Saturday, September 30, 2006

திருமலை விழா 6 - அனுமன் / யானை வாகனம்

ஆறாம் நாள்காலை - அனுமன் வாகனம் (ஹனுமந்த வாகனம்)குறுகுறு குழந்தைகள் முதல் குடுகுடு முதியோர் வரை அனுமனை விரும்பாதார் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட காகித மாலை, என்று மாலை மரியாதைகள் தான் என்ன? ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று சும்மாவா சொன்னாள் ஒளவைப்பாட்டி.சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம...
Read more »

Friday, September 29, 2006

திருமலை விழா 5 - கருட சேவை

மாலை - கருட சேவை"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு...
Read more »

திருமலை விழா 5 - மோகினி அவதாரம்

ஐந்தாம் நாள் காலை - மோகினி அவதாரம்சிறு வயதில் ஜகன் மோகினி என்ற படம் வந்தது. யாருக்காச்சும் நினைவு இருக்குதுங்களா? நான் அந்தப் படத்தைப் பாத்து ரொம்பவே பயந்து போயிட்டேன்னு வீட்டுல இப்பவும் சொல்லுவாங்க! இது ஏதோ அந்த மாதிரி மோகினின்னு நினைச்சுக்காதீங்க!இந்த மோகினி அவதாரம், காணக் கண் கோடி வேண்டும்! அழகுக்கு அழகு, அறிவுக்கு அறிவு. யோகீஸ்வரனான சிவனாரையே சிறிது கணத்துக்குச் சிந்தை கலங்க வைத்த தெய்வீக அழகு!நல்லார்க்கு...
Read more »

Thursday, September 28, 2006

திருமலை விழா 4 - கற்பகம் / மண்ணாள் அரசர் வாகனம்

நான்காம் நாள் காலை - கற்பகத் தரு வாகனம் (கல்ப விருக்ஷ வாகனம்)கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சம் பற்றி யாருக்குத் தான் தெரியாது?அது என்னான்னா, அது எங்க இருக்கு-ன்னு தான் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா நம்ம ஆளுங்க என்னவெல்லாம் பண்ணுவாங்க, சும்மா கற்பனைக் குதிரையைத் தட்டி வுடுங்களேன். அதுவும் தமிழகத்தில் யாருக்காச்சும் தெரிஞ்சா, ஆகா, அவ்வளவு தான். சூடும் சுவையும் குறையாத காட்சிகள் பல அரங்கேறாதா? தமிழ்மணத்திலும்...
Read more »

Wednesday, September 27, 2006

திருமலை விழா 3 - சிம்மம் / முத்துப்பந்தல் வாகனம்

மூன்றாம் நாள்காலை - சிம்ம வாகனம்"சி்ங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று, திருமலைச் சிகரத்தில் சிங்க நடையாக சுவாமியைத் தூக்கித் தூக்கி, சுமந்து வரும் அழகே அழகு!அவதாரங்களிலேயே மிகவும் குறைந்த நேரமே நீடித்தது ஒன்றே ஒன்று தான். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?கரெக்ட், ஆளரி அவதாரம்.அட அப்பிடின்னா என்னாங்க? நாங்க கேள்விப்பட்டதே இல்லியே!ஆள்+அரி (ஆள்=நரன், அரி=சிம்மம்)அதே தாங்க, நரசிம்ம அவதாரம். அழகுத்...
Read more »

Tuesday, September 26, 2006

திருமலை விழா 2 - சின்ன சேஷன் / அன்ன வாகனம்

இரண்டாம் நாள்காலை - சின்ன சேஷ வாகனம் (சிறிய நாக வாகனம்)வீட்டுல இரண்டு குழந்தை இருப்பவர்களுக்கு இது நல்லாவே தெரியும். அப்பா சின்னக்குட்டிய உப்பு மூட்டை தூக்கினால், பெரியக்குட்டி முரண்டு பண்ணும், இன்னமும் தன்னைத் தான் தூக்கணும் என்று. அது போல் தாங்க இந்த சேஷன்! நேத்து இரவும் அவரே வாகனமா (வக்கனமா :-)) வருவாராம். இன்னிக்கு காலையிலும் அவரே தான் வரணுமாம். சரி சரி, பெருமாளுக்கும் வேற வழியில்லை. துயில் கொள்ள...
Read more »

Monday, September 25, 2006

திருமலை விழா 1 - பெரிய சேஷ வாகனம்.

வாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு! கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா? அது மாதிரி நினைச்சிப்போமே? ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க!வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Oct 3 அன்று வருகிறது! ஷ்ரவண...
Read more »

Sunday, September 24, 2006

பாகம்2 - கண்டேன் ஸ்ரீதேவியை!

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்)இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான். முழங்கால் முறிச்சு என்று சொல்லப்படும் படிக்கட்டுகள் எல்லாம் தாண்டி வந்து விட்டோம். பெரிய பெரிய மின்-காற்றாடிகள் தெரிகின்றன மலை மேல். அடைந்தாயிற்று வேங்கடத்தை! இருள் சூழத் தொடங்கி விட்டது. வனத்தில் தான்; மனத்தில் இல்லை! பூந்தோட்டங்கள் தென்படுகின்றன.குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்சென்று...
Read more »

Saturday, September 23, 2006

பணமா? பக்தியா? ஸ்ரீதேவியே செப்புமா! - பாகம்1

இந்தப் பதிவில் ஸ்ரீதேவி என்பது நம்ம "மீண்டும் கோகிலா" ஸ்ரீதேவியைத் தான் குறிப்பிடுகிறேன். ஆனால் அவர்களைப் பதிவின் இறுதியில் சந்திக்கும் வரை, கொஞ்சம் அவரை மறந்து விடுவோமே? :-)ஒரு புரட்டாசி மாதம். நண்பர்கள் ஐவர் புடை சூழ திருப்பதி சென்றோம். ரொம்ப நாள் கழித்துக் கூட்டாகச் செல்கிறோம். அவரவர் வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடந்து அனைவரும் நல்ல உற்சாக மனநிலையில் இருந்தனர்.மலை ஏறிச் செல்வதாகப் பேச்சு. ரயிலில்...
Read more »

Thursday, September 21, 2006

ஒளவையின் அகவல்

இனி, விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா! (அகவல் பிறந்த கதையை இந்தச் சுட்டியில் படித்த பின் தொடர்வது பொருத்தமாய் இருக்கும்)சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5) ஒளவை இறைவனின் அடி முடி சேவையைத் தரிசிக்கிறார். திருவடியில் இருந்து தொடங்குகிறார். குளிர்ச்சியான, மணம் மிக்க தாமரைப்பூ திருவடி....
Read more »

Wednesday, September 20, 2006

ஒளவையார்–யானையார்

காலை 7:00 மணி; வீட்டில் ஒரே பரபரப்பு. வீட்டுத் தலைவிக்கோ கையும் ஓடலை, காலும் ஓடலை. பள்ளிக்குச் செல்ல மக்கர் பண்ணும் மகன். அடுக்களையில் அவளைப் பார்த்து மாறி மாறி விசில் அடிக்கும் குக்கர். வீட்டுத் தலைவருக்குக் கூட இல்ல அந்த உரிமை! அய்யாவோ பூஜை அறையில்.காக்க காக்க கனகவேல் காக்க."ஏம்மா, இன்னுமா பேப்பர் வரல? ஜோதிகா கல்யாணம் நல்லபடியா நடந்துச்சான்னு பாக்கலாம்னா...நேத்து நியூஸும் பாக்கல!”நோக்க நோக்க நொடியில்...
Read more »

Tuesday, September 19, 2006

அண்ணனுக்கு வணக்கம்!

உலகம் முழுமைக்கும் முதற் பொருளாய், முழுமைப் பொருளாய் விளங்கும் வேழ முகத்தான் பாதங்களைப் பற்றிக் கொண்டேன்.இந்த புரட்டாசி மாதத்தில் என் தமிழ் பதிவுகளுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேன்.மங்கள நாயகனே, பக்கத் துணை இருந்து கூட்டிச் செல்வாய், எமைக் காப்புச் செய்வாய்! நீ ரொம்ப சமத்து.உலகத்தின் முழு முதல் கடவுளா இருந்தாலும் மஞ்சளைப் பிடிச்சு வெச்சா, வந்து இறங்கி விடுவாய்.குழந்தைகளுக்குக் குதூகலமான நண்பனே!...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP