அருணகிரிநாதர் செய்த மர்ம டகால்ட்டி! - 2
யார் காது காலி ஆச்சு? அருணையா? வில்லியா? சென்ற பதிவு இங்கே!
சில சமயம், குற்றத்தை ஒரேயடியா அடக்கணும்-ன்னா, நாமளே "சிறு" குற்றம் பண்ணாத் தான் ஆச்சு! ஓவர் ஸ்பீடில் போற ஒருத்தனை, போலீசும் ஓவர் ஸ்பீடில் போய்த் தானே பிடிக்கணும்! இதுக்காகப் போலீசை கொறைபட்டுக்க முடியுமா? :)
கண்ணன் செய்த பல செயல்களும் இப்படித் தான்! அதையே தான் அருணகிரியும் செய்யறாரு! வாயில் நுழையாத வெட்டு வெடுக்குப் பாடலைப் பாடறாரு! பொருளை அதிகம் முன்னிறுத்தாது, சொற்களைப் போட்டு பயமுறுத்தும் டெக்னிக்! :)
திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
இந்தப் பாட்டு கந்தர் அந்தாதியில் வரும் பாடல்! "தகர" வர்க்கப் பாடல்! "த" என்னும் எழுத்திலேயே மொத்தப் பாடலும் இருக்கும்! காளமேகம் தான் இப்படி எல்லாம் ரொம்பப் பாடுவாரு!
வில்லி-க்கோ சுத்தமாப் பொருள் தெரியலை! அங்கொன்னும் இங்கொன்னுமா கொஞ்சம் தெரிஞ்சாலும், முழுப் பொருளும் சொல்லணும்-ல?
வெட்கம் பிடுங்கித் திங்க, தோல்வியை ஒப்புக் கொள்கிறார்! எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இங்கு இல்லையம்மா! அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்தானிந்தோம்-ன்னு சந்திரமுகி பாட்டு தான் இங்கும்! :)
திதத்தத் தத்தித்த = "திதத்த தத்தித்த" என்னும் தாளம் போட்டு
திதி தாதை = நடனம் செய்யும் தந்தை சிவபெருமானும்
தாத = மறைக் கிழவனாகிய பிரம்ம தேவனும்
துத்தி = புள்ளி வைத்திருக்கும் (படம் எடுக்கும்)
தத்தி = பாம்பு (ஆதி சேடன்)
தா தி = அந்த இடத்தில், நிலையாக இருந்து
தத்து = தளும்புகின்ற
அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்)
ததி = தயிர் (ஆயர்ப்பாடியின் தயிர்)
தித்தித்ததே = தித்திப்பா இருக்கு-ன்னு
து = உண்டானே வாரி வாரி (அந்த அழகிய கண்ணன்!)
துதித்து = இவர்கள் எல்லாம் போற்றும்
இதத்து ஆதி = இதம் தருவதில் ஆதியே! அன்பர் இதத்தாதீ!
தத்தத்து = தந்தம் உடைய
அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை = கிளி போல் கொஞ்சும் தெய்வயானைக்கு
தாத = தாசனே! தேவானை தாசனே முருகா!
தீதே துதை தாது = தீமை நிறைந்த இரத்தமும் மாமிசமும்
அதத்து உதி = மரணமும் பிறப்பும்
தத்து அத்து = ஆபத்தும் நிறைந்த
அத்தி தித்தி = எலும்பு மூடிய பை (உடல்)
தீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்
திதி = அந்நாளிலே
துதி தீ = உன்னைத் துதிக்கும் அடியேனின் புத்தி
தொத்தது = உனக்கே தொத்துப்பட (ஆட்பட) வேணும்!
இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல்! "திதத் தத்தத்" என்று நான்கு அடிகளிலும் திரும்பத் திரும்ப வருது! இந்த வகைக் கவிதைக்குப் பேரு மடக்கு/யமகம்! இப்படி மடக்கு பாடி மடக்கி விட்டார் நம்ம அருணகிரியார்! :)
இப்போ, பதம் பிரிச்சி......
திதத்தத் தத்தித்தத் திதி தாதை, தாத, துத்தித் தத்தி, தா
தி, தத்து அத்தித் ததி தித்தித்ததே! துத் துதித்து, இதத்தா
தி, தத்தத்து அத்தித் தத்தை தாத! திதே துதை தாது, அதத்து
(உ)தி, தத்து அத்து அத்தி தத்தி, தீ தீ திதி, துதி தீ தொத்ததே!
தம் காதை அறுத்துக் கொள்ளுமாறு அருணகிரியிடம் குனிந்து காதைக் காட்டுகிறார் வில்லி! சரக்க்க்க்க்க்க்! ஆகா, அருணகிரி மனசுக்குள்ள கறுவிக்கிட்டே காதை அறுத்துட்டாரா என்ன?
அருணகிரி வில்லியின் காதில் சொன்னதே சரக்க்க்க்க்-ன்னு அறுத்துப் போட்டாப் போல் தான் இருந்தது! என்ன சொன்னாரு? = "பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்...பெருமாளே!"
வில்லிக்கு சப்த நாடியும் ஒடிங்கிற்று! மெச்சத் தகு பொருளா? எது "மெச்சத் தகு பொருள்"?
பெருமாளே-ன்னு வேறு, அதுவும் முருகப் பழமான இவரே சொல்றாரே! ஒன்னும் புரியலையே! விழித்த படி, பேந்த பேந்த பார்க்க...
செவி அறுப்பது தம் நோக்கம் அல்ல! செவிக்கு உணவு தருவதே தம் நோக்கம்!
இனி புலவர்களைத் தமிழின் பேரால் வம்புக்கு இழுக்காமல், தமிழுக்கும் வைணவத்துக்கும் உண்மையான தொண்டு செய்ய வேண்டும் என்று சொல்லினார் அருணகிரி!
கம்பராமாயணம் அளவுக்கு விரிவாக, மகாபாரத நூல் தமிழில் இல்லை! ஆதலால் அதைத் தமிழ் செய்யுமாறும் அப்போதே யோசனை வழங்கினார்!
இன்கவி பாடும் பரம கவிகளால்,
தன்கவி, தான் தன்னைப், பாடுவியாது,
இன்று நன்கு வந்து, என்னுடன் ஆக்கி, - "என்னால் தன்னை",
வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே!
ஆழ்வார் பாசுரமாச்சே! இதை அருணகிரி மனப்பாடமாச் சொல்றாரே! இது என்ன அதிசயம்!
ஆகா ஓகோ ஜாலங்களை விட, ஆக்கப் பூர்வமான பணியே அரியின் பணி என்றும் ஆழ்வார் சொல்லில் இருந்தே எடுத்துக் காட்டுகின்றாரே!
வாயடைத்துப் போய் நின்றார் வில்லி! இது வரை தான் படித்தது எல்லாம், "எதைப் பிடிக்கப் படிக்கறோம்"-ன்னு தெரியாமலே படித்தது தானோ? ஐயோ!
வில்லி நெடுஞ்சாண் கிடையாக அருணகிரியார் கால்களில் வீழ்கிறார்!
முருகனைப் பாடுவதற்கென்றே வந்தவர் அருணகிரி! "யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்" என்று பாடியவர்!
அவர் எதுக்கு ஒவ்வொரு திருப்புகழிலும், "பெருமாளே! பெருமாளே!" என்று முடிக்க வேண்டும்? இப்படி இது வரை யாரும் செய்தாற் போலத் தெரியலையே! இவரு மட்டும் ஏன் இப்படி?
பெருமாள் = பெரும் + ஆள், பெரிய தலைவன் - என்று முருகனைத் தான் பெருமாளே என்று குறிப்பிடுகிறார் என்பது ஒரு சிலர் வாதம்! :)
அப்படிப் பார்த்தால், முருகன் = அழகானவன் - என்று கருப்பா சிரிப்பா அழகா இருக்குற கண்ணனைக் கூட முருகா-ன்னு கூப்பிடலாமே? :)
பொதுவாக, மக்களிடையே அதிகம் பரவி விட்ட ஒரு கடவுளின் பெயரை, இன்னொரு தெய்வத்துக்குப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை! அதுவும் அதிகப்படியாகப் புழங்க மாட்டார்கள்!
* முருகன் = அழகன் என்று கண்ணனைக் குறித்தாலும், முருகன்-ன்னா எப்பவுமே சேயோன் தான்!
* பெருமாள் = பெரிய ஆள் என்று முருகனைப் பாடினாலும், பெருமாள்-ன்னா எப்பவுமே மாயோன் தான்!
அப்புறம் ஏன் அருணகிரி இந்த டகால்ட்டியைச் செய்கிறார்? :) ஹா ஹா ஹா!
எத்தனை பேருக்கு "முத்தைத் தரு பத்தி" திருப்புகழ் தெரியும்? கையைத் தூக்குங்க பார்ப்போம்! அந்தப் பாட்டை நல்லாக் கவனிச்சிருந்தா, இந்தக் குழப்பமே வராது! :)
இது என் மனத்துக்கு இனிய இராகவன் என்னும் பதிவர். ஜிரா அவர்கள் ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டு இருக்குற வெளக்கம்! :) அருணகிரியார் குரு பூசை அன்று தான் இது கை கூடணும்-ன்னு இருக்கு போல!
முத்தைத் தரு பத்தித் திருநகை-ன்னு முதன் முதலாகப் பாடுகிறார் அருணகிரி! அதுவும் முருகனே "முத்து" என்ற முதற் சொல்லெடுத்துக் கொடுக்கிறான்! முத்து என்பது அருணகிரியின் அம்மா பேரும் கூட!
அப்படிப்பட்ட முதல் முதல் பாட்டில் யாரைப் போற்றியிருப்பாரு? முருகனைத் தானே! அவன் லீலைகளை ஒவ்வொன்னா அடுக்கிச் சொல்லிக்கிட்டே வரலாம் தானே? என்ன பண்றாரு-ன்னு நீங்களே பாருங்க!
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும்
முக்கண் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து முவர்க்கத்து அமரரும் ...... அடி பேண
* முத்து போல புன்னகை பூக்கும் அத்திக்கு (தேவானைக்கு) இறைவனே! சத்திச் சரவணா!
* மோட்சம் என்னும் முத்தியைக் காட்ட ஒரு விதை நீ! குரு நீ!
* ஈசனுக்கே ஓங்காரம் கற்பித்து, அதை அரியும் அயனும் உடன் கேட்க, மூவரும் தேவரும் அடி பேணும், ஞான குரு நீ!
குருவாய் வருவாய்-ன்னு, உபதேசம் வைத்துத் தன்னை ஆட்கொண்டதால், இப்படிப் குருவாக முதலில் பாவித்துப் பாடுகிறார்! அடுத்து என்ன பாட வேண்டும்? எத்தனையோ இருக்கே! நெற்றிப் பொறி, கார்த்திகைப் பெண்கள், ஆண்டிக் கோலம், சூர சங்காரம், வள்ளித் திருமணம் - இதையெல்லாம் பாட வேண்டாமா? அதுவும் முருகனைப் பாடும் முதல் முதல் பாட்டாச்சே!
பத்துத் தலை தத்தக் கணை தொடு = இராவணனைக் கணை தொடுத்த இராகவப் பெருமாள்!
ஒற்றைக் கிரி மத்தைப் பொருது ஒரு = மத்தாக நின்ற கூர்மப் பெருமாள்!
பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் = சக்கரத்தால் சூரியனை மறைத்த கண்ண பெருமாள்!
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பக்த-நண்பனுக்காகத் தேரோட்டும் கீழ் மட்ட வேலையைக் கூடச் செய்யத் தயங்காத கண்ண பெருமாள்
பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள் = இப்படி பச்சைப் புயலான "மாயோன் மெச்சும் சேயோனே"
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே = என்னை ரட்சித்து அருள்! ரட்சித்து அருள்!
ஹிஹி! திருப்புகழ் ஆரம்பமே எப்படி இருக்கு பாருங்க! எதுக்கு இவரு பெருமாளின் அவதாரங்களை எல்லாம் லிஸ்ட்டு போடணும்?
இன்னும் முருகனையே முழுக்கச் சொன்னபாடில்லை! தந்தைக்கு உபதேசம் செய்த குரு-ன்னு காட்டியதோடு சரி! அதுக்குள்ளாற எதுக்கு இந்த வீண் வேலை எல்லாம்? இது என்ன திருப்புகழா? இல்லை திருமால் புகழா?? :))
ஏதோ சில பாடல்களில் அங்கொன்னும் இங்கொன்னுமாகச் சொன்னாரு-ன்னா, சரி, ஏதோ மத நல்லிணக்கம் ஏற்படுத்தச் சொல்றாரு-ன்னு எடுத்துக்கலாம்!
* ஆனால் ஒவ்வொரு திருப்புகழிலும் இப்படியே பண்ணா, என்ன அர்த்தம்?
* அதுவும் முதல் திருப்புகழிலேயே இப்படிப் பண்ணா, என்ன அர்த்தம்?
அருணகிரி என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரு மனசுல? கேட்க ஆளில்லை-ன்னு நினைச்சிட்டாரா? :)
ஞாபகம் வச்சிக்கோங்க! இந்த முதல் திருப்புகழ் முருகனே கொடுத்தது!
ஆக.....இப்படிப் பாடணும்-ன்னு நினைச்சது யாரு? - இது அவருக்காத் தோன்றியதா? இல்லை முருகனே கொடுத்ததா?
"பச்சைப் புயல் ***மெச்சத் தகு பொருள்*** - பெருமாளே" என்பது தான் இதற்கு விடை!......மெச்சத் தகு பொருளா? அப்படீன்னா??.....எதுக்கு மெச்சணும்? யாரை மெச்சணும்?.......... (தொடரும்)
அருணகிரியார் குரு பூசை அதுவுமாக, அருணகிரி திருவடிகளே சரணம்!!!

எப்பொழுது யாரால் தூண்டப்படுவோம் என்பது யாருக்குமே தெரியாதோ என்னவோ எனக்குத் தெரியாத ஒன்று
ReplyDeleteதிதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
சொல்லிலக்கணத்தை மறுமுறையும் படிக்கவேண்டும் என ஓய்வு பெற்றபின் வெகுகாலமாக, காலந்தாழ்த்தி வந்த எனக்கு
மடக்கு, யமகம் ஆகியனவற்றிலிருந்து தலைசிறந்த மேற்கோள் ஒன்றினைக் கொடுத்து அதுவும் கந்தர் அந்தாதியில் ஈந்து, இலக்கணப்புத்தகத்தை மறுபடியும் கையில்
எடுக்கவைத்த, படிக்கவைத்த தங்களுக்கு
நன்றி என ஒரு வார்த்தை சொன்னால் போதுமா ?
சொல்லவேண்டாம். உணர்ந்தாலே போதும் எனவும் தோன்றுகிறது.
ஹிந்தோள ராகத்தில் அருமையாக வருகிறது. பாடியிருக்கிறேன்.
நேரம் கிடைக்கும்பொழுது கேட்கவும்.
சுப்பு ரத்தினம்.
Beautiful, Thanks for letting everyone knew.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=qerSlBUI4ew
ReplyDeletesubbu
//sury said...
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=qerSlBUI4ew
subbu//
நன்றி சூரி சார்!
யமகத்தைச் சுடச்சுடத் தந்தமைக்கு நன்றி!
// YUVA said...
ReplyDeleteBeautiful, Thanks for letting everyone knew//
Cool! Thatz the purpose Yuva! :)
குரு பூர்ணிமையில் குமரகுருவை போற்றும் ஒரு நல்ல இடுகை.
ReplyDeleteசிறப்பாக இருக்கிறது. நன்றி
dei ravi :D
ReplyDelete//sury said...
ReplyDeleteஎப்பொழுது யாரால் தூண்டப்படுவோம் என்பது யாருக்குமே தெரியாதோ என்னவோ எனக்குத் தெரியாத ஒன்று//
ஹிஹி! யாருக்குமே தெரியாது! எங்காளுக்கு மட்டும் தான் தெரியும்! அவன் சொல்லி என் தோழிக்குத் தெரியும்! அவ சொல்லி எனக்குத் தெரியும்! :))
//காலந்தாழ்த்தி வந்த எனக்கு
மடக்கு, யமகம் ஆகியனவற்றிலிருந்து தலைசிறந்த மேற்கோள் ஒன்றினைக் கொடுத்து அதுவும் கந்தர் அந்தாதியில் ஈந்து, இலக்கணப்புத்தகத்தை மறுபடியும் கையில்
எடுக்கவைத்த, படிக்கவைத்த தங்களுக்கு
நன்றி என ஒரு வார்த்தை சொன்னால் போதுமா ?//
:)
மடக்கை மடக்கி மடக்கிப் படிக்கறீங்க போல! பாட்டு மறுபடியும் கேட்டேன்! மடக்கு மடங்காம நல்லா வந்திருக்கு சூரி சார்!
//ஹிந்தோள ராகத்தில் அருமையாக வருகிறது.//
மடக்கு-ன்னா ஹிந்தோளம்-ன்னு எப்படி தீர்மானிக்கறீங்க?
//கபீரன்பன் said...
ReplyDeleteகுரு பூர்ணிமையில் குமரகுருவை போற்றும் ஒரு நல்ல இடுகை//
வாங்க கபீரன்பன் ஐயா!
குமரகுருபரரா? அருணை குரு தானே சொன்னேன்?
அது சரி, அவரும் குமர-குரு கிட்ட இருந்து தானே பாடம் படிச்சார்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
//υnĸnown вlogger™ said...
ReplyDeletedei ravi :D//
உன்னையும் இப்படிக் கூப்பிடணும்-ன்னு பாக்குறேன்! பப்ளிக்கா முடியல தங்கச்சி! தனியாக் கூப்புடறேன்! :)
//
ReplyDeleteஉன்னையும் இப்படிக் கூப்பிடணும்-ன்னு பாக்குறேன்! பப்ளிக்கா முடியல தங்கச்சி! தனியாக் கூப்புடறேன்! :)//
ஹிஹி...குமரன் அய்யா உங்களை டேய் ன்னு கூப்பிட்டா நல்லா இல்லைன்னு சொல்லிடுங்க ஒகே?
தல
ReplyDeleteகூடவே வரேன்...;))
//கோபிநாத் said...
ReplyDeleteதல
கூடவே வரேன்...;))//
வா கோபி! சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடறேன்! :))
thanks for the meaning ! :)
ReplyDeleteசில பத பிரயோகங்கள் புரிந்தன.
//அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்)//
அப்தி என்ற வடமொழி பதம் கடல் என்று பொருள் தரும். (ஷீராப்தி => பாற்கடல்)
"அப்தி" "அத்தி" ஆயிற்றோ?
//ததி = தயிர் (ஆயர்ப்பாடியின் தயிர்)//
மறுபடியும் ததி என்ற வடமொழி பதம்.
து = உண்டானே வாரி வாரி (அந்த அழகிய கண்ணன்!)
"து" என்பது உண்ணுதல் என்ற பொருளை தருவதை முதன் முறையாக பார்க்கிறேன்.
(இது போல வேறு எங்காவது பிரயோகம் உண்டா?)
//அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட//
அதனால் தான் தெய்வயானை என்று பெயர் பெற்றாளோ?
//தாத = தாசனே! தேவானை தாசனே முருகா! //
இங்கு "கிழவனே" என்று பொருள் கொள்ளக் கூடாது போல . :-)
குறமகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். :-)
//அதத்து உதி = மரணமும் பிறப்பும்//
ஹதம் - அதம்
//துத்தி = புள்ளி வைத்திருக்கும்//
"இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணம் ஆயிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்...."
(குலசேகர பெருமாள் திருமொழி )
even before anyone read my comment about "k.r.s" in the previous post you were quick to add a new one... :)
//Radha said...
ReplyDeletethanks for the meaning ! :)//
any time for you, Radha :)
உங்க மற்ற ஐயங்களுக்கு ஒருத்தர் கிட்ட வேண்டுகோள் வச்சிருக்கேன்.
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்-ன்னு அவரு வந்து சொன்னப்பறம், நான் ஏதாச்சும் ஒப்பேத்த முடியுதா-ன்னு பாக்குறேன்! :)
Radha said and kannabiran sir replied:
ReplyDelete// து = உண்டானே வாரி வாரி (அந்த
"து" என்பது உண்ணுதல் என்ற பொருளை தருவதை முதன் முறையாக பார்க்கிறேன்.
(இது போல வேறு எங்காவது பிரயோகம் உண்டா?) //
துப்பார்க்குத் துப்பு ஆய, துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்பு ஆய தூ உம் மழை.
எனும் குறட்பா அறத்துப்பால் 2வது அதிகாரத்திலே உள்ளதே !
துப்பார்க்கு = உண்பவர்க்கு
துப்பு ஆக்கி = உணவுகளை உண்டாக்கி .....
து எனும் சொல், பொருட்சொல் ஆகவும் வினைச்சொல் ஆகவும் செயல்படும்.
//அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்)//
அப்தி என்ற வடமொழி பதம் கடல் என்று பொருள் தரும். (ஷீராப்தி => பாற்கடல்)
"அப்தி" "அத்தி" ஆயிற்றோ?/
ஆம் எனவே நினைக்கிறேன்.
சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் அது போலவே இன்றைய தேவனாகரி எனப்படும் இந்தியிலோ அல்லது
மற்ற மொழிகளிலோ ( திராவிட மொழிகள் உட்பட ) வரும்பொழுது அச்சொற்கள் தத்ஸம எனப்படும்.
சிறிது வேறுபட்டு அல்லது சிதைந்து அல்லது உருமாறி அல்லது ஒரிறு எழுத்துக்கள் தொலைந்து போயின்,
அவை தத்பவ எனப்படும்.
அப்தி அத்தி ஆகிறது போலவே
ஷப்தம்( சங்கர் எனும் சொல்லில் வரும் ச ) தமிழில் சத்தம் ஆகிறது.
சாதாரணமாக, ப் என்னும் ஒலி வடிவம் ( மூன்றாவது எழுத்து ப வரிசையில் )
த ஆக மாறுபடுகிறது .
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com
சூரி சார்,
ReplyDeleteவிளக்கங்களுக்கு மிக்க நன்றி ! :-)
"துப்பார்" என்பதில் root word "துப்பு" என்றாகுமா?
நான் இந்த இடத்தில், "து" என்பதும் ஸமஸ்க்ரித மொழி பதமாக கையாளப்பட்டுள்ளதோ என்று நினைத்தேன்.
Indeclinables வகையை சேர்ந்த, "து" என்னும் ஸமஸ்க்ரித பதம் "ஆனாலும்" (however) என்று(ம்) அர்த்தம் தரும் என்று நினைக்கிறேன்.
"நிலையாக இருப்பது ஆதிசேஷன் மேல் பாற்கடலில்; ஆனாலும் தயிர் தித்தித்ததே !!" என்று நான் பொருள் கொண்டிருந்தேன். :)
முதன் முறையாக உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி ! :-)
~
ராதா
Ravi said...
ReplyDelete*****
//Radha said...
thanks for the meaning ! :)//
any time for you, Radha :)
*****
கண்ணா ரவி,
நான் ராதான்னு sign பண்றத பார்த்து இந்த டயலாக் விடறேன்னு நெனக்கறேன். :-)
fyi - i am a 30 year old guy. my full name is radhamohan. :-)
profile பார்க்காம (பார்த்தும் மறந்து)நிறைய பேர் ஏமாந்து இருக்காங்க ! careful dude ! :-)
~
Radha
Very super.
ReplyDeleteby
murugan
paramasivam.murugan@gmail.com
அருமை, அருமை KRS ஐயா.
ReplyDeleteஅருமை குமரனின் திருப்புகழுக்கு அருமையான விளக்கம் கொடுத்த தாங்கள் அவர் அன்னையின் கும்பாபிஷேகம் காணுங்கள்.
அன்னையின் கும்பாபிஷேகம் மொத்தம் ஐந்து பதிவுகள் உள்ளன அனைத்தையும் கண்டு அன்னையின் அருள் பெறுங்கள்.
//பத்துத் தலை தத்தக் கணை தொடு = இராவணனைக் கணை தொடுத்த இராகவப் பெருமாள்!//
ReplyDeleteகாரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற !
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !
(பெரியாழ்வார் திருமொழி - 3.9.10)
//ஒற்றைக் கிரி மத்தைப் பொருது ஒரு = மத்தாக நின்ற கூர்மப் பெருமாள்!//
நீள்நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ்கடலைப்
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை
பூணார மார்வனை புள்ளூரும் பொன்மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே.
(பெரிய திருமொழி - 11.7.1)
//பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் = சக்கரத்தால் சூரியனை மறைத்த கண்ண பெருமாள்!//
நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற அரசர்கள்தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப்
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்.
(பெரியாழ்வார் திருமொழி - 4.1.8)
//பத்தற்கு இரதத்தைக் கடவிய = பக்த-நண்பனுக்காகத் தேரோட்டும் கீழ் மட்ட வேலையைக் கூடச் செய்யத் தயங்காத கண்ண பெருமாள்//
பார் மன்னர் மங்கப் படைதொட்டு, வெம்சமத்துத்
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் காண், ஏடீ
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலைமேலான், சாழலே !
(பெரிய திருமொழி - 11.5.8)
:)
~
ராதா
//Radha said...
ReplyDeleteகண்ணா ரவி,
நான் ராதான்னு sign பண்றத பார்த்து இந்த டயலாக் விடறேன்னு நெனக்கறேன். :-)//
ஹா ஹா ஹா!
இந்த டயலாக் எல்லாம் ரொம்ப ஜிம்பிள்! எல்லாருக்கும் சொல்வது தான்!
பிரத்யேகமாச் சொல்லுற டயலாக் எல்லாம் தனி! அதெல்லாம் பதிவுல எல்லாம் சொல்ல மாட்டோம்! நாங்க கண்ணன் வழி வந்தவர்கள்! அதுக்கு ரூட்டே வேற! :))
//fyi - i am a 30 year old guy. my full name is radhamohan. :-)
profile பார்க்காம (பார்த்தும் மறந்து)நிறைய பேர் ஏமாந்து இருக்காங்க ! careful dude ! :-)//
ஹிஹி!
அதெல்லாம் எப்பவோ பார்த்தாச்சு! :)
இந்த வெவரம் கூடவா கோதையின் தோழனுக்குத் தெரியாது? என்ன நினைச்சீங்க என் தோழியோட தோழன் பத்தி? :))
//muruganp said...
ReplyDeleteVery super//
நன்றி முருகன்!
//Kailashi said...
ReplyDeleteஅருமை, அருமை KRS ஐயா.
அருமை குமரனின் திருப்புகழுக்கு அருமையான விளக்கம் கொடுத்த தாங்கள்//
திருப்புகழ் இல்லீங்க கைலாஷி ஐயா! கந்தர் அந்தாதி!
//அன்னையின் கும்பாபிஷேகம் மொத்தம் ஐந்து பதிவுகள் உள்ளன அனைத்தையும் கண்டு அன்னையின் அருள் பெறுங்கள்//
இன்னிக்கி தான் முழுக்க வாசிச்சேன்! நன்றி!
//Radha said...
ReplyDelete//பத்துத் தலை தத்தக் கணை தொடு = இராவணனைக் கணை தொடுத்த இராகவப் பெருமாள்!//
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற !//
பாசுரப் புலி ராதா-ன்னா சும்மாவா? வாழ்க வாழ்க! :)
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப் போய்! :)
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
எத்திறத்தும் ஒத்து நின்று
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்,
முத்திறத்து மூரி நீர
"ராவணைத் துயின்ற,நின்
பத்துறுத்த சிந்தை யோடு"
நின்று பாசம் விட்டவர்க்கு,
எத்திறத்தும் இன்பம் இங்கும்
அங்கும் எங்கு மாகுமே!
:))
//ஒற்றைக் கிரி மத்தைப் பொருது ஒரு = மத்தாக நின்ற கூர்மப் பெருமாள்!//
ReplyDeleteநீள்நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ்கடலைப்
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை//
கலக்கல்ஸ் ஆஃப் ராதா! அருணகிரிக்குச் சளையா பாசுர மழை பொழியறீங்களா? :))
அருணகிரிக்கு முந்தின சந்தக் கவி, திருமழிசையும் இப்படியே கலக்கறாரு! :)
தூய்மை யோகம் ஆயினாய்
துழாய் அலங்கல் மாலையாய்
"ஆமையாகி ஆழ் கடல்
துயின்ற வாதி தேவ" நின்
நாமதேயம் இன்ன தென்ன
வல்லம் அல்லம் ஆகிலும்,
சாம வேத கீதனாய
சக்ர பாணி அல்லையே!
//பத்தற்கு இரதத்தைக் கடவிய = பக்த-நண்பனுக்காகத் தேரோட்டும் கீழ் மட்ட வேலையைக் கூடச் செய்யத் தயங்காத கண்ண பெருமாள்//
ReplyDeleteபார் மன்னர் மங்கப் படைதொட்டு, வெம்சமத்துத்
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் காண், ஏடீ//
ஹிஹி!
வரிக்கு வரிப் பாசுரக் கச்சேரியா? இருங்க யோசிச்சிங்....
ஆங்....
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து "பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு" ஓர் கோல் கொண்டு வா
தேவப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா! :))
@ராதா, சூரி சார்
ReplyDeleteஎனக்குத் தேரூர அன்பன் இராகவன் வராததால் (பாவம், அவனுக்கு வேலைப் பளு போல)
...இதோ...என்னால் இயன்ற வரை சொல்கிறேன்!
* அப்தி = அத்தி (கடல்) ஆனது! சரியே! அப்பு = நீர் அல்லவா? ஆபோ நாரா? அதன் வேர்ச் சொல்!
* ததி = தயிர் = தஹி :)
* //அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட//
அதனால் தான் தெய்வயானை என்று பெயர் பெற்றாளோ?
ஆமாம்! கரி மகள் என்ற பேரும் உண்டு!
பெருமாளின் மனப் புதல்வியரான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவருமே வள்ளி-தேவயானையாகத் தவம் இருந்து முருகப் பெருமானை அடைந்தனர் என்பது கந்த புராணம்!
அமராவதி தோட்டத்தில் வெள்ளை யானைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதால் தேவயானை! அத்தி மகள்!
//அதத்து உதி = மரணமும் பிறப்பும்//
ஹதம் - அதம்//
சரியே! அதம்/உதி = மறைவு/தோற்றம்
//"துப்பார்" என்பதில் root word "துப்பு" என்றாகுமா?
ReplyDeleteநான் இந்த இடத்தில், "து" என்பதும் ஸமஸ்க்ரித மொழி பதமாக கையாளப்பட்டுள்ளதோ என்று நினைத்தேன்.//
பரன்து...ன்னு ஹிந்தியிலும் சொல்லுவாய்ங்க! However=து என்ற பொருளில் இங்கே வரவில்லை! தமிழ்ப் பொருளில் "உணவு" என்று தான் வந்தது! ஏன் என்றால்...
ததி தித்தித்ததே
து
துதித்து
இதத்து ஆதி
என்று...தித்திப்பான தயிர் உண்டவன் போற்றும் முருகா என்று முடிவதால், "து" என்பது தமிழ்ச் சொல்லே!
து = உணவு, கொள்ளுதல்-ன்னு பொருள்
துய் என்பதன் வேர்ச் சொல்!
து+ப்பார் = உணவு+உண்பார்
துத்தல் என்றால் உண்ணுதல் என்ற பொருளும் உண்டு!
தின்றான் என்பதைத் துன்னான்-ன்னு சொன்னா சென்னைத் தமிழ் என்று கேலி பேசுவோம்!
ஆனால் துன்னல் = உண்ணுதல் தான்! :)
துப்பம் = சாப்பாடு
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான்- என்று பெரியாழ்வாரும் து, துப்பம்-ன்னு பேசுவார்! :)
//கலக்கல்ஸ் ஆஃப் ராதா! அருணகிரிக்குச் சளையா பாசுர மழை பொழியறீங்களா? :))//
ReplyDeleteநன்றிகள் பல ! :-) "மனத்துக்கினியான்" பாசுரமும் , "வங்கக் கடல் கடைந்த மாதவனை ..." பாசுரமும் சொல்லி இருக்கலாம். அருணகிரியாரின் வரிகளுக்கு நன்றாக பொருந்தி வருமாறு உள்ள பாசுரங்களை இட ஆசைப்பட்டு இட்டேன். அதுக்காக பதிலுக்கு பாசுரங்களா பொழியறீங்களே. :-)
பாசுரங்களை வகைப்படுத்தி சற்றே அரிதான வகைகள் என்று பார்த்தால்: "கண்ணன் ரவியை மறைத்தது", "கூர்ம அவதாரத்தை (பற்றி மட்டும்) சிலாகிக்கும் பாசுரங்கள் " இவை இரண்டும் பார்த்தசாரதி பாசுரங்களை விட அரிதாய் உள்ளன போல.
இந்த தருணத்தில் "திருப்பாவை குறுக்கெழுத்து போட்டி" அருமையாக இருந்தது என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். :-)
~
ராதா
//Radha said...
ReplyDeleteஅருணகிரியாரின் வரிகளுக்கு நன்றாக பொருந்தி வருமாறு உள்ள பாசுரங்களை இட ஆசைப்பட்டு இட்டேன்//
ஆமாம் ராதா!
நன்றாகப் பொருந்தி வரும் பாசுரங்களைத் தான் கொடுத்துள்ளீர்கள்!
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக பற்றி பாசுரக் குறிப்பு வேற எங்காச்சும் வருகிறதா-ன்னும் me the yosiching :)
//பாசுரங்களை வகைப்படுத்தி சற்றே அரிதான வகைகள் என்று பார்த்தால்: "கண்ணன் ரவியை மறைத்தது",//
ஆகா! என் கண்ணன் என்னை மறைப்பதில் எனக்கு ஆனந்தமோ ஆனந்தம்! :)
//இந்த தருணத்தில் "திருப்பாவை குறுக்கெழுத்து போட்டி" அருமையாக இருந்தது என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். :-)//
அட, பழைய பதிவு எல்லாம் தூசு தட்டிப் படிக்கறீங்களா என்ன? :)
இன்று மாலை ஒரு புதிர்ப் போட்டிப் பதிவு வரப் போகுது பாருங்க! :)
"து" என்பது இந்த அருணகிரியார் பாடலில் "உணவாக" வருவது புரிகிறது. thanks !
ReplyDelete//துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான்- என்று பெரியாழ்வாரும் து, துப்பம்-ன்னு பேசுவார்! :)//
இங்க "துப்பம்", "நெய்" என்ற அர்த்தத்தில் வருதுன்னு நெனைக்கறேன். :)
//இன்று மாலை ஒரு புதிர்ப் போட்டிப் பதிவு வரப் போகுது பாருங்க! :) //
அட ! மறுபடியும் கலக்க போறீங்கன்னு சொல்லுங்க ! :-)
//பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக பற்றி பாசுரக் குறிப்பு வேற எங்காச்சும் வருகிறதா-ன்னும் me the yosiching :) //
ReplyDeleteதிருமங்கையிடம் கேட்கவும். :-)
@ராதா
ReplyDelete//திருமங்கையிடம் கேட்கவும். :-)//
ஆகா!
வர வர கேஆரெஸ் பய புள்ளைக்கு மறதி சாஸ்தி ஆவுதோ? :)
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப்
பகலவன் ஒளிகெடப் பகலே
ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான்
அரங்கமா நகர் அமர்ந்தானே!
I juz like this game! awesome! :)
எந்தூருல இருக்கீக இராதா? இன்னுமா தூங்கல? :)
ஒரு மின்னஞ்சல் தட்டி வுடுங்களேன்! தன்விவரணப் பக்கத்தில் இருக்கு பாருங்க முகவரி!
உங்க அமலனாதி ஏன் ஜூன் மாசத்துலயே நிக்குறான்? அதான் ஜூலை வந்து, ஆடிப்பூரம் வரப் போவுதுல்ல? சீக்கிரம் அடுத்த பாகம்! :)
//ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான்
ReplyDeleteஅரங்கமா நகர் அமர்ந்தானே! //
கலக்கி போட்டீங்க போங்க ! :)
//உங்க அமலனாதி ஏன் ஜூன் மாசத்துலயே நிக்குறான்? //
முதல்லே மற்ற பேர் எழுதி இருக்கறத (குமரனோட கோதைத் தமிழ் etc etc) படிச்சி அனுபவிப்போம் அப்படின்னு என்னோட பதிவுக்கு லீவ் விட்டுட்டேன்.
i live in chennai. working in s/w should explain why i am awake till now. :)
sure. will send you a mail.
அருமை... :)
ReplyDelete//இராம்/Raam said...
ReplyDeleteஅருமை... :)//
எது ராமேய்? :)
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
ReplyDeleteதனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
தங்கள் வலைப்பூவை சில மாதங்களுக்கு முன்தான் வாசிக்கும் பேறு பெற்றேன். அதுமுதல், ஒவ்வொரு பதிவையும் தேடித் தேடி வாசித்து வருகிறேன்.
ReplyDeleteஅருணகிரிநாதர் பற்றிய இப்பதிவு அருமை.
இப்பதிவையும், இஃதொத்த தங்கள் பதிவுகளையும் முழுமையாகவோ, சாரத்தையோ தமிழ் மற்றும் ஆன்மீக ஆர்வமுள்ள எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதற்கு தங்கள் அனுமதி வேண்டுகிறேன்.
அன்புடன்
ஸ்ரீபாஸ்