Showing posts with label திருப்பாணாழ்வார். Show all posts
Showing posts with label திருப்பாணாழ்வார். Show all posts

Sunday, June 20, 2010

நரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ஏன் ?


அரங்கன் தானே தன் அவயங்கள் எல்லாவற்றையும் காட்ட, ஒரு முனிவரின் மீது அமர்ந்து, அவன் திருமுடி முதல் திருவடி வரை அமலனாதிபிரான் எனும் 10 பாசுரங்கள் கொண்ட திருமொழி மூலம் அனுபவித்து, தன் கண்கள் மற்ற எதையும் பார்க்கக் கூடாது என்று அரங்கனிடமே சேர்ந்தவர் திருப்பாணாழ்வார்.

அமலனாதிபிரான், பிரணவ சாரம் என்பர் பெரியோர்!

அ - உ - ம

முதல் மூன்று பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் பிரணவத்தையும் (அ+உ+ம = ஓம்), 5,6,7 பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் நாம் பற்ற வேண்டியதைப் பற்றியும் (பா+து + கை = திருவடி) கூறுகின்றன.

எட்டாம் பாசுரத்தில், நரசிம்மனின் கண்களைப் பற்றிப் பாடுகிறார் திருப்பாணாழ்வார்.

***

பரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*
கரியவாகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப்
பெரியவாய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே.
அமலனாதிபிரான்-8

(பரி - உயர்ச்சி, கருமை, பெருமை; பரியன் - உயர்ந்தவன், பெருமை படைத்தவன், பருத்த உடம்புடையவன்; ஆதிப்பிரான் = ஆதி + பிரான் - முதிலில் தோன்றியன், முதல் தெய்வம்; புடை பரந்து - மலர்ந்து; மிளிர்ந்து - பிரகாசத்துடன்; செவ்வரி ஓடி - சிவந்த கோடுகள் பெற்று)

மிகவும் பெருத்த உருவத்துடன் வந்த இரணியன் உடலைப் பிளந்த, தேவர்களும் அருகில் செல்ல அஞ்சும்படி இருக்கின்ற ஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.
***

திருப்பாணாழ்வார், 'ஆதிப்பிரான்' என்று அரங்கனை வருணிக்கிறார். ’முதலில் தோன்றியவன், பிறருக்குக் கொடுப்பவன்' என்று பொருள். இந்த ஆதிப்பிரானின் பெருமைகளை, பெரிய திருமொழில் நரசிம்மனைக் காணும்போது விவரிக்கின்றேன்.

நம்மாழ்வார் அவதரித்த 'திருக்குருகூர்' எனும் திவ்ய தேசத்தில் (#87) எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரும் ’ஆதிப்பிரான்’.

நம்மாழ்வார், 'ஒன்றும் தேவும்' என்று தொடங்கும் திருமொழியில் (திருவாய்மொழி 4-10), இந்த ஆதிப்பிரானுடைய பெருமைகளை வர்ணித்துள்ளார் - முடிந்தால் படியுங்கள்.
***

ரங்கனை அங்கம் அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்து வந்த திருப்பாணாழ்வார், இந்தப் பாசுரத்தில், அவன் கண்களைப் பற்றிச் சொல்லுகின்றார்.

சிலருடைய கண்களைப் பார்த்தால், அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் கண்கள் மட்டும் நம்மை அழைக்கும்! சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும்! சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும்! சிலருடைய கண்கள், நம்மை மயக்கும்! சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும்! சில கண்கள், எப்போதும் சோகமாகவே இருக்கும்!

மனிதக் கண்களில், இப்படி பல உணர்ச்சிகள் தெரிந்தாலும், அவை ஒரே சமயத்தில் தெரிவதில்லை!


ஒரே சமயத்தில், சிலருக்குக் குளிர்ச்சியும், சிலருக்குக் அருளும், சிலருக்குக் கோபமும் - மொத்தத்தில் நவரசமும் - தரும் ஒரே கண்கள் - அந்த அதே கண்கள் - அரங்கனுடையது மட்டுமே! எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார்! எப்படி?

முகத்தின் அழகே - முகமே - கண்கள் (அமலன் முகத்து)! கருப்பு (கரியவாகி)! விசாலம் (புடை பரந்து)! ஒளி வீசும் (மிளிர்ந்து)! நீண்ட கண்கள் (நீண்டு)! செம்மை (செவ்-)! வரி ஓடும் (வரி ஓடி)! கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய)! அந்தக் கண்களை (கண்கள்) யார் பார்த்தாலும், அவர் பாதிக்கப் படுவது நிச்சயம் (பேதமை செய்தன)!

அவன் திருமுக மண்டலத்தை நாம் பார்க்கும்போது, நமக்கு அதிகமாகத் தெரிவதும், பார்க்கத் தோன்றுவதும், அந்தக் கண்கள் தான்! அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா? என்று தோன்றும்!

திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்? பின்னர் தானே முடி, அடி எல்லாவற்றுக்கும் ஒரு வினாடி செலவிடுகின்றோம்?

இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்!

ஆண்டாள், ‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து’ என்று தானே பாடுகின்றாள்!

இந்த அரங்கனே, அன்று இரணியனின் உடல் பிளந்தவன்! பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம்! மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை! குளிர்ச்சியும், பரிவும், அருளும் தெரிகின்றது!


’பிரகலாதனுக்கு மட்டும் குளிர்ச்சி, கடாக்ஷம், என்னை மட்டும் பைத்தியம் ஆக்குகிறாயே!’ என்று அந்தக் கண்களிடமே கேட்கின்றார்.

அதனால் தான், மேலே அவன் அழகு பற்றிப் பாசுரம் இயற்ற இயலாமல், 'அரங்கா! நீ அழகு! உன் கண்கள் அழகு! இந்த அழகு முடிவில்லாதது! 'உன்னையும், உன் கண்களையும் பார்த்த என் கண்கள், வேறு எதையும் பார்க்கக் கூடாது' எனும் நிலைக்கு வந்து விடுகிறார் திருப்பாணாழ்வார்!


ஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு?
***

இடம்: பிரயாகை
நேரம்: கதை சொல்லும் நேரம்

ஸஹஸ்ராணிகர்:
ஓ மார்க்கண்டேயரே! பகவானுக்கு, பிரகலாதனுக்கு மீது மட்டும் என்ன இவ்வளவு அன்பு? அப்படி அவன் என்ன செய்தான்?

மார்க்கண்டேயர்:
அவன் கதையைச் சொல்வதற்கு முன், அவன் தந்தையின் கதையைச் சற்றுக் கேள்!
தாயாருக்கும், தம்பி மனைவிக்கும் அறிவுரை சொல்லி விட்டு, இரணியன், தவம் செய்யக் கிளம்புகிறான். அப்போது, பூகம்பம் ஏற்படுகின்றது; காடுகள் பற்றி எரிகின்றன. பல கெட்ட சகுனங்களைக் கண்ட அசுர குரு, ’நீ இப்போது தவம் செய்யப் போகக் கூடாது’ என்று கூற, குருவின் அறிவுரைகளையும் மீறித் தவம் செய்யக் கைலாயத்திற்குச் செல்கிறான்.

(மார்க்கண்டேயர், அந்தக் காட்சிகளை விவரிக்கிறார் ...)
***

இடம்: பிரம்ம லோகம்
நேரம்: குழம்பும் நேரம்

நாரதர்: அப்பா! வணக்கங்கள்!


பிரமன்: வாப்பா! இன்று என்னிடமேயா? நானே குழப்பத்தில் இருக்கிறேன்! நீயும் சேர்ந்தால் அவ்வளவு தான்!


நாரதர்: நாராயணா! ... அப்பா! விளையாடாதீர்கள்! என்ன குழப்பம் உங்களுக்கு?

பிரமன்: இரணியன் மிகவும் கடுமையான தவம் செய்கிறான்!


நாரதர்: அதனால் என்ன? உலகில் இருப்பவர்களுக்காகக் கவலைப் பட்டால் நம்முடைய ஆயுள் விரைவில் முடிந்து விடும்!

பிரமன்: அவன் செய்யும் தவத்தைப் பார்க்கும்போது, எனக்கு ஏதோ விபரீதம் ஏற்படும் என்று தோன்றுகிறது!

நாரதர்: நீங்கள் நாராயணனின் புத்திரர் ஆயிற்றே! உங்கள் நெஞ்சில் அவர் இருக்கும் வரை, நீங்கள் கவலைப் படத் தேவையில்லை!

பிரமன்: இருந்தாலும், பயமாக இருக்கிறது!

நாரதர்: இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

பிரமன்: அவன் தவத்தைக் கலைத்தே ஆகவேண்டும். உன்னால் முடியுமா?

நாரதர்: முயற்சி செய்கிறேன் அப்பா! எம்பெருமான் அருளால் எனக்கு வெற்றி கிட்டட்டும் என்று நீங்கள் அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்!

(நாரதர் மறைந்து விடுகிறார்)
***

(மார்க்கண்டேயர் மீண்டும் தொடர்கிறார் ...)

மார்க்கண்டேயர்: நாரதரும், பர்வத முனிவரும், இரு கலவிங்கப் பட்சிகளாக (Red Strawberry Finch) உரு மாறி, இரணியன் தவம் செய்யும் மரத்திற்கு வந்து அமர்கின்றனர். அவன் தவத்தைக் கலைக்க முற்படுகின்றனர்.


மார்க்கண்டேயர்: முனி பட்சிகள் எவ்வளவு பேசியும், அவன் கவனத்தைக் கெடுக்க முயற்சித்தாலும், முடியவில்லை. கடைசி உபாயமாக, நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்று மூன்று முறை சொல்லி, நிறுத்தி விடுகின்றார்.

எம்பெருமானின் நாமம் கேட்டுத் தவம் கலைந்த அவன், அருகில் இருந்த அம்பை பறவைகள் மீது விட, அதற்குள் பறவைகள், இரணியன் தவம் கலைந்த உற்சாகத்துடன் பறந்து விடுகின்றன.

(இதன் பின்னர், மார்க்கண்டேய முனிவர், இரணியனின் அரண்மனையில் நடந்ததை விவரிக்கிறார்)
***

(தவம் கலைந்த இரணியன், அரண்மனைக்குத் திரும்புகிறான். அன்று இரவு இரணியனும், அவன் மனைவி கயாதுவும் தனிமையில் அந்தரங்கமாக இருக்கின்றனர் ...)

கயாது: நாதா! என்ன கோபம் உங்களுக்கு?

இரணியன்: தவத்தில் இருந்தபோது, இரண்டு பட்சிகள் வந்து தவத்தைக் கெடுக்கும் விதமாகப் பேசிக்கொண்டே இருந்தனர்.

கயாது: அதனால் என்ன நாதா? தேவதைகள், தவம் செய்பவர்களைக் கெடுப்பதும், சோதிப்பதும் வழக்கம் தானே? நாம் தானே அதற்கெல்லாம் செவி சாய்க்க்காமல் தவம் செய்ய வேண்டும்?



இரணியன்: அதனால் கூட நான் கவலைப் படவில்லை. ஆனால், கடைசியில் அந்தப் பறவைகள் மிகவும் சப்தமாக, 'ஓம் நமோ நாராயணாய' எனும் சொற்களை மூன்று முறை, எனக்காகவே சொல்வது போலச் சொல்லின. என் எதிரியின் பெயரைச் சொன்னவுடன், என் கோபத்தினால் தவம் கலைந்து விட்டது.

(14 உலகங்களிலும் எல்லோரும் மதித்துப் போற்றக் கூடிய அஷ்டாக்ஷர மந்திரத்தை அன்று இரவு இரணியன் தன் வாயாலேயே சொல்லி விடுகிறான். அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்)

கயாது: நீங்கள் மீண்டும் தவம் செய்யச் செல்லுங்கள்! இம்முறை, அவன் நாமம் சொல்லப் பட்டாலும் தவம் கலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

(அடுத்த சில நாட்களில், இரணியன் மீண்டும் தவம் செய்யச் செல்கிறான்)
***

தைச் சொல்லி, கதையை நிறுத்திய மார்க்கண்டேய முனிவர், அங்கு கூடியிருந்த முனிவர்களைப் பார்த்து,

'நம்மைப் போல் அல்லாது, விஷ்ணுவின் அந்தரங்கனான சங்கு கர்ணன், விஷ்ணுவின் அருளாலும், பிரம்மன் மற்றும் நாரதரின் ஆசீர்வாதத்துடனும், அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே கருவில் நுழைந்து விடுகிறான்! இப்படிப் பிறந்தவனே பிரகலாதன்!

இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு! நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'

***

ரு வழியாக, முதலாயிரத்தையும், பிரகலாதன் பிறப்பையும், நரசிம்மன், KRS, Raghavan, Kumaran, போன்றோரின் உதவியுடனும், இதனைப் பொறுமையுடன் படித்து, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பல அன்பர்கள் மூலமும், முடித்துக் கொடுத்து விட்டார்!

இப்படி, அதிசயமாகப் பிறந்த பிரகலாதனைப் பற்றியும், அவனுக்காக எம்பெருமான் என்னவெல்லாம் செய்தான் என்பதையும்,

நாலயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாவது ஆயிரமான பெரிய திருமொழி மூலம் நரசிம்மனை திருமங்கையாழ்வார் அனுபவிக்கும்போது நாமும் சேர்ந்து அனுபவிக்கலாம்.

அனைவருக்கும் எனது நன்றியுடன், முதலாயிரத்தை முடித்துக் கொள்கிறேன்.


நரசிம்மன் திருவடிகளே சரணம்!

காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா பிரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து
Read more »

Friday, December 12, 2008

Happy Birthday: எட்டு உதை-பத்துப் பாட்டு! - 1

எட்டுத் தொகை-பத்துப் பாட்டு, தெரியும் = தமிழ் இலக்கியம்! அது என்ன எட்டு உதை-பத்துப் பாட்டு??
என்ன மக்களே? கார்த்திகை தீபம் எப்படிப் போச்சு? தீபாவளிக்கு வெடிக்காத பட்டாசை, இன்னிக்காச்சும் பத்த வச்சீங்களா? இல்லை வழக்கம் போல பதிவுல பத்த வைக்கிறதோட சரியா? ஹிஹி! என் பங்குக்கு நானும் கொஞ்சம் பத்த வைக்கிறேன்!

* ஆழ்வார்களிலேயே மிகவும் குறைஞ்ச அளவு பாடல்கள் பாடியது யார்?=மொத்தம் பத்தே பாட்டு!
* அதுவும் கோயிலில் பணி செய்யும் ஒரு அந்தணரிடம் உதை வாங்கிய பின்!=எட்டு உதை!
ஆக, எட்டு உதை-பத்துப் பாட்டு!
இன்னிக்கி திருப்பாணாழ்வாரின் பிறந்த நாள் (Dec-12,2008)!
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்துக்கு அடுத்த நாள்! கார்த்திகை மாசம் ரோகிணியில் பிறந்த நாள்!
* திருமங்கையாழ்வார் சிவ தீபத்தில் பிறந்தவர்! (கார்த்திகையில் கார்த்திகை)
* திருப்பாணாழ்வார் விஷ்ணு தீபத்தில் பிறந்தவர்! (கார்த்திகையில் ரோகிணி)


என்னாது? ஆழ்வார் உதை வாங்கினாரா? அதிலும் ரொம்ப மென்மையான ஆழ்வார்! அவரையா அடிச்சாங்க? ஏன்? எதுக்கு?

கீழ்க்குலம் என்று கருதப்பட்ட பாணர் சாதியில் வளர்ந்தவர்! பாணர்கள் பொதுவா இசை வாணர்கள்; இசைக் கருவிகளும் செய்பவர்கள்! இசைக் கருவி செய்யணும்னா மாட்டுத் தோல், விலங்கு நரம்பு-ன்னு எல்லாம் தேவைப்படுமே! அதை எல்லாம் செய்ய ஆளு வேணாமா?
மாட்டுத் தோலில் இசைக் கருவி செய்பவர் = கீழ்க் குலம்!
மாட்டுத் தோலைத் தட்டித் தட்டி இசை வாசிக்கறவர் = மேல் குலம்! :)

தர்ம சாத்திரங்களில் சொல்லாதவற்றையும், தம் சொந்த சுயநலத்துக்காகச் சொல்லி, அதுவும் இறைவன் பேரால் சொல்லி, காலம் கடத்தியவர்கள் சில-பல பேர்!
நமக்குப் பழி வந்தால் நாம் துடைப்போம்! முடியலைன்னா இறைவன் துடைப்பான்!
இறைவனுக்கே பழி வந்தால்? இறைவன் தானே துடைத்துக் கொள்ள வேண்டும்?
இது போன்ற அதீத சிந்தனைகளுக்கு வெளிப்படையாக முடிவு கட்ட அரங்கன் திருவுள்ளம் கொண்டான் போலும்! என்னிக்கு அரங்கன் இதுக்கு மனசு வைச்சானோ தெரியலை...
அன்றிலிருந்து, ஒன்றன் பின் ஒன்றாய், சமூகச் சீர்திருத்தம் ஆகட்டும், ஆலயச் சீர் திருத்தம் ஆகட்டும், மொழிச் சீர்திருத்தம் ஆகட்டும்...
எல்லாம் அரங்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும்-ன்னு ஒரு ராசி ஏற்பட்டு விட்டது போல!
எதிர்த்தவர்களும் அரங்கத்தில் தான் பலமாக எதிர்த்தார்கள்! எதிர்ப்பை மீறி வெற்றிகளும் அரங்கத்தில் தான் பலமாகக் குவிந்தன!

இந்த ஒரே காரணத்துக்காகவே பெரியார் சிலையைத் தாராளமாகத் திருவரங்க ஆலயத்து முகப்புச் சாலையில் வைத்துக் கொள்ளலாம்! இது நம்பெருமாளுக்குத் திருவுள்ள உகப்பே!
இதை எதற்குச் சென்ற ஆண்டு ஒரு கூட்டம் எதிர்த்தது என்பது தான் இன்னும் புரியவில்லை!

இப்படித் திருப்பாணாழ்வாரில் தொடங்கிய சீர்திருத்தம், பின்னாளில் இராமானுசர் காலத்தில் கெட்டிப்பட்டு, மாமுனிகள் காலத்தில் தங்கள் பெயர்களை எல்லாம் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டது! ரம்ய+ஜாமாத்ரு முனிகள்=அழகிய மணவாள மாமுனிகள் என்று மாற்றிக் கொள்ளும் அளவுக்கு!


திருவரங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஊர் உறையூர். சோழர்களின் தலைநகரமாகவும் இருந்த ஊர்! அங்கு பிறந்தான் பாணன்! இசை வாணன்!
மிகவும் மென்மையானவன்! பெண்களும் தோற்றுப் போவார்கள் இவன் மென்மையில்!
கருப்பிலும் அழகானவன்! கவின் குரலிலும் அழகானவன்! வீணையும் வாசிப்பான்!
கொண்டை போட்டு பூமுடித்த ஆழ்வான் இவன் ஒருவனாகத் தான் இருப்பான் போல!
இவன் உள்ளத்து மென்மையைக் கருதியோ என்னமோ, வைணவ இலக்கியங்கள் இவனை, திருமார்பு-மச்சத்தின் (ஸ்ரீவத்சம்-திரு மறு) அம்சமாகச் சொல்கின்றன!

பாணர் குலமாச்சே! பெருமாள் கோயிலுக்குள் போக முடியாதே! அது சைவமோ வைணவமோ, என்ன தான் சமயங்கள் நல்லனவாக இருந்தாலும், அதை ஆதிக்கம் செலுத்துவோர் வைத்தது தானே சட்ட திட்டம்! வைணவத்திலும் இது போன்ற இழிவுகள் விதிவிலக்கு அல்லவே!

திருவிழாக்களில் வெளியில் வரும் உற்சவ மூர்த்தியான நம்பெருமாளைப் பார்த்து பார்த்தே உள்ளம் பறி கொடுத்து விட்டான்! நம்பெருமாள் நடை அழகு அல்லவா!
சீரங்கம் நடையழகு! திருப்பதி வடையழகு! காஞ்சிபுரம் குடையழகு!
நம்பெருமாள் நடை அழகில், வலைக்குள் சிக்கிய இதயம் ஆனான் பாணன்!

"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்! திருக்கோயிலே ஓடி வா!" - என்பது தான் அவன் சிந்தனை!
பெருமாளின் கதைகளில் கிறங்கி உறங்குவான்! உறங்கிக் கிறங்குவான்!
அவன் வேலையும் இசைக்கருவி என்று ஆகி விட்டதால், பகல்-வேலையிலும் சரி, இரவு-வேளையிலும் சரி, முழுநேரப் பதிவன் - இறைப் பதிவன் ஆகி விட்டான் நம்ம பாணன்! :)

கூட்டத்தோடு கூட்டமாக வீணையில் பாட்டு!
அடுத்தவர் பாடிய பாடல்களை எல்லாம் வீணையில் பாடிக் கொண்டிருந்தவனுக்கு, இன்னும் கொஞ்ச நாளில் சொந்தப் பாட்டு பாடப் போவது தெரிந்திருக்க நியாயமில்லை தான்!



அன்று சிற்றஞ் சிறு காலை! சீரங்க அம்மா மண்டபம், தென் காவிரிக் கரை! அங்கிருந்து நீர் முகந்து அரங்கன் திருமுழுக்காட்டுக்குக் (திருமஞ்சனம்/அபிஷேகம்) கொண்டு செல்வார்கள்!
அதுவும் எல்லாரும் திருக்குடம் சுமந்து விட முடியுமா? பரசுராமரின் அம்மா ரேணுகையைப் போல் கற்புள்ளவர்கள் தான் சுமக்க முடியுமாம்! அபிஷேக ஜலம், பரமம் பவித்ரம் அல்லவா?

சாஸ்திர விற்பன்னர்கள், சந்தியா வந்தனம் செய்து முடித்து, ஜல பாத்திரம் அர்க்கியம் முதலானவைகளைக் கொடுத்து முடித்து, லோக க்ஷேமத்துக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று மனதாரச் சங்கல்பம் செய்து கொண்ட பின்னர் தான் எடுத்துச் செல்வார்கள். இது போன்ற நித்ய கர்மானுஷ்டானங்களில் (தினப்படிச் செயலொழுகு) பல நல்ல உண்மைகள் புதைந்துள்ளன!
ஹூம்...ஆனால்...செய்பவரைப் பொறுத்து தானே செயலும்?...

லோக சாரங்கர் என்பவர் அரங்கன் ஆலயத்தின் பெருந்தன அர்ச்சகர்! அரங்கனையே தீண்ட வல்ல சக்தி படைத்தவர்! முப்போதும் திருமேனி தீண்டுவார்! இல்லறவாசியாய் இருந்தாலும் அவரின் கர்மானுஷ்டானங்களைக் கண்டு வியந்து, "முனிகள்" என்ற பட்டம் கொடுத்திருந்தனர்! லோக சாரங்க முனிகள்!

சந்தியை முடித்து, லோக க்ஷேமத்துக்காக என்னையே அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று "மனதார" (மந்திரமார?) சங்கல்பம் செய்து கொள்கிறார்!
பின்னர் வெள்ளிக் குடத்தில் "காவேரி ஜலேஸ்மின் சன்னிதம் குரும்" என்று மந்திரம் சொல்லி நீர் முகந்து கொள்கிறார்! திரும்பிப் படியேறினால்.....

"கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்...அரங்கத்து அம்மா...பள்ளி எழுந்து அருளாயே!" என்று வீணையில் பாடிக் கொண்டும், உலாத்திக் கொண்டும் இருக்கிறான் பாணன்! தூக்கத்தில் நடக்கும் வியாதியா என்ன அவனுக்கு? அவன் கெட்ட நேரம், என்னிக்கும் இல்லாம இன்னிக்குன்னு பார்த்து, இவ்வளவு அதிகாலையில் காவிரிக்கு வந்து விட்டான்!

வந்தது தான் வந்தான்! குறுகலான படித்துறைக்கா வர வேண்டும்? அதான் அவ்ளோ பெரிய ஆறாச்சே? அகண்ட காவேரியாச்சே? ஹிஹி! அம்மா மண்டபத்தில் இருந்து பார்த்தால் அரங்க கோபுரங்கள் அத்தனையும் தெரியும்!

அதைத் தினப்படி பார்க்கும் அல்ப ஆசை அவனுக்கு! பரீட்சைக்கு நடந்து கொண்டே படிப்பது போல், படிகளில் குறுக்கும் நெடுக்குமாய்...


"அடே பாணா! விலகு விலகு!"

காதில் விழவில்லை!

"அடேய்! என்ன ஆணவம்! சொல்லியும் நகராமல், கண்ட பாட்டு பாடிக்கிட்டு, கூத்தாடிக்கிட்டு இருக்கே?"

காதில் விழவில்லை!

"அரங்கனின் திருமஞ்சனக் குடத்தை மறிக்கிறாயா? விலகடா!"

காதில் விழவில்லை!

அதிகாலை வேளையில் அதிகம் பேர் இல்லை! அவனை விலக்க ஆளும் இல்லை! இவரும் அவனைத் தொட்டு விலக்க முடியாது! "அரங்கத்து அம்மா"!
அட, தான் சொல்லும் பேரைத் தானே அவனும் பாடிக்கிட்டு இருக்கான்?
சரி ஒழியட்டும் என்று பக்கத்துப் படித்துறைப் பக்கமாக இவர் போகலாம் தான்! ஆனால்?

சில நிமிடங்களுக்கு முன், லோக க்ஷேமத்துக்காக என்னையே அர்ப்பணித்துக் கொள்கிறேன் என்று "மனதார" (மந்திரமார?) சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறாரே!
ஆற்றில் கிடந்த சரளைக் கல்லை எடுத்துப் பாணன் மேல் வீசுகிறார் லோக சாரங்க முனிகள்!

சடாக்! குறி தப்பலை! நெற்றி மேல! நெத்தியடி! இரத்தம் கொட்டுகிறது பாணனுக்கு!
வீசினவர் அவன் நெற்றியில் இருக்கும் திருவடிக் காப்பைக் (நாமத்தை) கூடவா பாக்கலை? திருவடிக் காப்பையுமா சேர்த்து அடிப்பது? நின் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!


விழிப்பு வந்த பாணன், அப்போ தான் கோபுர தரிசன மயக்கம் தெளிஞ்சி, சுத்தி முத்தி பாக்குறான்! எதிரிலே தலைமை அர்ச்சகர் நிக்குறாரு!
ஆகா, என்ன புண்ணியமோ இம்புட்டு காலைல ஒத்தை வேதியர் தரிசனம்! நிமிடத்தில் நிலைமை புரிந்து விடுகிறது!
"ஐயா மன்னிச்சிருங்க, ஐயா மன்னிச்சிருங்க, பாட்டோட இனிமையில் மயங்கிப் போயி, படிக்குக் குறுக்கால வந்துட்டேன்! மன்னிச்சிருங்க!"

"ஆனால், தலை என்னமோ கிர்ர்ர்ர்ர்ர்ருன்னு சுத்துதே! யம்மா...வலிக்குதே! ஐயோ இதென்ன இரத்தப் போக்கு?" மென்மையான ஆளு வேற இல்லையா? பயந்து போய் விட்டான்! பிடிமானம் இல்லாமல், பிச்சைக்காரர்கள் வழக்கமாக உட்காரும் சுவற்றின் படியோரம் தன்னையே குறுக்கிக் கொள்கிறான்! சரி, விட்டுது பீடை-ன்னு லோக சாரங்க முனிகள் கிளம்பி விட்டார்! இருட்டிக்கிட்டு வருது கண்கள்! யாருக்கு? ஹா ஹா ஹா! இருவருக்கும் தான்!

வயதானாலே பார்வை கூசுமோ?-ன்னு எண்ணிக் கொண்டே, லோக சாரங்கர் தன் சகாவைப் பிடிச்சிக்கிட்டு ஒருவாறு உள்ளே வருகிறார்!

"அட, கருடன் சன்னிதி ஏன் மூடி இருக்கு? இந்நேரம் தொறந்து இருக்கணுமே? அவனை எழுப்பாமல் பெருமாளை எப்படி எழுப்புவது? என்ன இன்னிக்கி எல்லாமே தலை கீழே நடக்கிறது?" - ஆர்ய படாள் வாசல் தாண்டி, காயத்ரீ மண்டபம், இதோ பிரணவாகார விமானம் வந்தாகி விட்டது! ஜய விஜயர்களிடம் சாவியை வைத்து, திருக்கடைக் காப்பை (பூட்டை) விலக்கி.....

காவேரி தீர வாசாய! கர்த்தவ்யம் தைவ மான்னிஹம்!
உத்தி்ஷ்டோ உத்திஷ்ட, ரங்கேச உத்திஷ்ட.....அய்யய்யோ!


அச்சோ! அச்சோ! அச்சோ!

ரங்கா! ரங்கா! ரங்கா!

"செய்ய வாய் ஐயோ" என்று சொல்வது போய், "செய்ய நெற்றி ஐயோ"-ன்னு இருக்கே!

ஆண்டாண்டு கால அரங்கன் திருமேனி!.....ஆண்டாளை ஆண்ட அரங்கன் திருமேனி!
அந்த நெற்றியில், இதென்ன இம்புட்டு இரத்தம்? இப்படிக் கொட்டுதே!
ஐயோ! எல்லாரும் வாங்கோ! யாராச்சும் வாங்கோ! பெரிய துண்டா எடுத்துக்கிட்டு வாங்கோ!

பாம்பணை இம்புட்டு வெப்பமா? ஆதிசேடன் ஆத்திர சேடன் ஆனானோ?
சூடிக் களைந்த பீதக ஆடை, முல்லைப் பூ மாலை, முத்தங்கி சேவை, துளசி தளத்தில் கூடவா இத்தனை சிவப்பு இருக்கும்?
பச்சை மாமலை போல் மேனி...சிவப்பு மாமலை போல் மேனியாகி விடுமோ?

அச்சச்சோ! கருவறைக்குள் இரத்தம் வந்தா தீட்டாச்சே!
அதுக்காக ரத்தம் வழியும் ரங்கனை அப்புறப்படுத்தவா முடியும்?

ரங்கா! ரங்கா! ரங்கா!

(தொடரும்...)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP