Friday, September 06, 2013

வ.உ.சி -யை நொறுக்கிய "தமிழ்ப் பண்டிதர்கள்"!

இன்று Sep 5;
(ஹிந்து ஞான வித்தகர்: Dr. ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான) ஆசிரியர் தினம்..
ஆனால்... அது  மட்டுமே அல்ல!

கல்வியும்/ செல்வமும் ஒருங்கே இருந்தும்,
உடம்பால் பாடு எடுத்த தியாகச் செம்மல்..
தமிழறிஞர் = "வ.உ.சி" | அவர்களின் பிறந்த நாளும் கூட (Sep 5)!

என்னாது... வ.உ.சி = தமிழறிஞரா??? ஆமாய்யா ஆமாம்!
* வ.உ.சி = ஒரு தேச பக்தன் -ன்னு மட்டுமே பலருக்கும் தெரியும்!
* ஆனா, வ.உ.சி = ஒரு தமிழ் அறிஞன் -ன்னு தெரியுமா?

Only very few ppl. know;
Why? | Thatz the sad story of tamil media world:(

இன்று, பார்க்கப் போவது, ஒரு தமிழ்ப் "பஞ்சாயத்து":)
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி  vs  பண்டிதர் திரு. அனந்தராம ஐய்யர்




"ஐய்யர்" -ன்னு எழுதிட்டதாலேயே, Twitter பெரிய மனுஷாள், என்னை நோக்கிப் படையெடுக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்:)
ஏற்கனவே 10 மாதங்கள் ஒதுங்கி இருந்து, இப்ப தான் மீண்டு வந்துள்ளேன்...

Group சேர்ந்து கொண்டு ஒதுக்கி வைத்தல்:
= இன்றைய Twitter மட்டுமல்ல!
= அன்றே, வ.உ.சி யும் பட்டிருக்காரு, இலக்கணத் தமிழ் வாத்திகளின் கையில்!

கருத்து வேற, மனிதம் வேற!
* நான் சொல்வது = தமிழ்க் கருத்து மட்டுமே!
* தனி மனிதத் தாக்குதல் = ஒரு போதும் நான் அறியாதவன்!

"KRS-ஐ ஒழிச்சிக் கட்டுங்கோ; பூச்சி மருந்து அடிச்சி ஒழிங்க"
- இது போன்ற "இட்லிவடை வாசகங்கள்" என் வாயில் வரவே வராது:(
பூச்சி மருந்து அடிச்சி, "என் சாவு"
= Twitter பெரிய மனுஷாள் ஒங்க கையில் இல்லை!

அது இன்னொருவன் கையில்!!
இதன் "தர்ம-நியாயங்களைத்" திருமுருகன் தாளில் வைத்து விடுகிறேன்;

உண்மை, உறுத்து வந்து ஊட்டும்!
அதுவும் தரவோடு வந்தா? = தாங்க முடியாது தான்:)))
* சொல்வது என்ன-ன்னா:  தமிழுக்கு நேர்ந்த கொடுமைகள்!
* என் ஏக்கம் = தமிழ் ஏக்கம்:  ஐய்யர் என்றல்ல! கருணாநிதி செய்தாலும் வரும்!

தமிழை = "டுமீல்" என்று எள்ளி விட்டு,
அதே தமிழில் இலக்கணப் பாடம் எடுக்கும் Twitter "வாத்திகள்" யாராயினும் = எனக்கு இதே ஏக்கம் தான்!

இவர்களுக்கு, தமிழ் = "உணர்வுப் பூர்வமானது" அல்ல!
வெறும் Rulebook; ஆடு-களம், அவ்வளவே! உள்ளத்தின் ஆழத்தில் = எள்ளலே!:(
இவங்களை விட்டுருவோம்; மற்றபடி...

தமிழுக்கு "மனதார நல்லது நினைப்போர்"
= யாராயினும்.. 
= பிராமணர்கள் உட்பட.. அனைவரும் தமிழர்களே!

தமிழ் = பிறப்பால் வருவது அன்று! உணர்வால் வருவது!

உ.வே. சாமிநாத ஐயர் என்றொரு தமிழ்த் தாத்தா; அவர் திருவடிகள் என்றும் எனக்குத் துணை!
Enough of this digression (or) Introduction..
Let's go & see வ.உ.சி-யின் தமிழ்ப் பஞ்சாயத்து:)



எட்டுக் கால் பூச்சிக்கு = எத்தினி கால்?
மாற்றிக் கேக்குறேன்; "Spider Man"-க்கு எத்தனை கால்?:)

18 கீழ்க்கணக்கு = மொத்தம் எத்தனை நூல்கள்?:)

18 கீழ்க் கணக்கில் = 18 நூல்கள்!
திருக்குறளே மிக்க பிரபலம்
ஆனா, ஒரே ஒரு நூலில் மட்டும் = "பஞ்சாயத்து"

அந்த 18ஆம் நூல் எது?
இன்னிலையா? கைந்நிலையா?
= வ.உ.சி vs. அனந்த ராம ஐய்யர்

தமிழில், "தனிப்பாடல்கள்" -ன்னு ஒரு வகை இருக்கு!
வெண்பா  யாரு எழுதுனது-ங்கிற வெவரமெல்லாம் இருக்காது; திடீர்-ன்னு தோன்றி உலாத்தும்!
வெறும் சுவையே அன்றி, நம்பத் தகுந்த ஆதாரம் அல்ல!

எட்டுத் தொகை நூல்கள் என்னென்ன? ஒரு "வெண்பா" இருக்கு-ய்யா!
 "நற்றிணை நல்ல குறுந்தொகை" -ன்னு தொடங்கும்;
எட்டுத் தொகையில் என்னென்ன நூல்-ன்னு பல பேருக்குத் தெரியும்;
ஆனா, இந்தத் தனிப்பாடல் = just a memory tip;

அதே போல், 18 கீழ்க் கணக்குக்கும் ஒரு தனிப்பாடல்!
= ஆனா, அதுல தான் பிரச்சனையே!:) நீங்களே வெண்பாவைப் பாருங்க..

நாலடி, நான்மணி, நா நாற்பது, ஐந்திணை, முப் 
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், 
இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே, 
கைந்நிலைய வாம் கீழ்க் கணக்கு!

எவன் எழுதித் தொலைச்ச வெண்பாவோ? List போடுங்க பார்ப்போம்!:)
நாலடியார், நான்மணிக்கடிகை  2   
நா நாற்பது: (இன்னா, இனியவை, கார், களவழி)  4
ஐந் திணை: ஐந்திணை 50, திணைமொழி 50, ஐந்திணை 70, திணைமாலை 150  4
முப்பால் (திருக்குறள்)  1
திரிகடுகம், ஆசாரக் கோவை  2
பழமொழி நானூறு, சிறுபஞ்ச மூலம்  2
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி  2
17

Already 17 taken! ஆனா, வெண்பா-வில் இன்னும் ரெண்டு Balance இருக்கு!:)
இன்னிலைய  -ன்னும் இருக்கு;
கைந்நிலைய -ன்னும் இருக்கு;

ஆனா, கூட்டினா = 18 வரணுமே! 
17 + 2 = 18 ???

எந்தப் பொலவன்-யா Basic Maths தெரியாம, "வெண்பா" பாடி, உயிரை வாங்குறான்?:)
சங்கம் மருவிய காலம்; அந்த 18ஆம் நூல் எது? = இன்னிலையா? கைந்நிலையா??

அதாம்பா இது -ன்னு வாழைப்பழத் தீர்ப்பு சொல்ல முடியாது:) ரெண்டும் வெவ்வேறு நூல்கள்!
* வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்வது = இன்னிலை;
* இ.வை. அனந்தராம ஐய்யர் சொல்வது = கைந்நிலை;



தமிழ்த் தாத்தா  உ.வே.சா ஓலை திரட்டினாரு -ன்னு பலரும் பேசிப் பேசி, அதுவே நிலைத்து விட்டது அல்லவா!
ஆனா அவரைப் போலவே, அவருக்கும் முன்பே = ஈழத் தமிழர் சி.வை. தாமோதரம் பிள்ளை கேள்விப்பட்டு இருக்கீயளா?

* உ.வே.சா  = இலக்கியம் திரட்டினாரு-ன்னா,
* சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் முழுசும் திரட்டினாரு;
இன்றுள்ள பல இலக்கண நூல்கள், உரை நூல் (சேனாவரையர்/ நச்சினார்க்கினியர்), கலித்தொகை, சூளாமணி -ன்னு...
சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பித்தவர் = சி.வை.தா

இவரும் தமிழ்த் தாத்தா தான்!
ஆனா பொது மக்களுக்குத் தெரியாது; ஏன்-னா பரப்புரை இல்லை:(

ஒடனே, உ.வே.சா-வை நான் குறைத்து மதிப்பிடுவதாக கும்மி அடிக்க வேண்டாம்:)
என்றும் அவர் = நம் தமிழ்த் தாத்தா!
சொல்ல வருவது என்ன-ன்னா: ஒன்றை மட்டுமே பரக்கப் பேசும் நிலை:(
சி.வை.தா -வும் = தமிழ் தாத்தா! மனத்தில் இருத்துவோம்!

உ.வே.சா / சி.வை.தா அளவுக்கு இல்லீன்னாலும்,
நம்ம வ.உ.சி யும், கொஞ்சமா ஓலை திரட்டி இருக்காரு; தெரியுமா??

* ஆனா, வெளியே போய், அதிகம் திரட்ட முடியலை = சிறை வாசம்;
* செக்கு இழுத்து வெளி வந்த பின்போ = நோய் வாசம்!

18 கீழ்க் கணக்கு:
 வ.உ.சி காட்டிய ஓலைச் சுவடிகள் = இன்னிலை!
ஆனால்.... ஆனால்.... ஆனால்?


இ. வை. அனந்தராம ஐய்யர் = ஒரு தமிழ்ப் "பண்டிதர்" / ஆசிரியர்!
நட்பு வட்டச் செல்வாக்கு மிக்கவர்;

இவரும், சில சுவடிகள் வச்சிருக்காரு;
மொத்தம் 45 பாட்டு;
அதிலே 18 பாட்டு = பாதி தான் இருக்கு! ஆங்காங்கு சொற்களே இல்லை;
சம்ஸ்கிருதச் சொல்லும் அதிகம்!

இவரைச், சேது சமஸ்தான வித்வான், உ.வே. இராகவ ஐயங்கார் பலமாக வழிமொழிகிறார்; அம்புட்டு தான்....
எல்லாப் பண்டிதர்களும் இந்தப் பக்கமே திரண்டு விட்டனர்; வ.உ.சி அம்போ!!
= Power of "Networking", even in Tamizh:(

உ.வே. இராகவ ஐயங்கார் = பெரும் அறிஞர் என்பதையும் மறைக்காது சொல்லி ஆகணும்!
கம்பனில் குளித்தவர்; "வடமொழிக் காளிதாசனை"த் தமிழுக்குள் கொண்டு வந்தவர் = "அபிஞான சாகுந்தலம்"

* ஒரு புறம் =  சிறை விட்டு வெளியே வந்து.. நொடிஞ்சி போன வ.உ.சி
* மறு புறம் =  சமஸ்தான வித்வான்கள் & தமிழ்ப் பண்டிதர் குழாம்

ஐய்யய்யோ, பத்திக்கிச்சே; உம்ம்... யாரு சொல்வது சரி?

தனி மனிதப் போக்கு தவறு..
* "யாரு?" -ன்னு வேணாம்!
* "எது?"    -ங்கிற கேள்வி கேட்போம்! => எது சரி??


இரண்டு பக்கமும், ஒரேயொரு தெளிவு இல்லை!

தனிப்பட்ட சுவடி எல்லாஞ் சரி தான்;
ஆனா.. 18 கீழ்க் கணக்கிலே, அந்தச் சுவடி சேர்த்தி என்பதற்கான ஆதாரம்?
= யாருக்குமே கிடைக்கலை;

வ.உ.சி  மட்டும் அரும்பாடுபட்டு, gave an "indirect" proof
= தொல்காப்பிய நூற்பா 113;
= அதுக்கு, தம்மிடம் உள்ள ஓலைச் சுவடியின் 5ஆம் செய்யுளை, மேற்கோள் காட்டியுள்ள பண்டைய உரையாசிரியர்;

யாப்பருங்கல விருத்தி உரையிலும்,
இன்னிலை 2ஆம் செய்யுள், மேற்கோள் காட்டப்பட்டு இருக்கு;
ஆனால்,  தரவு இருந்தும் = அன்றைய "செல்வாக்கு"?

** பதிப்பகம்/ தமிழ் வித்வான்கள் = வ.உ.சி யை  ஒப்புக் கொள்ளாது, அனந்த ராம ஐய்யர் பக்கமே "அணி" திரண்டனர்!
** இ. வை. ஐய்யர் தரவே தரலீன்னாலும்... வடசொற்கள் மிகுந்த ஏடு, கைந்நிலை: 18 கீழ்க் கணக்கு நூல் என்று ஆனது!
Today, It is Official;

வ. உ. சி = வரவேற்க யாருமில்லை!
(காங்கிரஸ் கட்சியே, அவரைக் கைவிட்டு விட்டது என்பது தனிக் கதை)
எனினும், தம் சொந்தச் செலவில், கொஞ்சம் கொஞ்சமாய் இன்னிலை நூலைப் பதிப்பித்தார்;
ஆனா, வறுமை/ வெறுமை! = அதிகம் முடியலை!:(

VOC didn't have a "social networking" in the field of Tamizh
His approach is more Frankness & Justice, rather than "self seek"
voc great
வ.உ.சி
சிறைக்கு முன்னிருந்த
கம்பீரம்
வ.உ.சி
சிறைக்குப் பின்
வெறுமை

ஆனா... இத்தோடு விட்டால் தான் பரவாயில்லையே!

வ.உ.சி  குடுத்த "தரவுகள்"
= உறுத்திக் கொண்டே இருக்கு போலும், பண்டிதர்களுக்கு!:)
= கிளப்பி விட்டாங்க...

--- வ.உ.சி -க்கு ஏடு குடுத்தவர் = திருமேனி இரத்தினக் கவிராயர்;
இவரு "பழைய நடையில்" தாமே கற்பனையாப் பாட்டெழுதி, அதைத் தான் "இன்னிலை" -ன்னு புகுத்தி விட்டார்---

கிளப்பலோ கிளப்பல்!
எப்படி இருக்கு கதை? "அசுரன்" ஆக்கீட்டோம்-ல்ல?
டொன் டொன் டொய்ய்ங்...

இ.வை. ஐய்யர் காட்டியதில், சிதைஞ்சி போன பாட்டு = 18;
கார்ப் பாம்புக் குப்பங் கி... க் கொண்......கரும் 
-ன்னு இருக்கு! என்னா புரியுதா?:)
ஆனா, இதையெல்லாம் எவருமே கேள்வி கேட்கலை;

"Official  தமிழ்ப் பண்டிதர்கள்", ஒன்று கூடி உரைத்த வாசகம்:
மற்ற 17 கீழ்க் கணக்கு நூல்களின் நடை
= வ.உ.சி காட்டிய இன்னிலையில் இல்லை 
எனவே, இது பொய்யான புகுத்தல்!

திருக்குறளின் நடை, பழமொழி நானூறில் இல்லீயே; அது மட்டும் எப்படி 18 கீழ்க் கணக்கு?
= விடுய்யா, விடுய்யா.. Twitter/ Blog-ல கேக்குறதெல்லாம் "சபை" ஏறுமா?
= ஒம்ம கிட்ட Official Network இருக்கா?:)
------------------------

சொந்தக் காசையெல்லாம், தேச பக்தியில் தொலைச்சிட்டு, மாடு போல் செக்கிழுத்து..
இன்னிக்கி தனி மரமாய் நிக்கும் வ.உ.சி = "பொய்" சொல்லிட்டாரு-ன்னே வச்சிப்போம்.....

ஆனா..ஆனா..

* "இன்னிலை" -ன்னும் அந்த வெண்பாவில் இருக்கேப்பா? = ஓய், அதெல்லாம் கேக்காதீங் காணும்;
* சரிப்பா, இன்னிலை வேணாம்! "கைந்நிலை", னு என்பதற்குத் தரவு? = என்ன ஸ்வாமி, தரவெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீரு?:)

அதான்.... இன்னிலை அல்ல-ன்னு,
நாம, "குழுவாச் சேர்ந்து" சொல்லீட்டோமே!
அதுக்கு மேலேயா தரவு வேணும்?:)
So, 18ஆம் நூல் = கைந்நிலையே! <சுபம்>


முருகா,
* செக்கை, மாடு போல் இழுத்த செல்வந்தன் = அவனா பொய்யாப் பாட்டெழுதிப் புகுத்துவான்?
* விடுதலைப் போர் செய்து கொண்டே, இடைக்கால British அரசில் முதன்மந்திரி "வ.உ.சி-ஜி" ஆகாதவன் = அவனா பொய்ப் பாட்டு புகுத்துவான்?

அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
அன்று ஒடிந்தது = வ.உ.சி உள்ளம்!!
voc last
வ.உ.சி - இறுதி யாத்திரை

ஆனாலும்...
= தன்னைக் கைவிட்ட தமிழை 
= வ.உ.சி  கைவிடவில்லை!

அவர் இறுதிக் காலத் "தனிமை"யில் = ஒரே ஆறுதல், தமிழ்!
*தொல்காப்பியத்துக்கு உரை எழுதினார்;
*சிவ ஞான போதம் என்ற நூலுக்குச், சமயம் கடந்து, "அன்பே சிவம்" என்று, புது உரை செய்து கொடுத்தார்;

இந்தக் கையெழுத்துப் பிரதிகள் எல்லாம்... இன்று காணாமலேயே போய்விட்டன:(

ஏதோ... நடிகர் திலகம் சிவாஜி... நடித்துக் குடுக்க... "கப்பலோட்டிய தமிழன்" என்ற நினைவாச்சும் தங்கியிருக்கு!
சினிமா மட்டும் இல்லீன்னா.. வ.உ.சி = இன்னிக்கி யாரோ!:(



* "அ முதல் ஹ" வரை 48 சம்ஸ்கிருத எழுத்தே = 48 சங்கப் புலவர்களா பிறவி எடுத்துச்சி;
49-வதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு -ன்னு  "திருவிளையாடற் புராணம்" எழுதிய "தமிழ்ப் பண்டிதாள்" குழு அல்லவா?

* தமிழ்த் தொன்ம முருகனை -> புராணக் கதைகள் ஏற்றி ஏற்றி..
சுப்ரமணியன் ஆக்கிய "தமிழ்ப் பண்டிதாள்" அல்லவா?

= இந்தக் "குழு அரசியல்"-ல்லாம் கடந்து வந்து தான்...
= இன்னிக்கும் நிக்குது தமிழ்!!!

சொற்பமான அறிஞர்கள், இன்றும்,
"இன்னிலை - கைந்நிலை",
இரு நூல்களையும் ஒருங்கே வைத்துத் தான், படிக்கின்றனர்; ஆனால்....

* "Officially", கைந்நிலையே = 18 கீழ்க் கணக்கு!
* இன்னிலை அல்ல என்று ஆக்கப்பட்டு விட்டது!

அதனால் என்ன?
= இன்னிலையும் தமிழ்த் தாய்க்கு அணிகலனே!

* தான் ஒடுங்கிப் போன நிலையிலும்...
* தமிழ் ஒடுங்கிப் போகாமல்,
தமிழுக்கு "இன்-நிலை" தேடித் தந்தவனே!
தூத்துக்குடி தந்த தூயோனே;
வ.உ.சி = உன் "தோல்வித்-தமிழ்" வாழ்க!!


Read more »

Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்தநாள்: Kissing For Dummies!

மக்களே... (இது 18+ பதிவு:) சற்று "விழிப்புடன்" படிக்கவும்:)

என் மனத்துக்கினிய தோழி - தென் பாண்டித் தெள்ளமுது,
தமிழ்த் தாய்க்கு நல்லாள் - காமக் காதலர்க்கு வல்லாள்
...அவ காதலனுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம் (Aug-28-2013)

அவனக்கு நான் எதுக்கு-ய்யா வாழ்த்து சொல்லணும்?
சரி, சரி, முறைக்காதே டீ! உனக்காகச் சொல்லுறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - கண்ணா! from me & my murugavan:)
* சேலை திருடறது, பானை உடைக்குறது = இதெல்லாம் தான் ஒங்கூருல Romance-ஆ?
* டேய் வெண்ணைய்.. = Atleast today, Learn from my dearest தோழி, What is Romance?

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


என்னடா, ஒரு பொண்ணு கிட்ட போயி.. பையன் எப்படி. இதெல்லாம்? -ன்னு வெட்கப்படாதே!
பெண்கள், ஆண்களை விட........ :)

கொஞ்சம் தூண்டி விடணும், அவ்ளோ தான்! அப்பறம், இன்ப தீபம் அணையவே அணையாது:)


இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா
-ன்னு "ரன்" பாடல் போலவே.. நாச்சியார் திருமொழியில் பாடலாம் தான்; ஆனா பாசுரச் சந்தம்/ இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-" சுவை!
அதான் இன்னொருவர் பாட்டை, ஆண்டாள் "இச்" சுவையா மாத்திப் பாடுறா! :)

"இச்"-சுவை தவிர யான் போய், 
இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், 

அரங்க மா நகர் உளானே!

Eyes over Eyes, Lips over Lips, Hips over Hips, Everything over Everything
* முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது = ஒரு பெரிய கலை!
* "ஏழு பிறவி முத்தம்" கொடுப்பது எப்படி? = கோதை கிட்டயே கேட்கலாமா?
Here we go... Java For Dummies அல்ல! = Kissing For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! 
அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்!:) 

ஏன்னா...
கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்கு = சுவை அதிகம்!:)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க!
திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் இனி ஒருத்தனும் மதிக்க மாட்டான்!

எப்பவும் அவனே கதி -ன்னு கிடக்குற என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல?
இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

வேங்கடவா...
கதி என்றும் தான் ஆவான், கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் - உன்னை வையகத்தார் மதியாரே!




2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? 

அப்போ என்ன பண்ணலாம்? 
உடனே "இச்" கொடுத்துறதா? No No! :)

அவன் ஆடையைப் பிடிச்சி இழுத்து அவனை வம்பு செய்யணும்!

அது என்ன, எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா?
= அவன் "உள்ளாடை"-யை  நான் ஒளிச்சி வச்சா என்ன?:)))

அவன் உள்ளாடை வாசத்தில் = அவன் வாசம் வீசுதே! 
அந்தத் துணியை என் மேல இறுக்கமாச் சுத்திக்குவேன்!

அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் Suitcase-இல் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் (இடுப்பில்) - பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை - 
வாட்டம் தணிய வீசீரே!


3. அடுத்து??? 
ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! 

கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! 
இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!

ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும்..
இந்த மனசு, Last Minute கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாத!
அதுக்கப்புறம் நான் கண்ணை மூடிக்குவேனா?
அவன் "உடம்பழகை" முழுக்கப் பார்க்க முடியாம போயீரும்!

* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் = வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் = கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) = நான் விடும் பம்பரம் அழகு!
* அதற்கும் கீழே = அவன் குழல் அழகு!:)))))))

சேச்சே, crowd பாக்குது, கீழே வேணாம்! மேலே -ன்னு மாத்தீருவோம்;
அவன் முடியைக் கோதி விடும் = (மேல்) குழல் அழகு!

அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும், முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்துடணும்;
முத்தத்தில் கண்ணை மூடிட்டா, அப்பால அதெல்லாம் பாக்க முடியாமப் போயீரும்:)

எனவே..
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் கீழோர் = இதழ்கள்!

* அதனினும் கீழோன் = குழல்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர் -> வாய் அழகர் -> 
கண் அழகர்! 
கொப்பூழில் = எழு கமலப் பூ....
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!


4. அய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி...
என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! 

அவன் கிட்டக்க வந்துட்ட்டான்! 
அவன் உதடு கிட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன tooth paste use பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது Brand ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் = தித்தித்து இருக்குமோ?


மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன், சொல் ஆழி வெண் சங்கே!


அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும்  தேக்கினான்! அவளும் தேக்கினாள்!


* அடியார்க்கு = நீர்த் தீர்த்தம்! 
* எனக்கோ அவன் = வாய்த் தீர்த்தம்!

என் எச்சிலை, அவன் பருகி...
அவன் எச்சிலை, அதில் கலந்து...
மீண்டும் எனக்கே ஊட்டி விடுவான் = என்னெச்சில் ருசி, எனக்கே தெரிகிறது!!!

சேய்த் தீர்த்தமாய் நின்ற - செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


5. முத்தக் கலை முடித்த பின்னர்...

தேன் உண்ட மயக்கத்தில், "வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "Hmm, ’twaz Okay" என்பது போல் ஒரு லுக்கு விட்டுறணும்! :)


அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா/அழகா வேறு மாதிரி முயல்வான்? :)

ஞாபகம் வச்சிக்கடீ கோதை!
* வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட..
* வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!

அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும்...
வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை, 
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?


ஏலாப் பொய் சொல்லும் Porkki-ன்னு திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாத் தூங்கப் போவான்!
அடுத்த முத்தச் சுவை, இன்னும் சுவை பெறும்! :))

பாவம், ரொம்ப உழைச்சவனை, வாயராப் பாராட்டலையே? -ன்னு நினைக்குறியா?
அவன் தூங்கும் போது, அவனையும் அறியாமல், உன் உதட்டுச் சாயத்தை அவன் கன்னத்தில் பூசு!  அவனுக்கு = சிவப்பு மையால் மதிப்பெண் வழங்கு!


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு கூடக் கெடையாது!
வெளியில பார்க்க பணக்கார "மலை-வீடு" போல இருக்கும்; ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க வுட மாட்டானுங்க! :)

108 வீடு வீடாச் சுத்தணும்!
வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்!
A/C கூட இருக்காது!
பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

His arms have rooms. Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு!
* உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது!

அவனுக்கு என்னை "விதி!" = நான் கடவா வண்ணமே நல்கு!

அவன் களைத்துப் படுத்தாலும் விட மாட்டேன்...
என் கூந்தலில் உதிர்ந்த... முல்லைச் சரத்தின் வாழை நாரால்...
அவன் கைகளையும் கால்களையும் - கட்டிலில் கட்டிப் போடுவேன்
நாளை காலையும், அவன் = எனக்கே! எனக்கே!!!

பிறந்த நாள் இரவில்...
அவன் உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் = தன்னை "ஈ"ந்தாள்! 
= முருகாபகர் ஆர்வம் "ஈ"!

குத்து விளக்கெரியக்...
கோட்டுக் கால் கட்டில் மேல்...
"மெத்" என்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி...

கொத்து அலர் பூங் குழல்...
நப்பின்னை கொங்கை மேல்...
கொங்கை மேல்ல்ல்ல் வைத்துக் கிடந்த மலர் மார்பா = உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Read more »

Wednesday, August 07, 2013

திருப்பதிக்கே "லட்டு" குடுத்த M.R. ராதா!

சில மாதங்களுக்கு முன்... எத்தியோப்பியா/ சாட் (Chad) பயணம்;

"பாலியல் தொழிலில் இருந்து சிறார் மீட்பு" - என்பதே அந்தத் தன்னார்வ முகாமின் நோக்கம்!
குட்டிப் பசங்க / வாலிபப் பசங்க -ன்னு சில புதிய நண்பர்கள் கிடைச்சாங்க:)

கள்ளத் தொழிலிலும்...
கள்ளங் கபடில்லா...
"முருக" உள்ளங்கள்!

"நீங்க யாருடா, எங்களை 'மீட்க'? நாங்க சந்தோசமாத் தான் இருக்கோம்" -ன்னு மூஞ்சில துப்பி அனுப்பியிருக்கலாம்; ஆனா, அவர்கள் அப்படிச் செய்யலை;

"என்ன தான் சொல்லுறான்- ன்னு கேட்போமே! 
"கருத்து" தானே!
நீ ஆதாரமே குடுத்தாலும்.. சுயப் பிடித்தத்தை விட்டு எங்களால் வெளியே வர முடியலைய்யா;
எடுத்துக் கொள்வதும்/ எடுத்துக்காததும் எங்க கையில் தானே இருக்கு?"

இந்தத் தெளிவு, அவுங்களுக்கு என்னமா இருக்கு! அடேயப்பா!

வெறும் கருத்துக்காக, மனத்தில் வஞ்சம் கொள்ளுதல்
= "கள்ளத் தொழிலில்" கூட இல்லை; ஆனா நம் சமூக ஊடகங்களில் இருக்கு;

வஞ்சம் கொள்வதற்குப் பதிலா, வாஞ்சை கொள்வது அவர்களிடம் இருக்கு; "Itz not as bad as you think; Let’s try once" ன்னு என்னிடமே one person asked in the camp:) முருகா!

என்ன நடக்குமோ? -ன்னு பயந்துகிட்டே தான் போனோம்! (UNICEF plain clothes officer accompanied too); ஆனால்?....
வசதிகளே இல்லீன்னாலும், வித்தியாசமான பயணம்; மிக மிக ரசித்தேன்!

அதுக்கும் முன்பே, ட்விட்டர் போன்ற ஊடகங்களில் இருந்து, ஒதுங்கியே இருந்தேன்;
ஆனா சென்று வந்தததில் இருந்து.. ஏனோ தெரியலை.. மனசுக்குள் ஒரு "பெரும் சோர்வு"..

அந்தச் சின்னஞ் சிறு பெண்களுக்கு/ பொடியன்களுக்கு 
= நல்ல காதல் கிடைக்கட்டும்; நல்ல வாழ்வு கிடைக்கட்டும்! 
= இளமையில் கல்; இளமையில் வாழ்!


M.R. ராதாவுக்கும், மேற்கண்ட முன்னுரைக்கும் என்ன தொடர்பு? -ன்னு பாக்குறீங்களா?:)

அதெல்லாம் ஒன்னுமில்லை! வரும் வழியில், விமானத்தில், MR ராதாவின் புத்தகம் - சிறைச்சாலைச் சிந்தனைகள்... வாசிச்சிக்கிட்டே வந்தேன்!
படிக்க படிக்க, மனசுக்குள் ஒரே சிரிப்பு;  அவரு நடிகவேள் மட்டுமல்ல! நகைச்சுவை வேள்!:)

எழுத்தாளர் விந்தன், ராதாவைப் பேட்டி கண்டு, அவர் சொல்லச் சொல்ல எழுதிய உரையாடல் நூல்!
இணையத்திலும், ebook ஆகக் கிடைக்கிறது; இதோ!

MR ராதாவின் குணமும் அப்படியே! = வஞ்சத்தால் கறுவாத குணம்!

"ஆமாம், கோவம் வந்துச்சி, எம்.ஜி.ஆரைச் சுட்டேன்! நண்பர்கள் போட்டுக் கொண்ட சண்டை; துப்பாக்கி சரியாக வெடிக்காதோ?" -ன்னு கேட்டவரு தான்:)
தன்னையும் சுட்டுக்கொண்டு, காவல்துறைக்கும் தானே தகவல் சொன்னவரு:)

பெரியாரைப் பிரிந்த போது, "அவசரப்பட்டார் அண்ணா" -ன்னு ராதா கருத்து சொன்னாலும்...
"கருத்து வேற, மனிதம் வேற" -என்பதை அறிந்த "வில்லன்" அவரு; அறியாத "ஹீரோக்கள்" நாம்:)

தி.மு.க-வின் முக்கிய ஆட்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ராதாவும் அருகில் இருந்தாரு;
"ஐயோ, இவன் பெரியாருக்கு நெருக்கம்; அங்க போய் வத்தி வச்சிருவான்" -ன்னு யாரோ சொல்ல...
MR Radha with Periyar
அறிஞர் அண்ணா, அதை வன்மையா மறுத்தாராம்!
"ராதாவுக்கு என்னை விட = பெரியார் நெருக்கம் தான்; ஆனா பெரியாரை விட = மனிதம் நெருக்கம்!
இங்கு இருப்பதை அங்கும், அங்கு இருப்பதை இங்கும் பேசும் "குணம்" ராதாவுக்குக் கிடையாது" - என்பதே அண்ணாவின் emphatic reply!

இதையெல்லாம் படிக்கப் படிக்க...
MR ராதா-வின் மேல் நான் கொண்டிருந்த எதிர்மறை எண்ணங்கள் பலவும் மாறித் தான் போனது;
நான் இதுவரை கொண்டிருந்த கருத்து பிழையானது -ன்னு ஒப்புக் கொள்வதில் எனக்கு எவ்வித வெட்கமும் இல்லை!

* ராதாவின் நடிப்பு = அப்போதே, எனக்குப் பிடிக்கும் தான்;
* ராதாவின் குணம் = இப்போது, இதுவும் பிடிக்கத் துவங்கி விட்டது:)


அரசியல்/ சினிமா கடந்து, ராதாவின் நகைச்சுவை ஒன்றைப் பார்ப்போம்!
"சகல சக்தி" படைத்த திருப்பதி தேவஸ்தானத்தையே வம்புக்கு இழுத்த காட்சி:)
அழ்வார்களின் இயற்கை-வழிபாட்டு வேங்கடவனா, இப்போ இருக்கான்???
"சிந்து பூ மகிழும் திருவேங்கடத்துக் கார் எழில் எந்தை"
பூமாலைக்கே வழியில்லாம, காட்டில் சிந்து பூ! உதிரிப் பூக்கள்=வேங்கடவன்...
இப்போ வைரப் பூக்களை அல்லவா எண்ணிக்கிட்டு இருக்கான், நாள் பூராக் கால் கடுக்க நின்னுக்கிட்டு?:)

ஆழி -சங்கு ஏந்திப்,  பூ ஆடையில் பொலியத் தோன்றிய மாயோன் -ன்னு சிலப்பதிகாரத்தில் வேங்கடவனைப் பாடிய இளங்கோவடிகள்..
இப்போ அவன் இருக்கும் சிறைச்சாலையைப் பார்த்து.. ரொம்பவே வருத்தப் படுவாரு;

வாங்க, MR ராதாவின் வம்புகளைப் பார்ப்போம்:)
------------

ராதா: "யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியோடு நான் ஒரு சமயம் திருப்பதிக்குப் போயிருந்தேன்..."

விந்தன்: "அது எப்போது? திருப்பதி வேங்கடேசப் பெருமானுக்கு வெடி வைப்பதாக நினைத்துக் கொண்டு, நீங்க இருந்த வீட்டுக்கே வெடி வைத்துக் கொண்டீர்களே, அப்போதா?”

ராதா: "இல்லை, இது அதுக்கும் முந்தி-ன்னு நினைக்கிறேன்.
தரிசனத்துக்காக எல்லாருமாகச் சேர்ந்து மலைக்குப் போயிருந்தோம். அங்கே வைச்சிருந்த சந்தனக் கலவையின் வாசனை என் மூக்கைத் துளைச்சுது;
இவ்வளவு வாசனை வீச, இதிலே என்னவெல்லாம் சேர்த்திருப்பாங்களோ?-ன்னு நினைச்சேன்.

அவங்களாக் கொடுத்தா, தொட்டுச் சேவிச்சிக்கிற அளவுக்குத்தான் கொடுக்கப் போறாங்க; அதுக்கு மேலேயா கொடுக்கப் போறாங்க? ன்னு தோனுச்சி.
அந்தச் சமயம் எனக்கென்னவோ அதிலேயே குளிச்சி எழுந்தா தேவலை-ன்னு பட்டுது:)))

அக்கம் பக்கம் பார்த்து, யாருக்கும் தெரியாம அதிலே பாதியை வழிச்செடுத்து மடியிலே வைச்சுக் கட்டிக்கிட்டேன்;
என் போதாத காலம், உடனே அதைக் கவனிச்சி விட்ட அர்ச்சகர்களிலே ஒருத்தர்...

’இங்கே வைச்ச சந்தனத்திலே பாதியை எவனோ திருடி எடுத்து வைச்சிக்கிட்டான்;
இந்த இடத்தை விட்டு வெளியே போறதுக்கு முந்தி அவனைப் பிடிக்கனும். எல்லாக் கதவையும் சாத்துங்கோ!’ன்னு கத்த ஆரம்பிச்சிட்டார்.

இது என்ன வம்பு? ன்னு நான் மெல்ல நழுவினேன்.
அதுக்குள்ளே எல்லாக் கதவையும் ஒன்னொன்னா சாத்த ஆரம்பிச்சிட்டாங்க.

அகப்பட்டுக்கிட்டா அவ்வளவுதான்-னு, தப்பினோம், பிழைச்சோம்-னு தலைதெறிக்க மலையடிவாரத்துக்கு ஓட்டமும் நடையுமா வந்துட்டேன்...

விந்தன்: "அப்போ சந்தனம்...?"

ராதா: "விடுவேனா? அது என் மடியிலேயே இருந்தது. ஸ்ரீபாத ரேணுலு -ன்னு அந்தக் கலவைச் சந்தனத்துக்குப் பேராம்.
பச்சைக் கற்பூரம், அத்தர், அது இது-ன்னு என்னவெல்லாமோ அதிலே சேர்த்திருந்தாங்க;

தரிசனம் செய்யறச்சே இந்தப் பக்தருங்க, கோவிந்தா, கோவிந்தா! ன்னு ஓயாமச் சத்தம் போடறானுங்க, இல்லையா? அதாலே பெருமாளுக்குத் தலையை வலிக்க ஆரம்பிச்சுடுமாம்:)
அந்த வலியைப் போக்கறதுக்காக இந்தச் சந்தனத்தைக் கலந்து அவர் மேலே பூசுவாங்களாம்:)))

வாரத்துக்கு ஒரு நாள் அதை வழிச்சி எடுத்து, சின்னச் சின்னப் பொட்டலமாக் கட்டி, வேணுங்கிற பக்தர்களுக்கு விலைக்கு விற்பாங்களாம்...”

விந்தன்: "ஆகா! திருப்பதி ‘ரேட்’டிலே பார்த்தால் நீங்க எடுத்துக் கொண்டு வந்த சந்தனமே ஜந்நூறு, ஆயிரம் என்று விலை போயிருக்கும் போலிருக்கிறதே?"

ராதா: "யார் கண்டது? போனாலும் போயிருக்கும்; அதுக்குள்ளே அங்கே என்னைக் காணாத பொன்னுசாமிப் பிள்ளை சும்மா இருப்பாரா?
சந்தனத் திருடன் நானாத் தான் இருக்கும் -கிறதை அவர் எப்படியோ ஊகிச்சிக்கிட்டுக் கீழே வந்து ‘ஏன்டா, இப்படிக் கூடச் செய்யலாமா? ன்னார்;

"நாமெல்லாம் காசு கொடுத்து வாங்கிக் கட்டுப்படியாகிற சமாசாரமா இது? ன்னு நான் அவர் மேலேயே கொஞ்சம் சந்தனத்தை எடுத்துப் பூசி, ‘எப்படி இருக்கு? ன்னு கேட்டேன்.
அது அவர் சூட்டைத் தணிக்கலே-ன்னாலும் என் சூட்டைக் கொஞ்ச நாள் தணிச்சி வந்தது. எல்லாம் தீர்ந்து போய், அதை எடுத்து வைச்சிக்கிட்டு வந்த வேட்டியைச் சலவைக்குப் போட்டேன்.

ஒரு தடவையில்லே, பல தடவை போட்டேன். வேட்டி கிழியற வரையிலே அந்தச் சந்தன வாசனை போகவேயில்லே!”

விந்தன்: "சந்தன வாசனையும் போகவில்லை; அதன் நினைவும் உங்கள் மனசை விட்டுப் போகவில்லை"


Oh, MR Radha, You missed the "taste" of Tiruchendur Puttu:) அங்கேயும், ஒம்ம கைவேலையைக் காட்டியிருக்கப் படாதோ?:)

எந்தை = பெருமாளை மட்டுமா ராதா கலாய்ச்சாரு?
என் காதல் முருகனையும் அல்லவா, நோண்டி நொங்கு எடுத்தாரு:))

வேலும் மயிலும் துணை -எனும் படத்தில், பகுத்தறிவுப் பேச்சாளராத் தோன்றி, முருகனை ஒரு கலக்கு கலக்கி எடுப்பாரு:)

கந்தர் அலங்காரம் -ங்கிற படத்தில், "லொள்ளு கதா காலட்சேபம்" செய்யும் முருக பக்தர்:)

ஆதி தேவனின் மைந்தா நமோ நமோ!
ஆறு வீட்டுக்கு  ராஜா  நமோ நமோ!:)) - Remix of MR Radha!

Hi Honey; நீ ஆறு வீட்டுக்கு ராஜாவாமே? நான் கூட ஏதோ சீட்டுக் கட்டுக்கு ராஜா-ன்னு நினைச்சேன்:) கோச்சிக்காத முருகா!:)
Under this inspiration, I wrote in a birthday post: முருகன் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)
கோ= அரசன்; கோக்-கோ= அரசர்க்கு அரசன்

வேல் பிடிச்சா= வேலா; ஆண்டிக் கோல் பிடிச்ச = கோலா:)
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா!:) Sorry da muruga! Love u honey:)
------

*தமிழ் வேடம் = வெளியில்! உள்ளே "மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களோடு" காமம்;
*தமிழ்க் கருத்து = வாய்க்கு மட்டுமே! வாழ்வுக்கு அல்ல!

= இது போன்ற Hypocrisy இல்லாத "குணம்"!

அதே சமயம்: தனக்குப் பிடிக்காத ஒரு கருத்தைச் சொல்லிட்டானே -ன்னு, பின்புலத்தில், க்ரூப் சேர்த்துக் கும்மியடிக்காத "குணம்";
தன் கருத்துக்களை அறிந்த பின்னும், தன் நாடகங்களுக்கு உதவி செய்த கணேச "ஐயர்" - அவர் பால் நன்றி மறவாத "குணம்"!

"குணம்" நாடிக்,  குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி, மிக்க கொளல்!

கருத்து வேறு/ மனிதம் வேறு என்ற "குணம்"! = M.R.ராதா "குணம்"!
வாழ்க அவர் இன உணர்வும், தமிழ்-மொழி உணர்வும்!!

முழு நூலையும் வாசித்து விடுங்கள்! - ஒங்களுக்கு மிகவும் பிடிச்சிப் போகும்:)
Read more »

Thursday, August 01, 2013

ஒர் ஈழத் தமிழனே= உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை!

Xavier தனிநாயகம் அடிகள்!
= இந்த "ஈழத் தமிழரின்" நூற்றாண்டு விழா.. நாளை (Aug 2 - 2013)

யாருய்யா இவரு?
= நமக்குத் தெரியுமா?
= தெரியலீன்னாலும் பரவாயில்லை; தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கா? - நல்ல தமிழுக்கு உழைத்த நல்லோர் பற்றி?
மறைந்த நடிகை மஞ்சுளா அவர்களின் மருமகன் = "இயக்குநர் ஹரி" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறோம்!
கலைஞரைப் பிடிக்காதவர்கள் கூட, அவர் பேரன் பேரு = "ஆதித்யா" -ன்னு தெரிஞ்சி வச்சிக்கறாங்க;
ஆனால்,  Xavier தனிநாயகம் அடிகள்??

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் - பாரதி

2000+ ஆண்டுக்கு முன்னுள்ள தொல்காப்பியத்  தமிழ் /  ஓசை நுட்பம் -ன்னுல்லாம் நாமளே பேசிக்கறோமே?  ஆனால் உலகம் பேசுமா???

பக்கத்தில் இருக்குற "தெலுங்கானா" நண்பன் கூட ஒத்துக்க மாட்டான் = தமிழ் 2000+ yrs முன்னுள்ள மொழி-ன்னு:)
ஆனா, "வேதம்" -ன்னு ஒசத்தியாப் பேசுவான்;
Vedas -ன்னு வெள்ளைக்காரனும் பேசுவான்! Power of Religious Marketing:)

ஆனால், தமிழையும், அப்படிப் பேச வைத்தவர் = ஒர் "ஈழத் தமிழர்"!



தமிழைத், தமிழகத்துக்கு வெளியேயும் பரவச் செய்ததில் பெரும் பங்கு! = Xavier Thanai Nayagam AdigaLar!
கிறிஸ்துவர் என்பதால், "அயல் நாட்டவர்" -ன்னு முடிவு கட்டிறாதீக! இவர் தாய் மண் = தமிழ் ஈழம் தான்!


* இராபர்ட் நொபிலி (Robert De Nobile - Italy)
* சீகன் பால்க் (Ziegenbalg - Germany)
* வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi - Italy)
* கால்டுவெல் (Robert Caldwell - Ireland)
* ஜி.யு. போப் (G.U. Pope - Canada/ England)
* ழான் பில்லியொசா (Jean Filliozat - France) (திருமுருகாற்றுப்படை & திருப்பாவை அறிஞர்)
-ன்னு பல பேரு, தமிழகத்துக்கு வெளியே, தமிழ் ஆய்வு செய்துள்ளார்கள்!

அண்மைய அறிஞர்கள்
* கமில் சுவலெபில் (Kamil Zvelebil - Praha, Czechoslovakia)
* ஜார்ஜ் ஹார்ட் (George Hart, California, USA)
-ன்னு, அந்தத் தமிழ் ஆய்வு தொடர்ந்தது/ தொடர்கிறது...

Young Xavier Thaninayagam
ஆனால்...
தனிப்பட்ட ஆய்வில் மட்டும் நிற்காமல்,
பலரையும் திரட்டியவர் = தனிநாயகம் அடிகளார்!

இப்படித் திரட்டியதால் தான், மேலும் பலருக்கு வெளிச்சம் பரவி, "தமிழ்" என்ற வெண்கொற்றக் குடையின் கீழ், பிற நாட்டு நல்லறிஞர் ஒருங்கிணைந்தார்கள்

அப்படி, அவர், திரட்ட உருவாக்கிய ஆயுதம் = "உலகத் தமிழ் மாநாடு"


Ulaga Tamizh Maanaadu - Chennai, 1968
Arignar Anna with President Zakir Hussain, Kalaignar at the back

IATR - International Assocation of Tamil Research (உலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழுமம்) என்பதை உருவாக்கி...
பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில், Tamil Chair என்று உருவாக வழி வகுத்து...

"உலகத் தமிழ் மாநாடு" என்றொரு நிகழ்வைத் தோற்றுவித்தவரே
= சேவியர் தனிநாயகம் அடிகளார் தான்!

1966 = 1st Word Tamil Conference = மலேசியா
2nd = Chennai
3rd = Paris
4th = Yaazh paaNam (Jaffna) - துயரம் கலந்த தமிழ் மாநாடு!

அடிகளார் இறந்து விட்டார்...

5th = Madurai
6th = Kuala Lumpur
7th = Mauritius
8th = Thanjavur

{இப்படி வழி வழி வந்த வாழையடி வாழை...
அதைத் தான் கலைஞர். கருணாநிதி, தன் வசதிக்கு வரலை-ன்னு உடைச்சாரு:(
உலகத் தமிழ் மாநாடு -> உலகச் செம்மொழி மாநாடு -ன்னு புது "அவதாரம்" எடுத்தது, 2010-இல்!

"தன் வழிக்கு வரவில்லை என்றால், தன் குடியையே பிரித்தாளு"
= இதென்ன வள்ளுவர் அறமா?
= "சாணக்கியத்" தந்திரம் அல்லவா!
வடநெறிக் காவலர் ஆகி விட்டார் போலும் கலைஞர்!

தமிழினும் காமமே பெரிது என்று "மவுண்ட் ரோடு மகா விஷ்ணுக்களோடு" சம்பந்தி ஆகி விட்டவர், வேறென்ன செய்ய முடியும்?:)
நம் பதிவுக்குத் தேவையற்ற ஒன்று; அடிகளாரைப் பற்றி மட்டும் காண்போம்!}



ஈழத்திலுள்ள காவலூர் (Kayts - ஊர்க்காவற் துறை)
யாழ்ப்பாண உச்சித் தீவுகளில் -  ஹென்றி & இராசம்மா - இவர்களின் பிள்ளையாகப் பிறந்தார் சேவியர்; (Aug 2, 1913)

யாழ்ப்பாணம், கொழும்பு என்று கல்லூரிகளில் படித்தவர்..
திருவனந்தபுரம் (இந்தியா) மூலமாக, இறையியல் (Religion) படிக்க, வெளிநாடு சென்றார்;
மீண்டு வந்து, வ.உ.சி (எ) மறத் தமிழ் அறிஞனைத் தந்த, தூத்துக்குடியில் தங்கிப் பணியாற்றினார்;

அண்ணாமலைப் பல்கலையில், தமிழறிஞர் தெ.பொ.மீ உந்துதலால், தமிழிலும் பட்டம் பெற்றார்;
அப்போது எழுந்த ஆராய்ச்சிக் கட்டுரை தான் = A study of Nature in Sanga Tamizh! (சங்கத் தமிழிலே இயற்கை)

இது, amazon.com இலும் கிடைக்கிறது;  "List of English Books on சங்கத் தமிழ்" - dosa365 தளத்திலும் கொடுத்துள்ளேன் (தினமொரு சங்கத் தமிழ்);

இலங்கைக்கே மீண்டும் சென்று, பின்பு இங்கிலாந்து, மலேசியா என்று Academic Circles - சுற்றிக் கொண்டே இருந்தார் அடிகளார்;
மலேசியப் பல்கலையில், தமிழ்ப் பேராசிரியராகவும் ஆனார்;
Academic Circles எனப்படும் கல்விக் குழுமங்களில், "தமிழ், தமிழ்" என்று புதிதாக ஒலிக்கத் துவங்கியது;

அப்படி என்னய்யா இருக்கு தமிழ்ல? 
அதுவும் வெள்ளைக்காரன் கல்லூரியில் = தமிழுக்கு எதுக்குய்யா மெனக் கெடணும்?
அடிகளார் வாயாலேயே கேட்போமா?


Nobody knows Tamizh!:(

"If Latin = is the Language of Law & Medicine
French = the Language of the Diplomacy
German = the Language of Science
And English = the Language of Commerce
Then Tamil = is the Language of Bhakti & Innate Devotion

தமிழ் மொழி = இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று! 
குறிப்பாகச் சைவர்களுக்கு மட்டுமே உரியதன்று! அப்படியொரு தோற்றம், வழி வழி வந்த பண்டிதர்களால் கொடுக்கப்பட்டு விட்டது;

தமிழ் மொழி = வைணவர், சமணர், பௌத்தர், இசுலாமியர், கிறித்துவர் என சிறுபான்மைச் சமயத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி!"
என்று வீறுடன் உரைத்தவர் அடிகளார்!

தமிழ்த் திறனாய்வு (Tamil Research) என்பதில், அடிகளார், முற்றிலுமாய்த் தலை-கீழ் மாற்றங்கள் செய்தார்;
அது வரை வ.வே.சு ஐயர், டி.கே.சி போன்றவர்கள் = 1) மதம் 2) ரசனை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து, திறனாய்வுக்கு வித்திட்டனர்;

ஆனால், அடிகளார், பல நாடுகளிலும் பயின்றவர் அல்லவா? "அறிவியல் பார்வை" அவருக்கு இயல்பிலேயே இருந்தது!

சமய வெளியைத் தாண்டி வந்து... 
"அறிவியல் பார்வையில்" தமிழ்
என்று அணுகும் முறையைப் பெரிதும் ஊக்குவித்தார்; அதனால் தான், பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களில், தமிழ்க் கொடியும் பறக்க முடிந்தது;




"உலகத் தமிழ்" என்பதற்கும் வித்தினை நட்டார்!
எங்கே? = காங்கிரஸ் கோலோச்சும் தில்லி மாநகரில்! 1964!

தனியொரு ஆளாக, மத்திய அரசிடம், நேரில் சென்று வாதாடக் கூடிய மேலாண்மை பெற்ற அறிஞர்! (தன் "குடும்ப மந்திரிசபைக்கு" அல்ல)

தன் முன்னாள் ஆசிரியர் தெ.பொ.மீ,  டாக்டர் மு.வ  அவர்களுடன் சேர்ந்து..
Professor Filliozat (Paris), Prof. Burrow (Oxford),  Prof. Kuiper (Hague)
- என்று பன்னாட்டு அறிஞர்களையும், அரசின் முன் நிறுத்தி, தமிழ்த் திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார்!

அப்படி உருவானதே! = முதல் உலகத் தமிழ் மாநாடு! (கோலாலம்பூர் - 1966)


பின்பு, அறிஞர் அண்ணா நடத்திய = இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் (சென்னை - 1968)...
"தனிநாயகம் அடிகளார் (எ) ஈழத் தமிழ்க் கொழுந்து" -என்று,
அண்ணா, அவரையே மாநாட்டுக்கு முன்னோடியாய் அறிவித்தார்; தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை:)

ஒரு செயல் வீரர் போல, ஓடியாடி உழைத்துச், சென்னை மாநாட்டை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, Academic என்று வெற்றி பெறச் செய்தார்!

அதே சமயம், "அறிஞர்" என்று அடைப்புக்குறிக்குள் தங்கி விடாமல்...
 "தமிழ்ப் பெருமை" மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்று = ரசனை மிக்கதாகவும் மாநாடு ஆக்கப்பட்டது!

சென்னைக் கடற்கரையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு, திறந்து வைத்த தமிழ்ச் சான்றோர் சிலைகள், இன்றும் உள்ளன!

Some Research Papers during World Tamil Conferences:

* 1st உலகத் தமிழ் மாநாடு (கோலாலம்பூர்) = http://tamilnation.co/conferences/cnfMA66/index.htm

* 2nd உலகத் தமிழ் மாநாடு (சென்னை)
http://tamilnation.co/conferences/cnfTN68/index.htm
(ஓவியக் கலை - சங்க காலம் முதல் கம்பன் வரை - இதைத் தேடிப் படிங்க:))

* 4th உலகத் தமிழ் மாநாடு (யாழ்ப்பாணம்) = http://tamilnation.co/conferences/cnfJA74/index.htm
(தமிழ் - சிங்கள அரசர்கள் கலப்புத் திருமணம் பற்றிய கட்டுரையும் உண்டு)


தமிழ் = உலக மொழி ஆகணும்; 
(meaning: people of the world should atleast know the name of Tamizh - like Greek or Latin
They should realize, Humanity had a great culture existed & existing! = Not a Culture of Rituals, But a Culture of Heart)
அதற்கான தகுதி தமிழுக்கு உள்ளது; தமிழின் வளங்களை உலகமெங்கும் ஆங்கிலம் வாயிலாகப் பரப்ப வேண்டும் - என்பதே அடிகளார் நோக்கம்!

ஜப்பானிய/ சீன மொழிக்கும் - தமிழுக்கும் இடையில் சில ஒற்றுமை நிலவுவதைக் கூடச் சுட்டிக் காட்டியுள்ளார்;

தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்
= இவையே, தமிழில் முக்கியமான நூல்கள், என்று குறிப்பிடுவார்;

தமிழைப் பற்றிக் குறிப்பிடும் = 1335 பிறமொழி நூல்கள்; "Reference Guide to Tamil Studies" என்ற நூலாக வெளியிட்டார்; Also available on Amazon.com
------------------------------

1974 - யாழ்ப்பாண உலகத் தமிழ் மாநாட்டில் வெடித்த வன்முறை, அடிகளாரை மிகவும் பாதித்து விட்டது!
ஒடுங்கிய நிலையில், பணிகளைத் தொடர்ந்தவர் = Sep 1 1980, யாழ்ப்பாண மண்ணிலேயே மறைந்து போனார்:(
------------------------------

எனக்குத், தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் /  தமிழ்ப் "பண்டிதர்கள்" மீது, மிகப் பெரிய வருத்தம் ஒன்னு இருக்கு!
= ஈழத் தமிழ் இலக்கியங்கள், தமிழகத்தில் அறியப்படுவதே இல்லை!:(

1) பொதுவா, "சமயம் சார்ந்த", தமிழையே ரொம்பப் பரப்புவாங்க! அறிவியல் ஒத்த திறனாய்வு? = மிக அரிது! 

அதிலும், "சிறுபான்மைச் சமய" இலக்கியங்கள் அடக்கியே வாசிக்கப்படும்;
சங்க இலக்கியம்/ சிலம்பை விடக்...
"கம்பன்" என்றே தலையில் வைத்து ஆடும் "துதி" மனப்பான்மை கூட உண்டு!

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் போன்ற துதி மொழிகள் இளங்கோவுக்கு வாய்க்கவில்லை!
இளங்கோ வீட்டு இட்லித் தட்டும் இசை பாடும் -ன்னு பரப்பி இருக்கணுமோ?:))

கல்வியிற் பெரியவன் கம்பன்; அவனைக் குறை சொல்லவே முடியாது;
அவனை முன்வைத்து எழும்பும் குழு மனப்பான்மை/ துதி மனப்பான்மை மேல் தான் நம் வருத்தம்:(
= கம்பன் கழகம், கம்பன் விழா, கம்பன் தொலைக்காட்சி பட்டிமன்றப் பகடிகள்;
= ஆனா இளங்கோ மன்றம்? அப்பிடியொன்னு இருக்கா என்ன?

தேவாரம்/ அருளிச்செயல் ஏதோ ஒப்புக்கு இருக்கு!
அருணகிரியின் சந்தத் தமிழ்? = ஊகும்! அதெல்லாம் இலக்கியத்துக்குள்ளேயே வராது:(
சமணத் தமிழ் = ஊத்தி மூடியாச்சு:( மக்கள் கிட்ட போய்ச் சேராது;

2) சம்ஸ்கிருதம் (எ) வடமொழி மேல், ஒரு கீறலும் படாதவாறு செய்யும் தமிழ் முயற்சிகள் = இதை மட்டுமே, "பண்டிதர் குழு" வரவேற்கும்!

தனித் தமிழ்/ தூய தமிழ் எல்லாம், ஏதோ மறைமலையடிகள் காலத்தில் கொஞ்சம் முளைச்சி வந்தாலும்...

இன்று இணையத்தில், "திராவிட அரசியல் ஏளனம்" என்கிற பேரில், மெய்யான தமிழ் முயற்சிகளும் ஏளனமே செய்யப்படுகின்றன!:(

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை;
பண்டிதர்களே நிரம்பியுள்ள பதிப்புலகில்/ மீடியாவில், பாவாணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்கள் அறியப்படுவது அரிதே!:(

தொ. பரமசிவன் அய்யா (தொ.ப) போன்றவர்களின் தமிழ்ப் பூர்வகுடிகளின் ஆய்வு?
= நம்ம சமயத்துக்கு ஒத்து வரலை-ன்னு "தீண்டத் தகாதவர்களா" ஆக்கி வச்சிருக்கோம்:(

3) இது எல்லாத்தையும் விடக் கொடுமை 
= ஈழத் தமிழ் இலக்கியங்கள்... என்னான்னே பல பேருக்குத் தெரியாது!:(((
ஒரு நூலின் பேரைச் சொல்லுங்க பார்ப்போம்?




* சங்கத் தமிழில் = ஈழத்துப் பூதன் தேவனார் முதல்...
* நேற்றைய தமிழில் = ஈழத்து யாழிசை - விபுலானந்த அடிகள் வரை...

பொது மக்களிடம், இவர்களைக் கொண்டு சேர்ப்பதே இல்லை:(
* உ.வே. சா = பல பேருக்குத் தெரியும்;
* சி.வை. தாமோதரம் பிள்ளை? = தெரியுமா??? ஈழத் தமிழர்!

உ.வே.சா = இலக்கியம் திரட்டினாரு-ன்னா
சி.வை.தா = இலக்கணம் திரட்டினாரு!

தொல்காப்பியம் / நன்னூல் -ன்னு, இன்னிக்கு இருக்குற எல்லா இலக்கண நூல்களையும் திரட்டியவர் இவரே;
"உரை நூல்கள்" கூடச், சுவடி சுவடியாத் தேடிப் பதிப்பிச்சாரு!

ஆனா, நம்மில் எத்தனை பேருக்கு...
சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியும்??? = உ.வே.சாமிநாத ஐயர் மட்டும் தெரியும்!

{இப்படிச் சொன்னதுக்காக, ஒடனே சிலர், என்னிடம் கோபிக்க வரலாம்/ வந்துள்ளனர் = "பாப்பானைத் திட்டியாச்சா? You go... so Low"

ஆனா.. முருகனுக்கும், என் மனசாட்சிக்கும் தெரியும்; என் அந்தண நண்பர்கள் பலருக்கும் என்னை "மானசீகமாகத்" தெரியும் = How Low I am:))
ஒரு சொல்லு மேலே விழுந்துறாம, அவரவர் சொந்தப் பிடித்தங்களை யெல்லாம் , நான் பாத்துப் பாத்து எழுதணும்-ன்னா.... ரொம்பவே கஷ்டம்}

தமிழ் = பிறப்பால் வருவது அன்று!
தமிழுக்கு, மனதார நல்லது நினைப்போர் யாவரும்...
= பிராமணர்கள் உட்பட = அனைவரும் தமிழர்களே!

* உ.வே.சா = தமிழ்த் தாத்தா! அவர் காலடியில், என்றென்றும் நான் வீழ்ந்து வணங்குவேன்!
* சொல்ல வருவது என்ன-ன்னா.. அதே பாடுபட்ட, சி.வை. தாமோதரம் பிள்ளைக்கு மட்டும் "இருட்டடிப்பு" ஏனோ?
All you need is, "networking" of samasthana vidwans & tamil pundits??? Lobbying is the best!:(
உ.வே சா & சி.வை.தா

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= இது பற்றிப் பொது மக்களிடம் எடுத்துச் செல்லும் தமிழ்ப் பண்டிதர்கள்/ ஊடகங்கள் மிகவும் குறைவு
= அப்பறம் எப்படி, ஒரு தலைமுறைக்கு, "ஈழம் = தொப்புள் கொடி உறவு" -ன்னு உணர்வு மட்டும் வரும்??

ஈழத் தமிழ்ப் பங்களிப்பு 
= செய்யாததை விதந்தோதச் சொல்லலை!
= ஆனா, உ.வே.சா  தெரிந்து, சி.வை. தாமோதரம் பிள்ளை தெரியலை-ன்னு இருக்கலாமா?

"உலகத் தமிழ் மாநாடு" -ன்னு
தமிழ்க் கொடி பறக்க விட்டதே = ஓர் "ஈழத் தமிழன்" தான்டா!

அவர் நூற்றாண்டு அடக்கி வாசிக்கப்படுகிறது;
அவர் விழாவில், கிறிஸ்துவர்கள் தென்படும் அளவுக்கு, "தமிழ்ப் பண்டிதர்கள்" தென்படுவதில்லை:((
வெளிநாட்டு விழாக்களை விடத் தமிழ் நாட்டு விழாக்கள் மிக மிகக் குறைவு:(

அதான், ஆத்தாமையில் எழுதினேன்!
சேவியர் தனிநாயகம் அடிகளார் வாழ்க! = அவர் நூற்றாண்டு வாழ்க!
http://thaninayagamadigalar.com
Read more »

Thursday, July 25, 2013

தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள்!

70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்!

அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)
கந்தன் கருணை,  தெய்வம், 
திருவருள்,  துணைவன், 
வருவான் வடிவேலன்,  முருகன் அடிமை, 
கந்தர் அலங்காரம்,  வேலும் மயிலும் துணை etc etc... so many murugan films!

தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்!
சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி. நாகராஜன் & கே. சங்கர் = மற்றொரு காரணம்!

எம்.ஏ. திருமுகம் & ஆர். தியாகராஜன் போன்ற இயக்குநர்களையும் சொல்லி ஆகணும்!
இவர்கள் அனைவரும், ஒரு தலைமுறைக்கே, "முருக அலை" கொண்டு மனம் வருடினார்கள்! சினிமா (எ) மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம்!

இதில் பலவும், "புராணக் கதைகள்" தான் (உண்மை அற்றவை);
தமிழ்க் கடவுளாம் முருகனின், "தமிழ்த் தன்மையை" உணர்த்தாது, சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த "கதைகளே"!

எனினும், காட்சியின் பிரம்மாண்ட விரிவால், சினிமா மூலமாக, முருகனைக் கொண்டு சென்றது!
சினிமா வாகனம், மயில் வாகனத்தை விட வேகம் அல்லவா?:))

இன்னிக்கும் பலருக்கு...
மனத்திலே, முருகன் மாயம் செய்கிறான் என்றால்...
= சிறு வயதில் பார்த்த, இந்தச் சினிமாக்களின் பங்கு மிக மிக உண்டு!



நமக்கு, மெய்யான சங்கத் தமிழ்த் தரவுகள், அதிகம் தெரியாது!

அதியமான் காலத்து ஒளவை, எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
அப்படீன்னா, அதியமானுக்குப் பின்னால் தான் (2nd Century, After Christ) , முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))
இந்த "Logic" எல்லாம் சினிமா முன் = செல்லாது; செல்லாது:)

சங்கத் தமிழ் முருகன் = நடுகல் தொன்மம்! 
பூர்வ குடிகளின் தொன்மம்!
அதுவொரு அரும் பெரும் மரபு; "இயற்கை வழிபாடு"! அவ்வளவே!

இதர "புராணக் கதைகள்" = வடமொழி ஆதிக்கத்தால் வந்தவை;
= வீரபாஹூ!
(பாஹூ = தோள்; சுந்தர பாஹூ = அழகிய தோளன்); கஜபாஹூ (கயவாகு) -ன்னு ஒரு சிங்கள மன்னனைச் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டும்;

ஆனா, வீரபாஹூவை -> வீரபாகு -ன்னு ஆக்கி, அவனைத் "தமிழ் வீரன்" -ன்னு காட்டிக் கொண்டு இருக்கிறோம்!
சம்ஸ்கிருத புராணத்தை வைத்தா, "தமிழ்க் கடவுள்"-ன்னு நிலைநாட்டுவது?:))

ஐயகோ முருகா!:(
-----------

திருவிளையாடல் கதையும் இப்படியே!
"கொங்கு தேர் வாழ்க்கை" எனும் எழிலார் சங்கத் தமிழின் மேல் "ஏற்றப்பட்ட புராணம்"!

பொண்ணு கூந்தலை மோப்பம் புடிச்ச "செண்பகப் பாண்டியன்" வரலாற்றிலேயே இல்லை:)
நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன் (இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்)


“அ முதல் ஹ” = 48 சம்ஸ்கிருத எழுத்து; அவையே 48 சங்கப் புலவர்கள் ஆச்சாம் (கபிலர்/பரணர்...)
அவங்க கூட, சிவபெருமானே 49-வதா, சங்கத்தில் உட்கார்ந்தாராம்! சொல்லுறது: அதே “தருமி-திருவிளையாடல்” தான்!:)

So..., சங்கப் புலவர்களுக்கே 
= சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(

Proof: திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி

சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி,
அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை!
(- சங்கப் பலகை கொடுத்த படலம்; தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்)

அடக் கொடுமையே! ஒரு சைவத் "தமிழ் இலக்கியமே", தனக்கு வடசொல்லு தான் மூலம்-ன்னு சொல்லுதே!:(

இங்கு வந்தமர்ந்து, தமிழில் "பாண்டித்யம்" பெற்று, இங்கேயே மாற்றி எழுதும் சில தமிழ் "வாத்திகள்"!
அதை உணராது... "இழிவையே பெருமை" -ன்னு, நாமும் "இலக்கியம்" பேசிக் கொண்டு வாழ்கிறோம்!

Let mythology be mythology! No issues!
But to mix it on living Tamizh Poets & harming Tamizh = A Big NO!

இதே, ஒரு வடமொழி இலக்கியத்திலாச்சும், தமிழ் போய் "ஏத்தி" இருக்கா?
அ முதல் -ன் வரை 30 எழுத்து; இந்த முப்பது  தான் முப்பது-முக்கோடி தேவர்கள் ஆச்சு!
ஆய்த எழுத்து தான் "ஆயுத மோகினி - விஷ்ணு பகவான்" ஆச்சு -ன்னு நாம ஏத்தி இருக்கோமா?

ஏன், தமிழுக்கு மட்டும் இப்படியொரு நிலைமை?:(
* "மதி மயக்கம்" கூடத் தீர்ந்து விடும்
* "மத மயக்கம்" - தீரவே தீராது!


(குறிப்பு:  மேற்சொன்னவை அவரவர் மனசாட்சிக்கான கேள்விகளே!

நாம, இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது; So called "தமிழ் இலக்கியத்தில்" உள்ளதைத் தானே, படமாக எடுக்கிறார்கள்?
தமிழ் இலக்கியத்தில், "புராணத்தை" நுழைத்தது, அவர்கள் பிழை அல்லவே!)

நாம சினிமாவுக்கு வருவோம்! 
KBS amma = both in Sumangali form & Immaculate form!

முருகன் படங்களில் கோலோச்சிய குரல் = KBS Amma (எ) கே.பி. சுந்தராம்பாள்;
அம்மாவின், காதல் வாழ்வு பற்றிய என் தனிப்பதிவு இங்கே = http://murugan.org

KBS = முருக இசை ஊற்று என்றால்...
மூவர் அணி = TMS, Susheelamma, Seergazhi... முருக இசை அருவிகள்!

இவர்களோடு, வாரியார் சுவாமிகளே, இந்தப் படங்களில் தோன்றி நடித்தார்..
* சில படங்களில் முன்னுரை மட்டும்!
* துணைவன் படத்தில் பலப்பல காட்சிகள்! - அன்றாட வாழ்வில் வருவது போல் வருவாரு;
புராணப் படமாய் இல்லாம, அன்றாட வாழ்வில் "முருக-அன்பு" சொல்லும் படங்கள், எனக்குப் பிடிக்கும்!

பல பின்னாள் முருகன் படங்களில் = AVM Rajan தான் கதை நாயகன்!

அட, MR Radha அவர்களே முருக பக்தனா வேசங் கட்டி இருக்காரு;
வேலும் மயிலும் துணை -எனும் படத்தில், பகுத்தறிவுப் பேச்சாளராத் தோன்றி, முருகனை ஒரு கலக்கு கலக்கி எடுப்பாரு:)

கந்தர் அலங்காரம் -ங்கிற படத்தில், "லொள்ளு கதா காலட்சேபம்" செய்யும் முருக பக்தர்:)

ஆதி தேவனின் மைந்தா நமோ நமோ!
ஆறு வீட்டுக்கு  ராஜா  நமோ நமோ!:)) - Remix of MR Radha!

May be under this inspiration, I wrote in a birthday post: முருகன் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)
கோ= அரசன்; கோக்கோ= அரசர்க்கு அரசன்
வேல் பிடிச்சா= வேலா; ஆண்டிக் கோல் பிடிச்ச = கோலா:)
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா!:) Sorry muruga chellam! Love u honey:)

வாலிப முருகன் -ன்னா = அது எப்பவும், சிவகுமார் மட்டுமே!
குழந்தை முருகன்-கள் = மாஸ்டர் ஸ்ரீதர் (அ) பேபி ஸ்ரீதேவி;

I like Sridevi! Master Sridhar will talk too much:)
I deeply wish, if my dearest "Silk" had acted in a Murugan Role:)
வேல் ஒத்த கண்ணாள்!
ஆனா, முருகனே விரும்பினாலும், ஆச்சார சினிமாக்காரங்க விட்டிருக்க மாட்டாங்க:( 

முருகன் செய்த புண்ணியம் = அவனுக்கு 3 இசை மேதைகள் வாய்த்தார்கள்!
= கேவி. மகாதேவன், எம்.எஸ்.வி, குன்னக்குடி
இவர்கள் இசையில் தான், முருகனின் கொடி, பட்டொளி வீசிப் பறந்தது!

இறுதியாக ஆனால் உறுதியாக...
= கண்ணதாசன் & வாலி!
இவர்களின் முருக வரிகள், மனத்திலே முகவரிகள் போட்ட வரிகள்!

இன்றைய தேதிக்கு, இப்படியொரு முருகச் சினிமா வருமா?
ரொம்பக் கஷ்ட்ட்ட்டம்:) Jai Ho!
அப்படியொரு கூட்டணி அமைய, முருகன் மனசு வச்சாத் தான் உண்டு!



இன்றைய பாடல் = "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே"!

திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
தேவரின் மருதமலையைச் சிறப்பித்தென்றே வந்த படம்!

தேவர் பிலிம்ஸ்! சீர்காழி-குன்னக்குடி இருவருமே தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் படத்தில் தோன்றி, மருதமலை பற்றிப் பேசுமாறு ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! "முருக வெறியர்" -ன்னு கூடச் சொல்லலாம்! :) நல்ல குரல் வளம் அவருக்கு!
அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க...
வெறும் பாடகர் AVM ராஜன் -> பெரும் பாடகர் ஆகி விடுகிறார்! 

* ஒன்று வந்தால் -> இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்!
* ஆனால் "மனத்தால் மெய்யான" அன்பர்கள்??

AVM ராஜன் "காதலை" விடவே இல்லை! பழசை மறக்கவில்லை!
அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்! முன்பு, கோவிலில் பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி!

பூக்காரி -> புதுக்காரி ஆகி விட்டாள்!
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!

முருகன் Vs ஆசை -ன்னு வந்துட்டா...
முருகனா முக்கியம்? தத்தம் "ஆசை" தானே முக்கியம்?:)

* முருகனையே எண்ணிக் கைப் பற்றியவன் *
*  பணத்தின் எண்ணிக்கை பற்றுபவள்
இவர்கள் உறவு முறிந்ததா? = முருகன் "முறிப்பானா"??

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக -ன்னு தயவு செஞ்சி சொல்லாதீங்க; என் முருகன், யார் குடியும் கெடுப்பவனோ/ முறிப்பவனோ அல்லன்!
அவன் மனது வைத்தால்.... நடவாதனவும் நடந்திடாதா?
இசையாதனவும் இசைந்திடாதா? = பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
-ன்னு அத்தனையும் TMS-இன் கணீர்ச் சொத்து!

சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை -ன்னு பாடி இருப்பாங்க!
சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்! இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்...
= உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... 
= ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என்ன?.... நம்மை "அதிகாரம்" செய்யுற Autocratஆ முருகன்?
அல்ல!
இந்த "அதிகாரம்" = திருக்குறளின் "அதிகாரம்" / சிலப்"பதிகாரம்" போல..

ஒவ்வொன்றும் நமக்காக பார்த்துப் பார்த்துச் செய்யும் அதி-காரம் இல்லா அதிகாரம்!
= கதிகாரம்! விதிகாரம்!
= அவனே எனக்குப் பதியான பதிகாரம்!
என் உடம்பு/உள்ளம்; அதிகாரம் = "அவனுக்கே"!

பாடலின் வரிகளை, Murugan (Cinema) Songs வலைப்பூவில் காணுங்கள்! = Here

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... 
தமிழ்ச் சினிமாவிலும் = உந்தன் அரசாங்கமே!
Read more »

Friday, July 19, 2013

எவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!

அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அதென்ன "வாழ்ந்தவர்"? ...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!

அவர் பொன்னுடலுக்கு மட்டும்..நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!
Hey Raam - Vaali


முன்பொரு முறை... ஒரே மாசத்துல... பாடகி சொர்ணலதா மறைந்தார்; இசையமைப்பாளர் சந்திரபோஸ் மறைந்தார்!

அது சமயம், அஞ்சலிப் பதிவு கூட என்னால எழுத முடியல!

அது போன்ற துன்பமே இப்போதும்!
அடுத்தடுத்து... மணிவண்ணன், TMS, வாலி -ன்னு...


iLayaraja - iLaya vaali

வாலியிடம் எனக்குச், சிற்சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டென்றாலும், மாறுபட்ட தமிழ் என்பது கிடையவே கிடையாது!

அவரின் அரசியல் சார்ந்த "துதி நடை" தவிர்த்து..
அவரின் கவிதை ஒவ்வொன்றிலும் தனித்துத் தெறிக்கும் = "சொற்செட்டு"!

பற்செட்டுக் கிழவனும், பக்கோடா தின்ன வல்ல நற்செட்டு!
விற்செட்டாம் தமிழ் வில்லில்...
வீறிட்டுக் கிளம்பும் சொற்செட்டு! = அதுவே வாலி!

** கண்ணதாசன் பாட்டில் = "கருத்தழகு" = தானாக வந்து விழும்
** வாலியின் பாட்டில் = "சொற்செட்டு" = தானாக வந்து விழும்

இரண்டுமே, மனத்தைக் குத்தி நிக்கும்!


எவனோ "வாலியாம்"!  -  பதிவின் தலைப்புக்கான கதை:

அப்போ தான், வாலி புகழ் பெற ஆரம்பிச்சிருக்கும் வேளை...
ஆனா, சென்னையில், இந்த "மூஞ்சி" தான் வாலி-ன்னு, பல பேருக்குத் தெரியாது!

உறவினர் ஒருவரின் வற்புறத்தலால், புதுசா அடைஞ்ச புகழை வச்சி...
சி.எஸ்.ஜெயராமன் என்ற பிரபல பாடகரை அணுகி... (வீணைக் கொடி உடைய வேந்தனே  fame)...
திருச்சியில் ஒரு கச்சேரிக்கு, அழைத்து வருமாறு ஏற்பாடு! வாலி, அவரைக் காரில் அழைச்சிக்கிட்டு வராரு..


பயணத்தில், சி.எஸ்.ஜெயராமன் சில பாடல்கள் பாட... வாலி, அதன் இராகங்களை எல்லாம் கண்டுபுடிக்க... ஒரே கும்மாளம் தான்!

வாலியின் இசை அறிவை வியந்த ஜெயராமன்..
"ஒங்களுக்கு என்ன தம்பி வேலை?" -ன்னு கேட்டு வைக்க...
-எமக்குத் தொழில் கவிதை-
"பாட்டெழுதும் வேலை" -ன்னு வாலியும் சொல்லி வைக்க...

(சினிமா அல்லாத Album Songs எழுதறவங்க பேரு = பரவலாக வெளியில் தெரிவதில்லை!
"உள்ளம் உருகுதய்யா" பாடலை எழுதியது ஒரு பெண்மணி = ஆண்டவன் பிச்சை -ன்னு பேரு; நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?)

"கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" போன்ற Murugan Album Songs எழுதியது இந்தத் தம்பி தான் -ன்னு அறிந்து கொண்டார் ஜெயராமன்;
ஆனால் அதே தம்பி  தான் "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்"   பாட்டையும் எழுதியது -ன்னு தெரியாது ஜெயராமனுக்கு!

"தம்பீ, ஒங்களுக்கு நல்ல தமிழில், நல்லாப் பாட்டெழுத வருதே! நீங்க சினிமாவுக்கு வரலாமே?
ஒன்னுமே தெரியாதவனெல்லாம், கண்ட தமிழில் எழுதித் தள்ளுறானுங்க!...
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" -ன்னு அரசியல் கலந்து எழுதுறானுங்க!

எவனோ வாலியாம்! மட்ட ரகமா எழுதறான்! 
புது ஆளு -ன்னு இந்த MSV, போயும் போயும் அவனைச் சேத்துக்கிட்டு இருக்காரு!..."

இதைக் கேட்ட வாலிக்கு, செம Shock! :)
ஜெயராமனுக்கோ, அவரு தான் வாலி -ன்னே தெரியாது!:)

பயணத்தில், இது பத்தி மூச்சே விடாம,
திட்டு வாங்கிக்கிட்டே வாலி தொடர...

ஊரு வந்து இறங்கிய போது, அனைவரும் "வாலி வாலி" எனக் கொண்டாட...
சி.எஸ்.ஜெயராமன் + வாலி = ரெண்டு பேரு மூஞ்சியும் பாக்கணுமே!:)))

குபுக் -ன்னு சிரிச்சிட்டாங்க, ரெண்டு பேரும்! ஜெயராமன், வாலியின் கையைப் பற்றிக் கொண்டு..
"முன்னாடியே சொல்லி இருக்கலாம்-ல்ல தம்பீ? 
காவிரித் தண்ணிக்கு எப்பமே குசும்பு ஜாஸ்தி" -ன்னு இடிச்சாராம்:)

= இதான் வாலி! 
"ஒரு கருத்து சொல்லிட்டானே" -ன்னு மனசுள் கறுவாத குணம்! = Legends are Legends!


All Young - MSV, Vaali, P Susheela, TMS!
Vaali has that "inquisitive" face, always!:)

வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்";
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;

* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...

(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே: 
சில திருப்புகழ்ப் பாடல்களை விட.. வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்.. ஏனோ என் உள்ளத்தை.. உருக்கி எடுக்கும்!)

அதுவே இன்று...
முருகன் (சினிமா) பாட்டு வலைப்பூவில் = வாலி அஞ்சலி!
கண்ணன் (சினிமா) பாட்டு வலைப்பூவிலும் = வாலி வணக்கம்!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி



எல்லாருக்கும் தெரிந்த தகவல் = குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
அது மட்டுமில்லை! இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி = "குழந்தைக் குரல்" பாட்டுக்கென்றே சொந்தமானவரு தமிழ்ச் சினிமாவில்!

ஆனா, இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;

என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அணைத்த அவன் கையும் கோத்துக்கிட்டு.. அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!

= வாலி (வலி) வரி!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

கருணையே இல்லையாடா முருகா? =  (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும்  நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!

இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP