Monday, May 21, 2007

அ(ச்)சைவப் புதிரா? புனிதமா?? - 5

இதோ...விடைகளும், வின்னர்களும்
கீதா சாம்பசிவம் 9/10
ஜெயஸ்ரீ, குமரன் 7/10
ப்ரசன்னா, திராச 6/10

விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன.
விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்!
நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(திருக்கடவூரிலே அம்மையும் அப்பனும்)!
பாலாம்பிகை உடனுறை மிருத்யுஞ்ஜய சுவாமி
(மிருத்யு=எமன், ஜெய=வெற்றி) = கால சம்கார மூர்த்தி
படத்தைக் கூர்ந்து கவனித்தால், ஈசனின் காலடியில் எமதர்மனும், அருகே மார்க்கண்டேயரையும் தரிசிக்கலாம்.


என்ன...தரிசித்து மகிழ்ந்தீர்களா?


இந்தப் புதிரா புனிதமாவில், ஒரே ஒரு பதிவர் மட்டும் விலக்கி வைக்கப் படுகிறார்!
ஆகா...இது என்ன அநியாயம்! யார் எந்தப் பதிவர்?
ஏன் விலக்கி வைக்கப் படுகிறார்? என்ன குற்றம் செய்தார்?

....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா...
கேள்விகள் எல்லாம் கேட்காதீங்க!
இது சைவப் புதிரா புனிதமா!
அதுனால "அச்சைவம்" சாப்பிடறவங்க அவசியம் கலந்துக்கணும்! :-)

ஓவர் டு நம்ம மருத்துவர் ராமநாதன்!
அவர் தான்பா குவிஸ் மாஸ்டரு! அதான் அவர் மட்டும் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாரு!
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்!
(கவனிக்கவும்: நியுயார்க் நேரப்படி....ரஷ்ய நேரப்படி அல்ல! :-)

ராமனின் தலீவா (நாதா), பரிசுத் தொகை எவ்வளவுன்னு நீங்களே செப்பிடுங்க!


1

அகத்தியருக்கு தமிழிலக்கணம் அறிவித்த பெருமான் எழுந்தருளியுள்ள ஊர்?

1

அ) குற்றாலம்
ஆ) தலைக்காவிரி
இ) இன்னாம்பூர்
ஈ) மதுரை

2

'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி' நின்ற மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் முக்தியளித்த தலம்?

2

அ) திருக்கடையூர்
ஆ) ஒப்பிலியப்பன் கோவில்
இ) திருவையாறு
ஈ) திருச்சேறை

3

பெருமாள் கோயில்களில் அங்கப்பிரதட்சணம் செய்வர். ஆனால் இந்தியாவில் இந்த சிவன் கோயிலில் மட்டுமே அங்கப்பிரதட்சணம் செய்யும் மரபு இருக்கிறது.

காசிக்கு ஒரு வீசை மேல் என்று எல்லா சிவக்ஷேத்திரங்களும் சொல்லிக்கொண்டாலும் இந்த ஊரே சிவலிங்கமென நால்வர் முதல் ஆதிசங்கரர் வரை இவ்வூரை தனிச்சிறப்புடன் புகழ்ந்திருக்கின்றனர்.

3

அ) ராமேஸ்வரம்
ஆ) சிவபுரம்
இ) திருவாடானை
ஈ) திருவாதவூர்

4

சுந்தரரைக் கல்யாணத்தின் போது தடுத்து ஆட்கொண்ட ஊர்?

4

அ) திருவாரூர்
ஆ) திருவொற்றியூர்
இ) திருவெண்ணெய் நல்லூர்
ஈ) திருமழபாடி

5

நந்தானாருக்காக, "சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று சிவன் நந்தியை விலகுமாறு பணித்தது இங்கே தான்..

5

அ) சிதம்பரம்
ஆ) சீர்காழி
இ) திருப்புன்கூர்
ஈ) திருவானைக்கா

6நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்திய சரபேஸ்வரர் தலம் எங்கே?... மிகவும் உக்ர மூர்த்தி.6

அ) திருபுவனம்
ஆ) தாராசுரம்
இ) அகோபிலம்
ஈ) திருக்காளத்தி

7

பாம்பு கடித்து இறந்தவரை உயிர்த்தெழச் செய்ய, சம்பந்தர் பதிகம் பாடிய தலம்...

7

அ) கும்பகோணம் - ஆதிகும்பேஸ்வரர்
ஆ) காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர்
இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர்
ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

8பொதுவாய் இராமரைப் பாடும் தியாகராஜர், இத்தலத்திலுள்ள சுந்தரேசுவரரை தரிசித்து ஐந்து கீர்த்தனைகள் பாடியிருக்கிறார். மிகவும் பிரபலமானவை.8

அ) கோவூர்
ஆ) திருவையாறு
இ) திருவானைக்கா
ஈ) மதுரை

9

அனுமன் கொண்டு வந்த லிங்கமும் ராமேஸ்வரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது...பெயர் என்ன?

9

அ) ராமலிங்கம்
ஆ) விஸ்வலிங்கம்
இ) ஹனுமத்லிங்கம்
ஈ) உத்தரலிங்கம்

10திருமலை திருப்பதியின் கீழே கோவில் கொண்டு, அருவிச் சாரலில், பெருமாளைச் சேவித்து மகிழ்ந்திருக்கும் ஈசன் யார்?

10

அ) சேஷகிரீஸ்வர சுவாமி
ஆ) கபிலேஸ்வர சுவாமி
இ) சுந்தரேஸ்வர சுவாமி
ஈ) கோவிந்தராஜ சுவாமி




இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!



1 அ) குற்றாலம் ஆ) தலைக்காவிரி இ) இன்னாம்பூர் ஈ) மதுரை

2 அ) திருக்கடையூர் ஆ) ஒப்பிலியப்பன் கோவில் இ) திருவையாறு ஈ) திருச்சேறை

3 அ) ராமேஸ்வரம் ஆ) சிவபுரம் இ) திருவாடானை ஈ) திருவாதவூர்

4 அ) திருவாரூர் ஆ) திருவொற்றியூர் இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருமழபாடி

5 அ) சிதம்பரம் ஆ) சீர்காழி இ) திருப்புன்கூர் ஈ) திருவானைக்கா

6 அ) திருபுவனம் ஆ) தாராசுரம் இ) அகோபிலம் ஈ) திருக்காளத்தி

7 அ) கும்பகோணம் - ஆதிகும்பேஸ்வரர் ஆ) காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர் ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

8 அ) கோவூர் ஆ) திருவையாறு இ) திருவானைக்கா ஈ) மதுரை

9 அ) ராமலிங்கம் ஆ) விஸ்வலிங்கம் இ) ஹனுமத்லிங்கம் ஈ) உத்தரலிங்கம்

10 அ) சேஷகிரீஸ்வர சுவாமி ஆ) கபிலேஸ்வர சுவாமி இ) சுந்தரேஸ்வர சுவாமி ஈ) கோவிந்தராஜ சுவாமி


47 comments:

  1. கேள்விகளெல்லாம் சூப்பர்... கடைசியா விடையோட விளக்கமும் சொல்லனும் ;)

    ReplyDelete
  2. //வெட்டிப்பயல் said...
    கடைசியா விடையோட விளக்கமும் சொல்லனும் ;)//

    மொதல்ல விடையச் சொல்லுங்கப்பா...விளக்கத்த மருத்துவர் வந்து சொல்லுவாரு!

    பாலாஜி, கேள்விகளால் ரொம்பவே திணறிப் போயிட்டேன். ஹெல்ப் ப்ளீஸ்! 50-50? :-)

    ReplyDelete
  3. அந்தாளு போட்டதா? அவரு பக்கத்து ஊராச் சொல்லி இருப்பாரு. நமக்குத் தெரியாது சாமியோவ்.

    ReplyDelete
  4. 1அ) குற்றாலம்

    2அ) திருக்கடையூர்

    3 இ) திருவாடானை

    4 அ) திருவாரூர்

    5 இ) திருப்புன்கூர்

    6 ஆ) தாராசுரம்
    7 ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

    8 அ) கோவூர்
    9 ஈ) உத்தரலிங்கம்

    10 ஆ) கபிலேஸ்வர சுவாமி இ)

    ReplyDelete
  5. SK ஐயா தான் இன்று முதல் போணி!
    வாங்க SK
    5,7,8,10 கரெக்டு!
    அதுவும் அந்த சம்பந்தர், பாம்பு விஷம் முறித்த ஊரைச் சொன்னீங்க பாருங்க! சூப்பர்!

    ReplyDelete
  6. 2- திருக்கடையூர்
    3-கேள்வி தப்பு போல் தெரிகிறது..வைக்கதஷ்டமி அன்று எங்களூர் கோவிலில் (சிவன்) கூட அங்கப் பிரஷ்ணம் செய்வோம் என்று லோகல் பட்சி சொல்கிறது :)
    5-சீர்காழி

    ReplyDelete
  7. 1 இ) இன்னாம்பூர்

    2 ஈ) திருச்சேறை

    3 அ) ராமேஸ்வரம்

    4 இ) திருவெண்ணெய் நல்லூர்

    5 இ) திருப்புன்கூர்

    6 ஆ) தாராசுரம்

    7 இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர்

    8 இ) திருவானைக்கா

    9 அ) ராமலிங்கம்

    10 அ) சேஷகிரீஸ்வர சுவாமி

    ReplyDelete
  8. சிவமுருகன்
    கலக்குறீங்க...அகத்தியருக்கு தமிழிலக்கணம் எங்கு...எனக்குத் தெரியாமல் முழி முழின்னு முழிச்சேன்! கொஞ்சம் கடினமான கேள்வியும் கூட!

    ராமநாதரே, பாருங்க...சிவா ஒங்க கேள்விக் கணையை முறிச்சிட்டாரு!

    சிவா
    1,2,4,5 கரெக்டுங்க!

    ReplyDelete
  9. ச.சங்கர்...வாங்க...
    ஆகா...ஒங்க ஊரு சிவன் கோவில்-லேயும் அங்கப்பிரதிட்சிணம் உண்டா?
    கேரளாவில் கூட பல சிவாலயங்களில் உண்டு தான்!

    சரி...கேள்வியைக் கொஞ்சமா மாத்திக்கலாம்...
    இங்குப் பிரதிட்சிணம் செய்தால், லிங்கத்தின் மீது கால் படும் என்பதால் தான்,
    நடைப் பிரதிட்சணத்திற்குப் பதிலாக அங்கப்பிரதிட்சிணம் செய்தார்கள் முன்பு! (சம்பந்தர் உட்பட)...

    இப்ப சொல்லுங்க!
    இல்லாக்காட்டி நம்ம ராமநாதனைப் பிடிங்க! :-)

    ReplyDelete
  10. ella kelvikum answer pass!!
    enna edukum answer theriyathu..
    neenga podum pothu parthukaren

    ReplyDelete
  11. 2 அ) திருக்கடையூர்
    5 அ) சிதம்பரம்
    6 அ) திருபுவனம்

    மோகன் P. சிவம்
    ரியாத்.

    ReplyDelete
  12. 1. இன்னாம்பூர்
    2. திருக்கடையூர்

    3. சிவபுரமோ(நிச்சயமாய்த் தெரியாது)
    4. திருவெண்ணெய் நல்லூர்
    5. திருப்புன்கூர்(இது ஒண்ணு தான் சரின்னு நினைக்கிறேன்.2-வதும் கூட)
    6. திருபுவனம் (ஹிஹிஹி, வாழ்க்கைப் பட்டது தஞ்சை ஜில்லாவாச்சே)
    7. திருமருகல்
    8. மதுரையோ (கோவூர் போனதில்லை)
    9. உத்தரலிங்கமோ( மற்ந்துட்டேனே அ.வ.சி.)
    10. சேஷகிரீஸ்வர ஸ்வாமி( இதில் மருத்துவரை விட்டதாலே ரொம்பவே கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்டிருக்காரே! :P)

    ReplyDelete
  13. வாங்க மோகன் P சிவம்
    6 ஆம் கேள்விக்கு விடை சரி...
    அது சரி...மூன்று கேள்வி தான் அட்டெம்ப்ட் செஞ்சீங்க போல இருக்கே!

    ReplyDelete
  14. கீதாம்மா...
    கலக்கியிருக்கீங்க! ஜாக்பாட் நீங்க தான்னு நினைக்கிறேன்!
    2,8,9,10 தவிர
    மற்ற எல்லாம் சரியே!

    மதுரை/கோவூர் என்று ஏன் குழப்பம்?
    ரீ-அட்டெம்ப்ட் செஞ்சு 10/10 வாங்கிடுங்க :-)

    ReplyDelete
  15. பதிவை இட்டதற்கு மிக்க நன்றி கே.ஆர்.எஸ்..

    சிவா அடிச்சு நிமித்துவதுக்கு காரணம்... தஞ்சாவூர் மாவட்டமாச்சே.. சும்மாவா??

    ------
    ஒரேயடியா விலக்கிவிட்டா எப்படி..

    கடைசி ரெண்டு கேள்விகள் உங்களோடது இல்லியா...

    9) விஸ்வலிங்கம்

    ஹனுமானை காசியிலிருந்து விஸ்வநாதரை எடுத்துவரச் சொன்ன ராமன், நல்ல நேரம் முடிவதற்குள் பிடித்தது ராமலிங்கம்... ஹனுமான் பின்னர் கொண்டுவந்தது விஸ்வலிங்கம்.. சரியா?? பின்னால் வந்ததுன்னாலும் விஸ்வலிங்கத்துக்கே இங்கே முத மரியாதை!

    10) கபில முனிவரின் விருப்பத்திற்கிணங்க சிவனும் எழுந்தருளியது கபிலேஸ்வரனாகத்தானே...

    ReplyDelete
  16. 1. திருக்குற்றாலம்
    2. திருக்கடையூர்
    4. திருவெண்னைநல்லூர்
    5. சிதம்பரம்
    6. திருபுவனம்
    7. திருமருகல்
    8. கோவூர்
    9. விஸ்வலிங்கம் ??

    ReplyDelete
  17. 1) குற்றாலம்
    2) திருக்கடையூர்
    3) ராமேஸ்வரம்
    4) திருவெண்ணெய் நல்லூர்
    5) திருப்புன்கூர்
    6) திருபுவனம்
    7) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்
    8) கோவூர்
    9) விஸ்வலிங்கம் (காசிலிங்கம்)
    10) கோவிந்தராஜ சுவாமி

    ReplyDelete
  18. //ராமநாதன் said//
    பதிவை இட்டதற்கு மிக்க நன்றி கே.ஆர்.எஸ்..

    சிவா அடிச்சு நிமித்துவதுக்கு காரணம்... தஞ்சாவூர் மாவட்டமாச்சே.. சும்மாவா??
    ------
    ஒரேயடியா விலக்கிவிட்டா எப்படி..
    கடைசி ரெண்டு கேள்விகள் உங்களோடது இல்லியா...//

    அச்சோ,
    நீங்க வேற ராமநாதன்!
    ரெண்டு கேள்விக்கு விடையே தெரியாம முழிச்சிட்டு, நமக்குத் தெரிஞ்ச 2 கேள்வியைவே நைசா போட்டுக்கிட்டேன்! :-)

    சரி, பரிசுத் தொகை என்னன்னு சொல்லவே இல்லியே!

    ReplyDelete
  19. //ஒரேயடியா விலக்கிவிட்டா எப்படி..
    கடைசி ரெண்டு கேள்விகள் உங்களோடது இல்லியா...//

    அதுக்கும் உங்க ரெண்டு பதிலுமே சரி தான் மருத்துவரே!
    கொஞ்சம் ஈசியாவும் இருக்கட்டுமேன்னு தான் ரெண்டு கேள்விய மட்டும் மாத்திட்டேன்...

    ReplyDelete
  20. ஜெயஸ்ரீ, வாங்க...
    நீங்க இல்லாம புதிரா புனிதமா விளையாட்டா?
    4,6,7,8,9 கரெக்டுங்க!
    நந்தி விலகிய இடம், கொஞ்சம் முயற்சி செய்தா ஈசி தான்! :-)

    ReplyDelete
  21. வாங்க ப்ரசன்னா
    4,6,7,8,9 கரெக்டுங்க!

    ReplyDelete
  22. 2. திருச்சேறை ??

    ReplyDelete
  23. 5. திருப்புன்கூர்

    ReplyDelete
  24. சரி:
    கடினமான கேள்விக்கு எல்லாம் க்ளூ கொடுத்திடலாமா?

    தமிழிலக்கணம் அறிவித்த ஊர் = குற்றாலம் இல்லை!

    நந்தி விலகிய இடம் = சிதம்பரம் கிடையாது!

    தியாகராஜர், ஐந்து கீர்த்தனைகள் பாடியிருக்கிறார் = இது திருவையாறு பஞ்சரத்னம் இல்லை! ஸ்ரீரங்கமும் இல்லை!

    அனுமன் கொண்டு வந்த லிங்கம் = வட காசியில் இருந்து...

    ReplyDelete
  25. ஜெயஸ்ரீ..
    2,5 சரியே...

    7 கேள்விக்குச் சரியாச் சொல்லி, கீதாம்மாவை ஓவர்டேக் செஞ்சிட்டீங்க! :-)

    ReplyDelete
  26. கே.ஆர்.எஸ்,

    //சரி, பரிசுத் தொகை என்னன்னு சொல்லவே இல்லியே!//

    பத்துவித கேள்விகள் பைந்தமிழில் கேட்டதற்கே
    சித்தன் சிறப்பினைச் சீராகச் சொல்லிவிட்டால்
    எத்தனை கோடி இதற்கிங்கே ஈடாமோ?
    பித்தன் பெருமையே காண்!

    **********
    கொத்தனார் வாழ்க வாழ்க!

    ----------
    அப்புறம், இந்த குவிஸ்ஸையே உங்க பதிவுல நடத்துன காரணம் பரிசு நீங்க கொடுப்பீங்கன்னுதானே.. அப்படியே எனக்கு ராயல்ட்டியும்! :))
    -----------

    ReplyDelete
  27. அ) குற்றாலம்
    திருக்கடையூர்
    ராமேஸ்வரம்
    திருவாரூர்
    திருப்புன்கூர்
    திருபுவனம்
    திருமருகல்
    கோவூர்
    விஸ்வலிங்கம்
    கபிலேஸ்வர சுவாமி

    ReplyDelete
  28. கேள்விகளைப் படித்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது. முயல்கிறேன். பார்ப்போம்.

    1. இ) இன்னாம்பூர்
    2. அ) திருக்கடையூர்
    3. இ) திருவாடானை
    4. இ) திருவெண்ணெய் நல்லூர்
    5. இ) திருப்புன்கூர்
    6. அ) திருபுவனம்
    7. ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்
    8. ஈ) மதுரை
    9. ஆ) விஸ்வலிங்கம்
    10. ஆ) கபிலேஸ்வர சுவாமி

    ReplyDelete
  29. திராச ஐயா... வாங்க
    5,6,7,8,9,10 சரி....
    இன்னும் நாலு தான் பாக்கி!...

    ReplyDelete
  30. //குமரன் said
    கேள்விகளைப் படித்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது. ... கேள்விகளைப் படித்தால் மலைப்பாகத் தான் இருக்கிறது//

    குமரன்
    உங்களுக்கே மலைப்பா?
    ராமநாதன், உமது விளையாட்டே விளையாட்டுப்பா! :-)

    2,3,8 தவிர, மற்ற எல்லாமே சரி தான் குமரன்!
    அது என்ன எட்டாம் கேள்விக்கு, மதுரைன்னு சொல்லிட்டீங்க?
    சுந்தரேஸ்வரர்-னா எப்பவுமே உங்களுக்குத் தானா?
    எங்களுக்கும் தான் சொந்தம் :-)

    ReplyDelete
  31. 1. திருக்குற்றாலமாகத்தான் இருக்க வேண்டும். குற்றாலம் முதலில் வைணவத்தலமாக இருந்ததாகவும் அங்கு அகத்தியரை உள்ளே விட மறுத்ததாகவும்..அவர் வைணவச் சின்னங்கள் அணிந்து சென்று குறுகு குறுகு குற்றாலா என்று திருமாலைக் குறுக்கி லிங்கமாக்கி விட்டார் என்றும் ஒரு கதை உண்டு.

    2. திருக்கடையூர். ஞமலியும் எருமையும் மாண்டு மீண்ட இடமல்லவா.

    3. எனக்குத் தெரிந்து பல சிவன் கோயில்களில் அங்கஞ்சுற்றுவர். இந்த ஒரு குறிப்பிட்ட கோயிலில் மற்றுமன்று. ஒருவேளை திருவாதவூராக இருக்கலாம். மாணிக்கவாசகர் பிறந்தவூரல்லவா.

    4. திருவெண்ணெய்நல்லூர் - வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்....மறக்குமா...பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா!

    5. தில்லை - சைவத்தின் எல்லையாக இருந்த ஊர். இப்பொழுது தொல்லையாக இருக்கிறது. சிதம்பரம்னு சொல்லீருக்கீங்களே.

    7. தெரியவில்லை

    8. திருவையாறாக இருக்க வாய்ப்புள்ளது. மதுரைக்கெல்லாம் தியாகராஜர் போனாத கேள்விப்பட்டதில்லை. கோவூர்...கும்பகோணத்திற்கு அருகிலா உள்ளது?

    9. உத்தரலிங்கம். உத்தர திக்கிலிருந்து வந்ததால்

    10. பெருமாளைச் சேவித்துக் கொண்டிருக்கும் ஈசனைச் சைவம் சொல்லித்தரவில்லை. ஆகையாலும் விடை தெரியாது. :)

    ReplyDelete
  32. ஜிரா

    4,8 ஆம் கேள்விக்கு விடை சரியே!

    தில்லை/சிதம்பரம் - இங்கு நந்தி விலகல் இல்லைன்னு சொல்லி, அப்படியே மற்ற சில கேள்விகளுக்கும் க்ளூ கொடுத்திருந்ததே...நீங்க பாக்கலையா? பாத்துட்டீங்க எளிதாகிடும்! :-)

    //குறுகு குற்றாலா என்று திருமாலைக் குறுக்கி லிங்கமாக்கி விட்டார் என்றும் ஒரு கதை உண்டு//

    அட, அப்ப குற்றாலநாதரை வணங்கும் போது, அவரின் மூலமான ஆதிமூலத்தையும் சேர்த்தே வணங்குகிறோமா! சூப்பர்!

    //ஞமலியும் எருமையும் மாண்டு மீண்ட இடமல்லவா//

    ஆமாம்..ஆனால் மார்க்கண்டேயருக்கு வரம் தான் அங்கு. பிறவிக் கடன் நீக்கம் வேறு இடத்தில்.

    ReplyDelete
  33. பதில்கள் இதோ:

    முயற்சித்தவர்களுக்கும் அளித்த KRSக்கும் நன்றி!

    --------

    1. இ) இன்னாம்பூர்

    இறைவன்: கொந்தார்பூங்குலம்மை உடனுறை எழுத்தறிநாதர்

    கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் திருப்புறம்பியம் செல்லும் வழியில் உள்ளது இத்திருக்கோயில்.

    அகத்தியருக்கு இத்திருக்கோயிலில்தான் தமிழிலக்கணத்தை இறைவன் அளித்ததாக ஐதீகம். அதனாலேயே இறைவனின் பெயர் எழுத்தறிநாதர். இன்றும் சுற்றுவட்டாரத்தில் பள்ளிக்குச் செல்லுமுன் சிறு குழந்தைகளை இங்கு அழைத்துவந்து ஈசுவரன் சந்நிதியில் அரிசியில் அ,ஆ என்று எழுதப் பயிலத் தருகின்றனர்.

    ஆனால் அகத்தியருக்கு கயிலைக்காட்சி காட்டியது இங்கேயில்லை. அது வேதாரண்யம் அருகில் இருக்கிறது. ஊர் பெயரே அகத்தியான்பள்ளி.

    அப்பரின் பதிகங்களில் "எல்லாரு மேத்தத் தகுவார் போலும்! இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே!" என இத்தலம் இன்னம்பர் என்று குறிப்பிடப்படுகிறது.

    --------------------
    2. ஈ) திருச்சேறை

    இறைவன்: ஞானாம்பிகை உடனுறை செந்நெறியப்பர்

    கும்பகோணத்திலிருந்து குடவாசல் செல்லும் வழியில், நாச்சியார்கோயிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இத்திருக்கோயில்.

    மூலவர் பெரும்பாலும் ஆதரவற்றுதான் இருப்பார். ஆனா இங்கே "கடன் பட்டார் நெஞ்சம் போல" என்று சொன்னது வெளிப்பிரகாரத்தில் இருக்கும் மூலவரின் பின்புறம் இருக்கிறது ருண விமோசன லிங்கம் பற்றி. 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து இவரை வழிபட்டு வந்தால் பூலோக, பித்ரு மற்றும் பிறவிக் கடன்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்று நம்பிக்கை. தலவரலாற்றின் படி மார்க்கண்டேயர் இல்லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தொழுது பிறவிக்கடனிலிருந்து விடுபட்டாராம்.

    மற்றொரு விசேஷமான விடயம் இங்கே இருக்கும் பைரவர். இங்கே சிவபெருமானே பைரவர் உருவில் நிற்பதாக ஐதீகம். அதைக்கருத்தில் கொண்டே திருநாவுக்கரசர் வேறெங்கும் இல்லாதபடி இங்கே பைரவரைக் குறித்தே

    'விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை
    தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
    உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
    சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே!'

    என்று தனிப்பாடலே பாடியிருக்கிறார்.

    இக்கோயிலிற்கு அருகிலேயே சாரநாதப்பெருமாளின் திருக்கோயிலும் இருக்கிறது. இது நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

    ReplyDelete
  34. 3. கேள்வி கேட்ட எனக்கு கேள்வி ஞானம் தான். அதனாலேயே கேரளக்கோயில்களின் முறைகள் தெரியாமல் கேட்டுவிட்டேன். கே.ஆர்.எஸ் திருத்தியவாறு இருந்திருந்தால் சரியான பொருள் வந்திருக்குமென நினைக்கிறேன்.

    ஆ) திருச் சிவபுரம்

    இறைவன்: சிங்காரவல்லி உடனுறை சிவபுரிநாதர்

    இதற்கு வழிசொல்வது ரொம்ப கஷ்டம். :( கும்பகோணத்திலிருந்து சாக்கோட்டை செல்லும் சாலையில் வரும் இரண்டாவது பாலத்திற்கு பிறகு இடது பக்கம் செல்லும் மிகக் குறுகலான ஒத்தை ரோட்டில் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் செல்லவேண்டும். போர்ட்டெல்லாம் கிடையாது.

    திருச்சிவபுரம் என்ற ஊரே சிவலிங்கமெனக் கருதியே அப்பரும் சம்பந்தரும், சங்கரரும் இங்கே அங்கப்பிரதட்சணம் செய்தபடியே வந்து இறைவனைத் தொழுததாக ஐதீகம். இன்றும் அங்கப்பிரதட்சணங்கள் இங்கே உண்டு. இங்குள்ள பைரவரும் மிகவும் சிறப்புடையவர்.

    ------------------

    4. இ) திருவெண்ணைநல்லூர்

    இந்தக்கேள்வியும் சற்றே குழப்பம் ஏற்படுத்திருக்குமோ? சுந்தரரின் திருமணத்தை தடுத்தது திருநாவலூரில். ஆனால் ஆட்கொண்டது திருவெண்ணைநல்லூரில். ஏனெனில் தடுத்தாட்கொள்வது என்பது மெய்யறிவு புகட்டுவதே அல்லவா. அதுவும் தவிர இங்குள்ள இறைவனின் பெயரே கேள்விக்கு பதிலாகும்.

    இறைவன்: வேற்கண்ணியம்மை சமேத தடுத்தாட்கொண்டநாதர்

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி வலப்புறம் செல்ல வழிகாட்டும் பலகை. அங்கிருந்து சுமார் ஏழு எட்டு கிலோமீட்டர் உள்ளே செல்லவேண்டும்.

    ஓலையைச் சாட்சியாய் காட்டி சுந்தரரின் திருமணத்தை நாவலூரில் நிறுத்திய எம்பிரான் அங்கிருந்து அவரை நடத்தியே அருகிலிருக்கும் திருவெண்ணைநல்லூருக்கு தன் இல் என கூறி அழைத்துச் சென்று பின்னே 'பித்தா பிறைசூடி" என்று அடியெடுத்துத் தந்து முதற்பாடல் பாடச்செய்தது வரலாறு. 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' என்று திருவருட்செல்வர் படத்தில் அருமையான பாடல் இவ்விடத்தில் வரும்.

    அதே பதிகத்தில் இரண்டாம் பாடல் இன்னும் பொருத்தம் இங்கே யென்று தோன்றுவதால்..

    'நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
    பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
    வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
    ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.'

    ReplyDelete
  35. 5. இ) திருப்புங்கூர்

    வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மிக அருகில் இத்தலம் இருக்கிறது.

    இறைவன்: சொக்கநாயகியம்மை உடனுறை சிவலோகநாதர்

    சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலில் வரும் செய்தி நடந்தது இங்கேதான். நந்தனார் கோயிலிற்கு வெளியே நின்று தரிசிக்க முயன்றபோது குறுக்கே மாபெரும் நந்தி குறுக்கே படுத்திருப்பதை 'ஒரு மாடு படுத்திருக்குதே' என்று இறைவனிடம் முறையிட.. இறைவனும் - தனக்கும் தன் அடியார்க்கும் குறுக்கே நந்திகேஸ்வரனே வந்தாலும் அவன் தன் பெருமையை இழந்து வெறும் அறிவற்ற மாடு என்றே பொருள் கொள்ளும்படி நந்தியை 'சற்றே விலகி' அமரச் சொல்கிறார். கோயிலின் வாயிற்படியிலிருந்தே இந்தக் காட்சியையும் அதன் பெருமையும் நினைக்கும்போது மெய் சிலிர்க்கும்.

    இங்கே வேறு சில விஷேசங்களும் உண்டு. கோயிலின் திருக்குளம் விநாயகரால் ஒரே நாளில் வெட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். மேலும் சுந்தரமூர்த்தி நாயனார் இக்கோயிலுக்கு தொழ வந்த சமயம் இப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதால் ஊர்மக்கள் சுந்தரரை வேண்டுகின்றனர். அவர் மழைபொழிந்தால் இறைவனுக்கு என்ன தருவீர் எனக் கேட்க பன்னிருவேலி தருவதாக ஊர்மக்கள் கூற மழைபெய்விக்க சுந்தரர் இறைவனை தொழுகிறார். பெருமழை நிற்காமல் பெய்து வறட்சி நீங்கியது.. ஆனால் ஆட பத்துகாசு, நிறுத்த இருபதுகாசு கதையாக நிற்காமல் பெய்த மழையை நிறுத்தவழி தெரியாது தவித்த ஊர்மக்கள் மீண்டும் சுந்தரரிடம் வந்து பெருமழையை நிறுத்தினால் மேலும் பன்னிருவேலி நிலத்தை இறைவனுக்குத் தருவதாக கூற, அவரும் இறைவன் அருளால் அடாத மழையை நிறுத்தச் செய்கிறார். இச்சுவையான சம்பவத்தை

    'வைய கமுற்றும் மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
    உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
    ஒலிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
    பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
    செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
    செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே!'

    தன் பாடல்களில் குறிப்பிட்டும் உள்ளார். இப்படி பல பெருமைகள் வாய்ந்த ஊர் இத் திருப்புன்கூர்.


    --------------------

    6. அ) திருபுவனம் - சரபேஸ்வர மூர்த்தி

    இக்கோயில் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ளது.

    இத்திருக்கோயில் வரலாற்றின்படி இரண்யகசிபுவைக் கொன்று இரத்தம் குடித்த நரசிம்மரின் உக்கிரம் பன்மடங்கு அதிகமாக, தேவரும் முனிவரும் சர்வேசுவரனிடம் சரண் புகுந்து நரசிம்மரை சாந்தப்படுத்துமாறு வேண்டினர். சர்வேஸ்வரனும் வீரபத்திரனை அழைத்து நரசிம்ம மூர்த்தியை அடக்கி வரும்படி பணித்தார். இதனால் உக்கிர நரசிம்மரை எதிர்கொண்ட வீரபத்திரன் அவரிடம் போரிட முடியாது தவித்து சிவனை தியானிக்க, சர்வேஸ்வரனின் சக்தி அவனுள் புகுந்து வீரபத்திரன் பாதி மிருகமும் மீதி பறவையுமாய் கொடூர தோற்றம் கொண்டு நரசிம்ம மூர்த்தியை வெற்றி கண்டார். பின் சரபேசுவரர் நரசிம்மரின் உடலை சிவனின் காலடியில் வைக்க, தேவரும் முனிவரும் வேண்ட அதன்படியே அவ்வுடலை கிழித்து ஆடையாய்ச் சூடினான் இறைவன் என்கிறது இத்தல வரலாறு.

    நாவுக்கரசர் இப்புராணத்தை ஒட்டியே

    ''துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
    தொகுதிறலவ் விரணியனை யாகங் கீண்ட
    அங்கனகத் திருமாலு மயனுந் தேடு
    மாரழலை யனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
    மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
    வண்கயிலை மாமலைமேன் மன்னி நின்ற
    செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே"

    என்று மற்றொரு தலத்தில் பாடியிருக்கிறார். இது கொஞ்சம் 'தீவிர சைவ' புராணமாக இருக்கலாமென்கிறபடியால் இப்போதைக்கு நரசிம்மரை சாந்தப்படுத்திய சரபேசுவரரின் தலமென்றே கொள்வோம். :)

    ReplyDelete
  36. 2. திருச்சேறை?
    8. கோவூர் தான்
    9. விஸ்வ லிங்கம்?
    10. கோவிந்த ராஜ ஸ்வாமி?

    ReplyDelete
  37. 7. சம்பந்தர் விடம் நீங்கப் பதிகம் பாடிய தலம்
    ஈ) திருமருகல்

    இறைவன்: வண்டார்குழலம்மை உடனுறை மாணிக்கவாணர் எனப்படும் இரத்தினகிரீஸ்வரர்

    கும்பகோணத்திலிருந்து நாகைப்பட்டிணம் செல்லும் சாலையில் இருக்கிறது திருமருகல்.

    திருமருகலை சம்பந்தர் அடைந்தபோது கோயில் பிரகாரத்தில் ஒரு இளம்பெண் இறந்த ஆண்மகன் சடலத்தின் அருகில் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்தப் பெண் தன் வீட்டில் விருப்பத்திற்கு மாறாக வேறொரு திருமணம் நிச்சயித்த வேளையில், காதலனுடன் மணம் புரிய முந்தைய நாளிரவு இக்கோயிலின் அருகில் ஒரு மடத்தில் தப்பித்துவந்து தங்கியதாகவும், ஆனால் இரவில் எதிர்பாராதவிதமாய் நாகமொன்று தன் மணாளனைத் தீண்டிவிட்டதாகவும் அழுகின்றாள். திருமணம் நடக்காததால் அவனைத் தொட்டு அழக்கூட முடியாமல் தவிக்கின்றாள். பரமபக்தையான அந்த இளம்பெண் செய்வதறியாமல் இறைவனிடம் இறைஞ்சுவதாகவும் தன் சீடர்களின் வாயிலாக அறிந்த சம்பந்தர் மனமுருகி இறைவனை விடம்நீக்க பணித்த பதிகங்களே இவை.

    "சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே

    துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்ட முடையாய் மருகல்
    கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே."

    இந்தப் பதிகத்தை பாடவும் ஊர்மக்கள் அதிசயிக்கும் வண்ணம் இறந்த காதலன் உயிர்த்தெழுந்தான். சம்பந்தர் தானே முன்னேயிருந்து திருமணத்தை நடத்திவைத்தார் என நெகிழ வைக்கும் தலவரலாறு இங்கே. கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகள் சுமூகமாகத் தீர இங்கே வந்து பிரார்த்தனை செய்தால் பலிக்குமென்று தலவரலாறு கூறுகிறது.


    8. இராமரையே பாடும் த்யாகராஜர் பாடியது கோவூர் சுந்தரேசுவரரை.

    காஞ்சிபுரத்துக்கு சென்று வரதராஜனை சேவித்த தியாகராஜரை அருகிலிருந்த கோவூரைச்(சென்னை) சேர்ந்த சுந்தரேச முதலியார் என்னும் பெருஞ்செல்வந்தர் தியாகராஜர் தன்னூருக்கு வருகை தரவேண்டும் என்று வேண்டவே தியாகராஜரும் ஒப்புக்கொண்டு கோவூருக்கு செல்கிறார். அங்கு பல பணிவிடைகள் செய்தார் செல்வந்தர். செல்வந்தரின் ஆசை தியாகராஜர் தன் மேல் பாடல் பாடவேண்டுமென்று. அதையே சீடர்களிடம் சொல்லியபோது 'நிதி சால சுகமா' என்று சரபோசியையே புறந்தள்ளிய தியாகராஜர் சம்மதிக்கமாட்டார் என்று அவரின் சீடர்கள் நினைக்க, தியாகராஜரோ 'ஆஹா பாடுகிறேன்' என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நேரே சிவாலயத்திற்குள் நுழைந்து அக்கோயிலின் இறைவனான சுந்தரேசுவரனை புகழ்ந்து 1. ஈ வசுதா (சஹானா) 2. சுந்தரேஸ்வரா (சங்கராபரணம்) 3. சம்போ மஹாதேவா (பந்துவராளி) 4. கோரி சேவிம்பரரே (கரஹரப்ரியா) 5. நம்மி வச்சின (கல்யாணி) என்று புகழ்பெற்ற கோவூர் பஞ்சரத்தினத்தை அருளினார். அங்கேயிருந்துதான் திருமலை சென்று 'தெரதீயகராதா' பாடி திரையை விலக்கினார்.

    ---------------

    அப்புறம் 9,10ஆன கடைசி ரெண்டு கேள்விகளும் கேட்டிருப்பது கே.ஆர்.எஸ்..

    அதனால அவரே வந்து பதிலும் விளக்கமும் சொல்லிடட்டும்.. :))

    ReplyDelete
  38. கீதாம்மா...நீங்க தான் வின்னரோ? இப்படி அடிச்சி ஆடறீங்களே!

    10 ஆம் கேள்விக்குத் தவிர...மற்ற எல்லாக் கேள்விக்கும் சரியான விடை சொல்லி, தலைவி கீதா சாம்பசிவம்...முன்னணியில் உள்ளார்!

    ReplyDelete
  39. கே.ஆர்.எஸ்,
    //அட, அப்ப குற்றாலநாதரை வணங்கும் போது, அவரின் மூலமான ஆதிமூலத்தையும் சேர்த்தே வணங்குகிறோமா! சூப்பர்!//

    உள்குத்து திலகமாயிட்டீரு! வாழ்க!

    ReplyDelete
  40. 10. கபிலேஸ்வர ஸ்வாமி, ஒரு விதத்தில் நான் இம்மாதிரி சொல்வது எனக்கே ஏற்புடையதாய் இல்லை. ஒத்தையா ,இரட்டையா இது இல்லைன்ன அதுங்கிற மாதிரியாப் போச்சு இன்னிக்கு.எல்லாம் அந்த மருத்துவராலே :P

    ReplyDelete
  41. மிக மிக நல்ல பதிவு இராமநாதன் & இரவிசங்கர். நிறைய தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  42. //வாங்க ப்ரசன்னா
    4,6,7,8,9 கரெக்டுங்க!//

    5 கூட சரியாதான் சொல்லி இருக்கேன். அப்படின்னா நானும் 6/10....:))

    ReplyDelete
  43. //'நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்
    பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
    வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
    ஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.' //

    இதே போல் எல்லா பாடலிலும் வெண்ணைநல்லூர் என்று வரும். இந்த பாடல் பாடி பார்த்து தான் இக்கேள்விக்கு பதில் கண்டு பிடித்தேன். :) விளக்கங்களும், பரிசும் அருமையோ அருமை. நன்றி.

    ReplyDelete
  44. //ப்ரசன்னா said...
    5 கூட சரியாதான் சொல்லி இருக்கேன். அப்படின்னா நானும் 6/10....:)) //

    அச்சோ...என் கவனக்குறைவு தான். மன்னிக்கவும் ப்ரசன்னா...
    பதிவில் திருத்தி விட்டேன், பாருங்க!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. //பதிவில் திருத்தி விட்டேன், பாருங்க!
    வாழ்த்துக்கள்!// நன்றி. நீங்க திருத்துவதுக்கு முன்னாடியே நான் பரிசை எடுத்துக்கிட்டேன். நன்றி

    ReplyDelete
  46. ராமநாதன்...
    பின்னிப் பெடல் எடுத்துட்டீங்க....
    அத்தனையும் முத்தான விளக்கங்கள்!
    அதுவும் திருபுன்கூர் பற்றி நிறைய தகவல்கள்...சுந்தரரின் ஆட பத்து, நிறுத்த இருபது காசு...நல்ல சிரிப்பு! :-)
    மிக்க நன்றி.

    2. திருச்சேறை - இது குறித்து உங்க கோபுர தரிசனம் பகுதியில் ஒரு முறை போட்டீங்க ராமநாதன். அதுவும் பிறவிக் கடன் தீர்ப்பவரைக் கடன் தொல்லை தீர்ப்பவராக மாற்றிய மக்கள் பற்றி...ஞாபகம் இருக்கு! :-)

    4. திரு வெண்ணெய் நல்லூர்.

    இதோ பலரும் அறிந்த, சினிமாப் பாடலும் கூட:

    பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா
    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
    வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
    அத்தா உனக்கு ஆளாய் னி அல்லேன் எனல் ஆமே

    6
    திருபுவனம் பட்டுச் சேலைகளும் பிரபலம்.
    ஸ்ரீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த மடமும் இங்கு தான் உள்ளது.

    8
    கோவூர்ப் பஞ்சரத்னம் - கோவூர் சுந்தரேச சுவாமியைப் பற்றிய 5 கிருதிகள்.
    திருவொற்றியூர் பஞ்சரத்னம் - திருவொற்றியூர் திரிபுர சுந்தரி (வடிவுடையாள்) மீது 5 கிருதிகள்

    ReplyDelete
  47. //அப்புறம் 9,10ஆன கடைசி ரெண்டு கேள்விகளும் கேட்டிருப்பது கே.ஆர்.எஸ்..
    அதனால அவரே வந்து பதிலும் விளக்கமும் சொல்லிடட்டும்.. :))//

    ஆகா
    நீங்களே உங்க பதிலில் அதற்கும் சேர்த்து விளக்கம் சொல்லீட்டீங்க தலைவா..

    இருந்தாலும் சிம்பிளா:

    9. சீதை,இராமர் நிறுவிய மணல் லிங்கம் ராம லிங்கம்.
    அதன் அருகே, அனுமன் கொண்டு வந்த லிங்கம் விஸ்வலிங்கம்.
    இன்றும் காணலாம், தனிச் சந்நிதிகளில்.

    தாமதமாக வந்த அனுமன், எடுத்து வந்தது காசியில் விஸ்வநாதர் சன்னிதியில் இருந்து ஒரு லிங்கம். ஆகையால் விஸ்வலிங்கம்.

    10.

    திருமலைக்குப் பேருந்தில் செல்லும் போது, வண்டி இடப்புறம் மலையை ஒட்டித் திரும்பும். அப்போது வெளியே ஒரு பெரிய நந்தியின் சிலையைக் காணலாம்.
    அங்கு தான் கபிலேஸ்வர ஸ்வாமியின் ஆலயம் உள்ளது.

    கபில முனிவர், வேங்கடவன் பேரழகைக் கண்டு உளம் கசிந்து மகிழ்ந்தார். ஈசனும் அம்மையும் கூட தன்னைப் போலவே தரிசித்து, யான் பெற்ற இன்பம் பெறுக அவர்களும் என்று எண்ணினார். அதனால் இங்கு கபிலேஸ்வர சுவாமி.

    ஈசன், வேங்கடத்தானின் திருமேனி செளந்தர்யத்தில் மனம் பறி கொடுக்க, தானும் திருமலையிலேயே தங்கி விடுவதாய் வேண்டினார்.

    ஆனால் திருமலை, வைகுந்தத்தின் ஒரு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு ஆதிசேஷனால் தாங்கும் மூலாதார மலை. அங்கு பிறிதொரு தெய்வம் (இலக்குமி உட்பட) நிற்பது ஏதுவாகாது என்பதால், ஈசனை மலையின் கீழே, அருவியின் சாரலில் இருந்து சேவித்து இருக்குமாறு, பெருமாள் அன்புடன் கேட்டுக் கொண்டார் - மார்க்கண்டேய புராணம்.

    இங்குக் குளத்தில் வந்து விழும் அருவி - ஆழ்வார் தீர்த்தம் என்று பெயர் - காண வேண்டிய இயற்கைக் காட்சி.
    TTD நிர்வாகத்தில் தான் சைவ ஆலயமும் உள்ளது. ஆண்டுக்கொரு முறை இங்கும் பிரம்மோற்சவம் உண்டு!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP