கருணாநிதியின் "English" புத்தகம் - Tale of the Anklet!
அதாகப்பட்டது.... கலைஞருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் -ன்னு Blogger Draft-இல் எழுதி வச்சேன்; ஆனா...
"குமரி நீ; இமயம் நீ - மூன்று குமரி மணந்த சமயம் நீ" -ன்னுல்லாம் என்னால "கிவியரங்கம்" பாட முடியாது:)
காதல் முருகனையே, நான் அப்பிடியெல்லாம் புகழ்ந்து பாடினது கிடையாது; என் இரத்தத்துல அப்பிடியொரு haemoglobin இல்லை:)
அதனால்... ஒரு நாள் கழிச்சி, இந்த வாழ்த்துப் பதிவு;
"என்னாது? கலைஞர் English-லல்லாம் புத்தகம் எழுதுனாரா"? -ன்னு ஒங்க மூக்கு மேல Mouse வைக்காதீக;
= Tale of the Anklet & One Act Plays - Muthuvel Karunanithi - Macmillan Publishers (1968)
இந்த நூலுக்கு, அறிஞர் அண்ணா அளித்த, அழகான ஆங்கில அணிந்துரை; அதன் ஒரு பகுதி கீழே: (படம் புடிச்சித் தான் போட முடிந்தது; Image, not text)
சென்னை - 2 ஆம் உலகத் தமிழ் மாநாடு (1968) ....
கலைஞர் தமிழில் எழுதிய "பூம்புகார்" நூலின் ஆங்கில ஆக்கத்தை, வெளிநாட்டு விருந்தினர்க்கு அளிக்க ஒரு முயற்சி நடந்தது;
அப்போ வெளி வந்ததே, இந்தப் புத்தகம் = Tale of the Anklet, translated by டாக்டர். ந. சஞ்சீவி.
இதெல்லாம் நடந்தது, நான் பொறப்பதுக்கும் முன்னால..
ஆனா... டாக்டர் சஞ்சீவியின் பேரன், நான் படிச்ச பள்ளியில் தான் படிச்சான்;
வகுப்பில் என் தமிழ் உரையாடல்களைக் கண்டு பயந்துட்டானோ என்னமோ?:) என் மேல கொஞ்சம் அதிக பாசம் அவனுக்கு:)
கலைஞர், நினைவொப்பம் (autograph) இட்டு... அவன் தாத்தாவுக்கு அளித்த நூல்!
= அதைக் கொண்டாந்து, எனக்குப் பரிசாக் குடுத்துட்டான்;
இன்னும் நல்லா நினைவிருக்கு; அந்தப் புத்தகத்தின் Layout & Print Aesthetics!
அருமையான சிலப்பதிகார ஓவியங்கள்...
Export Quality என்ற அளவுக்குச் செஞ்சிருப்பாங்க!
அதில் இருந்து தான், இன்றைய பதிவின் கருப்பொருள்
= இளங்கோவின் சிலப்பதிகாரத்திலே, மு.கருணாநிதி செய்த "மாற்றங்கள்"!
1. கிரேக்க வாணிகன்: Kalaignar's Dagaldi:)
கோவலன், "அந்தச்" சுகம் வேண்டி, மாதவியின் இல்லத்துக்குப் போகலையாம் = சொல்வது கலைஞர்:)
மன்னன் கொடுத்த மாலையை, 1008 கழஞ்சுக்கு, வயதான ஒரு கிரேக்க வாணிகன், ஏலம் பேசுகிறான்;
இனி, மாதவி அக் கிழவனின் கையில்! மாதவி அழுகிறாள்!
அந்தக் கிரேக்க வணிகனிடம் இருந்து காக்கவே, அதை விட அதிகமான தொகை கூறி, மாதவிக்கு "விடுதலை" பெற்றுத் தருகிறான் கோவலன்;
மற்றபடி, கோவலனுக்கு ஆசையெல்லாம் இல்லை:)
= இதுவே கலைஞரின் சித்திரம்;
ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
மாதவி ஏலத்துக்கே வரவில்லை; அவள் தாய் சித்திராபதி தான், ஒரு கூனியிடம் மாலையைக் குடுத்து அனுப்புறா; No Greek Merchant at all;
வீதியில் இதைக் கண்ட கோவலன், மாதவியின் ஆடல் மயக்கத்திலே, தானே வலிந்து 1008 கழஞ்சு குடுக்கிறான்; கூனியோடு, மாதவி இல்லம் புகுகின்றான்;
இந்த “முன்-ஏற்பாடு”ல்லாம் அறியாத மாதவி, வீட்டுக்கு வந்த "பெருமகன்" கோவலனின் இசையிலே, உடனேயே "காதல்" கொண்டு விடுகிறாள்;
மாதவியின் குணநலன் = உயர்வே!
பரத்தையே ஆயினும், இவள் கற்பு நெறியுள்ள "இல்-பரத்தையே";
* கற்பு = உடல் சார்ந்தது அல்ல!
* கற்பு = மனம் சார்ந்தது, ஆண், பெண் இருவருக்கும்!
அதான், தமிழின் தலைக் காப்பியங்கள் இரண்டுமே,"பரத்தை"யைத் தலைவியாக வைக்கும் "துணிவு"
* சிலம்பிலே: பரத்தை= கதையின் 2ஆம் தலைவி
* மணிமேகலையில்: Illegitimate Child= தலைவி
இளங்கோவே, இயல்பை, இயல்பாத் தான் சொல்லி இருக்காரு; அதை எதுக்குக் கலைஞர் மாத்தி, கோவலன் மேல் "புனிதம்" ஏத்தினாரோ? "ஆண்டவனுக்குத்" தான் வெளிச்சம்:)
2. கண்ணகி தான், கோவலனை, மாதவி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்: Kalaignar's Dagaldi:)
கலைஞர் சொல்வது: "விடுதலை" பெற்றுத் தந்த பின், கோவலன் விடை பெற்றுக் கொள்ள...
மாதவி, கோவலன் நினைவாகவே இருக்கிறாள்; (மணமானவன் என்று அறியாள் போலும்)
அதனால், கண்ணகியே - "நல்லாள் ; கலை வல்லாள் - அவளுக்குப் புரியும் படிச் சொல்லி விட்டு வாருங்களேன்" -ன்னு அனுப்புகிறாள்;
"அறிவுரை" கூறச் சென்றவன், தெரியாமல் "கலையுரை"யில் கரைந்து விட்டான்:)
ஆனால், இளங்கோ சொல்வது என்ன?
கோவலனே ஆசையில் வலிந்து செல்கிறான்; பின்பு வலிந்து பிரிகிறான்;
விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
... மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
....
கோவலன் வாங்கி, கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி - தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன்
மாதவி (எ) நங்கை நல்லாள்;
அவ பாடும் காவேரிப் பாட்டில் கூட ”உள்ளர்த்தம்” தேடினால், பாவம், அவ என்ன தான் பண்ணுவா? அன்பைப் புரிந்து கொள்ள இயலாத ஆணாதிக்கம்:(
3. பொற்கொல்லன் = நல்லவன்: Kalaignar's Dagaldi:)
பொற்கொல்லன் ஒருவனின் செய்கையால், மொத்த பொற்கொல்லர் சமுதாயமே பழியைச் சுமக்கணுமா?
தற்கால நோக்கில்... பொற்கொல்லர் சாதி (விசுவகர்மா) என்று குறிப்பு கலைஞரின் கண்ணுக்குப் படுகிறது போலும்;
ஆதலால், யாரோ ஓர் அரண்மனைக் காவலாளி, சிலம்பு திருடினான்-ன்னு மாற்றம் செய்யறாரு கலைஞர்; பரவாயில்லை, இதை மன்னிச்சி விட்டுறலாம்:)
ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
வஞ்சிப் பத்தனான பொற்கொல்லனே வஞ்ச மனத்தான்;
(பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி..
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்)
இன்னொரு "கொடுமை" பிற்பாடு நடக்கிறது;
இறந்த பாண்டியனின் தம்பி, வெற்றிவேற் செழியன் மன்னன் ஆகிறான்;
நாட்டில் மழை இல்லை;
"பத்தினித் தெய்வ சாபம்"-ன்னு, அந்தண மறையோர் சொல்லச் "சாந்தி" செய்கிறான்; என்ன சடங்கு? = 1000 பொற்கொல்லரைப் பலி குடுத்தல்:(
இதை இளங்கோவடிகள் சொல்லலை;
யாரோ சாஸ்திர/ சம்பிரதாயக்காராள், இப்படிச் "சாந்தி ஹோமம்" -ன்னு எழுதி, "உரைபெறு கட்டுரை" -ன்னு பேரு கொடுத்து, சிலம்புக்கு முன்னுரை போல் "சொருகி" விட்டார்கள்:(
அடப் பாவிங்களா! அதான் கண்ணகியே, "தென்னவன் தீதிலன்; என் தந்தை போல்" -ன்னு பிற்பாடு சொல்லுறாளே; அப்பறம் என்னய்யா பரிகாரம்/ ஹோமம்?
இதைத் துடைக்கத் தானோ என்னவோ, "பொற்கொல்லன் நல்லவன்" -ன்னு கலைஞர் மாத்தினாரோ? நான் அறியேன்;
4. சிலம்பிலே = முத்தா? மாணிக்கமா?
இளங்கோ காட்டும் காட்சி:
அரசியின் சிலம்பைக் கொணரச் செய்து, தருக எனத் தந்து, அத்தனை பேரின் முன்னேயும் உடைக்க...
முதல் உடைப்பிலேயே மாணிக்கப் பரல்கள் தெறிக்கின்றன; Instant! தலை கவிழ்ந்த மன்னன், தலை நிமிரவே இல்லை:(
"தருக எனத் தந்து, தன் முன் வைப்ப,
கண்ணகி அணி மணிக் , காற்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய் முதல், தெறித்தது மணியே...
யானோ அரசன்? யானே கள்வன்!
கலைஞர் சொல்வதோ: முத்துப் பரல்கள் முதலில் தெறிக்க.. "பார்த்தாயா, என்னமோ பெருசா பேசினியே"? என்று பாண்டியன் பரிகாசம் செய்ய....
பாவம் கண்ணகி; "ஒன் பொண்டாட்டியின் அடுத்த சிலம்பையும் உடை" -ன்னு விடாப்பிடியா வாதாடுறா; அடுத்த உடைப்பில் தான் மாணிக்கம் தெறிக்குது!
"இன்னும் உன் சந்தேகம் தீரலையா? இதோ பார், என் கையிலிருக்கும் இன்னொரு சிலம்பும் உடைக்கிறேன்"
-ன்னு ”கலைஞரின் கண்ணகி” உடைக்க, அதிலும், மாணிக்கமே தெறிக்கிறது!
------------
பாண்டியன், இப்படியெல்லாம் வாதாடுறவனா? = அல்லவே! அப்படி வாதாடி இருந்தா, தன்னை Easy-ஆ காப்பாத்திக்கிட்டு இருக்கலாம்;
கலைஞரைப் போல்... மலிவு விலை மதுவுக்கு, பக்கத்து மாநிலப் புள்ளி விவரமெல்லாம் குடுத்து escape ஆவது போல்:)
கன்றிய கள்வன் கையது ஆகின்,
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ என
Pls to Note: ஆகின் is the keyword! "கள்வனா இருந்தான் **ஆகில்**, "கொன்று கொணர்க" -ன்னு தான் சொன்னேன்;
என் படைவீரன் சரியா விசாரிக்கலை; அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"
- இப்படியெல்லாம் பாண்டியன் வாதாடலை;
- மாணிக்கம் தெறிச்ச மாத்திரத்தில் மானமும் தெறிச்சிப் போயிருச்சி அவனுக்கு:(
(On the spot killing = Not in Justice!
விசாரிப்பது அரசவையின் வேலை; படைவீரன் வேலையல்ல -ன்னு பாண்டியன் மனசாட்சிக்குத் தெரியும், இளங்கோவுக்கும் தெரியும்; கலைஞருக்கு?:))
------------
* ஆக, இளங்கோ உடைத்தது = ஒரு சிலம்பே! (Instant)
* ஆனால் கலைஞர் உடைத்தது = மூன்று சிலம்பு:)
அப்போ, நாலாவது சிலம்பு எங்கே?
= அது பொற் கொல்லன் வீட்டில் இருக்கலாம்; யாருக்குத் தெரியும்? நாடகக் காப்பியம் போற வேகத்தில், அதையெல்லாம் இளங்கோ காட்டலை;
ஆனால், கலைஞர், அந்த நாலாவது சிலம்பையும் விட்டு வைக்கலை;
கணக்கு வழக்குல கெட்டிகாரரு ஆச்சே!:)
அரண்மனைக் காவலன் மேல் பழி போட்டவரு, அரண்மனை எரியும் போது, அவன் மாட்டிக் கொள்ள..அவனோடு, அவன் களவாடிய சிலம்பும் எரிந்து விடுவதாகக் காட்டுறாரு!
5. முலை:
ஆற்றொணாத் துயரத்தால், முலை மேல் அடிச்சி, திருகினாள் -ன்னு இளங்கோவின் சித்திரம்;
அந்த முலையைக் காட்டித் தானே, முதல் இரவில், அவள் வெட்கம் போக்கினான் அவன்?
அவளையும் மீறி விடைத்த இன்பப் பொதிகள்; நாணத்தில் தயங்கினாலும், மனசுக்குள் "அடர்த்தியான" ஆசைகள் அவளுக்கும்! (தயங்கு-"இணர்க் "கோதை)
But, முலையை எறிந்ததால் தான், தீ பரவியது-ன்னு "பகுத்தறிவு அற்ற” தோற்றம் வந்துறக் கூடாது-ன்னு ...
கண்ணகியின் கையில், தீப் பந்தம் குடுத்து, பத்த வச்சிட்டார் கலைஞர்:)
ஆனா, அந்தப் பேதை, அரசியலில் Bus-க்கு தீ வைப்பது போலெல்லாம் வைக்கலை:)
ஐயோ பாவம், கண்ணகி! மெய்த்தமிழ் "தரவு" இல்லாம கலைஞர் பண்ணின கூத்து இது:(
பெரும் துன்பத்தில் மாரில் அடிச்சிக்கிட்டு அழுவது வழக்கம் தான்;
அப்படித் தான் அவ முலையை விட்டா-திருகுறா!
ஆனா, அதனாலெல்லாம் தீ பரவலை! இளங்கோ சொல்வது என்ன?
இட முலை கையால் திருகி, மதுரை...
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
பாய் எரி இந்தப் பதி ஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு? என்ன-
"வானவன்" தோன்றி, பண்டை ஊழ் காரணமாகத்... தீ பரவுகிறது;
அட! யார் இந்த "வானவன்"?
= அது வானில் இருந்து மண்ணில் விழுந்த எரி நட்சத்திரமோ/வேற ஏதோ...
= அதுவொரு நாடக உத்தி; "அறம் பாடும்" இயற்கைச் சீற்றம்! அம்புட்டு தான்;
அப்போ கூட, பித்து ஏறிய கண்ணகி...
"நன் மகளிர், சான்றோர், பிள்ளைகள், வாயில்லா விலங்குகள் தவிர்த்து,
இந்த அரசியலின் தீமைக்கு உடன்பட்டோர் மட்டுமே அழியட்டும்"-ன்னு,
ஆற்றாமையால், வெறுமனே "சூளுரை" தான் செய்யுறா = "தீத் திறத்தார் பக்கமே சேர்க"
அவ பத்தவும் வைக்கல; மதுரை நகரமும், ஒரேயடியா சாம்பல் ஆயிடலை!
அறவோர் இடங்கள் தவிர்த்து,
அரண்மனை/ மறவர் பகுதி மட்டுமே எரிந்தது! (வான் நிகழ்வு)
அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது,
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட
*முலையில் அடிச்சது வேறு (ஆற்றாமையால்)
*வானம் மூலமாத் தீ பரவியது வேறு;
இதை இளங்கோவே தெளிவாக் காட்டும் போது... கலைஞர் ஏன் தான் = public property damage, அவ கையில் தீப்பந்தம் குடுத்தாரோ? ஐயகோ!:(
Anna has rightly said in his preface = //some, may look like even "unwanted"//
கலைஞரே,
கடைசீல, ஒம்ம கிட்டேயும் "தரவு" கேக்க வச்சிட்டீயளே என்னைய?:)
இதே, மகா வித்துவான் சாம்பசிவ ஐயர், இப்படியெல்லாம் சிலப்பதிகாரத்தை மாத்தினாச் சும்மா விடுவோமா?
அதே நியாயம் தானே நமக்கும்?? முருகா!
ஈழத்தில் ஆடிய நாடகம் போதாதென்று,
சிலம்பு (எ) நாடகத்திலேயே, நாடகம் ஆடினா எப்படி?:(
அது சமயப் பிடிப்போ (அ) பகுத்தறிவோ...
சுய பிடித்தங்களைக் கடந்து...
தரவு மட்டுமே கைக்கொண்டு..
"தமிழைத் தமிழாய் அணுகும்" பழக்கம் என்று தான் நமக்கு வருமோ?
இருப்பினும்...
தமிழுக்கு ஓரளவேனும் உழைத்த கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)
References:1. A Concise History of South India - Dr. Naboru Karshima, President - IATR (International Association of Tamizh Research)
2. சிலப்பதிகாரம்: அடியார்க்கு நல்லார் உரைநூல்
3. சிலப்பதிகாரம்: அரங்கேற்றுக் காதை ஆராய்ச்சி, Dr. ஷாஜகான் கனி
Read more »
"குமரி நீ; இமயம் நீ - மூன்று குமரி மணந்த சமயம் நீ" -ன்னுல்லாம் என்னால "கிவியரங்கம்" பாட முடியாது:)
காதல் முருகனையே, நான் அப்பிடியெல்லாம் புகழ்ந்து பாடினது கிடையாது; என் இரத்தத்துல அப்பிடியொரு haemoglobin இல்லை:)
அதனால்... ஒரு நாள் கழிச்சி, இந்த வாழ்த்துப் பதிவு;
"என்னாது? கலைஞர் English-லல்லாம் புத்தகம் எழுதுனாரா"? -ன்னு ஒங்க மூக்கு மேல Mouse வைக்காதீக;
= Tale of the Anklet & One Act Plays - Muthuvel Karunanithi - Macmillan Publishers (1968)
இந்த நூலுக்கு, அறிஞர் அண்ணா அளித்த, அழகான ஆங்கில அணிந்துரை; அதன் ஒரு பகுதி கீழே: (படம் புடிச்சித் தான் போட முடிந்தது; Image, not text)
சென்னை - 2 ஆம் உலகத் தமிழ் மாநாடு (1968) ....
அப்போ வெளி வந்ததே, இந்தப் புத்தகம் = Tale of the Anklet, translated by டாக்டர். ந. சஞ்சீவி.
இதெல்லாம் நடந்தது, நான் பொறப்பதுக்கும் முன்னால..
ஆனா... டாக்டர் சஞ்சீவியின் பேரன், நான் படிச்ச பள்ளியில் தான் படிச்சான்;
வகுப்பில் என் தமிழ் உரையாடல்களைக் கண்டு பயந்துட்டானோ என்னமோ?:) என் மேல கொஞ்சம் அதிக பாசம் அவனுக்கு:)
கலைஞர், நினைவொப்பம் (autograph) இட்டு... அவன் தாத்தாவுக்கு அளித்த நூல்!
= அதைக் கொண்டாந்து, எனக்குப் பரிசாக் குடுத்துட்டான்;
இன்னும் நல்லா நினைவிருக்கு; அந்தப் புத்தகத்தின் Layout & Print Aesthetics!
அருமையான சிலப்பதிகார ஓவியங்கள்...
Export Quality என்ற அளவுக்குச் செஞ்சிருப்பாங்க!
அதில் இருந்து தான், இன்றைய பதிவின் கருப்பொருள்
= இளங்கோவின் சிலப்பதிகாரத்திலே, மு.கருணாநிதி செய்த "மாற்றங்கள்"!
kovalan - madhavi |
கோவலன், "அந்தச்" சுகம் வேண்டி, மாதவியின் இல்லத்துக்குப் போகலையாம் = சொல்வது கலைஞர்:)
மன்னன் கொடுத்த மாலையை, 1008 கழஞ்சுக்கு, வயதான ஒரு கிரேக்க வாணிகன், ஏலம் பேசுகிறான்;
இனி, மாதவி அக் கிழவனின் கையில்! மாதவி அழுகிறாள்!
அந்தக் கிரேக்க வணிகனிடம் இருந்து காக்கவே, அதை விட அதிகமான தொகை கூறி, மாதவிக்கு "விடுதலை" பெற்றுத் தருகிறான் கோவலன்;
மற்றபடி, கோவலனுக்கு ஆசையெல்லாம் இல்லை:)
= இதுவே கலைஞரின் சித்திரம்;
ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
மாதவி ஏலத்துக்கே வரவில்லை; அவள் தாய் சித்திராபதி தான், ஒரு கூனியிடம் மாலையைக் குடுத்து அனுப்புறா; No Greek Merchant at all;
வீதியில் இதைக் கண்ட கோவலன், மாதவியின் ஆடல் மயக்கத்திலே, தானே வலிந்து 1008 கழஞ்சு குடுக்கிறான்; கூனியோடு, மாதவி இல்லம் புகுகின்றான்;
இந்த “முன்-ஏற்பாடு”ல்லாம் அறியாத மாதவி, வீட்டுக்கு வந்த "பெருமகன்" கோவலனின் இசையிலே, உடனேயே "காதல்" கொண்டு விடுகிறாள்;
மாதவியின் குணநலன் = உயர்வே!
பரத்தையே ஆயினும், இவள் கற்பு நெறியுள்ள "இல்-பரத்தையே";
* கற்பு = உடல் சார்ந்தது அல்ல!
* கற்பு = மனம் சார்ந்தது, ஆண், பெண் இருவருக்கும்!
அதான், தமிழின் தலைக் காப்பியங்கள் இரண்டுமே,"பரத்தை"யைத் தலைவியாக வைக்கும் "துணிவு"
* சிலம்பிலே: பரத்தை= கதையின் 2ஆம் தலைவி
* மணிமேகலையில்: Illegitimate Child= தலைவி
இளங்கோவே, இயல்பை, இயல்பாத் தான் சொல்லி இருக்காரு; அதை எதுக்குக் கலைஞர் மாத்தி, கோவலன் மேல் "புனிதம்" ஏத்தினாரோ? "ஆண்டவனுக்குத்" தான் வெளிச்சம்:)
kovalan-kaNNagi |