!
துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்!
சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?
விஜயன்: ஐயோ! மூன்று பிறவியே போதும்! நாராயணா! உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்!
(தொபுகடீர்! டமால்! என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)
***
விழுந்த அந்த இருவர்!
க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!
த்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!
துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்!
எம்பெருமானையே விரோதியாகக் கருதி, அவனையே நிந்தித்து, அவன் கையாலே மாண்டு, மீண்டும் அவனிடமே வந்தவர்கள்!
இருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்)! இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்!
இதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!
இருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்)! இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்!
இதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!
சகோதரர்களில், இன்னொருவன் எம்பெருமானின் விரோதியாக இருந்தாலும் (இரணியாட்சன், கும்பகர்ணன், தந்தவக்ரன்), அதீத வெறுப்புக் கொண்டதாகக் கதை இல்லை!
சென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்! அதற்கு இன்னொரு அர்த்தம்!
தான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார்! தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே! இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே! எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்!
சென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்! அதற்கு இன்னொரு அர்த்தம்!
தான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார்! தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே! இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே! எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்!
***
ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு பூவைச் சொல்லி, 'உனக்கு இதைச் சூட்டுகிறேன், வா!' என்கின்றாள் யசோதை.
பலஸ்ருதி இல்லாத மிகச் சில திருமொழிகளில் இதுவும் ஒன்று!
யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?
இந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)!
இந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)!
வீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்!
வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது.
இந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா?
வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது.
இந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா?
- நரசிம்மர் மீண்டும் வருவார்
மிக அருமையான விளக்கங்கள். எவ்வளவு மேற்கோள்கள்.
ReplyDeleteநீங்கள் சொன்ன யுகங்களில் நிந்தனை செய்ய இரண்டு பேராக தான் வந்தனர். கலியுகத்தில் தான் நிந்தனை செய்ய எத்தனை பேர்கள்? நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு தான் வந்தது. :))
சிம்மம் கொஞ்சமாகத் தான் வந்தார், கண்ணன் நிறையவே ஆக்ரமித்துக் கொண்டு விட்டார் இந்த பதிவில். இட்ஸ் ஓகே! :))
ReplyDeleteஅம்பி
ReplyDelete//சிம்மம் கொஞ்சமாகத் தான் வந்தார், கண்ணன் நிறையவே ஆக்ரமித்துக் கொண்டு விட்டார் இந்த பதிவில். இட்ஸ் ஓகே! :))//
நரசிம்மர் ரொம்ப வந்துவிட்டாரோ என்ற பயம் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் பாசுர வரிகள்.
இரண்டும் சேர்ந்து, கண்ணனைப் பற்றி எழுதச் சொல்லிவிட்டன :-)
அம்பி
ReplyDelete//மிக அருமையான விளக்கங்கள். எவ்வளவு மேற்கோள்கள்.//
நன்றி.
//நீங்கள் சொன்ன யுகங்களில் நிந்தனை செய்ய இரண்டு பேராக தான் வந்தனர். கலியுகத்தில் தான் நிந்தனை செய்ய எத்தனை பேர்கள்? நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு தான் வந்தது. :))//
இது எல்லாம் தெரிந்தே, தீவிர நிந்தனையும் ஒரு தியானம் என்று சொன்னார்களோ என்னவோ?
குடத்தை தூக்கி எறிந்து செருக்கு நீங்க ஆயர்பாடியர் ஆடும்போது ! செருக்கு இல்லை என்றாலும் கண்ணனும் ஆட வேண்டும் என்ற ஆசையில் மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டு ஜாலியா கூத்தாடியிருபார்.
ReplyDeleteதலைவனாக இருந்தாலும் மக்களுக்கு தன்னை எளியவன் என்று காட்டியவர் (தலைவன் என்பதால் தனியாக நின்று இருப்பாரா நம் கண்ணன் நோ சான்ஸ் ) ..... குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்-- திருமங்கை ஆழ்வார் :)))
நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?விஜயன்: என்ன?
நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?
ஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா?
சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?:)))
அட்ரா சக்கை ! சூப்பர்அப்பு!
சீரியஸ் விசயத்தை கூட எங்களை சிரிக்க வச்சுடீங்களே!
எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை!:)))
ReplyDeleteயசோதைin தாய் பாசம் கண்ணை மறைத்துவிட்டது (அவன் நாராயணன் துளசியை விரும்புபவர் என்பதை
மறந்து) விதவிதமாக (latest verity flowers) மலர்களை தன் குழந்தைக்கு சூட்டி அழகுபார்க்க ஆசைபட்டிருkkalam:)))
color coloraa perumal padangal arumai.
எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!
ReplyDeleteகிருஷ்ணா அவதாரத்தில் ஒருவர் துரியோதனன் முதலானோர் உங்களுக்கு கெடுதல் செய்ய எண்ணம் கொண்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் வருவதில்லையே அது எப்படி என கேட்க
அதற்கு கிருஷ்ணர் அவர்கள்
எப்படியெல்லாம் என்னை கொல்வது என்று திட்டம் தீட்ட எந்நேரமும் அவர்கள் அறியாமலேயே என்னை நினைத்து கொண்டிருகிறார்கள். தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் என்னை நினைபதால் அவர்களுக்கு எந்த குறையும் வருவதில்லை என்று கூறியதாக கேட்டுள்ளேன்.
அன்பரே
ReplyDelete//யசோதைin தாய் பாசம் கண்ணை மறைத்துவிட்டது (அவன் நாராயணன் துளசியை விரும்புபவர் என்பதை
மறந்து) விதவிதமாக (latest verity flowers) மலர்களை தன் குழந்தைக்கு சூட்டி அழகுபார்க்க ஆசைபட்டிருkkalam:)))//
அருமை!
பெரியோர்களின் பல விளக்கங்களில் இதுவும் ஒன்று.
இன்னும் வேறு ஏதாவது வருகின்றதா பார்க்கலாம்.
அன்பரே
ReplyDelete//கிருஷ்ணர் அவர்கள்
எப்படியெல்லாம் என்னை கொல்வது என்று திட்டம் தீட்ட எந்நேரமும் அவர்கள் அறியாமலேயே என்னை நினைத்து கொண்டிருகிறார்கள். தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் என்னை நினைபதால் அவர்களுக்கு எந்த குறையும் வருவதில்லை என்று கூறியதாக கேட்டுள்ளேன்.//
உண்மைதான்!
எம்பெருமான் நாமத்தை, எந்த எண்ணத்துடனும், எந்த நிலையிலும், எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும் எப்படிச் சொன்னாலும், அதற்கான பலன் கட்டாயம் உண்டு!
எங்கள் சிங்கப்பிரான் பற்றி எவ்வளவு பாசுரங்கள்.. அருமையா சொல்றீங்கண்ணா..
ReplyDelete//கண்ணன் குடமாடினானா? குடையாடினானா? //
ReplyDeleteவெண்ணைக்குடம் உருட்டி விளையாடியவன் ஆனதால் எனது ஓட்டு குடத்துக்கு போடலாம் என்று நினைத்தேன்.. ஆனால் அர்ச்சாவதார கோலத்தில், குடையின் கீழ் அழகு காட்டுவதால் குடைக்கும் போடலாம்னு தோணுது..
வெண்ணெய் திருடிய கண்ணனை பாத்ததில்லை... அதனால என் ஓட்டு குடைக்கு தான்.
//இரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை//
ReplyDeleteமழிசைப்பிரான் வேற மாதிரி பாடிருப்பாரே..”நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்” என்று.. பெருமாளைப் பார்த்து, “தான், ஆழ்வான் உன்னைப்பார்க்க வந்தா.. வான்னு கூட சொல்லாம படுத்துருக்கிறாயேன்னு ஒரு பிடி பிடிச்சுருவார்.
Giridhaari looks amazing ! Thanks a ton for that particular picture alone !!
ReplyDeleteAnd another ton for the rest of the post.
~
Radha
ராகவா
ReplyDelete//வெண்ணெய் திருடிய கண்ணனை பாத்ததில்லை... அதனால என் ஓட்டு குடைக்கு தான்.//
கண்ணன் கிட்ட இருக்கற குடை நமக்கு ரொம்ப பெரிசு. நம்மால தூக்க முடியாது. குடம் சின்னது. என் ஓட்டு குடத்துக்குத் தான்.
//வீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்!//
ReplyDeleteஅருமை!
பூமாலை இல்லை என்றாலும் பாமாலை!
பாமாலை ஓதுவதால் நாமாலை!
நாமாலையால் தீரும் காமாலை!
அதுவே வேங்கடவன் தோமாலை!
வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் - என்று ஆழ்வார் சொல்லும் "வாடா மலர்" எது?
பாரிஜாதமா? - தேவலோக மலரைப் போய் எளியோருக்குச் சொல்லிப் பயமுறுத்துவாரா?
மனோரஞ்சிதமா? - அதுவும் ஒரு நாளில் வாடா விட்டாலும், ஒரு வாரத்தில் வாடி விடும்!
அப்போது எது "வாடா மலர்"? - "பாடீர்" அவன் நாமம் - அந்த நாமாலையைத் தான் தோமாலையாக்கிச் சொல்கிறார் மாறன்!
//வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது//
ReplyDeleteதிருமஞ்சன காலத்தில் ஏது மலர் சூடல்?
திருமஞ்சன காலமா இல்லை தோமாலை, மலர் அலங்கார, புஷ்பார்ச்சனைக் காலமா ரங்கன் அண்ணா?
//யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?//
ReplyDeleteதுளசி மிகவும் சூடு தர வல்லது!
குளிர்ந்த மேனிப் பெருமாளுக்கு சூடு தரும் துளசி!
வெய்ய மேனிச் சிவனார்க்கு குளிர்ச்சி தரும் வில்வம்!
இத்தனை மலர்களைச் சூட்டும் யசோதை, கண்ணன் குழந்தை என்பதால், சூடேற்ற வல்ல துளசி சார்த்தவில்லை!
அதைத் தாயிலும் தாயான பெரியாழ்வார் என்னும் அம்மா, சொல்லிச் செல்கிறார்!
இன்றும் குருவாயூரில் துளசி மாலை சார்த்தாமல், துளசியைக் காலடியில் தான் சேர்ப்பிப்பார்கள்! சின்னிக் கிருஷ்ணன் அல்லவா? :)
இருப்பினும், இன்ன பிற பாசுரங்களில் துளசி பேசப்படுகிறது!
ReplyDelete* இதே பெரியாழ்வார், குழந்தைக் கண்ணன் அல்லாத பெரிய கண்ணனுக்குத் துளசியைச் சூட்டுகிறார்! - தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் என்னும் பல்லாண்டு!
* நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் - என் தோழி, ஆண்டாள்
* சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்னக்
கள் ஊறும் பைந் துழாய் மாலை யானை - திருமங்கை என்னும் ராபின்ஹூட் ஆழ்வார்!
* பொன்தோய் வரை மார்வில் பூந் துழாய் அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே - பேய் ஆழ்வார்
* புனந் துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம் துழாய் மாலாய் வரும் - பூதத்தாழ்வார்
* கண்ணன் தண்ணந் துழாய்த்
தாமம் புனைய,
அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே - திருமழிசை
* புனத் துழாய் மாலையானே.
பொன்னி சூழ் திருவ ரங்கா,
எனக்கு இனி கதி என் சொல்லாய் - தொண்டரடிப்பொடி
* குமரன் அண்ணாவுக்குப் பிடித்த மாறன் மொழி....
அடியேன் சிறிய ஞானத்தன்,
அறிதல் ஆர்க்கும் அரியானை
கடிசேர் தண்ணந் துழாய்க் கண்ணி
புனைந்தான் தன்னைக் கண்ணனை..
என்று நம்மாழ்வார்
இன்னும் பல துளசீ பாசுரங்கள், ஆழ்வார் மொழிகளில் பல இடங்களில் வீசும்! அடியேன் உடனே அறிந்தது இவ்வளவே!
//க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!
ReplyDeleteத்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!
துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்//
எதுக்கு கும்பகர்ணனை முதலில் சொல்லி, ராவணனைப் பின்னால் சொன்னீங்க ரங்கன் அண்ணா? உங்க வெறுப்பு sort order வருவதற்கா? :)
மற்ற பிறவிகளில் எல்லாம் அண்ணன்-தம்பி சரி தான்!
தந்தவக்ரன், சிசுபாலன் - அண்ணன் தம்பியரா?
//சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா//
ReplyDeleteஹா ஹா ஹா
சூப்பரு! விளையாட்டாக நீங்கள் சொன்னாலும், இதில் ஒரு உண்மை இருக்கு ரங்கன் அண்ணா!
யோகங்களில் திளைத்த உத்தம முனி புருஷர்களா இப்படி எல்லாம் சபிப்பார்கள்? அவர்கள் யோகத்துக்கே இழுக்காகி விடுமே!
அதுவும் எம்பெருமான் வீட்டுக்கு வந்திருக்கிறோமே என்னும் பட்சத்தில், அவன் வீட்டிலா (திருப்பாற்கடலில்) இப்படியெல்லாம் நிந்தனையில் ஈடுபடுவார்களா?
சாதாரண பக்தரான தியாகராஜரே, திருமலையில் தன்னை அனுமதிக்காத போது அமைதி காத்தார்! அழுதார்! சபிக்க வில்லை!
ஆனால் இந்த யோக புருஷர்கள்???
எல்லாரும் நினைப்பது போல் ஜய-விஜயர்கள் முறை தவறவும் இல்லை!
சனகாதி முனிவர்கள் அப்போது ரொம்ப பக்த சிரேஷ்டர்களும் இல்லை!
ஸ்ரீ மத் பாகவதத்தில் முழுக் கதையும் உள்ளது :)
KRS
ReplyDeleteவந்துவிட்டீர்களா? கொஞ்ச நாள் காணோம் என்று நினைத்தேன்.
//வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் - என்று ஆழ்வார் சொல்லும் "வாடா மலர்" எது?//
’அன்றே அள்ளிப் பறித்த மலர்களை,
கொன்றே கிள்ளிச் சேர்த்து, அலரவள்
நன்றே உள்ளில் சேர்ந்த மலரவனைச்
நன்றே உள்ளம் சோரப் பாடலாம்’
இறைவனுக்கு தினமும் அன்று பறித்த, வாடாத (மரத்தில் இருந்தாலும் மலர் வாடி இருக்கலாம்), மலர்களையே நாம் சூட வேண்டும். Frig-ல் வைத்த பூவும் கூடாது.
KRS
ReplyDelete//துளசி மிகவும் சூடு தர வல்லது!
குளிர்ந்த மேனிப் பெருமாளுக்கு சூடு தரும் துளசி!//
//இன்றும் குருவாயூரில் துளசி மாலை சார்த்தாமல், துளசியைக் காலடியில் தான் சேர்ப்பிப்பார்கள்! சின்னிக் கிருஷ்ணன் அல்லவா? :)//
அருமை!
KRS-னா கொக்கா!
இன்னும் ஒரு விளக்கம் - எங்கோ படித்தது - எம்பெருமானுக்கு துளசி -Default.
பல கோயில்களில் எம்பெருமான் பச்சை மேனியான் (திருக்குறுங்குடி சென்றால், இந்தப் பச்சை மேனியானை நன்கு தரிசிக்கலாம். இங்குள்ள பெருமாள் சுதையினால் ஆனதாகவும், இதனால், பச்சை வர்ணம் கரைந்து விடாமல் இருக்க, மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது என்றும் கோயில் வரலாறு.
இப்படி, பச்சை மேனியை அலங்கரிக்க, பச்சை நிறத் துழாய் மட்டும் போதாது.
இந்தத் திருமொழியின் கடைசியில், ஆழ்வார் ‘எண்பகர் பூவும் கொணர்ந்தேன்’ என்று எட்டுப் பூக்களைச் சொல்கிறார்.
இன்னொரு அன்பர் ‘color-color-ஆக’க் கூறியது போல, எட்டுப் பூக்களும் ’பளிச்’ நிறங்கள்.
KRS
ReplyDelete//எதுக்கு கும்பகர்ணனை முதலில் சொல்லி, ராவணனைப் பின்னால் சொன்னீங்க ரங்கன் அண்ணா? உங்க வெறுப்பு sort order வருவதற்கா?//
முதலில் மாண்டவர், மற்றவர் வெறுப்பு அதிகமாகக் காரணமாகியதால் இந்த Order.
இந்த மூன்று பிறவிகளிலும், முதலில், அதிகம் வெறுப்பு இல்லாதவர்கள் மாள்கின்றனர். பின்னரே மற்றவர் மரணம்.
இரணியனுக்கு, வெறுப்பு அதிகமாகியது, இரணியாட்சனை எம்பெருமான் கொன்றதால் தான். அதுவரையில், வெறுப்பு அதிகமாக இருந்ததாகக் கதை இல்லை.
சிசுபாலனுக்கும், தந்தவக்ரனைக் கொன்றது முதலே கண்ணன் மேல் வெறுப்பு அதிகமாகியாதாகவும் அதுவரை, கண்ணனை, தன் மாமன் என்று மரியாதையாக நடத்தியதாகவும் கதை உண்டு.
ராமாயணத்திலும், கும்பகர்ணன் மாண்ட பிறகு ராவணன், பயந்தாலும், ’தம்பியே மாண்டான், இனி இருந்து பயனில்லை, போர் செய்யலாம்’ என்று தனிமையில் பேசிக் கொண்டான்.
KRS
ReplyDelete//மற்ற பிறவிகளில் எல்லாம் அண்ணன்-தம்பி சரி தான்!
தந்தவக்ரன், சிசுபாலன் - அண்ணன் தம்பியரா?//
சூரன் - மாரீஷா
=> ச்ருததேவா-சால்வன்
=> தந்தவக்ரன்
சூரன் - மாரீஷா
=> ச்ருதஸ்ரவஸ்-தமகோஷன்
=> சிசுபாலன்
தந்தவக்ரனும், சிசுபாலனும் உடன் பிறந்தவர்கள் அல்லர். ஆனாலும், Cousins
KRS
ReplyDelete//தந்தவக்ரனும், சிசுபாலனும் உடன் பிறந்தவர்கள் அல்லர். ஆனாலும், Cousins//
நாரதர், தருமரைப் பார்த்து, ‘உனது சிறிய தாயார் மக்களான சிசுபாலன், தந்தவக்ரன் இருவரும் கண்ணனால் கொல்லப்பட்டனர் என்றே தொடங்கினார். தருமர் இது எப்படி, என்று கேட்க, அங்கிருந்தே ’பிரஹ்லாத சரித்ரம்’ பாகவதத்தில் தொடங்குகிறது.
//யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?//
ReplyDeleteஅண்ணா, பொதுவாக குழந்தைக்கு யாரும் துளசி மாலை சூடுவதில்லை அல்லவா.. அதனால் இருக்கலாம்.
//திருமஞ்சன காலத்தில் ஏது மலர் சூடல்? //
ReplyDeleteஉண்டே ரவிண்ணா.. திருமஞ்சனத்தின் போது நடுநடுவே மாலை மாற்றலும் உண்டு.. அதில் துளஸியும் உண்டு.
//எல்லாரும் நினைப்பது போல் ஜய-விஜயர்கள் முறை தவறவும் இல்லை!
ReplyDeleteசனகாதி முனிவர்கள் அப்போது ரொம்ப பக்த சிரேஷ்டர்களும் இல்லை!
ஸ்ரீ மத் பாகவதத்தில் முழுக் கதையும் உள்ளது :)//
ஸ்ரீமத் பாகவதத்திலும்,
‘5 வயதுத் தோற்றமுள்ள சிறுவர்களாகத் தெரிந்ததால், ஜயவிஜயர்கள் அவர்களைத் தடுத்துவிட்டனர்’ என்றே நாரதர் தருமரிடம் கூறுகிறார் (7.14.35-36)
’கோபம் கொண்ட சநத் குமாரர்கள், “மூடர்களான உமக்கு வைகுந்தத்தில் இடமில்லை” என்றே சபித்ததாகக் கூறுகின்றனர் (7.14.37-38).
விஷ்ணு புராணத்தில், ‘வயது வித்தியாசம் பார்த்ததால் வைகுந்தத்தில் உமக்கு இடமில்லை’ என்று சனத் குமாரர்கள் சபித்ததாக இருக்கின்றது.
//உண்டே ரவிண்ணா.. திருமஞ்சனத்தின் போது நடுநடுவே மாலை மாற்றலும் உண்டு.. அதில் துளஸியும் உண்டு.//
ReplyDeleteஆமாம்.
திருமஞ்சன காலத்தில், நேரத்தைப் பொறுத்து, பஞ்ச சூக்தங்கள், (காலையில் நடந்தால் திருப்பாவை), நீராட்டம், பூச்சூடல், காப்பிடல் திருமொழிகள், திருக்குறுந்தாண்டகம் 15-16 (முன்பொலா, மாயமான்) பாசுரங்கள், திருவிருத்தம்-21 (சூட்டுநன் மாலை), திருவாய்மொழி 4-3-2 (பூசும் சாந்து), பெரியாழ்வார் திருமொழி 3-3-3 (காடுகள்), 3-3-9 (திண்ணார்) சாதிப்பதுண்டு.
சமீபத்தில், திருப்பதியில் புஷ்ப யாகம் பார்த்தேன். காலையில், ஸ்ரீநிவாஸனுக்கு 90 நிமிடம் அபிஷேகம் நடைபெற்றது. அதில், நீளா சூக்தம் தவிர மற்ற சூக்தங்கள் சொல்லப்பட்டன (ஏன் இதை விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை). கடைசியில், கூட்டம் எழுந்து செல்லும்போது, அவசரமாக நீராட்டமும், பூச்சூடலும் சொல்லப்பட்டன).
//விஷ்ணு புராணத்தில், ‘வயது வித்தியாசம் பார்த்ததால் வைகுந்தத்தில் உமக்கு இடமில்லை’ என்று சனத் குமாரர்கள் சபித்ததாக இருக்கின்றது.//
ReplyDeleteநரசிம்ம புராணத்தில், அடியேனுக்குத் தெரிந்த வரை, சனத்குமாரர்களைப் பற்றி குறிப்பு இல்லை.
//எல்லாரும் நினைப்பது போல் ஜய-விஜயர்கள் முறை தவறவும் இல்லை!
ReplyDeleteசனகாதி முனிவர்கள் அப்போது ரொம்ப பக்த சிரேஷ்டர்களும் இல்லை!
ஸ்ரீ மத் பாகவதத்தில் முழுக் கதையும் உள்ளது :)//
ஸ்ரீமத் பாகவதத்திலும்,
‘5 வயதுத் தோற்றமுள்ள சிறுவர்களாகத் தெரிந்ததால், ஜயவிஜயர்கள் அவர்களைத் தடுத்துவிட்டனர்’ என்றே நாரதர் தருமரிடம் கூறுகிறார் (7.14.35-36)
’கோபம் கொண்ட சநத் குமாரர்கள், “மூடர்களான உமக்கு வைகுந்தத்தில் இடமில்லை” என்றே சபித்ததாகக் கூறுகின்றனர் (7.14.37-38).
விஷ்ணு புராணத்தில், ‘வயது வித்தியாசம் பார்த்ததால் வைகுந்தத்தில் உமக்கு இடமில்லை’ என்று சனத் குமாரர்கள் சபித்ததாக இருக்கின்றது.
// கண்ணன் குடமாடினானா? குடையாடினானா? //
ReplyDeleteஅவனுக்கு என்ன என் சிந்தையில் என்ன வேண்டுமானலும் ஆடுவான்.
// உங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா? குடத்துக்கா? இல்லை செல்லாத ஓட்டா //
எனக்கு தெரிந்து அவரை அப்பக் குடத்தான் எனறுதான் கூறுவார்கள், கையில் அப்பக் குடம் வைத்திருந்தனால் ஆதலால் எனது ஓட்டு சுயேச்சையான அப்பக்குடத்திற்க்கு.
ஆமா தந்தவக்கிரனை எப்போது கொல்கின்றார், எனக்கு கதை தெரியவில்லை.
துளசி மலர் கிடையாது, திருத்துழாய் பெருமாள் தலையில் சூட்டுவது அல்ல, மார்பிலும், பாதத்திலும் இடுவது.
இரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன?
இதுக்கு அர்த்தம் மார்பை பிளந்தது என்பது.
பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?
அப்ப கண்ணனை தீவிரமாக திட்டினால் சார்ட் கட்டில் சீக்கிரம் வைகுண்டம் போலாம் போல இருக்கே. அட இப்படி கூட வழி இருக்கா. டேய் கண்ணா இது தெரியாம இவ்வளவு நாள் வீணாக்கிட்டேன்.
நன்றி கே ஆர் எஸ்.
//டேய் கண்ணா இது தெரியாம இவ்வளவு நாள் வீணாக்கிட்டேன்.
ReplyDeleteநன்றி கே ஆர் எஸ்//
ஆகா!
சுதாகர், மாதவிப் பந்தலில் இப்போ பதிவு எழுதறது நான் இல்லை! ரங்கன் அண்ணா! உங்க நன்றி அவருக்குத் தான் போகணும்! :)
There are always two sides to a coin! தவறு ஜய விஜயர்கள், முனிவர்கள்-இரண்டு பேர் மேலும் தான்! :)
ReplyDeleteஇறைவன் தான் எடுக்க இருக்கும் அவதாரங்களுக்குத் தன்னுடன் பூவுலகம் வரச் சம்மதமா என்று ஜய விஜயர்களைக் கேட்க, அவர்கட்கோ லேசான தயக்கம்! மோட்சத்தை விட்டு, பூவுலகம் போய் கஷ்டப்படணுமா-ன்னு!
மண்ணுலக உயிர்கள் கடைத்தேறும் பொருட்டு, பகவானே பிறக்கும் போது, தாங்களும் செல்வோமே என்று இல்லாமல், சற்றே தயங்கினார்கள். சரி-ன்னும் சொல்லலை! மாட்டோம்-ன்னும் சொல்லலை! இறைவன் சிரித்தான்!
அந்த நேரம் பார்த்து சனகாதி முனிவர்கள் நால்வரும் பரமனைச் சேவிக்க வந்தார்கள்!ஆனால் அங்கிருந்த அடியவர்களைச் சேவிக்காமல், ஏதோ தங்களுக்கும் பரமனுக்கும் Direct Connection போல, அனுமதி பெறாமல், ஏதேச்சாதிகாரமாக உள்ளே நுழைய முற்பட்டனர்!
அவர்கள் வந்த நோக்கம்: பரப் பிரம்மத்துக்கு உருவம் இருக்குதா என்று இறைவனையே சோதித்துப் பார்க்கத் தான்!
இறைவனைச் சோதனை செய்யும் முன், தங்கள் பணிவைச் சோதித்துக் கொள்ள முனிவர்கள் அறியவில்லை!
ஆலயத்தில் அடியார்களைச் சேவித்து, கருடாழ்வாரைச் சேவித்து, ஜய விஜயர்களிடம் முகமன் சொல்லி, அனுமதி பெற்று இன்முகத்துடன் நுழைய வேண்டும் என்பதே ஆலய வழிபாட்டு முறைமை!
இதை மீறிய முனிவர்கள் முதல் குற்றவாளிகள்!
இவ்வாறு மீறியவர்களைச் சற்று அன்புடன் எடுத்துச் சொல்லி இருக்கலாம்! ஜய விஜயர்கள் ஒரு முறை எடுத்துச் சொன்னார்கள்! கேளாத பட்சத்தில் அனுமதி மறுத்தார்கள்! இது தான் தவறு!
ReplyDeleteஅப்போது முனிவர்கள் ஜய விஜயர்களைச் சபிக்க...
அனைவரின் முன்னும் பெருமான் தோன்றினார்.
"முனிவர்களே, பரப்பிரம்மத்துக்கு உருவம் இருக்கா?" என்று நையாண்டியாய் கேட்க, முனிவர்கள் தலை கவிழ்ந்தனர்!
இரு பக்கத் தவற்றினையும் எடுத்துக் காட்டிய இறைவன்...
முனிவர்கள் சாபத்தைச் சற்றே மாற்றி அமைத்தான்!
அடியார்களாக நூறு பிறவிகளா? எதிரிகளாக மூன்றே பிறவிகளா? என்று கேட்க, பெருமானைப் பிரிந்து இருக்க மாட்டாத ஜய விஜயர்கள் எதிரிகளாகப் பிறந்தொழிந்து சீக்கிரம் வருவதையே விரும்பினார்கள்!
பகவான் கேட்ட போது வரத் தயங்கியவர்கள், இப்போது அவதார காலத்தில் அவர்களும் பூமியில் பிறக்கும் சூழலைத் தானே உண்டாக்கிக் கொண்டார்கள்! :)
அதே போல்...
ReplyDeleteஅன்று ஜய விஜயர்களையும் அடியார்களையும் மதிக்கத் தவறிய முனிவர்கள்...
அதே ஜயவிஜயர்கள் இரண்யாட்சன்-இரண்யகசிபுவாகப் பிறந்த போது...
உயிருக்குப் பயந்து "ஓம் இரண்யகசிபுவே நமஹ"-ன்னு மூச்சுக்கு மூச்சுக்கு சொல்ல வேண்டி வந்தது! :)))
இப்படிப் பலாபலான்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து விட்டு, இறைவன் உணர்த்தும் பாடம் தான் அதிசயம்! எதை எதோடு கோர்த்து உணர்த்துகிறான் என்பது அதிசயத்திலும் அதிசயம்! :)
உயிருக்குப் பயந்து கொள்கையைக் கைவிட்ட சனகாதி முனிவர்கள், ஓம் நமோ இரண்யகசிபுவே என்று பெருமாளையே கைவிட்ட முனிவர்களின் "யோக" லட்சணம் இது தான்! :)
ஆனால் பெருமாளைச் சேவிப்பதைத் தடுத்தாலும், அதற்காகச் சபிக்காது, அழுது அவனையே நினைத்த பிரகலாதன், தியாகராஜர் போன்ற "பக்த" லட்சணம் வேறு!
"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும், "பக்த" பிரேமையும், சரணாகத மேன்மையைப் போல் வரவே வராது! :)
Raghav said...
ReplyDelete//திருமஞ்சன காலத்தில் ஏது மலர் சூடல்? //
உண்டே ரவிண்ணா.. திருமஞ்சனத்தின் போது நடுநடுவே மாலை மாற்றலும் உண்டு.. அதில் துளஸியும் உண்டு//
ஐயம் போக்கி அருளியமைக்கு நன்றி ராகவ்! :)
//இப்படி, பச்சை மேனியை அலங்கரிக்க, பச்சை நிறத் துழாய் மட்டும் போதாது//
ReplyDeleteசூப்பரு! பச்சை நிறமே...பச்சை நிறமே-ன்னு அலை பாயுதே படத்தின் பாடலைப் பாடலாம் போல இருக்கே! :)
//இன்னொரு அன்பர் ‘color-color-ஆக’க் கூறியது போல, எட்டுப் பூக்களும் ’பளிச்’ நிறங்கள்//
இரவின் நிறமே இரவின் நிறமே
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
-ன்னு அப்பவே ஆழ்வார் பாடி இருக்காரு போல! :))
//தந்தவக்ரனும், சிசுபாலனும் உடன் பிறந்தவர்கள் அல்லர். ஆனாலும், Cousins//
ReplyDelete//சூரன் - மாரீஷா
=> ச்ருததேவா-சால்வன்
=> தந்தவக்ரன்
சூரன் - மாரீஷா
=> ச்ருதஸ்ரவஸ்-தமகோஷன்
=> சிசுபாலன்//
ஒரு கேள்விக்கு இத்தனை பதில்கள் தரும் ரங்கன் அண்ணாவுக்குப் பந்தல் வாசகர்கள் சார்பாக அடியேன் நன்றி!
//ஐயம் போக்கி அருளியமைக்கு நன்றி ராகவ்! :)//
ReplyDeleteஒவர் குசும்பு உடம்புக்கு ஆகாதுண்ணோவ்.. :)
//"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும், "பக்த" பிரேமையும், சரணாகத மேன்மையைப் போல் வரவே வராது! :)
ReplyDelete//
ஆரம்பிச்சாச்சா :)
சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா ?
ராகவா
ReplyDelete//சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா ?//
நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என்ன?
ராகவா
ReplyDelete//நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என்ன?//
அதுக்கப்புறம் சரணகதியும் ஒரு யோகமா என்ற கேள்விக்கு பதில் தெரியுமே? அதனால் தான் - ஹி ... ஹி ...
மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*
ReplyDelete(மடங்கொள் என்றால் பெண்களா!)
பெருமாள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை அடித்து மயக்குகிறாரே!
ஆழ்வார் மடங்கொள் என்று குறிப்பிட்டு கூறியிருப்பது குட,மட,இட,குட
என்ற வரிசை வரிகளுக்காகவோ!
//ஆழ்வார் மடங்கொள் என்று குறிப்பிட்டு கூறியிருப்பது குட,மட,இட,குட
ReplyDeleteஎன்ற வரிசை வரிகளுக்காகவோ!//
/*மடம் கொள் மதி முகத்தாரை*/
மடம் - அழகு, மென்மை, மடப்பம்
மென்மையும், அழகும் நிறைந்த, சந்திரன் போல் முகமுடைய பெண்களை
/*மால் செய்ய வல்ல என் மைந்தா*/
மால் - மயக்கம்
மயக்கும் திறமை உள்ள என் மைந்தனே!
என்கின்றாள் யசோதை.
//ஆமா தந்தவக்கிரனை எப்போது கொல்கின்றார், எனக்கு கதை தெரியவில்லை.//
ReplyDeleteதருமரின் ராஜசூய யாகத்தின்போது, முதலில் சிசுபாலன் க்ருஷ்ணனிடம் சண்டையிட்டு முக்தி அடைந்தான். அவனிடம் இருந்து ஒரு ஜோதி புறப்பட்டு, க்ருஷ்ணனிடம் சேர்ந்தது.
அடியேன், இதற்கு முந்திய ‘Comment'-ல், சிசுபாலன் மரணம் தந்தவக்ரன் மரணத்தின் பின் ஏற்பட்டது என்று தவறாகக் கூறிவிட்டேன். தவறான செய்தியைக் கூறியதற்கு மன்னிக்கவும்.
சிசுபாலன் மரணத்தினால் கோபமடைந்த சால்வனும், தந்தவக்ரனும், க்ருஷ்ணன் துவாரகையில் இல்லாதபோது, அதை முற்றுகையிட்டனர். அப்போது கிருஷ்ணர் அங்கு வருகிறார்.
அங்கு நடந்த சண்டையில், முதலில் சால்வன் கொல்லப் பட்டான்.
சால்வன் மரணத்தைக் கண்ட தந்தவக்ரன் (வக்ரம் - வக்ரமான, வளைந்த; தந்த - பற்கள்) உடைய அசுரன், கதையை எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனை எதிர்த்தான். க்ருஷ்ணனும், தன் கதையால் தந்தவக்ரனை அடிக்க, அவன் உயிர் துறக்கிறான். போர்க்களத்தில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனிடமிருந்து ஒரு ஜோதி கிளம்பி, கண்ணனிடம் சேர்ந்தது.
//நீ கூறும் யோகம் என்றால் என்ன? சரணாகதி என்றால் என்ன? //
ReplyDeleteஹலோ.. நான் தருமி பரம்பரையாக்கும்.. கேள்விக்க நான் பதில் சொல்ல நீங்க..
சரணாகதி செய்து கிடைக்கும் மோட்சம் யோகம் தானே.
நான் கேள்விப்பட்ட அளவில்..
ReplyDeleteகர்ம, ஞான, பக்தி யோகத்தினால் மோட்சம் கிடைப்பது கடினம்.. சரணாகதி ஒன்றே எளிய வழின்னு..
ஆனா, சரணாகதி என்றால் என்ன? எப்படிச் செய்வது?
சரணாகதிக்கு நேரம், காலம் கிடையாது.. எப்போது வேண்டுமானாலும்.. எந்த நிலையிலும் செய்யலாம் என்று கே.ஆர்.எஸ் இங்க சொல்லிருக்காரு.. உதாரணத்திற்கு கஜேந்திரன், திரெளபதி சரணாகதி விளக்கமும் கொடுத்தார்..
கஜேந்திரன், பரம்பொருள் எப்படியும் தன்னை முதலையிடம் இருந்து காப்பாற்றுவான்கிற ”நம்பிக்கை” இருந்ததால் கதறிற்று.. அந்த நம்பிக்கை தான் சரணாகதியா?.. அப்படின்னா.. அவன் நம்மைக் காப்பான் எனும் நம்பிக்கை வர முதல்ல என்ன பண்ணனும்???
கர்ம/பக்தி/ஞான யோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு ”சரண் அடைந்தால் மோட்சம் கொடுக்கும் பிரான்” அப்படிங்கிற “நம்பிக்கை” வருமா ? இல்லை தெரிந்தும்.. என் முயற்சியினால் மோட்சத்திற்கு செல்வேன் எனும் இறுமாப்பு வருமா?
பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது??
//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது?? //
ReplyDeleteதேனின் இனிமை சுவை வேறு. தேன் வேறு.
பாலின் வெண்மை நிறம் வேறு. பால் வேறு.
நீங்க சொல்ற வேறுபாடு இப்படி தான் இருக்கிறது ராகவ்.
"பக்தி யோகம்" என்று சொல்லும் பொழுதே அதில் பக்தி இருக்கிறதே.
"ஞான யோகம்" என்று சொல்லும் பொழுதே அதில் ஞானம் இருக்கிறதே.
ரவி தான் இன்னொரு பதிவு போட்டு தெளிவா விளக்க வேண்டும். :-)
//அவன் நம்மைக் காப்பான் எனும் நம்பிக்கை வர முதல்ல என்ன பண்ணனும்??? //
ReplyDeleteமுதலில் உயிருக்கோ மானத்துக்கோ ஒரு மிகப் பெரிய ஆபத்து வரணும். அதாவது தாங்க முடியாத கஷ்டம் வரணும். அது நம்மை யாரும் காப்பாத்த முடியாம போற அளவுக்கு பெருசா இருக்கணும். கைவசம் அது மாதிரி கஷ்டம் இல்லைனா, அது மாதிரி ஒரு கஷ்டத்தை வரவழைச்சிக்கணும். நாம செய்ய வேண்டியது எல்லாம் இது தான். :-)
ராகவா
ReplyDelete//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது??//
பக்தி, ஞானம் எல்லாம் பல நிலைகளில் இருக்கும். ’அவரவர் தமதமது அறிவறி வகை வகை’ யில் இருக்கும்.
காலை கோயிலுக்குச் சென்றால், அது பக்தி.
அன்று இரவே மீண்டும் கோயிலுக்குச் சென்றால், அது அதிக பக்தி - அதன் பரிமாணம்.
மாறாக, அன்று இரவே ‘Bar'-க்குச் சென்று வந்தால், அது வேறு பக்தி.
மாலை 'Walking' சென்று கொண்டிருக்கிறோம். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு கல் நம் தலையில் விழுகிறது.
நாம், ‘அம்மா’, என்று அலறினால், அது 'Involuntary Action'.
மாறாக, ‘நாராயணா’ என்று அலறினால், அது பக்தியின் அதீத பரிமாணம். நாராயணன், நம் உள்ளே புகுந்து விட்டான்! இந்த பக்தியை, கிட்டத் தட்ட யோகம் என்றே சொல்லலாம்.
நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி
ReplyDeleteஅன்பரே
ReplyDelete//நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி//
நன்றி. இதன் முழுத் தகுதியும் கே ஆர் எஸ் அவர்களுக்கே.
அன்புடன்
ரங்கன்
Raghav said...
ReplyDelete//பக்தி வேறு பக்தி யோகம் வேறு ஞானம் வேறு ஞான யோகம் வேறு என்று சொல்கிறார்களே எப்படி?? யோகம் என்பது எப்படி வித்யாசப்படுகிறது?? //
//Radha said...
தேனின் இனிமை சுவை வேறு. தேன் வேறு.
பாலின் வெண்மை நிறம் வேறு. பால் வேறு.
நீங்க சொல்ற வேறுபாடு இப்படி தான் இருக்கிறது ராகவ்//
ராகவ்...
கர்ம "யோகம்" வேறு; கர்மம் வேறு...
இது எப்படீன்னா...
Cricket Match வேறு; Cricket வேறு! :)
கிரிக்கெட் எப்படியும் ஆடலாம்! நடுவீட்டில் ஆடலாம், புக் கிரிக்கெட் கூட ஆடலாம்!
ஆனால் கிரிக்கெட் மேட்ச், அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் ஆட வேண்டும்!
அது போல் செய்யும் செயல் எல்லாம் "கர்மம்" தான்!
ஆனால் எல்லாமே "கர்ம யோகம்" அல்ல!
கர்ம யோகம்-ன்னா அதுக்கு Definition/விதிமுறை எல்லாம் வகுத்து வச்சிருக்காங்க. சாம்பிளுக்கு ஒன்னு:
1. அவரவர் வர்ணத்துக்கு "விதிக்கப்பட்ட கர்மாக்களை"ச் செய்து ஒழுகுவது கர்ம-யோகம்
2. இன்னும் இது போல லிஸ்ட்டை சாஸ்திரங்களில் இருந்து சாஸ்திர வல்லுநர்கள்-பதிவர்கள் எடுத்துச் சொல்லலாம்!
அவரவர் வர்ணத்துக்கு "விதிக்கப்பட்ட" கர்மாக்களைச் செய்யறதுன்னா, இங்கிட்டு எத்தனை பேர் "கர்ம யோக"-த்தில் தேறுவாங்க-ன்னு தெரியாது! :))
கர்ம யோகம்/ஞான யோகம் வேறு!
கர்மம்/ஞானம் வேறு! - செயல்/நல்லறிவு! - அவ்ளோ தான்!
சரணாகதி செய்பவர்களுக்கு "கர்ம யோகம்/ஞான யோகம்" இருக்காது! - (ஏன்னா "சர்வ தர்மான் பரித்யஜ்ய" - சகல தர்மங்களையும் விட்டு, என் ஒருவனையே...")
ஆனா சரணாகதி செய்பவர்களுக்கு "கர்மம்/ஞானம்" இருக்கும்.
பகவானே உபாயம் என்கிற = ஞானம்!
பகவானை மட்டுமே சார்ந்து இருப்பது என்னும் = கர்மம்!
இப்போ புரியுதா?
* கர்ம/ஞானம்-ன்னா வெறும் செயல்/நல்லறிவு
* கர்ம யோகம்/ஞான யோகம்-ன்னா...கிரிக்கெட் மேட்ச் போல வகுத்த வச்ச விஷயங்களைப் பண்ணுறது..
Radha said...
ReplyDelete//"ஞான யோகம்" என்று சொல்லும் பொழுதே அதில் ஞானம் இருக்கிறதே.
ரவி தான் இன்னொரு பதிவு போட்டு தெளிவா விளக்க வேண்டும். :-)//
இதெல்லாம் ராதா சொன்னா கிளுகிளுப்பா இருக்கும்!
அவரு ரவி வந்து வெளக்கணும்-ன்னு சொல்லிட்டு போயிருக்காரு! நான் என்னாத்த விம் பார் போட்டு வெளக்கறது! உம்ம்ம்ம் :)
//ambi said...
ReplyDeleteநீங்கள் சொன்ன யுகங்களில் நிந்தனை செய்ய இரண்டு பேராக தான் வந்தனர். கலியுகத்தில் தான் நிந்தனை செய்ய எத்தனை பேர்கள்? நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு தான் வந்தது. :))//
அம்பீ...
அந்த யுகங்களில் ரெண்டு பேரு தான் நிந்தனை செய்ய வந்தாங்க! ஆனா "சதா அவனையே நிந்தனை" செஞ்சாங்க! அதாச்சும் அவனையே பரிபூர்ணமா ஸ்மரிச்சி இருந்தாங்க!
ஆனா கலியுகத்தில் வந்தனை செய்யறதாச் சொல்லிக்கிட்டு, பேதா பேத நிந்தனையில் திளைக்கறவங்க எத்தனை பேரு? நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு தான் வந்தது. :))
கோயில்-ல்ல பகவானைக் கொள்ளையடிக்க திடீர்-ன்னு துப்பாக்கிக் கூட்டம் வருதுன்னா...
* பல "ஆஸ்திகர்களும்" ஆளுக்கொரு திசையில் ஓடிருவாய்ங்க! :)
* ஆனா இரணியன் ஓட மாட்டான்...காட்டு, அவனைக் காட்டு, நான் பாக்கணும், அவனைக் நறுக்-குன்னு நாலு கேள்வி கேக்கணும்-ன்னு சொல்லுவான்! :))
* இரணியன் நாஸ்திகனே ஆனாலும் நாஸ்திக-ஆஸ்திகன்
** கலியுகத்தில் பல பேரு..ஆஸ்திக நாஸ்திகர்கள்! :)
-ன்னு காஞ்சி பரமாச்சாரியார் அடிக்கடிச் சொல்லுவாரு!
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து...
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு...
என்பதெல்லாம் சிவக்கொழுந்தான அப்பர் சுவாமிகள் வாக்கு!
//Raghav said...
ReplyDelete//"யோகம், யோகம்" என்று ஆயிரம் பேசினாலும், "பக்த" பிரேமையும், சரணாகத மேன்மையைப் போல் வரவே வராது! :)
//
ஆரம்பிச்சாச்சா :)//
ஹா ஹா ஹா! எதை?
//சரணாகதியும் ஒரு யோகம்னு சொல்லலாமா கூடாதா//
கூடாது! :)
சரணாகதியில் யோகம், போகம், ஞானம், கர்மம் எல்லாம் கிடையாது! எல்லாமே "அவன் ஒருவனே"!
சரணாகதியில் அவனை அடைய வழியோ, யோகமோ ஒன்னும் இல்லை! அவனை அடையும் வழியும் "அவனே" தான்!
* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லை!
* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லை!
* ஒன்றும் ஆற்றுகின்றேலேன்
* "புகல் ஒன்று இல்லா" அடியேன்
* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
உபேயம் = அவனே!
அடையும் உபாயம் = அவனே!
நானே வழியும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்ற பைபிள் வாசகம் போல-ன்னே வச்சிக்குங்க! :)
* நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் = மோக்ஷ இஸ்யாமி!
* உனக்"கே" நாம் ஆட்செய்வோம் = மாம் ஏகம் சரணம்
* மற்றை நம் காமங்கள் மாற்று = சர்வ தர்மான் பரித்யஜ்ய
எனவே சரணகாதி யோகமோ, உபாயமோ, வழியோ, குறுக்கு வழியோ அன்று!
அது ஒரு நிலை! அவ"னே" என்று இருக்கும் நிலை! - கோதை நிலை, பேதை நிலை! :)