புதிரா? புனிதமா?? - 4
ஜெயஸ்ரீ 10/10
குமரன் 10/10
இராமநாதன் 10/10
பரிசேலோர் எம்பாவாய்!
வென்றவர்க்கும் மற்றும்
உடன் நின்றவர்க்கும்
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(கம்பன் பிறந்த ஊரான, தேரழுந்தூர், ஆமருவியப்பன்-தேவாதிராஜப் பெருமாள் வண்ணப்படம்)
அடுத்த பதிவு கொஞ்சம் தாமதம் ஆகலாம்-ஏனென்றால் அது ஒரு ஸ்பெஷல் பதிவு!
கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாமல் போன பதிவர் பற்றிய அறிவிப்பில், நம்ம வெட்டிப்பயல்,
புதிரா புனிதமான்னு இந்தப் பதிவுக்கு வந்தவங்க பல பேருக்கு ஆப்பு - அவரையும் சேர்த்துத் தான் - என்று குறிப்பிட்டிருந்தார்.
சரி, பொங்கல் வைச்சு ரொம்ப நாளாயிடுச்சேன்னு,
நியுஜெர்சி பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு,
இதோ அடுத்த ஆப்பு - சாரி, புதிரா புனிதமா!
இந்த முறை ஆப்புடு பொருள் - கம்ப ராமாயணம்.
(ஹிஹி...ஜெயஸ்ரீ எள்ளா, உளுந்தா - எதைப் போடலாம்னு கம்ப ராமாயணப் பாடல்களைப் போட்டு, மனசில் ஆசையைக் கிளறி விட்டுட்டார்)
சரியான விடைகள் நாளை மதியம்/மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு ராமா!
1 | இராமாயணத்தை முதன் முதலாக, ஒரு கதையாக அமைத்து, "வாயால்" சொன்னவர் யார்? | 1 அ) வால்மீகி |
2 | இவன் இராமனால் கொல்லப்பட்டவனுக்கும் பிள்ளை; இராமனின் தம்பிக்கும் பிள்ளை. அதாச்சும் இரண்டு பேருக்கும் ஒரே பெயர்; இவன் யார்? | 2 அ) மேகநாதன் |
3 | வால்மீகியின் மூல நூலில் குறிப்பிடாத ஒரு அவதாரக் கதையை, கம்பராமாயணத்தில் குறிப்பிடுகிறார் கம்பர். அது எந்த அவதாரம்? | 3 அ) பரசுராமர் |
4 | இலங்கேஸ்வரன் இராவணனின் தாய்-தந்தையர் பெயர் என்ன? | 4 அ) ப்ரிதி-புலஸ்தியர் |
5 | கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்று தெரியும். அவர் சொந்த ஊர் எது? (கம்ப ராமாயணத்திலேயே இந்த ஊர் பாட்டிலே சொல்லப்படுகிறது!) | 5 அ) தேரழுந்தூர் |
6 | எந்த மலையின் மீதிருந்து அனுமன் முதலில் இலங்கைக்குப் பறந்தான்? | 6 அ) கந்தமாதானப் பர்வதம் |
7 | அசோக வனத்தில் உள்ள சீதைக்கு அறிவுரை சொல்ல, மருத்தன் என்னும் அரக்கனை ஏவினான் இராவணன். அயோத்தியைக் கூடப் போரில் வென்று விட்டதாகச் சொல்லச் சொல்லுகிறான். அதுவும் ஒருவரைப் போல் மாய வேடம் போட்டுக் கொண்டு; யார் வேடத்தில்? | 7 அ) திரிசடை |
8 | கும்பகர்ணனும், இந்திரசித்தும் முறையே யாரால் கொல்லப்பட்டார்கள்? | 8 அ) இராமன்-இலக்குவன் |
9 | இராமன் போரில் வெற்றி பெற்ற பின், சீதையிடம் சேதி சொல்ல, யார் முதலில் சென்றார்கள்? | 9 அ) திரிசடை |
10 | பெரும் நெருப்பில் இருந்து தம்பியைக் காத்தான் ஒரு அண்ணன்! பின்னர் அவனால் தான் கதைக்கே ஒரு பேருதவி கிட்டியது! அந்த அண்ணன்-தம்பி யார்? | 10 அ) இராமன்-இலக்குவன் |
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!
1 அ) வால்மீகி ஆ) வசிஷ்டர் இ) கம்பர் ஈ) நாரதர் |
2 அ) மேகநாதன்ஆ) அங்கதன் இ) சுபாகு ஈ) குசன் |
3 அ) பரசுராமர் ஆ) வாமனர் இ) நரசிம்மர் ஈ) கல்கி |
4 அ) ப்ரிதி-புலஸ்தியர் ஆ) கைகசி-புலஸ்தியர் இ) சுமாலி-மால்யவான் ஈ) கைகசி-விஸ்ரவசு |
5 அ) தேரழுந்தூர் ஆ) சீர்காழி இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருவரங்கம் |
6 அ) கந்தமாதான பர்வதம் ஆ) மகேந்திரகிரி இ) மைனாக பர்வதம் ஈ) தண்டகாரண்யம் |
7 அ) திரிசடை ஆ) விபீஷணன் இ) ஜனகன் ஈ) பரதன் |
8 அ) இராமன்-இலக்குவன் ஆ) இலக்குவன்-இராமன் இ) சுக்ரீவன்-இலக்குவன் ஈ) இலக்குவன்-அனுமன் |
9 அ) திரிசடை ஆ) இலக்குவன் இ) அனுமன் ஈ) விபீஷணன் |
10 அ) இராமன்-இலக்குவன் ஆ) இராவணன் - விபீஷணன் இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன் |
ஆஜர் ஹோ
ReplyDelete1. ஈ) நாரதர் (இராமாயணத்தை வால்மீகி முனிவரின் கேள்விக்குப் பதிலாக முதன் முதலாகச் சொன்னவர் நாரதர். வசிஷ்டர் எழுதியதாக யோக வாசிஷ்டமோ ஏதோ ஒரு இராமாயணம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. கம்பர் தெளிவாக வால்மீகி சொன்னதைச் சொல்வதாகச் சொல்லிவிடுகிறார். )
ReplyDelete2. ஆ) அங்கதன். (மேகநாதன் இராவணன் மகன் இந்திரஜித்தின் இன்னொரு பெயர். சுபாகு தாடகை மகன். குசன் இராமனின் மகன். அங்கதன் வாலியின் மகனின் பெயர்; இலக்குவனின் மகன் பெயரும் அங்கதனே)
3. இ) நரசிம்மர். (கரக்கம்பம் சிரக்கம்பம் செய்த மேட்டழகிய சிங்கரைப் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் பேசியதாக நினைவு)
4. ஈ) கைகசி-விஸ்ரவசு
5. இ) திருவெண்ணெய் நல்லூர்
6. ஆ) மகேந்திரகிரி
7. இ) ஜனகன்
8. அ) இராமன்-இலக்குவன் (ஜயவிஜயர்களான இராவண கும்பகர்ணர்கள் இராமனால் தான் கொல்லப்பட வேண்டும். அப்படியே நடந்தது. இலக்குவன் இந்திரஜித் செய்து கொண்டிருந்த நிகும்பலை யாகத்தைக் கலைத்து அவனைக் கொன்றான்)
9. அ) திரிசடை
10. ஈ) வாலி-சுக்ரீவன்
சில பதில்களை ஊகித்துச் சொல்லியிருக்கிறேன்.
குமரன் வழக்கம் போல் அடிச்சு ஆடுகிறார்..அதுவும் ஃபோர்களும் சிக்சர்களுமாய்! :-)
ReplyDelete9, 10 தவிர மற்ற அனைத்துமே சரி குமரன்!
1 அ) வால்மீகி
ReplyDelete2 குசன்
3ஆ) வாமனர்
4 ஆ) கைகசி-புலஸ்தியர்
5 திருவெண்ணெய் நல்லூர்
6 மகேந்திரகிரி
7 பரதன்
8 அ) இராமன்-இலக்குவன்
9 அனுமன்
10 வாலி-சுக்ரீவன்
சும்மா ஒரு கெஸ்சிங்கில் போட்டு இருக்கு. பார்த்து மார்க்ஸ் போடுங்கோ வாத்தியாரே
1 அ) வால்மீகி
ReplyDelete2 இ) சுபாகு
3 அ) பரசுராமர்
4 ஆ) கைகசி-புலஸ்தியர்
5 அ) தேரழுந்தூர்
6 ஆ) மகேந்திரகிரி
7 ஆ) விபீஷணன்
8 அ) இராமன்-இலக்குவன்
9 அ) திரிசடை
10 இ) சம்பாதி-ஜடாயு
சிவமுருகன், வாங்க.
ReplyDelete6,8,10 கரெக்டுங்க!
வாங்க நந்தியா
ReplyDeleteபாத்து மார்க் போடச் சொல்லியிருக்கீங்களே; நான் வாத்தியார் இல்லீங்கோ...
அதுக்கு ரெண்டு பேர் இருக்காங்க!
நம்ம வாத்தியார் ஐயா மற்றும் நம்ம டீச்சர்!
5,6,8,9 கரெக்டுங்க!
1- நாரதர் வால்மீகிக்கு சொன்னது மினி இராமாயணம்..வால்மீகி பாடியது முழுகதை.. ஆனால் முதலில் 'வாயால்' சொன்னது நாரதர்தானே?
ReplyDelete2- ஆ) அங்கதன் (தாரா கனெக்ஷன்?) :(((
3- இ) நரசிம்மர் (கூகிள் வாழ்க)
4- ஈ) கைகசி-விஸ்ரவச
5- இ) திருவெண்ணெய் நல்லூர்
6- ஆ) மகேந்திரகிரி
7- இ) ஜனகன்
8- அ) இராமன்-இலக்குவன்
9- இ) அனுமன்
10- ??????
1. நாரதர்
ReplyDelete3. நரசிம்ம அவதாரம்
5. தேரெழுந்தூர்
8. இராமன் இலக்குவன்
10. சம்பாதி-ஜடாயு
மருத்துவர் ராமநாதன் அடிச்சாருப்பா ஜாக்பாட்...
ReplyDeleteஅவர் சொன்ன அனைத்துமே சரி.
பத்தாம் கேல்விக்கு மட்டும் "???" என்று பதிலுக்குக் கேள்வி கேட்டா எப்பிடி?
சூப்பர் மருத்துவரே!
10 ஆம் கேள்விக்கு கூகிளாண்டவரை ஏன் அழைக்கவில்லை? :-)
நம்ம ஜிரா ஐந்துக்கு நாலு பதில் சரியாச் சொல்லியுள்ளார்.
ReplyDelete5 மட்டும் தவறு!
ராகவன் கதையில் ராகவனே தப்பா பதில் சொல்லலாமா?
ம்ருகேலரா ஓ ராகவா? :-))))
படிக்கத்தான் வந்தேன்.விடையை எதிர்பார்த்து (இப்படி இரண்டு பதிவா கூட்ட திட்டமா?)
ReplyDelete//பத்மா அர்விந்த் said...
ReplyDeleteபடிக்கத்தான் வந்தேன்.விடையை எதிர்பார்த்து (இப்படி இரண்டு பதிவா கூட்ட திட்டமா?) //
வாங்க பத்மா...
ஆகா..இப்படி ஒரு சூப்பர் ஐடியா கொடுத்து இருக்கீங்களே.
இவ்வளவு நாள் ஒரே பதிவிலேயே விடையைப் போட்டு பதிவையே வேஸ்ட் பண்ணிட்டேணே! :-)))
இரண்டாவது முயற்சி இரவிசங்கர். கணக்குல சேத்துக்க முடியும்ன்னா சேத்துக்கோங்க.
ReplyDelete9. இ) அனுமன்
10. இ) சம்பாதி-ஜடாயு
சூப்பர் பதிவு தலைவா!!
ReplyDeleteபதில்களுக்காக மத்தியான பதிவுக்காக காத்திருக்கிறேன்!! :-)
நீங்க எதுவும் பதில் சொல்லலையானு கேக்காதீங்க!! எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!! :-)
vanthu,
ReplyDeletepaarththuttup
poREn.
1,valmiki
2,asuran killed by lakshmana kusan,
7,vibishanan
9,Anuman,
10 jataayu,sambaathi
குமரன்
ReplyDeleteஇரண்டாம் முயற்சியில் அனைத்தும் சரியாச் சொல்லி அடிச்சாருப்பா 100/100
வல்லியம்மா...என்னாச்சு, ஆங்கிலத்தில் பின்னூட்டம்?
ReplyDeleteஐந்து அட்டெம்ப்ட் பண்ணியிருக்கீங்க!
உங்க 9,10 சரி!
இதுவே சித்திர ராமாயணப் போட்டியா இருந்துச்சுனா...நீங்க தான் 100/100
//CVR said...
ReplyDeleteநீங்க எதுவும் பதில் சொல்லலையானு கேக்காதீங்க!! எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!! :-)//
CVR
இப்படிச் சொன்னவங்க தான் கடைசியிலே அவ்வளவு நாடகத்துக்குப் பிறகு, ஆயிரம் பொற்காசுகள் பரிசைத் தட்டிக்கினு போனாங்க! :-)
1. நாரதர்
ReplyDelete2. அங்கதன்
3. நரசிம்மர்
4.கைகசி-விஸ்ரவசு
5. திருவெண்ணைநல்லூர்
6. மகேந்திரகிரி
7. சனகன்
8. இராமன் இலக்குவன்
9. அனுமன்
1 ஈ) நாரதர்
ReplyDelete2 இ) சுபாகு
3 அ) பரசுராமர் ஆ) வாமனர் இ) நரசிம்மர் ஈ) கல்கி
4 அ) ப்ரிதி-புலஸ்தியர்
5 ஈ) திருவரங்கம்
7 அ) திரிசடை
9 அ) திரிசடை
தங்கத் தாரகை ஜெயஸ்ரீ வந்தாங்கப்பா...
ReplyDeleteஅவங்க சொன்ன ஒன்பதும் சரியே!
கடைசி கேள்வியை ஏன் விட்டுட்டீங்க ஜெயஸ்ரீ?
சிவமுருகன்,
ReplyDeleteமீண்டும் நல்வரவு
சிவமுருகன், வாங்க.
ஏற்கனவே சொன்ன 6,8,10
மற்றும் இப்ப சொன்ன 1 கரெக்டுங்க!
10. சம்பாதி - ஜடாயு
ReplyDeleteகடைசிக் கேள்விக்கும் ஜெயஸ்ரீ சரியான விடை சொல்லி,
ReplyDeleteநிஜமாலுமே "ஜெய" ஸ்ரீ ஆகி விட்டார்கள்.
100/100 - வாழ்த்துக்கள்.
KRS,
ReplyDeleteராகவன் கதைக்கு ராகவனின் துணையை நாடி பத்தாம் கேள்விக்கு
10) இ) சம்பாதி-ஜடாயு
:)))
அவர் விடையைச் சொன்னவுடன் தான் அசோகவனத்தில் தான் சீதை இருக்கிறாள் என்று பறக்கமுடியாத சம்பாதி வழி காட்டியது நினைவுக்கு வந்தது.
//இராமநாதன் has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - 4":
ReplyDeleteKRS, ராகவன் கதைக்கு ராகவனின் துணையை நாடி பத்தாம் கேள்விக்கு//
ஆகா...
மருகேலரா ஓ ராகவா தெரியும்!
ஆனா
மறைவென்ன காண் ஜி ராகவா?
பிட் அடித்தவரை விட, பிட் கொடுத்தவருக்கே அதிக தண்டனை! :-))
ராமநாதனும் 100/100-ப்பா!
இந்தத் தடவை பரிசு ஒன்னும் இல்லையா?
ReplyDeleteஇதோ வந்து கொண்டே இருக்கு, குமரன்!
ReplyDelete1
ReplyDeleteஇராமாயணத்தை முதன் முதலாக, ஒரு கதையாக அமைத்து, "வாயால்" சொன்னவர் யார்?
இராம காதையை முதலில் நாரதர் தான் கதையாக வால்மீகிக்குச் சொன்னார். பின்னரே வால்மீகி கதையாக லவ குசர்க்கும் சொல்லி, கதையாக எழுதியும் வைத்தார். கம்பர் வால்மீகியை அடி ஒற்றினார். வசிட்டர் உரைத்ததாகக் குறிப்பேதும் இல்லை.
நாரணன் விளையாட்டு எல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதைசெய்தான் அறிந்து வான்மீகி யென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூரு வச்சன்
பேரணிக் கொடையான் கம்பன் தமிழினாற் கவிதை செய்தான்
மொதல்ல இந்த பாப்பப் பின்னூட்டம விட்டு வாங்க. இல்லைன்னா பின்னூட்டம் போடவே மாட்டேன்.
ReplyDelete2.
ReplyDeleteஇவன் இராமனால் கொல்லப்பட்டவனுக்கும் பிள்ளை; இராமனின் தம்பிக்கும் பிள்ளை. அதாச்சும் இரண்டு பேருக்கும் ஒரே பெயர்; இவன் யார்?
இலக்குவன் பிள்ளை பெயர் அங்கதன்;
இராமனால் கொல்லப்பட்ட வாலியின் பிள்ளை பெயரும் அங்கதன் தான்
//G.Ragavan said...
ReplyDeleteமொதல்ல இந்த பாப்பப் பின்னூட்டம விட்டு வாங்க. இல்லைன்னா பின்னூட்டம் போடவே மாட்டேன்//
ஆகா...pop up பின்னூட்டம் மேல ஏங்க ஜிரா உங்களுக்கு இம்புட்டு கோபம்?
அது இன்னான்னா, முன்பு ஒரு புதிரா புனிதமா-வில், ஒரு அனானி pop up பின்னூட்டம் கேட்டாரு.
கேள்வியைப் பாத்துக்கிட்டே, பதிலைக் காப்பி பேஸ்ட் செய்ய வசதியா இருப்பதாகச் சொன்னாரு.
அன்னில இருந்து, கேள்வி பதில் போடும் போது மட்டும், இந்த pop up!
3.
ReplyDeleteவால்மீகியின் மூல நூலில் குறிப்பிடாத ஒரு அவதாரக் கதையை, கம்பராமாயணத்தில் குறிப்பிடுகிறார் கம்பர். அது எந்த அவதாரம்?
நரசிம்ம அவதாரக் கதையைத் தான் கம்பர் கூறுகிறார். யுத்த காண்டத்தில், இராவணனுக்கு வீடணன் அறிவுரை சொல்லும் போது இக்கதையைச் சொல்கிறான். இரணிய வதைப் படலம் என்றே பெயர்.
இது திருவரங்கத்தில் அரங்கேற்றத்தின் போது சர்ச்சைக்குள்ளானது. மூல நூலில் சொல்லப்படாத ஒன்றை எப்படிச் சொல்லலாம் என்று கேள்வி எழுந்தது;
அரங்கேற்ற மண்டபத்தின் அருகே இருந்த மேட்டழகிய சிங்கர் என்னும் நரசிம்மர், கரத்தையும் சிரத்தையும் அசைத்து (கரக்கம்பம், சிரக்கம்பம் செய்து) இதற்கு ஒப்புதல் தந்தார். இதை முன்பொரு புதிரா புனிதமா-விலே பார்த்தோமே!
பரிசிற்கு நன்றி இரவிசங்கர். ஆமருவி அப்பனாச்சே; எங்கே ஆவினைக் காணோம்ன்னு தேடினேன். கீழே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கு. :-)
ReplyDelete4.
ReplyDeleteஇலங்கேஸ்வரன் இராவணனின் தாய்-தந்தையர் பெயர் என்ன?
புலஸ்தியர் மகன் விஸ்ரவசு. சுமாலி என்பவனின் மகள் கைகசி. கைகசி-விஸ்ரவசு, இவர்கள் இருவருக்கும் பிறந்தவன் தான் இராவணன்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
ReplyDelete//G.Ragavan said...
மொதல்ல இந்த பாப்பப் பின்னூட்டம விட்டு வாங்க. இல்லைன்னா பின்னூட்டம் போடவே மாட்டேன்//
ஆகா...pop up பின்னூட்டம் மேல ஏங்க ஜிரா உங்களுக்கு இம்புட்டு கோபம்?
அது இன்னான்னா, முன்பு ஒரு புதிரா புனிதமா-வில், ஒரு அனானி pop up பின்னூட்டம் கேட்டாரு.
கேள்வியைப் பாத்துக்கிட்டே, பதிலைக் காப்பி பேஸ்ட் செய்ய வசதியா இருப்பதாகச் சொன்னாரு. //
ஐயோ ரவி...அதுல அந்த ரெண்டு வரியை டைப் அடிக்குறதுக்குள்ள எனக்கு உயிரே போயிருச்சு. அதுலயும் அல்ட்-2வையும் மாத்துனா...அது இங்க போகுது இது அங்க போகுது...அப்பா இது வசதியா இருக்கு. ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி. "வாங்க" அப்படீன்னு அடிச்சா "வா அங்க"ன்னு வருதுங்க. அதான் கோவிச்சுக்கிட்டேன். எனக்கு மட்டுந்தான் இந்தப் பிரச்சனையா...மத்தவங்களுக்கு இல்லையா? மொதல்ல அதச் சொல்லுங்க மக்களே.
// இராமநாதன் zei...
ReplyDeleteKRS,
ராகவன் கதைக்கு ராகவனின் துணையை நாடி பத்தாம் கேள்விக்கு
10) இ) சம்பாதி-ஜடாயு //
போட்டுக் குடுத்துட்டீரே இராமநாதா...போட்டுக் குடுத்துட்டீரே. இதெல்லாமா வெளிய சொல்றது! ஆனா அங்கதன்னு நீரு ஜில்பான்ஸ் லாஜிக் படிச் சொன்னதும் இன்னொரு லாஜிக்ல சரியாயிருச்சே.
// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
//இராமநாதன் has left a new comment on your post "புதிரா? புனிதமா?? - 4":
KRS, ராகவன் கதைக்கு ராகவனின் துணையை நாடி பத்தாம் கேள்விக்கு//
ஆகா...
மருகேலரா ஓ ராகவா தெரியும்!
ஆனா
மறைவென்ன காண் ஜி ராகவா?
பிட் அடித்தவரை விட, பிட் கொடுத்தவருக்கே அதிக தண்டனை! :-)) //
என்ன செய்வது ரவி. ஆலவாயப்பன் பிட்டுக்கு மண் சுமந்தவன். அவனுக்கும் தண்டனை. எனக்கும் இங்கு தண்டனை. சரி. எல்லாம் நல்லதுக்கே. :-)
5
ReplyDeleteகம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்று தெரியும். அவர் சொந்த ஊர் எது? (கம்ப ராமாயணத்திலேயே இந்த ஊர் பாட்டிலே சொல்லப்படுகிறது!)
தேரழுந்தூர் கம்பன் பிறந்த ஊர். சீர்காழி அதன் அருகில் உள்ளது. திருவரங்கம் அரங்கேற்றம் ஆன இடம். திருவெண்ணெய் நல்லூர் என்பதே சரி. சுந்தரரை ஈசன் தடுத்தாண்ட தலமும் கூட.
இதோ பாடல்:
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரிகடல் உலகம் ஏத்தும் வெண்ணெய்நல் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி
லக்ஷ்மணன் புதல்வன் பெயர் அங்கதனா?
ReplyDeleteஅருமையான தகவல்.
நன்றி ரவி.
6.
ReplyDeleteஎந்த மலையின் மீதிருந்து அனுமன் முதலில் இலங்கைக்குப் பறந்தான்?
கந்தமாதானப் பர்வதம்=இராமன் மறைவுக்குப் பின், அனுமன் இங்கு சென்று தவம் புரிகிறான்; மைனாக பர்வதம்=இது அனுமன் இலங்கைக்குச் செல்லும் வழியில் நடுக்கடலில் கிளம்பி, அனுமனை இளைப்பாறச் சொன்ன மலை; தண்டகாரண்யம்=இது மலை அல்ல! வனம்! இராமன் கோதாவரிக் கரையில் புகுந்த வனம்.
மகேந்திரகிரி என்பதே சரி.
7.
ReplyDeleteஅசோக வனத்தில் உள்ள சீதைக்கு அறிவுரை சொல்ல, மருத்தன் என்னும் அரக்கனை ஏவினான் இராவணன். அயோத்தியைக் கூடப் போரில் வென்று விட்டதாகச் சொல்லச் சொல்லுகிறான். அதுவும் ஒருவரைப் போல் மாய வேடம் போட்டுக் கொண்டு; யார் வேடத்தில்?
தந்தைப் பாசம் கொண்ட பெண் என்பதால், இராவணன் இந்த dirty trick கையாள்கிறான். மாய ஜனகரும் பெண்ணிடம், அயோத்தியின் வீழ்ச்சி சொல்லி, இனி வழி இல்லை, இராவணனையே சேர்ந்து விடுமாறு சொல்கிறார். சீதை இது கேட்டு, "நீயும் என் தந்தையா?" என்று வெகுண்டு எழுகிறாள்!
mmmm nan vanthu parkarathukulle potti mudinju parisum koduthachu! rombave late, sari vidunga, adutha murai parkkalam. chi chi intha paZham pulikkum! :P
ReplyDelete8.
ReplyDeleteகும்பகர்ணனும், இந்திரசித்தும் முறையே யாரால் கொல்லப்பட்டார்கள்?
போரில், கும்பகர்ணனை இராமன் கொன்றான். இந்திரசித்து நிகும்பலா யாகத்தின் போது, இலக்குவனால் கொல்லப்படுகிறான்.
9.
ReplyDeleteஇராமன் போரில் வெற்றி பெற்ற பின், சீதையிடம் சேதி சொல்ல, யார் முதலில் சென்றார்கள்?
திரிசடை=வீடணன் மகள்; அசோக வனத்தில் சீதைக்குத் தோழி. பல முறை அரக்கியர் வன்சொல்லில் இருந்து அன்னையைக் காத்தவள். ஆனால் அவள் போய் வெற்றிச் செய்தி சொன்னதாகக் கவிகள் காட்டவில்லை.
மாறாக முன்பே நன்கு அறிமுகமான சிறிய திருவடி, அனுமனைத் தான் சேதி சொல்ல அனுப்பினார்கள். அவனும்
"ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!" என்று சுப செய்தி கொண்டு சென்றான்.
10.
ReplyDeleteபெரும் நெருப்பில் இருந்து தம்பியைக் காத்தான் ஒரு அண்ணன்! பின்னர் அவனால் தான் கதைக்கே ஒரு பேருதவி கிட்டியது! அந்த அண்ணன்-தம்பி யார்?
தம்பி ஜடாயுவை, அண்ணன் சம்பாதி ஒரு முறை பற்றி எரியும் காட்டுத் தீயில் இருந்து காத்தான். இருவரும் இள வயதினர். இதில் சம்பாதியின் ஒரு பக்க இறக்கைகள் கருகிப் போய், பறக்க முடியாது போய் விடுகிறது. அதனால் தரையில் இருந்தே இரை தேடி வாழ்ந்தான். கண்பார்வை மட்டும் அதி கூர்மை.
வானரங்கள் சீதையைத் தேதி வரும் போது, வெற்றி காணாது, தீக்குளிக்க முற்பட...அப்போது தான் சம்பாதி, இருந்த இடத்தில் இருந்தே, தன் கழுகுப் பார்வையால், சீதை இலங்கையில் இருப்பதைப் பார்த்துச் சொன்னான்.
//வென்றவர்க்கும் மற்றும் உடன் நின்றவர்க்கும் இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!//
ReplyDeleteநெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கு பாய்ந்துவிட்டது. அருமையான தொரு படத்திற்க்கு மிக்க நன்றி.
இதே பாணியில் ஒரு மஹாபாரத வினாடி வினா செய்வீர்களா?
ரவி
ReplyDeleteஆதிசேஷனே இலக்குவன் என்ரும் தன் மகள் கவுரியை மணந்த இந்திரசித்தை கொல்லவே இலக்குவ்னாக் வந்ததாகவும் கதை உண்டு. கவுரியும் அன்னையை வேண்டி என் தந்தையை தவிரவும் 14 வருடங்கள் உறங்காமல் இருக்கும் ஒருவர் மட்டும் அல்லாமல் எவராலும் என் கணவ்ரை கொல்ல முடியாது என்று வரம் பெற்றுக்கொள்வதாகவும் உண்டு. எந்த தந்தையும் தன் மருகன் இரப்பதை விரும்ப மாட்டாதவர் என்ற நம்பிக்கையில். அங்கதன் என்பது இலக்குவனின் பிள்ளை என்ற விவரம் புதிது.
// குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆமருவி அப்பனாச்சே; எங்கே ஆவினைக் காணோம்ன்னு தேடினேன். கீழே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கு. :-)//
குமரன்...ஆவினைக் க்ரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க...
பெருமாளுக்கு அருகில் கருடனும், பிரகலாதனும், காவிரித் தாயும் கூட உள்ளனர். பார்த்தீர்களா?
// G.Ragavan said...
ReplyDeleteஆனா அங்கதன்னு நீரு ஜில்பான்ஸ் லாஜிக் படிச் சொன்னதும் இன்னொரு லாஜிக்ல சரியாயிருச்சே//
ஜில்பான்ஸ் லாஜிக் - ????
மருத்துவர் என்னா சொன்னாரு?
நம்ம ஜிரா எதுல நின்னாரு?
ஆகா....புதிரா புனிதமா...ஒரிஜினல் புதிரா புனிதமா ஆகி விடும் போல இருக்கே!
வெட்டிப்பயல் அவர்களே - நீங்களாச்சும் வந்து எனக்குப் புரியற மாதிரி விளக்குங்கள்!
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeletemmmm nan vanthu parkarathukulle potti mudinju parisum koduthachu! rombave late, sari vidunga, adutha murai parkkalam. chi chi intha paZham pulikkum! :P//
பழம் புளிச்சா, ரசம் அரைக்க வச்சுக்கலாம் கீதாம்மா...அதுவும் வால் மிளகு ரசத்துக்கு நல்லா இருக்கும் அல்லவா? :-)
//சிவமுருகன் said...
ReplyDeleteஇதே பாணியில் ஒரு மஹாபாரத வினாடி வினா செய்வீர்களா?//
கண்டிப்பா செஞ்சுடலாம் சிவா.
மகாபாரதத்தில் கூட்டம் அதிகம். பல பேர்கள்...எளிதில் மறந்து போகும் - எனக்கு! :-)
//பத்மா அர்விந்த் said...
ReplyDeleteரவி
ஆதிசேஷனே இலக்குவன் என்ரும்//
இது தெரிந்த கதை பத்மா.
//தன் மகள் கவுரியை மணந்த இந்திரசித்தை கொல்லவே இலக்குவ்னாக் வந்ததாகவும் கதை உண்டு.//
ஆகா...இது புதிய தகவல்; நன்றி!
இந்திரசித்தின் மனைவி சுலோசனையும் மண்டோதரி போலவே ஒரு பதிவிரதை என்று தான் தெரியும். இவ்வளவு மேலதிக தகவல் தெரியாது!
அட்டகாசம்.
ReplyDeleteஅன்புடன்,
ராமச் சந்திரன்.
ராமாயணத்தில் எனக்கு தெரியாத ஒரு சில விஷயங்களை உங்கள் மூலம் கற்றுக் கொண்டேன். நன்றி திரு KRS
ReplyDelete//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//சிவமுருகன் said...
இதே பாணியில் ஒரு மஹாபாரத வினாடி வினா செய்வீர்களா?//
கண்டிப்பா செஞ்சுடலாம் சிவா.
மகாபாரதத்தில் கூட்டம் அதிகம். பல பேர்கள்...எளிதில் மறந்து போகும் - எனக்கு! :-)
//
உங்களுக்கு தானே, ;-) மற்றவர்களுக்கில்லையே! :)