பிரபாகரன் தாயே! பார்வதியே! தாலேலோ!
இனிய குடும்பத்தில் ஒரு நொடிந்த சமூகம் எட்டிப் பார்த்தால்?சமூகத்தை, உதய சூரியக் குடும்பமே எட்டிப் பார்க்கலாம்!ஆனால் ஒரு குடும்பத்துக்குள் சமூகம் எட்டிப் பார்த்தால்? = உன் கதி தான்! நிர்க் கதி தான்!பிள்ளையோ போராளி!கணவரோ உழைப்பாளி!இருவருக்கும் இடையேபெண்ணோ பெரும் தவிப்பாளி!ஈழத்தில் தொலைத்த முகவரிகளைஇதர கண்டங்களிலாச்சும் கண்ட எம் மக்கள்!முகத்தில் தொலைந்த முக வரிகளைஇவள் எந்தக் கண்டத்திலும் காணாது போனாளே!விமானத்தில்...