Friday, August 10, 2012

முருகனின் கடைசி "வகுப்பு"!

(ஆடிக் கிருத்திகைப் பதிவு: Aug-10)

"அருணகிரி" = இது, முருகனைப் பாடவே பொறந்த ஒரு பேரு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய் -ன்னு... தானே குடுக்கும் வாக்குமூலம்!

* முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு = திருப்புகழ்
* கடைசியில் பாடி நிறைந்தது = சிவ லோகமே = திருவகுப்பு

திருப்புகழில் சந்தம் கொஞ்சும்;
ஊர் ஊராகச் சென்று பாடின அனுபவம் தெரியும்;
பழசை மறக்க மாட்டாது கணிகையரைத் திட்டும் கோபம் புரியும்;
தன் நூலைத் தான் பாடிப், பிறரும் பாடுகிறார்கள் என்று பெருமை கூடத் தொனிக்கும்...

ஆனால் திருவகுப்பிலோ, இவை ஒன்றுமே இராது!
தான் பாடியது என்று சொல்லாமல், ஒரு பக்தன் முற் பிறவியில் பாடிய திருப்புகழ் -ன்னு, யாரோ பாடியது போல் சொல்லுவார் - ஏன்?

ஏன்-ன்னா, அருணகிரி, திருவகுப்பை...
 "கிளியாய் இருந்து பாடினார்"
என்பது வழக்கு! = இது ஒரு கதை! பார்ப்போமா?

சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகனுக்கு அருணகிரியைக் கண்டாலே ஆகாது; ஏன்?

காரணம் தெரியாது! கருத்துக்கள் பிடிக்காது!
மனசிலே இனம் புரியாத அசூயை!
இப்படி முருக உள்ளம் கொண்டார்களுக்கு எதிரிகள் தானே அமைந்து விடுவது ஒரு வாடிக்கை! வேடிக்கை!

* மாற்று சமயத்தவர் = வில்லிபுத்தூரார் திருத்திக் கொண்டார்!
* ஒரே சமயத்தவர் = சம்பந்தாண்டான் திருத்திக் கொள்ளவில்லை!

நோயுற்ற மன்னனின் பிணி தீர்க்க, பாரிஜாத மலரை, அருணகிரியால் கொண்டு வர முடியும் -ன்னு மன்னனிடம் போட்டுக் கொடுத்தான் சம்பந்தாண்டான்;

வேறு வழியின்றி அருணகிரியும் செல்ல வேண்டிய நிலைமை;
ஆனால் தேவர் உலகுக்கு உடலோடு செல்ல முடியாதே;
தன் உடலை அண்ணாமலைக் கோபுரத்தில் கிடத்திவிட்டு, உயிர் ரூபத்தில் சென்று, மலர் கொண்டு வந்தார் அருணகிரி!

ஆனால் அதற்குள், சம்பந்தாண்டான் கூட்டம், கோபுரத்தில் கிடத்திய உடலை இறக்கி, மண்ணிலே புதைத்து விட்டது;
மீண்டு வந்தவருக்கு மறுபடி உடல் கிடைக்கவில்லை; எத்தனையோ சுகித்த உடல், சுகித்துப் பின்பு சகித்த உடல்!

அருகே இருந்த மாண்ட கிளி ஒன்றின் உடலில் புகுந்து, மலரை ஈய,
மன்னன் பிணி தீர,
அருணகிரிக்குப் பிறவிப் பிணியும் தீர்ந்தது! = "உத்தமக்" கிளி!

ஆம், கிளியாய் இருந்து, அருணகிரி பாடிய கடைசிப் பாடல்களே = திரு வகுப்பு!
கிளி உருவிலேயே, களி கொண்டார்!
அதன் பின்னர், கந்தனின் கைத்தலத்தில் போய்க் கிளியாய் அமர்ந்து விட்டார் அடிகள்! "சிவலோகமே" என்று அவரே சொல்லி முடிக்கிறார்!


சேவலும் - மயிலும் மட்டுமே அவன் பறவைகள் என்னாது, தோழி கோதையின் கிளியும், அவனுடைய பறவையே ஆகி விட்டது!
ஆடும் பரி - வேல் - அணி சேவல் என
பாடும் கிளியே, நானாய் அருள்வாய்!


"முருகு" என்னும் பொருளைப் பலவிதமாக வகுத்துச் சொல்லுதல் = வகுப்பு!

* வேல் வகுப்பு
* மயில் வகுப்பு
* சேவல் வகுப்பு
* வேடிச்சி வகுப்பு (வள்ளி)
* சீர் பாத வகுப்பு
* ஆலய வகுப்பு

-ன்னு மொத்தம் 18 வகுப்புகள்!
நமக்கும் இந்தக் காலத்தில் 18 வகுப்புகள் இருக்கு-ல்ல? 12 ஆண்டுகள் பள்ளியில், 4 ஆண்டுகள் கல்லூரியில், 2 ஆண்டுகள் முதுகலையில்
= மொத்தம் 18 வகுப்புகள் நமக்கும் வருகிறது அல்லவா?:)

திருவகுப்பில் இன்னும் சில வகுப்புகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பட்டதாகச் சொல்லுவார்கள், 25 வகுப்புகளாக!
ஆனால், இறுதி வகுப்பு = சிவலோக வகுப்பு!
"அரு-உரு கெட, இரு வினை கெட, இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமே" என்று சேர்ந்து விட்டார் அருணகிரி!

இன்று நாம் பார்க்கப் போவது, திருப்பழனி வகுப்பு!
* எந்த வினையும் அணுகாமலே -ன்னு தொடங்கி
* தென் பழனி முருகேசனே -ன்னு முடிவுபெறும்


இந்தப் பாடல், பசும்பொன் தேவர் திருமகனின் விருப்பப் பாடல்;
பல மேடைகளில் இதைப் பாடி விட்டே, தன் உரையைத் துவங்குவார் முத்துராமலிங்கர்!
அவருடைய கணீர் குரலுக்கும், ஏற்ற இறக்கங்களுக்கும், இந்தத் திருவகுப்பு ஒரு பெருவகுப்பு!

இதற்குப் பொருள் சொல்ல வேணும் என்பது...
தில்லி வாழ் நண்பர் பாலசுந்தரம் (@bala_bose) அவர்களின் நெடுநாள் கோரிக்கை!
இன்று ஆடிக் கிருத்திகையின் போது, கை கூடியது! இதோ:


எந்த வினையும் பவமும் ; எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் ; எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வும் கொடிய ; எந்த வசியும் சிறிதும் - அணுகாமலே

வினை = செயல்
அடுத்தவர் நமக்குச் செய்யும் செயல், நாம் அடுத்தவருக்குச் செய்யும் செயல் = நல்ல செயல் செய்யுறோமா? கெட்ட செயல் செய்யுறோமா?

பவம் = பிறப்பு
அனு-பவம் = பிரதியாக, ஞானம் பிறப்பது

வினை செஞ்சாத் தான், பிறப்பு வரும்; வினை இல்லையேல் பிறப்பும் இல்லை!
ஆனா, வினை செய்யாம இருக்க முடியுதா?
"சும்மா" இருங்களேன் பார்ப்போம் ஒரு அஞ்சு நிமிசம்:)

சும்மா இருக்கும் திறம் அறியேம்!
அப்போ என்ன தான்யா வழி? = என்னால சும்மா இருக்கவும் முடியாது; ஆனா பிறக்கவும் கூடாது:))
தன் வினை தவிர்த்து, உன் வினை போதும் முருகா!
இந்த வினையால், கந்த வினையால், பிறப்பு வாராது.....

எந்த வினையும், எந்தப் பிறப்பும் வேணாம்!
எந்த விடமும், எந்த இடரும் வேணாம்!
எந்தச் சண்டையும் (இகல்), எந்தப் பழியும் வேணாம்!
எந்த வழுவும் (குற்றமும்), எந்தப் பிணியும் வேணாம்!
எந்த இகழ்ச்சியும், எந்த வசியும் (பிளவும்) வேணாம்!

= முருகா, இவை யாவும் என்னை அணுகாமலே...


எந்த இரவும் தனிமை ; எந்த வழியும் புகுத
எந்த இடமும் சபையில் ; எந்த முகமும் புகலும்
எந்த மொழியும் தமிழும் ; எந்த இசையும் பெருமை - சிதறாமலே

இரவில் தனிமை = ரொம்ப கொடியது!
அனுபவித்தவன் சொல்லும் போது தெரியும்! இந்த வரியை அப்படித் தான் எழுதுகிறேன்! (3:30 am)

எது தனிமை? 
= உடன் இருக்க வேண்டியவர்கள் இல்லாமல் போவது;
இருக்கிறேன் -ன்னு சத்தியம் செய்து குடுத்தவர்கள், இல்லாமல் போவது!

இப்படித் தனிமை புகுந்து வாடினாலும்...
எந்த மொழியிலும், என் சொந்த மொழியிலும் (தமிழிலும்)..
இசை = மானம்/ புகழ்; "ஈதல் - இசைபட வாழ்தல்"
எந்த இடத்திலும், எந்தச் சபையிலும்..
என் மானம் சிதறாமல்...

வந்தனை செய்து ; உன்சரண - நம்புதல் புரிந்த அருள்
வந்து அநுதினம் தனிலும் ; நெஞ்சில் நினைவின் படி
வரம் தர உவந்தருள் ; இதம் பெறுவது அன்றி நெடு - வலைவீசியே

கந்தனை வந்தனை செய்து
உன் சரணமே சரணம் என்று நம்புதல் புரிந்து, நெஞ்சிலே அவனையே தேக்கி
நான் இப்படியே வாழ்ந்து விட...
வரம் குடு முருகா! வரம் குடு முருகா! = இதுவே எனக்கு இதம்!

வஞ்ச விழி சண்டன் ; உறுகின்ற பொழுதும், "குமர
கந்த" என நன்கு அறையவும் ; தெளிவு தந்து உயிர்
வருந்து பயமும் தனிமை-யும் தவிர, அஞ்சல் என வரவேணுமே!!

பெரிய வலை (பாசக் கயிற்றை) வீசி, கோபப் பார்வை பார்க்கும் எமன் (சண்டன்)..
அவனைச் சொல்லித் தப்பில்லை; பண்ணது நானு! அவன் என்னை வாட்டும் போது கூட,
"ஐயோ" என அலறாமல், "ஐயா" என அழைக்கணும்!
குமரா, கந்தா -ன்னு உன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடும் இன்பம்!

முருகா, இனி ஒரு கணம், என்னைத் "தனிமையில்" இருக்க விடாதே! அஞ்சல் என வர வேணுமே!
நீ வா முருகா, என் தனிமை போயீரும்!
நீ வா முருகா, அஞ்சல் என வர வேணுமே!



தந் -தனன தந் -தனன ; டிண் -டிகுடி டிண் -டிகுடி

குண்ட மட குண்ட மட ; மண்டம் என நின்றும் உர
சந்தி மிலை பம்பை துடி ; திண்டிமம் முழங்கும் ஒலி - திசை வீறவே

தந் தனன, டின் டிகுடி -ன்னு தாளம் இசைக்க, ஆடி வா முருகா!
அணையில் ஓடி வரும் நீர் போல்,
சந்தி, பம்பை, துடி (உடுக்கை), திண்டிமம் (முரசு) -ன்னு பல ஒலிகள் கொட்ட, ஓடி வா முருகா!

தண்ட அமர் மண்ட அசுரர் ; மண்டை நிணம் என்று அலகை
உண்டு உமிழ்தல் கண்டு அமரர் ;  இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி ; பலம்பிட வரும்பவனி - மயில்வாகனா

மாண்ட அசுர சக்திகளின் கொழுப்பை, அலகால் உண்டு உமிழும் உன் மயில்!
அது கண்டு, அமரர்கள் பலரும் வணங்க..
உன் பாதங்களில்...
தண்டை, கிங்கிணி, சதங்கைகள் பலம்பிட, பவனி வா, மயில் வாகனா!


செந் தளிரை முந்து படம் ; என்றுள மருண்டு நிறை

சந்தன வனம் குலவு ; மந்தி குதி கொண்டு அயல்
செறிந்த கமுகின் புடைப ; துங்கிட வளைந்து நிமிர் - மடல்சாடவே

குளத்தில் உள்ள தாமரைத் தண்டுகள்; அதைப் பாம்பு -ன்னு நினைத்துப் பயந்து...
குரங்குகள் குதிக்கின்றன சந்தன வனத்திலே!
அருகிருந்த பாக்கு மரத்தில் தாவி, பாம்பு தானா? என்று நிமிர்ந்து பார்க்க, அந்தக் குதியலில் பாக்கு மடல் எல்லாம் சிதறி வீழ..

சிந்திய அரம்பை ; பல-வின் கனியில் வந்துவிழ
மென் கனி உடைந்த சுளை ; விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் ; தென்பழனி அம்பதியின் - முருகேசனே!!

* இளங் கமுகு (மெல்லிய பாக்கு), மரத்தின் மேலே இருக்கு!
* வெடித்த பலா, மரத்தின் கீழே இருக்கு!
* செண்பகப் பூக்களின் தேன், கொடிக்கும் கீழே இருக்கு!

குரங்குக் குதியலில் பாக்கு சிதறி, வெடித்த வேர்ப்பலாவில் வீழ,
பாக்கும் பலாவும் சேர்ந்து செண்பகப் பூந்தேனில் வீழ
சுவை கூட்டும் காடு! அப்படியான காடுகள் நிறை பழனி மலை!
என் அய்யா முருகா! அந்தக் காட்டிலே தொம் தொம் என்று ஆடி வா! என் முன்னே ஓடி வா!

என்னை இனியொரு கால்...
தனிமையில் வைக்காமல், தனிமயில் கொண்டு,
என் ஆவிக்குத் துணைவனாய்...
என் கூடவே இரு முருகா! - திரு முருகா, இரு முருகா!!


madhavipanthal.podbean.com
Read more »

Wednesday, July 04, 2012

Test Your PaaQ - புதிரா? புனிதமா?? தமிழ்ப் பாக்கள்!

#365பா = நண்பர்கள் வட்டத்தில் பலரும் அறிந்த ஒரு வலைப்பூ!

தினம் ஒரு பா = தினமும் தமிழ் கொஞ்சும் சோலை!
அதில் தமிழ்த்தேன் மாந்தும் தும்பிகள் பலப்பல! நானும் ஒர் தும்பி!

இன்று 365th day of 365பா!
இந்தத் தமிழ் முயற்சி, "பல்லாண்டு பல்லாண்டு" என வாழ்த்துமாறு, பந்தல் வாசகர்களை மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
இது = தினம் ஒரு பா மட்டுமல்ல!
இது = தினம் ஒரு உணவு.... பல தமிழ் ஆர்வலர்களுக்கு!

ஒவ்வொரு நாளும்.....
* ஒவ்வொரு தமிழ்ப் பாவைப் பற்றிப் பேசி,
* அதிலுள்ள இலக்கிய/ இலக்கண இன்பங்களை நுகர்ந்து,
* தமிழ் வரலாற்றிலே தோய்ந்து,
* கவிஞர்/ எழுத்தாளரைப் பற்றி மேலும் அறிந்து,
* இன்னும் பல...
மிக முக்கியமாக, தமிழைக் = கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

* தள ஆசிரியர் = நண்பர் என். சொக்கனுக்கு மனமார்ந்த "வாழ்த்துகள்"!:)
* தமிழ்த் தும்பிகளான = @RagavanG, @amas32, சிவ-ஆனந்தன், பழ.கந்தசாமி, பலப்பலருக்கும் வாழ்த்துக்கள்!


முக்கியமான நிகழ்வுகளை = புதிரா? புனிதமா?? (கேள்வி-பதில் போட்டி) வைத்துக் கொண்டாடுவது, பந்தலில் வழக்கம்!
முருகனருள்-100, கண்ணன்பாட்டு-100, போல்..... 365பா-365! Enjoy this Tamizh Quiz:)

* எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? போன்ற எளிய கேள்விகளும் உண்டு!:)
* சினிமாப் பாட்டில் வரும் சங்கப் பாடல் கேள்விகளும் உண்டு!
* பத்தே கேள்விகள் - காப்பி அடிப்பது உங்கள் பிறப்புரிமை!:)

அனைத்து பதில்களும் இங்கே "பாத் தேடல்" -இல் தேடினால் எளிதில் கிடைக்கும்:) = http://365paa.wordpress.com/?s=(searchterm, ex: குறுந்தொகை)
அனைத்து கேள்விகளும் 365Paa வில் வந்த தகவல்களே!

முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பரிசு உண்டு!:)
அங்கே தேர்வை முடித்து விட்டு, இங்கே உங்கள் மதிப்பெண்ணைக் கையொப்பம் இட்டுப் போகவும்:)
இதோ வினாத்தாள்! = Test Your PaaQ... Your Time Starts Now:)

Read more »

Sunday, June 10, 2012

தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!

வணக்கம் மக்கா!
சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க!
ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அள்ளிப் போடுறது வழக்கம்! ஏன்?:)

Fresh மாவு, புளிக்கத் துவங்கும் போது, தூவுற உப்புக்கு மகத்துவம் அதிகம்!
கெட்டிப்படும் போது கலந்தா, "குப்பு"ன்னு பூக்கும் = இட்லி நம்பிக்கையோ, தோசை விஞ்ஞானமோ... நாம் அறியோம்:)

அதே போல, பல ஊர்களின் பெயர்கள், ஆரம்பத்திலேயே வந்து விடுவதில்லை!
குடியேறிய பின், ஏதோவொன்று கெட்டிப்பட்டு, அதுவே அந்த ஊரின் பேராகத் தூவப்படுகிறது! நாளடைவில், "குப்பு"-ன்னு பூத்து, அழகுடன் பரிணமிக்கிறது!

ஊர்ப் பெயர் விகுதிகள் = பட்டி, பாளையம், குடி, புரம், பட்டினம்....

* ஊர் = வேற வேற பேரா இருந்தாலும்,
* ஊர்களின் விகுதி = ஒன்னே போல இருக்கும் மாயம் என்ன?
யோசிச்சிப் பார்த்து இருக்கீங்களா?

ஊர்ப் பேரில் இருக்கும் விகுதியை வச்சிக்கிட்டே, அந்தூரு...தெக்கத்தியா-வடக்கா? செட்டிநாடா-கவுண்டம் பாளையமா?...
அட அம்புட்டு ஏன்...., முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தாலா?-ன்னு கூடக் கண்டுபுடிச்சீறலாம்!:))
தமிழக ஊர்களை எடுத்துக் கொள்ளுங்கள்!
- பட்டி ன்னு முடிஞ்சா... பெரும்பாலும் மருதைப் பக்கம்
- பாளையம் ன்னு முடிஞ்சா... கோவைப் பக்கம்
- குடி ன்னு முடிஞ்சா... தெக்கத்தி (அ) செட்டிநாட்டுப் பக்கம்
- பட்டினம் ன்னு முடிஞ்சா... கடற்கரை ஓரம்

தமிழகம் மட்டுமல்ல!
* ஈழத்திலும் இது உண்டு - துறை, மலை, இறவு ன்னு..
* மலையாளத்தில் = குளம், சேரி
* கன்னடத்தில் = ஹள்ளி, சந்த்ரா
* தெலுங்கிலும் உண்டு = பேட்(டை), கொண்டா ன்னு

இப்படி.... ஊர்ப் பெயர்களில் ஏதோவொரு ஒழுங்கு ஒளிஞ்சிக்கிட்டுத் தான் இருக்கு!
அதைச் சன்னமா, நறுவிசா, பிட்டுப் பிட்டுத் தின்பதே... இப்பதிவின் நோக்கம்! = தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!


தொல்காப்பியம் = 2000+ ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் காலக் கண்ணாடி!
தொல்காப்பியரு, அவரா நாலு பேரை எழுதி, இதான்டா ஒங்க எல்லை ன்னு இட்டுட்டுப் போவல! ஏற்கனவே மக்களிடம் வழங்கியதைத், தொகுத்துத் தருகிறார்!

* முல்லை
* குறிஞ்சி
* மருதம்
* நெய்தல்
எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே!

முதலில் முல்லை! பின்னரே குறிஞ்சி! - வியப்பா இருக்கு-ல்ல?:)

நாம, இன்னிக்கி மனப்பாடப் பாட்டுல சொல்லுற வரிசை வேற! பின்னாளில் இலக்கியத்தில் கலந்த சமய அரசியல்!
ஆனா, தொல்காப்பியர் பதிஞ்சி வைச்சது, அறிவியல் பூர்வமான sequence; சிறுபொழுது/ பெரும் பொழுது

* முல்லையின் பொழுது = மாலை/ மழைக் காலம்
* குறிஞ்சி்யின் பொழுது   = யாமம் (இரவு)/ குளிர் காலம்

மாலைக்கு அப்பறம் தானே இரவு?
மழைக்கு அப்பறம் தானே குளிர் காலம்?
= அதான் முல்லைக்குப் பிறகு குறிஞ்சி!

* முல்லை = காத்து இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

காத்திருந்து, ஏங்ங்ங்கி..... அப்புறம் புணர்தலின் இன்பம் ஒங்களுக்குத் தெரியுமா?:))

இப்படித் தான்... முல்லை, குறிஞ்சி ன்னு இயற்கையா வச்சாரு தொல்காப்பியர்! ஆனா நாம...
* முல்லை = திருமால்
* குறிஞ்சி = முருகன்
ன்னு வருவதால், வரிசையையே மாத்தீட்டோம்:) பின்னாள் பதிப்பகங்கள்/ பண்டிதர்கள் செய்த வேலை! எதை ஒன்னுமே சமய நோக்கோடவே சங்கத் தமிழில் கலந்தால் வரும் ஆபத்து இதான்!:(

இந்த முல்லை-குறிஞ்சி & மற்ற திணைகளில் வரும் கருப்பொருட்கள் = ஊர்ப் பேரு விகுதிகள்;
இன்னிக்கி, அதெல்லாம் இருக்கா? போயிந்தே, போயேபோச்சு ன்னு போயிருச்சா?
ஒவ்வொரு ஊராத் தொட்டுப் போவோம், கூடவே வாங்க! :)


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

1) முல்லை (காடும், காடு சார்ந்த நிலம்):

* காடு ஆர்க்காடு, ஏர்க்காடு, ஆலங்காடு, களக்காடு

* பட்டி = ஆநிரை (ஆடு/மாடு) மேய்த்தல் என்பதால் பட்டி
கோயில்பட்டி, செவல்பட்டி, ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டி, தி. கல்லுப்பட்டி

(மதுரைக்காரன், மதுரைக்காரன் தான்யா! புதுசா வந்த ஊருக்கும் HarveyPatti ன்னே பேரு வைக்குறான்!
நாமத் தான் Sunrise City, Temple Towers ன்னு சென்னையில் கண்ட பேரையும் வச்சி, காலாவதி ஆவுறோம்:))

* பாடி = ஆநிரைகளைக் காக்க, பாடி வீடு அமைத்துத் தங்குதல்
வேலப்பாடி, மேலப்பாடி, ஆயர்ப்பாடி

* காவு = கா (சோலை) என்று பொருள்
ஆரியங் காவு, புல்லிக் காவு, கொல்லிக் காவு (கேரளத்தில்);

கா+விரி = பல சோலைகளை விரித்துப் பாய்வதால் காவிரி!
ஆனா, இந்தக் "காடு"/"கா" என்பதை "வனம்" ஆக்கி விட்டது, சம்ஸ்கிருதப் பரவல்!:(
* புளியங் காடு = திண்டி வனம்! (வடமொழியில், திண்டி-ன்னா புளி)
* முல்லைக்கா = மல்லீவனம்!
* மரைக் காடு = வேதாரண்யம்

மரைக் காடு = மான்கள் வாழும் காடு!
மரை ஆன் கறந்த, நுரை கொள் தீம் பால், 
மான் தடி புழுக்கிய, புலவு நாறு குழிசி

ஆனா "தல" புராணம் உருவாக்கணுமே? என்ன செய்யலாம்? = ஒத்தை எழுத்தை அசைப்போம்...
மரை = மறை ன்னு ஆக்கீருவோம்...

வேதங்களே வந்து வழிபட்ட 'ஸ்'தலம்! => வேதக் காடு => வேதாரண்யம் ன்னு ஆக்கியாச்சு! பேஷ் பேஷ்!:))
இப்படித் தான் எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து ன்னு, ஒத்தை எழுத்தைக் கிளப்பி விட்டு, அந்தத் தமிழ்ச் சொல்லே இல்லாமப் பண்ணிடுவாங்கோ:( "நகரம்" தமிழா? ன்னு கேட்டவுங்க தானே!:(

* தோப்பு, பொழில் என்ற ஊர்களும் உண்டு!
பைம்பொழில் (பம்புளி), சேத்தியாத் தோப்பு

* மந்தை = முல்லை நிலத்து ஆடு/மாடுகளை ஒட்டி வந்த பெயர்
புஞ்சை மந்தை, நஞ்சை மந்தை ன்னு, எங்க வடார்க்காடு பக்கம் உண்டு!
ஒத்தைக் கல் மந்தை (Ooty) = தோடர்கள் வாழும் மந்தைப் பகுதி!

இங்கிலீசுக்காரன் வாயில் சிக்கி, ஒத்தக் கல் மந்தை =  Oota ca Mund ஆகி விட்டது:)
இது குறித்த தனித்த கட்டுரைகள் உண்டு! இப்படியே, வேர்ச்சொல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்!

2) குறிஞ்சி (மலையும், மலை சார்ந்த நிலம்)

* மலை: மலை என்ற நேரடிப் பெயர்; ஆனைமலை, கொல்லிமலை, திரிகோணமலை (ஈழம்), அண்ணாமலை, கழுகுமலை

* கோடு = மலை முகடு என்ற பொருள்
திருச்செங்கோடு, திருவித்துவக்கோடு, கோழிக்கோடு (கேரளம்), கசரக்கோடு (Kasseragode, Kerala)

ஆங்கிலத்தில் எழுதும் போது, kodu->Kassera-gode ஆகி விட்டது; இங்கிலீஷ்காரன் செஞ்சது;
அதை எள்ளி நகையாடுறோமா? இல்லை AdaiyaaRu Ananda Bhavan ன்னு வாங்கித் திங்குறோமா?
ஆனா, Mulla Periyar -ன்னா மட்டும், பெரியார்-குல்லா போட்ட முல்லாவா? -ன்னு ட்விட்டரில், "இலவச" நையாண்டி நர்த்தனங்கள்:( 

Triplicane Fine Arts -ன்னு தான் இன்னிக்கும் சங்கீதம் பாடுறான்; அங்கே Thiruvallikeni Fine Arts ன்னு பாடத் துப்பில்லை!
ஆங்கிலத்தில், Adaiyaaru -ன்னு எழுத மாட்டோம்; Adyar தான்! ஆனா Mulla Periyar ன்னா மட்டும் எகத்தாளம்; 
தமிழ் இலக்கணம் படிச்சதே, அன்பர்களின் "தமிழ் உணர்ச்சி"யை மட்டம் தட்டத் தானே? என்ன பொழைப்போ? முருகா:(

* குன்றம் = சிறிய மலை
திருப்பரங் குன்றம், திருக்கழுக் குன்றம், நெற் குன்றம், பூங் குன்றம்

* குறிச்சி = குன்றக் குறவர்களின் வாழ்விடம்
பாஞ்சாலங் குறிச்சி, ஆழ்வார் குறிச்சி, கள்ளக் குறிச்சி

* பாறை = மலையை ஒட்டிய பெருங் கற்கள்
வால்பாறை, பூம்பாறை, அம்பாறை (ஈழம்), சிப்பிப் பாறை

* கல் = திண்டுக்கல், நாமக்கல், வாரங்கல் (ஆந்திரம்), ஒகேனக்கல்

(ஹொகே-ன-கல் = புகை எழும் கல்,
கன்னடத்தில் ஹொகே = புகை; அருவியால்.. புகை எழும் கல்)

3) மருதம் (வயலும், வயல் சார்ந்த நிலம்):

* ஆறு = நேரடிப் பெயர்; திருவையாறு, மணிமுத்தாறு, ஆழியாறு, கயத்தாறு,
எங்கூரு வாழைப்பந்தல் பக்கம் செய்யாறு

* துறை = Banks ன்னு ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம்!
=> வெறுமனே இருந்தா = கரை
=> மக்கள் இறங்குறாப் போல இருந்தா = துறை

காங்கேசன் துறை (ஈழம்), மயிலாடுதுறை (மாயவரம்), திருவாவடுதுறை, சிந்து பூந்துறை, செந்துறை
# மயிலாடு துறை = மயிலை வெரட்டிட்டு,  "மாய" வரம் ஆக்கீட்டோம்:)
# குரங்காடு துறை = குரங்கை வெரட்டிட்டு, வெறும் ஆடுதுறை ஆக்கீட்டோம்

பொருநை (தாமிரபரணி) யின் கரையில் = குறுக்குத் துறை ன்னே ஒரு ஊரு! அம்புட்டு அழகு!
என் முருகன் ஆத்துக்குள்ள மூழ்கி, வெளிய வருவான் = Scuba Diving Guy:)

மொத்த ஆலயமே, தண்ணிக்குள் மூழ்கி, வெளிய வரும்.... இங்கெல்லாம் இன்னொரு முறை போகணும்..... மனசுக்குப் பிடிச்சவங்களோடு, தோளில் சாய்ஞ்சிக்கிட்டு, முருகன் கதையைப் பேசிக்கிட்டே..!
---------------

அரங்கம்:  ஒரே ஆறு, இரண்டாய்ப் பிரிந்து, மீண்டும் ஒன்றாய்க் கூடும், இடைப்பட்ட திட்டு/ துருத்திக்கு = "அரங்கம்" ன்னு பெயர்!

திருவரங்கம் = எந்தை, அரவணை மேல் துயில் அமரும் அரங்கம்! ஆழ்வார்கள் பதின்மரும் பாடிய ஒரே தலம்!

மொழிமுதல் "அ"கரத்தை வெட்டி, அதை ரங்கம்-ன்னு ஆக்கி, ஸ்ரீ சேத்துருங்கோ:)
ஆனா எந்த ஆழ்வாரும் சீரங்கம், ஸ்ரீரங்கம்-ன்னே பாடவே மாட்டாரு! அணி, திரு-வரங்கம் அய்யோ! அரவணை அழகில் பட்டேன்!

அரங்கம் = எப்படி நாடக மேடையில், ஒரு பக்கமா நுழைந்து, இன்னொரு பக்கமா, நாடக மாந்தர்கள் வெளியேறுவாங்களோ....
அதே போல், ஆறு.... ஒரு பக்கமாய் விரிந்து, இன்னொரு பக்கமாய் இணைவதால் = அரங்கம் என்ற தீந்தமிழ்ப் பெயர்!
---------------

* கூடல் = ஆறுகளின் கூடல்! திருமுக்கூடல், கூடலூர், பவானிக் கூடல்

* ஓடை, மடை = வயலுக்குப் பாயும் நீர்; காரனோடை, பத்தமடை, பாலாமடை

* ஏரி = பாசனத்துக்குச் சேமிக்கப்படும் நீர்; மாறனேரி, சீவலப்பேரி, பொன்னேரி, நாங்குநேரி

*ஏந்தல், தாங்கல் = சிற்றேரி; மழை நீரை ஓட விட்டு ஏந்துவதால் = ஏந்தல்!
கொம்புக்காரனேந்தல், வேடந்தாங்கல், பழவந்தாங்கல்

* குளம் = மக்களின் அன்றாட நீர்த் தேவைக்குச் சேமிக்கப்படும் நீர் (குளிக்க, குடிக்க, துவைக்க..)
பெரியகுளம், விளாத்திகுளம், பெருங்குளம், கருங்குளம்

* ஊருணி = குளம் போலவே! ஆனால் குடிக்க மட்டும்!
பேராவூருணி, மயிலூருணி

* கேணி, கிணறு = இது ஊற்று நீரால் சுரப்பது! (மழை நீர் அல்ல)
திருவல்லிக்கேணி, கிணத்துக்கடவு, ஏழுகிணறு, நாழிக்கிணறு

* வயல், விளை = இது நேரடி வேளாண் நிலங்கள்!
புதுவயல், நெல்வயல், திசையன்விளை, ஆரன்விளை

* பழனி, கழனி = இதுவும் வயலே! ஆனால் நீர் நிறைந்த வயல்!
தென்பழனி, நடுக்கழனி
(மேலே வயல் சூழ்ந்த பழனிமலைப் படத்தைப் பாத்துக்கோங்க:)

Important Question: பழனியா? பழநியா??
பழம் + நீ = பழநி என்பதெல்லாம் வெறும் புராணக் கதையே!:))

என் முருகனைத் தோத்தவனாக் காட்டுறதல, உங்களுக்கு என்னய்யா அப்படியொரு இன்பம்? All Cheaters!:)
Hey honey! Everytime when I come to your temple, I bring only Mango for u!You are the Winner da!:)

Jokes apart..
பழனம் = வேளாண் நிலம்!
சேல் உலாம் பழனம், செங்கழு நீர்ப் பழனம்
இதான் பழனி, கழனி ன்னு ஆகும்!
"இயற்கை" கொஞ்சும் முருகனை, "பழனி" ன்னே எழுதலாம்! பழம் நீ அல்ல!

4) நெய்தல் ( கடலும், கடல் சார்ந்த நிலம்) 

கரை = நேரடிப் பெயர்; கோடியக்கரை, கீழக்கரை, சேதுக்கரை, மணக்கரை

துறை = துறைமுகத்தை ஒட்டிய பெயர்; குமரித் துறை, கொற்கைத் துறை, காயல் துறை
(இது மருத நிலத்துக்கும் உண்டு! அங்கே ஆற்றுத் துறை, இங்கே கடல் துறை)

பட்டினம் = கடற்கரை நகரம்
காவிரிப் பூம் பட்டினம், குலசேகரப் பட்டினம், நாகைப் பட்டினம், காயல் பட்டினம்
(பட்டணம் = பெரு நகரம்; பட்டினம் = கடற்கரை நகரம்)

பாக்கம் = சிற்றூர்
பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், வில்லிப்பாக்கம், புரசைப்பாக்கம்....
அடடா....சென்னையில் தான் எம்புட்டு பாக்கங்கள்!:))

(பட்டினம் = Seaside Town, பாக்கம் = Seaside Hamlet
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்றே சிலப்பதிகாரம் பேசும்)

குப்பம் = கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகள்
காட்டுக் குப்பம், நொச்சிக் குப்பம், சோலைக் குப்பம்...
(மீனவர் பகுதி என்றும் கொள்ளலாம்; ஆனா பரதவர்/ மீனவர்களே இருக்கணும் ன்னு அவசியம் இல்லை; மருத்துவர், அலுவலர் பலரும் உண்டு)


5) பாலை:

பாலை-ன்னு தனித்த நிலம் இல்லை!
அந்தந்த நிலங்களே, அவற்றின் இயல்பு கெடின், பாலை ஆகும்!

* காடான திருவேங்கடம், காட்டுத் தீ பற்றி எரிஞ்சா = பாலை!
* துறைமுகப் பட்டினம்,  கடல் கொண்டு போனால் = பாலை!

சேர நாடு முழுக்கவே மலை->குறிஞ்சி -ன்னு முடிவு கட்டீற முடியாது!
அதான் தொல்காப்பியர், "அரசியல் அடிப்படையில்" பிரிக்காம, "இயற்கை அடிப்படையில்" பதிஞ்சி வைச்சாரு!

எல்லா ஊர்களிலும், நால்வகை நிலங்களும் இருக்கலாம்! (அ) ஒரு சிலது மட்டுமேவும் இருக்கலாம்!
அடிப்படையில் முல்லை-குறிஞ்சி = ஒன்னுக்குள்ள ஒன்னு; மலையில் காடு உண்டு! காட்டில் மலை உண்டு!

முல்லை-குறிஞ்சி = ஆதி குடி!
காட்டு மக்களே இடம் பெயர்ந்து, நாகரிகம் கண்டனர்;

சேயோன்-முருகன்

மாயோன்-பெருமாள்

* முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்

பண்டைத் தமிழ்த் தெய்வங்கள்!
ஆறு-தலை, நாலு-கை ன்னு கதைகள் ஏற்றப்படாத, நடுகல்-இயற்கை வழிபாட்டில் அமைந்த தமிழ்த் தொன்மங்கள்!

காட்டைத் திருத்தி நாட்டாக்கிய போழ்து => மருதம் = வயல்!
பண்பாடு வளர வளர, முல்லை-குறிஞ்சி மக்களே, இடம் பெயர்ந்து, மருதம் கண்டார்கள்!
தங்கள் தொன்மமான திருமாலும், முருகனும்..., முல்லை-குறிஞ்சிக்குள் மட்டும் அடைபடாமல், எல்லா நிலங்களிலும் பரவியது, இதனால் தான்!

* திருச்செந்தூரில் இருப்பது முருகனே அல்ல! நெய்தலில் எப்படி முருகன் இருப்பான்?
* திருமலையில் இருப்பது திருமாலே அல்ல! குறிஞ்சி-ல எப்படித் திருமால் இருப்பாரு?
- ன்னு டைப் டைப்பாக் கிளப்பும் "அறி-வாளி"கள் நம்மிடையே உண்டு:))

அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் = எந்தச் சார்பும் இல்லாத, சமணப் பெருமகனாரான இளங்கோ அடிகள் தான்!
திருப்பதி மலை மேல் நிற்கும் மாயவனையும், செந்தூரில் கொஞ்சும் முருகனையும் சிலம்பில் படம் பிடித்துக் காட்டுகிறார்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சியின் மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கன் மால் நெடியோன் நின்ற வண்ணமும்
...
...
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே!

கொற்றவை என்பவளும் தமிழ்க் கடவுளே!
ஆனால், இவளைப் பாலை நிலத்தில் வைத்து விட்டனர் = ஏன்னா இவள் பாலை நிலத்தில் வாழ்ந்த கள்வர் - எயினர்களின் தெய்வம்!

கொடுமையான கள்வர் வாழ்க்கை, நாகரீக மேம்பாடு இல்லாத காரணத்தால், இவள் சங்கத் தமிழில் சற்றே அடைபட்டுப் போனாள்!
ஆனால், பின்னாளில், ஊர் தோறும் ஆலயம் கண்டாள்!

வேந்தன் = அரசன்! வருணன் = கடல் காற்று!
மாறிக் கொண்டே இருப்பதால், இவர்கட்கு தனித்த அடையாளமோ, ஆலயமோ, கூத்தோ, துறையோ இல்லை!
மக்கள் வாழ்வியலில் கிடையாது! வெறும் நில அடையாளங்கள் மட்டுமே; வேந்தனை இந்திரன் ஆக்கியது, பின்னாள் "புராணம்":)


பொதுவான "ஊர்" விகுதிகள்:

மேலே பார்த்த ஐந்திணை விகுதி மட்டுமில்லாமல், பல பொது விகுதியும் இருக்கு!

* ஊர் = இது எல்லா இடங்களுக்கும் வரும்!
திருவாரூர், திங்களூர், கஞ்சனூர், நாவலூர், மூவலூர், குறையலூர்... ன்னு அளவே இல்ல!
ஆழ்வார் - நாயன்மார் பாடல் பெற்ற ஊர்களுக்குத், "திரு" ன்னு முன்னால் சேர்த்துக் கொள்வதும் வழக்கம்:)

* நாடு = ஒரத்தநாடு, வழுதிநாடு, வயநாடு (கேரளம்)

* புரம்/ புரி = காவலை உடைய நகர்;
காஞ்சிபுரம், பல்லவபுரம் (பல்லாவரம்), சோழபுரம், திருவனந்தபுரம் (கேரளம்)

* குடி = சான்றோர்கள் ஒன்றி வாழும் இடம்; குடி-இருப்பு!

நல்ல "குடி"யில் பிறக்கணும், "குடிப்" பிறந்தார் ன்னு சொல்றோம்-ல்ல? குடி-ன்னா சாதி அல்ல! குடி = சான்றோர் சமூகம்!
தூத்துக்குடி, இளையான்குடி, காரைக்குடி, குன்றக்குடி
(என் தோழனின் ஊரும் தூத்துக்குடி தான்! எனவே அவனும் சான்றோன் தான்:))
----------------

வீட்டின் பல அமைப்புகளைக் குறிக்கும் ஊர்கள்:

* இல் = இல்லம்; மருதில், அன்பில், செந்தில்! => சேந்தன் + இல் = செந்தில்!

* அகம் = திருவேடகம், பாடகம், ஏர்-அகம் (சுவாமிமலை)

* வாயில்/ வாசல் = வீட்டுக்கு வாயாக (நுழைவு) இருப்பதால் = வாய் + இல்;
திருமுல்லை வாயில், சித்தன்ன வாசல், குடவாசல்

* முற்றம் = சத்திமுற்றம், குளமுற்றம்

* பள்ளம், மேடு= பீளமேடு, பெரும்பள்ளம்

* சேரி = பல குடிகள் "சேர்ந்து" வாழ்வதால் சேரி; இன்னிக்கி Slum ன்னு ஆக்கீட்டோம்:(
புதுச்சேரி, பறைச்சேரி, சாவகச்சேரி


கடேசீயா....போரை/ தொழிலை அடிப்படையா வைத்தும் பல ஊர்கள்....

பாளையம் = படை வீரர்கள் தங்கும் ஊர்; பாளையக் காரர் ன்னே பேரு!
பெரிய பாளையம், பாப்பா நாயக்கன் பாளையம், இராச பாளையம், கோபிசெட்டிப் பாளையம், மேட்டுப் பாளையம்....

கோவை/ கொங்கு பகுதியில் பாளையங்கள் நிறைய; பின்னூட்டத்தில் கொட்டுங்க மக்கா:))

படைவீடு = முருகனின் படை வீடு வேற! அது ஆற்றுப்படுத்தும் வீடு = ஆற்றுப்படை!
இது, மெய்யாலுமே "படை"-வீடு (Soldiers Barracks)!
படவேடு (ஆரணி) = படைவீடு! மணப்பாடு (Manappad) = மணற் படை வீடு

கோட்டை = படைகள் சூழ, மன்னனின் அரண்
செங்கோட்டை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை...

பேட்டை = தொழில் சார்ந்த ஊர்கள்
செவ்வாய்ப்பேட்டை, சூளூர்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டே, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை...

"பேட்டை ராப்" என்று புகழ் பெற்ற சங்க இலக்கியப் பாடலை, இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டு வாங்கிக்குங்கப்பா!:)
எனக்கு மூச்சு முட்டுது...dei muruga, panneer soda open; வர்ட்டா?:))

நன்றி:

1) Twitter-இல் இந்த சுவையான உரையாடலைக் கிளப்பிய சக ட்வீட்டர்களுக்கு நன்றி!
குறிப்பாக, @ArulSelvan, @nRadhakn, @rexArul, @scanman, @drTRM, @spineSurgeon, @mayilSK, @ezharai, @psankar, @0SGR, @dheepakG

2) டாக்டர். ரா.பி. சேதுப் பிள்ளை - ஊரும் பேரும் - Published by: Palaniappa Brothers, திருச்சி

3) பல தகவல்கள் பகிர்ந்து கொண்ட, நல்-நண்பர், ஐயா, தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
Read more »

Monday, June 04, 2012

’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்துக்கள் / வாழ்த்துகள் - எது சரி?

முன்குறிப்பு: வாழ்த்து-"க்கள்" என்பது தவறா?

அப்படீன்னா, அதைத் தொல்காப்பிய உரைஞர் நச்சினார்க்கினியர் போன்ற தமிழ் இலக்கணத் தந்தையர் பயன்படுத்துவாங்களோ?
இது இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்யப்பட்ட "மிகைத் திருத்தம்" என்று அறிக! சரியையும், பிழை என்று திருத்தம் செய்தல்!

* சரியான ஒன்றைத் தவறென்று ஆக்கி..
* இப்படி எழுதியதற்காக, "டுமீல்/ டுமீலன்"-ன்னு, தமிழ் உணர்வாளர்களை இளக்காரம் பேசி..
* "மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்" -ன்னு எள்ளி..
* "ஓ இது தவறோ?" -ன்னு நம்மையே திகைக்க வைத்து..

கவுண்டமணி பாணியில் சொல்லுறதுன்னா: 
"டேய்... ஒங்க சிகைத் திருத்தம் பண்ணுங்கடா! 
ஏன்டா மிகைத் திருத்தம் பண்றீங்க"?:)

ஒரு கதை போல் பார்க்கும் முயற்சி! ஆர-அமரப் படிங்க!:)


* வாழ்த்துக்களா? வாழ்த்துகளா??
* எழுத்துக்களா? எழுத்துகளா??
= எந்தப் பாண்டியன் பறை அறிவிச்சி, எந்த நக்கீரன் வந்து தாடியைத் தடவப் போறானோ?:)

90 நாள் அஞ்ஞாதவாசம்!
இப்போதைக்கு என் நெலமை = கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு!

தமிழின் பால் மாறா ஆர்வமுள்ள நண்பன் பலராமன் (@balaramanl) எப்படியோ #365paa வில் என் அஞ்ஞாதவாசத்தை மோப்பம் பிடிச்சிட்டா(ர்)ன்!:)
அவன் கேட்டுக் கொண்டதால், என் பல்வேறு யோசனைக்கு நடுவே.... Figure இல்லா ஆப்பிரிக்க விமானத்தி்ல்.. இப் பதிவை எழுதிக் கொண்டு வருகிறேன்:)


பொதுவா, இணையத்தில் எது ஒன்னும் பரவும்! அதுவும் Twitter வேகம், சுனாமி வேகம்!

* சில்க் ஸ்மிதாவின் ஆவி, வித்யா பாலனை மன்னிக்குமா? என்ற "அறிவியல்" ஆகட்டும்....
* அன்னக் கிளியா? சின்னச் சின்ன ஆசையா? போன்ற ராஜா/ ரஹ்மான் Debate ஆகட்டும்....
Twitter 140-இல் நடக்குறாப்பல, வேறெங்கும் நடத்த முடியாது!:)

தமிழும்... இதுக்கு விதிவிலக்கு அல்ல!

எழுத்துப் பிழைகளை... ஒரு பள்ளிக் கட்டுரையில் கண்டுபுடிக்கறதை விட, 140இல் கண்டுபுடிப்பது எளிது! பளிச்-ன்னு பல் இளிப்பாள்:) அவளை "Correct" செய்ய சில ட்வீட்டர்களும் ரொம்ப ஆர்வமா முனைவார்கள்!:)


ஆனா... ஆனா...

ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி ன்னு,
வீட்டின் உயர்ந்த பொருட்களையும் உடைத்து விடுகிறார்கள்!
அப்படி ஆனதே....வாழ்த்துக்கள் "தவறு" என்ற பரவல்!

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியானதையும், தவறு-ன்னு அடிச்சித் "திருத்துவது";

பிரபலமானவர்கள் சொல்வதால், இது பரவியும் விடுகிறது!
இழப்பு = தமிழ் மொழி இயலுக்கு :(

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! 
= இனி, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், தரவு (ஆதாரம்) கேளுங்க!

பலரும் "அபிப்ராயம்" சொல்லுறாங்களே தவிர, தரவு காட்டுவதில்லை!
மொழி இயல் = ஒருவரின் நம்பிக்கையோ/ புராணக் கதையோ அல்ல, அப்படியே ஏத்துக்கிட்டு போவதற்கு!
என் ஆளுங்க நான் சொல்லுறதை ஏத்துக்கட்டும், உன் ஆளுங்க நீ சொல்வதை ஏத்துக்கட்டும் -ன்னு "தனிமனித ஜல்லி" அடிக்க முடியாது!

அறிவியலைப் போலவே = மொழியியல்!
அதனால்.. சத்யராஜ் style இல்... தரவு தரவு!:)

Coming to the Matter,
வாழ்த்துக்கள் vs வாழ்த்துகள்; Jollyஆ, கதை போலப் பார்க்கலாமா?

திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" ன்னு தான் இருக்கும்! வாழ்த்து-"கள்/ க்கள்" இருக்காது! => கள்-ளுண்ணாமை! :))
* வாழ்த்து = ஒருமை!
* -கள் (அ) -க்கள், விகுதி சேர்த்தால் வருவது = பன்மை!

சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்கு மட்டுமே பயன்படுத்துறது வழக்கம்;
யானைகள் - பூனைகள் | ஆனா உயர்திணை? தோழியர் - பாவையர்

தோழிகள் -ன்னு அப்பறமாத் தான் வந்துச்சி:) இன்னிக்கி... எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:))

ஒருமையைப் -> பன்மை ஆக்கத், தொல்காப்பியர் ஒரு formula சொல்றாரு! = "விகுதி செய்யவும்"
* ஆட-வன் = ஆட-வர்
* பெண் = பெண்-டிர்
* சான்-றோன் = சான்-றோர்

அர், இர், ஓர் = எல்லாமே பன்மை விகுதி! ஆனா கவனிச்சிப் பாருங்க; எல்லாமே உயர் திணை தான்!
* யானை = யானை-யர் ன்னு சொல்லுறதில்ல!:)
* யானை = யானை-கள்!

So... அஃறிணைப் பன்மை விகுதி = கள்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
கொள்வழி உடைய பல அறி சொற்கே (தொல் - சொல்லதிகாரம்)

கள்ளொடு சிவணும் = சிவன் கள்ளு குடிச்சாரு ன்னு, Type Typeஆ, அர்த்தம் பண்ணப்படாது:)
பாவம் சிவபெருமான்! கருணையே உருவானவரு!  அவரு 'விடம்' தான் குடிச்சாரு! 'கள்' அல்ல!
சிவ"ன்" = அவருக்குக் கண்ணு வேணும் ன்னா மூனா இருக்கலாம், ஆனா சுழி ரெண்டு தான்:)

இங்கே "சிவணும்" ன்னா "சேரும்/ பொருந்தும்" -ன்னு பொருள்!
கள்ளொடு சிவணும் = -"கள்" என்ற விகுதியோடு சேரும்!

இன்னொரு technique-உம் சொல்லிக் குடுக்குறாரு, நம்ம தொல்காப்பியர்!
கலந்தன கண்ணே! கழன்றன வளையே!
கலந்தன கண்களே-ன்னு தானே சொல்லணும்? தேவையில்லை!
கலந்தது -ன்னு சொல்லாம... கலந்தன என்று சொன்னாலே பன்மை தான்!
அதனால் கண்களே-ன்னு explicitஆ சொல்லத் தேவையில்லை;
கலந்தன கண்ணே! (கலந்தன கண்களே என்றாலும் பிழையில்லை); இது "மொழி நெகிழ்வு"!

இப்படி, கலந்தன/ கலந்தது போன்ற வினைமுற்றை வைத்தும், ஒருமையா, பன்மையா ன்னு எளிதாக் கண்டு புடிச்சீறலாம்!
தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (தொல் - சொல்லதிகாரம்)


ஆனா, இந்தக் "-கள்" மூலமா, ஒரு பெரிய பிரச்சனை வந்துருச்சி!
படிச்ச மனுசன், ரொம்ப மரியாதை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டான்!:)
சில "நித்ய" ஆதீனங்கள்..."யாம் அறிவோம்!" ன்னு சொல்றாங்களே;  அது போல வச்சிக்குங்களேன்;
அதென்னடா யாம் அறிவோம்? "நான் அறிவேன்"-ன்னு சொன்னா என்னவாம்?

ஒருமை = ஒரு மாதிரியா இருக்காம்!
பன்மை தான் = மரியாதையா இருக்காம்:)
* அரசன் = மரியாதைக் குறைச்சல்!
* அரசர் = மரியாதையா இருக்கு!

ஆனா, அர் = பன்மை விகுதி ஆச்சே??? | ஆட-வன் = ஆட-வர்;
பன்மையைக் கொண்டு போய், மரியாதைக்கு வச்சிட்டோம்-ன்னா.... அப்பறம் பன்மைக்கு என்ன பண்ணுறதாம்?

=> விகுதியோடு-விகுதி சேர் => அரசு + (அர் + கள்)

-கள் (எ) அஃறிணை விகுதியை,
மரியாதைப் பன்மை காரணமாக,
உயர் திணைக்கும் வைக்கலாம் -ன்னு மாற்று ஏற்பாட்டைச் செஞ்சாரு!

* மன்னன் - மன்னர் = ஒருமை
* மன்னர் - மன்னர்கள் = பன்மை

அரசு-அர்-கள் = This is like double plural:)
ஆங்கிலத்தில், King - Kings! அவ்ளோ தான்; மரியாதைப் பன்மைல்லாம் கிடையாது; மருவாதை தெரியாத பயலுவ!:)

திராவிட மொழிகளில் தான் "மரியாதைப் பன்மை" ன்னு நினைக்கிறேன்!
தெலுங்கில்:
* ஒருமை = கிருஷ்ண தேவ ராஜு, கிருஷ்ண தேவ ராஜூலு!
* பன்மை = ஆந்திர தேச ராஜுலு

நாய் = குக்க; நாய்கள் = குக்கலு! ட்வீட்டர் = ட்வீட்டர்லு :)) மரியாதை குடுக்குறா மாதிரிக் குடுத்து, அஃறிணை ஆக்கீறலாம் போல இருக்கே:)


சரி, நாம Matter க்கு வருவோம்; "-கள்" எப்படி "-க்கள்" ஆச்சு??

தொல்காப்பியத்துல சொன்னதே தான்!.. "கள்/ க்கள்" = ஒற்று இரண்டாகும்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
அளபிற் குற்றுயிர் இரண்டு ஒற்றாகும்

இப்படி இரண்டு ஒற்று மிகுவதைப், பல இடங்களில் காணலாம்!
* ஆ = ஆ-க்கள்
* மா = மா-க்கள்
ஊர்க் குறு மா-க்கள் வெண் கோடு கழாஅலின் (புறநானூறு)

இலக்கண ஆசிரியர்கள், -க்கள் சரளமாகப் பயன்படுத்துவர்;
Ex: "லள -க்கள்   திரிந்த  னண -க்களுக்கு முன்னின்ற மகரம் குறுகும்"

முன் சொன்ன கதை தான்! "மரியாதைப் பன்மைத்" தாக்கத்தால், ரெண்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
= பூ= பூக்கள் & குரு = குருக்கள்

Okடா இரவி... புரிஞ்சிருச்சி! -கள், -க்கள் = ரெண்டுமே பலவின்பால் விகுதி! ஒத்துக்கறோம்;
ஆனா.. என் கேள்வி என்ன-ன்னா: எதை, எங்கே பயன்படுத்தறது? அதை இன்னும் நீ சொல்லலீயே?
குரு=குருக்கள் போல, வீடு=வீடுக்கள் -ன்னு எழுதலாமா?:) ha ha ha!


இங்க தான் "டண்-டணக்கா" இருக்கு!:)
குரு = குருக்கள்! ஆனா...வீடு = வீடுக்கள் அல்ல!
Fan = Fans! ஆனா Man = Mans ன்னு கேட்போமா?:) Man = Men!

இதுக்குப் பேரு தான் = மரபியல்! (சொல்லதிகார - விளி மரபு)

புழுக்கள், பசுக்கள், குருக்கள்
புழு-கள், பசு-கள், குரு-கள்-ன்னு சொல்லிப் பாருங்க! எப்படி இருக்கு? :)

புழு-க்-கள் = புழுவின் கள் = Chinese Soup-ன்னு... சில குசும்பு புடிச்ச இலவச நாத்தனார்கள் அர்த்தம் பண்ணிக்கலாம்!
எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து; டுமீலன்ஸ் & குடிப்பழக்கம் always go together -ன்னுலாம் எள்ளிக் கெக்கலிப்பாய்ங்க!:(

ஆனா...."எழுத்து-க்கள்" ன்னு எழுதற "டுமீலன்ஸ்" யாரு யாரு?
= தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
= இளம்பூரணர்
= மணக்குடவர்
= ஈழத்தின் சைவத் தமிழறிஞர், ஆறுமுக நாவலர்
= All of the Above!

உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ன்னு சொல்லுவாங்க! அவரின் தமிழ் அறிவு, எந்த Tweeter க்கும் இளைச்சது கிடையாது!

நீங்களே கீழே வாசிச்சிப் பாருங்க...
எத்தனை முறை..."எழுத்து-க்கள், "எழுத்து-க்கள்" ன்னு... பயன்படுத்தறாரு?



பாத்தீங்கல்ல? ஆனானப்பட்ட தொல்காப்பிய ஆசிரியர், இலக்கணப் பிழை பண்ணிட்டாரா? இல்லை!
முழு உரையும் இங்கிட்டு போய் படிச்சிக்கோங்க!
http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

இப்போ தெரிகிறதா?
= நச்சினார்க்கினியர் எழுத்துக்கள் -ன்னு தான் எழுதுகிறார்;
= வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள்.. சரியே! பிழை இல்லை!


சரிப்பா... இது ஒரு சாதாரணச் சொல்லு;
இதுல ஏன் இம்புட்டு உறுதி காட்டுற நீயி?


ஏன்னா, இந்த வாழ்த்துக்களை வச்சியே, #TNFisherman இயக்கத்தின் போது, தமிழ் உணர்வாளர்களை, "டுமீல்" ன்னு ட்விட்டரில் இளக்காரம் பேசினார்கள்!
#MullaPeriyar என்ற மலையாள வழக்கை வச்சி, பெரியார் என்ன முல்லா-வா? -ன்னு எள்ளி ஏசினார்கள்:(

மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்"
= இப்படிப் பேசிய "பண்டிதாள்", இப்போ எங்கே போய் மூஞ்சியை வச்சிப்பாங்க?
= நச்சினார்க்கினியர் பேச்சுக்கு, எதிர்ப்பேச்சு பேசச் சொல்லுங்க, பார்ப்போம்!

மத்தபடி... இதை, இம்புட்டு வளர்க்க நான் எண்ணியதே இல்லை; இளக்காரக் கீச்சுகளின் போதும் அமைதி காத்தேன்; இன்றே வெடித்தேன்; மொழியின் மான உணர்ச்சி; அதற்காகவே! 

தமிழ் மொழி, எக்காரணம் கொண்டும், தன்னிடம் உள்ள நல்ல சொற்களை இழந்து விடக் கூடாது!!
இது தொல்காப்பியர் தொட்டு வந்த மரபியல்! மொழியியல் நெகிழ்வு!
அதை over night -இல் tweet போட்டு, அழிச்சீற முடியாது! கூடாது!

மத்தபடி, கற்றது கை மண்ணளவு! திருத்திக் கொள்ள வெட்கப்படவே மாட்டேன்;
அப்படித் தான் அன்னிக்கு, @naanraman என்பவர் செய்வினை/ செயப்பாட்டு வினை -ன்னு கேட்ட கேள்விக்கு, நானும் @nchokkan சாரும் ஆடிப்போனோம்;
@naanraman யாரு-ன்னே தெரியாது! அவர் சுட்டிக் காட்டியதை ஏத்துக்கிட்டு, மன்னிப்பும் கேட்டு, தன்வினை - பிறவினை -ன்னு மாற்றியே இட்டேன்!

“மொழி மரபியலை” நம் Ego -வுக்கு அணுகாமல்....
தமிழைத் தமிழாக அணுகிப் பார்த்தா, இது புலப்படும்!
------------

இன்னோன்னும் சொல்லணும்!
மொதல்ல, எழுத்து-க்கள் இலக்கணப்படியே தவறு -ன்னு சொன்னவங்க..
இப்போ நச்சினார்க்கினியர் தரவு கண்டதும்
Tune ஐ மாத்தி, "அனர்த்தம்" வந்துறப்படாதே -ன்னு கவலைப் படுறாங்களாம்:)

எழுத்து-க்-"கள்" = "போதை" தரும் எழுத்து! 'அனர்த்தம்' வந்துருமாம்!
அப்படீன்னா Fruits = பழங்-கள்? = பழமையான கள்? 10 year Wine ஆ?:)
இனி பழங்-கள் ன்னு யாரும் எழுதாதேள்; "பழம்ஸ்" ன்னு எழுதுங்கோ??:)

* வாழ்த்து + க் + கள் = "குவார்ட்டரோடு" கூடிய வாழ்த்து;
* வாழ்த் + "துகள்"? = வாழ்க்கையே தூள் தூளாப் போவட்டும்?
இப்படி நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம், 'அனர்த்தம்' என்ற பேரில், நாக்கால வெட்டி வெட்டிக் கெக்கலிப்பது = மட்டமான மனப்பான்மை:(

"காய் தொங்குது" = பலான அர்த்தமெல்லாம் சொல்ல முடியும்:)
அதுக்காக, "காய்" என்பதை மொழியில் இருந்தே துரத்திவிடுவோமா என்ன?

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சங்கேத மொழி இருக்கும்!
* கல்லூரி மாணவர்கள் ’பாஷை’
* டீக்கடை ’பாஷை’
* அவாள் ’பாஷை’
* சென்னை”பாஷை’ ன்னு நிறைய...
கல்லூரிப் பசங்க, "காய்" ன்னா... நமுட்டுச் சிரிப்பு, சிரிக்கத் தான் செய்வாங்க:)
அதுக்காக, காய் எ. சொல்லை மொழியை விட்டே துரத்தீற முடியாது!
------------

சிறு, நீர்த் துளி உன் மேல் பட்டது
= இந்தக் காலத்தில் இப்படிச் சேர்த்துச் சொன்னா, எல்லாருக்குமே நெருடும்:))
ஏன்னா சிறு-நீர் universal ஆக ஒன்றைக் குறிக்கத் துவங்கி விட்டது!
கொஞ்சம் நீர்த் துளி உன் மேல் பட்டது -ன்னு மாத்திச் சொல்லலாம்;

ஆனா,காய் என்பதோ / எழுத்துக்கள் என்பதோ, universalஆக ஒன்றைக் குறிக்கவில்லை!  
பொதுப் புழக்கத்தில் இன்னமும் இருக்கு! இப்படிப் பரவலாக இருக்கும் சொல்லை/ தமிழைக் காணாமல் போக.. நாமே வழி செய்யலாமா?:((
------------

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியாக இருக்கும் ஒன்றைத்... தவறு -ன்னு "திருத்துவது"!

யாதும் ஊரே, யாவரும் கே"ளீ"ர் ன்னு எழுதினா...
அப்போ... கே"ளி"ர் = உறவினர் ன்னு திருத்துங்க!
ஆனா, வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் சரியே; மிகையாகத் திருத்தாதீர்

* தொல்காப்பியர் - நச்சினார்க்கினியர் பலுக்கல்,
* ஈழத்து அறிஞர் பலுக்கல்
* இன்றைய இராம.கி ஐயா வரை பயன்படுத்துவது...
* அதை "மிகைத் திருத்தம்" பண்ணித் துரத்திடாதீங்க!
தமிழுக்காக, உங்களிடம் என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!



சரி, எழுத்துக்கள் சரியே = தொல்காப்பிய ஆசிரியர்கள் மூலம் பார்த்து விட்டோம்!

இன்னோன்னும் சொல்லிடறேன்:
வாழ்த்துக்கள் என்று எழுதுவோர், -"க்கள்" என்பதற்கு, குற்றியலுகர விதியை ஆதாரமாக் காட்டுவாங்க! ஆனா அதுவும் தவறே!
நாம தான் எந்தக் கட்சியிலும் நிக்குற சுபாவம் இல்லீயே:) தமிழைத் தமிழாய் அணுகவே பிடிக்கும்!

குற்றியலுகரப் புணர்ச்சி:
பிடித்து + கொள் = பிடித்துக் கொள்! =>ஒற்று மிகும்!
இதே போல வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் ன்னு எடுத்துக்கக் கூடாது!

ஏன்னா இவ்விதி, ரெண்டு "சொற்களுக்கு" இடையே தான்!
* "-கள்" = சொல் அல்ல!
* "-கள்" = விகுதி! அது வரு"மொழி" அன்று!
So, முன்பு சொன்ன விகுதி விதியைத் தான் எடுத்துக்கணும்! குற்றியலுகர விதியை அல்ல!
------------

எங்கே -கள் போடுறது? எங்கே -க்கள் போடுறது?
= சுருக்கமாப் படம் போட்டுச் சொல்லட்டுமா?
= விரிவா, இதோ நூலகத்தில் பாத்துக்கிடலாம்!
Here = http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84

A Ready Reckoner Picture is also following after some examples :)

1) "க்" மிகலாம்...

* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே!
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே!

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

எழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே! போலவே பாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்!
ஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்! தழும்புக்கள் இல்லை!

வல்லின எழுத்து இரட்டிக்கும் போது மட்டுமே.. க்கள் என்று அளபெடுத்து ஒலிக்கலாம்! *இரு"ப்பு" -க்கள்
*வாழ்"த்து" -க்கள்
*எழு"த்து" -க்கள்
*அ"ச்சு" -க்கள்

இந்த நுட்பத்தை/ நெகிழ்வை அறிந்து கொள்வோம்!
*வாழ்த்து= த் வல்லின ஒற்று! => மிகலாம் = வாழ்த்துக்கள்!
*இரும்பு=   ம் வல்லின ஒற்று அல்ல! => மிகாது = இரும்புகள்!
*கொலுசு=  ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

------------

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்

இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை மட்டுமே! கைகள்! கைக்கள் அல்ல!)
------------

3) "க்" மிகவே கூடாது


ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
------------

அவ்ளோ தானுங்க! இதுக்கா இத்தினி வாய்க்கா வரப்புத் தகராறு?:)
Lemme put this as a ready reckoner for the benefit of all...(save this img) 


வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க...
என்னமோ ஏதோ? ன்னு பயந்து போயி, மதம் மாத்திக்கிட்டவங்க,
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்:)
பாவ மன்னிப்பு கேக்க வேணாம்! ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)

Thanks for travelling with me in this long story:)




முடிப்பா, மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

1) Tamizh has a Written Constitution! That too with a version history of 2000+ years!
So, Never “banish” rightful words from “heritage”!
------------------------------------------------

2) அப்போ தவறான சொற்களை எப்படித் தான் அடையாளம் காண்பது?

= யார்.. தவறு-ன்னு சொல்றாரோ, அவரிடம், தரவு கேளுங்கள்!
நானே சொன்னாலும், என். சொக்கன் சொன்னாலும், வேறெவர் சொன்னாலும்... தரவு தரவு:)
------------------------------------------------

3) தொல்காப்பியரை அவ்ளோ லேசுல எடை போட்டுறாதீக!
நீங்களா முடிவு கட்டி.... Tweet போட்டுறாதீக!
தொல்காப்பியம் = தட்டுங்கள்! திறக்கப்படும்:))

ஐயா -> அய்யா
= தந்தை பெரியார் தான் ஐ->அய் ன்னு தேவையில்லாம மாத்தினாரு-ன்னு சில தமிழ்ப் "பண்டிதாள்" கேலி பேசினாங்க-பேசுவாய்ங்க! (#MullaPeriyar)
= தமிழ்ப் போர்வையில் இருந்துக்கிட்டே சம்ஸ்கிருத-பாசமிகு பண்டிதாள்!

ஆனா, பெரியாரைத் திட்டும் இவர்கள், தொல்காப்பியர் மேல் கை வைக்க முடியுமோ?
பெரியாருக்கு 2000+ years back, தொல்காப்பியரே.., எழுத்துச் சீர்திருத்தம் குறிச்சி வச்சிட்டுத் தான் போய் இருக்காரு - வியப்பா இல்ல?

ஐ & அய்!
"அ"-கரத்து இம்பர் ,"ய"-கரப் புள்ளியும்
"ஐ" என நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும் (தொல்-எழுத்ததிகாரம்)

தொல்காப்பியர் = ஆதித் தமிழ்த் தந்தை
அவரை விட, உங்க அரைகுறை tweet பெருசில்ல-ன்னு உணரவும்!


4) "பிக்காலி" ன்னு உங்களைத் திட்டுறவன் கூட Ok, ராசி ஆயீருவீங்க!:)
ஆனா உங்களை எதிர்ப்பாய் ஒன்னுமே பேசாம...
உங்க கருத்துக்கு மாறாக, உண்மைத் தரவு காட்டிட்டா?
ஆதாரமாடா குடுக்குற? நீயே என் எதிரி! என்று ஆகிடறோம் அல்லவா?:)

= கருத்து வேற, மனிதம் வேற!

என் நண்பர்கள்-ன்னா.....
= என் கருத்துக்கு உடன்பட்டே அவிங்களும் இருக்கணும்;
= என் உணர்ச்சிகளையே அவங்களும் பிரதிபலிக்கணும்!
Plz... இது வேண்டாமே:)
------------------------------------------------

5) கருத்து வேறுபட்டாலும், மனம் ஒன்றான குணம்! = தாமே பெற வேலவன் தந்தது!

"டேய் முருகா"-னு.. "Dei" தான் போடுறேன்; கோச்சிக்கவே மாட்டான்:)
உடனே, "டேய் பெருமாள்"-னு சொல்லேன் பார்ப்போம்? -னு, சமயக் கணக்கா வம்பிழுக்கக் கூடாது!
சொல்ல மாட்டேன்! ஏன்னா அவரு = அப்பா! காதலனை டேய் போடலாம்:) அப்பாவை?:)
------------------------------------------------

6) Finally.....
#TNFisherman, 
#EelamTamils, 
#MullaPeriyar 
போன்ற Twitter இயக்க முயற்சிகளில், எழுத்துப் பிழை வரலாம்! அது ஒன்னும் "பஞ்சமா பாதகம்" இல்லை!
ஆனா அதுக்காக...
டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; டுமீலன்ஸ் அப்பறம் கோஷம் போடப் போவலாம் - போன்ற "மட்டமான இளக்காரங்கள்" வேண்டாமே!

இரங்கல் வீட்டிலே சந்திப் பிழை காண்போமா? :(

------------------------------------------------

@iamkarki கிட்ட கடன் பாக்கி இருக்கு; எலே... எத்தியோப்பா ஆப்பிரிக்க குழந்தைங்க முகாமில்,
ஆப்பிரிக்க பசங்க.. விஜய் பாட்டு பாடுதுங்க = "என் உச்சி மண்டைல சுர்-ங்குது" = I had the shock of my life: )

அனைவருக்கும் தமிழ் இனிய...
வாழ்த்துக்கள் & வாழ்த்துகள்! வர்ட்டா?:)

Read more »

Saturday, May 26, 2012

திருப்புகழ் Geographic Atlas!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
இந்த இனிய செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்!

Thirupugazh Geographic Atlas என்ற அடியேனின் சிறு பணியை,
முருகனின் தனிப்பெரும் தளமான, murugan.org இல் பதிப்பித்துள்ளார்கள்!

மேலே வாசிங்க:)

திருப்புகழ் = தமிழ்க் கடவுளாம், காதல் முருகன் மீதுள்ள தமிழ் மாலை!
* "முத்தைத் தரு" ன்னு துவங்கி....
* "ஏறு மயில் ஏறி" ன்னு நிறையும்!

இந்த ரெண்டு பாடலையும் விட்டுட்டுப் பார்த்தால்....
மீதமுள்ள பாடல்கள் பெரும்பாலும், Murugan Atlas or Murugan Map என்றே சொல்லிவிடலாம்!
ஒவ்வொரு ஊராக, அந்தந்த முருகன் மேல் பாடப்பட்டவை!

திருப்புகழ் தோன்றிய இடம்:
* திருவண்ணாமலை (அருணகிரி) = 79
* வயலூர் = 18

அறுபடை:
* திருப்பரங்குன்றம் = 14
* திருச்செந்தூர் = 83
* திரு-ஆவி-நன்-குடி (பழனி) = 97
* திரு-ஏர்-அகம் (சாமிமலை) = 38
* திருத்தணிகை = 64
* பழமுதிர்சோலை = 16

* வள்ளிமலை = 10
* தமிழ் ஈழம் = 15
.....இன்னும் பலப்பலச் சிற்றூர்கள்/ பேரூர்கள்


Hey, அங்கே வா, இங்கே வா ன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, பல ஊர்களைக் காட்டினான்!
அருணகிரியும், அவன் கூப்பிட்ட ஊருக்கெல்லாம் போய், தலம் தலமாகப் பாடியுள்ளார்!

ஒவ்வொரு பாட்டிலும், அந்த ஊரின் கதையோ, வரலாறோ கூட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!
= தமிழக ஊர் ஆய்வாளர்களுக்கு இது ஒரு ஆய்வுச் சுரங்கம்!

பல பதிப்பகங்கள், திருப்புகழைப் பதிப்பித்துள்ளன!
அவை சமய அளவில் மட்டும் இருக்கும்!
ஆனா இன்னும் துழாவினால், தமிழக ஊர்ப் பெயர் ஆய்வுகள், இசைக் குறிப்பு ஆய்வுகள் ன்னு....திருப்புகழ் = ஒரு கருவூலம்! புதையல்!!





அத்தனை திருப்புகழ் ஊர்களையும், ஒரே வரைபடத்தில் (Map), ஒன்னாத் திரட்டி...
* அந்தந்தப் புள்ளிகளின் மீது உலாவினால் = ஊர்ப்பெயரும்
* அந்தந்தப் புள்ளிகளைச் சொடுக்கினால் = அந்தந்தத் திருப்புகழும்
வருமாறு, ஒரு சின்ன பணியை - பலநாள் ஆசையைச் செய்த நிறைவு! இதோ உங்கள் Murugan Atlas:))
------------------------------------------------------------------------------------------------------------

இதை, தோழன் இராகவன் பிறந்தநாளான இன்று (May-27-2012).....
திருமுருகனின் மயில் கழுத்தில்...
மாலையாக அணிவித்துப் பணிகிறேன்!
Happy Birthday Ragava!:)



குறிப்பு:
1. காதல் முருகனின் இடுப்பு = Hairpin Bend! Plz drive with caution:)

2. திருப்புகழை வெறுமனே படிச்சாப் பிடிபடாது;
பாடணும் (அ) வாய்விட்டுப் படிக்கணும்! அப்போ தான் அந்தச் சந்தம் கொஞ்சும்!

3. திருப்புகழ், எனக்கு முதல் அறிமுகம், அம்மாவின் தங்கையான சுகுணாச் சித்தியின் வீட்டில்!
May be 4th-5th std! சும்மா பத்தோட பதினொன்னா, ஏதோவொரு சாமிப் புத்தகமா இறைஞ்சிக் கிடந்தது....
ஓவியத்தில் அன்பு மிக ஊறி
ஓம் எழுத்தில் அந்தம் அருள்வாயே!
படித்தவுடன் என்னமோ செய்ய....அவர்கள் வீட்டில் இருந்து திருடிக் கொண்டு வந்தது!:) Lifco பதிப்பக, Blue Color Book is still there, torn & ottufied with tape:))



இந்த Murugan Atlas முயற்சிக்கு நன்றி:
1. murugan.org editor, Mr. Patrick Harrigan
2. kaumaram.com, for their pdf links
3. VTS = VT சுப்ரமணியப் பிள்ளை

VTS = திருப்புகழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று சேகரித்தவர்,.... உவேசா வின் சேகரிப்புக்கெல்லாம் முன்னாலேயே...
இன்றும், திருத்தணிக் கோபுரத்தைப் பார்த்தவாறு மண்ணில் உறங்கும் எளிய மனிதர் = VTS!
மொத்தம் 16000 பாடல்கள் என்பார்கள்! கிடைத்தது = 1328 பாடல்களே!



பின்னூட்டம் (Feedback):
இந்த Thirupugazh Geographic Atlas இல் வேறேதேனும் Idea, Suggestion, Improvement - உங்களுக்குத் தோன்றினால்....
பின்னூட்டமாகவோ, மின்னஞ்சலிலோ சொல்லவும்! (shravan.ravi@gmail.com)
----------------------

இராகவனுக்கு இனிப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Read more »

Wednesday, April 11, 2012

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!:)

Crux of this Post:
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகவே, "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் = தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!

Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...

* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!

This is NOT claimed as vaLLuvar's exact day of birth etc etc; 
Itz only a "notation" for tamizh related standards; 
For General life = Common Era (2012 CE) applies for all, world over!

You can still celebrate ருத்ரோத்காரி வரு'ஷ'ம் & do poojas at home!

But pl DONT brand it as a "Tamizh" Year!
You are free to call it Hindu New Year, Sanskrit New Year, Nandana Year or whatever! Dot!

.....Now, the full post, with literary evidences & some logical reasoning



பந்தல் வாசகர்களுக்கு இனிய (Sanskrit/ பிராமணப்) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு? போய்ப் பார்த்தா.....
"தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே?:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?
ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன! தமிழக அரசியலில் ஜெ.அரசாணைகளும் மாறி விட்டன! ஜெ.வே மாறீட்டார்!

இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி!
"சித்திரையில் நித்திரை"   -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:)
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு 2 புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:) கழகத் தொலைக்காட்சி - நிகழ்ச்சி வரும்படி - அதை நிறுத்திடுவாங்களா என்ன?:)

இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது -ன்னு சிலர் நினைத்துக் கொண்டு, அதற்காகவே எதிர்க்கிறார்கள், விவரம் புரியாமல்:(

ஆனா,  கருணாநிதிக்கும் முன்னமேயே...
* மென்மையே உருவான திரு.வி.க போன்ற அப்பழுக்கில்லாத் தமிழறிஞர்கள் துவக்கி வைத்தது;
* ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்திலே, இது வே.பிரபாகரனால் நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அறிஞர் அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல், இந்தப் புத்தாண்டு மாற்றமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ என்னமோ?:)

எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு கேக்குறீங்களா?
= அதே விழிப்புணர்வுக்குத் தான்!
அரசியலை ஒதுக்கிட்டு, "உண்மை" ஆவல்! பதிவின் நீளம் அதனால் தான்!

சற்று, உன்னிப்பா நோக்குங்க:
* தை என்பவர்கள் = தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் ஹிந்து மதப் பற்று கொண்டவர்கள் (அ) வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மடாதிபதிகள்

ஆக, 2 கட்சிகள்!
எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும்,
தங்களுக்குச் சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...
அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று வெட்டிப் பேச்சுக்கள்!

ஆனால்...
தமிழ் இலக்கியம் = அது என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால்??? = அதுவே இந்தக் கட்டுரை!




குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

*நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
*"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!
சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!

ஆனா.....நம் "விருப்பத்துக்கு" மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவும், இந்த எண்ணத்தில் தான்!)

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை! விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்!
அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! அனைவருக்கும் பொதுவான தமிழில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" பற்றிப் பேச்சில்லை:))

தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?



முன் குறிப்பு:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடினார்கள்...
வள்ளுவரின் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!

யார் யார் இந்த முயற்சியில்?
*மறைமலை அடிகள்,
*உ.வே. சாமிநாத (ஐயர்),
*திரு.வி. க,
*நாவலர். ந.மு. வேங்கடசாமி நாட்டார்,
*நாவலர். சோம. சுந்தர பாரதியார்,
*தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
*பாவேந்தர் பாரதிதாசன்
*பெரியார் ஈ.வெ.ரா
*கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர், உமா மகேசுவரனார்
*முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் 
*மற்றும் பலர்!

ஆனா, அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? = இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே "தமிழ் ஆண்டு" என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் ~ கி.மு. 31 = எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:
வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா? -ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
தரவு: (Scanned Copy) பச்சையப்பன் கல்லூரி அறிக்கை: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் https://goo.gl/ebjTBV
------------
  

ஆனால், பின்னாளில்... மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார்,
வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் - எனவும் வகுத்து அளித்தார்!

அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவு: (Scanned Copies) : நாவலர் சோமசுந்தர பாரதியார் : தை-02 குறிப்பு https://goo.gl/SSy5fV
------------

திருக்குறளுக்கு, இன்று பலரும் பின்பற்றும் உரை எழுதிய தமிழறிஞர். டாக்டர். மு.வ.. என்ன நவில்கிறார் பாருங்கள்: இதோ, 1971 பொங்கல் விழா மலர்;

“இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? 
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான், நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால் அவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். 
இன்னொரு காரணமும் உண்டு. முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை! தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்!
அந்த நாள் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை; புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். இப்படிப் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்”

(இதற்கான தரவு: 1988 கோலாலம்பூர் பொங்கல் மலரில், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு)

முது பெரும் தமிழ் அறிஞர்கள், ஏன் இப்படிச் செஞ்சாங்க? அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள். பிருஹஸ்பதி சம்வத்ஸரச் சுழற்சி முறை.

அவற்றுக்கு நாரத-கிருஷ்ண ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோத்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி (எ) பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ இந்தப்பொய்க் கதைகளை உறுதி செய்கிறது!

இந்த Sanskrit/ ஆபாசக் கதைகளால், எல்லாரும் கேக்கறாங்களே?-ன்னு கூச்சப்பட்டாங்களோ என்னவோ
60 சம்ஸ்கிருத வருஷங்களையும்.. "வலிந்து" தமிழில் மொழிபெயர்த்து, முழிபெயர்த்து, திருட்டுத்தனமாப் பரப்பி விட்டிருக்காங்க, அண்மைக் காலங்களில்:) இது சத்தியவேல் முருகனார் என்பவர், அண்மைக் காலத்தில் வலிந்து செய்த தமிழாக்கம் மட்டுமே! இவை, தமிழ் மரபிலே இல்லை!

விகாரி ஆண்டு (விகாரமான) என்ற சம்ஸ்கிருதப் பதத்தை, ’எழில் மாறல்’ என்று கொஞ்சும் ழகரத் தமிழில் பேர் மாற்றி விட்டால் மட்டும், அசிங்கம் -> அழகு ஆகி விடுமா என்ன? மதச் சடங்குகளுக்காக, இப்படியெல்லாம் வலிந்து மொழியாக்கம் செய்வது, நற்பலன் தராது; கெடுதியே செய்யும்:( மதப் பாசம் விட முடியாத தமிழ்ப் பண்டிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

*புள்ளை= Sanskrit Parasiteக்குப் பொறந்தது
*Initial= தமிழில் போட்டா, தமிழுக்குப் பிறந்ததா ஆயீருமா?
வெட்கமாய் இல்லை?:(
எந்தவொரு தமிழ் இலக்கியத்திலும், இப்பிடி "முழிபெயர்த்த" பெயர்கள் இருக்காது:) இது திருட்டு வேலை!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்! = டேய், இதெல்லாம் தமிழா?:))
(ஆமாம்....தமிழே! தோஷம், கோஷம்லாம் = "பரிசுத்தமான" தமிழே-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு! அவர்கள் பற்றி இங்கு பேச்சில்லை!:)

Please Note:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், 
அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! They are just "add-ons"

=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> போலவே: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! அவை ஹிந்து/ சம்ஸ்கிருத ஆண்டுகள்!

இதே 60 பெயர்கள் தான்.. தெலுங்கு/ கன்னடத்திலும்! ஏன்னா, அங்கும் சம்ஸ்கிருதக் கலப்பு! 
இந்தச் சம்ஸ்கிருதத் "திணிப்பு" செய்தது யார்? குஜராத்திகளா? பீகாரிகளா? அல்ல! நம்மோடு வாழும் தென்னாட்டுப் பிராமணர்களே!

மதத்தின் துணைகொண்டு, அந்தந்த ஊர்களில், அந்தந்த மொழிகளில் Sanskrit Parasite புகுத்தினார்கள்! குஜராத்தி/ வங்காளி எளிய மக்களைக் கேளுங்கள்; எவனும் இந்த 60 ஆண்டுப் பெயர்களைச் சொல்ல மாட்டான்:)

Hindu Calendar! or Sanskrit Calendar or Brahmin Calendar!
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
https://en.wikipedia.org/wiki/Samvatsara
Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years" | Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! 
அதை மொழி அமைப்பில் புகுத்தி, திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவ/விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்படுகிறார்கள்!:)

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை! எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்! ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)
"வசந்த காலத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, கூறப்படுகிறது..
படுகிறது, படுகிறது-ன்னு இவங்களா அடிச்சி விட ஆரம்பிச்சிருவாங்க!:) ஆனா தரவு? ஆதாரம்??:))

Aries/ மேஷத்தில் தான், உலகெங்கும் புத்தாண்டு துவங்குதா? 

Aries = கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் -ன்னு பல பண்பாடுகளில் இருக்கே! அங்கெல்லாம் Aries/ Mar-Apr தான் புத்தாண்டா? இல்லையே?
Zodiac / ராசிச் சக்கரத்தில் தான் ஒரு புத்தாண்டு துவங்கணும் என்பதற்கு, உலகெங்கும் எந்த ஆதாரமும் இல்லை! அறுவடை ஒட்டியோ, அவரவர் பண்பாடு ஒட்டியோ தான், புத்தாண்டு நிறுவிக் கொண்டுள்ளார்கள்!


சொல்லப் போனால், Old New Year என்ற ஒன்று கூட உலகெங்கும் உண்டு! அது Jan-14 ஒட்டி வரும்/ தை-01 கூடப் பொருந்திப் போகும்:)
*Greece
*Rome
*Macedonia
*Russia
*Scotland
*Georgia
*Bulgaria/ Serbia/ Ukraine
இன்னும் பல Orthodox பண்பாடுகளில்= தை-01 தான் என்று சொல்வோமா?:)))

Orthodox New Year பற்றி மேலும் அறிய= https://en.wikipedia.org/wiki/Old_New_Year
விக்கிப்பீடியா தரவு ஆகாது; அது மேலோட்டமான அறிதலே!
அதனால், இங்கு சென்று காண்க= https://goo.gl/OBmUE0 | உலகில் இன்றும் கொண்டாடப்படும் Orthodox/ Old New Year; Julian Calendar:)

சம்ஸ்கிருத பாசம் மிக உடைய பிராமணீயர்காள்,
உங்கள் சாலிவாஹன/ விக்ரம சகம் உங்களோடு; வாழ்த்துக்கள்:)
ஆனா, அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலையிலும் திணிக்காதீர்கள்!


சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய, காடு உறை உலகமும்,
சேயோன் மேய, மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை   
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே"
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே!
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!
ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்...
கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)




உரையாசிரியர், நச்சினார்க்கினியர் சொல்வது போலவே, இன்றும் மலையாளப் புத்தாண்டு அமைந்துள்ளது, அறிவீர்களா?
சிங்க மாதமே (ஆவணி) = மலையாள முதல் மாதம்!
மலையாளப் புத்தாண்டு/ கொல்லம் ஆண்டு= சித்திரை மாத விஷூக் கணி (கனி) அல்ல! ஆவணிச் சிங்க மாதத்தில் வரும் ஓணமே! அறுவடை நாள்!

*சித்திரை விஷூக் கணி= மற்றுமொரு விழாவே
*ஆவணிச் சிங்க மாதமே= புத்தாண்டு;
*அம் மாதத்தில் வரும் ஓணமே= பெருவிழா; விஷூ அல்ல

முன்பே சொன்னது போல், கார் காலம்= மழை வரும் காலமே, மங்கலம் கருதி.. முதற் காலமாக அமைந்தது! மலையாளத்தில் மட்டுமல்ல! நம் ஆதித் தமிழ்த் தொல்காப்பியத்திலேயே!
------------

2. சங்க காலம்: எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன! அதையே பல தமிழ் அன்பர்களும், "தைஇத் திங்கள், தைஇத் திங்கள்" -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா?
= இல்லை!
= தமிழ் என்பதற்காக, நான் Raw Data-வை மறைக்க/ மாற்ற மாட்டேன்:)

*நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

*குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

*புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

*ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

*கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = "ஆண்டின் துவக்கம்" -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

*தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து 
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!
------------

3. அடுத்து... ஜெயலலிதா-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் அடிமை "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:

"ஆடு தலை" = நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுத் தலைக்கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:)) | தலை = தலையாய/ முதன்மையான!
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு!
எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:)) Wait Wait Wait.....

மேஷம் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!:) இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு... அடேய்களா!

அடேய், பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆயிடாதுடா! மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, அப்பறம் பொய் சொல்லுங்க:)
பாவம் நக்கீரர்! திருவிளையாடல் பொய்ப் புராணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :)

சித்திரை = இதர "ஆதார"ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர....
"புத்தாண்டு"-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?அப்படியெல்லாம் பயப்பட, சிலம்பின் வரிகள் ஒன்னும் "சகஸ்ரநாம" வரிகள் அல்ல:)

2) பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!

இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் Comedyக்குப் பஞ்சமே இல்ல:) 23ஆம் புலிகேசி தனக்குத் தானே வெட்டிக்கொண்ட கல்வெட்டு ஞாபகம் வருதா? - வரலாறு முக்கியம் அமைச்சரே!:)

நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும், விவாதத்துக்கு உட்பட்டே! சோழர் கல்வெட்டில் இருந்தாலும், அவை = மிகவும் "பிற்காலம்" தான்! சங்க காலம் அல்ல!

சோழர் கல்வெட்டு பலவும், கிரந்த எழுத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
ஒடனே, "பாத்தீங்களா? பாத்தீங்களா? அப்பவே எல்லாப் பொது மக்களும் Grantha Alphabet தான் எழுதினாங்க; அம்மா வை= "சம்மா" -ன்னு எழுதினாங்களா?:) | அ = சd in grantham notation!

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன! சோழ அரசாங்கத்தில் வேலை பார்த்த "உயர்சாதிப் பண்டிதாள்", வருஷ - சம்வத்ஸரங்களின் பேரை, அவா Style-இல், "ஸ்வஸ்திஸ்ரீ" -ன்னு பொறிக்கச் செய்தார்கள்! அவ்வளவே!

3) புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது!
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :) இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடி தான்!
பலருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு!

இவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் புராணம் எழுதி வச்சிருக்காய்ங்க?:)

அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு:)
நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக... அது உண்மையாகி விடுமா என்ன?:))
வள்ளுவரே = தலைமகன்; பின்பே = ஆண்டாள்!

அறிவியல்:

இன்னொன்றும் சொல்கிறேன், குறிச்சிக்கோங்க; 
இது ஜோதிடம் (Astrology) அல்ல! விண்-வெளி அறிவியல் (Astronomy); 

சித்திரையே = "மேஷம் புகும் மாதம், மேஷம் புகும் மாதம்".. என்று குதிக்கும் பல பேர், அறிந்து கொள்க! முதற்கண், உங்கள் சித்திரை = மேஷம் புகும் மாதமே அல்ல! மீனம் புகும் மாதம் :)   



பூமியின் Precessional Wobbling (உருட்டு) என்ற ஒன்றுண்டு; 73 ஆண்டுகளுக்கு 1 degree மாறும் சூரியப் பாதை; 120 BCEஇல், சித்திரை = 'மேஷம்' புகும் மாதமாக (Aries) இருந்தது; அது எப்பவோ மாறிப் போய், இன்று சித்திரை = 'மீனம்' புகும் மாதமாக (Pisces) மாறியாச்! Apr 14 = மீனம் தான்; மேஷம் அல்ல!

இன்னும் 600 ஆண்டு கழிச்சி, 2597 CEஇல், இதே சித்திரை = 'கும்பம்' புகும் மாதமாக (Aquarius) மாறி விடும்; அப்போ என்ன செய்வீங்க? எந்த மேஷத்தில் புகுவீங்க? :)


12 ராசிக் கட்டங்கள், உலகெங்கும் உண்டு; ஆதி மனிதன், இரவில் வானத்தின் தோற்றம் கண்டு, அதில் மாதாமாதம் நட்சத்திரக் கூட்டங்களின் கும்பலான தொகுப்பைக் கொண்டு, ஆடு / மாடு / நண்டு என்று.. பல கற்பனை வடிவங்கள் செய்து கொண்டான்; அதான் மேஷம் / Aries, ரிஷபம் / Taurus எனும் Constellation (ராசி).
 
ஆண்டின் Calendar (நாட்காட்டி) அறியும் பொருட்டு அவன் செய்து கொண்ட Approximationஐ, இன்றும் 'ஜோதிடம்' என்ற பேரில் புனைவுகள் பல பேசித் தொங்கிக்கிட்டு இருக்கீங்க :) ஆனால் அதெல்லாம் எப்பவோ மாறிப் போய், பூமி வேறு ராசி மண்டலத்துக்குள் வந்தாச்! 

ஒவ்வொரு 2,665 ஆண்டுக்கும், உங்கள் சித்திரை = மேஷம், மீனம், கும்பம், மகரம், துலாம்-ன்னு Reverse-இல் மாறிக்கிட்டே இருக்கப் போவுது; நவகிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணாலும், உங்களால் அதை மாற்ற முடியாது :) பேசாம, அறிவியலுக்கு மாறிடுங்க! அதான் உங்களுக்கு நல்லது! தலைமுறைக்கே நல்லது!



முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த படியால்... பய+பக்தியோடு, பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனா, மழை துவங்கும் "கார் காலம்" எனும் ஆவணி (அல்லது) "பனி முடங்கல்" எனும் தை
= முதன்மைக் காலம்/ சிறப்பு மாதமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கலை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:)

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கம் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி/ மன்னன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆண்டையொட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்பு எழுந்ததே!

அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது-ன்னு முடிவு கட்டிறாதீங்கோ...
உலகெங்கும், பல பண்பாடுகளில்.. ஆண்டுகளுக்குப் பெயர்கள் இல்லை; எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்னாள் பழக்கம்!

* Tamil Season Measurements/ பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months each*6 = 12 months!
* Tamil Daily Measurements/ சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs each*6 = 24 hours!

*ஆண்டுப் பெயர் தான் தமிழில் இல்லை!
(கிரேக்கம் / வேறு பல பண்பாடுகளிலும் இப்படியே ஆண்டுப் பெயரில்லை)


3. தமிழ் மரபில் & இலக்கியங்களில், மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை!
"தைஇத் திங்கள்" பாடல்களைப் பார்த்தோம்; புத்தாண்டு -ன்னு அல்ல! சிறப்பான மாதமாய்!

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்/ மேஷம் புகும் போதே துவங்கணும் = இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!
------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு மட்டும் வேணாம்பா; 
ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே, என்பவர்களுக்கு...

சித்திரை-ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!
*This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி
*இதே போல் Islamic Calendar கூட உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
*சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!

ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும்,
* தமிழ் ஆண்டின் முதல் நாளா, ஹிஜ்ரி நாளை வைங்கோ, நாங்களும் தமிழர்கள் தானே? -ன்னு கேக்குறாங்களா?:) இல்லையே?

நாம மட்டும் ஏன், மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :)

இது இன்று நேற்றல்ல! பல காலங்களாய்!
இல்லீன்னா, சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு பின்னாளில் எழுதிச் சொருகி வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி -ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டும்!
மொழி அமைப்பில் திணிக்க வேண்டாம்!

= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது -ன்னே கருதுகிறேன்!
------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது 
= Tamil Year Standardization மட்டுமே; 
= புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறைக்கும் (Continuous Numbering Scheme) வித்திட்டது;

நிச்சயமா.....இது "புதிய" முறை தான்!
ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

This is only a "notation" for Tamizh related Standards;
But Common Era (2012 CE) applies for all of us!


கிமு/ கிபி அல்ல; அதிலும் மதம் கடந்தாகி விட்டது!
BCE= Before Common Era | CE= Common Era
BC/ AD என்று எழுதாதீர்கள்; BCE/ CE என்றே புழங்கவும்!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு!
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லு = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை;
சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா...

* சித்திரை = வேண்டாம்!
* சித்திரை-ன்னாலே, மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் சிறப்பு மாதம்!
* தை -ன்னாலே.... மதம் கலவாமல்.... தமிழ் மட்டும் தனித்துத் தெரியும்!

தமிழ் குறித்த ஒன்றில், தமிழ் தானே அடையாளம் தெரிய வேண்டும்?
When it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point; NOT religion!
For that......Thai would be the best choice!
* Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
* Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!
இத்துணை நாள், மத மாயை..

இனியாச்சும், மானம் கொள்வோம்!

உங்க ஆத்துல.... பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட அக்ரஹார பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு -ன்னு, தமிழக மக்களுக்கே ஒட்டுமொத்தம் ஆக்காதீக! Please...
------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....
சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு பிடிவாதம் பிடிச்சா?.....

Okay, நானே இறங்கி வரட்டுமா?
சித்திரை-க்கே ஒத்துக்கட்டுமா? .... but two small conditions!

a) "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; ஆண்டுப் பிறப்பு ன்னு சொல்லுங்கோ:))
b) ருத்ரோத்காரி -ன்னு அசிங்கம் புடிச்ச புராணக் கதை |  60 சம்ஸ்கிருதப் பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள்; 
தினத்தாள், Calendar, Marriage Invitations.. எல்லாக் குறிப்பில் இருந்தும் Sanskrit Parasite நீக்குவீங்களா?

அதெல்லாம் நீக்க மாட்டேன்; 
அதான் "தமிழ்" வருஷப் பிறப்பு!
சம்ஸ்கிருதம் தான் டா, தமிழ்! -ன்னு நீங்க சொன்னா..
இதுக்குப் பேரு தான் போங்கு! போங்கடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "ஹிந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) பிராமணப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
(அ) Sanskrit Parasite ஆண்டு வாழ்த்துக்கள்
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!


உசாத் துணை: (References)


1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
5. தெய்வங்களும் சமூக மரபுகளும் = பேரா. தொ. பரமசிவன்

6. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see her line //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html





Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP