Thursday, October 29, 2009

மறங்கொள் இரணியன் - 2

கம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:இடம்: ராவணன் அரண்மனைகாலம்: அவனுடைய கெட்ட காலம்ராவணன்: மந்திரிகளே! நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்!மகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ?வச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.துன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா?மகா பார்சுவன்: குரங்குக்கு...
Read more »

Sunday, October 25, 2009

பூதனா சம்ஹாரம் - கண்ணன் ஏன் கண்ணை மூடினான் ?

பெரியாழ்வார், தன்னை யசோதையாகவும் கண்ணனைத் தன் குழந்தையாகவும் நினைக்கின்றார் (’பெரிய ஆழ்வார்' என்று இவரை அழைப்பது இதற்காகத் தானோ?).மனம், மின்னல் வேகத்தில், ஆய்ப்பாடிக்குச் செல்கிறது. கண்ணனின் அழகில் லயிக்கின்றது.பாதாதிகேச வண்ணமாக (பாதம் + ஆதி + கேசம் = திருவடி முதல் திருமுடி முடிய), ’குஞ்சிக் கோவிந்தனுடைய’ அழகை அனுபவிக்கிறார்.அப்படியே நின்றுவிடாமல், நமக்காக, பாசுரம் இயற்ற ஆரம்பிக்கின்றார். பிறந்தது,...
Read more »

Tuesday, October 20, 2009

அந்தியம் போதில் அரியுரு - உலகின் ஒரே ஒரு அழகிய மாலைப் பொழுது

இடம்: பாண்டிய நாட்டின் ஒரு வீதியில், ஒரு வீட்டுத் திண்ணைநேரம்: மாலை நேரம்காலம்: வல்லப தேவன் மதுரையை ஆண்ட காலம்ஒரு வழிப்போக்கன், களைப்புடன், ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்கிறான். அங்கு ஒரு பிராம்மணர் அமர்ந்திருக்கிறார்.வழிப்போக்கன் (அமர்ந்து, சிறிது நேரம் கழித்து): பிராம்மணரே, ஒரு நல்ல வார்த்தை சொல்லும்!பிராம்மணர் (சற்று யோசித்து, வடமொழியில்):வர்ஷார்த்த மஷ்டௌ ப்ரயதேத மாஸாந் நிசா(யா)ர்த்த மர்த்தம்...
Read more »

Thursday, October 15, 2009

நாலாயிரம் - ஒரு எளிய அறிமுகம்

இந்த உலகினில் வாழ்கின்ற ஸாதுக்களையும், நல்ல மனிதர்களையும் பாதுகாக்கவும், தீய மனிதர்களை அழிக்கவும், தர்மத்தைக் காப்பாற்றவும், யுகங்கள் தோறும் நான் அவதரிக்கிறேன்.- கண்ணன், கீதையில்ஸ்ரீமந் நாராயணன் நமக்காக எடுத்த அவதாரங்களையும், அவன் குணாதிசயங்களையும், வேதங்கள், புராணங்கள், காவியங்கள் போன்றவை நமக்குக் காட்டுகின்றன.தெய்வ மொழிகளான தமிழிலும், ஸமஸ்க்ருதத்திலும் வாய் வழியாக, எப்பொழுதோ சொல்லப்பட்ட இவை, நமக்கு...
Read more »

Sunday, October 11, 2009

மாயா மச்சேந்திரா, நர சிம்மம் பார்க்க வந்தீரா?

இந்த இரவி செஞ்சது சரியா நீங்களே சொல்லுங்க. மாதவிப் பந்தல்ல இது தான் கடைசி இடுகைன்னு ஒரு Dash அடிச்சுட்டு ஓரமா போயி உக்காந்துட்டாரு. ஆனா நம்ம நாச்சியாரு உடுவாங்களா?'டேய் தோழா. நீ இங்க ஓரமா வந்து குந்திக்க. ஓம் நமோ Dashல படம் படமா போட்டு விளக்குனீயே அவுக (அ) - நானு (உ) - எங்கப்பா (ம).எல்லாரும் ஒரே லெவல்ல நின்னு ஒரு இரகசியம் சொல்றோம் - எங்கப்பா இடத்துல வேணா நீ நின்னுக்கோ.பந்தல்ல 'அவுக' பேரு வச்சிருக்கிற...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP