Tuesday, February 16, 2010

திவ்யதேசங்கள் 108 இல்லை 109 ??


எம்பெருமான் இருக்கும் இடத்தில் நோய்களுக்கு இடமில்லை என்று, 'நெய்க்குடத்தை (5-2)' என்று தொடங்கும் திருமொழி மூலம் அருளிச் செய்கின்றார்.

இதில் 4-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் இடத்தை வர்ணிக்கின்றார்!

***

மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்!*
இங்குப் புகேன்மின்! புகேன்மின்!* எளிதன்று கண்டீர்! புகேன்மின்!*
சிங்கப் பிரானவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்!*
பங்கப் படாதுய்யப் போமின்!* பண்டன்று; பட்டினங் காப்பே.
நெய்க்குடத்தை 5-2-4

மங்கிய வலிமையான வினையான நோய்களே! உங்களுக்கும் ஒரு தீய வினை வந்து விட்டது! இங்கே கட்டாயம் நுழையாதீர்கள்! நுழைவது நிச்சயம் எளிது அல்ல! எனவே நுழையாதீர்கள்! சிங்க அவதாரம் எடுத்த என் தலைவன் வந்து சேர்ந்த திருக்கோயிலாகும் இது! நீங்கள் அவமானப் படாமல் இருக்க, உயிர் வாழ, ஓடி விடுங்கள்! என் உடல் பழைய நிலமையில் இல்லை. இது நரசிம்மன் வாழும் பட்டினம்! நன்கு காக்கப் பட்டுள்ளது!

(மங்கிய - மழுங்கிய; புகேன்மின் - நுழைய வேண்டாம்; பங்கம் - அவமானம்; பண்டன்று = பண்டு + அன்று; பழையது அன்று; பட்டினம் - பட்டணம், உடல்; காப்பு - காக்கப் படும், பட்டது; கண்டீர் - நிச்சயம்)

'மங்கிய வல்வினை நோய்காள்' என்கின்றார் ஆழ்வார்! எது மங்கியது? தீவினையா? நோய்களா? இல்லை வேறு ஏதாவதா?

***

ரு மடம்! அதில், ஒரு குருவும், சில சீடர்களும்!

ஒரு சமயம், குருவுக்குக் பயங்கரக் காய்ச்சல்! கண் திறக்க முடியாமல், நாள் முழுவதும் படுத்திருக்கிறார்!

எல்லாச் சீடர்களின் முகத்திலும் ஒரு கேள்விக் குறி! மறுநாள் குருவே வழக்கம் போல ஆராதனை செய்வாரா, அல்லது வேறு யாருக்காவது இந்தப் பாக்கியம் கிடைக்குமா? தனக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கலந்த கேள்விக்குறி, அவர்கள் முகங்களில்!

மறு நாள் அதிகாலை! குரு, கஷ்டப்பட்டு எழுந்து நேரே சந்நிதியின் முன்பு வருகிறார்! கீழே உட்கார்ந்து ஏதோ மந்திரம் சொல்லி, கையிலிருந்து நீர் வார்த்து, ஒரு பாத்திரத்தில் விடுகிறார். குரு திடீரென்று, பழையபடி 'Normal'.

காலைக் கடன்களை முடித்துவிட்டு, வழக்கம் போல், பூஜை செய்கிறார் குரு! சீடர்களின் முகம், 'காற்றடித்த பலூன்கள்' போல்! சீடர்கள், அரக்கப் பரக்க ஓடி வருகின்றனர், பூஜைக்காக!


பூஜை முடிந்தவுடன், பாத்திரத்தில் வைத்திருந்த நீரை, மறுபடியும் குடித்து விடுகிறார் குரு! மீண்டும் பயங்கரக் காய்ச்சல்! உட்காருவதற்கே கஷ்டப் படுகின்றார்!

பார்த்துக் கொண்டிருந்தனர் சீடர்கள் - அறிந்தும், அறியாமலும்!

ஒரு சீடன்: குருவே! சந்தேகம் ஒன்று!

குரு: கேள்!

அதே சீடன்: நீங்கள் நீர் வார்த்தது எதை?

குரு: நான் செய்த பாபத்தை! நான் முன் பிறப்பில் செய்த வினைகள், இந்தப் பிறவியில் என் உடம்பையும் ஆத்மாவையும் வருத்தும் நோயாக வந்தன. பூஜை செய்வதற்காக, என் யோக சக்தியினால் அதை என் உடம்பில் இருந்து இறக்கி வைத்தேன்!

இன்னொரு சீடன்: ஆஹா! என்ன அற்புதம்! அப்படியானால் அந்த நீரைத் தூக்கி எறிந்து விட்டால், காய்ச்சலே வராதே! இந்த வித்தையை ஏன் நீங்கள் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை?

குரு (முனகலுடன்): ஐயோ! உன்னைச் சீடனாக அடைய நான் ஏதோ பெரும் பாவம் செய்திருக்க வேண்டும்!

குரு (எல்லோரையும் பார்த்து): இப்பொழுதும் என்னால் அந்த நீரை எறிந்து விட முடியும்! ஆனால், அதனுள் கரைந்திருந்த பாவத்தை என்னால் எறிந்து விட முடியாது! அந்த முன்வினைப் பாவத்தைக் கழிக்க, என் ஆன்மா ஏதாவது உடலுடன் மீண்டும் ஒரு பிறவி எடுத்தே ஆக வேண்டும்! தெரிந்ததா!

(புரிந்து விட்டது போல், சீடர்கள் எல்லோரும் தலையாட்டுகின்றனர்)

***

நான் முன்பு செய்த பாவங்களே, இப்போது என் நோய்கள் (வல்வினை நோய்காள்) என்கின்றார் பெரியாழ்வார்!

உங்களால் இதுவரை மங்கியது (மங்கிய), என் உடல் அல்ல, என் ஆன்மா!' என்கின்றார்!

இனிமேல், நீங்கள் மங்குவீர்கள்! ஏனென்றால், உங்களையே மங்கச் செய்கின்ற ஒரு தீவினை வந்து விட்டது (உமக்கோர் வல்வினை கண்டீர்)!

நாராயணனை 'வல்வினை' என்கின்றாரே ஆழ்வார்! இது நியாயமா?

அவன் தீவினை தான் - நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்குக் கெட்டவன்! தீவினைக்குத் தீவினை!

பெரியாழ்வாரின் தெய்வமான நரசிம்மன், திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டானாம் (சேரும் திருக்கோயில் கண்டீர்)!

அவன் வந்தது எந்தத் திருக்கோயில்? எந்தத் திவ்விய தேசம்?

***

இடம்: வைகுந்தம்
நேரம்: Pilgrimage போகும் நேரம்

(மங்கையார், தன் Laptop-ஐ மடியில் வைத்துக் கொண்டு, Excel-ல் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் ரொம்ப நேரமாக ஏதோ யோசிப்பதைக் கண்ட தொண்டரடிப்பொடியாழ்வார், அருகே செல்கின்றார்)


அடிப்பொடிகள்: மங்கையாரே! என்ன ரொம்ப யோசனை? கணக்கு ஏதாவது உதைக்கிறதா?

மங்கையார்: இரண்டு பூலோக வாரங்களுக்கு முன், திருநாங்கூரில் உள்ள 11 கோயில்களிலும் உள்ள எம்பெருமான் திருமணி மாடக் கோயிலுக்கு வந்து, 11 கருடன்கள் மேல் இருந்து சுமார் 2 லட்சம் மக்களுக்கு தரிசனம் தந்தான்! என் காலத்தில் இந்த உத்ஸவம் இல்லை! எனவே அவனைத் தரிசிக்க அங்கு சென்றிருந்தேன். மிகவும் அருமை!

அடிப்பொடிகள்: ஆஹா! நமக்கெல்லாம் எப்போதாவது ஒரு முறை தான் கருட சேவை! அதுவும் அவசரமாக! ... சரி! அதற்கும் நீர் போடும் கணக்கிற்கும் என்ன சம்பந்தம்?

மங்கையார் (கடுப்புடன்): அங்கு அடியவர்கள் போன்று தோற்றமளித்த சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன், கையில் '108 திவ்ய தேசங்கள்' என்ற புத்தகம் வைத்துக் கொண்டு, பல கோயில்களுக்கு எதிரே 'Tick Mark' செய்திருந்தான்.

மெதுவாக விசாரித்ததில், அவன் பெயர் ரங்கன் என்றும், அவன் குறியிட்டது, அவன் 'பார்த்த' திவ்ய தேசங்கள் என்றும் தெரிய வந்தது!

நான் எழுதிய பாசுரங்களை மீண்டும் Count பண்ணினேன் - எவ்வளவு திவ்ய தேசங்கள் நான் பார்த்திருக்கிறேன் என்று! எப்படிக் கணக்குப் போட்டாலும் 85 தான் வருகிறது! Excel-ல் எதோ Bug உள்ளது என்று நினைக்கிறேன்.

பூதத்தாழ்வார் (அங்கே வந்து): அதெல்லாம் ஒன்றுமில்லை! நீங்கள் 85 தான் பார்த்தீர்கள்!

(இதற்குள் மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் வந்து சேர்கின்றனர்)

மதுரகவியார்: இதெல்லாம் எனக்குக் கவலையே இல்லை! ஒரு தேசத்தின் மேலும் பாடாமலேயே எனக்கும் உங்களைப் போல் ஆழ்வார் பட்டம்!

பேயாழ்வார்: நம் எல்லோரையும் விட அந்தப் பொடியன் அதிகமாகப் பார்த்திருக்கிறானா? நாமும் 106-ஐயும் பார்த்து விடவேண்டும்!

(மற்ற எல்லா ஆழ்வார்களும், பூமிப் பிராட்டியும் இதை ஆமோதிக்க, அங்கு திவ்ய தேச Tour Planning நடக்கிறது ... மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மனதாக, மங்கையாரை Tour Coordinator ஆக Volunteer செய்கின்றனர்)

***

இடம்: வைகுந்தம்
நேரம்: பூலோக மறுநாள் காலை


(எல்லா ஆழ்வார்களும், பூமாதேவியும் கிளம்பத் தயாராக, எதிரே குழப்பம் வர, எல்லோரும் குழம்புகிறார்கள்)

பூமாதேவி: வாருங்கள் நாரதரே! வேறு இடம் கிடைக்க வில்லையா?

நாரதர்: நாராயணா! தாயே! விளையாட்டு வேண்டாம்! ... சரி ... எல்லோரும் எங்கே கிளம்புகிறீர்கள்?

மங்கையார்: திவ்ய தேசங்களைப் பார்க்கப் போகிறோம்!

நாரதர்: Loan Application போட்டது அலுவலகத்திலா அல்லது வங்கியிலா?

(மங்கையார், பேந்தப் பேந்த விழிக்கிறார்)

நாரதர்: என்ன ஸ்வாமி! முழிக்கிறீர்! நீங்கள் செல்வது, கலியுலகத்திற்கு! 12 பேர் செல்வதானால், இதற்கெல்லாம் நிறைய Vitamin-M(oney) தேவைப்படுமே? அது இல்லாமல் எதுவும் நடக்காது! தரிசனத்திற்குக் கூட காசு கொடுத்து டிக்கட் வாங்கித் தான் உள்ளே செல்ல வேண்டும்!

Office Loan - ஸ்ரீதேவியிடம் கை மாத்து; Bank Loan - குபேரனிடம் கடன்!

குலசேகரர்: ராமா! நீ ஆண்ட ராஜ்ஜியத்திலா இப்படி?

நாரதர்: போகும்போது, இங்கேயிருந்து தண்ணீர் எடுத்துண்டு போங்கோ! அங்கேயெல்லாம், காசு குடுத்துத் தான் தண்ணீர் வாங்கணும்! அதுவும் நல்ல தண்ணின்னா காசு நிறைய!

மதுரகவி: நதிகள் எல்லாம் பூமியில் இப்போது இல்லையா? முன்பெல்லாம், நதி அருகே தானே கோயிலும் இருக்கும்?

நாரதர் ('உண்மையிலேயே உங்களுக்கு ஒன்றும் தெரியாதா?' என்று நினைத்து): Dam கட்டி, எல்லா நதிகளும் காலி! னதியில் இருக்கும் மண்ணைக் கூட விடுவதில்லை! மேலும், நாம் வெளியேற்றும் தண்ணீருக்குக் கூட காசு குடுக்கணும்! ஏதோ Pay-and-Use ஆம்!

பூதத்தார்: என்ன இது அநியாயம்! அதுக்குக் கூட Freedom கிடையாதா?

நாரதர்: அதிருக்கட்டும்! நீங்கள் எல்லோரும் எந்தக் கலை? வடகலையா? தென்கலையா?

பேயாழ்வார்: ஆடல், பாடல் போல் அதுவும் ஒரு புதுக் கலையா?

நாரதர் (தன் தலையில் அடித்துக் கொண்டு): நாராயணா! அவன் உங்களுக்கு ஒண்ணும் சொல்லிக் குடுக்கலையா? அது தான் ஸ்வாமி! நீங்கள் நெற்றியில் போடும் திருநாமம், Y-யா அல்லது, U-வா?

உதாரணத்திற்கு, நீங்கள் பெருமாள் நெற்றியில் Y போட்ட கோயிலுக்குச் சென்றால், நீங்களே பாடிய பாசுரமாக இருந்தாலும், உங்கள் நெற்றியில் U போட்டிருந்தால், உங்களைப் பாசுரம் சொல்ல விடமாட்டார்கள்!

எனவே, கோயிலுக்குத் தகுந்தால் போல் மாற்றிப் போட்டு, உள்ளே போங்கள்! Best, ஒத்தை நாமம் மட்டும் போட்டுச் செல்லுங்கள்!

மேலும் உங்கள் பாசுரத்திற்கு, நீங்களே நினைக்காத அர்த்தத்தையும் சிலர் உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கலாம்! அவர்களையெல்லாம் மன்னித்து விடுங்கள்!

பாணனார்: கோவிந்தா!

நாரதர்: Ticket வாங்கியாச்சா?

(பாணாழ்வார் புரியாமல் முழிக்க, நாரதர் சிரிக்கிறார்)

நாரதர்: நீங்களே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்! அங்கே போய், VIP தரிசனம் கிடைக்க முயற்சி செய்யுங்கள்! கொஞ்சம் கிட்டே இருந்து தரிசிக்கலாம். அது கிடைக்க, Vitamin-M போதும்!

நாரதர் (மீண்டும்): எப்படிச் செல்லப் போகிறீர்கள்?

மங்கையார்: நான் ஆடல்மானை குறையலூர் லாயத்தில் இருந்து வாங்கி, அந்தக் காலத்தில் பயணம் செய்தேன்! அங்கு சென்று, ஆளுக்கு ஒரு குதிரை கேட்டு வாங்கலாம் என நினைக்கிறேன்!

நாரதர் (பலத்த சிரிப்புடன்): ஆழ்வாரே! காமெடி பண்ணாதீர்கள்! இப்போது நீங்கள் செல்ல, Car அல்லது மினி-Bus வேண்டும்!

பெரியாழ்வார்: கால் நடையாகச் செல்ல முடியுமா?

நாரதர்: சரியாகச் சொன்னீர்கள்! ரோடு போடுகிறேன் பேர்வழி என்று, சாலைகளில் உள்ள மரமெல்லாம் காலி! நடந்து செல்ல, நடக்க, Platform-மும் கிடையாது! நீங்கள் நடந்து சென்றால், பின்னால் இருந்து வேகமாக வரும் வண்டிகள், உங்களை திரும்பவும் வைகுந்தத்திற்கே செலவில்லாமல் அனுப்பிவிடும்! ஒழுங்காக, Bus ஏற்பாடு பண்ணும்! தங்க ஏற்பாடு பண்ணியாச்சா?

பொய்கையார்: திருக்கோவலூர் மாதிரி, ஏதாவது விட்டுத் திண்ணை, அல்லது மடத்தில் தங்கிக்க வேண்டியது தான்!

நாரதர் ('நீங்கள் கோயில் பார்த்த மாதிரி தான்!' என்றெண்ணி): ஸ்வாமி! எல்லா இடத்திலும் மடங்கள் இல்லை! கோயிலும் முன்பு போல் எப்போதும் திறந்து இருப்பதில்லை!

சில மடங்களில், உணவு இலவசம் என்று சொன்னாலும், அங்குள்ளவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும்! நீங்கள் மறப்பது போல் நடித்தாலும் அவர்கள் விடமாட்டார்கள்!

ஹோட்டல் தான் வசதி! ஆனால் ஒன்று, ஹோட்டலில் சாப்பிட்டால், ஆச்சாரம் பார்க்காமல், கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடுதல் நலம்! சில ஹோட்டல்களில், காப்பியில் கூட வெங்காயமோ அல்லது Non-Veg-ஜோ இருக்கலாம்! Quality என்ற பேச்சே கூடாது!

நம்மாழ்வார்: ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

நாரதர்: ஒரே நாள் போய்ட்டு வாங்கோ! எல்லாம் புரியும்! ... அப்புறம், எல்லோரும் ஆளுக்கு Mobile ஒன்றும், Roaming Connection-உம் வாங்கிக் கொள்ளுங்கள்!

மங்கையார்: கோயிலுக்குச் செல்ல Mobile எதற்கு?

நாரதர்: பல கோயில்களில் அர்ச்சகர், கூப்பிட்டால் தான் வருவார்! ஒரு நாள் முன்னாடியே சொல்ல வேண்டும்! பின் அவர் வீட்டுக்குச் சென்று, அவரையும் அள்ளிக் கொண்டு, கோயிலுக்குச் சென்று, தரிசனம் செய்து, அர்ச்சகரை அவரை வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும்! இல்லாவிடில் அவர் வரமாட்டார்!

நாரதர் (மீண்டும்): இன்னும் ஒண்ணு! சில கோயில்களில், யாராவது வந்து, 'உங்கள் பேரில் 12 வாரங்கள் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்து, பிரசாதம் வீட்டிற்கு அனுப்புகிறேன்' என்று சொல்லி, பணம் பறிப்பர்! உங்கள் வீட்டிற்கு பிரசாதம் வருமோ தெரியாது! ஆனால் உங்கள் நெற்றியில் கண்டிப்பாக பட்டை நாமம் விழும்!

பொய்கையார்: க்ருஷ்ணா! இங்கேயே இருந்து உன்னைப் பார்ப்பது எவ்வளவோ மேல்!

(சொல்லி வைத்தால் போல் அவன், கருடனுடன் Entry ஆகிறான்)

நாராயணன்: ஆழ்வார்களே! எங்கே புறப்பாடு! தேவலோகத்தில் ஏதாவது வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?

(மங்கையார், நிதானமாக எம்பெருமானுக்கு எடுத்துச் சொல்ல, அவர் கேலிச் சிரிப்புச் சிரிக்கிறார்)

நாராயணன்: என்னாயிற்று உங்களுக்கு? கார் கொண்டு சுற்றினாலும், கடைசி இரண்டையும் பார்க்க, அவர்கள் இங்கே தானே வரவேண்டும்? நீங்கள் தான் அதையும் பார்த்து விட்டீர்களே?

மழிசைப்பிரான்: ஸ்வாமி! இருந்தாலும், கீழே உள்ள அனைத்தையும் நாங்கள் பார்க்கவில்லையே!

மங்கையார்: நாராயணா! அடுத்த பூலோக School Vacation-ல் அந்தப் பையன் இன்னொரு Tour செல்வானாம்! அப்போது, 106-ஐயும் பார்த்து முடித்து விடுவானாம்!


நாராயணன் (அனைவரையும் பார்த்து):
ஆழ்வார்களே! கலி நிஜமாகவே உங்களையும் பிடித்து விட்டது! நீங்கள் எல்லோரும் பாடியதால் தானே அந்தக் கோயில்களை எல்லாம் அவர்கள் பார்க்கிறார்கள்! அவர்கள், எவ்வளவு புத்தகங்களை வாங்கி Tick செய்தாலும், அவர்களால் கீழே உள்ள அனைத்தையும் பார்க்க இயலாது! ஏனென்றால், பெரும்பாலோர் நீங்கள் பாடிய ஒன்றை - மிக முக்கியமானது - அவர்கள் மறந்து விடுகின்றனர்!

(எல்லா ஆழ்வார்களும் முழிக்கின்றனர்)

நாராயணன்: உண்மையான பக்தன், என்னைத் தேடி வரவேண்டியதில்லை! நானே அவனைத் தேடிச் செல்கிறேன்! அவனுக்கு என்னிடமும், என் அடியார்களிடமும் உள்ள பக்தி உன்னதமாக இருக்குமாயின், அவனுக்கு நானே தரிசனம் கொடுத்து, அவன் மனத்தின் உள்ளே நிறைந்து விடுகிறேன்!

உண்மையான பக்தன் மனமே நான் இருக்கும் கோயில்! அது தான் 109-வது திருப்பதி! நெஞ்ச நாட்டுத் திருப்பதி!

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்!* மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் -- மாயனுக்கு என்பர் நல்லோர்* அவை தன்னொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன் வந்து
இருப்பிடம்* என்றன் இதயத்துளே தனக்கு இன்புறவே.
இராமாநுஜ நூற்றந்தாதி-106

உங்கள் நெஞ்சங்களில், நான் எப்போதோ புகுந்தாகி விட்டது! ஆழ்வார்களாகிய உங்களைத் தன் மனத்துள் வைத்த இராமாநுஜன் என் பக்தன்! அவன் மனத்தினுள்ளே நானும், நீங்களும் இருக்கின்றோம்!

அந்த இராமாநுஜனை எவன் மனத்துள் வைக்கின்றானோ அவன் மனத்துள், நானும், நீங்களும், இராமாநுஜனும்!

அப்படிப் பட்ட பக்தன் இருக்கும் இடம், வைகுந்தமே! அவன் திவ்ய தேசங்களைத் தேடிச் சென்று, Tick Mark போட வேண்டியதில்லை!

சும்மா ஏதோ 85, 90, 106 என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு, நேரத்தை வீணடிக்காதீர்கள்!

(பாம்பின் மேல் ஏறிப் படுத்துக் கொள்கிறார் அவர்)

***

இடம்: பூலோகம், இன்றைய தென் தமிழ் நாடு
நேரம்: விரட்டப் படும் நேரம்

நோய்கள்: நாங்கள் யமனின் தூதர்களால் அனுப்பட்டுள்ளோம்! 'உங்கள் உடலை நசித்து, உயிர் இழக்கச் செய்ய வேண்டும்' என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை!

பெரியாழ்வார்: இங்கே நீங்கள் கட்டாயம் நுழையக் கூடாது (புகேன்மின்! புகேன்மின்!)

('கண்டிப்பாக நுழைய வேண்டாம்' என்று சொல்ல, 'புகேன்மின்' என்று இருமுறை சொல்வது தமிழுக்கே உரிய அழகு! இன்றும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டையில் தமிழ் பேசுபவர்கள், 'கட்டாயம் வரவேண்டும்' என்று சொல்ல, 'வரவே வரவேணும்' என்பர்!

இப்போதைய செந்தமிழ்: 'வரலேன்னா உன்னைக் கைம்மா பண்ணிருவேன்')

நோய்கள்: ஏன்?

ஆழ்வார்: என் உடலும், நெஞ்சமும், பழைய மாதிரி அல்ல! (பண்டு அன்று)

நோய்கள்: ஏன்?

ஆழ்வார்: அவை, இப்போது ஒரு புதிய ஊர் (பட்டினம்). பழையதை அழிக்கவே உங்களுக்கு அதிகாரம் தரப்பட்டது! புதியதை அல்ல! எனவே, ஓடி விடுங்கள் (புகேன்மின்)!

நோய்கள்: புதிதாக எங்களுக்குத் தெரியாமல் யார் நிர்மாணித்தது?

ஆழ்வார்: சிங்கப்பிரான்! அவன் என்னுள் புகுந்து விட்டான்! இனிமேல் இது அவனுடைய கோயில் (சேரும் திருக்கோயில் கண்டீர்)! இங்கு நுழைவது கஷ்டம் (எளிதன்று கண்டீர்)! எனவே நுழையாதீர்கள் (புகேன்மின்)!

நோய்கள்: நாங்கள் புகாமல் திரும்பிச் சென்றால், நமன் தமர் எங்களைக் கொன்று விடுவர்!

ஆழ்வார்: அவமானப் படாமல் (பங்கப் படாது), உயிர் வாழ (உய்ய) வேண்டுமென்றால் ஓடி விடுங்கள் (போமின்)! இங்கு காவல் (காப்பு) அதிகம்!

(அவை, 'புகுந்தால், இவன் அடிப்பான், புகாவிட்டால் அவன் அடிப்பான்' என்று புலம்புகின்றன)

***

நாராயணன் ஆழ்வார்களுக்குச் சொன்னது போல், பெரியாழ்வாரின் நெஞ்சமே இந்தப் பாசுரத்தில் சொன்ன திருக்கோயில்!

பெரியாழ்வாரைப் போல், பல ஆழ்வார்கள், தங்கள் நெஞ்சத்தையே, எம்பெருமான் புகும் கோயிலாக நினைத்து, பல பாசுரங்கள் இயற்றி உள்ளனர்.

நம்மாழ்வார், எம்பெருமான் தன் நெஞ்சில் புகுந்த விதத்தை, ஒரு அழகிய பாசுரம் மூலம் வருணிக்கின்றார்:

மாயப் பிரான்* என வல்வினை மாய்ந்து அற*
நேயத்தினால்* நெஞ்சம் நாடு குடி கொண்டான்*
தேசத்து அமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப் பொழில்* மன்னு கோயில் கொண்டானே.
திருவாய்மொழி-8-6-4

எம்பெருமான், தான் மட்டும் அல்லாது, தான் ஏற்கனவே கோயில் கொண்ட திருக்கடித்தானம் எனும் திவ்ய தேசக் கோயிலோடும், பரமபதத்தோடும், நம்மாழ்வாரின் 'நெஞ்சம் நாடு' குடி கொண்டானாம்!

(இந்தப் பாசுரத்துடன், பெரியாழ்வார் அனுபவித்த நரசிம்மர் பாசுரங்கள் முடிகின்றது. அடுத்த பாசுரத்தில், ஸ்ரீ ஆண்டாளை அழைக்கலாம்)

- நரசிம்மர் மீண்டும் வருவார்!

47 comments:

  1. மாதவி பந்தலில் வாசனை மிகவும் அதிகமாகிவிட்டது. எங்கேயும் போக முடியல! பந்தலிலேயே படுத்து கொள்ளலாமா!

    இப்படிக்கு
    குயில்

    ReplyDelete
  2. கையிலிருந்து நீர் வார்த்து, ஒரு பாத்திரத்தில் விடுகிறார். குரு திடீரென்று, பழையபடி 'Normal'.
    உண்மையான பக்தன் மனமே நான் இருக்கும் கோயில்! அது தான் 109-வது திருப்பதி! நெஞ்ச நாட்டுத் திருப்பதி!
    பெரியாழ்வாரின் நெஞ்சமே இந்தப் பாசுரத்தில் சொன்ன திருக்கோயில்!:))

    தேடினேன் தேடினேன் தேடி கண்டுகொண்டேன் 109 - வது திவ்யதேசம்

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
    ஆண்டாள் எங்கிருந்தாலும் பந்தலுக்கு உடனடியாக வரவும்!

    ReplyDelete
  3. உள்ளத்தில் பெருமாளை நாமும் வணங்கலாமே!
    அடியார்கள் பலர் உள்ளத்தில் இறைவனை பூஜிப்பர்.

    அதைதான் சொல்வார்கள்

    ஆத்மானந்தம் பரமானந்தம்!
    அந்தரங்க பக்தி பிரம்மானந்தம் !

    1. முதலில் உள்ளத்தில் கோவில் என்று சொன்னவுடன் எப்படி பயந்து விட வேண்டாம்.

    2.உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை உருவமோ அருவுருவமோ மனதில் நிறுத்துங்கள்

    3. ஆரம்பத்தில் தினமும் காலையில் அந்த தெய்வ உருவத்தை மன கண்களில் பார்த்து வணங்கவும்.
    Just 1 minute
    இப்படியே ஓரிருநாட்கள் செய்தவுடன் பிறகு இம்ப்ரூவ் பண்ணலாம்

    4. அதாவது மன கண்ணில் காணும் தெய்வத்தின் இருபக்கமும் விளக்கு ஏற்றி தினமும் காலையில் கற்பூர தீபம் காட்டலாம் .

    5. இப்படியே தினமும் செய்து வாருங்கள். பிறகு தெய்வத்தின் அருளால் படிப்படியாக கோவில் வளரும்.

    எளிமையாக இந்த வழியை பின்பற்றலாமே!

    அப்புறம் என்ன நமக்குள்ளும் ஒரு திவ்யதேசம்
    மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்!*
    இங்குப் புகேன்மின்! புகேன்மின்!* எளிதன்று கண்டீர்! புகேன்மின்!*
    சிங்கப் பிரானவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்!*
    பங்கப் படாதுய்யப் போமின்!* பண்டன்று; பட்டினங் காப்பே.


    ஆத்மானந்தம் பரமானந்தம்!
    அந்தரங்க பக்தி பிரம்மானந்தம் !

    ReplyDelete
  4. பூசலார் நாயனார்

    சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர் தம்மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாதவராயினர். அதனால் மனதில் சிவனுக்கு கோவில் கட்டினார்.



    அதே நேரத்தில் காடவர் கோன் என்ற மன்னன் . காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் (சிவபெருமான்)
    என்னும் பெரிய கோவிலை கட்டிமுடித்து குட முழுக்கு நாளையும் குறித்தான்.

    ,அந்த நன்னாள் வருவதற்கு முந்தைய இரவில் காடவர் கோன் கனவில் இறைவன் தோன்றி, ""நீ கட்டிய கோயிலுக்கு நாளை எழுந்தருள என்னால் இயலாது. ஏனெனில், அதே நேரத்தில், திருநின்றவூரில் பக்தன் பூசலார் கட்டியுள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டும். எனவே, நீ குறித்த குடமுழுக்கு நாளை மாற்றி வைத்துக்கொள்!'' எனக் கூறிவிட்டு மறைந்தார்.

    நான் கட்டிய கோவிலை விடவும் பெரிய கோவிலா யாரு அது என்பதை தெரிந்து கொள்ள திருநின்றவூர் விரைந்தார். அங்குள்ள பெரியவர்களை அழைத்து, ""இங்கு சிவபெருமானுக்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எங்கு உள்ளது?'' என்று மன்னர் கேட்டார். ஊர்ப்பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ""இங்கு அண்மையில் எத்தகைய திருக்கோயிலும் கட்டப்படவில்லையே!'' என்று கூறினார்கள்.
    பூசலார் இருக்கும் இடம் நோக்கி மன்னர் விரைந்து சென்றார்.

    , ""பெரியவரே! தாங்கள் கட்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? நான் அக்கோயிலைக் காண வேண்டும்!'' என்றார். பூசலாருக்குப் புரியவில்லை. பிறகு அவரிடம் தாம் கண்ட கனவு பற்றி மன்னர் கூறினார்.

    அதைக்கேட்டு பூசலார் பரவசத்துடன், ""மன்னா! சிவபெருமானுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒரு காலத்தில் எனக்கு இருந்தது.

    ஆனால், கோயிலை எழுப்புவதற்கான வாய்ப்பும், வசதியும் என்னிடம் இல்லை. ஆக, ஒவ்வொரு நாளும் தியானத்தில் அமர்ந்து என் மனத்தில் நினைத்தபடி ஈஸ்வரனுக்கு ஓர் ஆலயம் கட்டத் தொடங்கினேன்.


    கருங்கற்களை வைத்து, பெரியதொரு கோயிலை மன்னர் கட்டியதற்கு மேலாக, மனத்திலேயே கற்பனைக் கற்களைக் கொண்டு சிவனடியார் கட்டிய கோயிலுக்குத்தான் இறைவன் முதலிடம் தந்திருக்கிறார் என்பது மன்னருக்குப் புரிந்தது
    என்று கூற மன்னன் வியந்தான்.. பூசலாரும் மகிழ்ந்தார்.

    பிறகு மன்னன் பூசலார் விருப்பபடி கோவில் கட்டினார். அந்த கோவிலே இன்று திருநின்றவூர் இருதயாலீஸ்வரர்.

    அரியும் சிவனும் ஒன்னு
    ஓம் நமோ நாராயணாய!

    கருங்கற்களை வைத்து, பெரியதொரு கோயிலை மன்னர் கட்டியதற்கு மேலாக, மனத்திலேயே கற்பனைக் கற்களைக் கொண்டு சிவனடியார் கட்டிய கோயிலுக்குத்தான் இறைவன் முதலிடம் தந்திருக்கிறார் என்பது மன்னருக்குப் (எல்லாருக்கும் )புரிந்தது

    ReplyDelete
  5. //ஆண்டாள் எங்கிருந்தாலும் பந்தலுக்கு உடனடியாக வரவும்!//

    வந்தேன்!
    வந்தேன்!
    வந்தேன்!

    :)

    ReplyDelete
  6. //திவ்யதேசங்கள் 108 இல்லை 109 ??//

    திவ்யதேசம் 108-உம் இல்லை! 109-உம் இல்லை!

    இருப்பது ஒரே திவ்யதேசம் தான்!

    அதை, அத்தனை ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர்!

    அது என்ன திவ்யதேசம்?

    ரங்கன் அண்ணாவின் இந்தப் பதிவைப் படிச்சவர்க்கும் பிடிச்சவர்க்கும் இந்நேரம் தெரிஞ்சிருக்கும்! :)

    ReplyDelete
  7. அனைத்து ஆழ்வார்களின்
    ஏகோபித்த மங்களாசாசனங்களைப்
    பெற்ற ஒரே திவ்யதேசம் இதோ:

    1. துயர் அறு சுடரடி தொழுது எழு, என் ** மனனே ** - நம்மாழ்வார்

    2. வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
    ** உள்ளத்தின் ** உள்ளனன் என்று ஓர் - பொய்கையாழ்வார்

    3. உளன் கண்டாய் நன்னெஞ்சே,
    உள்ளுவார் ** உள்ளத்து ** உளன்கண்டாய் - பூதத்தாழ்வார்

    4. திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
    மருக்கண்டு கொண்டேன் ** மனம் ** - பேயாழ்வார்

    5. என்றும் மறந்தறியேன் என் ** நெஞ்சத்தே ** வைத்து
    கருவிருந்த நாள்முதலாக் காப்பு - திருமழிசை ஆழ்வார்

    6. உன் அந்தமில் சீர்க்கு அல்லால் ** அகம் ** குழைய மாட்டேனே! -குலசேகராழ்வார்

    7. பாடும் ** மனம் ** உடைப் பத்தர் உள்ளீர். வந்து பல்லாண்டு கூறுமினே! - பெரியாழ்வார்

    8. அணியனார் செம்பொன் ஆய
    அருவரை அனைய கோயில்
    மணியனார் கிடந்த வாற்றை
    ** மனத்தினால் ** நினைக்க லாமே - தொண்டரடிப்பொடி ஆழ்வார்

    9. நீல மேனி ஐயோ...நிறை கொண்டது என் ** நெஞ்சினையே ** - திருப்பாணாழ்வார்!

    10. பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று, பின்னரும்,
    ..தேசமாய்த் திகழும் மலை திருவேங்கடம் அடை ** நெஞ்சமே ** - திருமங்கை ஆழ்வார்

    11. நிற்கப் பாடி என் ** நெஞ்சுள் ** நிறுத்தினான்,
    தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு - மதுரகவியாழ்வார்

    12. வாயினால் பாடி ** மனத்தினால் ** சிந்திக்க...
    தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் - தோழி, நம் கோதை ஆண்டாள்

    நெஞ்சகமே கோயில்
    நினைவே சுகந்தம்
    அன்பே மஞ்சனநீர்
    துயர் அறு சுடரடி தொழுது எழு,
    என் ** மனனே **
    என் ** மனனே **

    ReplyDelete
    Replies
    1. ஐயகோ ... என்னே அழகு

      Delete
  8. //நாரதர்: அதிருக்கட்டும்! நீங்கள் எல்லோரும் எந்தக் கலை? வடகலையா? தென்கலையா?

    பேயாழ்வார்: ஆடல், பாடல் போல் அதுவும் ஒரு புதுக் கலையா?//

    ஹிஹி!

    //நாரதர் (தன் தலையில் அடித்துக் கொண்டு): நாராயணா! அவன் உங்களுக்கு ஒண்ணும் சொல்லிக் குடுக்கலையா? அது தான் ஸ்வாமி! நீங்கள் நெற்றியில் போடும் திருநாமம், Y-யா அல்லது, U-வா?

    உதாரணத்திற்கு, நீங்கள் பெருமாள் நெற்றியில் Y போட்ட கோயிலுக்குச் சென்றால்//

    உம்ம்ம்ம்ம்

    //நீங்களே பாடிய பாசுரமாக இருந்தாலும்,
    உங்கள் நெற்றியில் U போட்டிருந்தால், உங்களைப் பாசுரம் சொல்ல விடமாட்டார்கள்!//

    ஹா ஹா ஹா!
    பந்தலில் ஒரு வாசகமானாலும் திருவாசகமாய்ச் சொன்னீர்கள்! :)

    Y-யா அல்லது, U-வா?
    அதான் திருவேங்கடமுடையான் வம்பே வேணாம்-ன்னு W போட்டுக் கொள்கிறானா? :)
    இன்னும் வேற ஏதாவது English Alphabet இருக்கா-ண்ணா? :)

    ஹைய்யோ....ஆழ்வார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  9. //அந்த நீரை எறிந்து விட முடியும்! ஆனால், அதனுள் கரைந்திருந்த பாவத்தை என்னால் எறிந்து விட முடியாது!//

    :)
    குருவின் வாசகம் அபாரம்!!!

    //அந்த நீரைத் தூக்கி எறிந்து விட்டால், காய்ச்சலே வராதே! இந்த வித்தையை ஏன் நீங்கள் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை?//

    பல சீடர்களுக்கும் வித்தையைத் தேடுவதிலும், காய்ச்சல் வரக்கூடாது என்பதிலும் தான் கவனம் இருக்கே தவிர, பாவங்களின் மூலம் எங்கே? எப்படிக் கரையும் என்பதில் கவனம் இருப்பதில்லை! :)

    ரங்கன் அண்ணா - ஒரு கேள்வி:
    //அதனுள் கரைந்திருந்த பாவத்தை என்னால் எறிந்து விட முடியாது!//

    அப்படீன்னா போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் - எப்படி? :)

    ReplyDelete
  10. //நாராயணனை 'வல்வினை' என்கின்றாரே ஆழ்வார்! இது நியாயமா?//

    நியாயமே! :))

    //அவன் தீவினை தான் - நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்குக் கெட்டவன்! தீவினைக்குத் தீவினை!//

    இங்கே மட்டும் கொஞ்சமா மாறுபடுகிறேன் ரங்கன் அண்ணா!

    அவன் கெட்டவனுக்குக் கெட்டவன்-ன்னா, இன்னிக்கி பல பேருக்கும் அவன் கெட்டவனா ஆயிருவானே!

    அட,
    மொதல்ல கெட்டவனான எனக்குக் கெட்டவனாய் ஆயிருவானே! :)
    ஆனா கெட்டவனான என் கிட்ட நல்லவனாத் தானே இருக்கான்???

    ReplyDelete
  11. //நாராயணன் (அனைவரையும் பார்த்து): ஆழ்வார்களே! கலி நிஜமாகவே உங்களையும் பிடித்து விட்டது!//

    //(எல்லா ஆழ்வார்களும் முழிக்கின்றனர்)//

    ஹா ஹா ஹா
    இதை ஒரு கற்பனைக் கதைச் சுவைக்காக மட்டுமே ரங்கன் அண்ணா சொல்லி இருக்காரு!

    அது எப்படி, ஆழ்வார்களைக் கலி பிடிச்சிருச்சி-ன்னு சொல்லலாம்?-ன்னு யாரும் கோச்சிக்காதீங்க-ப்பா! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)

    ReplyDelete
  12. அற்புதமான படைப்பு இது .

    ரங்கா ! ரங்கா !!
    சிறங்கு என் உடல் !
    குரங்கு என் மனம் !!
    பொறுத்தே நீ யும்
    தங்குவாய் என்னிடத்தே !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  13. அருமை அருமை !! திவ்யதேசக் கணக்கும், நெஞ்சநாட்டுத் திருப்பதி பற்றியும் அருமையா சொல்லிருக்கீங்கண்ணா..

    ReplyDelete
  14. ஆழ்வார்கள் திவ்யதேச யாத்திரை.. மறக்கவே முடியாது... சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்து விட்டது.. அதிலும் நாரதரின் வடகலையா? தென்கலையா? கேள்வி வாய்ப்பே இல்லை..

    ReplyDelete
  15. //Office Loan - ஸ்ரீதேவியிடம் கை மாத்து; Bank Loan - குபேரனிடம் கடன்!//

    ஆஹா..சூப்பர்.. அப்ப பெருமாள் ஏன் குபேரன்கிட்ட கடன் வாங்கணும்.. ஸ்ரீதேவியிடம் கைமாத்தா வாங்கிருக்கலாமே ?

    ReplyDelete
  16. // Y போட்ட கோயிலுக்குச் சென்றால், நீங்களே பாடிய பாசுரமாக இருந்தாலும், உங்கள் நெற்றியில் U போட்டிருந்தால், உங்களைப் பாசுரம் சொல்ல விடமாட்டார்கள்!//

    உண்மை.. அதேபோல் வடகலையார் வசம் உள்ள கோவிலிலும் இதே நிலை தான்..

    வருத்தப்படக்கூடிய விஷயம், பூலோக வைகுண்டம் எனும் திருவரங்கத்தில்.. நாலாயிரத்தையும் நமக்கு இசையுடன் தந்த.. அரையர் சேவைக்குக் காரணமானவரும்.. ஆசார்யர்களில் முதன்மையானவருமான ஸ்ரீமந்நாதமுனிகள் சன்னதி வடகலையார் வசம் உள்ள காரணத்தாலேயே பகல்பத்து, இராப்பத்து உற்சவங்களில் அவருக்கு அனுமதி கிடையாது :(

    ReplyDelete
  17. //அந்த இராமாநுஜனை எவன் மனத்துள் வைக்கின்றானோ அவன் மனத்துள், நானும், நீங்களும், இராமாநுஜனும்!//

    ராமானுஜஸ்ய சரணவ் சரணம் பிரபத்யே!!

    காரேய் கருணை இராமானுசனை நினைத்து வாழும் நெஞ்சை அருள்வாய் பெருமானே !!

    ReplyDelete
  18. பாசுரம் யார் பாடினால் என்ன? ஆசையோடு பாடினால் பெருமாளுக்கு சந்தோசம்

    இதில் என்ன வடகலை நாமம் போட்டவர்கள் பாடும் இடத்தில் தென்கலை நாமம் போட்டவர்கள் பாட கூடாது என்ற ஒரு சட்டம் .

    தீண்ட படாதவரான திருப்பான் ஆழ்வாரையும் பெருமாள் தன்னிடம் இணைத்து கொள்ளும்போது வடகலை தென்கலை என்ற வித்தியாசம் பார்ப்பாரா"
    No chance!

    சாதாரணமான நமக்கே இந்த விஷயம் தெரியும் பொது பல சாஸ்திரங்களை படித்து கற்றுணர்ந்த பிராமணர்களுக்கு தெரியாதா?
    இல்லை தெரிந்தும் விதியே என்று இருகிறார்களா??

    ReplyDelete
  19. அப்படி விதியே என்று இருந்தால்

    இந்த சட்டங்களை மாற்றும் வல்லமை படைத்தவர் யார்??

    om namo narayanaaya!

    ReplyDelete
  20. ராகவா

    //ஆஹா..சூப்பர்.. அப்ப பெருமாள் ஏன் குபேரன்கிட்ட கடன் வாங்கணும்.. ஸ்ரீதேவியிடம் கைமாத்தா வாங்கிருக்கலாமே ?//

    பெருமாள் கல்யாணம் செய்தது கலியுகத்தில்! கல்யாணம் முடியும் வரை, பெண்கள் உடைமை, பெற்றவர்களுடையது!

    இப்போதும் கல்யாணங்களில், பெண் வீட்டாருக்கு வரும் மொய் கூட பெண்ணைப் பெற்றவர்களைச் சேர்ந்தது!

    ஒரு ஆண், கல்யாணத்திற்கு முன், வருங்கால மனைவியிடம் கடன் கேட்பது தன் அந்தஸ்திற்குக் குறைவு என்று நினைப்பான் (பெண், உடனே பெற்றோருக்குச் சொல்லி விடுவாள்).

    அந்தக் காலத்தில் நடை பெற்ற கல்யாணங்களில், மணப்பெண் தன் வருங்காலக் கணவனுடன் பேசுவதற்கு அனுமதி கிடையாது!

    இந்தக் காரணங்களாலேயே, பெருமாள், குபேரனிடம் கடன் வாங்கினார்!

    சற்று யோசியுங்கள்: பெருமாள் நினைத்தால், ஒரு வினாடியில், குபேரன் சொத்து எல்லாம் தன்னிடம் எடுத்துக் கொன்ண்டிருக்கலாம்! அவர் கடன் வாங்கியது, ஒரு காரணமாகத்தான்!

    ReplyDelete
  21. தியாகராஜரே!

    //மிக்க அற்புதம்//

    நன்றி

    ReplyDelete
  22. அன்பரே

    //மாதவி பந்தலில் வாசனை மிகவும் அதிகமாகிவிட்டது.//

    நல்ல வாசனை தானே :-)

    எங்கேயும் போக முடியல! பந்தலிலேயே படுத்து கொள்ளலாமா!

    இப்படிக்கு
    குயில்//

    இடத்துக்குச் சொந்தக்காரர் என்னா சொல்றார்?

    ReplyDelete
  23. அன்பரே

    //எளிமையாக இந்த வழியை பின்பற்றலாமே!//

    உண்மை! இது எளிதான வழிதான்!

    இது, Meditation on a Concept' என்ற வகையைச் சேர்ந்தது!

    இறைவனை நேரில் காணத் தவம் செய்பவர்கள், தங்கள் தெய்வத்தை, விளக்கின் முன் வைத்து, இந்த முறையைப் பின்பற்றித் தவம் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

    ReplyDelete
  24. //அருமை அருமை !! திவ்யதேசக் கணக்கும், நெஞ்சநாட்டுத் திருப்பதி பற்றியும் அருமையா சொல்லிருக்கீங்கண்ணா..//

    நன்றி ராகவா!

    ReplyDelete
  25. KRS

    //இருப்பது ஒரே திவ்யதேசம் தான்!//

    I Cannot agree with you more!

    இந்த ஒரே திவ்ய தேசத்தில் தான், நமக்குப் பிடித்த Alphabet-ல் நாமத்தைப் போட்டுக் கொண்டு (இல்லாவிடிலும் பரவாயில்லை - அவன் இதெல்லாம் வேண்டும் என்று கேட்டதில்லை), நமக்குப் பிடித்த வழியில், நமக்குக் தெரிந்த முறையில் வழிபாடு செய்யலாம்!

    In Short, it is the only Personalized Divya DhEsam!

    ReplyDelete
  26. சூரி

    //அற்புதமான படைப்பு இது . //

    நன்றி அன்பரே

    ReplyDelete
  27. //Y-யா அல்லது, U-வா?
    அதான் திருவேங்கடமுடையான் வம்பே வேணாம்-ன்னு W போட்டுக் கொள்கிறானா? :)
    இன்னும் வேற ஏதாவது English Alphabet இருக்கா-ண்ணா? :)//

    திருப்பதி நாமம் தமிழ் ‘ப’ என்று நினைக்கிறேன்! :-)

    இதைத் தவிர, ‘I' உள்ளது! ஒற்றைக் கோடு மட்டும் போட்டிருந்தால்! வேறு ஏதாவது Alphabet, இருக்கிறதா என்று தெரியாது :-)

    ReplyDelete
  28. KRS

    //அப்படீன்னா போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் - எப்படி? :)//

    அவன் நாமத்தை இங்கு வந்து சொல்ல், பிறவி எடுக்க வேண்டுமே!

    அவன் நாமத்தைச் சொல்லி, பாவங்களைக் கழித்து, பின்னர், ’அது தான் கழித்து விட்டேனே’ என்று நினைத்து மீண்டும் பாவங்கள் செய்தால்,

    ‘மீண்டும் பிறவி! - Back to Squar One!

    ReplyDelete
  29. KRS

    //மொதல்ல கெட்டவனான எனக்குக் கெட்டவனாய் ஆயிருவானே! :)
    ஆனா கெட்டவனான என் கிட்ட நல்லவனாத் தானே இருக்கான்???//

    இது என்னங்க புதுக் கதை? கொஞ்சம் புரியற மாதிரிச் சொல்லுங்க!

    ReplyDelete
  30. KRS

    //ஹா ஹா ஹா
    இதை ஒரு கற்பனைக் கதைச் சுவைக்காக மட்டுமே ரங்கன் அண்ணா சொல்லி இருக்காரு!

    அது எப்படி, ஆழ்வார்களைக் கலி பிடிச்சிருச்சி-ன்னு சொல்லலாம்?-ன்னு யாரும் கோச்சிக்காதீங்க-ப்பா! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)//

    Thanks a lot for defending me, well in advance!!

    கலி, பூமியில் உள்ள எல்லோரையும் பிடிக்கும் என்கிறது ஸாஸ்திரம்! பிடிக்கும் கால வரம்பிலும், அளவிலும் தான் மாற்றம்!

    ஆழ்வார்களே, தங்களைக் கலி பிடித்ததைச் சொல்லி, பின் ’அவன் அருளாலும், நாமத்தைச் சொன்னதாலும், கலியைக் கடந்து, நமன் தமர்கள் தலையில் காலை வைத்தோம்’

    (இந்தக் காலத்துத் தமிழில், = ‘உம்மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க! :-))

    என்கின்றனரே!

    காவலில் புலனை வைத்து*
    கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து*
    நாவலிட்டு உழிதர்கின்றோம்*
    நமன் தமர் தலைகள் மீதே*
    மூவுலகு உண்டுமிழ்ந்த
    முதல்வ!* நின் நாமம் கற்ற*
    ஆவலிப்புடைமை கண்டாய்!*
    அரங்கமா நகருளானே!

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  31. ரவிண்ணா.. ரங்கன்அண்ணா.. 100 Followers மாதவிப்பந்தலில்.. வாழ்த்துகள் !!

    ReplyDelete
  32. ஆஹா! Folowers century-yilum நரசிம்மரா!
    Yes
    Narasimmah.blogspot
    Raj

    ReplyDelete
  33. //Raghav said...
    ரவிண்ணா.. ரங்கன்அண்ணா.. 100 Followers மாதவிப்பந்தலில்.. வாழ்த்துகள் !!//

    அட, இதுக்கெல்லாம் வாழ்த்தா? :)

    நம்மள எத்தனை பேர் Follow பண்றாங்க என்பதை விட
    நாம எம்பெருமானை Follow பண்றோமா என்பதே முக்கியம்!

    நெஞ்ச நாட்டு திவ்யதேச எம்பெருமானை Follow பண்ணுவோம்!

    ReplyDelete
  34. //பாசுரம் யார் பாடினால் என்ன? ஆசையோடு பாடினால் பெருமாளுக்கு சந்தோசம்

    இதில் என்ன வடகலை நாமம் போட்டவர்கள் பாடும் இடத்தில் தென்கலை நாமம் போட்டவர்கள் பாட கூடாது என்ற ஒரு சட்டம்//

    நம்-பாடுவான் என்ற ஒரு பக்தன்! ஸோ கால்டு "தாழ்ந்த" குலம்! கைசிகம் என்னும் பண்ணில் கோயிலில் பாடுவான்! கைசிக ஏகாதசியே இவனைக் குறித்து தான்!

    இந்தக் கதை பல வைணவர்களுக்கும் தெரியும்! அவனைக் கோஷ்டியில் இருந்து ஒதுக்கி வைக்க முடியுமா?

    இந்தக் கதையைப் பலரும் "அறிந்து" வைத்துள்ளார்கள்! ஆனால் யாரும் "உணர்ந்து" வைக்கவில்லை! அதான் இப்படி!

    //சாதாரணமான நமக்கே இந்த விஷயம் தெரியும் பொது பல சாஸ்திரங்களை படித்து கற்றுணர்ந்த...//

    "கற்றது" தான் பிரச்சனையே! :))

    கற்றதன் நோக்கம் அவனை அடைய என்பது மறந்து போய்...
    கற்றதன் நோக்கமே தன்னுடைய கல்வி தான் என்ற ஒரு பிடிப்பு வந்து விடுகிறது!

    குளிரைப் போக்க மட்டுமே விறகு! ஓரளவு எட்ட இருந்தாலே அது போக்கி விடும் என்பதை மறந்து போய்...
    எரியும் விறகைக் கட்டி பிடிச்சிக்கறாங்க பல பேர்! :)

    தான் கற்று வைத்துள்ள யோகங்கள் = இறைவன் அருகில் இட்டுச் செல்லும் உபாயம் மட்டுமே!
    இந்த உபாயப் பிடிப்பை விடவில்லை-ன்னா, உபாயமே அபாயம் ஆயிரும்! :)

    அதற்குத் தான் சரணாகதியில் மட்டும், உபாயம் கூட எம்பெருமான் தான்! வேறு கல்வியோ/யோகமோ உபாயாமாய் இருக்காது!

    இன்ன பிற யோகங்களில், பல்வேறு உபாயங்கள் உண்டு!
    சரணாகதியில் உபாயமும் அவனே! அடைவதும் அவனையே!

    ரங்கன் அண்ணா ரெஸ்ட் எடுக்கும் போது, நடுநடுவே சரணாகதி For Dummies எழுதுகின்றேன்! :)

    ReplyDelete
  35. //
    KRS

    //மொதல்ல கெட்டவனான எனக்குக் கெட்டவனாய் ஆயிருவானே! :)
    ஆனா கெட்டவனான என் கிட்ட நல்லவனாத் தானே இருக்கான்???//

    இது என்னங்க புதுக் கதை? கொஞ்சம் புரியற மாதிரிச் சொல்லுங்க!//

    :)
    அதாச்சும் பெருமாள் கெட்டவனுக்கு கெட்டவன்-ன்னு சொன்னீங்களே...
    ஆனா, எனக்கு நல்லவனாத் தானே இருக்கான்-ன்னு கேட்டேன் ரங்கன் அண்ணா :)

    எனக்கென்னமோ...வேறு மாதிரி தோனுது...
    பெருமாள் நல்லவர்க்கும் நல்லவன்!
    கெட்டவர்க்கும் நல்லவன்!

    மோட்சத்தில் Census எடுத்துப் பார்த்தா...
    அனுமன் போன்றவர்கள் இருக்க மாட்டாங்க!
    அஜாமிளன், கேஆரெஸ் போன்ற பாவிகளே அதிகம் இருப்பாய்ங்க! :))

    ReplyDelete
  36. //ஆழ்வார்களாகிய உங்களைத் தன் மனத்துள் வைத்த இராமாநுஜன் என் பக்தன்! அவன் மனத்தினுள்ளே நானும், நீங்களும் இருக்கின்றோம்!

    அந்த இராமாநுஜனை எவன் மனத்துள் வைக்கின்றானோ அவன் மனத்துள், நானும், நீங்களும், இராமாநுஜனும்!//

    இராமானுசரின் பல உருவச் சிலைகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும்...
    அவர் நெஞ்சப் பதக்கத்தில் இருக்கும் உருவம் = நம்மாழ்வார் + அரங்கன்!

    பதிவில் இராமானுசரைப் பற்றிய வரிகளை வாசித்தாலும், அதைப் பற்றி அடியேன் ஒன்றும் கூறவில்லை!
    சுவாசித்தல் அல்லது வாசித்தல் என்னுயிர்க்கு அடங்காது!

    இராமானுசன் நெஞ்சமே நம் தஞ்சம்!

    ReplyDelete
  37. மோட்சத்தில் Census எடுத்துப் பார்த்தா...
    அனுமன் போன்றவர்கள் இருக்க மாட்டாங்க!::)))

    ஸ்ரீமன் நாராயணன் இருக்குமிடத்தில் எல்லாம் அனுமனும் இருப்பார் என்றல்லவா நினைத்திருந்தேன். எங்கும் நிறைந்து இருக்கிறார் ஸ்ரீமன் நாராயணன். அனுமன் ஒரு சில இடங்களில் இருப்பதில்லையோ!
    Thank you information

    ReplyDelete
  38. ரங்கன் அண்ணா,
    மிகவும் ரசிக்கும்படி உள்ளது. திவ்ய தேச உலா படித்து சிரித்து கொண்டே இருக்கிறேன். :)))))))))))))))))))
    ~
    ராதா

    ReplyDelete
  39. //வருத்தப்படக்கூடிய விஷயம், பூலோக வைகுண்டம் எனும் திருவரங்கத்தில்.. நாலாயிரத்தையும் நமக்கு இசையுடன் தந்த.. அரையர் சேவைக்குக் காரணமானவரும்.. ஆசார்யர்களில் முதன்மையானவருமான ஸ்ரீமந்நாதமுனிகள் சன்னதி வடகலையார் வசம் உள்ள காரணத்தாலேயே பகல்பத்து, இராப்பத்து உற்சவங்களில் அவருக்கு அனுமதி கிடையாது :(//

    :)
    தம்பி ராகவ்-இன் அனுமதியோடு இந்தப் பின்னூட்டம்!

    நாதமுனிகளுக்கு திருவரங்கத்தில் "அனுமதி கிடையாது" என்பது கொஞ்சம் மிகை உணர்ச்சி! :)
    உண்மை நிலை அப்படியல்ல!

    இதோ...திருவரங்கத்து பகல்பத்து,இராப்பத்து விழாவில் நாதமுனிகள் இருக்கும் காட்சி!

    இப்போது இருக்கும் அரையர்களும், நாதமுனிகள் வம்சமான திருவரங்கப் பெருமாள் அரையர் குடும்ப வழி வந்தவர்கள் தான்! அவிங்களே அவங்க முன்னவருக்கு அனுமதி கொடுக்கலீன்னா எப்படி? :))

    உண்மை நிலை என்ன-ன்னா, நாதமுனிகள் சன்னிதி நிர்வாகம் இன்னொரு க்ரூப்புக்குப் போனதால்...இந்த க்ரூப் அங்கிட்டு உள்ள போக மாட்டாங்க! மரியாதை கிடைக்காதாம்! ஹைய்யோ, ஹைய்யோ! :))

    ஆனால் அதுக்காக நாதமுனிகளை அவமதிப்பதோ, அனுமதி மறுப்பது எல்லாம் இல்லை! வெளியவே நிற்பார்கள்! நாதமுனிகள் உற்சவர் புறப்பாடு துவங்கிய பின், அவரைத் தக்க வாழ்த்துகளுடன், அழைத்துக் கொண்டு செல்வார்கள்!

    பகல் பத்து துவங்குவதற்கு முன், பெருமாள் கருவறையில், அரையர்கள் திருப்பல்லாண்டு இசைப்பார்கள்! அதற்கு முன் தங்கள் தாளங்களைப் பெருமாள் காலடியில் வைத்து எடுப்பார்கள்! அந்தத் தாளங்களுக்குப் பேரே "நாதமுனி" என்பது தான்!

    எனவே யாரும் பயந்துறாதீங்க! திருவரங்கத்தில் நாதமுனிக்கு "அனுமதி" உண்டு! :)

    என்ன...தங்கள் நிர்வாகம் இல்லாத இடத்துக்கு உள்ளே போகாம, இப்படிப் பண்ணுவாங்க இந்த "லூசுகள்"! :)

    நாதமுனிகள் கிட்டக்கவே பாகவதா அபச்சாரம் பட்டா எப்படி-ன்னு யோசிக்கவே யோசிக்க மாட்டாங்க! ஆனா மாங்கு மாங்கு-ன்னு சந்தியும் கர்மாக்களும் மட்டும் விடாம பண்ணுவாய்ங்க! :)

    ReplyDelete
  40. // Sri Kamalakkanni Amman Temple said...
    அனுமன் ஒரு சில இடங்களில் இருப்பதில்லையோ!//

    அனுமன், வீடணன் போன்ற உயர்ந்த பாகவதோத்தமர்கள் எல்லாம் மோட்சமும் வேண்டாது, இன்னும் இங்கேயே தான் இருக்கிறார்கள்! இன்னும் மோட்சம் போகவில்லை :)

    அதனால் அவர்கள் இருக்கும் "கீழ் மோட்சமே", "மேல் மோட்சத்தை" விடச் சிறப்பான மோட்சம்! :)

    அங்கு "அப்பறை"! = அது பறை
    இங்கு "இப்பரிசு"! = இதுவோ பரிசு! :)
    பட்டர் பிரான் கோதை, என் தோழி பாடுகிறாள்!

    ReplyDelete
  41. //பல கோயில்களில் அர்ச்சகர், கூப்பிட்டால் தான் வருவார்!
    //
    'உங்கள் பேரில் 12 வாரங்கள் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்து, பிரசாதம் வீட்டிற்கு அனுப்புகிறேன்' //

    நெறைய அனுபவம் போலிருக்கு

    ReplyDelete
  42. அன்பரே

    //நெறைய அனுபவம் போலிருக்கு//

    இப்படி Public-கா எல்லாத்தையும் போட்டு உடைக்காதீங்க :-))

    ReplyDelete
  43. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete
  44. fine.you have given diiya prapandam their due place. I will follow u often

    ReplyDelete
  45. 109 வது திவ்யதேசம் மிக அருமை மனத்தை 109 ஆக மாக நினைகக சொன்னது மிக அருமை.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP