Saturday, December 31, 2011

கோதைத்தமிழ்16: மலையாள நென்னல் @ThirumaranT

மக்கா, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! முன்பு 2012 ன்னு படம் வந்துச்சு! இப்ப 2012யே வந்துருச்சி:) முருகனருளால், இப்புத்தாண்டு, அனைவருக்கும் நிம்மதி என்கிற பேரின்பத்தைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்! ஒவ்வொரு ஆண்டின் முதல் நாளும், British ஆபீசர்களுக்கு என்ன வணக்கம் சொல்வது? நாம, நம்மவனுக்கு வாழ்த்து சொல்லுவோம்-ன்னு துவங்கியதே = Jan 1st திருத்தணிப் படிப்பூசை! இன்றும் விடாமல் நடக்கும் விழா! ஆங்கிலப் புத்தாண்டு...
Read more »

Friday, December 30, 2011

கோதைத்தமிழ்15: ஒல்லை @iamkarki

மக்கா...இன்னிக்கிப் பேசப் போறது ஒரு ட்விட்டர் பிரபலம்! குறும்படப் பிரபலம்! Blog பிரபலம்! - பிராப்லமோ பிராப்லம்:)) வேற யாரு? நம்ம எடுப்பட்ட பய, குஜ்ஜூ குமரன், தோழியின் தோழன் = @iamkarki தான்!:) ஆளைப் போல் அல்லாமல், கார்க்கியின் குரலில் மென்மை, என்னைப் போலவே!:) கார்க்கி = மென் குரல்! இன் குரல்! வசீகரமான குரல்! அடங்கொய்யால! இவனுக்கு என்னடாத் திருப்பாவை பத்தித் தெரியும்? எந்த மடையன்டா இவனைப் பேசக் கூப்பிட்டது-ன்னு...
Read more »

Thursday, December 29, 2011

கோதைத்தமிழ்14: புழக்கடை @raguC

மக்கா, இன்னிக்கி பேசறவரு தமிழ் ஆர்வலர் மட்டுமில்ல! தண்ணி ஆர்வலரும் கூட! அட... நான் சொல்லுறது நீர்ப்பாசனத் தண்ணி-ங்க:) அணை - மதகு - பாசனம் - அறிவியல் ன்னு அவர் பதிவுகளை வாசிங்க தெரியும்! இதோ @raguC உங்கள் முன்பு! நன்றி ரகு! இயல்பான, செறிவான பேச்சு! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி உள், செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்! செங்கல் பொடிக் கூறை வெண் பல்-தவத்தவர் தங்கள் திருக்கோயில்...
Read more »

Wednesday, December 28, 2011

கோதைத்தமிழ்13: ஆண்டாளும் அப்துல் கலாமும்!

Today's Podcast was supposed to be from a Celebrity!:) பாவம், அவருக்குச் சற்று வேலை அதிகம்! அதனால் இன்னொரு Celebrity-ஐ பார்ப்போம்:) = ஆண்டாளும், அப்துல் கலாமும்! என்ன பேச்சு இது? அப்துல் கலாமா? ஆண்டாள் எப்போ ராக்கெட் விட்டா? ஏவுகணை விட்டா? விண்வெளி ஆராய்ச்சி பண்ணா? பாக்கலாம் வாரீயளா? :) வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று! - அப்படின்னா என்ன? வெள்ளிக்கிழமை பொறந்தாச்சி! வியாழக்கிழமை ஓடியே போச்சு! அப்படின்னு...
Read more »

கோதைத்தமிழ்12: SweetHeart @nilaakaalam

மக்கா, இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, ஒரு பெண்புலி! பெண்நிபுணி! பெண் FM:) வேற யாரு? நம்ம @nilaakaalam (எ) நிலா தான்! அவங்க சும்மா எல்லாம் பேச மாட்டாங்களாம்! ஒவ்வொரு பேச்சுலயும் BGM (எ) பின்னணி இசை இருக்கணுமாம்! அப்போ தான் பேசுவாங்களாம்! அதுக்காக, இவங்க Podcastக்கு, நான் என்ன இளையராஜா-வையா BGM போடச் சொல்ல முடியும்?:) கேளுங்க ஒலிக் கோப்பை! விடிகாலை ஒலி, மாடு கத்தும் ஒலி, இராம-இராவணக் கத்திச் சண்டை...
Read more »

Tuesday, December 27, 2011

கோதைத்தமிழ்11: "பொண்டாட்டி" என்றால் என்ன?

மக்கா...இன்று பேச வேண்டிய நம்ம @4SN குழந்தை, As I am Suffering from thoNdai katting-ன்னு விடுப்புக் கடிதம் விடுத்ததால்... @4SN க்கு இணையான @வேளுக்குடி பேசுவதைச் "சற்றே" கேளுங்கள்:) செஞ்சொற் தமிழ்க் கொண்டல்! கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறல் அழியச், சென்று செருச் செய்யும், குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! புற்று அரவு அல்குல் புனமயிலே, போதராய்! சுற்றத்து, தோழிமார் எல்லாரும்...
Read more »

Sunday, December 25, 2011

கோதைத்தமிழ்10: நாற்றம்-தேற்றம் @Kuumuttai

மக்கா, வணக்கம்! இன்னிக்கி திருப்பாவை பேசப் போறது, என் நண்பன், கூமுட்டை! ஒரு கூமுட்டையை எல்லாம் எதுக்குடா நண்பனா வச்சிக்கிட்டு இருக்கே?-ன்னு கேக்காதீக:)) இது வேற = @kuumuttai என்ற Twitter குல திலகம்!:) சில பேரிடம் நேரில் பேசியது கிடையாது, பார்த்தது கிடையாது! அவ்வளவு ஏன்?...கூமு குரலே இப்பத் தான் எனக்குத் தெரியும்! ஆனாலும் அதையும் தாண்டி ஒரு நட்பு ஆழமாய் இருப்பது சற்று வியப்பு தான்! அதுக்காக என்னைய...
Read more »

Saturday, December 24, 2011

கோதைத்தமிழ்09: மாடம் @amas32

மக்கா...இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இயேசு நாதப் பெருமான் அவதரித்த இந்தக் குளிர் மார்கழி நன்னாளிலே, எளியோரின் மனமெல்லாம் குளிரட்டும்! கர்த்தரின் திருமகனுக்கு நல்வரவு = என்&முருகன் சார்பாக:) இன்று கோதையின் பாவையைப் பேசப் போவது, இன்னொரு பெண்! தாய்! = @amas32 என்னும் சுஷிமா சேகர்! ட்விட்டரில், நம் பலருக்கும் அறிமுகமானவர்! ஒரு இளைஞியைப் போல் துடிப்பாகக் கீச்சுபவர்! தமிழ்ப் பாக்களின் தீவிர வாசகி!...
Read more »

Friday, December 23, 2011

கோதைத்தமிழ்08: சேவித்து @balaramanL

மக்கா, இன்றைய #PaavaiPodcast பேசப் போறது, ட்விட்டரில் பெரும் தமிழ் ஆர்வலர்! தமிழ்க் கவிதைகளில் மாறுபட்ட வடிவங்களைப் படைத்துப் பார்ப்பவர்! யாருய்யா அது? = எறுழ்வலி பலராமன் @balaramanL ஆகா! அது என்னா எறுழ்வலி? அப்படின்னா? அவரோட வலைப்பூவின் பேரு அது! என்னா பொருள்-ன்னு அவரு வந்து சொல்லட்டும்! இல்லீன்னா அங்கே போய் கட்டாயம் பாருங்க:) இதோ...உங்கள் முன்னால் நற்றமிழ் நவில... நன்றி பலராமா! பேருக்கேத்தபடி,...
Read more »

Thursday, December 22, 2011

கோதைத்தமிழ்07: கீச்சுகீச்சு @KumaranMalli

மக்கா, வணக்கம்! இன்னிக்கி பேச இருந்தது, ஒரு பெரிய நாத்திகர் = நம்ம @tbcd  ஆனா, ஆத்திகம் கிட்ட நாத்திகம் தோத்துருச்சி:)) திடீர்-ன்னு @tbcd "As I am suffering from fever"-ன்னு கடிதம் போட...நாத்திகத்தை நிரப்ப வந்தது யாரு?:) = என் பதிவுலக குருநாதர்! தமிழ்ப் பதிவுலகின் ஆன்மீக சூப்பர் ஸ்டார் என்று கொடி கட்டிப் பறந்த "கூடல் குமரன்" @kumaranmalli பேசும் Podcast இன்று! என் பதிவுகள் கூடல் ஏறி இருக்கு!...
Read more »

Wednesday, December 21, 2011

கோதைத்தமிழ்06: Function Overloading @PSankar

இன்னிக்கிப் பேசப் போறவரு ஒரு Techie Guy! ட்விட்டரில் மேலாண்மைக் கருத்துக்களைக் கீச்சுபவர்! @psankar Android  மணம் கமழுற ஒருத்தரு, தமிழ் மணமும் கமழ, இதோ...கேளுங்க வெங்கலக் குரலை:) ஆண்டாள் Function Overloading செஞ்சி இருக்காளாம்! அடிப்பாவி, நீயும் software பொண்ணாடீ? கிழிஞ்சிது போ!:) பேசாம என்னை மாதிரி bankingக்கு வந்துறேன்டீ:) நன்றி சங்கர்! இரத்தினச் சுருக்கமா, கோதைத்தமிழை Techie ஆக்கிய உம்மை...
Read more »

Tuesday, December 20, 2011

கோதைத்தமிழ்05: செப்பண்டி @UmaKrishh

மக்கா, இன்றைய Twitter குரல் = பெண் குரல்! நன் குரல்! மதுரைக் குரல்! பாசுரமும் = "மதுரை" மைந்தனை! வேற யாரு? நம்ம @UmaKrishh தான்!:) இவங்க கிட்ட, டீச்சரைக் கண்டால் போல், எனக்கு பய பக்தி! அடக்கியே வாசிப்பேன்:) நீங்களே கேளுங்க...என்னமா நயவுரை சொல்லுறாங்க-ன்னு! இது உமாவின் அப்பாவுக்குப் பிடித்தமான பாட்டாம்! = ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும், தன் பெண்ணைச் சான்றோள் எனக் கேட்ட தந்தை:) நன்றி உமா! உங்க...
Read more »

Monday, December 19, 2011

கோதைத்தமிழ்04: கரடி விடாதே @rsGiri

மக்கா, இன்னிக்கி ஒரு பிரபல பாடகர் பாடப் போறாரு, பேசப் போறாரு! யாரு? = நம்ம கிரி ராமசுப்பிரமணியன் என்னும் @rsGiri யே தான்!:) ஐந்து மாசம் முன்பு, நான் ட்விட்டருக்கு வந்த புதுசில், கிரி-யின் புகைப்படம் கண்டு, அவர் கூடப் பேசவே பயந்தேன்! நம்மைப் பாத்து மொறைக்குறாப் போலவே போஸ் இருக்கும்:) அப்பறம் அவர் குரலைக் கேட்ட பின்னாடித் தான்...இந்த மனுசன் மென்மையானவரு-ன்னு புரிஞ்சுது:)) கிரியின் இன்-குரலில், மென்-குரலில்,...
Read more »

Sunday, December 18, 2011

கோதைத்தமிழ்03: கயல்-உகள @MayilSenthil

வாங்க மக்கா, இன்னிக்கி ட்விட்டர் குல திலகம், ராஜா ரசிகன், மயிலேறும் பெருமாள்- @MayilSenthil கோதைத்தமிழ் பற்றிப் பேசுறாருங்கோ!:) இதை, அம்மா-அப்பாவிடமெல்லாம் போட்டுக் காட்டி, வாழ்க்கையில் மொத முறையா நல்ல பேரு வாங்கிக் கொண்ட மயில் செந்திலின் குரலில், கேட்டு + கண்டு மகிழுங்கள்! :) ஏயப்பா...என்னமாப் படங் காட்டுறாரு! அன்னாரின் soundcloud இங்கே! அவர் தேன் குரலைத் தரவிறக்கிக் கொள்ள விரும்புவோர்க்கு:) நயம்பட...
Read more »

Saturday, December 17, 2011

கோதைத்தமிழ்02: பைய @ChPaiyan

வாங்க, வாங்க...கோதைத் தமிழ்த்தேரில் இன்று கன்னடமும் கொஞ்சிப் பேசுகிறது:) இன்னிக்கி @ChPaiyan (ச்சின்னப் பையன்) பேசுறாரு! அது என்ன ச்ச்ச்ச்சின்ன?:) கேட்டுட்டு நீங்களே சொல்லுங்க; இவரு சின்னப் பையனா, இல்லை பல விடயங்கள் அறிந்த பெரிய பையனா-ன்னு?:)) நன்றி ச்சின்னப்பையரே:) கன்னடமும் களிதமிழும் சேர்த்துக் குடுத்த சுவைக்கு நன்றி! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள் பையத்...
Read more »

Friday, December 16, 2011

கோதைத்தமிழ்01: நேரிழை @nchokkan @dagalti

தமிழ் அன்பர்கள் - Twitter நண்பர்கள் - பந்தல் வாசகர்கள் எல்லோருக்கும், குளிர்ர்ர்ந்த-கதகதப்பான மார்கழி வாழ்த்துக்கள்:) * இந்த ஆண்டு மார்கழியில், ஒரு தமிழ்த் தேர்! * ஊர் கூடி இழுப்பது = Tamil Twitters! ஒவ்வொரு நாளும் உங்கள் அபிமான Twitter நட்சத்திரங்கள்!  அவங்க கீச்சுகளை.....படிக்க மட்டுமே அல்லாது, அவங்க குரலைக் கேட்கவும் போறீங்க!:))  PaavaiPodcast - Entirely Podcasted by Tamil Twitters!! திருப்பாவை...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP