Wednesday, April 30, 2008

அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 2

"காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?" - சென்ற பாகம் இங்கே!துடிதுடித்துப் போய் விட்டான் இராமன்! இவர்கள் இலக்கு இலக்குவனா?இலக்குவனைக் கொல்வதற்காகவே இப்படி ஒரு திட்டம் தீட்டினார்களா தேவர்கள்? அன்று இந்திரனுக்காக இந்திரசித்தைக் கொன்றவனுக்கு இன்று அதே இந்திரன்-சித்து காட்டுகிறானே?பட்டாபிஷேகம்...
Read more »

Tuesday, April 29, 2008

பெங்களூர் பதிவர்களா? சென்னைப் பதிவர்களா? - Part 1

வணக்கம் மக்களே!தாயகப் பயணம் முடிஞ்சி வந்தாப் பிறகு கண்டிப்பா ஒரு பதிவு போடணுமாம்-ல! இந்தப் பதிவின் தலைப்பைப் பாத்துப்போட்டு ஏதோ பட்டிமன்றம்-னு நெனச்சி வந்தீங்கன்னா...நீங்க நெனச்சி வந்தது சரி தான்! பட்டிமன்றம் தான் இங்கன நடக்கப் போவுது! ஆனா நடுவரா யாரைப் போடலாம்-னு தான் ஒரு சின்னக் கன்பூசன்!இது மாதிரிச் சூடு பறந்து ஆவியாகிப் பாவியாகிப் போற பட்டிமன்றத்துக்கு எல்லாம் நம்ம கைப்புள்ள தான் எப்பமே நிரந்தர...
Read more »

Monday, April 14, 2008

இராமநவமி: அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 1

காவியத்தில் இராமனைப் பிடிக்குமா, இலக்குவனைப் பிடிக்குமா-ன்னு பல பதிவர்களைக் கேட்டுப் பாருங்க! இலக்குவனைத் தான் பிடிக்கும்-னு சொல்லுவாய்ங்க! ஏன் தெரியுமா?ஹிஹி...இராமனைச் சுத்தமாப் பிடிக்காது! அவர்களைப் பொறுத்தவரை புனித பிம்பம்! Unrealistic:-)ஆனா இலக்குவன் அப்படியில்லை! கோவக்காரன்! Straightforward! :-)சரி இலக்குவனைப் பிடிக்கும்-னு சொல்றீங்களே, இலக்குவன் செய்தது போல் நீங்களும் செய்வீங்களா-ன்னு கேட்டுப்...
Read more »

Wednesday, April 09, 2008

PIT போட்டிக்கு அல்ல! ராயல் ராமின் "தனிமை"!

மக்களே! ரொம்ப நாளா PIT போட்டியில கலந்துக்கணும்-னு நெனச்சிக்கிட்டு இருந்தேனா? கடந்த வாரயிறுதியில் பெங்களூர் பதிவர் சந்திப்புக்குப் போனேனா? அங்கிட்டு ஒரு ஷாட்!அட நம்ம சங்கத்தின் நிரந்தரச் சிங்கத்தைப் பாருங்க! இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல!PIT-இன் இந்த மாதத் தலைப்பு ஏதோ "தனிமை" யாம்-ல!சிங்கம் இப்படித் "தனிமை"யில இருக்குறத பார்த்து, எனக்கு ரத்தக் கண்ணீரே வந்துருச்சி! வாடிய புலியைக் கண்ட போதெல்லாம் வாடினேன்!...
Read more »

Thursday, April 03, 2008

வடபழனி சென்றேன்! ஜிராவிடம் தோற்றேன்!

அதாச்சும் சில பேருக்கு "வட"-ன்னு சொன்னாலே கோவம் பொத்துக்கிட்டு வரும்! ஆனா அதை மாற்றி அருள நினைத்தான் போலும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான்! "வட" பழனிக்கு வா-ன்னு உத்தரவு போட்டான்! வடபழனி சென்றேன்! ராகவனிடம் தோற்றேன்! :)) திருமலைக்குச் செல்லும் போதெல்லாம்.. திருவேங்கடமுடையானை ஒரு முறை பார்த்தால் மட்டும் என் ஏக்கம் தீராது! குறைஞ்சது ரெண்டு மூனு தரிசனம்; அப்பத் தான் ஏக்கம் ஓரளவுக்காச்சும் தீரும்! அது...
Read more »

பெங்களூரு! பதிவரு! சந்திப்பு! ஆன்மீகம் அல்ல! பெண்மீகம் பேச!

அட சத்தியமா நம்புங்க தல! நம்புங்க!இந்த வாரயிறுதி பெங்களூர் வாரான் ஒருத்தன்! நிராயுதபாணியா வேற வாரான்! பெண்களூரில் பெண்மீகம் பேச! :-))நல்ல சான்ஸ்! பல நாள் கணக்கைத் தீர்த்துக்கலாம்!என்னா சொல்றீங்க? :-))*இப்போதைக்கு நம்ம பிளாக் யூனியன் டிடி யக்கா தான் தலைமை தாங்குவேன்-ன்னு அடம் புடிக்கறாங்க! தலைமை தாங்குவாங்களா, தலையை வாங்குவாங்களா? கரீட்டாச் சொல்லுங்க பார்ப்போம்!*பெங்களூரம்பதி ச்ச்ச்சே மதுரையம்பதி அண்ணா தான் சந்திப்பு சாக்ரடீஸ்!*ராயல் ராம் மீல்ஸூக்கு பிரம்ம கூழு ஊத்தறேன்னு வாக்கு கொடுத்துருக்காரு!*நம்ம...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP