Sunday, January 18, 2009

கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்!

இவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான்! கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்! (இவர் பேரில் ஆழ்வார்-ன்னு இருப்பதால்)! இவரின் 1000-வது பிறந்த நாள், Jan-17, 2009 அன்று துவங்கியது! யாருங்க இவரு? இவர் எப்படிக் "கண்ணப்பர்" ஆவாரு?

அதற்கு முன், "ஓம் நம சிவாய" என்று திருவைந்தெழுத்தை உரக்க ஓதி, இந்த ஆழ்வாரின் கதையை இன்னிக்கிப் பார்க்கலாம்!
* தென்னாடுடைய சிவனே போற்றி!
* என்(னுடை)-நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
* திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!



* கண்ணப்பனின் இயற்பெயர் திண்ணன்! இவர் இயற்பெயர் திருமறுமார்வன்!
* கண்ணப்பனுக்கு இறைவனிடத்தில் கூட அசாத்திய வைராக்கியம்! இவருக்கும் அப்படியே!
* கண்ணப்பன் பார்க்கவே கருகரு-ன்னு இருப்பான். நீண்ட ரோமம்! இவரும் அப்படியே. பெரிய தாடி!
* கண்ணப்பன் தான் உண்ட பன்றி இறைச்சியையே இறைவனுக்குக் கொடுப்பான்! இவரோ இறைவன் அன்று உண்ணவில்லை என்றால், தானும் அன்று பட்டினி கிடப்பார்!

* கண்ணப்பன் வேடன், ஆனால் வேட்டுவத் தலைவன்! இவரும் தலைவர் தான்! பிறவிச் செல்வந்தர்! - இருவருமே தங்கள் செல்வங்களைப் பின்னாடி உதறினார்கள்!
* கண்ணப்பர் காட்டிய அன்பு, "ஆச்சாரமில்லை" என்றார்கள்! இவர் காட்டிய அன்பை "மடத்தனம்" என்றார்கள்!

* கண்ணப்பன் செய்வது பக்தி இல்லை! அது மூடம் என்றார்கள்! தாங்கள் வகுத்து வைத்த வழிபாடே "உசத்தி" என்றும் நினைத்துக் கொண்டார்கள்!
இவர் செய்வதும் அடிமைத்தனம் என்றார்கள்! தாங்கள் வகுத்து வைத்ததே "உசத்தி" என்று ஒரு படி மேலே போய், கையெழுத்தே போட்டுத் தரச் சொன்னார்கள்!


* கண்ணப்பன் இறைவனின் கண்களில் ரத்தம் கொட்டியதைப் பார்த்த மாத்திரத்திலேயே பதறிப் போனான்! வகுத்து வைத்தவர்களோ "வேடிக்கை" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
இவரோ, குருவின் தலை போகப் போகிறது என்று உணர்ந்த மாத்திரத்தில் பதறிப் போனார்! வகுத்து வைத்தவர்களோ இங்கும் "வேடிக்கை" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

* கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் காலை வைத்தான்! இவரோ தன் ஆடையைக் களைந்து குருவின் துணிகள் மேல் போட்டார்! குருவின் ஆடையைத் "திருட்டுத்தனமாக" தான் போர்த்திச் சென்றார்.

* கண்ணப்பன் வேறு வழியில்லாமல், தன் கண்களையே பிடுங்கி வைத்து, காளத்தி அப்பனைக் காத்துக் கொடுத்தான்! இவரோ வேறு வழியில்லாமல், தன் கண்களைப் பிடுங்கித் தானே எறிந்து, குருவையும் சமயத்தையும் காத்துக் கொடுத்தார்!

இன்றும் ஆலயங்களில் கண்ணிழந்து காணப்படும் கூரேசன்


அவர் கண்ணப்ப நாயனார்! இவர் கண்ணப்ப ஆழ்வார்! அவ்வளவு தான் வித்தியாசம்!

காஞ்சிபுரம் அருகில் உள்ள "கூரம்" சொந்த ஊர் என்பதால் கூரத்தாழ்வார், கூரேசன் என்று கூப்பிடுவார்கள்! இவருக்கே 1000-வது பிறந்த நாள்! அடுத்த ஆண்டு 2010-இல் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும்!
இனிய ஆயிரமாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள், கூரேசா!
இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!

இந்த ஆண்டில், இவரைப் பற்றியும், திருவரங்க ஆலயத்தில் தமிழ் மொழி "நுழைய", இவர் ஆற்றிய பங்கு பற்றியும், அவ்வப்போது பதிவிடுகிறேன்! ஷைலஜா அக்கா எழுதிய கூரேசனின் சுருக்கமான வரலாற்றை இங்கே சென்று அவசியம் படிக்கவும்!

பிறந்த நாள் என்பதால், இவர் கண்ணிழந்த நிகழ்ச்சியை இன்னிக்கி சொல்லாது, இன்னொரு நாள் சொல்கிறேன்!
இன்று ஜாலியான, மகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மட்டும் பார்ப்போமா? :)


அன்று பெரு மழை! இரண்டு காவிரி ஆற்றிலும் வெள்ளம்!
ஆகா...அது என்ன இரண்டு காவேரி ஆறு? எல்லா ஊரிலும் ஒரு காவேரி தானே ஓடும்?
ஹா ஹா ஹா! அது மற்ற ஊர்! இது உற்ற ஊர்! இங்கே இரண்டு காவிரி!

தென் காவிரி (காவிரி), வட காவிரி (கொள்ளிடம்) என்று ஒரே காவிரி ஆறு, இரண்டாகப் பிரிந்து, சுழித்துக் கொண்டு ஓடுகிறது! இப்படி இரண்டு (ஒரே) ஆற்றுக்கும் நடுவில், இயற்கையாக எழும் மணல் திட்டுக்கு "அரங்கம்" என்று பெயர்!
அங்கு மனித குலத்தின் செல்வம் = "திரு" கொலுவிருப்பதால், திரு+அரங்கம் என்று ஆயிற்று!

இன்னொன்னு கவனிச்சீங்களா? இப்படி முக்கியமான தலங்களில் இருக்கும் இறைவனுக்குத் தனியாகப் பெயர்கள் கிடையாது! ஐயாவுக்குத் தனியாக நித்யவத்சலப் பெருமாள், அந்தப் பெருமாள், இந்தப் பெருமாள்-ன்னு எல்லாம் பேரே இருக்காது!
திரு அரங்க+நாதன், திரு வேங்கடம்+உடையான்-ன்னு ஊரை வச்சித் தான் பேரு! - அது தான் திருத்தலங்களின் (திவ்யதேசங்களின்) பெருமை! பெருமாளை விட அவன் சம்பந்தா சம்பந்தங்களுக்கே ஏற்றம் தரப் படுகிறது!

இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது!

திருச்சிக்கும் முன்பே முக்கொம்பு என்னும் இடத்தில் பிரியும் ஆறு, பிறகு ஒன்று கூடுகிறது! கல்லணையில் மீண்டும் பிரிகிறது!
காவிரியில் அதிக வெள்ளம் கண்டால், ஆங்காங்கே பிரித்து, கொள்ளிடம் பக்கமாக அணை திறந்து, நீரை வடிய விடுவார்கள்! இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques)! கல்லணை கட்டிய கரிகாற் சோழனைப் "பெருவளத்தான்" என்று சொல்வது தான் எத்தனை பொருத்தம்!

கதைக்கு வருவோம்! காவிரி, கொள்ளிடம் - ரெண்டிலுமே வெள்ளம்-ன்னா, மக்கள் அப்போ என்ன பண்ணுவாங்க? பாவம்! வீட்டில் இருப்பதை வைத்துத் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்! ஆனால் கூரேசனின் வீட்டில் அது கூட இல்லை!

அவரோ அன்றாடம் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர். உஞ்ச விருத்தி என்பார்கள்!
பிட்சை ஏற்பதால் துறவி-ன்னு நினைச்சிறக் கூடாது! அவருக்கு அழகு மிக்க-அறிவு மிக்க மனைவி! பேரு ஆண்டாள்! தியாகராஜரைப் போல் இவரும் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர்!



கூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.

கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)

அன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை!
வீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்!
திருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்!

வேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும்! அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வையில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா!
அதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்! பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல! அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? வயிற்றில் கிள்ளாதா?

நேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது! இன்னும் சாப்பிடலை! ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார் மனுஷன்!
அங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்! வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை! கூரேசன் சற்று மெலிந்தவர்! அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது! ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்!

பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!

முன்பு சண்டை போட்ட நண்பன், ஒரு வேலையாக அலுவலகம் வந்து பார்த்த போது, எனக்கு கொஞ்சம் லேட் ஆகி விட்டது! ஆனாச் சாப்பிடவே மாட்டேன்-ன்னு வைராக்கியமாச் சொல்லிட்டான்! அவனிடம் கெஞ்சி, கொஞ்சி, சாப்பிட வைத்து, சாப்பிட்ட பொறவு தெம்பாச் சண்டை போடுப்பா ராசா-ன்னு சொல்லி.... :)
பசிக் கொடுமையை விட, பசியைப் பார்க்கும் கொடுமை ரொம்ப ரொம்ப பெருசுங்க!


டங்...டங்...டங்! டங்...டங்...டங்!
அரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்! ஸ்ரீரங்கநாத அரவணாம்ருதம் நிவேதயாமி...
கோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது! ஆண்டாள் காதிலும் விழுகிறது! அவளோ விரக்திச் சிரிப்பில்...
"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"

அதிர்ந்தான் அரங்கன்! நைவேத்தியம் செல்லவில்லை! வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது! கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது!

திருமார்புத் தாயார்: "என்னங்க சாப்பிடலையா? என்ன அப்படிப் பலமான யோசனை?"

பெருமாள்: "கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ?-என்று நம்மைச் சிரித்து விட்டாள்!"

தாயார்: "சாப்பிட்டாச்சா? என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான்! அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்!
அவன் இல்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது! ஆனால் கேட்கவில்லை! நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்!"

பெருமாள்: (மெளனம்)

தாயார்: "சுவாமி, ஞாபகம் இருக்கா? காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் "தடங்"-கென்று மூடிய சப்தம் கேட்டதே?"

பெருமாள்: "ஆமாம்! அவன் அப்போது பெரும் செல்வந்தன்! அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான்! அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே?"

தாயார்: "ஆமாங்க! அப்பேர்ப்பட்ட செல்வன்! இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான்! நீர் அல்லவோ கேட்கக் கடவது? உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு?
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

பெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)

கண்ணா! நான் முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள்! பசி ஆவது ஒன்றில்லை! ஓவாதே நமோ நாரயணா என்று
எண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே!!!



வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்!

அம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்?
நாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள்! ="கண்டு"+அருளப்+பண்ணுதல்! :)
நைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு"+அருளப்+பண்ணுதல்! :)

அர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார்! சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார்! அவர் பேரு உத்தம நம்பி! வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்!

"சாமிக்கு நைவேத்தியம் காட்டினோமே! அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ? அணைக்கலியா? ஐயோ! நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....

"உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை!
என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! இப்போதே போம்! நான் சொன்னதாகப் போம்! நடை திறந்து போம்! நடை திறப்பு தோஷமாகாது! தாயிடத்தில் குழந்தைக்குத் தோஷமேது?

நடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம்! தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம்! துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்!
துளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும்! இது நம் ஆக்ஞை!
"


உத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது! அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்!
தான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார்! கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்!
கொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார்! மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது!

நடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...
ஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு! அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...

என்னடா இது? திருவிழா கூட இல்லை! இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...
உத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார்! துளசி-சடாரி சார்த்துகிறார்! அவர் கை நடுங்குகிறது! மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்!

ஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது! கூரேசன் கண்களில்...!
"அடியேன் நாயேனைப் பார்த்தா, "குழந்தைக்குத் தோஷமேது?" என்று கேட்டார்? ரங்கா, ரங்கா, ரங்கா!... "
தனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார்! மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்!

ஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: "நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா?"

"ஆமாங்க! நைவேத்திய மணி அடிச்சாங்க! அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை! சும்மா நினைத்தேன்!"

"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு! அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்?
இனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே!"

"என்னை மன்னிச்சிருங்க!"

"சரி! பரவாயில்லை! உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்! இப்போ நீ சாப்பிடு"


தாயார்: "என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது? அதுவும் கூடையில்? நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா?"

பெருமாள்: "ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல? அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும்? எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது!"

தாயார்: "ஆமாங்க!"

பெருமாள்: "பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு! நீ முன்பு சொன்னது தாம்மா!
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்
!"


அந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின!

* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர்! தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்!
* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது!
கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!

ஆயிரமாவது பிறந்த நாள் காணும் எங்கள் கூரேசா! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! இல்லையில்லை.....இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

46 comments:

  1. அடடே.....கூரத்தாழ்வார் பதிவா. ரத்னேஷ் கூட முன்பு கூரத்தாழ்வார் குருடான கதையை இட்டிருந்தார்

    ReplyDelete
  2. //கோவி.கண்ணன் said...
    ரத்னேஷ் கூட முன்பு கூரத்தாழ்வார் குருடான கதையை இட்டிருந்தார்//

    ஆகா ரத்னேஷ் ஐயாவா?
    சுட்டி கொடுங்க-ண்ணா!

    ReplyDelete
  3. இவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான்! கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்>>>..


    ஆஹா இப்படியும் சிந்திக்க உங்களுக்குமட்டுமே இயலும் சிறப்பான சிந்தனை! கண்ணப்ப ஆழ்வார்! கண்ணனான திருமாலையே அப்பனாக நினைப்பவர். ஆழ்வார்களில் கண்ணுக்கு ஒப்பாவனவர்! இன்னும் இன்னும் சொல்லலாம்!

    ReplyDelete
  4. * கண்ணப்பன் வேறு வழியில்லாமல், தன் கண்களையே பிடுங்கி வைத்து, காளத்தி அப்பனைக் காத்துக் கொடுத்தான்! இவரோ வேறு வழியில்லாமல், தன் கண்களைப் பிடுங்கித் தானே எறிந்து, குருவையும் சமயத்தையும் காத்துக் கொடுத்தார்>>>>>>>>>>>>>>>>>>>

    கண்ணப்பருக்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அற்புதம்! குருவே தெய்வம் கூரத்தாழ்வாருக்கு! அதனால்தான் கண் இழக்கத்துணிந்திருக்கிறார் கண்ணப்பனைப்போல!

    ReplyDelete
  5. இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது!
    >>>>>>>>>>>>>>>>......

    வரும்போதே அரனுக்கும் அரிக்குமாய் சேர்த்தே மாலைபோட்டு வருகிறாள் பொன்னி. ஊர்களின் அமைப்பை ஊன்றி கவனித்தால் இது புரியும்!!!

    ReplyDelete
  6. திருச்சிக்கும் முன்பே முக்கொம்பு என்னும் இடத்தில் பிரியும் ஆறு, பிறகு ஒன்று கூடுகிறது! கல்லணையில் மீண்டும் பிரிகிறது!
    காவிரியில் அதிக வெள்ளம் கண்டால், ஆங்காங்கே பிரித்து, கொள்ளிடம் பக்கமாக அணை திறந்து, நீரை வடிய விடுவார்கள்! இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques)! கல்லணை கட்டிய கரிகாற் சோழனைப் "பெருவளத்தான்" என்று சொல்வது தான் எத்தனை பொருத்தம்>>>>>>>>>>

    மிகவும் பொருத்தம்! வசதிகளில்லாத,விஞ்ஞான
    முன்னேற்றம்காணாதஅந்த நாளில் கட்டப்பட்ட கலல்ணைக்கு ஈடு இணை கிடையாதுதான்!

    ReplyDelete
  7. கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
    இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)
    >>>>>>>>>>>>>

    மனைவி ஒரு மந்திரி தான் பலசமயங்களில் கூரேசருக்குத்தெரிந்திருக்கிறது ம்ம்ம்:)

    ReplyDelete
  8. பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!
    >>>>>>.........
    அடடா,,நெகிழ்கிறது மனம்!

    ReplyDelete
  9. வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
    இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்>>>>>>>>>>>>>>>>
    வைணவத்தில் அம்சை என்கிறார்கள் நைவேத்யத்தை.அதன் அர்த்தம் கண்டருளப்பண்ணுதல் என்றாலும் முழுமையாய் விளங்கவில்லை அம்சைக்கு அர்த்தம்

    ReplyDelete
  10. \\\"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
    ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவானவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்\\\


    ஆஹா! எத்தனை உண்மையான வார்த்தைகள் ! என்னவோ நாம் எல்லாம் அறிந்ததுபோலப்பேசுகிறோம் அனைத்தும் அறிந்த அவன் நம்மைப்பார்த்துக்கொண்டே இருப்பதை அறியாமல்.

    ReplyDelete
  11. ]]]\\\
    கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!
    \\\\\


    வைணவத்தின் கண்ணான ஆழ்வாரைப்பற்றி கேஆர் எஸ் இதுபோல இன்னமும் சொல்லவேண்டுமென்பது அரங்கப்ரியாவின் ஆசைமட்டுமல்ல ஆணையும்கூட!
    பாராட்டுகள் இந்த உயர்ந்த பதிவிற்கு!

    ReplyDelete
  12. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவி.கண்ணன் said...
    ரத்னேஷ் கூட முன்பு கூரத்தாழ்வார் குருடான கதையை இட்டிருந்தார்//

    ஆகா ரத்னேஷ் ஐயாவா?
    சுட்டி கொடுங்க-ண்ணா!
    //

    http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_08.html

    ReplyDelete
  13. @கோவி அண்ணா
    ஓ...இந்தப் பதிவா? படிச்சிருக்கேன்! படிச்சிருக்கேன்! :)
    படித்து ரசித்து சிரித்தேன்! அம்புட்டு உள் குத்து வச்சிருந்தார் ரத்னேஷ் ஐயா! :))

    ReplyDelete
  14. ரொம்ப லேட்டாச்சோ :)

    ReplyDelete
  15. //υnĸnown вlogger™ said...
    ரொம்ப லேட்டாச்சோ :)//

    எதுக்கு ஜிஸ்டர்? ஓ...மொத பின்னூட்டத்துக்கா? :)
    அதான் உன் காம்பெடிட்டர் ராகவ் இல்லையே! ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே! ஸோ, ஈசி, ஈசி! :)

    ReplyDelete
  16. //ஷைலஜா said...
    கேஆர் எஸ் இதுபோல இன்னமும் சொல்லவேண்டுமென்பது அரங்கப்ரியாவின் ஆசைமட்டுமல்ல ஆணையும்கூட!//

    ஆகா!
    ஆணையா? யம்மாடியோவ்! உங்களுக்குள் இப்படி ஒரு ஜான்சி ராணி ஒளிஞ்சிருந்தது தெரியாமப் போச்சுக்கா! :))

    கூரேசன் ஆயிரமாவது ஆண்டில், அன்னாரைப் பற்றி "இரு மாதத்துக்கு ஒரு பதிவாச்சும்" இட முயற்சிக்கிறேன்-க்கா!

    மற்ற நண்பர்களும், குறிப்பாக பல் சமயப் பதிவர்களும் இந்த ஆயிரமாவது நற் தருணத்தில் கலந்து கொண்டு, பதிவிட வேண்டும் என்பதே அடியேன் ஆசை!

    கந்தர் அலங்காரமும், தேவாரத் திருமுறைகளும், அம்மன் பாட்டும், அடியேன் இடவில்லையா? அது போல் கூரேசனுக்காகப் பலரும் முன் வர வேணும் என்பதே அடியேன் வேண்டுகோள்! பிரார்த்தனை எல்லாம்!

    அன்று யாரோ ஒரு சோழன், சைவ சமயம் என்று போலியாகக் காட்டிக் கொண்டு கண் பிடுங்கச் செய்தான்!
    ஆனால் அன்பே சிவம்! அன்பே சைவம் என்பதை இந்தக் கூரேசன் ஆயிரமாவது ஆண்டில் சொல்வது தான் எத்தனை பொருத்தம்!

    இதைப் பல் சமயப் பதிவர்கள் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளையும் இங்கே அடியார்கள் முன்னிலையில் அனைவரிடமும் சமர்ப்பிக்கிறேன்! வேண்டுகிறேன்!

    ReplyDelete
  17. இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
    வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"
    இதில் அடியேன் என்னை இழந்தேன்

    "ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"
    இதில் மனம் கனத்து கண்ணில் நீர் கோர்த்து கண்டது . கண்ணன்
    என்னிடம் சொற்கள் இல்லை சொல்வதற்கு

    ReplyDelete
  18. //Mani Pandi said...
    //இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
    வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"//
    இதில் அடியேன் என்னை இழந்தேன்//

    :)
    அது உண்மை தானே மணியண்ணே?

    //"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"
    இதில் மனம் கனத்து கண்ணில் நீர் கோர்த்து கண்டது//

    அடியவர்கள் அப்படி இறைவனைக் கேட்டது உண்டு மணி அண்ணா! ஆனால் அதன் பின்னால் இருக்கும் பரிபக்குவங்களைப் புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்வார்கள்! அப்படிக் கேட்ட அடியார்களை எதிரி போல் பாவிக்க மாட்டார்கள்!

    //கண்ணன்
    என்னிடம் சொற்கள் இல்லை சொல்வதற்கு//

    :)
    என்னிடமும் தான்!
    அடியேன் லயித்து எழுதினேன்! தாங்கள் லயித்துப் படித்தீர்கள்! இருவர் லயமும் என்னவோ எம்பெருமான் மீது!

    ReplyDelete
  19. தல

    என்னென்னு சொல்ல படிக்க படிக்க கண்ணு கலங்கியது...அட்டகாசமான பதிவு

    நன்றி தல ;)

    \\இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
    வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"\\

    எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்காங்க...;))

    ReplyDelete
  20. //கோபிநாத் said...
    தல
    என்னென்னு சொல்ல படிக்க படிக்க கண்ணு கலங்கியது...//
    :)
    same here!

    //அட்டகாசமான பதிவு//
    நன்றி மாப்பி!

    //\\இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
    வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"\\

    எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்காங்க...;))//

    ஹிஹி! யாரு சொல்லியிருக்காங்க?
    சும்மா பெருமாள் தான் அப்படி பேசறாரு, அடியேன் கற்பனையில்! :)

    ReplyDelete
  21. //ஷைலஜா said...
    இவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான்! கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்>>>..

    ஆஹா இப்படியும் சிந்திக்க உங்களுக்குமட்டுமே இயலும்//

    ஹிஹி! :)

    //கண்ணப்ப ஆழ்வார்! கண்ணனான திருமாலையே அப்பனாக நினைப்பவர்//

    கோடு போட்டா ரோடு போடறீங்களே-க்கா! :)
    இவர் கண்ணை அப்பியதால் தான் அன்று இராமானுச தரிசனம் தப்பித்தது! மேலக்கோட்டையில் "ஹரி"ஜனங்கள் ஆலயத்துள் செல்ல முடிந்தது! தமிழ் வழிபாட்டு மொழியாக ஆகியது!

    இன்னும் எவ்வளவோ...
    சந்தேகமே இல்லை-க்கா! இவரும் கண்ணப்பர் தான்!
    இவர் தரிசனத்தைப் பறிகொடுத்து, எம்பெருமானார் தரிசனத்தை நிலைநாட்டினார்!

    ReplyDelete
  22. //ஷைலஜா said...
    கண்ணப்பருக்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அற்புதம்!//

    நன்றி-க்கா!

    //குருவே தெய்வம் கூரத்தாழ்வாருக்கு! அதனால்தான் கண் இழக்கத்துணிந்திருக்கிறார் கண்ணப்பனைப்போல!//

    எக்ஜாக்ட்லி!
    நீங்கள் உங்கள் பதிவில் சொன்னது போல், அரங்கத்தில் முதல் சன்னிதியே கூரேசனுடையது தான்!
    அப்புறம் தான் ஆழ்வார், இராமானுசர், தேசிகர், மாமுனிகள் எல்லாம்!

    ReplyDelete
  23. //ஷைலஜா said...
    வரும்போதே அரனுக்கும் அரிக்குமாய் சேர்த்தே மாலைபோட்டு வருகிறாள் பொன்னி. ஊர்களின் அமைப்பை ஊன்றி கவனித்தால் இது புரியும்!!!//

    இதைப் பல இடங்களில் சொல்லி இருக்கேன்! ஒரே ஒரு கதையில் மட்டும் சொல்லவில்லை! உடனே நம்மவர்கள் "பாசமிகு கும்மி"! :)

    அன்று எடுத்த சபதம் தான், அரங்கனைப் பந்தலில் எழுதுவது இல்லை-ன்னு! அது திருப்பாணாழ்வார் பதிவால் தானாய் முறிந்து போனது! :)

    ReplyDelete
  24. தெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போல இருக்கிறது கண்ணப்பரை வைத்து கூரத்தாழ்வாரைப் பற்றி சொல்வது. :-)

    கூரேசரின் திருக்கதையின் தெரிந்த பகுதிகள் உங்கள் எழுத்தில் படிக்க மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  25. //குமரன் (Kumaran) said...
    தெரிந்ததை வைத்துத் தெரியாததைச் சொல்வார்கள். அது போல இருக்கிறது கண்ணப்பரை வைத்து கூரத்தாழ்வாரைப் பற்றி சொல்வது. :-)//

    :)
    வினையால் வினையாக்கிக் கோடல்
    யானையால் யானை யாத்தற்று!

    //கூரேசரின் திருக்கதையின் தெரிந்த பகுதிகள் உங்கள் எழுத்தில் படிக்க மிக நன்றாக இருக்கிறது//

    நன்றி குமரன்!
    தெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்!

    ReplyDelete
  26. //தெரியாத பகுதிகளும் ஆயிரமாவது ஆண்டில் வரும்! //

    மிக்க நன்றி.

    ReplyDelete
  27. /அதான் உன் காம்பெடிட்டர் ராகவ் இல்லையே! ஷைலஜா அக்காவும் ஒரு பெண் தானே! ஸோ, ஈசி, ஈசி! :)//

    ஹிஹி.அது கோவி சாரு :P
    போஸ்ட் போடுறேன்னு சொல்லமா போட்டீங்க இல்ல..உங்களைச் செல்லமா தனியா கவனிச்சுக்குறேன் அண்ணா

    ReplyDelete
  28. //இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது!
    //

    பொன்னிக்குத் தெரியாத பாசுரமா..
    இன்று வரை ரங்கன் அடியவர் உறவுக்குச் சான்றாக இன்றும் ஓடுகிறாள்....

    பொய்கையாழ்வார் பாசுரம் ...”நரன் நாரணன் நாமம்”....

    அன்றே இருவரும் ஒன்று என் பாடினார்....

    இதை எழுதும் பொழுது உங்கள் பதிவின் முன்பு வந்த கிருமி கண்ட சோழன் கதையில் அரசனுக்கு மந்திரி அரியும் சிவனும் ஒன்று என்பார், அரசன் கோபம் கொண்டு அதிலும் அரி தான் உங்களுக்கு முதல் என்பான்... மந்திரி இந்த பொய்கையாழ்வார் பாசுரம் பாடி இருக்கலாம்.

    ReplyDelete
  29. Vanakkam sir,
    In divyaprabandham also he was honoured,He is the one,to remember for acharya bakthi.He is KANNAANA AZHWAR, for SRIVAISHNAVAM.
    ARANGAN ARULVANAGA.
    Anbudan
    k.srinivasan.

    ReplyDelete
  30. //Rishi said...
    பொன்னிக்குத் தெரியாத பாசுரமா..
    இன்று வரை ரங்கன் அடியவர் உறவுக்குச் சான்றாக இன்றும் ஓடுகிறாள்....//

    அதானே! சரியாச் சொன்னீங்க ரிஷி!

    //பொய்கையாழ்வார் பாசுரம் ...”நரன் நாரணன் நாமம்”....//

    அரன் நாரணம் நாமம்!
    அவர் அரனைத் தான் முதலில் சொல்லுவாரு!

    அரன்/நாரணன் = நாமம்
    ஆன்விடை/புள் = ஊர்தி
    உரை = நூல்/மறை
    உறையும் கோயில் = வரை/நீர்
    கருமம் = அழிப்பு/அளிப்பு
    கையது = வேல்/நேமி
    உருவம் = எரி/கார்
    மேனி ஒன்று

    //இதை எழுதும் பொழுது உங்கள் பதிவின் முன்பு வந்த கிருமி கண்ட சோழன் கதையில் அரசனுக்கு மந்திரி அரியும் சிவனும் ஒன்று என்பார், அரசன் கோபம் கொண்டு அதிலும் அரி தான் உங்களுக்கு முதல் என்பான்...//

    ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)

    //மந்திரி இந்த பொய்கையாழ்வார் பாசுரம் பாடி இருக்கலாம்//

    ஏலாதவருக்கு என்ன சொன்னாலும் ஏலாது!
    ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

    ReplyDelete
  31. //Anonymous said...
    Vanakkam sir,
    In divyaprabandham also he was honoured//

    பிரபந்தத்தில் கூரேசனா?
    இராமானுச நூற்றந்தாதியைச் சொல்றீங்களா ஸ்ரீநிவாசன் சார்?

    //He is the one,to remember for acharya bakthi.He is KANNAANA AZHWAR, for SRIVAISHNAVAM//

    கண்ணப்ப ஆழ்வார் என்பது திடீர்-ன்னு தோனியது! :)

    ReplyDelete
  32. மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர பதிவு அருமை..

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நம்மாழ்வார் மோட்சத்தை சேவிக்க சென்றிருந்த போது, கூரத்தாழ்வாரையும் சேவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்.

    ReplyDelete
  33. //அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்! //

    பெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்லவா?

    ReplyDelete
  34. // நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!//

    அர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே.. அர்ச்சகர்களுக்கு எம்பெருமான் தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.. அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் சன்னதியினுள் செல்லலாம்..

    ReplyDelete
  35. //என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! //

    பசி வெள்ளமோ.. வார்த்தைகள் அருமைண்ணா..

    ReplyDelete
  36. //Raghav said...
    //என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! //

    பசி வெள்ளமோ.. வார்த்தைகள் அருமைண்ணா..//

    :)
    ஏன் பசியை வெள்ளமாச் சொல்றாங்க/சொன்னேன்? சொல்லுங்க பார்ப்போம்!

    ReplyDelete
  37. மிகவும் நெகிழ வைத்த பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  38. //Raghav said...
    மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் ஆன நம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்ர பதிவு அருமை..//

    நன்றி ராகவ்!
    சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"?
    விளக்கம் ப்ளீஸ்! :)

    //ஸ்ரீவில்லிபுத்தூரில் நம்மாழ்வார் மோட்சத்தை சேவிக்க சென்றிருந்த போது, கூரத்தாழ்வாரையும் சேவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தேன்//

    எந்தெந்த ஊரெல்லாம் சுத்தினீங்களோ, ஒவ்வொன்னுத்துக்கும்ொவ்வொரு பதிவு! சொல்லிப்புட்டேன்! ஆமா! :)

    ReplyDelete
  39. //Raghav said...
    பெரிய அவசரம் என்றும் சொல்வர் அல்லவா?//

    ஹா ஹா ஹா
    அது அரங்கனுக்கு மட்டும் தான்! அவருக்குச் சமர்பிக்கப்படும் தளிகையின் பெயர் பெரிய அவசரம்!

    ஆனால் உணவு சமர்ப்பித்தல் என்னும் வழக்கத்தின் பெயர் = "கண்டருளப் பண்ணுதல்" தான்!
    ஷைல்ஸ் அக்கா "அம்சை"-ன்னு இன்னொரு பெயரும் வேற சொல்லி இருக்காங்க! ஆனா இரண்டுக்கும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கு!

    ReplyDelete
  40. //Raghav said...
    அர்ச்சகருக்கு இந்தத் தடை கிடையாதே...
    அர்ச்சகர்களுக்கு எம்பெருமான் தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.. அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் சன்னதியினுள் செல்லலாம்..//

    ஆகா! அப்படியா?
    எந்த ஆகமம் ராகவ்?
    பாஞ்சராத்திரத்தில் இந்தத் தடை உண்டு-ன்னே நினைக்கிறேன்! இது சைவ/சாக்த ஆலயங்களிலும் உண்டு!

    ஆபத்து காலத்தில் மட்டும் விதிவிலக்கு! ஆனா அதற்கு சுத்தியும் செய்வாங்க!

    மேல் விளக்கம் கேட்டுச் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  41. //சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"?
    விளக்கம் ப்ளீஸ்! :)//

    ம்ம் :)

    ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்.

    ReplyDelete
  42. //Raghav said...
    ம்ம் :)//

    என்ன ம்ம்-ன்னு ஒரு சிரிப்பு?:)

    //ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்//

    விளக்கத்துக்கு நன்றி ராகவ்!
    அது, புகழ்ந்து மொழிவதற்கு, மொழி ஒன்றில்லாத பெரும்புகழோனா?
    நான் ஏதோ மொழிப் பற்றை எல்லாம் கடந்தவர்-ன்னு இல்ல நினைச்சேன்! :))

    மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சம் முக்குறும்பாம்
    குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
    பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
    வழியைக் கடத்தல் எனக்கு இனி யாது வருத்தமன்றே!

    ReplyDelete
  43. Raghav said...
    //சரி அது என்ன "மொழியைக் கடக்கும் பெரும்புகழோன்"?
    விளக்கம் ப்ளீஸ்! :)//

    ம்ம் :)

    ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்.

    9:20 AM, January
    >>>>>>>>>>>>>>>>>>..

    அருமை! எனக்கும் இப்போ விளங்கியது !

    ReplyDelete
  44. //
    ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)
    //

    மறக்கிற மாதிரியா நீங்க எழுதறீங்க !!!!

    ReplyDelete
  45. //Rishi said...
    //
    ஆகா...அம்புட்டு ஞாபகம் வச்சிருக்கீங்களா? :)
    //

    மறக்கிற மாதிரியா நீங்க எழுதறீங்க !!!!//

    ஆகா!
    ரிஷி சொல்லுறத பார்த்தா...இனி ஜாக்கிரதையா பாத்துப் பாத்து எழுதணும் போல இருக்கே! மறக்காம ஞாபகம் வச்சிக்கிட்டாங்கன்னா நம்ம பாடு ரொம்பவே கஷ்டம்! :)))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP