Tuesday, August 23, 2011

தலை மேல்...கையெழுத்தே!

என்னவன் கால் பட்டு அழிந்தது...
என்ன அது?
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்

வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது
இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!!

7 comments:

  1. என்ன திடீரென்று இம்புட்டு சுருக்கமா ஒரு இடுகை?

    ReplyDelete
  2. அழகு..நறுக்குன்னு இருக்கு..

    ReplyDelete
  3. Beauty of surrendering at His feet...

    ReplyDelete
  4. அயன் கையெழுத்தை அழிக்கவல்ல ஒரே 'ரப்பர்' நம் வள்ளியமுதனின்

    'பட்டுக்கால்' தான்;அந்த அயனைப் பிரணவப்பொருள் கேட்டுச் சிறையிலிட்டு அவன் தலையெழுத்தையே மாற்ற வல்லவனாய் இருந்தவனாச்சே!

    ReplyDelete
  5. அன்பின் ரவி
    கந்தர் அலங்காரம் கமகம-என்று மணம் வீசி மாதவிப்பந்தலை அலங்கரிக்கிறதோ? !!!
    அப்படியே திருமுருகாற்றுபடையும் முன்வந்து பகிரலாமே?

    ReplyDelete
  6. விதியை வெல்ல வேலாயுதமே துணை. நம் தலை விதியை மாற்றியமைக்க அவன் திருப் பாதங்களே துணை. அழகனாகிய முருகனின் இப்பதிவும் அழகு :)
    amas32

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP