பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பணி நிமித்தமாக Rio de Janeiro பயணம்! ஓர் இரவு, சற்று நலமின்மை! அதனால் ஒரு முக்கியமான பதிவு miss ஆயிருச்சி!
அப்படியென்ன நாளு-ன்னு கேக்கறீங்களா? = Jul-05-2011 (ஆனி மகம்)! ஒரு பெரும் தமிழ்ச் சான்றோரின் குரு பூசை (நினைவு நாள்)!
= யாரு? நாயன்மாரா? அல்ல!
=
நாயன்மார் அல்லாத நாயன்மார்! யார் அவர்?
இசைஞானி இளையராஜா செய்த Thiruvaachaga Oratorio அருமையானதொரு படைப்பு!
ஒரு பழந் தமிழ்ப் பதிகத்தை, மேற்கத்திய இசை முறையில் தருவதற்கு நுண்ணிய இசைப் புலமை வேண்டும்! ஆனால்.....
இளையராஜா செய்தது Symphony-ஆ அல்லது Oratorio-வா? என்பதில் சர்ச்சைகள் எழுந்து,.......இன்றும் பேசப்படுகின்றன!
இளையராஜாவே அது Oratorio என்று சொல்லி விட்ட பின்பும்....விளம்பரப் பேரலை எழுப்பக் கருதி, ஒரு சிலர் பரப்பிய Symphony என்ற வணிக முயற்சிகளால், சர்ச்சையாகிப் போனது!
ஆனால் இந்தச் சர்ச்சைகளாலெல்லாம், தமிழ் உலகம் தந்த இசை ஞானியான
, இளையராஜாவின் புகழுக்கு, ஒரு போதும் மாசு கற்பித்து விட முடியாது!List of symphony composers என்று
இங்கே Wiki-இல் பார்த்தால், ராஜாவின் பெயர் இருக்காது! ராஜாவே ஒப்புக் கொண்டதும் கூட!
அது வெறும் Oratorio, அவ்வளவே! இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
*
Oratorio = நீண்ட இசைக் கோர்வை! புனிதப் பொருட்கள் மீதான இசை! பொதுவாகத் தேவாலயங்களில் பாடவல்லவை! நாடக மேடைகளுக்கு அல்லாமல், இசை மேடைகளுக்கு மட்டுமே உரித்தானது!
*
Symphony = அதனினும் நுட்பமான இசைக் கோர்வை! கடினமான இலக்கணங்கள் கொண்டது! நான்கு அசை வடிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்!
1. opening sonata or allegro
2. slow movement, such as adagio
3. minuet with trio or solo sonata
4. and... allegro, rondo, or sonata
Symphony=பாடல் வரிகள் முக்கியம் அல்ல! இசை வடிவம் தான் முக்கியம்!ஒரு முறை வடிவமைத்து விட்டால், பின்னர், திறமையுள்ள யார் வேண்டுமானாலும், அதை மீள் நடத்தி இசைக்கலாம்!
Beethoven, Schubert, Mendelssohn, Schumann போன்றவர்களின் சிம்பனிக்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன! பீத்தோவன் 5th Symphony புகழ், உலகம் அறிந்த ஒன்று!
இந்தியர் ஒருவர் எழுதிய சிம்பனி என்று பார்த்தால்...
இது வரை ஒருவரே!
KS Sorabji! ஆனால் இதன் கடினத்தால், இன்று வரை இசைக்கப்படாமலேயே இருக்கிறது! :(
நம்ம இசைப் பொக்கிஷமான ராஜா செய்தது என்ன?* தான் அமைத்த ஒரு Oratorio இசைக் கோர்வைக்கு ஏற்றவாறு, வரிகளைத் தேடியது! திருவாசகத்தில் எல்லா வரிகளும் அப்படியே பொருந்தி விடுமா?
* அதனால் தன் இசைக்கு/மெட்டுக்குப் பொருந்தி வரக் கூடிய திருவாசகப் பாடல்களை மட்டுமே தேடி, இசையூடே அமைத்து, மாலையாய்க் கட்டினார்!
= அதுவே அழகிய
திருவாசக ஓரட்டோரியோ!
இந்நேரம் கண்டு புடிச்சிட்டு இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்! :)
யார் அந்த "நாயன்மார் அல்லாத நாயன்மார்"?தெய்வத் தமிழிசைக்கு வந்து வாய்த்த பெருமகனார் = திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும்படியான...
*** திருவாதவூரர் (எ)
மாணிக்கவாசகர்!
சைவ சமயக் குரவர் நால்வருள் மூத்தவர் என்றாலும்...
ஏனோ 63 நாயன்மார்களில், மாணிக்க வாசகரை வைக்கவில்லை! :(((
என்னளவில் இது பெருங்குறையே!

நாயன்மார் கதைகளில் இவர் வரலாறு வராததால், இளந் தலைமுறைக்கு, இவர் கதையைத் தனியே தான் சொல்ல வேண்டும்!:(
சைவத் திருமடங்கள், காலத்துக்கு ஏற்றவாறு மாறி....
மாணிக்கவாசகப் பெருமானின் கதையை, பெரிய புராணத்தோடு சேர்த்து, மற்ற அடியவர் கதைகளோடு ஒன்றாக்கி விட வேணும் என்பது என் பேரவா! சிவ சிவ! துணை நின்றருள்!
மாணிக்கவாசகரின் தெள்ளு தமிழ்த் திருவாசகத்தை,
* இளையராஜாவின் இசையிலும்,
* மரபு வழியிலான ஓதுவார் திருமுறையிலும்
ஒருமுறை கேட்போமா? வாங்க! வாங்க! கேட்டுக்கிட்டே வாசகத்தை வாசிங்க!
8ஆம் திருமுறை - திருவாசகம் 35 - அச்சப் பத்து:(மாணிக்க வாசகர் அரசாங்கப் பணத்தைக் "களவாடியவர்" என்று கிளம்பிய போது, அவர் மனம் அச்சப்பட்டதா? என்ன சொல்லிற்று? அதுவே இந்த அச்சப் பத்து!)
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்!பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!கற்றை வார் சடை எம் அண்ணல்கண் நுதல் பாதம் நண்ணி....
புற்றில் இருக்கும் கொடும் பாம்பு? = அஞ்ச மாட்டேன்!
பொய்....இன்று பலருக்கு, மெய் போல் தோன்றினாலும் = அஞ்ச மாட்டேன்!
கட்டிய சடையான், நெற்றியிலே கண் உடையவன்,
என் அண்ணல்...அவன் பாதங்களை அடைந்து விட்டு...
மற்றும் ஓர் தெய்வம் தன்னைஉண்டென நினைந்து-எம் பெம்மாற்(கு)அற்றிலா தவரைக் கண்டால்அம்ம நாம் அஞ்சு மாறே!!ஈசனை அடைந்த பின்னர், "மற்ற தெய்வங்களும் உண்டு" என்று...என் பெருமானிடத்திலே அற்று இல்லாதவர்கள் (உறுதியான பற்று இல்லாதவர்கள்)...
இவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!
ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில்...அதே பாடல்...வன் புலால் வேலும் அஞ்சேன்!வளைக் கையார் கடைக்கண் அஞ்சேன்!என்பெலாம் உருக நோக்கிஅம்பலத்து ஆடு கின்றமாமிச வேடர்களின் வேல் = அஞ்ச மாட்டேன்!
வளையல் பெண்களின் காமப் பார்வை = அஞ்ச மாட்டேன்!
எலும்பும் உருகுமாறு பார்த்துக் கொண்டே இருப்பேன்! யாரை?
என் பொலா மணியை ஏத்திஇனிது அருள் பருக மாட்டாஅன்பிலா தவரைக் கண்டால்அம்ம நாம் அஞ்சு மாறே!!தில்லைச் சிறு அம்பலத்தில் ஆடுகின்றான்! துளையற்ற மணி = ஈசன்!
அவனைப் போற்றி, அவன் அருளைப் பருகாமல் இருப்பவர்கள்...
அன்பே இல்லாத அவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!
என்ன மக்கா, பாடலைப் படித்தும் + கேட்டும் இன்புற்றீர்களா?
'மற்ற தெய்வங்கள்' என்று சில கருத்துகள் வந்தாலும்...மொத்த திருவாசகத்தையும், இதைக் கொண்டே, அவசரப்பட்டு எடை போட்டு விடாதீர்கள்! :)
இது ராஜா, அவர் இசைக்குப் பொருந்தி வந்ததால் மட்டுமே எடுத்துக் கொண்டது! அதுவும் தீவிரமான மன உளைச்சலில் இருக்கும் போது, மாணிக்க வாசகர் பாடியது! அந்தச் சூழலையும் நோக்க வேணும்!
என்னமாச் சொல்லாட்சி பாருங்கள்!
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!* பொய் உரைக்கும் அரசியல்வாதிகள், மெய் போல் காட்டும் வித்தைகளை அஞ்ச மாட்டேன்-ன்னும் கொள்ளலாம்!
* நாம் நம்பிய ஒரு உள்ளமே, பொய்யை, மெய்யோ? என்று எண்ணி, என்னை மறுதலித்து விட்டால்? = அப்போதும் அஞ்ச மாட்டேன்-என்கிறார்!
கோபம் வேறு வருகிறது! இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே ஈசன்!
அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் அமைத்து விட்டேன் என்று பேசுகிறார்களே! ஐயோ...........
அன்பில்லாத அவரின் மனப்போக்கைக் கண்டே அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!.....என்று மொத்தம் 10 பாடல்கள்=அச்சப் பத்து!

மாணிக்கவாசகரின் கதை?
பொதுவாக, எல்லா நாயன்மார்களின் நினைவுநாள் போதும், பெரிய புராண புனிதப் பூச்சுக்கள்/ மிகைகளைக் களைந்து, மூலநூலில் உள்ளது உள்ளவாறு, இக்காலத்துக்கும் ஏற்றாற் போல் சொல்வேனே!
இன்று எங்கே அந்தக் கதை? மாணிக்கவாசகரின் கதை?
=
நாயன்மார் அல்லாத நாயன்மார் திருவடிகளே சரணம்!
எங்கள் தமிழிசை வாழ வந்த, மாணிக்க வாசகப் பெருமான் திருவடிகளே சரணம்!
தொடர்புடைய பதிவு: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?